Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed தேடாதே! கிடைக்காது!

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 1



சாலையில் தன் கண் பார்வையை வைத்திருந்த அருணை நோக்கி "கிருஷ்ணமூர்த்தி நம்மை எதற்காக கூப்பிட்டு இருப்பார் என்று நினைக்கிறீர்கள் பாஸ்!" என்றான் வினோத்.



"பணம் நிறைய இருக்கும் இடத்தில் குற்றங்களும் நிறைய இருக்கும். அப்படியான ஏதோ ஒரு குற்றத்தில் நம் ஆள் அகப்பட்டு கொண்டிருக்கலாம். அதிலிருந்து விடுபட நம் உதவியை நாடி இருக்கலாம்" என்றான் அருண் கரும் பாம்பாக நீண்டதார்சாலையிலிருந்து கண்களை விலக்காமல்.



"அந்த குற்றம் எந்த மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?எதிரிகளின் கொலை முயற்சி, பயமுறுத்தல், ஷேர் மார்கெட் தகிடுதத்தம், பெண் விவகாரம். எனி கெஸ்?" என்றான் வினோத்.



" எதிர்பாராததை எதிர்பார் என்பது தான் வாழ்க்கையின் தத்துவம். இன்னும் பத்து நிமிடம் பொறு. அவர் நம்மை அழைத்த காரணம் வெளிச்சத்திற்கு வந்துவிடும்"



கிருஷ்ணமூர்த்தி நகரத்தின் மல்டி மில்லியனர்கள் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர். அவர் கம்பெனிகளின் பங்கும் அவரும் எப்போதும் உயரத்தில் இருப்பார்கள். உயரம் மீன்ஸ் ஏரோப்ளேன் பயணங்கள்.அவரது பாஸ்போர்ட் மூன்று மாதங்களில் நிரம்பி வழியுமளவிற்கு விமானத்தில் பறப்பவர். சமீபமாக தன் பயணங்களை குறைத்து கொண்டு இந்தியாவில் முடங்கி கிடப்பவர். அரசியல் ஆதாயத்தோடு எம் பி யாகி தேர்தல் நிதி மூலம் சில பல ஆதாயங்களை பெற்று பல கம்பெனிகளை திவாலாக்கி தான் ஈடுபட்ட எல்லா துறைகளிலும் தன் கொடியை பறக்க விட்டு கண்ணுக்கு தெரியாத பல எதிரிகளை சம்பாதித்து வைத்திருப்பவர். புது தொழிலதிபர்களுக்கு ரோல் மாடல். மனைவி இறந்த பின் தினம் ஒரு மனைவியை தற்காலிகமாக தேர்ந்தெடுத்து சூரியன் உதித்ததும் டைவர்ஸ் செய்பவர்.



கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி இப்போது இவ்வளவு போதும். இனி கதை.



J K இண்டஸ்ட்ரீஸ் என்ற கவர்ச்சிகரமான நியான் லைட் போர்ட் இருந்த அலுவலக முகப்பில் காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினர். செக்யூரிட்டியின் விறைப்பான சல்யூட்டை ஏற்றுக் கொண்டு கண்ணாடி கதவை திறந்ததும் ஏ சி யின் குளிர் குபீரென உடலில் மோதியது.



மைதா மாவை முகத்திற்கு கோட்டிங் கொடுத்திருந்த ரிசப்சனிஸ்ட் தன் லிப்ஸ்டிக் உதடுகளை திறந்து "வாட் யூ வாண்ட் ஸார்?" என்றாள்.



"உங்க பாசை பார்க்க வந்திருக்கோம். அருண், வினோத் என்று சொல்லுங்கள்" என்றான் வினோத்.



அவள் இண்டர்காமில் பேசிவிட்டு "உங்களுக்காக காத்திருக்கிறார். வலது புறம் முதல் அறை " என்றாள்.



"நன்றி! சண்டே இஸ்லாங்கர் தென் மண்டே" என்றான் வினோத் வளைவு திரும்பும்போது. அவள் சட்டென்று ஜாக்கெட்டிலிருந்து விலகியிருந்த ஸ்ட்ராப்பை உள்ளே தள்ளினாள்.



" என்ன கருமம்டா இது?"



"இனி எப்போதும் அந்த பொண்ணு என்னை மறக்காது.நினைவில் நீடித்திருக்க இதெல்லாம் சும்மா ஒரு டிரிக் . கண்டுக்காதீங்க " என்றான் வினோத்.



"எக் கெடோ கெட்டு ஓழி "



"பொறாமை?"



அருண் தேக்கு கதவை தட்டி" மே ஐ கம் இன்" என்றான்.



"எஸ்'கம் இன்" என்ற குரலுக்கு பின்னால் இருவரும் உள்ளே நுழைந்தனர். உள்ளே ஏசியின் விர் ஒலியும் ரூம் பிரஸ்னரின் வாசனையும் கலந்து வீசியது.



" உட்காருங்கள்" என்ற கிருஷ்ணமூர்த்தியின் கைகளை பற்றி குலுக்கினான் அருண்.



"இவன் என்னோட அசிஸ்டெண்ட் வினோத் " என்றதும் வினோத் கைகளை நீட்டினான். மூலவரே பிரதானம் என்று அந்த கையை புறக்கணித்தவர் "பீ சிட்டேட் " என்றார்.



வினோத் அவசரமாக அவமானத்தை தவிர்க்க பேண்ட் கர்ச்சிப்பை எடுத்து கொண்டு நாற்காலியில் புதைந்தான்.



"எனக்கு ஒரு பிரச்சனை " என்றார் கிருஷ்ணமூர்த்தி தாடையை சொரிந்தபடி.



" பிரச்சனை வந்தால் தான் கடவுள், எங்களையெல்லாம் உங்களுக்கு ஞாபகம் வரும் "



" என் ப்ரண்ட் சாரதி உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறான். இந்த பிரச்சனையை நீங்கதான் தீர்க்க முடியும். அதனால் தான் உங்களை அழைத்தேன்."



"சொல்லுங்கள்"



" என் மகனை காணவில்லை. நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்."



"எங்கள் எதிர்பார்ப்பு பட்டியலில் இது இல்லை! "என்றான் வினோத்.



" பையனுக்கு பெயர் வைச்சிருந்தா அதை சொல்லுங்க! வயது, போட்டோ ?'



" எல்லாம் இந்த பைலில் இருக்கிறது. படித்து தெரிந்து கொள். அமுதன் தாய் இல்லாத பிள்ளை.செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாகி விட்டது."



" அமுதன் காணாமல் போய் எத்தனை நாட்களாகிறது?"



"இன்றோடு 40 நாட்கள் "



"வாட்? ஏன் இன்னும் போலீசில் புகார் செய்யவில்லை."



" என்னுடைய கம்பெனி ஷேர் முழுவதும் அவன் பெயரில் வாங்கி வைத்திருக்கிறேன். அதனுடைய மொத்த மதிப்பு 300 கோடி .அவன்அவனுடைய கையெழுத்தோட மதிப்பு 300 கோடி . தொலைந்து போன அவனை யாராவது கண்டுபிடிப்பது புதையல் கிடைப்பது மாதிரி..அவனை யாராவது கண்டுபிடித்து அவற்றில்கையெழுத்து வாங்கி விட்டாலோ ப்ளாக்மெய்ல் செய்தாலோஎனக்கு கணிசமான பாதிப்பு . பணம் எனக்கு ஒரு பொருட்டல்ல. எனக்கு என் சொத்துக்கு அவன்தான் ஒரே வாரிசு. எனக்கு அவன் உயிரோட வேணும்.அதனால் போலீசுக்கு போகவில்லை. நீ கண்டுபிடி. எவ்வளவு வேண்டுமோ கேள். தருகிறேன். இந்த விசயம் நம்ம மூன்று பேரை தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது."



"நீங்கள் யாரையாவது சந்தேகிக்கிறீர்களா?"



" நான்கு ஐந்து குயர் பேப்பர் வாங்கலாம். அத்தனை பேர் இருக்காங்க. ஊரெல்லாம் எதிரிகள்."



" ஒகே ! இந்த கேசை நான் எடுத்து கொள்கிறேன்."



"அதற்கு முன்னால் உன்னோட திறமையை பற்றி சாரதி சொன்னது உண்மையான்னு புருப்பண்ணுங்க. நம்பறேன்"



" என்ன செய்யனும்?"



"என்ன பத்தி இதுவரை கவனிச்சதுல ஒரு விசயம் சொல்லுங்க"



"உங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச விசயம் ஒன்னு சொல்லவா?"



"சொல் "



"இந்த மாசத்திற்குள் நீங்கள் ஒரு பிரபல பல் டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க போறீங்க? ரைட்டா?"



"அது எப்படி உனக்கு?"



" நாக்கால மூக்கை தொடுங்க. சொல்றேன்."



"இந்த வயசுல முட்ட துப்பா.சின்ன வயசுல டிரை பண்ணியது "



"இப்ப டிரை பண்ணுங்க"



கிருஷ்ணமூர்த்தி நாக்கால் மூக்கை தொட முயற்சி செய்ய அருண் " வினோத்! அவரோட நுனி நாக்கை கவனி" என்றான்.



."கவனித்தேன் பாஸ்"



" தொடர்ந்து டிரை பண்ணுங்க" என்ற இருவரும் அறையிலிருந்து வெளியேறினர்.



கிருஷ்ணமூர்த்தி சற்று நேரம் முயற்சி செய்து விட்டு பிறகு தலையை உதறிக் கொண்டவர் "எனக்கு மட்டும் தெரிஞ்ச விசயத்தை எப்படி கண்டுபிடித்தான்." என்று குழம்ப ஆரம்பித்தார்.வாஷ் பேசன் கண்ணாடியில் பாம்பை போல்நாக்கை நீட்டி பார்க்க ஆரம்பித்தார்.



