Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

காதலென்பது..... - கார்குழலி

கார்குழலி

Saha Writer
Team
Messages
22
Reaction score
1
Points
1
20

காலை பிரதீபன் எழும்போது ஆர்த்தி அரையில் இல்லை.அவள் இல்லாததே அவனுள் ஒரு நிம்மதியை பரவச்செய்தது. எழுந்து குளியலறைக்குள் சென்றவன் அலுவலகத்திற்கு தயாராகி கீழே வந்தான். தற்போதைக்குகடவுள் அவனிடம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் ‘ஆர்த்தி என் கண்முன் வராமல் இருக்கவேண்டும் ‘ என்று தான் கேட்டிருப்பான். அன்று அவனது எண்ணம் நிறைவேறவும் செய்தது.

ஆர்த்தி அவனுக்கு முன் எழுந்து தோட்டத்திற்கு சென்றுவிட்டாள். ஏனோ அவளுக்கு அந்த வீட்டிலிருக்கவேமூச்சு முட்டியது. அவளது வீடு சிறியதாக இருந்தாலும் அதில் ஒரு உயிர்பு இருக்கும். இங்கே வீடு மாளிகைபோலவும், வீடு முழுக்க பணத்தை வாரியிறைத்திருந்த அலங்காரமும், ஏகப்பட்ட வேலையாட்களும் என்றுஅவளுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. முதலில் அவள் உயிரோடு இருப்பதை உணர்ந்தால்தானே வீட்டின்உயிர்ப்பை உணர முடியும்? எல்லாமே வெறுத்தது. எங்காவது கண்காணாது இடத்திற்கு ஓடி விட அவள்கால்கள் பறபறத்தது.

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ ராஜம்மாவின் குரலில்தான் நடப்பிற்கு வந்தாள்." உங்களைபெரியம்மா சாப்பிட கூப்பிட்டாங்கமா" என்றவரிடம் மருப்பேதும் சொல்லத் தோன்றாமல் அமைதியாக அவரைபின் தொடர்ந்தாள். ஏதோ சாப்பிட முயன்று எப்படியோ கொஞ்சத்தை விழுங்கி வைத்தாள். மங்கையும்பெரிதாக எதையும் கண்டு கொள்ளவில்லை. கொஞ்சம் விட்டுப் பிடிக்க வே ஆசை பட்டார்.

ப்ரியாவுடன் ஃபோனில் ஒரு மூச்சு அழுது கரைந்தாள். அவளின் அட்வைசால் இன்னமும் எரிச்சலாகி இதுப்ரியாவுடன் பேசவே கூடாது என்ற முடிவிற்கு வந்தாள்.பின் கொட்டக்காட்ட அறையில்அமர்ந்திருந்தாள்..அவளால் அதுவும் முடியவில்லை எங்கு பார்த்தாலும் ஹீரோ போல் விதவிதமாகபோஸ்களுடன் பிரதீபனின் போட்டோக்கள், கண்களையும் அழுந்த மூடிக்கொண்டு சோபாவில் குறுக்கி படுத்துக்கொண்டாள் .

***********

பல பேரின் குட்மார்னிங்கையும் அதனுடன் கூடிய ஆராய்சிப் பார்வையையும் ஏற்று தன்னறைக்குள் வருவதற்குள்புசுபுசுவென உள்ளே எரிச்சல் மூண்டது. எல்லோருமே தன்னை பற்றியே பேசுவது போல் ஒரு பிரமைதோன்றியது. தலையை ஒரு முறை உலுக்கிக் கொண்டு டேபிளின் மீதிருந்த தண்ணீரை எடுத்து ஒரே மூச்சில்குடித்தான்.பின் சுழல் நாற்காலியில் அமைந்து தண்டையை தளர்ந்தி காலர் பட்டனை கழட்டி விட்டான். என்னவோ மூச்சு முட்டுவது போல் இருந்தது. பட்டனை கழட்டியும் எந்த மாற்றமும் இல்லை. ஏதேதோதேவையில்லாத எண்ணங்கள் சம்பந்தா சம்பந்தம் இல்லாம் ஒரு கோர்வையாக கூட இல்லாமல் தோன்றிஅவனது எரிச்சலை தலைவலியாக மாற்றியது.

