Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed தேடாதே! கிடைக்காது!

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 11



" என்ன பாஸ்! அந்த ராகே சோட ஆள் அந்த பெயர் தெரியாதவன் துப்பாக்கியை நீட்டியதும் ச ட்டென்று பால் மாறி விட்டீர்களே?" என்றான் அருண் காரை ஓட்டியபடி.



வெளியே ஓடிக் கொண்டிருந்த மரங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வினோத் "நான் எங்கே பால் மாறினேன் ? நான் உன்னிடம் அமுதனை ஒப்படைத்த பின் அவனை கொல்வதை விட கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்த பின் அவனை கொல்வது நல்லது என்று தானே கூறினேன் ? அதை நல்ல யோசனை என்று நம்பித்தானே நம்மை உயிரோடு வெளியே விட்டிருக்கிறான். உயிரோடு இருப்பதால் தானே நீ இந்த கேள்விகளை கேட்டு கொண்டிருக்கிறாய்?"



"அப்போது மெய்யாகவே அமுதன் கிடைத்து விட்டால் அவனைகிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைக்காமல் ராகே சிடம் ஒப்படைக்கப் போகிறோம்?"



"பாருஅருண் ! எப்போதுமே ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சனைகள் வரும் போது எது அதி முக்கியமோ அதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்போம். இப்போதைய முக்கிய பிரச்சனை அமுதனை கண்டுபிடிப்பது. முதலில் அதில் கவனம் செலுத்துவோம்"



" ரைட் பாஸ் .! அமுதனை நாம் எங்கிருந்து தேடுவது ?ஓரு நூலிழை தொடக்கம் கிடைத்தால் பின்பற்றி பின்னால் போகலாம்.இதில் அப்படி எதையும் காணோமே?"



"ஏன் தொடக்கம் இல்லை என்று நினைக்கிறாய்? மூன்றாம் தேதி இரவிலிருந்து அமுதனன காணவில்லை. நமக்கான தொடக்க புள்ளி அது தான். நான்காம் தேதியிலிருந்து இன்றைய தேதி வரை வந்த எல்லா நியூஸ் பேப்பரையும் சேகரி. தலைப்பு செய்திகளிலிருந்து பெட்டி செய்தி வரை அலசு. ரயிலில் அடிபட்டு இறந்த அனாதை பிணங்கள், அடையாளம் தெரியாத மார்ச்சு வரி பிணங்கள், நான்காம் தேதியிலிருந்து போலீஸ் லாக்கப்பில் அடைபட்டவர்கள், ஹாஸ்பிடலில் அட்மிட்டானவர்கள்,நினைவிழந்து ஹாஸ்பிட்டலில் அட்மிட்டானவர்கள் என்று சகலத்தையும் தோண்டி எடு இவற்றில் ஏதோ ஒன்றில் அமுதனுக்கான செய்தி ஓளிந்திருக்கலாம். நாம் தான் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்" என்றான் வினோத்.



"நீங்கள் நியூஸ் பேப்பரை ஆராயுங்கள். மீதமுள்ளவற்றை நான் பார்த்து கொள்கிறேன்"



"எனக்கு நாற்பது நாட்களின் பேப்பர்கள் வேண்டும்?."



" மாலைக்குள் உங்கள் டேபிளில் அத்தனை பேப்பர்களும் இருக்கும். இந்த ராகேஷ் மிரட்டியதை கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்ல வேண்டாமா?"



" கதையில் டுவிஸ்ட் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அப்போது இந்த விவகாரம் நமக்கு பாதகமாக கூட வந்து சேரலாம். அதனால் இப்போதைக்கு அவரிடம் ராகேஷ் விவகாரத்தை சொல்லாமல் இருப்பதே உத்தமம். "



"ஒருவேளை நாம் அமுதனை கண்டுபிடித்து கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்து விட்டாலும் ராகேஷ் அவனை கொன்று விடுவான். அதை நம்மால் தடுக்க முடியாது இல்லையா பாஸ்?"



"அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விடலாம். இல்லை அவனுக்கு பலத்த பாதுகாப்பை தரலாம்.இதை எல்லாவற்றையும் விட உத்தமமான விசயம் ராகேஷ் கேட்பதை கொடுத்து காம்ப்ரமைஸ் செய்து கொள்ளலாம் வேறு நல்ல வழி எதுவும் எனக்கு தோன்றவில்லை"



அருண் காரின் ஆக்சிலேட்டரை மிதித்தான். கார் விரைந்தது.



அன்று மாலை நாற்பது நாட்களுக்கான மொத்த நியூஸ்பேப்பர்களும் வினோத்தின் டேபிளில் மலையென குவிந்தன. அருண் போலீஸ் ஸ்டேசனுக்கும், கவர்மெண்ட் மார்ச்சு வரிக்கும் அலைய ஆரம்பித்திருந்தான். ஓவ்வொரு இடத்திலும் ஏமாற்றமான செய்திகளை சுமந்தபடி திரும்ப வந்து கொண்டிருந்தான். வினோத் இரண்டு முறை கிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொள்ள முயன்றான். ஒரு தேன் தடவிய குரல் கிருஷ்ணமூர்த்தி பல் பிடுங்கப்பட்டு பேச முடியாமல் ஓய்வில் இருப்பதாக தெரிவித்தது. அந்த குரலுக்கு சொந்தக்காரி புது செக்ரட்டரி வினோதா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டது.



அருண் தன் முயற்சிகள் அத்தனையிலும் தோற்று போய் உட்கார்ந்திருந்தான். உதடு பிதுக்கியவனை பார்த்த வினோத்" என்னாச்சு ?" என்றான்.



"ஓன்னும் தேறலை பாஸ். எனக்கென்னமோ நாம் தவறான பாதையில் போவதாக தோன்றுகிறது " என்றான் சலிப்பாக.



"நம்பிக்கையை கைவிடாதே! இதோ இந்த பேப்பர்களில் எதாவது கிடைக்கிறதா என்று பார் .நான் இதுவரை பார்த்த பேப்பர்களை தனியாக வைத்திருக்கிறேன்"



"நான் புத்தகத்தின் கடைசி பக்கத்திலிருந்து படித்து பழகியவன். நான்காம் தேதியிலிருந்து தேடுகிறேன்."



அருணும் தேடலில் இணைந்து கொண்டான்.



ஐந்தாம் தேதி பேப்பரின் ஐந்தாவது பக்கத்தில் ஒரு பெட்டி செய்தி பிரசுரமாகியிருந்தது.



"ரயில்வே டிராக்கில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத வாலிபர் "



அதைப் பார்த்ததும் அருணின் முகத்தில் பல்ப் எரிந்தது.



"இது தான் நாம் தேடிய செய்தி என்று நினைக்கிறேன்"



" அப்படியென்றால் மார்ச்சு வரியில் இந்த பிணத்தை பற்றிய செய்தி உனக்கு கிடைத்திருக்க வேண்டுமே?" என்றான் வினோத்.



"ஆமா பாஸ்! எங்கேயோ தப்பு நடந்திருக்கிறது.வாங்க! போய் பார்ப்போம்!"



"அமுதனை நாம் அவன் வீட்டில் போட்டோ வாகத்தான் பார்த்திருக்கிறோம். அவனை பை ரப்பா தான் அடையாளம் காட்ட வேண்டும்"



"அப்ப கிருஷ்ணமூர்த்தி "



"இது தெரிஞ்சா செத்துருவார்.விசயம் தெளிவாகட்டும். நாமே பக்குவமாக அவரிடம் சொல்லலாம்."



