Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அவன் பேசியதில் யாருக்கும் தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. பின், அவனே விளக்கினான்.

“எனக்கு ஏதோ ஒரு கம்பெனிக்கு அப்ளை பண்ண‌ சொல்லி தான் மெயில் ஐடி அனுப்புனாங்கன்னு பாத்தா, அது இவங்க கம்பெனியோட டை-அப் வச்சிருக்க கம்பெனி தாம்மா. இன்னைக்கு அங்கப் போயிருந்தப்ப தான் இவர் சிஇஓ-னே எனக்கு‌ தெரிஞ்சது.” என்று ஏகத்திற்கும் உணர்ச்சி வசப்பட்டான்.

உத்ரா அவனை பற்றிய குழப்பத்தில் தலையைப் பிடிக்க, “ஆன்ட்டி இன்னைக்கு நான் இங்கயே தங்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். அதுல உங்களுக்கு அப்ஜக்‌ஷன் எதுவும் இல்லயே?” என்று அவளின் தோளில் கை போட்டான்.

பானுமதி புத்துணர்ச்சி பெற்றவராக, “இது உங்க வீடு மாப்பிள. இங்க நீங்க தங்க யாருக்கிட்ட பெர்மிசன்‌ கேக்கனும்? லயா, அக்கா ரூம மாப்பிளைக்கு கொஞ்சம் வசதியா ஒதுங்க வச்சுக் குடும்மா. அப்படியே நீ, நான், அமிகா மூணு பேரும் கவின் ரூம்ல தங்குறதுக்கான ஏற்பாட்ட கவனி” என்று அடுக்கடுக்காக வேலைகளை ஏவினார்.

உத்ரா அவனை முறைத்தபோது காதருகே குனிந்து கிசுகிசுத்தான்.

“நீ‌தான என் வைஃப் அப்படி இப்படினு மூடேத்துன? அதான் இங்கயே தங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்”

தோளைச் சுற்றியிருந்த அவன் கையை தட்டிவிட்டவளோ, “அய்யா சாமி! தெரியாம உணர்ச்சி வசப்பட்டு சொல்லிட்டேன். நான் ஒரு பைத்தியம். அப்படினு நெனச்சிக்கிட்டு தயவுசெஞ்சு இங்கயிருந்து கெளம்பு.” என்று கைக்கூப்பினாள்.

அமிகாவோ உத்ராவின் அவஸ்தை புரியாமல் உற்சாகமாக மிழற்றினாள்.

“இங்கயே இரு விக்கி. இன்னைக்கு நைட் உதிக்கு பெர்த்டே. லயா உதிக்கு கேக் செஞ்சத நான் பாத்தேன். அவ‌ நைட்டு தான் கட் பண்ணனும் சொல்லிட்டா. நீயும் இருந்தா‌ உனக்கும் கேக் கெடைக்கும். அய்யயோ! உதி நான் சொன்னத நீ கேக்கல சரியா?” என்றாள்.

எங்கே கவிலயா தன்னை திட்டிவிடுவாளோ எனப் பயந்தாள்.

“அம்மு சித்தப்பாவ இனிமே பேர் சொல்லி கூப்டக்கூடாதுனு முன்னாடியே உன்கிட்ட சொன்னேனா இல்லையா? பெரியவங்கக்கிட்ட மரியாதையா பேசனும்டா கண்ணா.”

கனிவுடன் எடுத்துக் கூறிய பாட்டிக்கு தொலைக்காட்சியைப் பார்த்தபடியே தன் இரட்டை வால் குடுமியாட சரியென்றாள்.

விக்கியோ இன்னும் குதூகலமானான்.

“அப்போ இன்னைக்கு இங்கயே டேரா போட்ர வேண்டியது தான்” என்றவன் தன் கைகளை மேலே உயர்த்தி நெட்டி முறிக்க, செய்வதறியாமல் பல்லைக் கடித்தாள் உத்ரா.

இரவு உணவான சப்பாத்தியை கவினும், கவிலயாவும் சண்டைப் போட்டுக்கொண்டே வரவேற்பறையில் இருப்போருக்கு சுட்டு எடுத்து‌ வர, “எனக்கு தான் இந்த சப்பாத்தி! எனக்கு தான் இந்த சப்பாத்தி!” என்று அடிபிடியாக‌‌ பறித்து உண்டார்கள் அமிகாவும், விக்கியும்.

பானுமதிக்கோ விக்கி அமிகாவுடன் சிறுபிள்ளையாக மாறியது கண்டு மனம் நிறைந்துபோனது. ஆனாலும், அவனின் அன்னை வேணியை நினைத்து பயப்படாமல் இல்லை.

உத்ராவுக்கோ அவனின் இருப்பு பெரிய தலைவலியானது.

“ஹே! சாப்டுறப்ப என்ன வெளையாட்டு?” என்று அமிகாவை அதட்டியவள் விக்கிக்கும் சேர்த்தே பார்வையால் குட்டு வைத்தாள்.

ஆனால், அவன்‌ அடங்கினால் தானே? மேலும் மேலும் குறும்புத்தனம் செய்து அவளை கதறவிட்டபடியே இருந்தான். அதில் ஒருவரையும் தூங்கச் செல்ல விடவில்லை. குலுக்குச்சீட்டு விளையாடுவது, டம் சாரட் விளையாடுவது என்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தான்.

சிறிதுநேரம் ஒதுங்கியிருந்த உத்ராவும் அவர்களுடன் கலந்துகொண்டு சிறுபிள்ளை போல் ஜெயிப்பதற்காக மல்லுக்கட்டினாள்.

கவிலயாவின் அலைபேசியில் பன்னிரண்டு மணி அலாரம் அடிக்கும் வரை நேரம்போனதே தெரியாமல் வயிறு வலிக்கும்படியாக சிரித்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.

மறுநாள் துவங்கியதுமே ஒவ்வொருவரும் உத்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல, நன்றி கூறி மகிழ்ந்தாள். ஆனால், அவளின் அந்த மகிழ்ச்சியை அதிர்ச்சியால் நிரப்ப உதய்கிருஷ்ணா அவளுக்கு வாட்சப்பில் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தான்.