". ம்.....- ஹூம் இது சரிவராது. ஐடில் மேன்ஸ் மைன்ட்இஸ் டெவில்ஸ் வெர்க்ஷாப்" சோஐ நீட் வொர்க், கம்யூட்டரில்மெயில் பாக்சை திறந்தான். ஓரளவு அவன் வீட்டிலிருந்தே முக்கியமான மெய்களுக்கு பதிலளித்து விட்டான்என்றதால் வேறு என்ன என்பது போல் ஆராய்ந்து கொண்டிருந்தான்

முதலாவது அவர்கள் கம்பெனியின் புதிய தளத்திற்கு எலக்டிரிகல் வெர்க்செய்வதற்கான கொட்டேஷன்ஸ் அடாச்செய்யப்பட்டிருந்த .

அதில் நல்ல கம்பெனி, குறைந்த விலை என்று யோசித்துமுடிவெடுக்க வேண்டும். அதனால் தற்போதைக்குஅதனை ஒதுக்கி வைத்தான்.

அடுத்த மெயில்.அது அவர்கள் கம்பெனி ஸ்டாப் ஒருவர் திருமணத்திற்காகலோன் கேட்டு அப்ளை செய்திருந்த, ஏற்கனவே அகவுன்ட்ஸ் டிபார்ட்மென்டில் அப்ரூவ் செய்து தான் கடைசி கட்ட அப்ரூவல்காக இவனுக்குவந்திருந்தது. அதனால் உடனே லோன் அப்ரூவ்ட் என்று சம்பந்த பட்டவர்களுக்கு மெயில் அனுப்பினான்

அடுத்த மெயிலை பார்த்தபோது ஷாக் அடித்தது போல் அமர்ந்து விட்டான், இங்கேயுமா? என்றதுஅவன் மனம், அப்போது இரண்டு முறை கதவு தட்டப்பட்டு பதில் வராமல் போகவே திறந்து கொண்டு உள்ளேவந்தான் ரஞ்சித். "ஹேய் பிரதீபா அதுக்குள்ள வந்துட்டியா?" என்று சிறு கோபத்துடன் கேட்டுக் கொண்டேவந்து அவன் எதிரில் அமர்ந்தான். ரஞ்சித்தின் குரல் கேட்கும் சட்டென தன் கவனத்தைகனினியிலிருந்து விலக்கி அவன் முகம் பார்க்க முயன்றான். " நான் தான் இன்னும் டூதிரி டேஸ் கழிச்சு வான்னுசொன்னேனே" என்றான் ரஞ்சித் தொடர்ந்து அவனது வாக்கியங்களை உள்வாங்கி அதன் அர்த்தத்தை மூளைஉணர்வதற்கே சில நேரம் பிடித்தது பிரதீபனிற்கு. அதற்குள்மீண்டும் பேசினான் ரஞ்சித். "இந்த திடீர்கல்யாணத்துக்கு என்ன பதில் சொல்ல போரேன்னு யோசிச்சிட்டியா? மாயாவை பத்தி இங்க நிறைய பேருக்குதெரியும், என்ன சொல்ல போர" ரஞ்சித்தின் தொடர் பேச்சை ஒரு வாரு புரிந்துகொண்டவன் பதிலளிக்கும் முன்கதவு தட்டப்பட்டு உள்ளே வந்தாள் மோனிகா, "ஹாய் பிரதீபன் என்ன திடீர்னு கல்யாணம் எல்லாம்? உங்கஅப்பா ரிஷப்ஷனுக்கு இன்வைட் பன்னப்ப எங்க எல்லாருக்குமே சாஷாக்" என்றமோனிகா அந்த கம்பெனியின் பிராஜக்ட் மேனேஜர்களுள் ஒருத்தி. பெயர் சொல்லி அழைப்பதும் எல்லோரிடமும்நட்போடு சகஜமாய் பேசுவதுதான் எம் என் சி கம்பெனிக்களின் கலாச்சாரம். அப்படித்தான் மோனிகாவும்சாதாரனமாக கேட்டாள்