கார் பார்க்கிங்கில் வினோத்



" எப்படி பாஸ்?"



"யோசி! புரியும் " என்று புன்னகைத்தான் அருண்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 2



"பாஸ்! கிருஷ்ணமூர்த்தியோட நுனி நாக்கை பார்க்க சொன்னீங்களே? எதுக்கு பாஸ்?" என்றான் வினோத்.



"எதற்காகப் பார்க்கச் சொன்னேன் என்றே தெரியாமல் தான் பார்த்தயா? சரி பார்த்த வரை சொல். " என்றான் அருண்.



"அவரோட நுனி நாக்கு மட்டும் சிகப்பாக இருப்பதை கவனித்தேன். அதன் மூலமாக நீங்கள் என்ன கண்டுபிடித்தீர்கள் என்று தான் எனக்கு தெரியவில்லை."



"நாம் அறைக்குள் முதலில் நுழையும் போது கிருஷ்ணமூர்த்தி தாடையை சொறிந்தபடி பேசுவதை கவனித்தாயா?"



"ஆமாம்"



"நான் அதை வைத்து அவருக்கு பல் வலியாக இருக்கலாம் என்று யூகித்தேன். அநேகமாக அவருக்கு வயதாவதால் கடவாய் பற்களில் ஓன்று உடைந்திருக்கலாம். அல்லது சொத்தைப் பல்லாக இருக்கலாம் என்று அனுமானித்தேன். அதனால் அவர் அடிக்கடி அந்தபல்லை நுனி நாக்கால் தடவுவதால் அவருடைய நுனி நாக்கில் மட்டும் சிவப்பு நிறதழும்புகள் உண்டாகி இருக்குமென்று யூகித்தேன்."



"பாஸ் எப்படி பாஸ் இப்படி யோசிக்கிறீங்க?"



" என்ன பிரயோஜனம்? நான் எதிராளியின் நாக்கைப் பார்த்து பல்வலின்னு கண்டு பிடிக்கிறேன். நீ ப்ரா ஸ்ட்ராப் எப்படி விலகியிருக்குன்னு கண்டு பிடிக்கிறாய்.. அதை என்னால் கண்டுபிடிக்க முடிவதில்லையே?ஏன்?'



"அதற்கு நீங்கள் வினோத்தின் கண்கள் வழியாகப் பார்க்க வேண்டும் பாஸ்"



"ரோமியோவின் கண்களின் வழியாகப் பார்த்தால் தான் ஜூலியட்டின் அழகு தெரியும் என்பதை காப்பியடித்திருக்கிறாய் இப்போது "



" எல்லாவற்றையும் கண்டுபிடித்தால் எப்படி பாஸ்?வில்லை கொஞ்சம் கழற்றி வையுங்கள். எப்போதும் நாணேற்றி வைக்காதீர்கள்."



"உனக்கும் சேர்த்து நான் யோசிக்க வேண்டியதாயிருக்கிறது. பெண்களிடம் மட்டும் தான் உன் மூளை கிறுகிறுவென வேலை செய்கிறது."



"டிசைன் அப்படி. நான் என்ன செய்வது?"



"நாய் வாலை நிமிர்த்த முடியாது. பைலை படி. " என்ற அருண் காரை ஸ்டார்ட் செய்தான்.



"பையன் பேரு அமுதன். ஐந்தரை அடி உயரம். 5 5 கிலோ வெயிட் .பேசன் டிசைனிங் படித்திருக்கிறான். பெண் குழந்தையை அதிகம் எதிர்பார்த்த அம்மா ஆறு ஏழு வயதிலேயே தவறி போயாச்சு.காண் வெண்ட் ஸ்கூல், வேலைக்காரர்கள் பராமரிப்பில் வளர்ந்திருக்கிறான். அப்பாவை அப்பப்போ சந்திச்சு பேசியிருக்கிறான். அதிகமாக டச்சில் இல்லை. அப்பா கூட அவனுக்கு மூன்றாம் மனிதர் தான். கடைசியாக மார்ச் 3 தேதி அவனை கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன் பார்த்திருக்கிறான். 4ம் தேதியிலிருந்து ஆளை காணோம். செல்போன்ஸ்விட்ச் ஆப் .இவனை எங்கே என்று தேடுவது?"



" அவன் இடத்தில் நீ இருந்திருந்தால் என்ன செய்வாய்?"



"லைபைஜாலியாக என்ஜாய் செய்திருப்பேன் பாஸ். விதவிதமாக குடி, குட்டி ன்னு ..

.



"புழங்கி எயிட்ஸ் வந்து செத்துப் போயிருப்பாய்?"



"நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன் பாஸ். நீங்க சொன்னது நடக்க சாத்தியம் இருக்கு. அப்படி செத்தா புருஸ் லீ மாதிரி என்றென்றும் இளமையாக இருக்கலாம்"



"அதை விடு. இத்தனை வசதி வாய்ப்புகள், ஆடம்பரங்களை விட்டு விட்டு ஓருவன் ஓடனும்னு அதுக்கு என்ன காரணம் இருக்க முடியும்?"



"வேறேன்ன பாஸ்.லவ் தான். யாரையாவது லவ் பண்ணியிருப்பான்.கிருஷ்ணமுர்த்தி சம்மதித்திருக்க மாட்டார். பையன் எஸ்கேப் பாகிவிட்டான்"



" லாஜிக் தப்பு. அவனோட பேர்ல 300 கோடி ருபாய் ஷேர் இருக்கு. அவனுக்கு கிருஷ்ணமூர்த்தி தான் பயப்படணும். எனக்கென்னமோ அவன் பெயரில் இவ்வளவு பெரிய அமவுண்ட் இல்லை என்றால் கிருஷ்ணமூர்த்தி நம்மை அழைத்து அமுதனை தேடச் சொல்லி இருக்க வே மாட்டார்."



"அட ஆமாம் பாஸ்! அப்ப லவ் இதற்கு காரணம் இல்லை. வேறு ?"



" யாராவது கடத்தி இருந்தால் 40 நாட்கள் வரை டிமாண்ட் பண்ணாமல் இருக்க மாட்டார்கள்"



"அப்படியென்றால் கிட்னாப்பும் குளோஸ்"



"வேற ஏதாவது இருந்தால் நீயும் சொல் "



"இந்த ஏர்செல் ஆனந்த கிருஷ்ணன்னு ஒரு ஆளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா பாஸ்?"

. "



- " கேள்விப்பட்டிருக்கிறேன்"



"அவரோட பையன் கூட செல்வத்தை வெறுத்து புத்த மத துறவியாக தாய்லாந்திற்கு போய் விட்டதாக பேப்பரில் படித்தேன். நம்ம அமுதனும் அந்த மாதிரி…



"நவீன புத்தரா மாறியிருப்பானோன்னு சொல்றியா?"



"அப்படியும் யோசிப்போமே?"



"வீட்டை விட்டு போகும் போது என்னை தேடாதீர்கள்னு ஒரு லெட்டர் எழுதி வைச்சிட்டு போக மாட்டாரா நம்ம புத்தர்?"



"அதானே?"



"அப்ப அமுதன் என்ன தான் ஆனான்?"



"எனக்கென்னமோ அவன் உயிரோடு இருப்பான்னு தோணலை"



"என்ன பாஸ் சொல்றீங்க?"



" கதையோட டைட்டிலுக்கு மேட் சாக வேண்டாமா? அதற்காக சொன்னேன். நாம் அவனை நிச்சயமாக கண்டுபிடிப்போம்."
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 3



"பாஸ்! இப்போது அடுத்தது நாம் எங்கே போகப் போகிறோம்?" என்றான் அருண்



"வேறு எங்கே ?அமுதன் தங்கியிருந்த பங்களாவிற்க்குத் தான். அங்கேயிருந்து நம்முடைய தேடலை துவங்கலாம்.பைலில் அமுதன் தங்கியுள்ள பங்களாவிலாசம் இருக்கிறதா என்று பார்" என்றான் வினோத் சாலையில் கவனமாக கண் வைத்தபடி.



பைலை புரட்டிய அருண் "அட்ரஸ் இருக்கு பாஸ்.சொல்கிறேன். கூகுள் மேப்பில் சர்ச் பண்ணி கொள்ளுங்கள்" என்றான்.



அவன் கூறிய விலாசத்தை கேட்டு கொண்ட வினோத் "அப்படியே கிருஷ்ணமூர்த்தியிடம் போன் பண்ணி சொல்லி விடு. நாம் அங்கே போகப் போவதாக " என்றான்.



"ஓகே பாஸ்" என்றான் அருண்.



வினோத் ஆக்சிலேட்டரை மிதித்தான்.



அமுதனின்வில்லாவின் முன்பாக காரை நிறுத்தினான் அருண். காரை விட்டு இறங்கிய இருவரும் அந்த வில்லாவை வியப்புடன் பார்த்தனர். நகரத்தின் புறநகர் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவிக் கிடந்தன ஏராளமான வில்லாக்கள்.



"தனி ஒருவனுக்கு இவ்வளவு பெரிய வில்லாவா?அக்கம் பக்கம் விசாரிக்க கூட ஆள் தென்படலையே?" என்றான் வினோத்.



"நிறைய பணம் சம்பாதித்தால் தனிமை தேவைப்படும் போலிருக்கிறது. இல்லை நிறைய பணம் மனிதர்களின் மீதான நம்பிக்கையின்மையை அதிகரித்து தனியாக பாதுகாப்பாக இருக்க சொல்லும் போலிருக்கிறது."