"அப்ப முதலில் பைரப்பாவை பிடிப்போம்"



இருவரும் எழுந்தார்கள்.

தேடாதே! கிடைக்க மாட்டேன்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 12



கிருஷ்ணமூர்த்திநெக்குருகி கொண்டிருந்தார். அவரது வீட்டில் வினோதா அவரை ஒரு பூப்போல் தாங்கி கொண்டிருந்தாள். அவருக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்தாலும் வினோதா தன் அலுவல் வேலைகளையும் போன் மூலமாக நிறைவேற்றி கொண்டிருந்தாள். வாய் பேச முடியாததால் அவளின் பணிவிடைகளை மவுனமாக ஏற்றுக் கொண்டாலும் அவர் மனதில் செருப்பில் சிக்கிய கல்லாக உருத்திக் கொண்டிருந்தது வினோதாவின் நீங்கள் என் அப்பா மாதிரி என்று சொன்ன வாக்கியம்,



அவர் உள்ளத்தின் உள்ளத்தின் நடுவே வினோதாவை பற்றிய ஒரு மனோ சித்திரம் உருவாகி கொண்டிருந்தது. கண்ணாடியில் தெரிந்த அவரது பல் வலியால் வீங்கிய கன்னமும் அவரது முதுமை தோற்றமும் அந்த மனோ சித்திரத்தை கலைத்து போட்டுக் கொண்டிருந்தது. பேப்பரில் பார்த்த விஜய் மல்லைய்யாவின் திருமணம் வேறு அவரது உள்ளத்து ஆசையை பேயாக பிடித்து ஆட்டத் துவங்கியிருந்தது அமுதன் திரும்ப கிடைத்தால் தன் உள்மன அபிலாசைகளுக்கு ஓப்புக் கொள்வானா என்ற சந்தேகம் வேறு அவரை பிடித்து கொண்டிருந்தது.



கிருஷ்ணமூர்த்தி வறுமையான ஏழை குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி கூடம் பக்கமே மழைக்கு கூடஒதுங்காத அப்பா அம்மாவுக்கு பிறந்தவர்.கிருஷ்ணமூர்த்திக்கு விவரம் தெரிந்த வயதில் அப்பா இறந்து போக அம்மா காட்டுவேலை வீட்டு வேலை என்று எதையெதையோ செய்து அவரை காப்பாற்றினாள் அப்போதெல்லாம் உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்த விசேசங்களில் புறக்கணித்த, அவமானப்படுத்திய சொந்த பந்தங்களின் உண்மை முகத்தை பார்த்த கிருஷ்ணமூர்த்திக்கு அவர்களின் மீதான வெறுப்பு வளர்ந்தது. அவர்கள் அப்படி தன்னை புறக்கணிக்க காரணம் காசுதான் என்பதும் அவருக்கு தெரிந்து தான் இருந்தது. அப்போது பிடித்தது அவருக்கு பணப் பைத்தியம். கிடைத்த வேலையில் திறமையை காட்டியவருக்கு சம்பளம் தான் கிடைத்தது. சீக்கிரம் முன்னேற தொழில் தான் வேண்டும் என்று நினைத்தவர் கண்ணில் பட்டதையெல்லாம் விற்க ஆரம்பித்தார்.



அவரது நல்ல நேரமோ என்னவோ அவர் தொட்டது துவங்கியது. அவர் ஒரு தொழிலதிபராக உயர்ந்த போது அம்மா செத்து போனாள். தனி மரமாக நின்றவருக்கு பணமே பிரதானமானது. நீதி, நேர்மை என்று பார்க்காமல் சக வியாபாரிகளை எதிரிகளாக பாவித்து அழித்து ஓழித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவரது வேகத்தையும், தந்திரத்தையும் பார்த்து வியந்த மல்டி மில்லியனர் துளசிதாஸ் தன் மகள் சந்தியாவை அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏரோப்ளைனில் பறந்த கிருஷ்ணமூர்த்தி இப்போது ராக்கெட்டில் பறக்க ஆரம்பித்தார். மாமனாரின் சொத்தும் அரசியல் அறிமுகமும் கிருஷ்ணமூர்த்தியின் ஆளுகையை விஸ்வரூபமாக ஸ்தாபித்தன.சந்தியாவுக்கு அமுதன் பிறந்தான். இன்னொரு பெண் குழந்தை வேண்டுமென்பது சந்தியாவின் ஆசை.கிருஷ்ணமூர்த்தியோ காண்டம் போடாமல் கண்டம் விட்டு கண்டம் பயணமாகி கொண்டிருந்தார். அவருக்கு வீட்டுக்கு வரவோ சந்தியாவிடம் கூடவோ நேரமோ எண்ணமோ இருக்கவில்லை.



மேலும் பிசினஸ் கான்ட்ராக்ட் முடிந்ததும் அதை கொண்டாடும் விதமாக மது, மாது என்று பரிமாறப்பட்டதால் கிருஷ்ணமூர்த்தி ஓட்டல் சாப்பாட்டை விதவிதமாக ருசித்து விட்டு வீட்டு சாப்பாட்டை மறந்தே விட்டார். காசு இருந்தால் தலை வாழை இலையோடு பக்கத்தில் நின்று என்ன வேண்டும் என்று கேட்டு கேட்டு பரிமாறுவார்கள் என்பதே அவரின் அனுபவம். எல்லாமே பணம் செய்யும் மாயம் என்பதை அவர் உணர்ந்தே இருந்தார்.



இப்போது இந்த வினோதா காட்டும் அன்பில் நெக்குருகி கொண்டிருந்தார் கிருஷ்ணமூர்த்தி .எந்த பிரதிபலனும் பார்க்காமல் பரிபூரண அன்பை தன் மீது ஒருவள் செலுத்துவது அவரை கிளு கிளுக்க வைத்தது. காலம் கடந்து தனக்கு வந்து சேர்ந்திருக்கும் இந்த உணர்வுதான் காதலோ? என்றது அவர் மனம் . எப்போதும் அடிபட்டு எதையும் சந்தேகிக்கும் அவரது இன்னொரு மனம் நம்பாதே! எல்லாம் பணத்திற்காக! என்றது. சோ வாட்? தன்னை இப்படி விழுந்து விழுந்து கவனித்து கொள்ளும் அவளுக்காக கொஞ்சம் பணத்தை கொடுத்தாள் தான் என்ன? என்றது அவரது உள் மனம்.



" என்ன யோசிக்கிறீர்கள்? நீங்கள் இப்போது பேச கூடாது" என்றாள் வினோதா.



"ம்ம்" என்ற கிருஷ்ணமூர்த்தி தன் பார்வையை திருப்பினார். டிராவை திறந்து மாத்திரைகளை எடுத்து கொண்டிருந்த வினோதாவின் இடுப்பு அவரின் கண்ணில் பட்டது. அவரின் மூன்றாம் புருசார்த்தம் விழித்து கொண்டது.



