Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-11


ஒவ்வொரு படிகளாக
எண்ணியெண்ணி ஏறியவள்
கடைசியாக தங்கள் அறை வந்துவிட
அப்படியே நின்றாள்.. கோபமாக
இருப்பானோ என்றும் யோசித்தவள்..
சரி எப்படியும் உள்ளே போய் தானே
ஆகனும் என்று எண்ணிக் கதவைத்
திறந்து உள்ளே சென்றாள்.
அறைக்குள் நுழைந்து கதவைத்
தாழிட்டுவிட்டுத் திரும்ப அவன்
இல்லாததைக் கண்டவள் பால்கனி பக்கம் சென்று பார்க்க அங்கே
அவளுடைய பிரஷர் குக்கர்
நின்றிருந்தான்.

அங்கு நின்று யாருடனோ போனில்
பேசிக் கொண்டு இருந்தான் கார்த்திக்.
போனை அணைத்தவன் இவள்
நின்றிருந்ததைப் பார்த்து "என்ன?"
என்று வினவினான்.

"தூங்க வரலையா?" என்று
மெதுவானக் குரலில் பால்கனிக்
கதவைப் பிடித்தபடி மது கேட்டாள்.

"நீ போய் படு" என்று திரும்பிவிட்டான்.

இரண்டு நிமிடம் அங்கேயே நின்றவள்
திரும்பி வந்து லைட்டை அணைத்துப்
படுத்துவிட்டாள். ஆனால்
தூங்கவில்லை. ஒருமணி நேரம்
கழித்து உள்ளே வந்தவன் லைட்டை
ஆன் செய்ய மது தலையை மட்டும்
திருப்பி அவனைப் பார்த்தாள். அவள்
பார்ப்பதைக் கண்டவன் எதுவும்
பேசாமல் பின் லைட்டை அணைத்து
விட்டு வந்து கையை மடக்கி
தலையின் மேல் வைத்துப் படுத்து
விட்டான். கோபமாக இருந்தாலும்
ஏதாவது பேசுவான் என்றிருந்த மதுவிற்கு அழுகை தான் வந்தது.
அவனுக்கு முதுகுக் காட்டி
படுத்திருந்தவளுக்கு அவன் பேசாமல்
இருந்ததில் முகம் சுருங்க சும்மா
கண்களை மூடிப் படுத்திருந்தாள்.

கார்த்திக்கும் தூங்கவில்லை..
கண்ணை மூடிப் படுத்திருந்தானே
தவிர சிறிதும் அவனுக்கும் தூக்கம்
வரவில்லை. நேரம் செல்ல ஏதோ
உறுத்தக் கண்ணைத் திறந்தவன் தன்
அருகில் மறுபறம் திரும்பிப் படுத்து
மது சத்தமில்லாமல் குலுங்கி
அழுவதைக் கவனித்தான். சத்தம் கேட்காமல் இருக்க எழுந்து
பால்கனிக்குச் செல்லலாம் என
நினைத்தவளை, திடீரென
கார்த்திக்கின் கரங்கள் வந்து மதுவை
அணைத்து அவன் புறம் திரும்பியது.
அவன் அவளைத் தன் பக்கம் திருப்பி
அணைக்க மது அவன் மார்பில்
புதைந்து அழுது விட்டாள்.

"ஸாரி...ஸாரி.." என்று அவன் மார்பில்
புதைந்ந படியே முணுமுணுத்தபடி
கண்ணீர் விட்டாள் அவனது
மனையாள்.

"ஓகே ஓகே.. அழாதே மது இப்போ எதுக்கு அழுகை.." என்று
அணைத்தபடியே கேட்டான் கார்த்திக்.
அவளைத் தேற்றத் தெரியாமல்
விழித்தவனுக்கு மது தந்த பதில்
நெஞ்சில் பனியை இறக்கியது.

"ஸாரி இன்னிக்கு ஈவ்னிங் ஏதோ
பொஸசிவ்னெஸ்ல அப்படி
பண்ணிட்டேன்" என்று தன்னை
மறந்து கண்ணீருடன் மது கூற,
கார்த்திக்கிற்குத் தான் மிதப்பது போல
இருந்தது.. தன்னையும் ஒருத்தி
இப்படி உருகி உருகி காதலிப்பது
அவனுக்கு குலுகுலுவென இருந்தது.
ஆனால் அவள் அழுவது என்னவோ
போலும் இருந்தது.

"சரி சரி... நானும் ஸாரி..உன்னைத்
திட்டிவிட்டேன்.. அழதே மது .. எனக்கு
என்னமோ மாரி இருக்கு" என்று கூறி
தேம்பி அழுத அவளின் முதுகைத்
தேய்த்து விட்டான்.

எழுந்து உட்கார்ந்து அவளையும்
உட்கார வைத்து கண்களைத்
துடைத்து விட்டு, முகம் கழுவி வரச்
சொன்னான்.

முகம் கழுவி வந்தவள், "சாப்பிடப்
போவோமா?" என்றாள் வாய்
எல்லாம் பற்கலாகக் கேட்டாள்.

"நீ சாப்பிடவில்லையா?" எனக் கேட்க
மது இல்லை என்று தலை ஆட்டினாள்.

"லூசு" என்று அவளைக் கடிந்தவன்,
கீழே அவளைக் கூட்டிக் கொண்டு
சென்றான். கீழே வந்த பின் மது
தோசை சுட்டுப் பொடி வைத்துக்
குடுக்க, சமையல் மேடையில்
உட்கார்ந்து அவளுக்கும் ஊட்டி
விட்டபடியே தானும் உண்டு முடித்தான்.
உண்டு முடித்துவிட்டு இருவரும்
அறைக்கு வந்து படுக்க மது சீக்கரமாக
உறங்கிவிட்டாள். ஆனால் கார்த்திக்
தான் அவளைப் பார்த்த படி
படுத்திருந்தான்.

குழந்தை போல உறங்கிக் கொண்டு
இருந்தவளைப் பார்த்தவனுக்கு
புன்னகை அரும்பியது. அரைமணி
நேரம் முன் அவளைத் தன் கைக்குள்
வைத்து இருந்தவனுக்கு அப்போது
தான் அவளின் அருகாமையையும்
அவளின் மேல் வீசிய தன்
மனைவியின் வாசனையையும்
உணர்ந்தான். அதை உணர்ந்தவன்
அவளிடம் மயங்கி தன்னைத்
தொலைத்து அவளின் அருகில் செல்ல
அப்போது எங்கு இருந்தோ வந்த
பறவையின் ஒலி அவனை
சுயநினைவிற்கு கொண்டு வந்தது.

"ச்ச என்ன இது.. இப்படி
பண்றோம்.. ஏதாவது நடந்திருந்தால்
என்ன நினைத்திருப்பாள் நம்மை"
என்று தன்னைத் தானே கடிந்தவன்
அவளைப் பார்த்தான். தான் பக்கத்தில்
வந்ததைக் கூட அறியாமல்
உறக்கத்தில் இருந்தளைப்
பார்த்தவனுக்கு அப்போது தான்
தங்கையிடம் தன்னை விட்டுக்
கொடுக்காமல் பேசியது நினைவு
வந்தது. இவளுக்கு ஏன் இப்படி நம்
மேல் இவ்வளவு காதல் என்று
யோசிக்க "ஏன் உனக்கும் தானே"
என்று அவன் மனம் கேள்வி
எழுப்பியது அவனிடம். அவனுக்கும்
எப்போது வந்தது எதனால் வந்தது
என்று யூகிக்க முடியவில்லை. அவள்
முகத்தையே பார்த்துக்
கொண்டிருந்தவன் ஆராய்ச்சியில்
மூழ்கினான்.

முன்பு இருந்ததிற்கு இப்போது லேசாக
உடம்பு ஏறி இருந்தது மதுவிற்கு.
கன்னங்கள் கூட அழகாய்
இருப்பதைக் கண்டான். பின் அவள்
அருகில் தள்ளிக் குப்பறப் படுத்தவன்
அவளது தூக்கம் கலையாமல் ஒன்றை
விரலால் அவள் கன்னத்தை தொட்டுப்
பார்த்தான்.

"மினுமினுக்கும் மின்மினிப்பூச்சி
போல பளபளக்கும்
உன் கன்னங்களால்
சிதறிப்போகிறது என்
சிந்தனைகள்...
உன் இரு கன்னங்களை
எனக்குத் தந்து
என்னை சரி செய்து விடு
என் ராட்சசியே....!!!

என்று அவளது கன்னத்தை மெதுவாக
வருடினான். தன் செயலில்
கார்த்திக்கிற்கே வெட்கம் வந்தது.
(ஆணின் வெட்கம் என்பது
எழுதப்படாத கவிதை)..

பின் எப்போது உறங்கினான் என்று
அவனுக்கே நினைவில்லை.

காலையில் குளித்துவிட்டு
வந்த மது கார்த்திக்கை எழுப்பினாள்.
எழுந்து அரை தூக்கத்தில்
உட்கார்ந்தவனிடம் "அத்தை மாமா
எல்லாம் கிளம்பிட்டாங்க. நம்ம தான்
லேட்...சீக்கிரம் கிளம்புங்க"என்று
ஈரத் தலையை துடைத்த படியே
கூறினாள். அவன் அப்படியே
அவளைப் பார்த்துக் கொண்டு எழுந்து
நிற்க "என்ன?" என கேட்டாள்.

"மது உன் கன்னத்தில் ஏதோ இருக்கு"
என்றபடி அருகில் சென்று தூசு
இருப்பது போல் துடைத்துவிட்டு
அவன் ஆசையை நிறைவேற்றிக்
கொண்டவன் குளிக்க உள்ளே
சென்றுவிட்டான்.

மது குளித்துவிட்டுக் கடைசியாக
பாத்ரூம் கண்ணாடியில் முகத்தைப்
பார்த்து விட்டு தான் வெளியே
வந்தாள். அப்போது எதுவும்
இல்லையே என நினைத்தாள். அவன்
செய்கை புரியாது நின்றவள் பின்
மணி ஆகக் கிளம்பத் தயாரானாள்.
பின் அவன் குளித்து முடித்து வெளிவர
மது கண்ணிற்கு ஐலைன்னர்
வைத்துக் கொண்டு இருந்தாள் மது.

"காதல் சொன்ன கணமே அது
கடவுளைக் கண்ட கணமே.. காற்றாய்
பறக்குது மனமே.. ஓஓஓஓஓஓ!" என்ற
பாடலை மெதுவாக வாயில் அசை
போட்டபடி ஐ லைனர் மூடியை
திருகியபடி நடந்து கொண்டு
இருந்தாள்.

அவள் பாடியதைக் கேட்டவன்
"ப்ப்ப்பாபாபா.... என்ன வாய்ஸ்" என்று
கிண்டலாகச் சிரித்தான்.

"ஏன் என் வாய்ஸிற்கு என்னக்
குறைச்சல்" இடுப்பிற்கு கைகளைக்
கொடுத்தபடி வினவினாள்.

"என்னக் குறைச்சலா.. அஹான்ன்...
இந்தத் தகர டப்பாவில் கல்லைப்
போட்டு உருட்டினால் ஒரு சத்தம் வரும்
கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்று
சிரிப்பை அடக்க முடியாமல்
வினவினான்.

"ம்கும்.. உங்களுக்குப் பாட வருமா
பர்ஸ்ட்.. என்னைய சொல்றீங்க" என்று
புகைந்தவளிடம் "ஏன் எனக்கு பாட
வராது.. இப்போ பார்" என்று
யோசித்து... "காலையில காதல் சொல்லி மதியானம் தாலி கட்டி
சாயங்காலம் தேன் நிலவு போலாம்
வரியா" என்று தலையை
ஆட்டிக்கொண்டே தான் உடுத்த
வேண்டிய சட்டையை எடுத்தபடிப் பாட,
மதுவோ "ஆமாம் காதலைச் சொன்ன
உடனே கல்யாணம் பண்ணிக்
கொள்வீங்களோ.. சரிதான்" என்று
யோசித்தபடி நக்கலாகப் பேச.. "அப்படி
இல்லை தான்.. ஆனால் நீ
சொன்னால் நாளைக்கே ஹனிமூன்
கிளம்ப நான் ரெடி" என்றவன் "என்ன
சொல்ற?" என்று இரண்டு முறை தன்
புருவத்தை ஏற்றி இறக்கினான்.

அவன் கேட்டதில் என்ன சொல்வது
என்று தெரியாமல் மது திக்கு
முக்காடித்தான் போனாள்.

இருமல் வருவது போலப் பாவனை
செய்து விட்டு அறையில் இருந்த
தண்ணீர் பாட்டிலை நோக்கிச் சென்று
அவனிற்கு முதுகைக் காட்டி நின்றாள்.
பின்பு கார்த்திக் தலையைத் துடைத்து
விட்டு வர மதுவும் ரெடியாகி முடித்தாள்.

தலையைக் கோதிவிட்டு வந்து
வாட்ச்சை கட்டிக் கொண்டு
இருந்தவனை கண் இமைக்காது
பார்த்துக் கொண்டு இருந்தாள் மது,
பெட்டில் அமர்ந்தபடி. வைட் ஷர்ட்டிலும்
லைட் ப்ளூ ஜீன்ஸிலும் இருந்தவனை
மேல் இருந்து அளவெடுத்து சைட்
அடித்துக் கொண்டிருந்த மதுவிற்கு
கண்களில் மின்னல் வெட்டியது.
கோவிலில் அவனைப் பார்த்தது
நினைவு வந்தது. 'அந்த ஒரு நொடி
பார்த்த முகத்தை ஒவ்வொரு நொடியும்
நினைத்துக் கொண்டு இருந்ததும்'
நினைவு வந்தது.

அவனையே பார்த்து பழைய
நினைவுகளில் இருந்தவளைக்
கார்த்திக்கின் குரல் தான் கலைத்தது.
"என்ன மது மார்க் போட்டாச்சா? நான்
பாஸ் தானே?" என்று அவளைக்
குறும்பாகப் பார்த்துக் கேட்டான்.

அவனின் கேள்வியில் திடிரென
விழித்தவள் "எ..என்ன?" என்றுத்
தடுமாறினாள்.

அவளின் அருகில் வந்து குனிந்தவன்
பெட்டில் அவள் இருபக்கமும் கையை
ஊன்றி "இல்ல என்னைப் பார்த்துட்டே
இருக்கியே மது. அதான் கேட்டேன்..
என்ன மார்க் மது? " என்று கண்களைக்
கூர்மையாக்கிக் கேட்டான்.

அவன் அவ்வளவு அருகில் இருப்பது
நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று
அவளைத் தடுத்தது. தலையைக்
குனிந்து கொண்டு அவன் கேட்ட
கேள்விக்கு என்ன சொல்வது என்று
தெரியாமல் திணறினாள் மது.
அவனின் பார்வையும் அவன் அருகில்
சென்று குனிந்த போது அவள் பின்
சாய அப்போது லேசாக விலகி
அவளின் இடைப் பகுதிய மதுவின்
சேலைக் காட்ட அவன் கண்கள்
அங்கேயே நின்றன. இதை எதையும்
அறியாமல் தலையைக் குனிந்தபடி
சிலை போல அமர்ந்திருந்தாள்
மதுமிதா.

தடுமாறித் தான் போனான் அவளின்
மணாளன். பின் அவன் என்ன
சாமியாரா? இல்லை முற்றும் துறந்த
முனிவரா?

"மது கிளம்பிவிட்டீர்களா?" என்று
ஜானகி கீழ் இருந்து குரல் கொடுத்தார்.

"அ.... வந்துட்டோம் அத்தை" என்று
அதான் சமயம் என்று கீழே
ஓடிவிட்டாள் மது.

மனதிற்குள் சிரித்து விட்டு
கார்த்திக்கும் கீழே வர நால்வரும்
காரில் கிளம்பினர்.

மது வீட்டில் அனைவருக்கும் பலத்த
வரவேற்பு.. எல்லோருடும் கார்த்திக்
நன்றாகவே பேசினான். வருணும்
கார்த்திக்கும் நன்றாகப் பேசியதில்
மதுவிற்கு நிம்மதியாக இருந்தது.

"ஏன் மாப்பிள்ளை நீங்கள் ஹனிமூன்
எங்கும் செல்ல வில்லையா?" என்று
திருமுருகன் கேட்க மது
திருதிருவென்று விழித்தாள்.
காலையில் இருந்து இந்த வார்த்தைத்
தன்னை பாடுபடுத்துவதை
உணர்ந்தாள் மது.

"இல்லை மாமா.. கல்யணத்தை ஒரு
மாதத்தில் வைத்ததால் அந்த
அலைச்சலில் நிறைய வேலை சேர்ந்து
விட்டது.. மதுவிற்கும் இப்போது லீவ்
கிடைக்காது என்றாள். அதான்
இன்னும் சில நாட்கள் கழித்து
செல்லலாம் என்று முடிவு செய்து
விட்டோம்" என்று சாதரணமாக பதில்
அளித்து சமாளித்து விட்டான்.
கணவனை மனதிற்குள் மெச்சியவள்
மது தண்ணீர் குடிக்கச் செல்வது
போலச் சென்று விட்டாள்.

மது டைனிங் ஹாலில் தண்ணீர்
குடித்து விட்டுத் திரும்ப உமா
மகேஸ்வரி கேள்வியானப்
பார்வையோடு மதுவைப் பார்த்துக்
கொண்டு இருந்தார். சமாளித்துக்
கொண்டு "என்ன அம்மா அப்படி
பார்க்கிறீர்கள்?" எனக் கேட்டாள் மது.

"சந்தோஷமாக இருக்கிறாய் தானே
மது?" என உமா கேட்கும் போதே
மதுவிற்கு உள் உணர்வு மணி
அடித்தது.

"என்னைப் பார்த்தாள்
தெரியவில்லையா அம்மா, உங்கள்
மருமகன் என்னை எப்படி
வைத்திருக்கிறார் என்று" எனத் தன்
அன்னையை எதிர்க் கேள்வி கேட்டு
சிரித்தாள்.

"அதெல்லாம் மாப்பிள்ளை உன்னை
நன்றாக வைத்திருக்கிறார் என்று
உன்னைப் பார்த்தாலே தெரிகிறது. நீ
மாப்பிள்ளையைச் சந்தோஷமாக
வைத்திருக்கிறாயா?" என்று
உடைத்துக் கேட்டுவிட்டார் உமா.

தன் அன்னை நேரிடியாக இப்படிக்
கேட்பார் என்று மது
எதிப்பார்க்கவில்லை. "என்னம்மா
கேள்வி இது" என்று அன்னையிடம்
சலித்தாள் மது.

"பின்னே ஏன் சித்தப்பா ஹனிமூன்
பற்றிக் கேட்ட போது ஒருவிதப் பயமாக
மாறியது முகம். எல்லாப் புது
தம்பதியரிடமும் கேட்கும் கேள்வி
தானே இது" என்று கேட்டார் அவர்.
அவரின் பார்வை வேறு மதுவை மேல்
இருந்து கீழ் வரை துளையிட்டது.

"என்ன அம்மாவும் பெண்ணும்
இரகசியம் பேசிட்டு இருக்கீங்க?"
என்று கேட்டபடி ஜானகி அம்மாள்
ராதாவுடன் வர உமா அந்தப் பேச்சை
நிறுத்தினார்.

"அங்கே வீட்டில் வேலை
செய்கிறாயா எனக் கேட்டுக்
கொண்டிருந்தேன்?" என்று உமா
சமாளித்தார்.

"அதெல்லாம் மது தங்கமாக
இருக்கிறாள்" என்று மதுவின்
தாடையைப் பிடித்து ஆட்டியபடிச்
சொன்னார் ஜானகி.

ஆனால் அவர்களது பேச்சை ஸ்டோர்
ரூமில் எதையோ வருணுடன் எடுக்க
வந்த கார்த்திக் கேட்டுவிட்டான். "என்
அறைக்குச் செல்கிறேன்" என்று தன்
அன்னையிடம் இருந்து தப்பித்து,
மேலே உள்ள அறைக்கு மது செல்ல
சிறிது நேரம் கழித்து கார்த்திக்கும்
மேலே சென்றான்.

மேலே சென்று பால்கனியில் நின்ற
மதுவிற்கு மனம் உறுத்தியது.
அவளுடைய அம்மா கேட்டது முகத்தில்
அறை வாங்கியது போல இருந்தது.
ஏதோ குற்ற உணர்வு மறுபடியும் தலை
தூக்கியது. அவனைக் காதலித்ததைத்
தவிர இன்று வரை அவனிற்காக
என்ன செய்து இருக்கிறோம்.
உண்மைதானே தன் உணர்விற்கு
மதிப்பு அழித்து அவன் தன்னிடம்
இன்று வரை கண்ணியமாக இருப்பது
என்று எண்ணி வருந்திக் கொண்டு
இருந்தவள் யாரோ வரும் சத்தம்
கேட்டுத் திரும்பிப் பார்க்க, கார்த்திக்
பின்னால் நின்று அவளைப் பார்த்துக்
கொண்டு இருந்தான்.

அவனைப் பார்த்தவள் "ஏன்? எதாவது
வேண்டுமா?" என்று தன்
சிந்தனைகளையும் மீறிக் கேட்டாள்.

"எதுவும் வேண்டாம் மது.. ஆனால் ஏன்
உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?"
என்று கேட்டபடி அருகில் வந்து
நின்றான்.

"ஒன்றுமில்லை" என்று
திரும்பிவிட்டாள்.

டக்கென்று மதுவைப் பற்றி தன் கை
வளைவிற்குள் நிறுத்தி விட்டான்.
"ஷ்ஷ் மது... நான் சொல்வதை மட்டும்
கேள்.. கொஞ்ச நேரம் இப்படியே நில்"
என்று ஏதோ கேட்க வந்த மதுவைத்
தடுத்துக் கூறினான்.

மதுவிடம் உமாமகேஸ்வரி பேசத்
துடித்துக் கொண்டு இருந்ததை
கார்த்திக் கண்டான். மேலும் உமா
ஏதாவது கேட்டு மது மேலும் முகம்
வாடுவதை அவன் விரும்பவில்லை.
அதனால் தான் மதுவிடம் பேச
எண்ணி அவளின் அறைக்குச்
சென்றான். அப்போது மேலே யாரோ
வரும் சத்தம் கேட்டது. உமா
மகேஸ்வரியாகத் தான் இருக்கும்
என்று யூகித்தவன் டக்கென்று ஒரு
ஐடியா தோன்ற மதுவைக் கை
வளைவிற்குள் நிறுத்திவிட்டான்.
வந்து பார்ப்பவருக்கு கார்த்திக்கின்
முதுகும் அவன் மதுவைப் பிடித்து
தலையை மதுவை நோக்கி குனிந்து
நிற்பது மட்டும் தான் தெரியும்.

கணவன் சொன்னதைக் கேட்ட
மது..என்ன ஏது என்று கூட கேட்காமல்
அவனைப் பிடித்தபடி அப்படியே
நின்றுவிட்டாள். அறையின் கதவு
திறந்திருக்க மது உள்ளே தான்
இருக்க வேண்டும் என்று எண்ணி
அறைக்குள் நுழைந்த உமா
மருமகனும் மகளும் நிற்பதைக் கண்டு
முகம் சிவந்தவர், தன் கேள்விக்கு
வேலை இல்லை என எண்ணி கீழே
வந்து விட்டார்.

அன்னை வந்து சென்றதை
உணர்ந்தவளுக்கு அப்போது தான்
கணவனின் ஐடியா விளங்கியது.
கார்த்திக் அவளை விலக்கியவுடன்
டக்கென்று சிரித்து விட்டாள். "ஓ
இதற்குத்தானா... எனக்கு முதலில்
புரியவில்லை" என்று தலையை
சொறிந்தபடிக் கூறினாள். அவளின்
அருகாமையையும் விரும்பியே அவன்
அப்படி செய்தான் என்பதை அவள்
அறியவில்லை.

"இந்த... நுனி மூக்கில் மச்சம்
இருந்தால் இப்படித்தான் கொஞ்சம்
மக்கு அப்புறம் முன்கோபியாக
இருப்பார்கள்" என்று மதுவின் நுனி
மூக்கில் இருந்த மச்சத்தை சுட்டிக்
காட்டிச் சொன்னான்.

"நான் மக்கா?" என்று இடுப்பில் கை
வைத்தபடி கோபமாகக் கேட்டாள்
மதுமிதா.

"பார்த்தாயா கோபம் கூட வருது"
என்று மேலும் அவளைச் சீண்டினான்
கார்த்திக்.

இருவரும் கீழே வர விருந்து தயாராக
இருந்தது. சாப்பிட்டு முடித்து விட்டு
எல்லாரும் அரட்டை அடிக்க வருண்
மதுவின் சிறுவயது ஆல்பத்தை
எடுத்து வந்து கார்த்திக்கிடம் தந்தான்.
அதில் அவள் குழந்தையாக இருந்த
போட்டிவில் இருந்து இருந்தது.
வருணை மது முறைக்க அதைக் கண்ட
கார்த்திக் மதுவை நோக்கி அவளது
மூக்கின் மச்சத்தை சுட்டிக் காட்டி
"கோபம் வருகிறது" என்று
நக்கல் செய்து சிரித்தான்.

அவன் ஆல்பத்தைப் பிரித்தவுடனே
மது அங்கிருந்து அகன்று விட்டாள்.
அதில் அவள் சிறுவயதில் செய்த
அனைத்து குறும்புச் சேட்டைகளை
எல்லாரும் படம் புடித்து
வைத்திருந்தனர். ஒரு போட்டோவில்
ஆட்டுக்குட்டி ஒன்றுடன் சேற்றில்
விழுந்து ஆடிக் கொண்டு
இருந்தவளைக் கண்டு விழுந்து
விழுந்து சிரித்தான். போட்டோவில்
அவளது சேட்டைகளைப் பார்த்துக்
கொண்டே வந்தவன் ஒரு
போட்டோவில் மது குழந்தையாக
அவளின் அம்மாவின் கையில்
இருந்ததைப் பார்த்தான். அதில்
மதுவிற்கு சரியாகப் பல் கூட முழுதாக
முளைக்கவில்லை. ஒன்றரை வயது
இருக்கும் என்று எண்ணினான்.
ஆனால் அதில் அவள் சிரித்துக்
கொண்டிருந்ததும், நேற்று முகம்
கழுவிய பின் வந்து சாப்பிட
போவோமா என்று கேட்ட முகமும் ஒரே
மாதிரித் தெரிந்தது அவனுக்கு. அந்த
போட்டாவைப் பார்த்துக் கொண்டே
இருந்தவன் "வருண் இந்த போட்டோ
இன்னொரு காப்பி எனக்கு வேணும்"
என்றான்.

"சரி மாமா. இரண்டு நாள்ல தரேன்"
என்றான் வருண்.

பின்பு திருமுருகன் அங்கு வந்து சேர
மூவரும் பேசினர். கார்த்திக் தான்
எண்ணிய ஒரு விஷயத்தை சொல்லிக்
கேட்க "அதெல்லாம் எங்களிடம் கேட்க
வேண்டுமா மாப்பிள்ளை
கண்டிப்பாகச் செய்து விடலாம்"
திருமுருகன்.

அவர்கள் மூவரும் பேசிக் கொண்டு
இருக்கும் போது மது உள்ளே வர
மூவரும் பேச்சை நிறுத்தினர்.
அவர்கள் பேச்சை நிறுத்த "என்ன
எனக்குத் தெரியாமல் ரகசியம்?"
என்றபடி மூவரையும் கேள்வியாய்
நோக்கினாள் மது.

"அது ஒன்றுமில்லை.. சின்ன வயதில்
உன் சேட்டை எல்லாம் எப்படி தாங்கிக்
கொண்டார்கள் என்று கேட்டுக்
கொண்டிருந்தேன்.." என்று
மதுவை கார்த்திக் சீண்ட வருண்
சிரித்துவிட்டான்.

"நானா..." என்று ஏதோ சொல்ல
வந்தவளை கார்த்திக் அவன் மூக்கின்
நுனியை தொட்டு மதுவின் மூக்கின்
நுனி மச்சத்தை நியாபகப்
படுத்தினான்.

"வாவ் நாங்க என்ன சொன்னாலும்
திருப்பிப் பேசுவ.. இப்ப என்ன இப்படி
அமைதி ஆயிட்ட.. மாமா.. சபாஷ் மாமா
சாபஷ்.. இவளை இப்படி ஒரே
பார்வையில் அமைதி
ஆக்கிட்டிங்களே" என்று வருண்
கார்த்திக்கிடம் ஹைபை கொடுத்த
மேலும் மதுவைச் சீண்ட "பாருங்கள்
சித்தப்பா" என்று திருமுருகனிடம்
சிணுங்கினாள் மது.

மாலை ஆனதும் வீட்டிற்குத் திரும்பி
விட்டனர் நால்வரும். இரவில் மது
அடுத்த நாள் உடுத்த வேண்டிய
உடையை எடுத்து வைத்துக் கொண்டு
இருந்தாள்.

கட்டிலில்.. தலையைக் கையில்
வைத்துத் தாங்கியபடி மதுவைப்
பார்த்தபடி படுத்திருந்தவன் "மது
உன்னை எத்தனை பேர் ப்ரபோஸ்
செய்து இருக்கிறார்கள்?" என
மதுவிடம் சாதரணமாகக் கேட்டான்.

"என்னக் கேள்வி எல்லாம் பலமா
இருக்கு?" என்று கண்ணை
உருட்டியபடி மது கேட்டாள்.

"சொல்லேன் மது" என்று ஆவலானக்
குரலில் வினவினான் கார்த்திக்.

"இரண்டு பேர்" என்று சுருக்கமாக
சொன்னவள், சில துவைத்த
துணிகளை அடுக்கி வைக்கத்
துவங்கினாள்.

"நீ என்ன சொன்னாய் மது?" என்று
மேலும் துருவினான் கார்த்திக்.

"என்ன சொல்வேன். விருப்பமில்லை
என்று சொல்லி விட்டேன்" எனறாள்
மது துணிகளை அடிக்கி வைத்தபடியே.

"ஏன்?" என கார்த்திக் வினவ,
காலையில் இருந்து அவன் சீண்டியது
நினைவு வர "என்ன செய்வது.. நான்
தான் ஒரு மடையன் மேல்
பைத்தியமாக இருந்தேனே" என்று
மது சிரிப்பை அடக்கியபடியே
கூறிவிட்டாள்.

அவன் ஏதாவது சொல்லுவான் என்று
எதிர்பார்த்த மது, அவன்
சத்தமில்லாமல் இருப்பதை உணர்ந்து
திரும்பியவள், அவன் தன் அருகில்
கண்களில் சிரிப்புடன் நிற்பதைப்
பார்த்துச் சற்று திகைத்தாள்.

"தேங்க்ஸ் மது" என்றவன் அவளது
கன்னத்தில் அழுத்தமாக தன்
இதழைப் பதித்து ஒரு முத்தத்தை
தந்துவிட்டு உற்சாகமாகக் கதவைத்
திறந்து வெளியே சென்று விட்டான்.
மதுதான் கையில் வைத்திருந்த
துணியுடன் அப்படியே நின்று விட்டாள்.
அவனது மீசை கன்னத்தில் குத்தியது
வேறு குறுகுறுத்தது.

அவனின் முதல் முத்தம்
சந்தோஷத்தை அல்லவா தர
வேண்டும்.. மாறாக அவளுக்கு ஏதோ
தயக்கத்தைத் தந்தது. துணிகளை
அடுக்கி வைத்துவிட்டு சென்று
படுத்து கண்களை மூடியபடி படுத்தாள்.
உறக்கம் வர மறுத்தது . அன்று
வெகுநேரம் கழித்தே கார்த்திக்
அறைக்கு வந்தான். வந்தவன் அவள்
தூங்காமல் கண்களை மட்டும்
படுத்திருப்பதைப் பார்த்து அவள்
தூங்கவில்லை என்பதை கண்டு
கொண்டான். ஏதோ கேட்கலாம் என
நினைத்தவன், வேண்டாம் என்று
முடிவு செய்து லைட்டை அணைத்து
படுத்துவிட்டான்.

அடுத்த இரண்டு நாட்கள் மது
கார்த்திக்கிடம் சற்று விலகியே
இருந்தாள். முகத்தைப் பார்த்துக் கூடச்
சரியாகப் பேசவில்லை.. இல்லை
இல்லை பேசமுடியவில்லை.. ஏதாவது
பிடித்து வைத்து கேட்டவனிடம் பதிலை
மட்டும் சொன்னாள். அவன் எப்பவும்
போலதான் உள்ளான். தன்னால் ஏன்
அப்படி இருக்க முடியவில்லை என்று
எண்ணினாள். அவனின் அருகாமை
பிடித்திருந்தாலும் ஏன் தன்னால்
அதற்கு மேல் முடியவில்லை என்று
குழம்பினாள். ஏதோ ஒன்று அவளைத் தடுக்கிறது என்று யோசித்து
யோசித்து தலை வலி தான் வந்தது
மதுவிற்கு. அன்று இரவு தலை வலி
என்று சீக்கிரம் படுக்கைக்கு வந்து
விட்டாள்.

வழக்கம் போல ஒரு நாள் தூங்கிக்
கொண்டிருந்த மதுவிற்கு கனவு
வந்தது.. யாரோ ஒருத்தன் அவளைத்
துரத்துவதைப் போல... ஒரு நிலையில்
அவன் அவளைப் பிடித்து விட பயந்து
வீறிட்டு எழுந்தாள் மது. மது அலறி
எழுந்ததில் கார்த்திக்கும் பதறி எழுந்து
விட்டான்.

மதுவோ கார்த்திக் என்று அவனைப்
பிடித்துவிட்டாள்.. அவளின் உடல்
நடுங்கியதை கார்த்திக் உணர்ந்தான்..
அவள் உதடு 'கார்த்திக் கார்த்திக்'
என்று உச்சரித்து நடுங்கியது.

"ஒன்றுமில்லை ஒன்றுமில்லை மது
ரிலாக்ஸ்" என்று மதுவைத் தேற்ற
முயன்றான்.

"அந்தக் கனவு...." என்று மது
நடுங்கியபடி சொல்ல கார்த்திக்கிற்குப்
புரிந்து விட்டது. கார்த்திக் எழ அவன்
கையை விடாது பிடித்து இருந்தாள்.
"ஒரு நிமிடம் மது" என்றவன் எழுந்து
லைட்டைப் போட்டு மதுவைப்
பார்த்தான்.

மதுவின் முகமோ வியர்த்து வடிந்தது..
தண்ணீரை எடுத்துப் பருக
வைத்தவன். "மது நான் உன் கூட
இருக்கும் போது என்ன பயம்.. நான்
தான் கூட இருக்கேன்ல.. என்னைத்
தாண்டி தான் எதுவும் உன்னை
நெருங்க முடியாது" என்று அவள்
கைகளைத் தன் கைக்குள் வைத்து
அழுத்தமாகப் பேசி சமாதானம்
செய்ய கொஞ்சம் நிதானமானாள் மது.

"என்னால் உங்களுக்கு கஷ்டம்
பாருங்கள்.. இப்படி நடு இரவில் கத்தி
உங்களின் தூக்கத்தைக் கலைத்து
விட்டேன்" என்று கண் கலங்க மது
வருத்தப்பட்டு.

"ச்ச.. லூசி மாதிரி பேசாதே மது..
உன்னால் எனக்கு ஒன்னும் கஷ்டம்
இல்லை.. இப்படிப் பேசதே" என்று
கடிந்தவன், பிறகு குரலைத் தாழ்த்தி
"சரி தூங்கு.. இல்லைனா வா..
மொட்டமாடிக்குப் போயிட்டு வரலாம்" என்று அழைக்க வேண்டாம் என்று
மறுத்தவள் தலையணையில் தலை
சாய்த்தாள்.

பிறகு அவளைத் தூங்க வைத்து
தானும் படுக்கையில் விழுந்தவன்
யோசனையில் ஆழ்ந்தான். நீண்ட
நேரம் யோசித்தவன் ஒரு முடிவை
எடுத்த பின் நித்திரையில் ஆழ்ந்தான்.

அந்த முடிவு மதுவிற்கு சாதகமாக
இருக்குமா?
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-11


ஒவ்வொரு படிகளாக
எண்ணியெண்ணி ஏறியவள்
கடைசியாக தங்கள் அறை வந்துவிட
அப்படியே நின்றாள்.. கோபமாக
இருப்பானோ என்றும் யோசித்தவள்..
சரி எப்படியும் உள்ளே போய் தானே
ஆகனும் என்று எண்ணிக் கதவைத்
திறந்து உள்ளே சென்றாள்.
அறைக்குள் நுழைந்து கதவைத்
தாழிட்டுவிட்டுத் திரும்ப அவன்
இல்லாததைக் கண்டவள் பால்கனி பக்கம் சென்று பார்க்க அங்கே
அவளுடைய பிரஷர் குக்கர்
நின்றிருந்தான்.

அங்கு நின்று யாருடனோ போனில்
பேசிக் கொண்டு இருந்தான் கார்த்திக்.
போனை அணைத்தவன் இவள்
நின்றிருந்ததைப் பார்த்து "என்ன?"
என்று வினவினான்.

"தூங்க வரலையா?" என்று
மெதுவானக் குரலில் பால்கனிக்
கதவைப் பிடித்தபடி மது கேட்டாள்.

"நீ போய் படு" என்று திரும்பிவிட்டான்.

இரண்டு நிமிடம் அங்கேயே நின்றவள்
திரும்பி வந்து லைட்டை அணைத்துப்
படுத்துவிட்டாள். ஆனால்
தூங்கவில்லை. ஒருமணி நேரம்
கழித்து உள்ளே வந்தவன் லைட்டை
ஆன் செய்ய மது தலையை மட்டும்
திருப்பி அவனைப் பார்த்தாள். அவள்
பார்ப்பதைக் கண்டவன் எதுவும்
பேசாமல் பின் லைட்டை அணைத்து
விட்டு வந்து கையை மடக்கி
தலையின் மேல் வைத்துப் படுத்து
விட்டான். கோபமாக இருந்தாலும்
ஏதாவது பேசுவான் என்றிருந்த மதுவிற்கு அழுகை தான் வந்தது.
அவனுக்கு முதுகுக் காட்டி
படுத்திருந்தவளுக்கு அவன் பேசாமல்
இருந்ததில் முகம் சுருங்க சும்மா
கண்களை மூடிப் படுத்திருந்தாள்.

கார்த்திக்கும் தூங்கவில்லை..
கண்ணை மூடிப் படுத்திருந்தானே
தவிர சிறிதும் அவனுக்கும் தூக்கம்
வரவில்லை. நேரம் செல்ல ஏதோ
உறுத்தக் கண்ணைத் திறந்தவன் தன்
அருகில் மறுபறம் திரும்பிப் படுத்து
மது சத்தமில்லாமல் குலுங்கி
அழுவதைக் கவனித்தான். சத்தம் கேட்காமல் இருக்க எழுந்து
பால்கனிக்குச் செல்லலாம் என
நினைத்தவளை, திடீரென
கார்த்திக்கின் கரங்கள் வந்து மதுவை
அணைத்து அவன் புறம் திரும்பியது.
அவன் அவளைத் தன் பக்கம் திருப்பி
அணைக்க மது அவன் மார்பில்
புதைந்து அழுது விட்டாள்.

"ஸாரி...ஸாரி.." என்று அவன் மார்பில்
புதைந்ந படியே முணுமுணுத்தபடி
கண்ணீர் விட்டாள் அவனது
மனையாள்.

"ஓகே ஓகே.. அழாதே மது இப்போ எதுக்கு அழுகை.." என்று
அணைத்தபடியே கேட்டான் கார்த்திக்.
அவளைத் தேற்றத் தெரியாமல்
விழித்தவனுக்கு மது தந்த பதில்
நெஞ்சில் பனியை இறக்கியது.

"ஸாரி இன்னிக்கு ஈவ்னிங் ஏதோ
பொஸசிவ்னெஸ்ல அப்படி
பண்ணிட்டேன்" என்று தன்னை
மறந்து கண்ணீருடன் மது கூற,
கார்த்திக்கிற்குத் தான் மிதப்பது போல
இருந்தது.. தன்னையும் ஒருத்தி
இப்படி உருகி உருகி காதலிப்பது
அவனுக்கு குலுகுலுவென இருந்தது.
ஆனால் அவள் அழுவது என்னவோ
போலும் இருந்தது.

"சரி சரி... நானும் ஸாரி..உன்னைத்
திட்டிவிட்டேன்.. அழதே மது .. எனக்கு
என்னமோ மாரி இருக்கு" என்று கூறி
தேம்பி அழுத அவளின் முதுகைத்
தேய்த்து விட்டான்.

எழுந்து உட்கார்ந்து அவளையும்
உட்கார வைத்து கண்களைத்
துடைத்து விட்டு, முகம் கழுவி வரச்
சொன்னான்.

முகம் கழுவி வந்தவள், "சாப்பிடப்
போவோமா?" என்றாள் வாய்
எல்லாம் பற்கலாகக் கேட்டாள்.

"நீ சாப்பிடவில்லையா?" எனக் கேட்க
மது இல்லை என்று தலை ஆட்டினாள்.

"லூசு" என்று அவளைக் கடிந்தவன்,
கீழே அவளைக் கூட்டிக் கொண்டு
சென்றான். கீழே வந்த பின் மது
தோசை சுட்டுப் பொடி வைத்துக்
குடுக்க, சமையல் மேடையில்
உட்கார்ந்து அவளுக்கும் ஊட்டி
விட்டபடியே தானும் உண்டு முடித்தான்.
உண்டு முடித்துவிட்டு இருவரும்
அறைக்கு வந்து படுக்க மது சீக்கரமாக
உறங்கிவிட்டாள். ஆனால் கார்த்திக்
தான் அவளைப் பார்த்த படி
படுத்திருந்தான்.

குழந்தை போல உறங்கிக் கொண்டு
இருந்தவளைப் பார்த்தவனுக்கு
புன்னகை அரும்பியது. அரைமணி
நேரம் முன் அவளைத் தன் கைக்குள்
வைத்து இருந்தவனுக்கு அப்போது
தான் அவளின் அருகாமையையும்
அவளின் மேல் வீசிய தன்
மனைவியின் வாசனையையும்
உணர்ந்தான். அதை உணர்ந்தவன்
அவளிடம் மயங்கி தன்னைத்
தொலைத்து அவளின் அருகில் செல்ல
அப்போது எங்கு இருந்தோ வந்த
பறவையின் ஒலி அவனை
சுயநினைவிற்கு கொண்டு வந்தது.

"ச்ச என்ன இது.. இப்படி
பண்றோம்.. ஏதாவது நடந்திருந்தால்
என்ன நினைத்திருப்பாள் நம்மை"
என்று தன்னைத் தானே கடிந்தவன்
அவளைப் பார்த்தான். தான் பக்கத்தில்
வந்ததைக் கூட அறியாமல்
உறக்கத்தில் இருந்தளைப்
பார்த்தவனுக்கு அப்போது தான்
தங்கையிடம் தன்னை விட்டுக்
கொடுக்காமல் பேசியது நினைவு
வந்தது. இவளுக்கு ஏன் இப்படி நம்
மேல் இவ்வளவு காதல் என்று
யோசிக்க "ஏன் உனக்கும் தானே"
என்று அவன் மனம் கேள்வி
எழுப்பியது அவனிடம். அவனுக்கும்
எப்போது வந்தது எதனால் வந்தது
என்று யூகிக்க முடியவில்லை. அவள்
முகத்தையே பார்த்துக்
கொண்டிருந்தவன் ஆராய்ச்சியில்
மூழ்கினான்.

முன்பு இருந்ததிற்கு இப்போது லேசாக
உடம்பு ஏறி இருந்தது மதுவிற்கு.
கன்னங்கள் கூட அழகாய்
இருப்பதைக் கண்டான். பின் அவள்
அருகில் தள்ளிக் குப்பறப் படுத்தவன்
அவளது தூக்கம் கலையாமல் ஒன்றை
விரலால் அவள் கன்னத்தை தொட்டுப்
பார்த்தான்.

"மினுமினுக்கும் மின்மினிப்பூச்சி
போல பளபளக்கும்
உன் கன்னங்களால்
சிதறிப்போகிறது என்
சிந்தனைகள்...
உன் இரு கன்னங்களை
எனக்குத் தந்து
என்னை சரி செய்து விடு
என் ராட்சசியே....!!!

என்று அவளது கன்னத்தை மெதுவாக
வருடினான். தன் செயலில்
கார்த்திக்கிற்கே வெட்கம் வந்தது.
(ஆணின் வெட்கம் என்பது
எழுதப்படாத கவிதை)..

பின் எப்போது உறங்கினான் என்று
அவனுக்கே நினைவில்லை.

காலையில் குளித்துவிட்டு
வந்த மது கார்த்திக்கை எழுப்பினாள்.
எழுந்து அரை தூக்கத்தில்
உட்கார்ந்தவனிடம் "அத்தை மாமா
எல்லாம் கிளம்பிட்டாங்க. நம்ம தான்
லேட்...சீக்கிரம் கிளம்புங்க"என்று
ஈரத் தலையை துடைத்த படியே
கூறினாள். அவன் அப்படியே
அவளைப் பார்த்துக் கொண்டு எழுந்து
நிற்க "என்ன?" என கேட்டாள்.

"மது உன் கன்னத்தில் ஏதோ இருக்கு"
என்றபடி அருகில் சென்று தூசு
இருப்பது போல் துடைத்துவிட்டு
அவன் ஆசையை நிறைவேற்றிக்
கொண்டவன் குளிக்க உள்ளே
சென்றுவிட்டான்.

மது குளித்துவிட்டுக் கடைசியாக
பாத்ரூம் கண்ணாடியில் முகத்தைப்
பார்த்து விட்டு தான் வெளியே
வந்தாள். அப்போது எதுவும்
இல்லையே என நினைத்தாள். அவன்
செய்கை புரியாது நின்றவள் பின்
மணி ஆகக் கிளம்பத் தயாரானாள்.
பின் அவன் குளித்து முடித்து வெளிவர
மது கண்ணிற்கு ஐலைன்னர்
வைத்துக் கொண்டு இருந்தாள் மது.

"காதல் சொன்ன கணமே அது
கடவுளைக் கண்ட கணமே.. காற்றாய்
பறக்குது மனமே.. ஓஓஓஓஓஓ!" என்ற
பாடலை மெதுவாக வாயில் அசை
போட்டபடி ஐ லைனர் மூடியை
திருகியபடி நடந்து கொண்டு
இருந்தாள்.

அவள் பாடியதைக் கேட்டவன்
"ப்ப்ப்பாபாபா.... என்ன வாய்ஸ்" என்று
கிண்டலாகச் சிரித்தான்.

"ஏன் என் வாய்ஸிற்கு என்னக்
குறைச்சல்" இடுப்பிற்கு கைகளைக்
கொடுத்தபடி வினவினாள்.

"என்னக் குறைச்சலா.. அஹான்ன்...
இந்தத் தகர டப்பாவில் கல்லைப்
போட்டு உருட்டினால் ஒரு சத்தம் வரும்
கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்று
சிரிப்பை அடக்க முடியாமல்
வினவினான்.

"ம்கும்.. உங்களுக்குப் பாட வருமா
பர்ஸ்ட்.. என்னைய சொல்றீங்க" என்று
புகைந்தவளிடம் "ஏன் எனக்கு பாட
வராது.. இப்போ பார்" என்று
யோசித்து... "காலையில காதல் சொல்லி மதியானம் தாலி கட்டி
சாயங்காலம் தேன் நிலவு போலாம்
வரியா" என்று தலையை
ஆட்டிக்கொண்டே தான் உடுத்த
வேண்டிய சட்டையை எடுத்தபடிப் பாட,
மதுவோ "ஆமாம் காதலைச் சொன்ன
உடனே கல்யாணம் பண்ணிக்
கொள்வீங்களோ.. சரிதான்" என்று
யோசித்தபடி நக்கலாகப் பேச.. "அப்படி
இல்லை தான்.. ஆனால் நீ
சொன்னால் நாளைக்கே ஹனிமூன்
கிளம்ப நான் ரெடி" என்றவன் "என்ன
சொல்ற?" என்று இரண்டு முறை தன்
புருவத்தை ஏற்றி இறக்கினான்.

அவன் கேட்டதில் என்ன சொல்வது
என்று தெரியாமல் மது திக்கு
முக்காடித்தான் போனாள்.

இருமல் வருவது போலப் பாவனை
செய்து விட்டு அறையில் இருந்த
தண்ணீர் பாட்டிலை நோக்கிச் சென்று
அவனிற்கு முதுகைக் காட்டி நின்றாள்.
பின்பு கார்த்திக் தலையைத் துடைத்து
விட்டு வர மதுவும் ரெடியாகி முடித்தாள்.

தலையைக் கோதிவிட்டு வந்து
வாட்ச்சை கட்டிக் கொண்டு
இருந்தவனை கண் இமைக்காது
பார்த்துக் கொண்டு இருந்தாள் மது,
பெட்டில் அமர்ந்தபடி. வைட் ஷர்ட்டிலும்
லைட் ப்ளூ ஜீன்ஸிலும் இருந்தவனை
மேல் இருந்து அளவெடுத்து சைட்
அடித்துக் கொண்டிருந்த மதுவிற்கு
கண்களில் மின்னல் வெட்டியது.
கோவிலில் அவனைப் பார்த்தது
நினைவு வந்தது. 'அந்த ஒரு நொடி
பார்த்த முகத்தை ஒவ்வொரு நொடியும்
நினைத்துக் கொண்டு இருந்ததும்'
நினைவு வந்தது.

அவனையே பார்த்து பழைய
நினைவுகளில் இருந்தவளைக்
கார்த்திக்கின் குரல் தான் கலைத்தது.
"என்ன மது மார்க் போட்டாச்சா? நான்
பாஸ் தானே?" என்று அவளைக்
குறும்பாகப் பார்த்துக் கேட்டான்.

அவனின் கேள்வியில் திடிரென
விழித்தவள் "எ..என்ன?" என்றுத்
தடுமாறினாள்.

