Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 11

விக்னேசின் கையிருந்த டார்ச் வட்ட வடிவமாக வெளிச்சத்தை கக்கியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி மூடி கிடந்த தெருவில் இருவரும் அந்த தீப்பிழம்பை நோக்கி நடக்க தொடங்கினர். "கால் கட்டை விரல்கூட கணணுக்கு தெரியலைடா" என்றான் விக்னேஷ். "தொப்பை அவ்வளவு பெருசா வா வளர்ந்திருக்கு" என்றான் அருண்.

"அவ்வளவு பனிடா" என்றான் விக்னேஷ். காற்றில் இலைகள் சலசலக்கும் ஓசை கூட வெகு துல்லியமாக கேட்டது. எங்கோ ஒரு தெரு நாய் ஊளையிட்டு பீதியை கிளப்பியது. தீ பிழம்பின் அருகே நெருங்கிய போது தான் அதன் அருகே யாரும் இல்லை என்பதை இருவரும் கவனித்தார்கள்." யாரு இதை பற்ற வைத்திருப்பார்கள்?" என்றான் அருண்.



" இதை பற்ற வைத்தவன் இங்கே பக்கத்தில் தான் இருக்கனும்." என்றான் விக்னேஷ்.



இருவரும் சுற்றும் முற்றும் பார்த்த போது அருணின் முதுகை யாரோ தொட்டார்கள். ஒரு நிமிடம் அருணின் இதயம் நின்று துடித்தது. துப்பாக்கியின் ட்ரிக் கரை இறுக்கி பிடித்த வன் சட்டென்று திரும்பி அதிர்ந்தான். காலை யில் போலீஸ் ஸ்டேசன் வாசலில் மாயா உங்க மேல கோபமா இருக்கா என்று சொன்னவன் உடலை சுற்றி ஒரு போர்வையை போர்த்தியபடி பேயை போல் நின்றான்.



பிச்சைக்காரனா ம ன நிலை தவறியவனா என்று கணிக்க முடியாத அவனை பார்த்து அருண் "யோவ்’ இங்க என்ன செய்கிறாய்?" என்றான்.



அவனோ பதில் பேசாமல் உதட்டுக்கு நடுவே ஆட்காட்டி விரலை வைத்து “உஷ்" சத்தம் போடாதே”" என்றான்.



"ஏன்?" என்றான் விக்னேஷ்.



"மாயா வேட்டைக்கு கிளம்பிட்டா’ ரத்தம் பாக்காம இனி அவதூங்க மாட்டா”



"நீங்க யாரு?மாயாவோட பி.ஏவா?" என்றான் அருண்.



" அருண். கிண்டல் வேணாம். சரி நைட்டு எங்கே படுத்திருந்தீங்க?" என்றான் விக்னேஷ்.



"அந்த கடை வாசல்ல தான் ‘" என்று அவன் கை காட்டியதிசையில் பேப்பர்கள் விரித்து போடப்பட்டு ஒரு கொசுவர்த்தி சுருள் புகைந்து கொண்டிருந்தது.



" மாயா எப்பத்தான் வேட்டைய நிறுத்துவா ? என்றான் விக்னேஷ்



" அந்த குழாய்ல புகை வராத போது மாயா அமைதியாயிருவா, " என்றவன் பெர்லைட் டின் பிரமாண்ட சிமிழிகளை கை காட்டினான்.



"புகை வந்தா என்னாகும்?”



"மாயாவுக்கு கோபம் வரும் “



“மாயாவுக்கு கோபம் வந்தா என்ன பண்ணுவா?”



"கொல்லுவா’ உங்களை எல்லாம் கொல்லுவா"



" அந்த வீட்டு பக்கம் வந்தியா?" என்றான் அருண் தங்கள் வீட்டை காட்டி.



"இல்லை" என்று தலையசைத்தவன் தீக்காய உட்கார்ந்து கொண்டான்.



தீயையே இலக்கின்றி வெறிக்கத் துவங்கினான் அவன். இனி அவன் எதையும் பேச மாட்டான் என்பதை இருவருமே புரிந்து கொண்டனர்.." ப்ளீச்’ என்ற சத்தத்துடன் கரண்ட் வந்தது. அதுவரை இருளில் இருந்த தெருவிளக்குகள் திக்கி திணறி எரியத் துவங்கின.



அவன் சட்டென்று எழுந்து " மாயா தன்னோட வேட்டையை முடிச்சிட்டா" என்றபடி தீப்பிழம்பை சுற்றி ஆட தொடங்கினான்.



"லூசுபயல் நம்ம தூக்கத்தை கெடுத்துட்டான்”" என்றான் அருண்.இருவரும் திரும்ப வீட்டிற்கு வந்து கதவை தாழிட்டனர். "இப்பத்தான் பாஸ் காஜல் அகர்வாலை பெட்டு ல. வைச்சு கசமுசா பண்ண ஆரம்பிச்சேன்" என்றான் அருண். "பரவாயில்லை மறுபடியும் முதல்லருந்து ஆரம்பி. ஆனா பெட்ஷீட்டை ஈரமாக்கி ராத. டயபர் கூட வாங்கி தந்துர்றேன்" என்றான் விக்னேஷ்." “நீங்க லுங்கிலடெண்ட் அடிக்காம குப்புற படுங்க பாஸ்" என்றான் அருண்.இருவரும் விட்ட உறக்கத்தை தேடி பிடித்து உறங்க தொடங்கினர்.



அதிகாலையில் கதவு தட்டப்பட்டது.விக்னேஷ் கொட்டாவி விட்டபடி கதவை திறந்தான். வெளியே பதட்டத்துடன் நின்றிருந்த கோபால் "ஸாரி பார் த டிஸ்ட பர்ன்ஸ் சார். நைட்டு இரண்டு கொலை நடந்திருக்கு சார். எல்லாம் மாயாவோட வேலை" என்றான்.



அருணும் விக்னேசும் ஒரு திடுக் உணர்வுக்கு ஆளானார்கள்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 12



"என்ன சொல்றீங்க கோபால்?" என்றான் அதிர்ச்சியுடன் விக்னேஷ்



"ஆமா சார் நேத்து நைட்ஒருத்தன் தன்னோட மனைவியையும் குழந்தையையும் கொடூரமா கொன்னு போட்ருக்கான். இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஸ்பாட் ல இருக்காரு. அக்யு ஸ்ட் இப்ப ஸ்டேசன்ல இருக்கான். அந்த கொலையை நான் செய்யலைன்னு சொல்லி கண்ணீர் விட்டு கதறுகிறான்.”



