Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

சதுரங்கம் - Comments

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
குருவுக்கு தண்டனை கொடுத்ததுல ரொம்ப சந்தோசம்..சாது,ரங்கன் மகிழ்ச்சியா வாழ்றாங்க..ஸ்கந்தனும் ஹேப்பியா இருக்கான்..மாவட்ட ஆட்சியராய் அமர வேண்டியவளை விதி முதலமைச்சர் பதவியில் அமர்த்தி பல பெண்களின் கண்ணீரை துடைத்துவிட்டது..அருணாச்சலத்தின் அரசியல் வாழ்வால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்..முடிவு அருமை..வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்💐💐💐
ரொம்ப நன்றிங்க. ஆரம்பம் முதல் நீங்க குடுத்த ஆதரவுக்கு மீண்டும் நன்றி.
 
Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
Kadhai romba super sis.guruvuku thandanai kedachutu.ranganum sadhuvum seruthutanga.different story sis.
ரொம்ப நன்றிங்க... எழுத ரொம்ப யோசிச்சேன். படிக்கிறவங்க yethupaangalaa ன்னு இருந்தது.
 
Gokulapriya

New member
Messages
1
Reaction score
2
Points
3
முதலில் இப்படியொரு கதைக்கருவை கையில் எடுத்து வெற்றிகரமாக நிறைவு செய்த சுபா சகிக்கு எனது வாழ்த்துகள்...
கதை படிக்கத் தொடங்கிய போது சாதுர்யா என்ற பெண்ணின் சதுரங்க ஆட்டத்தை பார்க்கப் போகிறோம் என்ற ஆவலில் தான் தொடங்கினேன்..

சதுரங்க ஆட்டத்தில் ராஜாவை விட ராணிக்கு தான் பலம் அதிகம்.. இங்கும் அதே போல வெளியே ராணியாக சாதுர்யா சதுரங்க ஆட்டத்தை ஆடினாள் என்றால் ரங்கன் அவளிற்கு பின்புல சப்போர்ட்டாக இருந்தான்...

சந்தர்ப்பவாதிகளாக உமா, ராக்காயி, ரத்னா போன்ற பல பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழந்தது எல்லாம் கண்ணீரை வரவழைத்தாலும் ஏதோவொரு வகையில் அவர்கள் தங்களை செதுக்கிக் கொண்டதும் நெகிழ்ச்சியாக இருந்தது....

ரங்கனைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.... தொடக்கம் முதல் இறுதிவரை அவனிற்கு சாதுர்யா என்ற பெண்ணின் மேல் இருந்த அன்பு எத்தகையது என்று வரையறுக்கவே முடியவில்லை... ஒரு ஆண் இந்த அளவிற்கு ஒருவரின் மேல் எந்த சூழ்நிலையிலும் குறையாத அன்பை காட்ட முடியுமா என்ற வினாவிற்கு அவனே விடை...

சிவம் தனது மகளின் இறப்பிற்கு நீதி தேடிக்கொண்டாலும் அவர் தனது மூத்த மகளின் வாழ்க்கையில் செய்த ஒரே குளறுபடி கடைசிவரை அவரை தனியாளாக நிற்க வைத்தது...

அருணாச்சலம் என்ற மனிதர் தனது அரசியலிற்காக குடும்பத்தையும் சரிவர நடத்தவில்லை...தனது மகனையும் பொறுப்பான குடிமகனாக வளர்க்கவில்லை... அவர் சாதுர்யாவை அரசியல் வாரிசாக அறிவித்து பரிகாரம் தேடிக் கொண்டார்..

சாதுர்யா ஏன் ரங்கனை மறுத்து இந்த வாழ்க்கைக்கு வந்தாள் என்ற ஒரு யூகம் இருந்தது.. அதேபோல் கதை நகர்ந்தாலும் இறுதிக்கட்டம் தான் எதிர்பாராத ஒன்று..சதுர்யாவின் ஹேப்பி என்டிங் மிகவும் பிடித்தமான க்ளைமேக்ஸ்..

ஒரு குடும்பத்தில் பெற்றோர்களில் யார் ஒருவர் பொறுப்பாக இல்லாமல் போனாலும் இல்லை தவறான ஒரு முடிவை எடுத்தாலும் அது அந்த குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதற்கு அருணாச்சலமும் சிவமும் ஒரு எடுத்துக்காட்டு..

மொத்தத்தில் சதுரங்கம்... தரமான ஒரு கதை.. கதையின் எழுத்து நடையில் அவ்வவ்போது ஆர்வம் குறைந்தாலும் கதைக்களம் இடையில் நிறுத்த விடாமல் தொடர்ந்து பயணிக்க வைத்து இறுதிவரை தொடர வைத்தது...

மேலும் மேலும் எழுத வேண்டும் என்ற
வாழ்த்துக்களுடன்
கோகுலப்பிரியா...
 
நன்றிங்க... இவ்வளவு நீண்ட அலசலை எதிர்பாக்கல.
 
Top Bottom