Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL கிராமத்து மண் வாசனை - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited by a moderator:

சத்தியபானு

New member
Vannangal Writer
Messages
5
Reaction score
3
Points
3
அத்தியாயம் 1

அழகிய இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான கிராமம்… எங்கு பார்த்தாலும் அங்கங்கே கொஞ்சும் பறவைகளும் சிறு பிராணிகளும் கிச் கிச் என்ற சத்துடன் இதமான அதிகாலை பொழுதில் கேட்பதற்கே இன்பமாக இருக்கும்……

ஆலமரத்தின் அழகிய சிறுக்கூட்டை காகா தனக்கான அரண்மனையாய் கட்டி அதான் குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது….. தினமும் அந்த குஞ்சுகளுக்கு ஊரைச்சுற்றி உள்ள நெல்மணிகளை தான் நாட்டிற்கு கொண்டு வந்து தன் பிஞ்சு குஞ்சுகள் பசியால் அதன் சிறு வாயை பிளக்க உடனே அதான் தாய் அது வாயிலுள்ள நெல்மணிகளை ஊட்டும் இது போன்ற அற்புத அதிசாயங்கள் கிராமங்களில் மட்டுமே நிகழும்…..

அதற்கு கொஞ்சும் அருகாமையில் சிட்டுக்குருவிகள் அதன் மெல்லிய குரலில் இசை அமைக்க அதற்கு சற்று தூரத்தில் சேவல் அதிகாலையில் கொக்கரக்கோ கோ என்ற சத்தத்தை எழுப்ப ஆனந்தமோ ஆனந்தம்…..

ஊரைச் சுற்றிலும் நெல்மணிகள் அங்கங்கே அதற்கேற்ப புன்னைகள் முகத்துடன் பசுமையாக பூத்துச் சிரிக்கின்றனர்…..

வாழை மரங்கள் தோட்டத்தில் வாழை இலைகள் அழகாய் வளைந்து வளைந்த காட்சியளிக்கும் அதில் வாழைக்காய் வளர்ந்து தொங்கும் அதன் மேல் வாழைப்பழமா? காய்யா? என்று புரியதா சிற்றே எறும்புகள் மொய்க்கும்….

வாழைமரத்திற்கு அருகருகே சின்ன சின்ன வாழைத்தார்கள் வெடித்து வளரும்……அழகிய பூஞ்சோலையாய் வண்ணமாக காட்சியளிக்கும்…..

ஊருக்கு தெற்கு புரமாய் வளர்ந்து உயர்ந்த தென்னைமரங்கள் அழகிய வான் உயர்ந்த பார்க்கும் போது மேலே தேங்காய்கள் கொத்து கொத்தாய் தொங்கும்…..

அதற்கு சற்று கீழே கீரைப் பத்திகள் வரிசை வரிசையாக உருவாக்கப்பட்டிருக்கும்……

அதில் சிறு கீரை,பொன்னங்கன்னி கீரை, வல்லாரை கீரை என்று நிறைய கீரை வகைகள் போடப்பட்டிருக்கும்…..எங்கும் இயற்கை மணம் வீசும்…..

நாட்டின் சிறப்பை உணர்த்தும் பனை மரம் வழி எங்கும் ஓங்கி உயர்ந்து நிற்கும்…..அதில் எத்தனை எத்தனை நுங்குகள் கொத்து கொத்தாய் தொங்குகிறது…….பார்த்தலே பரவசமாய் காட்சியளிக்கிறதே…..எத்தனை இனிமை வழி எங்கிலும் காண காண கண்ணுக்கு பேரின்பம்…..

ஊருக்கு நடுவில் ஒரு மாரியம்மன் கோவில் சிறப்புறக் காட்சிக் கொடுக்கும்……அந்த ஊரைக் காத்து அருள்வது போல மக்களின் எண்ணங்களில் நிறைந்து நிற்கும்……

ஊரின் ஓரத்தில் அழகிய நீரோடையாய் இயற்கையின் பரிமாணமாய் மனத்திற்கு இதமான குளிர்ச்சியான காற்று வீசும் போது அதில் கிடைக்கும் நிம்மதி வேறெங்கும் கிடைக்காது…..

அந்த ஆற்றில் சின்ன சின்ன மீன் குஞ்சுகள் அங்கங்கே தாவிக் குதித்து குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தன…. அதற்குள் இன்னும் ஆழமாக சென்று பார்த்தால் கடற்பாசிகள் ஆங்காங்கே மிதந்துக் கொண்டிருந்தன…..

எவ்வளவு அழகான காட்சி பிம்பமான தோற்றம் எவ்வளவு எதா்த்தங்கள் நிறைந்த நம் பூமி தெரியுமா?

மனிதர்கள் வளமான வாழ்க்கை வாழ கிராமத்தை நோக்கி பயணிக்கின்றனர் என்பதில் பெருமிதம் கொள்ளலாம்…..

ஊருக்கு மேற்கு புறமாக ஓட்டு வீடு ஒன்று உள்ளது அந்த வீட்டை அனைவரும் மேற்புரத்தான் வீடு என்று அன்போடு அழைப்பார்…..

அவன் ஒரு மிகப்பெரிய விவசாயி அவனுக்கு பிடித்தமான ஒன்று தனது கிராமத்தை தினமும் சுற்றி பார்ப்பது மட்டும் தான்…..அவனுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தது…

பிறகு அவனுடைய வீட்டில் வயதான அப்பாவுச் ,அம்மாவும் இருந்தனா்…அவர்கள் ஒரு வீட்டிலே வாழ்ந்தனர்….

அனைவருக்குமே விருப்பமான விவசாயத்தை கவனித்து வாழ்ந்தனா்…எளிமையான வாழ்க்கை முறை, இயற்கையான உணவு முறைகள் என்று மிகவும் பழமையான வாழக்கை முறையிலே வாழ்ந்தனர்…

வீட்டை சுற்றிலும் பல வகையான தென்னை, பனை, புளிய மரம், மா மரம் என்று நிறைய மரங்களை நட்டு வளர்த்துக் கொண்டு வந்தனர்….

தன் வீட்டில் கோழி,ஆடு,மாடுகளை வளர்த்து வந்தனர்…..

அதிகாலையில் எழுந்தவுடன் வீட்டு வேலைகளை பார்வதி பார்த்து கொண்டிருந்தாள்……எப்பொழுது அங்கு சூரிய ஒளி மெதுவாய் எழும்பி நிற்க இதமான தென்றல் காற்று வீச….

பறவைகள் ஆங்காங்கே கிச் கிச் என்று இசையமைக்க மெதுவாய் தென்னம் கீற்று காற்றிற்கு அசைந்தட ஆலமர இலைகள் சடச்சட வென அசைந்து ஆட …... சற்று காற்று வேகமாகவே வீச தொடங்கியது

வீட்டுக்கு அருகில் கோழிகள் கொக் கொக் என மேய்ந்தன….பார்வதி கோழிகளுக்கு இரைகளை அள்ளி வீசினாள்….. அதுவும் மெதுவாக இரையை ஒன்று ஒன்றாக மெதுவாய் கொத்தி தின்றது…..

பிறகு ஆடுகளுக்கு வடி நீரை வைத்து குடிக்க வைத்தாள் பிறகு நேற்று அறுத்து வைத்த புல்களை மெதுவாக அள்ளி வைத்தால் அதுவும் மெதுவாக அசைப் போட ஆரம்பித்தது….

மாடு தெழுவத்திற்கு சென்று மாடுகளுக்கு வைக்கோலை அள்ளி வைத்தால் அதுவும் மெதுவாக அசைப் போட ஆரம்பித்தது…..

பிறகு வீட்டைச் சுற்றிலும் சுத்தமாக கூட்டி சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்….

அதன் பின் சமையல் கட்டிற்கு சென்று சமையல் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்…..

பார்வதி ஒரு கையில் நீச்ச தண்ணீர் (சோற்று வடிநீர்) எடுத்து வந்து தன் கணவருக்குக் கொடுத்தாள்….. மாரிமுத்து எழுந்து முகத்தையும்,கை,கால்களையும் நன்றாக கழுவினான்….

பின்னர் அந்த நீரை வாங்கிக் குடித்தான்….அதன் வயலுக்கு செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்தான்…. அவனது இரு குழந்தைகளும் கண் விழிக்க அம்மா…….அம்மா….. கூறிப்படியே எழுந்து உட்கார்ந்து பின்னர் பார்வதி இரு குழந்தைகளுக்கும் முகத்தை கழுவி விட்டாள்….

பின்னர் பாலைக் காய்ச்சி தனது இரு குழந்தைகளுக்கும் கொடுத்தாள்…..

அவர்கள் இருவரும் வாங்கி குடித்தனா்…..

மாரிமுத்து வயலுக்கு இருவரும் வருங்கிளா?

இல்ல அப்பா அம்மா கூட வரேன் அப்பா நீங்கள் முதலா போக்க அப்பா…. ம்ம்ம் நான் பேசிக்கிட்டே இருந்த நேரம் தான் போகும்நான் கிளம்புறேன் கவியா,சிந்தியா நீங்க அம்மா கூட வாங்க...

மாரிமுத்து வழியெங்கும் இருபுறமும் நெற்கதிர்கள் விளைந்து தொங்கின….அதை பார்த்து கொண்டே நடந்தான்….

கையில் மாடுகள் இரண்டையும் பிடித்து நடந்து சென்றார்….வயலுக்கு சென்று அங்குள்ள ஒரு மரத்தில் மாட்டை கட்டி விட்டு சென்று வயலுக்கு தேவையா சிறு சிறு தேவையான தண்ணீர் பயச்சுவது என்று செய்ய தொடங்கினார்…..

