Akilan Mu
Saha Writer
- Messages
- 28
- Reaction score
- 1
- Points
- 1
தாகம் தீரா...
சென்னை ஜி.எஸ்.டி சாலை. நள்ளிரவு 1230 மணி. வெகுஜன வாழ்க்கை அடங்கி, இரவு வாழ்க்கை தொடங்கியிருந்த நேரம். நீல நிற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ சீரான வேகத்தில் கத்திப்பாரா மேம்பாலத்தை கடந்துகொண்டிருந்தது. 26 வயது காதல் மனைவி ப்ரேமாவுடன் ஒரு இரவு விருந்தில் கலந்துகொள்ள கலகலப்பாய் அந்த ஸ்கார்ப்பியோவை ஓட்டிக்கொண்டிருந்த கமல் மது போதையில் இருந்தார். 34 வயதில் ஆன்லைன் கார் விற்பனைத்துறையில் கொடிக்கட்டியவர். ப்ரேமாவை திருமணம் செய்து 3 வருடம் முடிந்திருந்தது. மேட்டூரிலிருந்து அடிக்கடி இப்படி உல்லாசமாக கிளம்பிவிடுவர் கமலும், ப்ரேமாவும்.
எஸ்.யூ.வி கிண்டி தொழிற்பேட்டை சிக்னலை கடந்தபோது, இரண்டு பக்க சாலையிலிருந்தும் மூன்று ஆட்டோக்கள் திடுமென குறுக்கிட்டது.
நிலை குலைந்த கமல் வண்டியை ஒலிம்பியா டெக் பார்க் பஸ்ஸ்டாப்பில் மோதினார். ஆட்டோவில் வந்த கும்பல், ஸ்கார்ப்பியோவை சுற்றிவளைத்தது. ஆயுதங்களுடன் பாய்ந்த ரவுடிக்கும்பல் கார் கண்ணாடியை உடைத்து, கமலை சரமாரியாக வெட்டிச்சாய்த்தனர். அந்த கன நேர இடைவெளியில், ப்ரேமா டெக் பார்க்கினுள் புகுந்து மறைந்துகொண்டாள். சில நிமிடங்கள் அவளைத் தேடியவர்கள், டெக் பார்க்கில் இருந்து ஓடி வந்த செக்யூரிட்டிகளைப் பார்த்து ஆட்டோவில் பறந்தனர். டிரைவர் ஸீட்டில் கமல், கண்ட இடத்திலெல்லாம் வெட்டுப்பட்டு சாய்ந்து கிடந்தார். அவரின் நீலச்சட்டை, கருஞ்சிவப்பாய் கலர் மாறியிருந்தது.
ப்ரேமா அவசர போலீஸுக்கு போன் செய்தாள். கிண்டி அருகில் ரோந்திலிருந்த உதவி ஆணையர் மித்ரன், அடுத்த சில நிமிடத்தில் ஸ்பாட்டில் இருந்தார். ஆம்புலன்ஸும் வந்து சேர்ந்தது. கமல் மூக்கருகில் கைவைத்து இறப்பை உறுதி செய்ய முயன்ற மித்ரன் கையை சடார் என பற்றினார், மயங்கி இறுதிமூச்சை விட்டுகொண்டிருந்த கமல். தீர்க்கமாக மித்ரன் கமலின் கண்ணை உற்றுப்பார்க்க, ஏதோ சொல்லவந்த கமல் தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார். இது கமல் குடும்பத்தின் 5வது சாவு அல்லது கொலை!. கேஸ் மித்ரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்று இரவு முழுவதும் தூங்க முடியாமல் கமல் சொல்லவந்ததையும், கமல் கண்கள் பார்த்த திசையையும் அசைபோட்ட மித்ரன் டக் என ஒரு ஸ்பார்க் அடிக்க அதிகாலையிலேயே எழுந்தார். கடந்த 48 மணிநேரமும் கமல் சென்று வந்த இடம், சந்தித்த நபர்கள்பற்றி விசாரித்தார், CCTV ஃபுட்டேஜ் சோதனையிட்டார். பல மணிநேர சோதனைக்கப்பிறகு இறந்த கமலின் மனைவியும், அந்த குடும்பத்தில் 5 மரணத்திற்குப்பிறகு மீதியிருந்த ஒரே உறவான, ப்ரேமாவை ஸ்டேஷனுக்கு அழைக்கச்சொன்னார்.
.
சேலம் மாவட்டம் மேட்டூர். அணையின் நீர்மட்டம் அதிர, தாரை தப்பட்டை முழங்க மணப்பெண் ஊர்வலம். நெஞ்சை அள்ளிகொள்ளும் மணக்கோலத்தில், ப்ரேமா! மணப்பெண் வருகை எதிர்நோக்கி மணமகன் கமல் திருமண மண்டபத்தில் உறவுகள் சூழ அமர்ந்திருந்தான். திருமணம் அமர்க்களமாய் நடந்துமுடிந்தது. இரவு 10மணி. முதல் இரவு! வெள்ளிச் சலங்கை சலசலக்க, தங்க வளையல்கள் கலகலக்க, பட்டுச்சேலை சரசரக்க ப்ரேமா அறைக்குள் வரும் நேரத்தை எதிர்பார்த்திருந்தான் கமல், அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டு வெளியே வந்தான்.