அவளின் அருகில் வந்து குனிந்தவன்
பெட்டில் அவள் இருபக்கமும் கையை
ஊன்றி "இல்ல என்னைப் பார்த்துட்டே
இருக்கியே மது. அதான் கேட்டேன்..
என்ன மார்க் மது? " என்று கண்களைக்
கூர்மையாக்கிக் கேட்டான்.

அவன் அவ்வளவு அருகில் இருப்பது
நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று
அவளைத் தடுத்தது. தலையைக்
குனிந்து கொண்டு அவன் கேட்ட
கேள்விக்கு என்ன சொல்வது என்று
தெரியாமல் திணறினாள் மது.
அவனின் பார்வையும் அவன் அருகில்
சென்று குனிந்த போது அவள் பின்
சாய அப்போது லேசாக விலகி
அவளின் இடைப் பகுதிய மதுவின்
சேலைக் காட்ட அவன் கண்கள்
அங்கேயே நின்றன. இதை எதையும்
அறியாமல் தலையைக் குனிந்தபடி
சிலை போல அமர்ந்திருந்தாள்
மதுமிதா.

தடுமாறித் தான் போனான் அவளின்
மணாளன். பின் அவன் என்ன
சாமியாரா? இல்லை முற்றும் துறந்த
முனிவரா?

"மது கிளம்பிவிட்டீர்களா?" என்று
ஜானகி கீழ் இருந்து குரல் கொடுத்தார்.

"அ.... வந்துட்டோம் அத்தை" என்று
அதான் சமயம் என்று கீழே
ஓடிவிட்டாள் மது.

மனதிற்குள் சிரித்து விட்டு
கார்த்திக்கும் கீழே வர நால்வரும்
காரில் கிளம்பினர்.

மது வீட்டில் அனைவருக்கும் பலத்த
வரவேற்பு.. எல்லோருடும் கார்த்திக்
நன்றாகவே பேசினான். வருணும்
கார்த்திக்கும் நன்றாகப் பேசியதில்
மதுவிற்கு நிம்மதியாக இருந்தது.

"ஏன் மாப்பிள்ளை நீங்கள் ஹனிமூன்
எங்கும் செல்ல வில்லையா?" என்று
திருமுருகன் கேட்க மது
திருதிருவென்று விழித்தாள்.
காலையில் இருந்து இந்த வார்த்தைத்
தன்னை பாடுபடுத்துவதை
உணர்ந்தாள் மது.

"இல்லை மாமா.. கல்யணத்தை ஒரு
மாதத்தில் வைத்ததால் அந்த
அலைச்சலில் நிறைய வேலை சேர்ந்து
விட்டது.. மதுவிற்கும் இப்போது லீவ்
கிடைக்காது என்றாள். அதான்
இன்னும் சில நாட்கள் கழித்து
செல்லலாம் என்று முடிவு செய்து
விட்டோம்" என்று சாதரணமாக பதில்
அளித்து சமாளித்து விட்டான்.
கணவனை மனதிற்குள் மெச்சியவள்
மது தண்ணீர் குடிக்கச் செல்வது
போலச் சென்று விட்டாள்.

மது டைனிங் ஹாலில் தண்ணீர்
குடித்து விட்டுத் திரும்ப உமா
மகேஸ்வரி கேள்வியானப்
பார்வையோடு மதுவைப் பார்த்துக்
கொண்டு இருந்தார். சமாளித்துக்
கொண்டு "என்ன அம்மா அப்படி
பார்க்கிறீர்கள்?" எனக் கேட்டாள் மது.

"சந்தோஷமாக இருக்கிறாய் தானே
மது?" என உமா கேட்கும் போதே
மதுவிற்கு உள் உணர்வு மணி
அடித்தது.

"என்னைப் பார்த்தாள்
தெரியவில்லையா அம்மா, உங்கள்
மருமகன் என்னை எப்படி
வைத்திருக்கிறார் என்று" எனத் தன்
அன்னையை எதிர்க் கேள்வி கேட்டு
சிரித்தாள்.

"அதெல்லாம் மாப்பிள்ளை உன்னை
நன்றாக வைத்திருக்கிறார் என்று
உன்னைப் பார்த்தாலே தெரிகிறது. நீ
மாப்பிள்ளையைச் சந்தோஷமாக
வைத்திருக்கிறாயா?" என்று
உடைத்துக் கேட்டுவிட்டார் உமா.

தன் அன்னை நேரிடியாக இப்படிக்
கேட்பார் என்று மது
எதிப்பார்க்கவில்லை. "என்னம்மா
கேள்வி இது" என்று அன்னையிடம்
சலித்தாள் மது.

"பின்னே ஏன் சித்தப்பா ஹனிமூன்
பற்றிக் கேட்ட போது ஒருவிதப் பயமாக
மாறியது முகம். எல்லாப் புது
தம்பதியரிடமும் கேட்கும் கேள்வி
தானே இது" என்று கேட்டார் அவர்.
அவரின் பார்வை வேறு மதுவை மேல்
இருந்து கீழ் வரை துளையிட்டது.

"என்ன அம்மாவும் பெண்ணும்
இரகசியம் பேசிட்டு இருக்கீங்க?"
என்று கேட்டபடி ஜானகி அம்மாள்
ராதாவுடன் வர உமா அந்தப் பேச்சை
நிறுத்தினார்.

"அங்கே வீட்டில் வேலை
செய்கிறாயா எனக் கேட்டுக்
கொண்டிருந்தேன்?" என்று உமா
சமாளித்தார்.

"அதெல்லாம் மது தங்கமாக
இருக்கிறாள்" என்று மதுவின்
தாடையைப் பிடித்து ஆட்டியபடிச்
சொன்னார் ஜானகி.

ஆனால் அவர்களது பேச்சை ஸ்டோர்
ரூமில் எதையோ வருணுடன் எடுக்க
வந்த கார்த்திக் கேட்டுவிட்டான். "என்
அறைக்குச் செல்கிறேன்" என்று தன்
அன்னையிடம் இருந்து தப்பித்து,
மேலே உள்ள அறைக்கு மது செல்ல
சிறிது நேரம் கழித்து கார்த்திக்கும்
மேலே சென்றான்.

மேலே சென்று பால்கனியில் நின்ற
மதுவிற்கு மனம் உறுத்தியது.
அவளுடைய அம்மா கேட்டது முகத்தில்
அறை வாங்கியது போல இருந்தது.
ஏதோ குற்ற உணர்வு மறுபடியும் தலை
தூக்கியது. அவனைக் காதலித்ததைத்
தவிர இன்று வரை அவனிற்காக
என்ன செய்து இருக்கிறோம்.
உண்மைதானே தன் உணர்விற்கு
மதிப்பு அழித்து அவன் தன்னிடம்
இன்று வரை கண்ணியமாக இருப்பது
என்று எண்ணி வருந்திக் கொண்டு
இருந்தவள் யாரோ வரும் சத்தம்
கேட்டுத் திரும்பிப் பார்க்க, கார்த்திக்
பின்னால் நின்று அவளைப் பார்த்துக்
கொண்டு இருந்தான்.

அவனைப் பார்த்தவள் "ஏன்? எதாவது
வேண்டுமா?" என்று தன்
சிந்தனைகளையும் மீறிக் கேட்டாள்.

"எதுவும் வேண்டாம் மது.. ஆனால் ஏன்
உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?"
என்று கேட்டபடி அருகில் வந்து
நின்றான்.

"ஒன்றுமில்லை" என்று
திரும்பிவிட்டாள்.

டக்கென்று மதுவைப் பற்றி தன் கை
வளைவிற்குள் நிறுத்தி விட்டான்.
"ஷ்ஷ் மது... நான் சொல்வதை மட்டும்
கேள்.. கொஞ்ச நேரம் இப்படியே நில்"
என்று ஏதோ கேட்க வந்த மதுவைத்
தடுத்துக் கூறினான்.

மதுவிடம் உமாமகேஸ்வரி பேசத்
துடித்துக் கொண்டு இருந்ததை
கார்த்திக் கண்டான். மேலும் உமா
ஏதாவது கேட்டு மது மேலும் முகம்
வாடுவதை அவன் விரும்பவில்லை.
அதனால் தான் மதுவிடம் பேச
எண்ணி அவளின் அறைக்குச்
சென்றான். அப்போது மேலே யாரோ
வரும் சத்தம் கேட்டது. உமா
மகேஸ்வரியாகத் தான் இருக்கும்
என்று யூகித்தவன் டக்கென்று ஒரு
ஐடியா தோன்ற மதுவைக் கை
வளைவிற்குள் நிறுத்திவிட்டான்.
வந்து பார்ப்பவருக்கு கார்த்திக்கின்
முதுகும் அவன் மதுவைப் பிடித்து
தலையை மதுவை நோக்கி குனிந்து
நிற்பது மட்டும் தான் தெரியும்.

கணவன் சொன்னதைக் கேட்ட
மது..என்ன ஏது என்று கூட கேட்காமல்
அவனைப் பிடித்தபடி அப்படியே
நின்றுவிட்டாள். அறையின் கதவு
திறந்திருக்க மது உள்ளே தான்
இருக்க வேண்டும் என்று எண்ணி
அறைக்குள் நுழைந்த உமா
மருமகனும் மகளும் நிற்பதைக் கண்டு
முகம் சிவந்தவர், தன் கேள்விக்கு
வேலை இல்லை என எண்ணி கீழே
வந்து விட்டார்.

அன்னை வந்து சென்றதை
உணர்ந்தவளுக்கு அப்போது தான்
கணவனின் ஐடியா விளங்கியது.
கார்த்திக் அவளை விலக்கியவுடன்
டக்கென்று சிரித்து விட்டாள். "ஓ
இதற்குத்தானா... எனக்கு முதலில்
புரியவில்லை" என்று தலையை
சொறிந்தபடிக் கூறினாள். அவளின்
அருகாமையையும் விரும்பியே அவன்
அப்படி செய்தான் என்பதை அவள்
அறியவில்லை.

"இந்த... நுனி மூக்கில் மச்சம்
இருந்தால் இப்படித்தான் கொஞ்சம்
மக்கு அப்புறம் முன்கோபியாக
இருப்பார்கள்" என்று மதுவின் நுனி
மூக்கில் இருந்த மச்சத்தை சுட்டிக்
காட்டிச் சொன்னான்.

"நான் மக்கா?" என்று இடுப்பில் கை
வைத்தபடி கோபமாகக் கேட்டாள்
மதுமிதா.

"பார்த்தாயா கோபம் கூட வருது"
என்று மேலும் அவளைச் சீண்டினான்
கார்த்திக்.

இருவரும் கீழே வர விருந்து தயாராக
இருந்தது. சாப்பிட்டு முடித்து விட்டு
எல்லாரும் அரட்டை அடிக்க வருண்
மதுவின் சிறுவயது ஆல்பத்தை
எடுத்து வந்து கார்த்திக்கிடம் தந்தான்.
அதில் அவள் குழந்தையாக இருந்த
போட்டிவில் இருந்து இருந்தது.
வருணை மது முறைக்க அதைக் கண்ட
கார்த்திக் மதுவை நோக்கி அவளது
மூக்கின் மச்சத்தை சுட்டிக் காட்டி
"கோபம் வருகிறது" என்று
நக்கல் செய்து சிரித்தான்.

அவன் ஆல்பத்தைப் பிரித்தவுடனே
மது அங்கிருந்து அகன்று விட்டாள்.
அதில் அவள் சிறுவயதில் செய்த
அனைத்து குறும்புச் சேட்டைகளை
எல்லாரும் படம் புடித்து
வைத்திருந்தனர். ஒரு போட்டோவில்
ஆட்டுக்குட்டி ஒன்றுடன் சேற்றில்
விழுந்து ஆடிக் கொண்டு
இருந்தவளைக் கண்டு விழுந்து
விழுந்து சிரித்தான். போட்டோவில்
அவளது சேட்டைகளைப் பார்த்துக்
கொண்டே வந்தவன் ஒரு
போட்டோவில் மது குழந்தையாக
அவளின் அம்மாவின் கையில்
இருந்ததைப் பார்த்தான். அதில்
மதுவிற்கு சரியாகப் பல் கூட முழுதாக
முளைக்கவில்லை. ஒன்றரை வயது
இருக்கும் என்று எண்ணினான்.
ஆனால் அதில் அவள் சிரித்துக்
கொண்டிருந்ததும், நேற்று முகம்
கழுவிய பின் வந்து சாப்பிட
போவோமா என்று கேட்ட முகமும் ஒரே
மாதிரித் தெரிந்தது அவனுக்கு. அந்த
போட்டாவைப் பார்த்துக் கொண்டே
இருந்தவன் "வருண் இந்த போட்டோ
இன்னொரு காப்பி எனக்கு வேணும்"
என்றான்.

"சரி மாமா. இரண்டு நாள்ல தரேன்"
என்றான் வருண்.

பின்பு திருமுருகன் அங்கு வந்து சேர
மூவரும் பேசினர். கார்த்திக் தான்
எண்ணிய ஒரு விஷயத்தை சொல்லிக்
கேட்க "அதெல்லாம் எங்களிடம் கேட்க
வேண்டுமா மாப்பிள்ளை
கண்டிப்பாகச் செய்து விடலாம்"
திருமுருகன்.

அவர்கள் மூவரும் பேசிக் கொண்டு
இருக்கும் போது மது உள்ளே வர
மூவரும் பேச்சை நிறுத்தினர்.
அவர்கள் பேச்சை நிறுத்த "என்ன
எனக்குத் தெரியாமல் ரகசியம்?"
என்றபடி மூவரையும் கேள்வியாய்
நோக்கினாள் மது.

"அது ஒன்றுமில்லை.. சின்ன வயதில்
உன் சேட்டை எல்லாம் எப்படி தாங்கிக்
கொண்டார்கள் என்று கேட்டுக்
கொண்டிருந்தேன்.." என்று
மதுவை கார்த்திக் சீண்ட வருண்
சிரித்துவிட்டான்.

"நானா..." என்று ஏதோ சொல்ல
வந்தவளை கார்த்திக் அவன் மூக்கின்
நுனியை தொட்டு மதுவின் மூக்கின்
நுனி மச்சத்தை நியாபகப்
படுத்தினான்.

"வாவ் நாங்க என்ன சொன்னாலும்
திருப்பிப் பேசுவ.. இப்ப என்ன இப்படி
அமைதி ஆயிட்ட.. மாமா.. சபாஷ் மாமா
சாபஷ்.. இவளை இப்படி ஒரே
பார்வையில் அமைதி
ஆக்கிட்டிங்களே" என்று வருண்
கார்த்திக்கிடம் ஹைபை கொடுத்த
மேலும் மதுவைச் சீண்ட "பாருங்கள்
சித்தப்பா" என்று திருமுருகனிடம்
சிணுங்கினாள் மது.

மாலை ஆனதும் வீட்டிற்குத் திரும்பி
விட்டனர் நால்வரும். இரவில் மது
அடுத்த நாள் உடுத்த வேண்டிய
உடையை எடுத்து வைத்துக் கொண்டு
இருந்தாள்.

கட்டிலில்.. தலையைக் கையில்
வைத்துத் தாங்கியபடி மதுவைப்
பார்த்தபடி படுத்திருந்தவன் "மது
உன்னை எத்தனை பேர் ப்ரபோஸ்
செய்து இருக்கிறார்கள்?" என
மதுவிடம் சாதரணமாகக் கேட்டான்.

"என்னக் கேள்வி எல்லாம் பலமா
இருக்கு?" என்று கண்ணை
உருட்டியபடி மது கேட்டாள்.

"சொல்லேன் மது" என்று ஆவலானக்
குரலில் வினவினான் கார்த்திக்.

"இரண்டு பேர்" என்று சுருக்கமாக
சொன்னவள், சில துவைத்த
துணிகளை அடுக்கி வைக்கத்
துவங்கினாள்.

"நீ என்ன சொன்னாய் மது?" என்று
மேலும் துருவினான் கார்த்திக்.

"என்ன சொல்வேன். விருப்பமில்லை
என்று சொல்லி விட்டேன்" எனறாள்
மது துணிகளை அடிக்கி வைத்தபடியே.

"ஏன்?" என கார்த்திக் வினவ,
காலையில் இருந்து அவன் சீண்டியது
நினைவு வர "என்ன செய்வது.. நான்
தான் ஒரு மடையன் மேல்
பைத்தியமாக இருந்தேனே" என்று
மது சிரிப்பை அடக்கியபடியே
கூறிவிட்டாள்.

அவன் ஏதாவது சொல்லுவான் என்று
எதிர்பார்த்த மது, அவன்
சத்தமில்லாமல் இருப்பதை உணர்ந்து
திரும்பியவள், அவன் தன் அருகில்
கண்களில் சிரிப்புடன் நிற்பதைப்
பார்த்துச் சற்று திகைத்தாள்.

"தேங்க்ஸ் மது" என்றவன் அவளது
கன்னத்தில் அழுத்தமாக தன்
இதழைப் பதித்து ஒரு முத்தத்தை
தந்துவிட்டு உற்சாகமாகக் கதவைத்
திறந்து வெளியே சென்று விட்டான்.
மதுதான் கையில் வைத்திருந்த
துணியுடன் அப்படியே நின்று விட்டாள்.
அவனது மீசை கன்னத்தில் குத்தியது
வேறு குறுகுறுத்தது.

அவனின் முதல் முத்தம்
சந்தோஷத்தை அல்லவா தர
வேண்டும்.. மாறாக அவளுக்கு ஏதோ
தயக்கத்தைத் தந்தது. துணிகளை
அடுக்கி வைத்துவிட்டு சென்று
படுத்து கண்களை மூடியபடி படுத்தாள்.
உறக்கம் வர மறுத்தது . அன்று
வெகுநேரம் கழித்தே கார்த்திக்
அறைக்கு வந்தான். வந்தவன் அவள்
தூங்காமல் கண்களை மட்டும்
படுத்திருப்பதைப் பார்த்து அவள்
தூங்கவில்லை என்பதை கண்டு
கொண்டான். ஏதோ கேட்கலாம் என
நினைத்தவன், வேண்டாம் என்று
முடிவு செய்து லைட்டை அணைத்து
படுத்துவிட்டான்.

அடுத்த இரண்டு நாட்கள் மது
கார்த்திக்கிடம் சற்று விலகியே
இருந்தாள். முகத்தைப் பார்த்துக் கூடச்
சரியாகப் பேசவில்லை.. இல்லை
இல்லை பேசமுடியவில்லை.. ஏதாவது
பிடித்து வைத்து கேட்டவனிடம் பதிலை
மட்டும் சொன்னாள். அவன் எப்பவும்
போலதான் உள்ளான். தன்னால் ஏன்
அப்படி இருக்க முடியவில்லை என்று
எண்ணினாள். அவனின் அருகாமை
பிடித்திருந்தாலும் ஏன் தன்னால்
அதற்கு மேல் முடியவில்லை என்று
குழம்பினாள். ஏதோ ஒன்று அவளைத் தடுக்கிறது என்று யோசித்து
யோசித்து தலை வலி தான் வந்தது
மதுவிற்கு. அன்று இரவு தலை வலி
என்று சீக்கிரம் படுக்கைக்கு வந்து
விட்டாள்.

வழக்கம் போல ஒரு நாள் தூங்கிக்
கொண்டிருந்த மதுவிற்கு கனவு
வந்தது.. யாரோ ஒருத்தன் அவளைத்
துரத்துவதைப் போல... ஒரு நிலையில்
அவன் அவளைப் பிடித்து விட பயந்து
வீறிட்டு எழுந்தாள் மது. மது அலறி
எழுந்ததில் கார்த்திக்கும் பதறி எழுந்து
விட்டான்.

மதுவோ கார்த்திக் என்று அவனைப்
பிடித்துவிட்டாள்.. அவளின் உடல்
நடுங்கியதை கார்த்திக் உணர்ந்தான்..
அவள் உதடு 'கார்த்திக் கார்த்திக்'
என்று உச்சரித்து நடுங்கியது.

"ஒன்றுமில்லை ஒன்றுமில்லை மது
ரிலாக்ஸ்" என்று மதுவைத் தேற்ற
முயன்றான்.

"அந்தக் கனவு...." என்று மது
நடுங்கியபடி சொல்ல கார்த்திக்கிற்குப்
புரிந்து விட்டது. கார்த்திக் எழ அவன்
கையை விடாது பிடித்து இருந்தாள்.
"ஒரு நிமிடம் மது" என்றவன் எழுந்து
லைட்டைப் போட்டு மதுவைப்
பார்த்தான்.

மதுவின் முகமோ வியர்த்து வடிந்தது..
தண்ணீரை எடுத்துப் பருக
வைத்தவன். "மது நான் உன் கூட
இருக்கும் போது என்ன பயம்.. நான்
தான் கூட இருக்கேன்ல.. என்னைத்
தாண்டி தான் எதுவும் உன்னை
நெருங்க முடியாது" என்று அவள்
கைகளைத் தன் கைக்குள் வைத்து
அழுத்தமாகப் பேசி சமாதானம்
செய்ய கொஞ்சம் நிதானமானாள் மது.

"என்னால் உங்களுக்கு கஷ்டம்
பாருங்கள்.. இப்படி நடு இரவில் கத்தி
உங்களின் தூக்கத்தைக் கலைத்து
விட்டேன்" என்று கண் கலங்க மது
வருத்தப்பட்டு.

"ச்ச.. லூசி மாதிரி பேசாதே மது..
உன்னால் எனக்கு ஒன்னும் கஷ்டம்
இல்லை.. இப்படிப் பேசதே" என்று
கடிந்தவன், பிறகு குரலைத் தாழ்த்தி
"சரி தூங்கு.. இல்லைனா வா..
மொட்டமாடிக்குப் போயிட்டு வரலாம்" என்று அழைக்க வேண்டாம் என்று
மறுத்தவள் தலையணையில் தலை
சாய்த்தாள்.

பிறகு அவளைத் தூங்க வைத்து
தானும் படுக்கையில் விழுந்தவன்
யோசனையில் ஆழ்ந்தான். நீண்ட
நேரம் யோசித்தவன் ஒரு முடிவை
எடுத்த பின் நித்திரையில் ஆழ்ந்தான்.

