Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காணாமல் போன நான்

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
அழகான பூந்தோட்டமெனே தோன்றும் அளவிற்கு சந்தோஷமாக இருந்தது அந்த அழகிய சின்ன குடும்பம்.

அரசு பணியில் இருக்கும் இன்பா தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்.


வேலைக்கு சென்றுவிட்டு வந்து வீட்டிலும் கை தொழில் ஒன்றை செய்து கொண்டிருந்தார்

முதல் தேதி என்றால் சம்பளத்தை மனைவியிடம் குடுத்து விட்டு "அப்பாடா என் வேல முடிஞ்சுது " என்று மறுபடியும் தன் வேலையை தொடர்வார். அவருக்கு தெரிந்தது அவ்வளவு தான்

மனைவி ஜெயா இந்த குடும்பத்தின் ஆணி வேர்.

கணவன் குடுக்கும் சம்பளத்தில் எல்லா செலவுகளையும் சமாளிக்க தெரிந்தவர்.

இவர்களுக்கு முத்து முத்தாய் இரண்டு செல்வங்கள். எல்லொரும் கூறுவது போல ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கொன்று என்று இரு ஜீவன்கள் முளைத்திருந்தது அவர்கள் ஆசையாய் வைத்த செடியில்.


முதலபெண் குழந்தை பிறந்ததால் மகாலஷ்மியே பிறந்ததாக சொல்லி லட்சுமி என்று பெயர் சூட்டினர்.

செல்லத்திலும் செல்லம் அப்பா தன் வீட்டு இளவரசி என்று ஊரில் உள்ள மொத்த அன்பையும் காட்ட ஊறுபட்ட செல்லம் அம்மாவுக்கு செல்லம் தாத்தா பாட்டி மாமன் என எல்லோருக்கும் செல்லமே....

முதல் பிறந்தநாள் சொந்தங்களுக்கு சொல்லி கேக் வெட்டி வந்த விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் முடிந்தது.

மகளும் படி படியாய் வளர.....

எப்பொழும் ஆடி மாதம் ஐந்தாம் வாரம் அம்மனுக்கு கூழ் ஊற்றுவார்கள்.

"கேப்பையிலே மாவரைத்து
முந்தினநாள் கரைத்துவைத்து
மறுநாள்,
அளந்தெடுத்த பச்சரிசையை
நன்கு கழுவி அதை
பொங்கும் உலையில்
கொட்டி பாதி வெந்ததும்
புளிக்க வைத்த கேப்பமாவை
கொஞ்சம் கொஞ்சமா அதில்
ஊற்றி வேக வேக நன்கு கிளறி
பதம்பார்த்து இறக்கி வச்சா
எட்டு ஊருக்கு மூக்கை துளைக்கும்
கேப்பைக்கூழ் வாசனை....."


இதுகூட மணமணக்கும் கருவாட்டுக்குழம்பு முருங்கை கீரை , இன்னும் எல்லாம் வைத்து அம்மனுக்கு படைத்து கூழ் ஊற்ற அக்கம் பக்கம் ஜனங்கலெல்லாம் முண்டியடித்து ஓடி வரும் அதை வாங்க.

இரவிலே மீன் வறுவல், மீன் குழம்பு , அப்புறம் பறக்கிறது ஓட்றதுன்னு எல்காம் செஞ்சு அம்மனுக்கு படையல் கும்பம் போட்டு சாமி கும்பிடுவார்கள்.

எல்லா உறவினர்களும் ஒன்றாக சேர்நது சந்தோஷமாக வீட்டிலே வேலை செய்ய அது ஒரு திருவிழ போல் இருக்கும் மனசில் ஒரு தனி மகிழ்ச்சி குடிகொள்ளும்.

இப்படிசாமி கும்பிட்டு ஆறாவது வாரம் எல்லாரும் மொத்த குடும்பமும் ஒன்றாக தனி வண்டியில் பெரியபாளையம் போவாங்க பாருங்க அது ஒரு ஜாலி ..