“ஏண்டா கமல், பொண்ணுக்கும் உனக்கும் எதும் பிரச்சனையா? சாய்ந்தரம் வரைக்கும் கலகலப்பா இருந்தா. இப்போ மொட்டை மாடில நின்னுட்டு, கூப்டா பதில் சொல்லமாட்டேங்றா?!” கமலின் அம்மா பதட்டத்துடன் சொன்னார். ப்ரேமாவை எதிர்பார்த்துக் கதவைத்திறந்த கமல் ஏமாற்றமடைந்தாலும், அதை வெளிக்காட்டாமல் மறைத்தான்.
“ஒன்னுமில்லமா, புது இடம்,புது குடும்பம்.அதனால இருக்கும். நான் போய் கூப்டு வரேன்.”
மொட்டைமாடியில் வானத்தை வெறித்துப்பார்த்தபடியிருந்த ப்ரேமாவை கூப்பிடபோன கமலிடம், “தாலினு ஒன்னு நாலு பேரு சாட்சியா கட்டிட்டா? உடனே அதே நாள் ராத்திரி அந்த பொண்ணு அப்டியே அவுத்துபோட்டு நிக்கனுமா, அவன் முன்னாடி”? எனச்சீறினாள்.
கேள்வியின் நியாயத்தையும், குரலில் தெறித்த உறுதியையும் பார்த்து அதிர்ந்து நின்றான் கமல். சில நிமிடம் இருவரும் எதிர் எதிர் பக்கம் பார்த்தபடி நின்றனர்.
“சாரிங்க!. என்னவோ இப்டி சடங்கா செய்றது எனக்கு பிடிக்கல. இதெல்லாம் முழுவிருப்பத்தோட தானா வரனும். பெரியவங்களுக்கு இதெல்லாம் சொல்லிப் புரிய வைக்கிறது கஷ்டம். நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்.”
“ஹே.. யூ ஆர் ரைட்!. இத நீ என்ட்ட ரூம்ல வந்து சொல்லிருக்கலாமே.” ஆதரவாய்ப்பேசி ப்ரேமாவைக் கூட்டிச்சென்றான்.
சடங்குக்குத் தலை சாய்க்காமல், தன் விருப்பு, வெறுப்பைக் காட்டி, தான் நினைத்ததையே முதன்முறையாக தன் வாழ்க்கையில் செய்யமுடிந்ததை எண்ணிப்பெருமிதத்துடன் கீழே கமலுடன் இறங்கிவந்தாள்.
“இந்த காலத்துல பொண்ணுங்களுக்கு சம்பிருதாயத்த மதிக்கனும்னு எங்க தோனுது. ஆரம்பத்துலயே புரியவைக்கனும். இருக்கட்டும் நாளையிலேருந்து வச்சுக்குறேன் அவளை”. அருகில் இருந்தவர்களிடம் அழுத்தமாகச் சொன்னார், கமலின் அம்மா.
தூங்க சென்ற கமலின் அம்மாவை எரிச்சல் பார்வை பார்த்தாள், ப்ரேமா. எடுத்த உடனேயே தன் விருப்பம்போல் இருக்கலாம் என்ற கனவு சிதறியதை நினைத்துக் கடிந்துகொண்டாள்.
புது மருமகளின் பிடிவாத குணத்தை நினைத்து, மகன் திருமண வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற ஆழ்ந்த மன அழுத்தத்தில் தூங்கப்போனாள், அம்மா.
அம்மாவின் மூடை மாற்ற, கமல் கொஞ்சிக் கேட்டுக்கொண்டதால் பவ்யமாய் பால் கலந்து அவன் அம்மாவிற்குக் கொடுத்துச் சென்றாள், ப்ரேமா!. மறுநாள் கமலின் அம்மா எழுந்திருக்கவே இல்லை!. புது மாப்பிள்ளையும், மணவீடும் மயான அமைதியில். புதுவீடு புகுந்த ப்ரேமா சொல்வதறியாது நின்றாள். இனம்காணாத இயல்பில் இருந்தாள்.
.
கமல் வீட்டின் முதல் சாவான, அவன் அம்மாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டயும், கமலின் கொலையில் நடந்த நிகழ்வையும் இன்வெஸ்டிகேட் செய்துகொண்டிருந்தார் A.C. மித்ரன். கமலின் அம்மா அதிக மன அழுத்தத்தினால், மூச்சுத்திணறி இறந்ததாக ரிப்போர்ட் சொல்லியது. கமலின் 48 மணிநேர சம்பவங்களை விசாரித்து வைத்திருந்த மித்ரன், அந்த சம்பவங்களில், ப்ரேமாவின் ஃபோன் கால்களையும், ப்ரேமா சந்தித்த நபர்களையும் யோசித்தபோது, பொறி தட்டியது! கமலின் அம்மா சாகவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறார்!? கொலைக்கும் ப்ரேமாவுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்று சந்தேகித்தார். அதை நிரூபிக்கச் சாட்சியங்கள்வேண்டும். மேலும் கமலின் வீடு தொடர்பான செய்திகளைத் தேடத்தொடங்கினார்.