" இவளை இதே கட்டிலில் ஒரு நாள் சந்தித்து விட வேண்டும்." அவர் மனதிற்குள் ஒரு வைராக்கியமும், உறுதியும் எழுந்தது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 13



காரின் பின் சீட்டில் உட்கார்ந்து வாயில் துண்டை வைத்து அழுது கொண்டிருந்த பைரப்பாவை பார்த்த அருண் "யோவ்! இப்போதுஎதற்காக கற்பழிக்கப்பட்ட பெண்ணை போல் கதறி கதறி அழுது கொண்டிருக்கிறாய்? இறந்து போனது அமுதன் என்றே முடிவு செய்து விட்டாயா? நீ சொல்லும் பதிலில் தான் எங்களுடைய முடிவும் இருக்கிறது. அதை மறந்துவிடாதே! நன்றாக தெளிவாக பார்த்து அடையாளத்தை காட்டு" என்றான் அருண்



"தம்பி ரொம்ப நல்லவருங்க. அவர் குடிச்சுட்டு மிச்சம் வைத்ததை நான் எடுத்து குடித்தால் கூட கண்டுகொள்ளமாட்டார் " என்றான் பைரப்பா.



"ஓ! நீ இப்போது கதறி அழுவது அமுதனுக்காக இல்லை. அவன் வைத்து விட்டு போகும் மீதி சரக்கை அடிக்க முடியவில்லையே என்ற துக்கத்தில் தான் அழுகிறாய். சரியா?"



"அதுவும் கொஞ்சம் நிசம் தான். யாருக்கும் எந்த பாவமும் தம்பி செய்ததில்லை. சின்ன வயதிலேயே இப்படி ஒரு முடிவு வந்திருக்க கூடாதுங்க"



"கன்பார்மாக அமுதன் இறந்து விட்டான் என்ற முடிவை நோக்கி எங்களை தள்ளுகிறாய்"



" அப்படியில்லை! என மன ஆதங்கத்தை சொன்னேன்.இனி பேச மாட்டேன்"



பைரப்பா தன் துண்டை எடுத்து வாயில் வைத்து அழுத்தி கொண்டான்.



"அதை விடு. என் கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லவில்லையே?"என்றான் வினோத்.



" என்ன கேள்வி?"என்றான் அருண்.



"மார்க்சுவரியில் நீ விசாரித்த போது இந்த பாடி விவகாரம் ஏன் உன் கவனத்திற்கு வரவில்லை?"



"என்னை சந்தேகிக்கிறீர்களா பாஸ்?"



"நான் அப்படி சொல்லவில்லையே? நீ அநேகமாக ஏதாவது ஒரு பெண்ணை விசாரித்திருப்பாய் என்று தான் எனக்கு தோன்றுகிறது."



" எப்படி பாஸ் கண்டுபிடித்தீர்கள்? நான் இதை ஒரு பெண் நர்சிடம் தான் விசாரித்தேன்."



"கொஞ்சம் அத்துமீறி பேசியிருப்பாயே? அதில் காண்டாகித்தான் உன்னை விரட்டியடித்திருப்பாள் என்று நினைக்கிறேன்"



"நீங்கள் அப்படி வருகிறீர்களா?"



"நான் சொன்னது உண்மையாக இருக்கவே வாய்ப்பதிகம். உன் வாய்கொழுப்பை நான் நன்றாகவே அறிவேன்"



"அதென்னமோ பாஸ்! அழகான பெண்களைப் பார்த்தாலே அருண் தன் நிதானத்தை இழந்து விடுகிறான்"



"கொஞ்சம் அதை கண்ட்ரோல் செய்"



கவர்ன்மெண்ட் மார்ச்சுவரிக்கு வெளியே காரை நிறுத்திய வினோத் இருவரையும் இறங்க சொல்லிவிட்டு நடந்தான்.



"பாஸ்! நான் வேண்டுமானால் அந்த நர்சிடம் மீண்டும் விசாரிக் கட்டுமா?" என்ற அருணை பார்த்து முறைத்த வினோத் "உதைபடுவாய்! நானே விசாரித்து கொள்கிறேன்" என்றான்.



மார்ச்சு வரிக்கு வெளியே பிடியை வாயில் வைத்து கொண்டு தீப்பெட்டியை தேடிக் கொண்டிருந்த பழுப்பு யூனிபார்ம் அணிந்தவனுக்கு லைட்டரை கிளிக்கி நெருப்பை தானம் செய்தான் வினோத்.



எதிர்பாராத நெருப்பு உதவியால் நெகிழ்ந்தவன் மூவரையும் நிமிர்ந்து பார்த்தான்.



"தாங்ஸ் தம்பி.! யாரு நீங்க? இங்கே யாரை பார்க்கனும்?" என்றான்.



"உங்களைத்தான் பார்க்க வந்திருக்கிறோம்"



"என்னையா? உங்களை நான் முன் பின் பார்த்ததில்லையே? யாரு தம்பி நீங்க?"



"உங்க பேரு?"



"ஆறுமுகம் "



" பாருங்க ஆறுமுகம் .! எங்களுக்கு வேண்டிய ஒருத்தரை நீங்க பார்த்திருக்கீங்க அதுவும் பிணமாக .அப்ப நாங்கள் உங்களை சந்திப்பது தானே முறை " என்ற வினோத் அந்த அமுதனின் பத்திரிக்கை செய்தியை காட்டினான்.



"இந்தபாடியா ? இது ஒரு ஒரு மாசமா பீரீசரில் கிடக்குதே? நீங்க இந்த பாடிக்கு நீங்க என்ன முறை?"



"சுத்தி வளைத்து தம்பிமுறையாகுது. ஒன்று விட்ட இரண்டு விட்ட என்று சொல்வார்களே? அதில் ஒரு முறையில் தம்பி. வீட்டை விட்டு காணாமல் போய் 42 நாட்களாகிறது. எல்லா இடத்திலும் தேடி சலித்து விட்டோம். தேடாமல் விட்டது இங்கே மட்டும் தான். கடைசியாக இங்கே ஒரு பார்வை பார்த்து விடுவோம் என்று தான் வந்திருக்கிறோம். சந்தேகத்தை நிவர்த்தி செய்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. தயவு செய்து உதவி செய்யுங்கள்."



"நான் என்ன செய்யனும் தம்பி?"



"அந்த ரயில் விபத்து பாடியை காட்டுங்கள். இறந்தது என் தம்பி தானா என்று உறுதி செய்து கொள்கிறோம்"



"அதற்கென்ன தம்பி? பாடியை காட்டி விட்டால் போச்சு?"



"இந்தாருங்கள். தீப்பெட்டி வாங்க இதை வைத்து கொள்ளுங்கள்" என்று ஒரு ஐநூறு ரூபாயை அவர் பாக்கெட்டில் வைத்தான் வினோத்.



" இருக்கட்டும் தம்பி" என்று ஆறுமுகத்தின் வாய் மட்டும் சொன்னது.



மூவரையும் நடத்தி கொண்டு ஆறுமுகம் ப்ரீசர் ரூமை நோக்கி நடந்தான். வரிசையாக அடுக்கப்பட்டிருந்த குளிர் சாதன பெட்டிகள் இருந்த அறைக்குள் நால்வரும் நுழைந்தனர்.



ஆறுமுகம் ஒரு பெட்டியை வெளியே இழுத்து காட்டினான்.



"இது தான் தம்பி பாடி. முகம் சிதைந்து விட்டது. வேறு ஏதாவது அடையாளம் இருந்தால் அதை வைத்து முயற்சி செய்யுங்கள், "



"பை ரப்பா! நன்றாக பார்த்து சொல். இது அமுதனின் உடலா என்று " என்று விநோத் பை ரப்பாவை முன்னால் தள்ளினான்.



