Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL சொப்பனத்தில் வரும் சுந்தரனே! - Tamil Novel

Status
Not open for further replies.

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
அத்தியாயம் - 8

என் கனவில் நிஜமானவனாய்
என்னுள் நுழைந்து....
உன் வதனம் காட்டாமல்
என்னிடம் காதலை சொல்லி....
காதலின் புது உலகிற்கு
அழைத்துச் சென்று....
நித்தமும் உன்னை காதலால்
நினைக்க வைத்தவனே....
என் நிஜத்தில் மட்டும்....
இன்னும் வராமல்
இருப்பது ஏனோ???


"அம்மாடி துமி... காலை டிபன் ரெடியா... இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் புருஷனும் என் புருஷனும் வந்து தையத்தக்கா தையத்தக்கா என்று நாட்டியம் ஆடி விடுவார்கள்... அதுக்கு நாம இடம் கொடுக்க கூடாது... டிபன் ஆச்சா இல்லையா..." என்று கேட்டார் பானுப்பிரியா...

"அதெல்லாம் ரெடி ஆகிடுச்சு அத்தை... காலையில தோசை சட்னி சாம்பார்... கூட பொடியும் இருக்கு... அப்பறம் இடியாப்பம் தேங்காய் பாலும் பண்ணி இருக்கேன்... எல்லாத்தையும் எடுத்து போய் டைனிங் டேபிள் மேல வச்சிட்டு வந்துட்டேன்... போதுமா..." என்று புன்னகையுடன் கேட்டாள் அவரின் மூத்த மருமகள் துமி...

"போதும் மா... வேற எதுவும் வேண்டாம்... ஹ்ம்ம்... மத்தியானம் சமையல் செய்ய தான் பாக்கணும்..." என்று பானு சொல்ல...

துமியோ... "அத்தை அத்தை... எல்லாத்தையும் நீங்க நேற்று இரவே சொல்லிட்டீங்க தானே... எல்லாம் சரியாக தான் நடக்கும்... நீங்க கொஞ்ச நேரம் அமைதியாக இருங்க..." என்று சொன்னாள்...

அதற்குள்...

"பானு... பானு..." என்று கத்திக் கொண்டு இருந்தார் பாரியவேல் நந்தியவர்மன்...

"இதோ... இதோ வரேன் ங்க..." என்று குரல் கொடுத்த படி வந்தார் பானுப்ரியா...

"எதுக்கு இப்படி மூச்சிரைக்க ஓடி வர... பொறுமையாக வந்தால் ஆகாதா..."

"அட... நீங்க தானே என் பேரை இம்புட்டு நேரம் ஏலம் விட கத்திட்டு இருந்தீங்க... அது பொறுக்க முடியாமல் தான் ங்க... நான் அப்படி அவசர அவசரமாக உங்களை தேடி ஓடியாந்தேன்..."

"உனக்கு இந்த பேச்சு மட்டும் உணக்கையாக பேச வரும்..." என்று முறைத்துக் கொண்டே கூறினான் பாரி...

அதை கேட்டு கலுக் என்று சிரித்த பானு... "இப்படி பேசினா தானே ங்க... நான் உங்க எல்லாரையும் பக்குவமாக சமாளிக்க முடியும்... இல்லன்னா என் தலையில் மிளகா அரைத்து விட மாட்டீங்க..." என்று கூறினார்...

அதற்கு முறைத்து பார்த்த பாரியவேல்... "காலை உணவு எல்லாம் செய்து வச்சாச்சா‌.." என்று கேட்க...

"ஹ்ம்ம்... ஆச்சு... வாங்க வந்து சாப்பிடுங்க..." என்று சொல்லிய பானுப்ரியா... அவருக்கு உணவை பரிமாறிக் கொண்டு இருக்க... பாரியவேலும் எதுவும் பேசாமல் உண்டு முடித்தார்...

அவர் சாப்பிட்டு முடித்ததும்... "பானு..."

"சொல்லுங்க..."

"நான் என் சித்தி வீடு வரை போய்ட்டு வரேன்..."

"ஹ்ம்ம்... சரி ங்க... நீங்க போய் வாங்க..." என்று சோர்ந்த குரலில் சொன்னார் பானு...

"எதுக்கு இப்படி விசனப் படற..."

"ப்ச்ச்... பாவம் ங்க அவங்க... ஒத்த ஆளாக இத்தனை வருஷம் தனியாக இருக்காங்க... நாம கூப்பிட்டாலும் இங்க வர மாட்றாங்க... ஹ்ம்ம்... எப்படி இருந்தவங்க இப்போ பாருங்க எப்படி இருக்காங்க..." என்று வருத்தம் நிறைந்த குரலில் சொன்னார் பானுப்ரியா...

"விடு பானு... இப்ப பேசி என்ன ஆக போகுது... நான் போய் அவங்களை பார்த்துட்டு வரேன்..." என்று சொல்லி விட்டு சென்றார் பாரியவேல்...

***********

மலர்மதிக்கு மனதில் இருந்த பயம்... தற்போது வேரூன்றி இருந்தது... தற்சமயம் வீட்டில் யாரும் இல்லை... கணவர் அலுவலகம் சென்று விட்டார்... மகளும் கல்லூரிக்கு சென்று விட்டாள்... அதனால் வீடு வெறிச்சோடி போய் இருந்தனர்...

அவர் மனமோ மீண்டும் மீண்டும் ஜோசியரிடம் போனதை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தது...

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தான் ஜோசியரை பார்க்க சென்றனர்... நம்பகமான பலரிடம் கேட்டு ஆலோசித்து பிறகு தான் நல்ல ஜோசியரிடம் போனார் மலர்...

அந்த இடத்தில் ஜோசியரை பார்க்க இருவரும் காத்துக் கொண்டு இருந்தனர்... அப்போது தான் மதிவாணனுக்கு முக்கியமான கிளையண்ட் வந்து இருப்பதாகவும்... அவர்களை உடனே சந்திக்க வேண்டும் என்றும் அழைப்பு வந்தது... அதை தவிர்க்க முடியாத காரணத்தால் மலரிடம் பக்குவமாக சொல்லி கிளம்பி விட்டார்...

பிறகு... அவரை உள்ளே அழைக்க... மலர்மதியும் உள்ளே சென்றார்...

"வாங்க மா... இப்படி வந்து உட்காருங்க..." என்று அந்த ஜோசியர் சொல்ல... அவரும் அங்கே சென்று அமர்ந்தார்...

"எதுக்காக வந்து இருக்கீங்க... யாருக்கு பார்க்கணும்..." என்று கேட்க...

"எனக்கும் என் குடும்பத்துக்கும் தான் சாமி..." என்று சொல்லி இரண்டு நாட்களாக நடந்த அனைத்தையும் விவரித்து சொன்னார் மலர்மதி...

"எனக்கு இது எல்லாம் ரொம்ப தவறாக தோன்றுத சாமி... இதை பற்றி வீட்டில் பேசினால் யாரும் பெருசாக எடுத்துக் கொள்ள வில்லை... சாதாரணமான விஷயத்தை பெருசு பண்றேன்னு மட்டும் தான் சொல்றாங்க... ஆனால்... என்னால அப்படி நினைக்க முடியல... இந்த எண்ணம் எல்லாம் என் மனசை உறுத்திக் கொண்டே இருக்கிறது சாமி... நான் அதை மாற்ற நினைத்தாலும்... மாற்றிக்க முடியல..." என்று கவலையுடன் சொன்னார் மலர்மதி...

"உங்க வீட்டில் இருப்பவர்கள் எல்லாருடைய ஜாதகத்தையும் கொடுங்க..." என்று சொல்லி அதை வாங்கி கொண்டார் அந்த ஜோசியர்...

ஒரு கால் மணி நேரம் அதை எல்லாம் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டு இருந்தார் அவர்...

"உங்க குடும்பத்துக்கு ஒரு கண்டம் இருக்கு மா..." என்று அழுத்தமாக சொன்னார் ஜோசியர்...

"என்ன சாமி சொல்றீங்க..." என்று துயரத்துடன் கேட்டார் மலர்...

"ம்ம்... ஆமா... கண்டம் தான்... அது உயிரை கூட காவு வாங்கி விடும்... அதே போல உங்க பொண்ணை பெற்ற நீங்க ரெண்டு பேரும் இருக்கும் வரை தான்... உங்க மகளுக்கு பாதுகாப்பு... இல்லன்னா உங்க பொண்ணுடைய வாழ்க்கை கேள்விக்குறி மட்டும் தான்..." என்று கண்களை மூடி நிதானமாக கூறினார்...

இதை கேட்டு வாய் திறக்க முடியாமல் விக்கித்து இருந்தார் மலர்மதி...

"அப்போ எங்களுக்கு ஏதாவது ஆகும்னு சொல்ல வரீங்களா சாமி..." என்று குரல் கம்மி போய் கேட்டார் அவர்...

"என்னால எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாது மா... அதே போல நான் சொல்வது எல்லாம் பொய்யும் கிடையாது... நீங்க வர வெள்ளிக் கிழமைக்குள் உங்களுடைய குலதெய்வம் கோவிலுக்கு போய் ‌அபிகேஷம் பண்ணி... ஆராதனை பண்ணுங்க... உங்க குலசாமி உங்களுக்கு துணை நிற்கும்... நீங்க எதை நினைத்தும் கவலை படாதீங்க... எல்லாம் சரியா தான் நடக்கும் என்று நம்புங்க... இப்ப நீங்க போகலாம்..." என்று பொறுமையாக சொல்லி... அவர்களுடைய ஜாதகத்தை மலரின் கையில் கொடுத்தார் அந்த ஜோதிடர்...

இதை எல்லாம் கேட்டு... மனதில் இனம் புரியாத கவலையில் மூழ்கி போனார் மலர்மதி... அதன் பிறகு எப்படியோ வீடு வந்து சேர்ந்தார்... அவருடைய சிந்தை எதிலும் லயிக்க மறுத்தது... அவர் மனம் முழுவதும் பயம் மட்டுமே நிரம்பி இருந்தது...

மாலை கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் மேகா...

"மலர் மா... மலர் மா..." என்று எப்போதும் கத்துவது போலவே கத்திக் கொண்டு வீட்டுக்குள் வந்தாள் அவள்...

ஆனால்... இன்று தாய் பதிலுக்கு குரல் கொடுத்தால் என்னவென்று யோசித்த படி உள்ளே போனாள்...

அவள் அம்மா ஹாலில் இல்லாததால்... மேகா அவரின் அறைக்கு சென்று பார்க்க... அங்கே மெத்தையில் அமர்ந்த படி சுவரை வெறித்து பார்த்த படி அமர்ந்து இருந்தார் மலர்மதி...

'என்ன ஆச்சு இந்த அம்மாக்கு பித்து பிடிச்ச போல ஒரே இடத்தை பார்த்து உட்கார்ந்து இருக்காங்க...' என்று மனதில் நினைத்த படி... தாயை தோள் தொட்டாள் மலர்க்குழலி...

அவளை பார்த்ததும்... "மேகா மா‌..." என்று சொல்லி அணைத்துக் கொண்டார் மலர்...

"அம்மா... அம்மா... என்ன மா ஆச்சு உனக்கு... எதுக்கு இப்படி எல்லாம் ரியாக்ட் பண்ணிட்டு இருக்க..." என்று பதறி போய் கேட்டாள் மேகா...

மகள் பதறிப் போவதை பார்த்த மலரோ... தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு... மனதினை அமைதிப் படுத்த முயற்சித்தார்...

"நான் நல்லா தான் இருக்கேன் மேகா... ஒன்னுமில்ல..." என்று சொல்லி அவளிடம் இருந்து விலகி நின்றார்...

"ஏன் மா... உடம்பு ஏதாவது முடியலையா என்ன..." என்று சொல்லி தாயின் கழுத்தில் கரம் வைத்து பார்த்தாள் மேகா...

"எனக்கு எதுவும் இல்லை டா... நான் நல்லா தான் இருக்கேன்..." என்று அவர் சொல்ல...

அப்போது தான் தாயின் முகத்தை நன்கு கவனித்து பார்த்தாள் மேகா...

"மலர்... உன் முகம் எல்லாம் வெளுத்து... வீங்கி போன மாதிரி இருக்கு... கண்ணு வேற சிவந்து போய் இருக்கு... நீ எதை நினைச்சாவது அழுதியா மலர்..." என்று தாயின் பெயர் சொல்லியே கோபத்துடன் கேட்டாள் மேகா மலர்க்குழலி...

"இல்ல மா..." என்று மலர் சொல்ல...

"பொய் சொல்லாத மலர்... என் கிட்ட உண்மையை சொல்லு..." என்று குரல் உயர்த்தி கேட்டாள் மேகா...

"அது... அது வந்து மா... நான் வர வழியில் கீழே விழுந்துட்டேன்... அதான் கால் ரொம்ப வலி... என்னால தாங்கவே முடியலை... அதனால் தான் அழுகை வந்துருச்சு..." என்று உண்மையை போல பொய் சொன்னார் மலர்மதி...

"பார்த்து ஒழுங்கா நடக்க மாட்டீயா ம்மா... அப்பா உன் கூட தானே மா வந்தாரு... எப்படி இந்த மாதிரி ஆச்சு..." என்று தாயை கடிந்து கொண்டாள் மேகா...

"அப்பா என்னை விட்டுட்டு ஒரு முக்கியமான கிளையண்ட் வந்து இருக்காங்க ன்னு போய்ட்டாங்க டா... அதான் நானே தனியா வீட்டுக்கு வந்தேன்..." என்று சொல்ல...

"இன்னைக்கு அப்பா வரட்டும்... அவருக்கு ஒரு பெரிய ஸ்பீச்சை பார்சல் பண்றேன்... உங்களை எதுக்கு தனியாக விட்டுட்டு போகணும்... இப்போ பாருங்க... எந்த நிலைமையில் இருக்கீங்க..." என்று கவலையுடன் சொல்லி... அவர் காலை பிடித்துக் கொண்டு எல்லா இடங்களிலும் தொட்டு பார்த்தாள் மலர்க்குழலி...

"அம்மா எங்க வலிக்குது என்று சொல்லுங்க... நான் தைலம் போட்டு விடறேன்... இல்லாட்டி சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்கிறேன்..." என்று மெல்லிய குரலில் சொன்னாள் அவள்...

மகளின் தலையை வருடிக் கொடுத்து... "எனக்கு ஒன்னும் இல்ல பாப்பா... அப்போ வலி கொடுத்தது... இப்ப இதமாக தான் இருக்கு... எனக்கு இப்ப வலி இல்ல மா..." என்று வெளியே வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்து கொண்டு கூறினார் மலர்மதி...

ஆனால்... அவர் மனதிற்குள்... 'சாரி டா குட்டிமா... அம்மா உன் கிட்ட பொய் தான் சொல்லிட்டு இருக்கேன்...' என்று நினைத்துக் கொண்டு வருந்தினார்...

"அம்மா... பரவாயில்லை... நீங்க அப்படியே படுத்துக்கோங்க... நான் உங்களுக்கு தைலம் தேய்த்து விடறேன்..."

"இல்ல மேகா செல்லம்... அதெல்லாம் எதுவும் வேண்டாம்... நீ இப்ப தான் காலேஜில் இருந்து வநது இருக்க... உனக்கு பசிக்கும்... நான் ஏதாவது போய் செய்யறேன்..." என்று சொல்லி மலர் எழுந்துக் கொள்ள... அவர் கையை பிடித்து எழ விடாமல் செய்தாள் மேகா...

"அம்மா எனக்கு அதெல்லாம் எதுவும் தேவை இல்லை... நான் சொல்லுற மாதிரி நீ கேளு... அது போதும்... ஹ்ம்ம்... நீ காலை நீட்டி நல்லா படுத்துக்க..." என்று சொல்லி விட்டு... போய் தைலத்தை எடுத்து வந்து அவர் காலில் தேய்த்து விட்டாள் அவள்...

"அம்மா கண்ணை மூடிக்கோ... நான் தலையிலும் தேய்ச்சு விடறேன்... நீ வேற அழுது இருக்க... உனக்கு தலை வலி வந்தாலும் வரும்... அதான் முன் எச்சரிக்கையாக தேய்த்து விட்டு போறேன்..." என்று சொல்லி விட்டு அவரின் பதிலை எதிர்பார்க்காமல் தேய்த்துக் கொண்டு இருந்தாள் மேகா மலர்க்குழலி...

அது என்னவோ மகளின் கை பட்டதும் தொண்டையை அடைத்து இருந்த துக்கம் எல்லாம் கொஞ்சம் விலகி போய்... அவரை தூக்கம் ஆட்கொண்டது...

பிறகு... அவள் அம்மா தூங்கியதும் வெளியே வந்து... அவளுடைய காலேஜ் ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள் மேகா...

அதற்கிடையில் அவள் தன் தந்தைக்கு அழைக்கவும் தவறவில்லை... ஆனால் அவர் தான் ஃபோனை எடுக்க வில்லை... இன்றைக்கு அவருக்கு திட்டுக் கச்சேரி இருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்டாள் மலர்க்குழலி...

***********

உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே 😍

👇👇👇👇
 

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
அத்தியாயம் - 9

சலசலப்பில்லா என் இனிய வாழ்க்கையில்
காற்றை போல என் மனதில் உள்புகுந்து
என் கண்ணுக்கு அகப்படாமல் இம்சித்து
இந்த காதல் கண்ணாமூச்சி ஏனடா...
என் மனம் கவர்ந்த கண்ணாளா...!!


அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்து உள்ளே வந்தார் மதிவாணன்...

"மலர்... ஒரு காஃபி வேணும்... கொஞ்சம் சீக்கிரம் வா மா..." என்று சொல்லிய படி சோஃபாவில் கண் மூடி உட்கார்ந்தார் அவர்...

கொஞ்ச நேரம் கழித்தும் காஃபி வராமல் இருப்பதால் கண்களை திறந்து பார்க்க... அங்கே கைகளை கட்டி... அவரை முறைத்து பார்த்து இருந்தாள் மேகா..‌.

"குட்டிமா என்ன டா பார்த்துட்டு இருக்க..." என்று புன்னகையுடன் கேட்டார் மதிவாணன்...

"நான் உங்களை பார்த்துட்டு இல்ல... முறைச்சிட்டு இருக்க..." என்று கடுப்புடன் சொன்னாள் மேகா...

"அச்சச்சோ... என்ன ஆச்சு என் தங்கத்துக்கு..."

"இன்னைக்கு காலையில நீங்க எங்க போனிங்க..."

"ஹ்ம்ம்... அம்மா கூட தான் போனேன் மா..."