.
கமலின் அம்மா மரணத்தைக்கடந்து இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்த 6வது மாதம். அப்பா சின்னப்பர் குடும்பப்பொறுப்புக்களைத் தொடர்ந்து கவனித்துவந்தார். கமல், ப்ரேமா இருவரின் கருத்துக்களைக் கேட்டாலும், சின்னப்பரின் முடிவே இறுதியானது. இதை கமல் ஏற்றுக்கொண்டாலும், ப்ரேமாவை பொறுத்தவரை அது ஆணாதிக்கம் என வெளிப்படையாகவே கமலிடம் சொல்வாள். பல நாட்கள் இந்த நிகழ்வுகளும், அது தொடர்பான வாக்குவாதங்களும் தொடர்ந்தன. ஆனால் சின்னப்பரிடம் மரியாதையாக நடந்துகொண்டாள்; வெறுப்பை வெளிக்காட்டாமல்.
அன்று லாங் வீக் எண்ட். கமல், ப்ரேமாவுடன், சின்னப்பர், கமலின் சித்தப்பா, சித்தி, சித்தப்பா மகன் வருண்(கமலைவிட இரு வயது இளையவன்) எல்லோரும் சென்னை மாமல்லபுரம் வந்திருந்திருந்தனர். காலை முழுவதும் ஊரைச்சுற்றிக் களைத்து மாலையில் கடற்கரையில் பொழுதைக் கழிக்க வந்து அமர்ந்தனர். கமலையும், வருணையும் தின்பண்டங்களை வாங்க கடைக்குப் போகச்சொல்லி வம்புசெய்து கொண்டிருந்தாள், ப்ரேமா!. கமலும், வருணும் கிளம்பிச்சென்றனர்.
வயதான சித்தப்பா, சித்தி கரையில் அமர்ந்திருக்க, வயதானாலும் கடலில் கால் நனைக்கும் ஆசையுடன் சின்னப்பர், ப்ரேமாவுடன் கடல் அலையில் முழங்கால் அளவு கால் மூழ்கும்படி நின்று காலை நனைத்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத ஒரு கண நேரத்தில், பெரிய அலையில் சின்னப்பர் சிக்கி இழுக்கப்பட்டார். அவரை காப்பாற்றப் போராடினார் ப்ரேமா!. தாமதமாகப் பதறி ஓடி வந்த, வருணும் கமலும் மீனவர்கள் உதவியுடன் இரவு முழுவதும் தேடியும், எவரும் அருகில் இல்லாமையால் சின்னப்பரை மீட்க முடியாமல், கடலில் காணாமல் போனார். மறுநாள் காலையில் பிணமாக கடற்கரையில் சின்னப்பர் ஒதுங்கியிருந்தார். ப்ரேமா இருந்த இடத்தில் இரண்டாவது மரணம் (அ) கொலை!
.
சின்னப்பரின் மரண செய்தியின் விவரத்தை பழைய தினச் செய்தித்தாளில் ஊடுருவிக் கிரகித்துக்கொண்டிருந்தார் மித்ரன். மேலும் நடந்தவற்றைக்கிளற ஆரம்பித்தார். போலீஸ் இன்வெஸ்டிகேஸன் ரிப்போர்ட்டில், சின்னப்பர் கடலில் காணாமல் போன அன்று இரவு, ப்ரேமா எந்த பதட்டமும் இல்லாமல் ஹோட்டல் அறையில் இருந்ததையும், வருண் ப்ரேமாவுடன் அருகிலேயே இருந்ததையும் அடிக்கோடிட்டிருந்தது. சந்தேகம் தொற்றினாலும், வெளியூரில் நடந்த எதிர்பாராத மரணத்தினாலும், அந்த இரவில் பெண் என்பதால் இயல்பாகவே கடலில் சுற்றியிருக்க கமல் குடும்பத்தார் அனுமதித்திருக்க மாட்டார்கள். நடந்த சம்பவங்களினால் மித்ரனுக்கு ப்ரேமாவின்மேல் அதிகக் கேள்வி எழவில்லை. இருந்தாலும் கொலையாளி கமல், ப்ரேமாவின் குடும்பத்தைச் சுற்றி இருப்பதை உறுதியாக நம்பினார்.
.
மித்ரன், கமல்-வருண்-ப்ரேமா தொடர்பான செய்திகளைச் சேகரிக்க மேட்டூர் வந்திறங்கினார். ஒரே வீட்டில் தொடர்ந்து நடந்த மரணம் (அ) கொலையால், கமல் வீடு சீல் வைக்கப்பட்டிருந்தது. ப்ரேமா சென்னையில் போலீஸ் பாதுகாவலில் இருந்தார். வருண் வேலை விசயமாக ஜெர்மனியில் இருந்தான். கமல் வீட்டை, மித்ரன் சோதனையிட்டார்.