அந்த முடிவு மதுவிற்கு சாதகமாக
இருக்குமா?
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-12
அன்று காலை விரைவாகவே எழுந்து
விட்டக் கார்த்திக், போனை எடுத்துக்
கொண்டு பால்கனிப் பக்கம் சென்று,
தான் போன் செய்ய வேண்டிய
நபருக்கு ஒரு போன்காலைப்
போட்டான். குளித்து முடித்து வந்த மது
'இந்த காலை நேரத்தில் யாருடன்
பேசுகிறார்' என்று யோசித்தபடியே
பால்கனி கதவைத் திறந்தார். அவள்
பால்கனி கதவைத் திறந்தவுடன் "சரி
நான் வைக்கிறேன்' என்று மதுவைப்
பார்த்து எதிர் முனையில்
இருந்தவரிடம் சொல்லிவிட்டு போனை
கட் செய்து விட்டான்.
மதுவிற்கு போனில் யார் என்று
கேட்கவும் மனதில்லை.. ஆனால்
யோசித்தபடி பார்த்த மதுவிடம்
"குட்மார்னிங் மது.. என்ன சீக்கிரம்
எழுந்து விட்டாயா" என்று பேச்சை
மாற்றியபடிக் கேட்டான்.
"அதை நான் கேட்க வேண்டும்... நீங்க
தான் இன்னிக்கு ஏதோ வேலையா
எந்திருச்ச மாதிரி இருக்கு" என்று
ட்ரெஸிங் டேபிள் முன்னாடி வந்து நின்றபடிக் கேட்டாள்.
'எப்படி இன்டைரக்டா... யார் கிட்ட
போன் பேசிட்டு இருக்க-ன்னு
கேக்கறா பாரு.. இதுல மட்டும்
விவரமா இருக்கா' என்று
நினைத்தவன் "அது ஒன்றுமில்லை
மது.. மூர்த்தி சார் இன்று மதியம் தான்
வருவேன் என்று போன் செய்து
சொன்னார்.. அவர் போன்
பண்ணியதால் தூக்கம்
கலைந்துவிட்டது" என்றான். ரெடி ஆகி
கீழே வந்தும் கார்த்திக் தன் அன்னை
ஜானகியிடம் ஏதோ கிசுகிசுத்ததைக்
கண்டாள் மது. யோசித்தவள்.. அவனே
சொல்லுவான் என்று விட்டுவிட்டாள்.
மாலை ஆனதும் இருவரும் வீடு
திரும்ப..வழக்கம் போல பொள்ளாச்சி
ரோட்டில் கார் சென்றது.
கார்த்திக்கிடம் ஏதோ பேசியபடி வந்த
மது.. டக்கென்று தலையைத் திருப்பி
வெளியே பார்த்து மறுபடியும் திரும்பி
விட்டாள். அவளின் செய்கையைக்
கவனித்தவன் காரை யூடர்ன்
செய்தான்.
"ஏன் காரை திருப்பறீங்க?" என்று வினவிய மதுவிடம் தோளை மட்டும்
குலுக்கினான்.
காரை அந்த ரோட்டில் ஓரமாக
அமைத்திருந்த புதுக் கடையின் முன்பு
நிறுத்தினான். "இறங்கு மது.. இதைத்
தானே ஆஆஆ..ன்னு திரும்பிப் பாத்த..
நானே வாங்கித் தரேன் வா" என்று
அழைத்தான்.
மதுவும் காரை விட்டு இறங்க "எந்த
கலர் டெட்டி வேணும் மது" என்று கேட்க,
அந்தக் கடைப் பையன் டெட்டியை
எடுக்க ஆரம்பித்தான்.
"இல்லை இல்லை... டெட்டி வேணாம்..
நான் டெட்டி பொம்மையைப் பாக்கல"
என்றாள் கார்த்திக்கைப் பார்த்து.
"பின்னே எதைப் பார்த்த?" என்று
புருவத்தை நெறித்தபடிக் கேட்டான்.
"அதை...." என்று இரு புருவத்தையும்
தூக்கி சிரித்தபடி 'அவன் என்ன
நினைப்பானோ' என்று
யோசித்தபடியே கை நீட்டிச்
சொன்னாள்.
அவள் கையைக் காட்டிய பக்கம்
தலையைத் திருப்பிப் பார்த்தக்
கார்த்திக் "இதுவா" என்று தன்
வியப்பைக் காட்டியவாறு சிரித்தபடிக்
கேட்டான்.
'அய்யோ சிரிக்கிறானே' என்று
நினைத்துக்கொண்டே "ஆமாம்"
என்றாள் மது.
"சரி அந்தக் குரங்கு பொம்மையை எடு
தம்பி" என்று அந்தக் கடைப்
பையனிடம் சொல்ல மதுவிற்கு
வாயெல்லாம் பல்லாகி விட்டது.
வாங்கிக் கொண்டு இருவரும் காரில்
ஏறினர். பொம்மையை மடியில்
வைத்தபடி கையில் இறுகப் பிடித்துக்
கொண்டே உட்கார்ந்து இருந்தபடி
வந்தாள். "ஏன் மது இப்படி..."
வாய்விட்டுச் சிரித்தான்.
"எப்படி?" என்று கேட்டாள் புரியாமல்.
"எல்லாப் பொண்ணுகளுக்கும் டெட்டி
தான் பிடிக்கும் என்று கேள்விப்பட்டு
இருக்கிறேன்... ஆனால் நீ
என்னடானா.." என்று அந்த குரங்கு
பொம்மையைப் பார்த்தான். அவள்
மடியில் வைத்திருந்த குரங்கைப் பார்க்
அவனுக்கு பொறாமையாகத்தான்
இருந்தது
"எனக்கு இதான் பிடிக்கும். குரங்கு
எல்லாம் செம க்யூட் தெரியுமா?..
எங்காச்சு உயிருள்ள குரங்க பாத்தாக்
கூட அப்படியே பாத்துட்டே நிப்பேன்"
என்று ஆர்வாகக் கூறினாள்.
"என்னதான் டேஸ்டோ உனக்கு" என்று
நக்கலடித்தவனிடம் "என் டேஸ்ட்
எல்லாம் அப்படித்தான் இருக்கும்.. க்யூட்டா அமைதியா இருக்கறத விட
மங்கி மாதிரி இருந்தாத்தான்
பிடிக்கும்.. அப்படித் தான் எல்லாமே
சூஸ் பண்ணுவேன்" என்றவள்
டக்கென்று நாக்கைக் கடித்துக்
கொண்டாள்.
'அய்யய்யோ இவன் ஏதாவது
இவனைச் சொல்கிறோம் என்று
நினைத்துக் கொண்டாள்' என்று
நினைத்தவள் அவனை
ஓரக்கண்ணால் பார்த்தாள்.
கார்த்திக்கோ மதுவைப் பார்த்து
"ஏய்ய்ய உனக்கு இதை வாங்கித் தந்த
பாவத்துக்கு என்ன ஏதோ சொல்ற
போல" என்று தன் தாடையை
நிமிர்த்தியபடிக் கேட்டான்.
"இல்லை இல்லை... நான் அப்படி
நினைத்து சொல்லவில்லை" என்று
தான் எதனால் அப்படிச் சொன்னேன்
என்று விளக்கினாள். "ம்ம்" என்று
பொய்யாய் முறைத்தான் கார்த்திக்.
பின்பு வீடு வந்து சேர தன் கையில்
இருந்த பொம்மையை வேலுமணியும்
ஜானகியும் வித்தியாசமாகப்
பார்ப்பதை உணர்ந்தாள் மது... கார்த்திக் அவர்களிடம் பொம்மை
வாங்கிய கதையைக் கூறினான்.
"அப்படியா மது" என்று ஜானகி
மதுவைப் பார்த்துக் கேட்க மதுவோ
நெளிந்தபடி நின்றாள். பிறகு எப்பவும்
போல எல்லாவற்றையும் முடித்து
விட்டு இரவு அவரவர் அறைக்குள்
புகுந்து விட்டனர்.
நன்றாக உறக்கத்தில் இருந்தவளின்
காதருகில் சென்று குனிந்த கார்த்திக்
"மது" என்று அழைத்தான்.
"ம்ம்" என்றாவாறு மது
தூக்கத்திலேயே அவனுக்கு
ரேஸ்பான்ஸ் செய்ய அவனுக்குச்
சிரிப்பு வந்தது.
"மது எழுந்திரு மது" என்று அவளை
எழுப்பினான். அப்போது தான் அது
கனவில்லை.. உண்மையிலேயே
அவன் அழைக்கிறான் என்று
கண்ணைத் திறந்தாள்.
எழுந்து கண்களைத் தேய்த்தவள்
"என்ன?" கொட்டாவி விட்டபடியே
கேட்டாள்.
"ஹாப்பி பர்த்டே மது" என்று சரியாக
பண்ணிரெண்டு மணிக்கு மதுவின்
கழுத்தில் ஒரு தங்கச் செயினை
அணிவித்தான் கார்த்திக்.
அந்தச் செயினின் டாலரில் Kவும் Mமும்
சேர்ந்தார் போல இருக்க அந்த இரு
எழுத்துகளுக்கும் நடுவே சிறியதான
ஒரு இதயம் அந்த இரு
எழுத்துகளையும் இணைத்து
இருந்தன.
ஒரு கணம் அதன் வேலைப்பாடை
ரசித்தவள் "தேங்கஸ் பார் த விஷ்ஸஸ் அன்ட் கிப்ட்" (thanks for the wishes and
gift) என்று நன்றி கூறினாள். பிறகு
இன்னோரு கிப்டைக் அவள் கையில்
வைத்தான்.. அதைப் பிரித்தவள் "இது
எப்படி... " என்று வியப்பால் கண்களை
விரித்துக் கேட்டாள். அந்த கிப்டில் மது
தன் அன்னை கையில் இருந்த
போட்டோ இருந்தது.. அவள் மட்டும்
இருப்பது போன்ற ஒரு ப்ளாக் அன்
வைட் போட்டோ ப்ரேம். மிகவும்
அழகாக இருந்ததைத் தன் கை
விரல்களால் வருடினாள் மது.
"வருணிடம் கேட்டு வாங்கினேன் மது" என்று அவள் மூக்கைப் பிடித்து
ஆட்டினான் கார்த்திக். "தேங்க்யூ...
ரொம்ப அழகா இருக்கு" என்று
கண்கள் மின்ன சொல்லினாள் மது.
கட்டிப்பிடித்து தாங்க்ஸ் சொல்லுவாள்
என்று எதிர்ப்பார்த்தவனுக்கு
கொஞ்சம் வருத்தம் தான். ஆனால்
அவள் நிலை அறிந்து எதுவும் அவன்
தன் முகத்தில் காட்டவில்லை.
"இன்னும் முடியவில்லை மது" என்று
அவள் கண்களை ஒரு வெள்ளை
துப்பட்டாவால் கட்டினான்.
"எழுந்திரு மது, இன்னும் இருக்கு"
என்று அவளை எழுப்பி மெதுவாகக்
கீழே கூட்டிச் சென்றான்.
"மது கட்டை அவிழ்க்கப் போகிறேன்.
ஆனால் நான் சொன்ன பிறகு தான்
கண்ணைத் திறக்க வேண்டும்" என்று
கூற "சரி" என்று ஒரு கையை
இடுப்பில் வைத்தபடி புன்னகை
செய்தாள் மது.
கார்த்திக் சொன்ன பிறகு கண்ணைத்
திறந்தவள் தன் முழுக் குடும்பமும், தன்
தோழிகளும் நிற்பதைக் கண்டு
ஆச்சரியத்தில் இரு கைகளால் வாயைப் பொத்தி..கணவனை விழி
விரித்து நோக்கினாள். அத்தை
மாமாவோடு கேக் வெட்டத்தான் கூட்டி
வருகிறான் என்று நினைத்தவள் இந்த
நள்ளிரவில் தன் குடும்பத்தையும்
தோழிகளையும் எதிர்ப்பார்க்கவில்லை.
பின் அனைவரும் வந்து வாழ்த்து
சொல்ல மது கேக்கை வெட்டி
கார்த்திக்கிற்கு முதலில் ஊட்டினாள்.
பின் அனைவருக்கும் கேக்கை
கொடுத்தனர்.
ஸ்வேதா தன் ஹஸ்பன்ட்டோடு
வந்திருந்தாள். அவளது கணவனிடம்
நலம் விசாரித்தவள் "எப்படி டி இங்க?
அதுவும் நைட் 12க்கு?" என்று கேட்டாள்.
"ஏய் மறந்துட்டயா.. என் சொந்த ஊரும்
இதான.. கார்த்திக் அண்ணா
எங்களிடம் நேற்று காலை போன்
செய்து சொன்னார்...அதான்
இன்னிக்கு ஈவ்னிங் என் அம்மா
வீட்டுக்கு வந்துட்டோம். குழந்தையை
அம்மாவிடம் கொடுத்துவிட்டு
வந்தோம்" என்றாள்.
"ஓஓ.. ஓகே டி... தாங்க்ஸ் பார் கம்மிங்"
என்று தோழியை அணைத்துக்
கொண்டாள்.
"சரி நாங்க கிளம்பறோம்" என்று
ஸ்வேதா சொல்ல "இருந்துவிட்டு
காலையில் போங்களேன்" என்றபடி
வந்தான் கார்த்திக்.
"இல்ல அண்ணா. பாப்பா முழிச்சுட்டா
ரிஸ்க். நாங்க கிளம்பறோம்" என்று
கூற இருவருக்கும் நன்றி கூறி
அனுப்பி வைத்தனர் கார்த்திக்கும்
மதுவும்.
பின் மிதுனாவும் சிவாவும் சிவாவின்
மனைவியும் கிளம்பினர். பின்
மதுவின் குடும்பத்தினரும் கிளம்ப
அவர்களைப் பார்த்து அனுப்பி வைத்து விட்டு வந்தான்.
கார்த்திக் உள்ளே வர மதுவும் ஜானகி
அம்மாவும் கேக் தட்டுகளை எடுத்துப்
போட்டபடியே பேசிக் கொண்டு
இருந்தனர். பின்பு தானும்
அவர்களுடன் பேசியபடி உதவி
செய்தான். வேலையை முடித்துக்
கொண்டு இருவரும் மேலே தங்கள்
அறைக்குச் வந்தனர்.
அறைக்கதவை சாத்திய மது
கார்த்திக்கை பின்னால் இருந்து
கட்டிப்பிடித்து, தன் முகத்தை அவன்
முதுகில் சாய்த்தபடியே நின்று
விட்டாள். கார்த்திக் திரும்ப முயற்சிக்க
"ப்ளீஸ் திரும்பாதிங்க" என்றாள்
மெதுவான குரலில்.
"தாங்க்ஸ் பார் எவ்ரிதிங்.
சொல்லப்போனா நானே என்
பர்த்டேவ மறந்துட்டேன். எ..எனக்கு
என்ன சொல்றதுனே தெரியல. ஏதோ
ட்ரீம்ல இருக்க மாதிரி இருக்கு. இந்ந
வீட்டுக்கு வந்ததுல இருந்து நீங்க
மட்டும் இல்ல அத்தை மாமா கூட
சின்னதா ஒரு குறை கூட
சொன்னதில்லை. என்னோட
பீலிங்ஸிற்கு மதிப்பு கொடுத்து
இதுவரைக்கு ஒரு நல்ல.... இல்ல...
ஒரு பெஸ்ட் ஹஸ்பன்டா இருக்கீங்க.
ஆனா என்னால தான் ஒரு நல்ல
மனைவியா இருக்க முடியல.. உங்க
கூட இருக்க ஒவ்வொரு நிமிஷமும்
எனக்கு நிம்மதியா... பாதுகாப்பா தான்
இருக்கு.. ஆனா இன்னும் ஏதோ உள்ள
தடுக்கற மாதிரி.. ஏதோ.. என்ன
என்றே தெரியவில்லை. ஸாரி
என்னால உங்களுக்கு ரொம்பக்
கஷ்டம்" என்று சொல்லி அவன்
முதுகில் சாய்ந்தபடி கலங்கிய குரலில்
கூறினாள்.
அதுவரை அவள் பேசப்பேச தன்
மார்பின் மேல் இருந்த அவள்
கையைத் தட்டிக் கொடுத்தவன், அவள்
கலங்குவது தெரிந்ததும் அவளது
கையைப் பிடித்து மெதுவாய்
முன்னால் இழுத்தான். தன் முன்னாள்
நின்ற மதுவின் இரு கைகளையும்
மென்மையாய்ப் பிடித்தவன் "மது
என்னைப் பாரு" என்றான்.
மது அவனைப் பார்க்க "மது நல்லாக்
கேட்டுக்க..நீ என் மனைவி.. உன்னால
எனக்கு எந்த கஷ்டமும் இல்ல மது.
நான் சொன்னதுக்காக நம்ம
பேமலிஸ்காக நீ எட்டு வருஷமா
தாங்கிட்ட கஷ்டதிற்கு முன்னாடி இது
ஒன்னுமே இல்ல மது" என்று மதுவின்
கண்களைப் பார்த்துச் சொன்னவன்
"பர்த்டே அதுவுமா அழுதுவிடாதே மக்கு
மது" என்று அவளது நனி மூக்கின்
மச்சத்தை தொட்டுக் காட்டி சிரிக்க
மதுவும் சிரித்துவிட்டாள்.
"ஆனால்..." என்று மது வாய் திறக்க,
கார்த்திக் மதுவின் இதழின் மீது தன்
ஒற்றை விரலை வைத்து "நோ மது..
எதுவும் பேசமா போய்த் தூங்கலாம்"
என்றான் கார்த்திக்.
மது முகத்தை கழுவிக் கொண்டு வர "மது நாளை மாலை நம்ம இரண்டு
பேரும் என் பாட்டி தாத்தா வீட்டுக்கு
போறோம். பாட்டி உன்ன கூட்டிட்டு வர
சொல்றாங்க. சிறுமுகை தான ஸோ(so)
லீவ் போட அவசியம் இருக்காது. இந்த
வீக் என்ட் வரைக்கும் அங்க
இருந்துட்டு வரலாம். மூனு நாலு செட்
ட்ரெஸ் எடுத்துக்க மது" என்றான்
கார்த்திக்.
"ம்ம் ஓகே" என்றாள் மது.
அடுத்த நாள் காலை மது எழ கார்த்திக்
பெல்டை கட்டிய படி நின்றிருந்தான்.
"அய்யோ டைம் என்ன? எவ்வளவு
நேரம் தூங்கினேன்? என்று
பதறியவளை "மது ஒரு அரைமணி
அதிகமா தூங்கிட்ட..அவ்வளவு தான்..
போய் குளித்து விட்டு வா.. நான்
உன்னை டைம்க்கு ஹாஸ்பிடல் ல
விட்டுவிடுகிறேன்" என்றான் கார்த்திக்.
மது குளித்து விட்டு வெளியே வர "மது
ஒன்ஸ் அகெய்ன் ஹாப்பி பர்த்டே"
என்று ஒரு துணிக் கவரை நீட்டினான்.
மேலும் "நான் கீழே இருக்கேன் மது.. ட்ரெஸ் மாத்திவிட்டு வா" என்று
கதவை சாத்தி விட்டு சென்றான்.
அதைப் பிரித்த மது அதில் அழகாக
குங்குமக் கலரில் லாங் சல்வார் கமீஸ்
இருந்ததைப் பார்த்தாள்.அதில்
ஆங்காஙகே இருந்த டிசைன் அழகாக
இருந்தது. அந்த ட்ரெஸை அணிந்து
அதற்குரிய மேக்கப் செய்து ஒரு கேட்ச்
கிளிப்பை மட்டும் குத்தி முடியை
ப்ரீயாக விட்டாள். கார்த்திக்
சொன்னபடியே மூன்று நாட்களுக்குத்
தேவையான துணிகளையும் எடுத்து
வைத்துக் கொண்டாள்.
கீழே வந்த மது, ஜானகி-வேலுமணி
தம்பதியரிடம் காலில் விழுந்து
ஆசிர்வாதம் பெற, அவர்கள்
வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
"சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம்"
ஜானகி அழைக்க அனைவரும் உண்டு
முடித்தனர்.
"அத்தை நாங்க மூன்று நாட்களுக்கு
பாட்டி வீட்டில் இருக்கப் போகிறோம்..
அவர் சொன்னாரா?" என்று
கைகளைக் கழுவி விட்டு கேட்டாள்.
"நேற்றே சொன்னான்மா.. போய்விட்டு
வாருங்கள்..அவர்களுக்கு கார்த்திக்
என்றால் ரொம்பச் செல்லம்.
உன்னையும் ரொம்ப பிடிக்கும். போய்
இருந்து விட்டு வாருங்கள்" என்று
சொல்லிக் கொண்டு இருந்தார்.
கார்த்திக் கிளம்பலாம் என்று சொல்ல
இருவரிடமும் சொல்லி விட்டு
கிளம்பினார்கள். போகும் வழியில்
நிலாவும் அரவிந்த்தும் கால் செய்து
விஷ் செய்தனர். பின் தன்
குடும்பத்தினருடனும் பேசிவிட்டு
வைத்தவள் கார்த்திக்கை திரும்பிப்
பார்த்தாள். அவன் ஏதோ
யோசனையிலேயே காரை ஓட்டிக்
கொண்டிருந்தான்.
"ட்ரெஸ் நல்லா இருக்கு. எப்போ
எடுத்தீங்க?" என்று பேச்சுக்
கொடுத்தாள்.
"........"
"ஹலோ.." என்று மது அவனை
மீண்டும் கூப்பிட "என்ன மது? என்னக்
கேட்டாய்?" என்று வேறு ஏதோ
யோசனையில் இருந்தவன் அவளைப்
பார்த்துக் கேட்டான்.
"என்ன யோசனை?" எனக் கேட்டாள்
மது.
"மது இன்று 3 மணிக்கே உன்னால் வர
முடியுமா?" எனக் கேட்டான் கார்த்திக்.
"ம்ம் ஓகே.. இதை சொல்லவா இப்படி
யோசித்துக் கொண்டு இருந்தீர்கள்"
எனக் கேட்டாள்.
"ஈவ்னிங் என்னன்னு சொல்றேன்"
என்று கார்த்திக் சொல்ல மதுவும்
தலை ஆட்டிவிட்டாள்.
மாலை வந்து அவளை காரில் ஏற்றிக்
கொண்டவன், அவளிடம் பேச்சுக்
கொடுத்தப் படியே காரை அவினாசி
ரோட்டில் இருந்து சிங்கநல்லூர்
ரோட்டிற்கு திருப்பினாள். அதை
கவனித்த மது "பாட்டி வீட்டிற்கு
மேட்டுப்பாளையம் ரோட்டின் வழியில்
தானே போக வேண்டும் " என்று
கேட்டாள்.
"ஒரு முக்கியமான வேலை இருக்கு மது சிங்காநல்லூர் ல..முடித்து விட்டுப்
போவோம்" என்றவன் அதன் பின்
எதுவும் பேசவில்லை.
அவன் காரை நிறுத்திய இடத்தைக்
கவனித்த மதுவிற்கு உடல் கூசி
நடுங்கிவிட்டது. "இங்கே ஏன்
நிறுத்தினீங்க?" என்று எரிச்சலை
அடக்கியபடி கேட்டாள்.
"காரணம் இருக்கு மது... நம்ம லைஃப்
நல்லா இருக்கனும்னா நீ இத
பேஸ்(face) பண்ணித் தான் ஆகனும்"
என்று அமைதியான குரலில்
கூறியவன் "இறங்கு மது" என்று கார்
கதவைத் திறந்து இறங்கினான்.
மது இறங்காமல் இருக்க அவளது
பக்கம் சென்று கதவைத் திறந்து
"இறங்கு மது" என்றான்.
"என்னால முடியாது...ப்ளீஸ்..
புரிஞ்சிக்கோங்க..." என்று
மன்றாடினாள் மது.
"மது... என்மேல நம்பிக்கை இருக்கா
இல்லையா? நான்தான் உன் கூட
இருக்கேன்ல. இறங்கு" என்றான்
அவன்.
"......" எதுவும் பேசாமல் மது
இறங்கினாள். ஆனால் இறங்கிய
மதுவால் குமட்டலை அடக்க
முடியவில்லை. திடீரென அங்கு
இருந்த ஒரு மரத்திற்குப்பின்
சென்று வாந்தி எடுத்தாள்.
அதைப் பார்த்த கார்த்திக்
காரில் இருந்த வாட்டர் பாட்டிலை
எடுத்துக் கொண்டு மதுவிடம்
சென்று அவளைப் பிடித்து நின்றான்.
தண்ணீர் குடுத்து
அவளை ஆசுவாசப் படுத்தியவன்
"மது இந்த அளவுக்கா உனக்கு
அருவெறுப்பா இருக்கு?" என்று
கேட்டான்.
"ம்ம்" என்றாள் மது.
"சரி இங்க பாரு மது..
உன்ன இந்த அளவுக்கு அருவெறுப்பு
பட வெச்சவன நீ சும்மா விடலாமா?
உன் வாழ்க்கைல நடந்த முக்கால்வாசி
ப்ராப்ளமிற்கு இந்தச் சம்பவம் தான்
காரணம்".
ஏதோ சொல்ல வந்தவளைத் தடுத்து
"எத்தனை கஷ்டம் மது அதனால்
உனக்கு..நீ மட்டும் இல்லாமல் உன்
குடும்பமும் கஷ்டப்பட்டதே..அதான்
என்னைப் பிடித்து இருந்தும் கூட
விலகி இருக்க மது நீ...அதுவும்
இல்லாம கோவைல சீட் கெடச்சும்
சொந்த ஊர விட்டு கோழை மாரி
இன்னொரு ஊருக்கு போயிட்ட...
உன்ன இந்த மாதிரி சூழ்நிலைக்கு
தள்ளிற்கான் அந்த மிருகம். உன்ன
மாதிரி எத்தனை பொண்ணுகளோ
மது" என்று மதுவின் உள் இருந்த
கோவத்தை கார்த்திக்
தூண்டிவிட்டான்.
சிறிது நேரம் நின்ற "நான்
இப்போது என்ன செய்ய வேண்டும்
மது" என்று சிறு தைரியத்துடன்
கார்த்திக்கை பார்த்துக் கேட்டாள்.
"நாம இப்போ மேல
போலாம் மது வா" என்று அவன்
சொல்ல இருவரும் அங்கே சென்றனர்.
அங்கே இருவரும் உள்ளே செல்ல
"யாரு?" என்றபடி உள்ளிருந்து
வந்தான் அவன் அந்த ஆசிரியர்.
முதலில் என்ன செய்வது என்று
தெரியாமல் சென்ற மதுவிற்கு,
அவனைப் பார்த்ததும் உடல்
முழுவதும் எரிந்தது. அவன்
கழுத்தை நெறிக்க வேண்டும் என்று
தோன்றிய எண்ணத்தை
அடக்கினாள். அவன் செய்தது எல்லாம் கண் முன் வர மதுவின்
உடம்பு கோபத்தில் இறுகியது.
முதலில் யார் என்று தெரியாமல்
விழித்த அந்த ஆள் "மது..
மதுமதியா? என்றான்.
"மதுமிதா... எப்படி நியாபகம்
இருக்கும் எத்தனை பெண்களை
எந்த மாதிரி நிலைமைகளுக்கு
ஆளாக்கினாயோ?" என்று ஒரு
எட்டு முன்னாடி எடுத்து வைத்தபடி
கைகளை முன்னால் கட்டிக்
கொண்டு ஏளனமாகக் கேட்டாள்
மதுமிதா.
அவனும் மறக்கவில்லை.
மதுமிதாவையும் அவள் கொடுத்த
அடியையும்.
"மாதா பிதா குரு தெய்வம் என்று
சொல்லுவார்கள்.. தெரியுமா?
குருவிற்கு அடுத்து தான்
தெய்வத்தை வைத்திருக்கிறார்கள்.
அந்த வார்த்தைக்கு நீ அர்த்தம்
உணர்ந்தது உண்டா?
தெரியவில்லை என்றால்
சொல்கிறேன் கேட்டுக்கொள்,
அம்மா அப்பா சொல்றத நம்பறமோ
இல்லையோ ஒரு குரு சொல்றத
எல்லாரும் நம்புவாங்க..
மற்றவர்களைப் போல அல்லாமல்
தன் குருதட்சனைத் தவிர எந்த ஒரு
எதிர்ப்பார்ப்பையும் பார்க்காமல்
இருப்பது குரு மட்டும் தான்" என்று
சொல்லி மது அவனை வெறித்துப்
பார்க்க அவனது முகம்
கன்றிவிட்டது.
"ஆனால் நீ......ச்சை நினைச்சாவே
உடம்பெல்லாம் எரிகிறது. எப்படி டா
உன் மகள் வயதில் இருக்கும்
என்னிடம் உன்னால் தவறாக நடக்க
முடிந்தது" குரலை உயர்த்தி
அவனிடம் கையை ஓங்கிய மது "ச்சை
நான் அடிக்கக் கூட நீ தகுதி
இல்லாதவன்... முடிந்தால் திருந்து..
இப்படி இருந்து கொண்டு இந்தப்
பணியைக் கேவலப்படுத்தாதே"
என்றுவிட்டு மது விறுவிறுவென
வெளியே சென்று விட்டாள்.
மது போன திசையைப் பிரமித்து
ஒரு நிமிடம் பார்த்தான் கார்த்திக்.
தன்னவளுக்கு இவ்வளவு கோபம்
வருமா என்று நினைத்து அசந்து
போனான். அவள் முன்னால் அவனை
அடித்து நொறுக்க வேண்டும் என்று
தான் அவன் வந்தது. ஆனால்
நடந்ததோ வேறு. தன்னிடம் பெட்டிப்
பாம்பாக இருப்பவள் இவனிடம்
சீறியவதைக் கண்டு அவனுக்கே
பேச்சு வரவில்லை. அவளை மனதில் மெச்சாமலும் இருக்க முடியவில்லை.
எத்தனை வேதனை இருந்திருந்தால்
இப்பவும் அவனிடம் அதை
வெளிப்படுத்தி இருபபாள் என்று
நினைத்த கார்த்திக் அந்த ஆளிடம்
திரும்பி, "உன்னை அடித்து நொறுக்க
வேண்டும் என்று தான் வந்தேன்.
ஆனால் ஒரு பெண்ணே அடிக்காமல்
சென்ற உன்னை அடித்தால் எனக்கு
தான் அவமானம். வாழ்வதற்கே
உன்னைப் போன்றவனுக்குத் தகுதி
இல்லை.. ஆனால் ஒன்று.. இன்னும்
ஒரு வாரத்தில் நீ இந்த க்ளாஸை மூடி
விட வேண்டும்... இல்லை என்றால்
காலி செய்ய வைத்து விடுவேன்."
என்று கார்த்திக்கும் அவனை
மிரட்டிவிட்டுத் திரும்பிவிட்டான்.
உண்மையிலேயே மது பேசிய
வார்த்தைகளைக் கேட்ட பிறகு
அவனைத் தொட்டு அடிப்பதற்கு
கார்த்திக்கிற்கு அருப்பாகத் தான்
இருந்தது.
திரும்பி வந்து காரை எடுத்தவன்
மதுவைப் பார்த்து புன்னகை செய்ய
மதுவும் புன்னகைத்தாள். அங்கு புயல்
போல பேசிவிட்டு வந்தவள் இங்கு
தன்னிடம் பூவைப் போல
புன்னகையைப் பூக்க அவனுக்கு
என்ன நினைப்பது என்றே
தெரியவில்லை.
கார் மேட்டுப்பாளையம் ரோட்டில்
சிறுமுகையை நோக்கிச் சென்றது.
மதுவிற்கு ஏதோ சுமையை இறக்கி
வைத்த நிம்மதி உணர்வு. அதே
நேரம் கார்த்திக் ஒரு டீ கடையில்
வண்டியை நிறுத்திவிட்டு "ஏதாவது
வேணுமா மது? சொல்லு இங்கேயே
கொண்டு வரச் சொல்கிறேன் " என்று
கார்த்திக்.
"உஹும்..எதுவும் வேணாம்" என்றாள்
"பசிக்கலையா உனக்கு?" என யோசனையாகக் கேட்டான்.
"இல்லையே" என்றாள். எப்படிப்
பசிக்கும் அவளுக்குத் தான் மனம்
எல்லாம் நிறைந்திருந்ததே.
பிறகு சென்று ஒரு டீயைக் குடித்து
விட்டு சிகரெட்டை ஊதியபடி
நின்றிருந்தான்.. கடைக்கு கொஞ்சம்
முன்னால் காரை நிறுத்தி இருந்ததால் ஸைட் மிரரிலும் ரியர் மிரரிலும்
அவனைப் பார்த்துக் கொண்டு
இருந்தாள் மது. மதுவிற்கு அவனது
அருகாமை மிகவும் நிம்மதியாக
இருந்தது.
'தாயின் கருவறையின் நிம்மதி..
தந்தையின் தோள் சாயும் நிம்மதி..
தோழியின் மடி சாயும் நிம்மதி..
என்னவனே!
உன்னை சரணடைந்தேன்!
தாய், தந்தை, தோழனாய் என
அனைத்துமாய் நீ இருக்க...
பூமித்தாயின் மடியில்
துயில்வது போல நிம்மதி!'
என்பதை உணர்ந்தாள் மது.
"சிகரெட் குடிக்கும் போது கூட அழகன்
தான்டா நீ" என்று நினைத்தவள்
அவன் தன்புறம் திரும்ப முகத்தைத்
திருப்பிக் கொண்டாள். அவள் பார்த்து
விட்டு திரும்பியதைப் பார்த்தவன்
"இன்னும் எத்தனை நாள் தான் டி..
இப்படி மறஞ்சு மறஞ்சு சைட் அடிக்கப்
போற" என்று மௌனமாய்ச்
சிரித்தான்.
சிகரெட்டை கீழே போட்டு அணைத்து
விட்டு வந்து காரில் ஏறி, காரை
சிறுமுகை நோக்கி கார்த்திக் செலுத்த
மது நேற்று சரியாக உறங்காத
அலுப்பிலும், நிம்மதியிலும் உறங்கி
விட்டாள்.
பயம், நிம்மதியின்மை என்று
எல்லாவற்றையும் இன்று மதுவின்
முகம் தொலைத்து இருந்ததைக்
கண்டான். அவளது முகத்தைக்
காதலும் மையலுமாக நோக்கியவன்
காரை நிறுத்தி அவள் புறம் சாய்ந்து
அவள் நன்றாக தூங்கட்டும் என்று
அவளது சீட்டை அட்ஜஸ்ட் செய்துவிட்டான். ஒரு நிமிடம்
அவளைப் பார்த்தவன் அவளின்
கற்றைக் கூந்தல் அவளின் முகத்தில்
விளையாடுவதைக் கண்டு பொறாமை
கொண்டவனாக "உனக்கு
இடமில்லை" என்று மனதினில்
சொல்லி அவளின் கூந்தலை ஓரமாக
விலக்கினான்.
அவளைத் தன் கைகளால் கொஞ்ச
வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி
கன்னத்தை பிடிக்க நினைத்த கையை
ஸ்டியரிங்கில் வைத்துக் காரை
எடுத்தான்.
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-12
அன்று காலை விரைவாகவே எழுந்து
விட்டக் கார்த்திக், போனை எடுத்துக்
கொண்டு பால்கனிப் பக்கம் சென்று,
தான் போன் செய்ய வேண்டிய
நபருக்கு ஒரு போன்காலைப்
போட்டான். குளித்து முடித்து வந்த மது
'இந்த காலை நேரத்தில் யாருடன்
பேசுகிறார்' என்று யோசித்தபடியே
பால்கனி கதவைத் திறந்தார். அவள்
பால்கனி கதவைத் திறந்தவுடன் "சரி
நான் வைக்கிறேன்' என்று மதுவைப்
பார்த்து எதிர் முனையில்
இருந்தவரிடம் சொல்லிவிட்டு போனை
கட் செய்து விட்டான்.
மதுவிற்கு போனில் யார் என்று
கேட்கவும் மனதில்லை.. ஆனால்
யோசித்தபடி பார்த்த மதுவிடம்
"குட்மார்னிங் மது.. என்ன சீக்கிரம்
எழுந்து விட்டாயா" என்று பேச்சை
மாற்றியபடிக் கேட்டான்.
"அதை நான் கேட்க வேண்டும்... நீங்க
தான் இன்னிக்கு ஏதோ வேலையா
எந்திருச்ச மாதிரி இருக்கு" என்று
ட்ரெஸிங் டேபிள் முன்னாடி வந்து நின்றபடிக் கேட்டாள்.
'எப்படி இன்டைரக்டா... யார் கிட்ட
போன் பேசிட்டு இருக்க-ன்னு
கேக்கறா பாரு.. இதுல மட்டும்
விவரமா இருக்கா' என்று
நினைத்தவன் "அது ஒன்றுமில்லை
மது.. மூர்த்தி சார் இன்று மதியம் தான்
வருவேன் என்று போன் செய்து
சொன்னார்.. அவர் போன்
பண்ணியதால் தூக்கம்
கலைந்துவிட்டது" என்றான். ரெடி ஆகி
கீழே வந்தும் கார்த்திக் தன் அன்னை
ஜானகியிடம் ஏதோ கிசுகிசுத்ததைக்
கண்டாள் மது. யோசித்தவள்.. அவனே
சொல்லுவான் என்று விட்டுவிட்டாள்.
மாலை ஆனதும் இருவரும் வீடு
திரும்ப..வழக்கம் போல பொள்ளாச்சி
ரோட்டில் கார் சென்றது.
கார்த்திக்கிடம் ஏதோ பேசியபடி வந்த
மது.. டக்கென்று தலையைத் திருப்பி
வெளியே பார்த்து மறுபடியும் திரும்பி
விட்டாள். அவளின் செய்கையைக்
கவனித்தவன் காரை யூடர்ன்
செய்தான்.
"ஏன் காரை திருப்பறீங்க?" என்று வினவிய மதுவிடம் தோளை மட்டும்
குலுக்கினான்.
காரை அந்த ரோட்டில் ஓரமாக
அமைத்திருந்த புதுக் கடையின் முன்பு
நிறுத்தினான். "இறங்கு மது.. இதைத்
தானே ஆஆஆ..ன்னு திரும்பிப் பாத்த..
நானே வாங்கித் தரேன் வா" என்று
அழைத்தான்.
மதுவும் காரை விட்டு இறங்க "எந்த
கலர் டெட்டி வேணும் மது" என்று கேட்க,
அந்தக் கடைப் பையன் டெட்டியை
எடுக்க ஆரம்பித்தான்.
"இல்லை இல்லை... டெட்டி வேணாம்..
நான் டெட்டி பொம்மையைப் பாக்கல"
என்றாள் கார்த்திக்கைப் பார்த்து.
"பின்னே எதைப் பார்த்த?" என்று
புருவத்தை நெறித்தபடிக் கேட்டான்.
"அதை...." என்று இரு புருவத்தையும்
தூக்கி சிரித்தபடி 'அவன் என்ன
நினைப்பானோ' என்று
யோசித்தபடியே கை நீட்டிச்
சொன்னாள்.
அவள் கையைக் காட்டிய பக்கம்
தலையைத் திருப்பிப் பார்த்தக்
கார்த்திக் "இதுவா" என்று தன்
வியப்பைக் காட்டியவாறு சிரித்தபடிக்
கேட்டான்.
'அய்யோ சிரிக்கிறானே' என்று
நினைத்துக்கொண்டே "ஆமாம்"
என்றாள் மது.
"சரி அந்தக் குரங்கு பொம்மையை எடு
தம்பி" என்று அந்தக் கடைப்
பையனிடம் சொல்ல மதுவிற்கு
வாயெல்லாம் பல்லாகி விட்டது.
வாங்கிக் கொண்டு இருவரும் காரில்
ஏறினர். பொம்மையை மடியில்
வைத்தபடி கையில் இறுகப் பிடித்துக்
கொண்டே உட்கார்ந்து இருந்தபடி
வந்தாள். "ஏன் மது இப்படி..."
வாய்விட்டுச் சிரித்தான்.
"எப்படி?" என்று கேட்டாள் புரியாமல்.
"எல்லாப் பொண்ணுகளுக்கும் டெட்டி
தான் பிடிக்கும் என்று கேள்விப்பட்டு
இருக்கிறேன்... ஆனால் நீ
என்னடானா.." என்று அந்த குரங்கு
பொம்மையைப் பார்த்தான். அவள்
மடியில் வைத்திருந்த குரங்கைப் பார்க்
அவனுக்கு பொறாமையாகத்தான்
இருந்தது
"எனக்கு இதான் பிடிக்கும். குரங்கு
எல்லாம் செம க்யூட் தெரியுமா?..
எங்காச்சு உயிருள்ள குரங்க பாத்தாக்
கூட அப்படியே பாத்துட்டே நிப்பேன்"
என்று ஆர்வாகக் கூறினாள்.
"என்னதான் டேஸ்டோ உனக்கு" என்று
நக்கலடித்தவனிடம் "என் டேஸ்ட்
எல்லாம் அப்படித்தான் இருக்கும்.. க்யூட்டா அமைதியா இருக்கறத விட
மங்கி மாதிரி இருந்தாத்தான்
பிடிக்கும்.. அப்படித் தான் எல்லாமே
சூஸ் பண்ணுவேன்" என்றவள்
டக்கென்று நாக்கைக் கடித்துக்
கொண்டாள்.
'அய்யய்யோ இவன் ஏதாவது
இவனைச் சொல்கிறோம் என்று
நினைத்துக் கொண்டாள்' என்று
நினைத்தவள் அவனை
ஓரக்கண்ணால் பார்த்தாள்.
கார்த்திக்கோ மதுவைப் பார்த்து
"ஏய்ய்ய உனக்கு இதை வாங்கித் தந்த
பாவத்துக்கு என்ன ஏதோ சொல்ற
போல" என்று தன் தாடையை
நிமிர்த்தியபடிக் கேட்டான்.
"இல்லை இல்லை... நான் அப்படி
நினைத்து சொல்லவில்லை" என்று
தான் எதனால் அப்படிச் சொன்னேன்
என்று விளக்கினாள். "ம்ம்" என்று
பொய்யாய் முறைத்தான் கார்த்திக்.
பின்பு வீடு வந்து சேர தன் கையில்
இருந்த பொம்மையை வேலுமணியும்
ஜானகியும் வித்தியாசமாகப்
பார்ப்பதை உணர்ந்தாள் மது... கார்த்திக் அவர்களிடம் பொம்மை
வாங்கிய கதையைக் கூறினான்.
"அப்படியா மது" என்று ஜானகி
மதுவைப் பார்த்துக் கேட்க மதுவோ
நெளிந்தபடி நின்றாள். பிறகு எப்பவும்
போல எல்லாவற்றையும் முடித்து
விட்டு இரவு அவரவர் அறைக்குள்
புகுந்து விட்டனர்.
நன்றாக உறக்கத்தில் இருந்தவளின்
காதருகில் சென்று குனிந்த கார்த்திக்
"மது" என்று அழைத்தான்.
"ம்ம்" என்றாவாறு மது
தூக்கத்திலேயே அவனுக்கு
ரேஸ்பான்ஸ் செய்ய அவனுக்குச்
சிரிப்பு வந்தது.
"மது எழுந்திரு மது" என்று அவளை
எழுப்பினான். அப்போது தான் அது
கனவில்லை.. உண்மையிலேயே
அவன் அழைக்கிறான் என்று
கண்ணைத் திறந்தாள்.
எழுந்து கண்களைத் தேய்த்தவள்
"என்ன?" கொட்டாவி விட்டபடியே
கேட்டாள்.
"ஹாப்பி பர்த்டே மது" என்று சரியாக
பண்ணிரெண்டு மணிக்கு மதுவின்
கழுத்தில் ஒரு தங்கச் செயினை
அணிவித்தான் கார்த்திக்.
அந்தச் செயினின் டாலரில் Kவும் Mமும்
சேர்ந்தார் போல இருக்க அந்த இரு
எழுத்துகளுக்கும் நடுவே சிறியதான
ஒரு இதயம் அந்த இரு
எழுத்துகளையும் இணைத்து
இருந்தன.
ஒரு கணம் அதன் வேலைப்பாடை
ரசித்தவள் "தேங்கஸ் பார் த விஷ்ஸஸ் அன்ட் கிப்ட்" (thanks for the wishes and
gift) என்று நன்றி கூறினாள். பிறகு
இன்னோரு கிப்டைக் அவள் கையில்
வைத்தான்.. அதைப் பிரித்தவள் "இது
எப்படி... " என்று வியப்பால் கண்களை
விரித்துக் கேட்டாள். அந்த கிப்டில் மது
தன் அன்னை கையில் இருந்த
போட்டோ இருந்தது.. அவள் மட்டும்
இருப்பது போன்ற ஒரு ப்ளாக் அன்
வைட் போட்டோ ப்ரேம். மிகவும்
அழகாக இருந்ததைத் தன் கை
விரல்களால் வருடினாள் மது.
"வருணிடம் கேட்டு வாங்கினேன் மது" என்று அவள் மூக்கைப் பிடித்து
ஆட்டினான் கார்த்திக். "தேங்க்யூ...
ரொம்ப அழகா இருக்கு" என்று
கண்கள் மின்ன சொல்லினாள் மது.
கட்டிப்பிடித்து தாங்க்ஸ் சொல்லுவாள்
என்று எதிர்ப்பார்த்தவனுக்கு
கொஞ்சம் வருத்தம் தான். ஆனால்
அவள் நிலை அறிந்து எதுவும் அவன்
தன் முகத்தில் காட்டவில்லை.
"இன்னும் முடியவில்லை மது" என்று
அவள் கண்களை ஒரு வெள்ளை
துப்பட்டாவால் கட்டினான்.
"எழுந்திரு மது, இன்னும் இருக்கு"
என்று அவளை எழுப்பி மெதுவாகக்
கீழே கூட்டிச் சென்றான்.
"மது கட்டை அவிழ்க்கப் போகிறேன்.
ஆனால் நான் சொன்ன பிறகு தான்
கண்ணைத் திறக்க வேண்டும்" என்று
கூற "சரி" என்று ஒரு கையை
இடுப்பில் வைத்தபடி புன்னகை
செய்தாள் மது.
கார்த்திக் சொன்ன பிறகு கண்ணைத்
திறந்தவள் தன் முழுக் குடும்பமும், தன்
தோழிகளும் நிற்பதைக் கண்டு
ஆச்சரியத்தில் இரு கைகளால் வாயைப் பொத்தி..கணவனை விழி
விரித்து நோக்கினாள். அத்தை
மாமாவோடு கேக் வெட்டத்தான் கூட்டி
வருகிறான் என்று நினைத்தவள் இந்த
நள்ளிரவில் தன் குடும்பத்தையும்
தோழிகளையும் எதிர்ப்பார்க்கவில்லை.
பின் அனைவரும் வந்து வாழ்த்து
சொல்ல மது கேக்கை வெட்டி
கார்த்திக்கிற்கு முதலில் ஊட்டினாள்.
பின் அனைவருக்கும் கேக்கை
கொடுத்தனர்.
ஸ்வேதா தன் ஹஸ்பன்ட்டோடு
வந்திருந்தாள். அவளது கணவனிடம்
நலம் விசாரித்தவள் "எப்படி டி இங்க?
அதுவும் நைட் 12க்கு?" என்று கேட்டாள்.
"ஏய் மறந்துட்டயா.. என் சொந்த ஊரும்
இதான.. கார்த்திக் அண்ணா
எங்களிடம் நேற்று காலை போன்
செய்து சொன்னார்...அதான்
இன்னிக்கு ஈவ்னிங் என் அம்மா
வீட்டுக்கு வந்துட்டோம். குழந்தையை
அம்மாவிடம் கொடுத்துவிட்டு
வந்தோம்" என்றாள்.
"ஓஓ.. ஓகே டி... தாங்க்ஸ் பார் கம்மிங்"
என்று தோழியை அணைத்துக்
கொண்டாள்.
"சரி நாங்க கிளம்பறோம்" என்று
ஸ்வேதா சொல்ல "இருந்துவிட்டு
காலையில் போங்களேன்" என்றபடி
வந்தான் கார்த்திக்.
"இல்ல அண்ணா. பாப்பா முழிச்சுட்டா
ரிஸ்க். நாங்க கிளம்பறோம்" என்று
கூற இருவருக்கும் நன்றி கூறி
அனுப்பி வைத்தனர் கார்த்திக்கும்
மதுவும்.
பின் மிதுனாவும் சிவாவும் சிவாவின்
மனைவியும் கிளம்பினர். பின்
மதுவின் குடும்பத்தினரும் கிளம்ப
அவர்களைப் பார்த்து அனுப்பி வைத்து விட்டு வந்தான்.
கார்த்திக் உள்ளே வர மதுவும் ஜானகி
அம்மாவும் கேக் தட்டுகளை எடுத்துப்
போட்டபடியே பேசிக் கொண்டு
இருந்தனர். பின்பு தானும்
அவர்களுடன் பேசியபடி உதவி
செய்தான். வேலையை முடித்துக்
கொண்டு இருவரும் மேலே தங்கள்
அறைக்குச் வந்தனர்.
அறைக்கதவை சாத்திய மது
கார்த்திக்கை பின்னால் இருந்து
கட்டிப்பிடித்து, தன் முகத்தை அவன்
முதுகில் சாய்த்தபடியே நின்று
விட்டாள். கார்த்திக் திரும்ப முயற்சிக்க
"ப்ளீஸ் திரும்பாதிங்க" என்றாள்
மெதுவான குரலில்.
"தாங்க்ஸ் பார் எவ்ரிதிங்.
சொல்லப்போனா நானே என்
பர்த்டேவ மறந்துட்டேன். எ..எனக்கு
என்ன சொல்றதுனே தெரியல. ஏதோ
ட்ரீம்ல இருக்க மாதிரி இருக்கு. இந்ந
வீட்டுக்கு வந்ததுல இருந்து நீங்க
மட்டும் இல்ல அத்தை மாமா கூட
சின்னதா ஒரு குறை கூட
சொன்னதில்லை. என்னோட
பீலிங்ஸிற்கு மதிப்பு கொடுத்து
இதுவரைக்கு ஒரு நல்ல.... இல்ல...
ஒரு பெஸ்ட் ஹஸ்பன்டா இருக்கீங்க.
ஆனா என்னால தான் ஒரு நல்ல
மனைவியா இருக்க முடியல.. உங்க
கூட இருக்க ஒவ்வொரு நிமிஷமும்
எனக்கு நிம்மதியா... பாதுகாப்பா தான்
இருக்கு.. ஆனா இன்னும் ஏதோ உள்ள
தடுக்கற மாதிரி.. ஏதோ.. என்ன
என்றே தெரியவில்லை. ஸாரி
என்னால உங்களுக்கு ரொம்பக்
கஷ்டம்" என்று சொல்லி அவன்
முதுகில் சாய்ந்தபடி கலங்கிய குரலில்
கூறினாள்.
அதுவரை அவள் பேசப்பேச தன்
மார்பின் மேல் இருந்த அவள்
கையைத் தட்டிக் கொடுத்தவன், அவள்
கலங்குவது தெரிந்ததும் அவளது
கையைப் பிடித்து மெதுவாய்
முன்னால் இழுத்தான். தன் முன்னாள்
நின்ற மதுவின் இரு கைகளையும்
மென்மையாய்ப் பிடித்தவன் "மது
என்னைப் பாரு" என்றான்.
மது அவனைப் பார்க்க "மது நல்லாக்
கேட்டுக்க..நீ என் மனைவி.. உன்னால
எனக்கு எந்த கஷ்டமும் இல்ல மது.
நான் சொன்னதுக்காக நம்ம
பேமலிஸ்காக நீ எட்டு வருஷமா
தாங்கிட்ட கஷ்டதிற்கு முன்னாடி இது
ஒன்னுமே இல்ல மது" என்று மதுவின்
கண்களைப் பார்த்துச் சொன்னவன்
"பர்த்டே அதுவுமா அழுதுவிடாதே மக்கு
மது" என்று அவளது நனி மூக்கின்
மச்சத்தை தொட்டுக் காட்டி சிரிக்க
மதுவும் சிரித்துவிட்டாள்.
"ஆனால்..." என்று மது வாய் திறக்க,
கார்த்திக் மதுவின் இதழின் மீது தன்
ஒற்றை விரலை வைத்து "நோ மது..
எதுவும் பேசமா போய்த் தூங்கலாம்"
என்றான் கார்த்திக்.
மது முகத்தை கழுவிக் கொண்டு வர "மது நாளை மாலை நம்ம இரண்டு
பேரும் என் பாட்டி தாத்தா வீட்டுக்கு
போறோம். பாட்டி உன்ன கூட்டிட்டு வர
சொல்றாங்க. சிறுமுகை தான ஸோ(so)
லீவ் போட அவசியம் இருக்காது. இந்த
வீக் என்ட் வரைக்கும் அங்க
இருந்துட்டு வரலாம். மூனு நாலு செட்
ட்ரெஸ் எடுத்துக்க மது" என்றான்
கார்த்திக்.
"ம்ம் ஓகே" என்றாள் மது.
அடுத்த நாள் காலை மது எழ கார்த்திக்
பெல்டை கட்டிய படி நின்றிருந்தான்.
"அய்யோ டைம் என்ன? எவ்வளவு
நேரம் தூங்கினேன்? என்று
பதறியவளை "மது ஒரு அரைமணி
அதிகமா தூங்கிட்ட..அவ்வளவு தான்..
போய் குளித்து விட்டு வா.. நான்
உன்னை டைம்க்கு ஹாஸ்பிடல் ல
விட்டுவிடுகிறேன்" என்றான் கார்த்திக்.
மது குளித்து விட்டு வெளியே வர "மது
ஒன்ஸ் அகெய்ன் ஹாப்பி பர்த்டே"
என்று ஒரு துணிக் கவரை நீட்டினான்.
மேலும் "நான் கீழே இருக்கேன் மது.. ட்ரெஸ் மாத்திவிட்டு வா" என்று
கதவை சாத்தி விட்டு சென்றான்.
அதைப் பிரித்த மது அதில் அழகாக
குங்குமக் கலரில் லாங் சல்வார் கமீஸ்
இருந்ததைப் பார்த்தாள்.அதில்
ஆங்காஙகே இருந்த டிசைன் அழகாக
இருந்தது. அந்த ட்ரெஸை அணிந்து
அதற்குரிய மேக்கப் செய்து ஒரு கேட்ச்
கிளிப்பை மட்டும் குத்தி முடியை
ப்ரீயாக விட்டாள். கார்த்திக்
சொன்னபடியே மூன்று நாட்களுக்குத்
தேவையான துணிகளையும் எடுத்து
வைத்துக் கொண்டாள்.
கீழே வந்த மது, ஜானகி-வேலுமணி
தம்பதியரிடம் காலில் விழுந்து
ஆசிர்வாதம் பெற, அவர்கள்
வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
"சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம்"
ஜானகி அழைக்க அனைவரும் உண்டு
முடித்தனர்.
"அத்தை நாங்க மூன்று நாட்களுக்கு
பாட்டி வீட்டில் இருக்கப் போகிறோம்..
அவர் சொன்னாரா?" என்று
கைகளைக் கழுவி விட்டு கேட்டாள்.
"நேற்றே சொன்னான்மா.. போய்விட்டு
வாருங்கள்..அவர்களுக்கு கார்த்திக்
என்றால் ரொம்பச் செல்லம்.
உன்னையும் ரொம்ப பிடிக்கும். போய்
இருந்து விட்டு வாருங்கள்" என்று
சொல்லிக் கொண்டு இருந்தார்.
கார்த்திக் கிளம்பலாம் என்று சொல்ல
இருவரிடமும் சொல்லி விட்டு
கிளம்பினார்கள். போகும் வழியில்
நிலாவும் அரவிந்த்தும் கால் செய்து
விஷ் செய்தனர். பின் தன்
குடும்பத்தினருடனும் பேசிவிட்டு
வைத்தவள் கார்த்திக்கை திரும்பிப்
பார்த்தாள். அவன் ஏதோ
யோசனையிலேயே காரை ஓட்டிக்
கொண்டிருந்தான்.
"ட்ரெஸ் நல்லா இருக்கு. எப்போ
எடுத்தீங்க?" என்று பேச்சுக்
கொடுத்தாள்.
"........"
"ஹலோ.." என்று மது அவனை
மீண்டும் கூப்பிட "என்ன மது? என்னக்
கேட்டாய்?" என்று வேறு ஏதோ
யோசனையில் இருந்தவன் அவளைப்
பார்த்துக் கேட்டான்.
"என்ன யோசனை?" எனக் கேட்டாள்
மது.
"மது இன்று 3 மணிக்கே உன்னால் வர
முடியுமா?" எனக் கேட்டான் கார்த்திக்.
"ம்ம் ஓகே.. இதை சொல்லவா இப்படி
யோசித்துக் கொண்டு இருந்தீர்கள்"
எனக் கேட்டாள்.
"ஈவ்னிங் என்னன்னு சொல்றேன்"
என்று கார்த்திக் சொல்ல மதுவும்
தலை ஆட்டிவிட்டாள்.
மாலை வந்து அவளை காரில் ஏற்றிக்
கொண்டவன், அவளிடம் பேச்சுக்
கொடுத்தப் படியே காரை அவினாசி
ரோட்டில் இருந்து சிங்கநல்லூர்
ரோட்டிற்கு திருப்பினாள். அதை
கவனித்த மது "பாட்டி வீட்டிற்கு
மேட்டுப்பாளையம் ரோட்டின் வழியில்
தானே போக வேண்டும் " என்று
கேட்டாள்.
"ஒரு முக்கியமான வேலை இருக்கு மது சிங்காநல்லூர் ல..முடித்து விட்டுப்
போவோம்" என்றவன் அதன் பின்
எதுவும் பேசவில்லை.
அவன் காரை நிறுத்திய இடத்தைக்
கவனித்த மதுவிற்கு உடல் கூசி
நடுங்கிவிட்டது. "இங்கே ஏன்
நிறுத்தினீங்க?" என்று எரிச்சலை
அடக்கியபடி கேட்டாள்.
"காரணம் இருக்கு மது... நம்ம லைஃப்
நல்லா இருக்கனும்னா நீ இத
பேஸ்(face) பண்ணித் தான் ஆகனும்"
என்று அமைதியான குரலில்
கூறியவன் "இறங்கு மது" என்று கார்
கதவைத் திறந்து இறங்கினான்.
மது இறங்காமல் இருக்க அவளது
பக்கம் சென்று கதவைத் திறந்து
"இறங்கு மது" என்றான்.
"என்னால முடியாது...ப்ளீஸ்..
புரிஞ்சிக்கோங்க..." என்று
மன்றாடினாள் மது.
"மது... என்மேல நம்பிக்கை இருக்கா
இல்லையா? நான்தான் உன் கூட
இருக்கேன்ல. இறங்கு" என்றான்
அவன்.
"......" எதுவும் பேசாமல் மது
இறங்கினாள். ஆனால் இறங்கிய
மதுவால் குமட்டலை அடக்க
முடியவில்லை. திடீரென அங்கு
இருந்த ஒரு மரத்திற்குப்பின்
சென்று வாந்தி எடுத்தாள்.
அதைப் பார்த்த கார்த்திக்
காரில் இருந்த வாட்டர் பாட்டிலை
எடுத்துக் கொண்டு மதுவிடம்
சென்று அவளைப் பிடித்து நின்றான்.
தண்ணீர் குடுத்து
அவளை ஆசுவாசப் படுத்தியவன்
"மது இந்த அளவுக்கா உனக்கு
அருவெறுப்பா இருக்கு?" என்று
கேட்டான்.
"ம்ம்" என்றாள் மது.
"சரி இங்க பாரு மது..
உன்ன இந்த அளவுக்கு அருவெறுப்பு
பட வெச்சவன நீ சும்மா விடலாமா?
உன் வாழ்க்கைல நடந்த முக்கால்வாசி
ப்ராப்ளமிற்கு இந்தச் சம்பவம் தான்
காரணம்".
ஏதோ சொல்ல வந்தவளைத் தடுத்து
"எத்தனை கஷ்டம் மது அதனால்
உனக்கு..நீ மட்டும் இல்லாமல் உன்
குடும்பமும் கஷ்டப்பட்டதே..அதான்
என்னைப் பிடித்து இருந்தும் கூட
விலகி இருக்க மது நீ...அதுவும்
இல்லாம கோவைல சீட் கெடச்சும்
சொந்த ஊர விட்டு கோழை மாரி
இன்னொரு ஊருக்கு போயிட்ட...
உன்ன இந்த மாதிரி சூழ்நிலைக்கு
தள்ளிற்கான் அந்த மிருகம். உன்ன
மாதிரி எத்தனை பொண்ணுகளோ
மது" என்று மதுவின் உள் இருந்த
கோவத்தை கார்த்திக்
தூண்டிவிட்டான்.
சிறிது நேரம் நின்ற "நான்
இப்போது என்ன செய்ய வேண்டும்
மது" என்று சிறு தைரியத்துடன்
கார்த்திக்கை பார்த்துக் கேட்டாள்.
"நாம இப்போ மேல
போலாம் மது வா" என்று அவன்
சொல்ல இருவரும் அங்கே சென்றனர்.
அங்கே இருவரும் உள்ளே செல்ல
"யாரு?" என்றபடி உள்ளிருந்து
வந்தான் அவன் அந்த ஆசிரியர்.
முதலில் என்ன செய்வது என்று
தெரியாமல் சென்ற மதுவிற்கு,
அவனைப் பார்த்ததும் உடல்
முழுவதும் எரிந்தது. அவன்
கழுத்தை நெறிக்க வேண்டும் என்று
தோன்றிய எண்ணத்தை
அடக்கினாள். அவன் செய்தது எல்லாம் கண் முன் வர மதுவின்
உடம்பு கோபத்தில் இறுகியது.
முதலில் யார் என்று தெரியாமல்
விழித்த அந்த ஆள் "மது..
மதுமதியா? என்றான்.
"மதுமிதா... எப்படி நியாபகம்
இருக்கும் எத்தனை பெண்களை
எந்த மாதிரி நிலைமைகளுக்கு
ஆளாக்கினாயோ?" என்று ஒரு
எட்டு முன்னாடி எடுத்து வைத்தபடி
கைகளை முன்னால் கட்டிக்
கொண்டு ஏளனமாகக் கேட்டாள்
மதுமிதா.
அவனும் மறக்கவில்லை.
மதுமிதாவையும் அவள் கொடுத்த
அடியையும்.
"மாதா பிதா குரு தெய்வம் என்று
சொல்லுவார்கள்.. தெரியுமா?
குருவிற்கு அடுத்து தான்
தெய்வத்தை வைத்திருக்கிறார்கள்.
அந்த வார்த்தைக்கு நீ அர்த்தம்
உணர்ந்தது உண்டா?
தெரியவில்லை என்றால்
சொல்கிறேன் கேட்டுக்கொள்,
அம்மா அப்பா சொல்றத நம்பறமோ
இல்லையோ ஒரு குரு சொல்றத
எல்லாரும் நம்புவாங்க..
மற்றவர்களைப் போல அல்லாமல்
தன் குருதட்சனைத் தவிர எந்த ஒரு
எதிர்ப்பார்ப்பையும் பார்க்காமல்
இருப்பது குரு மட்டும் தான்" என்று
சொல்லி மது அவனை வெறித்துப்
பார்க்க அவனது முகம்
கன்றிவிட்டது.
"ஆனால் நீ......ச்சை நினைச்சாவே
உடம்பெல்லாம் எரிகிறது. எப்படி டா
உன் மகள் வயதில் இருக்கும்
என்னிடம் உன்னால் தவறாக நடக்க
முடிந்தது" குரலை உயர்த்தி
அவனிடம் கையை ஓங்கிய மது "ச்சை
நான் அடிக்கக் கூட நீ தகுதி
இல்லாதவன்... முடிந்தால் திருந்து..
இப்படி இருந்து கொண்டு இந்தப்
பணியைக் கேவலப்படுத்தாதே"
என்றுவிட்டு மது விறுவிறுவென
வெளியே சென்று விட்டாள்.
மது போன திசையைப் பிரமித்து
ஒரு நிமிடம் பார்த்தான் கார்த்திக்.
தன்னவளுக்கு இவ்வளவு கோபம்
வருமா என்று நினைத்து அசந்து
போனான். அவள் முன்னால் அவனை
அடித்து நொறுக்க வேண்டும் என்று
தான் அவன் வந்தது. ஆனால்
நடந்ததோ வேறு. தன்னிடம் பெட்டிப்
பாம்பாக இருப்பவள் இவனிடம்
சீறியவதைக் கண்டு அவனுக்கே
பேச்சு வரவில்லை. அவளை மனதில் மெச்சாமலும் இருக்க முடியவில்லை.
எத்தனை வேதனை இருந்திருந்தால்
இப்பவும் அவனிடம் அதை
வெளிப்படுத்தி இருபபாள் என்று
நினைத்த கார்த்திக் அந்த ஆளிடம்
திரும்பி, "உன்னை அடித்து நொறுக்க
வேண்டும் என்று தான் வந்தேன்.
ஆனால் ஒரு பெண்ணே அடிக்காமல்
சென்ற உன்னை அடித்தால் எனக்கு
தான் அவமானம். வாழ்வதற்கே
உன்னைப் போன்றவனுக்குத் தகுதி
இல்லை.. ஆனால் ஒன்று.. இன்னும்
ஒரு வாரத்தில் நீ இந்த க்ளாஸை மூடி
விட வேண்டும்... இல்லை என்றால்
காலி செய்ய வைத்து விடுவேன்."
என்று கார்த்திக்கும் அவனை
மிரட்டிவிட்டுத் திரும்பிவிட்டான்.
உண்மையிலேயே மது பேசிய
வார்த்தைகளைக் கேட்ட பிறகு
அவனைத் தொட்டு அடிப்பதற்கு
கார்த்திக்கிற்கு அருப்பாகத் தான்
இருந்தது.
திரும்பி வந்து காரை எடுத்தவன்
மதுவைப் பார்த்து புன்னகை செய்ய
மதுவும் புன்னகைத்தாள். அங்கு புயல்
போல பேசிவிட்டு வந்தவள் இங்கு
தன்னிடம் பூவைப் போல
புன்னகையைப் பூக்க அவனுக்கு
என்ன நினைப்பது என்றே
தெரியவில்லை.
கார் மேட்டுப்பாளையம் ரோட்டில்
சிறுமுகையை நோக்கிச் சென்றது.
மதுவிற்கு ஏதோ சுமையை இறக்கி
வைத்த நிம்மதி உணர்வு. அதே
நேரம் கார்த்திக் ஒரு டீ கடையில்
வண்டியை நிறுத்திவிட்டு "ஏதாவது
வேணுமா மது? சொல்லு இங்கேயே
கொண்டு வரச் சொல்கிறேன் " என்று
கார்த்திக்.
"உஹும்..எதுவும் வேணாம்" என்றாள்
"பசிக்கலையா உனக்கு?" என யோசனையாகக் கேட்டான்.
"இல்லையே" என்றாள். எப்படிப்
பசிக்கும் அவளுக்குத் தான் மனம்
எல்லாம் நிறைந்திருந்ததே.
பிறகு சென்று ஒரு டீயைக் குடித்து
விட்டு சிகரெட்டை ஊதியபடி
நின்றிருந்தான்.. கடைக்கு கொஞ்சம்
முன்னால் காரை நிறுத்தி இருந்ததால் ஸைட் மிரரிலும் ரியர் மிரரிலும்
அவனைப் பார்த்துக் கொண்டு
இருந்தாள் மது. மதுவிற்கு அவனது
அருகாமை மிகவும் நிம்மதியாக
இருந்தது.
'தாயின் கருவறையின் நிம்மதி..
தந்தையின் தோள் சாயும் நிம்மதி..
தோழியின் மடி சாயும் நிம்மதி..
என்னவனே!
உன்னை சரணடைந்தேன்!
தாய், தந்தை, தோழனாய் என
அனைத்துமாய் நீ இருக்க...
பூமித்தாயின் மடியில்
துயில்வது போல நிம்மதி!'
என்பதை உணர்ந்தாள் மது.
"சிகரெட் குடிக்கும் போது கூட அழகன்
தான்டா நீ" என்று நினைத்தவள்
அவன் தன்புறம் திரும்ப முகத்தைத்
திருப்பிக் கொண்டாள். அவள் பார்த்து
விட்டு திரும்பியதைப் பார்த்தவன்
"இன்னும் எத்தனை நாள் தான் டி..
இப்படி மறஞ்சு மறஞ்சு சைட் அடிக்கப்
போற" என்று மௌனமாய்ச்
சிரித்தான்.
சிகரெட்டை கீழே போட்டு அணைத்து
விட்டு வந்து காரில் ஏறி, காரை
சிறுமுகை நோக்கி கார்த்திக் செலுத்த
மது நேற்று சரியாக உறங்காத
அலுப்பிலும், நிம்மதியிலும் உறங்கி
விட்டாள்.
பயம், நிம்மதியின்மை என்று
எல்லாவற்றையும் இன்று மதுவின்
முகம் தொலைத்து இருந்ததைக்
கண்டான். அவளது முகத்தைக்
காதலும் மையலுமாக நோக்கியவன்
காரை நிறுத்தி அவள் புறம் சாய்ந்து
அவள் நன்றாக தூங்கட்டும் என்று
அவளது சீட்டை அட்ஜஸ்ட் செய்துவிட்டான். ஒரு நிமிடம்
அவளைப் பார்த்தவன் அவளின்
கற்றைக் கூந்தல் அவளின் முகத்தில்
விளையாடுவதைக் கண்டு பொறாமை
கொண்டவனாக "உனக்கு
இடமில்லை" என்று மனதினில்
சொல்லி அவளின் கூந்தலை ஓரமாக
விலக்கினான்.
அவளைத் தன் கைகளால் கொஞ்ச
வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி
கன்னத்தை பிடிக்க நினைத்த கையை
ஸ்டியரிங்கில் வைத்துக் காரை
எடுத்தான்.
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-13

சிறுமுகை வந்தவுடன் மதுவைக்
கார்த்திக் எழுப்பி விட்டான். உடம்பை
வளைத்து எழுந்தவள் கண்ணை
முழித்துத் தலையைச் சொறிய
கார்த்திக் அதைக் கண்டு சிரித்தான்.

"என்ன சிரிப்பு?" என்று அவன் எதற்கு
சிரித்தான் எனத் தெரியாமல்
உதட்டைச் சுழித்து மதுக் கேட்டாள்.

"அது ஒன்றுமில்லை மது. இப்ப
தலையச் சொறிஞ்சல... அதே மாதிரி
இந்தக் கண்ணாடியில் பார்த்துப்
பண்ணேன்" என்று அவள் சீட்டின்
மேல் இருந்த கண்ணாடியை கீழே
இழுத்து விட்டான்.

அவன் சொல்லியவுடன் மீண்டும் ஒரு
முறை அதை செய்தவள் "ஏன் இதுலே
என்ன இருக்கு?" என்று தூக்கத்தைத்
தாங்கியக் கண்களுடையே கேட்டாள்.

அவள் கேட்டவுடன் இன்னும்
சிரித்தவன் "இல்ல மது நீ அந்த மாதிரி
முழித்துத் தலையைச் சொறிந்தது
சிரிப்பாக இருந்தது. அதுவும்
இல்லாமல் நேற்றுப் புதுசாக வாங்கிய
உன் ப்ரண்டைப் போலவே இருந்தாய்..
அதான் நீ கேட்டவுடன் இன்னொரு
தடவைப் பார்க்க வேண்டும் என்று
நினைத்து, அப்படி செய்து பார்
என்றேன். நீயும் செய்து விட்டாய்" என
மதுவிடம் சொல்லச் சொல்ல அடக்க
மாட்டாமல் சிரித்துவிட்டான்.

"இருக்கட்டும் இருக்கட்டும் பார்த்துக்
கொள்கிறேன்" என்று பொய்க்கோபம்
காட்டி வெளியே தலையைச்
திருப்பினாள்.

கீழ்வானம் குங்குமமாய்ச் சிவந்து
இருக்க.. சுற்றுப்புறத்தின் பசுமை
அழகும், வீசிய குளிர்ந்த காற்றும்
மதுவை ஈர்த்தது. மதுவும் அவளுக்குப்
பின் கார் வின்டோவில் தெரிந்த
சிவந்த வானத்தையும் ஒன்றாகக்
கண்டவன் கொஞ்சம் கொஞ்சமாக
தன்னை இழக்கத் தொடங்க
ஆரம்பித்தான்.

பின் இருவரும் சிறுமுகை வீட்டை
அடைந்தனர். துரைசாமி-பார்வதி
(கார்த்திக்குடைய தாத்தா பாட்டி)
அவர்களை வரவேற்க வாசலிலேயே
நின்று இருந்தனர். முன்னால் வீடும்
பின்னால் தென்னந்தோப்புமாக அந்த
இடம் வெகு அழகாக இருந்து மதுவை
நன்கு ஈர்த்தது. இருவரும் இறங்கி
வந்து ஒன்றாக பெரியவர்கள் காலில்
விழுந்து ஆசி வாங்க கார்த்திக்கின்
தாத்தா பாட்டி பூரித்துத் தான்
போயினர். பின்னர் இருவரையும்
உள்ளே அழைத்துச் செல்லக்
கார்த்திக்கும் மதுவும் உடையை
மாற்றிவிட்டு ஹாலிற்கு வந்தனர். மது
வெளியே வர தாத்தா பாட்டியிடம்
பிறந்த நாள் வாழ்த்துகளைப்
பெற்று அமர்ந்தாள்.

"எப்படிமா பார்த்திக்குறான் பையன்?
குறும்புலாம் ஓவரா இருக்குமே?"
என்று மதுவிடம் பேச்சுக் கொடுத்துப்
பேரனை வம்பு இழுத்தார் பெரியவர்.

"ஆமாம் தாத்தா" என்று மது சிரிக்க,
கார்த்திக் ஒரு கையால் வாயைப்
பொத்தி "அடிப்பாவி" என்றான்
மனைவியைப் பார்த்து. "இவட்ட என்ன
பண்ணோம்ன்னு தாத்தா கிட்ட
ஆமான்னு சொல்றா" என்று
எண்ணியவனைத் தாத்தாவின் குரல்
கலைத்தது.

"இல்லைனு சொன்னாதான் நான்
ஆச்சரியப் பட வேண்டும் பேரனே"
என்று பேரனை வம்பிழுத்தார்
துரைசாமி.

"தாத்தா இது நல்லதிற்கு இல்லை.
அப்புறம் அத பாட்டிகிட்ட
சொல்லிருவேன்" என்று கார்த்திக்
தன் தாத்தாவை பொய்யாக
மிரட்டினான். ஏதோ பேரனிற்கும்
தாத்தாவிற்கும் உள்ள பரம ரகசியம்
போல..

அதற்குள் அங்கு வந்தப் பார்வதி
"என்ன என்னை விட்டுட்டு எல்லாரும்
பேசிட்டு இருக்கீங்க?" என்றபடி மது
அருகில் வந்து அமர்ந்தார்.

"அது ஒன்றுமில்லை.. சும்மாதான்"
என்று துரைசாமி சமாளிக்க கார்த்திக்
கேலியாகத் தன் தாத்தாவைப் பார்த்து
'அந்த பயம் இருக்கட்டும்' என்பது
போலச் சிரித்தான்.

"ஓ சரி சரி... மது.. கார்த்திக் சின்ன
வயதில் செய்தது எல்லாம் உனக்குத்
தெரியுமா?" என்று கேட்க மது உதட்டை
மடக்கி சிரித்தாள். துரைசாமியோ
தற்போது கார்த்திக்கைக் கேலியாகப்
பார்த்து சிரித்தார். அவனிற்கு ஐயோ
பாட்டி என்று இருந்தது.

"சொல்லுங்க பாட்டி" என்று மது
பாட்டியிடம் கேட்டு கார்த்திக்கை
வெறுப்பேற்றினாள்.

"அதுவந்தம்மா சின்ன வயதில்
இருந்தே ரொம்பச் சுட்டி இவன். ஒரு
இடத்தில் நிற்க மாட்டான். யாராவது
கூட இருந்தால் விளையாடுவான்.
இல்லை என்றால் பின்னால்
தோப்பிற்குப் போய் வேலை ஆட்களை
வேலை வாங்குகிறேன் என்று
அவர்களை விரட்டிக் கொண்டு
இருப்பான். அவனை ஒருத்தர் இருந்து
கவனித்துக் கொண்டே இருக்க
வேண்டும், இல்லை என்றால் ரகளை
தான். நாங்கள் வேறு பயங்கர
செல்லமா எதுவும் சொல்ல மாட்டோம்
இவனை. உன் மாமியார் தான்
இவனை பிடித்து உட்கார
வைப்பதற்குள் படாதபாடு படுவாள்.
அப்புறம் ஸ்கூல் சேர்ந்த பிறகு..."
என்று பாட்டி பேரனை ஓரக் கண்ணால்
பார்க்க கார்த்திக்கோ வேண்டாம்
என்று கண்களால் பாட்டியிடம்
கெஞ்சினான்.

அதைக் கவனித்த மதுவோ, "பாட்டி
பாட்டி ப்ளீஸ் சொல்லுங்க" என்று
கெஞ்சும் குரலில் கேட்டாள்.

"எல்.கே.ஜீ படிக்கும் போது இவன் கூட
படிக்கிற பெண்ணுக்கு கன்னத்தில்
முத்தம் தந்து விட்டான்.. அந்தப் பெண்
கார்த்திக்கைக் கூட்டி வர உன் அத்தை
பள்ளிக்குச் சென்ற போது பையனை
மாட்டி வைத்து விட்டாள். பிறகு
இவனை வீட்டிற்குக் கூட்டி வந்து உன்
அத்தைத் திட்ட.. கோபம் வந்தவன்
இரண்டு நாட்கள் பேசவே இல்லை..
அப்புறம் நாங்கள் இங்கு இருந்து
சென்று சமாதானம் செய்தோம் இந்தப்
பெரிய மனுஷனை" என்று கூற
அனைவரும் சிரித்து விட மது
கார்த்திக்கிடம் திரும்பி ஒற்றைப்
புருவத்தை தூக்கிப் பார்த்தாள்.
கார்த்திக்கோ அவள் பார்ப்பதை
உணர்ந்தும் அவளிடம் தன்
பார்வையைத் திருப்பவில்லை.