"ஓஹோ... சரி... இப்போ யார் கூட வந்தீங்க..." என்று மகள் கேட்க... முழித்து பார்த்தார் அவளின் தந்தையானவர்...

"கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க பா..." என்று அழுத்தமாகவே வார்த்தைகள் வந்து விழுந்தன...

'ஆஹா... போச்சு போச்சு... ஏதோ ஒன்னு செய்து வச்சி இருக்கேன் போலயே... இன்னைக்கு நம்ம மகளிடம் இருந்து மண்டகப்படி கன்ஃபார்ம்...' என்று அவரின் உள்மனம் ஓலம் இட்டுக் கொண்டு இருந்தது...

"நான் மட்டும் தானே வந்தேன்..." என்று அவர் சொல்ல...

"அப்போ அம்மா எங்க பா..."

"மலர் அப்பவே வீட்டுக்கு வந்து இருப்பாலே..."

"இல்லயே... அவங்க இன்னும் வீட்டுக்கு வரலையே... நான் தான் எல்லா இடத்திலும் தேடிட்டனே..." என்று அவள் முகத்தை எந்த ஒரு ரியாக்ஷனையும் காட்டாமல் கூற.... மதிவாணன் உண்மையிலேயே பதறி தான் போனார்...

"மேகா மா... என்ன சொல்ற... உங்க அம்மா இன்னும் வீட்டுக்கு வரலயா..."

"வரல ப்பா..."

அவருடைய முகமே மாறி விட்டது... அதை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் நின்றாள் மலர்க்குழலி...

"உண்மையை தான் சொல்றியா... அம்மா இன்னும் கூட வீட்டுக்கு வரலையா..." என்று தவிப்புடன் குரல் கம்மி போய் கேட்டார் மதி...

"ம்ஹூம்... இன்னும் வரல... நீங்க தானே ப்பா அம்மாவை கூட்டிட்டு போனிங்க... அப்போ நீங்க தானே பத்திரமாக கூட்டிட்டு வந்து வீட்டில் விட்டு இருக்கணும்..." என்று கோபத்துடன் அப்பாவிடம் சீறிக் கொண்டு இருந்தாள் மகள்...

"தீடிரென வேலை வந்துருச்சு மா..." என்று மென்று முழுங்கி சொன்னார்...

"உங்களுக்கு அம்மா விட வேலை தான் முக்கியமா பா... அப்போ உங்க வேலைக்காக அம்மாவை தனியா விட்டுட்டு போவீங்க... இப்ப அம்மா வீடு வந்து சேரலையே... என்ன பண்ண போறிங்க..." என்று மேகா கேட்டுக் கொண்டு இருக்கும் போதே....

"மேகா... என்ன டி பேசிட்டு இருக்க... உன் வாயை வச்சிட்டு சும்மா இருக்க மாட்டீயா... அவர் கிட்ட எதுக்கு அப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்க..." என்று மகளை அதட்டினார் மலர்மதி...

"மலர்..." என்று பதட்டத்துடன் மனைவியை மேலிருந்து கீழ் வரை பார்த்தார் மதிவாணன்...

அவரை வருத்தத்துடன் பார்த்தார் மலர்மதி... கணவன் அழைக்கும் போதே அவருக்கு விழிப்பு வந்து விட்டது... ஆனால்... கண்கள் திறக்க மனம் இல்லாமல் அப்படியே படுத்து இருந்தார்... அதற்குள் தான் அவர் பெற்ற குட்டி பிசாசு தந்தையை வறுத்து எடுக்காத குறையாக படுத்திக் கொண்டு இருந்தாள்... அதனால் மனதை கட்டுக்குள் கொண்டு வந்து வெளியே வந்தார்...

"எனக்கு ஒன்னுமில்ல ங்க... இவ தான் என்ன என்னமோ உளறிட்டு இருக்கா... இங்க பாருங்க என்னை... நான் நல்லா தானே இருக்கேன்..." என்று அன்பு கலந்த குரலில் சொல்ல... அப்போது தான் மதிவாணனுக்கு உயிரே வந்தது...

"ம்மா... இப்ப நீங்க எதுக்கு வந்தீங்க... உள்ளேயே இருக்க வேண்டியது தானே... நான் இன்னும் டென்ஷன் பண்ணி இருப்பேன் தானே... அது எப்படி உங்களை அப்பா தனியாக விட்டுட்டு போகலாம்... அப்படி நீங்க போனதால் தான் இவங்க கீழே விழுந்து காலை சுளுக்கிட்டு வீடு வந்து சேர்ந்து இருக்காங்க... இதுல வலி தாங்க முடியலை என்று அழுகை வேற இந்த மலருக்கு... உங்க ரெண்டு பேரையும் என்ன தான் பண்றதுன்னு எனக்கு தெரியலை...." என்று மலரை முறைத்துக் கொண்டே சொன்னாள் மேகா...

மலரோ ஏன் தான் இவளிடம் இப்படி ஒரு பொய்யை சொல்லி மாட்டிக் கொண்டோம் என்று தான் எண்ண தோன்றியது... மகளை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து இருந்தும் இப்படி ஒரு காரணத்தை சொல்லிய தன் மடமையை நினைத்து மனதில் நொந்து கொண்டு இருந்தார் அவர்...

மேகா எப்போதும் இப்படி தான்... தாய் மீது தவறு இருந்தால் தந்தையை ஆதரித்து பேசி அம்மாவை கேள்வி கேட்டு குடைந்து எடுப்பால்... அதுவே தந்தை மீது தவறு இருந்தால்... தாய்க்காக தந்தையிடம் சண்டை பிடித்து மூச்சு பிடிக்க பேசிக் கொண்டு இருப்பாள்...

யார் மீது தவறு இருக்கிறதோ அன்று அவருக்கு பற்பல பேச்சுகள் கிடைப்பது நிச்சயம்... அதனாலேயே இருவரும் எந்த தவறையும் செய்து விட மாட்டார்கள்... அப்படியே செய்து விட்டாலும்... அது மகளின் பார்வைக்கு அண்டாமல் பார்த்துக் கொள்வர்... கணவனும் மனைவியும் இதில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பாதுகாப்பார்கள்... இதில் இருவர் மீதும் கோபம் கொள்வது என்னமோ மேகா தான்... பிறகு... தாய் தந்தை இருவரும் சேர்ந்து மகளை கெஞ்சி கொஞ்சி மலை இறக்கி விடுவார்கள்...

மதிவாணன் இதை கேட்டதும் பயந்தே போவார் என்று தெரியும்... அதனால் சட்டென்று மகளை முறைத்துப் பார்த்தார் மலர்மதி...

எதையோ மறைக்க நினைத்து இந்த பிரச்சனை வந்து புகுந்து கொண்டதே என்று தன்னை தானே திட்டிக் கொண்டு இருந்தார் அவர்...

மலருக்கு ஜோசியர் சொன்னதை எல்லாம் இப்போது இவர்களிடம் சொல்ல மனம் வரவில்லை... ஏனென்றால்... முதலில் அதை சொல்ல அவருக்கே தெம்பு இல்லை... அவருடைய மனம் மிகவும் சோர்ந்து இருப்பதை போல உணர்ந்தார்...

தன்னை சரிப்படுத்தி கொண்டு தான் இவர்களிடம் இதை பற்றி பேச வேண்டும் இல்லையென்றால் இவர்கள் தான் சொல்வதை காது கொடுத்தும் கேட்க மாட்டார்கள்... இது எல்லாம் தேவை இல்லாத விஷயம்... தேவையற்ற பயம் என்று கூறுவார்கள் என்று நினைத்து பொறுமை கொண்டு அமைதி காத்து இருந்தார் மலர்மதி...

"மலர் உனக்கு அடி எதாவது பட்டுச்சா... நாம வேணா ஹாஸ்பிடலுக்கு போகலாமா... வேலை வந்துருச்சு மா... இல்லன்னா உன் கூடவே தான் இருந்து இருப்பேன்... நீ வா நாம உடனே ஹாஸ்பிடல் போகலாம்..." என்று கவலையுடன் ஈனக் குரலில் சொன்னார் மதிவாணன்...

"அய்யோ எனக்கு ஒன்னும் இல்லைங்க... நான் நல்ல தான் இருக்கேன்... ஒரு பிரச்சனையும் இல்லைன்னு தானே நான் சொல்றேன் அதை கேட்க மாட்டீங்களா... இவ சொல்வதை எல்லாம் நம்பாதீங்க..." என்று மலர் சொல்ல...

"அப்போ நீ என் கிட்ட பொய் சொன்னியா அம்மா..." என்றாள் மேகா...

அவர் மனமோ... 'ஆமா டி... உன் கிட்ட நான் பொய் தான் சொன்னேன்...' என்று உள்ளுக்குள் அரற்றி கொண்டு இருந்தது...

ஆனால்... வெளியே மட்டும்... "அய்யோ இல்ல டி..." என்று பாவமாக சொன்னார்...

"ஹ்ம்ம்... அப்போ நீ கீழே விழுந்த... அந்த வலியை தாங்க முடியாமல் அழுத... அதனால் முகம் எல்லாம் வீங்கி போச்சு... கண்ணெல்லாம் சிவந்து போச்சு... ஆமாவா இல்லையா..." என்று அவள் கேட்க...

மலர்மதி அமைதியாக தான் இருந்தார்... அவரால் தான் பொய்யும் சொல்ல முடியாது... உண்மையும் சொல்ல முடியாது... அதனால் தான் எதற்கும் பதில் கூறாமல் வெறுமனே நின்றுக் கொண்டு இருந்தார்... ஆனாலும் கணவனையும் மகளையும் பார்க்க பாவமாக இருந்தது...

"சாரி மா..." என்று மீண்டும் சொன்னார் மதிவாணன்...

அவரை அனலாக பார்த்து முறைத்தாள் மேகா மலர்க்குழலி...

"நீங்க பண்ணது தப்பு தானே அப்பா..."

"ம்ம்... தப்பு தான்..."

"மேகா போதும்... இதுக்கு மேல எதுவும் பேசாதே... அப்பா பாவம் டி.... ஏற்கனவே கவலையில் இருக்கார்... நீ வேற ஏன் இப்படி பேசற... விடு மா..."

"நான் உன் கிட்ட பேசல மா... நீ கொஞ்சம் நேரம் அமைதியாக இரு..." என்று சொன்னாள் மேகா...

மலர் பரிதவிப்பாக கணவனை பார்க்க... அவர் செய்த தவறுக்கு வருத்தமும் இருந்தது... மகள் அந்த தப்புக்கு கேள்வி கேட்பதை நினைத்து பெருமையாகவும் இருந்தது...

ஏனென்றால்... அவர் தான் மகளை அப்படி வளர்த்தது... தப்பு என்று தெரிந்தால் யாராக இருந்தாலும் அந்த தப்பு கோடிட்டு காட்டி கேள்வி கேட்பாள்... அந்த தவறை மனப்பூர்வமாக உணரும் வரை அவளுடைய அழுத்தமான பேச்சுகள் இருக்கும்... அதுவரை அதில் எந்த ஒரு தளர்வும் இருக்காது... அதன் பிறகே அவள் கொஞ்சம் நல்ல மூடுக்கு மாறுவாள்...

"மலரை நீங்க தானே கூட்டிட்டு வந்தீங்க... அப்போ நீங்க கூட இருந்து வீட்டுக்கு அழைத்து வந்து பத்திரமாக விட்டுட்டு போறது தானே நியாயம்... இந்த அம்மா கண்ணை நல்லா திறந்து பார்க்காமல் வந்து... கீழே விழுந்து என்னமோ ஆகி இருக்கு... ஓகே இது தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு... வேற எதாவது ஆகி இருந்தால் என்ன பா ஆகி இருக்கும்..." என்று சொல்லும் போதே... அவள் கண்கள் சட்டென்று கலங்கியது...

"அம்மா தான் தனியாக வெளியே போக மாட்டாங்களே... ஒன்னு நீங்க வேணும் இல்லன்னா நான் வேணும்... இப்படி தானே அவங்க வெளியே போய் இருக்காங்க... அப்போ நாம தானே பா... அம்மாவை ஒழுங்கா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரணும்... அதை விட நமக்கு வேற என்ன வேலை இருக்க முடியும் பா... பிஸ்னஸ் இஸ் ஜஸ்ட் அ பார்ட் ஆஃப் லைஃப்... பட்... ஃபேமிலி இஸ் த ஹோல் பார்ட் ஆஃப் லைஃப்... தட் இஸ் ஹார்ட் ஆஃப் ஹவர் லைஃப்... (Business is just a part of life... but... family is the whole part of life... that is heart of our life...) இது என்னைக்கும் நாம தானே பா மூளையில் பதித்து வைத்து இருக்கணும்... அது எப்படி நீங்க மறந்து போகலாம்... ஃபேமிலி தான் ஃபர்ஸ்ட்... நெக்ஸ்ட் தான் எல்லாமே..." என்று சொல்லி ஓர் நொடி மௌனத்திற்கு பிறகு...

மீண்டும்... "ம்ம்... நான் வீட்டுக்கு வந்ததும் அம்மா ன்னு கூப்பிட்டே வந்தேன்... ஆனால் அம்மா ஒரு குரலும் கொடுக்கலை... எப்போவும் அம்மா நான் கத்திட்டே வந்தால் திட்டுவாங்க... அது இல்லாமல் போனதும் நான் எவ்ளோ பயந்து போனேன் தெரியுமா ப்பா... அப்பறம் உள்ளே போய் பார்த்தால்... சுவற்றை வெறிச்சி பார்த்து உட்கார்ந்து இருக்காங்க... அப்பறம் தான் கேட்டதுக்கு இப்படி எல்லாம் நடந்தது என்று சொல்றாங்க...

எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா பா... இவங்க என்னை எவ்வளவு தான் திட்டினாலும்‌... நான் இவங்க கூட எவ்வளவு தான் கூட கூட பேசி நிறைய சண்டை போட்டாலும்... எனக்கு மலரை போல யாரும் இருக்க மாட்டாங்க பா...

ஏன்னு தெரியலை... ஆனால் இன்னைக்கு ரொம்ப எமோஷனல் ஆகிடுச்சு பா... உங்களை தான் நான் ரொம்ப கோபமா பேசிட்டேன்... ஐம் சாரி பா... இன்னைக்கு என்னால சரியா யோசிக்க முடியலை... எமோஷனலாக மட்டும் தான் மட்டும் தான் தின்க் பண்ண தோணுச்சு... அதனால் எதுவும் யோசிக்காமல் அப்படி எல்லாம் கேட்டுட்டேன்... சாரி ப்பா..." என்று சொல்லி அவர் தோளிலேயே சாய்ந்து கொண்டாள் மலர்க்குழலி....

"மேகா மா... என்ன டி இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க..." என்று சொன்னார் மலர்மதி...

மகளின் தலையை வருடிக் கொண்டே... "குட்டிமா... அப்பா இனிமே இப்படி எல்லாம் பண்ண மாட்டேன்... ப்ராமிஸ்..." என்று சோர்ந்த குரலில் சொன்னார் மதிவாணன்...

"கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசாமல் இருக்கீங்களா..." என்று மெல்லிய குரலில் சொன்னாள் மேகா...

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பாவமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்...

எப்போதும் கேள்வி கேட்டு சண்டை பிடிப்பாளே தவிர... இப்படி எல்லாம் பேசி அழுது கரைய மாட்டாள்... இன்று ஏனோ இப்படி வித்தியாசமாக நடந்துக் கொள்கிறாள் என்று வேதனையுடன் பார்த்தனர்...

மேகா தந்தையிடம் இருந்து விலகிக் கொண்டு எழுந்து சென்றவள்... நேராக சென்றது என்னமோ இவர்களில் வீட்டுக்கு முன்னால் இருக்கும் தோட்டப் பகுதிக்கு தான்...

அவளை பின் தொடர்ந்து ஒரு பெருமூச்சுடன் மலரும் மதியும் சென்றார்கள்...

அங்கே சூழ்ந்திருந்த செடிகளுக்கு நடுவிலே உள்ள இடத்தில்... முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் அவள்... இவர்களும் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்கள்...

"குட்டிமா..."

"மேகா பாப்பா..."

என்று இருவரும் ஒருசேர அழைக்க...

"உங்க ரெண்டு பேரையும் பேச வேணாம்னு சொன்னே தானே..." என்று கோபத்துடன் சொல்லி... முகத்தை திருப்பிக் கொண்டாள் மலர்க்குழலி...

"எப்பவும் இப்படி நடந்தால் எங்களை திட்ட தான் செய்வ... ஆனால் ஏன் இன்னைக்கு இவ்ளோ எமோஷனல் ஆகுற தங்கம்..." என்று மென்மையாக கேட்டார் மலர்...

"தெரியலை மா... உங்களுக்கு ஒன்னு ன்னா என்னால தாங்க முடியுமா... அதான் அப்படி ஆயிட்டேன் போல... வேற ஒன்னும் இருக்காது..." என்று சொல்லி விட்டு அமைதியாக இருந்தாள் மேகா...

"இப்படி எல்லாம் நினைக்கக் கூடாது குட்டிமா..." என்று மதி சொல்ல...

"இனி நினைக்க மாட்டேன் பா..." என்றாள் அவள்...

"ஒருவேளை நாங்க இல்லாம போய்ட்டா என்ன பண்ணுவ பாப்பா... உன் வாழ்க்கையை நீ தனியா வாழ வேண்டிய சூழல் வந்தால் நீ வாழ்ந்து தானே ஆகணும் பாப்பா..." என்று வெறுமையான குரலில் சொன்னார் மலர்மதி...

"மலர் இன்னொரு முறை இப்படி எல்லாம் பேசாத... ஏன் இப்படி எல்லாம் லூசு போல பேசிட்டு இருக்க... நீங்க ரெண்டு பேரும் என் கூட தானே இருப்பீங்க... அப்பறம் ஏன் இந்த மாதிரி பேசி என்னை கஷ்டப் படுத்திட்டு இருக்க... ப்ளீஸ் மா... விளையாட்டுக்கு கூட இப்படி எல்லாம் பேசாத..." என்று கோபத்தில் ஆரம்பித்து... வருத்தத்தில் பேசி... கெஞ்சலில் முடித்தாள் மலர்க்குழலி...