.
கமலின் அம்மா, அப்பா இழப்பை, சித்தப்பா, சித்தி சரிசெய்து ஒன்றரை வருடம் ஓடியிருந்தது. சின்னப்பர் பொறுப்புகளை சித்தப்பா கடமையோடு நிறைவேற்றிக்கொண்டிருந்தார். கமல், ப்ரேமா வாழ்க்கை சுமூகமாய் கடந்துகொண்டிருந்தது. வருண் வால்த்தனமாய்த் திரிந்தான் இவர்களுக்கிடையில். மகிழ்ச்சியாக இருந்தனர் அனைவரும். ப்ரேமா மட்டும் எதையோ இன்னும் இழந்து நிற்பதுபோல இருந்தாள்.
.
சீல் வைக்கப்படுவதற்குமுன் வீடு கவனமாக கையாளப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டதுபோன்று தோன்றியது, மித்ரனுக்கு!. அது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. ஒவ்வொரு அங்குலத்திலும் கவனத்தை இறுக்க ஆரம்பித்தார். அங்கே ஒரு ரூமில் மூடிய அலமாரியிலிருந்து பூட்டுப்போட்ட இரும்புப்பெட்டியை எடுத்தார். அதிக சிரமப்பட்டுத்தான் பெட்டியைத் திறக்க முடிந்தது. சின்னப்பர் மற்றும் அவர் தம்பி குடும்பப்புகைப்படமும், ஒரு டைரியும் மித்ரன் கவனத்தை ஈர்த்தன!? பெட்டியிலிருந்த மற்ற பொருட்கள் அந்த பெட்டி, கமலின் தந்தை சின்னப்பருடையது என்பதை நிரூபித்தது.
குடும்பப்புகைப்படத்தில், சின்னப்பரின் தம்பி மகன் வருணின் முகத்தைச் சுற்றி ஒரு பிங்க் கலர் ஹார்ட் அடையாளமும், முகத்தின்மேல் குறுக்கும் நெடுக்கும் கிறுக்கலாகவும் இருந்தது. இரண்டு அடையாளங்களும், இருவேறு மனிதர்களின் மன நிலையையோ அல்லது ஒருவரின் இருவேறுபட்ட மனநிலையின் வெளிப்பாடாகவோ மித்ரனுக்குப்பட்டது. டைரியை மேலும் புரட்டினார். ஒரு நாளின் பக்கத்தில், தன் தம்பியின் மகனான வருணைக் கடுமையாக எச்சரித்து வீட்டைவிட்டு அனுப்பியாதாகக் குறிப்பிட்டிருந்தார், சின்னப்பர். அதற்கான காரணம், மருமகள் ப்ரேமாவுடனான வருணின் எல்லை மீறிய பேச்சு எனக்குறித்திருந்தார். அந்தக்குறிப்பு எழுதிய நாளிலிருந்து நான்காம் நாள் மாமல்லபுரம் கடலில் மூழ்கி இறந்திருந்தார்! அந்த புகைப்பட அடையாளம், நாட்குறிப்பு, சின்னப்பர் கடலில் மூழ்கியபோது அருகிலிருந்த ப்ரேமா மற்றும் தனித்து கமலுடன்சென்ற வருண் என அனைத்துப்புள்ளிகளையும் சேர்த்தபோது, ப்ரேமாவின்மீது சந்தேகம் குவிந்தது. இப்போது வருண் முகத்தைச்சுற்றியிருந்த இரு அடையாளங்களும், சின்னப்பராலும், வருணை நேசிப்பவராலும் ஏற்படுத்தப்பட்டது என்ற முடிவுக்குவந்தார். அந்த இரண்டாம் நபர் ப்ரேமாவாக இருக்க அதிகவாய்ப்புள்ளதாக நம்பினார். போலீஸ் மைண்ட் சுறுசுறுப்படைந்தது. நடந்திருக்கும் இன்சிடெண்டை மனத்தில் ஓட்டிக்கொண்டே அடுத்த ரூமை அடைந்தார். அது கமல்-ப்ரேமாவின் ரூம். அந்த ரூமில் ப்ரேமா, கமல் வேலை சம்பந்தமாக பல டாகுமெண்ட் கிடைத்தது. அதில் ப்ரேமா வெளிநாடு செல்ல அப்ளை செந்திருந்த விசா பேப்பர்ஸ் மறைத்துவைக்கப்பட்டிருந்தது. பார்த்ததும் அதிர்ந்தார்!, மித்ரன்.
.