"இப்ப மர்டர் நடந்த ஸ்பாட்டுக்கு போலாமா?”



"போலாம் சார். செத்தது யார்னு தெரிஞ்சா உங்க அதிர்ச்சி அதிகமாயிரும் “



"யார் அது?”



"நேத்து ஒட்டல்ல பார்த்தோமே அந்த பொண்ணும் குழந்தையும் தான் கொல்லப்பட்டவங்க.”



"ஓ மை காட்.பார்பி பொம்மை மாதிரி அழகா இருந்தாளே கீர்த்தனா? அவளையா ?"



" ஆமாம் சார்"



"மர்டர் எந்த டைம்ல நடந்ததுன்னு தெரியுமா?”



"நைட் 12 to 12-30 சார்”



"இங்கே கரண்ட் போன அதே டைம்” என்றான் அருண்.



"அப்போ அந்த பைத்தியக்காரன் சொன்னது உண்மையா வே நடந்துருச்சா " என்றான் விக்னேஷ்.



"அப்போ அவனுக்கும் மாயாவுக்கும் ஏதோ லிங்க் இருக்கு”



"முதல்ல ஸ்பாட்டுக்கு போவோம். பிறகு அவனை தேடலாம்" என்றான் விக்னேஷ்.



இருவரும் உடை மாற்றி கொண்டு கிளம்பினர்.

அந்த வீட்டிற்குள் ஏற்கனவே பொன்ராஜ் தன் டீமுடன் காத்திருந்தார்.



“உள்ளே வந்து பாருங்க"இது உங்க கேஸ்" என்றார் பொன்ராஜ்.



இருவரும் உள்ளே நுழைந்து படுக்கையறைக்கு நகர்ந்தனர்.



உள்ளே நுழைந்த விக்னேஷ் " கொடூரம்" என்றபடி வெளியே வந்தான்.



" தூங்கிட்டு இருந்தவங்களை தலைல சுத்தியால அடிச்சு கொன்று விட்டான். அந்த சின்ன குழந்தையை கூட விட்டுவைக்கலை" என்றான் அருண். வீட்டின் பொருட்கள் ஒழங்கற்று தாறுமாறாக கலைந்திருப்பதை இருவரும் கவனித்தனர். "வெங்கல கடைல யானை புகுந்த மாதிரி எல்லாத்தையும் கலைச்சு போட்டுருக்கான்" என்றான் அருண்.



பாரன்சிக் ஆட்கள் அந்த வீட்டை சல்லடையாக சலித்து கொண்டிருந்தனர். வெளியே நின்ற கூர்க்கா சல்யூட் அடித்து " நான் தான் அவனை மடக்கி பிடித்தேன்." என்றான்.



"நீங்க அவனை பிடிக்கும் போது ஆள் எப்படி இருந்தான்?" என்றான் விக்னேஷ்.



"பேய் பிடிச்ச மாதிரி இருந்தான். பக்கத்து தெருகூர்க்காவோட உதவியோட தான் அவனை மடக்கி பிடிக்க முடிஞ்சுது." என்றான் அவன்.



" ஏதாவது தடயம் கிடைத்தால் சொல்லுங்கள்" என்று பொன் ராஜிடம் சொல்லிவிட்டு மூவரும் கிளம்பினர். காரில் மயான அமைதி நிலவியது.விக்னேஷ் எதையும் பேசாமல் மவுனத்தில் ஆழ்ந்தான். கார் போலீஸ் ஸ்டேசன் வாசலில் நின்றது. மூவரும் உள்ளே நுழைந்த போது லாக்கப்பில் இருந்தவன் நிறைய அழுது களைத்திருந்தான். சத்தம் கேட்டு நிமிர்ந்தவனை பார்த்து



“உங்க பேர்!?" என்றான் அருண்.



" ராஜேஷ் “ என்றவன் அழுகையை கட்டுப்படுத்த முயன்று தோற்றான்.



"" ராஜேஷ். நைட் என்ன நடந்ததுன்னு சொல்ல முடியுமா?”



" நைட் தூங்கியது வரை நினைவிருக்கு. அதுக்கு பிறகு நடந்தது எனக்கு நினைவில்லை.”



"அப்ப இந்த கொலைகளை நீங்க செய்யலை?”



" கட்டுன பொண்டாட்டியையும் பெத்த புள்ளையையும் யாராவது சொல்லுவாங்களா?”



" வேற ஆபையர் எதாவது இருந்து அதுக்கு பொண்டாட்டியும் புள்ளையும் தடையா இருக்கும்னு நினைச்சு கொலை பண்ணிட்டு பழிய மாயா மேல போடலாம்னு நினைக்கிறீங்களா?”



"என்னை சந்தேகப்படறீங்களா,?”



"அதுக்கு முகாந்திரம் இருக்கே?”



"இந்த கொலைய நான் பண்ணலை. பண்ணியது யார்னு தெரியும் “



"யாரு?”



"மாயா” என்றான் ராஜேஷ்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 13



" என்னப்பா? எது நடந்தாலும் மாயா ன்னு இல்லாத ஒன்னு மேல பழிய போடறீங்க?" என்றான் அருண்.



" நான் சொல்வது உண்மை. நைட்டு மாயா தான் என் உடம்புல புகுந்து இந்த கொலையை பன்ணியிருக்கணும்”



" உளறாதே ராஜேஷ். கோர்ட் சட்டம் இதெல்லாம் நீ சொல்றதை ஏத்துக்காது.”



"எனக்கும் தெரியும். ஆனா எந்த காரணமும் இல்லாம நான் ஏன் என் மனைவி குழந்தையை கொல்லனும்.? இந்த கேள்விக்கு என் கிட்ட பதில் இல்லை. உங்க கிட்ட இருக்கா?" என்றான் ராஜேஷ்.



" கொலை செய்த உனக்கே காரணம் தெரியாத போது எங்களுக்கு எப்படிUதில் தெரியும்?”