"மலர்... மேகாவே இப்ப அப்செட்டா இருக்கா... நீ எதுக்கு பைத்தியம் மாதிரி இப்படி பேசிட்டு இருக்க... நீ என்ன பேசிட்டு இருக்குன்னு தெரிஞ்சு தான் பேசறியா‌... இல்ல தெரியாம பேசிட்டு இருக்கியா... நீ பேசுவதை கேட்டு எனக்கே கோபம் வந்துருச்சு... நம்ம பொண்ணுக்கு வருத்தமா இருக்கும் தானே... இனி இன்னொரு முறை நெகடிவ்வா பேசி பாரு... அப்பறம் இருக்கு உனக்கு..." என்று மதிவாணனும் சினத்துடன் சொன்னார்...

"சாரி..." என்று சொல்லி தலை குனிந்து கொண்டார் மலர்மதி...

அவர் கண்ணில் இருந்து... நீர் முத்துக்கள் கொட்டிக் கொண்டு இருந்தது...

"அய்யோ அம்மா... சாரி மா... நான் பேசியதும் தப்பு தான்... நீ அழாதே... ப்ளீஸ்... நீ என் பட்டுக்குட்டி தானே... எங்க சிரி பாப்போம்..." என்று மென் சிரிப்புடன் தாயை சமாதானம் செய்தாள் மேகா...

"மலர் நம்ம வேணா தியேட்டர் போய் படம் பார்க்கலாம்... நீயும் நானும் மட்டும் போகலாம்... குட்டிமா வேணாம்... அவ வீட்டிலேயே இருக்கட்டும்... நீ என்ன சொல்ற..." என்று சொல்லி மனைவியை சிரிக்க வைக்க முயற்சித்தார் மதிவாணன்...

"இதோட... அது என்ன நீங்க மட்டும் கப்புளா போய் படம் பாரப்பீங்க... நான் மட்டும் வீட்டுல தேவாங்கு மாதிரி தனியா உட்கார்ந்து இருக்கணுமா..." என்று தந்தையோடு சேர்ந்து கொண்டு சண்டை பிடித்தாள் மேகா‌...

"நீ வீட்டுக்கு காவல் இரு குட்டிமா..."

"ஓஹோ... அப்போ நீங்க என்ன பண்ணுவீங்களாம்...."

"நாங்க தியேட்டர் போய் படம் பார்த்துட்டே பாப்கார்ன் சாப்பிடுவோம்..." என்று சொல்லி மனைவியை பார்த்து சிரித்தார் அவர்...

மலரோ... "இப்ப யார் இங்க தியேட்டர் போக பெர்மிஷன் கொடுத்தது... அதுவும் இப்ப போனால் நைட் தான் போக முடியும்... அப்பாவும் பொண்ணும் நல்லா தான் பிளான் பண்றீங்க... இப்படி பேசி பேசி என்னை சமாதானம் பண்றேன் பேர்வழியில் நீங்க ரெண்டு பேரும் நைட் ஷோ படத்துக்கு போக பிளான் போட்டுட்டு இருக்கீங்களா... உங்களுக்கு எப்பவும் நைட் ஷோ போக அலோவ் பண்ண மாட்டேன்..." என்று முறைத்துக் கொண்டே எப்போதும் போல சொன்னார்...

அதை கண்டு இருவரும் சிரித்தார்கள்...

"சும்மா மா... நீதான் பத்ரகாளி என்று தெரியுமே... உன் கிட்ட போய் இதுக்கு எல்லாம் பெர்மிஷன் கிடைக்குமா... எனக்கும் அப்பாவுக்கும் பூரிக் கட்டையில் நாலு மாத்து தான் கிடைக்கும்... பாம்பு கிட்ட நாங்களே வான்டட் ஆஆ தலையை கொடுப்போமா... மாட்டவே மாட்டோம்..." என்று சிரித்துக் கொண்டே எழுந்து உள்ளே ஓடி விட்டாள் மேகா மலர்க்குழலி...

"எப்பவும் இவ இதே போல சிரிச்சிட்டே இருக்கணும் ங்க..." என்று கணவனிடம் சொன்னார் மலர்மதி...

"கண்டிப்பாக நம்ம பொண்ணு எப்பவும் சந்தோசமா தான் இருப்பா... நீ எதை பற்றியும் கவலை படாத மலர்..." என்று சிறு நகைப்புடன் சொன்னார் மதிவாணன்...

"கவலை படாமல் இருக்க முடியலையே ங்க..." என்று மெல்லிய குரலில் முணு முணுத்துக் கொண்டார்...

"என்னது..."

"ஹான்... ஒன்னுமில்ல ங்க... நானும் அதையே தான் நினைச்சிட்டு இருந்தேன்..."

"எதை..."

"அதான்... நீங்க... நீங்க சொன்னதை தான்..."

"ம்ம் சரி..."

"ம்ம்..."

"மலர்..."

"ம்ம்..."

"ஏதாவது பிரச்சனையா... உன் முகமே சரி இல்ல... இன்னும் கூட வலிக்குதா... சொல்லு நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்..."

"அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க... கொஞ்சம் உடல் அசதியாக இருக்கு... அவ்வளோ தான்... சுடு தண்ணீரில் குளித்து... தூங்கி எழுந்தால் எல்லா வலியும் சரியா போயிடும்..." என்று சொல்லி விட்டு... 'ஆனால் இந்த மன வலி சரியா போகாதே ங்க... அதுக்கு என்ன பண்றது ன்னு தான் தெரியலை...' என்று இயலாமையுடன் நினைத்துக் கொண்டார் மலர்மதி...

"என்னமோ சொல்லிட்டு இருக்க மலர்... ஆனால் உன் நடவடிக்கை எல்லாம் எனக்கு சரியாப்படலை... சரி வா வீட்டுக்குள்ள போகலாம்..." என்றார் மதிவாணன்...

"ம்ம்... சரி..." என்று சொல்லி அவரும் எழுந்து கொண்டு... "ஏங்க இன்னைக்கு நான் டின்னர் பண்ண மாட்டேன்... நீங்க உங்க பொண்ணு ரெண்டு பேரில் யாராவது ஒருத்தர் பண்ணுங்க..." என்று சிரிக்காமல் சொன்னார்...

"என்ன..." என்று அதிர்ச்சி ஆகி கேட்டார் மதி...

"எதுக்கு இவ்ளோ ஷாக்குகுகு...."

"ஒன்னுமில்ல..."

"ஆஹான்... சரி நீங்க சமைக்க போறிங்களா... இல்ல உங்க குட்டிமாவை சமைக்க விட போறிங்களா..." என்று நக்கலாக கேட்க...

"அய்யோ... வேணாம் நானே சமைக்கிறேன்..."

"ஏன்..."

"நம்ம ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆக கூடாது என்ற நல்லெண்ணம் தான்..."

"ஹா ஹா... இருங்க உங்க பொண்ணு கிட்ட மாட்டி விடறேன்... அவ உங்களுக்கு சில பல ட்ரீட்மென்ட் கொடுப்பா... அதை மனதார வாங்கிக்கோங்க..." என்று சொல்லி விட்டு அங்கே நிற்காமல் உள்ளே சென்று விட்டார் மலர்மதி...

"மலர் செல்லம்... புருஷனை இப்படி எல்லாம் போட்டு கொடுக்க கூடாது... எதுவாக இருந்தாலும் கொஞ்சம் பார்த்து பண்ணு மா..." என்று மதிவாணன் சொல்ல... அதை கேட்டு மலருக்கு சிரிப்பு தான் வந்தது... அந்த உதட்டில் ஒட்டி இருந்த புன்னகையுடன் உள்ளே சென்று விட்டார்...

"அம்மா... ஸ்மைல் ரொம்ப பெருசா இருக்கு... என்ன அப்பா கூட ரொமான்ஸ் ஆஆஆஆஆ..." என்று இழுத்து சொன்னாள் மேகா...

"ஏய்... என்ன பேச்சு டி பேசிட்டு இருக்க... வாயை அடக்கி வச்சிட்டு இரு ன்னா கேட்கவே கேட்காத... எப்ப பார்த்தாலும் இப்படி உப்புக்கு உதவாத மாதிரியே பேச வேண்டியது..." என்று பொய்யாக திட்டிக் கொண்டு இருந்தார் மலர்மதி...

அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல்... "ஹ்ம்ம்... ஆனாலும் நீங்க இன்னும் கூட லவ்வபிள் கப்புள் தான் அம்மா... உங்க லவ்வ பார்க்கும் போது எனக்கு லவ் பண்ண தான் தோணுது... ஆனால்... லவ் பண்ண பிடிக்க மாட்டேங்குது... ச்சே ச்சே.‌‌.. எனக்கு என்ன வியாதி என்று கண்டே பிடிக்க முடியலை..." என்று உற்சாகத்துடன் ஆரம்பித்து சலிப்புடன் முடித்தாள் மலர்க்குழலி...

"உன் டிஸைனை அம்மா அப்பா எங்களாலே புரிஞ்சுக்க முடியலை... உன்னை கட்டிக்க போறவன் எப்படி புரிஞ்சுக்க போறானோ... இதுல அந்த கனவு வேற தினம் தினம் வந்துட்டு இருக்கு... என்னமோ போ... உங்க தலையெழுத்தை அந்த ஆண்டவன் எப்படி எழுதி வச்சி இருக்கானோ தெரியலை... நீ புகுந்து வீட்டில் போய் சந்தோசமா இருந்தாலே எங்களுக்கு போதும்..." என்று ஆற்றாமையுடன் சொன்னார் மலர்மதி...

"என் பொண்ணுக்கு மாப்பிளை குதிரையில் வந்து இறங்குவான்..." என்று சொல்லிய படி உள்ளே வந்தார் மதிவாணன்...

"என்னங்க அது குதிரை இல்ல... கனவு... கனவு... கனவில் மட்டும் தானே நம்ம மாப்பிளை இறங்கி வருவார்..." என்று சொல்லி நகைத்தார் மலர்...

"ம்மா... இப்ப ஏன் மா அதை பற்றி ஞாபகம் படுத்தற... நான் கடுப்பு ஆகி வெறுப்பு ஆகி லூசு போல சுத்தணும்... அதுக்கு தானே இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க... வேணாம்... பேசாம கம்மனு போய்டு... இல்லாட்டி..." என்று கையை நீட்டி எச்சரிக்கை செய்தாள் மேகா...

"இல்லாட்டிடிடி.... ஹ்ம்ம்... இல்லாட்டி என்ன பண்ணுவீங்க மேடம்..." என்று முறைப்புடன் கேட்டார் மலர்...

மேகா எழுந்து வந்து தாயை இறுக்கி அணைத்து... கழுத்தை கட்டிக் கொண்டவள்... "இதோ இப்படி கட்டிப் பிடிச்சிட்டு... அம்மா தாயே... அம்மா தாயே..." என்று சொல்லும் போதே...

"மகளே... இது பிச்சை எடுப்பது போல் உள்ளது..." என்று சிரிக்காமல் சொன்னார் மலர்மதி...

"அவ்வ்... ம்மா... எதுவும் பேசாமல் சும்மா தான் இரேன்... என்ன எதாவது பேச விடறியா..." என்று முறைத்துக் கொண்டே சொன்னாள் மேகா...

"சரி சொல்லு... நான் பேசலை..."

"இப்படி ஏதாவது கிறுக்கு தனமாக பேசி... உங்க மைண்ட்டை மாற்றி... ரிலாக்ஸ் பண்ண வச்சிடுவேன்... நீங்களும் வேற வழி சிரிச்சிடுவீங்க... அவ்வளவு தான்... சிம்பிளுளுளுளு..." என்று சொல்லி கள்ளமில்லாமல் புன்னகை செய்தாள் மேகா மலர்க்குழலி...

தீடிரென... "அய்யோ அம்மா நான் மறந்தே போய்ட்டேன்..."

"என்னத்த டி மறந்த..."

"ஹ்ம்ம்... குட் நியூஸை தான்... மூட் அப்செட் ஆனதால் நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லவே இல்லை..."

"என்ன குட்டிமா குட் நியூஸ்..." என்று மதிவாணன் கேட்க...

"நான் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகிட்டேன்..." என்று அவள் உற்சாகத்துடன் சொல்ல... அவளுடைய அப்பாவும் அம்மாவும் எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்தனர்...

"ரெண்டு பேர் முகமும் எதுக்கு இப்படி பியூஸ் போய் இருக்கு..."

"அப்படி எல்லாம் இல்லை..." என்று வெறுமென கூறினார் மலர்...

"உங்க கிட்ட நான் ஆயிரம் முறை சொல்லிட்டேன்... நான் வேலைக்கு போய் தான் தீருவேன்... அட்லீஸ்ட் என்னை ஒரு டூ இயர்ஸ் ஆச்சும் ஃப்ரீயா விடுங்க... இப்படி ஜாலியாக இருந்துட்டு... என்னால உடனே எல்லாம் சீரியஸாக மாறி... பொறுப்பை கையில் எடுத்து... அப்பாவுடைய கம்பெனிகளை டேக் ஓவர் பண்ண முடியாது... எனக்கு கொஞ்ச டைம் வேணும்... என்னை இதுக்கு ஃபோர்ஸ் பண்ணாமல் ரெண்டு பேரும் புரிந்து கொள்வீங்க என்று நம்பறேன்... புரிந்து கொள்வீர்கள் தானே..." என்று உறுதி நிறைந்த குரலில் பேசி முடித்தாள் அவள்...

அவர்கள் இருவரிடமும்... "ம்ம்..." என்ற சிறு தலை அசைப்பு மட்டுமே பதிலாக கிடைத்தது...

அவர்கள் இதுக்கு எதிர்ப்பு கூறாமல் இருந்ததே போதும் என்று நினைத்து அமைதியாக இருந்து விட்டாள் மேகா...

அதன் பிறகு மூவரும் சாப்பிட்டு உறங்க சென்று விட்டனர்... அவரவர் மனதில் பற்பல எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருந்தது...

*******

உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே 😍

👇👇👇👇
 

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
அத்தியாயம் - 10

நம் ஆழ்மனதில் இருந்து......
பிறருக்கு சொல்லும் கதை
சில இருக்க...
அதில் சொல்லாத கதை...
பல இருக்க...
அதில் சொல்ல மறைக்கும்
கதைகளும் அடங்கிருக்க...
சொல்ல மறக்கும் கதைகளும்
எண்ணிலடங்காதவை
மனதினுள் புதைந்துள்ளன...
இதை எல்லாம் யார் அறிவார் ???
நம்மை அணுதினமும் ஆட்டிப் படைக்கும்
முற்றும் அறிந்த அவர் அறிவார்...!!!!


பாரியவேல் அவருடைய அம்மாவின் ஒன்று விட்ட தங்கையின் வீட்டுக்கு போய் கொண்டு இருந்தார்... அது இவருடைய ஊரில் இருந்து ஒரு ஊர் தள்ளி இருக்கிறது...

பாரியின் சின்னம்மா பெயர்... ரங்கநாயகி... கணவர் பெயர் விஜயபாஸ்கர்... அவரோ பத்து ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்... அதில் இருந்து தனியாக தான் வசித்து வருகிறார்... அவருடைய சொந்த பந்தம் யார் வந்து கூப்பிட்டாலும் யாருடைய வீட்டுக்கும் செல்ல மாட்டார்... எப்போதும் தன் வீட்டிலேயே இருப்பார்... அவரை தான் அனைவரும் நலம் விசாரித்து விட்டு செல்ல முடியும்...

அவருடைய அனைத்து வேலைகளையும் அவரே பார்த்துக் கொள்வார்... யாருடைய உதவியையும் எதிர்ப்பார்க்க மாட்டார்... ஆனால்...‌ இரு வருடங்களாக... குளியலறையில் வழுக்கி விழுந்து... இடுப்பு எலும்பு உடைந்து போய்... எழுந்து கொள்ள முடியாமல் படுத்த படுக்கையாக தான் இருந்து வருகிறார்... அவருக்கு இப்போது எல்லாமே படுக்கையில் இருந்து தான் நடக்கும்... அதற்கும் வீட்டுக்கு வேலைகளை பார்த்துக் கொள்ளவும் மட்டும் ஒரு பெண்மணியை நியமித்து உள்ளார்...

இதை எல்லாம் நினைத்த படி போய் கொண்டு இருந்தார் பாரியவேல் நந்தியவர்மன்...

"ஐய்யா... வீடு வந்துருச்சு..." என்று மகிழுந்து ஓட்டுநர் அழைத்த பிறகே அவரின் சிந்தையை கதைத்துக் கொண்டார்...

அவரும் உள்ளே சென்றார்...

அங்கே கட்டிலில் உறங்கி கொண்டு இருந்த சித்தியை பார்த்தார்...

"வா பா பாரி.‌‌... எப்படி இருக்க‌... வீட்டில் புள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க..." என்று ரங்கநாயகி கேட்க...

அதை கேட்டு அவரின் உதட்டில் ஓர் புன்னகை மலர்ந்தது...

"எப்படி சின்னம்மா கண்ணை திறக்காமலே... அது நான் தான் என்று கண்டு பிடித்தீங்க..." என்று கேட்டார் பாரி...

"நீ இத்தனை வருஷமா என்னை வந்து பார்த்துட்டு போறியே ராசா... உன் காலடி ஓசையை கூட கண்டுக் கொள்ளாமல் இருப்பேனா... இப்படி உட்காரு... எதையாவது கொஞ்சம் உன் வயித்துக்கு போடு..." என்று அவரிடம் பாசமாக சொல்லி...

"வாசுகி... ஏய் வாசுகி... எங்கடி போய் தொலைஞ்ச... என் மகன் வந்து இருக்கான் பாரு... அவனுக்கு என்ன வேணும்னு கேட்டு கொண்டு வா..." என்று கத்திக் கொண்டு இருந்தார் ரங்கநாயகி...

"ஆத்தா எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க... நான் வீட்டில் இருந்து வரும் போதும்... சாப்பிட்டு தான் வந்தேன்... உன் மருமக தான் சாப்பிட வைக்காமல் எங்கேயும் அனுப்ப மாட்டாளே... நீ சித்த அமைதியாக இரு..." என்று பாரியவேல் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே...

அவர் வீட்டில் வேலை செய்யும் வாசுகி வந்து நின்றார்...

"அம்மா கூப்பிட்டீங்களா..." என்று பயத்துடன் கேட்டார் அந்த வாசுகி...

"இல்ல டி மா... நான் போய் உன்னை எதுக்கு அழைக்க போறேன்... கேட்கிற பாரு கேள்வியை... என்னை விட்டுட்டு அப்படி எங்க தான் போவ..." என்று பொரிந்து தள்ளினார் ரங்கநாயகி...