அதைப் பார்த்ததும் அவனுக்கெப்படி தன் பிறந்தநாள் தெரியும் என்று யோசித்தவள் மறுகணமே தாங்கள் வாட்சப்பில் அனுப்பிய ஜாதகத்தின் நினைவு வந்து சமாதானமடைந்தாள். ஏனோ அவனுக்கு நன்றி சொல்ல அவள் மனம் ஒப்பவில்லை. அலைபேசியை அணைத்து பக்கத்தில் வைத்தாள்.

வாழ்த்துக்கூறிய கையோடு சமையலறை சென்ற கவிலயா குளிர்சாதனப்பெட்டியிலிருந்து ஒரு கிலோ ரசமலாய் கேக்கை தூக்கிக்கொண்டு வர, “ஐ கேக்கு! கேக்கு!” என்று சந்தோசக் கூச்சலிட்டாள் அமிகா.

அனைவரும் சம்மணம் போட்டபடி தரையில் வட்டமாக அமர்ந்திருக்க, நடுவில் கேக்கை கொண்டு வந்து வைத்தவள் மெழுகுவர்த்திகளை ஏற்றியவுடன் மின்விளக்கை அணைத்தாள்.

அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துபாடல் பாட, மனதில் ‘எல்லாரும் நல்லாருக்கனும்’ என்று வேண்டிக்கொண்டே மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்தாள் உத்ரா. ஆனால், அணைந்த மெழுகுவர்த்திகள் மீண்டும் உயிர்பெற்று அவளை சோதித்தன. அவள் மீண்டும் மீண்டும் ஊதி அணைக்க, உயிர்பெற்றது அது.

உத்ரா அதனிடம் படும் பாட்டைக் கண்டு கவினும், கவிலயாவும் சத்தம் போட்டு சிரித்தனர். மெழுகுவர்த்தியிலுள்ள சூட்சமம் விளங்கி மற்றவர்களும் சேர்ந்து கொண்டனர்.

அத்துடனே மின்விளக்கும் உயிர்பெற, கேக்கை வெட்டி முதல் துண்டை விக்கியின் மடியிலிருக்கும் அமிகாவுக்கு ஊட்டிவிட்டு தன் அன்னையிடம் தாவினாள்.

அவர், “மாப்பிளைக்கு மொதல்ல குடு” என்று விக்கியை கைக்காட்டினார்.

அவளும் வேறு வழியின்றி அவனுக்கு கேக்கை ஊட்டி விட்டாள்.

அதில் ஒரு துண்டை எடுத்து தானும் அவளுக்கு ஊட்டிவிட்டவன், “பி ஹேப்பி ஆல்வேஸ்” என்று அவள்புறம் சரிந்து தோளோடு அணைத்து விடுவித்தான்.

“உன்ன என் வாழ்க்கைல வச்சிக்கிட்டா? ம்க்கும்!” என்று நக்கலடித்தாள் உத்ரா.

அவன் கண்டுகொள்ளவில்லை.

பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்தக் கையோடு அனைவரின் வாயிலும் கொட்டாவி வரத் தொடங்க, பானுமதியின் வற்புறுத்தலில் விக்கியோடு தனதறைக்குள் நுழைந்தாள் உத்ரா.

விக்கிக்கோ அவளுடன் அவ்வறையில் தனியே இருப்பதை விட மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடி, சண்டைப்போட்டு, கேலிப்பேசி தூங்கவே ஆசை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் பானுமதி‌ அதற்கு அனுமதிக்கமாட்டார் என்பதால் ஏமாற்றத்துடன் படுக்கையில் அவளருகில் வந்து உட்கார்ந்தான்.

கவினின் அறையில் அமிகா, “ஏன் பாட்டி அவங்க ரெண்டு பேர் மட்டும் அந்த ரூம்ல இருக்காங்க? அங்க தான் ஏசி இருக்கும். எனக்கும் அங்க போகனும்.” என்று சிணுங்கினாள்.

“உதிக்கு கல்யாணம் ஆகிடுச்சில்ல? இன்னைக்கு ஒருநாள் மட்டும் நாமல்லாம் இங்க தான் தூங்கனும் அம்மு. நாளைக்கு கண்டிப்பா அங்கப்‌போகலாம்.” என்று சிறியவளை சமாதானம் செய்ய முயன்றார்.

அவள் அதற்கெல்லாம் அடங்குகிற ஆளா நானென்று, “உதி கட்டிக்கிட்ட மாதிரி நாம எல்லாரும் கழுத்துல அந்த யெல்லோவ் கலர் ரோப்ப கட்டிக்கிட்டா நாமளும் இப்ப அந்த ரூமுக்குப் போய் தூங்கலாம் இல்ல பாட்டி?” என்றொரு குண்டைத் தூக்கிப்போடவும், கவிலயாவும் கவினும் பேயறைந்தாற்போல் பானுமதியைப் பார்த்தனர்.


கலைடாஸ்கோப் திரும்பும்…​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு ஃபேஸ்புக்கில் தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
உங்களுக்கான அத்தியாயம் 23 இதோ...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 23
“அப்ப அந்த நர்ஸம்மா சொன்னது உண்ம தானா?” என்று தம் மக்களின் முகத்தைப் பார்த்தார் பானுமதி.

அவர்கள் பீதியில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“இப்ப நடுவுல செக்கப் போனப்ப தான் அந்தம்மா உத்ரா மாப்பிள கட்ன தாலிய அத்துப்போட்டுட்டு அவளே கட்டிக்கிட்டது‌ பத்தி சொன்னாங்க. நானும் அவளுக்கு இப்படி கல்யாணம் நடந்தா தான் உண்டுனு உண்ம தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல. நீங்களும் இனி இதப் பத்தி வாயத் தெறக்காதீங்க. என்ன நான் சொல்றது புரியுதா?” என்று மிரட்ட, பிள்ளைகள் இருவரும் சமர்த்தாக தலையாட்டினர்.

