- Messages
- 1,024
- Reaction score
- 1,132
- Points
- 113
அத்தியாயம் 14
ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுடன் அனைவரும் வெளியே வந்தனர்.
சந்தானம் நேரே அங்கு உட்கார்ந்திருந்த அக்னிமித்ரனிடம் சென்றவர், தன் தொண்டையை செருமினார்.
அவன் அலட்சியமாக நிமிர்ந்து பார்த்தான்.
"உன் முடிவுக்கு நாங்க சம்மதிக்கறோம். இந்தா நீ கேட்டது" என்று தாங்கள் கையெழுத்து போட்ட பேப்பரை அவனிடம் நீட்டினார்.
"ஓகே வெல். உங்க டாக்குமெண்ட்ஸ் என்கிட்ட இருக்கற வரைக்கும் உங்களுக்கு ஒரு பாதிப்பும் வராது. என்னை நீங்க டெஃபனட்டா நம்பலாம். இப்ப நீங்க என் பேரெண்ட்ஸுக்கு கால் பண்றீங்களா? இல்ல, நானே பண்ணிடவா?" என்று கேட்க, சந்தானத்தின் உத்தரவின் படி பூர்ணிமாவிற்கு தானே அழைப்பு விடுத்தாள் கல்பனா.
மறுபுறம் ஏற்கப்பட்டவுடன், "பூர்ணி நீயும் நானும் சம்பந்தியாகப் போறோம்டி" என்று பாசாங்காக சந்தோஷக் கூச்சலிட்டாள்.
"என்னடி சொல்ற? மித்ர வர்ஷினி கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாளா?" என்று சந்தேகத்துடன் கேட்டாள் பூர்ணிமா.
பூர்ணிமாவின் சந்தேகத்திற்கு காரணம், மித்ர வர்ஷினி எப்படி கருப்பாக இருக்கும் அக்னிமித்ரனை கட்டிக்கொள்ள சம்மதித்தாள் என்பதே.
"அதுவந்து நீ நேர்ல வா சொல்றேன். நாங்க இந்த மாசத்துலயே கல்யாணத்தை வச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டோம். ஸோ, நீ இப்பவே உன் ஹஸ்பண்டை கூட்டிக்கிட்டு தாம்பூலத் தட்டோட எங்க வீட்டுக்கு வந்துருடி" என்று கூற, சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த பூர்ணிமா, உடனேயே அந்த விஷயத்தை நீதிதாசனுக்கு தெரிவித்து, அவள் கூறியபடி கையில் தாம்பூலத தட்டுடன் அவர்களின் வீட்டிற்குச் சென்றாள்.
வந்தவர்கள் அங்கு நடு நாயகமாக சோபாவில் மிடுக்காக கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த, தங்கள் புதல்வன் அக்னிமித்ரனை கண்டதும், திடுக்கிட்டு நின்றார்கள்.
அவர்களை பார்த்தவன் எழுந்து நின்று, "நம்ம வீடு தாம்ப்பா. உள்ள வாங்க. என் மாமனார் வீடு தான் இது" என்று கையிலிருந்த அலைபேசியை டீபாயின் மேல் வைத்துவிட்டு வரவேற்க, அவனின் பெற்றோர் இருவரும் குழம்பிப்போய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவனின் குரலில் கலைந்த சந்தானமும், மற்றவர்களும் அப்போது தான் வந்திருந்தவர்களை கவனித்தனர்.
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றவர்களின் அருகில் சென்று, கைகளைப் பற்றி வரவேற்றனர்.
நீதிதாசனை பார்த்து கண்ணடித்த அக்னி, "கமோன் ப்பா" என்று சொல்ல, சம்பிரதாயமாக சிரித்தவர் பூர்ணிமாவுடன் சோபாவில் உட்கார்ந்தார்.
அக்னிமித்ரன் அவர்களுக்கு வலப்புறம் இருந்த இருக்கையில் அமர்ந்தான். நீதிதாசனுக்கு எதிரே இருந்த சோபாவில் சந்தானமும் பிரகாஷும் அமர்ந்திருந்தனர்.
நீதிதாசன் தன் மகனிடம் என்ன நடக்கிறதென தனது புருவங்களை உயர்த்திக் கேட்க, "அப்பா அது வந்து நான் உங்ககிட்ட முன்னாடியே சொல்லணும்னு இருந்தேன். நானும் ரதியும் ரொம்ப நாளாவே லவ் பண்றோம்பா. நான் தினமும் காலையில பீச் ரோட்ல வாக்கிங் போவேனே? அப்ப தான் ரதி எனக்கு பழக்கம். அவ வீட்ல திடீர்னு ப்ரித்விகூட மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணினதும், அவளுக்கு என்ன பண்றதுனே தெரியல. என்கிட்ட சொல்லி ரொம்ப அழுதா. நானும் அவளை எவ்வளவோ சமாதானம் பண்ண ட்ரை பண்ணினேன் ப்பா. பட் அவ என் பேச்சை கேட்கறதாவே இல்ல. நாங்க ரெண்டுபேரும் நம்ம ரெண்டு ஃபேமலியும் இதை எப்படி எடுத்துக்குமோனு பயந்து, உங்க கன்சர்ன் இல்லாமலேயே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் ப்பா. சாரி ப்பா" என்று திண்ணக்கமாய் தன் பொய்யை சொல்லி முடித்தான்.
ஏற்கனவே மித்ரவர்ஷினி அவனை கல்யாணம் பண்ணிக்கொள்ள சம்மதித்து விட்டால் என்றதற்கே தன் கையை கிள்ளிப் பார்த்து, இது கனவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பூர்ணிமாவிற்கு, இப்போது மயக்கமே வரும் போல் இருந்தது.
‘என்னது லவ்வா? அதுவும் ரதிக்கூடயா?’ என அதிர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்தவள், அனைவரின் முன்பும் தன் வாயைப் பிளக்க, அதைப் பார்த்து மனம் குமுறியது கல்பனாவிற்கு.
‘இருடி உன்னை லேடிஸ்கிளப்ல மாட்டிவிட்டு என்ன பண்றேனு மட்டும் பாரு’ என வன்மமாய் நினைத்து கொண்டாள்.
பூர்ணிமாவின் கையைப் பிடித்து அழுத்திய நீதிதாசன் அவன் கூறியவற்றை கேட்டு அவனை நம்பாத பார்வை பார்க்க, அவரை நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக பார்த்தான் அக்னிமித்ரன்.
இதில் வேறு ஏதோ இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார் அவர்.
எனினும் அதை வெளிக்காட்டாமல் "ஓ! எல்லாம் முடிஞ்சிடுச்சா? இதுல நாங்க சொல்ல என்னப்பா இருக்கு?” என்று அவனிடம் தன் அதிருப்தியைக் காட்டியவர்,
சந்தானத்திடம் திரும்பி, “நீங்க போன்ல சொன்னது மாதிரியே இன்னும் ஒரு மாசத்துல இவங்க கல்யாணத்தை வச்சிக்கலாம்" என்று சொல்லி கையிலிருந்த தாம்பாளத்தை நீட்டினார்.
உடனே குறுக்கே புகுந்த கல்பனா, "ஒரு நிமிசம். இந்த சம்பந்தம் மட்டும் இல்லாம, பூர்ணிமா முன்னாடி ஆசைப்பட்ட மாதிரி மித்ரவர்ஷினியையும் உங்களுக்கு மருமகளா அனுப்பி வைக்க எங்களுக்கு சம்மதம்” என்றாள்.
அக்னியோ திகைத்தான்.
“எனக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கல்லாம் விருப்பம் இல்ல" என்றான் மிடுக்காக.
அவன் பண்ணும் பகுமானத்தைக் கண்டு உள்ளுக்குள் கொதித்தாள் கல்பனா. பூர்ணிமாவும் தான்.
கல்பனா தன் பல்லைக் கடித்தபடி, “மாப்பிள்ளைக்கு ரொம்ப குறும்பு. நாங்க வர்ஷினியை உங்க இன்னொரு பையன் அசோகமித்ரனுக்கு தான் கல்யாணம் பண்ணித்தரதா சொன்னோம். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வர்ஷினிக்கு வாட்ஸப்ல நம்ம அச்சு போட்டோவை அனுப்பி ஓகேவான்னு கேட்டோம். அவளும் ஓகே சொல்லிட்டா. அச்சுவை நாளைக்கு வந்து எங்க வர்ஷினியை பார்க்கச் சொல்லுடி பூர்ணி. உங்க எல்லாருக்கும் ஓகேன்னா மேற்கொண்டு பேசலாம். நம்ம பிள்ளைங்க விருப்பம் தானே நமக்கு முக்கியம்? ஒருவேளை எல்லாம் ஓகேவாச்சினா ரெண்டு கல்யாணத்தையும், ஒரே நாள்ல ஒரே மேடையில வச்சிக்கலாம். நீங்க என்னண்ணா சொல்றீங்க?" என்று நீதிதாசனிடம் கேட்க, சிறிது நேரம் நெற்றியை சுருக்கி யோசித்தவர், சரியென்று சம்மதித்தார்.
அக்னிமித்ரன் மட்டும் அவர்களின் திட்டத்தை முன் கூட்டியே அறிந்தவன் போல் கேலியாக அவர்களை பார்த்து நகைத்தான்.