பின் நிறைய சேட்டைகளைப் பார்வதி
அம்மாள் அடுக்கினார். எல்லாரும்
சாப்பிட்டு வந்து சிறிது நேரம் பேசினர்.
மதுவிற்கு எவ்வளவு இயல்பாய்
இருக்கிறார்கள்.. பிரியமாகவும்
பழகுகிறார்கள்.. என்று தோன்றி
அவர்களை மிகவும் பிடித்துப் போனது.

"மதுமா நாளை கோவிலுக்கு
செல்லலாம்.. வருவாய்தானே" என
வினவினார் பார்வதி.

"பாட்டி ஞாயிற்றுக்கிழமை காலை
வரை கோவிலுக்கு போக முடியாது..
தலைக்கு தண்ணீர் ஊற்றி
இருக்கிறேன்.." என்று இழுக்க "சரி
விடுடா அடுத்த தடவைப்
பார்த்துக்கலாம்" என்று சாதரணமாக
சொன்னார்.

பாட்டியிடம் அந்த விஷயத்தை
சொல்லிய மது கார்த்திக்கை ஓரக்
கண்ணால் பார்த்தாள்.. அவனோ
ஏதோ புரிந்தவன் போன்று உட்கார்ந்து
இருந்தான். பிறகு எல்லாரும் தூங்க
அவரவர் அறைக்குள் புகுந்து
கொண்டனர்.

பாட்டியிடம் தலையணைகளை வாங்கி
வந்தவன் அதைக் கட்டிலில்
வைத்துவிட்டு மதுவிடம் திரும்பினான்.
அதேநேரம் அவளும் அவன் எடுத்துத்
தந்த பர்த்டே ட்ரெஸை மடித்து
பைக்குள் வைத்துத் திரும்பியவள்
அவன் தன் அருகில் நிற்பதைப்
பார்த்து சற்று திகைத்து பின்னால்
நகர முயன்றவள் சுவற்றில் ஒட்டி
நின்றாள்.

அவள் இருபுறமும் சுவற்றில் கைகளை
ஊன்றி அவளைப் பார்க்க, மதுவோ
அவனது பார்வையை தாங்க
முடியாமல் கீழ் உதட்டைக் கடித்தபடி
தரையைப் பார்த்தாள். அவளது
செய்கை அவனுக்குச் சிரிப்பை
வரவழைக்க, அவளை சீண்ட
வேண்டும் என்று எண்ணியவன்
"என்னை குறும்பு என்று தாத்தா
கேட்டதற்கு ஆமா-ன்னு சொன்னதான
மது. இப்ப கூட அப்படித்தான். ஆனால்
மூன்று நாட்களுக்குப் பிறகு உனக்கே
தெரியும் நான் எவ்வளவு குறும்பு
என்று" என்று அவள் காதின்
அருகில் சென்று இரகசியம்
பேசினான். அவன் காதின் அருகில்
பேசியது மதுவின் காது மடலைச்
சிலிர்க்கச் செய்தது உண்மைதான்.

மதுவிற்கு என்ன பதில் பேசுவது
என்றே தெரியவில்லை. வார்த்தை
வெளியே வராமல் தொண்டையில்
சிக்கியது. இவ்வளவு அருகில் நின்று
அவன் காதில் இரகசியம் பேசியது
வேறு அவளுக்கு உடல் எல்லாம் குறு
குறுத்தது.

"என்ன மது பதிலையே காணோம்.
மூன்று நாட்களுக்குப் பிறகும் நான்
நல்ல பையனாக இருக்க வேண்டுமா?
சேட்டைகளை செய்யலாம் தானே?"
என்று அவளின் சிவந்த முகத்தையும்
காதையும் பார்த்து மேலும் சீண்ட
நினைத்து தாழ்ந்த குரலில்
அழுத்தமாக வினவ மதுவிற்குச்
சிரிப்பு வந்து விட்டது.

"ம்ம்" என்று தரையைப் பார்த்தே
தலையை ஆட்டினாள்.

சட்டென்று நினைவு வர "ஆமா யார
கிஸ் பண்ணிங்க எல்.கே.ஜி படிக்கும்
போது?" என்று கண்களில்
கோபத்தைக் காட்டிக் கேட்டாள். ஏனோ
மதுவிடம் கண்களில் பொறாமை
என்ற ஒன்றைக் கண்டான் கார்த்திக்.

"மது அது சின்னப் பையனா இருக்கும்
போது தெரியாமப் பண்ணியது" என்று
சிரிப்பை அடக்க முயன்றவன் "அதுவும்
இல்லாமல் எனக்குக் கன்னம் அழகாக
இருந்தால் பிடிக்கும் மது" என்று
மதுவின் கன்னங்களை ஒற்றை
விரலால் வருடினான். அந்த வருடலில்
ஒரு நிமிடம் உடல் நடுங்கினாலும்
வெளியே காட்டாதவள் அவனை
முறைத்துத் தள்ளினாள்.

"இருக்கும் இருக்கும்" என்று அவனது
தோளைக் கையால் குத்தித்
தள்ளிவிட்டு படுக்கையில் ஒரு பக்கம்
சென்று சம்மனம் கால் போட்டு
உட்கார்ந்து அவனை முறைத்தாள்.

அவள் அடித்தவுடன் "அஅ.. என்னடி
அடிக்கற..?" என்றவன் தோளைத்
தேய்த்தபடி கட்டலின் இன்னொரு
பக்கம் வந்து அமர்ந்தவன், அவளை
முறைத்தவனைக் கண்டு கொள்ளாது
"பெரிய கோகுலத்துக் கண்ணன்னு
நினப்பு சுத்தி சுத்தி பொண்ணுங்க..
ஸ்கூல்ல ஒருத்தி காலேஜில் ஒருத்தி"
முணுமுணுத்தவளின் கையைப்
பிடித்துத் தன் புறம் இழுத்தவன்
"என்னதான் கண்ணனுக்கு காதலிகள்
இருந்தாலும் அவர் மணந்து
மனைவியாக ஏற்றுக் கொண்டது
ருக்மணியைத் தான்" என்று கார்த்திக்
சொல்ல அவனின் பார்வையின் வீச்சு
தாங்காமல் மது கண்களைத்
தாழ்த்தினாள்.

ஒரு நிமிடம் முகம் சிவந்தவள்
தலையை வேறுபுறம் திருப்பி "பேச்சு
சாமார்த்தியம் அதிகம்தான்" என்றவள்
"நாளை இருவரும் சீக்கிரம் எழுந்து
கிளம்ப வேண்டும். டைம் ஆச்சு
சீக்கரம் தூங்கலாம்" என்றுப் பேச்சை
மாற்றினாள் பெட் ஷீட்டை கையில்
எடுத்தபடியே.

"பேச்சு சாமர்த்தியம் எனக்கு என்றால்
பேச்சை மாற்றும் சாமர்த்தியம்
உனக்கு மது" என்று அவன்
கேலியாகக் கூற, சிரித்தவள் பதில்
பேசாமல் முதுகைக் காட்டிப்
படுத்துவிட்டாள். அவனும் படுத்துவிட
இருவரும் அவரவர் அருகாமையில்
நிம்மதியாய் உறங்கினர்.

அடுத்த நாள் மதுவும் கார்த்திக்கும்
வழக்கம் போலக் கோவை சென்று
வந்தனர். உடையை மாற்றிக்
கொண்டு மது வெளியில் வர "இந்தா
மது இது உனக்காக வாங்கியது"
என்று துரைசாமி-பார்வதி தம்பதியர்
மதுவிற்கு ஒரு பீச் (peach) கலர்
டிசைனர் சேலையை மதுவிற்குத்
தந்தனர். மது இருவரின் கால்களிலும்
ஆசிகளைப் பெற்று அதை வாங்கிக்
கொண்டாள். பின் இரண்டு நாட்களாக
நன்றாக சென்றன.

சனி அன்று இருவரும் கோவையில்
இருந்து சிறுமுகை கிளம்பும் போது
"100 பீட் ரோட் போங்க..ஒரு ட்ரெஸ்
வாங்க வேண்டும்" என்றாள் மது.

"அம்மையார் உத்தரவை மீற முடியுமா!"
என்று கேலி செய்து விட்டுக் காரை
100 பீட் ரோட்டில் விட்டுப் போத்திஸில்
நிறுத்தினான்.

இருவரும் உள்ளே செல்லும் பொது
"என்ன வாங்கப் போற மது?" என்று
வினவினான்.

"பாட்டி வாங்கிக் குடுத்த சேலைக்கு
ரெடிமேட் ப்ளவுஸ் அன்ட்
இன்ஸ்ஸகர்ட்" என்று பதில்
அளித்தாள்.

பின் அந்த பீச் நிறத்திற்குப்
பொறுத்தமாக ஒரு கோல்டன் கலர்
ப்ளவுஸ் மற்றும் இன்ஸ்ஸகர்ட்டை
எடுத்தாள் மது. பில் கவுன்டரில்
வந்து மது பணத்தை பையில் இருந்து
எடுக்க, கார்த்திக் அவளை
முறைப்பதைக் கண்டவள் அவனைப்
புரியாமல் பார்த்தாள்.

"பணத்தை உள்ள வெய்" என்றவன்
தன் கார்டை எடுத்து, அங்கு
நின்றிருந்த சேல்ஸ்மேனிடம் தர
அவன் எல்லாம் முடித்து கார்டையும்
பையையும் கார்த்திக்கிடம் தந்தான்.
பின் இருவரும் காரில் செல்ல "மது நீ
தனியா பர்சேஸ் பண்ணப் போறப்ப
எப்படியோ, ஆனா என் கூட
வரும்போது நீ செலவு செய்யக்
கூடாது" என்றுக் கறார்க் குரலில்
மதுவிடம் சொல்ல சரி என்று
தலையை ஆட்டினாள். பிறகு சிறிது
நேர அமைதியின் பின் இருவரும்
ஏதோ பேச ஆரம்பிக்க, அரட்டை அடித்த
படியே வந்தனர். பாட்டியிடம் சென்று
அவரிடம் வாங்கி வந்ததைக்
காண்பித்தாள்.

இருவரும் சமையல் அறையில் இருக்க
"மது இங்கப் பாரு, உன் போன்
அடிக்கிறது" என்று மதுவின்
போனைக் கொண்டு வந்து கார்த்திக்
தந்தான்.

போனை வாங்கிப் பார்த்தவள்,
போனை எடுத்து "ஹே ஸ்வேதா..."
என்றாள்... இல்லை இல்லை குஷியில்
கத்தினாள்.

"டி மது.. உனக்கு ஒரு விஷயம்
தெரியுமா?" என்று எதையோ
சொல்லத் துடிக்கும் ஆர்வத்துடன்
பேசினாள் ஸ்வேதா.

"ஹம்.... என்னடி விஷயம் சொல்லு"
என்றாள் மது யோசித்தபடி.

"அந்த ராஸ்கல்.. அதான் அந்த
ஸ்போகன் க்ளாஸ் எருமை.. அவனைப்
போலீஸ் அரெஸ்ட் செய்து
இருக்கிறார்கள்.. இப்போது தான்
நியூஸில் பார்த்தேன். அதான்
உனக்குக் கூப்பிட்டேன்" என்று
சொல்ல "அப்படியா... இரு
கூப்படுகிறேன்" என்று மது
சொல்லிவிட்டுப் போனைக் கட்
செய்தாள். போனை வைத்தவள்
யோசித்தபடி வெளியே ஹாலிற்கு வர
அந்த நியூஸைத் தான் கார்த்திக்கும்
துரைசாமியும் பார்த்துக் கொண்டு
இருந்தனர். "ஏதோ போதை மருந்து
கடத்தி வைத்து இருந்ததாகக் கைது"
என்று சொல்லிக் கொண்டிருந்தார்
அந்தச் சேனலின் செய்தி வாசிப்பாளர்.

மதுவின் பார்வையை உணர்ந்த
கார்த்திக் எழுந்து "தாத்தா நாங்கள்
பின்னால் தோப்பு வரை போய்விட்டு
வருகிறோம்.." என்று தாத்தாவிடம்
சொல்லிவிட்டு மதுவை அழைத்தான்.
மதுவும் பாட்டியிடம் சொல்லிவிட்டு
அவனுடன் புறப்பட்டாள்.

தோப்பினுள் சிறிது நேரம் நடந்த பின்
"நீங்கள் தானே?" என்று மது
வினவினாள்.

"ஆமாம்" என்றான் ஒற்றை
வார்த்தையாக. அவனின் குரலில்
ஆத்திரமும் கோபமும் இருந்தது.

"ஏன்... அவனுக்கும் ஏதாவது குடும்பம்
என்று இருக்குமே" என்றபடி நடந்து
தன் மனதில் தோன்றியதைக்
கேட்டாள்.

இரண்டடி வைத்தவள் கார்த்திக்
அங்கேயே நிற்பதைப் பார்த்து "என்ன...
நின்னுட்டீங்க?" என்று கேட்டாள்.

அவன் விழிகளோ கோபமாக மதுவை
நோக்கியது, "அதுக்கு-ன்னு உன்னை
அப்படிப் பண்ணியவனைச் சும்மா விட
சொல்றியா... அப்படி பண்ணினா
நான் ஆம்பிளையே இல்லை..
உன்னை மட்டும் இல்லை... உனக்கு
முன்னால் பின்னால் என்று பலப்
பெண்கள்.. நினைத்துப் பார்
அவர்களும் உன்னை மாதிரி தான்
தவித்திருப்பார்கள்... அவனை நான்
உயிரோடு விட்டுவிட்டு வந்தேன்
என்றால் இதான் காரணம். செத்தால்
அந்த ஒரு நிமிடம் தான் வலி
அவனிற்கு.. ஆனால் நீ அனுபவித்த
வலி.. சென்னையில் யாருக்கும்
தெரியாமல் லண்டன் போகும் முன்
ஸைக்காலஜிஸ்ட் கிட்டப் போனாய்
தானே.. எவ்வளவு மன அழுத்தத்தில்
இருந்திருப்பாய்.. அதான் அவன் பல
வருடம் வெளியவே நடமாட முடியாத
படி செய்து விட்டேன்.." என்றவன்
"அதுவும் இல்லாமல் அந்த நாயிற்கு
குடும்பம் எல்லாம் ஒன்றும் இல்லை..
தனியாகத்தான் இருந்திருக்கிறான்.
அப்படி இருந்திருந்தாலும் நான்
கவலைப்படப் போவது இல்லை..
அவனவன் செய்யும் தப்பிற்கு
அனுபவிக்க வேண்டியது தான்..
அதான் அரவிந்திடம் சொல்லி
வேலையை முடித்து விட்டேன் "
என்று சொல்லி முடித்தான்.

ஏனோ மதுவிற்கு சற்றுப்
பெருமையாகவும் கர்வமாகவும்
இருந்தது. அவன் அருகில் சென்று
அவன் கையைப் பிடித்துக் கட்டிக்
கொண்டவள் "நான் ஸைக்காலஜிஸ்ட்
கிட்ட போனது உங்களுக்கு எப்படித்
தெரியும்" என்று அவன் தோளில்
தலை சாய்த்தபடி வினவினாள்.

"நீ ட்ரீட்மெண்ட் எடுத்த டாக்டர் வேறு
யாரும் இல்லை.. நம் மாயாவுடைய
உறவுக்காரர் தான்..கல்யாணத்திற்கு
ரிஷப்ஷன் அன்று வந்தவர்.. என்னிடம்
இரவு தனியாக வந்து சொல்லி விட்டுப்
போனார்.. உன்னை நன்றாகப்
பார்த்துக் கொள்ளச் சொல்லியும்
கேட்டுக் கொண்டார்.." என்று
கூறினான்.

"ரொம்ப நல்ல அங்கிள் அவர்... அவரு
ட்ரீட்மெண்ட் முடிஞ்சு தான் லண்டனே
கிளம்பினேன்" என்று கூறினாள் மது..

பிறகு இருவரும் பேசிக் கொண்டே வர
கிணறு வந்தது.. உள்ளே எட்டிப்
பார்க்க உள்ளே பௌர்ணமி நிலவின்
ஒளி தண்ணீரில் விழுந்து மிதந்து
மிகவும் அழகாகத் தெரிந்தது. சிறிது நேரம் நின்று அதை ரசித்தவள் பின்
கார்த்திக்கிடம் திரும்ப அவனோ
அங்கு இருந்த ஒரு கயிற்றுக் கட்டிலில்
உட்கார்ந்திருந்தான். அவன் அருகில்
சென்று நின்றபடியே பேசிக் கொண்டு
இருந்தாள். உட்காரச் சொல்லியும்
உட்காராமல் நின்று கொண்டே
வலவலத்துக் கொண்டு இருந்தவளை
கண் இமைக்காமல் பாரத்துக்
கொண்டிருந்தான்.

திடீரென மதுவின் அருகில் இருந்து
'உர்ர்ர்ர்' என சத்தம் வந்தது. என்ன
என்று திரும்பிப் பார்த்த மது நடுங்கி
விட்டாள். ஒரு பெரிய நாய் ஒன்று
நிற்பதைக் கண்டவள் 'ஏங்க அதைப்
போகச் சொல்லுங்க ப்ளீஸ்" என்று
கார்த்திக்கிடம் தன் இரு கைகளாலும்
காதைப் பொத்தியபடி கண்களை மூடி
பயந்தக் குரலில் சொன்னாள்.

"அது எதுவும் பண்ணாது மது.." என்று
சொல்லியும் மது அப்படியே இருக்க...
நாயை விரட்டி விட்டான்.

"மது நாய் போயிருச்சு.. கண்ணைத்
திற.. அன்ட் நீ இப்போது எழுந்தால்
தான் நான் எழ முடியும்" என்றான்
கார்த்திக்.. அப்போது தான் பயத்தில்
அவன் மடியிலேயே உட்கார்ந்து
விட்டதை உணர்ந்தாள் மது.
டக்கென்று எழுந்தவள் போலாம் என்று
எங்கோ பார்த்துச் சொல்லக்
கார்த்திக்கிற்கு சிரிப்பு வந்தது..
கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியவன்..
அவளைக் கூட்டிக் கொண்டு வீட்டை
நோக்கி நடந்தான்..

அடுத்த நாள் காலை சேலையைக் கட்டி
வந்து பார்வதி அம்மா முன் நின்றாள்
மது.

"ரொம்ப அழகா இருக்க மதுக்குட்டி"
என்று மதவின் முகத்தை தன்
இருகைகளாலும் வழித்துச்
சொடுக்கிட்டார் பார்வதி.

"அடடே உனக்குச் சேலை பிரமாதமாக
இருக்கிறதுமா" என்றபடி அங்கு வந்து
நின்றார் துரைசாமி.

சண்டே எப்பவும் கார்த்திக் ஏழு
மணிக்கு மேல் தான் எழுந்திருப்பான்.
காப்பியைக் குடித்தவள் மணியைப்
பார்த்து கார்த்திக் எழுந்திருப்பான்
என்று ஒரு கப் காப்பியை எடுத்துக்
கொண்டு ரூமிற்கு சென்றாள்.
ஆனால் அவன் உறங்கிக்
கொண்டிருந்ததைக் கண்டவள்
போய் அவனை எழுப்ப, எழுந்து
சென்று பல்துலக்கி முகத்தைக்
கழுவிக் கொண்டு வந்தவனிடம்
"காஃபி ஆறிவிட்டது. கீழேயே
வாங்க...வேற போட்டுத் தரேன்"
என்றபடி மேஜையில் இருந்த
காஃபியை எடுத்தாள். என்ன "ம்ம்"
என்று கூட பதிலில்லை என்று
திரும்பி அவனைப் பார்த்தாள்.

கார்த்திக்கைத் திரும்பிப் பார்த்த மது
அவனது பார்வையின்
வித்தியாசத்தை உணர்ந்தவள்
அப்படியே அவனைப் பார்த்தபடி
நின்றாள். அவனும் அதே நேரம்
"கல்யாணத்தின் போதும் சேலை தான்
கட்டி இருந்தாள். அப்போது அழகாகத்
தெரிந்தாலும் இப்படி ஒரு உணர்வு
தன்னிடம் இல்லையே.." இன்று அவள்
சேலை கட்டிய நேர்த்தியும் அந்த பீச்
நிறத்தையும் மீறி வெளியே தெரிந்த
இடையையும் கண்டு சொக்கித்தான்
போனான். மேலும் நெற்றியில் அவள்
வைத்திருத்த குங்குமமும், கழுத்தில்
அவன் அணிவித்திருந்த தாலி
மின்னுவதையும் கண்டவனுக்கு இவள்
தன் மனைவி என்ற உரிமையும்
கர்வமும் ஒன்று சேர்ந்தது.

அவள் காதலை
காதலிப்பதை விட
அவளின் காதலில்
கரைந்து
அவள் காதலிலே
தொலைந்து
போக ஏங்கியது அவன் மனம்.

அதே பார்வையோடு அவன் அருகில்
வர மது கையில் வைத்து இருந்த
காஃபி கப்பை பார்த்தபடி நின்றாள்.
"இன்னைக்கு வீட்டிற்கு போகலாம் மது.
இதற்கு மேல் என்னால் முடியாது"
என்றவன் "எனக்கு காஃபி வேணாம்
மது. டிபன் எடுத்து வைங்க" என்று
பையில் இருந்த ட்ரெஸை எடுத்துக்
கொண்டு குளியல் அறைக்குள்
புகுந்தான்.

மது கீழே வர அவளது முகம்
சிவந்திருந்ததையும் காஃபி கப்
அப்படியே திரும்பி வந்ததையும்
கவனித்த பார்வதி அம்மாள் ஏதோ
புரிய மௌனமாகச் சிரித்துவிட்டு
டிபனை எடுத்து டைனிங் டேபிளில்
வைத்தார்.

கீழே கார்த்திக் வர எல்லாரும் சாப்பிட
அமர்ந்தனர். சாப்பிட்டு விட்டு பாட்டிக்கு
உதவி செய்தபடி இருந்தாள் மது.
ஞாயிறு என்பதால் கார்த்திக்கிற்கு
பிடிக்கும் என்று அசைவம் வகையாக
சமைத்து அசத்தினார் பார்வதி.
எல்லாம் சமைத்து வைத்து விட்டு
இருவரும் ஹாலில் வந்து அமர்ந்தனர்.
கார்த்திக்கும் தாத்தாவும்
தோட்டத்திற்கு ஒரு வேலையாக
சென்றிருந்தனர்.

"குழந்தை பெற்றுக் கொள்வதை
தள்ளிப் போட்டு வைத்திருக்கிறீர்களா
மதுமா?" என மதுவை பார்த்துக்
கேட்டார் பார்வதி.

"இல்லையே பாட்டி" என்று
அமைதியாகச் சொன்னாள் மது.

"இல்லை என்றாள் சந்தோஷம் தான்.
ஆனால் அப்படி ஏதும் இருந்தால்
வேண்டாம் கண்ணு.. நிலாவும் இப்படி
செய்து தான் ஒரு வருடம்
தள்ளிப்போட்டாள். ஆனால்
எங்களுக்கு தான் கொள்ளுப் பேரன்
பேத்திகளைப் பார்க்க ஆசை. அவளும்
இப்போது எங்கள் ஆசையை
நிறைவேற்றி விட்டாள். கார்த்திக்கும்
கல்யாணத்திற்கு பிடி கொடுக்காமல்
இருந்தான். நாங்கள் இங்கு வந்தால்
கல்யாணப் பேச்சை எடுப்போம் என்று
வருவதையே தவிர்த்தான்.
கார்த்திக்கை நீ ஆசைப்பட்டு
மணந்ததாக உன் அத்தை சொன்னாள்.
அவன் உன்னிடம் ஆசையாக
இருக்கிறான் தானே?" என்று கேட்டார்.

காலையில் அவன் பேசியது நினைவு
வர தன் உடம்பில் உள்ள ரோமங்கள்
சிலிர்ப்பதை உணர்ந்தாள் மது. "அவர்
என்னிடம் மிகவும் பிரியமாக உள்ளார்
பாட்டி" என்றாள் மனதில் எழுந்த
சந்தோஷத்துடன்.

"கொஞ்சம் கோவக்காரன் தானம்மா..
பிடிவாதக்காரனும் கூட" என்று பாட்டி
சொல்ல "ஆமாம் பிடிவாதக்காரன்
தான்..அதான் தெரியுமே" என்று
மனதினுள் நினைத்து சிரிக்க பாட்டி
தொடர்ந்தார்.

"பொய் சொன்னால் சுத்தமாகப்
பிடிக்காது. ஆனால் அவனுக்குப்
பிடித்து விட்டால் மிகவும் அன்பாக
இருப்பான். அவன் ஏதாவது
சொன்னால் கூட அனுசரித்துப்
போய்க்க தங்கம்" என்று மதுவின்
கைகளைப் பிடித்துப் பேசினார்
பார்வதி.

பிறகு கார்த்திக்கும் தாத்தாவும் வர
எல்லாரும் சாப்பிட்டனர்.. பின் பார்வதி
அம்மாள் இரண்டு நாளாக செய்த
பலகாரத்தை எல்லாம் மகள் வீட்டிற்கு
குடுக்க எடுத்து பாத்திரங்களில்
அனைத்தையும் அடுக்கினார். ஒரு
பக்கம் துரைசாமியும்
தோட்டத்திலிருந்து கொண்டு வந்த
காய்கறிகளை அடுக்கினார். பின்னர்
ஐந்தரை மணி அளவில இருவரும்
கிளம்ப பார்வதி அம்மாள் மதுவின்
காதில் கிசுகிசக்க... பதிலுக்கு மதுவும்
காதில் ஏதோ பேச.. மதுவை
கட்டியணைத்து முத்தமிட்டார்
பார்வதி.

கார் சிறு தூரம் சென்றபின், "என்ன
மது பாட்டியும் நீயும் ஏதோ ரகசியம்
பேசிட்டு இருந்தீங்க?" என்று கேட்டான்.

அவன் கேட்பான் என்று மது
எதிர்பார்த்தது தான். "வந்து பாட்டிக்கு
கொள்ளுப் பேரனையோ
பேத்தியையோ பார்க்க ஆசையாம்
சீக்கிரம் நல்ல செய்தி சொல்ல
வேண்டும் என்று சொன்னார்கள்" என
நேரே ரோட்டைப் பார்த்தபடி
கண்களால் சிரித்து சொன்னாள்.

"அதற்கு நீ ஏதோ சொன்னது போல
இருந்ததே மது" என்று விடாமல்
ஸ்டியரிங்கில் விரல்களை தட்டியபடிக்
கேட்டான்.

விடமாட்டான் என்று நினைத்தவள்
"அ...அது இரண்டு மாதங்களில்
கண்டிப்பாக நல்ல செய்தி சொல்லி
விடுவேன் என்று சொன்னேன்" கார்
கதவு வழியாக வெளியேப் பார்த்தபடி
சொல்லி முடித்தாள்.

"ஏன் மது அப்படிச் சொன்ன?" என்று
கார்த்திக் கேட்க திடுக்கிட்டு மது
அவனைத் திரும்பிப் பார்க்க "ஒரே
மாதத்தில் என்று சொல்லி இருக்க
வேண்டியது தானே" என்று கூறிக்
கண்ணடித்தான்.

மதுவிற்கு என்ன செய்வது என்று
தெரியவில்லை. அவனைப்
பார்க்காமல் நேராக ரோட்டின் மேலே
கண்களை வைத்தபடி வந்தாள்.
இருவரும் பொள்ளாச்சி அடைவதற்கு
முன்பே நன்கு மழைப் பெய்ய
ஆரம்பித்து விட்டது. போன் வர
எடுத்துப் பார்த்தவள் "அத்தை தான்"
என்று கேள்வியாய் நோக்கிய
கார்த்திக்கிடம் கூறிவிட்டு போனை
அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.

"............. ஸ்பேர் கீ இருக்கு மது..
நாளைக்கு காலையில் நாங்கள்
வருவதற்காக நீ சீக்கிரம் எழ
வேண்டாம்" - ஜானகி அம்மாள்.

"சரி அத்தை" என்று சொன்னவளின்
கண்களில் சிரிப்பும் உதட்டில் ஒரு வித
படபடப்பும் இருந்தது.

போனை வைத்தவள் "அத்தையும்
மாமாவும் எங்க வீட்டில் தான்
இருக்காங்கலாம். பொள்ளாச்சில
மழை ரொம்பவே அதிகமாக இருக்காம்.
அதுனால இன்னிக்கு நைட் அங்க
இருந்துட்டு வரதா சொன்னாங்க"
என்று ஓரக்கண்ணால் பார்த்தவாரே
கூறி முடித்து தண்ணீர் பாட்டலை
எடுத்து தண்ணீரை குடித்தாள்.

"எல்லாமே சாதகமாயாக நடக்கிறதே
மது" என்று கூறி ஸ்டியரிங்கை இறுகப்
பற்றிபடி புன்னகையுடன் மதுவைப்
பார்க்க மதுவிற்கு குடித்த தண்ணீர்
வெளியேறி வந்துவிடும் போல
இருந்தது. மதுவிற்குப் புரிந்து விட்டது..
"இன்னிக்கு இவன் ஒரு முடிவுல தான்
இருக்கான்" என்று நினைத்தவளுக்கு
இதயம் தாறுமாறாகத் துடித்தது. பின்
ஏழரை மணி அளவில் வீட்டை அடைய
மழை பேயாகப் பெய்து கொண்டு
இருந்தது.

காரை ஷெட்டில் நிறுத்தி விட்டு
உள்ளே பைகளைத் தூக்கி வந்த
போதே பாதி நனைந்து விட்டனர்.
பின்னர் சென்று தாத்தா-பாட்டி
கொடுத்ததை எடுத்து வந்தவர்கள்
முழுதாக நனைந்து விட்டனர்.
எல்லாவற்றையும் உள்ளே எடுத்து
வந்த பிறகு, கார்த்திக் மாடிக்கு
சென்று ஏதாவது நனைகிறதா என்று
பார்த்து விட்டு கதவைகளை எல்லாம்
பூட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

அறைக்குள் நுழைந்தவன் மதுவைப்
பார்த்து அப்படியே நின்று விட்டான்.
ட்ரெஸிங் டேபிளின் முன்னால் நின்று
தலை முடியை முன்னால் போட்டு
தலையைத் தட்டிக் கொண்டு
இருந்தாள். சேலை வேறு முழுதாக
நனைந்து அவளது அங்கங்களின்
செழுமையைக் காட்ட கார்த்திக்கின்
காலகள் தானாக அவளிடம் சென்றன.
ஏற்கனவே காலையில் இருந்து
மந்திரித்து விட்ட கோழி மாதிரி தான்
இருந்தான். இப்போது சொல்லவா
வேண்டும்

அவன் கால் அடிச் சத்தத்தை
உணர்ந்தவள் "டவல் வைத்திருக்கேன்
பாருங்க...எடுத்து தலையை துடைங்க..
இ....... " என்று சொல்லிக் கொண்டே
போனவள் அவன் பின்னால் இருந்து
அணைக்க அப்படியே நின்று விட்டாள்.
அவளை அணைத்தவன் மூச்சு விடக்
கூட மறந்து நின்றிருந்தவளின்
பின்னங்கழுத்தில் முகம் புதைக்க மது
கண்களை மூடி நின்றாள்.

அவளைத் தன் புறம் திருப்பியவன்
தன் இரு கரங்களால் அவளின்
இடுப்பைச் சுற்றி வளைத்து அவளைத்
தன் அணைப்பிற்குள் நிறுத்தி
அவளது கழுத்தில் தன்
உதடுகளால் வல வர மதுவின் உடல்
அவனது செய்கையில் நெகிழவும்
நடுங்கவும் செய்தன. அவன்
உஷ்ணத்தை உணர்ந்து அவனது
செய்கையிலும் மது கூசிச் சிலிர்த்து
நின்றாள்.

பின் கைகளுக்குள் நிறுத்தியபடியே
மதுவைப் பார்த்து "மது நான் ஒன்று
கேட்கிறேன். பதில் சொல்" எனக்
கேட்டான். "ம்" என்றாள் அவன் சட்டைப்
பட்டனைப் பார்த்தபடியே. "என்னைப்
பார் மது" என்று கார்த்திக் சொல்ல
அவனை நிமிர்ந்து நோக்கி, "என்ன?"
என்று அவனைப் பார்த்தபடி கேட்டாள்
மது.

"மது இதில் உனக்கு சம்மதம் தானே...
இப்போது இந்த விஷயத்தில் உனக்கு
அருவருப்பு இருக்கா? ஏனென்றால்
உன்னைக் கட்டாயப்படுத்தி உன்னை
நான் ஹர்ட் பண்ண விரும்பல.
என்னவாக இருந்தாலும் சொல்லு"
என்று அவளின் விருப்பத்தைக்
கேட்டான். இருந்தாலும் வேண்டாம்
என்று சொல்லிவிடுவாளோ என்ற ஐயமும் இருந்தது.

"இல்லை" என்றாள் மது அமைதியாக
கார்த்திக்கைப் பார்த்து.

"நிஜமாகவா மது?" என்றவனின்
முகத்தை மது கூர்ந்து பார்க்க அதில்
தெரிந்ந சந்தோஷம், தயக்கம், ஏக்கம்,
தவிப்பு, பாசம், காதல், காமம், ஆசை
என அனைத்தையும் கண்டு மது ஆடித்
தான் போனாள்.

அவளை, அவன் கைகள் இடுப்பைச்
சுற்றி கோர்த்து அணைத்துக்
கொண்டு அவளின் பதிலை
எதிர்ப்பார்க்க, மது தன் ஒரு கையை
அவன் தோளில் வைத்து இன்னொரு
கையை அவன் கன்னத்தில் வைத்து
"எனக்கு எங்க வீட்டில் எல்லார்
கிட்டையும் இருந்த பாதுகாப்ப விட
உங்க கிட்ட இப்போ அதைவிட
அதிகமா ஃபீல் பண்றேன். You're the
best thing ever happened in my life
karthick" என்றாள் தன் அவள் அவன்
கண்களைப் பார்த்துச் சொல்ல
கார்த்திக் விவரிக்க முடியாத
சந்தோஷத்திற்குச் சென்றான்.
அவனைப் பொருத்த வரை அவள் தன்
மேல் பைத்தியமாக இருக்கிறாள்
என்று அவன் அறிந்த உண்மை..
ஆனால் அவள் சம்மதம் இல்லாமல்
உடலளவில் மட்டும் வாழவும் அவன்
விரும்பவில்லை. அப்படி
நினைத்தவனுக்கு அவள் சொன்ன
வார்த்தைகள் காதில் தேனாய்ப்
பாய்ந்தன.

"மது" என்று அவளை கார்த்திக் இறுக
அணைக்க மதுவும் அவனின்
அணைப்பை ஏற்று தானும் அவனை
அணைத்தாள். அவனது அணைப்பில்
உலகம் மறந்து நின்றவள் "ஐ லவ் யூ
மது.. ஐ லவ் யூ ஸோ மச்" என்று
கார்த்திக் கூற மது தான் எட்டு
வருடங்களாக இந்த வார்த்தைகளுக்கு
ஏங்கியது நினைவு வர அவனை
மேலும் இறுக அணைத்தாள்.

"தேங்க்யூ... தேங்க்யூ ஸோ மச்" என்று
மது அவன் நான்கு வருடங்களுக்கு
முன்னால் சொன்னது போலச்
சொல்லிக் கேலி செய்ய, அவளை
விலக்கி நிறுத்தியவன் "ஏய் என்னக்
கிண்டலா" என்று அவள் இடுப்பைக்
கிள்ள மது கூச்சத்தில் நெழிந்தாள்.

அவளை மேலும் அருகில் இழுத்து
தாடையை நிமிர்த்தி அவள் இதழ்
நோக்கி குனிந்தவன், ஒரு நிமிடம்
அப்படியே நின்று அவள் கண்மூடி
நிற்பதைப் பார்த்து குறுஞ்சிரிப்புப்
புரிந்தான். முத்தமிடாமல்
இருந்தவனை கண்களைத் திறந்து
பார்த்த மது அவனது செய்கையைக்
கண்டு முறைத்து "ஐ லவ் யூ
கார்த்திக்" அவனது சட்டைக் காலரை
பிடித்து இழுத்து அவன் இதழ்மேல் தன்
இதழைப் பதித்தாள். சின்னச் சின்னப்
பிழைகளோடு அவள் தந்த முதல்
முத்தம் அவனுக்கு இனிமையாக
இருந்தது.

மறுநொடி அவளை விலக்கி நிறுத்தி
"என் மக்கு மதுவே எதையுமே
ஒழுங்காகச் செய்யத் தெரியாதா"
என்று கேட்டு அடுத்த நொடியே தனது
ஆழ்ந்த முத்தத்தினால் அவளைத்
திண்டாடச் செய்தான்.

இருண்ட வானமும் வெளியே பெய்து
கொண்டிருந்த மழையும் அவர்களின்
காதலையும் காமத்தையும்
ஆசிர்வதிக்க கார்த்திக்கின்
காதலிலும் மோகத்திலும் மதுவின்
நாணமும் கூச்சமும் தோற்று
அன்றைய இரவு இருவருக்கும் மறக்க
முடியாத இரவாய் அமைந்தது. தன்
பெண்மையைக் களவாடியவன்
மார்பின் மீதே மீது சாய்ந்தே
உறங்கியவளை ஆசையும் காதலுமாக
அனைத்திருந்தது அவனது கைகள்.

அடுத்த நாள் காலை எட்டு மணிக்கே
எழுந்தாள் மது. எழுந்தவளின்
கையைப் பற்றி தன் மேலே சாய்த்துக்
கொண்டவன் "என்ன அவசரம் மது.
போகலாம் தூங்கு" என்றான் கார்த்திக்.

"சரியா இருக்கே.. மணி எட்டாச்சு...
எழுந்திருங்க கார்த்திக் " என்று
அவனைத் தூங்க விடாமல் போட்டு
உலுக்கினாள் மது.

"போடி" என்று திரும்பிப் படுத்துக்
கொண்டான் கார்த்திக்.

"போடியா?" என்று அவன் முதுகில்
குத்தியவள் "போடா" என்று விட்டு
அவன் எழுவதற்குள் குளியல்
அறைக்குள் புகுந்து விட்டாள். அவள்
போடா என்றதும் அவன் திரும்ப
அதற்குள் குளியல் அறைக்குள்
ஓடியவளைக் கண்டு சிரித்துவிட்டு
மறுபடியும் தலை அணையில் கண்
மூடிச் சாய்ந்தான். பின் மது குளித்து
வர அவளைச் சீண்டிவிட்டு தானும்
வந்து கிளம்பினான்.

ஒருவாரம் இப்படியே நகர்ந்தன.
இருவரும் அடுத்தவரின்
அருகாமையைச் சொர்க்கமாய்
உணர்ந்தனர். இப்படி இருக்க ஒரு
ஞாயிறு காலை கார்த்திக் எதையோ
தங்கள் அறையில் தேடிக் கொண்டு
இருக்க, அங்கு வந்து மது அவனை
கவனித்தபடி நின்றாள்.

அதைப் பார்த்தவன் "ஏன் மது.. அதான்
தேடிட்டு இருக்கேன்ல என்னன்னு
வந்து கேட்க மாட்டையா?" என்று
மதுவின் மேல் காய்ந்தான்.

"ஓ... அப்படி என்னத்த தேடிட்டு
இருக்கீங்க" என்று வெறுப்பேற்றியபடி
மெதுவாக அருகில் வந்து நின்றாள்
மது.

அவளை நிமிர்ந்துப் பார்த்து
முறைத்தவன் "ராங்கி... திமிரு டி
உனக்கு.. இரு வச்சுக்கர" என்றபடி
மறுபடியும் தேடினான்.

"அட என்ன தேடறீங்க சொல்லுங்க"
என்று கேட்டாள் மது இப்போது
சீரியஸாகவே.

"மொபைல் மது" என்றான்
தேடியபடியே. "இதுக்கு தானா.. என்
மொபைல் இங்க தான இருக்கு.
எடுத்து கால் பண்ண வேண்டியது
தானே" என்று மது சொல்ல, அவளது
மொபைலை வாங்கி கால் செய்ய அது
அவர்களது மெத்தையின் அடியில்
இருந்தது.

மொபைலை எடுத்தவன் "அது எப்படி
இங்கே?" என்று யோசித்தவன் மது
முறைக்க "ஓ நேத்து நைட்... " என்று
நேற்று இருவரின் தனிமையில் போன்
டிஸ்டர்ப் செய்ய அதைத் தூக்கி
எங்கேயோ போட்டவன் இப்போது
அதை நினைத்து சிரித்துக் கொண்டே ,
அவளிடம் அவளது மொபைலைக்
கொடுத்தான்.

ஏதோ நியாபகம் வந்தவனாக "ஏய்
அந்த மொபைலைக் கொடு.. என் பேர
என்னன்னு போட்டு ஸேவ்
பண்ணிருக்க?" என வினவி அவளது
மொபைலைக் கேட்டான்.

"இல்லை.. ஒன்றுமில்லையே" என்று
மொபைலை கைகளால் பின்னால்
மறைத்தாள்.

"ஓகோ... ஏய் நான் பார்த்துட்டேன்
ஏதோ TLன்னு இருந்துச்சு...அப்படினா
என்ன?" என்று அவளைப் பிடித்து
நிறுத்திக் கேட்டான்.

"சரி விடுங்க அப்போ தான்
சொல்லுவேன்" என்று மது சொல்ல
கார்த்திக் அவளை விட்டுவிட்டான்.

"TL ன்னா tubelight... அன்னைக்கு
நான் ப்ரபோஸ் பண்ண அப்புறம்
அப்படி வைத்தது.. தானாக வந்து
ஒருத்தி காதலைச் சொன்னாலும்
புரிந்து கொள்ளாத tube light " என்று
நக்கலாக மது கூற "எது tubelight ஆ?"
என்று மதுவைத் துரத்த மதுவும் அவன்
கைகளுக்குச் சிக்காமல் கீழே
ஓடினாள்.

கடைசியாக ஹாலில் வைத்துப்
பிடித்தவன் அவளை இரு கைகளாலும்
பற்றித் தூக்கிவிட்டான். "அய்யய்யோ
கார்த்திக் யாராது வரப்போறாங்க..
விடுங்க" என்று சிணுங்கினாள்.

"யார் வரப் போறா?.. அம்மாவும்
அப்பாவும் கோயிலுக்கு
போயிருக்காங்க" என்று அவளை
மேலும் இறுக்கி அவளின் காதில்
ஏதோ சொல்ல இருவரும் சிரித்தனர்.

அவர்கள் இருவரும் அப்படியே
சிரித்துக் கொண்டு இருக்க அந்த
நேரம் அம்மா வீட்டிற்கு வந்த நிலா
"அண்ணி" என்று வாயைப் பிளந்து நின்றாள். அண்ணி என்ற நிலாவின்
குரலில் இருவரும் திடுக்கிட கார்த்திக்
மதுவை டக்கென்று இறக்கிவிட்டான்.

"வாங்க மாப்பிள்ளை" என்று
சமாளித்து அரவிந்த் அருகில் சென்று
விட்டான் கார்த்திக்.

தன் அண்ணனின் செய்கையைக்
கண்டு சிரித்தவள் மதுவிடம் திரும்பி
"என்ன அண்ணி இரண்டு பேரும் இந்த
உலகத்திலையே இல்லை போல"
என்று கண் சிமிட்டி அவளைக்
கலாய்த்தாள்.

அசடு வழிந்த மது ஏதோ சொல்ல
வந்து சிரித்துவிட்டு "வா நிலா" என்று
நிலாவையும் அவள் கணவரையும்
வரவேற்று விட்டு சமையல்
அறைக்குள் நுழைந்து விட்டாள். சற்று
நேரத்தில் ஜானகி அம்மாவும்
வேலுமணியும் வந்து சேர வீடே அன்று
கலகலப்பாக இருந்தது. நாட்கள்
வேகமாக நகர்ந்தன.. தன்
வாழ்க்கை இனிமையாக செல்வதை
மது சொர்க்கமாக உணர்ந்தாள்.