அன்று தீபாவளி. அதிகாலையிலேயே, “கோவிலுக்குப் போய்ட்டு வந்துட்டு நாம சாப்டலாம், வெடி போடலாம், மாமா”, பாந்தமாய்ச் சொன்னாள் ப்ரேமா. கமலின் சித்தப்பா சம்மதித்தார். “வருண் நீங்க பைக்ல முன்னாடி போய் அர்ச்சனை டிக்கெட், ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கி வைங்க. தீபாவளினால கூட்டம் அதிகமா இருக்கும்”. வருண் சம்மதித்தான். வழக்கத்திற்குமாறாய், அன்று ப்ரேமா செய்யவேண்டியதைச் சொல்ல, சித்தப்பா முதற்கொண்டு அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். பண்டிகை தள்ளுபடியோ என்னவோ! ப்ரேமா மட்டும் தீர்க்கமாய் பண்டிகைக் காரியங்களைச் செய்வதில் மும்முரமாய் இருந்தாள்.
“நான்தான் இன்னைக்கு ட்ரைவ் பண்ணுவேன். மாமா, அத்தை நீங்க பின்னாடி உக்காந்துக்கோங்க. ஏங்க, நீங்க முன்னாடி வாங்க” - ப்ரேமா.
“ஆமா சித்தப்பா, சித்தி… பெட்டர் நீங்க ரெண்டுபேரும் சேஃபா பின்னாடி பெல்ட் போட்டு உக்காந்துக்கோங்க” - சிரித்தான், கமல்.
“நாங்க சேஃபாதான் ஓட்டுவோம். உங்களுக்கப் பயம்” - சீண்டினாள், ப்ரேமா!. “எனக்கா, நான் பெல்ட் போடாமயே. வருவேன்” - பதிலுக்கு பந்தா காட்டினான் ப்ரேம். கார் கிளம்பி மேட்டூர் அருகே இருந்த மலைக்கோயிலை நோக்கிச் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. கோவிலை அடைய இன்னும் இரண்டு ஹேர்பின் பெண்டுகளே இருந்த நிலையில், கடைசிக்கு முந்திய திருப்பத்தில், வளைவில் இருந்த மரத்தில் மோதி மலைச்சரிவில் வேகமாகச் சரியத்தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் வலதுபுறம் புறண்ட காரில், இடதுபுறம் பாய்ந்து கமலையும்சேர்த்துத் தள்ளி வெளியே குதித்தாள், ப்ரேமா!. கமல் சுதாரிப்பதற்குள் பலமுறை புரண்டு மலைப்பள்ளத்தில் பாய்ந்தது, கார். செய்வதறியாது திகைத்த கமலின் முன் பள்ளத்திலுருண்ட கார் வெடித்துத் தீப்பழம்பாய் சிதறியது. கண நேரத்தில் கமலின் சித்தப்பா, சித்தி அந்த நிகழ்வில் கண்காணாமல் போயிருந்தனர்.
.
கமல்-ப்ரேமா ரூமை அலசிக்கொண்டிருந்த மித்ரன் அங்கே இரண்டு நீயூஸ் பேப்பர் மட்டும் இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டார். ஒரு வருடம் முந்திய நியூஸ் பேப்பர்! அந்த மலையில் நடந்த கார் விபத்தின் செய்தியும், சின்னப்பர் கடலில் மூழ்கி இறந்த செய்தியும் வந்த நீயூஸ் பேப்பர்கள்!?. பேப்பரில் இருந்த கடற்கரை ஃபோட்டோவிலும், அந்த மலைத்திருப்பத்தில் ஆக்ஸிடெண்ட் நடந்த மரத்தின் ஃபோட்டோவிலும் பிங்க் கலர் ஹார்ட்! சின்ன அதிர்ச்சியில் நிமிர்ந்த மித்ரனின் கண்ணில், சுவற்றில் அலங்காரமாய் ஃப்ரேம் செய்து மாட்டியிருந்த ஆர்ட் வொர்க் பட்டது. வொய்ட் கேன்வாஸில் எம்பிராய்டரி செய்யப்பட்ட பிங்க் கலர் ஹார்ட். ஆர்ட் பை - ப்ரேமா!?.
சின்னப்பர் ரூமிலிருந்த குடும்ப ஃபோட்டோவில் வருண் அருகே ப்ரேமா, கமல்-ப்ரேமா ரூமிலிருந்த ஆக்ஸிடெண்ட் நியூஸ் ஃபோட்டோ அனைத்திலும் இருந்த அந்த பிங்க் ஹார்ட்! அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தார். அதோடு ப்ரேமா ரூமில் எடுத்த அந்த விசா பேப்பரும் பத்திரமாய் மித்ரன் கையில்!.