"சரிவா! காலிங் பெல்லை அடிப்போம்"



காலிங் பெல்லை அடித்ததும் கேட்டின் சிறிய கதவை திறந்து முகத்தை காட்டியவன்" யாரு?" என்றான்.



"உங்க ஐயா போன் பண்ணி சொன்னாரே? அவங்க தான் "



" இப்பத்தான் சொன்னார். அதற்குள் வந்து விட்டீர்கள்" என்றவன் கதவை அகலத் திறந்து இருவரையும் உள்ளே அனுமதித்தான்.



"உன் பேர் என்னப்பா?" என்றான் வினோத் காரியத்தில் கண்ணாக.



"பைரப்பாங்க"



"எத்தினி வருசமா இங்கே வேலை செய்கிறாய்?"



" பத்து வருசமா இங்க தான் வேலை செய்கிறேன். பின்னாடி இருக்கிற வீட்டில் தான் குடி இருக்கிறேன்."



"உங்க சின்ன ஐய்யா அமுதனை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?



" தங்கம்ங்க!தீபாவளியப்ப போன செல்லம் சேர்த்து கொடுப்பாரு. அப்பப்ப அவரோட பழைய துணிய கிழியாமயே தூக்கி கொடுத்துரு வாருங்க"



" எப்போதிருந்து அமுதன் காணாம போனாரு? அவரு காணாம போனப்ப நீ எங்கே இருந்தாய்?"



" கேட் சாவிய உள்ளே பூட்டி நான் தான் வைச்சிருப்பேன். இன்னொரு சாவி தம்பிகிட்ட இருக்கும். மூணா ந்தேதி நைட் 8 மணிக்கு கேட் திறந்தே கிடந்தது.தம்பிதான் வெளியே போயிருக்கனும். நான் திரும்பவும் பூட்டிட்டேன். காலையில் காப்பி போட்டு தர வீட்டுக்குள்ளே போகும் போது தான் தம்பி திரும்பி வரலைன்னு தெரிஞ்சுது. அப்புறம் தான் முதலாளிகிட்ட சொன்னேன்."



" வண்டி ஏதாவது எடுத்துட்டு போனாரா உங்க சின்ன முதலாளி?"



"இல்லையே? நடந்துதான் போயிருப்பாரு "



"சரி அவரோட ரூமை காட்டு"



இருவரும் அவனை பின்பற்றி நடந்தனர். வீட்டின் டைல்சும் வடிவமைப்பும் பணம் பணம் என்றன. விலையுயர்ந்த சோபாக்களும், சாண்டலியர்களும், மினி தியேட்டரும் வெளியே வர வேண்டிய தேவையே அமுதனுக்கு இல்லை என்றன.



"மேலே மாடியில் தான் சின்ன முதலாளி இருப்பார்" என்ற பைரப்பா மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தான்.



"இனிமேல் நாங்கள் பார்த்து கொள்கிறோம். ஏதாவது தேவையென்றால் கூப்பிட்டுகிறோம். அப்போது வந்தால் போதும் " என்றான் வினோத்.



பைரப்பா படிகளில் பின் வாங்கினான்.



இருவரும் வெறுமனே சாத்தியிருந்த அமுதனின் அறை கதவை தொட்டதும் அது உள்வாங்கி திறந்தது.



இருவரும் அலிபாபா குகையாக திறந்து கிடந்த ரூமை அலச ஆரம்பித்தனர். ட்ராவ், அலமாரிகள், வாட்டர் ரோப்புகள் என்று ஆராய ஆரம்பித்தனர்.



"பாஸ் இதை கவனியுங்கள்" என்ற வினோத் கப் போர்டின் அடியில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு துணி சுருளைக் காட்டினான். "என்ன அது?" என்ற அருண் அதை காற்றில் வீசி உதறினான். அந்த குட்டை துணி நீளமாக உருமாறி கவுனானது.



"லேடீஸ் டிரஸ் இங்கே எப்படி?" என்றான் வினோத்.



அந்த கவுணிலிருந்து வினோத நறுமணம் வீசியது.



" என்ன செண்ட் பாஸ் இது?" என்றான் அருண்.



பர்ம்யூம் வரிசையிலிருந்த பாட்டில்களை முகர்ந்து பார்த்த அருண் "சேனல் 5 . மர்லின் மன்றோவுக்கு மிகப் பிடித்த வாசனை திரவியம் "



"அப்படியென்றால் பைரப்பாவுக்கு தெரியாமல் ஓரு பெண் இங்கே வந்து போயிருக்கிறாள். இல்லையா?"



கப் போர்டை கலைக்க கலைக்க ஓன்றிரண்டு பெண்கள் அணியும் துணிகள் கிடைக்க ஆரம்பித்தன.



"இவனுக்கு பெண்களின் உடைகளை திருடும் வினோத பழக்கம் இருந்திருக்குமோ? இல்லை. இதெல்லாம் இவனுடைய ரகசிய காதலியின் உடைகளா?"



" கேள்விகள்! மேன்மேலும் கேள்விகள். எதற்கும் நமக்கு விடை தெரியாது என்பதே உண்மை. "



தேடிக் கொண்டிருந்த வினோத் ஒரு கவரை அலமாரியிலிருந்து கண்டெடுத்தான்.



"அதை திற " என்றான் வினோத்.



திறந்தவுடன் உள்ளிருந்து சில போட்டோக்கள் கொட்டின.



ஒரு பெண்ணின் கண்கள், மூக்கு, உதடுகள் மட்டுமே இருந்த குளோசப் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் காற்றில் சிதறின.



"யார் நீ பெண்ணே? எங்கிருக்கிறாய்?"
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 4



"யாரு இந்த பொண்ணு? செம செக்சியா இருக்காளே?" என்றான் வினோத் தன் கையிலிருந்த கருப்பு வெள்ளை உதட்டு படத்தை பார்த்தபடி.



"அமுதனை கேட்க வேண்டிய கேள்வி. பதில் தெரியாத என்னிடம் கேட்கிறீர்கள்." என்றான் அருண்.



"இந்த கேசில் புதிதாக ஒரு பெண் நுழைந்திருக்கிறாள். அதுவும் அமுதனின் படுக்கையறை வரை . சம்திங் ராங் "



"பணக்கார வீட்டு பசங்களுக்கு பிகர் மடிவதெல்லாம் ரொம்ப ஈஸி பாஸ். "



"பெண்களை இழிவுபடுத்துவது போலிருக்கிறது உன் பதில் "



"கோர்த்து விடாதீர்கள் பாஸ்! பெட்ரூம் வரைக்கும் ஒரு பெண் வந்து போவது பைரப்பாவுக்கு தெரியாமல் இருக்குமா?"



"பைரப்பாவுக்கு தெரிந்தால் அவன் கிருஷ்ணமூர்த்திக்கு போன் பண்ணி சொல்லி விடலாம் என்பதால் அமுதன் இதை ரகசியமாக செய்திருக்கலாம்"



"எதற்கும் பைரப்பாவை மறுபடியும் விசாரிப்போமே?"



" ரைட் " என்றான் வினோத். அவன் கண்கள் சற்று தூரத்தில் இருந்த வில்லா ஒன்றில் நிலைத்தன.



"என்ன பாஸ்? வைத்த கண் எடுக்காமல் அங்கே அப்படி எனத பார்க்கிறீர்கள்?"



"அந்த வில்லாவிலிருந்து யாரோ பைனாகுலரில் இங்கே பார்க்கிறார்கள். சூரிய வெளிச்சத்தில் கண்ணாடி பளிச்சிடுவது இங்கிருந்து தெரிகிறது. இங்கே நடப்பவற்றில் யாருக்கோ ஆர்வமிருக்கிறது."



"அமுதன் தன் ரகசிய காதலியோடு தனியாக இருப்பதை யாராவது வீடீயோ எடுத்திருப்பார்களோ?"



"உனக்கு பிட்டு படம் பார்க்கனும்னு ஆசை வந்துவிட்டதா?"



"சேச்சே! அடுத்தவர்கள் உழைப்பை வேடிக்கை பார்ப்பது பாவம்"



இருவரும் கீழே வந்தபோது உட்கார்ந்திருந்த பைரப்பா எழுந்து நின்றான்.



"உங்க சின்ன முதலாளிய பார்க்க யாராவது பொண்ணுக வருவாங்களா?"



"அவரு கூட காலேஜில் படித்த ஒன்னு, ரெண்டு பொண்ணுக வருவாங்க. உடனே போயிருவாங்க"



"ஒண்ணா, ரெண்டா ? சரியா சொல்"



"சரியாக எண்ணலைங்க.பேரு கூட சரியாக தெரியாது"



"நைட் தங்குவாங்களா?"



"இல்லைங்க. நான் சரியாகவனிக்கலை."



"பை ரப்பா! நைட்சரக்கடிப்பியா?"



"பெரிய முதலாளிகிட்ட சொல்லிடாதீங்க.நைட் லைட்டா சரக்கடிப்பேன்.கனடல தான் குடிப்பேன்.ஐயாவோட சரக்கு பாட்டிலை தொடக் கூட மாட்டேன். அவரா கொடுத்தா குடிப்பேன்."



"சரி, கதவை சாத்திக்க " என்ற வினோத் வெளியே வந்ததும் விடுவிடுவென அருகிலிருந்த வில்லாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பின்னால் ஓடி வந்த அருண் "பா ஸ்!அங்கே எங்கே போகிறீர்கள்?" என்றான்.