"அம்மா காய்கறி எல்லாம் தீர்ந்து போச்சு... அதை வாங்க தான் கடைவீதிக்கு போய்ட்டு வந்தேன்... விரசா வந்து விடலாம் என்று தான் நினைத்தேன்... ஆனால் அங்கே கூட்டம் அதிகமாக இருந்துச்சு மா... அதான் இவ்வளோ நேரம் ஆகி போச்சு... என்னை மன்னித்து விடுங்க அம்மா..." என்று சொன்னாள் வாசுகி...

"சரி பரவாயில்லை போ... புள்ளைக்கு ஏதாவது செஞ்சி சீக்கிரம் கொண்டு வா..."

"சரிங்க அம்மா..."

"சீக்கிரம் செய்யணும்னு நினைச்சு... ருசி இல்லாம செய்து விடாதே... சாப்பாட்டில் ருசியும் முக்கியம் தான்... புரிஞ்சுதா..."

"புரிஞ்சுது அம்மா..." என்று சொல்லி விட்டு இடத்தை காலி செய்தாள் வாசுகி...

"எதுக்கு சின்னம்மா இதெல்லாம்..."

"நீ சும்மா இரு பாரி... வீட்டுக்கு வந்த புள்ளையை என்னால சாப்பிட வைக்காமல் அனுப்ப முடியுமா..." என்று பிடிவாதமாக சொன்னார் ரங்கநாயகி...

அதை கேட்டு மென்மையாக சிரித்தவர்... "உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா... சரி சரி... நீங்க ஆசைப்பட்ட போலவே நான் சாப்பிட்டு போறேன்..." என்றார் பாரியவேல்...

"வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க..." என்று ரங்கநாயகி கேட்க...

"எல்லாரும் நல்லா இருக்கோம் சின்னம்மா..."

"சின்னவன் ஊருக்கு வந்தானா..."

"ம்ம்... வந்தான் வந்தான்..."

"எதுக்கு பா இப்படி சலிச்சிட்டு சொல்ற..."

"இங்கேயே இருன்னு சொன்னால் கேட்பது கிடையாது..."

"விடு பா... தோளுக்கு மேல வளர்ந்தால் தோழன் ஆகிடுவான்... நீ சொல்றதை மட்டுமே அவன் கேட்கணுமா... அவன் சொல்லையும் நீ கேட்டு தானே ஆகணும்..." என்று சொன்னார் ரங்கநாயகி...

"க்கும்... சரி தான்..."

"ஹா ஹா..."

"அட போங்க மா..."

"உனக்கு உன் பிள்ளையை விட்டு இருக்க முடியலை... உனக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்... விடு சீக்கிரமா இங்கேயே வந்து விடுவான்... கவலை படாதே..."

"சரி சின்னம்மா..."

பிறகு கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டு இருக்க...

"ஐய்யா சாப்பாடு ரெடி..." என்று சொல்லிய படி வந்தாள் வாசுகி...

"வேணாம்னு சொன்னாலும் கேட்க மாட்டீங்க..." என்று சொல்லிய படி சாப்பிட்டு முடித்தார் பாரியவேல்...

"சின்னம்மா..."

"சொல்லு பாரி‌..‌."

"நீங்க எங்க வீட்டுக்கு வந்து இருக்கலாமே..."

"ம்‌ஹூம்... நான் என் ஜீவன் போகும் வரை இந்த வீட்டிலே மட்டும் தான் இருப்பேன்... இந்த வீட்டை விட்டு எங்கேயும் போக மாட்டேன்..." என்று அழுத்தமாகவும் உறுதியாகவும் கூறினார் ரங்கநாயகி...

இது எப்போதும் வரும் பதில் என்பதால்... பாரியவேல் அமைதியாக தான் இருந்தார்...

"என்னப்பா எதுவும் சொல்லாம அமைதி ஆகிட்ட..."

"இது எப்பவும் வரும் பதில் தானே சின்னம்மா... இதுக்கு புதுசா நான் என்ன சொல்ல முடியும்... அதான் இப்படி இருக்கேன்..." என்று பாரி சொல்ல... அதை கேட்ட ரங்கநாயகி மென் புன்னகை புரிந்தார்...

"சரி சின்னம்மா... நான் போய்ட்டு வரேன்... நீங்க பத்திரமாக இருங்க... உடம்பை பார்த்துக்கோங்க... உங்களுக்கு ஏதாவது வேணும்னா யார் கிட்ட வேணாலும் சொல்லி அனுப்புங்க... நான் வந்து வாங்கித் தரேன்..." என்று சொன்னார் பாரியவேல்...

"சரி ராசா..." என்றார் அவர்...

பாரி கிளம்பி வாசல் வரை போனவர்... திருப்பி வந்து... "சின்னம்மா..." என்று அழைக்க...

"என்னப்பா..."

"இன்னும் இரண்டு வாரத்தில் கோவில் திருவிழா வருது... வேலை பளு அதிகமாக இருக்கும்... அதனால் உங்களை வந்து பார்க்க முடியாது... ரொம்ப அவசரம்னு ஏதாவது இருந்தால் சொல்லி அனுப்புங்க... நான் அவசியம் உங்களை பார்க்க வருவேன்..." என்று சொன்னார் பாரியவேல் நந்தியவர்மன்...

"சரி ராசா... அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை... நீ என்னை பற்றி நினைக்காமல் உன் வேலையை பாரு... நான் என்னை பார்த்துப்பேன் பா..." என்று மென்மையாக சொன்னார் ரங்கநாயகி...

அதன் பிறகு... சின்னம்மாவிடம் இருந்து விடைபெற்று திருவிழா சம்மந்தமாக ஊர் பெரியவர்களை சந்திக்க கிளம்பினார் பாரியவேல்....

*******

மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்துக் கொண்ட மலர்மதி... குளித்து முடித்து தன்னை தயார் படுத்திக் கொண்டு வந்தார்...

அதன் பிறகு ரொம்ப நேரமாக மகளையும் கணவனையும் துயில் கலைக்க ரொம்ப மெனக்கெட்டு எழுப்பிக் கொண்டு இருந்தார் அவர்...

"என்னங்க...

மேகா..."

என்று வெகு நேரமாக மாறி மாறி கத்திக் கொண்டு இருந்தார் மலர்மதி...

"ஐயோ... என்னம்மா இப்படி கத்திக்கிட்டே இருக்க... உனக்கு இப்ப என்ன தான் பிரச்சனை... ஹான்..." என்று தூக்கம் போய் விட்டதே என்று கடுப்பில் புலம்பிக் கொண்டே வந்தாள் மேகா...

அவள் பின்னே மதிவாணனும்... "எதுக்கு மலர் மா... இப்படி கத்தி கத்தி எங்களை வர சொல்லிட்டு இருந்த... நாங்களும் ரொம்ப பாவம் தானே... அதனால எங்களை தூங்க விடலாம் தானே..." என்று கேட்ட படி வந்தார்...

"நான் இங்க தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருந்தேன்..." என்று மலர் கேட்க...

அதற்கு... "உன்னை யார் அம்மா அப்படி பண்ண சொன்னது..." என்றாள் மேகா...

"சரி சொல்லு. மலர்.. எதுக்கு எங்களை வர சொன்னா... அதை மொதல்ல சொல்லு..." என்றார் மதி...

"சொன்னா தான் வருவீங்களோ இல்லாட்டி நீங்க ரெண்டு பேரும் வர மாட்டீங்களோ... அவ்வளவு கொழுப்பு ஆகிப் போச்சா..." என்று எள்ளல் குரலில் கூறினார் மலர்...

"காலங்காத்தால ஏன் மா இப்படி வில்லங்கமா பேசுற... நீ இப்படி பேசுவதை வச்சி பார்க்கும் போது.... உன் பேச்சில் ஏதோ ஒரு உள்குத்து இருக்கும் போலயே... இல்லன்னா நீ இவ்வளவு சீரியஸாக முகத்தை வைச்சு... இந்த அப்பாவி ஜீவன்களை மிரட்டிக் கொண்டு இருக்க மாட்ட... வாட்ஸ் த மேட்டர் மிஸஸ். மலர்மதிவாணன்..." என்று புருவம் உயர்த்தி கூலாக கேட்டாள் மேகா...

மதிவாணனுக்கும் இதே எண்ணம் தான்... ஆனால் வாயை திறந்து கேட்கவில்லை... மகள் வாயை திறந்தால் மலரை எப்படியோ பேசி வழிக்கு கொண்டு வந்து விடுவாள்... ஆனால் இவர் பேசினாலோ அந்த வாரம் முழுவதும் குடும்பத்தை தாங்கி சுமக்கும் குடும்பம் தலைவருக்கு சுகர் இல்லாத காஃபி தான் கடும் தண்டனை...

இவருக்கு சுகர் இல்லாமல் காஃபியை வாயில் வைக்கவே முடியாது... அதை கீழே ஊற்றியும் முடியாது மனைவி அவர் குடிக்கும் கண் கொத்தி பாம்பாய் பார்த்துக் கொண்டு இருப்பாள்... அதை குடிக்காமல் அந்த இடத்தை விட்டு எழுந்து செல்லவே முடியாது... அதற்கு பயந்து தான் குடும்பம் தலைவர் இதில் கும்மி அடிக்காமல் கம்முன்னு இருந்தார்...

"நீங்க எதுக்கு பேசாமல் இருக்கீங்க... என்ன மைண்ட் வாய்ஸில் பேசிட்டு இருக்கீங்களா..." என்று கணவனிடம் கேட்டார் மலர்...

"அய்யய்யோ அப்படி எல்லாம் இல்ல மா..."

"ம்மா... நான் கேட்டதுக்கு முதல்ல நீ பதில் சொல்லு..."

"கொஞ்ச நேரம் சும்மா இரு டி... நான் சொல்வது கொஞ்ச நேரம் அப்ஜெக்ட் பண்ணாமல் கேளுங்க..." என்று கடுப்புடன் சொன்னார் மலர்மதி...

"ஹ்ம்ம்... என்னமோ இருக்கு.‌‌.. சரி சரி... என்ன சொல்லணுமோ அதை சீக்கிரம் சொல்லு... எனக்கு காலேஜ் போக டைம் ஆகுது ம்மா..." என்று சொல்லி கடிகாரத்தை பார்க்க... அதில் 7.15 என்று காட்டியது...

"நாளைக்கு வெள்ளி கிழமை..."

"நாங்க ஒன்னும் சனி கிழமை என்று சொல்லலையே..." என்று இடையில் புகுந்து சொன்னாள் மேகா...

அதை கேட்டு "ஹா ஹா..." என்று சிரித்தார் மதிவாணன்...

"உங்க ரெண்டு பேரையும் இடையில் பேச வேண்டாம்னு சொல்லியதாக எனக்கு ஞாபகம்..." என்று சினத்துடன் சொன்னார் அவர்...

"ஹிஹி... சாரி மா..." என்று சொல்லி இளித்து வைத்தாள் மேகா...

அவளை முறைத்து பார்த்த மலர்மதி பின்னாடி திரும்பி நின்று கொண்டார்...

"நாளைக்குள்ள நாம மூணு பேரும் சேர்ந்து நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போய் ஆகணும்... வேலூருக்கு போகணும்..." என்று கரகரப்பான குரலில் சொன்னார் அவர்...

"அம்மா உன் ஊருக்கா‌..." என்று ஆச்சரியமாக கேட்டாள் மேகா...

"ஆமா... எங்க ஊருக்கு தான்..." என்று அழுத்தமாக சொன்னார் மலர்மதி..

"நான் எத்தனையோ முறை அடம் பண்ணி கேட்டு இருக்கேன்... ஊருக்கு கூட்டிட்டு போக சொல்லி... அப்ப எல்லாம் வேணாம் மேகா தேவை இல்லாமல் நிறைய பிரச்சனைகள் வரும்னு சொல்லி என் வாயை அடைப்ப... இப்ப என்னனா நீயே போகலாம் சொல்ற... ஆச்சரியமாக இருக்கு மா... ஹ்ம்ம்... சத்தியமா என்னால நம்பவே முடியல..." என்று வியப்புடன் சொன்னாள் மேகா...

"நம்பி தான் ஆகணும் மேகா... நாம மூணு பேரும் நாளைக்கு அங்க போய் தான் ஆகணும்... தயவு செய்து என்னை எதிர் கேள்வி எல்லாம் கேட்காதீங்க... என்னால எதுக்கும் பதில் சொல்ல முடியாது... நாம போகலாம்... ப்ளீஸ்..." என்று அழுத்தமாக கூறினார் மலர்மதி...

"கண்டிப்பா நாம போகலாம் மா... எனக்கும் ரங்கநாயகி செல்லத்தை பார்க்க ஆசையாக தான் இருக்கு... நீ அம்மாச்சி இப்படி அம்மாச்சி அப்படி.... அம்மாச்சி இதை பண்ணுவாங்க... அம்மாச்சி அதை பண்ணுவாங்க... ப்பா... எவ்வளவு கதை சொல்லுவ... அதை எல்லாம் கேட்க அவ்ளோ இன்ரெஸ்ட்டிங்கா இருக்கும்... அதை கேட்டு நான் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டேன்... அதனால் தான் நான் உன் கிட்ட அவ்வளவு நாளாக இதை கேட்டுட்டு இருந்தேன்... அப்ப எல்லாம் நோ நோ என்று சொல்லிட்டு இருந்த... இப்ப பாரு நீயே போகலாம்னு சொல்ற... கடவுள் இருக்கான் மா... கடவுள் இருக்கான்... ஜாலி ஜாலி இருபத்து மூணு வருஷம் கழிச்சு நான் என் அம்மாச்சி ஊருக்கு போக போறேன்... ஐம் சோ ஹேப்பி மா..." என்று முகம் முழுக்க புன்னகையுடன் சொன்னாள் மேகா மலர்க்குழலி...

"ராசாத்தி... எகிறி குடிச்சது போதும்... உனக்கு நேரம் ஆச்சு... அதனால நீ இப்ப காலேஜுக்கு கிளம்பு டி... எப்ப பார்த்தாலும் எதாவது ஒன்னு பேசிட்டே இருக்க வேண்டியது... கொஞ்சம் கூட உன் ஒட்ட வாய் அடங்கவே அடங்காது..." என்று சிறு முறைப்புடன் சொன்னார் மலர்...

"அட ஆமால... சரி சரி... அண்ட் வன் மோர் தின்க்... என் வாய் ஒட்டையா இருக்குன்னு நீயே சொல்லிட்ட... சோ... அந்த ஒட்ட வழியாக என் பேச்சு வந்துட்டே தான் இருக்கும்... அது யாராலும் தடுக்க முடியாது... எவராலும் அடக்க முடியாது..." என்று டைலாக் விட்டு கொண்டு இருந்தாள் மேகா...

"ஹ்ம்ம்... உன் வாயை அடக்கவே ஒருத்தன் வருவான்... அப்ப அந்த வாய் அடங்கும்..." என்று மலர் சொல்ல...

"க்கும்... அவன் கனவில் மட்டும் தான் வரான்... அந்த மண்டையில்லா முண்டம் கனவில் மட்டும் தானே வந்து தொலைக்குது... நேரில் வந்தா நாசம் பண்ணி மோசம் பண்ணிடுவேன் டா மொசக்குட்டி பயலே..." என்று வாய்க்குள் முனங்கிக் கொண்டு இருந்தாள் அவள்...

"ஏய்... சத்தமா பேசு டி... உனக்குள்ளேயே எதையோ பேசிட்டு இருக்க..."

"அவன் வந்து கிழிச்சிட்டாலும் என்று சொல்லிட்டு இருந்தேன் மலருருரு..."

"இரு டி இரு... கூடிய சீக்கிரம் உன்னை கல்யாணம் பண்ணி... உன் மூட்டை முடிச்சு எல்லாம் கட்டி... மாமியார் வீட்டுக்கு பேக் பண்ணி விடறேன்..." என்று சொன்னார் மலர்மதி...

மேகாவோ... "வாய்ப்பில்ல ராணி... வாய்ப்பில்ல..." என்று கூறி சிரித்தாள்...

"வாய்ப்பு இருக்கு இளவரசி... வாய்ப்பு இருக்கு..."

"இல்லை ராணி..."

"அடிங்க... நானும் பார்த்துட்டே இருக்கேன்... விடாமல் என் கூட பேசி மல்லுக்கட்டிட்டு இருக்க... போடி... நான் ஒன்னும் உன்னை மாதிரி வெட்டி ஆள் கிடையாது... நேரம் ஆச்சு எனக்கு சமைக்கணும்... அப்பறம் நீ வந்து ரெடி ஆகிட்டு... என் கிட்ட டைம் ஆச்சு மலரு ன்னு தையத்தக்க தையத்தக்க என்று பரதநாட்டியம் ஆடிட்டு இருப்ப..." என்று மகளை திட்டிக் கொண்டு இருந்தார் மலர்மதி...

அவளோ சிரித்துக் கொண்டே...

"மலரே என்னை
திட்டாமல் இருந்தால்
தினமே தான் நகராமல்
அப்படியே நிற்கும்...
அது திட்டித் தான்
தீர்த்த பின்னே...
திருப்தியாக இருக்குமே
என் மனதுக்கு
நிறைவாக இருக்குமே...
ஓஓ... மலரே...
என்னை திட்டி தீர்க்கும் மலரே...
என்னை செல்லம் கொஞ்சும் மலரே...
நான் குளிக்க போறேன் மலரே..."

என்று பாடிய படி அவள் அறைக்கு சென்று விட்டாள் மேகா...

"லூச பொண்ணு..." என்று சொல்லி மலரும் சிரித்துக் கொண்டு இருந்தார்...

இதை எல்லாம் வேடிக்கை பார்த்த படி... அமைதியாக நின்று கொண்டு இருந்தார் மதிவாணன்...

அதைக் கண்ட மலரோ... "என்னங்க என்ன ஆச்சு..." என்று அவரிடம் கேட்டார்..

"இல்ல எதுக்கு இப்ப அவசரமாக குலதெய்வம் கோவிலுக்கு போகணும்... நேற்றில் இருந்தே நீ எதையோ என் கிட்ட இருந்து மறைப்பது போல இருக்கு... என் கண்ணை பார்த்து எதையும் பேச மாட்டேங்குற..." என்று யோசனையுடன் சொன்னார் மதி..

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மாமா... மனசுக்குள்ள கொஞ்சம் பயமாக இருக்கு... அதான்..."

"ஏன்... உனக்கு என்ன பயம்..."

"ஊரில் ஏதாவது பிரச்சினை ஆச்சு என்றால் என்ன பண்றது..."