" ஆனா ஒன்னு மட்டும் உண்மை. கொலை செய்யும்போது நான் சுயநினைவில் இல்லை. இனிமே நான் வாழ்வதில் அர்த்தமே இல்லை. என் மனைவி குழந்தை இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பலை. என்னை உடனே தூக்குல போட்டு கொன்ருங்க”



"நினைச்சவுடன் சாவு வர நீ ஓன்னும் மகாபாரத பீஷ்மர் இல்லை. இனி கோர்ட், கேஸ், தீர்ப்புன்னு நிறைய படிய தாண்டித் தான் நீ தூக்குக்கு போக முடியும். உன்னோட வக்கீல் திறமைசாலியாக இருந்தால் சுயநினைவில் இந்த கொலை நடக்கலைன்னு நிருபிச்சு உன்னை வெளியே கொண்டு வர வாய்ப்பிருக்கு .அதோட வெற்றி வாய்ப்பு ரொம்ப குறைவுதான்.”



" நான் வெளியே வந்து யாருக்காக வாழப் போறேன்.?”



"நெகடிவ்வா பேச வேணாம் ராஜேஷ்.அன்னைக்கு நைட் என்ன நடந்ததுன்னு நல்லா யோசிச்சு பாரு.வினோதமா எதாவது தோணுச்சா?”



"இல்லையே? ம். ஞாபகம் வருது. கரண்ட் போன போது மெலிசா மல்லிகை பூ வாசம் அடிச்சது “



" தோட்டத்துல மல்லிகை செடி, இல்லை ஜெஸ்மின் பாடிஸ்பிரே மாதிரி எதாவது உண்டா?”



" அப்படி எதுவும் இல்லையே?”



"ஒகே" இதே மாதிரி வினோதமா எதாவது நடந்திருந்தா ஞாபகப்படுத்தி பாரு. விபரீதமா எதையும் யோசிக்காதே” என்ற விக்னேஷ் அருணுடன் கிளம்பினான்.



"மல்லிகைப் பூ வாசமெல்லாம் பேய் வரும் போது தான் வரும்னு சொல்வாங்க?" என்றான் அருண்.



"அப்போ மாயா தான் கொன்னான்னு எப்.ஐ.ஆர் எழுதிருவோமா? இந்த கேஸ்ல எதோ ஒன்னு பிடிபடாம ஆட்டம் காட்டுது. அது என்னன்னு கண்டு பிடிச்சிட்டா கதை முடிஞ்சிரும்.”



"இந்த ராஜேஷ் வேற ஏகப்பட்ட டிப்ரசன் ல இருக்கான். எப்ப என்ன பண்ணுவான்னு தெரியலை.”



" உண்மைதான். அவனை தீவிர கண்காணிப்பு ல வைக்கனும்.”



“அடுத்தது என்ன செய்ய போறோம்?”



" நைட்டு கொலை நடக்கப் போவதை கரெக்டா சொன்ன அந்த பைத்தியக்காரனை தேடிப் பிடிக்கனும்.”



" அவன் பகல்ல சிட்டில தான் சுத்துவான். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா போற வழியிலேயே கண்ணுல படுவான்" என்றான் கோபால்.



கோபால் சொன்னது போலவே அரை மணி நேர பயணத்தில் டீக்கடை வாசலில் நின்ற அவன் மூவரின் கண்களில் மாட்டினான். கோபால் அவனை காருக்கு அழைத்து வந்தான்." சொல்றா ? மாயா கொலை பண்ண போறது உனக்கெப்படி முன்னாடியே தெரியும் " என்று கோபால் அடிக்க கை ஓங்கினான்.



" அடிக்காதீங்க கோபால் " என்ற விக்னேஷ் அவன் தோளில் கை போட்டபடி "மாயா மறுபடியும் எப்ப வருவாள்?" என்றான்.



" இருட்டுல தான் மாயாவருவாள். வேட்டைக்கு அதுதானே நல்ல நேரம் " என்றான் அவன்.



" உளராத டா" என்றான்கோபால்.



" அவன் உள ரலை. ஒரு உண்மையை சொல்லியிருக்கான். நீங்க யாரும் கவனிக்காத ஒரு உண்மை " என்றான் விக்னேஷ்.



"என்ன சார் அது?”



" எனக் கே இன்னும் உறுதியா தெரியலை. ஒரு யூகமா இருக்கு. வீட்டுக்கு போயிட்டு கன்பார்ம் பண்றேன்" என்று புன்னகைத்தான் விக்னேஷ். இருவரும் புரியாமல் அவனை பார்த்தனர்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 14



"என்ன பாஸ் சொல்றீங்க?" என்றான் அருண் புரியாமல் .



"இவனிடமிருந்து ஒரு சின்ன க்ளு கிடைச்சிருக்கு. அது சரியா தப்பான்னு கன்பார்ம் பண்ணிடுவோம்." என்றான் விக்னேஷ்



" இவனை என்ன செய்யறது?" என்றான் கோபால்.



"இப்போதைக்கு விடுங்க. தேவைப்படும் போது விசாரிக்கலாம். கோபால் எனக்கு ஒரு தகவல் தேவை.”



"சொல்லுங்க சார்.’ என்ன தகவல் வேணும்."



" கடந்த ஒரு வருசத்துல டிசம்பர் சீசன்ல எப்போதேல்லாம் கரண்ட் போச்சுங்கிற டீடெய்ல் வேணும்.”



"கழுகுமலை சிட்டி பெருசு சார். இங்க ஈ.பி நாலு டிவிசனாபிரிஞ்சு இருக்கு. இதுல எந்த டீ விசன் டீடெய்ல் வேணும்?”



" அதிகமான கொலை எந்த டிவிசன் ல நடந்ததுன்னு தெரியுமா?”



" ஈஸ்டு டிவிசன்ல தான் 22 கொலை நடந்திருக்கு.”



"போன வரும் ஈஸ்ட்டிவிசன் ல எப்போதெல்லாம் கரண்ட் போச்சுன்னு கண்டு பிடிச்சுட்டு டீடெய் லோட வீட்டுக்கு வாங்க" என்றான் விக்னேஷ்



"ஓகே சார்" என்ற கோபால் அந்த பைத்தியக்காரனை விட்டு விட்டு ஆட்டோவை தேடி ஏறினான்.அருண் காரை கிளப்பினான். "எதுக்கு பாஸ்கரண்ட் போன டீடெய்ல் " என்றான் அருண்.