கண்களுக்கருகே கையை குவித்து வட்டமாக வைத்தவன்" அந்த பைனாகுலர் ?"என்றான்



"விட மாட்டிங்களே?" என்ற அருண் வினோத்துடன் இணைந்து கொண்டான்.



வாட்ச்மேனின் அனுமதியுடன் அந்த புதிய வில்லாவிற்குள் நுழைந்தனர் இருவரும் .



இண்டர் காமில் வாட்ச்மேன் தகவல் கொடுக்க தட்டும் முன்பாக கதவை திறந்தவன்" யார் நீங்க?" என்றான்.



"இந்த ஏரியாவில் சதுர அடி என்ன விலைக்கு போகுது?" என்றான் வினோத்.



"இந்த ஏரியாவில் இடம் வாங்க போறீங்களா? இல்லை ரியல் எஸ்டேட் புரோக்கரா நீங்கள்?" என்றான் அவன்.



எஸ்.என் பெயர் அருண்.இவர் வினோத். இடத்து விலைய விட கூடுதலாக கொடுத்து ஏமாந்து விடக் கூடாதுன்னு உங்களை விசாரித்து விட்டு வாங்கலாம் என்று இவர் சொன்னதால் உங்களை தொந்தரவு செய்ய வேண்டியதாகிவிட்டது."



"சேச்சே.! அது தொந்தரவில்லை. சொல்லுங்கள்.உங்களுக்கு என்ன தகவல் வேண்டும்"



"உள்ளே போய் பேசலாமா?"



"கண்டிப்பாக "



அவன் அவர்களை நடத்தி சென்றான்.



" என் பெயர் சாமிநாதன் "



"சரி சாமிநாதன் .உங்க வீட்டு பால்கனியிலிருந்து பைனா கூலரில் அப்படி எதை பார்த்து கொண்டிருந்தீர்கள்.?"



"யார் நீங்கள்? நான் போலீசை கூப்பிடுவேன். ஏய் வாட்ச்மேன்?



"நாங்கள் இருவர் . வாட்ச்மேன் வருவதற்குள் இங்கே எது வேண்டுமானலும் நிகழலாம்.கமிசனர் எங்களுக்கு நண்பர் தான். அவரின் பிரைவேட் எண்ணை தரட்டுமா?"



"நீங்கள் ?"



"போலீசுக்கு நெருக்கமானவர்கள். சொல்லுங்கள்.அமுதனின் வீட்டை நீங்கள் ஏன் கண்காணித்தீர்கள்?"



"நீங்கள் தப்பாக புரிந்து கொண்டீர்கள். நான் பேர்ட் சீயிங்கில் ஆர்வம் உள்ளவன். அந்த வில்லாவிற்கு அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான பறவைகள் வரும். அவற்றை பார்த்து ரசிப்பது என்ஹாபி "



இருவரும் ஏமாற்றத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.



" இதை தவிர வேறு காரணம் இல்லையே?"



"இன்னொரு காரணம் இருக்கு. அதை சொல்லலாமா? வேணாமான்னு யோசிக்கிறேன்."



"அந்த வில்லாவில் ஒரு பையன் காணாமல் போய் விட்டான். அவனை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். எதையும் மறைக்காமல் சொன்னால் நீங்கள் தப்பிக்கலாம். நாங்களாக எதையாவது கண்டுபிடித்தால் உங்கள் நிலைமை மோசமாகி விடும். எதையாவது மறைத்து சிக்கலில் வலிய சிக்கி கொள்ளாதீர்கள்" அவன் முகத்தில் பயப்பூ பூத்தது.



" நோ! நோ! நான் பேர்ட் சீயிங் என்று சொன்னது பொய் அந்த வில்லாவில் நான் இரவில் ஒரு பெண்ணை பார்த்திருக்கிறேன். பிரமாதமான அழகி. எனக்கு பிளையிங் கிங் கூட அனுப்பியிருக்கிறாள்.ஓரு மாதிரியாக நான் அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அந்த பையன் தான் அந்த பெண்ணை அடைய தடை .ஒரு முறை அவளிடம் லவ் லெட்டர் கொடுக்க சொல்லி அவனிடம் கொடுத்தேன்.ஒரு பல்லைகழட்டி விட்டான்.தங்கப் பல் கட்டியிருக்கிறேன் பாருங்கள்"



"அந்த பெண்ணையோ , பையனயோ நேரில் பார்த்திருக்கிறீர்களா?"



"அமுதனை தெரியும். அந்த பெண்ணை வேறு எங்கும் நான் பார்த்ததில்லை."



"அமுதனை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?"



"அவனை காரில் கடத்தும் போது?"



"வாட்?" என்றனர் இருவரும் .
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 5



வினோத் உள்ளே எழுந்த கோபத்தை அடக்கி கொண்டு "அமுதனை யாரோ கடத்தி கொண்டு போனதை நீ ஆற அமர வேடிக்கை பார்த்திருக்கிறாய். உடனே போலீசுக்கோ அவனுடைய அப்பாவுக்கோ தகவல் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே உனக்கு இந்த 40 நாட்களில் வரவில்லையேன்றால் என்ன மனிதனய்யா நீ?" என்றான்.



சாமிநாதன் தலையை குனிந்து கொண்டான். "அந்த பையன் என்னை அடித்து விட்டான் என்ற கோபத்தில் நான் இதை யாருக்கும் சொல்லவில்லை. அவனை கடத்தியதை பார்த்து உள்ளூர சந்தோசப்பட்டது உண்மை "



"சரி தொலைகிறது. கடத்திய கார் எண்ணோ காரைப் பற்றிய விவரமாவது தெரியுமா?"



சற்றே பயத்துடன் பார்த்தவன்" நைட் அவனை கடத்தியதால் இருட்டில் சரியாக தெரியவில்லை. இரண்டு பேர் அவனை பின் சீட்டில் இழுத்து போட்டதை மட்டும் நான் கவனித்தேன்"



"சரி. நீ தினமும் பார்த்து ரசித்த பெண்ணின் பெயர் விலாசம் ஏதாவது தெரியுமா?"



"ஒன்னுமே தெரியாது. சில நேரங்களில் மொட்டை மாடியில் இருந்து என்னை பார்த்து கையை ஆட்டுவாள் பிளேயிங் கிஸ் அடிப்பாள். அதிலேயே எனக்கு ஒரு தலை காதல் உருவாகிவிட்டது"



"அடுத்த வீட்டு கல்யாணமான பெண்ணை பார்ப்பது தறுதலை காதல் ப்ரோ. அந்த பெண் அதனோட ரகசிய காதலியாக இருந்திருக்க வேண்டும். அவளிடம் இந்தசாமிநாதன் மிஸ் பிகே வியர் செய்ததால் அமுதன் கோபமடைந்து இவனை தாக்கியிருக்கலாம்."



"அந்த பொண்ணுக்கு லவ் லெட்டர் எழுதி இவனிடம் கொடுத்து விட்டு போன் நம்பர் தான் கேட்டேன். பல் டாக்டரிடம் அனுப்பி வைத்துவிட்டான்"



"உனக்கு ரொம்ப தைரியம் சாமிநாதன் .அடுத்தவன் பொண்டாட்டிக்கு லவ் லெட்டர் எழுதி அதை அவள் புருசனிடமே கொடுத்திருக்கிறாய். உன்னை உயிரோடு விட்டதே பெருசு. நல்ல வேளை உன் ஜாதக கட்டம் வலுவாக இருந்ததால் பல் லோடு போய்விட்டது. இல்லையென்றால் நாங்கள் ஒரு கொலை கேசை விசாரிக்க இதே வீட்டிற்கு வந்திருப்போம்"



" என்ன சொல்கிறீர்கள்?அது அமுதனோட மனைவியா?



"மனைவிக்கு முந்திய ஸ்டேஜ். காதலி என்று நினைக்கிறோம்"



" அவன் சின்ன பையன் .அந்த பொண்ணு முதலில் என்னை பார்த்திருந்தால் என்னைத் தான் காதலித்திருப்பாள். "



'நீ ரொம்ப லேட்டுப்பா.அமுதன் முந்திக் கொண்டு விட்டான்."



"இந்த நாற்பது நாளாக அந்த பெண்ணையும் காணோம். தினமும் மொட்டை மாடியில் உற்று பார்த்து என் கண்ணிற்கு கீழே கருவளையம் விழுந்திருக்கிறது பாருங்கள்"



"சரக்கு ஓவராக அடித்தாலும் இப்படி இரப்பை தொங்கும் சாமிநாதன் "



" எல்லாம் அவளை பார்க்க முடியாத சோகம் தான். சீக்கிரமாக அமுதனை கண்டுபிடியுங்கள். அப்போதுதான் அவனை பார்க்க அந்த பெண் வருவாள்"



"அவளைப் பார்த்து நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?"



"தூரத்திலிருந்தே அவளை பார்த்தபடியே வாழ்ந்து விடுவேன்"



"ரொம்பத்தான் முத்திவிட்டது."



"அந்த பெண் அவ்வளவு அழகுங்க. பார்த்தால் பைத்தியமே பிடித்து விடும்."



"அந்த பெண் இந்த பெண் தானா என்று சொல்லுங்கள்"



வினோத் அமுதனின் வீட்டில் கிடைத்த கருப்பு வெள்ளை புகைப்படங்களை நீட்டினான்.



ஓவ்வொன்றாக கவனமாக ரசனையுடன் பார்த்தவன் ஏமாற்றமாக உதட்டை பிதுக்கினான்.



" இப்படி தனித்தனியாக பார்த்தால் அவள் இவள் தானா என்று குழப்பமாக இருக்கிறது. இந்த பொண்ணும் அழகாகத் தான் இருக்கிறது. இதோட போன் நம்பர், விலாசம் கிடைக்குமா?"