ஆனால் அவளது சந்தோஷம் கூடிய
விரைவில் சீர்குலைந்து போகும்
என்பதை மது அப்போது
அறியவில்லை.
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-14
சில வாரங்களில் கார்த்திக்கிற்கு ஒரு
கவர்ன்மென்ட் ப்ராஜெக்ட் கிடைக்க
அந்த வேலை விஷயமாக 10
நாட்களுக்குச் சென்னை கிளம்பிச்
செல்ல வேண்டி இருந்தது அவன்.
"மூர்த்தி அங்கிள்.. அந்தப் ப்ராஜெக்ட்
விஷயமா நான் சென்னை
கிளம்பறேன்.. எப்படியும் வர்றதுக்கு 10
டேஸ் ஆயிரும்.. அது வரைக்கும் நீங்க
அந்த மால் ப்ராஜெக்ட்-ட கொஞ்சம்
பாத்துக்கங்க" என்று கார்த்திக்
சொல்ல அவர் பதில் பேசாமல்
இருப்பதை உணர்ந்தவன் அவரை
நிமிர்ந்து பார்த்தான்.
ஏதோ பதட்டமாக இருந்தவரைப்
பார்த்தவனுக்கு ஒன்றும்
புரியவில்லை.. அவர் ஏதோ சொல்ல
நினைக்கிறார் என்பதைப் புரிந்து
கொண்டவன் "என்ன அங்கிள் என்ன
ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க" என்று வினவ அவர் சொன்னதைக்
கேட்டு கார்த்திக் சிரித்தான்.
"இங்க பாருங்க அங்கிள்.. நம்ம ஃபீல்ட்
ல இதெல்லாம் இருக்கிறது தான்..
இதற்கெல்லாம் பயந்தால் முடியுமா..
நம்ம கரெக்டா அமவுன்ட் போட்டோம்..
நமக்கு கிடைத்து விட்டது.. இதெல்லாம்
நினைச்சு கலங்காதீங்க அங்கிள்..
ப்ரீயா விடுங்க" என்று சொன்னவன்
மாலை மது வரக் காத்திருந்தான்.
வழக்கம் போல மதுவை அழைத்துக்
கொண்டு வீடு வந்து சேர்ந்தவன்,
இரவு உணவை முடித்துக் கொண்டு
அனைவரும் உட்கார்ந்து பேசும் சமயம்
தனக்குக் கிடைத்த ப்ராஜெக்ட் பற்றிக்
கூறினான். பத்து நாட்கள்
சென்னையில் தங்க வேண்டும்
என்றுக் கூறினான். அனைவருக்கும்
சந்தோஷம் தாங்கவில்லை.
"ஏன் கார்த்திக் மாலை வந்தவுடனே
சொல்லி இருக்கலாம் இல்லை?"
என்று குறையாகக் கேட்டார் ஜானகி.
"இல்லை அம்மா... உங்க மூன்று
பேருக்கும் ஒன்றாக சொல்லி
விடலாம் என்று இருந்தேன்" என்று
மூன்று பேரையும் பார்த்துச்
சொன்னான்.
"அப்போ மதுவிற்கும்
சொல்லவில்லையா நீ" என்று
வியப்பாகப் பார்க்க 'இல்லை' என்று
தலை ஆட்டினான். மதுவும்
மாமியாரின் பார்வையைக் கண்டு
அவரிடம் உதட்டைப் பிதுக்கினாள்.
மகனின் மூளையை மனதிற்குள்
மெச்சிய வேலுமணி "என் மகன்
கெட்டிக்காரன் ஜானகி" என்று கூறி வேலுமணி சிரிக்க "ஆமாம் பெரிய
ப்ராஜெக்ட் இல்லை" என்று
கணவரிடம் திரும்பி கண்ணை
உருட்டினார்.
"அதில்லை.. இந்தப் ப்ராஜெக்ட்
டென்டர் வரும் போதே.. அதெல்லாம்
பிடித்து விடுவான் என்று தெரியும்"
என்று சிரித்தார். "பின்னே.. வேறு
என்ன?" என்று புருவத்தைச் சுருக்கிக்
கேட்டார் ஜானகி.. மதுவும் என்ன
சொல்ல வருகிறார் என்று உற்றுக்
கவனித்தாள்.
"ஆமாம் தனித்தனியாகச் சொன்னால்..
மாமியார் மருமகளுக்கு ஈகோ
பிரச்சினை வந்து விடும் என்று
எல்லோருக்கும் பொதுவாகச்
சொல்லிவிட்டான் பார்" என்று
சிரித்தவர் "இந்த விஷயத்தில்
என்னை விடக் கெட்டிக்காரன் தான்"
என்று ஜானகியை வேலுமணி
வம்பிற்கு இழுத்தார். மதுவிற்கு
கார்த்திக் வம்பு இழுக்கும் பழக்கம்
எங்கு இருந்து வந்தது என்று தெரிந்து
கொண்டாள்.
எல்லோரும் சிரிக்க ஜானகி தன்
கணவனிடம் திரும்பி
"பார்த்துக்கொள்கிறேன்" என்று
முறைத்தார்.
பிறகு பேசிவிட்டு அறைக்குள்
நுழைந்த மது பால்கனிக் கதவைத்
திறந்துவிட்டு பால்கனியில் நின்றாள்.
பாத்ரூம் சென்று விட்டு வந்த கார்த்திக்
மதுவைத் தேடிப் பால்கனிக்கு
வந்தான். பால்கனி லைட்டை
அணைத்தவன் "ஏன் மது.. ஏதோ
யோசனையில் இருக்க.. என்ன
யோசனை?" என்று பின்னால் இருந்து
அணைத்து அவள் தோளில் தன்
முகத்தை வைத்தபடிக் கேட்டான்.
"அது... சென்னை போறீங்கள்ள..
பர்ஸ்ட் டைம் மேரேஜ் அப்புறம் பத்து
நாள் நீங்கள் இல்லாமல்.. போர்
அடிக்கும் எனக்கு அதான் யோசித்துக்
கொண்டு இருந்தேன்" என்று அவன்
கன்னத்தில் தன் தலையைச் சாய்த்த
படிச் சொல்ல கார்த்திக்கின்
அணைப்பு இன்னும் இறுகியது.
"பேசாமல் நானும் உங்க கூட வரவா?"
என்று தலையை மட்டும் திருப்பிக்
கார்த்திக்கிடம் கேட்டாள்.
"கஷ்டமே மது.. பர்ஸ்ட் டாக்டரம்மாக்கு
ஹாஸ்பிடல்ல லீவ் கிடைக்கனும்ல"
என்று அவளிற்கு நினைவூட்டினான்.
"எப்படி அதை மறந்தேன்' என்று மது
நினைக்க... கார்த்திக் தொடர்ந்தான்
"அதுவும் இல்லாமல் எனக்கு
அலைச்சல் இருக்கும் மது..
உன்னையும் அப்படிக் கூட்டிக்
கொண்டு அலைய முடியாது.."
என்றவன் அவளைத் திருப்பி "இந்த
பத்து நாள் இடைவெளியையும்
அனுபவித்துப் பார்க்கலாமே மது"
என்று அவளின் முகத்தில் விழுந்த
கற்றைக் கூந்தலை ஒதுக்கி மதுவின்
நெற்றியில் முத்தமிட்டான். இந்த
நெற்றி முத்தம் சிறுமுகையில் இருந்து
வந்த நாளில் இருந்து கார்த்திக்கும்
மதுவும் பழகி விட்ட ஒன்று. அதுவும்
இவர்களை விடவில்லை.. இவர்களும்
அதை விடவில்லை.
"பேசாம உங்க வீட்டில் போய்
இருந்திட்டு வா நான் வரவரைக்கும்"
என்றான் அவளது மூக்கை ஆட்டியபடி.
"அதெல்லாம் வேண்டாம்.. நீங்க
போனோன நான்பாட்டுக்கு அங்க
போன அத்தை என்ன நினைப்பார்கள்..
ஏதோ உங்களுக்காக மட்டுமா இங்க
இருக்க மாதிரித் தோணாதா.."
என்றவள் "அவங்களும் தனியா
இருப்பாங்க அவங்க கிட்ட பேசிட்டு
இருப்பேன் நான்.. நீங்கள் இல்லாமல்
எப்படி அங்க தனியாப் போவேன்..
நீங்கள் இல்லாமல் போர் அடிக்கும்
தான் சொன்னேன் தவிர இங்க
இருக்க போர் அடிக்கும்ன்னு சொல்ல"
என்று முழுதாகப் பேசி முடித்தவளைக்
கண் இமைக்காமல் பார்த்துக்
கொண்டு இருந்தான்.
எல்லாரும் அம்மா வீட்டுக்கு எப்போ
எப்போ என்று இருக்கையில் அவள்
இப்படி சொன்னது ஏதோ அவனுக்கு
இதமாக இருந்தது. அவனே
பார்த்திருக்கிறானே தன் அன்னை
கூட அப்பா வர முடியவில்லை
என்றால் அவர் மட்டும் தன்னையும்
தங்கையையும் சிறுமுகை அழைத்துச்
சென்றது நினைவு வந்தது.
காதலும் மையலுமாக அவளை
நோக்கியவன் அவளின் தலையில்
முட்டி "சரி பத்து நாள் போறேன்ல..
ஏதாவது தர்றது..." என்று கழுத்தில்
புதைந்ததவனைத் தள்ளியவள்
"அய்யோ என்ன இது" என்றாள்
முறைப்பாக.
"ஏய் நீ என் பொண்டாட்டி டி.."
என்றவன் மறுபடியும் அருகில் வர
அவனைத் தடுத்தவள் "அதை தான்
நானும் சொல்றேன்" என்றவளைப்
புரியாமல் கார்த்திக் பார்க்க நமட்டுச்
சிரிப்பு சிரித்தவள் "புரியலையா.. இது
பால்கனி.. இதே பெட்ரூம்-னா யாரு
கேக்க போறா உங்க பொண்டாட்டி
உட்பட" என்று மது சொல்ல
அவனுக்குப் புரிந்தது.
"ஏய்ய் கேடி.... ரொம்ப முன்னேறிட்டடி"
என்று அவளைத் தூக்கிக் கொண்டு
உள்ளே சென்றவன் என்றுமில்லா
காதலுடனும் மையலுடனும் அவளுள்
புதைய அவனின் மணையாள்
அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.
பின் அடுத்த நாள் மாலை கார்த்திக்
கிளம்ப மது அவனிற்குத் தேவையான
அனைத்தையும் பாக் செய்து கொண்டு
இருந்தாள். சுற்றிச் சுற்றி பாக்
செய்தவளைப் பார்த்தவன் "இவளின்
அராத்து இல்லாமல் எப்படி 10 நாள்
இருக்கப் போறேனோ" என்று
எண்ணிப் பெருமூச்சு விட்டான்.
பத்து நாள் தாங்குமாறு வம்பு இழுக்க
நினைத்தவன் "ஏன் மது.. நான்
பிசினஸ் விஷயமாகச் செல்லாமல்
அங்கு ஏதாவது... வந்து இன்னொரு
பெண்ணைப் பார்க்கச் சென்றால்
என்ன செய்வாய்" பாக் செய்து
கொண்டு இருந்தவளை இடித்தபடி
நின்றுக் கேட்டான்.
"டேய் உன்னை அவ்வளவுதான்" என்று
நிமிர்ந்தவள்.. சட்டென்று ஒன்று
நினைவு வர வயிற்றைப் பிடித்துக்
கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். "ஏய்
என்னடி சிரிக்கற?" என்று கார்த்திக்
கேள்வியாய் மதுவைப் பார்க்கச்,
சிரித்து முடித்தவள் "இல்லை நான்
ப்ரபோஸ் பண்ணதுக்கே இங்க 4
வருஷம் கழிச்சு தான் ரெஸ்பான்ஸ்
கிடச்சுது.. இதுல இன்னொருத்திய
நீங்கப் பார்க்கப் போயிட்டாலும்" என்று
சிரித்த மதுவைக் கார்த்திக் முறைக்க
"சரிசரி கீழே போலாம்" என்று
அவனைத் திருப்பி முதுகில் கை
வைத்து நடந்தாள்.
"என் மேல் உனக்கு சந்தேகமே வராதா
மது?" என்று அவளின் கையைப்
பிடித்து வினவினான்.
மது ஏதோ குறும்பாக யோசிக்க "ப்ளீஸ்
மது.. சிரீயஸாக் கேட்கிறேன்..
விளையாடாமல் பதில் சொல்"
என்றான். அவனின் கேள்வியை
உணர்ந்தவள் "சீ.. உங்களை எப்படி
சந்தேகப்படுவேன்.. என்னிடம்
யாராவது நேரில் வந்து உங்களைப்
பற்றிச் சொன்னால் கூட நான் காது
கொடுத்துக் கேட்க மாட்டேன். அந்த
அளவு எனக்கு நம்பிக்கை இருக்கு
உங்க மேல.. அது கூட நமக்கு
கல்யாணம் ஆன புதிதில் நீங்கள்
நடந்து கொண்டதை வைத்துத்
தெரிந்து கொண்டது தான்" என்று தன்
கரங்களை அவன் கழுத்தில்
மாலையாகச் சுற்றியவள் "என்ன வம்பு
இழுக்க தான் அப்படிக் கேட்டிங்க-ன்னு
தெரியும்.. அப்படி ஒருத்தி இருந்தால்
கூட்டிட்டு கூட வாங்க.. ஓட ஓட விரட்டி
அடிக்கலைன்னா பாருங்க" என்று மது
புருவத்தைத் தூக்கி சிரிக்க... அவளின்
தலையில் தன் தலையை
மென்மையாக முட்டிச் சிரித்தான்.
பிறகு அவனை அனுப்பி விட்டு உள்ளே
நுழைந்தவளால் சும்மா இருக்க
முடியவில்லை.. மாமியாரிடம் சிறிது
நேரம் பேசிவிட்டு வேலையை
முடித்துக் கொண்டு மேலே வந்தவள்,
போர் அடிக்க ஒரு புத்தகத்தை
எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
இருவருமே இந்தப் பத்து நாள் பிரிவில்
தவித்துத் தான் போயினர்.
கார்த்திக்கிற்கு தான் எப்போதுமே
அவளிடம் வம்பிழுத்து விளையாடி
விட்டு இப்போது இந்த 10 நாட்களைக்
கடத்துவது கடினமாக இருந்தது.
வேலை நேரத்திலும் அவ்வப்போது
அவளது நினைப்பு வந்து அவனை
இம்சித்து உண்மைதான்.
மாலை ஹோட்டல் அறைக்கு வந்ததும்
அவளிடம் போன் செய்து பேசுவான்.
மதுவிற்குமே அவனது பிரிவு
வாட்டினாலும் வேலையாகச் சென்று
இருப்பவனிடம் எதையும் காட்டக்
கூடாது என்று இருந்தாள். ஒருநாள்
பேசிக் கொண்டு இருக்கும் போது "ஐ
மிஸ் யூ" என்றாள் மது.
"என்ன மது கேக்கல" என்றான்
கார்த்திக்.. மது சொன்னது
நன்றாகவே அவன் காதில் விழுந்தது.
ஏனோ மறுபடியும் கேட்க ஆசை..
அதான் கேட்கவில்லை என்று
சொல்கிறான்.
"ஐ மிஸ் யூ" என்றாள் மது. இப்போது
சிக்னல் ப்ராப்ளத்தில் மெய்யாகவே
கார்த்திக்கிற்குக் கேட்கவில்லை...
மறுபடியும் "ஆ... கேக்கல" என்று
கார்த்திக் கத்த "முருகா.. இவன்கிட்ட
போன்ல பேசறதே வேஸ்ட்... 'ஐ லவ் யூ'
சொன்னப்பவும் ரெஸ்பான்ஸ் இல்ல...
இப்போ 'ஐ மிஸ் யூ' சொல்றப்பவும்
ரெஸ்பான்ஸ் இல்ல... உனக்கு tube
light-ன்னு பேரு வச்சதில்ல தப்பே
இல்ல" என்று நினைத்தவள் "ஒன்னும்
இல்லைங்க... சென்னை எப்படி
இருக்குன்னு கேட்டேன்" என்றாள் மது.
"அதெல்லாம் சூப்பர்.... மது உன்கிட்ட
கேட்கனும் என்று நினைத்தேன். உன்
ஹிப் சைஸ் என்ன?" என்று
வினவினான்.
"என்ன... ட்ரெஸ் எடுக்கப்
போறீங்களா?" என்று வினவ.. "நோ..
இது வேற.. சொல்லு ஹிப் சைஸ்
என்ன?" என்று கேட்டான். மது சொல்ல
மண்டையில் ஏற்றிக் கொண்டவன்
"ஓகே ஒரு வித்தியாசமான ஒன்று..
அதான்" என்றான்.. பிறகு இருவரும்
சிறிது நேரம் பேசிவிட்டுப் போனை
வைத்தனர்.
இந்த ஒரு வாரத்தில் மாமியாருடம்
அதிக நேரம் செலவழித்தாள் மது..
அவரும் இல்லை என்றால் மதுவிற்கு
போர் அடிக்கும். ஒரு நாள் ஜானகி
"இப்போது தான் எனக்கு ரொம்ப
சந்தோஷமா இருக்கு மதுமா..
கார்த்திக்கிடம் நிறைய மாற்றங்கள்"
என்று மதுவிடம் புன்னகைத்தார்.
"என்ன கல்யாணம் ஆகி பையன்
மாறிவிட்டால் எந்த அம்மாவும்
சந்தோஷப்பட மாட்டார்களே.. இவர்
என்ன சந்தோஷமாகச் சொல்லுகிறார்" என்று யோசித்தவள்
"புரியவில்லையே அத்தை" என்றாள்
மது.
"அது ஒரு கதை டா.. கார்த்திக் காலேஜ்
முடிச்சிட்டு வந்த சமயம் அது.. ரொம்ப
கோவப்பட்டுட்டே இருந்தான்.. அப்படி
எல்லாம் இருக்கவே மாட்டான்.. ரொம்ப
கலகலப்பாக இருப்பான்
எல்லோரிடமும்.. பக்கத்து வீட்டு
வாண்டுகள் கூட 'கார்த்திக் அண்ணா'
'கார்த்திக் அண்ணா' என்று இவன்
லீவிற்கு வந்தால் வருவார்கள்.
ஆனால் ஆளே மாறிப் போயிருந்தான்.
சின்னதாக ஏதாவது சொன்னால் கூட
எரிந்து எரிந்து விழுந்தான்..ஏன் என்று
விளங்கவில்லை எங்களுக்கு" என்று
வெங்காயத்தை உரித்தபடியே ஜானகி
சொல்ல மதுவும் ஏன் என்று யோசிக்க
'அந்த டைம் தானே லவ் ப்ரேக் அப்
ஆச்சு' என்று நினைத்தாள். 'ஆனால்
அந்த சமயம் தானே நாமும் போன்
செய்தோம்... நம்மிடம் நன்றாக தானே
பேசினான்' என்று மதுவும்
குழம்பினாள்.
மது யோசனையில் இருக்க ஜானகி
தொடர்ந்தார் "அப்புறம் இறுக்கமாகவே திரிந்தான் மது.. உன் மாமா தான்
தொழிலிற்கு இழுத்துச் சென்றார்.
கோபம் எல்லாம் அடக்கினானே தவிர
பழைய மாதிரி இருக்கவே இல்லை
அவன். நிலா ஏதாவது நச்சரித்து
அவனிடம் பேசுவாள். எனக்குத்
தெரிந்து நிலா கல்யாணத்திற்கு பிறகு
தான் கொஞ்சும் மாறினான். அதற்குப்
பிறகு அந்தப் பழைய கலகலப்போடு
அவனை இப்போது உங்கள்
கல்யாணத்திற்குப் பிறகு தான்
பார்க்கிறேன் நான். கடவுளை
வேண்டாத நாள் இல்லை மது.
இப்போது தான் நிம்மதியாக
இருக்கிறது எனக்கு..." என்று
மதுவைப் பார்த்தபடியே புன்னகை
முகத்துடன் சொல்லி முடித்தார்.
மதுவின் மனம் தன்னால் தானோ
என்று துள்ளிக் குதித்தது. சாப்பிட்டு
விட்டு அறைக்குள் நுழைந்தவள்
நேற்று வந்த அவர்களின் கல்யாண
ஆல்பத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அவன் வந்த பின்பு அவனுடன்
பார்க்கலாம் என்று நேற்று
எண்ணியவள்... அவனைப் பார்க்க
எண்ணி ஆல்பத்தைப் பார்க்கலானாள்.
எல்லாவற்றையும் பார்த்து ரசித்தவள்
பிறகு அதை எடுத்து வைத்து விட்டு
வந்து தன் போனை எடுத்து,
அவனிற்குத் தெரியாமல் தன்
போனில் அவனைப் பிடித்தப்
படங்களைப் பார்த்தாள்.. சொல்லப்
போனால் அவன் சொன்ன மாதிரி
இந்தப் பிரிவில் இன்னும் ஏதோ
இருவரும் மனதால் நெருங்கியபடி
உணர்ந்தாள் மது. அவனது
போட்டோவிற்கு ஒரு முத்தத்தைத்
தந்துவிட்டு... அவனிற்கு "குட் நைட்"
என்ற குறுஞ்செய்தியை அனுப்பி
விட்டு படுக்கைக்கு வந்தாள். மது
அவன் திரும்பி வர எவ்வளவு நாள்
என்று எண்ணிக் கொண்டே
இருந்தாள்.
எட்டாம் நாள் காலை போன்
செய்தவன் "மது குட் மார்னிங்"
என்றான்.. அவனது குரலில் அப்படி
ஒரு சந்தோஷம். கிளம்பிக் கொண்டு
இருந்தவள் அப்படியே படுக்கையில்
உட்கார்ந்தாள்.
"குட் மார்னிங்" என்றவள் "என்ன
காலையிலேயே போன்
பண்ணிற்கீங்க" என்று அவன் குரல்
கொடுத்த புன்னகையில் கேட்டாள்.
"மது... வேலை முடிந்துவிட்டது.. நாளை
அங்கு வந்து விடுவேன்.. அந்தப்
ப்ராஜெக்ட்டும் டபுள் ஓகே.. நான்
சொன்ன ஔட்லைன் ப்ளான் எல்லாம்
அவர்களுக்குப் பிடித்து விட்டது"
என்று மனைவியிடம் பெருமையாகச்
சொல்லிக் கொண்டு இருந்தான்.
"வாவ் சூப்பர்-ங்க..
வாழ்த்துக்கள்..நாளை எப்போது
வருவீங்க.. என்ன டைம்" என்று
வினவினாள் மது..
"நான் வர ஈவ்னிங் ஆயிரும் மது.. எப்படியும் ஆறு மணி ஆகிவிடும்"
என்றான்.. "மது.. ஐம் ஸோ ஹாப்பி"
என்றான் கார்த்திக்.
"ரொம்ப குஷியா இருந்கீங்க போல...
ஊருக்கு வர சந்தோஷமா அல்லது
ப்ராஜெக்ட் கன்பார்ம் ஆனதிலா?"
எனக் கேட்டாள் மது.. கேட்டுவிட்டு
அவனது பதிலிற்காகக் காதுகளைக்
கூர்மை ஆக்கினாள்.
"ஒன்னு temporary.. அவ்வப்போது
வரும்.. சில நேரம் வராமல் கூடப்
போகலாம் இன்னொன்று permanent happiness மது.. என்கூட எப்போதுமே
எல்லா நிலையிலும் என்னுடன்
இருப்பது" என்று சொன்னான்.
மதுவிற்கு தான் எப்போது நாளை
மாலை வரும் என்று இருந்தது.. அவன்
முகத்தை எப்போது பார்ப்போம் என்று
இருந்தது. பிறகு சிறிது நேரம்
பேசிவிட்டு இருவருமே அடுத்த நாளை
எதிர்நோக்கி காத்திருந்தனர்.
அடுத்த நாள் ஹாஸ்பிடலில் மதிய
உணவை தன் உடன் வேலை பார்க்கும்
ரம்யாவுடன் அமர்ந்து தன் மாமியாரின் சமையலை ருசித்துக் காலி செய்து
கொண்டு இருந்தாள் மது. ஏனோ பசி
வேறு மதுவிற்கு அதிகமாக இருந்தது.
ஏதோ அறிவுப்பு(notification)
மொபைலில் வர போனை எடுத்துப்
பார்த்தாள் மது. கார்த்திக் தான்
மெசேஜ் செய்து இருந்தது.. உதடு
தன்னால் புன்னகையில் விரிந்தது
மதுவிற்கு.. "மது.. மிஸ்ஸிங் யூ... On the
way d.. 6 க்கு வீட்டில் இருப்பேன்..
கணவனைக் காக்க வைக்காமல்
சீக்கிரம் வந்துவிடு மதுமா" என்று
இதயத்தை கூட வைத்து அனுப்பி
இருந்தான்.
"ட்ரைப் பண்றேன்" என்று
வேண்டுமென்றே நாக்கை துருத்திக்
கொண்டு இருந்த ஒரு எமோஜியோடு
பதிலை அனுப்பி வைத்தாள்.
பின் உணவை முடித்துக் கொண்டு Out
patients பார்க்க வந்த மதுவிற்கு தலை
கிறுகிறுவெனச் சுத்தியது. ஒரு
நிமிடம் தலையை சிலுப்பி மீண்டும்
நடந்தாள். ஆனால் நடக்க முடியாமல்
கண் இருண்டு கீழே விழப்
போனவளை அவள் உடன் பணிபுரியும்
ரம்யா வந்து டக்கென்று தாங்கிவிட்டாள்.
மது விழிக்கையில் "வாழ்த்துக்கள்
மதுமிதா.. அம்மா ஆகிட்ட" என்று
கையை குலுக்கினாள் ரம்யா.
மதுவிற்கு அப்படியே சந்தோஷத்தில்
உறைந்து விட்டாள்.
"ஹே... என்னப்பா யோசனை" என்று
ரம்யா மதுவின் கண் முன்னால்
சொடக்குப் போட சுயநினைவிற்கு
வந்தாள் மது.
மது சந்தோஷக் கடலில் குளித்தாள்.. தன் வயிற்றை தடவி பார்த்தவளுக்கு
எந்த வித்தியாசமும் இல்லை தான்..
ஆனால் தனக்குள் ஒரு உயிர் அதுவும்
கார்த்திக்கின் வாரிசு வளர்வதை
உணர்ந்தளுக்கு பரவசமாய் இருந்தது.
அப்போது தான் 15 நாள் தள்ளிப்
போயிருப்பதை மது உணர்ந்தாள்.
எப்படி மறந்தோம் என்று யோசித்தவள்
அவனோடு அடித்த கூத்துகளில்
எல்லாவற்றையும் மறந்துவிட்டேன்
பார் என்று தன்னைத் தானே
நினைத்துச் சிரித்தாள். ஏனோ
கார்த்திக்கை இப்போதே பார்க்க
வேண்டும் என்று இருந்தது.
தன்னுயிரை இன்னொரு உயிராக்கி
என்னுள் விதைத்து.. உள்ளே தவழச்
செய்யும் ஒரு தளிராக்கி
விட்டனவனைப் பார்க்க மதுவின்
மனம் துடித்தது. ஏனோ மதுவின் மனம்
எப்போது வீடு செல்வோம் என்று
துடித்தது.
"என்ன மதுமிதா யோசனை?" என்று
ரம்யா கேட்க... "ஒன்றுமில்லை
ரம்யா.. தேங்க்ஸ்" என்றாள்.
"ஒன்றுமில்லையா...." என்றுக் கேட்டு
சிரித்த ரம்யா "வீட்டுக்காரர் வேறு இன்று வருகிறார்.. செம சர்ப்ரைஸ்
தரப் போறாய்" என்று கேட்க மது தன்
கணவனை நினைத்துப்
புன்னகைத்தாள்.
"மது டெஸ்ட் ரிசல்ட் ஈவினிங்கே
வாங்கிட்டு போயிக்க" என்றாள் ரம்யா.
"ம்ம் ரம்யா" என்றுவிட்டு தன்
வேலையைத் தொடந்தவள் ஈவ்னிங்
ரிசல்ட்டை வாங்கித் தனது Handbag
இல் வைத்து விட்டு தன்
சித்தப்பாவிற்கு போன் செய்தாள்.
கார்த்திக் சென்ற பின் எட்டு நாட்களாக
திருமுருகனுடன் தான் சென்று
வந்தாள் மதுமிதா.
திருமுருகன் போனை எடுக்க
"சித்தப்பா உங்களுக்கு வேலை
முடிந்ததா?" என்று வினவினாள் மது.
"முடிந்தது டா... இப்போது
கிளம்புகிறேன்" என்று பதிலைத்
தந்தார் திருமுருகன்.
கீழ் உதட்டைக் பற்களால்
மென்மையாகக் கடித்து யோசித்தவள்
"இல்லை சித்தப்பா.. எனக்கு வேலை
இன்னும் இருக்கு.. ஒரு ஒரு மணி
நேரம் கழித்து வாங்களேன்" என்று
மது சொல்ல "சரி பாப்பா" என்று
போனை வைத்தார். எப்பவுமே
செல்லமாக அழைப்பது தான்..
ஆனால் மதுவிற்கு சிரிப்பு வந்தது..
"எனக்கே பாப்பா வரப்போது
சித்தப்பா" என்று நினைத்துச் சிரித்து
போனை வைத்தாள்.
ஹாஸ்பிடலை விட்டு வெளியே
வந்தவள் எதிரே இருந்த கடைக்குச்
சென்று ப்ளூ கலர் கிப்ட் ரிப்பன்
ஒன்றை வாங்கினாள். வாங்கி
அழகாக தனது ரிப்போர்டில் கட்டினாள்.
கட்டி ஒருநிமிடம் பார்த்தவள் மீண்டும்
ஹேண்ட் பாக்கில் பத்திரமாக
வைத்தாள்.
பின்பு பக்கத்தில் இருந்த முருகன்
கோயிலிற்குச் சென்று சாமியை
நன்றாகச் சுற்றி வந்து அப்படியே சில
நிமிடம் அமர்ந்துவிட்டாள். ஏனோ
முருகனிற்கு மனம் உருக நன்றி
சொன்னாள் மது. தேய்பிறையாய் தன்
துன்பத்தைக் கார்த்திக் துடைத்து
எறிய, வளர்பிறையாய் தன்னுள்
வளரும் குழந்தையை எண்ணி மகிழ்ந்தாள் மது. ஏனோ முகம்
அறியாது தன்னுள் வளரும்
குழந்தையைப் பார்க்க நினைத்தாள்
மது. தன் தாயிடம் கண்ட சுகம்
அனைத்தையும் தன் குழந்தைக்குத் தர
எண்ணினாள். அது பிறந்து "ங்கா"
என்று பொக்கை வாயில் சிரிப்பதை
எண்ணும் போதே மதுவிற்கு உடல்
சிலிர்த்தது. பிறகு எழுந்து ஹாஸ்பிடல்
வாயிலை நோக்கி நடந்து தன்
சித்தப்பாவிற்காகக் காத்திருந்தாள்.
ஆயிரம் யோசனையுடன் இருந்தாள்
மது. கார்த்திக்கிடம் இதைச்
சொன்னவுடன் அவன் முகம்
சந்தோஷத்தில் மாறுவதைக் காண
மதுவின் மனம் ஏங்கியது. இரு
குடும்பமும் சந்தோஷத்தில் மிதக்கப்
போவதை எண்ணி எண்ணி
நின்றிருந்தாள்.
முக்கியமாகப் பார்வதி பாட்டியிடமும்
சொல்ல ஏங்கினாள். அவர்கள்
வீட்டிற்கு போய் வந்து 45 நாட்கள்
ஆகிறது என்று மனதிற்குள் கணக்குப்
போட்டுச் சிரித்தாள்.
திருமுருகன் வந்தவுடன் காரில் ஏறிய மதுவைக் கண்டவர் "என்ன மதுக்குட்டி
மாப்பிள்ளை வந்துவிட்டாராமே?"
என்று கேட்டார்.
"ஆமாம் சித்தப்பா.. வேலை
முடிந்துவிட்டது என்று நேற்று போன்
பண்ணிச் சொன்னார்" என்று
கூறினாள். பின் இருவரும் பேசிய
படியே வீடு வந்தனர். வீட்டில்
இறங்கியவுடன் "உள்ளே வாங்க
சித்தப்பா" என்று அழைத்தாள் மது.
"இல்லைடா... ரொம்ப அசதியா
இருக்கு.. இன்னொரு நாள் வருகிறேன்" என்று சென்று விட்டார்.
கார்த்திக் வந்து விட்டான் என்பதை
வெளியில் நின்ற காரே சொன்னது.
மிதுனா வீட்டின் காரும் நிற்பதைப்
பார்த்தவள் "ஓ இவளும் வந்து
இருக்கிறாளா" என்று நினைத்தபடியே
உள்ளே நுழைந்தாள்.
உற்சாகமாக உள்ளே வந்த மதுவின்
புன்னகை அப்படியே நின்றது.
ஏனெனில் ஹாலில் கார்த்திக்..
வேலுமணி.. மிதுனாவுடைய
அண்ணன் சிவா மற்றும்
மிதுனாவுடைய அப்பா அம்மா
அமர்ந்திருக்க ஜானகி அம்மாள்
சமையல் அறையில் இருந்து
வெளியே வந்தார். ஒருவரின் முகமும்
சரி இல்லை. ஏதோ தப்பாகத்
தோன்றியது மதுவிற்கு. மது உள்ளே
வர எல்லாரும் மதுவின் முகத்தையே
ஒரு வித இறுக்கமும்
எதிர்ப்பார்ப்புமாக நோக்கினர்.

ReplyQuoteLikeReportUnapproveEditDelete
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-15

ஒரு நிமிடம் வாயிலிலேயே நின்ற மது
எல்லோரையும் வாங்க என்று
இன்முகத்துடன் வரவேற்று விட்டுத்
தன் மாமியாரின் பக்கத்தில் சென்று
நின்று விட்டாள். கார்த்திக்கின் இடது
கரம் சிவாவின் வலது கரத்தை
தைரியமாக இரு என்பது போலப்
பிடித்து இருக்க கார்த்திக்கின் வலது
கைப் பெருவிரல் கூட இருந்த மற்ற
விரல்களை நெட்டி எடுத்துக்
கொண்டிருந்ததை மது கவனித்தாள்.

மது ஜானகி அருகில் குனிந்து
"அத்தை என்ன ஆச்சு.. ஏன் எல்லாரும்
ஒரு மாதிரி இருக்காங்க?" என்று அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்
வினவினாள். அவர் ஏதோ ரகசியமாக
சொல்ல வர அதற்குள் கார்த்திக்
ஆரம்பித்தான்.

கார்த்திக் மதுவைப் பார்த்து "மிதுனா
வீட்டை விட்டுத் தான் காதலித்தப்
பையனுடன் வெளியே சென்று
விட்டாள் மது.. அவள் எங்கே என்று
உனக்குத் தெரியுமா? " என்று
கேட்டு மதுவின் தலையில் அதிர்வை
இறக்கினான்.

மிதுனா காதலித்து இருக்கிறாள்
என்பதே மதுவிற்கு அதிர்ச்சி தான்.
இதில் எங்கிருந்து எங்கே சென்றால்
என்று சொல்லுவாள்?

ஏனென்றால் மதுவிடம் ஒரு தடவை
கூடச் சொல்லவில்லையே.
ஸ்வேதாவிற்கு தெரிந்திருந்தாலும்
நம்மிடம் சொல்லி இருப்பாளே.. ஏன்
இவள் யாருக்கும் சொல்லாமல்
மறைத்தாள். இவ்வளவு நெருக்கமான
நட்புடன் இருந்தவள் இப்படி
மறைத்தது மதுவிற்கு கோபத்துடன்
வருத்தத்தையும் தந்தது. நமக்கே
இப்படி என்றால் அவளின்
குடும்பத்தினர் என்று எண்ணி
கவலைக் கொண்டாள் மது. மேலும்
வீட்டை விட்டு போய்விட்டாள் என்பது
இன்னும் கஷ்டமாக இருந்தது
மதுவிற்கு. இது எல்லாம் மதுவின்
மனதில் ஐந்து நொடிகளில் தோன்றி
மறைந்தது.

"மிதுனா காதலிப்பதே நீங்கள்
சொல்லித்தான் இப்போது எனக்குத்
தெரியும்.. என்னிடம் அப்படி
இருப்பதாக ஒரு நாள் கூட மிது
சொல்லவில்லை" என்றவள் "எனக்கு
மிதுனா எங்கே என்று தெரியாது
அண்ணா" என்று சிவாவைப் பார்த்து
சொன்னாள். சிவா அப்படித் தொய்ந்து
உட்கார்ந்து இருந்தது அவளுக்கே
மிகவும் கஷ்டமாக இருந்தது.

மிதுனாவின் அம்மா எழுந்து வந்து
மதுவின் இரு கைகளையும் பிடித்துக்
கொண்டார். "மது... நீயும் எங்களுக்கு
மிதுனா போலத் தான். தயவு செய்து
அவள் இருக்கும் இடம் தெரிய வந்தால்
எனக்குச் சொல்லுமா" என்றவர்
பொருக்காமல் அழுதுவிட்டார்.

மது என்ன செய்வது என்று
தெரியாமல் நின்றாள்.. இப்படி அழ
வைத்துவிட்டு சென்று விட்டாயே
மிது என்று மதுவின் மனம்
மிதுனாவிடம் குற்றம் சாட்டி கேள்வி
எழுப்பியது. ஜானகி மிதுனாவின்
அம்மாவைத் தேற்ற அவரோ "என்
மகள் எங்கு இருக்கிறாளோ.. திடீரென
ஒருவரிடமும் சொல்லாமல் கிளம்பி
விட்டாள்.. என்னிடம் அல்லது
சிவாவிடம் சொல்லி இருக்களாமே..
நாங்கள் என்ன அவள் விருப்பத்தைத்
தடுக்கவா போகிறோம்" என்று
தனக்குள்ளேயே கேட்டு அழுதவரைப்
பார்க்க மதுவிற்குப் பாவமாக
இருந்தது. சிவா ஒரு நிமிடம்
தலையைப் பிடித்து உட்கார கார்த்திக்
அவனை எழுப்பி ஏதோ பேச வெளியே
அழைத்துக் கொண்டு சென்றான்.
பின்பு இருவரும் ஏதோ பேசிவிட்டு
உள்ளே வர மிதுனாவின் அம்மா
அழுகையும் சற்று அடங்கி இருந்தது.
ஆனாலும் அவரின் முகம் செல்ல
மகளை நினைத்து வேதனையை
வெளிப்படுத்தியது.

"சரி நாங்க கிளம்பறோம்" என்று
யோசித்தபடியே உட்கார்ந்து இருந்த
மிதுனாவின் தந்தை எழுந்துவிட்டார் .
சிவாவையும் சிவாவின்
பெற்றோரையும் அனுப்பி வைத்து
விட்டு வந்த கார்த்திக் மது அங்கு
இல்லாததைக் கண்டு அறைக்குத்
தான் சென்றிருப்பாள் என்று தங்கள்
அறைக்கு விரைந்தான். அறைக்கு
வந்தவன் மதுவைத் தேட பாத்ரூமில்
இருப்பதை உணர்ந்து சட்டையை
கழற்றி வைத்துவிட்டு பால்கனியில்
வந்து நின்றான். அவளிற்கு வாங்கிக்
கொண்டு வந்ததை எடுத்துப்
பார்த்தவன் மறுபடியும் அதைப் பாண்ட்
பாக்கெட்டில் வைத்து அவளிற்கு
அதைத் தரும் ஆசையுடன் நின்றான்.
கொஞ்சம் மிதுனாவின்
பிரச்சினையில் இருந்து வெளியே
வந்தவன் முகத்தில் சிரிப்பைப்
பூசிக் கொண்டு தன் மதுவிற்காகக்
காத்திருக்க விதியோ வேறு விதமாக
செயல்பட ஆரம்பித்தது.

மதுவின் போன் அடிக்கும் சத்தம்
கேட்டு உள்ளே வந்து பெட்டின் மேல்
இருந்த போனை எடுத்துப் பார்த்தான்.
மிதுனாவிடம் இருந்து தான் அழைப்பு.
புருவ முடிச்சுடன் போனை எடுத்து
கார்த்திக் காதில் வைக்க "மது நீ
சொன்ன மாதிரியே நாங்க இங்க வந்துட்டோம். உன் ப்ரண்டையும்
பார்த்துட்டோம். ரொம்ப தேங்க்ஸ் மது..
வந்து.." என்று பேசிக்கொண்டு
இருக்க கார்த்திக் கட் செய்து போனை
படுக்கையில் வீசி விட்டான்.

"என்னிடம் பொய் சொன்னாயா மது"
என்று நொடிக்கு ஒரு முறை கேட்ட
கார்த்திக்கின் இதயம் கோபத்தில்
கொப்பளித்தது. எவ்வளவு
சந்தோஷமாக மனைவிக்காகக்
காத்திருந்தானோ அந்தளவுக்கு
அவனின் முகம் கோபத்தைத்
தத்தெடுத்து இருந்தது.

ஆனால் இதை எதையும் அறியாத மது
பாத்ரூமில் குளித்து முடித்துவிட்டு
எப்படி கார்த்திக்கிடம் சொல்வது
என்று பாத்ரூம் கண்ணாடி முன் நின்று
மது ஒத்திகைப் பார்த்துக் கொண்டு
இருந்தாள். ஏதேதோ யோசித்தவள்
பிறகு "ஸ்ஸ்ப்பா எப்படி வருதோ
அப்படியே சொல்லுவோம்" என்று
தனக்குத்தானே பேசிக்கொண்டு
வெளியே வந்தவள் கார்த்திக்
நிற்பதைக் கண்டு முகம் சிவந்தாள்.

அவனிடம் சொல்லும் ஆவலுடன்
முகத்தைத் துடைத்துக் கொண்டே
வெளியே வந்தவள் கார்த்திக்
நிற்பதைப் பார்த்து முகச் சிவப்பை
மறைக்க எண்ணி அவனின்
முகத்தைக் காணாமல்
திரும்பிவிட்டாள். ஆனால் உண்மை
அறியாத கார்த்திக்கின் புத்தியோ
அவள் முகத்தைத் திருப்புவதை வேறு
மாதிரி எண்ணியது.

கார்த்திக்கிற்கோ "நம்மிடம் மிதுனா
விஷயத்தை மறைக்க எண்ணி
முகத்தைத் திருப்புகிறாள்" என்று
அவனின் மூளை சொன்னது. பிறகு
சிரித்தபடியே திரும்பிய மது
கார்த்திக்கின் அருகில் ஒரு அடி முன்
எடுத்து வைத்து அவனை அணைக்க
வர, கார்த்திக் இரண்டடி பின்னால்
நகர்ந்து நின்றான்.

அவனின் செயலில் மது அவன் முகம்
நோக்க, "மிதுனா எங்கே மது?" என்று
கேட்ட கார்த்திக்கின் முகமும் குரலும்
இறுகி இருந்தது. அவன் அப்படிக்
கேட்க மதுவிற்குப் புரியவில்லை.
அதான் கீழேயே சொல்லிவிட்டோமே
என்று எண்ணியவள் தன்
கணவனுக்குப் பதிலை அளிக்க
வாயைத் திறந்தாள்.

"அதான் எனக்குத் தெரி...." என்று
முடிப்பதற்குள் கார்த்திக்கின் கரம்
மதுவின் கன்னத்தை பதம் பார்த்தது.

கார்த்திக் தன்னை அடித்தான்
என்பதை புரிந்து கொள்ளவே
மதுவிற்கு சில நொடிகள் பிடித்தன.
கையை கன்னத்தில் வைத்தபடி
கண்களில் கண்ணீருடன் அவன்
அடித்ததில் ஏற்பட்ட வலியுடன்
அவனை ஏறிட்டாள். எதற்கு இந்த அடி
என்று மதுவிற்கு சுத்தமாகப் புரியவில்லை.

அவளின் தோளைப் அழுந்தப் பற்றி
அருகில் இழுத்தவன் "பொய்
சொல்லாத மது. அப்புறம் நான்
பொல்லாதவன் ஆகி விடுவேன்.
உண்மையைச் சொல் மிதுனா
எங்கே?" என்று கோபத்தில் கேட்கத்
தானாக அவனின் பிடி மதுவின்
தோளில் அழுந்தியது.

அவன் பற்றிய இடம் வேறு வழியைக்
கொடுக்க அவன் கையில் இருந்து
விடுபட முயன்றபடி "எனக்குத்
தெரியாது கார்த்திக்.. நீங்க
சொல்றதும் எனக்குப் புரியவில்லை..
மிதுனா எங்கு இருக்கிறாள் என்று
எனக்கு எப்படித் தெரியும்" என்று
மது வலி தாங்காமல் முகத்தை
சுழித்தபடிச் கேட்டாள்.

"மறுபடியும் பொய். மது மிதுனா
இப்போது தான் உனக்கு போன்
பண்ணா" என்று அவளை விட்டவன்
ஏளனமான முகத்தை வைத்துக்
கொண்டு நடந்ததைக் கூறினான்
கார்த்திக்.

"எனக்கு ஒன்றும் புரியவில்லை.
எங்கே அவளுக்கு திருப்பி கூப்பிட்டுக்
கேட்கிறேன்.. இருங்கள்" என்று
போனை எடுத்து மிதுனாவிற்கு கால்
செய்தாள். மதுவின் விதி 'ஸ்விட்ச்டு
ஆப்' என வந்தது. ஒரு நிமிடம்
வயிற்றில் குளிர் பரவத் திரும்பிக்
கார்த்திக்கைப் போனைக் காதில்
வைத்தபடியே பார்த்தாள்.

திரும்பி அவனைப் பார்க்க கார்த்திக்
ஏளனமாக உதட்டை வளைத்தான்.
"என்ன மது.. என்ன சொல்லு.. அடுத்து
என்ன பொய்" என்று அவளின்
கையில் இருந்த போனை வாங்கி
பெட்டில் வீசியபடிக் கேட்டான்.

கோபம் வந்த மது "நான் ஒன்றும்
பொய் சொல்லவில்லை" என்று அவன்
நம்ப மறுக்கிரானே என்ற
ஆதங்கத்தில் கத்த "ஷட் அப்.. நாம்
பேசுவது நமக்கு மட்டும் தான் கேட்க
வேண்டும்" என்று கோபமாக
உறுமினான்.

அவன் உறும மது விக்கித்து நின்றாள்.
கண்களில் வேறு கண்ணீர்
பெருகியது. "மிதுனா அம்மா உன்
கையைப் பிடித்து அழுகிறார்கள்
அப்போது கூடவா உனக்கு சொல்லத்
தோன்றவில்லை" என்று ஜன்னல்
கம்பியைப் பிடித்தபடி கோபத்தில்
கண்கள் பளபளக்கக் கேட்டான்.
அவனின் கோபத்தை மதுவால் ஏற்க
முடியவில்லை.

மதுவால் எதுவும் பதில் பேச
முடியவில்லை.. தான் ஒன்று
நினைத்து வர அது ஒன்று நடக்கிறதே
என்று வேதனையாக இருந்தது
மதுவிற்கு. "எங்கே என்ன தப்பு
நடந்தது?" என்று மதுவின் மனம்
யோசித்து சோர்ந்தது.

திடீரென நியாபகம் வந்தவனாய்
"ஆமாம் இன்று நீ ஏன் லேட்டாக
வந்தாய்?" என்று வினவினான்
சந்தேகப் பார்வையோடு. "அப்படி
பார்க்காதீங்க கார்த்திக்" என்று மது
கண்களால் கெஞ்சினாள்.

மது கோவிலிற்குச் சென்றேன் என்று
சொல்ல வர... கார்த்திக் தன் கையை
உயர்த்தி மதுவின் பேச்சை
நிறுத்தினான். "வேண்டாம்... நீ
அதற்கும் ஏதாவது பொய் சொல்லி
என்னைக் கஷ்டப்படுத்தாதே"
என்றவன் "உன் சித்தப்பாவிற்கு
மதுவை பிக் பண்ணிட்டீங்களா என்று
கேட்பதற்கு கூப்பிட்டு இருந்தேன்... நீ
ஏதோ வேலை இருப்பதாக அவரை
ஒரு மணி நேரம் தாமதமாக வரச்
சொல்லி இருக்கிறாய்" என்று கட்டை
விரலால் நெற்றியைத் தேய்த்தபடி
மதுவைப் பார்த்தவன் "அவர்களை
நல்ல படியாக அனுப்பி வைத்து விட்டு
வந்து இருக்கிறாய் இல்லை.." என்று
இளக்காரம் கலந்த குரலில் கோபமாக
வினவினான்.

"நீங்களே முடிவு செய்து விட்டீர்களா...
என்ன ஏது என்று கூட என்னிடம் ஒரு
முறை விசாரிக்க மாட்டீர்களா?" என்று
பாரமாகக் கணத்தத் தலைவலியுடன்
வினவினாள் மது. கண்களில்
அவனிடம் பேசும் போது குளம் கட்டிக்
கொண்டே இருந்தது அவளிற்கு.

"என்ன கேட்கச் சொல்கிறாய்.. அவள்
தெளிவாக மது நன்றி என்றெல்லாம்
பலமாகக் கூறுகிறாள்.. ஏன் மது
இப்படி என்னிடம் பொய் சொல்கிறாய்..
அவர்களிடம் சொல்லவில்லை
என்றாலும் மேலே வந்து என்னிடம்
தனியாகச் சொல்லி இருக்கலாமே..
அல்லது நான் மறுபடியும் கேட்கும்
போது ஆவது உண்மையைச் சொல்லி
இருக்களாமே.." என்று எரிச்சலும்
கோபமுமாகக் கார்த்திக் வினவ
மதுவின கண்கள் கண்ணீரோடு
வெறித்தபடி எங்கோ பார்த்து.. அவள்
கண்ணீரை அலட்சியப் படுத்தியவன்..
அழுது நின்றவளைப் பார்த்து
"இப்போது மிதுனா எங்கே என்று
சொல்லப் போகிறாயா இல்லையா"
என்று அழுத்தமான குரலில் கேட்டான்.

"எனக்குத் தெரியாது" என்று மது சொல்ல துச்சமாக அவளைப் பார்த்து
விட்டு டி சர்ட்டை எடுத்து மாட்டிக்
கொண்டு கார் சாவியை எடுத்து
விறுவிறுவென வெளியில் சென்று
விட்டான்.

அவன் போனதையே பார்த்துக்
கொண்டு இருந்தவள் படுக்கையில்
அப்படியே உட்கார்ந்து விட்டாள்.
இவ்வளவு சொல்லியும் நம்பாமல்
போகிறானே என்று இருந்தது
மதுவிற்கு. எவ்வளவு சந்தோஷமான
விஷயம் சொல்ல வந்தேன் என்று
வயிற்றின் மேல் கையை வைத்து தடவினாள். அவன் அடித்த இடம் வேறு
எரிய கீழ் உதட்டைக் கடித்து வலியைத்
தாங்கியவள்... தன் இயலாமையை
எண்ணி அப்படியே அழுக ஆரம்பிக்க
"மது அவன் எங்கே இவ்வளவு
அவசரமாகப் போறான்" என்றபடி
ஜானகி அறைக்குள் வந்தார்.

தன் யோசனைகளிலேயே மூழ்கி
இருந்த மது அவரின் குரலைக் கேட்டு
கண்களை அவசரமாகத் துடைத்துக்
கொண்டு திரும்பி "என்ன அத்தை...
என்ன கேட்டீங்க" என்றாள் மது.
மெய்யாகவே தன் யோசனையில் இருந்தவளுக்கு தன் மாமியார் கேட்டது
சரியாகக் காதில் விழவில்லை.

"அதான் மது அவன் எங்கேயோ
வெளியே..." என்று பேசிக் கொண்டே
போனவர் மதுவின் முகத்தை
அப்போது தான் கவனித்தார். ஜானகி
அம்மாள் அருகில் வர வேறுபக்கம்
திரும்பிய மது தங்களின் விஷயம்
அவர்களுக்குத் தெரிய வேண்டாம்
என்று எண்ணி ஜன்னலின்
திரைச்சீலையை விலக்கியபடி
பாவனை செய்து முகத்தை
மறைத்தாள்.

அவளின் பின் வந்து நின்ற ஜானகி
"மது திரும்பு" என்று அவளின்
தோளின் மேல் கை வைத்துத்
திருப்பினார்.

மது திரும்ப அவள் கன்னத்தில்
இருந்த கை தடத்தையும் சிவந்த
விழிகளையும் பார்த்தவருக்கு
புரிந்துவிட்டது. "என்ன ஆச்சு மது?"
என்று அவளை உட்கார வைத்து
தானும் உடன் அமர்ந்து கேட்டவரிடம்
முதலில் "ஒன்றும் இல்லை அத்தை"
சொல்ல மறுத்தாள்.

"வெறும் வாய்த் தகராறாக இருந்தால்
நான் கேட்க மாட்டேன் மது.. உன்
கண்களையும் கன்னத்தையும்
பார்த்தாலே தெரியுது என்ன
நடந்திருக்குன்னு.. நீயும் எனக்கு நீலா
மாதிரி தான்டா" என்று சொல்லி
அவளின் தலையை வருடியவர் "இங்க
பார் மது.. இந்த அத்தையிடம்
சொல்லக் கூடாத விஷயமாக
இருந்தால் வேண்டாம்.. ஆனால்
அழுது உடம்பைக் கெடுத்துக்
கொள்ளாதே" என்று அவர் பாசமாய்ப்
பேச மீண்டும் அழுகை வெடித்தது மதுவிற்கு. நடந்த அனைத்தையும்
கூறியவள் "எனக்கு எதுவும் தெரியாது
அத்தை.. என்னைச் சுற்றி என்ன
நடக்கிறது என்றே எனக்குப்
புரியவில்லை அத்தை" என்று
அவர் மடியில் தலை சாய்த்து அழுதாள்.
"அவர் என்னை நம்ப மாட்டிங்கிறார்
அத்தை... எவ்வளவு சொல்லியும் நான்
பொய் சொல்கிறேன் என்று
எண்ணுகிறார்.. அவருக்கு எப்படிச்
சொல்லிப் புரிய வைப்பது என்று
எனக்குத் தெரியவில்லை அத்தை"
என்று அழுத மருமகளைப் பார்க்க
ஜானகிக்கு பாவமாக இருந்தது.

"ஒன்னும் இல்லை மது.. எல்லாம்
சரியாகிவிடும்... நாளையே உன்னிடம்
பேசிவிடுவான்.. உன்னிடம் பேசாமல்
எப்படி இருப்பான்" என்று தன் வாயில்
வந்த வார்த்தைகளை, மதுவைச்
சமாதானம் செய்யக் கூறினார்..
ஆனால் தன் மகனின் பிடிவாதத்தை
நன்கு அறிந்த ஜானகிக்கு
கலக்கமாகத் தான் இருந்தது. மகன்
மேலும் எதாவது மருமகள் மனம்
நோகும்படி நடந்து விடுவானோ என்று.

அவளைச் சிறிது சமாதானம்
செய்தவர் "சரி மதுமா அழாதே... வா..
வந்து சாப்பிடு" என்று அழைக்க மது
"எனக்கு வேண்டாம் அத்தை"
மறுத்தாள். அவனுடன் ஆன
சண்டையில் வயிற்றைக்
காயப்போட்டவள் தன் வயிற்றில்
இருக்கக் குழந்தையையும் மறந்தாள்.

எவ்வளவு சொல்லியும் கேட்காததால்
ஒரு டம்ளர் பாலைக் கொண்டு வந்து
பருக வைத்துவிட்டு "எதையும்
யோசிக்காமல் தூங்கு மது" என்று
படுக்க வைத்துவிட்டு சென்றார்.
ஆனால் மதுவிற்கு தான் உறக்கம்
வரவில்லை. மொபைலை எடுத்து
அவனுக்கு கால் செய்து பார்த்தாள். கட்
செய்து கொண்டே இருந்தான்.
அவளின் இந்த நிலையை நினைத்து
அழுவதா இல்லை தான் சொல்ல வந்த
விஷயத்தை சொல்ல முடியவில்லை
என்று அழுவதா என்றும் அவளுக்கே
விளங்கவில்லை.