“அந்த பைத்தியக்காரன் சொன்னதை கவனிச்சியா?”



"இருட்டுல மாயா வருவான்னு சொன்னான். பேய்கள் இருட்டில் வருவது வழக்கம் தானே?”



" ஆப்போ சிட்டா யோசி ‘ வெளிச்சமா இருந்தா மாயா வர மாட்டாள், “



"யூ மீன் கரன்ட் போகலைன்னா மாயாவர மாட்டாள்னு சொல்றீங்க?”



"அதே .இதையும் நான் சொல்லலை. அந்த பைத்தியக்காரன் தான் சொன்னான். அவன் சொன்னதை மாத்தியோசிச்சா இந்த மீனிங் தான் வருது.”



"அப்ப கரண்ட் போறதுக்கும் மாயா வருவதற்கும் எதோ ஒரு லிங்க் இருக்குன்னு சொல்றீங்க?”



"உறுதியா நம்புறேன்" நீ வேணா கோபால் கொடுத்த பைல்ல செத்து போன டைம், கொலை பண்ண டைமை தனியா எழுதி வை.கோபால் கொண்டு வருகிற டீடெய் லோட அது மேட்ச் ஆகுதான்னு பார்ப்போம்.”



"மேட்ச் ஆனா ?”



" மாயா பேரை சொல்லி யாரோ விளையாடுறாங்கன்னு அர்த்தம்.”



"மேட்ச் ஆகலைன்னா?”



" நாம தப்பான வழியில போயிட்டு இருக்கோம்னு அர்த்தம்.”



காரை வீட்டில் நிறுத்தியதும் உள்ளே ஓடிய அருண் தனி பேப்பரில் கொலை நடந்த நேரத்தை தனியாக குறிக்க ஆரம்பித்தான்.



சற்று நேரத்தில் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கினான் கோபால்.

உள்ளே வந்தவனிடமிருந்து மினிட் புக்கை வாங்கி கரண்ட் போன நேரத்தை குறிக்க ஆரம்பித்தான் அருண்.கோபாலிடம் தன் டவுட்டை சொன்னான் விக்னேஷ். அதே நேரம் துள்ளிக் குதித்தான் அருண்.



"பாஸ்" உங்க டவுட் சரிதான். இரண்டும் பக்காவா பொருந்தி போகுது. கரண்ட் போறதும் மாயா வர்ரதும் ஒரே டைம் தான் " என்றான் அருண்.



“அப்ப கரண்ட் போகலைன்னா மாயாவர மாட்டாள்?" என்றான் கோபால்.



" சரிதான். ஆனா மழை காலத்திலும் குளிர்காலத்திலும் அடிக்கடி கரண்ட் போவது சகஜம் தான்.”



" அப்ப வெய்யில் காலத்துல கரண்ட் போன போது ஏன் மாயாவரலை?" என்றான் கோபால்.



மூவரிடையே பூதாகாரமாக எழுந்து நின்றது அந்த கேள்வி.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 15



"கோபால் நீங்க கேட்ட கேள்விக்கு எனக்கு உண்மையாவே பதில் தெரியலை. ஆனா குளிர் காலத்துல நடக்கிற கொலைக்கு காரணத்தை கண்டுபிடிச்சா இதுக்கும் விடை கிடைத்துவிடும்னு நம்புகிறேன்" என்றான் விக்னேஷ்.



"புல்லுக்கு பாயுற தண்ணி எள்ளுக்கு பாய்ஞ்ச மாதிரியா?" என்றான் அருண்.



"பழமொழிய தப்பா சொல்றீங்க. இருந்தாலும் நீங்க சொல்ல வருவது புரிகிறது." என்றான் கோபால்.



"புரிஞ்சா சரி" என்ற அருண் கோபால் கொடுத்த பைலை விக்னேசிடம் கொடுத்தான்.அருண் எழுதி கொடுத்த லிஸ்டை சரி பார்த்த விக்னேஸ் "இந்த பைல்ல என்னென்ன டீடெய்ல் இருக்கு?" என்றான்.



"செத்த வங்களோட பேரு, வயசு, தொழில், கொலை செஞ்சவனோட பேரு வயசு தொழில், போஸ்ட் மார்டம் ரிப்போர்ட், டெத் சர்டிபிகேட் எல்லாமே இருக்கு.”



"கொலை செய்தவர்கள் யாரும் உயிருடன் இல்லை.”



" தனக்கு ப்ரியமானவர்களை கொன்று விட்டோமே ங்கிற குற்ற உணர்ச்சியிலோ, தண்டனைக்கு பயந்தோதூக்கு போட்டு இல்லைன்னா போலீஸ் ஜீப்புலருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கிறாங்க.”



"ஓரே நாள்ல வாழ்க்கை தலை கீழா மாறுனா யாராலையும் ஏத்துக்க முடியாதுதான்.”



"அதுக்குன்னு யாராவது சாக துனிவார்களா?”



"யாருக்காக வாழனும்னு அர்த்தம் இல்லாத கேள்வி ஓன்னு அவங்க முன்னாடி நிக்குதே?" என்ற விக்னேஷ் பைலில் இருந்தவற்றை சரிசமமாக பிரித்து இருவரிடமும் கொடுத்தான்.



"இத்தனை கொலையிலும் ஏதாவது ஒற்றுமை அல்லது வித்தியாசம் இருக்கான்னு தேடி பாருங்க" என்றான்.

இருவரும் ஆளுக்கொரு பேப்பரை எடுத்து கொண்டு படுக்கையில் உட்கார்ந்தனர். இருவரும் தனித்தனி பேப்பரில் கேஸ் விசயங்களை எழுத துவங்கினர்.



விக்னேசும் சில பேப்பர்களை எடுத்துக் கொண்டு எழுதத் தொடங்கினான்.



ஒரு மணி நேரத்தில் அருண்விசிலடித் தான். "பாஸ்" எல்லா கொலையிலும் கொலை செய்தவனோட ப்ளட் குரூப் ஒரே குரூப் தான் பாஸ்”



"எனக்கும் அதே ரிசல்டு தான் வருது" என்றான் கோபால்



" என்ன குருப்ப்ளட் அது?" என்றான் விக்னேஷ் ஆவலுடன் .



" o குரூப் பாஸ். “



"யுனிவர்சல் டோனர் " என்றான் விக்னேஷ்.