அதை இதைச் சொல்லி அமிகாவை சமாளித்தவர், திடீரென விட்டத்தைப் பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்த கவிலயாவை கண்டு என்னவென்று விசாரித்தார்.

அவள், “இல்லம்மா இன்னைக்கு என் போன்ல நண்பன் பட க்ளிப்பிங்ஸா வந்துச்சா? அதான் அதுவே என் மூளைக்குள்ள ஓடிட்டிருக்கு. சொன்னா ஆச்சரியப்படுவீங்க. அதுல வர்ற ஸ்ரீகாந்த் தான் நம்ம கவின். கடைசியா தனக்கு பிடிச்ச வேலைல சேருவான் இவன மாதிரியே. நீங்க ஜீவா. தன் அக்காவுக்கு கல்யாணம்னு சொன்ன உடனே கோமாலயிருந்து எந்திரிச்சிருவான் உங்கள மாதிரியே. விஜய் வந்து நம்ம அம்மு. பெத்தது ஒருத்தர், வளக்கறது இன்னொருத்தர். அப்பறம் சத்யராஜ் கேரக்டர் வந்து நம்ம உதி. எப்பவும் ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர். ஆனா, அதுல என் கேரக்டர் எதுனு தாம்மா எனக்கு ஒரே கொழப்பமா இருக்கு. ஒரு வேள நான் தான் இலியானாவா இருப்பேனோ? எனக்கு கல்யாணம் நடக்கும்போது நான் ஓடிப்போயிருவேன் போலம்மா” என்றதும்,

“எடு செருப்ப நாயே! ஏன்டி உன் வாயில நல்ல வார்த்தையே வராதா? அக்கா தங்கச்சி ரெண்டு பேருக்கும் நல்ல முறைல கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லயா? என் ஜீவனப் போட்டு வாங்குறீங்க” என்று கத்தவும், தலை வரை கம்பளியை இழுத்துப் போர்த்தினாள்.

“இறைவா!” என்றவர் தானும் மெதுவாக கண்களை மூடினார்.

எதிர் அறையில் தனக்கு தூக்கம் வருகிறதென்று தலையணையில் சாய்ந்தாள் உத்ரா.

அவளை ஒட்டி தலையணையைப் போட்ட விக்கியோ, “உதி உனக்கு எதாவது பாட்டு கேக்குது?” என்றான்.

“என்ன பாட்டு?” என்று கண்களை மூடியபடியே வினவினாள்.

“அதான், நம்தன நம்தன தாளம் வரும். புது ராகம் வரும். பல பாவம் வரும். அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்.”

“எங்கிட்டருந்து இப்ப செருப்பு வரும். மூடிட்டு தூங்குடா”

அதற்கு மேல் விக்கி வழக்கடிக்க தயாராகயில்லை. தானும் ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு தூங்க ஆயத்தமானான்.

மறுநாள் காலை உத்ரா எழும் முன்பே தான் எழுந்திருந்தான்.

அவள் காலைக்கடன்களை முடித்து வரவேற்பறைக்கு வந்தபோது, “இந்தாம்மா” என்று ஒரு கப் காஃபியை அவள் கையில் திணித்தார் பானுமதி.

விக்கி சும்மாயிருக்கவில்லை.

“என்ன குடிக்கிற உதி காஃபியா? நான் டயர்டா இருப்பேனு எனக்கு மட்டும் ஸ்பெஷலா பாதம்பால் குடுத்தாங்க ஆன்ட்டி.” என்று வாயில் விரல் வைத்து வெட்கப்பட்டான்‌.

தன் தலையிலடித்துக்கொண்ட உதி சோபாவில் போய் உட்கார, அவளை நெருங்கியமர்ந்தவன் மீண்டும் வம்பளந்தான்.

“ஆனா உண்மயாவே நான் டயர்டா தான்‌ இருக்கேன் உதி. எப்பா என்னா ஒத! என்கிட்ட உதை வாங்கப் பிறந்த உதய், உதை வாங்கப் பிறந்த உதய்னு நீ சொல்லும் போதெல்லாம் எனக்கு அதோட அர்த்தம் புரியல உதி. ஆனா இன்னைக்கு தூக்கத்துல எனக்கு விட்டப்பாரு ஒரு ஒத. நான் செத்தாலும் மறக்க மாட்டேன்.”

உதய்கிருஷ்ணாவின் பெயரைக் கேட்டதும் சோகம் குடிகொண்டது அவள் முகத்தில். நேற்று எதற்காக அவன் தனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினான் என்பதிலேயே உழன்று கொண்டிருந்தாள்.

அந்நேரம் தான் அவளின் அலைபேசி தன் இருப்பை உணர்த்தியது.

திரையில் ‘உதய்’ என்கிற பெயரைப் பார்த்ததும் பதறி அழைப்பை துண்டித்தாள். அவன் கஜினி போல் படையெடுத்தான். உத்ராவும் சளைக்காத கத்தரிக்கோலானாள்.

அவர்களின் இந்த விளையாட்டை தொலைக்காட்சி பார்த்தபடியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த விக்கி தான் விரும்பிய பாடலை நிம்மதியாக கேட்க முடியாத கோபத்தில், “எடுத்துப் பேசி தான் தொலையேன்” என்றான்.

அவள் சட்டை செய்யவில்லை எனவும் அவளுடன் மல்லுக்கட்டி அழைப்பை ஏற்று ஒலிப்பெருக்கியை தட்டி விட்டான். அவனை எரிச்சலாகப் பார்த்தவளை இம்முறை அவன் சட்டை செய்யவில்லை.

அவர்களின் ரகளையை அறியாத உதய்கிருஷ்ணாவோ சோகமாக பேசிக் கொண்டிருந்தான்.

“சாரி உத்ரா. பெர்த்டே மூடுல இருக்க உன்ன டிஸ்டர்ப் பண்ற மாதிரி ஆகிருச்சி. ஆக்சுவலி எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுனே தெரியல. காலைல பிரகாஷ் சொல்லித்தான் எனக்கு இந்த விசயமே தெரியும். ரஸ்கல்! அவன்‌ இப்படி பண்ணுவான்னு நான் நெனச்சுக்கூடப் பாக்கல.”