"ம்ம்... அது எதுவாக இருந்தாலும் நாம தான் ஃபேஸ் பண்ணி ஆகணும்... நமக்கு கல்யாணம் ஆகி இருபத்து ஐந்து வருஷம் ஆக போகுது தானே... பழக்க வழக்கங்கள் எல்லாம் கொஞ்சம் மாறி இருக்கோம்... விடு மலர்... பார்த்துக்கலாம்... நீ எதை நினைத்தும் குழம்பிட்டு இருக்காதே... அவ்வளவு தான் சொல்வேன்..." என்று சொன்னார் மதிவாணன்...

"ஹ்ம்ம்... நீங்க சொல்றதும் சரி தாங்க... அது போலவே பண்ணலாம்..." என்றார் மலர்...

"இது தான் என் தைரியமான பொண்டாட்டிக்கு அழகு..." என்று சொல்லி சிரித்தார் அவர்...

பின்னர்... எதையோ ஞாபகம் வந்தவராக... "ம்ம்... மலர் நேற்று அந்த ஜோசியர் கிட்ட போனியே... அவர் அதை பற்றி என்ன சொன்னார்..." என்று மதி கேட்க...

"ம்ம்... அது அது... அவர் தான் குலதெய்வம் கோவிலுக்கு போயே ஆகணும் என்று சொன்னார்... அதனால் தான் ங்க..." என்று தயங்கிக் கொண்டே சொன்னார் மலர்மதி...

"சரி விடு... ஒன்னும் பிரச்சனை இல்லை... இதுவும் ஒரு நல்லது தானே... அதனால் நாளைக்கு நாம சந்தோஷமாக ஊருக்கு போய்... கோவிலில் சாமி கும்பிட்டு வரலாம்..." என்று மென் புன்னை கையுடன் சொன்னார் மதிவாணன்...

"என்னங்க உங்களுக்கு நேரம் ஆகலையா... சாருக்கு இன்னைக்கு ஆஃபிஸ் இருக்கா இல்லையா..."

"ஹ்ம்ம்... இருக்கு இருக்கு..." என்று சொல்லி ஒரு பெருமூச்சு விட்டு... "நான் போய் தான் ஆகணும்... வேற வழி..." என்று சலிப்புடன் சொல்லி... அவர் அறைக்கு போனார் மதி...

அதன் பிறகு... மலரும் சமையல் அறைக்கு சென்று... அவருடைய வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தார்...

ஒருவழியாக இருவரையும் காலேஜுக்கும் வீட்டுக்கும் அனுப்பி விட்டு... ஹாலில் இருந்த சோஃபாவில் அக்கடா வென்று கண்களை மூடி அமர்ந்து கொண்டார் மலர்மதி... எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார் என்று அவருக்கே தெரியவில்லை...

********

உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே 😍

👇👇👇👇👇
 

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
அத்தியாயம் - 11

உனை காணா விட்டாலும்
நீ என் கனவில் வந்த
அற்புத நினைவுகளால்
ஆட்கொண்டு என்
சிந்தையை இழக்க செய்து
மனதை பிரமை பிடிக்க
செய்கிறாயடா...!!!!


அன்று காலேஜுக்கு சீக்கிரமே சென்று விட்டாள் மேகா மலர்க்குழலி... அந்நேரம் பார்த்து விகாஷினியும் வரவில்லை... நைனிகாவும் வரவில்லை... வகுப்பிலும் ஆட்கள் யாரும் இருக்கவில்லை... அவள் மட்டும் தான் அந்த வகுப்பறையில் இருந்தாள்... அதனால் அவளுடைய சீக்ரெட் நோட்டை வெளியே எடுத்து பார்த்து கொண்டு இருந்தாள்...

அதில் முன்பு எழுதியதை எல்லாம் படித்து பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தாள் அவள்...

கடைசியாக இருந்ததை பார்த்து வாய் விட்டு சிரித்தவள்... அதை வாய் விட்டே படித்து... இல்லை இல்லை... பாடிக் கொண்டு இருந்தாள்...

"கனவில் கண்டேன் கண்டேன்
உன்னை கண்டேன்
என் வாழ்வில் நொந்தேனே...

கனவில் கண்டேன் கண்டேன்
உன்னை கண்டேன்
என் மனதினில் நொந்தேனே...

என் கண்கள் ரெண்டும் மூடினால்
உன் பிம்பம் மட்டுமே தோன்றுதே...
என் கண்களை நானும் திறந்தால்
உன் நிழலும் மறைந்து போகுதே...

ஏனோ நானோ
உன்னால் தானோ
மாற்றம் வந்தது போலடா
ஏனோ நானோ
உன்னால் தானோ
மாறி போனேன் போலடா..."

என்று தான் அதில் எழுதி வைத்து இருந்தது... அதை ஒரு நாள் கடுப்பில் மேகாவே தான் எழுதி வைத்தது... இந்த கவிதை அல்லாத வரிகளை பாடல் போல பாடிக் கொண்டு இருந்தாள் மலர்க்குழலி...

இன்று மீண்டும் அவளுக்கு சில வரிகளை எழுதத் தோன்றியது... அது மறந்து போகும் முன்னே அதை எழுதி வைக்க நினைத்தால் அவள்...

"கனவில் கண்டேன் கண்டேன்
உன்னை கண்டேன்
என் வாழ்வில் துடித்தேனே...

கனவில் கண்டேன் கண்டேன்
உன்னை கண்டேன்
என் மனதிலும் துடித்தேனே...

தினம் தினம் வருகிறாய்
கனவினில் கரைகிறாய்
நினைவினில் இருக்கிறாய்
காதலை கனவில் சொல்கிறாய்
ஏனடா இம்சை செய்கிறாய்

என் அனுமதி இல்லாமலே
எனக்குள் ஏனடா வருகிறாய்
மனதில் ஏனடா புதைகிறாய்
உன் நிழலோடு வாழ வைக்கிறாய்...

கனவில் கண்டேன் கண்டேன்
உன்னை கண்டேன்
என் வாழ்வில் துடித்தேனே..."

என்று எழுதி வைத்து அதை மீண்டும் ஒரு முறை பாடிப் பார்த்தாள் மேகா...

முன்பெல்லாம் திட்டிக் கொண்டு இருந்த கனவை தான் இப்போதெல்லாம் ரசிக்க ஆரம்பித்து இருந்தாள்... ஆனால்... தன்னவனின் முகத்தை பார்க்காமல் போகவே தான் அவளுக்கு கோபம் வருகிறது...

அந்த கனவை பற்றி... அதில் வரும் சுந்தரனை பற்றி மூச்சு விடாமல் புலம்பிக் கொண்டு இருப்பாளே தவிர... அதனை யாரிடமும் ரசித்து பேச விட மாட்டாள்... அவனைப் பற்றிய விஷயத்தை எல்லாம் அந்தரங்கமாக மட்டுமே வைத்துக் கொள்வாள்...

அவனைப் பற்றி அவள் மனதில் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள் என்று அவள் நண்பிகளிடம் கூட இதுவரை சொல்லிக் கொண்டது இல்லை... எல்லாரிடமும் அவனை கலாய்ப்பது போல மட்டுமே பேசுவாள் மற்றும் சிரிப்பாள்...

ஆனால் உள்ளுக்குள் அவளை அறியாமலேயே அந்த முகம் இல்லா முகுந்தன் முழுவதுமாக மூழ்கி விட்டான் என்பதை அவள் கொஞ்ச நாளாகவே உணர்ந்து கொண்டாள்... இருந்தும் அதைப் பற்றி யாரிடமும் மூச்சு கூட விடவில்லை... அதைப் பற்றி யாரிடமும் பேச பிடிக்கவில்லை என்பது தான் நூறு சதவீதம் உண்மை...

அவளுக்கு முன்னர் எல்லாம் எது எரிச்சல் தரும் கனவாக இருந்ததோ... தற்சமயம் அதுதான் அவளை உயிர்ப்புடனும் சந்தோஷமாகவும் உற்சாகத்துடனும் இருக்க உதவி செய்கிறது...

தினம் தினம் இரவு உறங்கச் செல்லும் பொழுது அந்த கனவை எதிர்பார்த்துக் கொண்டு தான் துயில் கொள்வாள்... அவன் முகம் காட்டாமல் போவது சற்று வருத்தமாக இருந்தாலும்‌... அதன் பின்னர் மனதிற்குள்ளேயே... அந்தக் கனவை மறுபடி மறுபடி நினைத்து சந்தோஷித்துக் கொள்வாள்...

ஆனால் அவளுக்கு அதில் இன்னொரு வருத்தமும் இருந்தது... மேகாவுக்கு வரும் எந்த ஒரு கனவிலும் அவளுடைய தாய் தந்தை இருவருமே இருக்க மாட்டார்கள்... அது மட்டும் அவளுக்கு துளியும் விருப்பம் இல்லாத ஒன்றாகவே இருந்தது... மத்தபடி அந்த கனவை ரசிக்கும் மனப்பக்குவம் குழலிக்கு எப்போதோ வந்து விட்டது...

அந்த சொப்பனத்தில் வரும் சுந்தரன் எப்போது அவளுடைய நிஜத்தில் வருவான்... அவளை காதல் புரிந்து... அவளில் உயிராய் கலந்து... அவளில் ஒன்றோடு ஒன்றாக இணைந்து... பிண்ணி பிணைந்து... இணை பிரியாமல் வாழும் வாழ்க்கை எப்போது கிடைக்கும் என்று தான் மனதில் நினைத்துக் கொண்டு இருக்கிறாள்...

இதை எல்லாம் கண்களை மூடி... மனதில் எண்ணிய படி தனியாக சிரித்துக் கொண்டு இருந்தாள் மேகா மலர்க்குழலி...

அவள் கண்களை திறந்து பார்க்க... "அய்யோ அம்மே பேய்... பேய்ய்இஇஇஇஇ... பிசாசு... பிசாசுசுஊஊஊஊ..." என்று வகுப்பறையில் அலறிக் கொண்டு இருந்தாள்...

அவள் தலையில் நங் என்று கொட்டி விட்டு... "அடேய் மூதேவி... நாங்க ரெண்டு பேரும் உனக்கு பேயும் பிசாசுமா தெரியுதா..." என்று சொல்லி முறைத்து பார்த்தாள் நைனிகா...

"அதானே... நைனியை பார்த்தாலும் ஒரு பேய் பிசாசும் என்று சொல்றதுல ஒரு அர்த்தம் இருக்கு ஆனா... என்னை... இந்த விகாஷினியை பார்த்து எப்படி நீ பயந்து நடுங்கலாம்... நான் என்ன அவ்வளவு மேக்கப்பா போட்டு இருக்கேன்... ஜஸ்ட் லைட்டா ஒரு டச் அப் மட்டும் தான் பண்ணி காலேஜ்க்கு வந்திருக்கேன்..." என்று பெருமையுடன் சொன்னாள் விகாஷினி...

அவளை நைனிகாவும் மேகாவும் கனல் தெறிக்க பார்த்தும் முறைத்தனர்...

"எது இது ஜஸ்ட் டச் அப்பு... கோதுமை மாவையும் மைதா மாவையும் நாலு அப்பு அப்பிட்டு வநது... இங்க வியாக்கியானம் பேசிட்டு இருக்க பாரு... உன் கன்னத்தில் தான் டி நாளு அப்பு அப்பனும்... அப்போதான் இனி இந்த மாதிரி பேசிட்டு இருக்க மாட்ட..." என்று சொன்னாள் நைனிகா...

"நைஸ் பேபி... ஐ அம் வெரி பாவம் பேபி..." என்று பாவமாக கூறினாள் விகா...

அதற்கு அவளோ... "உன்னை பாவம்னு சொன்னால்... எனக்கு பாவம் வந்து சேர்ந்து... நான் தான் அந்த பாவத்தை தூக்கு மாட்டிட்டு சாக வேண்டும்..." என்று கூறி மூக்கை உடைத்தாள்...

"சரி சரி விடு... இதெல்லாம் விகா வாழ்க்கையில் வீர தீர விளையாட்டுகள்..." என்று சொல்லி இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள் விகாஷினி...

"அடச்சீ... ரெண்டு பேரும் இப்படி மொக்கை போடுவது நிறுத்துங்க...* என்று கடுப்புடன் சொன்னாள் மேகா...

"அட ஆமா... நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருந்ததில்... உன் விஷயத்தையே மறந்துட்டோம் பாரேன்..." என்று நைனி சொல்ல...

"ஆமா டி... மறந்தே போய்ட்டோம்..." என்று விகாவும் ஆமோதித்து கூறினாள்...

"ஏய் மேகி... நான் வரும் போது எதுக்கு டி ஒரு மாதிரி..." என்று நைனி சொல்லும் போதே...

இடையில் புகுந்த விகாஷினி... "ஒரு மாதிரி என்ன ஒரு மாதிரி... மெண்டல் மாதிரி ன்னு சொல்லுங்க நாத்தனாரே..." என்றாள்...

"ஹ்ம்ம்... அந்த மாதிரி தான்... எதுக்கு டி சிரிச்சிட்டு இருந்த..."

"அதுவா..."

"ம்ம்... அதே தான்... என்னன்னு சொல்லு..."

"ஒன்னுமில்லயே... ஒன்னுமே இல்லையே..." என்று சொல்லி இளித்து வைத்தாள் மேகா...

"இல்லயே... எதுவோ இருக்கே... நீ எதையோ எங்க கிட்ட இருந்து மறைப்பது போலவே இருக்கு... மேகி மறைக்காமல் என்னன்னு சொல்லு டி..." என்று நச்சரித்து கொண்டு இருந்தாள் நைனிகா...

"அதான் அதெல்லாம் எதுவும் இல்லன்னு சொல்றேன் தானே..." என்று குரல் உயர்த்தி சொன்னாள் மேகா...

"நீ குரலை உசத்தி பேசினால்... எதுவோ ஒன்னு இருப்பது இல்லன்னு ஆகிடாது செல்லோ... திருவிழா வந்தா கோவிலுக்கு உள்ள இருக்கும் சாமி வெளியே வந்து தான் ஊரை சுற்றி ஆகணும்... அதே போல தான் உன் கேஸும்..." என்று முறைப்புடன் சொன்னாள் நைனிகா...

"ஹ்ம்ம்... ஆமா மேகா... உன் நடவடிக்கை எல்லாம் வர வர சரியே இல்ல செல்லோ... என்னமோ ஒரு மார்க்கமாகவே சுத்திட்டு இருக்க..." என்று சந்தேகத்துடனே கூறினாள் விகாஷினி...

"அது எல்லாம் உங்க மன பிராந்தி... மண்ணாங்கட்டி பிராந்தி... சோ... தேவை இல்லாமல் நீ பற்றி நினைச்சிட்டு நேரத்தை வீண் பண்ணிட்டு இருக்காதீங்க..." என்று சொல்லி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் மேகா...

அப்போது அவள் வகுப்பு கோழி ஹாசினி அவர்களிடம் வந்தாள்...

"ஓய் த்ரீ இடியட்ஸ்... என்ன பண்ணிட்டு இருக்கீங்க..." என்று கேட்டாள்...

"மேகா டார்லிக்கு பேய் பிடிச்சு இருக்கு... அதான் ஓட்டிட்டு இருக்கோம் ஹாஸ் பேபி..." என்று சொன்னாள் நைனி...

"ஹா ஹா... நான் வேணா உங்களுக்கு வேப்பிலை பறிச்சு தரவா..." என்று சொல்லி சிரித்தாள் ஹாசினி....

"அடிங்க... என்ன ஹாசி... நீயும் இவளுங்க கூட சேர்ந்து என்னை கலாய்ச்சிட்டு இருக்க... இட்ஸ் டூ டூடூடூ பேட்..." என்று சொல்லி பொய்யாக முறைத்தாள் மேகா...

"சரி சரி இப்படி சும்மா சும்மா பேசி கலாய்த்தது போதும்... நாளைக்கு ஒரே நாளில் மூணு இன்டர்நெல் டெஸ்ட் என்று சொல்லி இருக்காங்களே... அதுக்கு என்ன பண்ண போறோம்... அதை பற்றி எதாவது ஐடியா பண்ணி வச்சி இருக்கீங்களா டி..." என்று சீரியஸாக கேட்டாள் ஹாசினி‌...

"மூணு இன்டர்நெல் டெஸ்ட் எப்படி டி ஒரே நாளில் எழுதுவது... இந்த ஹெச்.ஓ.டிக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லையா... இதில் ஆயிரத்து எட்டு ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் வேற... அது எல்லாம் பார்க்கும் போதே கடுப்பு ஆகுது...இதுல எப்படி நாம நாளைக்கு எழுத போறோம்னு தெரியலை... அதை நினைத்தாலே பயமா தான் இருக்கு...." என்று தீவிரமாக கூறினாள் விகாஷினி...

"நானும் அதை நினைத்து தான் ரொம்ப பயந்துட்டு இருக்கேன் விகா..." என்று நைனியும் ‌சொன்னாள்...

"அடியேய் லூசுகளா... நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க... எதை பற்றி பேசிட்டு இருக்கீங்க... ஆனால் ரொம்ப சீரியஸாக பேசிட்டு இருக்கீங்க... அப்படி என்ன முக்கியமான விஷயம்..." என்று எதுவும் புரியாமல் கேட்டாள் மேகா...

அவர்களும் மூவரும் இவளை விசித்திரமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்...

"எதுக்கு டி என்னை ஏலியனை பார்ப்பது போல பார்த்துட்டு இருக்கீங்க..."

"என்ன டி படிப்ஸ் மேடம்... எங்க கிட்டயே லந்தா..." என்று கேட்டாள் ஹாசினி...

"ஆனாலும் நீ பண்றது ரொம்ப ஓவர் மேகி... உனக்கு காமெடி பண்ண வேற விஷயமே கிடைக்கலையா..." என்றாள் நைனிகா...

"ஏய் உண்மையை சொல்லு டி..." என்று சொன்னாள் விகாஷினி...

"மூணு‌ பேரும் என்ன டி‌‌ ஆளாளுக்கு என்ன என்னமோ சொல்லிட்டு இருக்கீங்க... எனக்கு ஒன்னுமே புரியல..." என்று குழம்பிய முகத்துடன் சொன்னாள் மேகா...

"ஓய்... அப்போ உனக்கு எதுவுமே தெரியாதா..." என்றாள் ஹானிசி...

"இப்ப வர ஆத்திரத்துக்கு மூணு பேர் மூஞ்சியிலும் மூணு குத்து குத்த போறேன் பாருங்க டி..." என்று சினத்துடன் சொன்னாள் மலர்க்குழலி...

"ஹே... வெயிட் வெயிட் மேகா பேபி... நீ மொதல்ல வாட்ஸ்அப் பார்த்தியா..." என்று பொறுமையாக சொன்னாள் ஹாசினி...