" அப்படின்னா?”



"அவங்க ரத்தம் பொதுவானது. யாருக்கு வேணா ஏத்தலாம். யுத்த காலத்துல Oகுருப்புக்கு பெத்த டிமாண்ட் அதனால அதை யுனிவர்சல் டோனர்னு சொல்லுவாங்க " என்றான் விக்னேஷ்.



"உலகப் பொதுமறைமாதிரியா?" என்றான் கோபால்.



" என்னுது கூட அதே குரூப் தான் " என்றான் அருண்.



" கரண்ட் போவதற்கும் மாயா வருவதற்கும், இந்தo குரூப்காரனுக கொலையாளியா மா றுரதுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு" என்றான் விக்னேஷ்.



அதே நேரம் கோபாலின் செல்போன் ஒலித்தது. எடுத்து பேசிய கோபாலின் முகம் மாறியது.

"சார், .அந்த ராஜேஷ் லாக்கப் புலயே தற்கொலை பண்ணிட்டானாம் சார். இன்ஸ்பெக்டர் போன் பண்ணினார் " என்றான் கோபால்



மூவரும் எதிர்பாராத சம்பவத்தால் திகைத்து நின்றனர்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 16



"நினைச்சேன். அந்த ராஜேஷ் இப்படி விபரிதமா எதாவது பண்ணுவான்னு?" என்றான் விக்னேஷ்.



"ஸ்டேசன்ல தற்கொலை பண்ணிக்க வாய்ப்பிருக்கா?" என்றான் அருண்.



"அரணாக் கயிறு கூட அனுமதிக்கப்படாத சிறையிலேயே தற்கொலைகள் நிகழ்வதில்லையா?" என்றான் கோபால்.



"சரி.’ வாங்க ஸ்டேசன் போய் ஏதாவது கிடைக்குதான்னு பார்ப்போம்" என்றான் அருண்.



மூவரும் போலீஸ் ஸ்டேசனுக்கு காரில் விரைந்தனர். காத்திருந்த பொன்ராஜ் "லாக்கப்புல செத்து என்னோட தாலிய அறுக்கிறானுக. டிப்பார்ட்மெண்ட் என் குயரின்னு நம்ம சாகடிப்பானுக " என்றார்.



" எப்படி அந்த ராஜேஷ் செத்தான்?" என்றான் அருண்.



"சட்டைய கழட்டி கதவு கம்பில சுத்தி கழுத்தை உடைச்சுகிட்டான்." என்றார் பொன்ராஜ்.



“அடுத்தது?" என்றான் அருண்.



“போஸ்ட் மார்டம் தான் " என்றார் பொன்ராஜ்.



சில மணி நேரங்களுக்கு பிறகு பிணவறைக்கு முன்பு காத்திருந்தனர் மூவரும்.



தன் கை கிளவுஸை கழட்டியபடி வெளியே வந்த டாக்டர் வெலிங்டன் விக்னேனஸ பார்த்து புன்னகைத்தார்.



" யங் பாய்! உன்னோட டவுட் சரிதான். செத்து போன ராஜேஸோட பிளட் குரூப் Oதான் . கழுத்து எலும்பு உடைபட்டு உடனடி மரணம்” என்றார்.



"ஓகே டாக்டர் .ஒரு டவுட் கிளியராயிருச்சு. அப்படியே அவனோட ஸ்கல் மற்றும் பிரெய்ன் பகுதிகளை கொஞ்சம் கவனமாக பரி சோதிக்க முடியுமா?" என்றான் விக்னேஷ்.



" குறிப்பா இந்த இரண்டையும் கேக்க ஏதாவது காரணம் இருக்கா?”



" இருக்கு டாக்டர் .1941. ல் சார்லஸ் விட்மேன் என்ற அமெரிக்க ராணுவ வீரன் எந்த வித நோக்கமும் விரோதமும் இல்லாமல் குருவியை சுடுவது போல பொது மக்கள் 15 பேரை சுட்டு கொன்று விட்டான். அவனுக்கு டெக்சாஸ் டவர் கில்லர் னு பேரு.ரொம்ப நல்ல மனுசனான அவன் ஏன் திடிர்னு கொலைவெறியாகி இத்தனை பேத்தை சுட்டு கொன்னான்னு போலீஸ் தலைய பிச்சுக்கிச்சு. Uதில் சொல்ல சார்லஸ் உயிரோட இல்லை. அவனையும் சுட்டு கொன்னுட்டாங்க. விடை தெரியாத ஒரு கேள்விய தேட ஆரம்பிச்ச போது அவனோட டைரி கிடைச்சது. அதுல தனக்கு அடிக்கடி கொலை வெறி வருவதாகவும் அதை கட்டுப்படுத்த முடியலைன்னும் தான் செத்ததும் தன் மூளையை பரிசோதிக்கும் படியும் எழுதியிருந்தான். சரின்னு அவன் மூளையை சோதித்த போது அவனோட மூளையில் வளர்ந்திருந்த ஓரு சின்ன கட்டி மூளையின் வன்முறையை தூண்டும் பகுதியில் அழுத்தத்தை உண்டாக்கி இருப்பதை கண்டுபிடித்தார்கள். பிசிக்கலா பாதிக்கப்பட்டு பல கொலைகளை செய்த ஒரே ஆள் இவன்தான்.”



"ஓகே' .இதுக்கும் ராகேசுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கும்னு நினைக்கிறீங்களா?”



"கொலை பண்ணியவர்கள் எல்லோரும் 0 குரூப் தான்னு கன்பார்ம் ஆனதும் வந்த டவுட் இது .ஏன்னா அவங்க ரத்தத்துல ஆண்டிஜென்ங்கிற பொருள் இல்லை. அதனால பிசிக்கலா உடம்புல ஏதாவது பாதிப்பு வருமான்னு தெரிஞ்சுக்க விரும்புறேன்”



" உங்க டவுட் சரிதான். நான் சோதனை பண்ணிட்டு வர்றேன்" வெலிங்டன் தன் கையுறைகளை எடுத்து கொண்டு பிணவறைக்குள் மீண்டும் நுழைந்து கதவை சாத்தினார்.