பூடகமாக அவன் பேசிக்கொண்டேச் செல்ல, பெயர் தெரியாத புத்தகத்தின் நடுப்பக்கத்தை வாசித்தவர்கள் போல் இருவரும் விழித்தார்கள்.

“நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல. கொஞ்சம் புரியுற மாதிரி பேசுறீங்களா?” -சலிப்பாகச் சொன்னாள்.

“அது வந்து… உங்க டிடெக்டிவ் ஏஜென்சி இப்ப உருக்கொலஞ்சு போனதுக்கு காரணம்… வேற யாருமில்ல. என் ஃப்ரெண்ட் பிரகாஷ் தான்.” என்றான்.

உடனே விக்கியின் கண்களிரண்டும் தீப்பிழம்பாகின. உத்ரா அவனுக்கும் மேலான கோபத்தில் கொதித்தாள். ஆயினும் உண்மையை முழுதாக அறிய பொறுமையை கடைபிடித்தாள்.

“இல்ல எனக்கு புரியல. அந்த பிரகாஷ் எதுக்கு எங்க‌ ஆஃபிஸ அடிச்சு நொறுக்கனும்?” -நைச்சியமாகக் கேட்டாள்.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
உதய்கிருஷ்ணாவின் குரல் குற்றவுணர்வில் கரகரத்தது.

“அதுவந்து தப்பு என்னோடது தான் உத்ரா. நான்‌ நீ என்ன பத்தி தப்பா ரிபோர்ட் குடுத்த கோபத்துல‌ அவனுக்கு கேரக்டர் ரிபோர்ட் குடுத்தது பத்தியும் ஒளறிட்டேன். சத்தியமா அது இந்தளவுக்கு அவன கொண்டுபோய் விடும்னு நான் நெனைக்கவே இல்ல உத்ரா. அப்ப‌ உம்மேல இருந்த கோபத்துல அப்படி பண்ணிட்டேன்.

ஆனா, பிரகாஷ் செஞ்சது ரொம்பத் தப்பு. அதான் அவன் என்கிட்ட சொன்ன விசயத்த மனசு கேக்காம உன்கிட்ட சொல்றேன். எனக்கு தெரிஞ்சு பிரகாஷ் இப்படி பண்ற ஆளே இல்ல. அவன் கூட சுத்துற ரௌடிங்க தான் அவன தூண்டிவிட்டு இப்படியெல்லாம் செய்ய வச்சிருக்கனும். தயவுசெஞ்சு அவன மன்னிச்சிரு உத்ரா. அவன் பண்ணது தப்பு தான். ஆனா‌, அவன் எடத்துல இருந்தும் நாம கொஞ்சம் யோசிச்சிப் பாக்கனும் இல்லையா?

அது மட்டும் இல்ல, இப்ப அவன போலீஸ் புடிச்சா எம்பேரும் உள்ள வரும். வேண்டாத தலவலி. நான் அவன கன்வின்ஸ் பண்ணி உங்க ஆஃபிஸ ரீ-கன்ஸ்ட்ரக்ட் பண்ண ஏற்பாடு பண்றேன். நீ போலீஸ் கேஸ மட்டும் கொஞ்சம் வாபஸ் வாங்கிரு.” எனவும், அவனின் கெஞ்சலில் பல்லைக் கடித்தான் விக்கி.

உத்ராவுக்குமே அவனைப் பற்றி அவள் மனதில் வரைந்து வைத்திருக்கும் ஓவியத்தில் சிறு கீறல் விழுந்தது.

“‌ஓஹோ! உங்க ஃப்ரெண்டுக்கு வக்காலத்து வாங்க தான் நீங்க இங்க கம்பி கட்டிட்டு இருக்கீங்கல்ல? அவன் ஒரு ஒழுக்கங்கெட்டவன். அத நாங்க ஆதாரத்தோட சொன்னா அவனுக்கு கோவம் வருதா? அவன நான் சும்மா விடப்போறதில்ல. அவன்‌ செஞ்ச தப்புக்கான தண்டனைய அவன் அனுபவிச்சே ஆகனும். இனி நீங்க இதுல தலையிடுறது வேண்டாத வேல.

அன்னைக்கே நான் என் தொழில்பக்திய பத்தி உங்கக்கிட்ட சொல்லிட்டேன். சத்யம் டிடெக்டிவ் ஏஜென்சி என் ஒடம்புல ஒரு‌ அங்கம் மாதிரி. அத வெட்டி வீசுனாப்புல பண்ணிட்டான் அந்த ராட்சசன். அன்னைக்கு என் ஆஃபிஸ் கெடந்த நெலையப் பாத்து என் இதயமே நொறுங்கிருச்சி. இதுக்கு அவனுக்கு என்னைக்கும் மன்னிப்பே கெடையாது. இதுல நீங்க ஒதுங்கி நின்னு வேடிக்கைப் பாக்குறது தான் உங்களுக்கு நல்லது.

பைதவே குற்றவாளி பத்தி எங்களுக்கு தகவல் குடுத்ததுக்கு ரொம்ப தான்க்ஸ். இனி‌ அவன அரெஸ்ட் பண்ணி உள்ள தள்ளினப் பின்னாடி‌ தான் என்னால மூச்சு விடமுடியும். பை!” என்று சொல்லி பட்டென்று அழைப்பை துண்டித்துவிட்டாள்.

விக்கி இனி என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவுசெய்தவன் ஏற்கனவே தன்னுடன் தொடர்பில் இருக்கும் காவல் ஆணையர் கணபதிக்கு அழைப்பு விடுத்து சுமார் பதினைந்து நிமிடங்கள் நிலைமையை விவரித்தான். உத்ரா அவன் செய்வதனைத்தையும் வேடிக்கைப் பார்ப்பவளானாள்.