"இப்போது தங்கத்தின் விலை ஏறிவிட்டதுசாமிநாதன் " என்றான் அருண் கைமுஷ்டியை மடக்கியபடி.



"பொறுங்கள் ! "என்ற சாமிநாதன்" இது நான் பார்த்த பெண் தான் " என்றான் ஒரு படத்தை பார்த்தபடி.



"டாக்டரிடம் போகும் செலவு மீதமாகிவிட்டது" என்றான் அருண் கையை தளர்த்தியபடி.



" எப்படி கண்டுபிடித்தாய்?" என்றான் வினோத்.



"நிலா வெளிச்சத்தில் அவளுடைய காதில் இருந்த இந்த ஸ்டெட்டஸ் மின்னிய தை நான் கவனித்திருக்கிறேன். அதை வைத்து சொல்கிறேன்."



" நல்லது. நீங்கள் அந்த பெண்ணையோ இல்லை அமுதனையோ பார்க்க நேர்ந்தால் இந்த எண்ணில் எங்களை கூப்பிடுங்கள்" என்ற அருண் தன்விசிட்டிங் கார்டை நீட்டினான்.



"கண்டிப்பாக சொல்கிறேன். எனக்கு முன்னால் அந்த பெண்ணை நீங்கள் கண்டுபிடித்து விட்டாய் எனக்கு சொல்லுங்கள்."



"எதற்கு?"



"நான் ஐ லவ் யூ சொல்லனும்."



வினோத் தலையில் அடித்து கொண்டான்.



"பாஸ்! நாம் கிளம்பலாம். இன்னும் கொஞ்ச நேரம் நாம் இங்கே இருந்தால் நம்மை மாமாவாக்கிவிடுவான்."



" அல் ரெடி ஆகிவிட்டோம்"



"அப்பப்போ அந்த வீட்டை வழக்கம் போல் கண்காணி.வித்தியாசமாக ஏதாவது தெரிந்தால் எங்களை கூப்பிடு"



அந்தசாமிநாதன் மையமாக தலையை ஆட்டினான்.



இருவரும் கிளம்பினார்கள்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 6



பல் இடுக்கில் மாட்டிய உணவு துணுக்கை டூத் பிக்கால் தோண்டி எடுத்து டஸ்ட் பின்னில் போட்ட கிருஷ்ணமூர்த்தி நம் பல்லில் பிரச்சனை இருப்பதை அவன் எப்படி கண்டு பிடித்திருப்பான் என்று சற்று நேரம் யோசித்து கொண்டிருந்தார். எவ்வளவு யோசித்தும் கண்டுபிடிக்க முடியாதவர் நேரில் பார்க்கும் போது கேட்டு கொள்ளலாம் என்று தன் யோசிப்பை தள்ளி வைத்தார்.அவரது ேயாசனையை அறுத்தது இண்டர்காம்.



" சார்! உங்களைப் பார்க்க ஒரு பெண் வந்திருக்கிறாள்" என்றாள் ரிசப்சனிஸ்ட்.



" பெயர்?" என்றார் முகம் திடீர் பிரகாசமாக .



"வினோதா?"



" வரச் சொல் " என்றவர் தன் ஞாபக செல்களை புரட்டி பார்த்து புதுப்பெயராக இருக்கிறதே என்று யோசித்தார்.



"மே ஐ கம் இன்" என்று கதவு தட்டப்பட்டது.



"எஸ்,கமின் "



அவள் வெகு ஒயிலாக ஒரு தேவதையை போல் ஏசி அறைக்குள் நுழைந்தாள். அவரது இதயம் ஒரு முறை நின்று துடித்தது. அவர் ஒரு கணம் தன் வயதை மறந்து வாலிபத்தில் நுழைந்து மனதிற்குள் "வாவ்" என்றார். அவரும் எத்தனையோ பெண்களை படுக்கையில் சந்தித்திருக்கிறார். ஒவ்வொரு வியாபார ஓப்பந்தம் முடிந்ததும் அதை கொண்டாடும் விதமாக மது, மாது என்று கம்பெனிகள் படையலிடுவது வழக்கம். வெள்ளை தோலிலிருந்து கருப்பு தோல் அழகிவரை விதவிதமாக ரசித்து குதித்தவர் இந்த மாதிரி ஒரு அழகியை பார்த்ததேயில்லை. இப்போது இந்த கணத்தில் யாராவது அவரது இளமையை மீட்டு தரத் தயாராக இருந்தால் வினோதாவின் பொருட்டு தன் மொத்த சொத்துகளையும் இழக்க தயாரானார்.



" உட்கார் வினோதா" என்றார் கம்யூட்டர் திரையில் பிரதிபலித்ததன் உருவத்தை பார்த்த படி.



அவள் தன் உடலை நாற்காலியில் சாய்த்தாள். கொடுத்து வைத்த நாற்காலி என்றது அவள் மனம்.



"பத்ரி சார் தான் என்னை அனுப்பினார்" என்றாள் வினோதா.குரலில் குயில் மெலியதாக கூவியது.



பத்ரி கிருஷ்ணமூர்த்தியின் நெருங்கிய நண்பர். தன் நல்லது கெட்டதுகளை அவரிடம் தான் மறைக்காமல் கிருஷ்ணமூர்த்தி சொல்வது வழக்கம். இப்போது இவளை எதற்காக அனுப்பி வைத்திருப்பான் என்று யோசித்தவராக



" என்ன விசயமாக உன்னை அனுப்பி வைத்தான் வினோதா" என்றார் கிருஷ்ணமுர்த்தி குழப்பமாக .



" நீங்களே கேளுங்கள்" என்றவள் செல்போனில் பத்ரியின் எண்களை ஒத்தினாள். "சார் உங்களிடம் பேச வேண்டுமாம்" என்று செல்போனை கிருஷ்ணமூர்த்தியிடம் நீட்டினாள். அவள் செல்லை கை நீட்டி வாங்கும் போது வினோதமான நறுமணம் வீசியது. அந்த வாசம் அவருக்கு பிடித்திருந்தது.



மறுமுனையில் இருந்த பத்ரி



"கிருஷ்ணமூர்த்தி .அவளை நான் தான் உன்னிடம் அனுப்பினேன். உனக்கு ஒரு பர்சனல் செக்ரட்டரி தேவை. அதனால் தான் அவளை அனுப்பினேன் "



"எனக்கு செக்ரட்டரி தேவை என்று நான் உன்னிடம் சொல்லவேயில்லையே?"



"இல்லைதான். நேற்று நீ எனக்கு தந்த செக்கில் முப்பது லட்சத்திற்கு கூடுதலாக ஒரு சைபர் போட்டு விட்டாய். நீ மனக்குழப்பத்தில் இருப்பதன் அறிகுறி அது "



"வாட்? நானா மூணு கோடிக்கு செக் கொடுத்தேன்? அவ்வளவு அசட்டையாக நான் இருந்ததில்லையே? எனக்கு என்ன தான் நடக்கிறது?"



"உன் மகன் காணாமல் போனது உன்னை குழப்பி கொண்டிருக்கிறது. அதனால் தப்பு தப்பாக சிலவற்றை செய்ய ஆரம்பித்திருக்கிறாய். உனக்கு உதவிக்கு ஆள் தேவை. அதனால் தான் வினோதாவை அனுப்பியிருக்கிறேன்."



"முன் அனுபவம்,?"



"முதல் இரவை தவிர மற்ற எல்லா இடங்களிலும் இதை கேட்பீர்கள் என்று தெரியும்.வினோ தா என்னிடம் தான் செக்ரட்டரியாக இருந்தாள். நான் இரண்டு மாதம் அமெரிக்கா போகிறேன். அதனால் வினோதாவை அங்கே அனுப்புகிறேன். நான் திரும்ப வந்ததும் அவளை அழைத்து கொள்கிறேன்."



" உன் அலுவலகத்திற்கு நான் பல முறை வந்திருக்கிறேன். அங்கே வினோதாவை நான் பார்த்ததில்லையே?"



"ஓரு காசனோவாவிடம் ஒரு அழகான பெண்ணை அறிமுகப்படுத்தி வைக்க எனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? அவள் மற்ற பெண்களைப் போலில்லை. உன் வாலை சுருட்டிக்கொள். அவளிடம் அத்துமீறி என்னை சங்கடத்திற்கு ஆளாக்கிவிடாதே?"



"ஊசி இடம் கொடுத்து நூல் நுழைந்தால் உனக்கு சம்மதமா?"



"எக் கெடோ கெட்டு ஓழி "



அவர் போனை அணைத்து அவளிடம் நீட்டினார்.



"உன்னுடைய சர்டிபிகேட்டுகள் ?"



"பத்ரி சாரிடம் இருக்கிறது"



" அவன் உத்திரவாதம் ஒன்றே போதும். வேறு கேள்விகள் என்னிடம் இல்லை.எப்போதிருந்து வேலைக்கு வருகிறாய் வினோதா?"



" நாளை புதன்கிழமை .பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். நான் நாளைக்கு வருகிறேன்."



" நல்லது. இப்போது நீ கிளம்பலாம்"



"சீ யூ சார்"



அவள் வெளியேறிபோனதும் அந்த இடத்தில் அவளின் வாசனை சற்று நேரம் அடித்து கொண்டிருந்தது.



அவரின் கனவை கலைத்த படி ஒலித்தது செல்போன் .



மறுமுனையிலிருந்த வினோத்



"சார்! அமுதனை பற்றி ஒரு முக்கியமான விசயம் கிடைத்திருக்கிறது"



"என்னப்பா?"