பக்கத்து வீட்டில் பல வருடம் நட்பாய் இருந்த வீட்டுப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தார். “ப்ரேமா ரொம்ப நல்ல பொண்ணுங்க சார்!. வீட்டுல அதிர்ந்து பேசாது யார்ட்டயும். மூட் அவுட்ல இருந்தா வீட்டு மொட்டை மாடில போய் கொஞ்ச நேரம் நிக்கும். அப்புறம் நாங்களோ, கமலோ சொன்னா கேட்டுக்கும். வெளிய போகும்போதுகூட பவ்யமா கார்ல பின் சீட்டுலதான் உக்காரும்!” சொன்ன வினாடி நிமிர்ந்த மித்ரன், மலையில் நடந்த விபத்தில், கமல்-ப்ரேமா வாக்குமூலத்தை பேப்பரில் படித்ததை யோசித்தார் (“நான்தான் இன்னைக்கு ட்ரைவ் பண்ணுவேன். மாமா, அத்தை நீங்க பின்னாடி உக்காந்துக்கோங்க. ஏங்க, நீங்க முன்னாடி வாங்க...”).
கமலின் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம், கமல் சென்னைக்குக் கிளம்புவதற்கு முன் நடந்த விவரங்களைச் சேகரித்தார். கிட்டத்தட்ட கொலைக்கான காரணம், செய்தவர் ஆகியவற்றை முடிவு செய்தவராக சென்னைக்கு இன்னோவாவில் புறப்பட்டார். ட்ரைவர் காரைச் சீரான வேகத்தில் சென்னை நோக்கி ஓட்ட, கமலின் கொலைப்பிண்ணனியில் 48 மணி நேர நிகழ்வுகளை சேகரித்திருந்த தடயங்கள் கமலின் மனதில் பின்னோக்கி ஒடியது.
.
அந்த 48 மணி நேரத்தில்…
ப்ரேமாவிற்கு வெளிநாடுசெல்ல விசா கன்ஃபெர்ம் ஆகியிருந்த செய்தி, அவளுக்கு டெலிவெரி ஆகியிருந்த கூரியர் சர்வீஸ் மூலம் தெரிந்திருந்தார்.
விசா கன்ஃபெர்ம் ஆகியிருந்த அந்த நாளில், ஐ.எஸ்.டி கால் ஒன்று ப்ரேமா மொபைல் நம்பரிலிருந்து செய்யப்பட்ட விவரம், மொபைல் கால் ட்ராக் லிஸ்ட் மூலம் வைத்திருந்தார், மித்ரன். அந்த மொபைல் கால் வழக்கத்திற்கு மாறாய் 1 மணிநேரத்திற்கும் மேல் பேசப்பட்டிருந்தது! அஃபிசியல் காலோ, அவசியமான காலோ, ஐ.எஸ்.டி கால் இத்தனை மணி நேரம் பேச சான்ஸே இல்லை என்பதை குறுப்பெடுத்திருந்தார், மித்ரன்.
மேட்டூரில் நடக்கவிருந்த கமலின் உறவினர் இல்ல ஃபங்ஷனை அட்டெண்ட் பண்ண கமல் ப்ளான் செய்திருக்க, அதை மாற்றிச் சென்னையில் நடக்கவிருந்த இரவு விருந்திற்கு கமலை கம்பெல் செய்து ப்ரேமா அழைத்துச் சென்றதை, கமலின் மேட்டூர் நண்பரிடம் இருந்து தெரிந்து வைத்திருந்தார்.
மேட்டூரிலிருந்து கமலின் கார் புறப்பட்ட நேரத்திலிருந்து, சென்னை கத்திப்பாரா பாலம் அடையும் வரை, ப்ரேமாவின் மொபைலில்லிருந்து ஒவ்வொரு மணி இடைவெளியிலும் ஒரு ப்ரைவேட் நம்பெருக்கு கால் போயிருந்தது. கடைசியாக கமல் கொலை செய்யப்பட்ட 12:30 நள்ளிரவிக்குப்பின் ஒரு கால் அதே ப்ரைவேட் நம்பரில் பதிவாகியிருந்தது.
ஆனால் கமல் அந்த நம்பெரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, இன்வேலிட் நம்பெர் என ரெஸ்பான்ஸ் வந்தது.
.
மித்ரனின் இன்னோவா சென்னை போலீஸ் ஸ்டேஷனில் நின்றது. மித்ரனும் அந்த 48 மணி நேரத்திலிருந்து மீண்டு வந்திருந்தார்.
ப்ரேமாவை அழைத்து வரச்சொல்லியிருந்ததால், சென்னை போலீஸ் காவலில் இருந்த ப்ரேமா வரும்வரை மித்ரன் ஸ்டேஷனில் காத்திருந்தார். கொலையாளியை சாட்சியங்களோடு நெருங்கிவிட்ட பெருமை முகத்தில் தெரிந்தது. சில நிமிடங்களில் உதவி ஆய்வாளர், போலீஸ் கான்ஸ்டபிள்கள் சூழ ப்ரேமா ஸ்டேஷனுக்குள் அழைத்துவரப்பட்டாள்.
அழுது வீங்கிய கண்களுடன், மிரட்சியாய் இருந்தாள் ப்ரேமா. அவளை அழைத்துக்கொண்டு ஸ்டேஷனுக்குள் நுழைந்த உதவி ஆய்வாளர் உமாவைப் பார்த்து மித்ரன் கண்ணசைத்தார். அருகில் நின்ற ப்ரேமாவின் கன்னத்தில் பளார் என அறை விழுந்தது. நிலைகுழைந்து விழுந்த ப்ரேமாவை தூக்கி நிற்க வைத்தனர் மகளிர் போலீஸ்.