கண்களை ஒரு முறை துடைத்து கொண்டு பாடியை பார்த்த பைரப்பா "மூணாம் தேதி நைட்டு தம்பி இந்த டிரஸ் தான் போட்டிருந்தார்" என்றான்.



வினோத்திற்கும் அருணுக்கும் நடு நெஞ்சில் இடி இறங்கியது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 14



பைரப்பாவின் பதிலை கேட்டதும் அருணும் வினோத்தும் திகைத்து நின்றனர்.



"பாருபைரப்பா! பார்த்து நிதானமாக யோசித்து சொல். இந்த பாடி உன்னுடைய சின்ன எஜமான் அமுதனுடைய தா என்று " என்றான் அருண்.



"எனக்கு சரியா சொல்ல தெரியலைங்க. ஆனா தம்பி கடைசியாக வீட்டை விட்டு போன போது இந்த சிவப்பு டீ சர்ட்டும், ப்ளு டவுசரும் தாங்க போட்டிருந்தாரு. அதை என்னால் நிச்சயமாக சொல்ல முடியும் " என்றான் பைரப்பா வீச்சம் தாங்காமல் மூக்கை துண்டால் பொத்தியபடி.பெர்முடாசைத்தான் டவுசர் என்று சொல்கிறான் பைரப்பா என்று அருண் உடனே விளங்கி கொண்டான்.



"நல்லா யோசித்து பார்.பைரப்பா!அமுதனின் உடலில் வேறு ஏதாவது அடையாளங்களை பார்த்திருக்கிறாயா? அடிபட்ட தழும்பு, மச்சம் இந்த மாதிரி எதையாவது அவன் உடலில் பார்த்திருக்கிறாயா? உன் ஆல்கஹால் நிரம்பிய மூளையை சற்று தெளிவுபடுத்தி பார். ஏதாவது தோன்றும் " என்றான் வினோத்.



இரண்டு புருவத்தையும் நெருக்கி கொண்டு கண்களை மூடி யோசித்த பைரப்பா " ஆங்! ஞாபகம் வந்து விட்டது. தம்பியோட வலது கையில் கட்டை விரலுக்கு நேர் கீழே ஒரு மச்சம் இருப்பதை நான் பார்த்திடுக்கிறேன். நீங்கள் சொன்னதை யோசித்து பார்த்ததால் எனக்கு இது சட்டென்று நினைவுக் கு வந்தது. " என்றான் பைரப்பா.



ஆறுமுகம் பாடியின் வலது கையை திருப்பி காட்டினார். அதில் எந்த மச்சமும் இல்லை.



"அந்த லாரி டிரைவர் பெருங்கருணையாளன். கையை விட்டு வைத்தான். " என்றான் அருண்.



"நல்லவேளை! எங்கள் வயிற்றில் பீரை வார்த்தாய். அப்படியென்றால் இது அமுதனின் பாடி இல்லை என்கிறாயா?" என்றான் வினோத்.



"எனக்கென்னமோ இது தம்பி பாடி மாதிரி தெரியவில்லை." என்றான் பைரப்பா.



"தேங்க்ஸ்னே! இது நாங்கள் தேடிய ஆள் இல்லை." என்றான் அருண்.



"சந்தோஷம் தம்பி.லவ் மேட்டரில் எங்கியாவது தலைமறைவாகியிருப்பார். தேடினால் அகப்படுவார்" என்றான் ஆறுமுகம்.



" தேடிப் பார்க்கிறோம். எங்களின் சந்தேகத்தை தீர்ந்து வைத்ததற்கு நன்றி" என்றான் வினோத்.



"பரவாயில்லை தம்பி" என்ற ஆறுமுகத்தின் கை தன்னிச்சையாக சட்டை பாக்கெட்டை தடவியது.



மூவரும் மார்ச்சு வரியிலிருந்து வெளியேறினர்.காரை நெருங்கிய போது பைரப்பா திடிரென தலையில் கை வைத்து அப்படியே உட்கார்ந்து விட்டான்.



"யோவ்! என்னாச்சு?" என்றான் வினோத்.



"ஓரே படபடப்பா இருக்குங்க. எனக்கு ரத்தத்தை பார்த்தால் பயம் வந்து தலை சுற்றிவிடும். கை கால் எல்லாம் வெடவெடன்னு நடுங்குதுங்க " என்றான்.



"அருண்! ஓடிப்போய் ஒரு சோடா வாங்கி வா" என்றான் வினோத்.



"சோடா வெல்லாம் இந்தாளுக்கு கேக்காது பாஸ்! சோடாவோட மிக்சிங் பண்ற சரக்கு தான் இந்தாளுக்கு கேட்கும் . பக்கத்துல கடை எங்கிருக்குன்னு தெரியலையே?" என்றான் அருண்.



" எதிர்த்த தெருவில் ஒரு கடை இருக்குங்க" என்றான் பைரப்பா.



"கூகுள் மேப் தோற்றது போ! இவர்களுக்கெல்லாம் டாஸ்மாக் தான் லேண்ட் மார்க்." என்றான் அருண்.



"எங்கெங்கு கடை இருக்குன்னு ஒரு குடிகாரனுக்கு தெரியாதா? சீக்கிரமாக வாங்கிட்டு வாங்க. கை கால் எல்லாம் நடுங்குகிறது."



"ஓசியில் நீ மஞ்சள் குளிக்க நான் தான் அகப்பட்டேனா? வர வர என்னை அவமானப்படுத்துபவர்களின் லிஸ்ட் பெரிதாகி கொண்டே போகிறது " என்ற அருண் டிராபிக் ஜாமில் ரோட்டை கடந்து எதிர்தெருவிற்கு விரைந்தான் .



பச்சை போர்டுடன் கம்பி வலையால் அடைக்கப்பட்ட கடையை நெருங்கியவன் "ஒரு கோட்டர் கொடுங்க?" என்றான்.



" என்ன பிராண்டு?" என்ற கடைக்காரனின் கேள்விக்கு மண்டையை சொரிந்தவன் இதை கேட்காமல் விட்டு விட்டோமே என்று நினைத்தவனாக வினோத்திற்கு போன் செய்தான்.



" என்ன பிராண்டுன்னு கேட்டு சொல்லுங்க பாஸ் !" என்றான்



" எது காஸ்ட்லி யோ அது" என்று பை ரப்பா சொன்னது மெலிதாக காதில் விழுந்தது. " நேரம்டா" என்றுபோனை அணைத்தவன்" அண்ணே! காஸ்ட்லியா ஏதாவது கொடுங்க" என்றான்.



"அதுல எந்த பிராண்டு தம்பி?"



"உங்க பிராண்டு எது?"



"ஆபிசர்ல் சாய்ஸ்"



" பொருத்தமான பேரு. அதுலயே ஓன்னை கொடுங்க"



எதிர்த்த பங்க் கடையில் அரை லிட்டர் லெகர் சோடா பாட்டிலை வாங்கி கொண்டு கிளம்பினான் அருண்.



பழையபடி டிராபிக் ஜாமை கடந்து ஆஸ்பத்திரி நுழைவாயிலுக்குள் நுழைந்த போது ஏதேச்சையாக திரும்பி பார்த்தவன் அதிர்ந்தான். எதிர் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு வெளியே நின்று இவனையே பார்த்து கொண்டிருந்தான் ராகே சின் வீட்டில் சந்தித்த பெயர் இல்லாத அனாம தேயன்.அருணின் முதுகு ஜில்லிடதொடங்கியது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அ த்தியாயம் 15



அலுவலகத்தில் வினோத்தும், அருணும் செய்வதறியாமல் திகைப்புடன் உட்கார்ந்திருந்தனர்.