அப்படி ஒரு சனிக்கிழமை மாலை எல்லோரும் பெரியபாளையம் போய் சேர்ந்து தங்குவதற்கு ஓலையில் கட்டிய சின்ன சின்ன மூன்று நான்கு கொட்டகையை வாடகைக்கு பார்க்க எல்லாமே கூட்டத்தால் நிரம்பி வழிய கோவிலின் முன்னே இருந்த பெரிய பந்தலிலே ஒரு இடம் பிடித்து எல்லோரும் தங்கினர்.

அதில் பெண்கள் அடுப்பு மூட்டி இரவு உணவு தயாரிக்க ஆண்களெல்லாம் இரவே சென்று அம்மனை தரிசித்து வர எல்லோரும இரவு உணவு அருந்தி உறங்கினர்.

நான்கு மணி விடியலில் பெண்கள் எழுந்து குளித்துவிட்டு அவர்கள் தனியாக அம்மனை தரிசித்து வந்த பின் பொங்கல் செய்து அம்மனுக்கு நேர்ந்துவிட்ட கிடா வெட்டி உணவு சமைத்தனர்.

அப்போ நம்ம லக்ஷ்மிக்கு மூணு வயசு குளித்துவிட்டு ஒரு குட்டி உடை உடுத்தி உலா வர கூட்டத்தில் இருந்த லக்ஷ்மியின் மாமா "எல்லோருக்கும் இலை போட்டு சாப்பாடு போடுங்க இந்த குட்டி பொண்ணு லக்ஷ்மிக்கு மட்டும் இலை வேண்டாம்னு" சொல்ல.....


அவ்ளோதான் எல்லாரும் ரொம்ப செல்லம் குடுத்து வளர்த்ததினதால இதைக்கூட தாங்க முடியாம மூக்கு மேல கோவம் வந்து தூரமா இருந்த மரகம்பத்துக்கிட்ட போய் நின்னுடா.....

"மாமா சும்மா தான் சொன்னாங்க வாடா செல்லம் " ஒவ்வொருவராக வந்து சமாதான படுத்தியும் வராம கோவிச்சிகிட்டு அங்கேயே நிக்குறா...

"சரி விடுங்க சின்ன பொண்ணு தான வந்துருவா நீங்க சாப்பாடெல்லாம் எடுத்து வைங்க சாப்பிடும் போது கூப்டுக்கலாம்" என்று பெரியவர் ஒருவர் சொல்ல எல்லோரும் அவரவர் வேலையை கவனித்தார்கள்.

எல்லோரும் சிரித்து பேசிக்கொண்டிருந்த வேளையில் திடிரென்று அந்த பந்தலில் மின்கசிவால் தீப்பிடிக்க மக்கள் கூட்டம் அங்கிருந்து அலறியடித்து வெளியில் ஓட தொடங்கினார்கள்.

அந்த கூட்டத்தோடு இவர்களும் பதறி அடித்து கொண்டு ஓட பாவம் நம்ம லட்சுமி பாப்பா ஒரு பக்கமா கூட்டத்தோட ஓடிருச்சு.....

கூட்டத்தோட ஓடின நம்ம லக்ஷ்மிய சொந்தங்களெல்லாம் ஒரு இடத்தில ஒன்று சேர லட்சுமி பாப்பா மட்டும் காணோம்னு தேடறாங்க ..

"லட்சுமி எங்க ?" என்று எல்லோரும் மாறி மாறி கேட்க யாருக்குமே தெரியல .....எல்லாரும் தேடறாங்க

"அம்மா அப்பா.... ஹ்ம் எனக்கு அம்மா வேணும் அப்பா வேணும் " என்று இரு குழந்த்தை அழுது கொண்டிருக்க அநத வழியாக வந்த ஒருவர் " யாரு பாப்பா நீங்க எதுக்கு அழுவுறீங்க ? எஙக உங்க அம்மா அப்பா?" என்று கேட்க குழந்தைகள் திரும்பி

"அம்மா அப்பா... ஹ்ம் எனக்கு அம்மா வேணும் அப்பா வேணும் " என்று அழுதனர்.

அந்த மனிதரும் சுற்றும் முற்றும் தேடி பார்த்து யாரும் இல்லாததால் குழந்தைகளை கூட்டி கொண்டு வயல்வெளியில் நடக்க ஆரம்பித்தார் .

எல்லோரும் பிரிந்து தனித்தனியாக தேட ஆரம்பித்தனர்.