"சொல்லுடி, புருசன வெட்டுன கும்பல் யாரு? எதுக்கு ஆளவச்சு கொலை பண்ண?" குடும்பத்துல செத்த மிச்சம் 4 பேரையும் இப்டி ஆள வச்சுதான் செஞ்சியா இல்ல நீயே கொன்னுட்டியா? எதுக்கு கொலை பண்ண?
மித்ரனின் அடுக்கடுக்கான கேள்வியை எதிர்பாரத ப்ரேமா அதிர்ந்து மித்ரனைப் பார்க்கிறாள். அவள் முன்னே - அந்த பேப்பர் நியூஸ், ஃபோட்டோ ஃப்ரேம்மில் பிங்க் ஹார்ட்ஸ் இரண்டையும் தூக்கிப்போடுகிறார். ப்ரேமா அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இருக்க முயன்றாள். ஆனால் மித்ரனின் அடுத்த ப்ரூஃப், அவளை அதிர்ச்சியில் தள்ளியது.
சின்னப்பர் ரூமில் எடுத்த க்ரூப் ஃபோட்டோவை காட்டினார். அதில் வட்டமிட்டிமிருந்தபகுதி, போலீஸ் கண்ணுக்குமட்டுமேபடும். அதில் ப்ரேமாவின் கையைப் பார்த்ததைப்பற்றி எங்கும் பேசாத மித்ரன், அதை மார்க் பண்ணியிருந்தார். அதில் ப்ரேமா வருண் கையை இறுகப் பற்றியிருந்தாள்! அதோடு… ப்ரேமாவின் ஜெர்மனி விசா அப்ளிகேசனையும்!, அதுவும் டிபெண்டெண்ட் விசா! - வருணை கார்டியனாய்! அப்ளிகேசனில் இருந்ததையும், ப்ரேமாவின் முகத்தில் விட்டெறிகிறார். ப்ரேமாவிற்கு வேறு வழியில்லை. நிதானமாய் வாய் திறந்தாள்.
.
“பாப்பா… தெருவுக்குப் போகாத…” 8 வயது குழந்தை ப்ரேமாவைப் பார்த்து அம்மா கத்தினாள்.
“அண்ணா போறான்மா”.
“அவன் பையன் போலாம், நீ சின்னப்பொண்ணு அப்டிலாம் போகக்கூடாது மா” - அம்மா பாசத்தைக்காட்டி மிரட்டினாள்.
“அப்பா, நான் போய் விளையாடனும்பா”
“பசங்களோட உன்னால சரிக்குச்சமமா விளையாட முடியாதுடா”.
“அம்மா, நானும் அண்ணனோட கடைக்குப்போய்ட்டு வரேன்மா”
“ப்ரேமா. ராத்திரிலாம் பொண்ணு இப்டி வெளிய போகக்கூடாது. அம்மா சொன்னா கேளுமா”
“நான் என் ப்ரெண்டு வீட்டுல இன்னைக்கு பெர்த் டே பார்ட்டிக்கு போறேன்மா” “அப்பாட்ட கேளுமா”
“ப்ரேமா குட்டி, அதெல்லாம் பசங்கன்னா பராவாயில்ல” - அப்பாவும் சம்மதிக்கவில்லை.
.
“பாசத்தைக்காட்டி என்னை அடக்கி வைத்தனர். இயலாது எனச்சொல்லி என் தன்னம்பிக்கையை உடைக்க நினைத்தனர். என்னை அம்மா, அப்பா, அண்ணன் கட்டிபோடாத குறையாக வளர்த்தாங்க” - நிதானமாகத் தன் குழந்தைப்பருவத்திலிருந்து ஆரம்பித்தாள், ப்ரேமா.
.
“என்ன ப்ரேமா டார்லிங், டேம் பாலத்துல இவ்ளோ பசங்க இருக்கோம், கண்டுக்காம போற. அவ்ளோ பெரிய இவளா நீ” - 16வயது ப்ரேமா கல்லூரிக்குச் செல்லும்வழியில், விடலைப்பசங்களுக்கு நடுவே மேட்டூர் டேம் பாலத்தில் சிக்கியிருந்தாள்.
பொங்கிய கோபத்தை குறைத்துக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் கடந்து சென்றாள். எதையும் பேசி ப்ராப்ளம் வந்தால், ஊரும் வீடும் அவளையே பழிக்கும் எனப் ப்ரேமாவிற்கு தெரியும். அடக்கமாய்ப் போனாள்.
கல்லூரியில் நுழைந்தவுடன் மரத்தடியில் உட்கார்ந்திருந்த தோழிகள் நடுவே புத்தகங்களை விட்டெறிந்தாள். தன் இயலாமையை எண்ணி வெதும்பினாள். “பொண்ணுங்கன்னா, அவ்வ்வ்ளோ இளக்காரமா” - பொங்கினாள் ப்ரேமா.