"ம்ஹூம் இல்லயே... ஏன் ஹாஸ்... எதாவது இம்பொட்டன்ட் நியூஸ் இருக்கா என்ன..." என்று இயல்பாக கேட்டாள் மேகா...

"ஓஹோ... நீ மொதல்ல வாட்ஸ்அப்பில் நம்ம காலேஜ் க்ரூப்பை ஒபென் பண்ணி பாரு... அப்போ தெரியும்... உனக்கு அது இம்பொட்டன்ட் நியூஸா.... இல்ல... அன்இம்பொட்டன்ட் நியூஸா என்று தெரிய வரும்..." என்றாள் அவள்...

"ஃபோனில் வர மெசேஜை எல்லாம் பார்க்கவே மாட்டீயா மேகா... அப்படி என்ன மேடம் வெட்டி முறிக்கும் வேலையை பார்த்துட்டு இருந்தீங்க..." என்று திட்டிக் கொண்டு இருந்தாள் நைனிகா...

"நைனி வீட்டில் கொஞ்சம் வேலை இருந்தது டி... அதான் நான் ஃபோனை எடுக்கவே இல்லை... அப்பறம் எப்படி எனக்கா இது எல்லாம் தெரியும்..." என்று சொல்லிய படி... அவள் கைபேசியில் உள்ள புலனத்தை திறந்து பார்த்தாள்...

அதில் உள்ள செய்தியை பார்த்து விட்டு... கொஞ்சம் அதிர்ச்சி தான் ஆகினாள்...

"என்ன டி இப்படி எல்லாம் போட்டு வச்சி இருக்காங்க..." என்று அதிர்ந்து போய் கூறினாள் மேகா...

********

உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே 😍

👇👇👇👇👇
 
Last edited:

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
அத்தியாயம் - 12

உன் மேல் கொண்ட காதலால்...
என் சுயத்தை தொலைகிறேனடா...
அதில் வருத்தமேதும் இல்லையடா...
கனவில் உன் உருவத்தை அன்றாடம்
கண்டு மலைப்பாக நிற்கிறேனடா...
ஆனால்... உன் அன்புள்ள முகத்தை
மட்டும் காட்ட மறுப்பது ஏனடா...

எனை அறியாமல்
என் மெல்லிய மனதிற்குள்
கள்வனாக நுழைந்து
என் மனதை கவர்ந்து
என் இதயத்தை ரகசியமாக
அபகரித்தது ஏனடா...

கனவிலாவது உன் முகத்தில்
அணிந்திருந்த திரையை விலக்கி
எனக்கு உன் முகத்தை
காண்பிக்க கூடாதா...
என் மனம் கவர்ந்த கள்வனே...
உன் மனதில் குடியிருக்க
உன் காதலால் மனக்கதவை
எனக்காக திறப்பாயா..???


அது தகவல் அவளுக்கு நேற்று இரவே வந்து இருந்தது... ஆனால்... வீட்டில் அவள் இருந்த சூழ்நிலையில் இதை எல்லாம் பார்க்காமலே உறங்கி விட்டாள்...

இப்போது அந்த சுற்றறிக்கை செய்தியை பார்த்து விட்டு... கொஞ்சம் அதிர்ச்சி ஆகி இருந்தாள் மேகா மலர்க்குழலி...

"என்ன டி இப்படி எல்லாம் போட்டு வச்சி இருக்காங்க...." என்று அதிர்ந்து போய் கூறினாள் அவள்...

"நீ படிச்ச மாதிரி தான் போட்டு வச்சி இருக்காங்க மேகி..." என்றாள் விகாஷினி...

"ஹாசினி... உன்னை உன் பக்கத்து டிபார்ட்மெண்ட் ஃப்ரண்ட் கூப்பிட்டு இருக்கா... என்னன்னு போய் கேளு டி..." என்று ஹாசினியை அழைத்தாள் அவர்கள் வகுப்பு தோழி...

"சரிங்க டி த்ரீ இடியட்ஸ்... நான் போய்ட்டு அப்பறம் வரேன்... நீங்க பேசிட்டு இருங்க..." என்று சொல்லி விட்டு... ஹாசினி அங்கிருந்து சென்று விட்டாள்...

"ச்சே... அவங்களுக்கு எல்லாம் மனசாட்சி என்ற ஒன்று இல்லவே இல்லயா... நாம எப்படி எழுதுவதாம்... எப்பவும் இவங்களுக்கு இதே பொழப்பு தானா... எதுக்கு இப்படி சொல்லாம கொல்லாம திடு திப்புன்னு இன்டர்நெல் டெஸ்ட் வைக்கிறாங்க... அவங்க மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்காங்க... இது மேனேஜ்மென்ட் காலேஜாக இருந்தால்... அவங்க இஷ்டத்துக்கு என்ன வேணாலும் பண்ணிட்டு இருப்பாங்களா... எனக்கு செம டென்ஷன் ஆகுது..." என்று கோபத்துடன் பொரிந்து கொண்டு இருந்தாள் மலர்க்குழலி...

"மேகா... சில் டி... எதுக்கு இவ்வளவு டென்ஷனாக பேசிட்டு இருக்க... உன்னால தான் இதை மேனேஜ் பண்ண முடியுமே..." என்று அவளை ஆறுதல் படுத்த கூறினாள் நைனிகா...

"ப்ச்ச்... நைனிகா என்னால இதை மேனேஜ் பண்ணி படிச்சு எழுத முடியும்... ஆனால் எல்லாரும் இதே போல இருக்க மாட்டாங்க தானே... அதிலும் ஆயிரத்து எட்டு ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் மென்ஷன் பண்ணி இருக்காங்க... அதை எல்லாம் பார்க்கும் போது இரிட்டேட் ஆகுது டி..." என்று கடுப்புடன் சொன்னாள் மேகா...

"இந்த காலேஜ் அப்படி தான்... அது உனக்கே தெரியும் தானே... அது தெரிந்து தானே நாம பரவாயில்லை என்று நினைத்து இந்த காலேஜில் சேர்ந்தோம்..." என்று கூறினாள் விகாஷினி...

"அதுக்கு ன்னு இவங்க என்ன பண்ணாலும் அமைதியாகவே இருக்க சொல்றியா... நாளைக்கு நமக்கு எக்ஸாம்னு ஒரு நாளைக்கு முன்னாடி சொன்னா எல்லாரும் எப்படி எழுதவதாம்... இதுல யாரும் லீவ் போட கூடாது... அப்படி நீங்க லீவு போட்டா எல்லா பேப்பரும் அவுட் தான் அப்படின்னு மென்ஷன் பண்ணி இருக்காங்க... நாமளே செத்து போறதா இருந்தா கூட... மொதல்ல இவங்களுக்கு டெஸ்ட் எழுதி கொடுத்துட்டு அப்புறம் தான் சாவுன்னு சொல்லுவாங்க போல... அப்படிக் கூட பண்ணாலும் பண்ணுவாங்க இதுங்க எல்லாம் அப்பேர்ப்பட்ட மனசாட்சி இல்லாத வெறும் கல்லுங்க..." என்று மேகா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே... அவருடைய வகுப்பு ஆசிரியர் உள்ளே நுழைந்து கொண்டு இருந்தார்...

"மேகா மேகா... ப்ளீஸ் கன்ட்ரோல் யோர் செல்ஃப்... ப்ளீஸ் டி... செல்லம் தானே... எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துக்கோ தாயே... இந்த புண்ணியவதி கிட்ட மாட்டினா நாம மூணு பேரும் கொத்து பரோட்டா தான் ஆயிடுவோம்... சோ... எங்களை மனதில் வைத்து கம்முனு இரு..." என்று மேகாவிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் விகாஷினி...

"ஆமா டி எருமை... உன் நார வாயை மூடிட்டு கொஞ்சம் நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இரு மா... எங்களால கண்ட கண்ட பொய் எல்லாம் பேசி தப்பிக்க வராது..." என்று நைனியும் புலம்பிக் கொண்டு இருந்தாள்...

"நீங்க ரெண்டு பேரும் மொதல்ல வாயை மூடிட்டு இருங்க... அது போதும் எனக்கு..." என்று சொல்லி... அவர்களை முறைத்து விட்டு மௌனமாக நின்றாள் மலர்க்குழலி...

அதன் பிறகு அவர்களின் வகுப்புகள் தொடங்கியது... அதனால் இதை பற்றி யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக அவர்கள் எடுக்கும் பாடத்தினை கவனித்து கொண்டு இருந்தார்கள்...

ஒரு வழியாக காலை வகுப்புகள் எல்லாம் முடிந்து... மதிய உணவு இடைவேளை வந்தது...

"ஏய் மேகா... என்ன இன்னைக்கு ஃபுல்லா ஒரே யோசனையாகவே இருக்க..." என்று கேட்டாள் நைனிகா...

"நாளைக்கு எழுத போகும் இன்டர்நெல் எக்ஸாமை நினைத்து தான்... அது தான் கொஞ்சம் மைண்ட் அப்செட் ஆகவே இருக்கு..." என்று மெல்லிய குரலில் சொன்னாள் மேகா...

அவளை சிறு அணைப்புடன் பிடித்த நைனி... "உனக்கு இது எல்லாம் மேட்டரே கிடையாது தானே மேகி... அப்பறம் ஏன் இதை நினைத்து பயந்துட்டு இருக்க... எப்பவும் இருப்பது போல கூலாகவே இரு செல்லோ..." என்று சொன்னாள்...

"ப்ச்ச்... நான் அதை நினைத்து நல்லா பயப்படவே இல்ல டி... இது வேற விஷயம் அதுக்கு தான் கொஞ்சம் அப்செட் ஆகவே இருக்கு..." என்று கவலையுடன் கூறினாள் மேகா மலர்க்குழலி...

"அப்படி என்ன டி வேற விஷயம்... என்ன நான் சொப்பன சுந்தரன் அவனுடைய திருமுகத்தை காண்பித்து... உன்னை பயம் காட்டி விட்டானா என்ன..." என்று சிரிக்காமல் சொன்னாள் விகாஷினி...

"நாயே... உன்னை கொல்லப் போறேன் பாரு... இப்ப எதுக்கு டி தேவை இல்லாம அவன் பேச்சை எடுக்கிற... அவனப் பத்தி நான் யோசிக்கவே இல்லை... அதனால பேசாம கம்முனு இருந்துடு... இல்ல உன் மண்டையை இந்த மரத்துல முட்டி விடுவேன்... ஜாக்கிரதை..." என்று சினத்துடன் சொன்னாள் மலர்க்குழலி...

"அடடா... என்ன விஷயம் என்று சொன்னால் நாங்க எங்க கருத்தை பகிரங்கமாக சொல்லி... உனக்கு அறிவுரை வழங்குவோம் மகளே... அதை விட்டுட்டு இப்படி மூச்சை அடக்கி மாங்கு மாங்குன்னு பேசிட்டு இருக்க... சில்லி கேர்ள்..." என்று சொல்லி சிரித்தாள் நைனிகா...

"ஆஆஆ... மொதல்ல இப்படி எதுக்கும் உதவாத பேச்சை நிறுத்தி தொலைங்க டி... என்னால சத்தியமா இதை எல்லாம் காது கொடுத்துக் கேட்க முடியல... உங்க பேச்சை கேட்க எனக்கு அவ்வளவு கொடுமையாக இருக்கு... எனக்கு தான் சுவற்றில் போய் மாங்கு மாங்குன்னு முட்டிக்க வேணும் போல இருக்கு..." என்று பாவமாகவும்... அதே சமயம் கோபமாகவும் சொன்னாள் மேகா...

"சூப்பரோ சூப்பர்... அப்படி பண்ணால் எங்க மேகி பேபியை அவளுடைய நிஜ வீட்டுக்கு அனுப்பிட வேண்டியது தான்..." என்று நைனிகா சொல்ல...

"ஆஹா... செம டி அண்ணியாரே... ஹைஃபை போட்டுக்கோ..." என்று சொல்லிய விகாஷினி அவளிடம் கை அடித்துக் கொண்டாள்...

மேகாவோ அதற்கு மேல் எதுவும் பேசாமல்... இருவரையும் அமைதியாக பார்த்துக் (முறைத்துக்) கொண்டு இருந்தாள்...

"சரி சரி செல்லோ... சாரி சாரி... ஜோக்ஸ் அபார்ட்... ஹ்ம்ம்... இப்ப சொல்லு பேசி... எதாச்சும் ப்ராப்ளம் ஆஆ..." என்று கேட்டாள் நைனிகா...

"ம்ம்..."

"என்ன டி ஆச்சு..." என்று விகா கேட்க...

அவளை பார்த்த மேகா... "நாளைக்கு என்னால வர முடியாது டி..." என்று வருத்தம் நிறைந்த குரலில் சொன்னாள்...

"என்னது வர முடியாதா... ஏன்... எதுக்கு... நாளைக்கு நீ வரலைன்னா அவ்வளவு தான் டி... நம்ம ஹிஸ்டரியா ஆஃப் டைனோசர் உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடும்... அதுவும் இல்லாம நாளைக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி இருப்பவர்களுக்கு ஒரு சின்ன மீட்டிங் வேற இருக்கு... அது கம்பள்சரி அட்டென்ட் பண்ணி ஆகணும்... இட்ஸ் மோஸ்ட் இன்பொர்ட்ன்ட் டி மேகா..." என்று மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டு இருந்தாள் நைனிகா...

"நாளைக்கு வருவது இம்பொர்ட்ன்ட் அப்படின்னு எனக்கும் தான் தெரியுது... ஆனால்..."

"என்ன டி ஆனா ஆவன்னா ன்னு சொல்லிட்டு இருக்க... கிளாஸ் ஸ்டார்ட் ஆவதற்குள் சீக்கிரம் சொல்லித் தொலை மேகா..." என்று கத்தினாள் விகா...

"என் அம்மாவுடைய சொந்த ஊர் வேலூர்... நாளைக்கு எங்க பாட்டி ஊருக்கு போகலாம்னு இருந்தோம் டி... இப்ப தான் முதல் முறையாக அந்த ஊருக்கு போக போறேன்... அம்மா தீடிரென குலதெய்வம் கோவிலுக்கு போகணும் என்று ஒரே பிடிவாதமாக இருந்தாங்க... அதான் அங்க போகலாம்னு இன்னைக்கு தான் முடிவு பண்ணி எனக்கு சொன்னார்... நானும் அதை கேட்டு ரொம்ப எக்ஸ்சைட்டா இருந்தேன்... ஆனால் இப்ப பாரு இப்படி ஆகி போச்சு... எனக்கு இதுவும் வேணும் அதுவும் வேணும்...." என்று தொய்ந்த குரலில் சொல்லி...

மீண்டும்... "இப்ப என்னால ஊருக்கு வர முடியாது என்று சொன்னால் அம்மா வேற ரொம்ப திட்டுவாங்க... இந்த டைனோசர் கிட்ட பர்மிஷன் கேட்கலாம் என்றாலும் அது கண்டிப்பா நோ தான் சொல்லும்... கூடவே சேர்த்து சில பல டோஸ்கள் வேற இனாமாகக் கிடைக்கும்... அந்த பேச்சை எல்லாம் எவன் வாங்குவான்..." என்று சலிப்புடன் கூறினாள் மேகா...

"மேகா நீ வேணா நம்ம டைனோ (டைனோசர்) கிட்ட பேசேன்... இந்த மாதிரி அந்த மாதிரி எதையோ ஒன்னு சொல்லி... நீ அவங்களை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணேன் டி செல்லோ..." என்று யோசனை சொன்னாள் நைனிகா...

"ஐடியா சொல்லும் மூஞ்சியை பாரு... நம்ம ரீசன் சொன்ன உடனே அந்த டைனோ அப்படியா செல்லம்... சரிங்க தங்ககுட்டி நீங்க எவ்வளவு நாள் வேணாலும் லீவ் எடுத்துக்கோங்க அப்படின்னா சொல்ல போறாங்க... பாரபட்சமே பார்க்காமல் மொத்த பேப்பரிலும் ஃபெயில் பண்ணி விட்டு விடுவாங்க..." என்று கடுப்புடன் கூறினாள் விகாஷினி...

"ஹ்ம்ம்... நீ சொல்றதும் உண்மை தான்... அது இல்லாமல் நான் அந்த டைனோசர் கிட்ட எல்லாம் பேச்சு வாங்குவதை விட... என் அம்மா கிட்ட பேச்சு வாங்கிக் கொள்வதே பெட்டர் ஆப்ஷன் தான்... என்னை திட்ட என் அம்மாக்கு உரிமை இருக்கு... ஆனால் இவங்களுக்கு எல்லாம் உரிமை இல்லை... நான் போய் வான்டட் ஆஆ திட்டு வாங்க நினைப்பேனா... ப்ச்ச்... அம்மா கிட்ட தான் எதாவது ஒன்னு பேசணும்... அவங்களை கூட கெஞ்சி கொஞ்சி நைசா பேசி மலை இறக்கி விடலாம்... இந்த ஹெச். ஓ. டி. கிட்ட பேசுவதை விட என் வீட்டுமாதா மலர் தேவி இஸ் மோர் பெட்டர்..." என்று சொல்லி சிரித்தாள் மலர்க்குழலி...

"பட்... எதுக்கும் ஒரு வாட்டி ஹெச். ஓ. டி. கிட்ட கேட்டு தான் பார்க்கலாமே... நாம வாங்காத திட்டா... கேட்டுட்டு திட்டு வாங்கிக் கொள்ளலாம்... தப்பில்லை மேகி பேபி..." என்று கூறினாள் நைனிகா...

"ஹ்ம்ம்... நீ சொல்றதிலும் ஏதோ ஒரு லாஜிக் இருக்கு... ஆனா எனக்கு அத பண்ண தோண மாட்டேங்குது..." என்று தோள்களை குலுக்கி சொன்னாள் மேகா...

"அவ்வளவு தானே... நான் சொல்ற மாதிரி பண்ணலாம்... அது ஓகே வா என்று சொல்லு..." என்று சொல்லி விகாவை பார்த்தாள் நைனி...

"ஏய் பன்னி குட்டி.... இப்ப எதுக்கு என்னை நோக்கிட்டு இருக்க... உன் பார்வை கூட சரி இல்ல டி..." என்று பதறிப் போய் சொன்னாள் விகாஷினி...

"மேகி நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரிந்ததா..." என்று சொல்லி நமட்டு சிரிப்பு சிரித்தாள் நைனிகா...