அவன் பேசி முடித்த ஒரு மணி நேரத்தில் பிரகாஷும் அவனது குழுவினரும் கைது செய்யப்பட்ட நற்செய்தி கிடைத்தது. உத்ராவால் இவ்வளவு விரைவில் அலைபேசியிலேயே காரியத்தை சாதித்து முடித்த அவனின் சாதூரியத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

உடனே பிடிபட்டவர்களை காண ஆவல் கொண்டவன் காவல்நிலையம் செல்ல ஆயத்தமாக, தானும் உடன் வருவதாக அடம்பிடித்தாள். அவன் யோசித்தபடி நிற்கும் சமயம் காரத்தைத் தின்றது அழைப்பு மணி.

படுக்கையறையில் ட்ரீம் கேக் பெட்டிகளுக்கு முகவரி ஒட்டிக்கொண்டிருந்த பானுமதியும் கவிலயாவும் ஒருசேர வெளியே வந்தார்கள்.

உத்ரா தான் சென்று திறந்தாள்.

அங்கோ தயக்கமாக நிற்கும் உதய்கிருஷ்ணாவை கண்டதும் இரண்டடி பின்வாங்கினாள்.

பானுமதி குழப்பரேகைகளுடனே அவனை வீட்டிற்குள் வரச் சொல்ல, உள்ளே வந்தவன் அனைவரையும் கண்டு கைகளை பிசைந்தபடி நின்றான்.

விக்கியின் முகமோ கோபத்தில் சிவந்து கொண்டிருந்தது.

உதய்கிருஷ்ணாவும் அதற்கு மேல் நேரவிரயம் செய்யாமல் விசயத்திற்கு வந்தான்.

“ஹானஸ்ட்டா அப்ப உன் மேலயிருந்த கோபத்துல தான் பிரகாஷ்கிட்ட எல்லாத்தையும் சொன்னேன் உத்ரா. இப்ப அத நெனச்சி ரொம்ப ஃபீல் பண்றேன். நான் உங்கம்மா ஹாஸ்பிடல்ல இருந்தப்ப பதறி பாக்க வந்தா, நீ என்ன செஞ்ச? என் அக்காவுக்கும், மச்சானுக்கும் டைவர்ஸ் ஆகற அளவுக்கு பேசி விட்டுட்ட. அதுக்கப்பறமா விக்கி எனக்கு‌ கால் பண்ணியும் நான் ஏன் வரலன்னா..”

திடுக்கிட்டவள் விக்கியை உறுத்து விழித்தாள்.

“எங்கக்கா என் மச்சான் யார் யார்கிட்ட எவ்வளவு கடன் வாங்கியிருக்காருன்னு லிஸ்ட் கேட்டா. அவர் வாயையே திறக்கலைன்னதும் சூசைட் பண்ணிக்கப்போறதா மெரட்டினா. நான் கூட அத சீரியஸா எடுத்துக்கல, அவ உண்மையாவே தூக்குப்போட சேலைய ஃபேன்ல கட்ற வரைக்கும். இந்த நேரத்துல அவங்கள விட்டுட்டு எப்படி என்னால உங்கிட்ட வர முடியும் சொல்லு? என்ன தான் விக்கி தப்பெல்லாம் உன் மேல இல்ல, அவர் மேல தான்னு அடிச்சி சொல்லிட்டாலும், அவசர கல்யாணத்துல எல்லாம் எனக்கு உடன்பாடில்ல உத்ரா. அது யோசிச்சு செய்ய வேண்டிய காரியம். என் நெலமைல நீ இருந்திருந்தாலும் இதான் பண்ணிருப்ப.” எனவும், அவனை ஏமாற்றாமல் ஆமோதித்தது அவளின் பார்வை.

“கடவுள் புண்ணியத்துல உன் வீட்டு சூழ்நிலையும், என் வீட்டு சூழ்நிலையும் இப்ப சரியாகிருச்சி . நீ நெனைக்கலாம், நான் உன் வீட்டுக்கு வந்ததுக்கு காரணம் பிரகாஷ் தான்னு. ஆனா, உண்ம அது இல்ல. என் அக்காவும் அனன்யா பெரியப்பாவும் பேசி நின்னு போன எங்க கல்யாணத்த மறுபடியும் நடத்துற முடிவுக்கு வந்திருக்காங்க. ஆனா எனக்கு அதுல உடன்பாடில்ல.

மொதமுற நானா யோசிச்சி ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்‌ உத்ரா. என் அக்காவுக்கு கண்டிப்பா அது புடிக்காது தான். ஆனா, இது என் வாழ்க்க விசயம். ஸோ, அவங்கள எதுத்தாவது என்‌ விருப்பத்த நிறைவேத்திக்கற முடிவுக்கு நான் வந்துட்டேன். உங்கிட்ட கேக்க தயக்கமா தான் இருக்கு. ஆனா, கேக்காம‌ விட முடியாது. உனக்கு இப்பவும் என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா உத்ரா?” எனவும், சிலை போல் நின்றவளால் அவனது இந்த மாற்றத்தை நம்பவே முடியவில்லை.

விக்கிக்கு அவனின் காலம் கடந்த ஞானயோதயம் வெறுப்பாக இருந்தது. அவன் குறுக்கேப் புகுந்து உதய்கிருஷ்ணாவை தன் வார்த்தை வாளால் வெட்டி விளாசும் முன், இவ்வளவு நேரம் நடப்பதை இயந்திரம் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பானுமதி முந்திக்கொண்டார்.

“நீங்க இப்ப கல்யாணத்துக்கு சம்மதம் கேக்குறது என் பொண்ணுக்கிட்ட மட்டும் இல்ல தம்பி. அவரோட பொண்டாட்டிக்கிட்டயும் தான்” என்றவரின் சுட்டுவிரல் விக்கியை சுட்டியது.

உதய்கிருஷ்ணா அதிர்ச்சியில் நம்ப முடியாமல் உத்ராவைப் பார்த்தான். கழுத்தில்‌ தாலி போல் கூட எதுவும் தென்படவில்லையே எனக் குழம்பினான்.