காரை எடுத்துக் கொண்டு சென்ற
கார்த்திக்கிற்கு வேதனையாக
இருந்தது. பொய் சொல்லிவிட்டாயே
என்று ஒருபக்கம் கோபமுமாக, கை
நீட்டி அடித்து விட்டோமே என்று
ஒருபக்கம் பாவமுமாக இருந்தது. ஒரு
நிமிடம் காரை நிறுத்தியவன்
பாக்கெட்டில் இருந்த கிப்ட்டை எடுத்துப்
பார்த்தான். ஒரு வெறுமையுடன் அதை
டாஷ் போர்ட்டில் வைத்து மூடியவன்
கண்களை மூடி சிறிது நேரம்
யோசிக்கலாம் என்று கண்ணை
மூடினான். மதுவின் முகமே வந்தது.
தன்னையே கடிந்து கொண்டு காரில்
இருந்து இறங்கியவன் ஒரு
சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

மது சென்னை கிளம்பும் முன் இந்தப்
பழக்கத்தைக் குறைக்கச் சொன்னது
நினைவு வந்தது. ஆனால் இருக்கிற
டென்ஷனிற்கு முடியாது என்று
நினைத்தவன் காரின் கதவு மேல்
சாய்ந்து யோசித்தபடியே வரிசையாக
மூன்றைப் புகைத்து முடித்தான்.

பின்பு போனை எடுத்தவன்
சிவாவிற்குக் கூப்பிட்டான். ஒரே
ரிங்கில் சிவா எடுக்க அவன் இன்னும்
உறங்கவில்லை என்பதைத் தெரிந்து
கொண்டான். பாவி இப்படி எல்லார்
உறக்கத்தையும் நிம்மதியையும்
கெடுத்து விட்டுச் சென்று விட்டாளே
என்று மிதுனாவை மனதிற்குள்
திட்டினான் கார்த்திக்.

"ஹலோ" என்று இரண்டாவது
முறையாகச் சிவா அழைக்கச்
சுயநினைவிற்கு வந்தவன் "அ..
ஹலோ சிவா.. எங்க இருக்க" என்று
கேட்டான் கார்த்திக்.

"நான் சும்மாதான் டா.. காரில் நம்ம
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் வரை
வந்தேன்" என்று சோர்வானக் குரலில்
சொன்னான்.

"சரி அங்கேயே இரு.. நான்
வருகிறேன்" என்று சிவாவின்
பதிலிற்குக் கூடக் காத்திராமல்
போனை அணைத்து காரில் ஏறி
அமர்ந்து காரை எடுத்தான் கார்த்திக்.

பஸ் ஸ்டாண்ட் அடைந்தக் கார்த்திக்
சிவா அங்கு நிற்பதைக் கவனித்து
காரை நிறுத்தி விட்டு இறங்கினான்.
அவனின் அருகில் வந்த சிவா "என்ன
டா இந்த டைம்ல பாக்க வந்திருக்க?"
என்று வினவ கார்த்திக்கிற்கு கோவம்
வந்து விட்டது.

"ஏய்... என்ன கேசுவலாப் பேச ட்ரைப்
பண்றியா.. உன்னை இங்க இப்படி
விட்டுவிட்டு எப்படி இருப்பேன். ஒரு
க்ளூ சிக்கியது அதான் வந்தேன்"
என்று நண்பனிடம் சொன்னான். சிவா
யோசித்தபடி கார்த்திக்கைப் பார்க்க
கார்த்திக்கே தொடர்ந்தான்
"மிதுனாவிடம் இருந்து மதுவிற்கு கால்
வந்தது சிவா.. மதுவைத் தான் எடுக்க
சொன்னேன்.. அப்புறம் நான் அருகில்
இருப்பதைக் கண்டு கொண்டவள்
போனை வைத்து விட்டாள்" என்று
சிவாவிடம் அடித்து விட்டான் கார்த்திக்.
கார்த்திக்கிற்கு மதுவை மற்றவர்
தவறாக எண்ணும் படி ஆகக் கூடாது
என்று மனது துடித்தது உண்மை தான்.
அதுதான் அவனை சிவாவிடம்
அப்படிச் சொல்ல வைத்தது.

"சரி அதை வைத்து என்ன செய்ய டா"
என்று சலித்தபடி காரின் மேல் ஒரு
கையை மடக்கி வைத்து தலைக்குக்
குடுத்து படி சலித்தான் சிவா.

"டேய்... புரியவில்லையா உனக்கு"
என்ற கார்த்திக் "மிதுனாவிடம் இருந்து
மதுவிற்கு எங்கு இருந்து கால் வந்தது
என்று ட்ராக் பண்ணலாம்ல" என்று
நண்பனின் தோளில் கை வைத்துச்
சொன்னான் கார்த்திக்.

"டேய் விளையாடாதே.. இதெல்லாம்
போலீஸ் அது இதுன்னு போகும்..
அப்பா அதெல்லாம் வேண்டாம்
என்கிறார்" என்று சிவா கூறினான்.
அவனைப் ஒரு நிமிடம் எரிச்சலாகப்
பார்த்த கார்த்திக் "டேய் இது கூட
யோசிக்காமல் வந்திருப்பேனாடா...
நம்ம மாப்பிள்ளை அரவிந்திடம்
சொல்லி அன்அபிஸியலா மூவ்
பண்ணலாம்" என்று கார்த்திக் கூற
அப்போது தான் சிவாவின் கண்களில்
ஒரு சுறுசுறுப்புக் கூடியது. "அதுவும்
இல்லாமல் மிதுனா எங்கு
இருக்கிறாள் என்று தெரிந்து
கொண்டால் ஏதாவது அந்த ஊரில்
தெரிந்த ஆட்களை வைத்து நாம்
போகும் வரை கல்யாணத்தை நிறுத்தி
வைக்கலாம்" என்ற கார்த்திக்... ஒரு
நிமிடம் சிவாவைப் பார்த்து "மச்சி
அந்தப் பையன் நல்லவனாக
இருந்தால் கல்யாணம் செய்து
வைக்கும் ஐடியா இருக்கிறது தானே"
என்று வினவினான்.

"அப்பா தான்டா பிரச்சினை செய்வார்..
எனக்கும் அம்மாவிற்கும் மிதுனாவின்
சந்தோஷம் தான் முக்கியம்" என்றவன்
"ஆனால் ஏன் என்னிடம்
சொல்லவில்லை என்று
தெரியவில்லை" என்றான்
உணர்ச்சியற்ற குரலில். ஒரு நிமிடம்
நண்பனின் நிலையை எண்ணி
வருந்திய கார்த்திக்கிற்கு
மிதுனாவின் மேல் கோபம் வந்தது..
மேலும் அவள் செல்ல உதவிய தன்
மனைவியின் மேல் அதை விடக்
கோபம் பொங்கியது.

அரவிந்திற்கு இந்த நேரத்தில்
கூப்பிடலாமா என்று யோசித்த
கார்த்திக்கும் சிவாவும் பின் வேறு வழி
இல்லை என்று எண்ணி அரவிந்திற்கு
கூப்பிட்டனர். மணி பதினொன்று ஆகி
இருந்தது.

போன் அடிக்க எடுத்த அரவிந்த்
"ஹலோ மச்சான்" என்றான்.

"அரவிந்த் டிஸ்டர்ப் பண்ணிவிட்டேனா?
ஒரு முக்கியமான விஷயம் அதான்
போன் போட்டேன்" என்று டிஸ்டர்ப்
செய்கிறோமே என்று உறுத்தலுடனே
கேட்டான் கார்த்திக்.

"இல்லை இல்லை.. நான் இப்போது
தான் வீட்டிற்கு வந்தேன் கார்த்திக்.
என்ன விஷயம் சொல்லுங்க" என
விஷயத்தைக் கேட்டான்.

விஷயத்தைக் கார்த்திக் சொல்ல "சரி
நீங்கள் மிதுனா மதுவின் நம்பரை
அனுப்பி வையுங்கள்.. நான்
என்னவென்று பார்த்துவிட்டு
உங்களுக்கு கூப்பிடுகிறேன்" என்று
சொன்னான். நம்பரை அனுப்பி விட்டு
இருவரும் ஒரே காரில் ஏறி
அமர்ந்தனர். இருவரின் மனதிலும்
வெவ்வேறு சிந்தனைகள்.

சிவாவிற்கு மிதுனா கல்யாணம்
மட்டும் செய்து கொள்ளக் கூடாது
என்று வேண்டிக் கொண்டு இருந்தது..
'மிதுனாவைக் கூட்டிக் கொண்டு வந்து
அப்பாவை சமாதானம் செய்து
கல்யாணம் செய்து வைத்து விட
வேண்டும்..' என்று நினைத்துக்
கொண்டு இருந்தான்.

கார்த்திக்கிற்கோ மதுவைச் சுற்றியே
சிந்தனைகள் ஓடிக் கொண்டு
இருந்தது.. கோபமாக இருந்தாலும்
என்ன செய்து கொண்டு
இருக்கிறாளோ என்று எண்ணினான்.
அவள் நடுவில் இரண்டு மூன்று முறை
போன் செய்தது நினைவு வந்தது.
வேண்டுமென்றே கட் செய்தவன்
இப்போது போன் செய்யலாமா என்று
எண்ணியவனிற்கு 'கேட்டும் என்னிடம்
சொல்லாமல் தன் ப்ரண்டிற்கே
சாதகமாக இருந்தாளே' என்று
எண்ணி மீண்டும் கோபம் வந்து
மென்மேலும் அவளின் மேல்
கோபத்தை வளர்த்தான்.

'என்னை அவ்வளவு சுலபமாக
ஏமாற்றி விடலாம் என்று
நினைத்தாயா மது" என்று கண்ணை
மூடி ஸ்டியரீங்கை இறுக்கினான். பின்
தலையைப் பின்னால் சாய்த்துக்
கண்களை மூடி அமர்ந்தான். கொஞ்ச
நேரத்தில் போன் அடிக்க எடுத்துப்
பார்த்தான்... அரவிந்த் தான்.. போனை
எடுத்துக் காதில் வைத்தவன் அவன்
சொன்ன தகவலில் புருவத்தை
நெருக்கி சிவாவைப் பார்த்தான்..
"ஓகே அரவிந்த் தாங்க்ஸ்" என்று
போனை வைத்தான்.

"சிவா.. மிதுனா திருச்சில இருக்கா.."
என்றான் கார்த்திக். "திருச்சியா"
என்று யோசித்தவன் "கார்த்திக் என்ன
பண்ணலாம் டா.. வயதுப் பெண்
தெரியாத ஊருக்கு எவனென்றே
தெரியாதவனோடு சென்று
இருக்கிறாளே.. அவள் வரும் போது
என் தங்கையாகவே வந்தால் போதும்
டா" என்ற சிவாவின் கண்கள் கலங்கி
விட்டது. அவன் என்ன நினைத்துக்
கலங்குகிறான் என்று கார்த்திக்கிற்கு
புரியாமல் இல்லை.. அவன்
நிலைமையும் கார்த்திக்கிற்கு புரிந்தது.
"அரவிந்த் ப்ரண்ட் அங்கு தான் சிவா
வேலையில் இருக்கிறார். அவரை
வைத்து தேடச் சொல்லி இருக்கிறேன்
என்றான் அரவிந்த்" என்றவனைப்
பார்த்த சிவா "சரிடா.. நான் இப்போதே
கிளம்புகிறேன்" என்று பரபரப்பாகக்
கூறினேன்.

"சிவா.. அவசரப்படாதே.. அவர்கள்
எப்படியும் இன்னும் அரை மணி
நேரத்தில் கண்டுபிடித்து விடுவார்கள்..
பிடித்து இருவரையும் பாதுகாப்பாக
வைத்திருப்பார்கள்.. நானும் நாளை
உன்னுடன் வருகிறேன்.. காலை
கிளம்பிவிடலாம். ஏன் என்றால்
பிடிப்பட்ட உடனே நாம் போய் நின்றால்
மிதுனா கோபத்தில் வரவில்லை
என்று சொன்னாலும் சொல்லி
விடுவாள்.. அவள் மேஜர் வேறு..
பொறுமையாகப் போய் அவளை
சமாதானம் செய்து கூட்டி வரலாம்"
என்று அவனுக்கு பக்குவமாக
எடுத்துக் கூறினான்..

கார்த்திக் வர ஒரு மணி ஆகிவிட்டது.
கார் சத்தம் கேட்டு மது கீழே வர
அதற்குள் ஜானகி அம்மாள் சென்று
கதவைத் திறந்து விட்டார். உள்ளே
நுழைந்தவன் "ஏன்மா தூங்கலையா?"
என்று கேட்டபடியே நடந்தான்.

"எங்கே கார்த்திக் போனாய்?" என்று
கேட்டவரிடம் சட்டையில் மேல் இரண்டு
பட்டனை கழற்றியபடி விவரம்
கூறினான். மது என்று ஒருத்தி
நின்றிருந்ததை அவன் சட்டை
செய்யவே இல்லை.

"சரி வந்து சாப்பிடு" என்று மகனை
அழைத்தவர்... "மது வா நீயும் வந்து
சாப்பிடு" என்று மதுவை அழைத்தார்.

அவளைத் திரும்பி ஒரு பார்வை
பார்த்தவன் "அவள் ஏன் இன்னும்
சாப்பிடவில்லை" என்று அன்னையிடம் வினவினான்.. "உன் பொண்டாட்டி
சாப்பிடவில்லை என்று என்னிடம்
கேட்கிறாய்" என்று வெடுக்கென்று
பதில் வந்தது அவரிடம் இருந்து. பின்
மகனையும் மருமகளையும் அமர
வைத்து இருவருக்கும் பரிமாறினார்
ஜானகி. இருவருமே பேருக்காகச்
சாப்பிட்டுவிட்டு எழுந்தனர்.

சாப்பிட்டு விட்டு மதுவை கண்டு
கொள்ளாது படி ஏறப் போனான்
கார்த்திக்.

"நில்லு கார்த்திக்..உன்னிடம்
கொஞ்சம் பேச வேண்டும்" என்ற தன்
அன்னையின் குரல் கார்த்திக்கை
நிற்க வைத்தது. அவன் திரும்ப
"மதுவை அடித்தாயா?" என்று ஜானகி
அம்மாள் கேட்க மதுவைத் திரும்பிப்
பார்த்தவன்.

"ஏன் உங்களிடம் வந்து சொன்னாளா?"
என்று நடந்ததை ஏளனமான குரலில்
வினவ "அவள் சொல்ல வேண்டும்
என்று இல்லை.. உன் கை தடத்தை
அவள் கன்னமே காட்டிக் கொடுத்து
விட்டது" என்று மகனிற்கு அவனின்
ஏளனத்தை மிஞ்சியக் குரலில் பதில்
அளித்தார். பின் அவனின் தாய்
அல்லவா?

"அம்மா என்ன நடந்தது என்று
உங்களுக்குத் தெரியுமா?" என்று
அவரிடம் நடந்ததைக் கூறினான்.

"சரி அப்படியே இருக்கட்டும்.. அதற்கு
கையை நீட்டுவாயா?" என்று கேட்க
கார்த்திக் எதுவும் பேசாமல் நின்றான்.
பேச முடியாமல் இல்லை. தன்
அன்னையை எதிர்த்துப் பேச
விரும்பவில்லை அவன்.

அவன் பேசாமல் நிற்பதைக் கண்டவர்
"இங்க பாரு கார்த்திக் மதுவும் நம்ம
நிலா போலத் தான் அவர்கள் வீட்டில்
செல்லமாக வளர்ந்த பெண்.. உனக்கு
கல்யாணம் செய்து கொடுத்து
விட்டால் நீ என்ன வேண்டுமானாலும்
செய்யலாம் என்று இல்லை..
உன்னையே நம்பி வந்தவளை கை
நீட்டி அடிக்கவா நாங்கள் கற்றுக்
கொடுத்தோம்" என்று கேட்டவர்
"கோபத்தை அடக்கப் பழகிக் கொள்
கார்த்திக்" என்று தன்னால் முடிந்த
வரை மகனிற்கு எடுத்துரைத்து விட்டு
அறைக்குச் சென்றுவிட்டார் ஜானகி.

அவர் சென்ற பின் மதுவை
முறைத்தவன்.. படி ஏறி அறைக்குள்
புகுந்து கொண்டான். மதுவும் அவன்
பின்னே சென்று ரூம் கதவைச் சாத்தி
விட்டுத் திரும்ப "உன் ப்ரண்ட்
திருச்சில தான் இருக்கா...கல்யாணம்
பண்ணிக்க போயிருக்கா.. ஏதோ
கலேஜில் கூடப் படித்த பையனாம்.. நீ
சொல்லவில்லை என்றாலும் அவளது
போனை ட்ராக் பண்ணிவிட்டோம்...
எப்படியும் விடியற்காலை பிடித்து
விடுவார்கள். ஆமாம் உனக்கு
திருச்சில யார் இருக்காங்கனு அங்க
அனுப்பி வச்ச" என்று எகத்தாளமாகக்
கார்த்திக் கேட்க மது "நான் எவ்வளவு
தடவை கார்த்திக் சொல்லுவது..
எனக்கு தெரியாது என்று.. அவள்
எனக்கு ஏன் அப்படி கால் பண்ணி
சொன்னாள் என்று புரியவில்லை"
என்று மன்றாடிப் பார்த்தாள். அவள்
ஏற்கனவே அழுது இருந்தக் கோலம்
அவனை உறுத்தியது.. பேச்சை
வளர்க்கவும் அவன் விரும்பவில்லை.

"நீ எதுவும் சொல்ல வேண்டாம்" என்று
படுக்கைக்குச் சென்றவன்... "அப்புறம்
என் பெயரை சொல்லி இனி
என்னைக் கூப்பிடாதே" என்று படுத்து
விட்டான். கோபத்தை எப்படி எல்லாம்
காட்ட முடியுமோ அப்படி எல்லாம்
தன்னையே அறியாமல் அவளிடம்
காட்டிக் கொண்டு இருந்தான்.

மதுவிற்கு வேதனையாக இருந்தது.
தான் புடித்த முயலுக்கு மூன்று
கால்கள் என்றே நிற்கிறானே...
அவளும் வந்து படுத்து விட்டாள்..
மதியம் சீக்கிரம் வந்துவிடு என்று
மெசேஜ் அனுப்பியவன் இவன்தானா
என்று இருந்தது மதுவிற்கு.. இந்த
நேரத்தில் எப்படி நீ அப்பா
ஆகிவிட்டாய் என்று சொல்லுவது..
எப்படி எடுத்துச் சொல்லுவது என்று
யோசித்தபடியே படுத்திருந்தாள்.
தினமும் அவனை அணைத்த படியே
படுத்து இருந்தவளுக்கு இன்று
அதுவும் தான் தாய் ஆகி இருக்கின்ற
நிலைமையில் அவன் அருகாமைக்கு
மதுவின் மனம் ஏங்கியது.

திரும்பிப் படுத்து இருந்த கார்த்திக்கும்
தூங்கவில்லை.. "ஒரு ஸாரி
கேட்கிறாளா பார்.." என்று
நினைத்தபடி படுத்திருந்தான்.
அவர்கள் அப்போதே பேசி இருந்தால்
இருவருக்கும் அப்படி ஒரு இடைவெளி
விழுந்து இருந்திருக்காது.
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-16

காலையில் மதுவால் கண்களைத்
திறக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு
இமைகளைப் பிரித்தவள் சிறிது நேரம்
கண்களைத் திறந்தபடியே படுத்து
இருந்தாள். மனம் முழுதும் நேற்று
நடந்ததை நினைத்து மருகியபடியே
இருந்தது.

தலையைத் திருப்பிக் கார்த்திக்கைப்
பார்க்க அவனும் அசதியில் உறங்கிக்
கொண்டு இருந்தான். அவன்
கண்ணை மூடியது அதிகாலையில்
தான். அவனது புருவ முடிச்சு வேறு
அவன் அதே யோசனையில் தூங்கிக்
கொண்டிருக்கிறான் என்று
சொல்லாமல் சொன்னது.

எழுந்து உட்கார்ந்து எழ முயன்றாள்
மது. ஆனால் உடல் எங்கோ பறப்பது
போல இருந்தது மதுவிற்கு. நேற்று
வேறு சரியாக உறங்காததால் தூக்கம்
வேறு மறுபடியும் கண்ணைத்
தொட்டது மதுவிற்கு. கண்டிப்பாக
இன்று ஹாஸ்பிடல் செல்ல முடியாது
என்று மதுவிற்குத் தோன்றியதால்
ஹாஸ்பிடலிற்கு வர முடியாது என்று
தகவல் தெரிவித்து விட்டு மீண்டும்
படுக்கையில் விழுந்தாள். அவளது
கண்களை மறுபடியும் தூக்கம் வந்து
ஆட்கொண்டது.

மறுபடியும் எட்டு மணிக்கு எழுந்தவள்
கார்த்திக் அருகில் இல்லை என்பதைக்
கவனித்தாள். பாத்ரூமிலும் இல்லை
என்று அறிந்தவள் கீழே தான்
இருப்பான் என்று யூகித்தாள்.
பல்துலக்கி கீழே செல்ல அவன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

"என்ன மது ஹாஸ்பிடல்
போகலையா?" என்றபடி ஜானகி
பூஜை அறையில் இருந்து வெளியே
வந்தார். மதுவின் முகம் வெளுத்து
இருந்ததை அவர் கவனிக்கத்
தவறவில்லை.

"இல்லை அத்தை.. ரொம்ப டயர்டா
இருக்கு. இன்னைக்கு லீவ்
சொல்லிட்டேன்" என்றாள் மது. தன்
அன்னையின் பேச்சிலும்
மனைவியின் பேச்சிலும் நிமிர்ந்தக்
கார்த்திக்கோ அவளை ஏறிட்டுப்
பார்த்து விட்டு எதுவும் பேசாமல்,
சாப்பிட்டு விட்டு வந்து நியூஸ்
பேப்பரை எடுத்துக் கொண்டு
உட்கார்ந்து விட்டான். மதுவும்
அசதியினால் எதுவும் பேசாமல்
உட்கார்ந்து இருந்தாள்.

பசி வேறு வயிற்றைக் கிள்ளியது
மதுவிற்கு.. சாப்பிடலாம் என்று
எழுந்தவளுக்கு ஜானகி அம்மாள்
தன்னை நோக்கி காஃபி எடுத்து
வருவது தெரிந்தது.

"இந்தா மது.. ஏன் ரொம்ப டல்லா
இருக்க நான் வேணா ஜூஸ் போட்டுக்
கொண்டு வரட்டா" என்று வினவ
"இல்லை அத்தை இதுவே போதும்"
என்று கையில் காஃபி கப்பை
வாங்கிக் கொண்டாள் மது.

ஜானகி அம்மாள் கொடுத்தக்
காஃபியை வாய் அருகில் கொண்டு
சென்றவளுக்கு குமட்டல் எடுக்க வாஷ்
பேஸனை நோக்கி ஓடினாள். அவள்
திடீரென ஓடுவதைப் பார்த்த
கார்த்திக்கும் ஜானகியும் அவள்
பின்னால் எழுந்து என்ன என்றபடி
சென்றனர். அவசரமாக வந்து
"என்னமா ஆச்சு?" என்று ஜானகி
அம்மாள் வினவ "ஒன்றுமில்லை
அத்தை இரவு சரியாக உறங்கவில்லை.
அதுதான்" என்றுவிட்டு அறைக்குள்
செல்ல எண்ணி மாடிப்படி ஏறினாள்.

ஏதோ யோசித்தபடி நின்ற
கார்த்திக்கிற்கும் போன் வரப் போனை
அட்டென்ட் செய்து வேறு பக்கம்
சென்றான். ஆனால் மது போகும்
திசையையேக் கவனித்தபடி
நின்றிருந்தான். எதோ அவள்
நடையில் வித்தியாசத்தை உணர்ந்து சிறிது யோசித்தவன் டயர்டா இருக்கும்
என்று விட்டுவிட்டான்.

சிவாதான் போன் செய்து இருந்தான்
கார்த்திக்கிற்கு. "சிவா
கிளம்பிவிட்டேன் டா.. இன்னும் பத்து
நிமிடத்தில் வந்து விடுவேன்" என்று
சொன்னான்.

"வேண்டாம் மச்சி.. நம்ம போக
அவசியம் இருக்காது" என்றான்
ஓய்ந்தக் குரலில். "ஏன் டா... என்ன
ஆச்சு ?" என்று ஷூவை மாட்டிக்
கொண்டு இருந்தவன், நிமிர்ந்து
தோளிற்கும் தலைக்கும் இடையில்
வைத்து இருந்த போனிற்கு கை
வைத்துப் பேசினான்.

"திருச்சியில் இருந்து போன் வந்தது
டா... ஒரு போலீஸ் அதிகாரி தான்
பேசினார்.. நேற்று கோயம்பத்தூரில்
வைத்தே கல்யாணத்தை முடித்துக்
கொண்டு தான் திருச்சி ப்ளைட் ஏறி
இருக்கிறார்கள்" என்றவன் "அந்த
அதிகாரி இப்போது எதுவும் செய்ய
முடியாது என்கிறார் கார்த்திக்..
மிதுனாவும் இங்கு வரவே விருப்பம்
இல்லை என்று கூறுவதாகவும்
தெரிவித்தார்" என்று சொல்லி
முடித்தான் சிவா.

"ஸாரி டா சிவா" என்றான் கார்த்திக்..
"நீ ஏன் டா ஸாரி சொல்ற.. விடு
அவளுக்கு எங்களைப் பார்க்கத்
தோன்றினால் வரட்டும்.. இல்லை
என்றால் அவள் இஷ்டம் தான்.."
என்றவன் "தாங்க்ஸ் டா.. நேற்று வந்து
செய்த உதவிக்கு" என்று சின்னக்
குரலில் சிவா சொல்ல.. "டேய்..
போனை வச்சிட்டு போ... தாங்க்ஸாம்"
என்று தொடர்பைத் துண்டித்தான்
கார்த்திக்.. போனை வைத்தவன்
நேராகத் தன் அறையை நோக்கி
நடந்தான். அவனது கோபம் இப்போது
முழுவதும் மதுவின் பக்கம் திரும்பியது.

அறைக்கு வந்த மதுவிற்கு 'என்னாச்சு'
என்று கேட்ட தன் மாமியாரிடம்
சொல்ல ஆசை தான். ஆனால்
சொல்ல வாய் தான் வரவில்லை..
கார்த்திக்கிடம் சொல்லாமல்
யாரிடமும் சொல்லக் கூடாது என்ற
பிடிவாதம் எழுந்தது மதுவிற்கு.
எல்லாவற்றையும் யோசித்துக்
கொண்டு அப்படியே ட்ரெஸிங் டேபிள்
முன்னால் நின்று தன் பிம்பத்தைப்
பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவனுடன் கடந்த ஒரு மாதத்திற்கு
மேல் இந்தக் கண்ணாடி முன் நின்று
காதல் புரிந்தது நினைவு வந்து
கண்கள் கரித்து வர ட்ரெஸிங் டேபிள்
முன் இருந்த சேர் முன்னாடியே
உட்கார்ந்து விட்டாள்.

சிவாவிடம் பேசிவிட்டுத் தன்
ரூமிற்குள் வந்தவன் மது ட்ரெஸிங்
டேபிள் முன்னால் உட்கார்ந்து
இருப்பதைப் பார்த்து அவளிடம்
சென்று இரண்டடி பின்னால் தள்ளி
நின்றான். "உன் ப்ரண்ட் கல்யாணமே
நேற்றே பண்ணிவிட்டாளாமே..
இப்போது தான் எங்களுக்குத் தகவல்
கிடைத்தது.. செய்வதையும் செய்து
விட்டு வர விருப்பம் இல்லை என்று
சொல்லி இருக்கிறாள். அனுப்பி
வைக்கும் போது கல்யாணமும் செய்து
அனுப்பி வைத்து விட்டாயா" என்று
கண்களைக் கூர்மையாக்கி
வினவியவனிடம் மது பதில் பேசாது
நின்றாள். இவனிடம் என்ன
சொன்னாலும் நம்பப் போவதில்லை.
வீண்வாக்குவாதம் செய்தால் அதற்கும்
ஏதாவது சொல்லுவான் என்று
பேசாமல் நின்றாள்.

அவள் ஒன்றும் பேசாமல் நிற்பதைக்
கண்டவனுக்கு எரிச்சல் கூடியது
"இப்போது சந்தோஷமாக இருக்குமே..
எப்படி கஷ்டப்படுறாங்க தெரியுமா
சிவா வீட்டுல...ச்ச" என்று கோபமாய்
அவளை வெறித்துவிட்டுக் கிளம்பி
விட்டான்.

அவன் சென்ற பிறகு மது சோர்ந்து
கட்டிலில் வந்து உட்கார்ந்தாள்.
போனை எடுத்து மது மிதுனாவிற்கு
போன் போட்டுப் பார்த்தாள். This
number is out of service என்று வர மதுவிற்கு எரிச்சல் தான் வந்தது.
போனைத் தூக்கி மறுபடியும் பெட்டில்
எறிந்துவிட்டாள். ஏனோ எரிச்சலாக
இருந்தது. ஏதோ தோன்ற பெட்டின்
மூலையில் இருந்த போனை
மறுபடியும் எடுத்து ஸ்வேதாவிற்கு
கூப்பிட்டாள்.

மதுவின் நம்பரைப் பார்த்த ஸ்வேதா
உற்சாகத்தோடு போனை எடுத்து "ஹே
மது.. எப்படி இருக்க?" என்று கேட்டாள்.
"நல்லா இருக்கேன் டி" என்ற மதுவின்
குரலில் இருந்த சோர்வைக் கண்டு
கொண்டாள்.
"ஏன் டி டல்லாகப் பேசற... ஆமாம் நீ
ஹாஸ்பிடலில் இருந்தா போன்
செய்கிறாய்" அவள் ட்யூட்டியில்
இருக்கும் போது போன் பண்ண
மாட்டாளே என்ற யோசனையுடன்
ஸ்வேதா கேட்க "ஒன்றுமில்லை டி..
தலைவலி அதான் குரல் ஒரு மாதிரி
இருக்கு.. லீவ் போட்டுட்டேன்
இன்னிக்கு" என்று அவள் அடுக்கிய
கேள்விகளுக்கு பதில் அளித்த மது..

"ஸ்வேதா.. உன்னிடம் ஒன்று
கேட்கனும் டி" என்று கேட்டாள்.. "ம்ம்
கேளு டி" என்றவளிடம்.. நேற்று மிதுனா வீட்டார் வந்த விஷயத்தை
மட்டும் சொன்னாள்.

"உனக்கு அவள் காதலித்தது
தெரியுமா டி?" என்று ஸ்வேதாவிடம்
கேட்டாள் மது.

"இல்லை மது.. தெரியாது.. நீ
சொல்லுவது எனக்கு ஷாக்கா
உள்ளது.. நீ இல்லாத நாட்களில்
நாங்கள் சந்திக்கும் போது கூட
கல்யாணத்தைப் பற்றிக் கேட்டால்
"ஜாதகம் இப்போதைக்கு சரி இல்லை..
25 ற்கு மேல் தான் பார்ப்பார்கள் என்று
கூறுவாள்" என்றாள் ஸ்வேதா.

"சீரியஸாக எனக்கு ரொம்ப
அதிர்ச்சியாக உள்ளது மது" என்றாள்
ஸ்வேதா.. பிறகு சிறிது நேரம்
பேசிவிட்டு போனை வைத்தார்கள்
இரு தோழிகளும்.

போனை வைத்து விட்டு கீழே வர
கார்த்திக் கிளம்பிச் சென்று
இருந்தான். கீழே மது வந்ததைக்
கவனித்த ஜானகி "மது வா.. வந்து
சாப்பிடு" என்றார். பிறகு சாப்பிட்டு
விட்டுத் தூங்குகிறேன் என்று மறுபடியும் அறைக்கு வந்து விட்டாள்.
அறைக்கு வந்தவள் தூங்கியும்
விட்டாள்.

கீழே இருந்த ஜானகி தன் கணவரிடம்
நேற்று இரவு நடந்த அனைத்தையும்
சொல்லிக் கொண்டு இருந்தார்.
அனைத்தையும் கேட்டு முடித்தவர் "மது
எங்கே?" என்று வினவினார்.

"மது சாப்பிட்டு விட்டு மேலே சென்று
விட்டாள்.. பேசாலம் என்று மேலே
சென்றான்.. நன்றாகத் தூங்கிக்
கொண்டு இருந்தாள்.. அதான் கீழே
வந்து விட்டேன்" என்றார்.

யோசித்தபடி அமர்ந்திருந்த
வேலுமணி "ஜானகி... அவர்களுக்கு
நம்மால் அட்வைஸ் மட்டும் தான் தர
முடியும்.. ஆனால் புருசன் பொண்டாட்டி
சண்டையில் நாம் நம் தலையை
நுழைக்க முடியாது.. அதுவும்
இல்லாமல் கார்த்திக் என்று இல்லை
வேறு எந்தப் பையனாக இருந்தாலும்
நாம் ஏதாவது சொன்னால் கோபம்
அந்தப் பெண்ணின் பக்கம் தான்
திரும்பும்.. மேலும் அவன் விஷயத்தில்
யார் தலையிட்டாலும் அவனுக்குச்
சுத்தமாகப் பிடிக்காது என்று நமக்கே
தெரியும்" என்றார். கணவன்
சொன்னதை யோசித்த ஜானகிக்குமே
அதுவே சரியாகத் தோன்றியது.

ஆபிஸிற்கு வந்த கார்த்திக்கிற்கு
வேலையில் கவனம் செலுத்தவே
முடியவில்லை. சிடுசிடுவென
இருந்தான். அவன் அப்படி
இருப்பதைக் கண்டு எவருமே
அவனிடம் அது இது என்றுப்
போகவில்லை. ஏதோ கையெழுத்து
வாங்க வேண்டும் என்று ஒரு பையன்
மூர்த்தி சாரை அணுகினான். அவனை
மூர்த்தி ஸார் முறைக்க "ஸார் ஸார்
ப்ளீஸ் ஸார்.. நீங்களே வாங்கித்
தாங்க.. காலையில் தான் அவர் டோஸ்
விட்டார்.. இனியும் போனால் எனக்குத்
தான் மூட் அவுட் ஆயிரும்.." என்று
கிட்டதட்டக் கெஞ்சினான்.

"சரி சரி பைலைக் கொடு வாங்கித்
தரேன்" என்று பைலை வாங்கிக்
கொண்டு கார்த்திக்கின் ஆபிஸ்
அறையைத் தட்டினார் மூர்த்தி.. பாவம்
அங்கு ஒருவன் வாங்கிக்கட்டிக்
கொண்டு இருந்தான். "கவனம்
எல்லாம் வேலையில் வைக்காவிட்டால் இப்படித் தான்... மறுபடியும் சென்று
கரெக்டா எடுத்துட்டு வாங்க" என்று
அவனை வெளியே அனுப்பினான்.

மூர்த்தி ஸார் நிற்பதைப் பார்த்தவன்
"ஏன் அங்கிள் நின்னுட்டீங்க.. வாங்க"
என்றான்.. குரலில் சற்றுக் கடுமை
குறைந்திருந்தது. அவன் தன் 18
வயதில் இருந்து பார்த்துக் கொண்டு
இருப்பவர் மூர்த்தி.. மற்ற கம்பெனிகள்
எவ்வளவு இழுத்தும் வேலமணியிடம்
இருக்கும் விஸ்வாசத்திற்காக இன்று
வரை இந்தக் கம்பெனியிலேயே
இருப்பவர்.

"ஒன்றுமில்லை தம்பி.. இந்தப் பைலில்
ஒரு கையெழுத்து வேண்டும்" என்று
பைலை அவன் முன்னால் வைத்தார்.
"இது....." என்று யோசித்தவன் ஒரு
நிமிடம் அறை வாயிலைப் பார்த்தான்.
அந்தப் பையன் ஆபிஸ் அறையின்
கதவின் பின் நின்றதைக் கார்த்திக்
பார்க்க, அவன் சட்டென்று மறைந்து
விட்டான். ஒரு நிமிடம் தோளைக்
குலுக்கியவன் கையெழுத்தைப்
போட்டுக் கொடுத்தான்.

மூர்த்தி ஸார் திரும்பும் போது
"அங்கிள் அந்தப் பிரபுவை (பைலைக்
குடுத்து அனுப்பிய பையன்), அடுத்த
வேலையை முடித்துக் கொண்டு
அவனையே வந்து காண்பிக்கச்
சொல்லுங்கள்" என்று கையில் இருந்த
பேனாவை சுற்றியபடியே சொன்னான்.
"சரி தம்பி" என்று வெளியே சென்று
விட்டார் அவர்.

சட்டையின் மேல் பட்டனைத் திறந்து
விட்டவன் அப்படியே இரண்டு
கைகளையும் பின்னால் கொண்டு
சென்று தலைக்குக் கொடுத்து அந்தச்
சுழல் நாற்காலியில் சாய்ந்து
உட்கார்ந்தான்.

மதுவை முதலில் சந்தித்திலிருந்து
இப்போது வரை மனத்திரையில்
ஓடியது. அவளது சிரிப்பும்..
லொடலொடப் பேச்சும்.. வெட்கமும்
எல்லாம் கண் முன் வந்து நின்றது.
"ஏன் மது இப்படிப் பண்ணினாய்'
என்ற கேள்வியையே திரும்பத்
திரும்பக் கார்த்திக்கின் மனம்
மதுவின் முன் வைத்துக் கத்தியது.
பிறகு மணியைப் பார்த்தவன் எழுந்து
நேராக உட்கார்ந்து வேலையைத்
தொடங்கினான்.

மது மூன்று மணி போலத் தான் கீழே
வந்தாள். மாமியார் இல்லாததைக்
கண்டவள் 'தூங்கிக் கொண்டு
இருப்பார்கள்' என்று டைனிங்
டேபிளில் வந்து உட்கார்ந்து
அவளாகவே எடுத்துப் போட்டு
உண்ணத் துடங்கினாள்.

பசி இரு மடங்காக இருப்பதை மது
உணர்ந்தவள் கடகடவெனச் சாப்பிட்டு
முடித்தாள். கையைக் கழுவிக்
கொண்டு வர "அட மது எழுந்துட்டயா..
நான் சாப்பிட எழுப்பலாம் என்று
வந்தேன்.. நன்றாகத் தூங்கிக்
கொண்டு இருந்தாய்.. சரி கண்
விழித்தால் நீயே வந்து விடுவாய்
என்று கீழே வந்து விட்டேன்.. என்னை
கூப்பிட்டிருக்கலாம் இல்லை" என்றபடி
பேசிக்கொண்டே வந்தவர் கையில்
எடுத்துக் கொண்டு வந்த பூவை
குளிர்சாதனப் பெட்டியில் வைத்தார்.

"இல்லை அத்தை.. தூங்கிட்டு
இருந்தீங்க-ன்னு நினைத்தேன்" என்று
சமையல் மேடையில் கையை
ஊன்றியபடியே சொன்னாள். ஏனோ
மீண்டும் சோர்வாகவே இருந்தது
மதுவிற்கு.

"இல்லை நான் வெளியில் இந்தப்
பூவைப் பறிக்கச் சென்று இருந்தேன்"
என்ன குளிர்சாதனப் பெட்டியை
மூடியபடிச் சொன்னார்.

பின் வேலுமணி எங்கோ சென்று
விட்டு வர மூவரும் டி.வி யைப் போட்டு
உட்கார்ந்தனர். மது
உட்கார்ந்திருந்தாளே தவிர சிந்தனை
எல்லாம் எங்கெங்கோ இருந்தது.

"மதுக்குட்டி" என்ற அழைப்பில் மது..
வேலுமணி.. ஜானகி.. மூவரும்
வாயிலை நோக்கித் திரும்பினர்.
மதுவின் தாத்தா-பாட்டி மற்றும்
வருணும் நின்று இருந்தனர். 'தாத்தா'
என்று எழுந்தவளுக்கு கண் கலங்கி
அவரிடம் சென்று அவரைக் கட்டிப்
பிடித்துக் கொண்டாள் மது.

வேலுமணி ஜானகியிடம் முன்னேயே
சொல்லி இருந்தனர் வருவதாக.
ஆனால் அவர்கள் இருவருமே
இருந்தக் குழப்பத்தில் மருமகளிடம்
சொல்ல மறந்துவிட்டனர்.

பின் வேலுமணி-ஜானகி தம்பதியர்
அவர்களை வரவேற்று உபசரிக்க
தாத்தவின் கைகளைப் பிடித்தபடியே
அமர்ந்திருந்தாள் மதுமிதா.

"அக்கா இந்தா... அம்மா இதைக்
கொடுக்கச் சொன்னார்கள்" என்று
வெளியே சென்று காரில் இருந்த ஒரு
சம்படத்தை எடுத்து வந்து தந்தான்
வருண்.

"என்னடா இது" என்று மது வினவ
"லட்டு தான்.. மேடத்திற்கு பிடிக்கும்
என்றே செய்து என்னிடம் தந்து
அனுப்பி வைத்தார்கள்.. ஈவ்னிங் தான்
வரலாம்-னு இருந்தேன்.. மாமாவிற்கு
போன் பண்ணி என்ன டைம்-க்கு
வருவீங்கன்னு கேட்டேன்.. நீ
இன்னிக்கு ஹாஸ்பிடல் போலன்னு
சொன்னார். தாத்தாவும் உன்னைப்
பாக்கனும் போல இருக்குன்னு
சொல்ல இரண்டு பேரும் கிளம்பி
என்னுடன் வந்து விட்டார்கள்" என்று
சொன்னான்.

கணவனைப் பற்றி சிந்தனை
செய்தவள் தம்பி தந்த லட்டு
சம்படத்தைக் கொண்டு போய் சமையல் அறையில் வைத்து விட்டு
வந்தவள் தாத்தா உடனேயே அமர்ந்து
விட்டாள். ஏனோ நேற்றிலிருந்து
மனச்சோர்வில் இருந்தவளுக்கு
அவளை சின்னக் குழந்தையில்
இருந்து வளர்த்தவரைக் கண்டதில்
சற்று அமைதியாகத் தெரிந்தது.

தாத்தாவிடம் வந்து உட்கார்ந்த
மதுவை ஈஸ்வரி பாட்டி உற்று
நோக்கினார். "ஏன் மது டயர்டா
இருக்க.." என்று பாட்டி கேட்க "அது
நேற்று வேலை அதிகம் பாட்டி அதான்"
என்ற பொய்யைச் சொன்னாள்.

பிறகு வேலுமணியும் சண்முகம்
தாத்தாவும் ஏதோ பேச ஆரம்பிக்க...
மது வருணிடமும் பாட்டியிடமும் பேசிக்
கொண்டு இருந்தாள்.. வருண் மதுவை
ஏதோ கிண்டல் செய்ய "இவன் இப்படி
பேசுறான்ல.. நீ வந்த அப்புறம் 'அக்கா'
'அக்கா' 'என் அக்கா இருந்திருந்தா
இப்போ இப்படிச் செய்வாள்' என்று
அக்கா புராணம் பாடுகிறான்" என்று
வருணை கிண்டலடித்தார் பாட்டி.

தமையனைப் பார்த்து "அப்படியாடா"
என்று கேட்டுச் சிரித்தாள் மது..
"அதெல்லாம் இல்லை.. சண்டைப்
போட ஆளில்லை... அதான் உன்
பெயரை வைத்து இவர்களை
வம்பிழுத்தேன் " என்று
வேண்டுமென்றே தன் அக்காவை
சீண்டினான். "சரிதான் போடா" என்று
வருணின் தலையைத் தட்டிய மதுவின்
புன்னகை அப்படியே நின்றது..
கார்த்திக் தான் நின்றிருந்தான்.
எல்லோரையும் இன்முகத்துடன்
வரவேற்றவன் மதுவைப் பார்த்து ஒரு
பார்வையை மட்டும் வீசிவிட்டு மேலே
சென்றுவிட்டான்.

உடையை மாற்றிவிட்டுக் கீழே
வந்தவன் அனைவரிடமும் நன்றாகப்
பேசிக் கொண்டு இருந்தான். நேற்று
நடந்த நிகழ்வின் சுவடு ஒன்று கூட
அவனிடம் தென்படவில்லை. "எப்படி
ஒன்னும் நடக்காத மாதிரி இவனால்
உட்கார முடியுது" என்று மது மனதில்
புகைந்து கொண்டு இருந்தாள்.

வெளியே வந்த ஜானகி "சாப்பிட்டு
விட்டுத் தான் போக வேண்டும்" என்று
கட்டளையிட மதுவும் மாமியாருக்குச்
சென்று உதவினாள்.. உள்ளே வந்தப்
பாட்டியை எதுவும் செய்யக் கூடாது என்று மாமியாரும் மருமகளும்
ஒருசேர மிரட்டி அமர வைத்து விட்டனர்.
வெளியே வருணும் கார்த்திக்கும்
சிரித்தது நன்றாகவே மதுவின்
காதுகளில் விழுந்தது. பின் மது
எதற்கோ வெளியில் வர "மது.. உங்கள்
கல்யாண ஆல்பத்தை எடுத்து வா...
எல்லோரும் பார்க்கட்டும்" என்றார்
வேலுமணி.

மது மேலே சென்று எடுத்து வந்து
வருணின் கைகளில் வைத்து விட்டுப்
போனாள். கார்த்திக் அவளை ஒரு
பார்வை பார்த்ததையும் கவனிக்காமல்
உள்ளே சென்று விட்டாள். பின்பு
பாட்டியும் அவர்களுடன் சென்று
பார்க்க ஆரம்பித்தார். சமையல்
வேலை எல்லாம் முடித்துக் கொண்டு
ஜானகி அழைக்க அனைவரும் வந்து
அமர்ந்தனர்... மதுவும் ஜானகியும்
பரிமாறினர். வருணும் கார்த்திக்கும்
சீக்கிரம் சாப்பிட்டு முடித்து எழுந்து
கைகழுவி விட்டு நகர்ந்தனர்.

பிறகு "நீங்கள் உட்காருங்கள் அத்தை.."
என்று மது சொல்ல "நீயும் உட்கார்"
என்றார் ஜானகி.. தலையை மறுப்பாக
அசைத்தவள் "மதியம் லேட்டாகத்
தானே அத்தை சாப்பிட்டேன்..
எனக்குப் பசி இல்லை.. இன்னும்
கொஞ்ச நேரம் கழித்து
சாப்பிடுகிறேன்" என்று விட்டாள் மது..

பின் அனைவரும் சாப்பிட்டு முடிக்க
வருணை எங்கே எனத் தேடி வெளியே
வர கார்த்திக்கும் அவனும் பேசிக்
கொண்டு இருந்ததைக் கண்டாள்.. மது
திரும்ப எத்தனிக்க "அக்கா இங்க வா"
என்றான் அவளின் அருமை
சகோதரன்.

அமைதியாக அவன் அருகில் சென்று
நின்றவளின் தோளில் கை போட்ட
வருண் "என் அக்கா இங்கேயும்
சேட்டை செய்கிறாளா மாமா.. அங்கே
வீட்டில் அதிகமாக இருக்கும்.. சின்ன
வயதில் சீக்கிரம் என்னை ஏமாற்றி
விடுவாள் ஏதாவது விசயங்களில்"
என்று கார்த்திக்கிடம் கேட்டுக்
கொண்டு இருந்தான் வருண்.

ஒரு நிமிடம் மதுவைப் பார்த்த
கார்த்திக் "ஆமாம்.. அப்படித்தான்..
உங்கள் வீட்டில் மாதிரியே இங்கேயும்
எல்லோரின் சப்போர்ட்டும்
இவளுக்கே.. ஆனால் உன்
அக்காவால் என்னை அவ்வளவு
எளிதில் ஏமாற்ற முடிவதில்லை" என்று
மதுவைக் குத்திப் பேசினான்.
மதுவிற்கு சுரீரென்றது.. கோபமும்
எட்டிப் பார்த்தது.. அவன் சொன்ன
அர்த்தம் அவளுக்குப் புரியாமல்
இல்லை.

"ஆனால் வருண்.. நீ நான் ஏதாவது
பொய் சொன்னால் கூட
நம்பிவிடுவாய். உன் மாமா நான்
உன்மையைச் சொன்னால் கூட நம்ப
மாட்டார்" என்று கூறி தன் கணவனை
ஒரு வெற்றுப் பார்வை பார்த்தாள்..

வருண் அவர்கள் இயல்பாக
பேசுவதாக எண்ணினான்.
கார்த்திக்கிற்கு தான் கோபம்
தலைக்கேறியது.. அச்சமயம்
ஜானகியும் மதுவை அழைக்க மது
உள்ளே சென்று விட்டாள். பின்பு
மூவரும் கிளம்ப நின்ற போது தான்..
மதுவிற்கு மறுபடியும் சோர்ந்து போல
ஆனது. கஷ்டப்பட்டு முகத்தை சிரித்த
படி வைத்து இருந்தாள். அவர்களை
அனுப்பி விட்டு உள்ளே நுழைய
கார்த்திக் மேலே சென்று விட்டான்.
பிறகு மாமியாரிடம் பேசியபடியே
உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு
இருக்க அவரும் சமையல் அறையை
துடைத்துவிட்ட படியே பேசிக் கொண்டு
இருந்தார் மதுவிடம்.

பிறகு சாப்பிட்டு விட்டு மேலே
சென்றவளுக்கு குமட்டல் எடுக்க
பாத்ரூமை நோக்கி ஓடினாள். ஏதோ
சாப்பிட்டது எல்லாம் வெளியே
வந்ததைப் போல இருந்தது மதுவிற்கு.
இந்த மசக்கை தன்னை இப்படி
பாடாய்ப்படுத்துகிறதே என்று
எண்ணினாள் மது. மேலும் இந்த
நேரத்தில் தாங்கிப் பிடிக்க நினைத்தக்
கைகள் நேற்று கன்னத்தை அல்லவா
பதம் பார்த்தது என்று
நினைத்தவளுக்கு துக்கம்
தொண்டையை அடைத்தது.