பின்னர் மோட்டார் டாக் டாக் என்ற சத்ததுடன் நின்றது…. பிறகு அந்த மோட்டாரை கழற்றி வேலைச் செய்தார்…

அவரால் அந்த வேலையை சரிவரச் செய்ய முடியவில்லை….. அதை வைத்து விட்டு பின்னால் இருக்கும் காய்கறி தோட்டத்திற்கு சென்று களையை எடுக்க ஆரம்பித்தார்….

பார்வதி வீட்டு வேலைகளை முடித்தால் பின்பு குழந்தைகளுக்கு சாப்பாட்டை பரிமாறினாள்…. கவியாவுக்கும்,சிந்தியாவிற்கும் தலையை வாரி விட்டாள்…..பிறகு சோத்துக் கூடையில் சாப்பாட்டையும்,குழம்பையும்,காய்யையும் கட்டி வயலுக்கு புறப்பட்டாள்…..

காவியும்,சிந்தியாவும் ஆடுகளை கையில் பிடித்துக் கொண்டு புறப்பட்டார்கள்…வழியெங்கும் அழகான இயற்கைக் காட்சிகள் குழந்தைகள் இருவருமே துள்ளிக் குதித்து புறப்பட்டனர்…..

பார்வதி இருவருமே பார்த்து மெதுவாக நடந்து போக கீழா எங்கேயும் விழுப் போறிங்க….பார்த்து பாத்திரமா? போங்க பாப்பா…..

குழந்தைகள் இருவருமே…

அம்மா இங்கே வா வா......

ஆசை முத்தம் தா தா…..

என்று பாடிய படியே வழியெங்கும் அழகான இயற்கை காற்றை வாங்கிக் கொண்டு நடந்தனர்……

பார்வதி மோட்டார் செட் போட்ட தாழ்வரத்திற்கு வந்து கூடையை வைத்தாள்…. பிறகு மோட்டார் கழற்றி கிடைப்பதை பார்த்து மனம் நொந்தால் மறுபடியும் பழுதாகி விட்டது….

என்று புலம்பிய படியே ஆடுகளின் கழுத்தில் உள்ள கயிற்றை அவிழ்த்து விட்டு வயலுக்கு கொஞ்சம் தள்ளி உள்ள தரிசு நிலத்தில் மேய்ய விட்டாள்….

ஆடுகள் துள்ளிக் குதித்து ஓடின…..

மாரிமுத்து பார்வதியிடம் வந்தான்….பார்வதி மாரிமுத்துவிடம் புலம்ப ஆரம்பித்தாள்…..நாம் இருக்குற கஷ்டத்திலே இந்த மோட்டார் வேற அடிக்கடி பழுதாகிட்டே இருக்கேங்க என்று மனகஷ்டமா இருக்குங்க நமக்கு வர கஷ்டத்திலா இதுவும் ஒன்னு…..கவலைப்படாத பார்வதி சரி செய்வோம்….

எப்படி சரி செய்வீங்க எனக்கு தெரியதா வீட்டு சூழ்நிலையைப் பற்றி …..அப்புறம் என்ன எவ்வளவு பிரச்னை வந்தாலும் நாம் தான் அதை சரி செய்யனும்….

விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டுமலா? சரி நான் ஊருக்குள் போய் ரங்கசாமி அண்ணக்கிட்ட இரண்டாயிரம் ரூபாய் பண கடனான வாங்கிட்டு வரேன்…..நீ வயலா பார்த்துகோ பார்வதி….

அவர் பணம் கையிலா சும்மா கொடுக்கமட்டருங்க புரோ நோட்டு வாங்கிட்டு போங்க என்றாள் பார்வதி…..

சரி பார்வதி அப்படியே செய்கிறேன்….. என்று கூறி ஊருக்குள் நடந்தான்…..ரங்கசாமி வீட்டை நோக்கி நடந்தான்……

ரங்கசாமி அண்ணே ரங்கசாமி அண்ணே…….

அவரது மனைவி வெளியில் வந்து வா மாரிமுத்து வா இங்க வந்து உட்காரு என்று கூறினாள்….

அவர் குளிச்சுட்டு இருக்காரு நான் போய் வர சொல்ரேன் ….அது மாரிமுத்து வரட்டும் அம்மா நான் உட்கார்ந்து இருக்கேன் அம்மா….

உள்ளே போய் காபி போட்டு வந்து மாரிமுத்து கையில் கொடுத்து குடி மாரிமுத்து என்றாள்…. சற்று தயக்கத்துடன் வாங்கி வைத்தான்…. அந்த அம்மா எடுத்து குடி மாரிமுத்து என்றாள்….

பிறகு அந்த காபியை எடுத்து குடித்தான்…..பிறகு வாப்பா மாரிமுத்து வா என்றார்…..ரங்கசாமி உடனே நின்று வணக்கத்தை தெரிவித்தான் மாரிமுத்து….. பரவாயில்லை உட்காருப்பா மாரிமுத்து என்றார்…..

மனைவி,பிள்ளைகள் எல்லாம் நலமா இருக்கங்களா? மாரிமுத்து

அதற்கு ஏதோ இருக்கிறோம் அண்ணே…..என்னாச்சு மாரிமுத்து எதற்கு இப்படி பேச்சுறப்பா….

ஒரே கஷ்டமா இருக்குண்ணா….. என்னப்பா இப்படி சொல்றா?

ஆமா அண்ணா…விவசாயத்துலா நெல் போட்டு இருந்தேலா அண்ணே….அது என்னப்பா ஊருலா எல்லோட நெல்லும் நல்லா இருக்குதிண்ணு சொன்னங்கப்பா மாரிமுத்து…..

அது நல்ல தான் இருக்குது அண்ணே நெல் தேவையான தண்ணீர் விடமுலா அண்ணே ஆமாம் மாரிமுத்து உன் கிட்ட தான் மோட்டார் இருக்குதுலா மாரிமுத்து….

ஆமாம் அண்ணே அது இன்னைக்கு பழுதாகி விட்டது அண்ணா அது அடிக்கடி இப்படி தான் பழுதாகிக்கிட்டே இருக்குனே….

அதற்கு ரங்கசாமி கவலைப்படாதப்பா அதுலா ஏதாவது பிரச்சனை இருக்கும் அதை சரி செய்தால் சரியாகி விடும் மாரிமுத்து…..

ஆமாங்க அண்ணே.....என்று சற்று தளா்ந்த குரலில் அதற்கு இரண்டாயிரம் ரூபாய் பணம் இருந்தால் சரி செய்து விடலாம் அண்ணா……

அதற்கு இப்பொழுது இரண்டாயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகிறதா அண்ணே என்றான் மாரிமுத்து…..அதை கேட்பதற்கு எதுக்கு இந்த தயக்கம் நீ கேட்டால் கொடுக்க போய்கிறேன் மாரிமுத்து…..

நானோ வட்டி பணம் கொடுப்பவன் எதற்கு இந்த தயக்கம் நீ கேட்டால் நான் கொடுக்க போய்கிறேன்…..

எத்தனை பைசா வட்டி அண்ணே……எல்லோருக்கும் கொடுக்கிற மாதிரி தான் உனக்கும் கொடுக்கிறேன் இரண்டு பைசா வட்டி தான் மாரிமுத்து….

சரிங்க அண்ணே பணம் கொடுங்களா…. இருப்பா மாரிமுத்து புரோ நோட்டு வேணும் அதிலா எழுதி கையெழுத்து போட்டால் பணம் கொடுப்பேன்…வீட்டிற்குளா புரோ நோட்டு ஏதும் இருக்கு தான் பார்த்துடு வரேன்…..

அண்ணே சிரமமே வேண்டாம் நானே எழுதிக் கொண்டு வந்துள்ளேன்…..அப்படியா? ரொம்ப சந்தோஷம் மாரிமுத்து…..

இரு மாரிமுத்து உள்ள போய் பணம் எடுத்துட்டு வரேன் உட்காந்திருப்பா….

பிரேவை திறந்து இரண்டாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கிட்டு வெளியில் வந்தனர்….

மாரிமுத்து வட்டி எடுத்து விட்டு தரவா? எடுக்கமா தரவா?

வட்டி எடுக்கமா தாங்க அண்ணே…. சரிப்பா இந்த இரண்டாயிரம் ரூபாய் வைச்சுகோ மாரிமுத்து…. புன்னகை முகத்துடன் மாரிமுத்து வாங்கினான்….

பிறகு ரங்கசாமி நெல் அறுவடை முடிந்ததும் பணத்தை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் மாரிமுத்து….

அண்ணா உங்களா மறக்கவே மாட்டேன் அண்ணா வட்டியோட திருப்பிக் கொடுத்துரேன் அண்ணா நான் கஷ்டத்துலா இருக்கும் போது உதவி பண்ணதா மறக்க மட்டேன் அண்ணே…..

எதற்கு பெரிய வர்த்தையெல்லாம் சொல்லற மாரிமுத்து…..சரி நீ போய் முதலா மோட்டாரா சரி செய் சரியா?

சரிங்க அண்ணே போயிட்டு வரேன்…….

மெக்கானிக் கடையில் மோட்டார் பழுதாகி உள்ளது வந்து அதை சரி செய்யனும் ராமு கொஞ்சம் என் வயல் வரைக்கும் வாரிய ராமு…..

