Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 1
வைப்பர் துடைத்து காட்டிய வழியை பார்த்தபடி காரை ஓட்டி கொண்டிருந்த அருண் பக்கத்தில் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து கொண்டிருந்த விக்னேஷை பார்த்து “என்ன பாஸ் யோசனை? பேசாம இந்த கேஸை எடுக்காமயே விட்ருக்கலாமோனு நினைக்கிறீங்களா ? “என்றான்.
“இதுவரை குற்றம் செய்தவர்களையும், அதற்கான காரணத்தையும் கண்டு பிடிச்சோம்.ஆனா இதுல அதெல்லாம் நடக்க போவதில்லைனு மனசுகுள் ஒரு பட்சி சொல்லுது.அதனாலேயே கமிசனர் துரை பாண்டியன் கேட்டதும் இதை ஒத்துகிட்டேன்! “என்றான் சன்னல் வழியாக ஓடிய மரங்களை வேடிக்கை பார்த்தபடி விக்னேஷ்.வெளியே பனி இறங்கி சன்னல் கண்ணாடிகளில் நீர் கோலங்களை இட்டு காற்றின் வேகத்தில் கரைந்தன!
“அப்படி என்னத்தை இந்த கேஸ்ல பாத்தீங்க? “என்றான் ஹேட்லைட் வெளிச்சத்தில் சாலையில் கவனமாக இருந்த அருண்.
“பாரு அருண்! வருசமானா போலீஸ் டிபார்மெண்ட் குற்ற சதவீதங்களை பற்றி ஒருஆய்வு செய்வாங்க.க்ரைம் சர்வேன்னு அதுக்கு பேரு.அப்படி கடந்த அஞ்சு வருசமா பார்த்ததுல நாம போயிட்டிருக்கிற கழுகுமலைலதான் இருபது சதவீதம் நடந்திருக்கு.அத்தனையும் மர்டர்.காரணம் என்னன்னு தெரியலை.இது போதாதுன்னு இங்கே பெர்லைட்டுன்னு ஒரு காப்பர் கம்பெனி ரன்னாகுது.இந்த பகுதியோட வளர்ச்சிக்கு காரணமே அதுதான்.சுற்றுசூழல் பாதிக்குதுன்னு வழக்கம் போல ஆண்டி இந்தியன்ஸ் போராட்டம் பண்ணி கலவரமாகி துப்பாக்கி சூடெல்லாம் நடந்து கம்பெனி லாக்காயிருக்கு! “
“இந்த 20சதவீத குற்றங்களுக்கும் அந்த கம்பெனிக்கும் எதாவதுலிங்க் இருக்கும்னு நினைக்கிறீங்களா? “
“இன்னொன்னுக்கும் மர்டருக்கும் சம்மந்தம் இருக்கும்னு நினைக்கிறேன்.!”
“என்ன பாஸ் அது? “என்ற அருணுக்கு பதில் சொல்ல விக்னேஷ் வாயை திறந்த போது பின்னாலிருந்து ஹார்ன் ஓசை பலமாக ஒலித்தது.தொடர்ந்து ஹார்ன் ஓசை தாறுமாறாக ஒலிக்க துவங்க
“அருண்! அவனுக்கு வழி விடு.அவன் பொண்டாட்டிய யாரோ ரேப் பண்ணுவாங்க போல தெரியுது.இவன் போய்த்தான் காப்பாத்துவான் போல! “
அருண் சாலையின் இடது புறம் ஏறி வழி கொடுத்த போது அந்த கார் கன்னா பின்னாவென்று முன்னேறியது.
டிரைவர் சீட்டிலிருந்தவனை பார்த்த இருவரும் அதிர்ந்தனர்.ஒரு வெள்ளையன் டிரைவர் சீட்டிலிருந்தபடி “தேங்க்ஸ் “என்ற வார்த்தைகளை காற்றில் உதிர்த்து விட்டு சாலையில் முன்னேறி மறைந்தான்.
“மேக மலைன்ற ரிசர்வ் பாரஸ்டுல ஒரு வெள்ளைகாரனுக்கு என்ன வேலை இருக்க முடியும் பாஸ்? “
“அவன் அமெரிக்கன் ! “
“எப்படி சொல்றீங்க? “
“இங்கிலாந்துக்கு அடிமையா இருந்த நாடுகளோட கார்களோட ஸ்டியரிங் லெப்ட்ல இருக்கும்.அதை எதிர்த்து அமெரிக்கா எல்லாத்தையும் தலைகீழா மாத்திகிச்சு.அவங்க ரைட் சைடு டிரைவிங்.அதனாலதான் வண்டியை ஸ்மூத்தா ஓட்ட முடியாம இந்த அமெரிக்கன் தடுமாறுரான்.”
“சரி! பழைய கேள்விக்கு பதில் சொல்லுங்க! அந்த இன்னொன்னு எது? “
“சொன்னா நம்ப மாட்ட? “
“பரவாயில்லை சொல்லுங்க! “
“மாயான்னு ஒரு பேய்! “
“நீங்க இதை நம்புறீங்களா? “
“எனக்கு சொல்ல தெரியலை! “
அதே நேரம் சாலையின் ஓரத்திலிருந்து அந்த பெண் திடீரென வெளிப்பட்டு சாலையை கடக்க முற்பட்டாள்.பேசிக் கொண்டிருந்த அருண் கடைசி நிமிடத்தில் அதை கவனித்து பிரேக்கை மிதித்த போது கார் எதன் மீதோ டொம் என்று மோதி நின்றது.
“அடக்கடவுளே! “என்றபடி இறங்கிய அருணும் விக்னேசும் அடிபட்ட பெண்ணை தேட துவங்கினர்.கார் நின்ற இடத்திலிருந்து ஐம்பது அடி தூரம்வரை யாரையும் காணாமல் இருவரும் ஏமாந்தனர்.”எங்கடா அந்த பொண்ணு? “என்றான் விக்னேஷ்.
“நான் அந்த பொண்ணு மேல மோதுனது உண்மை பாஸ்.பானேட்டுல லைட்டா ஒடுங்கியிருக்கு பாருங்க! “
“ஆமா! அப்ப அந்த பொண்ணு எங்கே? “
“அதுதான் தெரியலை பாஸ்! சரி வாங்க போலாம்! “என்ற அருண் காரின் முன் சீட்டில் ஏறிய போது விக்னேஷ் வைத்திருந்த பைல் காற்றில் படபடத்து ஒரு பக்கத்தில் நிலை கொண்டது.அதிலிருந்த போட்டோவை பார்த்த அருண் “பாஸ்! இந்த பொண்ணு மேலதான் நான் காரை மோதுனேன்.இது யாரு? “என்றான்.
பைலை பார்த்த விக்னேஷ் “இவதாண்டா மாயா! செத்துபோய் இந்த ஊர் மக்களை பழி வாங்குற பேய்! “என்றான்.இருவரின் உடலிலும் அட்ரீனல் நதி உற்பத்தியானது.