ஆனால் பிரதீபனோ அவளை ஒருமுறை உறுத்துவிழித்தவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி

" ஏன் பன்ன கூடாதா?, ஓ.... சாரி உங்ககிட்ட பர்மீஷன் வாங்க மறந்துட்டேனே,இட்ஸ் எபிக் மிஸ்டேக் ஐ ஆம்ரியலிசாரி" என்றான் அவனது வார்த்தையில் இருந்த சாரி துளியும் அவன் குரலிலோ முகபாவனையிலோஇல்லை. உடனே மோனிகாவின் முகம் சட்டென வாடிவிட்டது. எதுவும் பேசாமல் ரஞ்சித்தை மட்டும் 'என்ன இதுஎன்பது போல் ஓர் பார்வை பார்த்துவிட்டுசென்றாள். ரஞ்சித் அசந்துபோனான். மோனிகா வெளியேரியதும்"நீசமாளிச்சுடுவ" என்றான் நிம்மதியாய். “ஓகே பிரதீப் யூ புரொசீட்” என்று வெளியேரினான்

ரஞ்சித் வெளியேரியதும் மீண்டும் கணினியில் பார்வையை செலுத்தியவன் முன் அதே மெயில், ஓர்பெருமூச்சுடன் தொலைபேசியை எடுத்து ஆடிட்டர் ஹெட்டை அழைத்தான். ஆடிட்டருடனான தன்பேச்சுவார்த்தை முடிந்ததும் ரஞ்சித்தை அழைத்து ஓர் செக்கை நீட்டினான். " இது தருணோடசெட்டில்மன்ட்”என்றான் அதனை பெற்றுக் கொண்டு தொகையைபார்த்தவன் சட்டென்.நிமிர்ந்தான். "பிரதீப்... ... தருண் வேலைக்கு சேந்து ரெண்டு வருஷம்தான் ஆகுது.இன்னும்பர்மனன்ட் கூட ஆகல, செட்டில்மெண்ட் பணம்கொஞ்சமாதான் இருக்கும், இது ....." என்றான் புரியாமல். ஏனெனில் அந்த செக்கில் எழுதியிருந்த தொகை மிகமிக அதிகம்

" இதஎப்படியாவது அவங்க ஃபேமலி கிட்ட கொடுத்துடு" என்றான் பிரதீபன். "ஹேய்..எப்படிடா நம்புவாங்க?" "சேசம்திங், இன்ஷூரன்ஸ்னு சொல்லு, கம்பெனில வர்க் பன்னும் போது டெத் ஆனா இதுதான் செட்டில் மண்ட்னுசொல்லு, டூ எனிதிங், இட்ஹஸ் டூ ரீச் தெம்" என்றான் படபடப்பாக. "ஓகே. - ஓகே .... காம் டவுன் புரியுது, உன்னால ஏற்பட்ட இழப்ப சரி செய்ய நினைக்கற, ஐ வில் டேக் கேர்" என்றான் ரஞ்சித், "ம்ஹம்.... தருணோடஉயிருக்கு சமமா என் சொத்தையே கேட்டாலும் நான் எழுதி வைப்பேன், அதுக்கு பதிலா மா......."முடிக்காமலேயே ஓர் பெறுமூச்செரிந்தவன். “ஒரு உயிருக்கு விலை பேசற அளவு நான் இன்னும் இறங்கல" என்றான் ஓர் வெற்று புன்னகையுடன்.ரஞ்சித்திற்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது தன் நண்பனின் மனம்அனுபவிக்கும் வலியை அவனால் உணரமுடிந்தது.