குழந்தை, பள்ளி, கல்லூரிப்பருவம். வீடு, தெரு, காலனி, ஊர். பகல், இரவு. வீட்டு பஃங்ஷன், கோவில் திருவிழா. எங்கும், எதிலும் தன்னை அடக்கிய சுற்றத்தால், சமூகத்தால் துவண்டுபோய் வளர்ந்து வந்தாள்.
.
“என் மேல அக்கறைகாட்டுறோம், எனக்குப்பாதுகாப்பா இருக்கோம்னு சொல்லிச் சொல்லி, பேசிப் பேசி, அடக்கி, அடக்கி என்னைய, என் ஆசைய, எந்த ஃப்லீங்ஷையும் எவனும், எவளும் மதிக்கல. எல்லாத்துக்கும் நான் அடங்கிப்போகனும்னு நினைச்சாங்க. ஆம்பளனா என்ன வேணாலும் பண்ணலாமா, பொம்பளைனா எல்லாத்துக்கும் அடங்கித்தான் இருக்கனுமா?!. எனக்குன்னு ஒரு நேரம் வரும்னு நினச்சேன். அப்போ நான்தான் எல்லாத்தையும் முடிவுபண்னனும், என் இஷ்டத்துக்குத்தான் எல்லாம் நடக்கனும்னு நினைச்சேன். கல்யாணம் செஞ்சிட்டுப்போன வீட்டுல அதை செயல்படுத்துனும்னு முடிவு பண்ணேன்.
பொண்ணுனு நினைச்சு என்னைய அடக்க நினச்ச எல்லாரையும் அடக்கி வைக்கனும்னு ப்ளான் பண்ணேன். எனக்கு உயிரமட்டும் விட்டுட்டு, எல்லாத்தையும் எடுக்குறவங்களோட உயிரையும் எடுக்கனும்னு நினைச்சேன். செஞ்சேன். அதுல நான் நானா இருக்கவிட்டு, என்னைய மதிச்ச வருண்கூட எனக்குப்பிடிச்ச வாழ்க்கைய திரும்ப தொடங்கலாம்னு இருந்தேன்”. ஆத்திரமும், கோபமும், அழுகையுமாக கொட்டித்தீர்த்தாள் ப்ரேமா.
.
அதிகாரத்தோடு கேட்க ஆரம்பித்த மித்ரன், அமைதியாய் நின்றார். ஆணாதிக்கச் சமூகத்தில் தானும் ஒருஅங்கமாய் நிற்பதை எண்ணி வெட்கப்பட்டார். கொலைசெய்யும் அளவுக்கு ப்ரேமாவிற்கு நேர்ந்த உளவியல் சிக்கலையும், அதற்கு மூல காரணமான இன்றைய சமூகத்தின் பெண்ணியம் நடத்தலையும் எண்ணி வருந்தினார். ப்ரேமாவை சைக்காலஜிக்கல் கன்சல்டேஷனுக்கு பரிந்துரைத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணையிட்டார். ப்ரேமாவை அழைத்துச் செல்ல போலீஸ் வேன் தயாராயிருந்தது.
.
““பெண்மை வாழ்க எனக்கூத்திடுவோமடா!
பெண்மை வெல்க எனக்கூத்திடுவோமடா!!”
என்றான் பாரதி - அவன்
கூத்திடுங்கள் எனச்சொன்னது,
கொண்டாடுங்கள் என்ற அர்த்தத்தில்.
கேளிக்கையாக்குங்கள் என்றல்ல!
அவள் உண்பதும்,
கருவிலிருக்கும் நாம் பசியாறத்தான்!
அவள் உறங்குவதும்,
அருகில் குழந்தையாய் நாம் குளிர்காயத்தான்!
அவளைக்கொண்டாடுங்கள்,
துண்டாடாதீர்கள்!
அவள் -
நம்மவள்!”
மகாகவி பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிச்சிறுவர்கள் கலந்துகொள்ளும் “தாகம்தீரா...” என்ற தலைப்பில் கவிதை சொல்லும் நிகழ்ச்சியில், சென்னை பி.வி.எம் பள்ளி மாணவன் கவித்ரன் வாசித்த கவி கேட்டீர்கள். அடுத்ததாக….
எஃப். எம் மில் ஓங்கி ஒலித்த அந்த அறிவிப்பும், மாணவன் வாசித்த கவிதையும், அந்த போலீஸ் வேனில் சென்றுகொண்டிருந்த ப்ரேமாவிற்கு ஒரு ஆறுதலைத் தந்தது. அச்சிறுவன் வரும் சமூக மாற்றத்தின் ப்ரதிநிதியாய் இருக்கவும், இனி ப்ரேமாக்கள் வளராமல் இருக்கவும் வேண்டுமென வெதும்பினாள்.
என்றும் அன்புடன்
அகிலன். மு