மூவரும் மூடிய கதவை வெறித்தபடி காத்திருந்தனர்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 17



"இப்ப டாக்டர் வெளிய வந்து செத்து போன ராஜே சோட மூளை ல நீங்க நினைச்ச மாதிரி ஒரு கட்டி இருக்குதுன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க பாஸ்?" என்றான் அருண்.



"இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியலை. ஆனால் ஒன்னு கன்பார்ம் ஆயிரும்.O குரூப் காரங்க தான் கொலை பண்றாங்கன்னு கண்டு பிடிச்சிட்டோம். இந்த கழுகுமலை ல அந்த ரத்த குரூப்காரர்களை வெளியேற்றி விட்டால் கொலை நடக்காது.” என்றான் விக்னேஷ்.



"இதெல்லாம் தற்செயலா நடக்குதா இல்லை யாராவது பின்னால் இருந்து இயக்குறாங்களா?”



"அதுதான் தெரியலை.மோசஸ் எகிப்திலிருந்து யுதர்களை மீட்க ஒன்பது வாதைகளை ஏவி விட்டதாக படித்திருப்போம். அதில் ஒரு வாதை தொற்று நோய்களை ஏவி விடுவது. அதற்கு முன்பாக யூதர்கள் ஆட்டு ரத்தத்தை தங்கள் வீட்டு கதவில் பூச வேண்டும் என்று மோசஸ் கட்டளையிடுகிறார். லட்சக்கணக்கான எகிப்தியர்கள் தொற்று நோயால் மரணமடைந்த போதும் யூதர்கள் ஒருவர் கூட மரணமடைவதில்லை. இதனால் கடவுளின் அருள் யூதர்களுக்கு இருப்பதாக நினைக்கும் ராஜா அவர்களை விடுவிக்கிறான்.”



"இப்போது எதுக்கு இந்த கதை?”



"சம்மந்தம் இருக்கு. அந்த ஆட்டு ரத்தம் ஒரு ஆண்டிபயாடிக்கா செயல்பட்டு தொற்று நோயிலிருந்து யூதர்களை காப்பாற்றி இருக்கலாம்.”



"அது சரி பாஸ்! இங்கே கொலை இல்ல பண்றானுக?”



"அதுதான் குழப்புது .எட்வர்ட் ஜென்னர் அம்மைக் கு மருந்து கண்டு பிடிச்ச மாதிரி எதாவது நடக்குதான்னு தெரியலை.”



"அது என்ன கதை? சொல்லுங்க தெரிஞ்சுக்குவோம்" என்றான் கோபால்



" இங்கிலாந்து ல அம்மை பரவி நிறைய பேர் செத்து போனாங்க. அதுக்கு மருந்து கண்டுபிடிக்க ஜென்னர் முயற்சி செய்தார். அப்போது தற்செயலாக தன் வீட்டுக்கு பால் ஊற்றுபவன் எங்க பரம்பரைக்கே அம்மை வந்ததில்லைன்னு தற்பெருமையாக பேசுவதை கவனித்தார். அப்புறம் மாட்டோட பழகுபவர்களை அம்மை தாக்குவதில்லைன்னு கண்டுபிடிச்சார். மாட்டோட மடியில சுரக்கிற நிணநீர் லருந்து அம்மைக்கான மருந்தை கண்டுபிடிச்சாரு.”



"சரி பாஸ். இங்க ஒ குருப்காரர்களை கொலைகாரனாக மாற்றுவது யார்? எது? யாருக்காக? “



" பெர்லைட்டாக இருக்கலாம். இல்லை தமிழ்செல்வனாக இருக்கலாம். இரண்டு பேரும் இல்லாமல் வேறு யாராவதாக கூட இருக்கலாம்”



" குழப்பு றீங்க" என்று அருண் சொல்லும் போது கதவை திறந்து வெளியே வந்த வெலிங்டன்



"சாரி பையா ‘ உன்னோட கணிப்பு தப்பு. நீ நினைச்ச மாதிரி அவன் மூளை ல கட்டி எதுவும் இல்லை.” என்றார்.



"ஓகே டாக்டர் .இதுக்கு முன்னாடி பண்ணிய போஸ்ட் மார்டத்துல இந்த விசயத்தை கவனிக்கலைதானே?”



"ஆமாம். நீங்க சொல்லித்தான் நானே அதை நோட் பண்ணினேன்.”



மூவரும் வெளியே வரும் போது அருண் "இந்த கேஸ்ல தலையும் புரியலை. வாலும் புரியலை. இருந்த ஒரு கதவும் சாத்திருச்சு" என்றான் சோர்வாக .



"நாம வேற கதவை தட்டுவோம்" என்று புன்னகைத்த விக்னேஷை திகைப்புடன் பார்த்தனர் இருவரும் .
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 18



" இருந்த ஒரே கதவும் இதுதான். இனி எத போய் தட்டுறது?’ என்றான் அருண்.



"ஏன் மனசை தளரவிடுகிறாய் அருண், நாம கொலை நடக்குற காரணம் வரை கண்டுபிடிச்சுட்டோம். இனி இதெல்லாம் தற்செயலா நடக்குதா இல்லை நம்மை விட புத்திசாலிகள் இதற்கு பின்னாடி இருக்காங்களான்னு கண்டு பிடிச்சுட்டா கே ஸே முடிந்துவிடும்." என்றான் விக்னேஷ்



"சரி பாஸ். நாம அதை கண்டுபிடிக்க வேற வழி இருக்கா?”



" இருக்கு. இப்ப கே ஸோட கோணத்தை மாத்துவோம். மாயா தரப்பிலிருந்து விசாரணைய ஆரம்பிப்போம்.”



"மாயா தான் செத்து போயிட்டாளே?”



"அவளோட அண்ணன் அர்த்த நாரி உயிரோட தானே இருக்கான்?”



" ஆனால் அவன் ஊமை சார். அவனை எப்படி விசாரிப்பது?”



" முயற்சி பண்ணுவோம். அவனை காப்பாத்துற பழங்குடி மக்கள் அவனுடன் பேச ஏதாவது வழிய கண்டுபிடிச்சு வைச்சிருப்பாங்க”



" அப்படின்னா நாம இப்பவே சந்தைக்கு போகலாம். பழங்குடி மக்கள் தேன், சீமாரு , தேன் மாதிரியான பொருட்களை விற்க சந்தைக்கு வருவது வழக்கம். அவங்களோட ஒரே வருமானம் அதுதான்.”