"ஓஹோ... புரிந்தது... நன்றாக புரிந்ததே... நம் திட்டத்தை சிறப்பாக செயல்ப் படுத்தி விடுவோமா..." என்று கூறி மேகாவும் சிரித்தாள்...

"எருமைகளா... என்னை அந்த டைனோசர் கிட்ட கோர்த்து விடாதீங்க டி... நான் ரொம்ப ரொம்ப பாவம் டி... நைனி என் எதிர்கால அண்ணி நீ தான்... நீ இப்படி எல்லாம் என்ன மாட்டி விட்டா... உனக்கு கல்யாணம் ஆன பிறகு... நான் உன்னை நாத்தனார் கொடுமை பண்ணி அழுக வைப்பேன் டி..." என்று கெத்தாக சொல்வதற்கு பதிலாக வித்தாக சொன்னாள் விகாஷினி...

"நோ நோ நோ... நீ எல்லாம் அதை பற்றி சொல்ல கூடாது... என்னை உன் அண்ணன் பத்திரமாக பாதுகாப்பார்... அவர் இருக்க எனக்கு ஏன் மகளே பயம் வரப் போகிறது..." என்று சொல்லிய பின்னரே என்ன சொன்னோம் என்று நினைத்து நாக்கை கடித்து கொண்டு... அவர்களை பார்த்து ஹிஹி என்று சிரித்து வைத்தாள் நைனிகா...

"நீ ஒரு திருந்தாத கேஸ் டி..." என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டு கொண்டாள் மலர்க்குழலி...

"சரி விடு பேபி... என்னை அப்பறமா கழுவி ஊற்றலாம்... இப்ப மொதல்ல விகா மேட்டரை பார்க்கலாம்... அவ தான் நம்முடைய ஐயன் கேர்ள்... சோ... நவ் ஷி இஸ் அ எக்பெரிமெண்டல் ராட் (so... now she is a experimental rat) ..." என்று நைனி சொல்ல...

"அங்க போய்ட்டு இவ வாங்கும் திட்டில் எனக்கு சிரிப்பு வராமல் இருக்கணும் கடவுளே..." என்று சொல்லி சிரித்தாள் மேகா...

அவர்கள் இருவரையும் எரிமலை வெடித்துச் சிதறுவதை போல முறைத்துக் கொண்டு இருந்தாள் விகாஷினி...

"என்ன டி விகா... நீ லாவா குழம்பு செய்ய போறியா..." என்று கேட்டு வைத்தாள் நைனிகா...

"புரியல..."

"இல்ல உன் அழகு முகம் சிவப்பு சிவப்பு ஆவுது... அதை சுரண்டி சட்டியில் போட்டு குழம்பு வைக்க போறியா என்று கேட்டேன்..." என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு... விளக்கம் வேறு கொடுத்தாள் நைனி...

அந்த விளக்கத்தை கேட்ட இருவருக்குமே சிரிப்பு தான் வந்தது... மேகா பக்கென்று சிரித்து விட... விகாவோ முதலில் அவளை முறைத்து பார்த்தவள்... பின்னர் முடியாமல் அவளும் சிரித்து விட்டாள்...

"ஹ்ம்ம்... எப்படியும் ரெண்டு பேரும் என்னை விட போறது இல்ல... என் கை காலை கட்டியாவது டைனோ கிட்ட கூட்டிட்டு போவீங்க... உங்களுக்கு எதுக்கு வீண் சிரமத்தை தரணும்... வாங்க நானே போய் மொக்கை வாங்கிட்டு வரேன்... அப்பறம் அதை நினைத்து பங்கு போட்டு கெக்க பெக்க ன்னு வயிறு வலிக்க சிரிக்கலாம்..." என்று விகாஷினி சொல்ல...

"அந்த பிரியாணி போல
மனம் படைச்ச நல்லவளே...

பெப்சி ஜூஸை போல
குணம் படைச்ச வளந்தவளே...

வாய்களிலே ...
ஒரு பரோட்டா எடுத்து...

உனக்கும் எனக்கும்
சம்பந்தம் இல்லன்னு
சொல்லிட்டா பாரு...

அந்த நல்லவ பேரு...
அந்த நல்லவ பேரு..."

என்று கையில் சோக வயலின் வாசித்து வாயில் பாடிக் கொண்டு இருந்தாள் நைனிகா...

"நைனி அது கண்டிப்பாக விகாஷினி பேர் மட்டும் கிடையாது... அவ போய் அவளுக்கும் பரோட்டாவுக்கும் சம்மந்தம் இல்லன்னு சொல்வாளா... நோ... நெவர்... அவள் ஒரு பரோட்டா பிரியை என்று உனக்கு தெரியும் அல்லவா..." என்று நைனிக்கு எடுத்து கொடுத்தாள் மேகா...

"அது சரி தான்... அந்த இடத்தில் வேற எதாவது போட்டுக்கலாம்..."

"இதோ பாருங்க டி... இப்ப நம்ம டைனோ கிட்ட போக போறோமா இல்லையா... அப்பறம் எனக்கு மனசு‌ மாறி விட்டால்... நான் எங்கேயும் வர மாட்டேன் சொல்லிட்டேன் ஆமா..." என்று சொல்லி முறைத்தாள் விகா...

"சரி வாடி ராசாத்தி... போய் டோஸு வாங்களாத்தி... அதை கேட்டு சிரிக்கலாத்தி.." என்று பாடிய படி அவளை தள்ளிக் கொண்டு டிபார்ட்மெண்ட் நோக்கி சென்றாள் நைனிகா...

அவர்கள் பின்னோடு மேகாவும் சிரித்துக் கொண்டு சென்றாள்...

இந்த விஷயத்தில் அவர்களுக்கு விடை என்ன என்பது ஏற்கனவே தெரிந்தாலும்... ஒரு அட்வெச்ஞருக்கு (adventure) இவர்கள் மூவரும் இப்படி செய்து கொண்டு இருக்கிறார்கள்...

விகாஷினி அவர்களின் துறை தலைவியிடம் சென்று மேகாவின் காரணத்தை அப்படியே ஒப்புவித்து கூறினாள்...

அதற்கு அவரின் பதிலோ... கேட்பவர்கள் காதில் இருந்து ரத்தம் வருவது போல இருந்தது... மூவரும் எதையும் இதயம் கொண்டவர்களாக நின்று அதை எல்லாம் சுவாசித்து (கேட்டுக்) கொண்டு இருந்தார்கள்...

அந்த அர்ச்சனை ஆராதனைகளை எல்லாம் முடித்து விட்டு வெளியே வந்ததும் மூவரும் சேர்ந்து குபீர் சிரிப்பு சிரித்தார்கள்...

அதை பற்றி பேசிக் கொண்டு இருப்பதிலேயே அந்த கல்லூரி நாள் முடிவடைந்தது...

மேகாவும் தாயிடம் என்ன சொல்லி... எப்படி எல்லாம் அவரை சமாதானம் செய்யலாம் என்று மனதிற்குள் பற்பல கணக்குகளை போட்ட படி வீட்டை நோக்கி வண்டியை விட்டுக் கொண்டு இருந்தாள்...

********

உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே 😍

👇👇👇👇
 

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
அத்தியாயம் - 13

அனைத்தும்
இன்னல்களையும்
உடைத்து எறிந்து...
இன்முகத்துடன்
நம் வாழ்வை
நடத்திச் சென்றால்...

கரடு முரடான
அனுபவம் கூட.‌‌..
நம் வாழ்க்கைக்கு
அழகு சேர்க்கும்...


அன்று ஆரனுக்கு பகல் பொழுதில் வேலை என்பதால் ஒரு சில பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்து சாப்பிட்டு கொண்டு இருந்தான்...

அப்போது அவனுடைய ஃபோன் கத்திக் கொண்டே இருக்க... அதில் வரும் ரிங்டோனை வைத்தே தாய் தான் அழைத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு... அவசர அவசரமாக சென்று சார்பில் இருந்த ஃபோனை எடுத்து... அட்டென்ட் செய்து காதில் வைத்தான்...

"ஹான்... மா சொல்லுங்க..." என்று சொல்லிய படி சாப்பிட்டு கொண்டு இருந்தான் ஆரன்...

"என்ன பா நீ சாப்பிட்டு இருக்கீயா..." என்று பானுப்ரியா கேட்க...

'அய்யய்யோ டக்குன்னு பொய் சொல்ல வரலையே... என்ன பண்றது சரி சரி உண்மையை சொல்லி காது மூடிப்போம்...' என்று மனதில் நினைத்து கொண்டு... "ம்மா... பிரட் டோஸ்ட் பண்ணி சாப்பிட்டு இருக்கேன்..." என்று மெல்லிய குரலில் சொன்னான் செழியன்...

"டேய் செழியா... உனக்கு எவ்வளவு வாட்டி சொல்றது காலங்காத்தால இப்படி ரொட்டி திங்காத ன்னு சொல்லி இருப்பேன்... உனக்கு உப்புமா கின்டி தின்ன கை வலிக்குதா... இல்ல தோசை மாவு வாங்கி தோசை ஆச்சும் ஊற்றி... தொட்டுக்க எதாவது சட்னி பண்ணி சாப்பிட்டு இருக்கலாம் தானே... வர வர நீ ரொம்ப சோம்பேறி ஆகிட்ட செழியா... இப்படி சாப்பிட்டு உனக்கு உடம்புக்கு ஏதாவது வந்தால் என்ன பண்ணுவ... உன் உடம்பை பற்றி அக்கறையே கிடையாத...." என்று மூச்சு விடாமல் திட்டிக் கொண்டு இருந்தார் பானுப்ரியா...

"அம்மா எனக்கு உடம்பு மேல அக்கறை இல்லாமலா டெய்லி ஜிம் போய் உடம்பை ஃபிட் ஆக வைத்து இருக்கேன்..."

"நான் சொன்னது உன் கட்டு கட்டான உடம்பை பற்றி சொல்லல... நான் சொல்லிட்டு இருப்பது உன் ஆரோக்கியத்தை பற்றி மட்டும் தான்..."

"நான் சொன்னது ரெண்டையும் பற்றி தான் மா..." என்று ஆரன் சொல்ல...

"ஓஹோ... வீட்டுக்கு வாடா உனக்கு இருக்கு... கம்மக் கஞ்சியை காய்ச்சி உன் வாயிலேயே ஊற்றி விடறேன்..." என்று சீறினார் பானு...

"ஆஹா... ம்மா... நான் ஒன்னும் சின்ன பப்பா கிடையாது..."

"ஆனா நீ எனக்கு என்னைக்கும் சின்ன பிள்ள தான் செழியா..."

"அடப்போ மா... அப்போ என்னை இடுப்பில் தூக்கி வச்சி செல்லம் கொஞ்சு..."

"அப்படி எல்லாம் என்னால பண்ண முடியாது... ஆனால் உன்னை என் மடியில் படுக்க வைத்து தாலாட்டி சீராட்டுறேன்..." என்று பானு சொல்ல... அதை கேட்டவனின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது...

"நானும் உங்களை ரொம்பவே மிஸ் பண்றேன் மா... ஊரிலிருந்து வந்து மூணு நாள் தான் ஆச்சு ஆனாலும் உங்க ஞாபகமாவே இருக்கு மா..." என்று மெல்லிய குரலில் சொன்னான் செழியன்...

"அப்போ ஊருக்கு கிளம்பி வர வேண்டியது தானே..."

"ம்ஹூம்... வேலை இருக்கு..."

"என் மகனுக்கு கூழுக்கும் ஆசை... மீசைக்கும் ஆசை... ஹ்ம்ம்... உன்ன வெச்சி இருக்கேன் நான் ஒரு மாங்கா ஊறுகாயை கூட போட முடியாது டா..." என்று சலித்து கொண்டே சொன்னார் பானுப்ரியா...

"சரி சரி விடுங்க மா..." என்று சொன்னான் அவன்...

"செழியா..."

"சொல்லுங்க ம்மா..."

"உன் கிட்ட ஒன்னு சொல்ல தான் போன் பண்ணேன்..."

"ம்ம்... என்ன விஷயம்..."

"இன்னும் 2 வாரத்தில் நம்ம ஊர் திரும்ப வருது... அதுக்கு நீ கட்டாயம் ஒரு வாரம் லீவ் போட்டுட்டு ஊருக்கு வரணும்..." என்று உறுதி நிறைந்த குரலில் சொன்னார் பானு...

"ம்மா... அது வந்து..." என்று இழுத்தான் ஆரன்...

"மூச்... வந்து போயின்னு எதுவும் என் கிட்ட காரணம் சொல்லிட்டு இருக்க கூடாது செழியா...‌ நீ கட்டாயம் ஊருக்கு வந்து தங்கி திருவிழாவை முடிச்சிட்டு தான் போகணும்... சாக்கு போக்கு சொல்லிட்டு இருந்தா... நானே உன்னைத் தேடி பெங்களூரு வந்து விடுவேன்... பாத்துக்க..." என்று குரல் உயர்த்தி சொல்லிக் கொண்டு இருந்தார் அவர்...

"ம்மா ம்மா... இவ்வளவு சீரியஸாக நீங்க பேசி தான் ஆகணுமா... உனக்கு இது கொஞ்சம் கூட செட் ஆகலை மா... சத்தியமா எனக்கு சிரிப்பு தான் வருது... ம்மா ப்ளீஸ்... நான் கொஞ்ச நேர சிரிச்சிக்கட்டுமா..." என்று சொல்லி தனது பதிலை எதிர்பார்க்காமல் சிரித்துக்கொண்டே இருந்தான் ஆரன் செழியன் நந்தியவர்மன்...

"சிரிக்காத செழியா... நான் உன் கிட்ட கோபமாக பேசிட்டு இருக்கேன் டா... கொஞ்சமாவது காது கொடுத்து சிரிக்காமல் கேளேன்..." என்று கத்தி சொன்னார் அவனின் தாயார்...

"சரி மா... நீங்க சொல்லுங்க... அது காமெடியாக இருந்தாலும் நான் சீரியஸாக கேட்டுக் கொள்வேன்..." என்றான் ஆரன்....

"மகனே நீ ரொம்ப பண்ற தான‌... உன் அலும்பல் ‌தாங்க முடியலை..." என்று சொல்லும் போதே பானுவிற்கும் சிரிப்பு வந்து விட்டது...

"சொல்லுங்க மா ஏதோ சீரியஸாக சொல்லிட்டு இருந்தீங்களே..." என்று அம்மாவிற்கு ஞாபகப் படுத்தினான் ஆரன்...

"ஹ்ம்ம்... நீ ஒரு வாரத்திற்கு முன்னமே ஊருக்கு வர வேண்டும்... வந்து ஊர் திருவிழாவை முடிச்சு... சொந்த பந்தங்களுடன் கூடி இருந்து பொழுதை கழித்து... சந்தோஷமா இருக்கணும்...

அது மட்டும் இல்லாம... உன் அப்பாவும் பாவம் தான் டா செழியா... நீ எங்க வரணும் என்று ரொம்ப ஆசைப் படறாரு... ஆனால் அதை வெளியே சொல்ல மாட்டேங்கிறார்... அவருடைய ஈகோ அதுக்கு ஒத்துழைக்க மாட்டேங்குது... அதான் அந்த மனுஷன் உள்ளுக்குள்ளேயே எல்லாத்தையும் பொலம்பிட்டு இருக்காரு...

எனக்காக இல்லாட்டியும் பரவாயில்லை.. ஆனா உங்க அப்பாவுக்காக ஒரு வாரம் ஆச்சு நீ வீட்டில் தங்கிட்டு போ... சரி உன் கூட பேசாம வீம்பு பண்ணாலும்... உன் முகத்தைப் பார்த்தே ரொம்ப சந்தோஷப்படுவார்... தயவு செய்து எப்படி ஆச்சும் ஊருக்கு வந்து விட செழியா..." என்று கவலையுடன் சொல்லிக் கொண்டு இருந்தார் பானுப்ரியா...

"அம்மா இப்போ இவ்வளவு ஏமோஷனல் டாக் அவசியமா... நீங்க வா வென்று சொன்னா நான் அங்கே வரப் போறேன் அவ்வளவு தானே... அதை விட்டுட்டு நீங்க இப்படி வருத்தமாக பேசி என்னையும் கஷ்டப் படுத்திட்டு இருக்கீங்க..." என்று கூறினான் ஆரன்..

"அவ்ளோ தானே... சரி அப்போ ஊருக்கு வா செழியா... நான் வருத்தமாக எல்லாம் பேச மாட்டேன்..." என்று அழுத்தமாக சொன்னார் அவர்....

"ஹிஹி... டிரை பண்றேன் மா..."

"இந்த கதை எல்லாம் என்கிட்ட வேலைக்கு ஆகாது ராசா... நீ கண்டிப்பா அவருக்கு வந்தே ஆகணும்... முற்றுப்புள்ளி... ஹான்..." என்று சொல்லி முடித்தார் பானுப்ரியா...

"ஹா ஹா... நீங்கள் சொல்வது போல அப்படியே ஆகட்டும் தாயே... போதுமா... இல்லை இன்னும் கொஞ்சம் ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா..." என்று நக்கலாக சொன்னான் ஆரன்...

"வேறு எதுவும் வேண்டாம் மகனே... உன்னை மொத்தமாக ஊருக்கு வர சொல்ல முடியாது... பேராசை பெருநஷ்டம் அல்லவா... அதனால் இதுவே எனக்கு போதும்..." என்று பெருந்தன்மையுடன் சொன்னார் பானுப்ரியா...

"ஆஹான்... சரி எனக்கு ஆஃபிஸ் டைம் ஆச்சு மா... நான் கிளம்ப வேண்டும்... அதனால ஃபோனை வைக்கவா..." என்று அவன் கேட்க...

"சரி செழியா... நான் உனக்கு நைட் ஃபோன் பண்ணி பேசறேன்..." என்று சொல்லி விட்டு அவரும் கைபேசியை வைத்து விட்டார்...

அதன் பிறகு ஆரன் அவனுடைய அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டு இருந்தான்...

அங்கே சென்றால் காலையிலேயே புதுப் பிரச்சனை ஒன்று தோன்றி இருந்தது...

மெல்வின் தவறுதலாக ஏதோ ஒரு முக்கிய ஃபைலில் உள்ள தகவல்களை டெலிட் செய்து விட்டு இருக்கிறான்... அது மறுசுழற்சி தொட்டியில் (recycle bin) இல்லாமல் அதிலும் அழிந்து போய் இருந்தது... அந்த விஷயத்தை அவன் கவனிக்கவும் இல்லை... அது தான் இப்போது பெரிய பிரச்சனை ஆகி இருந்தது...