கொஞ்சம் பொறுங்க இந்த மோட்டார் பழுதுக்கு வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது…… இந்த மோட்டாரை பாதி வேலை முடிந்து விட்டது இன்னும் கொஞ்சம் வேலை தான் மிச்சம் இருக்கிறது இதையும் முடித்து விட்டு வருகிறேன்…..

இன்னைக்கு இந்த மோட்டார் வேண்ணும் உரிமையாளர் கேட்டிருக்காரு அண்ணே….. சரிப்பா ராமு வேலையை முடிச்சுடே போவோம் ராமு…..

அண்ணா இந்த நற்காலியில் உட்காருங்க….. நான் வேலையை முடிச்சுடு வரேன்…..

கொஞ்ச நேரத்தில் வேலையை முடித்து விட்டு ராமு… அண்ணா வாங்க வயலுக்கு போவோம் என்றான்.. சரி ராமு என்றான் மாரிமுத்து……

இருவரும் மோட்டார் வண்டியில் பேசிக் கொண்டே வயலுக்கு வந்தனர்…..பார்வதி களையை எடுத்துக்கொண்டு கொண்டிருந்தாள்…. குழந்தைகள் இருவருமே விளையாடிக் கொண்டிருந்தன……

ராமு வண்டியை நிறுத்தி விட்டு மோட்டார் இருக்கும் இடத்திற்கு சென்று மோட்டார் வேலைகளை செய்ய ஆரம்பித்தான்……. பிறகு அந்த மோட்டார் செய்ய சிலப் பொருட்கள் தேவைப்பட்டது….

அதை வாங்க வண்டியை எடுத்து ஊருக்குள் சென்று தேவையான பொருட்களை வாங்கி வந்தான்…..

மோட்டாரை சரி செய்ய ஆரம்பித்தான்…. வெகு நேரமானது பின்பு வேலை முடிந்தது.....மதியம் 2 மணியானது மாரிமுத்து ராமு சாப்பிட வா நீ காலை 11 மணிக்கு கடையிலிருந்து வயலுக்கு வந்த ராமு உனக்கும் சேர்த்து சாப்பாடு போட்டு வைக்கிறான் …

கையை கழுவிட்டு சாப்பிட வா ராமு…. அண்ணே வேண்டாம் வேண்டாம்….. வீட்டுலா போய் சாப்பிட்டுகிறேன்…..பக்கம் தானா வீட்டுலா போய்யோ சாப்பிடுறேன் அண்ணே…..

பரவயில்லப்பா வந்து கொஞ்சமா சாப்பிட்டு போ ராமு…. சரிங்க அண்ணே….. எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்….

பார்வதி அக்கா சாப்பாடு நல்ல இருந்துச்சுக்கா….காய்கறி எல்லாம் எங்கு வாங்குவீங்க…. அக்கா

ராமு இதெல்லாம் நாம் விட்டுத் தோட்டத்தில் உள்ள காய்கறிகள் தானப்பா…..அக்கா நல்லருக்குக்கா சந்தையில் வாங்கி தான் எங்க வீட்டுலா வைப்பங்க அக்கா ஏதோ மாதிரி இருக்கும் அக்கா…

எப்படியா? தினமும் எங்க வீட்டுலா கூட வந்து காய்கறி வாங்கியிட்டு போய் சமைச்சு பாருங்க அப்புறம் சொல்லு ராமு…..

சரிங்க அக்கா எப்படியே செய்கிறேன்….. ராமு மோட்டார் பழுதை சரிசெய்ய எவ்வளவு ரூபாய் ஆச்சுப்பா…..

அது வந்து இரண்டாயிரம் ரூபாய் ஆச்சு அண்ணா….. மோட்டார் வேலைக்கு பொருள் வாங்கியது 1,600 ரூபாய் எனக்கு 400 ரூபாய் சம்பளம் மொத்தம் சேர்த்து 2,000 ரூபாய் ஆச்சு அண்ணே….

சரி ராமு இந்த பணத்தை வாங்கிகோ….. சரிங்க அண்ணே வீட்டுக்கு கிளம்புறேன் அண்ணே…. ஒரு நாள் அம்மா அனுப்பி விடு காய்கறிகள் குடுத்து விடுறேன் ராமு…..

சரிங்க அண்ணே….போய்யிட்டு வரேன்….

பிறகு வயலில் உள்ள நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சினான்….. பார்வதி வயலில் உள்ள தென்னை மரத்திற்கு கீழே உள்ள தென்னை மட்டைகளை சேகரித்து வந்தாள்…. குழந்தைகள் இருவருமே மோட்டார் செட்டில் தூங்கினர்….

பார்வதி எல்லா தென்னை மட்டைகளையும் ஒன்றாக கட்டி வைத்தாள்….மாரிமுத்து வயலில் தண்ணீரை பாய்ச்சி முடித்தான்…..குழந்தைகள் இருவரையும் எழுப்பி விட்டு வீட்டிற்கு வாங்க போவேன் என்றான் மாரிமுத்து….

பிறகு மோட்டார் தண்ணீரில் பார்வதியும், குழந்தைகளும் குளித்தனா்.. மோட்டார் தண்ணீரில் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று….குழந்தைகள் இருவருமே குதுகலமாக குளித்தனர்….

பிறகு அப்படியே எல்லா வேலைகளையும் முடித்து விட்டு திரும்பினர்… வருகிற வழியில் ஒரே சந்தோஷ வெள்ளத்தில் குதித்து ஓடின குழந்தைகள் மாரிமுத்துவும்,பார்வதியும் மெதுவாக நடந்து போகங்க குழந்தைகளா என்றனர்….

அப்பா…அப்பா…..என்று சிந்தியா ஓடி வந்தாள்….ஏம்மா ஓடி வார யாரும் வாரங்க பாப்பா…..இல்லை அப்பா கிழக்கு மலை மேடு வருதுப்பா….. ஆமாம் பாப்பா

ஏன்? இந்த கிழக்கு மலை மேட்டிற்கு இரவு நேரத்தில் போகக் கூடாதுன்னு சொல்றங்க அப்பா…. ம்ம்ம் பாப்பா பகல் நேரத்தில் போகலாம் இந்த இடத்திற்கு இரவு நேரம் போகக் கூடாதுன்னு சொல்றங்க பாப்பா…..

ஏன்னப்பா அது முன்னாடி இருந்து வந்த நடைமுறை பாப்பா…. அதற்கு பார்வதி இது விஞ்ஞான நூற்றாண்டு இதுலையும் இது போன்ற நிகழ்வுகளை இன்னும் நம்புகிறாா்கள்…..

பார்வதி இதை பற்றி முழுசா உனக்கு தெரியாது அமைதி இரு…..

இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுக்கு முன்பு இருந்தா ஒரு பழக்கம் இதை அனைவருமே நம்புகிறாா்கள்…..

அது என்ன கதை கொஞ்சம் சொல்றிங்களா? அது எதற்கு உனக்கு உன் வேலையை பாரு பார்வதி….

எங்க ஏங்க கொஞ்சம் சொல்லுங்க கேட்கணும் போல இருக்குங்க…. சும்மா வரப்போறிய இல்லையா?

சிந்தியா அது என்ன கதை எனக்கும் கேட்கணும் ஆசையா இருக்குப்பா கொஞ்சம் சொல்லுங்கப்பா…..

இங்கபாரு உன்னை மாதிரியே உன் பெண்ணுடி….அதா கேட்கிறலா சொல்லுங்க……

ம்ம்ம் சொல்ரேன் கேளுங்க?


கமெண்ட்ஸ்
 

சத்தியபானு

New member
Vannangal Writer
Messages
5
Reaction score
3
Points
3
2

முன்னாடி காலத்தில் இருந்தால் பெரியவர்கள் எல்லாம் இந்த கிழக்கு மலை மேடு பின்னாடி ஒரு கருப்புசாமி கோவில் இருக்கும் அதா கும்பிட்டு பின்னர் ஊருக்குள் இருக்கும் மாாியம்மனை கும்பிடுவார்கள்…..

அது பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்தது…..அப்படி ஒரு நாள் சாமி கும்பிட ஊர் தலைவர் அனைவரும் ஒன்று கூடி முடிவு எடுத்தனர்…. ஊரில் உள்ள அனைவரும் காப்பு கட்ட தொடங்கினார்….

அப்போது கடுமையான மழை பெய்ய ஆரம்பித்தது….ஊர் மக்கள் அனைவரும் சாமி கும்பிட முடிவு எடுத்தால் வருவருடம் பெய்யும் மழை என்று அமைதியாக இருந்தனர்….

ஆனால் மழை தொடர்ந்து 5 நாட்கள் தீவிர இருந்தால் ஊருக்கு6 வெள்ளம் வர ஆரம்பித்தது…..அரசாங்கமும் வானொலி அனைத்து பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரித்தனார்…..

அனைவருமே வீட்டுக்குள்ளே இருந்தனர்….கடுமையான இடி மின்னலுடன் கூடிய மழை விடாது கொட்டி தீர்த்தது….

அதனால் ஊரே வெள்ளக்காடாக காட்சி அளித்தது….அனைவருமே வெள்ளத்தால் மிகவும் கஷ்டப்பட்டனார்…. ஆனால் அரசாங்கமானது அனைவருக்கும் உணவுகளை வழங்கியது……அனைவரும் அதை வாங்கி உண்டனர்……

ஊரிலுள்ள அனைவருமே ஊருக்கு பொதுவாக சாவடியில் போய் தாங்கியிருந்தனார்…..