பாப்பாவோட தாத்தா பாட்டி மாமன்கள் சித்திகள் என எல்லோரும் தனி தனியாக பிரிந்து தேடினர்.

லக்ஷ்மியோட அம்மாவும் அப்பாவும் ஒரு பக்கம் தேடினர்.

"அம்மா இந்த பக்கம் குட்டி குழந்தை பார்த்திங்களா?"என்று லக்ஷ்மியோட அடையாளங்களை சொல்லி தேடினார்கள்.


தவித்து கொண்டு இருந்த பெற்றோருக்கு இறைவனே உதவி செய்ய வந்தது போல் ஒரு வயசான மூதாட்டி " அம்மா ன்னு அழுதுட்டு இருந்த குழந்தைங்களை சமாதான படுத்தி இந்த பக்கமா ஒரு தம்பி ரெண்டு குழந்தைங்களை கூட்டிட்டு போனாரு வேணா போய் பாருங்க" என்றார்.

இன்பாவும் ஜெயாவும் பதறிக்கொண்டு வேகமாக அந்த வழியே ஓடினர். பச்சை பசேலென புல்வெளி இருக்க நடுவில் ஒரு வீடு இருந்தது எல்லா கடவு்ளிடமும் வேண்டி கொண்டு அங்கே இருவரும் ஓடினர்.

அந்த வீட்டிற்குள் நுழைந்தவுடன் அங்கே தங்கள் ஆசை மகள் அமர்ந்திருக்க அருகே ஓடினர்.

நம்ம குட்டி பாப்பா சமர்த்தா அவங்க அம்மா அப்பா பேர் ஊரு எல்லாத்தையும் சொல்லிட்டா
"நில்லுங்க யாரு நீங்க பாட்டுக்கு குழந்தைகிட்ட வரிங்க?" என்று அதட்டலாக ஒரு மூதாட்டி கேட்டார்

"அம்மா இது எங்க பொண்ணு இவளை தேடி தான் இங்க வந்துருக்கோம்" என்றனர்.

"நீங்கள் தான் இந்த குழந்தையின் அம்மா என்று நான் எப்படி நம்புவது?"

" அம்மா இது எங்களின் குழந்தை தான் "என்று இருவரும் கதற

"இங்க பாருங்க குழந்தையை கூப்பிடுவேன் உங்ககிட்ட குழந்தையே அம்மா அப்பான்னு ஓடி வந்தா தான் அனுப்புவேன் இல்லனா நானே வளர்த்துப்பேன் " என்றார்.

அவர்களும் சம்மதிக்க லட்சுமி பாப்பா அவங்க அம்மா அப்பாவை பார்த்துட்டு " அம்மா அப்பா " அப்டினு ஓடி வந்து கட்டி பிடிச்சிகிட்டா...

பெற்றவர்கள் இருவரும் குழந்தையை தூக்கி ஆசை தீர கொஞ்சிய பின் லக்ஷ்மியின் அப்பா தன் பாக்கெட்டில் இருந்த பர்ஸ்சை எடுத்து அப்படியே அந்த பாட்டியின் காலில் வைத்துவிட்டு நெடுஞ்சான்கினையாக அவர் பாதத்தில் விழுந்தார்.

"எங்க பொண்ணு தான் எங்களுக்கு எல்லாமே அவளை பத்திரமா கொடுத்துருக்கீங்க ரொம்ப நன்றிம்மா. எங்க உயிர் இருக்க. வரைக்கும் உங்கள மறக்க மாட்டோம்" என்று விடை பெற்றனர்.

அடுத்து அடுத்து வந்த வருடங்களில் அவர்கள் வீட்டிற்கு பூ பழங்களுடன் சென்று பார்த்து வந்தனர்.

வெளியில் செல்லும் பெற்றோர் குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கோங்க ....

எப்படி இருக்குனு சொல்லுங்க?

ஸ்வாரஸ்யம் என்னவென்றால் இது என்னுடைய கதை அதாவது நான் சிறுவயதில் தொலைந்த உண்மை கதை.. அப்படியே கிடைக்காமல் போய்ருந்தால் உங்களை எல்லாம் கதை எழுதுறேன்னு இப்போ கொல்ல மாட்டேன்... ..ஹீ.. ஹீ...​
 

New Threads

Top Bottom