வெளியே வந்தவள் அப்போது தான்
கார்த்திக் அங்கு இல்லை என்பதை
உணர்ந்தாள்.. பால்கனியில்
பார்த்தால் அங்கும் அவன் இல்லை..
யோசித்துக் கொண்டு இருக்கும்
போதே அறைக்குள் நுழைந்தான்
கார்த்திக்.. "எங்கே போய் இருந்தீங்க"
என்று கேட்க வந்த மது எதுவும்
கேட்கவில்லை காரணம் அவன் முகம்
தாடை எல்லாம் இறுகி இருந்தது.

ஆனால் அவனிடம் இருந்து வீசிய
சிகரெட் நெடியே அவன் மொட்டை
மாடியில் இருந்து வந்து இருக்கிறான்
என்று சொன்னது.

கதவைச் சாத்தி விட்டு வந்தவன்,
மதுவிற்கு முதுகைக் காட்டி
படுத்துவிட்டான். என்ன எப்போது
பார்த்தாலும் காய்கிறான் நம் மேல்..
வருணிடம் நான் சொல்லியதற்குக்
கோபம் என்றால் இவன் பேசியது
மட்டும் நியாயமா என்று மது
நினைத்தாள். பெட்டின் இன்னொரு
பக்கம் உட்கார்ந்து இருந்தவள்
இவனது கோபம் இப்போதைக்கு
குறையாது, பேசாமல் தான்
கருவுற்றிருப்பதைச் சொல்லி
விடலாம் என்று முடிவெடுத்து
"கார்த்திக்" என்று அவன் தோளின்
மீது கை வைத்து அழைத்தாள்.

அவள் அழைத்தவுடன் கோபத்துடன்
பெட்டில் இருந்து இறங்கி எழுந்து
நின்றவன் "என்ன...டெம்ப்ட் பண்ண
ட்ரைப் பண்றையா? இந்த
பொண்ணுங்களுக்கு எல்லாம் இது
ஒரு பழக்கமாப் போச்சு. ஆனால் நான்
அந்த அளவுக்கு மடையன் இல்லை"
என்று கோபத்துடன் அழுத்தமாக
உரைத்து விட்டு பால்கனிக்குச் சென்று
விட்டான்.

மதுதான் அவன் பேசிய
வார்த்தைகளால் உடைந்து விட்டாள்.
"இவனை யார் இப்போது
முந்தானையில் முடிந்து வைக்க
முயற்சி செய்தார்களாம். இவன் சொல்
கேட்கும் படி அனைவரையும் வைத்து
விட்டு... இவனை நான் டெம்ப்ட்
பண்ண ட்ரை பண்றேனாம். எப்படி
எல்லாம் பேசுகிறான் என்று
இதயத்தில் ரத்தம் வழியாத குறையாக
இருந்தது. பால்கனியில் இருந்து
சிகரெட் நெடி வேறு வந்தது. அவள்
இங்கு வந்த தினத்திலிருந்து அவன்
பால்கனியில் சிகரெட் பிடித்ததே
இல்லை.. எப்பாவது
கோவையிலிருந்து பொள்ளாச்சி
வரும் வழியில் பிடிப்பான் அல்லது
வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று
விடுவான். அதுவும் அந்த நெடி
அவளுக்கு எட்டாதவாறு கொஞ்சம்
தள்ளி நின்று பிடிப்பான். ஆனால்
இன்று... விம்மி வெடித்துக் கொண்டு
அழுகை வந்தது மதுவிற்கு. அழும்
சத்தம் கேட்டால் அதற்கும் திட்டுவான்
என்று கண்ணையும் வாயையும் இறுக
மூடினாள். அவன் சிறிது நேரம் கழித்து
உள்ளே வருவது தெரிந்தவுடன்
போர்வையால் காலில் இருந்து தலை
வரை தூங்குவதைப் போல மூடிக்
கொண்டாள்.

அடுத்த நாளிலிருந்து வழக்கம் போல
ஹாஸ்பிடல் சென்று வர
ஆரம்பித்தாள். ஆனால் இருவருக்கும்
இடையே இருக்கும் பேச்சு அடியோடு
நின்றுவிட்டது.
அவன் அப்படிக் கேட்டதில் இருந்து
மதுவிற்கும் அவனுடன் பேசவே
பயமாக இருந்தது. ஏதோ பேச
இஷ்டமும் இல்லாமல் இருந்தது.
காதலையும் காமத்தையும் அவனால்
மட்டுமே உணர்ந்தவளால் அவன்
அப்படிக் கேட்டதில் அவளின்
உள்ளத்தில் வெறுமை பரவியிருந்தது.

இறுகியபடியே இருக்க ஆரம்பித்தாள்
மதுவும்.. காரில் வரும் போது கூட
தலையை வெளியே திருப்பிப்
பார்த்தபடியே வர ஆரம்பித்தாள்.
சரியாகி விடும் என்று நினைத்த ஜானகிக்கு மகன் மருமகள் இப்படி
இருப்பது சரியாகப்படவில்லை.

சில் வண்டாய் மருமகள் அவனையே
வீட்டிற்குள் சுற்றி வந்ததும்.. மகனும்
மாலை வந்தவுடன் ஏதாவது ஒரு
சாக்கு சொல்லி சமையல் மேடையில்
உட்கார்ந்து கொண்டு சமையல்
செய்பவளிடம் வம்பு இழுத்துக்
கொண்டிருந்ததும்.. ஆனால் இப்போது
ஆளுக்கு ஒரு திசையில் முகத்தைத்
திருப்பி வைத்திருப்பதும் அவருக்குக்
கஷ்டமாக இருந்தது. இந்த
விஷயத்தில் கணவன் சொன்னதைப்
போல மூக்கை நுழைக்கவும்
அவருக்கு ஜானகிக்குப்
பிடிக்கவில்லை.. ஆனால் அப்படியே
விடவும் மனது வரவில்லை.

மேலும் சிரித்து சிரித்து பேசும்
மருமகள் கூட இப்போது முகம் இறுகி
இருப்பதைக் கண்டவருக்கு
வேதனையாகவும் பயமாகவும்
இருந்தது. ஏதாவது செய்ய வேண்டும்
என்று முடிவு எடுத்தவர் கணவரிடம்
அன்று இரவு உறங்கச் செல்லும் முன்
தன் மனதில் ஓடிக் கொண்டு
இருந்ததைச் சொன்னார்.

"நானும் கவனித்தேன் ஜானகி..
உன்னிடம் பேச வேண்டும் என்று கூட
நினைத்தேன். நம் கார்த்திக் தான்
பிடிவாதம் என்றால் மதுவும் அவனுக்கு
மேல் பிடிவாதமாகத் தெரிகிறாள்.."
என்றார் தன் மூக்குக் கண்ணாடியைக்
கழட்டி வைத்தபடி பேசினார்.

வேலுமணி சொன்னதையும்
ஜானகியால் மறுக்க முடியவில்லை.
மதுவும் பிடிவாதம் பிடிக்கும் பெண்
தான்.. "இப்போது என்னங்க
பண்ணலாம்.." என்று யோசனையுடன் கேட்டார் ஜானகி.

"நாளை மாலை நியாபகப் படுத்து..
சொல்லுகிறேன்" என்று
படுத்துவிட்டார். ஜானகியும் 'காமாட்சி
அம்மா நீதான் துணை இருக்கனும்'
என்று கடவுளின் மீது பாரத்தைப்
போட்டு படுத்து விட்டார்.

வேலுமணியும் ஒரு முடிவை எடுத்தார்.

அது இருவருக்கும் சாதகமாக
அமையுமா?
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-17

அடுத்த நாள் தனது ட்யூட்டியை
முடித்துக் கொண்டு மது கார்த்திக்
அலுவலகம் புறப்பட்டாள். வழக்கமாக
அலுவலகம் சென்றால் அவனைப்
பார்த்து விட்டுத் தான் போய் அவனது
தனி அறையில் உட்காருவாள்..
அல்லது அவன் கொஞ்சம் ப்ரியாக
இருந்தால் அவன் ஆபிஸ் அறையில்
உள்ள நாற்காலியிலேயே
உட்கார்ந்தபடி பேசிச் சிரித்தபடி
அவனுடன் நேரத்தைப் போக்குவாள்.

ஆனால் மனஸ்தாபம் வந்ததில்
இருந்து அலுவலகம் நுழைந்தவுடன்
நேராக தனி அறைக்குள் சென்று
நேரத்தை கடத்த ஆரம்பித்தாள்.
அன்றும் அப்படி உட்கார்ந்தபடி ஏதோ
புத்தகத்தைக் கன்னத்தில் கை
வைத்தபடி திருப்பிக் கொண்டு
இருந்தாள். ஆனால் நினைப்பு
எல்லாம் தன்னவனைச் சுற்றியே
திரிந்தது அவளுக்கு.

உள்ளே வந்தவன் ஏதோ அறிவிப்புப்
போல "கிளம்பலாம்" என்று மட்டும்
சென்று விட்டான்.. இதுவும் கடந்த
நான்கு நாட்களாக நடந்து வர ஒன்று
தான். இந்த மாதிரி விஷயங்களுக்கு
மட்டும் பேசும் அவன் மத்ததுக்கு வாய்
திறப்பதில்லை.

மது வந்து காரில் அமர கார்த்திக்
காரை எடுத்தான். மதுவும் சோர்வால்
கண்களை மூடி சீட்டின் மேல்
தலையைச் சாய்த்தாள். அவளின்
முகம் ஒளி இழந்துக் காணப்பட்டதைக்
கார்த்திக்கும் கண்டான். ஏனோ அன்று
கோபத்தில் சற்று அதிகமாகப்
பேசிவிட்டோமோ என்று மனம்
அவனுக்கும் உறுத்தியது.

அன்று அவன் அவளைத் திட்டிவிட்டு
பால்கனிக்குச் செல்ல அவன் மனமோ
"ஏன் நீ அவளிடம் குழைந்தது
இல்லையா? அவளிடம் மயங்கிக்
கிடந்தது நினைவு இல்லையா?" என்று
அவனையும் மீறி கேட்க தன் மேலேயே
அவனிற்கு கோபம் வந்தது
உண்மைதான். அவனிற்கும் தெரியும்
அவள் வேறு எதற்கோ அழைத்தாள்
என்று.

"ஆமாம் இவள் நடந்து கொண்டது
மட்டும் நியாயமா.. கல்யாண
ஆல்பத்தை எடுத்து வந்து ஏன்டா
இந்தக் கல்யாணம் நடந்தது என்பது
போல 'நொங்' என்று அவள் தம்பி
கையில் வைத்து விட்டுப் போகிறாள்..
அப்புறம் நியாயமாகப் பேசிகிறோம்
என்று எதிர்ப் பேச்சு வேறு" என்று
எண்ணினான். ஆனால் மது உடல்
சோர்வில் வேதனையிலும்
இருந்ததால் அப்படி அவன்
கண்களுக்குத் தெரிந்தது என்பது
அவன் அறிவுக்கு எட்டவில்லை.

கணவன் காரை நிறுத்த அதற்குள்
பொள்ளாச்சி வந்து விட்டதா என்று
மது தன் கண்களைப் பிரித்தாள்.
கண்களை மீண்டும் மூடித் திறந்தவள்
அது ஏதோ கார் பார்க்கிங் என்று
அறிந்து கொண்டாள். அன்று அவன்
கூட்டி வந்த அதே ஷாப்பிங் மால்.
கார்த்திக் இறங்க அவளும் இறங்கிக்
கொண்டாள்.. ஏன் என்ன என்று கூட
அவளிற்குக் கேட்க இஷ்டமில்லை..
அவனுடனேயே சற்று இரண்டு மீட்டர்
தள்ளி நடந்து வந்தாள்.

எதற்கு வீண் வம்பு? தெரியாமல்
பக்கத்தில் போனால் கூட அன்று
போல எதாவது சொல்லி விடுவான் என்று மதுவின் மூளை சொன்னது
உண்மை தான்.

மேலே சென்று மதுவை ஃபுட்
கோர்ட்டில் அமரச் சொல்லிவிட்டு
எதிரே இருந்த ஒரு கடையின் உள்ளே
சென்றான். அவன் போன பின்பு மது
கண்களைச் சுழலவிட்டாள்.. தனியாக
உட்கார்ந்து இருந்தது வேறு போர்
அடித்தது.

அந்தக் கடையையே பார்த்துக்
கொண்டு இருந்தாள். அங்கு கார்த்திக்
யாருடனோ பேசிக் கொண்டு
இருந்தது மதுவிற்குத் தெரிந்தது.
அங்கு அவர்கள் ஏதோ சொல்வதும்
கார்த்திக் விடாப்பிடியாக ஏதோ
மறுத்துச் சொல்லிக் கொண்டு
இருப்பதும் மதுவிற்கு பார்க்கும்
போதே ஏதோ தொழில் விஷயம் என்று
புரிந்தது.

மது அங்கு பார்த்துக் கொண்டு இருக்க
ஏதோ வந்து மதுவின் கால்களைத்
தொட மது விருட்டெனத் திரும்பினாள்.
அங்கு ஒரு குழந்தை அவள்
கால்களைப் பிடித்து அழுது கொண்டு
இருந்தது. யார் இந்தக் குழந்தை? என்று யோசித்தவள் இரண்டு வயது
தான் இருக்கும் என்று கணித்தாள்.
அக்குழந்தையை அள்ளிக் கையில்
எடுத்து தன் மடியில் அமர வைத்தவள்
சுற்றி முற்றிப் பார்க்க மதுவிற்கு யார்
குழந்தை என்றுத் தெரியவில்லை.
அப்படி யாரும் குழந்தையைத்
தேடுவது போல மதுவின்
கண்களுக்குச் சிக்கவில்லை..
குழந்தை அழ எழுந்து நின்றவள்
குழந்தைக்குத் தட்டிக் கொடுத்து
சமாதானம் செய்தாள்.

"பாப்பா யார் நீங்க? எங்க போகனும்?"
என்று குழந்தையிடம் மெதுவாக
வினவினாள். குழந்தை அழுது
கொண்டே "ம்மா.... காணா..." என்று
மழலையில் இரு கைகளையும் விரித்த
படிச் சொன்னது.

"குழந்தையை விட்டுவிட்டு எங்கே
போய்த் தொலைந்தாள்" என்று
அக்குழந்தையின் தாயைத் மனதில்
திட்டிக் கொண்டே குழந்தையை
வைத்தபடி மது நின்றாள்.

அதற்குள் கார்த்திக் அந்தக் கடையில்
இருந்து வெளியே வந்தான். முகம்
எண்ணையில் விழுந்த எள்ளைப்
போன்று வெடித்துக் கொண்டு
இருந்தது மதுவின் கண்களிலும்
பட்டது. மதுவைத் தேடி வந்தவன்
மதுவின் கையில் குழந்தை
இருப்பதைப் பார்த்து புருவத்தை
நெறித்தப்படி வந்தான். அருகில்
வந்தவன் "யார் குழந்தை?" என்று
மதுவிடம் வினவினான்.

"தெரியவில்லை" என்ற மது
குழந்தையைப் பற்றி கார்த்திக்கிடம்
சொன்னாள். குழந்தை மீண்டும் அழ
ஆரம்பிக்க குழந்தையை மதுவிடம்
இருந்து வாங்கியவன் தன் பங்கிற்கு
அவனும் சமாதானம் செய்தான்.
அவனும் சுற்றி முற்றிப் பார்த்தான்.
அவன் கண்களுக்கும் எவரும்
குழந்தையைத் தேடுவது போலத்
தட்டுப்படவில்லை.

கண்களைச் சழலவிட்ட படி
குழந்தையின் தாயைத் தேடிய மது
வலது பக்கம் ஒரு ஆளுயரக்
கண்ணாடியைப் பார்த்து ஒரு நிமிடம்
அப்படியே கண்களை அகற்றாமல்
நின்று விட்டாள். அவளும்
கார்த்திக்கும் அவன் கையில் ஒரு
குழந்தையுடன் நின்றதைக்
கண்டவளுக்கு தன் வயிற்றில்
வளரும் குழந்தையை கார்த்திக்
இப்படித்தானே தூக்கி
வைத்திருப்பான் என்ற எண்ணம்
தோன்றித் தன்னை அறியாமல்
புன்னகை பூத்தது. கண்ணாடியை ஒரு
நிமிடம் பார்த்து தன்னை மறந்து
ரசித்தவள் அவன் கண்ணாடிப் பக்கம்
திரும்ப சட்டென்று முகத்தை மாற்றி
விட்டாள் மது.

"தாரா..." என்று எங்கிருந்ததோ வந்தக்
குரலில் இருவரும் திரும்பினர். ஒரு
பெண்மணி இவர்களை நோக்கி
அரக்கப் பரக்க ஓடி வந்தார். அந்தப்
பெண்மணியை நோக்கி மது முன்னே
சென்றவள் கார்த்திக் நகராததைக்
கவனித்தாள்.

கார்த்திக் வராததைக் கவனித்தவள்
திரும்பிப் பார்க்க அவன் முகத்தில்
அதிர்ச்சி... தயக்கம் என எல்லாம்
தெரிந்தது. அந்தப் பெண்ணும்
எதையும் கவனிக்காமல் மது அருகில்
வந்தவள், கார்த்திக்கின் முகம் கண்டு
அப்படியே நின்று விட்டாள்.

இருவரையும் மாறி மாறிப் பார்த்த
மதுவிற்கு ஏதோ புரிந்தது போல்
இருந்தது. "கார்த்திக் எப்படி
இருக்கீங்க" என்று கேட்டவளின் குரல்
காற்றோடு கலந்தது. சுமார் நான்கு
வருடங்களுக்குப் பிறகு அவளைப்
பார்க்கிறான் கார்த்திக்.

"நல்லா இருக்கேன் சுஜி" என்று
குழந்தையை அவள் கையில் தந்தான்.
மதுவிற்கு உறுதியாகி விட்டது.
மதுவிற்கு அவ்விடத்தில் இருந்து
நகர்ந்து விடலாம் என்று இருந்தது.
ஆனால் ஏதோ ஒன்று அவளைத்
தடுத்து அவளை அங்கேயே நிற்க
வைத்தது. மதுவைப் பார்த்த சுஜி
"இது உங்கள் மனைவியா?" என்று
கேட்க கார்த்திக் ஆம் என்று தலை
அசைத்தான்.

"ஹாய் ஐம் சுஜி.. கார்த்திக்கோட
காலேஜ் மேட்" என்று கையை
நீட்டினாள் மதுவிடம். மதுவிற்கு தான்
மனதில் "ஓஓ... பிரண்டா?" என்று
நக்கலானக் கேள்வி எழுந்தது.

"ஹாய் ஐம் மது" என்று சிறிதாய் ஒரு
புன்னகை மட்டும் சிந்தினாள் மது.
பிறகு குழந்தையைப் பற்றிப் பேசினர்.

"நான் தாராவைக் கீழே இறக்கி
விட்டுவிட்டு.. சேல்ஸ்மேன் தந்த
இரண்டு பைகளையும் வாங்கிவிட்டு
திருப்புவதற்குள் காணாமல் போய்
விட்டாள். ஒரு நிமிடம் உயிரே போய்
விட்டது. ரொம்ப தாங்க்ஸ்" என்றாள்
இருவரையும் பார்த்து.

"ஓகே... நாங்க கிளம்பறோம்.. டைம்
ஆச்சு" என்று மதுவின் கரங்களைக்
கார்த்திக் பற்றி அவளை பிடித்துக்
கொண்டு நகர மதுவும் கால் போன
போக்கில் அவனுடன் நடந்தாள்.

மதுவிற்கு என்னவோ போல
இருந்தது. "பொறாமையா?" என்று
தனக்குத்தானே கேட்டாள்.

இன்னொருவனின் மனைவி
என்றாலும் அவள் கார்த்திக்கின்
முன்னால் காதலி என்று
நினைக்கையிலேயே மதுவிற்கு
கொஞ்சம் வயிறு எரிந்தது
உண்மைதான். பேசாமல் வந்து
அவனுடன் லிப்டிற்குள் நின்றாள்.
அவன் கை அப்போதும் தன் கையை
பிடித்து இருப்பதை உணர்ந்தவள்
எரிச்சலுடன் சட்டென்று தன் கையை
உருவிக் கொண்டாள். ஏதோ
யோசனையில் இருந்தவன் மது
கையை உருவியதை உணர்ந்து
அவளை நோக்க மதுவின் முகத்தில்
எள்ளும் கொள்ளும் வெடிப்பதை
உணர்ந்தான். ஏனோ தன்னை
அறியாமல் அவளின் செய்கையில்
சிரிப்பு வந்தது அவனுக்கு.

லிப்ட் நின்றுதும் காரை நோக்கி
நடந்தார்கள் இருவரும். காரில்
அமர்ந்தவன் "அது யார் என்று
விளக்கம் வேண்டுமா ?" என்று
நக்கலாக வினவினான்.

"எனக்கு கண்டவர்களைப் பற்றித்
தெரிந்து கொள்ள எந்த அவசியமும்
இல்லை" என்றவள் "மேலும் அதைக்
கேட்டு எனக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச
நிம்மதியையும் கெடுக்க விருப்பம்
இல்லை" என்று தன் நகத்தைப்
பார்த்தபடியே கூறினாள் மது.

"இப்போது உன் நிம்மதிக்கு என்ன
குறைவு வந்தது" என்று கேட்க வந்த
நாவை அடக்கினான் கார்த்திக்.
அவனுக்கே தெரியும் அவன் அவளை
காயப்படுத்தியது. அதனால் எதுவும்
பேசாமல் மதுவை முறைத்துவிட்டுக்
காரை எடுத்தான்.

கொஞ்ச நேரம் கழித்து
தொண்டையை செறுமியவன்
"மிதுனாவிடம் பேசினாயா? எப்படி
இருக்காளாம்? என்று கார்த்திக் கேட்க
மது 'உச்' கொட்டிவிட்டு வெளியே
பார்த்தபடியே வந்தாள்.

ஏற்கனவே மூட் அவுட்டில்
இருந்தவளுக்கு மிதுனாவைப் பற்றிக் கேட்டது பற்றிக் கொண்டு வந்தது..
"இவன் வேறு தெரியாத விஷயத்தைக்
கேட்டு வெறுப்பேற்றுகிறான்" என்று
மனதுக்குள் புகைந்தாள்.

"சரி அதைவிடு.. இப்போதெல்லாம்
சரியாக சாப்பிடுவதில்லை போல..
சற்று மெலிந்தும் தெரிகிறாய்.
சென்னையில் இருந்து வந்த போதே
அப்படித் தான் தெரிந்தாய்.. ஏன்
சரியாகப் சாப்பிடுவதில்லை?" என்று
குறையாகக் கேட்டான்.

"........"

பொறுமை இழந்த கார்த்திக் காரை
ஓட்டியபடியே அவளைத் தன் புறம்
திருப்பினான். "நான் கேட்டால்
எனக்கு பதில் வர வேண்டும் மது"
என்றான் சற்றுக் கோபமாக.

மதுவிற்கு அழுகை வந்துவிடும் போல
இருந்தது. எப்போ பார்த்தாலும்
காய்கிறானே என்று நினைத்தாள்.
"சுஜியைப் பார்த்து கார்த்திக்
கொடுத்த ரியாக்ஷனையே
நினைத்துக் கொண்டு வந்தாள்..
ஒருவேளை அந்தப் பழைய காதல் இன்னும் அவனுள் இருக்கிறதோ"
என்று தன்னைத்தானே போட்டுக்
குழப்பியபடி இருந்தவளைத் தான்,
கார்த்திக் மிதுனாவைப் பற்றிக்
கேட்டது.

ஏற்கனவே இந்த சிந்தனையில்
மனதை அலக்கடித்துக் கொண்டு
இருந்தவள், அவன் கேட்ட
கேள்விகளைக் காதில் சரியாக
வாங்கக் கூட இல்லை.. அதனால்தான்
அமைதியாகவே இருந்தாள் மது..
அவன் இப்போது அதட்டவும் எல்லாம்
சேர்ந்து அவளை வாட்டி எடுத்தது.

மது அவனை நிமிர்ந்து பார்க்காமல்
அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.
காரை நிறுத்தியவன் "இப்படி வாயை
மூடிக் கொண்டு இருந்தாள் என்ன
அர்த்தம்" என்று அதட்ட
"ஒன்றுமில்லை" என்று மட்டும்
அவளிடம் இருந்து பதில் வர அவளை
விட்டுவிட்டு காரை வெடுக்கென்று
எடுத்தான்.

மதுதான் அழுகையை அடக்கியபடி
மறுபடியும் வெளியே பார்த்துக்
கொண்டே வந்தாள். எப்போது நீ
அப்பா ஆகிவிட்டாய் என்று சொல்லப்
போகிறேனோ என்று மதுவின் மனம்
மிகவும் ஏங்கியது.

இருவரும் மௌனமாகவே வீடு வந்து
சேர்ந்தனர். வீட்டின் உள்ளே நுழைந்த
இருவரும் தங்கள் அறைக்குச் சென்று
உடையை மாற்றி கீழே வந்தனர்.
அவர்கள் கீழே வரவும் ஜானகி
இருவருக்கும் காஃபி எடுத்து வரவும்
சரியாக இருந்தது.

இருவரும் நான் யாரோ நீ யாரோ
என்பது போல உட்கார்ந்திருந்தனர்.
வேலுமணி வர அவருக்கும்
காஃபியைக் கலந்து வந்து
கொடுத்தார் ஜானகி.

"கார்த்திக் அந்த ப்ராஜெக்ட்
வேலையை ஆரம்பித்து விட்டாயா?"
என்று ஆரம்பித்தார். "இல்லை அப்பா
வர திங்கள் அன்று தான்
ஆரம்பிப்பேன்" என்று காஃபியைப்
பருகியபடிச் சொன்னான்.

"அப்படியாப்பா.. சரி அப்போது இந்த
சனி ஞாயிறு நம் வால்பாறை
எஸ்டேட்டிற்குச் சென்று
கணக்குகளைப் பார்த்துவிட்டு வா"
என்றார் வேலுமணி.

மதுவும் காதில் கேட்டுக் கொண்டு
தான் இருந்தாள். அவர்
சொன்னவுடனே கணவனைத்
திரும்பிப் பார்த்தவளுக்கு அவனும்
அவளைத் தான் தன் தந்தை
சொன்னவுடனே பார்த்தான் என்பது
தெரிந்தது. இருவருக்குமே அவன்
சென்னை செல்லும் முன் இருவரும்
பால்கனியில் நின்று பேசியதும்
அதற்குப் பின் அரங்கேறிய காதல்
ஆட்டங்களும் என எல்லாம் நினைவு
வந்தது. என்னதான் ஊடல் என்றாலும்
இரண்டு நாள் விட்டு இருக்க
வேண்டுமா என்று இருவருக்குமே
மனதில் எழுந்து இம்சித்தது
உண்மைதான்.

இதைக் கவனித்த வேலுமணி
"என்னப்பா பதிலையே காணோம்"
என்று மகனைப் பார்த்துக் கேட்டார்.

"ஒன்னும் இல்லை அப்பா.. வேறு ஒரு
யோசனை.. போய்விட்டு வருகிறேன்
அப்பா.. அங்கு ராசு அண்ணாவிடம்
மட்டும் தகவலைத்
தெரிவித்துவிடுங்கள்" என்று
காஃபியைக் குடித்து முடித்து
காலியானக் கப்பை தன்
அன்னையிடம் தந்தான்.

"சரி கார்த்திக்... அப்படியே நம்
மதுவையும் கூட்டிப் போ.. மதுவும்
இன்னும் நம் எஸ்டேட் எல்லாம்
பார்த்தது இல்லை.. இரண்டு நாள்
இருந்து எல்லாவற்றையும் சுற்றிக்
காண்பித்து விடுப்பா" என்றார்
வேலுமணி தன் கண்ணாடியை அவர்
சட்டைத் துணியில் துடைத்தபடி.

மதுவிற்கும் கார்த்திக்கிற்கும் புரிந்து
விட்டது அவர் ஏதோ ப்ளான்
போடுகிறார் என்று.. கார்த்திக் சரி
என்று சொல்ல வாயெடுக்க "இல்லை
மாமா.. சனி எனக்கு ஹாஸ்பிடல்
இருக்கு.. அவரே இந்த தடவை சென்று
விட்டு வரட்டும்.. நான் அடுத்த தடவை
சென்று வருகிறேன்" என்று
அவசரமாகச் சொன்னாள்.

கார்த்திக்கின் கண்கள் இடுங்கியது.
மதுவை ஒரு வெற்றுப் பார்வை
பார்த்தவன் எதுவும் பேசாமல்
தோளைக் குலுக்கினான்.

"ஏன் மது.. லீவ் போட்டுக்கலாம்ல..
முடியாது என்றால்.. சனி மதியத்திற்கு
மேல் அவ்வளவு patients வர
மாட்டார்கள் என்று சொல்லி
இருக்கிறாயே.. அறை நாள் விடுப்பு
எடுத்துக் கிளம்பி விடு" என்று எதுவும்
தெரியாதது போல் தக்க சமயம்
பார்த்து மருமகளை மேலே பேச
முடியாதபடி செய்தார் ஜானகி. "சரி"
என்று மதுவும் தலை ஆட்டினாள்.

சாப்பிட்டு விட்டு மேலே வந்தவளிடம்
"அவ்வளவு கஷ்டப்பட்டு நீ என்னுடன்
வர வேண்டாம்.. வேண்டுமானால்
நான் அம்மா அப்பாவிடம் சொல்லிக்
கொள்கிறேன்" என்றான் அவன்
விட்டேற்றியாக.

"இந்த மாதிரிக் குத்தல் பேச்சுகளை
எண்ணித் தான் நான் வரவில்லை"
என்று சொல்லத் துடித்த நாவை
அடக்கிய மது, "தானும் போகவில்லை
என்று அவர்களின் முன்னால் சொல்லி
இருக்கக் கூடாது. இவனை
சங்கடத்திற்கு உள்ளாக்குவது
போலத்தானே அது" என்று அவளின்
மனதும் மூளையும் மாறி மாறிப்
பேசி அவனிற்காக வாதடியது.

"என்ன வருகிறாயா.. இல்லையா..
பதிலைச் சொன்னாய் என்றால் நான்
அப்பாவிடம் சொல்லுவதற்கு
வசதியாக இருக்கும்" என்றான்
கார்த்திக்.

"வருகிறேன்" என்று மது சின்னக்
குரலில் சொல்ல தலையை மட்டும்
ஆட்டிப் படுத்துவிட்டான். மதுவும்
பெட்டின் இன்னொரு பக்கத்தில்
சென்று படுத்துவிட்டாள். எப்போது
பார்த்தாலும் சூடான அடுப்பைப் போல
காய்கிறானே. இவனிடம் எப்போது
சொல்லுவது என்று யோசித்தபடியே
படுத்திருந்தாள்.. இந்நேரம்
சொல்லியிருந்தால் இந்த நாட்கள்
எப்படி இருந்திருக்கும் என்று
எண்ணினாள் மது..

"ஏய் மிதுனா.. எங்கே டி போய்த்
தொலைந்தாய்" என்று மிதுனாவையும்
திட்ட மது மறக்கவில்லை. என்னதான்
கோபம் வந்தாலும் அவனை மதுவால்
வெறுக்க முடியவில்லை.. பேசாமல்
தான் இருக்கிறாளே தவிர அவனின்
அருகாமையை மதுவின் மனம்
நினைத்து ஏங்கியது உண்மைதான்.
அவனின் சொற்கள் வேறு மனதை
ஆழமாக மதுவைக் காயப்படுத்தி
இருந்தது. அதனாலேயே அவளை
அவனிடம் இருந்து விலகி இருக்க
வைத்திருந்தது. இரண்டு நாட்கள்
செல்ல வால்பாறை செல்லும் தினம்
வந்தது.

அன்று காலையில் எழுந்தவன் மது
தயார் ஆகிக் கொண்டு இருந்ததைக்
கவனித்தான். "எல்லாம் பாக் பண்ணி
வைத்திரு. நாம் மதியம் இங்கு வர
மாட்டோம். அப்படியே வால்பாறை
சென்று விடுவோம்" என்றுவிட்டுக்
கார்த்திக்கும் தயாரானான்.

மதுவும் தேவையானவற்றை ஒரு பிக்
ஷாப்பர் பாக்கில் எடுத்து வைத்தாள்.
அவனுடைய உடைகளை அவன் வந்த
பிறகு அவன் எடுத்துத் தர அதையும்
எடுத்து அடுக்கினாள் மது.. பின்
இருவரும் கீழே வந்து சாப்பிட்டு விட்டு
வேலுமணியிடமும் ஜானகியிடமும்
சொல்லி விட்டுக் கிளம்பினர்.

"மாலை நீ ஆபிஸ் வர வேண்டாம்..
நானே ஹாஸ்பிடல் வந்து
விடுகிறேன்.. வரும் போது போன்
செய்கிறேன்.. கீழே வந்து விடு" என்று
காலையில் வரும் போது கார்த்திக்
சொன்னதால் அவனிற்காக மது
காத்திருந்தாள்.

பொள்ளாச்சி.. ஆழியாறு என கார்
கடந்து சென்றது. பெண்ணின் இடை
போன்று வளைவுகளோடு இருந்த
அந்த 40 ஹேர்ப்பின் பென்டை
கொண்ட மலைப் பாதை வெகுவாக
மதுவை ஈர்த்தது.. சில வாலிபர்கள்
ரேஸ் பந்தயம் வைத்துக் கொண்டு
போவதும் சில காதலர்கள் பைக்கில்
அணைத்துக் கொஞ்சிக் கொண்டு
போவதும் மதுவின் கண்களில் பட்டது.
வழிஎங்கும் அடர்த்தியான மரங்களும்
எஸ்டேட்களும் பசுமை போர்த்திய
கம்பளமாய் இருக்க குளிர் காற்று
அலையலையாய் வீசியது. மது
முகத்தை மட்டும் வெளியே நீட்டி ஒரு
மூச்சை வெளியிட்டாள். எப்போதோ
சின்ன வயதில் குடும்பத்தோடு வந்த
நியாபகம், ஆனால் ஒன்று கூட
நினைவில்லை மதுவிற்கு.

வால்பாறையில் உள்ள நல்லமுடி வ்யூ
பாயின்ட் பக்கத்தில் தான் எஸ்டேட்டும்
அவர்களது பழைய வீடும் இருந்தது..
காரை நிறுத்தி விட்டு இறங்க அங்கு
வந்த ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க
ஒருவர் இருவரையும் வரவேற்றார்.

"வாங்க தம்பி.. வாங்கமா.." என்றவர்
"நீங்க வரீங்கன்னு அப்பா சொன்னார்.
எல்லாம் க்ளீன் பண்ணிட்டோம்..
சாப்பாடும் நம் வீட்டில் இருந்து
வேளைக்கு வந்து விடும்" என்று
சாவியைக் கார்த்திக் கையில்
கொடுக்க அவரின் குடும்பத்தைப்
பற்றி நலம் விசாரித்தான் கார்த்திக்.

"தம்பி நைட்டிற்கு என்ன வேண்டும்
சாப்பிடுவதற்கு?" என்று வினவினார்
அவர்.

"டிபன் ஏதாவதே கொண்டு
வந்துவிடுங்கள் ராசு அண்ணா"
என்றுவிட்டுத் தன் பைகளை
எடுத்தான் கார்த்திக்.. நான் கொண்டு
வருகிறேன் என்று சொன்ன ராசு
அண்ணாவையும் தடுத்துவிட்டான்.

கார்த்திக்கின் அப்பா வழித் தாத்தா
இருந்த போதே ராசுவின் அப்பா
இவர்களிடம் வேலையில் இருந்தார்..
அதனால் ஒருவருக்கொருவர்
நன்றாகத் தெரியும். மதுவிற்கும்
அவர்கள் கல்யாணத்தன்று வந்த
போது தன் அத்தை சொன்ன விவரம்
நியாபகம் வந்தது. ராசு அண்ணா
நைட் டிபன் கொண்டு வருகிறேன்
என்று கிளம்பி விட்டார்.

கதவைத் திறந்து உள்ளே
சென்றவர்கள் தங்கள் பைகளை
வைத்துவிட்டு வந்தார்கள். வெளியே
மது வர "இந்த ப்ளாஸ்கில் டீ இருக்கு..
சில பிஸ்கட்களும் இருக்கு.. பசித்தால்
எடுத்து சாப்பிடு, நான் எஸ்டேட் வரை
செல்கிறேன்.. கதவைப் பூட்டிக்கொள்..
என்னிடம் இன்னொரு சாவி இருக்கு..
நான் வந்தால் நானே கதவைத்
திறந்து கொள்வேன். இருட்டிய பின்
வெளியே வாராதே" என்றான்
கார்த்திக். மது தலையை மட்டும் ஆட்ட
'வாயைத் திறக்கிறாளா பார்' என்று
பல்லைக் கடித்தவன் எதுவும் பேசாமல்
சென்றுவிட்டான்.

கார்த்திக் சென்ற பின் டீயையும்
பிஸ்கட்களையும் காலி செய்தவள்
வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். மதுவிற்கு
அந்த வீடு மிகவும் பிடித்து இருந்தது. ரொம்ப பெரிதும் இல்லாமல் சிறிதும்
இல்லாமல் தேவையான
அறைகளோடு இருந்தது.

படுக்கை அறையில் இருந்த
ஜன்னலின் வெளியே பார்த்தவளால்
கண்களை எடுக்க முடியவில்லை..
"இயற்கையின் அழகு பரந்து
விரிந்திருக்க.. அழகிய எழிலில்
மதுவின் மனம் சொக்கி நின்றது"

மணி ஆறைத் தொட மதுவிற்கும்
தூக்கம் கண்ணைத் தொட்டது..
கதவைச் சாத்திவிட்டு போய்ப்
படுக்கையில் விழுந்தவள் ஏனோ மது
அரைத் தூக்கத்திலலேயே இருந்தாள்..
ஒரு மணி நேரம் தான் தூங்கி
இருப்பாள் ஏதோ சத்தம் கேட்க
தலையைத் தூக்கிப் பார்த்தவள்
கார்த்திக் அறையில் நடந்து கொண்டு
இருந்தது தெரிந்தது.

பிறகு எழுந்து உட்கார்ந்தவளுக்கு
காலை கீழே வைக்க முடியவில்லை..
நவம்பர் மாதம் என்பதால் குளிர்
ரொம்பவே ஏறி இருந்தது. தரையில்
கார்ப்பெட் மீது காலை வைத்து
எழுந்தவள், தன் பையை எடுத்தாள்..
அப்போது தான் ஸ்வெட்டர் எடுத்து
வரவில்லை என்பது மதுவிற்கு
நினைவு வந்தது.. இப்போ என்ன
செய்வது என்று நின்றவள்.. தன்னைக்
கார்த்திக் கவனிப்பதை உணர்ந்தாள்.
அவனிற்கு இது பழக்கமே என்பதால்
அவன் டி சர்ட்டை மட்டும் மாட்டி
நின்றிருந்தான்.

மணியைப் பார்த்த மது.. 'இந்நேரம்
எல்லாக் கடையும் மூடி இருப்பார்கள்,
அதுவும் இல்லாமல் இங்கு இருந்து
பதினைந்து கிலோ மீட்டர் செல்ல
வேண்டுமே என்று நினைத்தவள்' எதுவும் பேசாமல் பையை மூடி வைத்து
விட்டாள்.

"ஏதையாவது மறந்து விட்டாயா" என்று
கார்த்திக் வினவ, மறுப்பாகத்
தலையை மட்டுமே அசைத்தாள்.
அவள் வாயைத் திறக்காமல் இருப்பது
கார்த்திக்கிற்கு கடுங்கோபத்தை வர
வைத்தாலும்.. அதற்காக அவளை ஏன்
என்று கேட்கவும் அவனிற்கு
விருப்பமில்லை.

தன் மேல் தப்பை வைத்திருக்கும்
உனக்கே இவ்வளவு என்றால்
எனக்கும் அதே அளவு திமிர் எனக்கும்
இருக்கும் என்று மனதில்
நினைத்தவன் பேசாமல் போய்
வெளியில் நின்றான்.. வெளியில்
போர்ட்டிக்கோவின் மரஊஞ்சலில்
சென்று உட்கார்ந்தான்.. மது தான்
தூங்கி இருந்த போது போர்த்திய
பெட்ஷீட்டை சுற்றிய படி வெளியே
வந்து நின்றாள்.

வெளியே வந்து நின்றவள்
கார்த்திக்கைப் பார்த்து விட்டு ஒரு
தூணில் சாய்ந்த படி நின்றாள். ஏனோ
அருகில் சென்று அமர்ந்து அவன்
தோளில் தலை சாய்க்க மதுவின்
மனம் விரும்பியது. ஆனால் அவன்
அன்று சொன்னது நினைவு வர தன்
மனதைக் கடிந்துவிட்டு நின்றாள்.

கார்த்திக்கும் அவள் நிற்பதைப்
பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
அவனுக்கு அவளை அருகில்
அமர்த்திக் கொள்ள வேண்டும் என்பது
போல இருந்தது. ஆனால் வாய்
திறந்து அவளைக் கூப்பிட
அவனிற்கும் இஷ்டமில்லை.
வேண்டும் என்றால் வந்து அமரட்டும்
என்று இருந்துவிட்டான்.

மதுவிற்கு குளிரில் கால்கள்
குடைச்சல் எடுப்பதைப் போல
இருந்தது.. அவன் அருகில் சென்று
உட்கார் என்று உந்திய மனதை அடக்கி
உள்ளே ஹாலிற்குத் திரும்பிவிட்டாள்.

பிறகு ராசு அண்ணா வந்து
அவர்களுக்கு ஆவி பறக்கும் சூட்டில்
டிபனைத் தந்து விட்டுப் போனார்.
உள்ளே கார்த்திக் டிபனோடு
வருவதைக் கண்ட மதுவின் கைகள்
தானாகச் சென்று அந்தக் கூடையை
வாங்கியது.. பிறகு அவன் அமர
அவனிற்கு வைத்துவிட்டு தானும்
தட்டில் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.
இருவருமே ஒரு வார்த்தைக் கூட
பேசிக் கொள்ளவில்லை.. சாப்பிட்டு
முடித்த மது மெதுவாக உள்ளே வந்து
வாமிட் எடுக்காமல் இருக்கவும்
சோர்விற்கும் ரம்யா தந்த ஒரு
மாத்திரையைப் போட்டாள்.
ரம்யாவிடம் ஹில் ஸ்டேஷன்
போகிறோம் என்று இந்தத்
தொந்திரவுக்கு ஒரு மாத்திரையை
வாங்கி வந்திருந்தாள்.

பிறகு மது ஒன்பதறைக்கே படுத்து
விட... கார்த்திக் தனது லாப்டாப்பை
எடுத்துக் கொண்டு பெட்டில் அவள்
அருகில் அமர்ந்து விட்டான். மதுவிற்கு
மாத்திரையினால் கண்கள்
சொக்கினாலும் குளிர் அதிகமாகவே
தெரிந்தது.

போர்வையை கழுத்து வரை இழுத்துப்
போர்த்தியவள் தூக்கத்தில் திரும்பித்
திரும்பிப் படுத்தாள். அவள் திரும்பித்
திரும்பிப் படுத்ததைப் உணர்ந்தவன்
அவள் நடுங்குவதை பார்த்தான்.

லாப்டாப்பை மூடி அருகில் உள்ள
டேபிளில் வைத்தவன் எழுந்து சென்று
ரூம் ஹீட்டரைப் போட்டு விட்டான்.. பின்
ராசு அண்ணா எதற்கும் இருக்கட்டும்
என்று கொடுத்துச் சென்ற
கம்பிளையையும் மதுவின் மேல்
போர்த்தி விட்டான். பின் வந்து
படுத்தவன் அவளைப் பார்த்தபடியே
படுத்திருந்தான். நிலவின் ஒளி
ஜன்னலின் வழியாக அவள் மேல்
விழுந்திருக்கத் தன்னை மறந்து
மதுவைப் பார்த்துக் கொண்டு
இருந்தான்.

மேலும் முகம் சுழித்து மது தூக்கத்தில்
நெளிவதைக் கண்டவனிற்கு, தன்னை
அறியாமல் கைகள் சென்று
போர்வைக்குள் கை நுழைந்து
அவளை அணைத்தது. மதுவும்
தன்னை இளம் சூடாக ஏதோ ஒன்று
அணைக்க, தூக்கத்தில் கணவனின்
மார்பில் தன்னை அறியாமல் தஞ்சம்
அடைந்தாள். தன்னால் கார்த்திக்கின்
கைகள் மதுவின் கூந்தலில் கை
நுழைத்து அவளின் பட்டுப் போன்ற
முடிகளை வருடியது. ஏனோ இத்தனை
நாள் வரை இருந்த கோபம் எல்லாம்
அப்போது மறைந்து அவளை
தன்னுடன் இன்னமும் இறுக்கியவன்
அவளின் நெற்றியில் முத்தத்தைத்
தந்தான். கார்த்திக்கும் அவளின்
அருகாமை தந்த இதத்தில் கண்களை
மூடினான்.

காலையில் கண் முழித்த மது தன்
கணவனின் மார்பில் சாய்ந்து
இருந்ததை உணர்ந்து டக்கென்று
எழுந்து விட்டாள். டக்கென்று
எழுந்ததில் தலை வேறு சுற்ற
ஆரம்பித்து விட்டது.. தன்னிரக்கத்தில்
மதுவின் கண்கள் கண்ணீர் சிந்தியது.
"அன்று உன்னை அப்படித்
திட்டியவனின் மேல் சாய்ந்து உறங்கிக்
கொண்டு இருக்கிறாய்.." என்று
மதுவின் மனம் அவளை சரமாரியாகத்
திட்டியது. எழுந்து சென்று அந்தக்
குளிரிலும் ஹீட்டரை ஆன் செய்து
தலைக்குக் குளித்து வந்து ஜன்னலின்
வெளியே வெறித்தபடி நின்றாள்.
மனம் ஒரு இடத்தில் நிற்காமல்
எதையோ நினைத்து அழுது கொண்டு
இருந்தது.

கண் விழித்த கார்த்திக் மது ஜன்னல்
அருகில் நின்று வெளியே பார்த்தபடி
தனக்கு முதுகைக் காட்டி
நின்றிருந்ததைக் கண்டான். பீட்ரூட்
கலரில் இருந்த ஒரு குர்தா டாப்பும்
வெள்ளை நிற பட்டியாலா பான்டும்
அணிந்து தன் ஈரக் கூந்தலைக் காய
வைப்பதற்காக முழுதாக
விரித்துவிட்டபடி நின்று
இருந்தவளைக் கண்டவனுக்கு அவன்
மனம் அவளை அணைக்கச் சொல்லிக்
கெஞ்சியது.

"எதற்கு இந்தக் குளிரில் தலைக்குக்
குளித்தாய்" என்று கேட்டபடி அவன்
அருகில் செல்ல, அவனது காலடிச்
சத்தத்தை உணர்ந்தவள் அந்த
இடத்தில் இருந்து நகர்ந்து சென்று விட்டாள். ஒரு நிமிடம் கரை புரண்டு
வந்த கோபத்தைக்
கட்டுப்படுத்தியவன் எதுவும் பேசாமல்
குளிக்கச் சென்று விட்டான். அதற்குள்
வந்த ராசு அண்ணா காலைச்
சிற்றுண்டியை மதுவிடம் தந்துவிட்டுச்
சென்றார். கார்த்திக் குளித்துவிட்டு
வர இருவரும் உணவைக் காலி
செய்தனர்..

"இங்குச் சின்னக் கல்லர் அருவி
இருக்கு... 14 கிலோ மீட்டர் தான்.. வா
பார்த்து விட்டு வருவோம்" என்று
அழைத்தான். "இல்லை நீங்கள்
எஸ்டேட் வேலையைப் போய்
பாருங்கள்.." என்ற மதுவை உற்று
நோக்கினான் கார்த்திக்.

"அதை எல்லாம் நேற்றே முடித்து
விட்டேன்.." என்றவன் "அம்மா போன்
பண்ணியிருந்தார்கள்.. உன்னை
அங்கே கூட்டிப் போய் காட்டச்
சொன்னார்கள்" என்று கார்த்திக்
சட்டையில் எதையோ துடைத்தபடியேச்
சொன்னான். தானாகக் கூப்பிட்டது
போல இருக்கக் கூடாது என்று ஜானகி
அம்மாவின் பெயரை அவன் யூஸ்
செய்தது மதுவிற்குத் தெரியவில்லை. அம்மா பெயரைச் சொன்னால்
எப்படியும் வருவாள் என்று நினைத்தே
அவன் சொன்னது. மதுவிற்குத் தான்
எரிகிற நெருப்பில் எண்ணெய்
ஊற்றுவது போல இருந்தது.

"நான் எங்கேயும் வரவில்லை"
என்றாள் எங்கோ பார்த்தபடி..
"உள்ளேயே அடைந்து கிடக்கவா
பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி
என்னோடு வந்தாய்?" என்று சினம்
மிகுந்த குரலில் கேட்டான்.

அவன் அம்மா கூட்டிப் போகச்
சொன்னார்கள் என்ற வரி நியாபகம்
வர "நான் அத்தை மாமாவிற்காகத்
தான் வந்தேன்" என்று வேண்மென்றே
அவனிற்கும் தன் நிலைமை புரிய
வேண்டும் என்று கூறினாள். ஆனால்
அவனோடு இருக்க வேண்டும் என்று
எண்ணித் தான் மது வால்பாறை
கிளம்பியது.

மது சொன்ன பதிலில் "மது..." என்று
கார்த்திக் சத்தமாக அதட்ட மது
அப்படியே வாயை மூடி நின்றாள்.
"நான் ஒன்றும் உன்னைக்
கட்டாயப்படுத்திக் கூட்டி வரவில்லை..
அன்றே வர இஷ்டமில்லை என்றால்
சொல்லிவிடு என்று சொன்னேன்"
என்றான் மதுவை முறைத்தபடி.