காதலென்பது.......தொடரும்......

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 
கார்குழலி

Saha Writer
Team
Messages
22
Reaction score
1
Points
1
21

இரவு தன்னறையினுள் நுழைந்த பிரதீபனின் கண்கள் முதலில் ரூம் முழுவதும் ஓர் வட்டமடித்தது ஆர்த்தியைஎங்கும் காணவில்லை ஷப்பாடா......என்று நிம்மதி பெருமூச்சோடு கட்டிலில் சாய்ந்தான். எங்கேசென்றிருப்பாள் என்று அவனுள் ஓர் குரல் கேட்க. ஏதாவது ஒரு கெஸ்ட் ரூமில் இருப்பாள் என்று பதிலும்சட்டென உதயமானது. ஆனால் அவனுடைய திருமணத்தன்றிலிருந்து எல்லா கெஸ்ட் ரூமும் லாக்செய்யப்பட்டிருக்கிறதே எல்லாம் இந்த அம்மாவால் வந்தது. ஏதாவது ஒரு ரூம் திறந்திருந்தாலும் அவன் அங்குசென்றிருப்பானே. ஒரு வேளை இன்னைக்கு ஏதாவது ஒரு ரூம் திறக்கப்பட்டிருக்கும். அவனை போல்அவளும்தானே இந்த அறையில் மூச்சு முட்ட தின்றிக்கொண்டிருக்கிறாள், அதனால் அவள் அங்குசென்றிருக்கலாம்

எங்கேயோ இருக்கட்டும் நம்ம கண்ணுல படாம இருந்தா சரி என்று தனக்குள்ளே கூறிக் கொண்டு படுத்துவிட்டான்

காலை காபியுடன் வந்த ராஜம்மாவின் கைகளில் இரண்டு காபி கோப்பைகள் அடங்கி டிரே இருந்தது

“வணக்கம் ராஜம்மா “ என்று கூறிக்கொண்டே ஒரு கப்பை எடுத்துக் கொண்டான்

ராஜம்மாவோ சொல்லாமல் ரூமை சுற்றும் முற்றும் பார்த்தார் அவர் எதையோ தேடுவது புரிந்தது

“என்னம்மா தேடுறீங்க ?” என்றபடியே ஒரு வாய் காபியை உறிஞ்சினான்

“ஆர்த்தி அம்மாவ தம்பி “என்றதும் சட்டென குடித்த காபி புரை ஏறியது அவனுக்கு

“பார்த்து தம்பி “என்று கூறிக்கொண்டே டிரேயை டீபாயில் வைத்து விட்டு

“ பாத் ரூம்ல இருக்காங்களா வந்ததும் காபி எடுத்துக்க சொல்லுங்க “என்று விட்டு வெளியேற போனவரைதடுத்தான் பிரதீபன்

“அவ இங்க இல்லையே ராஜம்மா “

“என்ன இல்லையா சாப்பிட்டதும் இங்க தான் தம்பி வந்தாங்க ஐய்யோ,அவங்க சரியா கூட சாப்பிடலையே”

“ஏதாவது கெஸ்ட் ரூம்ல இருப்பாம்மா போய் பாருங்க “என்றான் சாதாரணமாய்

“ஐயோ தம்பி நீங்க ரெண்டு வேற வேற ரூம யூஸ்பன்ன கூடாதுன்னு, எல்லா கெஸ்ட் ரூமையும் பூட்டி வெச்சிருக்கோமே, அவங்க எப்படி போக முடியும்” ராஜம்மாவின் முகம்வெளிறியது

இப்போது பிரதீபனின் முகத்திலும் கலவரம்

“எங்கு சென்றிருப்பாள்? மறுபடியும் தருண் வீட்டிற்கா மனம் பலதை யோசித்தது செக்யூரிட்டிகள் போன் செய்துவிசாரித்தான் ஆர்த்தி வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்பது ஊர்ஜிதமானது