உச்சபட்ச கோபத்திலிருந்த விக்கி, “ஆமா இப்ப நீ உதிய கல்யாணம் பண்ணிக்கனும்னா அவ சம்மதம் மட்டும் இல்ல, அவ புருஷனான என் சம்மதமும் அவசியம்” என்றான் நெஞ்சை நிமிர்த்தி.

தன் அன்னையின் பேச்சில் திணறிப்போன உத்ரா விக்கியின் பேச்சில் எரிச்சலடைந்தாள்.


கலைடாஸ்கோப் திரும்பும்..​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு ஃபேஸ்புக்கில் தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

நாவலாசிரியர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 24


உதய்கிருஷ்ணா பானுமதி, விக்கி என‌ இருவர் கூறுவதையும் நம்ப முடியாமல் பார்த்தான்.

பானுமதி‌ வேறுவழியின்றி மகளின் காலர் டாப்பிற்குள் கிடந்த தாலிக்கயிற்றை வெளியே இழுத்துப் போட, அவனது மனம் கண்ணாடியாய் நொறுங்கியது.

உத்ரா உதய்கிருஷ்ணாவின் பரிதாபநிலையைக் கண்டு அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், “இவ்ளோ நாள் அந்த உண்மைய மறச்சதுக்கு சாரிம்மா. விக்கி என் கழுத்துல தாலி கட்டவே இல்ல. அவ‌ன் கட்ட வந்தத நான் தடுத்து நிறுத்திட்டே‌ன். ‌இப்ப என் கழுத்துல கெடக்குறது நானா கட்டிக்கிட்ட தாலி.” என தலை வழியே கழற்றவும், பளாரென அவளின் கன்னத்திலொரு அறைவிட்டார் பானுமதி.

தாலி அவள் விரலிடுக்கில் தொங்கிக்கொண்டிருந்தது. தன் அன்னையிடமிருந்து இப்படியொரு எதிர்வினையை எதிர்பாராததால் விக்கித்து நின்றாள்.

“அய்யோ இறைவா! இந்தக் கொடுமையெல்லாம் கேட்ட பின்னாடியுமா என் ஒடம்புல உயிர் தங்கனும்? இப்பவே பூமி மாதா என்ன உள்ள இழுத்துக்க மாட்டாளா? லயா என்ன வந்து கொஞ்சம் புடிச்சிக்கோடி. எனக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு” என்று தன் மார்பை பிடித்தவரை,

'நடிகையர் திலகமெல்லாம் தோத்தாங்க' என்று பொருமிக்கொண்டே நிதானமாக வந்து தாங்கினாள் மகள்.

அப்படியே அவரை‌ கைத்தாங்கலாக நடத்திச்சென்று சோபாவில் உட்கார வைத்ததும் உதய்கிருஷ்ணா நிமிர்வுடன் கேட்டான்.

“அதான் தாலிய விக்கி கட்டலனு உத்ரா சொல்றாளே. இனியாவது‌ நானும் அவளும் கல்யாணம் பண்ணிக்கலாமா அத்த?” எனவும், பானுமதி சீறினார்.

“என் பொண்ணப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும் தம்பி?”

“இதுக்கு மேலயும் தெரிஞ்சுக்க எதுவும் இருக்குறதா எனக்கு தோணல.” முற்றுப்புள்ளி வைத்தா‌ன்.

“இல்ல இருக்கு. இதுவரைக்கும் அவ சொந்தக்கதையையும், சோகக்கதையையும் தான கேட்டிருப்பீங்க? அவ‌‌ வால்பாறைல இவரோட ஒரே ரூம்ல தங்கின கதையப் பத்திச் சொல்லி கேட்டிருக்க மாட்டீங்களே? நேத்து நைட் கூட ரெண்டுபேரும் புருஷன் பொண்டாட்டியா ஒரே ரூம்ல தான் தங்கினாங்க. அது‌ தெரியுமா உங்களுக்கு? இதெல்லாம் அவளுக்கு ஒரு பிரச்சனையே கெடையாது. உங்களுக்கெப்படி தம்பி?” என்றதும், உத்ராவை கேள்வி கேட்டது அவன் பார்வை.

“ம்மா நான் எந்தத் தப்பும் பண்ணிருக்க மாட்டே‌னு உங்களுக்கே நல்லா தெரியும். எதுக்காக அவர் மனசப் போட்டு கொழப்பிட்டு இருக்கீங்க? ஆனா,‌ ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது. எதயோ மனசுல வச்சிட்டு தான் நீங்களே உங்க‌ப் பொண்ண இப்படி அசிங்கப்படுத்திட்டு இருக்கீங்க.” என்று வேதனைப்பட்டாள்.

“நான் சொல்றது உண்ம தான உதி? இங்கப் பாருங்க தம்பி, இதுக்கு மேலயும் எம்பொண்ணு தான் உங்களுக்கு வேணும்னா நான் உங்க முடிவுல குறுக்க நிக்கப் போறதில்ல.”

அவர் முடிவாகச் சொன்னதும், உதய்கிருஷ்ணாவின் முகம் விழுந்தது. துடித்துப்போனாள் உத்ரா.

“ஏற்கனவே இன்னொருத்தன் கூட குடும்பம் நடத்தின பொண்ணுக்கு வாழ்க்க குடுக்குற அளவுக்கு என் மனசு பரந்து பட்டது கெடையாது உத்ரா. சாரி.” என்றவன் மனத்தாங்கலுடன்‌‌ வெளியேற, அவனின் பின்னேயே ஓடினாள்.

விக்கியோ பானுமதியின் அருகில் வந்து மண்டிப்போட்டு‌ அமர்ந்தான்.