"நீ சொல்வதை பார்த்தால் ராகேஷ் நம்மை பின் தொடர ஆட்களை நியமித்திருப்பான் போல தெரிகிறது. நம்மை பின் தொடரும் அவர்களுக்கு தெரியாமல் நாம் எதையும் செய்ய முடியாது போலிருக்கிறதே?"



"ஆமாம் பாஸ்! இப்போது கூட தெருமுனையில் நமக்காக காத்திருக்கிறார்கள். பின் தொடரும் நிழல்கள்"



"அவர்களை எப்படி ஏமாற்றுவது என்று பிறகு யோசிப்போம். இப்போது நாம் அமுதனைப் பற்றி சிந்திப்போம். 3ம் தேதி இரவு அமுதன் கடத்தப்பட்டு தப்பித்திருக்கிறான். திரும்ப வீட்டுக்கு வரவில்லை. 5ம் தேதி காலையில் அவனது உடைகள் அணிந்தபாடி கிடைக்கிறது. அது அமுதன் இல்லை என்றே வைத்து கொள்வோம். நாற்பது நாட்களாக அமுதன் வீட்டிற்கு வரவில்லை. வேறு எங்கே போயிருப்பான்?"



"அதை விட முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது?" என்றான் அருண்.



"என்ன அது?"



"இரவு அமுதன் கடத்தப்பட்ட போது அவன் கேசுவலான உடையில் இருந்திருக்கிறான். அப்படியென்றால் அவனிடம் பணம் இருந்திருக்காது. பர்சில் ஏடிஎம் கார்டு, போனில் கூகுள் பே போன்ற பணம் தரும் எதாவது ஒரு விசயம் அவனிடம் இருந்திருக்க வேண்டும். கடந்த நாற்பது நாட்களாக அமுதன் அதை பயன்படுத்தி பணத்தை எடுத்திருந்தால் அவன் உயிரோடு எங்கேயோ இருக்கிறான் என்று அர்த்தம்."



"ஆமாம். நான் இந்த கோணத்தில் யோசிக்க வே இல்லை. அப்படியென்றால் அமுதனின் செல்போன் என்னவானது என்று நமக்கு தெரியவில்லையே?"



" அவனது செல்போன் தொலைந்து போயிருக்கலாம். இல்லை கடத்தும் போது எங்கேயாவது தவறி விழுந்திருக்கலாம். இல்லை தன்னை யாரும் கண்டுபிடித்து விடக் கூடாது என்று அவனே தன் செல்போனை அணைத்து கூட வைத்திருக்கலாம்."



அமுதனைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த பைலை புரட்டி பார்த்த அருண் " அவனுக்கு மூன்று பாங்குகளில் கணக்கு இருக்கிறது. நான் போய் இந்த வங்கிகளில் ஸ்டெட்மெண்டை வாங்கி வருகிறேன். அவனது வரவு செலவு விவகாரங்களில் நமக்கான தகவல் ஏதாவது கிடைக்கலாம்."



"குட்! இப்போது தான் உன் மூளை வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது."



" ஆனால் எனக்கு ஒரு தொந்தரவு இருக்கிறது பாஸ்.சூப்பர் பிகரை சுற்றி வரும் காலேஜ் பசங்களைப் போல என்னை அந்த ராகே சின் ஆட்கள் பின்னாலேயே பின்தொடர்ந்து வருவார்களே? இப்போது நான் என்ன செய்வது? அவர்களுக்கு கண்ணாமூச்சி காட்டி விட்டு வெளியேறவா?"



" எதுவும் வேண்டாம். உனக்கு ராகேஸ்வழங்கிய இஸட் பிரிவு பாதுகாப்பு அது என்று நினைத்து கொள். வெகு தைரியமாக உணர்வாய் " என்றான் வினோத்.



" பாதுகாப்பாக இருந்தால் எனக்கு தைரியம் தான். நான் திரும்பி வராத அளவுக்கு எதையாவது செய்து தொலைத்து விடப் போகிறார்கள்"



"உ ன் ஆயுள் ரேகை ரொம்பவும் நீளமானது. அவ்வளவு சிக்கீரம் உனக்கு சாவு வராது"



"நீங்கள் சொல்வது வரமா? சாபமா? என்று தெரியவில்லை. வெளியே போய் விட்டு திரும்பி வந்தால் தான் வரமா சாபமா என்றே தெரியும் "



"பயப்படாதே! பயப்படும் ஆளா நீ? ஒன்று செய். எதாவது விபரீதமாக நடக்க போவதாக தெரிந்தால் உன் செல்போனில் என்னை அழைத்து விட்டு போனை பாக்கெட்டில் போட்டுவிடு.பேசி டைவர்ட் செய்.நான் விரைவில் வந்து உன்னை மீட்கிறேன்"



"எனக்கென்னவோ உங்கள் மீது நம்பிக்கையில்லை" என்ற அருண் அங்கிருந்து கிளம்பினான். அவன் தன் பைக்கில் கிளம்பியதும் தெருமுனையில் நின்றவர்களில் சிலர் இறங்கி கொள்ள அனாமதேயனின் கார் கிளம்பியது.



சன்னல் வழியாக இதை பார்த்து கொண்டிருந்த வினோத் அவர்களை குழப்ப திட்டமிட்டான். சடுதியில் ஆபிசை பூட்டி கொண்டு காரில் ஏறியவன் அதை ஸ்டார்ட் செய்தான்.



ரிவர்சில் டொய்ங், டொய்ங் சத்தத்துடன் ரிவர்ஸ் போட்டு காரை சாலையில் இறக்கியவன் அரைவட்டமடித்து காரை உச்சகதியில் செலுத்தினான்.



வினோத்தின் எண்ணம் தவறென்பது இரண்டு பேர் அவன் காரை பைக்கில் துரத்தியபோது அவனுக்கு தெரிய வந்தது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 16



ராகே சின் ஆட்கள் தன்னை இப்படி பைக்கில் தொடர்வதைப் பார்த்து தனக்குள் சிரித்து கொண்டான் வினோத். அவன் மனதில் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. அது அமுதனின் அறையில் இருந்த ஏதோ ஓன்றை தாங்கள் கோட்டை விட்டு விட்டதாக அவன் மனது நினைக்க தொடங்கியிருந்தது.அமுதனின் அறையில் இருந்த சேனல் 9 என்ற வாசனை திரவியம் அவனை தடுமாறச் செய்து கொண்டிருந்தது. அந்த வாசனை திரவியத்தை பற்றி கூகுளில் தேடிய போது தான் அது பெண்களுக்கு மிகப் பிடித்தமான செண்ட் வகை என்பதும் ஹாலிவுட் நடிகை மார் லின் மன்றோ அதை ரெகுலராக பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.



விதிவிலக்காக ஒரே ஒரு ஆண் பிரபலமும் அதே செண்ட் வகையை பயன்படுத்தி வந்ததும் அவனது தேடலில் கிடைத்தது. அந்த ஆண் பிரபலம் தமிழ் நகைச்சுவை நடிகரான சந்திரபாபு . அவருக்கு மிகப் பிடித்தமான செண்ட் வகையும் சேனல் 9 தான்.அமுதனின் அறையில் இருந்த அந்த செண்ட்பாட்டில் மிக குறைவாகவே பயன்படுத்தப்பட்டிருந்ததால் மிக சமீப காலமாகத் தான் ஒரு பெண் அமுதனுடன் தங்கி இருந்திருக்க வேண்டும். அதனால் சேனல் 9 ஐதமிழ்நாட்டில் பயன்படுத்தும் மிகச் சொற்பமான பெண்களை அவர்களின் விலாசங்களை தேடிப் பிடித்தால் அமுதனின் காதலியை கண்டுபிடித்து விட முடியும் என்று வினோத் திடமாக நம்பினான்.அமுதன் காணாமல் போன தினத்திலிருந்து அவனது ரகசிய காதலியும் காணாமல் போனதால் இரண்டுக்கும் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத இணைப்பு இருப்பதாக அவனுக்கு தோன்றியது.



வினோத் அமுதனின்வில்லாவின் முன்பாக தனது காரை நிறுத்தினான். காரை விட்டு இறங்கும் போது தற்செயலாக திரும்புவது போல சாலையை திரும்ப பார்த்தான். சாலையின் ஓரமாக இருந்த மரத்தினடியில் பைக்கை நிறுத்திய ராகேசின் ஆட்களில் ஓருவன் சிகரெட்டை பற்ற வைத்து கொள்ள இன்னொருவன் வண்டியை ரிப்பேர் செய்வதான பாவனையில் குனிந்து உட்கார்ந்து வண்டியில் எதையோ நோண்டுவதாக நடிக்க ஆரம்பித்தான். வினோத்திற்கு ஏனோ அருணும் தானும் இது போல் பல இடங்களில் காத்திருந்தது நினைவுக் கு வந்தது. தனக்குள் புன்னகைத்து கொண்ட வினோத்வில்லாவின் காலிங் பெல்லை அழுத்தினான். "நீங்களா?" என்றபடி கதவை திறந்த பைரப்பாவின் மேல் மெல்லிய ஆல்கஹால்வாசனை அடித்தது.



"பைரப்பா! குடித்திருக்கிறாயா?"



" இல்லைங்க! நைட்டு குடித்ததுங்க .! சின்ன ஐய்யா காணாமல் போனதுக்கம் தாங்கலைங்க!" என்றான் துண்டால் வாயை மூடியபடி.



"குடிகாரர்களின் டெம்ளட்டான வசனம்" என்ற வினோத் "உன்னோட சின்ன ஐய்யாவின் ரூம் சாவியை கொடு." என்றான்.



"அது அப்படியே திறந்து தாங்க இருக்கு. நானும் கூட வரவா?" என்றான் பைரப்பா.



"இல்லை. வேண்டாம். இங்கேயே காத்திரு"



"சரிங்க .! " என்ற பைரப்பா ஒரு பீடியை வாயில் வைத்தவனாக "தீப்பெட்டி எங்கியோ தொலைந்து விட்டது. தப்பாக நினைத்து கொள்ளாமல் தீப்பெட்டி கொஞ்சம் தருகிறீர்களா?" என்றான்.



வினோத்தின் பாக்கெட்டில் லைட்டர் இருந்தாலும் அதை கொடுக்காமல் ராகே சின் ஆட்களுடன் சற்று விளையாட நினைத்தவன்" என்னிடம் தீப்பெட்டி இல்லைபைரப்பா! தெருமுனையில் என்னுடைய இரண்டு நண்பர்கள் நான் வெளியே வரும் வரை காத்திருப்பார்கள். நீ வேண்டுமானால் அவர்களிடம் நெருப்பை கடனாக வாங்கி வாயேன்" என்றான்.



"அவர்கள் ஏன் உங்களுடன்வராமல் வெளியே காத்து கொண்டிருக்கிறார்கள்?"



"அதை அவர்களிடமே கேளேன். பதில் சொல்வார்கள்."



பைரப்பா கதவை திறந்து தெருவில் இறங்கினான்



பைரப்பாதங்களை நோக்கி வருவதை பார்த்த இருவரும் வேர்த்து வழிய ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.



வினோத் சிரிப்போடு வீட்டிற்குள் நுழைந்தான்.



அமுதனின் அறைக்குள் நுழைந்தவன் அப்படியே நின்றான். சுவரில் ஒட்டப்பட்டிருந்த அமுதனின் ப்ளோ அப் போட்டோவை பார்த்தவன்" எங்கே இருக்கிறாய் நீ?" என்றபடி இலக்கு இல்லாமல் எதை தேடுகிறோம் என்றே தெரியாமல் தேட ஆரம்பித்தான். அவன் தேடுவதை போட்டோஷாப் செய்யப்பட்ட அமுதன் பார்த்து கொண்டிருந்தான்.



பீரோ சாவி ஓவ்வொன்றையும் பயன்படுத்தி பார்த்தவன் ஓரே ஒரு சாவி எதற்கும் பொருந்தாமல் இருப்பதை கவனித்தான். அந்த சாவி பீரோவின் மூன்றாவது அடுக்கில் தரையோடு தரையாக பொருத்தப்பட்டிருந்த ரகசிய அறையினுடையது. நகைகளை வைப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட ரகசிய தளம் அது. அதை திறந்து கையை விட்ட வினோத்தின் கையில் ஒரு பேப்பர் சிக்கியது. அதில்



"கவலைப்படாதே! உன் ஆசையை நான் நிறைவேற்றுகிறேன். மகனை கொல்! தந்தையை தன் வசமாக்கு! நீ நினைத்தது நடக்கும் .இப்படிக்கு ப்ரியமுள்ள உன் B!" என்று ப்ளு இன்க்கால் எழுதப்பட்டிருந்தது.



"யார் இந்த B?"வினோத்தின் மனதில் குழப்பமான கேள்வி எழுந்தது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 17



பீரோவின் ரகசிய அறையில் இருந்த அந்த துண்டு கடிதத்தை படித்துப் பார்த்த வினோத் திடுக்கிட்டு போனான். தலையும் வாலும் இல்லாத அந்த மொட்டை கடிதம் அவனை குழப்பியது. அந்த கடிதத்தை எழுதிய நபர் எந்த பெயரையும் குறிப்பிட்டு எழுதாததால் இந்த கடிதம் யாருக்கு எழுதப்பட்டிருக்கும் என்ற குழப்பம் அவனை சூழ்ந்தது.



கடிதத்தை எழுதிய நபர் அதை அமுதனுக்கு எழுதியிருந்தால் அமுதன் தன் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்து கொண்டு தலைமறைவாகி இருப்பானோ? அப்படி தலைமறைவாகி தன் உயிரை காப்பாற்றி கொண்டவன் தன் அப்பாவின் உயிரையும் காப்பாற்ற முயற்சி செய்திருக்க வேண்டுமே? குறைந்த பட்சம் கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்தாவது எச்சரித்திருக்க வேண்டுமே? ஏன் எதையுமே செய்யாமல் அமைதியாக இருக்கிறான் என்ற குழப்பம் வினோத்தை குழப்பியது. ஒரு வேளை இந்த கடிதம் அமுதனின் ரகசிய காதலிக்கு வந்திருக்குமோ? அமுதனை காதலிக்க வைத்து தனியிடத்திற்கு அழைத்து போய் அவனை கொல்வது அவளுடைய திட்டமாகக் கூட இருந்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் பின்புலமாக ஒளிந்திருப்பது அந்த மர்ம நபர் B தான்.அமுதனை காதல் வலையில் வீழ்த்திய பெண் கூட அவனுடைய செட்டப்பாக இருக்கலாம்.



வெவ்வேறு விதமான யோசனைகளை அந்த துண்டு கடிதம் வினோத்தின் மனதிற்குள் எழுப்பியது. அந்த பீரோ முழுவதும் விதவிதமான பெண்களின் உடைகள் இருந்ததால் அது அமுதனின் காதலியுடையது என்பது ஊர்ஜிதமானது. பெண்கள் அணியும் அத்தனை விதமான உடைகளும் அந்த பீரோவில் ஓவ்வொரு செட் இருந்தன. வினோத்திற்கு திடிரென அந்த நினைப்பு வந்தது. பெண்களின் மன ஓட்டத்தை அவன் ஒருவாறு அறிவான். இத்தனை ஜோடி உடைகள் இருக்கும் போது அவற்றிற்கு பொருத்தமான லேடீஸ் செருப்புகள் இரண்டு, மூன்று ஜோடிகளாவது இருக்க வேண்டுமே என்று நினைத்தவன் செப்பல் ஸ்டேண்டை ஆராய்ந்தான். அந்த ஸ்டேண்ட் முழுவதும் ஆண்களின் ஷிவும், செருப்புகளும் தான் இருந்தன. எல்லாமே 9ம் நம்பர் செருப்புகள் .ரேக்கின் அடியில் இருந்த அட்டை பெட்டியில் புத்தம் புதிதாக ஒரே ஒரு ஜோடி லேடீஸ் செருப்புகள் அவனுக்கு கிடைத்தன.



ஒரு ஜோடி செருப்பா? என்று ஆச்சர்யப்பட்ட வன் மீண்டும் அறையை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான். டிராயரிலிருந்து ஒரே ஒரு மெசர்மெண்ட் டேப் வினோதமாக மடிக்கப்பட்டு அவனுக்கு கிடைத்தது. டெய்லர்கள் பயன்படுத்தும் அந்த டேப்பிற்கு இங்கே என்ன வேலை இருக்கப் போகிறது என்று நினைத்தவன் அந்த டேப்பை தோளின் இருபுறமும் தொங்க விட்டு கொண்டான். தன் இடுப்பை சுற்றி அளந்தவன் தொப்பையை கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான். ஏதேச்சையாக படுக்கையில் இறைந்து கிடந்த உடைகளை பார்த்த அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.அமுதனின் இடுப்பு அளவை அவனது பேண்டின் மூலமாக அளந்து பார்த்தான். அது 32 என்றது. அந்த பெயர் தெரியாத பெண்ணின் உடைகளின் இடுப்பளவு 34 ஆக இருந்தது.செம கட்டையாகத் தான் இருக்கும் போலிருக்கிறதே என்று வினோத் நினைத்து கொண்டான்.



மேலும் கொஞ்ச நேரம் அறையை குடைந்து கொண்டிருந்தவனுக்கு குறிப்பிடும்படியாக எதுவும் கிடைக்கவில்லை. மொட்டை மாடிக்கு வந்தவன் தற்செயலாக எதிர் வில்லாவை பார்த்தான். அந்த சாமிநாதன் பைனாகுலரில் இவனை பார்ப்பதை கவனித்தவன் கையை ஆட்டினான். அடுத்த நிமிடம் வினோத்தின் போன் அடித்தது. எதிர் முனையில் சாமிநாதன் படபடப்புடன் கேட்டான்.



" என்னோட தேவதையை கண்டுபிடித்து விட்டீர்களா சார்?"



இவனுக்கு வேறு வேலையே இல்லை போலிருக்கிறதே என்று நினைத்த வினோத்



" விரைவில் கண்டுபிடித்து விடுவோம்சாமி! பொறுமையாக இருங்கள்"



"நான் நிம்மதியாக தூங்கி நாற்பது நாட்களுக்கு மேலாகிவிட்டது சார். என் நிலமையை புரிந்து கொள்ளுங்கள். இரவு முழுவதும் அவள் கனவில் வந்து இம்சிக்கிறாள். "



" படுக்கையில் பாம்பு நெளிகிறது என்கிறாய்"



"சிங்கிள் மீனிங்கா டபுள் மீனிங்கா என்று தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் சொல்வது உண்மை "



" பாரு! சாமிநாதன் .நாங்க அந்த பெண்ணை பார்த்ததே கிடையாது. அதனால் அவள் எதிரே வந்து நின்றாளும் எங்களுக்கு அடையாளம் தெரியாது. அவளுடைய ப்ளோஅப் போட்டோக்களை வைத்து கொண்டு அவளுடைய முழு உருவத்தை காண்பது சாத்தியமல்ல. நீ சதா இங்கேயே கவனித்து கொண்டிருப்பதை விட வெளியே அந்த பெண்ணை தேடினால் எங்களுக்கு உதவியாக இருக்கும். ஏனென்றால் நீ தான் அந்த பெண்ணை பார்த்திருக்கிறாய்."



"நீங்கள் சொல்வதும் சரிதான்.கண்டிப்பாக தேடுகிறேன். என் தேவதையை நானே கண்டடைகிறேன்"



"நீங்கள் உ தவி செய்வது ராமர் பாலம் கட்ட அணில் உதவியது போலத்தான் "



"என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்"



சாமிநாதன் போனை வைத்து விட்டான்.



வினோத் யோசித்தபடி நின்றான். அவனது போன் மீண்டும் அடித்தது.



டிஸ்ப்ளே அருண் என்றது.



எதிரிகளிடம் சிக்கி கொண்டு விட்டான் போலிருக்கிறது என்று பதட்டத்துடன் போனை எடுத்தான் வினோத்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 18



அடித்த போனை பதட்டத்துடன் எடுத்த வினோத்" என்னாச்சு அருண் ? யு ஆர் சேப்?" என்றான்.



"பதட்டப்படாதீங்க பாஸ். நான் ரொம்ப பத்திரமாக நம்முடைய ஆபிசில் இருக்கிறேன்." என்றான் மறுமுனையில் கூலாக அருண்.



"அந்த ராகே சோட ஆட்கள் ?"



" இவ்வளவு பாதுகாப்புடன் நான் பேங்குக்கு போனது இதுதான் முதல் முறை. சும்மா பூப்போல என்னை பொத்தி பாதுகாத்து ஆபீஸ்வரை கொண்டு வந்து விட்டு விட்டு தெருமுனையில் கடமையே கண்ணாக காத்திருக்கிறார்கள். நீங்கள் போன விசயம் என்னவானது? ஏதாவது கிடைத்ததா?"



"அதையேன் கேட்கிறாய்? விளக்கமாக வந்து சொல்கிறேன். என்னை பற்றி கவலைப்படாதே. என்னையும் பூப்போலத்தான் பொத்தி பாதுகாக்கிறார்கள்" என்ற வினோத் இணைப்பை துண்டித்தான்.



வினோத் வீட்டை விட்டு வெளியே வந்த போது பற்ற வைக்காத பீடியுடன் பைரப்பா தலையை சொரிந்தபடி நின்று கொண்டிருந்தான்.



"என்னாச்சு பைரப்பா? என்னுடைய நண்பர்கள் உனக்கு தீப்பெட்டி தரவில்லை போலிருக்கிறதே?"