அரசாங்கதிடமிருந்து பொது அறிவிப்பு வரும் வரை அனைவரும் ஒரே இடத்தில் இருப்போம் என்று ஊர் தலைவர் கூறினார்….

அனைவருமே சாிங்க ஐயா அப்படியே செய்வோம் ஐயா…..ஒரே இடத்திலே சமைத்து சாப்பிடுவோம், அதோ இடத்திலும் தூங்கலாம்…..மக்கள் அனைவரும் சரிங்க ஐயா என்று குரல் கொடுத்தனர்…..

மழையும் ஒரு சில தினங்களில் நின்றது….பிறகு மழையில் சேதமான இடத்தையெல்லாம் சுத்தம் செய்ய ஆரம்பித்தனர்….. பிறகு அரசும் சில உதவிகளை மக்களுக்கு செய்தனர்…..

பிறகு கொஞ்ச கொஞ்சமாக எல்லா வேலைகளையும் செய்து முடித்தனர்….. ஊரே ஒன்று கூடி ஒரு இடத்தில் நின்றது…. ஒரு தலைவர் திருவிழா ஏற்பாடு செய்த பிறகு இது போன்ற நிகழ்வுகளில் மனசுக்கு மிகவும் கஷ்டமா இருக்கு என்றார் தலைவர்….

மக்களும் மிகவும் வருத்தமுற்று நின்றனார்…. தலைவர் உங்களுடைய கருத்துகளை தெரியப்படுத்தவும்…… அனைவருமே சேர்ந்து திருவிழாவை நடத்தி விடுவோம் என்றனர்…ஒருவர் மட்டும் திருவிழா கொண்ட வேண்டி நாள் தள்ளி போய் விட்டது…..இனிமேல் கொண்ட வேண்டாம்…..அடுத்த வருடம் கொண்டடுவோம் என்றார்…..

அதற்கு மற்றவர் காப்புக்கட்டிய பிறகு திருவிழாவை நடத்தமால் இருக்கக் கூடாது என்றார்…. ஒரு வயதான பாட்டி நீ சொல்வது சாி தான் காப்புக்கட்டி திருவிழா நடத்தாமல் இருந்தால் ஊருக்கே ஆபத்தாகி விடும்….ஆனால் திருவிழாவை நடத்தி விடுவோம்…..

அனைவருமே திருவிழா நடத்தி விடுவோம் என்றனர்…..அது தான் திருவிழாவை கொண்டடுவோம் என்றனர்…..

இருந்தாலும் மேட்டுப்பட்டியில் குறி பார்பவரிடம் போய் இதற்கு குறி பார்த்து விட்டு பிறகு திருவிழாவை நடத்துவோம்…..

சரி வாங்க எல்லோரும் போய் கேட்போம்…..அதில் இறங்கி ஆத்தா அருள் வாக்கு கூறினாள்….சரி அப்படியே செய்வோம்…..மேட்டுப்பட்டி சுடலைமுத்து குறி இறங்கி சொன்ன சாியா இருக்கும்…..

மேட்டுப்பட்டிக்கு சென்றனர்….. சுடலைமுத்து வீட்டிற்கு சென்று குறி பார்ப்பதற்கு தேவையான வெற்றிலை,பாக்கு,எலும்பிச்சை போன்றவற்றை வைத்து குறி கேட்க அனைவரும் ஆர்வத்தோடு காத்திருந்தனர்…..

அதே போல் சுடலைமுத்து ஆத்தாவின் அருள் வந்து குறி சொல்ல ஆரம்பித்தார்…..நல்லப்படியாக திருவிழாவை நடத்துங்கள் ஆனால் திருவிழாவின்

போது பிரச்சனையால் ஒரு விபரீதம் நடந்தே தீரும்…… இது ஆண்டவன் கட்டளை ஊருக்கு பாதிப்பில்லை ஒரு உயிர் ஊருக்காக பறி போகும்டா….. என்று கூறி முடித்தார்….

அனைவரும் அமைதியாக இருந்தனர்…… திருவிழா நடத்தினால் ஒரு உயிர் போகும் சொல்றீங்களே சாமி…. அதன் மனசுக்கு கஷ்டமா? இருக்கு…..அதற்கு அவர் இது இறைவனின் கணக்கு நான் என்ன செய்வது என்றார்…. திருவிழா நடத்தமால் விடாமல் இதை விட பெரிய விளைவுகள், விபரீதங்கள் ஏற்படலாம்…

அதற்கு திருவிழாவை நடத்தி விடுங்கள் என்றார்…..

சாிங்க சாமி நீங்கள் சொன்னப்படியே செய்கிறோம்….. அதற்கு மேல் தெய்வத்தின் மீது பாராத்தை போட வேண்டியது தான்…..என்று கூறி எந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்…..

ஊருக்கு செல்லும் வழியெங்கும் ஒரு சலசலப்புடனே சென்றனர்….. தலைவர் முகமும் சோகத்தில் வாடிப் போய் இருந்தது….. அன்று இரவு யாரும் சரிவர தூங்காமல் இதே யோசனையில் இருந்தனர்….

மறுநாள் காலைப் பொழுதும் விடிந்தது வழக்கம் போல் இல்லாமல் வீட்டிலேயே முடக்கி கிடந்தனர்….பிறகு அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்க ஊர் தலைவர் கூப்பிட்டு விட்டார்…..

அனைவரும் வந்து அமைதியாக உட்கார்ந்து இருந்தனர்…..அப்போது தலைவர் எழுந்து நின்று தங்களுடைய கருத்துகளை தாருங்கள் என்றார்….அனைவருமே மெளனமாகவே இருந்தனர்…..ஒரு சிறுவன் எழுந்து நின்று என்ன நடந்தாலும் பரவாயில்லை திருவிழாவை நடத்தியே தீர வேண்டும் என்றான்……

அவன் சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும் …..என்றனர்….திருவிழாவில் யாருமே சந்தேஷமாக இருக்க மாட்டார்கள்….அனைவரும் மனதிலும் நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ? என்ற பயத்திலோ ஒழுங்க வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும் ஐயா என்றனர்…..

நீங்கள் சொல்லுவதும் சரி தான்…அப்படி திருவிழா நடக்கவில்லை என்றால் பெரிய பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அதற்காக தான் சொல்கிறேன் என்றார் தலைவர்….

சாிங்க ஐயா நீங்களே நல்ல முடிவ சொல்லுங்க ஐயா என்றனர்….. நாம எல்லோரும் அந்த சுடலைமுத்து சாமி சொன்ன படியே செய்வோம்….திரு விழாவிற்கு வேண்டிய வேலைகளை செய்யுங்கள்…..என்றார் தலைவர்…..

அனைவரும் அதற்கு சரி என்று ஒப்புக் கொண்டனா்…. பிறகு திருவிழாவிற்கு செய்ய வேண்டிய வேலைகளை பார்ப்போம்….என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று சாமி மேல பாரத்தை போட்டு நம் வேலைகளை செய்வோம் என்று சொல்லி கொண்டு கூட்டத்தைக் கலைத்து சென்றனர்…

பிறகு ஆரவரத்துடன் திருவிழா வேலைகளை செய்ய ஆரம்பித்தனர்….அனைவரும் அவரவர் வேலைகளை பார்க்கத் தொடங்கினார்….பின்னர் திருவிழாவிற்கு தோரணம் கட்டுவது, பந்தல் அலங்காரம் அமைப்பது என்று விறு விறு என வேலைகள் நடந்தன….

பின்னர் திருவிழா தேதியும் நெருங்க ஆரம்பித்தது…..பெண்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து சாணம் தெளிப்பது, கோலமிடுவது என பல வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன….

கோவிலில் தினமும் பொங்கல் வைப்பது அதை அனைவருக்கும் பரிமாறினார்….பின்னர் இரவு நேரங்களில் கும்மி அடிப்பது என பல்வேறு நிகழ்வுகளைச் செய்து கொண்டிருந்தன…..

மறுநாள் காலையில் அனைவரும் ஒன்றுக்கூடி அனைத்து வேலைகளைச் செய்து கொண்டிருந்தன….. அப்பொழுது ஊர் தலைவர் அனைவரையும் ஒன்றுக்கூட்டி ஒரு அறிவிப்பை தெரிவித்தார்…..

நாளைக்கு கருப்புசாமி கோவிலில் ஒரு நபர் எந்த ஊரணி கரையை தாண்டி சென்று கருப்பசாமிக்கு மாலை சக மரியாதைகளையும் செய்து திரும்ப வேண்டும்…..அதற்கு தேவையான பொருட்களை வாங்கி வரவும் என்றார்…..

அனைவரும் சரிங்க ஐயா……அப்படியே செய்கிறோம் என்றனர்…..அதன் பிறகு ஒரு குதிரை அலங்காரப்படுத்தி அனைத்து வேலைகளையும் செய்ய ஆரம்பித்தனர்…..

கருப்புசாமிக்கு பூஜைக்கு படைக்க வேண்டிய பொருட்களை வெளியூரில் சென்று

வாங்கி வாருங்கள் என்றார் தலைவர்….சரிங்க ஐயா போய் வாங்கி வருகிறோம் என்றனர்….. திருவிழா வேலைகளை முடித்தனர்….

ஊரே ஒன்றும் கூடி கோவில் முன் குலவையிட்டு அனைவரும் சாமியை கும்பிட்டனர்….. கோவிலில் ஆண்,பெண் இருவருமே ஒன்றுக்கூடி கும்மியை அடிக்க தொடங்கினார்…..

அன்று குதிரைக்கு அலங்காரம் செய்து தயார் நிலையில் வைத்தனர்…..பின்பு கருப்புசாமி கோவிலின் பூசாரியை அழைத்து அவருக்கு செய்ய வேண்டிய மாியாதைகளை செய்து பின்னர் குதிரையில் ஊர் சுற்றி பவானி வர வேண்டும்….என்றார் தலைவர்

பட படவென வேலைகளை செய்யுங்கள் என்றார்….அனைவரும் ஆரவரத்துடன் வேலைகளை செய்தனர்…..

ஊரே ஒன்றுக்கூடி குதிரையில் பூசாரியை ஏற்றி ஊரை வலவரச் செய்தனர்…பிறகு பூசாரி ஊரை சுற்றி முடித்து விட்டு கோவிலுக்கு வந்து பின்னர் கருப்புசாமி கோவிலுக்கு புறப்பட்டார்…..

நடு இரவில் நாய்கள் ஊளையிட…… ஆந்தைகள் அலறலிட….. இரவில் ஒரு கூக்குரல் கேட்கவில்லை……அமைதியின் உச்ச நிலையில் இரவில் எங்கும் கரு இருள் சூழ்ந்த நிலை…..

மெதுவாக டாக் டாக் டாக்…. டாக்…. என்று குதிரையில் பூசாரி கருப்புசாமி கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்…..

கிழக்கு மலை மேடு முக்கு வந்தது அந்த மேட்டில் குதிரை மெதுவாக அடி எடுத்து வைத்தது…..எந்த மேட்டின் இருபுறமும் சாியான பள்ளம் அதன் நடுவில் ஒரு நபர் செல்லும் மொட்டு பாதை மனிதன் கீழே பயத்தில் தவறி விழுந்து இறந்தே போவான்….

ஆனால் அந்த கருப்புசாமியின் அருள் தான் அங்கு போய் சாமி கும்பிட்டு திரும்ப முடியும்…..

குதிரையை ஒரு ஒரு அடியகா எட்டு வைத்து மெதுவாக கீழே இறங்கி கருப்புசாமிக்கு பூஜைகள் செய்து படையல் வைத்து வணங்கி விட்டு திரும்பி வரும் போது திடீரென்று ஒரு அலறல் சத்தத்துடன் பூசாரி நெஞ்சை பிடித்து கீழே விழுந்தார்….

பின்னர் ஊர் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து நின்றனர்…….அனைவருமே கண் இமைக்காத வீதியை பார்த்துக் கொண்டிருந்தன….

பிறகு டாக்…டாக்….டாக்….என்ற சத்தம் மெதுவாக அனைவரின் காதுகளிலும் கேட்க தொடங்கியது…..ஊர் தலைவர் ஆரத்தி தட்டுடன் பூசாரியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தார்…..

அப்போது குதிரை மட்டும் அனைவரையும் எதிர்நோக்கி நடந்து கொண்டு வந்தது…. அனைவரும் ஏதும் புரியாமல் திகைத்து பார்த்தனர் அப்போது அனைவரின் மனதிலும் பூசாரியை காணவில்லையே என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது…..

அனைவருமே முணு முணு படியே நின்றனர்…..பிறகு தலைவர் அனைவருமே வாங்க கிழக்கு மேடு மலைக்கு செல்வோம்….எங்கு பூசாிக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்…..வாருங்கள் போவோம்……

அங்கு போய் அனைவருமே மலை மொட்டு ஏற முடியாமல் நின்றனர்….கீழே நின்று பேசிக் கொண்டே இருந்தனர்….அப்போது ஒரு குறிப்பிட்ட வயது இருக்கும் இளைஞன் நான் போய் பார்த்து வருகிறேன்… அதற்கு அந்த இளைஞனுடைய அப்பா நீ போக வேண்டாம் மகனே….நான் போய் பார்க்கிறேன் என்றார்….

நீங்கள் யாருமே போக வேண்டாம் என்றார் ஊர் தலைவர்….இங்கே என்ன நடந்திருக்கும் என்று தெரியாமலே நிற்கிறோமே? அதற்கு பூசாரிக்கு என்ன ஆச்சுன்னு தெரியலா!

ஆமாம்…. என அனைவரும் குரல் கொடுத்தனர்.. என்ன நடந்தது என்று ஒருவர் மலை மேட்டில் ஏறி பார்த்தால் தான் தெரியும்……
 

சத்தியபானு

New member
Vannangal Writer
Messages
5
Reaction score
3
Points
3
3


யார்? ஏறுவது என்று தெரியவில்லை… அப்போது பூசாரியின் மகன் குதிரையின் மேலேறி மெதுவாக மேட்டின் உச்சியில் இருந்து பார்த்தான் அவன் அப்பா சடலமாக மிதப்பதை பார்த்து கண்ணீர் மெல்க மெல்க வழிந்தப்படியே மேட்டிலிருந்து கீழே இறங்கினான்…..

நிலைப்புரியாத புத்தி பேதலித்த பாதராய் நின்று கண்ணீர் தாரை தாரையாய் ததும்பி வழிந்தது…..

அனைவரும் அவன் அருகில் என்னச்சு என்னச்சு என்று பதட்டத்துடன் கேட்டனர்..

அதற்கு ஏதும் பேசாமால் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தான்…அவன் கண்களில் கண்ணீரானது வழிந்த வண்ணமே இருந்தது….அப்போது ஊர் தலைவர் அவன் அருகில் வந்து கைகளைப் பிடித்து அசைத்தார்…

ஏதும் பேசமால் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தான்…..அப்போது தலைவர் சொல்லுப்பா சொல்லு என்ன நடந்திருந்தது…..

அய்யோ அய்யோ அனியாயமா போச்சே போச்சே…..ஊரே கேட்கும் அளவுக்குக் கத்தி அழுதான்…..அப்பா அப்பா இனி உன்ன எப்ப பார்ப்போம் அப்பா….அய்யோ அனியாயமா உன் உயிர் போச்சே போச்சே…..என்று அழுதுக் கத்தி கூப்பாடு போட்டான்…..

அனைவருமே கதறி அழுதனார்….அய்யோ அய்யோ இப்படி உனக்கு சாவு வரனும்….அனைவரும் அழுது கூப்பாடு போட்டனார்….பூசாரியின் மகனை அனைவரும் ஆற தழுவி அழுதனார்…..

ஏதும் முடியாமல் ஊரே கண்ணீரில் மிதந்துக் கொண்டிருந்தனார்….அப்போது திரு விழாவிற்கு போட்ட பந்தல் அலங்காரம் அனைத்தையுமே கலைத்தனார்…அனைவருமே கண்ணீருடன் பூசாரியை ஒரு வண்டியை அழைத்து வந்து அவரின் சலடத்தை மெதுவாக மேலே தூக்கினார்……

பின்னர் ஊரே ஒன்றுக்கூடி அவரின் வீட்டில் சென்று அழுது பின்னர் இறுதிச் சடங்குகளைச் செய்தனார்…..அவரின் மனைவி,மக்கள் கதறி அழுதனார்….அனைவருமே அவர்களை சமாதானப்படுத்தினார்….பின்னர் ஊர் தலைவர் உங்களுக்கு எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்….

கவலைப்படாதீங்க என்றார்….. என்று சொல்லி பிறகு பூசாரியின் இறுதிச் சடங்கினை செய்தனார்….பிறகு அனைவருமே ஒன்றுக்கூடி அடக்கம் செய்தனார்….

பின்னர் வீட்டிற்கு வந்து இன்னும் பிற சடங்குகளை செய்தனார்…பிறகு வீட்டில் தீபத்தை ஏற்றி அந்த இடத்தை பார்த்து அழுதனார்…..ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி மறுநாள் காலையில் பணத்தை புதைத்த இடத்தில் பால் தெளித்து வந்தனார்…..

பின்னர் ஊரே சேர்ந்து அவர் வீட்டிற்கு சென்றனார்….அங்கு அவரின் மனைவி என் ஒரே பெண்ணை எப்படி நான் கரைசொ சேர்ப்பேன்….இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள் இந்த ஊரில்

என் சாமியே….என் குலத்தெய்வமே என்னை விட்டு சென்றதே….உன்னை நான் எப்படி மறப்பேன்…..எனக்கு அறிவுரைக்கூற ஆள் இல்லாமல் தவிக்கிறேன் சாமி….என் சாமி நெஞ்சில் அடித்தப்படியே அழுதாள்….

உனக்கு இவ்வளவு சீக்கரமா வரனும் என்னைக்கூட கூப்பிட்டு போயிருக்கலமே? என் சாமி…..

அனைவருமே அழுவாதீங்க.....அக்கா அழுவாதீங்க….என்று சமாதனாப்படுத்தினார்….ஊர் தலைவர் நாங்கள் அனைவரும் இருக்கிறோம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்….பிறகு எங்கள் சென்று குறிப்பிட்ட பார்த்தது போலவே நடந்து விட்டது…..என்றனர்

அதற்கு ம்ம்ம் ஆமாம் ஆமாம்….என்ற படியே நின்றுக் கொண்டிருந்தனர்… ஒருவர் இவர் எப்படி இறந்தார் என்று அனைவருக்கும் தெரியா வேண்டும் என்றார்… அந்த சுடலைமுத்துவிடம் போய் குறி கேட்போம் அவரிடம் இறங்கி தான் இறந்ததை செல்வார்….

வாங்க நாம் அனைவரும் போவோம்….சாி அப்படியே செய்வோம் என்றார் ஊர் தலைவர்….