மெதுவாக அவரின் வலக்கையை எடுத்து தனது இருகரங்களுக்குள்ளும் வைத்துக்கொண்டு, “ஆன்ட்டி நீங்க பண்றது ரொம்ப தப்பு. இவ்வளவு நாள் அவளுக்கு எப்படியாவது ஒரு கல்யாணம் நடந்துராதான்னு ஏங்கிட்டு நீங்களே அவ வாழ்க்கைக்கு குறுக்க நிக்கிறது சரியில்ல. இப்பவும் எனக்கு அந்த உதய்கிருஷ்ணாவப் புடிக்காது தான். அவன் மேல உள்ள கோபத்துல கொஞ்ச நேரம் முன்னாடி வர அவனுக்கு எதிரா பேசினேன் தான். ஆனா‌, உதி‌ பாவம். அவ சீக்கிரம் எதுக்கும் ஆசப்பட மாட்டா. இப்ப அவ மனசுப்பூரா அந்த உதய்கிருஷ்ணா ‌தான் இருக்கான். அவங்கள பிரிச்சிடாதீங்க, ப்ளீஸ்! காதல் தோல்வி ரொம்ப கொடுமையானது. அந்த சித்திரவதைய நம்ம உதியும் அனுபவிக்க வேணாம்.” என்று கெஞ்சிக்கேட்டுக் கொண்டான்.

பானுமதி அசரவில்லை.

தன் முயற்சியில் தோற்ற உத்ரா விரக்தியோடு வீட்டிற்குள் நுழைந்தாள். அவள் உடல் முழுவதும் சினத்தின் வெப்பம் பரவியிருந்தது.

“இவன மாப்பிள மாப்பிளனு தலைல தூக்கி வச்சிக் கொண்டாடுறீங்களே இவனால தைரியமா அவன் அம்மாக்கிட்ட நான் தான் அவங்க வீட்டு மருமகனு சொல்ல முடியுமாம்மா? இல்ல அந்தம்மா தான் என்ன ஆரத்தியெடுத்து வரவேற்குமா?”

“ஆமா வேணியம்மா உன்ன ஆரத்தியெடுத்து வரவேற்க மாட்டாங்க தான். ஆனா, ரஞ்சனி உன்ன நல்லா வரவேற்பாம்மா போ‌!”

“நீங்களும் இவன் பணம் காசப் பாத்து மயங்கிட்டீங்கல்ல? அருவருப்பா இருக்கு எனக்கு.”

“இருக்கும்! இருக்கும்! ஆமா வாசன் சார் எனக்கு கடவுள் மாதிரினு‌‌ அவர்‌ போட்டோவ நம்ம பூஜ ரூம்ல வச்சி தெனம் கும்பிடுறியே, எதுக்கு பண்ற? அவர் இந்த‌ வீட்ட உன் பேருக்கு எழுதிக் குடுத்ததுக்கா? இல்ல போன மாசம் வரைக்கும் நமக்கு படியளந்ததுக்கா?”

“ம்மா அவர் மேல எனக்கிருக்க நன்றியுணர்வ கொச்சப்படுத்தாதீங்க.”

“ஆங்! அதே நன்றியுணர்வுல தான் நானும் அவர் கடைசி ஆசைய நெறவேத்தச் சொல்றேன். எறக்கறதுக்கு முன்னாடி என் கையப் புடிச்சி தான‌ மனுஷன் கேட்டாரு? உங்கப் பொண்ண எம்பையனுக்கு கட்டிக் குடுப்பீங்களான்னு. நியாயமா நீதான்‌‌ அதுக்கு கடன்பட்டவ.

அந்த வேணியம்மாவக் காட்டி என் கையையும் வாயையும் கட்டிப் போட்டுட்ட. இப்ப அவர் தான் தெய்வமா மாறி உங்க ரெண்டுபேரையும் சேர்த்து வச்சிருக்காரு. அந்த‌ நல்ல ஆத்மாவுக்கு சாந்தியக் குடு உதி.”

“ம்மா இவன் ஒரு குடிகார‌ன், சோம்பேறி, சரியான ஒதவாக்கர. சட்டைய உரிக்கறதனால பல்லி பாம்பாகாதும்மா. நீங்க வாசன் சார் மாதிரியே இவன நெனைக்கிறீங்க.” என்ற உத்ராவின் கொந்தளிப்பில் விக்கியின் சுயமரியாதை சீண்டப்பட்டது.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
“மாப்பிளைய மரியாதையில்லாம பேசக்கூடாதுன்னு சொன்னா உன் மண்டைல ஏறாதா உதி?” இருமிக்கொண்டே கத்தினார் தாய்.

கவிலயா அவரின் நெஞ்சை நீவி விட, டைனிங் டேபிள் ஜாரிலிருந்த நீரை கிளாஸுக்கு மாற்றி அவருக்கு கொண்டுவந்து கொடுத்தான் விக்கி. உத்ரா அனைத்தையும் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தாள்.

“ஆன்ட்டி வீணா சண்ட போடாதீங்க. நாளைக்கு பத்தர மணிக்கு உங்கப்பொண்ண ரெடியா இருக்கச் சொல்லுங்க. ரிஜிஸ்டர் ஆஃபிஸ் வர போகனும். ஒரு வேலையிருக்கு.” என்று அறிவிப்பாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அவன் குரலில் தான் என்னவொரு ஆகிருதி!

செல்லும் அவனை ட்ராகனாக தீக்கக்கி எரிக்கப் பார்த்தன உத்ராவின் விழிகள். அதிர்ஷ்டவசமாக தப்பித்தான். அவன் சென்றதும் தனதறைக்குள் நுழைந்து படீரென கதவடைத்துக் கொண்டாள்.

லயா சென்று தட்டிப் பார்க்க, “விடு அவ ஒன்னும் சாக மாட்டா. நீ போய் எனக்கு ஒரு டீப் போட்டு எடுத்துட்டு வா” என்று அசராமல் சொன்னார் பானுமதி.

தன் முயற்சியை கைவிட்டு அவரருகில் வந்தவள், “அன்னைக்கு உண்மையாவே நீங்க கோமாவுக்கு‌ தான் போனீங்களா? இல்ல அதுவும் உங்க‌ பெர்ஃபாமன்ஸ்ல ஒன்னா?” என்று சந்தேகம் கேட்டாள்.

“எங்க அந்த தொடப்பக்கட்டய?” என்றவர் கைகளில் அது சிக்கும் முன் சமையலறைக்குள் புகுந்திருந்தாள்.

மறுபுறம் அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பிய விக்கி நேரே காவல்நிலையம் சென்றான்.