"அவனை யாரோ கடத்தி விட்டார்கள்"



"என்னப்பா, இன்ப கனவில் இடியை இறக்குகிறாய்?" என்று தலையில் கை வைத்தார் கிருஷ்ணமூர்த்தி .
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 7



"அமுதனை கடத்தியதை யார் பார்த்தார்கள் என்று என்னிடம் கூற முடியுமா?" என்றார் கிருஷ்ணமூர்த்தி தன் நெற்றியை தேய்த்தபடி.



எதிரே உட்கார்ந்திருந்த வினோத் "கடத்தும் போது மரத்தின் மீது உட்கார்ந்து அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஒரு பெயர் தெரியாத பட்சி இந்த தகவலை என்னிடம் கூறியது. இதற்கு மேல் எதையும் கேட்காதீர்கள் .சரி !சொல்லுங்கள் .! உங்களுக்கு மொத்தமாக எத்தனை எதிரிகள் இருக்கிறார்கள்? அதன் பட்டியல் எங்களுக்கு வேண்டும்?"



"பெரும் செல்வங்களுக்கு பின்னால் மிகப் பெரிய குற்றங்கள் மறைந்திருக்கும் என்பார்கள். ஒருவன் தன் உண்மையான உழைப்பால் பணக்காரனாக மாறினேன் என்று சொன்னால் அது நிச்சயமாக அப்பட்டமான பொய். என் வளர்ச்சிக்கு செல்வங்களுக்கு பின்னால் நிறைய குற்றங்களின் கறைகளும், இரத்தத்தின் பிசுபிசுப்பகளும் மறைந்திருக்கின்றன. அதனால் எனக்கு ஏராளமான எதிரிகள் உண்டு. பட்டியல் போட்டால் என் ஆயுள் முடிந்துவிடும்"



"இத்தனை எதிரிகளை சமாளித்து வைத்திருக்கிறீர்களே? அதே எண்ணிக்கையில் நண்பர்களை சம்பாதித்து வைத்திருக்கிறீர்களா?"



"ஒரே ஒரு நண்பன் தான் எனக்கு வெகு நெருக்கமானவன். சர்வரோக நிவாரணி. அதன் பெயர் பணம் .மணி இஸ் ஆல்வே ஸ் அல்டிமேட் "



"நீங்கள் ரொம்பவும் மூழ்கி போய்விட்டீர்கள். உங்களை மீட்க முடியாது. அந்த 300 கோடிக்காக அமுதன் கடத்தப்பட்டதாக வைத்து கொள்வோம். அதனால் யாருக்கு பாதிப்பு? அதை மட்டும் சொல்லுங்கள்"



"அவை என்னுடைய கம்பெனி ஷேர்கள். அவற்றை விற்று விட்டு வேறு கம்பெனி ஷேர்களை வாங்கலாம் என்று நினைக்கிறேன். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது.அமுதனின் கையெழுத்து கிடைக்காததால் அவற்றை என்னால் விற்க முடியவில்லை. அதனால் எனக்குத் தான் அதிக பாதிப்பு ."



"அமுதனின் பெயரில் இப்போது இருக்கும் ஷேர்கள் முன்பு யார் பெயரில் இருந்தன?"



" என் மனைவி பெயரில் .அமுதனின் அம்மா பெயரில் ."



"அமுதனுக்கு அந்த ஷேர்களை விற்க விருப்பம்தானா?"



" அவன் சின்ன பையன் . வியாபாரத்தை பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது"



"நீங்க உடனே செத்துப் போகனும்னு விரும்புகிற எதிரிகளின் லிஸ்டை தர முடியுமா?"



"தருகிறேன். நான் இறந்து போனால் மாமியார் இறந்து போனதற்காக மருமகள் அழுவது போல் அழபவர்கள் தான் இங்கே அதிகம். பெற்ற தாயை இழந்தது போல் அழபவர்களை நான் இன்னும் சம்பாதிக்கவேயில்லை"



"டேக் கேர். உடம்பை பார்த்து கொள்ளுங்கள்"



"கொஞ்ச நாட்களாக ஒரே மனத்தளர்ச்சி .எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க ஒரு செக்ரட்ரியை புதிதாக நியமித்திருக்கிறேன். நாளைக்கு அவள் வந்த பிறகு எனக்கு முழு நேர ஓய்வு தான் "



"அந்த பெண்ணின் பெயர்?" என்ற அருணை முறைத்தான் வினோத்



"வினோதா!இந் தாருங்கள் என் எதிரிகளின் பட்டியல்" அவர் எழுதி நீட்டிய பேப்பரை வாங்கி கொண்டு இருவரும் வெளியே வந்தனர்.



கார் பார்க்கிங்கில் அந்த பேப்பரை பிரித்து பார்த்த வினோத் "அமுதனை கடத்தியது இந்த நால்வரில் ஒருவராகத்தான் இருக்கும். இந்த லிஸ்டில் நான்கு பேர் பெயர் இருக்கிறது"



"ஓவ்வொருத்தரையா போன் பண்ணி கூப்பிடுவோம்"



" என்ன சொல்லி பேசப் போகிறாய்?"



"கவனியுங்கள். முதல் ஆள் நாகராஜ். அவனுடைய போன் எண்ணை சொல்லுங்கள்"



வினோத் சொன்ன எண்ணிற்கு போனை போட்ட அருண் ரிங் போவதை கேட்டபடி உதட்டை கடித்தான்.



போனை எடுத்த நாகராஜ் "ஹாலோ " என்றான்.



" நீங்கள் கடத்திய பையன் இப்போது எங்களிடம் தான் இருக்கிறான்" என்றான் அருண்,



" யார்ரா நீ? உனக்கு என்ன வேணும்?"



"ஸாரி.ராங் நம்பர் " என்ற அருண் " இவன் குரலில் கொஞ்சம் கூட அதிர்ச்சியே இல்லை பாஸ்! நாம் தேடும் ஆள் இவனில்லை" என்றான்.



"அடுத்த நபருக்கு போன் பண்ணு" என்றான் வினோத்.



அடுத்த இரண்டு பேர்களுக்கு போன் செய்த அருண் அவர்களின் பதிலில் உதட்டை பிதுக்கினான். "இவர்களும் இல்லை பாஸ்! இந்த ராகேஷ் தான் கடைசி ஆள். கல்லை விட்டு எரிவோம். ஒன்னு மாங்காய் விழனும். இல்லை கல்லாவது விழனும் "



போனை எடுத்த ராகேசிடம் "நீங்க கடத்திய பையன் என்னிடம் தான் இருக்கிறான்" என்றான் அருண்.



"ஹலோ ? யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?" என்றான் ராகேஷ்.



"பணம் வேணும்"



"ராங் நம்பர் " என்று போன் வைக்கப்பட்டது.



"இவன் தான் பாஸ்.இவன் குரலில் ஓரு ஜெர்க் இருக்கு. கண்டிப்பா திரும்ப கூப்பிடுவான்"



அருணன் செல்போன் ஒலிக்க ஆரம்பித்தது.



"நான் சொன்னது உண்மையாகிவிட்டது" என்றான் அருண் செல்போன் திரையை காட்டியபடி.

தேடாதே! கிடைக்க மாட்டேன்!
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 8



அந்த ராகேஷ் திரும்பவும் அழைப்பதை போனில் பார்த்த வினோத் "கல் சரியாக மாங்காயில் பட்டுவிட்டது போலிருக்கிறது. பேசு.இவன் தான் அமுதனை கடத்தியிருக்க வேண்டும்" என்றான்.



அருண் பச்சை நிறத்தினை தொட்டு விட்டு "ஹலோ" என்றான்.



"யார் நீ? அமுதன் உன்னிடமா இருக்கிறான்?" என்றது மறு முனை குரல்.



"நான் யார் என்பது உங்களுக்கு அனாவசியம்.அமுதன் இப்போது எங்களிடம் இருக்கிறான் என்பது மட்டும் உண்மை.. "



"எனக்கு அவன் உடனே வேண்டும். எவ்வளவு கேட்கிறாய்?"



"திடிரென்று லாட்டரியில் பரிசு கிடைத்தவனின் நிலையில் நான் இருக்கிறேன். சற்று ஆசுவாசப்படுத்தி கொண்டு உங்களை தொடர்பு கொள்கிறேன்"



" ரைட்.ஓன்றை நினைவில் வைத்து கொள். நீ எவ்வளவு கேட்டாலும் நான் தர தயாராக இருக்கிறேன். எனக்கு அமுதன் வேண்டும் உயிரோடு "



போனை வைத்த அருண் "பாஸ்! ஒரு விசயம் தெளிவாகிவிட்டது. இந்த ராகேஷ் தான் அமுதனை கடத்தியிருக்கிறான். துரதிர்ஷ்டவசமான விசயம் என்னவென்றால் கடத்திய அமுதன் அவனிடம் தற்போது இல்லை."



"நாம் போன் செய்யும்போது அமுதன் ராகேசிடம் இருந்திருந்தால் நம் நிலமை என்னாவது?"



"அப்போதும் பதட்டத்தில் ஏதாவது க்ளு கொடுத்து நான் தான் கடத்தியது என்று சூசகமாக நமக்கு சொல்லியிருப்பான்."



"இப்போது என்ன சொல்வது?"



"அவனை தனியாக சந்திக்க வேண்டும் என்று சொல். அவனை சந்திக்கும் இடம் ஜன நடமாட்டம் உள்ளதாக இருக்கட்டும். அப்போதுதான் நம் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள்."



"அப்படியானால் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் னிற்கு இன்னும் ஓரு மணி நேரத்தில் வரச் சொல்கிறேன்."