அனைவரும் ஒரு வண்டியில் ஏறிச் சென்றனர்….அங்கு போய் அனைவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தனர்….ஒவ்வொரு நபராக தனக்கு தேவையான குறிகளை வைத்து கேட்டனர்…..

பின்னர் இவர்களின் குறி வந்தது…..பிறகு சுடலைமுத்து பூசாரிக்கு அருள் வர ஆரம்பித்தது..அனைவரும் ஆர்வத்துடன் கேட்க உட்காந்திருந்தனார்….

ம்ம்ம் ம்ம்ம்….நான் தான் பூசாரி வந்துருக்கேடா? அய்யோ அய்யோ எப்படி சாமிஉன் உயிர் போச்சு வேற ஏதும் நடந்துச்சா சொல்லு சாமி…சொல்லு

ம்ம்ம்….என் மரணம் இயற்கை மரணம் தான்….என்றார் எத்தனையோ ஆண்டுகளாய் எங்கு பூஜை நடந்திருக்கு ஆனால் இப்படி எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை…..இந்த வருடம் தான் இதுபோல் நடந்திருக்கு சாமி…..

என் விதி முடிந்தது என்னை அந்த ஏமான் அழைத்துக் கொண்டன்….யாரும் கவலைப்படாதீங்க…..

எனக்கு என்ன பதில் சொல்ல போறீங்க என்றால் மனைவி அதற்கு கவலைப்படாதம்மா….நீ நல்ல படியே என் பிள்ளைகளை கரைச் சேர்த்திடுவா?

என் மகன் என் குடும்பத்தைப் பார்த்து கொள்வான் என்றார்…கண்ணீர் மல்க மல்க ஊரே ஒன்று சேர்ந்து உன் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும்….என் சாவைப் பற்றி ஆராய வேண்டாம் நீங்கள் உங்கள் வேலைகளை பாருங்கள்….அது எப்படி? பார்ப்பது இனி திருவிழாவை நடத்த முடியாதா ஒரு சூழ்நிலை வந்து விட்டதே? சாமி…

அதற்கு திருவிழாவை நல்ல படியாக நடத்துக்கள் ஆனால் கருப்புசாமி கோவிலுக்கு பூஜை மட்டும் வேண்டாம்…..அந்த கிழக்கு மலை மேடு நிறைய மணல் நிரப்பி பின்பு நடத்துங்கள் என்றார்…..

அனைவரும் ஊருக்கு கிளம்புங்கள் என்றார்….எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அனைவருக்கும் விபூதியை அனுப்பி விட்டார் ….இனி எந்த பிரச்சனையும் வாராது என்று சொல்லி அனுப்பினார்…..

அனைவரும் விபூதியைப் பெற்று ஊர் திரும்பினர்…..அங்கு போய் பேசிகிறலாம்….என்று சொல்லில் கொண்டே சென்றனர்…..அனைவருக்குமே குழப்பமான மனநிலை ஓடிக் கொண்டே இருந்தது….இவர் எப்படி இறந்தார் என்று யாருக்கும் புலப்படவில்லை….அவர் வேறு என் சாவு இயற்கை மரணம் என்று தான் கூறினாரே?

என்று அனைவருக்கும் களம் பல கேள்விகள் ஓடின….ஒருவர் கருப்புசாமி அடிச்சுருப்பரோ….மற்றொருவர் அப்படியெல்லாம் இருக்காது….கிழக்கு மலை மேட்டியிலிருந்து கீழே பார்த்திருப்பரோ? அதன் தவறி விழுந்துடரோ? வேறு ஒருவர் அப்படியெல்லாம் இருக்காது இவர் எத்தனையோ காலமாய் போய் பூஜை செய்து வருகிறார்…. இவருக்கு ஒரு தடவை கூட இப்படி நடந்ததில்லை..

இப்ப போய் நடக்குதக்கும்….என்று பலரும் தங்கள் மனதிற்கு தோன்றும் கருத்துகளை பரிமாறிக் கொண்டிருந்தன…..

சாரி விடுங்க எல்லோரும் போய் அவர் அவர்கள் வேலைகளை பாருங்கள் என்றார் ஊர் தலைவர்……

சாிங்க ஐயா அப்படியே செய்கிறோம் ஐயா…. இதை பற்றி பேச வேண்டாம் அவர்கள் சொன்னப்படியே சாமியைக் கும்பிடுவோம்….யாரும் கருப்புசாமி மலை மேட்டிற்கு செல்ல வேண்டாம்…..அங்கு மணல் கொட்டி நிரப்பி பின்பு அங்கு சென்று வழிப்படலாம்….இதெல்லாம் நடக்கிறது விஷயமா? ஐயா அதை நிரப்பி பல ஆண்டுகள் தேவைப்படும் ஐயா….அனைவரும் சேர்ந்து செய்தாலே எத்தனையோ வருடமாகும்…..ஐயா

ஆமாம் எத்தனை வருடங்கள் ஆனாலும் நாம் தான் அந்த வேலையை செய்து முடிக்க வேண்டும்….நாம் சந்ததிகளுக்கு சொல்ல வேண்டும்….அதுவரைக்கும் யாரும் அந்த கிழக்கு மலை மேட்டிற்கு செல்ல வேண்டாம்…..மாலை பொழுதினில் செல்ல வேண்டாம்….

அது போன்ற அந்த நேரங்களில் தேவையற்ற சத்தம்,அந்த இடத்திற்கு சென்றால் பயந்து போதால் இது போன்ற நிகழ்வுகள் நடந்தன….அதிலிருந்து யாருமே அங்கு செல்வதற்கு பயந்தன……

என்று கதையை சொல்லி முடித்தான் மாரிமுத்து….அதற்கு பார்வதி இப்படியெல்லமா? என்று ஆச்சரியம் தேடியும்,பயத்துடனும் கேட்டாள்….ஆமாம் பார்வதி இப்படி தான் நடந்துச்சு…..

சிந்தியா அவள் அம்மாவின் சேலையை இறுக்கி பிடித்துக் கொண்டு நடந்தால் அதற்கு பார்வதி பயப்படாத பாப்பா…..என்றாள்….அதற்கு மாரிமுத்து எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது….அதைப் பற்றி சொல்லிருக்கக் கூடாது….நான் தான் தப்பு செய்து விட்டேன்…..

அதன் குழந்தைகள் மிகவும் பயப்பிடுதுங்க ஏன்? பார்வதி அது உங்க தப்பு இல்லிங்க நான் தான் உங்க சொல்ல சொல்லி பிடிவாதம் பிடித்தேன்….என் தப்பு தாங்க பிள்ளைகள் இருக்கும் போது இதை பேசியிருக்க கூடாது….

என்று சொல்லில் கொண்டே நடந்து சென்றனர்…..வீட்டிற்கு சென்று திண்ணையில் அமைதியாக உட்கார்ந்து இருந்தனர்….பிறகு பார்வதியை சுடு தண்ணி போட சொன்னான்….

பார்வதியும் வீட்டிற்குள் சென்று அடுப்பைப் பற்ற வைத்து தண்ணீரை அடுப்பில் தூக்கி வைத்தாள்….பிறகு பார்வதி யோசித்துக் கொண்டே நின்றாள்….அவர் எப்படி இறந்திருப்பார்? என்று ஒன்று புரியாவில்லையே?

என்ற யோசனையிலே மெய் மறந்து நின்றாள்…..அப்போது மாரிமுத்து பார்வதி…பார்வதி தண்ணீர் காய்ந்தால் தூக்கி வா பார்வதி என்றார்….அதற்கு சற்று கூட செவி மடுக்காது நின்று யோசித்துக் கொண்டிருந்தான்…..

பிறகு வீட்டிக்குள் வந்து மாரிமுத்து பார்வதி கையை பிடித்து அசைத்தான்…. ஆ…ஆ என்று தலையை அசைத்து என்னங்க என்னச்சு எதற்கு கையை பிடித்து ஆட்டினிங்க என்றாள்….தண்ணீர் காய்ந்தா இல்லையா? நான் இன்னும் குளிக்க வேண்டாமா? என்ன யோசனையில் இருக்க பார்வதி என்றான்….

மன்னிச்சுடுங்க நான் ஒரு யோசனையிலா நின்றிருந்தேங்க……அதான் என்ன யோசனை பார்வதி….சரி நீங்க போய் குளிங்க தண்ணீர் காஞ்சு ரொம்ப நேரம் ஆச்சுங்க….போங்க போங்க…..

சாி போய் குளிக்கிறேன்….. நீ எதையும் யோசிக்கமால் வீட்டு வேலைகளை பாரு….முதலா…போய் சமை எனக்கு ரொம்ப பசிக்கிது என்ன பார்வதி சரியா….

சரிங்க நீங்கள் குளிக்க போங்க அதற்குள்ள சமைச்சு வைக்கிறேன்…..மாரிமுத்து குளிக்க சென்றான்…..அடுப்பு பற்ற வைத்து சமையல் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்…..காய்கறிகளை மெதுவாக அருவமனையில் வெட்டினாள்….

பிறகு அடுப்பில் உலை வெந்துக் கொண்டு இருந்தது…. பருப்பை ஒரு பாத்திரத்தில் கழுவினாள்…..உணவை வேக வேகமாக சமைத்தாள்….குழந்தைகளும் டிவியிலே படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்….

பின்னர் அனைவரும் வாருங்கள் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவோம் என்றாள்….மாரிமுத்து அப்படியே சாப்பிட்டு விட்டு வெளியில் போய் வீட்டுக்கு தேவையான சமான்களை வாங்கிட்டு வந்துவிடுகிறேன் என்றான்……

சாிங்க முதலா சாப்பிடுங்க….பேசிக்கிட்டே இருக்கமா…..சிந்தியா,காவியா டிவியில் படத்தையே பார்க்காமல் சாப்பிடுங்க…. என்று கோபத்துடன் கூறினாள் பார்வதி….

கோபப்படாத பார்வதி சாப்பாடு வாங்க விடு ….நீ போட்டு சாப்பிட்டு என்றான் மாரிமுத்து…..சரிங்க சாப்பிடுரேன் என்றாள்….இன்னைக்கு குழம்பு நல்ல இருக்கு பார்வதி….

ம்ம்ம்…..அப்படியங்க நாம் தோட்டத்து காய்கறிதாங்க….மசாலா நீ தானா அரைச்சு வைச்ச அதான் மணக்கு குழம்பு…..இவ்வளவு அருமையான இருக்கோ….

அள்ள அள்ள….இன்னும் இருக்கனும் தோன்னுது பார்வதி….எப்பவும் வைக்கிற மாதிரி தான் வைச்சுருக்கேன்….இன்னைக்கு என்னமோ புதுசா! பாராட்டுரேங்க….எனக்கு ஒன்னுமே புரியலாங்க…..

நல்லருந்துச்சுனு சொன்னேன் பார்வதி….சாி விடுங்க….அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்….அனைத்து பாத்திரங்களையும் கழுவி வைத்தாள்….மாரிமுத்து மெதுவாக நடந்து தெருவிற்கு சென்றான்…..

அங்கு நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தது….சிறுவர்,சிறுமியர்கள் அங்கங்கே விளையாடிக் கொண்டிருந்தனார்…..அதை பார்த்துக் கொண்டே தெருவில் நடந்தான்…..பிறகு தெருவில் முற்றத்தில் ஒரு சவடி இருக்கும் அங்கு போய் உட்காந்திருந்தான்…..

அங்கு நாலு,ஐந்து போர் சேர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்…..அப்போது இன்றைக்கு ஊர்லா என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருந்தான்….பேசியதில் நேரம் போனாதே தெரியவில்லை…கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பேசி விட்டேன்…. நான் போய் வீட்டிற்கு தேவையான பொருளை போய் வாங்கனும் நான் வருகிறேன்….என்றான் மாரிமுத்து

கடை விதிக்குச் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களின் பெயர்களை சொல்லி வாங்கினான்…..பிறகு அப்படியே வீட்டிற்கு மெதுவாக நடந்து சென்றான்…..இரவில் வீட்டில் பார்வதியும்,குழந்தைகளும் படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்…..

மாரிமுத்து வீட்டிற்குள் சென்று பொருட்களை வைத்தான்….அப்பா….அப்பா..என்ற சொல்லிபடியே காவியா மாரிமுத்துவிடம் வந்தாள்…..என்னப்பா பாப்பா…..என்ன வேணும் என் தங்க பெண்ணுக்கு…..அப்பா எனக்கு முறுக்கு வேணும் அப்பா அவன் வாங்கிட்டு பையிலிருந்து முறுக்கை எடுத்து ஊட்டி விட்டான்…..

நல்லருப்பா…..ம்ம்ம்…..சரி பாப்பா உட்கார்ந்து சாப்பிடுப்பா…..பார்வதி கடைவீதிற்கு சென்றான்….அங்கு பேசிக்கிட்டுருந்தங்க…..என்ன பேசிக்கிட்டு இருந்தாங்க….பூசாரி மகளுக்கு மூன்று வருடமா? குழந்தை இல்லாமல் இருந்துச்சு உனக்கு கூடத் தெரியுமுலா…..

ஆமாங்க….அந்த பெண்ணுக்கு இல்லா இருந்துச்சுங்க அவங்க நிறைய கோவிலுக்கு கூட போய்யிட்டு வந்தங்க…அப்புறம் ஆஸ்பத்திரிக்கு கூட போய் வைத்தியம் பார்த்தாங்க ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை சொன்னங்க….

அவங்களும் பார்காத வைத்தியமில்லை,போகாதா கோவியில்லை எந்த பெண்ணை ரொம்ப கஷ்டப்பட்டுச்சுங்க…..

ஊர்லா இருக்குகிற எல்லோரும் சொன்னங்க கருப்பு சாமி கோவில் விழா தடைப்பட்டதற்கு காரணம் இவங்க அப்பா தானா அதான் கருப்புசாமி பழி வாங்குறாருனு கூடச் சொன்னங்க.……

அதற்கு மாரிமுத்து அதெல்லாம் ஒன்னுமில்லை…..அது விதியினால் அவர் உயிர் போனதற்கு இதெல்லாம் ஒரு காரணம் அல்ல பார்வதி….

இப்ப அந்த பெண்ணுக்கு என்னச்சுங்க…..இப்ப எதற்கு அந்த பெண்ணா பத்தி பேசுறீங்க…..

அந்த பெண்ணு 3 மாத கார்ப்பமா இருக்குடி…..அப்படியா ரொம்ப சந்தோஷங்க….அது ரொம்ப நாளாக ஆஸ்பத்திரி அங்கேயும்,இங்கேயும் அலைச்சங்க….அப்போ எல்லாம் நிற்கலா….சும்மா வீட்டில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த போது கார்ப்பமாயிருச்ச பார்வதி….

ஊரே சேர்ந்து அந்த பெண்ண நல்ல படியா பார்த்துக்கனும் சொல்லுறங்க பார்வதி….பிறகு எல்லோரும் சேர்ந்து பார்த்து தான் ஆகனும்….

ஆமாம் பூசாரி இந்த கிராமத்திற்காக உயிரே விட்டுள்ளார்…ஆனால் அனைவரும் சேர்ந்தே சொல்லியுள்ளார்கள்….எல்லோரும் அவர் மகளை நன்றாக பார்க்க வேண்டும்…..பார்வதி

வேறுன்ன ஊருக்குள்ள நடந்தது….ஊருக்குள்ள திருவிழா நடத்த வேண்டும் ஊர் தலைவர் முடிவு எடுத்துருக்காரம் பார்வதி….அப்படியங்க நல்ல விஷயம் தாங்க….. சரி வா தூங்குவோம் பார்வதி வயலில் நிறைய வேலைகளை பார்க்க வேண்டியது இருக்கு…..

ஆமாங்க தூங்குவோம்….சிந்தியா டிவியா ஆமத்து தூங்குவோம்…..

மறுநாளை காலையில் மெதுவாக சூரிய உதயத்திற்கு முன்னர் எழுந்து வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள் பார்வதி…..அப்போது மோட்டார் வேலை செய்த ராமு வீட்டிற்கு வந்து காய்கறிகளை வாங்க வந்திருந்தான்….

வா உட்காரு…என்று சொல்லிவிட்டு டீயை போட்டு கொடுத்தாள்…..ராமு வேண்டாம் என்றான்….பரவாயில்லை நம்ம வீடு தானே குடிப்பா என்றாள்….

அவனும் டீயை எடுத்து குடித்தான்….அக்கா காய்கறி இருக்கா? அம்மா கேட்டு வர சொன்னங்க அதன் கேட்கலாம் வந்தேன் அக்கா…..

இருக்கு ராமு நீ சற்று இங்கா உட்காந்திரு நான் போய் காய்கறிகளை பறிச்சுட்டு வரேன் ராமு…..

சரிங்க அக்கா…..பார்வதி காய்கறி தோட்டத்திற்குள் நுழைந்தாள்….அங்கு பார்த்தால் பச்சை பசேல் என் அழகாக பூத்துக் குலுங்கின….அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது….ஏதும் புரியாமல் அமைதி உட்கார்ந்து அந்த இடத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்…..

அப்போது சற்று இதமான தென்றல் காற்று மெதுவாக வீசியது…..அப்போது அவள் உடல் சிலிர்த்தது….நேரம் போனதே தெரியாது உட்காந்திருந்தாள்…..

ராமு வெகு நேரம் ஆகியும் அக்காவா இன்னும் காணலா என எண்ணி தோட்டத்திற்குள் நுழைந்தான்….அவனும் என்னே அதிசாயம் வியக்க முடியாத விந்தை இவ்வளவு அழகாக இடமும் இருக்கா…..

அவனும் தோட்டத்தில் அமர்ந்து அமைதியாக பெருமூச்சு விட்டான்….பின்பு பார்வதியிடம் போய் அக்கா என்னச்சு அமைதியாக உட்கார்ந்திருக்கிங்க….

வா ராமு வா….. என்றாள் பார்வதி….இவ்வளவு அழகான இடமா! அக்கா அருமையா இருக்கு அக்கா…. காய்கறிகளை பார்க்க பார்க்க ஆசையா இருக்கு அக்கா பிறக்க மனசே வராது அக்கா…..

நானும் இங்கு வந்து இரண்டு வாரம் இருக்கும் ராமு அவர் தான் இங்குள்ள மரம்,செடி,கொடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, உரம் இடுவது என எல்லா வேலைகளைப் பார்த்து வருகிறார் ராமு….

எப்படியா அருமையா இருக்கு இந்த இடம் அக்கா

அதான் நானும் வந்து அப்படியோ உட்கார்ந்து விட்டேன் ராமு…இதோ காய்கறிகளை பறித்து தருகிறேன் ராமு….என்று சொல்லில் கொண்டே காய்கறிகளை பறிக்க ஆரம்பித்தாள்…..

காய்கறிகளை எல்லாம் ராமுவிடம் கொடுத்து விட்டாள்….பின்னர் அவள் வீட்டிற்கு காய்கறிகளைப் பறித்து வந்தாள்…..பிறகு சிந்தியா கண் விழித்தாள்….

எழுந்து வந்து வீட்டு வேலைகளைப் பாரு சிந்தியா…..சரிங்க அம்மா….முகத்தை கழுவி விட்டு வருகிறேன் அம்மா…..

என்னங்க…..என்னங்க எழுந்திருச்சு இந்த டீயை குடிங்க….சரி பார்வதி..

வீட்டு வேலைகள் நிறைய இருக்கு என்று சொல்லிக் கொண்ட பார்க்க ஆரம்பித்தாள்….பிறகு தண்ணீரில் தவுடைக் கலக்கி மாடுகளுக்கு கட்டினாள்….பிறகு கோழிகளுக்கு இரையை அள்ளி தெளித்தாள்….

பின்னர் பால்காரா் வந்து மாடுகளில் இருந்து பாலை கறந்தார்….பிறகு பாலை அளந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றினார்….பின்னர் வீட்டிற்கு தேவையான பாலை வைத்து விட்டு மீது பாலை பால்காராிடமே கொடுத்தாள்…..

பின்னர் சமையல் அறைக்கு சென்று சாப்பாட்டை செய்து முடித்தாள்….பிறகு எல்லோரையும் அழைத்து உணவை பறிமாறினாள்…..அனைவரும் சாப்பிட்டு முடித்தனார்….

வயலுக்கு மாரிமுத்து ஆடு,மாடுகளையும் கவிழ்த்துக் கொண்டு கிளம்பினான்…சிந்தியும்,காவியும் அவனுடன் வயலுக்கு சென்றனர்….பிறகு பார்வதி வீட்டு வேலைகளை முடித்தாள்…..

பார்வதியும் வயலுக்கு புறப்பட்டாள்…..அப்போது பார்வதி…..பார்வதி என்று ஒரு சத்தம் கேட்டது யார் என்று வெளியே வந்தாள்…..அவளின் அத்தை வீட்டுக்கு வெளியிலிருந்து கூப்பிட்டாள்…..

வாங்க அத்தை வாங்க….. சாப்பிடுங்க என்று சொல்லிக் கொண்டே சாப்பாட்டை போட்டு வைத்தாள் பார்வதி…..

வேண்டாம் வேண்டாம் பார்வதி இப்ப தான் சாப்பிட்டு வந்தேன்….பரவாயில்லை கொஞ்சமா சாப்பிடுங்க அத்தை….. சாி பார்வதி வேண்டாம் சொன்ன விடவா போற….

தட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள் அத்தை….அப்போது பார்வதி ஒரு எண்ணம் தோன்றியது அந்த பூசாரி எப்படி இறந்தார் என்று அத்தையிடம் கேட்டாள் சொல்லுவாங்க…..இவங்களுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சுருக்கும் கேட்டு பார்ப்போம்…..

அத்தா அத்தா….என்ன பார்வதி அந்த கருப்புசாமி கோவில் பூசாரி எப்படி இறந்தார்….சொல்லுங்க அத்தை ……அது வந்து பார்வதி ஆரம்பித்தாள் அத்தை

வெளியிலிருந்து பார்வதி என்ற குரல் கேட்டது…. பார்வதி முணு முணுத்த படியே வெளியே சென்றாள்…. எப்போது எதிர் வீட்டு பையன் கதிர்….

என்ன வேணும் கதிர்….. அக்கா கடப்பாறைஇருந்தா தாங்க அக்கா….இருப்பா எடுத்துட்டு வரேன் கதிர்….

வீட்டிற்குள் கடப்பாறையை எடுத்து வந்து கொடுத்தாள்…..பிறகு கடப்பாறையை வாங்கி கொண்டு போனான் கதிர்….பிறகு வீட்டிற்குள் வந்தாள் பார்வதி அத்தை மறுசாப்பாடு வாங்கிகோ அத்தை என்றாள்…..

அதற்கு அத்தை வேண்டாம்…..வேண்டாம் என்றாள்….சாப்பிட்டு தட்டை எடுத்து வைத்தாள்…..அந்த கதையை சொல்லுங்கா அத்தை என்று ஆவலுடன் கேட்க தொடங்கினாள்

அன்னைக்கு என்னமோ அவர் இறந்தது இயற்கை மரணம் தான் அனைவரும் கூறினார்கள்….ஆனால் உண்மையிலே என்ன நடந்தது என்று தெரியுமா?

என்ன நடந்துச்சு அத்தை….. அவர் குதிரையிலே போய் கருப்புசாமி கோவிலுக்கு போய் பூஜை செய்து விட்டு திரும்பும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது…அதோடு அந்த பக்கத்திலிருந்து இந்த பக்கம் வந்து விடலாம் என நினைத்து புறப்பட்டியிருப்பார்….. போல அதற்குள் நெஞ்சுவலி அதிகமானதால் நெஞ்சைப் பிடித்து அலறியப்படியே கீழே விழுந்து இறந்தார்…..



இதை யார் உங்களுக்கு சொன்னங்க அத்தை… இதை அங்கு நின்று வேடிக்கை பார்த்த வெளியூர் காரன் சொன்னடி….இது மற்றவர்களுக்கு தெரியாது….திருவிழாவில் இப்படி நடந்துருச்சுன்னு ஊரே குறி பார்க்க சென்று விட்டது….அப்போது நான் மட்டும் ஊருக்குள் குழந்தை பெற்றிருந்தாள்….என்னை எல்லோரும் வர வேண்டாம் சொல்லிடங்கடி நான் மட்டும் தான் ஊருக்குள்ள இருந்தேன் பார்வதி …..

அப்போது அந்த வெளியூர் காரன் ஊருக்கு வந்திருந்தான் பார்வதி…..அப்புறம் அவன் கிட்ட போய் நீ யார்? ஊருக்கு புதுசா இருக்க என கேட்டேன்?

அதற்கு பதில் பேசாமல் அமைதியாக பயந்த நிலையில் நின்றுக் கொண்டிருந்தான்…..

பதில் சொல்லுப்பா…. என்ன வேணும்

அப்போது அவன் நேற்று திருவிழா நடக்கும் போது இங்கு தான் இருந்தேன் அம்மா….

அப்படியா! உனக்கு தெரியுமா நேற்று பூசாரி பூஜை முடித்து வரும் வழியில் இறந்து விட்டார்…..

ஆமாம் அம்மா…அதா பத்தி தான் சொல்லனும் அம்மா…..

அதா பத்தி நீ என்ன சொல்ல பிற புரியலா!

அம்மா நேத்து பூஜை முடித்து பூசாரி திரும்பிய போது திடீரென அலறல் சத்தம் கேட்டது நான் அந்த பக்கம் வயிறு சரில்லாதற்கு ஒதுங்கினேன் அம்மா…..அப்படி அந்த சத்தம் கேட்டது….என்ன என்று பார்க்கையில் மேலே பூசாரி நெஞ்சைப் பிடித்தப்படி கத்தினார்….

அத்தோடு மேலே செல்லலாம் என்றால் ஒத்தடி பாதையாக இருந்தது அம்மா….அவர வலி தாங்க முடியாமல் கீழே விழுந்தார்..…பள்ளம் பெரியதாக இருப்பதால் இறந்தார் அம்மா……

அதை பார்த்ததிலிருந்து சாிவர தூக்கமே இல்லை….அப்போ பயந்து ஓடி விட்டேன்…..இப்போ என் மனசு கேட்கலா அதான் சொல்லிட்டு போவோம் வந்தேன் அம்மா…..

சாிப்பா….அவருக்கு விதி எவ்வளவு தான் …இருப்பா இந்த தண்ணீரை குடிச்சுடு போ என்றாள்…..

தண்ணீரை வாங்கி குடித்தான்…..பிறகு போய் வரேன் என்றான்….

சரிப்பா…..

ஊருக்காரா்களும் வந்து பூசாரி இயற்கையா தான் இறந்திருக்காருன்னு சொன்னப்பா….அதான் நானும் இதை யார் கிட்டையும் சொல்லமா விட்டுடேன் பார்வதி…..

இவ்வளவு தானா நான் கூட வேற என்னமோ ஏதோ நினைச்சேன் அத்தை….

இவ்வளவு தான் பார்வதி நடந்துச்சு….ஆனாலும் அந்த இடத்திற்கு பிள்ளைகளை அனுப்பதா பார்வதி….

சரி பார்வதி நான் வீட்டுக்கு போறேன் பார்வதி….சாிங்க அத்தை….

நானும் வயலுக்கு போகனும் அத்தை கிளம்புறேன்….வயலுக்கு கிளம்பி சென்று வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.....

அப்போது மாரிமுத்து பார்வதி இன்னும் சில மாதங்களில் கருப்புசாமி கோவிலுக்கு சென்று அனைவருமே பூஜை செய்யலாம் என்றான்…..

எப்படிங்க….. இன்னைக்கிருந்து ஜெ.சி.பி மண்ணை அள்ளிக் கொட்ட போறேங்க அந்த பள்ளத்தை மேத்த போறேங்க பார்வதி….

ரொம்ப சந்தோஷங்க….இனிமேல் ஊரே சந்தோஷமா இருக்க போகுதுங்க என்றாள்…

சாி பார்வதி நம்ம வயல் வேலைகளை செய்ய ஆரம்பிப்போம் பார்வதி….குழந்தைகளும் உற்சாகத்தில் குதித்தன….

கமெண்ட்ஸ்
 
Status
Not open for further replies.
Top Bottom