அங்கு‌ காவலதிகாரி தான் பிடித்து வைத்திருக்கும் நால்வரில்‌ ஒருவனான பிரகாஷைக் காண்பித்து, “இவந்தான்‌ இந்த கேங்குக்கு லீடர். இவன் சொல்லி தான் இவனுங்க உங்க ஆஃபிஸ அடிச்சு நொறுக்கியிருக்கானுங்க. கைரேகலாம் ஒத்துப்போகுது.” என்றதும், அவர்களை குத்துவதற்குப் பாய்ந்த தன் கை முஷ்டியை அடக்க சிரமப்பட்டான் விக்கி.

“ஏற்கனவே அந்தப் பெட்டிக்கட முருகேசன உள்ள‌த் தள்ளின எனக்கு உங்கள உள்ளத் தள்ள ரொம்ப நேரம் ஆகாது. ஆனா என் தகுதிக்கு உங்கக்கூட மோதுறதே அசிங்கம். அதுவுமில்லாம நாளைக்கு கல்யாணத்த வச்சிட்டு இன்னைக்கு எந்தக் கெட்டக்காரியத்தையும்‌‌ செய்யக்கூடாதுனு தான் உங்கள மன்னிச்சு விடுறேன். மறுபடியும் என் வழியில தலையிட்டீங்க‌ தலையே இருக்காது.” என்று அடிக்குரலில்‌ மிரட்டினான்.

“என்ன சார் சொல்றீங்க? இவங்கள அப்படியே விட்ரலாமா?”

காவல் ஆய்வாளர் நம்பாமல் வினவவும், “ஆமா, யோசிச்சு தான் சொல்றேன். இவங்கள விட்ரலாம்.” என்று அடுத்தபடியாக வேலை நடக்கும் தன்‌ அலுவலகத்திற்கு கிளம்பினான்.

ஆனால், அங்கு தச்சுவேலை, மின்சாதனங்கள் பொறுத்தும் வேலை என பரபரப்பாக நடந்து கொண்டிருந்ததால் எழுந்த‌ சத்தத்தை சகிக்க முடியாமல் தன் வீட்டிற்கு திரும்பினான்.

திடுதிப்பென்று வீட்டிற்கு வந்த மகனை அதிசயமாகப் பார்த்தார் வேணி. சற்று முன் வரை டிடெக்டிவ் ஏஜென்சியில் நடந்த எந்த களேபரங்கள் பற்றியும் தனக்கு தெரிவிக்காதது, தான் அலைபேசியில் முயன்றும் தன்னை புறக்கணித்தது என்று கடுங்கோபம் இருந்தது அவருக்கு.

ஆனால், அவனை நேரில் பார்த்ததும் முக்கியமாய் அவன் தோற்றத்தில் கோபமெல்லாம் மாயமானது. சிவக்காத கண்களும், தடித்த தாடி காணாமல் போனதுமே அவன் காதல் தோல்வியிலிருந்து மீண்டதை பறைசாற்றின தாய்க்கு.

அவன் தன்னறைக்குச் செல்ல மின்தூக்கியின் பொத்தானை அழுத்தப் போக, தடுத்தது அவர் குரல்.

“நியூஸ் பேப்பர் விசயமெல்லாம் சரி கட்டியாச்சு போல? பாத்தேன்.” என்று டீபாயிலிருந்த செய்தித்தாளைச் சுட்டினார்.

அவன் மதியாமல் மீண்டும் பொத்தானை அழுத்தப்போக, “இப்ப தான் கமிஷ்னர் கணபதி எனக்கு கால்‌ பண்ணாரு. அரெஸ்ட் பண்ண எல்லாரையும் ரிலீஸ் பண்ணச் சொல்லிட்டியாம். உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு?” என்று மீண்டும் தாய்வீடு திரும்பினார்‌.

“எனக்கு என்ன செய்யனும்? எப்படி செய்யனும்? எல்லாம் தெரியும். நீங்க தலையிடாதீங்க ப்ளீஸ்!”

“சரி அதுல நான் தலையிடல.”

ஆச்சரியம் காட்டியது அவன் முகம். அவர் நீடிக்க விடவில்லை.

“ஆனா உன்ன இதுக்கு மேலயும் வெட்டியா சுத்த அனுமதிக்க முடியாது விக்கி. ஒன்னு நீ ஏற்கனவே பாத்த சாஃப்ட்வேர் கம்பெனிய டேக்கோவர் பண்ணனும், இல்ல நம்ம சோப்பு கம்பெனி பொறுப்ப எடுத்துக்கனும். ராசியானதுடா. அதுக்கு முன்னாடி‌ இன்னொரு முக்கியமான பொறுப்ப நீ ஏத்துக்கனும்.”

“என்ன அந்த முக்கியமான பருப்பு?”

“நீ கல்யாணம்‌ செஞ்சுக்கனும்டா. அதான் வாசனோட கடைசி ஆசையும்.”

“கல்யாணம் தான? பண்ணிட்டாப்போச்சு.”

“உண்மையாவா சொல்ற?”

“உங்க மேல சத்தியமா”

முகம் பூரிக்க, “இப்பவே‌ நான்‌ உனக்கு பொண்ணு பாக்குற வேலைய ஆரம்பிக்கறேன் விக்கி.” என்று மகிழ்ச்சியில்‌ துள்ளினார் வேணி.

“உங்க‌ ஆசைய ஏன் கெடுப்பானேன். நல்லாப் பாருங்க.”

அவன்‌‌‌‌ மின்தூக்கியில்‌ தனதறைக்குச் சென்றதும் திடீரென ஒரு‌‌‌ சந்தேகம் வந்தது வேணிக்கு.

அவகாடோ ஜூஸ் எடுத்து வந்த பணிப்பெண் பாக்கியத்திடம், “ஏய்! என் கையக் கிள்ளுடி” என்றார்.

அவளோ இது தான் சமயம் என்று நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.

அவர் அலறிய‌ சத்தம் விக்கியின் அறை வரை கேட்டது.



கலைடாஸ்கோப் திரும்பும்…
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom