- Messages
- 845
- Reaction score
- 1,132
- Points
- 93
அவன் பேசியதில் யாருக்கும் தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. பின், அவனே விளக்கினான்.
“எனக்கு ஏதோ ஒரு கம்பெனிக்கு அப்ளை பண்ண சொல்லி தான் மெயில் ஐடி அனுப்புனாங்கன்னு பாத்தா, அது இவங்க கம்பெனியோட டை-அப் வச்சிருக்க கம்பெனி தாம்மா. இன்னைக்கு அங்கப் போயிருந்தப்ப தான் இவர் சிஇஓ-னே எனக்கு தெரிஞ்சது.” என்று ஏகத்திற்கும் உணர்ச்சி வசப்பட்டான்.
உத்ரா அவனை பற்றிய குழப்பத்தில் தலையைப் பிடிக்க, “ஆன்ட்டி இன்னைக்கு நான் இங்கயே தங்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். அதுல உங்களுக்கு அப்ஜக்ஷன் எதுவும் இல்லயே?” என்று அவளின் தோளில் கை போட்டான்.
பானுமதி புத்துணர்ச்சி பெற்றவராக, “இது உங்க வீடு மாப்பிள. இங்க நீங்க தங்க யாருக்கிட்ட பெர்மிசன் கேக்கனும்? லயா, அக்கா ரூம மாப்பிளைக்கு கொஞ்சம் வசதியா ஒதுங்க வச்சுக் குடும்மா. அப்படியே நீ, நான், அமிகா மூணு பேரும் கவின் ரூம்ல தங்குறதுக்கான ஏற்பாட்ட கவனி” என்று அடுக்கடுக்காக வேலைகளை ஏவினார்.
உத்ரா அவனை முறைத்தபோது காதருகே குனிந்து கிசுகிசுத்தான்.
“நீதான என் வைஃப் அப்படி இப்படினு மூடேத்துன? அதான் இங்கயே தங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
தோளைச் சுற்றியிருந்த அவன் கையை தட்டிவிட்டவளோ, “அய்யா சாமி! தெரியாம உணர்ச்சி வசப்பட்டு சொல்லிட்டேன். நான் ஒரு பைத்தியம். அப்படினு நெனச்சிக்கிட்டு தயவுசெஞ்சு இங்கயிருந்து கெளம்பு.” என்று கைக்கூப்பினாள்.
அமிகாவோ உத்ராவின் அவஸ்தை புரியாமல் உற்சாகமாக மிழற்றினாள்.
“இங்கயே இரு விக்கி. இன்னைக்கு நைட் உதிக்கு பெர்த்டே. லயா உதிக்கு கேக் செஞ்சத நான் பாத்தேன். அவ நைட்டு தான் கட் பண்ணனும் சொல்லிட்டா. நீயும் இருந்தா உனக்கும் கேக் கெடைக்கும். அய்யயோ! உதி நான் சொன்னத நீ கேக்கல சரியா?” என்றாள்.
எங்கே கவிலயா தன்னை திட்டிவிடுவாளோ எனப் பயந்தாள்.
“அம்மு சித்தப்பாவ இனிமே பேர் சொல்லி கூப்டக்கூடாதுனு முன்னாடியே உன்கிட்ட சொன்னேனா இல்லையா? பெரியவங்கக்கிட்ட மரியாதையா பேசனும்டா கண்ணா.”
கனிவுடன் எடுத்துக் கூறிய பாட்டிக்கு தொலைக்காட்சியைப் பார்த்தபடியே தன் இரட்டை வால் குடுமியாட சரியென்றாள்.
விக்கியோ இன்னும் குதூகலமானான்.
“அப்போ இன்னைக்கு இங்கயே டேரா போட்ர வேண்டியது தான்” என்றவன் தன் கைகளை மேலே உயர்த்தி நெட்டி முறிக்க, செய்வதறியாமல் பல்லைக் கடித்தாள் உத்ரா.
இரவு உணவான சப்பாத்தியை கவினும், கவிலயாவும் சண்டைப் போட்டுக்கொண்டே வரவேற்பறையில் இருப்போருக்கு சுட்டு எடுத்து வர, “எனக்கு தான் இந்த சப்பாத்தி! எனக்கு தான் இந்த சப்பாத்தி!” என்று அடிபிடியாக பறித்து உண்டார்கள் அமிகாவும், விக்கியும்.
பானுமதிக்கோ விக்கி அமிகாவுடன் சிறுபிள்ளையாக மாறியது கண்டு மனம் நிறைந்துபோனது. ஆனாலும், அவனின் அன்னை வேணியை நினைத்து பயப்படாமல் இல்லை.
உத்ராவுக்கோ அவனின் இருப்பு பெரிய தலைவலியானது.
“ஹே! சாப்டுறப்ப என்ன வெளையாட்டு?” என்று அமிகாவை அதட்டியவள் விக்கிக்கும் சேர்த்தே பார்வையால் குட்டு வைத்தாள்.
ஆனால், அவன் அடங்கினால் தானே? மேலும் மேலும் குறும்புத்தனம் செய்து அவளை கதறவிட்டபடியே இருந்தான். அதில் ஒருவரையும் தூங்கச் செல்ல விடவில்லை. குலுக்குச்சீட்டு விளையாடுவது, டம் சாரட் விளையாடுவது என்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தான்.
சிறிதுநேரம் ஒதுங்கியிருந்த உத்ராவும் அவர்களுடன் கலந்துகொண்டு சிறுபிள்ளை போல் ஜெயிப்பதற்காக மல்லுக்கட்டினாள்.