மாடியில் இருப்பாளோ?உடனே மாடிக்கு விரைந்தான்

அங்கே அவள் இல்லாமல் கீழே வந்தான் அதற்குள் மங்கையும் வெற்றிவேலு கூட விவரம் தெரிந்து பரபரப்பானர் . வீடு முழுவதும் அலசப்பட்டது எங்கு தேடியும் அவளை காணவில்லை

ஒருவேளை செக்யூரிட்டி சரியாக பார்க்கவில்லையோ ?என்ற சந்தேகம் எழுந்தது

தருண் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு பிறகு ஆர்த்தியின் வீட்டிற்கு சென்று பார்க்கலாம் என்று முடிவெடுத்துஉடைமாற்ற தன் அறைக்கு சென்றான்

கப்போர்டில் உடை தேடும் போது உள்ளுக்குள் எரிச்சல் எக்கச்சக்கமாக மூன்டது

“முட்டாள் முட்டாள் எங்க வேணா போய் தொலையட்டும் சொல்லிட்டு போய்த் தொலைய வேண்டியதுதானேமறுபடியும் அந்த தருண் வீட்டு வாசல்ல போய் நிக்கணும் எல்லாம் எனக்கு தேவைதான் “என்றுநெற்றிப்பொட்டில் ஓங்கி அடித்துக் கொண்டான் அவன் அடித்துக்கொண்ட வேகத்தில் நெற்றி ஜிவு ஜிவு எனஎரிந்தது

சட்டென அவளின் ஃபோன் ஞாபகத்திற்கு வர அந்த எண்ணிற்கு கால் செய்தான் செல்போன் சத்தம் எங்கோஅடிப்பது கேட்டது

“ஷிட்.... ஃபோன இங்கேயே விட்டுட்டு போயிட்டாளா இர் ரெஸ்பான்ஸ்சிமிள் இடியட்” என்று ஓங்கி தரையில்மிதித்தான்

செல்போன் சத்தம் வந்த திசையை பார்த்தான் கண்கள் பால்கனியை காட்டியது. பால்கனி கதவுகள்மூடியிருந்தது

உடனே பிரதீபனின் மூளை விழித்துக் கொண்டது “ஒரு வேளை .......” அடுத்த வார்த்தை அவனுக்கு தோன்றுமுன்பால்கனி கதவை திறந்தான்

அங்கே கதவருகே விழுந்து கிடந்தாள் ஆர்த்தி அதன்பிறகு எதையுமே பிரதீபன் யோசித்து செயல் படுத்தவில்லை கைகளும் கால்களும் மூளையும் தன்னிச்சையாய் வேலை செய்தன

அவளின் மணிக்கட்டை பிடித்து நாடி பார்த்தான் காய்ந்த சருகை போல் விழுந்து கிடந்தவளை அப்படியே தன்இரு கரங்களால் தூக்கி வந்து கட்டிலில் கிடத்தினான் ,ஆங்காங்கே விலகி இருந்த சேலையை சரி செய்தான்தலையணையை எடுத்து அவள் தலைக்கடியில் வைத்தான்

ஃபோனை எடுத்து குடும்ப டாக்டருக்கு போன் செய்து உடனே வரச் சொன்னான் அப்படியே ஹாலுக்கு அழைத்துவிவரம் சொன்னான்

ஆர்த்தியின் அருகே முட்டியை மடக்கி அமர்ந்தவன் அவள் கண்ணத்தை தட்டி “ஆர்த்தி ஆர்த்தி” என்று குரல்கொடுத்தான்

அதற்குள் மங்கை,வெற்றிவேல் ராஜம்மா மூவரும் வந்துவிட்டார்கள்

ராஜம்மா ஆர்த்தியின் நெற்றியை தொட்டுப் பார்க்க “எங்கப்பா இருந்தா” என்றபடி பிரதீபனின் எதிர்ப்புறம் வந்துஆர்த்தியின் அருகே மண்டியிட்டு அமர்ந்தார் மங்கை