அருண் மீண்டும் ராகேசிற்கு போன் செய்தான். "இன்னும் ஒரு மணி நேரத்தில் ஓட்டல் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் னில் சந்திப்போம். என்னுடைய பார்ட்னரும் வருவார்"



"இன்னொரு ஆசாமியா? அவன் எதற்கு?"



"நீங்கள் தரப்போகும் இரண்டு கோடியை என் ஒருவனால் எண்ண முடியாதில்லையா? அதற்காகத்தான் இன்னொரு ஆசாமி "



"இரண்டு கோடி ரூபாயை ஒரு மணி நேரத்தில் கேட்கிறாய்?"



"உங்களால் முடியாதா என்ன?"



"ஈஸி. ஆனால் அதற்கு முன் நான் அமுதனின் குரலைக் கேட்க வேண்டும்."



" அமுதன் பேசும் நிலையில் இல்லை"



" அவனுக்கு என்னாயிற்று?"



"மிகவும் முரண்டு பிடித்ததால் அவனை மயக்கத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறோம். நீங்கள் இப்போது பணம் எதையும் கொண்டு வர வேண்டாம். அவனை எப்படி கை மாற்றுவது என்றும் நீங்கள் எப்படி பணம் தர வேண்டுமென்றும் நாம் கலந்து பேசுவோம். இப்போது கொஞ்சம் பணத்தை அட்வான் சாக கொண்டு வாருங்கள்"



"நான் உங்களை நம்புகிறேன். நாம் உட்லண்ட்சில் சந்திப்போம். நான் உங்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?"



அருண் தன் கார்நெம்பரை கூறினான்.



"சற்று நேரத்தில் சந்திப்போம்"



அவன் போனை வைத்து விட்டான்.



"நாம் போகலாமாபாஸ்?" என்றான் அருண்.



"நாம் ஆபத்தான ஒரு ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறோம் வினோத். கையில் இல்லாத பொருளுக்கு விலை பேசிக் கொண்டிருக்கிறோம்"



"நாம் கையை விரித்து காட்டும் வரை எதிரி நம்மை எதுவும் செய்ய மாட்டான் பாஸ்"



"கையில் ரேகை மட்டும் தான் இருக்கிறது என்று தெரிந்தால் நம் கதி அவ்வளவு தான் "



"நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும் "



"சரி. கிளம்பலாம்"



இருவரும் காரைக் கிளப்பினர்.மதிய வெய்யிலில் டிராபிக் ஜாமில் நகர்ந்து அவர்கள் உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னை அணுகினார்கள்.



"நல்ல மரத்தடி நிழலாக பார்த்து நிறுத்து அருண் " என்றான் வினோத்.



மரத்தடி நிழலில் காரை நிறுத்தியதும் எங்கோ மர இருளிலிருந்து உற்பத்தியாகி வந்த வனின் கையில் கார் சன்னலில் மாட்டும் ட்ரே இருந்தது.



"கொஞ்சம் டைமாகும். ஆர்டருக்கு வெயிட் பண்ணுங்க" என்றான் வினோத்.



அப்போதுதான் அருண்ட்ரேவிற்கு அடியில் இருந்த துப்பாக்கியை பார்த்தான். காரின் பின் கதவை திறந்தவன் ட்ரேவை பின் சீட்டில் போட்டு தாவி ஏறிக் கொண்டான்.



"யாருப்பா நீ? எங்கே இறங்கனும்?"



துப்பாக்கியை வினோத்தின் பின் தலையில் வைத்தவன் "நான் ராகே சின் ஆள். வண்டியை எடு. இல்லையென்றால் தலை சிதறி விடும்" என்றான்.



"வேல்யூவான தலைப்பா! கண்ணாடியில் மூளை சிதறினால் வண்டியை எப்படி ஓட்டுவது?" என்றான் அருண்.



"எனக்கு சிரிப்பு வரவில்லை. வண்டியை எடு" என்றான் அந்த அநாமதேயன்.



விக்னேஷ் கார் இக்னீஷியனை உசுப்பி உயிர் கொடுத்தான்.

தேடாதே! கிடைக்க மாட்டேன்.!
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 9



பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு வினோத்தின் பின் தலையில் துப்பாக்கியை வைத்திருந்தவனைப் பார்த்த அருண் "ஆட்டோகாரன் கூட எங்கே போக வேண்டும் என்று கேட்பான் " என்றான்.



"முதலில் இங்கிருந்து விலகி மெயின் ரோட்டிற்கு போ" என்றான் அந்த அனாமதேயன்.வினோத் ஆக்டிலேட்டரை மிதித்து ஒட்டலிலிருந்து வெளியே வந்தான். மெயின் ரோட்டிற்கு வந்ததும் " வண்டியை நிறுத்து" என்றான் அவன். ரோட்டு முனையில் காத்திருந்த இரண்டு பேர் பின் கதவை திறந்து ஏறினர். ஏறியவர்களில் ஒருவன்" ஏதும் பிரச்சனை செய்தார்களா?" என்றான்.



"கையில் இருக்கும் பொருளைப் பார்த்தால் பிரச்சனை செய்ய தோன்றுமா?" என்றான் அவன்.



" என் பெயர் அருண்.இவர் என்னோட பாஸ் வினோத். உங்க பேரைச் சொல்லவே இல்லியே?" என்றான் அருண் சினேகமாக புன்னகைத்தபடி.



"எங்க மூன்று பேருக்கும் இன்னும் பேரே வைக்கலை. நீ மூடிட்டு முன்னாடி பார்த்து உட்காரு. இல்லைன்னா வாய் வெத்தலை பாக்கு போட்டுக்கும் " என்றான் மூன்று பேரில் முரட்டு தனமாக இருந்தவன்.



கை குலுக்க நீட்டிய கையை பின்னுக்கு இழுத்து கொண்ட அருண் "இந்த கதை முழுக்க நம்மை அவமானப்படுத்துகிறார்கள். முதலாளி தொழிலாளி வேற்றுமை இல்லாமல்!"



"ஹலோ துப்பாக்கி .! எங்கே போகனும்னு வழி சொல்லுப்பா. இல்லைன்னா நான் நேரா போலீஸ் ஸ்டேசனுக்குத் தான் வண்டியை விடனும்" என்றான் வினோத்..



அவன் வழி சொல்ல ஆரம்பித்தான். நகரத்தின் ஓதுக்குப் புறமான அந்த பங்களாவின் முன் கார் நின்றது.



"ஜேம்ஸ் பாண்ட் வேலை எதையும் காட்டாது முன்னால் நடங்கள்"



அவர்கள் நடந்தார்கள். அந்த பங்களாவின் பிரம்மாண்ட ஹாலில் நுழைந்தார்கள்.



சோபாவை காட்டிய அநாமதேயன்" உட்காருங்கள். என் முதலாளி இப்போது வந்து விடுவார், "என்றவன் ஓரமாக இருந்த படிகளில் ஏறி மாடிக்கு சென்றான்.அருணையும், வினோத்தையும் கீழேயிருந்த இருவரும் விரோதமாக பார்த்து கொண்டு நின்றனர்.



சற்று நேரத்தில் மாடியிலிருந்து இறங்கி வந்தவன் ஏதே ஒரு விதத்தில் ரகுவரனை நினைவு படுத்தினான். வினோத்தும் அருணும் எழவதா வேண்டாமா என்று யோசிக்கும் முன்பாக தன் விரல்களால் உட்காரும் படி சைகை செய்தவன் காலியாக கிடந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.



"இதே மாதிரி அவனையும் பூப்போல தூக்கி வந்திருந்தால் இன்று இவர்களை கடத்த வேண்டிய தேவை இருந்திருக்காது. இல்லையா?" என்று பின்னால் நின்ற அனாமய தேயனை முறைத்தான். அவன் தலை குனிந்து கொண்டான்.



"கம் டுதபாயிண்ட். நான் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை.அமுதனை என்னிடம் ஓப்படைக்க எவ்வளவு பணம் வேண்டும்?"



"அதை பிறகு பேசுவோம்.அமுதன் உங்களுக்கு எதற்காக தேவை?"



"தேவையில்லாத கேள்விகள் எனக்கு பிடிப்பதில்லை."



"எங்களை இங்கேயே கொன்று புதைத்தாலும் அமுதன் உங்களுக்கு கிடைக்க மாட்டான் "



"ஏன்?"



"ஏனென்றால் அமுதன் எங்களிடமும் இல்லை"



"வாட்! என்ன குழப்புகிறீர்கள்?"



"ஆமாம்.அமுதனை தேட சொல்லி கிருஷ்ணமூர்த்தி எங்களை நியமித்திருக்கிறார். நாங்கள் பிரைவேட் டிடெக்டிவ்ஸ் எங்கள் விசாரணையில் நீங்கள் தான் ஆள் வைத்து கடத்தியிருப்பதாக தெரிய வந்தது. "



"அதற்கு ஆதாரம்?"



" அமுதன் வில்லாவின் எதிரெயிருந்த வில்லாவின் சிசிடிவி கேமிராவில் இவர்கள்கடத்திய காட்சி பதிவாகியிருக்கிறது. அதுதான் ஆதாரம் "



" ரைட். இனி உண்மையை மறைத்து பயனில்லை. கிருஷ்ணமூர்த்தியின் ஷேர் மார்கெட் விளையாட்டால் பாதிக்கப்பட்டு உயிரை விட்டவர் என்னுடைய டாடி.சாகும் போது கிருஷ்ணமூர்த்தியாருக்காக இப்படி எல்லோரையும் ஏமாற்றி சம்பாதிக்கிறானோ அந்த அமுதனை அவனுடைய வாரிசை கொன்று பழி தீர்க்க வேண்டும் என்று சத்தியம் வாங்கினார். "



"அப்பா செய்தவற்றுக்கு மகன் எப்படி ?"