ஆரன் அலுவலத்திற்கு சென்றதும்... அந்த தகவல்களை மீட்டு எடுக்கவே நேரம் சரியாக இருந்தது... அந்த நாள் அவனுக்கு டென்ஷனில் தான் முடிந்தது...

*******

அங்கே மேகாவோ தாயிடம் என்ன சொல்லி... எப்படி எல்லாம் அவரை சமாதானம் செய்யலாம் என்று மனதிற்குள் பற்பல கணக்குகளை போட்ட படி வீட்டை நோக்கி வண்டியை விட்டுக் கொண்டு இருந்தாள்...

'ஐயோ வீடு வேற வந்துருச்சு... இப்ப நான் என்ன பண்றது... இந்த வீட்டுக்குள்ள போவதா வேண்டாமா... அம்மா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க... செமையா திட்டு விழும்... ப்ளஸ் விளக்குமாறு அடி வேற சேர்ந்து விழும்... ஹ்ம்ம்... அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும்... நம்ம கிட்ட தோசைக் கரண்டி ஆச்சு பறந்து வரும்... சோ சேட்... எதுவாக இருந்தாலும் அதை நான் வாங்கி தான் ஆகணும்... என் நேரம் அப்படி போல...' என்று தனக்கு தானே மனதிற்குள் புலம்பிய படி வீட்டுக்கு உள்ளே போனாள் மேகா மலர்க்குழலி...

தன் மகள் அமைதியாக வீட்டுக்குள் நுழைவதை பார்த்த மலர்மதி... "என்ன இன்னைக்கு இந்த பூனைக்குட்டி சைலண்ட்டா வருது..." என்று சத்தமாக கேட்டார்...

"யாரு மா அது..." என்று சொல்லி கொண்டே அமர்ந்தாள் அவள்...

"என் கிட்ட யாருன்னு கேட்கும் பொண்ணை தான் நான் சொல்லிட்டு இருக்கேன்..."

"ஓஹோ... அம்மா அப்பா வந்தாச்சா மா..."

"இல்ல மேகா... நீ ஏன் கேட்கிற..."

"அப்பாவைப் பற்றி பொண்ணு கேட்க கூடாதா மலரு... நீ இப்படி கேட்பது எல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர் தெரியுமா..." என்று பாவமாக சொன்னாள் மேகா...

"சாத்தான் பாவமாக மூஞ்சியை வச்சி இருக்கு என்றால் என்ன அர்த்தம்..." என்று கேட்டார் மலர்...

"என்ன அர்த்தமாம்..." என்று ஒன்றும் அறியாத பிள்ளையை போல சொன்னாள் மேகா...

"ஹ்ம்ம்... ஏதோ ஒரு மொள்ளமாரித்தனம் பண்ணுது என்று தான் அர்த்தம்... ஏய்... எதையோ என் கிட்ட சொல்ல நினைக்கிற... என்ன சொல்லணும் சொல்லு... ஏதாச்சு கோக்கு மாக்கா பன்னி வைச்சு இருந்த என்றால் தலையிலேயே கொட்டி விடறேன்..." என்று மிரட்டும் தொனியில் சொன்னார் மலர்மதி...

"ஒன்னும் இல்ல மா..."

"பொய் சொல்லாத டி‌..."

"என்னமோ இருக்கு... அது என்னது ன்னு சொல்லு..."

"அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லிட்டு தானே இருக்கேன்... நான் சொல்றத கொஞ்சம் கூட நம்பவே மாட்டியா மலரு... போ மலரு... நான் உன் கூட டூ விட்டுட்டேன்..." என்று சொல்லி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் மேகா...

"சரி சரி... நான் எதையும் கேட்கல... உன் முகத்தை மட்டும் அப்படி வெச்சுகாதே... கொஞ்சம் கூட பாக்க சகிக்கல..." என்று அவள் அம்மா சொல்ல முறைத்து பார்த்தாள் மேகா...

"ரொம்ப தான் மா கலாய்ச்சிட்டு இருக்க..." என்று சொல்லி தாயை முறைத்து பார்த்தாள் மேகா...

"மேகா உன் காலேஜில் நாளைக்கு லீவ் சொல்லிட்டீயா... நாளை காலையில் சீக்கிரமே நாம இங்க இருந்து கிளம்பி ஆகணும்....." என்று சொன்னார் மலர்மதி...

"அது வந்து மா... நான் நாளைக்கு வர முடியாது..." என்று மெல்லமாக சொன்னாள் மேகா...

"மேகா என்ன விளையாடிட்டு இருக்கீயா..." என்று கோபமாக கேட்டார் மலர்...

"இல்ல மா நிஜத்தை தான் சொல்லிட்டு இருக்கேன்..."

"ப்ச்ச்... நாளைக்கு நீ கட்டாயம் வந்து தான் ஆகணும் மேகா..."

"ம்மா... சொன்னால் புரிஞ்சுக்க... ப்ளீஸ் மா... நாளைக்கு எனக்கு இன்டர்நெல் டெஸ்ட் இருக்கு... அதுவும் ஓரே நாளில் மூணு சப்ஜெக்ட் இருக்கு... இதை நான் மிஸ் பண்ணால்... கண்டிப்பாக நான் ஃபெயில் தான் ஆகணும்... நாளைக்கு நீங்க மட்டும் போய்ட்டு வாங்க மா... நான் இங்கேயே இருக்கேன்... எனக்கு உங்க கூட ஊருக்கு வர ஆசையாக தான் இருக்கு... ஆனால் எனக்கு என் படிப்பு ரொம்ப முக்கியம் தானே மலரு... அதனால் நான் நாளைக்கு வர முடியாது... ரியலி சாரி... வெரி வெரி‌ சாரி மலரு... கொஞ்சம் நிலைமையை புரிந்து கொள்ளேன்..." என்று தாயிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் மலர்க்குழலி...

"நீ சொல்லிட்டு இருப்பதை எல்லாம் என்னால கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியலை மேகா..." என்று கடுமையாக கூறினார் மலர்..

"அம்மா நான் ரொம்ப பாவம் தானே... என் மாஸ்டர்ஸ் டிகிரியில் எல்லா பேப்பரிலும் ஃபெயில் ஆனால் எனக்கு தானே அவமானம்... என்னை பற்றி கொஞ்சமா யோசித்து பாரேன் மலர்..." என்று ஐஸ் வைத்து பேசினாள் அவள்...

"மேகா நான் வேணா உங்க காலேஜில் வந்து பேசி பார்க்கவா..." என்று மலர் பதிலுக்கு சொல்ல... அதை கேட்ட மேகாவோ தலையில் அடித்துக் கொண்டாள்...

"அவ்வ்... நீ ஸ்கூலுக்கு வந்து... எனக்காக ஒரு லீவ் லெட்டரை எழுதி... அதுக்கு பர்மிசன் கேட்டு நின்று... அது கிடைத்த அப்புறம் வீட்டுக்கு கூட்டிட்டு போக... நான் என்ன சின்ன குழந்தையா அம்மா... ஐம் டிவெண்டி த்ரீ இயர்ஸ் பொண்ணு.... யூ நோ தட்..." என்று சினம் கொண்டு பொங்கினாள் மலர்க்குழலி...

"சில சமயம் நீ சின்ன குழந்தை இல்ல பெரிய பொண்ணா என்று எனக்கே டவுட் வருது..." என்று கடுப்புடன் சொன்னார் மலர்மதி...

"ம்மா... என்னை பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்..."

"உன்னை பற்றி யோசிக்க ஒன்னுமே இல்லையே..."

"பாராங்கல் நெஞ்சுக்காரி அம்மா..." என்று வாய்க்குள் முனங்கினாள் மேகா...

"என்ன டி எதையோ மெதுவா சொல்லிட்டு இருக்க... எதுவாக இருந்தாலும் சத்தமாக சொல்லு... எனக்கு எதுவுமே கேட்கல..."

"புளி சாதத்தில் புளி இல்லையாம்... அதனால் நான் போய் போட்டுட்டு வரேன்னு சொன்னேன்... அவ்வளவு தான்... வேற ஒன்னும் இல்ல போதுமா‌.." என்று சலிப்புடன் கூறினாள் மேகா..

"இந்த வத்தல் தொத்தல் பேச்சுக்கு தான் மேகா நீ லாயக்கு... வேற எதுக்கும் நீ லாயக்கு இல்ல..." என்று சொல்லி மகளை முறைத்தார் மலர்...

"கண்ணுக்கு தான் மை அழகு....
இந்த மலருக்கு முறை அழகு கிடையாது...
சிரிப்பு தான் எப்பவும் அழகு...
சோ... ஸ்மைல் ப்ளீஸ் மம்மி..." என்று சொல்லி மேகா சிரிக்க...

அதை கேட்ட மலருக்கும் சிரிப்பு வந்தது... இருந்தும் சிரிப்பை வெளி விடாமல் முறைப்பை இழுத்து பிடித்துக் கொண்டு இருந்தார்....

"மேகா நாளைக்கு நீ என்ன தான் பண்ண போற..." என்று கேட்டார் அவர்...

"ம்மா... நாளைக்கு காலேஜ் போயே ஆகணும் மா‌... ப்ளீஸ்... சொன்னால் புரிந்துக் கொள்..." என்று அவள் சொல்லும் போதே.... மதிவாணன் வீட்டிற்குள் நுழைந்தார்...

"என்ன இன்னைக்கு வீடு ஒரே சத்தமாக இருக்கு... உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டையா..." என்று கேட்டார்...

மேகாவோ ஆம் என்னும் விதமாக தலையை மேலும் கீழும் ஆட்டினாள்...

'அச்சச்சோ... தப்பான நேரத்தில் சரியாக வந்துட்டேன் போலயே...' என்று அவருக்கு மைண்ட் வாய்ஸ் ஓடிக் கொண்டு இருந்தது...

"இங்க எவ்வளவு பெரிய பிரச்சனை போய்ட்டு இருக்கு... நீங்க என்னன்னா மைண்ட் வாய்ஸில் பேசிட்டு இருக்கீங்களே..." என்று கத்தினாள் மேகா...

"ஆஃபிஸ் பற்றி நினைச்சிட்டு இருந்தேன் மா..." என்று சொல்லி அவர் சமாளிக்க நினைக்க...

"என்னங்க ஆஃபிஸை பற்றி வீட்டுக்குள் இருக்கும் போது நினைக்காதீங்க என்று எத்தனை முறை சொல்லி இருக்கேன்..." என்று திட்டிக் கொண்டு இருந்தார் மலர்...

'போச்சு... நானே எதையோ ஒன்னு பேசி திட்டு வாங்குறேன்...' என்று மனதில் எண்ணி நொந்து கொண்டார் மதிவாணன்...

"ரெண்டு பேருக்கும் ரெண்டாயிரம் சாரி போதுமா..." என்று கையெடுத்து கும்பிட்டார் அவர்...

"சரி பரவாயில்லை மன்னித்து விட்டோம்..." என்று இருவரும் ஒன்றாக கூறினார்கள்...

"ம்ம்... இப்ப என்ன பிரச்சனை என்று சொல்லுங்க..." என்று மதி கேட்க...

மலர் வாய் திறக்கும் முன்பே... "அப்பா... நான்... நான் ஃபர்ஸ்ட் சொல்றேன்..." என்று ஆரம்பித்து முழுவதுமாக சொல்லி முடித்தாள் மலர்க்குழலி...

"நான் உங்க கூட நாளைக்கு வர முடியாது அப்படின்னு சொன்னா அம்மா கொஞ்சம் கூட கேட்கவே மாட்றாங்க...." என்று சொல்லி சினுங்கினாள்...

"மலர் குட்டிமா சொல்றதை நீ கேட்கணும் தானே மா..." என்று மகளுக்கு ஆதரவாக பேசினார் அவளின் தந்தையானவர்...

அதற்கு மலரோ பதில் பேசாமல் இருவரையும் முறைத்து கொண்டு இருந்தாள்...

"மலர் இங்க பாரேன்.... நான் சொல்றதை ஒரு டூவே டூ மினிட்ஸ் கொஞ்சம் கேளு... அப்பறம் நீ மணிக்கணக்கில் திட்டிட்டு இருந்தாலும் கூட எனக்கு ஓகே தான் அம்மா... நான் உன் செல்ல பாப்பா தானே... என் பாய்ண்ட் ஆஃப் வியூவை உன் கிட்ட சொல்லணும் தானே... அதை நீ கேட்டு ஆகணும் தானே... அப்பறம் தான் வீட்டுமாதா ஆன உங்க பதிலை சொல்லணும்... இப்பவே இப்படி முரண்டு பிடிச்சிட்டு இருந்தால்... எனக்கு நாக்கு தள்ளுகிறது மலரு..." என்று தாயிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் மேகா மலர்க்குழலி...

"சரி எதுவாக இருந்தாலும் சீக்கிரம் சொல்லு..." என்று சொல்லி மகளை முறைத்த படி சோஃபாவில் அமர்ந்து கொண்டார் மலர்மதி...

"அப்பா நம்ம வீட்டுமாதா தான் ஓகே சொல்லிட்டாங்களே... இன்னும் ஏன் நின்னுட்டு இருக்கீங்க... நீங்களும் அம்மா பக்கத்தில போய் உட்காருங்க... எனக்கு கூட கால ரொம்ப வலிக்குது..." என்று சொல்லிய படி அவனும் உட்கார்ந்து கொண்டாள்...

அதன் படி மதிவாணனும் மலர் அருகே அமர்ந்துக் கொண்டார்...

"மலரம்மா... எனக்கு கூட உங்களுடன் ஊருக்கு வர ஆசையாக தான் இருக்கு... ஆனால்... எனக்கு இந்த ஒரு வர முடியாத சூழ்நிலை வந்துருச்சு..." என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே... மலர் எதையோ பேச வர..

"இரு மலரு... அது மட்டும் காரணம் கிடையாது... நீங்க போறது உங்க ஊரு தான்... இருந்தாலும் ரொம்ப வருஷம் கழிச்சு போறிங்க... அங்க யார் எப்படி இருப்பாங்க என்று தெரியாது... தெரியாத இடத்தில் ஒரு வயசு பொண்ணை எப்படி மா அழைச்சிட்டு போறது... நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க... இந்த முறை நீங்க மட்டும் போய் சாமி கும்பிட்டு வாங்க... அடுத்த முறை நான் உங்க கூட ஜாலியாக ஊருக்கு வரேன்... நான் அப்போ எங்க டிபார்ட்மெண்ட் டைனோசர் என்ன... அந்த ஆண்டவன் கூட தடுக்க முடியாது... அப்போ நான் சந்தோஷமாக அந்த ஊருக்கு வரேன் மலரு... இது உன் மேல ப்ராமிஸ் மலரு... என் மேல கொஞ்சம் கருணை காட்டுங்கள் வீட்டுமாதா... ப்ளீச்ச்ச் மீ வெரி பாவம்...." என்று கொஞ்சும் குரலில் சொல்லிக் கொண்டு இருந்தாள் மலர்க்குழலி...

'நான் ஏன் இந்த கோணத்தில் இருந்து யோசிக்காமல் போயிட்டேன்... மேகா சொல்வதில் கொஞ்சம் விஷயம் இருக்க தான் செய்து... அங்க ஊரில் யாராச்சும் எங்களை அவமானப் படுத்துவது போல் பேசினால்... அதை எங்களால தாங்கிக்க முடியும்... ஆனால் இந்த பொண்ணு அதை எல்லாம் கேட்டு அவளுடைய வாயை வச்சிட்டு சும்மா இருக்க மாட்டா... ஏதாவது ஒன்றை பேசி சண்டையை தான் இழுத்து விடுவாள்...‌ அங்க நிலைமை எப்படி இருக்குன்னு பார்த்துட்டு... அடுத்த முறை போகும் போது தான் இவளை கூட்டிட்டு போய் ஆகணும்....' என்று மனதில் எண்ணிக் கொண்டு இருந்தார் மலர்மதி...

அவனுடைய தொடையை சுரண்டிய மேகா... "ம்மா... என்ன மா எதுவுமே பேச மாட்டேங்குற... என் கிட்ட ஏதாவது பேசு மா..." என்று சொல்லி... தந்தையை திரும்பி பார்த்து... "நான் சொல்றது சரியா இல்லையா... நீங்களே சொல்லுங்க ப்பா..." என்று சொன்னாள்...

மலர் நினைத்துக் கொண்டு இருந்ததை தான் மதிவாணனும் நினைத்திருந்தார்...

"மலர் குட்டிமா சொல்றது தான் எனக்கும் சரின்னு படுது..." என்று அழுத்தமாக சொன்னார் அவர்...

"ம்ம்..."

"அங்க சூழ்நிலை எப்படி இருக்கும்னு நம்மால் சொல்ல முடியாது மா... அதனால் நம்ம பொண்ணு இங்கேயே இருக்கட்டும்... அங்க எல்லாம் சரியாக இருந்தால் அப்பறம் அவளை அழைச்சிட்டு போகலாம்..." என்று‌ மிருதுவாக கூறினார் மதிவாணன்...

"ம்ம்... அப்படியே பண்ணலாம்..." என்று சொல்லி விட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டார் மலர்மதி...

தாய் சென்றதை பார்த்துக் கொண்டு இருந்த மேகா... "அப்பு..." என்று தந்தையை அழைத்தாள்....

"சொல்லு டா குட்டிமா..."

"உங்க பொண்டாட்டி கோவிச்சிட்டா எழுந்து போறாங்க..."

"இருக்காது மா... அவ கொஞ்சம் யோசனையாக இருக்கா... அவ்வளவு தான் வேற ஒன்னும் இல்ல..."

"ஏன்... எதுக்கு ப்பா..."

"அவளுக்கு ஏதாவது வருத்தம் இருக்கும் தானே... நான் உங்க அம்மாவை போய் சமாதானம் பண்றேன்... அதுக்கெல்லாம் நீ ஃபீல் பண்ணாத டா..." என்று மென் புன்னகையுடன் சொன்னார் மதிவாணன்...

"சரி ப்பா...‌ அம்மாவை பார்த்துக்கோங்க... எனக்கு இன்னைக்கு நிறைய படிக்கணும்... அதனால் நான் என் ரூமுக்கு போறேன்..." என்று சொல்லி விட்டு அவளை அறைக்கு சென்று விட்டாள் மேகா மலர்க்குழலி....

அத்தோடு அன்றைய நாள்... எல்லார் மனதிலும் ஒவ்வொரு குழப்பத்துடன் அப்படியே முடிவடைந்தது...

**********

உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே 😍

👇👇👇👇
 
Status
Not open for further replies.
Top Bottom