"ஆமாம் கட்டாயப்படுத்தவில்லை
தான்.. அதற்காக அத்தை மாமாவை
என்னால் சங்கடப்படுத்த முடியாது..
அதனால் தான் வந்தேன் போதுமா"
என்று மது குரலை உயர்த்திவிட்டு
வெளியே நடக்க முயல, அவளின்
கையைப் பற்றி இழுத்தவன் "அப்படிக்
சகித்துக் கொண்டு என்னோடு நீ
இருக்க வேண்டும் என்று
அவசியமில்லை.. போ இப்போதே
போய் பேக் பண்ணு.. கிளம்பலாம்"
என்று ஆத்திரமாகச் சொன்னான்.

மதுவிற்கு மிகவும் வேதனையாக
இருந்தது. கோபமாகாவும் இருந்தது
அவனிடம் கையை உருவிக்கொண்டு
அறைக்குள் நுழைத்தவள்
எல்லாவற்றையும் எடுத்து பேக் செய்ய
ஆரம்பித்துவிட்டாள். பேக் செய்யச்
செய்ய தலை வேறு விண்ணென்று
வலிக்க ஆரம்பித்தது.

உள்ளே வந்தவன் அவள் எரிச்சலுடன்
எல்லாவற்றையும் அவள் பேக்
செய்வதைக் கண்டு இன்னும்
ஆத்திரம் பொங்கியது. 'எப்போடா
கிளம்பலாம் என்று இருந்திருக்கிறாள்'
என்று மனதில் நினைத்தான்.
பேக் செய்து முடித்தவள் "கிளம்பலாம்"
என்றாள் அங்கு இருந்தவனைப்
பார்த்து.. கொஞ்சம் திமிராகத் தான்
மது சொன்னாள்.

"இந்தத் திமிரெல்லாம் என்னிடம்
காட்டாதே.. அது உன்னைக் காதலித்து
உன் காலடியில் விழத் தயாராக
இருந்த எவனிடமாவது காட்டியிருக்க
வேண்டும்.. என்னிடம் இல்லை"
என்று வெளியே செல்ல
எத்தனித்தவன் தலையை மட்டும்
திருப்பி "நீ தான் என் பின்னாடி
வந்தாய்.. நான் ஒன்றும் உன்
பின்னால் வரவில்லை.. நினைவு
இருக்கட்டும்" என்று மதுவை
வார்த்தைகளால் குத்திக்குதறி விட்டுச்
சென்று விட்டான்.

அவ்வளவு தான் மதுவிற்கு அழுகை
வெடித்தது.. பாத்ரூமிற்குள் புகுந்து
அழுது தீர்த்துவிட்டாள்..
என்னவெல்லாம் சொல்கிறான் பார்..
இவனிடம் முதலில் காதலைச்
சொன்னதால் வந்த வினை தானே
இது என்று நினைத்துக் கதறினாள்
மது. ஏனோ தன்னுள் இருக்க எல்லாம்
வடிவதை மது உணர்ந்தாள். எட்டு வருடங்களாக நினைப்பிலும்
கல்யாணத்திற்குப் பிறகு நான்கு
மாதமாக அவனின் அருகாமையையே
சொர்க்கமாகக் கழித்தவளுக்கு இன்று
அவன் பேச்சு நரகத்தைக் காட்டுவது
போல இருந்தது.

சிறிது நேரம் அப்படியே நின்று
அழுதவள் கண்களைத் துடைத்துக்
கொண்டு வெளியே வர எல்லாப்
பைகளும் காரிற்கு எடுத்துச்
செல்லப்பட்டிருந்தது. முகத்தைக்
கழுவிக் கொண்டு கண்ணீரின்
சுவடுகளை மறைத்தவள், வெளியே
வரக் கார்த்திக் ராசு அண்ணாவிடம்
பேசிக் கொண்டு இருந்தான். அவரிடம்
கார்த்திக் சாவியைக் கொடுக்க
இருவரும் காரில் ஏறி அமர்ந்து
பொள்ளாச்சி புறப்பட்டனர்.

மனிதர்கள் ஒன்று நினைக்க விதி
வேறு அல்லவா நினைக்கிறது?
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-18

வால்பாறை வரும் போது
இயற்கையை ரசித்த மதுவிற்கு
இப்போது அதை எதையும் கண்டு
ரசிக்கும் மனநிலை இல்லை. ஏன்
வந்தோம் என்று இருந்தது.
தன்னிரக்கத்தில் கண்ணீர் சொரிய
கணவன் அறியாமல் முகத்தைத்
திருப்பிக் கண்களைத் துடைத்தாள்.

அழுதழுது வயிற்றில் இருக்கும்
குழந்தையையும் இப்படிக்
கஷ்டப்படுத்துகிறோமே என்று
வேதனையாக இருந்தது மதுவிற்கு.
அதற்காகக் குழந்தையிடம்
மன்னிப்பையும் யாசித்தாள்.

இவனிடம் இப்போது
சொல்லிவிடலாமா என்று
நினைத்தவள் கழுத்தை மட்டும்
திருப்பி அவனைப் பார்த்தாள்.
அவனோ அவள் தன்னைப் பார்ப்பது
தெரிந்தும் அவளிடம் முகத்தைத்
திருப்பாமல் முகத்தை மேலும்
கடினமாக்கி காரை ஓட்டினான். இப்படி
முகத்தைக் கூடப் பார்க்க
மறுப்பவனிடம் எப்படிச் சொல்ல
என்று நினைத்தாள் மதுமிதா.

ஏன் கார்த்திக் இப்படிப் பண்றீங்க?
எந்த அளவு காதலைக் காண்பித்து
உணர வைத்தீர்களோ அந்த அளவுக்கு
வெறுப்பையும் காட்டுகிறீர்கள்.
என்னோட சந்தோஷம் எல்லாம் நீங்க
தான். என்னதான் நீங்க என்னிடம்
கோபம் காட்டினாலும் என்னால்
உங்களைப் போல இருக்க
முடியவில்லை. நீங்கள் நேற்று இரவு
அணைத்ததும் நெற்றியில் தந்த
முத்தமும் கூட கனவு என்று
நினைத்துத் தான் நெருங்கினேன்.
ஆனால் என் மனதின் ஏக்கத்தில்
கனவு எது நிஜம் என்பது கூட மறந்து
உங்களிடம் இருந்திருக்கிறேன்
என்பதைக் காலையில் தான்
உணர்ந்தேன். அப்போது என்னை
உணராமல் தான் நேற்று
அணைத்தீர்களா? என்றுத் தன்
மனதிற்குள்ளே கேட்டபடி நொந்து
கொண்டு இருந்தாள்.

என்னை விட உங்களுக்கு உங்க
பிரண்ட் தான் முக்கியமா கார்த்திக்?
உங்கள் வாழ்க்கையில் நான்
இருக்கும் இடம் அவ்வளவு தானா?
என்னை நீங்கள் நம்ப மறுப்பது நம்
தாம்பத்தியத்தையும் கேவலப்
படுத்துவது ஆகாதா? என்று
பல கேள்விகள் மனதில் எழுந்தது.
ஆனால் எதையும் வாயைத் திறந்து
கேட்காமல் தனக்குள்ளேயே போட்டபடி
வந்தாள்.

ஆனால் அவன் மனதில் உள்ள
காதலையும் உணர்வுகளையும்
அப்போது அவள் அறியவில்லை.

"முருகா இப்படி என்னைத்
தவிக்கவிடத்தான் கல்யாணம் என்ற
ஒன்றை என் வாழ்க்கையில் கொண்டு
வந்தாயா... இதற்கு வாழ்நாள் முழுதும்
தனியாகவே வாழ்ந்திருப்பேனே"
என்று கடவுளின் முன் தன்
மனக்குமுறல் அனைத்தையும்
வைத்தபடி வந்தாள் மது.

பொள்ளாச்சி வந்து வீட்டை அடைய
மணி பண்ணிரெண்டு ஆகிவட்டது..
இந்நேரத்தில் யார் என்று வெளியே
வந்த ஜானகி அப்படியே
நின்றுவிட்டார். காரணம் இரவு
உணவிற்குத் தான் வருவோம் என்று
சொல்லிவிட்டுக் கிளம்பிய இருவரும்
போனவுடன் புயல் வேகத்தில் திரும்பி
வந்தது ஜானகியை யோசனையில்
ஆழ்த்தியது. முக்கியமாக இருவரின்
முகமும் சரியில்லை. கார்த்திக்கின்
முகம் முழுதும் கோபத்தில் எரிந்து
கொண்டு இருந்தது என்றால் மதுவின்
முகத்தில் போகும் போது இருந்த
கொஞ்சநஞ்ச நிம்மதியையும்
துடைத்து எறிந்திருப்பதைக் கண்டார்.
மனைவியின் பின்னால் வந்த
வேலுமணியும் இருவரையும் கண்டு
திகைத்தார்.

கார்த்திக்கும் மதுவும் அங்கு இருவர்
நின்றிருப்பதைப் பார்க்காதது போல
மேலே தங்கள் அறைக்குள் சென்று
புகுந்து கொண்டனர்.

ஜானகிக்கு இதற்கு அவர்களை அங்கு
அனுப்பாமலே இருந்திருக்கலாம்
என்று நினைத்தார். தன் ஆதங்கத்தை
கணவரிடம் காட்டவும் செய்தார்.
"நீங்களும் உங்கள் ஐடியாவும். பெரிய
ப்ளான் போட்ட மாதிரி என்னிடம்
காலரை உயர்த்திக் காட்டி ஜம்பம்
அடித்தீர்கள்.. இப்போது என்ன ஆச்சு
பாருங்கள்" என்று புகைந்தார்.

"நான் என்ன இந்த மாதிரி ஆகும்
என்று நினைத்தா அவர்களை அங்கு
அனுப்பினேன்.. அங்கு சென்றால்
அந்தச் சூழலில் கொஞ்சம் மனம்
விட்டுப் பேசுவார்கள் என்று
நினைத்தேன்" என்றவர் "இந்த அளவு
இருவருக்கும் பிடிவாதம் இருக்கும்
என்று நான் நினைக்கவில்லை" என்று
மனைவியிடம் தலையைச் சொறிந்த
படிச் சொன்னார்.

அவர் பிடிவாதம் என்று சொன்ன
வார்த்தையில் ஜானகிக்கு கோபம்
பொங்கியது.. "பிடிவாதம் என்று
சொல்லுகிறீர்களே.. அது யாரிடம்
இருந்து வந்தது என்று
நினைக்கிறீர்கள்?.. உங்களிடம்
இருந்து தான் வந்து இருக்கிறது..
ஆனால் உங்கள் மகனிற்கு
உங்களைவிட இரண்டு மடங்கு
பிடிவாதம் அதிகம். அவன் காட்டக்
காட்ட மதுவிற்கும் ஏறிவிட்டது" என்று
சத்தம் போட்டவர் "எல்லாம் தலை
விதி.. உங்கள் அம்மாவும் உங்கள்
அப்பாவின் பிடிவாதத்தைப் பற்றி
சொல்லி இருக்கிறார்கள்.. எல்லாம்
வழிவழியாக வருகிறது போல இந்தப்
பரம்பரையில்" என்று தன் கூந்தலைக்
கொண்டைப் போட்டபடி கணவனிடம்
பொரிந்து தள்ளிவிட்டார். அவரும்
மனைவியிடம் பதில் சொல்ல
முடியாமல் உட்கார்ந்திருந்தார்.

மேலே வந்த கார்த்திக்கும் மதுவிற்கும்
என்ன செய்வது என்று தெரியாமல்
ஆளுக்கு ஒரு பக்கம் உட்கார்ந்து
இருந்தனர். மதுவும் கார்த்திக்கும்
நேற்று சென்ற பிறகு ஜானகி தன்
கணவர் வேலமணியை அழைத்து,
அவர்கள் கல்யாண போட்டோ ஒன்று
ப்ரேம் போட்டு வந்ததை எடுத்து
அவர்கள் கட்டிலிற்கு எதிரில் மாட்டி
இருந்தார். அது வேறு இருவரையும் வாட்டி எடுத்தது.

கார்த்திக்கிற்கும் மனதை ஏதோ
சுமை அழுத்துவது போல
உணர்ந்தான். பிறகு மது ஒரு புக்கை
எடுத்துக் கொண்டு உட்கார்ந்து
விட்டாள் . பின்பு பிடிக்காமல் புக்கை
படிக்கவும் முடியாமல் மூடி வைத்துப்
படுத்து விட்டாள்.

கார்த்திக்கும் தன் லேப்டாப்பை
உயிர்ப்பித்தான். ஆனால்
அவனாலும் சரியாக வேலையில்
மூழ்க முடியவில்லை. கார்த்திக்கிற்கும்
தலை வலிப்பது போல இருந்தது.
அப்போது தான் மதியம் இருவரும்
சாப்பிடவில்லை என்ற நினைவே
அவனிற்கு வந்தது. மதுவும்
படுத்திருந்தாளே தவிர தூங்கவில்லை.
அவனிற்கு முதுகுக் காட்டிப் படுத்து
சுவரை வெறித்த படி இருந்தாள்.
ஜானகியும் கோபத்தில் இருவரையும்
அழைக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து தொண்டையைச்
செறுமினான் "க்ஹும்" என்று.
ஆனால் மதுவிடம் சிறு அசைவு கூட
இல்லை. அவளை அப்படியே
சாப்பிடாமல் விடவும் அவனிற்கு மனம்
இல்லை. அவளின் தோளைத்
தொட்டுத் திருப்பியவன் "லன்ஞ் டைம்
ஆச்சு.. கீழே போலாம் வா" என்று
அவளை அழைத்துப் பார்த்தான்.

"இல்லை பசியில்லை" என்று
பழையபடி மீண்டும் திரும்பிவிட்டாள்.
அவளின் முகத்தில் புதியாய் இருந்த
கருவலையமும் உடம்பின் இளைப்பும்
அவனைத் தாக்க ஒரு முடிவு
எடுத்தவனாய்க் கீழே சென்றான்.

கீழே சென்று அன்னையை
அழைத்தவன் "அவள் சாப்பிட
வரமாட்டேன் என்கிறாள்.. நீங்கள்
போய்க் கூப்பிடுங்கள்" என்று சொல்ல
ஜானகிக்குக் கோபம் வந்தது.

இந்த மாதிரிச் சமயத்தை அவர்
விடுவாரா என்ன? மகனின் மேலும்
அனைத்தையும் காட்டினார்.

"அவள் சாப்பிடாமல் இருப்பதற்கு
நானா காரணம்?" என்று கேட்டு
மகனைப் பார்த்தவர் "பின் நான் எப்படி
அழைத்து வர முடியும்பா... நீயாச்சு
உன் பொண்டாட்டியாச்சு" என்று
மகனைக் குத்திய திருப்தியில் அவர்
சென்று சோபாவில் அமர்ந்து
டி.வியைப் போட்டார்.

தன் அன்னையின் மேல் கோபம்
வந்தாலும் மது சாப்பிடாமல் இருப்பதே
அவனின் மூளையில் முன் நின்றது.
மதுவைக் கீழே வரவைக்க
எண்ணியவன் ஒரு ஐடியா தோன்ற
"இப்போது நீங்கள் அவளைக் கூட்டி
வரப்போறீங்களா இல்லையா?"
குரலை உயர்த்திக் கேட்டான் கார்த்திக்.

"என்னடா ரொம்பத்தான்
மிரட்டுகிறாய்.. உன் பொண்டாட்டி
வேண்டுமானால் உன் மிரட்டலுக்கு
அடங்கலாம்.. நான் இல்லை" என்று
பதிலுக்குக் குரலை உயர்த்திவிட்டு
மறுபடியும் டி.வி சேனலை மாற்றியபடி
உட்கார்ந்து விட்டார்.

கார்த்திக்கின் சத்தத்தைக் கேட்ட மது
"இப்போது எதற்கு அவர்களை
அதட்டுகிறான்" என்று எழுந்தவள்
தனது மாமியாரின் குரலையும் அவர்
சொன்னதையும் கேட்டாள். "ஆமாம்
இவர் மகன் அடங்கவில்லை
என்றாலும் அடக்கி விடுவான் என்று
இவருக்குத் தெரியாதா?" என்று
மனதிற்குள் மாமியாரைப் புகைந்தபடி
பெட்டில் உட்கார்ந்திருந்தாள்.

இருவரின் சத்தத்தில் வேலுமணியும்
அறையில் இருந்து வெளியே வந்தார்.
தனது மாமியார் சொன்னதைக்
கேட்டவள் மேல் இருந்து எட்டிப்
பார்த்தாள்.

அதைக் கவனித்தக் கார்த்திக்
மதுவைப் பார்க்காததைப் போல
பாவனை செய்து விட்டு "இப்போ
சாப்பாடு எடுத்து வைக்கப்
போறீங்களா இல்லையா?" என்று
மறுபடியும் இரைந்தான்.

மேலே மருமகள் நிற்பதைப் பார்த்த
ஜானகிக்கு மகனின் முயற்சி
புரிந்துவிட்டது. "நானும் காலையில்
இருந்து சமையல் வேலைகளை
முடித்து விட்டு இப்போது தான்
உட்கார்ந்து இருக்கிறேன்.. வேண்டும்
என்றால் நீயே போட்டுக்கொள்" என்று
ஜானகி சொன்னது தான் தாமதம் மது
வேக நடையுடன் தலைக்கு ஒரு
ரப்பர்பான்ட் போட்ட படியே கீழே
வந்தாள்.

என்னதான் கணவனிடம் சண்டையாக
இருந்தாலும் மாமியாரின் பேச்சை
அவளால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை. அவனின் அம்மா
என்றாலும் அவனிடம் அப்படிப்
பேசியதும் அவளை சுரண்டிவிட்டது.
"நான் இருக்கும் போது இவன் ஏன்
அவரைக் கேட்கிறான். அதான்
அவனின் கைகுள் முடித்து என்னை
வைத்திருக்கிறானே.. கூப்பிடுவதற்கு
என்ன?" என்று கணவனையும்
மாமியாரையும் திட்டியபடியே கீழே
வந்தாள்.

கீழே வந்தவள் ஒரு தட்டை
எடுத்து அவனிற்கு உணவை எடுத்து
வைக்க கையை கழுவி விட்டு வந்த
கார்த்திக் அவளிற்கும் ஒரு தட்டை
எடுத்து வந்து வைத்தான். "எனக்கு
வேண்டாம்.. பசியில்லை" என்றவளை
ஜானிகியின் கரம் வந்து தோளைத்
தொட்டு "நாங்களும் இன்னும்
சாப்பிடவில்லை.. நீயும் உட்காரு மது
எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்"
என்று அவளின் தோளைப் பற்றி
கார்த்திக் அருகில் உட்கார வைத்தார்
ஜானகி.. மதுவிற்கு அப்போது தான்
அவன் அவளைக் கீழே வரவழைத்தது
புரிந்தது. என்ன ஒரு ஒற்றுமை
அம்மாவும் மகனும் என்று
நினைத்தபடியே அமர்ந்தாள்.

சீக்கிரமாகச் சாப்பிட்டு முடித்தவள்
மேலே சென்று அறைக்குள் புகுந்து
கொண்டாள்.. "ஒரு நிமிடம் கோபமாக
இருக்கிறான்.. மற்றொரு நிமிடம்
அப்படியே தணிந்து விடுகிறான்.
இவனை புரிந்து கொள்வது கஷ்டம்"
என்று நினைத்தவள் "ஒரு வேளை
நம்மால் தான் இவனைப் புரிந்து
கொள்ள முடியவில்லையோ" என்று
நினைத்துக் கலக்க முற்றாள்.

காலையில் அவன் சொன்ன
வார்த்தைகள் வேறு அவளைப் போட்டு
வாட்டி வதைத்துக் கொண்டே
இருந்தது. நாம் அவன் பின்னால்
சென்றது தான் தப்பு.. அப்படியே
உள்ளே வைத்திருந்தால் கூட இப்படி
அசிங்கப்பட்டு வேதனை கொண்டு
இருக்க மாட்டோம் என்று
எண்ணினாள். இப்போது மட்டும்
என்ன கடமைக்காகச் சாப்பிட
அழைத்து இருக்கிறான் என்று அவளே
முடிவு செய்தாள் . எப்படி.... எல்லாம்
இப்படி ஆனது என்று யோசித்த போது
மிதுனா என்று வந்து நின்றது..

போனை எடுத்தவள் மிதுனாவிற்கு
சும்மா முயற்சி செய்யலாமே என்று
அவளிற்கு ஒரு போன் போட்டாள்..
அதிசயமான ரிங் போனது.. ஆனால்
கட் செய்து விட்டாள். கோபத்தை
அடக்கிய மது போனை பெட்டில்
பட்டென்று வைத்துவிட்டு புக்கை
எடுத்து உட்கார்ந்துவிட்டாள். சாப்பிட்டு
விட்டுத் தந்தையுடன் பேசிவிட்டு
வந்தக் கார்த்திக் லாப்டாப்பை
உயிர்ப்பித்து உட்கார்ந்தான்.

கரெக்டாக அவர்கள் இருவருக்கும்
நடுவில் இருந்த போன் அடிக்க
கார்த்திக் போனை பார்க்க அதில்
மிதுனா என்ற பெயர் தெரிந்ததைக்
கண்டான். மதுவும் அதே சமயம்
போனைத் தான் பார்த்திருந்தாள்.

போனை மது எடுக்கும் முன் கார்த்திக்
எடுத்து "ஹலோ" என்றான் இறுகிய
குரலில். போனை வைத்துவிட்டாள்.
ஒரு நிமிடம் போனை உடைத்து எறிய
கையைத் தூக்கியவன் அதற்குள்
சென்று கால்லாக்ஸைப் பார்த்தான்.
பின்னர் ஏளனமாக உதட்டை
வளைத்தவன் "இந்தா... புதுமணத்
தம்பதியரிடம் பேச அழைத்திருப்பாய்..
இப்போது போன் செய்திருக்கிறாள்..
போ போ போய் உன்
உயிர்த்தோழியிடம் பேசு.. அவள்
ரொம்ப முக்கியம் அல்லவா.." என்று
அவளின் கையில் போனைத்
திணித்தான்.

வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டது
என்று நினைத்த மது, எதுவும்
பேசாமல் அப்படியே உட்கார்ந்து
இருந்தாள். போனை மறுபடியும் அதே
இடத்தில் வைத்துவிட்டு புத்தகத்தில்
ஆழ்ந்தாள் மது.

'திமிர் பிடித்தவள்.. திட்டுகிறேன்..
சாதரணமாக உட்கார்ந்து புக்
படிக்கிறாள் பார்' என்று
எரிச்சலுற்றான். 'நாம் என்ன
சொன்னாலும் அவன் நம்பப்போவது
இல்லை' என்ற நினைப்பே மதுவை
அப்படி உட்காரச் செய்தது.

சிறிது நேரம் கழித்து "எதற்கு
மிதுனாவிற்கு கூப்பிட்டாய்?" என்று
வினவினான். "சொன்னால் நம்பி
விடுவீர்களாக்கும்? என்று முகத்தைப்
புத்தகத்தில் வைத்தபடியேக் கேட்டாள்.

"சொல்லேன்.. எனக்கும் போர்
அடிக்கிறது.. என்னதான்
சொல்லுகிறாய் என்று பார்க்கிறேன்"
என்று ஏளனமாக சொல்ல மதுவிற்கு
கோபம் வந்துவிட்டது.. "அது
ஒன்றுமில்லை கோயம்பத்தூர்
வருகிறேன் என்றாள் அவள் மாமியார்
வீட்டிற்கு.. அதான் மீட் பண்ணலாம்
என்று அவளைக் கேட்பதற்காகக்
போன் செய்தேன்" என்று சீரியசாக
புக்கைப் படித்தபடிச் சொன்னாள்.

அவன் கோபமாக மதுவை நோக்க
"என்ன நீங்களும் கூட வருகிறீர்களா?"
பார்த்துவிட்டு வருவோம்" என்று
இப்போது கார்த்திக்கை பார்த்துப்
புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

"இனி மிதுனாவிடம் நீ பேசுவதை
என்னால் அனுமதிக்க முடியாது"
என்றான் லாப்டாப்பில் கண்களை
வைத்துக் கண்டிப்பானக் குரலில்.
அவன் சொன்னவுடன் அவனைப்
பார்த்த மது "ஏன் பேசக்கூடாது?"
என்று கையில் இருந்த புக்கை
மூடியபடிக் கேட்டாள்.

"ஏன் என்று உனக்குத் தெரியாதா?"
என்று லாப்டாப்பில் டைப் செய்து
கொண்டே கேட்டவன் "எனக்குப்
பிடிக்கவில்லை" என்றான் ஒற்றை
வார்த்தையாக.

"அதான் ஏன்?" என்று மறுபடியும்
பார்வை மாறாமல் கேட்டாள் மது..
ஆனால் இம்முறை கார்த்திக்கிற்கு
கோபம் வந்துவிட்டது.. "எனக்கு
பிடிக்காததைச் செய்ய வேண்டும்
என்று ஆசை இருந்தால் செய்து
கொள்" என்றவன் "அப்போது உன்
ப்ரண்ட தான் உனக்கு முக்கியம்
இல்லை?" என்று கேள்வியாகப்
பார்த்தான்.

"எனக்கு எல்லாரும் முக்கியம் தான்...
ஆனால் அவள் காதலித்து கல்யாணம்
செய்ததிற்காக அவளை ஒதுக்க
வேண்டுமா? எந்தக் காலத்தில்
இருக்கிறீர்கள் நீங்கள்?" என்று
அவனிடம் பாயந்தாள்.

"இப்போது யார் அவளை ஒதுக்கியது..
கல்யாணம் செய்தது தெரிந்தும் சிவா
அவளையும் அந்தப் பையனையும்
கூப்பிட்டது உனக்குத் தெரியுமா.
அவள் வரவில்லை என்றால் அவளே
பதில் சொல்லி இருக்க வேண்டும்..
போன் கூட பேச மறுத்து
போலீஸ்காரனை விட்டுப் பேசி
இருக்கிறாள்" என்று கடுகடுத்தான்.

மேலும் "சரியான சுயநலவாதி" என்று
பல்லைக் கடித்தான்.

"அவள் எந்தச் சூழ்நிலையில் என்ன
மனநிலையில் இருந்திருப்பாள் என்று
நமக்கு என்ன தெரியும்?" என்று மது
மிதுனாவின் பக்கம் பேச
கார்த்திக்கிற்கு கைமுஷ்டி எல்லாம்
இறுகியது.

"நமக்கு என்று சொல்லாதே.. அவளை
அனுப்பி வைத்த உனக்கு தான் அவள்
என்ன சூழ்நிலை.. மண்ணாங்கட்டி
மனநிலையில் இருந்திருப்பாள் என்று
தெரியும் தான்" என்று எரிச்சலுடன்
சொன்னான்.

"நான் ஒன்றும் அவளை அனுப்பி
வைக்கவில்லை" என்று மது பல்லைக்
கடிக்க "இப்போது தான் நான் பார்க்கப்
போகிறேன் என்று சொன்னாய்?"
என்று சாதரணாமாக அவளைப்
பார்த்துக் கேட்டான்.

மது தான் ஏன் அப்படிச் சொன்னேன்
என்று விளக்க.. "ஆங்.. நம்பிட்டேன்"
என்று கார்த்திக் சொல்ல மது
படுக்கையில் இருந்து எழுந்து பெட்டை
சுற்றி வெளியே செல்லப் பார்த்தாள்..
ஆனால் மது கார்த்திக்கை கடக்கும்
போது கார்த்திக்கின் கரம் அவள்
கரத்தை பலமாகப் பற்றியது.

மது அவனைத் திரும்பிப் பார்க்க
"பதில் சொல்லிவிட்டுப் போ" என்றான்
அவளை நேராகப் பார்த்து. "என்ன
பதில்... முதலில் கையை விடுங்க"
என்று மது கையை உருவப்
பார்த்தாள்.

ஆனால் கார்த்திக் விடாமல் மதுவின்
கையைப் பிடித்து இருந்தான். "ஓ....
நான் தொட்டா உனக்கு அவ்வளவு
கஷ்டமா இருக்கா?" என்று கையைப்
பிடித்தபடியே எழுந்தவன்
வேண்டுமென்றே அருகில் சென்று
ஒரு இன்ச் இடைவெளி விட்டு அவளை
நகர விடாமல் நின்றான். மதுவும்
தன்னவன் அவ்வளவு அருகில்
நிற்கவும் பழைய எண்ணங்கள்
எழுந்து எதுவும் பேச முடியாமல்
நின்றாள். சில நொடிகள் அப்படியே
கடக்க தன்னைச் சமாளித்தவள்
"என்ன பதில் வேண்டும் உங்களுக்கு?"
என்று அவனை முறைத்தபடிக்
கேட்டாள்.

"மிதுனாவிடம் இனிப் பேசுவது பற்றி"
என்று கார்த்திக் சொல்ல "ஆமாம்
இப்போது டெய்லியும் பேசிக்கொண்டு
இருக்கிறேன் பார்.." என்று மது
மனதில் நினைத்தாள். மிதுனாவின்
மீது கோபம் இருந்தாலும் என்ன
நடந்தது என்று தெரியாமல்
மிதுனாவின் மீது முழுக் கோபத்தைக்
காட்டவும் முடியவில்லை. ஏனென்றால்
எல்லாவற்றையும் சொல்லுபவள்
இதை மறைத்திருக்கிறாளே என்று
மதுவின் மனம் மிதுனாவிற்காகவும்
யோசித்தது.

"நீ இவ்வளவு யோசிப்பதைப்
பார்த்தால்" என்று கார்த்திக்
ஆரம்பிக்க "ஆமாம்.. நீங்கள்
நினைப்பது சரிதான்.. நீங்கள் சிவா
அண்ணாவிற்காக இப்படிப் பேசும்
போது நான் ஏன் மிதுனாவிற்காக
யோசிக்கக் கூடாது.." என்று கேட்டாள்.

"நான் சிவா இப்படி காதல் என்று வந்து
நின்றிருந்தால் அவர்கள் வீட்டில் பேசி
இருப்பேன்.. ஒத்துக்கொள்ளவில்லை
என்றால் வெயிட் பண்ண
சொல்லியிருப்பேன்.. உன்னை மாதிரி
அனுப்பி வைத்து இருக்க மாட்டேன்..
சிவா மிதுனாவைப் போல சென்று
இருந்தால் கூட அவனை முதலில்
நீ செய்தது தவறு என்று திட்டிவிட்டுத்
தான் அவனிடம் அடுத்து என்ன என்று
பேசியிருப்பேன்.. உன்னை மாதிரி
எல்லாவற்றிருக்கும் துணை
செல்பவன் என்று நினைத்தாயா
என்னை" என்று கர்ஜித்தவனின்
கண்கள் சிவப்பேறியது.

"நான் என்ன சொன்னாலும் நீங்கள்
என்னை நம்பப் போவது இல்லை
விடுங்கள்.. ஆனால் மிதுனா
என்னிடம் பேசினால் நானும்
பேசுவேன்" என்றாள் அவனிடம்
விடாப்பிடியாக.

"சரி உன் இஷ்டம் போல இரு.. ஆனால்
என் கண் முன் இனி வராதே.." என்று
அடிக்குரலில் அழுத்தமாகச்
சொன்னவன் அவளை விலக்கித்
தள்ளிவிட்டுச் சென்று விட்டான்.
மதுவும் அப்படியே நின்றுவிட்டாள்.

இரவு வந்தவன் மதுவை ஏறிட்டுக்
கூடப் பார்க்கவில்லை.. சாப்பிடும்
போது கூட அவள் எடுத்து வைக்க
வந்த போது தன் அம்மாவிடம் திரும்பி
"அம்மா... அந்த சாம்பாரை இங்கு
நகத்துங்க" என்று அவள் அவனுக்கு
பரிமாற வந்த உணவைத் தவிர்த்தான்.
அவள் எடுத்து வைப்பது கூடப்
பிடிக்காதவனாய் நடந்தான்.

மது தன் மாமியாரின் முன்னால்
முகத்தை மறைக்கச் சிரமப்பட்டாள்.
கண்டுகொண்டால் அவர் வேறு
எதையாவது யோசிப்பார் என்று
நினைத்தாள். இரவு அறைக்குள்
நுழைந்தவனும் எதையும் கண்டு
கொள்ளாமல் லைட்டை அணைத்துப்
படுத்துவிட்டான்.

இரண்டு நாட்கள் இப்படியே செல்ல...
மதுவை நிமிர்ந்து கூடப்
பார்க்கவில்லை கார்த்திக்.. மதுவிற்கு
கஷ்டமாக இருந்தாலும் எதையும்
வெளிக்காட்டமலே இருந்தாள்.

அடுத்த நாள் விடியற்காலை ஐந்தரை
மணிக்குக் கார்த்திக்கின் போன்
அடித்தது.. போன் அடித்ததில் மதுவும்
விழித்துவிட்டடாள்.

போனை எடுத்தப் பார்த்தவன்
டக்கென்று போனை அட்டெண்ட்
செய்து காதில் வைத்து "ஹலோ..
சொல்லுங்க மாமா.. என்ன இந்த
நேரத்தில்..." என்று பேசினான்.
மதுவிற்கு யார் யார் என்று அடித்துக்
கொண்டது மனது. அவன் பேசுவதைப்
பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

"........."

"சரி வரோம் மாமா" என்று போனை
அணைத்தவன்.. கட்டிலை விட்டு
எழுந்து கீழே சென்றான்.. மதுவும்
எழுந்து அவன் பின்னாடியே குழந்தை
அன்னையின் பின்னால் செல்வது
போலச் சென்றாள். மது வருவதைப்
பார்த்தவன் எதுவும் சொல்லவில்லை.
கீழே வந்து தன் பெற்றோர்களின்
அறையைத் தட்டினான். அவர்களும்
இந்த நேரத்தில் என்ன என்று
கதவைத் திறந்தனர்.

தன் அப்பாவைத் தனியே அழைத்துக்
கொண்டு போனவன் "அப்பா மதுவின்
தாத்தா இறந்துவிட்டாராம்.. இப்போது
தான் மதுவின் அப்பா போன் செய்து
சொன்னார்.. ஹார்ட் அட்டாக் என்று
சொன்னார்" என்று பொறுமையாகச்
சொன்னான்.

"என்னப்பா சொல்ற.." என்று தன்
அதிர்ச்சியை முகத்தில் காட்டியவர்
"மதுவிடம் சொல்லிவிட்டாயா" என்று
வினவினார்.

"இன்னும் இல்லைப்பா" என்று தன்
பின்னங்கழுத்தைத் தேய்த்தபடிச்
சொன்னான். அவனிற்குத் தெரியும்
தாத்தா என்றால் அவள் எப்படி
பாசத்தால் உருகுவாள் என்று.
அவளிடம் அதைச் சொல்லும் தைரியம்
அவனிடம் இல்லை.

இருவரும் உள்ளே வர மதுவும்
ஜானகியும் ஏதோ பேசிக் கொண்டு
இருந்தனர். இருவரின் முகமுமே
கேள்வியாய் இவர்களைப் பார்த்தது.
தன் மனைவியின் அருகில் சென்ற
வேலுமணி "ஜானகி நம் மதுவின்...
தாத்தா இறந்துவிட்டாராம்" என்று
பொறுமையாக எடுத்துச் சொல்ல
சொல்ல மது அதிர்ச்சியில்
உறைந்துவிட்டாள். ஒரு நிமிடம்
மூச்சடைக்க நின்றவளால் அசையக்
கூட முடியவில்லை.

ஜானகி அம்மாள் அவளைத் தொட்ட
போது தான் சுயநினைவிற்கு
வந்தவளாய் "அத்தை... தா.. தாத்தா..
தாத்தா" என்று கண்களில்
கண்ணீருடன் அவரின் மேல் சாய்ந்து
விக்கினாள். மேலே சென்ற கார்த்திக்
அவள் எப்படியும் தங்க நேரும் என்று
அவளின் துணிகள் சிலதை பையில்
எடுத்து வந்தான்.

கார்த்திக், மது, வேலுமணி, ஜானகி
ஆகியோரும் கிளம்பி விட்டனர்.
மதுவின் வீட்டை அடைந்ததும், மது
இறங்கி ஓட உள்ளிருந்து வந்த
உமாவும் ராதாவும் மதுவைக் கட்டிக்
கொண்டு அழுதனர்.

பிறகு உள்ளே வந்து தன் பாட்டியைப்
பார்த்த மதுவிற்கு மேலும் அழுகை
வந்தது.. உள்ளே கண்ணாடிப்
பெட்டியில் வைத்திருந்த தாத்தாவைப்
பார்க்கையில் சின்ன வயதில் இருந்து
இப்போது வரை அவருடன் இருந்தது
நினைவு வர மதுவிற்கு வேதனையாக
இருந்தது.. போனவாரம் தன்னைப்
பார்க்க வந்தவர் இன்று மாலையுடன்
படுத்திருப்பதைக் கண்டவளுக்குத்
தாங்கவே முடியவில்லை.

"உன் குழந்தைகளையாவது பார்த்து
விட்டு போய் இருக்கலாம்.. இப்படி
அவசரமாகச் சென்று விட்டாரே" என்று
மதுவைப் பிடித்து பாட்டி அழ...
மதுவிற்கு அன்று வரை இருந்த எல்லா
துயரமும் வெடித்து சத்தம் போட்டு
அழுதுவிட்டாள். மதுவின் சத்தம் கேட்டு
உள்ளே வந்து அனைவரும் அவளை
தேற்றினர். அந்த நேரத்திலும் மதுவின்
கண்ணைத் துடைத்து விட்டுப் பாட்டி
பேத்தியைச் சமாதானம் செய்ய
கையை நெஞ்சின் மேல் வைத்து
அழுதாள் மது.

வருண் தண்ணீர் எடுத்து வந்து தந்து
அக்காவை சமாதானம் செய்தான்.
கார்த்திக்கிற்கு அவள் அப்படி
அழுவதைப் பார்க்கவே முடியவில்லை.
எல்லோரும் அவளைச் சுற்றி கூடி
இருக்க கார்த்திக்கினால் அவளை
நெருங்க முடியவில்லை.. ஏதோ மனது
அளவிலும் தூரம் சென்றது போல
இருந்தது அவனுக்கு. அவளைச்
சமாதானம் செய்துவிட்டு எல்லாரும்
கலைய கார்த்திக்கும் சுந்தரமூர்த்தி
திருமுருகனோடு வெளியே வந்து
நின்றுவிட்டான். அவர்களுடன்
நின்றுவிட்டானே தவிர மனம் எல்லாம்
தன்னவளைச் சுற்றியே இருந்தது.
பிறகு காலை ஆறு மணிக்கு பிறகு
எல்லா வேளைகளையும் தொடங்கினர்.

கார்த்திக் வீட்டு மாப்பிள்ளையாய்
எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று
நடத்தினான். உறவினருக்கு
தெரிவிப்பது, சாப்பாட்டிற்கு சொல்வது
என இறுதிக் காரியத்திற்குத்
தேவையான அனைத்து
ஏற்பாடுகளையும் செய்தான்.

சண்முகம் அய்யாவின் இறுதிக்
காரியங்கள் முடிய, வீட்டில் இருந்த ஒரு
சில உறவினர்களும் ஞாயிறு கருப்பு
முடிந்து கிளம்பிவிட்டனர்.
காரியங்களுக்கு நிலா அரவிந்த்
மற்றும் அரவிந்துடைய பெற்றோர்,
துரைசாமி பார்வதி தம்பதியினர் வந்து
சென்றனர்.

மேலும் ஒரு வாரம் முடிந்து ஜானகி
கிளம்ப "அத்தை நான் இன்னொரு
பத்து நாள் இருந்துட்டு வரேனே" என்று
தன் பெட்டில் அமர்ந்து இருந்தபடியேக்
கேட்ட மருமகளை யோசனையாய்ப்
பார்த்தார் ஜானகி.

"சரி மது.. உன் இஷ்டம் போல செய்.."
என்றவர் மதுவின் அருகில் வந்து
அவளின் தலையை வருடியவர் "பார்
மது கணவன் மனைவி சண்டை
எல்லாம் சகஜம் தான் டா.. அவன்
பிடிவாதக்காரன் என்று எனக்கும்
தெரியும்.. ஆனால் அவன் அளவு
அன்பாகவும் இருக்க முடியாது டா..
அதற்காக அவனைச் சகித்துக்
கொண்டு போ என்று நான்
சொல்லவில்லை. ஆனால் இப்படி நீ
இங்கேயே இருந்தால் இன்னும் தான்
விலகல் வரும்.. கோபமும் வரும்.. அது
எல்லா ஆம்பிளைகளின் இயல்பும் கூட.
அதனால் சீக்கிரம் வந்து விடு.. நீ
இல்லை என்றால் எனக்கு போர்
அடிக்கும்" என்று மருமகளின்
தாடையைப் பிடித்துவிட்டு கீழே
இறங்கி வந்தார்.

அவர்களை கூட்டிப் போக வந்தக்
கார்த்திக் தன் அன்னை மட்டும்
வருவதைக் கண்டு மதுவைப்
பார்த்தான்.

மது அவனின் பார்வையை எற்காது
வேறு எங்கோ பார்த்தபடி நின்று
இருந்தாள். மகனின் பார்வையை
புரிந்து கொண்ட ஜானகி "மது ஒரு
பத்து நாள் இருந்து விட்டு
வருகிறாளாம் கார்த்திக்" என்று
சொல்ல, ஏன் அதை அவள் சொல்ல
மாட்டாளா என்று மனதிற்குள்
நினைத்தவன் "சரி அம்மா" என்று
அனைவரிடமும் சொல்லிவிட்டுத் தன்
அன்னையை அழைத்துக் கொண்டு
கிளம்பிவிட்டான்.

திரும்பி உள்ளே வந்தவள் பாட்டியை
நாடிச் சென்றார். அவரைப் பார்க்கத்
தான் மதுவிற்கு கஷ்டமாக இருந்தது.
பாட்டியுடன் அவ்வளவு
அன்னியோன்யம் ஆக இருப்பார்
தாத்தா என்று நினைத்தாள். அவர்
இல்லாமல் பாட்டி மருகுவது
அனைவரையும் வாட்டியது. அவரிடம்
சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டு
இருந்தாள் மது.

"உனக்கும் மாப்பிள்ளைக்கும் என்ன
பிரச்சனை கண்ணு" என்று பாட்டி
வினவ மதுவிற்கு தூக்கிவாரிப்
போட்டது.

"ஒன்றுமில்லையே பாட்டி" என்று மது
அதிர்வை மறைத்தபடி சொல்ல "ஏன்
மதுமா பொய் சொல்ற.. அன்னிக்கு
வீட்டிற்கு வந்தபோதே உன் தாத்தா
என்னிடம் 'மதுவிற்கும்
கார்த்திக்கிற்கும் சண்டை போல..
இருவரின் முகமும் சரியில்லை' என்று
சொன்னார்.

நான் தான் உன் தாத்தாவிடம் 'ஏதாவது
சின்ன ஊடலாக இருக்கும்..
சரியாகிவிடும்..' என்று சொன்னேன்..
ஆனால் இன்னமும் சரியாகவில்லை
போலயே மது.. நானும் இங்கு வந்த
நாளில் இருந்து பார்த்துக் கொண்டு
தான் இருக்கிறேன்" என்று மதுவின்
முகத்தை உற்று நோக்கிப் பேசினார்.

மது பேசாமல் இருக்க "நீ இங்கு
இருந்தால் அந்தப் பையனிற்கு
இன்னும் தானே கோபம் வரும்..
அதற்கு என்று பாட்டி விரட்டுகிறேன்
என்று நினைக்காதே.. உன் இஷ்டம்
போல இங்கு இரு.. ஆனால் சண்டை
போட்டுவிட்டு இருக்காதே.. அதனால்
அந்தப் பையனிடம் கோபத்தை
வளர்த்துக் கொண்டு இருந்து
விடுவாய்.." என்று கண்டிப்புடன்
பேசியவர் "அந்தப் பையன் தங்கம்
மது.. சீக்கிரம் பேசிக் கொள்ளுங்கள்"
என்று பேசி முடிக்கையில் பாட்டியின்
குரலில் சற்று வருத்தம் இருந்தை மது
உணர்ந்தாள். "சரி பாட்டி" என்று தன்
அறைக்கு வந்தாள்.

அறைக்குள் நுழைந்தவள் "இந்த நல்ல
செய்தியைக் கேட்காமல்
போய்விட்டார்களே தாத்தா" என்று
வயிற்றைத் தடவினாள். கார்த்திக்கை
நினைத்தவள், 'சீக்கிரம் வீட்டுக்கு வா
என்று கூடச் சொல்லவில்லையே..
வீட்டிற்கு போனால் மட்டும் என்
முகத்தில் விழிக்கப் போவது இல்லை'
என்று நினைத்தவளுக்கு முதல்
முறையாக கோபம் வந்தது.

'மாப்பிள்ளை பரவாயில்லை நன்றாக
பழகுகிறார்.. நல்ல பொறுப்பான
பையனும் கூட' என்று தன்
அப்பாவிடன் காரியத்திற்கு வந்தவர்
யாரோ சொன்னது நினைவு வந்தது.
'பெரிய்ய்ய்யய மாப்பிள்ளை' என்று
கையில் இருந்த தலையணையைத்
தூக்கி எறிந்தவளுக்கு கோபமும்
அழுகையும் ஒரு சேர வந்தது.
அவனே இனி வந்து பேசட்டும்
என முடிவெடுத்தவள் அழுகக் கூடாது
என்று முடிவு செய்துவிட்டு
படுக்கையில் சாய்ந்தாள்.

அதேநேரம் கார்த்திக்கும் தன்
அறையில் குறுக்கும் நெடுக்குமாக
நடந்து கொண்டு இருந்தான். 'தவறு
எல்லாம் தன் மேல் வைத்துக்
கொண்டு மூஞ்சியைத் திருப்புகிறாள்
ராங்கி' என்று நினைத்து பல்லைக்
கடித்தான்.

வேலுமணி வேறு கார்த்திக் வீட்டிற்கு
வந்தவுடன் "கார்த்திக் முடிந்தவரை
மதுவை சீக்கிரம் கூட்டி வரப்பார்..
முன்னாடி எப்படியோ ஆனால்
இப்போது அவள் இந்த வீட்டுப் பெண்.
அவள் அழுதவுடன் அவள் வீட்டில்
எப்படி எல்லோரும் எப்படித்
தாங்கினார்கள் என்றுப்
பார்த்தாயல்லவா.. நானும் இந்த
விஷயத்தில் மூக்கை நுழைக்கக்
கூடாது என்று நினைத்து இருந்தேன்..
இப்படியே விட்டால் இருவரும்
எங்களை எல்லாம் மன அழுத்தத்திற்கு
ஆளாக்கிவிடுவீர்கள் போல.. நான் நீ
பிறந்த பிறகு திட்டியதற்கே உன்
அம்மா உன்னைத் தூக்கிக் கொண்டு
அவள் அம்மா வீட்டிற்குச் சென்றாள்..
ஆனால் இந்தக் காலத்தில் நீ கை
நீட்டியும் அவள் அமைதியாக
இருக்கிறாள்.. இந்த மாதிரி
பொண்டாட்டி உனக்குக் கிடைப்பது
கஷ்டம் எங்களுக்கும் இப்படி ஒரு
மருமகள் கிடைப்பதும் கஷ்டம்...
சீக்கிரம் கூட்டி வருகிற வழியைப் பார்"
என்று கூறிவிட்டு அறைக்குள் புகுந்து
விட்டார். யாரும் தன்னை அட்வைஸ்
பண்ணாமல் நன்றாக இருந்தவனுக்கு
இப்போது ஒருவர் அதுவும் தந்தையே
அட்வைஸ் தருவது அவமானமாக
இருந்தது. அந்தக் கோபமும் மதுவின்
மேல் திரும்பியது.

"ஏதோ அன்னிக்குப் பெருசா பேசினா...
நீங்க இல்லாம எப்படி அம்மா வீட்டிற்கு
போறதுன்னு. இன்னிக்கு அங்கேயே
இருந்துட்டு என்னப் பண்றாலாம்.
இவனால நான் அட்வைஸ் வாங்க
வேண்டியாதா இருக்கு" என்றவனுக்கு
கோபம் கோபமாக வர சிகரெட்டை
எடுத்தான். அதுவும் "சிகரெட்
வேணாமே" என்று அவள்
சொல்லுவதை நியாபகத்தைக்
கொடுக்க ஆத்திரத்தில் தூக்கி
அதையும் எறிந்தான்.

'சிவா சிறு வயதில் இருந்தே நண்பன்..
சிவாவின் வீட்டில் கார்த்திக்கை
இன்னொரு மகன் போலவே பார்ப்பர்.
அப்படி இருக்க சிவாவின் குடும்பத்தை
இப்படித் தலை குனிய வைத்து
விட்டாளே இந்தப் பெண் மிதுனா...
இவள் அவளிற்கு சப்போர்ட் வேறு.
என்னிடமும் மறைக்கிறாள்' என்று
ஆத்திரத்தோடு வந்து படுக்கையில்
விழுந்தான்.

"பெரிய்யயயய ஊரில் இல்லாத
மருமகள்.. இவர் வேறு" என்றுத் தன்
தந்தையை நினைத்தான் கார்த்திக்.
அவள் பக்கத்தில் இல்லாதது வேறு
அவனை இம்சித்தது. எப்போதுமே
ஈவ்னிங் வந்தவுடன் ஓயாமல் பேசி
சேட்டை செய்பவள் இன்று முகத்தைக்
கூடப் பார்க்காமல் திருப்பியது
அவனுக்கும் ஏதோ மாதிரி இருந்தது.
பேசாமல் இருந்தாலும் அவள் தூங்கிய
பின்பு அவளை பார்த்துக் கொண்டு
இருந்த பல நாட்களும் நினைவில்
எழுந்தது.

"அவளின் அன்பை மிஞ்சிய
சொர்க்கமும்...
அவளின் பிரிவை மிஞ்சிய
நரகமும்..
இவ்வுலகில் எங்கு தேடினாலும்
கிடைக்காது..."

என்பதை உணர்ந்தான் கார்த்திக்.
அவள் வீடு வந்ததும் அவளே வந்து பேசட்டும் என்று தூங்கினான். ஆனால்
கூடிய விரைவில் அவளிற்காக
அலைந்து தான் கலங்கப் போவதை
அப்போது கார்த்திக் அறியவில்லை.
 

New Threads

Top Bottom