"அப்ப கோபால் நாம உடனே அங்கே போவோம்." என்றான் விக்னேஷ்.



கார் பு கையை வெளியே விட்டபடி சந்தையை நோக்கி விரைந்தது. ரோட்டின் இருபுறமும் சாக்குகள் விரித்து போடப்பட்டு காய்கறிகள் கொட்டப்பட்டிருந்த சாலையில் கார் நத்தையாக ஊர்ந்தது.



சந்தை நெருக்கடியில் கார் போக முடியாமல் டிராபிக்கில் நின்றது. " காரை ஓரமா நிறுத்துங்க. அந்த பழங்குடி இனத்தவர்களின் பிரதிநிதியை கூட்டிட்டு வர்ரேன்" என்று கோபால் கூட்டத்தில் கரைந்தான். "இது தான் அந்த காலத்து சூப்பர் மார்க்கெட் " என்றான் விக்னேஷ்



சற்று நேரத்தில் வினோதமான உடைகளுடன் ஒருவனை கூட்டி வந்தான். உடல் முழுவதும் விதவிதமான பச்சை குத்தியிருந்த அவன்கார் அருகே வந்தவுடன்"கும்புடறேன் சாமி " என்று கையை குவித்தான். காது மூக்கில் வளையம் மாட்டி வினோத ஆபரணங்களை அணிந்திருந்தான்.



"இவர் பேர் நடராஜ். இவர்கிட்ட விசாரிச்சா அர்த்தநாரிய பத்தி எல்லா விசயமும் தெரியும் " என்றான் கோபால்.



"சாமி மாயாவோட அண்ணனையா கேக்குறிங்க? நீங்க பாரஸ்ட்டு ஆபிசருங்களா?”



“ இல்லை. போலீஸ் ..அந்தாளை நீங்கதானே பாதுகாப்பாவைச்சு பராமரிக்கிறீங்க?" என்றான் விக்னேஷ்



"அது உண்மை தான் சாமி .ஆனா இப்போ அவன் எங்க கிட்ட இல்லையே?”



"இப்ப எங்கிருக்கான்?”

"அவனை இனி பாக்கவே முடியாது”



"ஏன்?”



“ அவன் தேன் எடுக்கும் போது மலையிலிருந்து தவறி விழுந்து செத்துட்டானே ?”



"என்னது ! செத்துட்டானா?" என்றான் அருண். மூவரும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.



"ஆமா சாமி. அவனோட உடம்பு கூட எங்களுக்கு கிடைக்கலை. புகை போட்டு தேன் எடுப்பதில் நல்ல கெட்டிக்காரன். பாவம். அல்பா யுசுல போயிட்டான்" என்றான் அந்த நடராஜ்.



"இந்த கதவும் லாக் ஆயிருச்சு" என்றான் ஆயாசத்துடன் அருண்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 19



" வெயிட் பண்ணுவோம். ஏதாவது வழி கிடைக்கும் " என்றான் விக்னேஷ்.



"எந்த ரூட்ல போனாலும் எதாவது ஒரு தடங்கல் வருதே?" என்றான் அருண்.



"அந்த பைத்தியக்காரனை நாம கண்டு பிடிக்க வே இல்லை" என்றான் கோபால்.



" நமக்கே பைத்தியம் பிடிக்கிற நிலைமை லதானே இருக்கோம்., இதுல அவனை விசாரிச்சு என்ன கிடைக்க போவுது?" என்றான் அருண்.



" இல்லை அருண். அவனுக்கு ஏதோ விசயம் தெரிஞ்சிருக்கு. இல்லைன்னா கரண்ட் போனா கொலை நடக்கும் என்கிற விசயம் அவனுக்கு எப்படி தெரியும்?" என்றான் விக்னேஷ்.



"ஏற்கனவே பயங்கர களைப்பா இருக்கோம். அவனை எங்கேன்னு போய் தேடுவது?" என்றான் அருண்.



"ஆனா ஓரு விசயத்தை உறுதியா சொல்வேன். அவன் பைத்தியம் கிடையாதுன்னு.”



" எதை வைச்சு சொல்றீங்க?" என்றான் கோபால்.



"என்னிடம் பேசிய மூன்று முறையும் அவன் என் கண்களை பார்த்து பேசினான். மன நிலை பாதிக்கப்பட்டவனின் கண்கள் அலை பாய்ந்து கொண்டிருக்குமே தவிர நிலையாக பார்க்கும் திறனற்றவை. அதனாலேயே அவர்களை ஹிப்னாடிசமோ, மெஸ்மரிசமோ பண்ண முடியாது”



" அப்ப அவன் பைத்தியமா நடிக்கிறான்னு நினைக்கிறீங்களா?”



"அப்படியும் இருக்கலாம்னு சொல்றேன்”



மூவரும் பலவாறாக பேசி பேசி களைத் தனர். சிறிது நேரத்திற்கு பிறகு கோபால் விடை பெற்று கிளம்பினான். ஓட்டலில் இருந்து வந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு இருவரும் படுக்கையை விரித்தனர். நைட் லேம்பை மட்டும் போட்டுவிட்டு கதவை தாழிட்டு கொண்டு இருவரும் உறங்க தொடங்கினர். இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினர். வெளியே மெல்ல மெல்ல பனியின் அடர்த்தி அதிகரிக்க ஆரம்பித்தது.



நள்ளிரவில் திடிரென விக்னேஷ் உறக்கம் கலைந்து எழுந்த போது கரண்ட் போயிருந்தது. டார்ச்சைகையில் எடுத்த விக்னேஸின் உள்ளுணர்வு வெளியே எட்டி பார் என்றது. கதவின் தாழ்பாளை நீக்கி விட்டு வெளியே காலை எடுத்து வைத்தான் விக்னேஸ்.திறந்திருந்த கதவின் வழியே பனி வெண்மையாக உள்ளே நுழைந்து அருணை தீண்டியது. சில நிமிடங்களில் கண் விழித்த அருணின் கண்கள் இயல்பாக இல்லை. அருகே இருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து கொண்டவன் கொலை வெறியோடு வீட்டை விட்டு வெளியேறினான்.



தனக்கு பின்னால் வரும் ஆபத்தை அறியாத விக்னேஷ் மெயின் கேட்டை திறந்தான். பின்னால் சத்தம் கேட்டு திரும்பியவன் அருணை பார்த்து "நீயும் எந்திரிச்சுட்டியா?" என்றான்.



அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் முறைத்த அருண் “சாவுடா" என்றபடி கிரிக்கெட் பேட்டை தலைக்கு மேல் தூக்கி விக்னேஸின் தலையை நோக்கி இறக்கினான்.



" அருண் i வேண்டாம்" என்று உச்சஸ்தாயில் அலறினான் விக்னேஷ்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 20



கொலை வெறியோடு கிரிக்கெட் மட்டையை தலைக்கு மேல் தூக்கி கொண்டு தன் மீது பாய்ந்த அருணின் வினோத செய்கையால் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போன விக்னேஷ் "அருண் வேண்டாம்" என்றபடி கையில் இருந்த டார்ச்சால் கிரிக்கெட் பேட்டை தடுக்க முனைந்தான்.



வலுவாக கையில் விழுந்த கிரிக்கெட் பேட்டின் அடியால்விக்னேசின் கையில் இருந்த டார்ச் நழுவி கீழே விழுந்து உருண்டு தாறுமாறாக வெளிச்சத்தை பாய்ச்சி அந்த இடத்தை இன்னும் பயங்கரமாக்கியது. தன் வலுவான கால்களை எடுத்து வைத்து அருண் கொலை வெறியோடு முன்னேறிய போது விக்னேஷ் இன்று தொலைந்தோம் என்று நினைத்தான். அவன் மனதில் இன்ஸ்டண்டாக ஒரு கடவுள் நம்பிக்கை உண்டாகி கடவுள் இருந்தால் பரவாயில்லை என்ற கமலின் எண்ணவோட்டத்துடன் இணைந்தான். இரண்டாவது முறையாக கிரிக்கெட் பேட்டை தலைக்கு மேல் உயர்த்தி கொண்டு ஒரு கிங்கரனை போல் அருண் முன்னேறினான்.



"வேண்டாம் அருண் " என்றபடி கிரிக்கெட் பேட் வரும் திசையை தவிர்த்து கொள்ள போராடினான் விக்னேஷ். மின்னல் வெட்டு போல் அரைவட்டம் அடித்து பேட் விக்னேசை நோக்கி வந்த போது அந்த அதிசயம் நடந்தது.விக்னேஸ்வலுவாக பின்புறம் இழுக்கப் பட்டு கிரிக்கெட் பேட்டின் தாக்குதல் பாதையிலிருந்து கொத்தாக விலக்கப்பட்டான். அதே நேரம் அருணின் மார்பில் ஒரு வலுவான உதை விழுந்தது. கீழே விழுந்த விக்னேஸ் கையில் அகப்பட்ட டார்ச்சை எடுத்து கொண்டு நிமிர்ந்தான். டார்ச் சின் வெளிச்சத்தை அருணின் பக்கம் திருப்பிய போது தான் அவனை பார்த்தான்.



இதற்கு முன் விக்னேஸ் சந்தித்திருந்த அந்த பைத்தியக்காரன் அருணின் மார்பு மேல் உட்கார்ந்து கொண்டு அவனது இரு கன்னங்களை அறைய துவங்கினான்.



என்ன நடக்கிறதென்று தெரியாமல் திகைத்து நின்ற விக்னேனஸ பார்த்து "நான் படுத்திருக்கும் இடத்தில் கொசுவர்த்தி சுருள் இருக்கும். அதை எடுத்துட்டு வாங்க" என்று கத்தினான்.



விக்னேஷ் மூடிய கடைக்கு முன்பாக விலக்கப்பட்டிருந்தபேப்பர் சீட்டுகளிடையே புகைந்து கொண்டிருந்த கொசுவர்த்தி சுருளை எடுத்து வந்தான்.



அதை கையில் வாங்கி அதன் புகையை அருணின் மூக்கு பக்கமாக தள்ளினான் அவன்.



சிறிது நேரத்தில் அருண் இயல்பு நிலைக்கு திரும்பவும் கரண்ட் வரவும் நேரம் சரியாக இருந்தது.



"என்னாச்சு பாஸ்?" என்றான் அருண் மலங்க மலங்க விழித்தபடி.



" கொல்லப் பாத்தியேடா பாவி" என்றான் விக்னேஷ்.



"பாஸ்" நாம தேடுன ஆளு." என்று அவனை சுட்டி காட்டினான் அருண்.



“அவன் தான் உன்னிடமிருந்து என்னை காப்பாற்றினான் " என்ற விக்னேஷ் நடந்ததை விளக்கினான்.



" நானா பாஸ் அப்படி பண்ணினேன் ? நம்பமுடியலை”



"சம்பளம் கரெக்டா தானே தர்ரேன்.? அப்புறம் ஏன் கொல்ல பாத்த?" என்றான் விக்னேஷ்.



இருவரும் சகஜமாக பேசி கொள்ள துவங்கியதும் அவன் நகர துவங்கினான்.



" எங்க நைனா கம்பி நீட்டு ற ?"உனக்கு நிறைய கேள்விகள் காத்திருக்கிறது" என்றான் அருண்.



" கொசுவர்த்தி புகைக்கும் நடக்கிற கொலைக்கும் எதோ சம்மந்தம் இருக்கு. இல்லைன்னா நீ ஏன் கொகவ ர்த்தி புகைய மூக்குல காட்டணும்?" என்றான் விக்னேஷ்.



" உங்க கேள்விக்கு விடை எனக்கு தெரியாது. ஆனா கரண்ட் போனாகொலை நடக்கும்னு எனக்கு தெரியும். ரொம்ப நாளா கவனிச்சு கண்டுபிடிச்சேன்” என்றான் அவன்.



“அதைத்தான் நாங்க கண்டுபிடிச்சுட்ட மே? இந்த புகைக்கும் கொலைக்கும் என்ன சம்மந்தம்?" என்றான் அருண்.



" கரண்ட் போகும் போதெல்லாம் கொசுவை விரட்டும் காயில் ரீபிள் வேலை செய்யாது. அப்போதுதான் மாயா வருவாள்”



விக்னேஷ் அவசரமாக வீட்டிற்குள் நுழைந்து காயில் ரிபிளை பார்த்தான்.



அது காலியாக இருந்தது.
 

Latest posts

New Threads

Top Bottom