கவிலயாவின் அலைபேசியில் பன்னிரண்டு மணி அலாரம் அடிக்கும் வரை நேரம்போனதே தெரியாமல் வயிறு வலிக்கும்படியாக சிரித்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.
மறுநாள் துவங்கியதுமே ஒவ்வொருவரும் உத்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல, நன்றி கூறி மகிழ்ந்தாள். ஆனால், அவளின் அந்த மகிழ்ச்சியை அதிர்ச்சியால் நிரப்ப உதய்கிருஷ்ணா அவளுக்கு வாட்சப்பில் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தான்.
அதைப் பார்த்ததும் அவனுக்கெப்படி தன் பிறந்தநாள் தெரியும் என்று யோசித்தவள் மறுகணமே தாங்கள் வாட்சப்பில் அனுப்பிய ஜாதகத்தின் நினைவு வந்து சமாதானமடைந்தாள். ஏனோ அவனுக்கு நன்றி சொல்ல அவள் மனம் ஒப்பவில்லை. அலைபேசியை அணைத்து பக்கத்தில் வைத்தாள்.
வாழ்த்துக்கூறிய கையோடு சமையலறை சென்ற கவிலயா குளிர்சாதனப்பெட்டியிலிருந்து ஒரு கிலோ ரசமலாய் கேக்கை தூக்கிக்கொண்டு வர, “ஐ கேக்கு! கேக்கு!” என்று சந்தோசக் கூச்சலிட்டாள் அமிகா.
அனைவரும் சம்மணம் போட்டபடி தரையில் வட்டமாக அமர்ந்திருக்க, நடுவில் கேக்கை கொண்டு வந்து வைத்தவள் மெழுகுவர்த்திகளை ஏற்றியவுடன் மின்விளக்கை அணைத்தாள்.
அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துபாடல் பாட, மனதில் ‘எல்லாரும் நல்லாருக்கனும்’ என்று வேண்டிக்கொண்டே மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்தாள் உத்ரா. ஆனால், அணைந்த மெழுகுவர்த்திகள் மீண்டும் உயிர்பெற்று அவளை சோதித்தன. அவள் மீண்டும் மீண்டும் ஊதி அணைக்க, உயிர்பெற்றது அது.
உத்ரா அதனிடம் படும் பாட்டைக் கண்டு கவினும், கவிலயாவும் சத்தம் போட்டு சிரித்தனர். மெழுகுவர்த்தியிலுள்ள சூட்சமம் விளங்கி மற்றவர்களும் சேர்ந்து கொண்டனர்.
அத்துடனே மின்விளக்கும் உயிர்பெற, கேக்கை வெட்டி முதல் துண்டை விக்கியின் மடியிலிருக்கும் அமிகாவுக்கு ஊட்டிவிட்டு தன் அன்னையிடம் தாவினாள்.
அவர், “மாப்பிளைக்கு மொதல்ல குடு” என்று விக்கியை கைக்காட்டினார்.
அவளும் வேறு வழியின்றி அவனுக்கு கேக்கை ஊட்டி விட்டாள்.
அதில் ஒரு துண்டை எடுத்து தானும் அவளுக்கு ஊட்டிவிட்டவன், “பி ஹேப்பி ஆல்வேஸ்” என்று அவள்புறம் சரிந்து தோளோடு அணைத்து விடுவித்தான்.
“உன்ன என் வாழ்க்கைல வச்சிக்கிட்டா? ம்க்கும்!” என்று நக்கலடித்தாள் உத்ரா.
அவன் கண்டுகொள்ளவில்லை.
பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்தக் கையோடு அனைவரின் வாயிலும் கொட்டாவி வரத் தொடங்க, பானுமதியின் வற்புறுத்தலில் விக்கியோடு தனதறைக்குள் நுழைந்தாள் உத்ரா.
விக்கிக்கோ அவளுடன் அவ்வறையில் தனியே இருப்பதை விட மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடி, சண்டைப்போட்டு, கேலிப்பேசி தூங்கவே ஆசை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் பானுமதி அதற்கு அனுமதிக்கமாட்டார் என்பதால் ஏமாற்றத்துடன் படுக்கையில் அவளருகில் வந்து உட்கார்ந்தான்.
கவினின் அறையில் அமிகா, “ஏன் பாட்டி அவங்க ரெண்டு பேர் மட்டும் அந்த ரூம்ல இருக்காங்க? அங்க தான் ஏசி இருக்கும். எனக்கும் அங்க போகனும்.” என்று சிணுங்கினாள்.
“உதிக்கு கல்யாணம் ஆகிடுச்சில்ல? இன்னைக்கு ஒருநாள் மட்டும் நாமல்லாம் இங்க தான் தூங்கனும் அம்மு. நாளைக்கு கண்டிப்பா அங்கப்போகலாம்.” என்று சிறியவளை சமாதானம் செய்ய முயன்றார்.
அவள் அதற்கெல்லாம் அடங்குகிற ஆளா நானென்று, “உதி கட்டிக்கிட்ட மாதிரி நாம எல்லாரும் கழுத்துல அந்த யெல்லோவ் கலர் ரோப்ப கட்டிக்கிட்டா நாமளும் இப்ப அந்த ரூமுக்குப் போய் தூங்கலாம் இல்ல பாட்டி?” என்றொரு குண்டைத் தூக்கிப்போடவும், கவிலயாவும் கவினும் பேயறைந்தாற்போல் பானுமதியைப் பார்த்தனர்.
கலைடாஸ்கோப் திரும்பும்…