Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலென்பது..... - கார்குழலி

Messages
22
Reaction score
1
Points
1
10



பிரதீபன் முன்னே செல்ல அவனுக்கு பின்னோடு அந்த அறையிலிருந்து வெளியேறினாள் மாயா.அவள்கொஞ்சமும் எதிர்பார்க்காத வண்னம் பிரதீபம் வெளியே தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்த ராம்குமாரிடம்"சாரி ராம்குமார்" என்றான். மாயாவிற்குள் எல்யில்லா சந்தோஷம். காரினும் ஏறியதுமே தனி சந்தோஷத்தைபகிர்ந்து கொண்டாள். "தேங்கியூ பிரதீப்" காரை ஸ்டார்ட் செய்தபடியே “ எனிதிந் ஃபார்s மை ஏஞ்சல்” என்று கண்ணடித்தவனை விழிவிரித்து பார்த்தாள் மாயா, ப்ரதீபன் இன்று வித்தியாசமாக இருந்தான் “ என்ன ! சார் இன்னைக்கு ரொம்ப டிபரன்டா ரியாக்ட் பன்றீங்க?” புருவம் உயர்த்தி வினவியவளிடம். “இன்னறக்குநடந்ததெல்லாம் அப்படி”அவன் தன் இதயத்தை தொட்டு காண்பிக்க. அவள் முகம் செவ்வானமாய் சிவந்தது, அதனை மறைக்க தன் முகத்தை திருப்பி வெளியே பார்த்துக் கொண்டு "நீ ஒழுங்கா ரோட்டை பாத்து ஓட்டுபிரதீப்" என்றாள் "அதெல்லாம் அய்யா கைபட்டா வண்டி தானா ஓடும்" என்றான் ஸ்டியரிங்கை லாவகமாகசுழற்றி ஓட்டியபடி மாயாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவ்வப்போது சாலையையும் அதிக நேரம்மாயாவையும் பார்த்துக் கொண்டே காரை ஓட்டினான்.



இன்னும் ஒரே வாரம் தான் இவளை இப்படி அருகில் பார்க்க முடியும். அதன் பிறகு ஒரு வருடம் இவளைஃபோனில் தான் பார்க்க முடியும், பிரதீபனுக்கு அமெரிக்கா ஒன்றும் போகமுடியாத ஊர் அல்ல,ஆனால்பயணத்திலேயே ஒரு நாள் கழிந்து விடும், அது மட்டுமல்லாமல் வேலை நெருக்கடிகள் அதற்கு வழிவகுக்குமாஎன்பதும் தெரியாது. ஆகவே அவளை ஆசை தீர பார்த்துக் கொண்டான். அவளோ " பிளீஸ் பிரதீப் ரோட்டைபாத்து ஓட்டு "என்று கெஞ்சலாக அவ்வப்போது கேட்டுக் கொண்டாள். ஆனால் அவனால் தான் அது முடியாமல்போனது. "நீ யூ எஸ் போயேதான் ஆகணுமா" என்று பரிதாபமாக கேட்டான்.பிரதீபனின் அந்த பார்வை அவள்முற்றிலும் அறியாதது. | கம்பீரம், கோயம், ஆளுமை, குரும்பு போன்ற உணர்வுகளை மட்டுமே அந்த கண்களில்அவள் அதிகம் பார்த்திருக்கிறாள். இந்த கெஞ்சல் பார்வை அவளை முழுவதுமாக கட்டிப் போட்டது. அவளும்தன் நிலை மறந்துவிட்டாள், அவனும் தன் நிலை மறந்துவிட்டான். ஏதோ ஒன்று கடைகண்ணில் உறுத்தசட்டென சாலையை பார்த்து பிரதீபன் சுதாரிப்பதற்குள் அந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. "கி. - - - ரீ. . . . . ச்...." பெரும் சத்தத்துடன் அவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மருகோடியில் போய் நின்றது. கார் ஓர் இடத்தில் நின்றதும்.பிரதீபன் முதலில் பார்த்தது மாயாவை தான்.அவள் இரு கண்களையும் இருகமூடியபடி கார்சீட்டை இருகப்பிடித்துக்கொண்டிருந்தாள். நல்ல வேளையாக இருவரும் சீட்பெல்ட்போட்டிருந்தார்கள் அதனால் அடி ஏதும் படவில்லை. அப்போது கார் நின்று விட்டதை உணர்ந்த மாயாவும்சட்டென கண்விழித்து பிரதீபனை தான் பார்த்தாள். "ஆர் யூ ஓ கே " என்றான் பதட்டத்துடன் அவளைஆராய்ந்தவாரு. " ஆம் "என்பது போல் தலையசைத்தவள் அவனை உச்சு முதல் பாதம் வரை அவசரமாகஅளவெடுத்தாள். உடனே ஏதோ தோன்ற இருவருமே நாம் எதன் மேல் இடித்தோம் என்று சுற்றும் முற்றும்பார்க்க மாயாவின் முகம் வெளிறியது. காரை விட்டு இருவரும் அவசரமாக வெளியேர அந்த காட்சி அவர்கள்கண்ணில் பட்டது. நடு ரோட்டில் ஓர் பைக் உருண்டு கிடக்க அதிலிருந்து பத்தடி தூரத்தில் யாரோ விழுந்துகிடந்தார்கள். இந்த சாலை ஓ எம். ஆர்.ரோட்டில் அதிக வாகன போக்குவரத்து இல்லாத பாதை அதனால்கண்ணுக் கெட்டிய தூரம் வரை எந்த வாகனமும் இல்லை. அவசரமாக உதவி செய்ய ஓட முயன்ற மாயாவின்கரம் பற்றி தடுத்து "மாயா இரு நான் ஆம்புலன்சுக்கு கால் பன்றேன்.அண்ட ஐ வில் இன்பார்ம் திபோலீஸ்ஆல்சோ, இப்போ நீ இங்க இருக்கறது சரி இல்ல, சோநான் உன்னை வீட்ல டிராப் பன்றேன்" என்று அவளைகாரை நோக்கி இழுக்க "வாட் ! ஆர்யூ மேட், இங்க ஒருத்தன் அடிபட்டு விழுந்து கெடக்கறான், ஆம்புலன்ஸ் வர்ரவரைக்கும் வெய்ட் பன்ன முடியாது" அவள் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே தூரத்தில் ஸ்டீரீட் லைட் வெளிச்ச. கிடந்தவனின் கால்கள் அசைவது தெரிந்தது. ப்ரதீபன் அவனுக்கு உயிர் இருக்கு பிளீஸ் வா" என்று அவள்அவனை எதிர் திசையில் இழுத்தாள், காரை நோக்கி அவன் திரும்பியிருந்ததால் அவனுக்கு அந்த அடிபட்டவன்தெரியவில்லை,"நோ நீ இங்க இருக்கக் கூடாது வா" என்று அவனும் அவளை காரை நோக்கி இழுத்தான்இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியது அவள் கெஞ்சினாள், அவள் அவளின் பேச்சுக்கு செவிமடுக்கவில்லை.



அவளுடன் வாதிட்டுக்கொண்டே ஆம்புலன்சிர்கும், போலீசிர்கும் தகவல் கொடுத்தான்.

மாயாவின் மனம் பதைபதைத்தது, கடந்து கொண்டிருக்கும் நேரம் பொன் போன்றது அவளின் மூளை சத்தமாகசொல்லியது, மனம் விம்மி வெடித்து விடும் போல் இருந்தது. அந்த அழுத்தத்தை தாங்கமுடியாதவளாய் தன்முழுபலத்தையும் திரட்டி அவள் கைகளை அவன் பிடியிலிருந்து உதரினாள்

தன் போலீஸ் நண்பன் விஐய் இடம் போனில் பேசிக் கொண்டிருந்தவன் இதனை எதிர்பார்கவில்லை,

“இங்க ஒரு உயிர் துடிச்சிகிட்டு இருக்கிறது உனக்கு தெரியலையா, ஆம்புலன்ஸ் வர்றதுக்குள்ள ஏதாவதுஆகிடுச்சுன்னா நீ கொலைகாரனாகிடுவ, அண்டஸ்டாண்ட்" கண்கள் கலங்க வெறி பிடித்தவள் போல்கத்தினாள். “அதெல்லாம் போலீஸ் பாத்துப் பாங்க மாயா யூகம் விதி மீ" மீண்டும் அவள் கரம் பற்றமுயன்றவனிடமிருந்து தன் கைகளை உதரிக் கொண்டு தரையில் அடிபட்டு கிடக்கும் மனிதனை நோக்கிஓடினாள் மாயா. வேறு வழியின்றி பிரதீபனும் ஓடினான்.அங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்த மனிதனை பார்கநெஞ்சே வெடித்து விடும்போல் இருந்தது மாயாவிற்கு "கடவுளே"என்றபடி அவனருகில் அமர்ந்தவள் குப்புறபடுத்திருந்தவனை திருப்பினாள். முகமெல்லாம் ரத்தம்,அவனது கண்கள் விரிந்தன, கைகளை தூக்கி ஏதோசொல்ல முயன்றான் அவன். "ஹலோ .... கேன்யூ ஹியர் மீ" என்று அவள் ஏதோ பேசிக் கொண்டிருக்கும்பொழுதே அவள் பின்னோடு பிரதீபனும் வந்துவிட்டான். ரத்தம் சொட்ட சொட்ட கண்களில்மரணபயத்தோடுகிடந்தவனை பார்ததும் அவனும் மற்ற எல்லாம் மறந்து விட்டது. அந்த முகம் தெரியாதமனிதனின் அருகில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான். தேவையில்லாமல் பேசி நேரத்தை கடத்தாமல் " மாயாகாரை ரிவர்ஸ் எடு ஹாஸ்பிடல் போகலாம் குவிக்" என்று மாயாவை துரிதப்படுத்தியவன். ரத்தத்தில் உயிருக்குபோராடிக் கொண்டிருந்தவனை தன் இரு கைகளால் தூக்கிக்கொண்டு காரை நோக்கி ஓடினான். மாயாவைஉட்காரவைத்து அவனை பின் இருக்கையில் அவள் மடியில் படுக்க வைத்து காரை எடுத்தான். சீரிப்பாய்ந்ததுகார். இம்முறை சாலையில் கவனத்தை முழுவதுமாக பதித்து ஓட்டினான் பிரதீபன் வழி முழுவதும் மாயாஅடிபட்டவனிடம் பேசிக்கொண்டே வந்தாள் "ஹலோ கேக்குதாசார் ?இதோ... ஹாஸ்பிடல் வந்துடும்...கொஞ்சநேரம் தான், பீவித் அஸ், ஸ்டே அலைவ், ப்ளீஸ் “ என்று ஏதேதோ வாயில் வந்ததை எல்லாம் உளரினாள். அவன்கண்கள் திறந்து திறந்து மூடியது. உதடுகளை அசைத்து ஏதோ சொல்ல முயன்றான் ஆனால் குரல் எழவேஇல்லை.அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது மாயாவிற்கு புரியவும் இல்லை. அப்போது தான் பிரதீபனுக்குஒன்று தோன்றியது. "மாயா அவனோட பாக்கெட்ஸ் செக் பன்னி பாரு ,போன், இல்ல ஐடி, அட்ரஸ் இப்படிஏதாவது கிடைக்குதா பாரு" என்றான். உடனே அவன் சட்டை பாக்கெட்டில் பேண்ட் பாக்கெட்டில் தடவிப்பார்த்தவளுக்கு பேண்ட் பாக்கெட்டில்போன் மாதிரி ஏதோ தட்டுப்பட்டது. அவசரமாக அதனை வெளியேஎடுத்தவள் அன்லாக் செய்ய முயன்றாள் ஆனால் அது பேட்டர்ன் லாக் செய்யப்பட்டிருந்தது. எமர்ஜென்சிகாலிலும் எந்த நம்பரும் இல்லை

"என்ன மாயா ஏதாவது கிடைச்சுதா" என்று கேட்டவனுக்கு " இ --- இந்த போன் தான் கிடைச்சது பிரதீப், பட்இது லாக் ஆகியிருக்கு வேற எதுவும் இல்ல" என்றாள் பதட்டத்துடன் அதற்குள் அடிபட்டவன்நினைவிழந்திருந்தான். "ஐயோ பிரதீப் சீக்கிரம்" என்று படபடத்தாள். நல்ல வேளையாக மருத்துவமனை வந்துவிட்டது. அதன் பிறகு எல்லாமே மருத்துவர்களும் செவிலியர்களும் பாரித்துக்கொண்டார்கள். கவுண்டரில் தன்கார்டை தேய்த்து விட்டு ரத்தக் காயங்களுடனான தன்னுடைய சட்டையை பார்த்தபடியே சோர்ந்து போய்சேரில் அமர்ந்திருந்த மாயாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான். அவள் அந்த முகம் தெரியாதவனின்செல்பேசியை கையில் வைத்துக்கொண்டிருந்தாள். அவளிடம் எது பேசவும் பயந்தவனாய் தன் போனை எடுத்துதன் போலீஸ் நண்பனான விஜயிடம் விபரத்தை சொன்னான் , உடனே சம்பந்தபட்ட காவல் நிலையத்திற்கு பேசிஸ்பாட்டிற்கு ஆள் அனுப்புவதாகவும், தானும் உடனே புறப்பட்டு வருவதாகவும் சொல்லி வைத்தான் விஜய்.



முப்பது நிமிடம் கடந்திருக்கும். டாக்டர் இவர்களிடம் வந்து "ஹெவீ பிளட் லாஸ், பேஷன்ட் இஸ் நாட் ஸ்டேபிள், சீக்கிரம் அவங்க வீட்டுக்கு எப்படியாவது இன்பார்ம் பன்னிடுங்க” என்று கூறிவிட்டு செல்ல, பரதீபனுக்கும்மனதில் ஏதோ ஒன்று குத்திக் குடைந்தது. மாயா வாய்மூடி அழுதாள்.



தன்மனதின் குடைச்சலை பின்னுக்குத்தள்ளி, “பிளட் அவைலபிள்ஆ இருக்கா, ஏதாவது அரேஞ் பன்னனுமா ?” என்றான்



“வீ ஹெவ் பிளட் , டோன்ட் வொர்ரி வீ ஆர் டிறையிங் அவர் பெஸ்ட்” என்றுவிட்டு உள்ளே சென்றார்



அதற்குள் அவனது நண்பனும் போலீசுமான விஜய் வந்து விட அதற்கு மேல் பிரதீபனால் யோசிக்க முடியவில்லை.. விஜய் பிரதீபனை நெருங்கியதும்" பையனோட வண்டில லைசன்ஸ் இருந்தது.அத வச்சு அவங்க வீட்டுக்குஇன்பார்ம் பன்னியாச்சு,அவங்க வந்துடுவாங்க இங்க என்ன ஆச்சு? அந்த பையனோட ஸ்டேடஸ் " என்றுகேட்க "



“ கிரிட்டிகல் தான்” என்றான் கம்மிய குரலில்



அவனுடைய குரலிலேயே அவன் மனம் படித்த விஜய்"ஓகே ஓகே டோண்ட் வொர்ரி,ஹிவில் பிஆல்ரைட்"என்றுஆருதல் படுத்த முயன்றவனின் செல் போன் அடிக்க அதனை காதுக்கு கொடுத்து கொண்டே வெளியே செல்ல,



"த . . . . ரு ------ண்" என்ற கதறலுடன் மருத்துவமனையின் நுழைவாயிலில் ஓடி வந்து கொண்டிருந்தார் ,விஜயாஅவர் பின்னோடு கார்த்திக், கேசவன், கீர்த்தியை தூக்கியபடி மிருதுளா ஓடி வந்தார்கள்.(படிச்சிட்டு இப்படி அமைதியா போனா எப்படி பிரண்ட்ஸ் , கொஞ்சம் comments போடலாமே)



காதலென்பது.......தொடரும்......

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 
Messages
22
Reaction score
1
Points
1
11



சாமியானா பந்தலை வீட்டு தூணுடன் சேர்த்து இருக்கி கட்டிக்கொண்டிருந்த சந்துருவின் பாக்கெட்டிலிருந்தசெல்போன் ஒலித்தது. கயிரை இருக்கி கட்டி விட்டு போனை எடுத்து காதுக்கு கொடுத்தவன் எதிர்முனையில்தெரிவிக்கப்பட்ட செய்தியில் அதிர்ந்தான். அவசரமாய் வீட்டினுள் சென்றவன் தந்தை மணிகண்டனைதேடினான். மணிகண்டன் அவருடைய அரையில் நோட்டு புத்தகத்தில் ஏதோ கணக்கு எழுதிகொண்டிருந்தார். அவர் காதருகில் சென்று விஷயத்தை சத்தம் வராமல் கிசுகிசுத்தவன், அவரது வெளிரிய முகத்தை பார்த்ததும்அவசரமாக. "ஜஸ்ட் ஆக்சிடண்ட்னு தான் கார்திக் சொன்னார் பா, பெரிசா எதுவும் இருக்காது அவங்களும்ஹாஸ்பிடலுக்கு தான் போய்கிட்டு இருக்காங்களாம்.நாமளும் போய் பாத்துட்டு வந்துடலாம்" என்றான். உடனேஎழுந்து விட்டார் மணிகண்டன்.



கூடத்தில் சில பெண்கள் அரட்டையடித்தபடி பூ தொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆர்த்தியும், ப்ரியாவும், மெஹந்தி போட்டு வரப்யூட்டி பார்லர் சென்றிருந்தார்கள் அம்மா சவுந்தரி சமையல் கட்டில் மும்முரமாக வேலைசெய்து கொண்டிருந்தார். எல்லோரையும் கடந்து இருவர் மட்டும் காரில் ஏறி மருத்துவமனையை நோக்கிபயணித்தனர்.



சந்ருவை பார்த்ததும் கார்த்திக் அவனை நெருங்க.மணிகண்டன் கேசவனிடம் சென்றார். நடந்தவற்றைசந்துருவிடம் கூறி கார்த்திக் கண் கலங்கசந்துருவின் இதயம் ஒரு நொடி நின்று பின் துடித்தது.



"ஹெவி பிளட் லாஸ், கிரிட்டி கல் ஸ்டேஜ்" என்று கார்த்திக் கூறியது சந்துருவின் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. கண்கள் ரத்தமென சிவக்க "யார் இடிச்சது " என்று கேட்டான். "அதோ " என்று தூரத்தில்மாயா உடன் அமர்ந்திருந்த பிரதீபனை கார்த்திக்கின் கை காட்டியது தான் தாமதம்



இரண்டெட்டில் அவனை அடைந்தவன் கொத்தாக அவன் காலரை பிடித்து தூக்கி நிறுத்தினான். எதிர்பாராதஇந்த தாக்குதலில் சற்று தடுமாரிய பிரதீபனை ஆவேசமாக தன் புறம் இழுத்தவன் அவன் கண்களைகுரேதத்துடன் பார்த்து "என் மாப்பிள்ளைக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சு உன்ன இல்லாம பன்னிடுவேன்ஜாக்கிரதை" என்றான். அதற்குள் மாயா எழுந்து கொண்டாள், சந்துருவின் கைகளை பிரதீபனின்சட்டையிலிருந்து விலக்க முயன்றபடியே "சார் அப்படியெல்லாம் எதுவும் நடக்காது விடுங்க பிளீஸ், விகேன்ஃபிக்ஸ் இட் எவ்வளவு செலவானாலும் பராவாயில்லை எப்படியாவது அவரை காப்பாத்திடுவோம், பிளீஸ் விடுங்க" என்றாள் மன்றாடலாக. விஜய் ஃபோன் பேசி விட்டு உள்ளே வந்த போது அவன் கண்ட காட்சி பிரதீபனின்சட்டையை சந்துரு பற்றியிருந்ததைத்தான்.சந்துரு சார் இங்க எப்படி என்று மூளையில் ஏதேதோ கேள்விகள்எழ கால்கள் ஓட்டம் பிடித்தன.சந்துருவின் கைகளை பிரதீபனின் சட்டையிலிருந்து விடுவிக்க முயன்றுகொண்டே "சந்துரு சார் பீளீஸ் விடுங்க, பேசிக்கலாம்" என்றான்



பிரதீபன் சந்துருவின் கண்களிலிருந்து பார்வையை அகற்றவில்லை, மாயாவையும் விஜய்யையும் ஒருவிதஎரிச்சலுடன் பார்த்த சந்துரு வேண்டாவெறுப்பாக அவன் காலரை விட்டான் பின் மீண்டும் பிரதீபனை பார்த்து "நீ பிரதீபன் தானே ஐடி சொல்யூஷன்ஸ் எம் டி ? பணம் இருக்குற திமிரு .....ம்? என்ன வேணும்னாலும் செய்வீங்கஇல்ல, செஞ்சுட்டு எல்லாத்தையும் பணத்தை வெச்சு ஃபிக்சும் பன்னிடுவீங்களா? அதையும் தான் ..-- பாக்கலாம்.....மறுபடியும் சொல்றேன் என் மாப்பிள்ளைக்கு மட்டும் ஏதாவது ஆச்சு - - - - - "முடிக்காமல் தன் சுட்டு விரலைஆட்டி தொலைத்து விடுவேன் என்பது போல செய்கை செய்து விட்டு அங்கிருந்து அகன்றான். பிரதீபன் எதுவுமேபேசவில்லை தான் ஆனால் அவனது கண்கள் சிறிதும் தழையவில்லை சந்துருவை நேருக்கு நேர்பார்த்துக்கொண்டேயிருந்தான்.

விஜய் சந்துருவிடம் ஏதோ பேச முயன்று அவன் பின்னோடு சென்றிருந்தான்.



எரிச்சலோடு மாயாவின் புறம் திரும்பிய பிரதீபன்

“ஆர் யூ மேட்? அவன்கிட்ட எதுக்கு கெஞ்சுற? இட்ஸ் அன் ஆக்சிடன்ட் தட் சால், என்னவோ மர்டர் மாதிரி அந்தஆள் பிள்டப் பன்றான் நீ பயந்து நடுங்கற. ஐ வில் ஹேன்டுல் தெம் இன் கொர்ட்” என்றான் பற்களை கடித்தபடி. அவனிடம் ஏதோ பேச முயன்ற மாயாவை கண்டுகொள்ளாமல் போனை காதுக்கு கொடுத்தபடி அங்கிருந்துஅகன்றான்

அவளிடம் பேசினால் மீண்டும் நியாய அனியாய கிளாஸ் எடுக்க ஆரம்பித்துவிடுவாள் அவன் இருக்கும்மனநிலையில் அதனை கேட்க அவனால் முடியாதே. அங்கே நிற்கவும் அவனுக்கு பிடிக்கவில்லை.



ஹாஸ்பிடலுக்கு வெளியே சென்று ஃபோனில் தன் வக்கீலிடம் எல்லாம் சொன்னான் '' "நீங்க ஏன் சார் அங்கஇருக்கீங்க, நீங்க கெளம்புங்க, ஐ வில் ஹேன்டில் இட்" என்றார். உள்ளே வந்தவனது பார்வை மாயாவைதழுவியது. தருண் அவுட் ஆப் டேன்ஜர் என்று டாக்டர்கள் சொல்லும் வரை இங்கிருந்து நகரமாட்டாள் என்பதுதெளிவாகவே தெரிந்தது அவளை விட்டு இவன் மட்டும் எப்படி போக முடியும்? வேறு வழியின்றி ஒருபெறுமூச்சுடன் மீண்டும் அவள் அருகில் அமர்ந்தான். தருண் உடல்நிலை பற்றி ஒரு மனித நேயமுள்ள மனிதனாய்கவலை பட்டான் தான்,சரியாக வேண்டும் என்று நினைத்தான் ஆனால் அவன் கவலை எல்லாம் மாயாவின்மனநிலையை பற்றித்தான், அவள் வருத்தப்படுவதை அவனால் தாங்க முடியவில்லை. டாக்டர்கள் மும்முரமாகபணியில் ஈடுபட்டிருந்தனர். தருணின் உயிர்காக்க தங்களால் இயன்றவரை போராடினார்கள். ஐந்து மணி நேரபோராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.அந்த முடிவு வெளியே இருந்த அத்தனை பேருக்கும் இடியாய் இருந்தது.

காதலென்பது.......தொடரும்......

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 
Messages
22
Reaction score
1
Points
1
12



“சாரி சார், ஒரு டென்மினிட்ஸ் முன்னாடி வந்திருந்தா காப்பாத்தி இருக்கலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்டாக்டர்.அவ்வளவு தான் தருணின் குடும்பம் மொத்தமும் கதறிக்கொண்டு தருணின் முகம் பார்க்க விறைந்தனர்.

உடைந்து அமர்ந்து விட்டாள் மாயா , அவளது தோள்பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்த பிரதீபனின் தோளைஆவேசமாக யாரோ இழுக்க அவசரமாக எழுந்தான் பிரதீபன்.

இம்முறை காலரை அல்ல கழுத்தையே பற்றி விட்டிருந்தான் சந்துரு. ஹாஸ்பிடல் சுவற்றுடன் சுவராக அவனைமோதி

" கொண்ணுட்டயேடா எங்க வீட்டு மாப்பிள்ளையை கொண்ணுட்டியேடா இப்போ என் தங்கச்சிக்கு நான் என்னபதில் சொல்வேன். கார் ஓட்டுனா கண்மண் தெரியாமதான் ஓட்டுவீங்களா? பணக்காரனா இருந்தா எது வேணும்செய்வீங்க, செஞ்சுட்டு, இதோ இவனை மாதிரி ஒரு போலீஸ்காரன் துணையோட எஸ்கேப் ஆகிடுவீங்க அப்படிதானே?" என்று விஜய்யை காட்டி பேசியவன் பிரதீபனின் கழுத்தை உலுக்கினான்.பிரதீபன் எதுவுமேபேசவில்லை, இப்போது அவனுக்குமே ஒரு குற்ற உணர்வு மனதை அழுத்திக்கொண்டிருந்தது ,அமைதியாகசந்துருவையே பார்த்துக் கொண்டிருந்தான்.சட்டென மாயா புரம் திரும்பியவன் “ நீ தானே சொன்ன வி கேன்பிக்ஸ் இட்னு.... இப்போ என் மாப்பிள்ளை எங்க?” என்று ஆக்றோஷமாக கத்தினான், அப்போது அவனை தேடிக்கொண்டு மணிகண்டன் அங்கே வந்து விட்டார். அங்கே வேலை செய்யும் சிலரும் திரண்டு விட்டார்கள். சந்துருவோ இது எதையுமே கவனிக்கவில்லை. "சொல்லுடா தருணை திரும்ப தர முடியுமா இல்லை என்தங்கச்சி வாழ்க்கைக்கு தான் ஒரு வழி சொல்ல முடியுமா?" "சொல்லுடா என் தங்கச்சிக்கு என்னடாசொல்வேன்? கல்யாணம் நின்னுபோச்சுன்னு எப்படிடா சொல்வேன்?" என்று பற்றியிருந்த கழுத்தை இன்னும்இன்னும் வேகமாக உலுக்கியவன் அவனை அடிக்க கை ஓங்கிய நேரம் மாயா சந்துருவின் கையை தாவி பிடித்துதன் பலம் கொண்ட மட்டும் நெட்டித் தள்ளினாள் இந்த எதிர்பாராத தாக்குதலில் தன் பிடியை தளர்த்திவிட்டான்சந்துரு. மீண்டும் பிரதீபனை நோக்கி அவன் பாய எத்தனிக்க "ஸ்டாப் இட்”என்று கத்திய மாயா நாசி விடைக்க, கண்கள் சிவக்க,குரலும் உடலும் நடுங்க “உ.....உங்க ..... தங்கச்சிய இவர் கல்யாணம் செஞ்சுப் பார்போதுமா?" என்றாள்

இவள் என்ன சொல்கிறாள் என்பது அங்கிருப்பவர்களுக்கு புரியவே சில வினாடிகள் தேவைப்பட்டது. எல்லோரது முகமும் சுருங்கியது . தன் கண்களை அழுந்தத் துடைத்தவள் இருகரம் கூப்பி" மன்னிச்சிடுங்க. போன உயிரை எங்களால் திரும்ப கொண்டு வர முடியாதுதான், ஆனா. இதனால பாதிக்கப்பட்ட பொண்ணுக்குஒரு வழி சொல்ல முடியும்..இதோ இவர் பேர் பிரதீப் ஒரு பெரிய ITகம்பெனியோட எம்டி. இவர் உங்க தங்கச்சியகல்யாணம் செய்துப்பார் உங்களுக்கு சம்மதமாசெல்லுங்க அதுக்காக கை ஓங்குர வேலை எல்லாம்வேண்டாம்" முடிக்கும் பொழுது குரலில் ஆத்திரம் வெளிபட்ட தோடு கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது. அப்போது அங்கே வந்த செக்யூரிட்டி. "சார் ப்ளீஸ் இது ஹாஸ்பிடல், சத்தமெல்லாம் போடாதீங்க கொஞ்சம்அமைதியா அப்படி போய் உக்காருங்க என்று கூட்டத்தை விலக்கி விட்டார். மாயா மற்றும் பிரதீபனை ஒருபுறமாக இழுத்துக் கொண்டு வெளியே சென்றான் விஜய் , சந்துருவும் மணிகண்டனும் தனித்து விடபட்டனர். அவர்களுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இரந்த தருணிற்காக யோசிப்பதா, அல்லது கல்யாணம்நின்று போனதை பற்றி யோசிப்பதா? இந்த நிகழ்வுக்கு பிறகு ஆர்த்தி ராசியில்லாதவள் என்றுபுரக்கனிக்கப்படுவாளே அதை நினைத்து அழுவதா? என்று எதுவும் புரியவில்லை.

“நீங்க இனி இங்க இருக்கறது சரியில்லை பீளீஸ் வீட்டுக்கு போங்க “ என்று மாயாவையும் பிரதீபனையும்அனுப்பிவைத்த விஜய் உள்ளே சந்துருவிடம் பேச சென்றுவிட்டான்



ஆனால் மாயா காரிடாரிலேயே நின்றாள்

"அவன் என்னை அடிக்கக் கூடாதுன்னுதானே மாயா அப்படி சொன்ன?" மாயாவை நெருங்கிய பிரதீபனின்முதல் கேள்வி இதுவாகத்தான் இருந்தது.

அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமலே "இல்லை" என்பதுபோல் தலையசைத்தாள்.

“மா - - - யா ...."காத்தாகிப் போய் விட்டது அவனது குரல்.

“தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கனும் பிரதீப், நீ ... யும் ...நா.....னும் இந்த தண்டனையிலிருந்து தப்பிக்கவேமுடியாது" என்றாள் எங்கோ வெறித்தபடி ஆனால் உறுதியாக

"நான் செஞ்ச தப்புக்கு உனக்கு எதுக்கு தண்டனை ?" அவனுடைய குரலிலேயே அவனது வலியை அவளால்உணர முடிந்தது.

“தவறு ரெண்டுபேருடையதும் தான். “

அழுது வீங்கியிருந்த மாயாவின் கண்களையும் உணர்ச்சிகளை துடை டெர்ந்து விட்டிருந்த முகத்தையும் உற்றுபார்த்தபடியே கேட்டான். "உன்னோட இறுதி முடிவு ?" அவனது குரலிலும் எந்த உணர்வும் இல்லை அவள்ஏதோ பேச வாய் திறக்க " எனக்கு நீ வேணும்" என்றான் அவசரமாக இடையிட்டு

"....."

"வேற .... வேற எது வேணுமானாலும் செய்யறேன் மாயா பிளீஸ் இது மட்டும் வேண்டாம்" என்றான் கெஞ்சலாக. மாயாவோ இறுதி முடிவெடுத்துவிட்டவள் போல கண்களை ஒருமுறை மூடி ஆழமாக மூச்செடுத்து தன்னைஆசுவாசப்படுத்திக்கொண்டு " முடியாது பிரதீப்" என்றாள் திட்டவட்டமாக, அவள் தோள் பற்றி அவசரமாகதன்புறம் திருப்பியவன் "மாயா திஸ் இஸ் நாட்.... ஃபேர், இட்ஸ் ஜஸ்ட் ஏன் ஆக்சிடென்ட் அதுக்கு இவ்வளவுபெரிய தண்டனையா?" என்றான் அவளை விட்டு பிரிய முடியா வலியுடன். "ஐஸ்ட் ஏன் ஆக்சிடன் ?" புருவங்களை சுருக்கி அவனை துளைத்துவிடுவது போல் பார்த்தாள். "இட்ஸ் எ மர்டர் பிரதீப், டோன்ட் யூ சீ இட். நீரோட்டை பாத்து டிரைவ் பன்னியா? இல்ல அடிபட்டு விழுந்து கிடந்தவனை சரியான நேரத்துக்கு ஹாஸ்பிடல்கூட்டி போய் சேத்தியா? இதுல ஏதாவது ஒன்ன செஞ்சிருந்தாலும் அவன் செத்துருக்க மாட்டான். நாம... நாம ... "அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை.அழக் கூடாது என்று எவ்வளவு முயன்றும் அவளால் முடியவில்லை. மாயாவின் அழுகையை பிரதீபனால் தாங்கிக் கொள்ள வேமுடியவில்லை.அவளை தன் நெஞ்சோடு அனைத்துஆறுதல் படுத்த பரபரத்த கையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.சிறிது நேரத்தில் அவளாகவே தன்னைசமாளித்துக்கொண்டு "அவங்க என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நம்ப கட்டுப்பட்டு தான் ஆகனும் பிரதீப்"என்றாள் பிடிவாதக் குரலில்

“இல்லன்னா?" ஒற்றை புருவத்தை ஏற்றி கோபமாகவே கேட்டான் பிரதீபன்

" ஏத்துக்கிட்டா நம்மோட நட்பாவது தொடரும் இல்லைன்னா நீ யாரோ நான் யாரோ தான். நான் உன்னைகல்யாணம் செஞ்சிப்பேன்னு மட்டும் நினைக்காத, அது நிச்சயம் நடக்காது என் மனசாட்சிப் கொண்ணுட்டு உன்கூட வாழாது நான் தூக்குல தொங்கரதுக்கு சமம்" என்றாள் உதடுகளை அழுந்தக் கடித்தபடி. அவ்வளவுதான்அடுத்த நொடி பிரதீபன் அங்கிருந்து வேகமாக வெளியேரி விட்டான்.

காரில் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.

அழகாக ஆரம்பித்த மாலை அலங்கோலமாய் முடிந்ததை தடுக்க முடியாமல் இரு மனங்களும் உள்ளுக்குள்கறைந்தன.

மாயாவை அவளது வீட்டில் இறக்கி விட்டவன் அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் காரை திரும்பிக்கொண்டுசென்று விட்டான். வேகமாக தன்னறைக்குள் ஓடிச்சென்று லாக் செய்து விட்டு படுக்கையில் விழுந்தவள்அதுவரை அடக்கிவைத்திருந்த வலி, ஆத்திரம், அவஸ்த்தை எல்லாவற்றையும் அழகையாக மாற்றி கதறிஅழுதாள். அவள் ஓடி வந்ததை பார்த்து பதறி கதவை தட்டிய பெற்றோருக்கு "லீவ் மீ அலோன்" என்ற கத்தல்தான் பதிலாக கிடைத்தது. இரவெல்லாம் அழுதும் அவளது வலி சற்றும் குறையவே இல்லை. பிரதீபனும்அவனுடைய அரை பால்கனியில் நின்றுகொண்டு வானத்தையே வெரித்து பார்த்துக் கொண்டிருந்தான். இருவருக்குமே அது வலிகள் நிறைந்த தூங்கா இரவானது

காதலென்பது.......தொடரும்......

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 
Messages
22
Reaction score
1
Points
1
13
அந்த அம்மன் கோவிலில் கனிசமான கூட்டம் கூடியிருந்தது ஆனால் அந்த கூட்டத்தில் இருந்தவர்கள்ஒருவரோடு ஒருவர் ஏதோ பேசுவதும் கோவிலின் வாயிலை பார்ப்பதுமாக இருந்தனர். கோவிலின் ஓர் மதில்சுவற்றின் முன்சிறு மண்டபம் தயார்படுத்தப்பட்டிருந்தது அதில் தேவையான பொருட்கள் இருக்கிறதா என்றுசரிபார்ப்பதும் ,அவ்வப்போது கருவரையில் வீற்றிருக்கும் அம்மனிடம் கண்களால் எதையோ யாசிப்பதாகவும்நடமாடிக்கொண்டிருந்தார் சவுந்தரி.
அந்த கூட்டத்தில் அரசல் புரசலாய் மாப்பிள்ளை மாரியது தெரிந்துவிட்டிருந்தது,
ஆர்த்தியின் காதுக்கு மட்டும் எதுவும் எட்டாத வண்ணம் பார்த்துக் கொண்டான் சந்துரு.
மணமகள் அலங்காரத்துடன் தலை குனிந்து அழகு சிலைபோல் வந்த ஆர்தியை பார்த்து கூட்டம் சலசலத்தது, எல்லா திருமணங்களிலும் மணமகள் ஸ்பெஷல் தானே அதனால் எழுந்த சலசலப்பு என்று மேலும்வெட்கத்துடன் இன்னமும் தலை கவிழ்த்து கொண்டாள்,
ஆனால் தருண் மீது தான் கொஞ்சம் கோபமாக இருந்தாள். நேற்றிலிருந்து எத்தனையோ முறை கால்செய்துவிட்டாள் ஆனால் அவன் எடுக்க வே இல்லை. இவனது கிக்கிற்கு ஓர் அளவில்லாமல் போய் விட்டதுஇருக்கட்டும் நாளை ஒட்டுமொத்தமாக வைத்துக்கொள்ளலாம் என்று பொருமினாள்.அது மட்டுமல்லாமல் இந்தஇட மாற்றமும் அவளுக்கு புரியவில்லை. பதிவு செய்திருந்த மண்டபத்தில் ஏதா கட்டிட கோளாரு என்றுஅண்ணன் சொல்கிறார் தான் ஆனால் மனதில் இதுதான் என்று சொல்ல முடியாத நச்சரிப்பு இருந்து கொண்டேஇருந்தது. ஒருவேளை திருமணமாகப் போகும் பெண்களின் மனநிலை இப்படித்தான் இருக்குமா என்பதும்தெரியவில்லை. ‘ம்ச்... இடம் எதுவாக இருந்தால் என்ன தாலிகட்ட போவது தருணாக இருக்கையில் ‘ என்று மனதினுள் நினைத்து தன் மனதின் நச்சரிப்பை போக்க முயன்றாள், ப்ரியா உடன் இருந்ததால் ஓரளவுஅதில் வெற்றியும் பெற்றாள்.
ஆர்த்தியின் தந்தையின் மனநிலையோ வேறு மாதிரி இருந்தது. நல்ல வேளை ஆர்த்தி தருணின் புகைபடத்தைபார்க்கவில்லை.ஏன் அவனது பெயர் கூட அவளுக்கு தெரியாதே, ஒரு வேளை பத்திரிக்கை பார்த்து தெரிந்துகொண்டிருக்கலாம் ஆனால் பெயரில் என்ன இருக்கிறது. ஃபோனில் கூட அவர்கள் பேசிக்கொள்ளாததுஎவ்வளவு நல்லதாகி விட்டது. என்று கெட்டதிலும் ஓர் நல்லதை கண்டுபிடித்தார் மணிகண்டன். மற்றபடி மகன்அந்த பிரதீபனை நல்லவன் என்று தானே சொல்கிறான். கடவுளே என் மகளின் வாழ்க்கை நல்லபடியாக அமையநான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று மானசீகமாக கடவுளை வேண்டிக்கொண்டார்.
சந்துரு வாசலிலேயே நின்றிருந்தான் அவனின் அப்போதைய மனநிலையை யாராலும் விளக்கிவிட முடியாது, பெரும்பாலான பணக்காரர்கள் என்ன செய்வார்கள் என்று அவனது உத்தியோகத்தில் நிறைய பார்த்துவிட்டான், மாயாவையும் பிரதீபனையும் எப்படி நம்புவது, ஆனால் நம்புவதை தவிர அவனுக்கு வேறு வழியும் இல்லை, மனதில்மட்டும் ஒருவித வெறி உருவானது, ஒரு வேளை அவர்கள் இவனை ஏமாற்றினால்??? தன் உண்மையான போலீஸ்புத்தியை உமயோகப்படுத்த நேரிடும்.பார்கலாம்அவர்கள் பணமா?நம் புத்தியா?
சந்துரு இவ்வாறு நிணைத்துக்கொண்டிருந்த அதே நேரம் கோயில் வாசலில் கப்பல் போன்ற கார்கள் ஐந்துவரிசையாய் வந்து நின்றன.
அதிலிருந்து இரங்கிய பிரதீபனைபார்த்ததும் தான் சந்துருவின் இருக்கம் குறைந்தது
அடுத்த்காரிலிருந்து மாயாவும் அவளது பெற்றோரும் இரங்கினார்கள். இரவு முழுவதும் கண்ணீரால் தன்வலியைகளை கரைத்தவள் காலையில் எல்லாவற்றையும் தன் பொருப்பாய் ஏற்றுக்கொண்டாள்
பிரதீபனின் பெற்றோர், அவளின் பெற்றோர் நெருங்கிய உறவுகள் என்று எல்லோரிடமும் பேசி புரியவைத்து, இதோ இன்று அழைத்து வந்துவிட்டாள். ஆனால் ஒருதிருமணத்திற்கு இது மட்டும் போதுமா? இரு மனங்கள்இனைய வேண்டுமே ? அது நடக்காத , நடக்க முடியாத இந்த நிகழ்வு திருமணமா?


மணமகள் அரையில் ப்ரியா தருணை பற்றி பேசி ஆர்த்தியை சீண்டிக்கொண்டிருந்தாள். அப்போது அரைக்கதவுதட்டப்பட்டு நாண்கு பெண்கள் உள்ளே நுழைந்தனர். இவர்களை இதற்கு முன் ஆர்த்தி பார்த்ததில்லைஎன்றாலும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள். மனதில் யார் இவர்கள்? என்ற கேள்வி ஓட சந்துருஅண்ணாவிற்கு தெரிந்தவர்களாக இருக்கும் என்று நினைத்து புன்னகை புரிந்தாள்
ஆனால் அந்த நாண்கு பெண்களில் ஒருவர் கூட பதிலுக்கு சிரிக்கவில்லை, அவளை எட்டு ஆராய்சி கண்கள்தோட்டாக்கள் இல்லாமலே துளைப்பது போன்று தோன்றியது. மீண்டும் யார் இவர்கள் ? நம்மை ஏன் இப்படிபார்க்கிறார்கள் என்று எரிச்சல் எழுந்தது. அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு அங்கிருந்து அகன்றனர்.
ஒருவர் மட்டும் மீண்டும் ஒருமுறை ஆர்த்தியின் புறம் திரும்பி அவளை முறைத்துவிட்டு சென்றார், அவரதுகண்களில் குரோதம் அப்பட்டமாய் தெரிந்தது.
“யாரு டி இவங்கல்லாம்? பயங்கர பணக்காரங்க போல?” அவர்களையே பார்த்தபடி கேட்டாள் பிரியா
“தெரியல டி ,அண்ணாவுக்கு தெரிஞ்சவங்களா இருப்பாங்க” ஆர்த்தியின் குரலிலும் குழப்பம் தான்
“ அது சரி, பட் ஏன் இப்படி முறைச்சிட்டு போறாங்க?” பிரியாவிற்கு ஆரவே இல்லை
“விடுடி “ என்றபடி நார்காலியில் அமர்ந்து கொண்டாள் ஆர்த்தி
மங்கை மாயாவின் கரம் பற்றினார் அருகில் வெற்றிவேல்,
“மாயா இப்பவும் எதுவும் கெட்டு போகல டா, நாங்க பெரியவங்க பேசறோம், மன்னிப்பு கேக்கறோம், உனக்கும்பிரதீபனுக்கும் திச்சயமாகிடுச்சுன்னு சொல்லுவோம்,கண்டிப்பா எல்லாரும் புரிஞ்சிப்பாங்க டா” இதே போன்றஅர்தமளிக்கும் பலவாக்கியங்களை மங்கையும் அவள் அம்மாவும் சொந்தங்களும் சொல்லிக்கொண்டே தான்இருக்கிறார்கள் ஆனால் ஆர்திக்குதான் அவற்றை காது கொடுத்து கேட்க பிடிக்கவில்லை,
இப்படி பேசி பேசி அவள் மனதை மாற்றி விடுவார்களோ என்ற அச்சம்கூட வந்து விட்டது,
மௌனமாக மங்கையின் கரத்தை பற்றி தன்கரத்தை விடுவித்துக் கொண்டவள்
“ அத்தை, பிளீஸ் மருபடியும் வேண்டாமே” என்றாள்
கலங்கிய அவள் கண்களை பார்துக்கொண்டே “இப்படி யாருக்குமே சந்தோஷம் இல்லாத இந்த பந்தம்தேவையா சொல்லு” என்று கேட்டார்
“அத்தை பிரதீபன் இந்த கல்யாணத்தை நிருத்தனும்னா நிருத்திக்கட்டும் அது அவன் உறிமை, பட் எந்தகாரணத்துக்காகவும் நான் அவனை கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன், இது என் உறிமை” விடாபிடியாய்பேசிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

இதற்கு பிரதீபனின் பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்த தாயுளத்திற்கு மேற்கொண்டு என்னசெய்வதென்றே தெரியவில்லை
ஒர் மூளையில் இருகிய முகத்துடன் அமர்ந்திருந்த மகனை பார்க்கையில் அவர் மனம் அழுத்து
(next ud Monday friends, padikiravanga konjam comments pottutu ponengana konjam aaruthala irukum... pathu pottu seinga pa )

காதலென்பது.......தொடரும்......
உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்
கார்குழலி
 
Messages
22
Reaction score
1
Points
1
14



மணமகள் அரைக்குள் நுழைந்தார்கள் சவுந்தரியும் மங்கையும், மங்கையின் கைகளில் ஓர் விலை உயர்ந்த பட்டுசேலை இருந்தது. அதனுடன் ஒரு டிசைனர் பிளவுசும். மீண்டும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள் ஆர்த்தி,



மங்கையின் பார்வை ஆராச்சியாய் ஆர்த்தியின் மீது ஒரு நொடி படிந்து மீண்ட பின் கையிலிருந்த புடவையைஆர்த்தியின் புறம் நீட்டினார்

ஆர்த்தி சற்று தயங்கவும் சவுந்தரி

“ஆர்சிர்வாதம் வாங்கிக்கிட்டு புடவைய வாங்கிக்க மா “ என்றார் வரவழைத்த சிரிப்புடன்

குழப்பமாக இருந்த போதும் தாய்கூரியதை தட்டாமல் செய்தாள்,

மங்கைக்கும் தர்மசங்கடமாகவே இருந்தது, புடவையை கொடுத்து விட்டு உடனே வெளியேரினார்

சவுந்தரி தான் ப்ரியாவிடம் ஆர்ததியின் கைகளில் இருந்த புடவையை சுட்டிக்காட்டி அதனை ஆர்திக்கு உடுத்தி கூட்டிவரச் சொன்னார்



புரியாமல் இரு பெண்களும் பார்க்க அதற்குள் யாரோ கூப்பிட அவசரமாய் வெளியேரினார் சவுந்தரி.





இதோ கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று ஐயர் சொல்ல தனக்கு முன் மாங்கள் தாலி நீட்டப்பட ஆசையாய்தருணை பார்க்க திரும்பிய ஆர்த்தியின் விழிகள் இமைக்கவும் மறந்து தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தின. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை" யார் இவன்? தருண் எங்கே?" இப்படி அவள் யோசிக்கும் பொழுதே பிரதீபன்அவள் கழுத்தில் தாலி கட்டி விட்டிருந்தான்.

ஆர்த்திக்கு மூளை சுத்தமாக வேலை செய்ய மருத்து. ஒரு வேளை இது கனவோ? தான் விழித்துக் கொண்டால்கனவு மறைந்துவிடும் என்று நம்பி கொட்டகொட்ட கண்களை விரித்து பார்த்தாள் ஆனாலும் எதுவுமேமாறவில்லை. இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது கூட அவளுக்கு தெரியவில்லை. ப்ரியாவை பார்த்தால்அவளும் இவளை போலவே தான் விழித்து கொண்டு நின்றாள். 'யார் யாரோ ஏதேதோ சொன்னார்கள் அதனைஅப்படியே ஓர் எந்திரம்போல் செய்தாள்.அக்னியை சுற்றி வர அவள் கையை அவன் தொடபதறி இவள் விலகவலுக்கட்டாயமாக இவள்கை பற்றிய அந்த கரம் மூன்று சுற்று சுற்றி முடித்ததும் தான் விட்டது. மேடையை விட்டுகீழே இறங்கியதும் தன் தோழி ப்ரியாவின் கை பற்றி மணப்பெண் அறையினுள் நுழைந்து கதவினை சாத்தியவள்"ப்ரியா தருண் எங்கடி ?யார் டி இந்த ஆள்? அவன் ஏன்டி எனக்கு தாலி கட்டினான்?என் தருண் எங்கடி?" என்றுகேள்வியில் ஆரம்பித்து கதறலில் முடித்தாள். "தெரியலையே ஆர்த்தி, நானும் உன் கூட தானே இருந்தேன், எனக்கும் ஒன்றும் புரியலையே" "தோழியின் துக்கத்தை தன் துக்கமாய் ஏற்று பதறியவள் மனதில் ‘ஏதோ பெரியபிரச்சனை தான் நேற்று முழுக்க ஆர்த்தி அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு ஒரு பதிலும் வரவில்லையே. திடீர்என்று மண்டபம் மாற்றப்பட்டது இப்போது உறுத்தியது. சொந்த பந்தம் யாரும் பெண்ணை பார்க்க மணமகள்அறைக்கு வராதது இப்போது உறைத்தது,ஆனால் அப்படி என்ன தான் நடந்திருக்கும்.?’ இருவருக்குமேதெரியவில்லை. அப்படியே உடைந்துபோய் மண்டியிட்டி கதறினாள் ஆர்த்தி,கண்ணீருடன் தோழியின் தோள்தொட்ட ப்ரியாவின் கையை ஊன்றுகோலாக பற்றி அதனுள் தன் முகம் புதைத்து மீண்டும் குலுங்கினாள். அதற்குள் அவர்களது அறை கதவு தட்டப்பட்டது



"சீக்கிரம் வாங்கம்மா, பால் பழம் சாப்பிட கூப்பிடறாங்க" என்று ஒரு குரல் வந்தது. அதன் பிறகு பிரியா தான்ஆர்த்தியை எப்படியோ தேற்றி தன் கையனைப்பிலேயே அன்று முழுவதும் வைத்திருந்தாள். ஆர்த்தி ஓர்எத்திரமாகவே மாறியிருந்தாள், மூளை குள் ஒரே ஒரு கேள்வி தான் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டேயிருந்தது. "என் தருண் எங்கே?" என்பதுதான்.



தாலி கட்டி முடித்ததுமே பிரதீபனின் சொந்த பந்தம் எல்லாம் கிளம்பி விட்டனர். மாயா குடும்பம் தான் முதலில்கிளம்பியது, அதற்கு மேல்அங்கே நடப்பவைகளை பார்கும் தைரியம் மாயாவிடம் இல்லை.

பிரதீபனின் தந்தை வெற்றிவேலாலும் அங்கே இருக்க முடியவில்லை, தன் ஒரே பையன் திருமணம் எப்படிஎல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைபட்டார், அதுவும் மாயாவோடு. எல்லாம் கனவாகவே ஆகிவிட்டவிரக்தியில் அவரும் தன் மனைவியோடு கிளம்பி விட்டார்

மங்கைதான் இருதலை கொள்ளியானார், வேறு வழியின்றி கணவரோடு வீட்டிற்கு சென்றார்.

பிரதீபனைம் விஜயும் மட்டுமே எஞ்சியாருந்தனர்



மற்றவர்களை போல் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு ஓடவே பிரதீபனின் கைகளும் கால்களும்பரபரத்தன, உள்ளே இதயத்தை எதுவோ ஒன்று மூச்சு வட கூட முடியாத அளவு இரக்கமே இல்லாமல்அழுத்தியது, மூச்சுக்களை வேகமாக எடுத்து சமனப்படுத்த முயன்றும் அவனால் முடியவில்லை, தாலி கட்டும்கடைசீ நிமிடம் வரை காத்திருந்தானே மாயா தடுத்து விடுவாள் என்று! அவனை வேறு ஒரு பெண்ணோடு பார்க்கஅவளால் எப்படி முடிந்தது. மனம் ஓவென அலரியது

அப்போது அவன் கையில் கொடுக்கப்பட்ட பாலும் பழமும் அவனுக்கு விஷமாகவே தோன்றியது அப்படிதோன்றியதாலேயே அவன் சட்டென பாலை ஒரே மூச்சில் குடித்து முடித்து விட்டான்.அங்கேஇருந்தவர்களாலும் எதுவும் சொல்ல முடியவில்லை எல்லோருக்குமே இது எப்படி பட்ட கல்யாணம் என்றுதெரியுமே. ஆர்த்தியின் பெரியம்மா தான் பிரதீபனின் கையிலிருந்த பழத்தை வாங்கி அதனை உரித்துஇருவருக்கும் பாதியாய் பிட்டுக் கொடுத்தார்.பின் அவன் குடித்த அதே டம்ளரில் மீண்டும் பால் எடுத்து வரசொல்லி அதனை ஆர்திக்கு கொடுத்து பருகச் சொன்னார். தான் உடனே கிளம்ப வேண்டும் என்று உடனிருந்தவிஜய்யின் மூலம் சந்துருவிற்கு பிரதீபன் தெரியபடுத்த அவன் ரிஜிஸ்டரோடு வந்தான் திருமணத்தை பதிவுசெய்ய.சந்துருவை குரோதத்துடன் ஒரு பார்வை பார்த்தவன் வேகமாக தன் கையெழுத்தை அந்த பேப்பரில்கிருக்கினான் அவன் கொடுத்த அழுத்தத்தில் லேசாக பேப்பர் கிழிந்தே விட்டது. பின் ஆர்த்தியின் இருபுறமும்சந்துரு மற்றும் மணிகண்டன் நின்று அவள் கையில் பேனாவை கொடுத்து கை எழுத்துபோடச்சொன்னார்கள்.அவர்கள் எது சொன்னாலும் யோசிக்காமல்செய்யும் பழக்கம் இப்போது அவளை கைஎழுத்தும் போட வைத்தது..பின் அங்கே ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை பிரதீபன் மணிகண்டனும் சவுந்தரியும்சாப்பிட்டு போகலாம் என்று எல்லாம் சொல்லியும் அவன் செவிகளில் எதுவும் விழுந்தது போல கூட அவன்காட்டிக் கொள்ளாமல் காரில் ஏறிவிட்டவனை யாராலும் எதுவும் சொல்ல முடியவில்லை. அதே நேரம்ஆர்த்தியிடம் விலாவரியாக பேசவும் அவர்களால் முடியவில்லை அதனால் அப்போதைக்கு ஆர்த்தியையும்ப்ரியாவையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். கொஞ்சம் ஆறப்போட்டு மறுநாள் பேசிக் கொள்ளலாம் என்றுவிட்டுவிட்டார்கள்.





அவர்களை பொருத்தவரை ஆர்த்தி தருணை பார்க்கவில்லை, அவனுடன் பேசி பழகவில்லை, ஆசையைவளர்த்துக் கொள்ளவில்லை, பெயர் மட்டும் தெரிந்திருக்கும் அதுவும் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எடுத்துச்சொன்னால் புரிந்து கொள்வாள். இப்போது அவளின் முகமாற்றம் கூட பெற்றோர்களையும் சொந்த பந்தத்தையும்பிரிகிறாள் என்பதாகத்தான் இருக்கும் என்று யூகித்து "நாளை உன் வீட்டுக்கு நாங்க வருவோம் ஆர்த்தி கண்ணுபயப்படாதடா. இதோ உன் தோழி பிரியா உன் கூடவே இருப்பா" ஆர்த்தியின் கைபற்றி ஆறுதல் சொல்லித்தான்காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள்



அந்த பிரம்மாண்டமான கேட் திறக்கப்பட்டு சில நிமிட பயணத்திற்கு பின் ஓர் பங்களாவின் முன்நின்றதுகார்.பிரதீபன் காரிலிருந்து இரங்கி வேகமாக வீட்டினுள் நுழைய எத்தனிக்க ராஜம்மா ஆரத்தி தட்டுடன்அவனை படிகட்டிலே மரித்தார். "நில்லுங்க தப்பி " என்றவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டவனாக அப்படியேநின்றான் அதற்குள் ப்ரியா ஆர்த்தியை கை தாங்கலாக நடத்திக் கொண்டுவந்து அவனருகில் நிற்க வைக்கராஜம்மா இருவருக்குமாக ஆரத்தி சுற்றி திலகமிட்டு வாசலில் கொட்டினார்



அதன் பிறகு பிரதீபனை பார்க்கவேமுடியவில்லை.ராஜம்மாதான் இவர்களுக்காக ஓர் அரையை காண்பித்துகளைப்பார சொன்னார். கார் டிக்கியில் இருந்த ஆர்த்தியின் சாமான் பற்றி ப்ரியா சொல்ல அதனை கொண்டுவரச் சொல்லி அவர்களுக்கு கொடுத்தார். உணவு காஃப்பி, ஜூஸ் என்று அவ்வப்போது அவர்களது அரைக்கு வந்துகொண்டே இருந்தது. ஆனால் அதனை உண்ணும் மனநிலையில் தான் கோழிகள் இருவருமே இல்லை.



வெற்றிவேலுக்கும் மங்கைக்கும் அவர்கள் அரையில் வாக்குவாதம் வலுத்துக்கொண்டே போனது. மாயாஎவ்வளவோ எடுத்து சொல்லிவிட்டிருந்த பிறகும் வெற்றிவேலால் இந்த திருமணத்தை ஜீரனிக்க முடியவில்லை

“என்ன விளையாடரீங்களா, நடந்தது கல்யாணம் விளையாட்டில்ல, இனிமே டைவர்ஸ்னு ஏதாவது சொன்னீங்கஅவ்ளோ தான் சொல்லிட்டேன்” மங்கையின் குரல் நடுங்கியது, பின்னே ஒரே பையன் தாலிகட்டி இரண்டு மணிநேரம் கூட இல்லை அதற்குள் டைவர்ஸ் என்றால் அவருக்கு எப்படி இருக்கும்?

“யூ ஆல் ஹேவ் லாஸ்ட் இட்” என்று மனைவியை பார்த்து கத்தியவர்

“பிரதீபன் இவ்ளோ பெரிய சென்டிமென்டல் ஃபூல் ஆ இருப்பான்னு நான் கனவுல கூட நினைக்கல, இவ்ளோபெரிய பிஸ்னஸ் மேன் இப்படி பைத்தியக்காரத்தனமா ஒரு டிசிஷன் எடுத்தத என்னால நம்பகூடமுடியல”ஆவேசமாக பேசியவரின் முகம் முழுவதும் சிவந்து விட்டிருந்தது.



அவரது சிவந்த முகத்தை பார்த்த மங்கை சமாதானமாய் அவரின் கையை பற்றி அவரது கோபத்தை தனிக்கநிணைத்து பொருமையாகவே பேசினார்

“இது தாங்க விதி, யாருக்கு நம்ம என்ன பாவம் செஞ்சோமோ தெரியலயே, ஆனா இதுல யாருமே குற்றவாளிஇல்லையே, மாயா முகத்தை பாத்தீங்க தானே, நம் பிரதீபனை பாக்கவே பயமா இருக்கு , அந்த பெண்ணுஆ...ஆர்த்தி,அவ மனநிலயை யோசிச்சீங்களா நேத்து வரை வேறொருத்தனை கணவனா நினச்சிருந்துகடைசியில் வேற யார் கூடவோ கல்யாணம் நடந்தா அவளும் பாவம் தானே. பீளீஸ் வாங்க நம்ம பையன் கிட்டபேசலாம், அவனோட கஷ்டத்துல நம்ம தான் கூட நிக்கனும் வாங்க என் கூட”

என்று பற்றியிருந்த அவரது கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடக்கலானார்



மகனது அறையின் முன் நன்று கதவை தட்டினார். சில பல நிமிடங்களுக்கு பிறகு கதவு திறக்கப்பட இருவரும்உள்ளே நுழைந்தார்கள். "பிரதீபா ..--" என்று மங்கை அவன் கரம் பற்ற,அவனது முகத்தை பார்த்த வெற்றிவேலும் தானாக அவனருகில் சென்று அவன் தோளை தட்டிக்கொடுத்தார். அவனிடம் எந்த மாற்றமும் இல்லை, முகமும் உடலும் இரும்பு குண்டை போல் இருக்கமாக இருந்தது. மங்கையால் பிள்ளையின் இந்தஇருக்கத்தை பார்க்கவே முடியவில்லை. வெற்றிவேல் பிரதீபனின் முகம் பார்த்து தீவிரமாக யோசித்தார், தன்விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு யோசித்தார்



பிரதீபன் அவர்களிடம் பேசவும் இல்லை அவர்களை பார்க்கவும் இல்லை,

அவனது இருக்கம் இருவரையுமே பற்றிக்கொண்டது.

அவன் அறையை விட்டு வெளியே வந்த வெற்றிவேல் ஓர் பெருமூச்சுடன் " மேல ஆக வேண்டியதை பார் மங்கை" என்றார்( ஒரு பிரச்சனையில் இருந்து மனதை திசை திருப்ப வேண்டுமானால் அதற்கு பக்கத்தில் அதைவிடபெரிய பிரச்சனையை கொண்டு வரவேண்டும் என்றது அவரது பிசினஸ் மூளை) அவரது பேச்சின் பொருள் புரிந்துவிட மங்கையின் முகம் பிரகாசமானது,



. ஆர்த்தியின் கலையிழந்த முகத்தைபார்த்ததும் மனதில் தோன்றிய வருத்தத்தை ஓரம் கட்டி அவளது அழகில்கவனம் பதித்து தன் மருமகளுக்கு தன் கையால் திருஷ்டி சுற்றி முறித்தார். இயந்திரமாக நின்ற மருமகளிடம்என்ன பேசுவது? ப்ரியாவை வெளியே அழைத்து சில விஷயங்களை சொல்லி அனுப்பினார். ப்ரியாவும்அதற்கேற்றார் போல் தோழியிடம் நயமாகவும் கண்டிப்பாகவும் பேசி அவளை தயார்படுத்தினாள். இரண்டுஇட்லிகளை உண்ணவும் வைத்தாள்.எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொண்டு ஆர்த்தியை பிரதீபனின்அரையில் விட்டுவிட்டு வந்தார்கள் ப்ரியாவும் ராஜம்மாவும்,.



ஆர்த்திக்கு என்ன நடக்கிறதென்று நன்றாகவே தெரிந்தது.இருந்தும்அமைதியாகவேயிருந்தாள்.

அவளுக்கும் பல உண்மைகள் தெரிய வேண்டுமே அதற்கெல்லாம் பதில் அவன் ஒருவனிடம் தானே இருக்கிறது, கேட்டு விடலாம் அவனிடமே கேட்டு விடலாம் அவளுக்கென்ன பயமா?" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, அந்த அவனின் வருகைக்காக காத்திருந்தாள்.அவனும் வந்தான். கீழே தன் உணவை முடித்துக்கொண்டு தன் ரூமிற்குள் வந்து லைட்டை போட்டவன் திடுக்கிட்டான்.அவன் அவளை அங்கே நிச்சயமாய்எதிர்பார்க்கவில்லை. அதற்குள் தானியங்கி கதவும் லாக்காகிக் கொண்டது. கதவு திறந்து மூடும் சிறிய சத்தத்தில்திரும்பிப் பார்த்த ஆர்த்தி பிரதீபனின் கண்களை நேராக பார்த்து "யார் நீ" என்று நிதானமாகவும் அழுத்தமாகவும் கேட்டாள்.

காதலென்பது.......தொடரும்......

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 
Messages
22
Reaction score
1
Points
1
15





“யார் நீ" என்ற ஆர்த்தியின் கேள்விக்கு பிரதீபனிடம் எந்த பதிலும் இல்லை. "என் தருண் எங்கே?" என்றஅவளது அடுத்த கேள்விக்கு அவள் முகத்தில் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி பரவியது "சொல்லுடா யார் நீ?, என்தருண் எங்க" என்று ஆவேசமாக கத்திக் கொண்டு அவனருகில் வந்தவளின் கைபிடித்து தடுத்தான் பிரதீபன். அவளது கையை அவனிடமிருந்து உருவிக்கொள்ள அவள் திமிறினாள்



பிரதீபன் புருவம் சுருங்க அவள் முகத்தை ஆராய்ந்தான்.அதில் எதை தேடியதோ அவனது கண்கள்.

மூளைக்குள் ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. 'அப்படியானால் நான் யூகித்ததுபோல் அந்த சந்துரு சொன்னது பொய்!' பிரதீபனின் பிடி இறுகியது. வலியால் முகம் சுளித்தாள் ஆர்த்தி. அதெல்லாம் பிரதீபனின் கருத்தில் படவே இல்லை. 'ச்ச... எவ்வளவோ சொன்னேனே..... கேட்டாளா மாயா?' சுற்றென்று கோபம் தலைக்கேர "ஷிட் " என்றுபிடித்திருந்த கையை பலமாய் உதறினான். அவனது பிடியிலிருந்த தப்பிக்க அவள் எதிர்புறம் வேகமாக இழுத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் அவள் கைகளை அவன் விடுவித்ததும் இரண்டடி தள்ளி சோபாவின் புறம்தொப்பென விழுந்தாள் ஆர்த்தி.

அவன் கைகளின் அச்சு பதிந்து சிவந்திருந்த கைகளை மறுகையால் தேய்த்துவிட்டுக்கொண்டே அவனைஎரித்து விடுவதுபோல் பார்த்தாள். அவள் கேட்ட கேள்விகளுக்கு அவன் பதில் வெறும் ஷிட் தானே. ஆனால்அவள் விழுந்ததையோ அல்லது அவனை ஆக்ரோஷமாக முறைப்பதையோ அவன் துளியும்பொருட்படுத்தவில்லை. அருவருப்பாக அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் படுக்கையில் சென்றுபடுத்துக்கொண்டான். உடனே தூங்கியும் விட்டான். இரண்டு நாட்களாக தூங்காக கண்களும் மூளையும் அவன்அனுமதியின்றியே ஓய்வெடுத்துக் கொண்டன.



இரவெல்லாம் கண்ணீருடன் விழித்தே கிடந்தவள் விடியற்காலையில் தான், தன்னையும் அறியாமல்அருகிலிருந்த சோபாவில் தலைசாய்த்து உட்கார்ந்தபடியே தூங்கி விட்டிருந்தாள் காலை விழிப்பு தட்டியதும்பிரதீபன் கண்ட முதல் காட்சி தரையில் அமர்ந்த நிலையிலேயே உறங்கிய ஆர்த்தியைத்தான். இது தான்நடந்தது என்று அவள் மூளை நடப்பிற்கு வரவே சில வினாடிகள் பிடித்தது.. ஓர் உதட்டுச்சுழிப்புடன்குளியவரைக்குள் புகுந்தான். குளித்து முடித்து தயாராகி அந்த அறையிலிருந்து வெளியேரினால் போதும்என்பது போல் தோன்றவே எல்லாவற்றையும் அவசர அவசரமாக முடித்துக் கொண்டு கீழே டைனிங் ஹாலைஒட்டியிருக்கும் அலுவல் அரைக்குள் புகுந்து கொண்டான்



யாரோ கதவு தட்டும் ஓசை கேட்டு கண் விழித்த ஆர்த்திக்கு முதலில் தான் எங்கே இருக்கிறோம் என்பதேபுரியவில்லை. மலங்க மலங்க விழித்தவருக்கு ஆணி அடித்தார்போல் உண்மை புரிந்தது. சட்டெனஎழுந்தவளால் கால்களை ஊன்ற முடியவில்லை. இரவெல்லாம் அமர்ந்தேயிருந்ததால் கால்கள் மறத்துவிட்டிருந்தன. கால்கள் தடுமாரசோபாவில் அமர்ந்து கொண்டாள் மீண்டும் கதவு தட்டப்பட்டது. மெதுவாகஅடிமேல் அடி எடுத்து வைத்து கதவை திறந்தவளின் முன் ப்ரியா நின்றுகொண்டிருந்தாள்.



அவளை பார்த்ததும் வேர் ஒடிந்த மரம் போல் அப்படியே அவள் மேல் விழுந்தாள் ஆர்த்தி அவளை தாங்கிப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவள் கட்டிலில் அமர்த்தி தானும் அருகில் அமர்ந்தாள்.



"பிளீஸ் ஆர்த்தி டிரை டு அன்டர்ஸ்டான்ட், இப்போதைக்கு எதையுமே மாத்த முடியாது பட் யோசிக்கலாம்முதல்ல தனக்கு என்ன ஆச்சுன்னு தெரியனும் யாருக்காவது ஃபோன் பன்னி கேக்கலாம்னு பாத்தாஎன்னோடஃபோன் சுவிட்ச் ஆப், ம்...ச்... முதல்ல இப்படி அழரத நிறுத்து, "என்று தன் உள்ளங்கைகளால்ஆர்த்தியின் கண்ணீரை அழுத்தத் துடைத்துவிட்டு தொடர்ந்தாள்

"நீ கவலைபடாத நேராகேக்க முடியாட்டியும் எப்படியாவது விஷயத்த தெரிஞ்சுகிட்டு உனக்கும்தெரியப்படுத்தறேன். அப்பா என்னை கூட்டி போக வந்து காத்திருக்காரு ஆர்த்தி ஆனா உன்னவிட்டு போகவும்சங்கடமா இருக்கு, நான் என்ன செய்வேன்" வாய் விட்டே புலம்பினாள்.

அவளை ஓர் வெற்று புன்னகையுடன் பார்த்தவள் "தலைக்கு மேல வெள்ளம் போகுது இனி போக எதுவுமில்ல, நீபோ ப்ரியா" என்றாள்.



"ப்ளீஸ்டி இப்படி எல்லாம் பேசாத, கடவுள் நல்லவங்களுக்கு நல்லதை தான் செய்வார், என்று ஏதோ செல்லவாயெடுத்து ஏதேதோ ஊரிக் கொட்டி ஆர்த்தியின் அக்கினி பார்வைக்கு பலியானாள். அறை கதவு தட்டப்பட்டப்ரியா தான் சென்று கதவை திறந்தாள்.



ராஜம்மாவும் ஒரு வேலைக்கா ஆண் உள்ளே வந்தனர் " மணி சின்னம்மா பெட்டிய இங்க வெச்சிடு" என்றுராஜம்மாவின் உத்திரவுக்கு கட்டுப்பட்டவனாய் பெட்டியை சோபாவிற்கருகில் வைத்துவிட்டு வெளியேரினான்மணி. ராஜம்மாவும் வெளியேர எத்தனிக்க "ஒரு நிமிஷம் அம்மா இதோ வரேன்" என்ற ப்ரியா "பாத்து நடந்துக்கோடி "என்று ஆர்த்தியின் கரம் பற்றி அழுத்தி விட்டு ராஜம்மா உடன் வெளியேறினாள்.



பல முறை ராஜம்மாவிடம் ஆர்த்தியை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு மங்கையிடம் விடைபெற்றுதோழிக்காய் துடிக்கும் மனதோடு வீட்டிற்கு சென்றுவிட்டாள் ப்ரியா.

காதலென்பது.......தொடரும்......

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 
Messages
22
Reaction score
1
Points
1
16

அவசரமாக குளித்து உடைமாற்றி பர்சை மட்டும் எடுத்துக் கொண்டு கீழே இரங்கினாள் ஆர்த்தி. டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த மங்கையர்கரசி ,வெற்றிவேல், ஆபீஸ் அறையில் இருந்தபிரதீபன் என்று யாரையுமே கண்டுகொள்ளாமல் வெளியே நடந்தாள்

மங்கையின் விழியசைவில் ஆர்த்தியின் பின்னோடு ஓடிய ராஜம்மா அவளை நிறுத்தி பேசினார். "வெளிய எங்கயும் கிளம்பிட்டீங்களாம்மா டிரைவரை வர சொல்லவா" என்று கோட்டுக் கொண்டிருக்க அதற்குள் அங்கு வந்து விட்ட மங்கை "வா மா வந்து சாப்பிடு, சாப்பிட்டு எங்க போகனுமோ போ" என்றார்.
"எனக்கு பசி இல்லை நான் அவசரமா போகனும்" என்றாள்.
“அப்படியா சரி இரு பிரதீபனை கூப்பிடறேன் அவன் உன்னை கூட்டிப்போவான் " என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ராஜம்மா விபரத்தை கூறி பிரதீபனை கூப்பிட்டு வந்துவிட்டார்.
"இ.....இதோ பிரதீபனே வந்துட்டான், பிரதீபா ஆர்த்தி எங்கயோ போகனுமாம் கூட்டிப் போப்பா " என்றவரின் கண்களில் கெஞ்சல். மகனிடம் கண்களால் யாசித்தாள் அந்த தாய் . மருமகள் என்ற உறவு ஒரு புறமிருந்தாலும் ஆர்த்தியின் பாதுகாப்பு இப்போது இவர்கள் பொறுப்பல்லவா?

அவனும் மறுப்பேதும் பேசாமல், பேசவும் தோன்றாமல் பாக்கெட்டிலிருந்து கார் சாவியை எடுத்தான். இப்பொழுதெல்லாம் அவனுக்கு பேச வே பிடிக்காமல் போனது. ஆர்த்திக்காக ஒரு புறம் கார் கதவை திறந்துவிட்டவன் டிரைவர் இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டான்.

வீட்டிலிருந்து கார் நிறுத்தம் வரை நடந்து வந்தவளின் சிந்தை முழுக்க அவனுடன் போக வேண்டுமா? என்ற கேள்விதான் இருந்தது. ஆனால் இது என்ன ஏரியா? இங்கேயிருந்து தருணின் வீடு எவ்வளவு தூரம் இப்படி எதுவுமே தெரியாமல் தனியே போவது சரியா என்று மற்றொரு பிரச்சனையும் இடித்தது. வேறு வழியின்றி காரில் ஏரி அமர்ந்து கதவை சாத்தினாள்.

"எங்க போகனும்?" இயந்திரத்தமாக கேட்டான் பிரதீபன்.
"தருண் வீட்டுக்கு "என்றாள் சிறிதும் பிசிரில்லாமல்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த அவனது கோபம் கட்டவிழ்த்துக்கொண்டு வெளியேறியது. அன்று இரவு நடந்த சம்பவம் அவன் முன்காட்சியாக விரிந்து அவனை மிருகமாக மாற்ற முயன்றது. விழி மூடி தன்னை கட்டுப்படுத்த முயன்றவன் பொருமையாகவே " அங்க போக வேண்டாம்" என்றான் .

உடனே கார் கதவை திறக்க முயன்றான் ஆர்த்தி. ஆனால் அவளால் முடியவில்லை.பிரதீபன் லாக் செய்திருந்தான்

"திறந்து விடு நான் போகனும்" என்றாள் அவன் அமைதியாக ஸ்டியரிங்கை வெளித்து பார்த்துக்கொண்டிருக்கவும் "திறந்து விடு என்றாள் மீண்டும் கதவை திறக்க முயன்றபடி கார்ஸ்டார்ட் ஆனது. "அட்ரஸ் என்ன ?" என்று கேட்டான் இருகிய குரலில் அவள் கூறினாள். அடுத்த அறை மணி நேரத்தில் பிரதீபனின் கார் தருணின் வீட்டு வாசலில் நின்றது. தருணின் வீட்டு வாசலில் தன் காரை நிருத்தி ஆர்த்தியின் முகம் பார்த்தான் பிரதீபன் 'இவளுக்கு தருண் இறந்தது தெரிந்திருக்குமா?' என்று யோசித்தான் அவளது இருகிய முகத்திலிருந்து அவனால் எதையும் கிரகிக்க முடியவில்லை

“எதற்கும் சொல்லலாமா ?”என்று ஒரு நொடி யோசித்தவன் உடனே அந்த எண்ணத்தை அழித்தான் . ரொம்ப நேரமாக ஒரே இடத்தில் நிற்பதை உணர்ந்த ஆர்த்தி சுற்றுப்புறத்தை கண்களால் அலசினால் ,காரின் வலப்புறத்தில் இருந்த வீட்டில் சாமியானா போடப்பட்டிருந்தது , தருணின் வீடு அதுவாகத்தான் இருக்கும் என்ற அனுமானத்தில் சிறு படபடப்புடன் மெல்ல நடந்தாள்.

ஆர்த்தி இதுவரை தருணின் வீட்டிற்கு வந்ததில்லை ஆனால் அவனுக்கு பயோடேட்டா ,பேங்க் அக்கௌன்ட் ஓப்பனிங் ஃபார்ம் போன்றவற்றை நிரப்பும் போது அவனுடைய முகவரி அவளுக்கே தெரியாமல் அவளுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது

பிரதீபன் காரிலிருந்து இறங்கவே இல்லை காம்பவுன்ட் வாலை ஒட்டி ஓரம் கட்டி நிறுத்தியவன் அதிலேயே அமர்ந்திருந்தான். அந்த வீட்டினுள் நுழையும் துணிவு அவனுக்கு துளியும் இல்லை .

தருண் மீது அளவுக்கதிகமான கோபத்தோடும் படபடக்கும் இதயத்தோடும் வாசல் படியில் கால் வைத்தவளின் இதயமே நின்றுவிட்டது

நடுக்கூடத்தில் தருணின் போட்டோவிற்கு மாலை போடப்பட்டு ஊதுபத்தியின் புகையும் பலகார தட்டுகளும் அந்த அறையையே நிறைத்திருந்தது ஓர் மூலையில் விஜயா , மிருதுளா இன்னும் சில பெண்கள் கூடி அழுது கொண்டிருக்க ஆண்கள் சிலர் போர்டிகோவில் நின்றபடி துக்கத்தை விழுங்க முயன்று கொண்டு உள்ளே பார்த்துக் கொண்டிருந்தனர்.
இன்று தருணிற்கு மூன்றாம் நாள் துக்கப்படையல் போடப்பட்டிருந்தது
அங்கே கண்ட காட்சிகள் ஆர்த்தியின் மூளைக்கு எட்டவே பல நிமிடங்கள் பிடித்தது , எட்டிய உடன் “த......ரு......ண்......” என்று அலறிக்கொண்டு போர்ட்டிகோவில் நின்ற ஆண்களை விலக்கிக்கொண்டு கண்மண் தெரியாமல் உள்ளே ஓடினாள் அவளது அலறல் வெளியே காரில் அமர்ந்திருந்த பிரதீபனுக்கு தெளிவாகவே கேட்டது.

நிலைப்படியில் கட்டவிரல் அடிபட்டு ரத்தம் வந்ததை கூட அவள் உணரவே இல்லை நேரரே தருணின் படத்திற்கு அருகே சென்று மண்டியிட்டாள் “ தருண்....தருண்.....எங்கடா போன ...... என்னை விட்டு ...... எங்கடா போன ஐயோ.....” என்று கதறும் பொழுதே அவளது தோள்களை கொத்தாக பிடித்து தூக்கி நிறுத்தினார் விஜயா “நீ எதுக்கு இங்க வந்த கல்யாணத்துக்கு முன்னாடியே என் புள்ளைய முழங்கிட்ட இப்போ தழைய தழைய தாலிய கட்டிகிட்டு என் புள்ளைக்கு முன்னாடி நிக்க உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும் போ.....போடி போடி வெளிய”
“என் புள்ள சாவுக்கு என்னையே எல்லாரையும் பஸ் வச்சு கூப்பிட வெச்சிட்டியேடி பாவி” அவளை விடாமல் உலுக்கியபடியே ஆவேசமாக கத்தினாள் விஜயா.

அவரது திடீர் தாக்குதலில் நிலைகுலைந்தாலும் தன்னை முயன்று நிலைப்படுத்திக் கொண்டு அவர் பேசுவதை கிரகிக்க முயன்றாள்,
“அய்யோ அத்த....எனக்கு எதுவுமே தெரியாதே.......!! அத்த என்ன நம்புங்க....” கண்ணீர் மல்க தன்னிலை விளக்கமளிக்க முயன்றாள்.

“ச்சீ....பேசாத மூடுடி வாய நீ ஒரு நிமிஷம் கூட இங்க இருக்கக் கூடாது “என்று அவளை இழுக்காத குறையாக விஜயா இழுத்துக் கொண்டு வாசலுக்கு வர முயல ,ஆர்த்தி தன்னை விடுவித்துக்கொள்ள திமிற, நிலைமையின் தீவிரம் உணர்ந்து கேசவனும் மிருதுளாவும் விஜயாவை கட்டுப்படுத்த முயன்றனர்

தன் பலத்தை முழுவதுமாக பிரயோகித்த தன்னை விடுவித்துக்கொள்ள ஆர்த்தி முயலவும் அதேநேரம் விஜயாவின் கையை ஆர்த்தியின் தோளில் இருந்து கேசவன் விலக்கவும் சரியாக இருந்தது , அப்போது நிலைதடுமாறி ஓர் அரை கதவில் சென்று மோதிக் கொண்டாள் அந்த கதவு தாழ்ப்பாள் போடப்படாத்தால் சட்டென திறந்து கொள்ள இவள் உள்ளே விழுந்து கிடந்தாள்.

கேசவனிடமிருந்து தன் கையை ஆவேசமாக உதறிக்கொண்டு ஆர்த்தியை நெருங்கிய விஜயா “நல்லா...... பாருடி...... இதோ....இந்த ரூமை உனக்காக சொர்க்கமா மாத்தினவன் இப்போ நிஜமான சொர்க்கத்துக்கே போயிட்டேன் சந்தோஷமா..... நல்லா இருடியம்மா.....நல்லா இரு, யார் செத்தா உனக்கு என்ன ? அதான் உனக்கு தாலி ஏறிடுச்சே சந்தோஷமா இரு....., அய்யோ .... தருணூ.....”என்று முந்தானையில் முகம் புதைத்து விம்மி அழும் விஜயாவை மிருதுளா கண்ணீர் மல்க தாங்கிப்பிடித்துக் கொண்டாள் ...

(படிச்சவங்க சின்னதா ஒரு கமண்டை தட்டி விடலாமே,,,,, பாத்து போட்டு செய்ங்கப்பா, மீ பாவம்)

காதலென்பது.......தொடரும்......
உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்
கார்குழலி
 
Messages
22
Reaction score
1
Points
1
17





தான் விழுந்து கிடந்த அறையையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி “ஐயோ..... தருண்.......தருண் வந்துடுடா......நீ இல்லாம நான் எப்படிடா இருப்பேன்.... என் கூடவே இருப்பேன்னு சொன்னியே ஐயோ......” என்றுமண்டியிட்டு கதறி அழுதாள் அவளது அழுகையை பார்த்து மிருதுளாவிற்கு கோபம் வந்து விட்டது “போதும் உன்நடிப்பு நேத்து வரைக்கும் என் தம்பிய நெனச்சவ இன்னிக்கி வேற ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டி இருக்கல்லஅப்புறம் எதுக்கு இந்த நல்லவ வேஷம்?” தன் துக்கத்தை ஆர்த்தியை துடிக்க வைத்து ஆற்றிக் கொள்ளநினைத்தாள்.



“ஐயோ.....அவர் யாருன்னே எனக்கு தெரியாது நான் என் தருணுக்கு தான கழுத்தை நீட்டினேன், ஆனா......ஆனா அவன்.... அவன் ஏன் தாலி கட்டுனான்?எனக்கு எதுவுமே புரியலையே....கடவுளே....” தலையிலேயே அடித்துக்கொண்டு அழுதவள் முருதுளாவின் கால்களைப் பற்றிக் கொண்டு “அக்காதருண்....இ...... இல்.....இல்லன்னு எனக்கு சத்தியமா தெரியாது.....என்ன நம்புங்க தருண்ணு நினைச்சு தான்நான் நிமிர்ந்து பார்த்தேன் ஆனா யாரோ யாரோ ஒருத்தன் எனக்கு தாலி கட்டிட்டான்.... ஐயோ தருண்.... என்னமன்னிச்சுடுடா மன்னிச்சுடு.....” என்று கதறியவளை அங்கே இருந்த கூட்டமே ஆச்சரியத்தில் உறைந்து போய்பார்த்தது, அப்படியானால் மாப்பிள்ளை மாறியது இவளுக்கு தெரியாதா?



அதே நேரம் அவள் பேசியதை கேட்ட படியே உள்ளே நுழைந்தான் பிரதீபன். அவனது முகம் இறுகியிருந்ததுஅவனைப் பார்த்ததுமே அவனிடம் பாய்ந்தார் விஜயா “கொலைகாரப் பாவி இங்க எதுக்கு வந்த? நாங்களெல்லாம் உயிரோட இருக்குமா, இல்ல செத்துட்டோமான்னு பார்க்க வந்தியா, இதோ எல்லாரும் ஏன்உயிரோட இருக்கோம்னு தெரியாம இருக்கோம், பேசாம எங்களையும் கார் ஏத்தி கொண்ணுடு” பிரதீபனின்சட்டையை பிடித்து இறுக்கியபடியே கதறினார். அவனால் எதுவும் பேச முடியவில்லை ஆனால் ஆர்த்தியின்கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன என்ன தருணை கொண்ணது இவனா ?ஏன் ?எப்படி ?”

அவளுள் எழுந்த கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள்



விஜயாவின் கைகளை தன் சட்டையில் இருந்து விலக்கியவன் அந்த ரூமில் நுழைந்து தாழ்ப்பாள் போட்டான் , வெளியே இருந்தவர்கள் கதவைத் தட்ட அதனை பொருட்படுத்தாமல், “எழுந்துரு... வீட்டுக்கு போகலாம்” என்றான் ஆர்த்தியை பார்த்து

“நான் வரமாட்டேன் “ என்றாள் அவனை நேருக்கு நேர் பார்த்து,

அவன் புருவம் சுருக்கவும்

“உனக்கு புரியல.....? நான் எங்கேயும் வரமாட்டேன் , இதுதான் என்னோட வீடு ,என் தருணோட வீடு,இதோஅவன் எனக்காக ஏற்படுத்திய சொர்க்கம், இதை விட்டு நான் எங்கேயும் வர மாட்டேன் “ என்றாள் அந்த ரூமைஆசை தீரப் பார்த்துக் கொண்டே



“அப்போ சரி இத அப்படியே உன் அப்பா கிட்ட சொல்லிடு “ என்று போனை அவள் புறம் நீட்டினான் அவள்அச்சத்துடன் விழிக்கவும்

“உன்ன இங்க இருந்து கூட்டி போகணும்னு எனக்கு எந்த ஆசையும் இல்லை உன் அப்பா, பெரியப்பா, பங்காளிங்க எல்லாமே இப்போ அங்க என்னோட வீட்லதான் இருக்காங்க, உன்ன பாக்க காத்துக்கிட்டுஇருக்காங்க , வர்றதுன்னா வா இல்லனா நீ வரமாட்டேன்னு உங்க அப்பாகிட்ட நீயே சொல்லிடு , சாய்ஸ் இஸ்யுவர்ஸ் “என்று கைகட்டி நின்றான்,

வெளியிலிருந்து கதவைத் தட்டும் சத்தம் விடாமல் கேட்டது அந்த அறையை நிராசையுடன் சுற்றும் முற்றும்பார்த்தாள் அதில் இருந்த தருணின் போட்டோக்களைப் பார்த்தாள், அவன் அவளுக்காக செய்து வைத்திருந்தஅலங்காரங்களையும் பார்த்தாள், இதயம் துடித்தது மூளை கணத்தது

அந்த ரூமில் போடப்பட்டிருந்த கட்டிலின் காலை அழுந்தப் பிடித்துக்கொண்டு குறுக்காக தலையை ஆட்டி“நான் வர மாட்டேன்” என்றாள் சுரத்தே இல்லாமல்



ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் “நல்லதா போச்சு இந்தா உன் அப்பா கிட்ட சொல்லிட்டேன்னா நானும்கிளம்பிடுவேன்” என்று மீண்டும் செல்லை அவளிடம் நீட்டினான்



“ஐயோ.....ஐயோ.....” என்று மீண்டும் தலையில் அடித்துக் கொண்டு அழுதவளை பார்க்க பாவமாகத்தான்இருந்தது ஆனால் இரக்கம் காட்டவும் அவனுக்கு தோன்றவில்லை



அழுது கொண்டே மெல்ல எழுந்தாள், அவளது நோக்கம் புரிய அவளை மேலும் துன்பப்படுத்தாமல் தாழ்ப்பாளைதிறந்தான்

அவன் திறந்தது தான் தாமதம் இப்போது கேசவன் ஆவேசமாகிவிட்டார் “என்னடா நினைச்சுகிட்டு இருக்கஎங்க பையனோட ரூமுக்குள்ள போக உனக்கு என்னடா அருகதை.....போடா.....வெளிய போடா.....” என்றுமுரட்டுத்தனமாக பிரதீபனின் கைப்பற்றி இழுக்க சிறிதும் அசையாமல் நின்றான். அவனுக்கு இப்போது பேசவேண்டும் அதற்குள் விஜயா, மிருதுளா, சொந்தம் பந்தம் என்று ஆளாளுக்கு ஏதேதோ பேச



“வில் யூ ஆல் ஸ்டாப் இட் “என்று ஆவேசமாக கத்தியவன் “ஆமா நான் தான் தப்பு செஞ்சேன், இதோஅதுக்கான பாவத்தையும் நான் தான் சுமக்கறேன்” என்று ஆர்த்தியை கை உயர்த்திக் காட்டியவன் “ உங்கஇழப்பு ரொம்ப பெருசு முடிஞ்சா என்ன மன்னிச்சிடுங்க” படாரென்று இருகரம் குவித்து மன்னிப்பைவேண்டியவனின் விழிகள் தருணின் மாலையிட்ட புகைப்படத்தில் சில நொடி நிலைத்தது. பின் ஆர்த்தியின்கரம் பற்றி இழுத்துச் சென்றவன் அவளை உள்ளே ஏற்றி வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

“போ டா போ..... உன்னை கோட்ல பாத்துக்கறேன், என் ஒத்த புள்ளையை கார்ல ஏத்தி கொண்ணுட்டு மன்னிப்பாம் மன்னிப்பு” என்று பின்னே கத்திய கேசவனின் குரல் காற்றில் கறைந்தது



கார் வீட்டு வாசலில் நின்றும் ஆர்த்தி அசையவே இல்லை அவள் மனம் முழுக்க தருண் தான் நிறைந்திருந்தான். அவன் இந்த உலகில் இல்லை என்பதை அவளால் நம்ப கூட முடியவில்லை அவனும் அவளுமான தருணங்களைஅவள் கண்முன் கொண்டுவந்து காட்டியது அவளது மூளை

இலக்கில்லாமல் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்த ஆர்த்தியை பார்த்து காரை விட்டு இறங்கி அவள் பக்ககதவை திறந்து அவள் கைபற்றி கீழே இறக்கினான், இல்லை இல்லை கீழே தள்ளினாள் என்றுதான்சொல்லவேண்டும்

நேரம் ஆக ஆக அவன் கோபம் அதிகரித்துக் கொண்டே போனது உலகில் எத்தனையோ விபத்துகள்நடக்கின்றன அது போலத்தானே அன்று நடந்ததும், வெறும் விபத்து அதற்கு இவனுக்கு இத்தனை பெரியதண்டனையா? மாயா சொல்வது போல் தவறு இவன்பக்கம் இருக்கத்தான் செய்கிறது, அதை அவன்மறுக்கவில்லை , தன் அலட்சியத்தை நினைத்து வெட்கமாக கூட இருந்தது , ஆனால் அதற்கு இப்படி ஒருபரிகாரமா?

ஆர்த்தியின் அண்ணன் சந்துருவின் மீது கோபம் டன் டன் னாக சேர்ந்தது அவன் மனதில், அதே ஆவேசத்துடன்கிட்டத்தட்ட ஆர்த்தியை இழுத்துக் கொண்டு தான் வீட்டிற்குள் சென்றான் ,அவளும் பற்றில்லாத கொடி போல்தளர்வாக அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றாள்.



கூடத்தில் அமர்ந்திருந்த ஆர்த்தியின் அப்பா பெரியப்பா மற்றும் சொந்தக்காரர்கள் முன் அவளை நிறுத்தி விட்டுதன் வேலை முடிந்தது என்பது போல் நடக்கலானான் .

இவர்களை பார்த்ததுமே மணிகண்டனும் ஆர்த்தியின் பெரியப்பாவும் எழுந்துவிட்டார்கள். ஆர்த்தியின் கலைந்ததலையும் அழுது வீங்கிய கண்களும் கலையிழந்த முகமும் அவர்களுக்கு பல கதைகளைச் சொல்ல அவளைவிட்டு விட்டு நகர்ந்த பிரதீபனை தடுத்தார் மணிகண்டன்,



“ மாப்பிள்ளை கொஞ்சம் நில்லுங்க நாங்க உங்களை பார்க்க தான் வந்தோம் “ என்றார். அவரது மாப்பிள்ளைஎன்ற வார்த்தையே அவன் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற தன் கை முஷ்டியை இறுக்கி தன் கோபத்தைகட்டுப்படுத்திக் கொண்டான். ஆனால் திரும்பாமல் அப்படியே நின்றான்



அப்போது அனைவருக்கும் டிரேயில் கூல்ட்ரிங்ஸ் மற்றும் ஸ்நேக்ஸ் டிரே ஏந்திய படி ராஜம்மா வர அவருடன்மங்கையும் வந்தார்



“நீங்க ஏன் நிக்கறீங்க உட்காருங்க என்றவர், பிரதீப் வா வந்து உட்காரு ,உன்னையும் பார்க்கத்தான்வந்திருக்காங்க “ என்றபடி நிலைமையை சகஜமாக்க முயன்றார் ராஜம்மா டீப்பாயில் கூல்டிரிங்ஸ் வைக்கஅப்போதுதான் தன் மருமகளின் கோலத்தை கவனித்தார் . ராஜம்மாவின் தோளை தொட்டு மருமகளை கண்ஜாடை காட்ட புரிந்துகொண்ட ராஜம்மாள் ஆர்த்தியின் கைப்பற்றி பிரதீபனின் அறைக்கு அழைத்துச் சென்றார்



நடக்கும் எதையும் தடுக்க முடியாத தன் நிலையை நினைத்து அவன் மீதே பிரதீபனுக்கு எல்லையில்லா கோபம்வந்தது ,

லேசான தயக்கத்தோடு தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்த ஆர்த்தியின் பெரியப்பா “உங்களபாக்க காலையிலேயே வந்துட்டோம் ,ஆனா நீங்க வீட்ல இல்ல “என்று இழுத்தவரிடம்

‘இவர்களின் செல்ல பெண்ணின் வண்டவாளத்தை போட்டு உடைத்து விடலாம் என்றுதான் யோசித்தான்ஆனால் அப்போது மாடிப்படிகளில் ஓர் காய்ந்த சருகு போல ராஜம்மாவின் கை அணைப்பில் ஏறிக்கொண்டிருந்தவளை பார்த்து தன் எண்ணத்தை அழித்தான். அவனுக்கே சில விஷயங்கள் புரியாத போதுஎதையும் பேசுவது சரியில்லை என்று நினைத்தான்,

அப்போது பெரியப்பா மீண்டும் பேசினார் “தம்பி நடந்தது நடந்து போச்சு “என்று பண்டைய கால சினிமாடயலாக்கை பேசியவர் தொடர்ந்து

“மறுவீடு விருந்துண்ணு ஒரு வழக்கம் இருக்கு தம்பி அதை எப்போ வெச்சுக்கலாம்னு சொன்னீங்கன்னா......” முடிக்காமல் அவன் முகம் பார்த்தார், அங்கே பாறாங்கல்லை தான் அவரால் பார்க்க முடிந்தது

லேசாக இளகிய அவன் மனம் இப்போது மீண்டும் பாரையாகிவிட்டது

எதுவுமே பேசாமல் ஆபீஸ் ரூமிற்குள் சென்று விட்டான்

அங்கே அமர்ந்திருப்பவர்களுக்கு முகத்தில் அடி வாங்கியது போல் இருந்தது



(Hi friends story எப்படி போகுதுன்னு comment la ஒரு வார்த்த சொல்லிட்டு போனீங்கன்னா நான் சந்தோஷப்படுவேன் - )



காதலென்பது.......தொடரும்......

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 
Messages
22
Reaction score
1
Points
1
18



முகத்தில் அடித்தது போல் பிரதீபன் எழுந்து சென்றுவிட மங்கையர்க்கரசி தான் ஏதேதோ பேசி நிலைமையைசமாளித்தார் , இப்போது பார்த்து தன் கணவர் முக்கியமான மீட்டிங்கில் மாட்டிக் கொண்டாரே என்றுஉள்ளுக்குள் குமைந்தவர் தன்னால் முடிந்தவரை அவர்களை சமாதானப்படுத்த முயன்றார்

“எல்லாம் எதிர்பாராமல் நடந்தால கொஞ்சம் அப்படி தான் இருக்கும், போக போக எல்லாம் சரியாகிடும் “ என்று ஏதேதோ பேசி அவர்களை இன்முகத்துடன் வழி அனுப்ப முயன்றார்

அவர்கள் கிளம்பும் வரை ஆபீஸ் ரூமை விட்டு வெளியேவரவில்லை பிரதீபன்.

கிளம்புவதற்கு முன் ஆர்த்தியை வந்து சந்தித்தார் மணிகண்டன் அவளது கலையிழந்த முகம் அவருக்கு ஒருகதை சொன்னது.

தனக்கு ஆர்த்தியை கல்யாணம் செய்துவைத்ததால் சந்துருவிடமும் தன்னிடமும் காட்ட முடியாத கோபத்தைபிரதீபன் தன் மகளிடம் காட்டி விட்டான் அதனால் பிரதீபன் தரப்பு நியாயத்தை மகளுக்கு விளக்கிக் கூறவேண்டியது தன் பொறுப்பு என்றும் அப்படி கூறிவிட்டால் புத்திசாலி பெண்ணான ஆர்த்தி பதமாக நடந்துமாப்பிள்ளையை மாற்றி விடுவாள் என்றும் நம்பினார், அதன்படியே அவளிடம் பேசவும் செய்தார் நடந்தஎதையுமே மறைக்காமல் கூறியவர் இறுதியில் “விதி வந்தவன் போயிட்டான், இப்படித்தான் நடக்கனும்னுஇருக்கு,நல்ல வேளை நீ போட்டோவ கூட பாக்கல அப்படிப் பார்த்து பேசி ஆசையை வளத்திருந்தா இப்போமறக்க முடிஞ்சிருக்காது, ஏதோ கெட்டதிலும் ஒரு நல்லது,அதனால தான் சந்துரு சொன்னபடி கேக்கமுடிஞ்சது , இவரு ரொம்ப நல்லவராம் ,எந்த கெட்ட பழக்கமும் இல்லையாம்.... என்ன ... எதிர்பாராதகல்யாணத்தால கொஞ்சம் கோவமா இருக்காரு அவ்வளவுதான் எல்லாம் சீக்கிரம் சரியாயிடும் கண்ணுசூதானமா இருந்துக்கம்மா” என்று தான் பேச வேண்டியதை பேசிவிட்டு மகளின் தலையை வாஞ்சையோடுதடவி விட்டு வெளியேறினார் மணிகண்டன்

ஒரு கசப்பான புன்னகையை தவிர வேறு எதுவும் பேசாத மகளைப் பார்க்க கஷ்டமாக இருந்தது அவருக்கு



வீட்டிற்குள் நுழைந்ததுமே கணவனிடம் மகளைப் பற்றி விசாரித்தார் சௌந்தரி அவர் ஆழமாக எதையும்சொல்லாமல் மேலோட்டமாக சொன்னார் , கண்கலங்க “அப்போ மறு வீட்டுக்கு வர மாட்டாங்களா ? “ஏக்கத்தோடு கேட்ட அவரது சோகமும் புரிய “வருவாங்கமா நிச்சயம் வருவாங்க கொஞ்ச நாள்ல எல்லாம்சரியாகிடும் அப்ப வருவாங்க “ என்றார்

“நம்ம பொண்ண நினைச்சா கஷ்டமா இருக்குங்க “ என்று முந்தானையால் கண்களைத் துடைத்தபடி சவுந்தரிகூற

“நம்ம பொண்ணு புத்திசாலி மா நீ கவலைப்படாதே “ என்று கூறியவர் ஓய்ந்திருந்த உடலும் மனமும்மாக தன்அறைக்குள் சென்றார்.

இதை எல்லாம் வாசலில் நின்று கேட்டுக்கொண்டிருந்த சந்த்ருவிற்கு கோபம் பொங்கியது இதற்கு ஒருமுற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்து தன் போலீஸ் மூளையை மீண்டும் தூண்டி விட்டான்



டைனிங் டேபிளில் அமர்ந்து கணவன் மகன் இரண்டு பேரிடமும் குறைப்பட்டார் மங்கையர்கரசி“காலையிலிருந்து ஆர்த்தி பொண்ணு எதுவுமே சாப்பிடல ,நேத்து ராத்திரி பிரியா ஊட்டிவிட்ட இட்லியோடஇருக்கா “ என்றார்

தன் தட்டில் ராஜம்மா எடுத்து வைத்த இட்லியில் ஒரு வாய் எடுத்து வாயில்வைத்த பிரதீபன் “பசிச்சா தானாவந்துசாப்பிடுவா , நீங்க ஏன் பீல் பண்றீங்க ?” என்றான் , மங்கை கணவனை முறைக்க அவரோ மகனைப் பார்த்தார்

“தப்பு பிரதீப் நம்ம வீட்டுக்கு வந்த யாராயிருந்தாலும் வயிறு வாடாம பார்த்துக்க வேண்டியது நம்மளோடபொறுப்பு உன் மனைவியா பார்க்காம ஒரு உயிரா பார்த்தா உனக்கு இப்படி பேச தோணாது, புரியுது இந்தகல்யாணம் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராம நடந்துடுச்சு

எல்லாருக்குமே இது பெரிய அதிர்ச்சி தான் எங்களுக்கும் சேர்த்து அதுக்காக ஒரு உயிர் பட்டினி கிடக்க நம்மஅனுமதிக்கக்கூடாது”

ஒரு நொடி மாயாவே தன் கண்முன் வந்தது போல் உணர்ந்தான் பிரதீபன்

அவள் தான் இப்படி ஏதாவது சொல்லுவாள் ஆனால் தன் அப்பா இப்படி எல்லாம் பேசுவாரா என்றுஆச்சரியப்பட்டான் .தொழில் தொழில் என்று ஓடிக் கொண்டே இருப்பவர் இப்படியெல்லாம் அட்வைஸ்செய்ததே இல்லை .ஒருவேளை அவர் அட்வைஸ் செய்யும் அளவு தான் இருந்ததில்லையோ என்றும்தோன்றியது. நன்றாக படித்தான் அப்பாவின் தொழில் வேண்டாம் ஐ டி சொலுஷன் ஆரம்பிக்கப் போகிறேன்என்றான் அதற்கான முதலீடை கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டார் இவனும் ஒரே வருடத்தில் உழைத்து அவர்முதலை கொடுத்துவிட்டான். இப்படி எந்த விதத்திலும் அவர் பேச அவன் அனுமதித்ததில்லை தான். அப்படிப்பட்ட அப்பா இன்று அவளால்..... எல்லாம் அவளால் தான் என்று கோபம் தான் வந்தது பிரதிபனுக்கு

வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு எழுந்தவன் “ராஜம்மா அவளோட டிபனை எடுத்துகிட்டு மாடிக்கு வாங்க “ என்றுமுன்னே படிகளில் ஏறினான்

அவனது பெற்றோர் இருவரது இதழ்களிலும் புன்னகை விரிந்தது

ராஜம்மா உணவை வைத்து விட்டு வெளியேறவும் பிரதீபனின் செல் சினுங்கவும் சரியாக இருந்தது புது நம்பரைபார்த்து காதுக்கு கொடுத்தவனின் கண்கள் சிவந்தன காரணம் எதிர்முனையில் சந்துரு பேசினான் “என்னமாப்பிள நல்லா இருக்கீங்களா ?”என்றான் நக்கலாக

“.......” பிரதீபன் எதுவுமே பேசவில்லை

“என்ன மறு வீட்டுக்கு வர மாட்டேன்னு சொன்னீங்களாமே? நீங்க மறு வீட்டுக்கு வாங்க வராம போக அதைபத்தி எனக்கு கவலை இல்ல ஆனா என் தங்கச்சி கண்ல ஒரு சொட்டு தண்ணி வர கூடாது “என்று கண்டிப்புடன்கூற

சட்டென பிரதீபனின் மூளைக்குள் மணி அடித்தது உடனே பால்கனி பக்கம் நடந்தவன் அங்கே வானத்தைவெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்த்தியின் அருகில் சென்று நின்றுக்கொண்டு சத்தமாக

“அட என்ன மச்சான் நீ உன் தங்கச்சிய சாப்பிட கூப்பிட தான் வந்தேன் நீ கரெக்டா போன் பண்ணிட்ட“என்றான்

அவனது திடீர் வருகையும் சத்தமான பேச்சும் எல்லாவற்றுக்கும் மேல் தன் அண்ணனிடம் தான் பேசுகிறான்என்பதும் அவளை பதட்டமடைய செய்ய அவளது பதட்டத்தை ஆசை தீர ரசித்தவன் அவள் கையைப் பிடித்துதரதரவென இழுத்து வந்து உணவு டிரேயின் எதிரில் அமர வைத்தான் “உன்னால போன்ல பார்க்க முடியாதுமச்சான், இப்போ நான் உன் தங்கச்சிக்கு என் கையாலேயே ஊட்டி விடுறேன் வேணும்னா வீடியோ கால்போடவா ?” என்று பல்லைக் கடித்தபடி பேசிக்கொண்டே போனை கழுத்துக்கும் காதுக்கும் இடையில்கொடுத்து தலையை சாய்த்து பிடித்துக்கொண்டு

தட்டை எடுத்து இட்லிகளை பிய்த்து சட்டினியில் முக்கி அதனை அவள் வாயில் அடைத்தான்



‘உன் தொங்கச்சிய சந்தோசமா வெச்சிக்கனுமா .... இருடா....’

இத்தனை நாள் அடக்கி வைத்த கோபத்திற்கு இன்று ஆர்த்தி பலியாகினாள்

“ சொல்லு மச்சான் வீடியோ கால் பண்ணவா உன் தங்கச்சியே உன் தங்கச்சிக்கு நான் ஊட்டி விடுரத நீபார்த்தா நம்புவியா அவ எவ்வளவு சந்தோஷமா இருக்கான்னு” என்று எவ்வளவில் ஒரு அழுத்தம் கொடுத்துச்சொன்னவன் மீண்டும் காட்டுத்தனமாக ஒருவாய் இட்லியை அவள் வாயில் திணித்தான் கண்கலங்க வாயில்திணிக்கப் பட்டதை சிரமப்பட்டு விழுங்க முயன்றாள் .ஆனால் முடியாமல் தொண்டையில் சிக்கியது டிரேயில்இருந்த தண்ணீரை குடித்து விழுங்கினாள்

அவனது குரலில் தெரிந்த கோபமும் நக்கலும் ஏதோ தவறு என்பதை சந்த்ருவிற்கு உணர்த்திட



“பார்த்து மாப்பிள்ளை நாளைக்கு ஹெட்லைன்ஸ்ல உங்க பெயர் வரணுமா?” என்றான் ஊடகமாக “உன்னால்ஆனதைப் பார்த்துக்கோடா” என்று போனை வைத்தான் அதற்குள் அவளுக்கு ஐந்து இட்லிகளை ஊட்டிமுடித்திருந்தான் புடவையெல்லாம் சட்னியும் தண்ணீருமாக உட்கார்ந்திருந்தவளை பார்த்தும் அவனது கோபம்அடங்கவில்லை.

காதிலிருந்து எடுத்த போனை பெட்டில் விசிரி எரிந்தவன் கையை கூட கழுவாமல் ஆவேசமாக ஆர்த்தியின்கைப்பற்றி எழுப்பினான்

“உன் அண்ணனுக்கு நான் உன்னை சந்தோஷமா வச்சுக்கணுமாம், புரியுதா ? சந்தோஷம்னா இதோ இப்படியாஇப்படியா “ என்று அவளை ஒரு பந்து போலச் சுழற்றி சுழற்றி அணைத்தான்

“என்ன சந்தோஷமா இருக்கியா இருக்கியா ?” என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து ஆவேசமாகபுரட்டினான்

ஓர் அளவுக்கு மேல் தாங்க முடியாத ஆர்த்தி தன் முழு பலத்தையும் பிரயோகித்து அவனை நெட்டித் தள்ளினாள்

“ச்சீ..... விடு என்னை” என்ற கத்தலோடு



அப்போது பிரதீபனின் கோபம் சற்று மட்டும் பட்டிருந்தது

“என்ன தொடனுமா உனக்கு ? வா வந்து தொடு அதுக்குதான் லைசென்ஸ் வாங்கி இருக்கியே ஆனா நீதொட்டா எனக்குத் தருண் தொட்ட மாதிரி தான் இருக்கும் “என்று அவள் முடிப்பதற்குள் மீண்டும் அவனதுகோபம் எல்லை மீறியது

அவளின் இரு தோள்களையும் தன் வலிய கரத்தினால் பற்றியவன் “ச்சீ... மூடு வாய இந்த தர்ட் ரேடட் மூவிடயலாக் எல்லாம் வேற யார்கிட்டயாவது வெச்சுக்க கொன்னுடுவேன் “



“போயும் போயும் உன்னை தொட எனக்கு ஆசையா ஷிட்” என்று அவளை உதறியவன், அவளை அந்த ரூமில்பார்க்கக் கூடப் பிடிக்காமல்

“கெட் லாஸ்ட் .....கெட் அவுட் ......”என்று கத்தினான்

அவள் மிரண்டு விழிக்க வேறுவழி இல்லாமல் தானே வெளியேறி கதவை அடித்து சாத்தினான்(next ud monday)

(Hi friends story எப்படி போகுதுன்னு comment la ஒரு வார்த்த சொல்லிட்டு போனீங்கன்னா நான் சந்தோஷப்படுவேன்)


காதலென்பது.......தொடரும்......

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 
Messages
22
Reaction score
1
Points
1
19





மொட்டைமாடியில் நின்ற பிரதீபனிற்கு தன் மேலேயே கோபம் வந்தது ‘ஒரு பெண்ணிடம் இப்படி நடந்துகொண்டது தானே தானா உமன்ஸ் ஹரஸ்மெண்ட் கேஸுக்கு கடும் தண்டனை கொடுக்கும் நானா இப்படிநடந்து கொண்டேன் ? ‘ என்று தன்னை தானே மன்னிக்க முடியாமல் திண்டாடினான், சந்துருவின் மேல் இருந்தகோபம் அவன் தங்கையிடம் திரும்பிவிட்டது ஒருவேளை இது மனித இயல்பாகவே கூட இருக்கலாம் ஆனால்அதற்கும் ஒரு வரைமுறை இருக்க வேண்டாமா ? தன்னை ஒரு மிருகமாக நினைத்தான், கைப்பிடி சுவரில் ஓங்கிபலமுறை அடித்தான் அப்போதும் அவன் மனம் ஆறவில்லை கைகள் வலித்ததுதான் மிச்சம். எத்தனை நேரம்மாடியிலேயே நடந்துகொ இருந்தாலும் செல்போன் அடிக்க அதனை எடுத்து பார்த்தவனின் புருவம் சுருங்கியதுமீண்டும் புதிய நம்பர் அந்த சந்துரு பயலாக மட்டும் இருக்கட்டும் என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டேபோனை எடுத்தவனுக்கு ,மணிகண்டனின் பரிதாப குரல்தான் கேட்டது “மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை இந்தநேரத்துல கால் பண்ணதுக்கு” என்றதும் தான் அவன் நேரத்தைப் பார்த்தான் இரவு 10.30என்று காண்பித்ததுஅவன் கைக்கடிகாரம்,

“ம்” என்றான் ஒற்றை வார்த்தையில்

“இ......இல்ல......ஏதோ நெஞ்சு பட படப்பா இருக்கு மாப்பிள்ளை கொஞ்சம் போன ஆர்த்தி கிட்டகொடுத்தீங்கன்னா ஒரு வார்த்தை பேசிக்குவேன்” என்றார் கவலையுடன்

வேறு வழியின்றி கீழே வந்தவன் சோபாவின் அருகில் கீழே அமர்ந்திருந்த ஆர்த்தியின் முன் போனை நீட்டினாள்

அறைக் கதவைத் திறந்ததுமே அவனை அவள் பார்த்துவிட்டாள் தூங்க தான் வந்திருப்பான் என்று நினைத்தாள், அவன் அவள் அருகில் வர அவள் முகத்தில் கலவரம் தொற்றிக்கொண்டது , ‘இந்த முறை ஏதாவது தவறாகநடந்தால் ஓங்கி அரைந்து விட வேண்டும் ‘ என்று தயாராக இருந்தாள்

கடைசியில் அவன் போனை நீட்டியதும் புரியாமல் பார்த்தாள்

“உன் அப்பா” என்றான்

உடனே போனை வாங்கி காதுக்கு கொடுத்தவள் “அப்பா “ என்றாள் கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல்கேவலாக வெளிப்பட்டது அந்த வார்த்தை

பிரதீபனுக்கு ஓர் விஷயம் இப்போது தான் புரிந்தது ஆர்த்தியிடம் போன் இல்லை என்று

உடனே தன் அலமாரியை திறந்து தன் போன்களில் ஒன்றை எடுத்து அதில் ஒரு சிம்மையும் போட்டு அவளுக்காகஎடுத்து வந்தான். அதற்குள் அவளும் அப்பாவுடனான தன் பேச்சை முடித்திருந்தாள்

தன் போனை வாங்கி கொண்டவன் தன் பையிலிருந்த போனை அவளிடம் நீட்டினான்

அவள் அவன் முகம் பார்க்கவும்

“தினமும் உனக்கு கொரியர் வேலை எல்லாம் என்னால பாக்க முடியாது அதுவும் உன்னோட அப்பா அண்ணன்குரலை எல்லாம் கேக்கணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா ?”என்று வார்த்தையால் குதரிவிட்டுச் சென்றான்



அவள் கையில் செல்போன் எத்தனை நாள் ஆசைப்பட்டிருக்கிறாள், ஆனால் என்ன பயன் இதில் பேச அவள்தருண் இல்லையே , எத்தனையோ முறை அவளோடு பேசுவதற்காக வாங்கித்தருகிறேன் என்று பிடிவாதம்பிடித்த தருணிடம் வேண்டாம் என்று புறக்கணித்தவளால் இன்று எவனோ ஒருவன் கொடுக்கும் போனைபெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டாள். “தருண்” என்று உள்ளம் சத்தமாக அழமுழங்கால்களில் முகம் புதைத்து விம்மி அழுதாள். அவள் எத்தனை மெதுவாக அழ முயன்றும் கட்டிலில்படுத்திருந்தவனின் கூர்காதுகளில் அது தெளிவாகவே விழுந்தது



அவளுக்காஙது அழ முடிகிறது ஆனால் தன்னால்? என்று தன் நிலையை நினைத்து நொந்து கொண்டவன்சிரமப்பட்டுத் தூங்க முயன்றான் கண்கள் மூடியது மே மாயாதான் கண் முன் வந்தாள் கனவாக. பாவம்கனவிலேனும் அவன் சந்தோஷமாக இருக்கட்டும்.







அன்று காலை இருவருக்குமே ஓர் துயர செய்தியுடன் விடிந்தது

ராஜம்மா மற்றும் மங்கை வற்புறுத்தலின் பேரில் டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தாள் ஆர்த்தி அவளைவினோதமாக பார்த்தவாறு அவளுக்கு எதிரில் வந்தமர்ந்தான் பிரதீபன் அவனது வழக்கமான இடமும் அதுதான். இரண்டு வாய் சப்பாத்தியை விழுந்தவை பெரும்பாடு பட்டாள் ஆர்த்தி அப்போதுதான் வெற்றிவேல் அந்தநாராசமான விஷயத்தை அறிவித்தார் பிரதீபனை பார்த்து “ உங்களோட கல்யாணம் இன்னும் நம்ம சர்க்கிள்பீப்புள்கு தெரியாதே அதனால் நாளை மறுநாள் ஒரு சிம்புள் ரிசப்ஷனுக்கு அரேஞ்ச் பண்ணியிருக்கேன் ,உனக்குதேவையானதை பர்சேஸ் பன்னிடு ஓகே , என்றவர் மங்கை யை பார்த்து “நீ ஆர்த்திக்கு தேவையானதை பார்த்துவாங்கிடுமா” என்றார்

வெற்றிவேலின் இந்த அறிவிப்பை கேட்டதுமே இருவருக்குமே புரையேறியது ராஜம்மா பிரதீபனின் தலையில்தட்டி தண்ணீர் எடுத்து தர மங்கை ஆர்த்தியின் தலையில் தட்டி தண்ணீர் புகட்டினார் தண்ணீரை அவசரமாய்குடித்தவன் “இல்....இல்ல அதெல்லாம் எதுவும் வேண்டாம் “ என்றான்

“எல்லாரையும் இன்வைட் பண்ணியாச்சு சோ நோ எக்ஸ்க்யூஸ் “ தன் பேச்சு முடிந்தது என்பது போல் எழுந்துசென்றார்

இருவருமே வெளியே சென்று தங்களுக்கானதை வாங்கிக்கொள்ள மறுக்க கடையையே வீட்டிற்குவரவழைத்தார் மங்கை

ஒரு வழியாக இருவருக்குமான ஆடை அணிமணிகள் என்று எல்லாம் தேர்ந்தெடுப்பதற்குள் ராஜம்மாவும்மங்கையும் ஒரு வழியாகிவிட்டனர்

தவளை ஓணான் என்று அவர்கள் கேள்வி பட்ட பழமொழியை கண்கூடாக பார்த்தார்கள் ஆர்த்தியை தாங்கள்சொல்வதை கேட்க வைக்க அவளுடைய பெற்றோர் தான் மங்கையின் டிரம்ப் கார்டு , அப்பா அம்மா அண்ணாஎன்று சொல்லி விட்டாலோ அல்லது அவர்களுக்கு கால் செய்வதாக போனை எடுத்தாலோ உடனே வழிக்குவந்து விடுவாள் ஆர்த்தி . பாவம் சிறுவயதிலிருந்தே அப்படியே வளர்ந்து விட்டாள்

ஆனால் பிரதீபனை சரிகட்ட தான் பெரும் பாடு பட்டார்கள்



அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பிரம்மாண்டமான ஏசி ஹாலில்

எலியும் பூனையுமாக நின்ற மணமக்களை ஒவ்வொருவராக வாழ்த்தி சென்றனர். ஆர்த்தியின் குடும்பத்திற்கும்முறையான அழைப்பு சென்றிருந்தது, எல்லோரும் வந்திருந்தார்கள் மாயாவின் குடும்பமும் வந்திருந்தது

தந்தைக்காக தன் கோபம் முகத்தில் பரவாமல் அரும்பாடு பட்டு அடக்கிக் கொண்டாள் ஆர்த்தி மாயாவைப்இத்தனை நாட்களுக்கு பிறகு கண்களால் பார்த்ததே பிரதீபனின் இறுக்கத்தை தளர்த்தியிருந்தது

அவ்வப்போது அவனது கண்கள் அவளைத் தேடி அடைந்தபடியே இருந்ததில் யார் என்ன பேசினார்கள் தனக்குஎன்ன நடக்கிறது என்று எதுவும் உணராமல் லேசாக சிரித்து மட்டும் வைத்தான்





அரசல் புரசலாக மாயா பிரதீபனின் உறவு பற்றி பேசப்பட்டது அது ஆர்த்தியின் காதுகளுக்கும் எட்டியதுஆர்த்தியின் குடும்பத்திற்கும் எட்டியது

பெரும்பாலான கூட்டம் சென்றுவிட மணமக்களும் மிஞ்சிய சொந்தங்களும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அதிக உற்சாகமாக இல்லாவிட்டாலும் சிலர் சகஜமாக பேசி மற்றவர்களை சிரிக்க வைக்க முயன்றனர்



சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டு வாஷ்ரூமிலிருந்து வெளிப்பட்ட மாயாவை வழிமறித்த சந்துரு “என் தங்கச்சிவாழ்க்கையிலிருந்து தூர இரு உங்க காதல மெய்மறந்து தானே தருணை கொன்னுட்டீங்க ?ஏதாவதுகண்துடைப்பு செஞ்சு என் தங்கச்சி வாழ்க்கையைக் கெடுத்தீங்க அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்” புலியின் உறுமலாக வந்த வார்த்தைகளை அமைதியாக கேட்டுக் கொண்டாள் மாயா கண்களில் கண்ணீர் மட்டும்வடிந்தது

அப்போது கை கழுவ வந்த ஆர்த்தியின் காதுகளில் சகலமும் விழுந்தது பின் அங்கே நிற்க கூட பிடிக்காமல்வேறு வாஷ்ரூமில் சென்று கை கழுவிக்கொண்டு வந்தாள்

இறுதியில் மணமக்கள் குடும்ப படம் எடுத்துக் கொள்ள ஆர்த்தியின் குடும்பத்தோடு ஒரு படமும் பிரதீபனின்குடும்பத்துடன் ஒரு படமும் பின் பிரதீபனின் குடும்பம் மற்றும் மாயாவின் குடும்பத்துடன் ஒரு படமும்எடுக்கப்பட்டது போட்டோ எடுத்து முடித்ததும் எல்லோரும் அவர்களுக்குள் பேசிக்கொண்டு கீழே இறங்கிசென்று விட மாயா ஆர்த்தியின் முன் நின்றாள்



அவளது மோதிர விரலில் இருந்த வைரத்தால் இழைக்கப்பட்ட மோதிரத்தை கழற்றி ஆர்த்தியின் கைப்பற்றிஅவளது விரலில் அணிவித்தாள்

‘இனி இது உனக்குத்தான் சொந்தம்’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே நிமிர்ந்து பிரதீபனை ஒரு முறைபார்த்தாள் இருவரின் கண்களிலும் சொல்ல முடியாத வலி.

மாயாவை அப்படி ஒரு நிலையில் பார்க்க முடியாத பிரதீபன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் மாயாவும்வலுக்கட்டாயமாக தன் பார்வையை ஆர்த்தியிடம் திருப்பி “ஆல் த பெஸ்ட் “ என்று பிடித்திருந்த கையில் ஓர்அழுத்தம் கொடுத்து விட்டு மேடையில் இருந்து இறங்கி விட்டாள். ஆர்த்திக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டுவந்தது ‘எல்லாம் இவர்களால் தான் இந்த ரெண்டு பேரால் தான் என் தருண் இப்போது இல்லை ,கொலைகாரிகொலைகாரன் , தருண்.... நீ ஏன்டா என்ன விட்டு போன’ மீண்டும் தருணிடம்தான் சென்றது அவளது மனம்



விடை பெரும் நேரத்தில் மாப்பிள்ளையிடம் வந்த மணிகன்டன் “மாப்பிள்ள, நீங்க பணக்காரங்கன்னு என்பையன் அன்னைக்கு சொன்னான் ஆனா இவ்ளோ பெரிய பணக்கார்ர்னு எனக்கு தெரியாதுங்க, ஆனா என்சொத்த எல்லாம் வித்தாவது உங்களுக்கு நல்லபடியா சீர் செஞ்சுடறேங்க , என் பெண்ணுக்கு ஒன்னுமேதெரியாதுங்க, அது ஏதாவது தப்பு செஞ்சுதுன்னா மன்னிச்சிடுங்க மாப்புள்ள” என்று கரகரத்த குரலில் அவர் பேசஅருகில் சவுந்தரி கண்ணீருடன் ஆர்த்தியின் கறம் பற்றியிருந்தார்

சந்துரு மட்டும் பிரதீபனை உற்று பார்த்துக்கொண்டிருந்தான்

இவங்க ஃபேமலி மொத்தமும் சினிமா டைலாக்கா பேசி கழுத்தருக்கறாங்களே என்று உள்ளே புகைந்தவன்“தேவையில்ல...... நீங்க இதுவரைக்கும் செஞ்சதே போதும்” என்று இரு பொருள் பட பேசி கைகூப்பினான்

அவனை ஒருமுறை முறைத்த வெற்றிவேல்

“அதெல்லாம் கவலை படாதீங்க நாங்க இருக்கோமே, பத்தரமா பாத்துக்கறோம்” என்று மனைவியிடன்கண்ஜாடை காட்ட அவரும் புரிந்து கொண்டு சவுந்தரியை தேற்றினார்



இருகுடும்பங்களும் ஒட்டிவுரவாட முடியாமல் பணம் தடுத்தது, இருப்பினும் ஸநேகமாய் புன்னகைக்க முடிந்தது, பிரதீபன், ஆர்த்தி, சந்துருவை தவிர







கார் பயணம் இருவருக்குமே கனமாக இருந்தது தருண் நினைவுகளுடன் ஆர்த்தியும் மாயா நினைவுகளுடன்பிரதீப்பும் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடப் பிடிக்காமல் வீடு வந்து சேர்ந்தனர் காரில் இருந்து இறங்கிய ஆர்த்திவேகமாக உள்ளே செல்ல எத்தனிக்க இந்த முறை மங்கை அவர்களை தடுத்து ஆரத்தி எடுத்தார்





‘இது.... இப்போ ரொம்ப முக்கியம்’ என்று வாய்வழி சொல்லவில்லை அவ்வளவுதான் இருவரின் முகமும் அதனைஅப்பட்டமாக சொல்லியது ஆரத்தி முடிந்ததும் விடுங்கடா ஆளை என்பது போல் வேகமாக மாடியேறிமறைந்தாள் ஆர்த்தி . அவள் இருக்கும் அறைக்கா நாம் செல்ல வேண்டும் என்று பிரதீபன் நினைத்ததுமே அவன்கால்கள் தடுமாறின



மேலே போக மனமில்லாமல் ஹால் சோபாவிலேயே அமர்ந்து விட்டான்

அவனது மன உணர்வுகளை படித்தவர் போல் அவனருகில் வந்தமர்ந்தார் வெற்றிவேல்

“பிரதீபா கல்யாணம் நடக்கறதுக்கு முன்னாடி நான் எவ்வளவோ எடுத்து சொன்னேன், மாயா இல்லன்னாபரவால்ல நம்ம ஸ்டேடஸ்கு ஏத்த மாதிரி வேற எடம் பாத்துக்கலாம்னு, பட் நீ கேக்கல, மாயா இல்லன்னா வேறஎந்த பொண்ணா இருந்தாலும் எனக்கு ஒன்னுதான் அதுக்கு மாயா சொல்ர பொண்ணையே கல்யாணம்பன்னிக்கறேன்னு சொல்லிட்ட, நானும் கடைசீ நிமிஷம் வரைக்கும் கல்யாணத்தை நிறுத்த எவ்வளவோ முயற்சிசெஞ்சேன் பட் ஆல் இன் வெய்ன், கல்யாணம் முடிஞ்சதுகப்புறம் வி கான்ட் கோ பேக், லைஃப் அண்ட் பஸ்னஸ்இரண்டும் கிட்டத்தட்ட சேம்தான் எப்போ என்ன நடக்கும்னு யாராலயும் சொல்ல முடியாத, நடக்கிறத நமக்குசாதகமா மாத்திக்கறதுதான் புத்திசாலித்தனம் எல்லா செயல்களுக்கு பின்னாடியும் ஏதாவது ஒரு வலுவானகாரணம் இருக்கும் , சோ ரியாட் லைக் அ மேன்“ என்று கூறி அவன் தோள்களில் இரண்டு தட்டு தட்டிவிட்டுஉள்ளே சென்றார்

திருமணம் ஆன நாள் முதல் எல்லோரும் திரும்பத் திரும்ப சொல்ல துடிப்பது ஒரே விஷயத்தைப் பற்றிதான்ஆனால் அதனை நடைமுறைபடுத்துவதுதான் முடியாத காரியம் என்று மனதினுள் நினைத்தவன் ஓர்பெருமூச்சுடன் படிகளில் ஏறினான்



அறைக்குள் சென்ற ஆர்த்திக்கு உடம்பெல்லாம் எரிந்தது ஒரு கொலைகாரன் பக்கத்தில் அவன் மனைவியாகநின்றிருக்கிறாளே அதுவும் அவளுடைய தருணை கொன்ற கொலைகாரன் பக்கத்தில், ஆத்திரத்தில் வேகம்மூச்செடுத்தவள் ஆவேசமாக தன் அணிமணிகளை கழற்றி ட்ரெஸ்ஸிங் டேபிளில் விசிறி அடித்தாள்

அவள் முகத்தை கண்ணாடியில் பார்க்க அவளுகே பிடிக்கவில்லை

முகத்தைக் காட்டிய கண்ணாடி அத்தோடு நிற்கவில்லையே கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறையும் அல்லவாசேர்த்துக் காட்டி அவளை வெறுப்பேற்றியது, அந்த தாலியை கழற்றி எறிய துரு துருத்த கையை மிகுந்தசிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள், அப்படி அடக்குகையில் தான் அந்த வைர மோதிரம் கண்ணில் பட்டது மாயாஅணிவித்த வைர மோதிரம் உடனே சிவந்திருந்த அவள் முகம் மேலும் சிவந்தது கொலைகாரி கொலைகாரிமோதிரம் போடறாளாம் மோதிரம் ஐவன் கேட்டது “ சத்தமாக முணுமுணுத்துக்கொண்டே ஆவேசமாகமோதிரத்தை கழற்றி தூக்கி எறிந்தாள் அது தரையில் பட்டு தெறித்து வாயிலை நோக்கி செல்ல அப்போதுகதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பிரதீபனின் ஷூவில்பட்டு நின்றுவிட்டது.



மோதிரத்தை பார்த்தவன் நிமிர்ந்து பார்த்தான். அவனை பார்க்க பிடிக்காமல் அவள் திரும்பிக் கொண்டாள். மீண்டும் மோதிரத்தை பார்த்தான் அது மாயாவின் முகமாகவே அவனுக்கு தோன்றியது பூ போல அதனைதரையிலிருந்து எடுத்தவன் தன் கைகளுக்குள் பத்திரமாகப் பொத்தி பாதுகாத்து தன் கபோர்ட் லாக்கரில்வைத்து பூட்டினான் . பின் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான் என்னவோ இப்பொழுது அவனுக்கு கோபம்கூட வரவில்லை உணர்வுகளெல்லாம் வற்றிவிட்டது . இதயத்திலும் மூளையிலும் ஒரு வெறுமைபடர்ந்திருந்தது. எல்லாமே முடிந்துவிட்டது இனி புதிதாக என்ன இருக்கப்போகிறது என்பது போல் எல்லாமேஅவனுக்கு மரத்து விட்டது

குளித்து முடித்தவன் அந்த அறையில் ஆர்த்தி இருப்பதைக் கூட உணரவில்லை கட்டிலில் படுத்து கண்களைமூடிக்கொண்டான் மூடிய கண்களுக்குள் மாயா அழுதாள்

ஆர்த்தியும் சோபாவில் படுத்து அழுது கொண்டிருந்தாள்

காதலென்பது.......தொடரும்......

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 

Latest posts

New Threads

Top Bottom