“பால்கனிலமா”என்றவனது பார்வை ஆர்த்தியின் முகத்திலேயே நிலைத்திருந்தது

என்னது பால்கனிலயா ?அப்போ நைட்டு பூரா அங்கேயாயிருந்தா?கடவுளே என்ன ஆச்சுன்னு தெரியலையேடாக்டர் இன்னும் வரலையே “என்று கைகளைப் பிசைந்தபடி ஆர்த்தியை பார்த்தார் மங்கை

எல்லோருமே பதட்டத்துடன் காத்திருக்க அடுத்த இருபது நிமிடத்தில் அந்த அறையில் நுழைந்தார் டாக்டர்தணிகாச்சலம்

உடனடி முதலுதவிகளை செய்தவர் ஹார்ட் பீட் மற்றும் பிரஷர் பார்த்துவிட்டு கண்களை விரித்து பார்த்தார்,நாடித்துடிப்பை தன் கடிகாரத்துடிப்போடு ஒப்பிட்டு பார்த்தார் பின் இவர்களிடம் திரும்பியவர்

“ரொம்ப வீக்கா இருக்காங்க பிபி லோவா இருக்கு அதனால மயக்கம் வந்திருக்கும் ,எப்ப மயக்கமானாங்க ?என்று மங்கையை அவர் பார்க்க அவர் பிரதீபனை பார்க்க அவன் “தெரியல டாக்டர்” என்றான்

“வாட்?”என்று தன் அதிர்ச்சியை வெளிப்படுத்திய தணிகாச்சலம் தன் கிட் பேக்கை திறந்து ஒரு இன்ஜக்ஷன்எடுத்து அவளின் நரம்பில் செலுத்தினார்

பின் பிரதீபனிடம் திரும்பி

இவங்களுக்கு டிரிப்ஸ் ஏத்தனும், பிபி நார்மல் ஆகுர வரைக்கும் டூ டைம்ஸ் எ டே வெயின்ல இன்ஜக்சன்போடணும், இவங்கள ரொம்ப கேர்ஃபுல்லா டேகேர் பண்ணனும் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிடுங்க என்றார்

“ ஓகே “என்றான் பிரதீபன்

இடை புகுந்த மங்கை “வேண்டாம் டாக்டர் அவங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம் தான் ஆகுது அதுக்குள்ளஹாஸ்பிடல்ல சேர்த்தஇருக்கோம்னு தெரிஞ்சா சம்பந்த வீட்ல என்ன நினைப்பாங்க அதுமட்டுமில்லாமஆளாளுக்கு ஒரு கதை கட்டுவாங்க அதனால வீட்டிலேயே வெச்சு நல்லபடியா பார்த்துக்கறோம் டாக்டர்“என்று கூற அவருக்கு துணை வந்தார் வெற்றிவேல் “மெடிகல் இன்ஸ்டுமெண்ட்ஸ் என்ன வேணும்னுசொன்னீங்கன்னா ஐ வில் அரேஞ் இட் டாக்டர் “ என்றார்

இருவரையும் மாற்றி மாற்றி பார்த்த டாக்டர் இறுதியில் பிரதீபனின் முகத்தில் தன் பார்வையை சில நொடிதிலைத்து பின் “சரி “என்றார்

டிரீட்மன்டிற்கு வேண்டியதை எழுதிக்கொடுத்தார்

பிரதீபனின் கண்கள் ஆர்த்தியின் முகத்திலேயே நிலைத்திருந்தது ஆனால் அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அவன் மட்டுமே அறிவான்

காதலென்பது.......தொடரும்......

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 
Karki

New member
Messages
3
Reaction score
0

👌👌👌👍
 
JoRam

New member
Messages
4
Reaction score
3
Points
3
அருமையான பதிவு மா, ரொம்பவும் கஷ்டமான சூழ்நிலை எப்படி கடந்து வர போறாங்களோ ?
 
Top Bottom