"நானும் கேட்டேன். சொத்து சுகங்களுக்கு பங்கு கேட்பவன் பாவ புண்ணியங்களுக்கும் பங்கெடுப்பதே நியாயம் என்றார். எனக்கும் அது சரியென்று தோன்றியது.சோ. நான் அமுத னை கடத்தி கொல்ல முடிவு செய்தேன். இவர்களை அதற்காக நியமித்தேன். கடத்தி வரும் வழியில் அவன் இவர்கள் ஏமாந்த தருணத்தில் எப்படியோ தப்பி விட்டான்"



"இது நிச்சயமான உண்மை தானா?"



"என் பிராண்டு ப்ளு இம்பீரியல் மீதாக சத்தியம் செய்கிறேன். வேண்டுமானால் இவர்களை கேட்டு பாருங்கள்." என்றான் ராகேஷ்.



"ஜய்யா சொல்வது உண்மை தான். எப்படியோ கோட்டை விட்டுட்டோம்" என்றான் அனாமதேயன்.



"நீங்கள் சொல்வதை நம்புகிறேன்."



"அமுதனை கண்டுபிடித்து கொடுத்தால் கிருஷ்ணமூர்த்தி எவ்வளவு தருவார்?"



"இன்னும் முடிவு செய்யவில்லை."



" ரைட். அவர் தருவதை விட இரண்டு மடங்கு அதிகம் தருகிறேன். அவனை கண்டு பிடித்ததும் என்னிடம் ஒப்படையுங்கள். நான் என் கையால் அவனை சொல்ல வேண்டும்"



"நாங்கள் எங்கள் கஸ்டமர்களை ஏமாற்றுவதில்லை. முக்கியமாக டபுள் கேம் ஆடுவதில்லை"



" எல்லாவற்றிற்கும் விதிவிலக்குகள் உண்டு. உயிர் சம்மந்தப்பட்ட விசயத்தில் விதிவிலக்குகள் சாதாரணம். என் கேள்விக்கு எஸ் என்ற பதிலை மட்டுமே எதிர்பார்க்கிறேன்." என்றான் ராகேஷ்.



அனாமதேயன் தன் துப்பாக்கியை எடுத்து இருவரையும் நோக்கி நீட்டினான்.



"எனக்கு தேவை எஸ் என்ற பதில் மட்டுமே "



அருணும், வினோத்தும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

தேடாதே! கிடைக்க மாட்டேன்!
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 10



கிருஷ்ணமூர்த்திக்கு வியப்பாக இருந்தது. அந்த வினோதா பர்சனல் செக்ரட்டரியாக வேலைக்கு சேர்ந்ததிலிருந்து பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள். அவளை தன் கம்பெனி ஸ்டாப்களுக்கு முதலில் அறிமுகப்படுத்தி வைத்த போது அவளை சாதாரணமாகத் தான் நினைத்தார். அவள் வேலை செய்யும் வேகமும், திட்டமிடும் நேர்த்தியையும் பார்த்து உள்ளுர திகைத்து போயிருந்தார்.



வினோதா வந்த பிறகு அவரது வேலைப் பளு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்திருப்பதை அவரால் உணர முடிந்தது.அத்தியாவசியமான முக்கிய முடிவெடுக்கும் பைல்கள் மட்டுமே அவரின் கையெழுத்திற்காக கருத்திற்காக டேபிளுக்கு வந்தன. அதை விட முக்கியமாக அவரின் சுகர், பிளட் பிரசர் மாத்திரைகள் நேரத்திற்கு நினைவூட்டப்பட்டு அவரால் விழுங்கப்பட்டன. காரணம் வினோதா என்பதை அவர் அறிவார்.அமுத னை பற்றிய கவலைகள் மட்டுமே அவரது உள்ளத்தை அடிக்கடி அரித்து அவரை நிலைகுலைய செய்து கொண்டிருந்தன.



இவளை ஏன் பத்ரி தன்னிடம் முன்பே அறிமுகப்படுத்தவில்லை என்ற மெலிதான கோபம் கூட அவருக்கு பத்ரி மீது எழுந்தது. அவள் விதவிதமாக அணிந்து வரும் சேலைகளும் அவள் பயன்படுத்தும் பாடிஸ்பிரே வாசமும் அவரை எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்திருந்தன.



மதிய சாப்பாட்டை அவளோடு சாப்பிட்டு கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி



"வினோதா! உன்னோட அப்பா, அம்மா எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்?" என்றார். அவள் மீது கை வைத்தால் சட்டையை பிடிக்க யாராவது வருவார்களா என்பதன் பொருட்டே அவர் இந்த விசாரணையை தொடங்கினார்.



"அவர்கள் நான் சின்ன வயதாகஇருக்கும் போதே ஒரு பிளைன் விபத்தில் இறந்து விட்டார்கள். என் பாட்டிதான் என்னை வளர்த்தார்கள்"



பிளைன் விபத்து பணக்கார குடும்பம். பாட்டி வளர்ப்பு .இப்போது செத்து தொலைந்திருக்கும். முகத்தில் சோகத்தை வரவழைத்தவர்



"ஓ! ஐ ஆம் சாரி. கூட பிறந்தவர்கள்?"



"யாருமில்லை."



"உனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்திருந்தால் நான் அமுதனுக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பேன்"



"யார் அந்த அமுதன்?"



" னம சன் .! இப்போது காணாமல் போய் விட்டான். அவனை கண்டு பிடிக்க ஆட்களை நியமித்திருக்கிறேன்"



. "பையனை ரொம்ப திட்டுவீர்களோ ?"



"தீபாவளி பொங்கல் மாதிரி தான் நாங்கள் சந்திப்பது. குசலம் விசாரிப்பது. சம்பிரதாயமாக கட்டி அணைப்பது. அவ்வளவுதான். நான் இதுவரை திட்டியதில்லை. அதற்கு நேரமும் இல்லை"



"ஏன்?"



"பிசினஸ்.மேலே உயரத்தில் பறக்கும் விமானத்தை திடிரென நிறுத்த முடியாதில்லையா?"



"இருந்தாலும் பையனுக்கு நீங்கள் கொஞ்சம் டைம் ஒதுக்கி இருக்கலாம்"



"ஓதுக்கி இருக்கலாம் தான்.ஐய்யோ!" என்றார் கிருஷ்ணமூர்த்தி



"என்னாச்சு சார்?"



"கடலை பருப்பு பல்லில் மாட்டி கொண்டு விட்டது.வலிதாள முடியவில்லை. எதையும் சாப்பிட முடியவில்லை. ரண வேதனையாக இருக்கிறது."



"பொறுங்கள்." என்றவள் டம்ளர் தண்ணீரில் உப்பைகலந்து நீட்டினாள்.



"குடியுங்கள். உபாதை சற்று குறையும் "



கிருஷ்ணமூர்த்தி குடித்து முடிப்பதற்குள் முண்ணனி பல் ஆஸ்பத்திரியில் அவருக்கு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கி வைத்திருந்தாள் வினோதா.



"ஈவினிங் 7 மணிக்கு நாம் ஹாஸ்பிடல் போகிறோம் இப்போது வலி தேவலையா?"



"ம். பரவாயில்லை" என்றார் கிருஷ்ணமூர்த்தி.



மாலையில் வினோதாவும் அவரும் காரில் கிளம்பினார்கள். அவர் அவளது அண்மையை ரசித்து கொண்டிருந்தார். ஒரு திடிர் ஸ்பீட் பிரேக்கரில் அவளது மார்புகள் குலுங்குவதை ஓரக்கண்ணால் ரசித்தவர் "வேகமா ?ஓட்டாதே! மெதுவாக ஓட்டு " என்று டிரைவரை கண்டித்தார். அடுத்த ஸ்பீடு பிரேக்கர் வருமா என்று முன் கண்ணாடியை அடிக்கடி சாளேஸ்வர கண்களால் பார்த்து கொண்டார்.



ஹாஸ்பிடலில் இவருக்காக காத்திருந்த டாக்டர் படுக்க வைத்து வாயை திறந்து ஆராய ஆரம்பித்தார்.

"இரண்டு பற்கள் சேருமிடத்தில் உடைந்திருக்கிறது. அடைப்பதை விட பிடுங்குவதே நல்லது "



"இந்த ரூட் கேனல்?"



"அதற்கெல்லாம் வாய்ப்பில்லை.நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது. ஒரு பல்லை பிடுங்கிக் தான் ஆக வேண்டும்"



அவர் வாயினுள் ஊசி போட்டுவிட்டு டாக்டர் காரியத்தில் கண்ணாக இயங்க தொடங்கினார்.



கடைவாய் பல்லில் பஞ்சு வைத்து கொண்டு வெளியே வந்தார் கிருஷ்ணமூர்த்தி .அவருக்கு வாயே இல்லாதது போல் தோன்றியது.



ரொம்ப சிரமப்பட்டு ஒழுகும் எச்சிலை கர்ச்சீப்பால் துடைத்தபடி "டேங்ஸ்" என்றார் கிருஷ்ணமூர்த்தி .



"எங்கப்பா உயிரோடு இருந்தால் இந்த மாதிரி உதவியை நான் செய்ய மாட்டேனா? நீங்கள் எனக்கு அப்பாவை போல " என்றாள் வினோதா.



பதட்டத்துடன் "நோ!" என்றார் கிருஷ்ணமூர்த்தி . வெளியே ". ஙே " என்று கேட்டது.

தேடாதே ! கிடைக்கமாட்டேன்!
 

New Threads

Top Bottom