"என்னன்னே தெரியலைங்க. நான் அவர்களை நோக்கி நாலு எட்டு வைத்து நடந்ததுமே உங்களோட கூட்டாளிகள் வண்டியை விருட்டென்று கிளப்பி கொண்டு போய் விட்டார்கள்"



"அவர்கள் அப்படித்தான். திடீர்திடீரென என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய் விடுவார்கள்."



" எனக்கு கொஞ்சம் நெருப்பை கடன் கொடுத்து விட்டு போயிருக்கலாம் உங்களின் நண்பர்கள் "



"அவர்கள் தராவிட்டால் என்ன?இதோ நான் தருகிறேன். வைத்து கொள். திரும்ப தர வேண்டாம். நான் வேறு வாங்கி கொள்கிறேன்." என்ற வினோத் தன் லைட்டரை அவனிடம் வீசினான்.



அனத கேட்ச் பிடித்த பைரப்பா" இதை நீங்கள் முதலிலேயே கொடுத்திருக்கலாமே?" என்றான்.



"சும்மாதான் தரவில்லை. என் நண்பர்களை உனக்கு அறிமுகப்படுத்த நினைத்தேன். அது நடக்கவில்லை. சரி. நான் வருகிறேன். பத்திரமாக கதவை பூட்டி கொள்" என்ற வினோத் காரைகிளப்பினான்.



இரண்டு தெரு தள்ளி கார் விரைந்த போது ரிவர் யூ மிர்ரரில் பைக்கில்அந்த இரண்டு பேர்

தட்டுப்பட்டனர்.



வினோத் தனக்குள் புன்னகைத்து கொண்டான்.



காரை ஆபீஸ் வெளியே நிறுத்திவிட்டு உள்ளே வந்த வினோத் அருணிடம் நடந்ததை விவரித்தான்.



"அப்படியென்றால் தன்னை கொல்ல வந்தவளைத்தான் அமுதன் காதலித்து கொண்டிருந்தானா?" என்றான் அருண் அதிர்ச்சியுடன் .



"கொலை செய்ய வருகிறவள் ஏன் இந்த துண்டு சீட்டை அங்கேயே பத்திரப்படுத்த வேண்டும்? மிகப் பெரிய ஆதாரமான இதை ஏன் கிழித்தோ எரித்தோ மன்றத் தோ வைக் கவில்லை.? குழப்பம் டா சாமி " என்றான் வினோத்.



" அவன் செய்ய வேண்டிய வேலையை ரா கே சின் ஆட்கள் செய்து விட்டதால் இனி நமக்கு இங்கே வேலையில்லை என்று அவளும் தலைமறைவாகி இருப்பாளோ? "



"நீ ஏன் அப்படி யோசிக்கிறாய்? அவள் தன்னை கொல்ல வந்திருக்கிறாள் என்று அமுதனுக்கு தெரிந்து அவனே முந்தி கொண்டு அவளை கொன்று புதைத்து விட்டிருப்பானோ? அதற்கு பிறகு தான் ராகே சின் ஆட்கள் அவனை கடத்தியிருக்க வேண்டும். இது தான் சாக்கு என்று தப்பித்து தலைமறைவாகி விட்டான் போலிருக்கிறது"



"என்ன பாஸ்?இந்த கேஸ் நம்மை விதவிதமாக குழப்புகிறது. இதில் பெரிய அக் யுஸ்ட் அந்த B தான் போலிருக்கிறது"



"அந்த Bஐ கிருஷ்ணமூர்த்திக்கு தெரியும் என்று நினைக்கிறேன். அநேகமாக அவருக்கு தெரிந்த எதிரியின் முதல் எழுத்தாக Bஇருக்கலாம் என்று கணிக்கிறேன்"



"அப்படியானால் அந்த பாடி விசயத்தை நாம் கிருஷ்ணமூர்த்தியிடம் கூற வேண்டாமா?"



அந்த Bஐ பற்றி பேசும் போது நாசுக்காக இதையும் சொல்லி விடலாம். சரி நீ போய் வந்த விசயம் என்னாயிற்று.?"



" பாங்க் ஸ்டேட்மெண்ட் எல்லாத்தையும் வாங்கியாச்சு பாஸ். இனி தான் செக் பண்ணி பார்க்கணும்" என்றான் அருண் நாற்காலியில் சாய்ந்தபடி.



"இரு தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன்" என்ற வினோத் ப்ரிட்ஜை திறந்து கூலிங் வாட்டரை எடுத்து தொண்டையை நனைத்தான்.



அதே நேரம் பாங்க் ஸ்டேட்மெண்டுகளை வெகு கவனமாக பார்த்து கொண்டிருந்த அருண் "யுரேகா " என்றான்.



"எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு அம்மணமா ஓடப்போறியா? என்ன? "என்றான் வினோத்.



"இங்கே வந்து பாருங்கள் அதிசயத்தை ." என்றான் அருண்



வினோத் அருணை நெருங்கினான். அவன் பார்வை அருணின் கையிலிருந்த காகிதத்தில் நிலைத்தது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 19



அருண் கையில் வைத்திருந்த பாங்க் ஸ்டேட்மெண்ட் காகிதத்தில் வினோத்தின் கண்கள் நிலைத்தன.



"யுரேகா என்று கத்துமளவிற்கு அதில் எதை கண்டுபிடித்தாய் அருண் ?" என்றான் குழப்பமாக வினோத்.



"இந்த ஸ்டேட்மெண்டுகளில் பொதுவாக ஒரு ஒற்றுமை இருக்கிறது பாஸ்.! இந்த ஸ்டேட்மெண்டுகளில் சமீப காலமாக எந்த பணப்பரிவர்த்தனைகளும் நடக்கவில்லை. அதாவது அமுதன் காணாமல் போன தினத்திலிருந்து இந்த நிமிடம் வரை அவனது நான்குவங்கி கணக்குகளில் ஒரு பைசா கூட எடுக்கவில்லை. குறையவில்லை.அவனுக்கு பணத்திற்கான சோர்ஸ் வேறு எப்படியோ எங்கேயோ கிடைத்திருக்கிறது. அதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மிகச் சரியாக அறுபது நாட்களுக்கு முன்பு இவனது நான்கு வங்கி கணக்குகளிலும் உச்சவரம்பான தொகை தினமும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய முப்பதுலட்சம் ரூபாயை தோராயமாக எடுத்திருக்கிறான். எல்லா பணமும் ஏடிஎம்மில் எடுக்கப்பட்டிருக்கிறது. எடுத்த இடம் மும்பை .!"



"செக், டிடி இப்படி எந்த வகையிலாவது பணத்தை எடுத்திருக்கிறானோ?"



"இல்லை பாஸ்! எல்லாவற்றையுமே கார்டில் தான் எடுத்திருக்கிறான்."



"அப்படியானால் அமுதன் 60 நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்திருக்கிறான். அங்கே எதற்காகவோ தினமும் பணத்தை எடுத்திருக்கிறான்."



"வேறு எதற்கு எடுத்திருக்க போகிறான்?குடி, கூத்து, பெண்கள் என்று காலியாக அனுபவித்திருக்க போகிறான்?"



" இருக்கட்டும். எதற்கும் பைரப்பாவிற்கு போன் செய்து 60 நாட்களுக்கு முன்பு அமுதன் வீட்டிற்கு வராமல் இருந்தானா என்று விசாரித்து ஊர்ஜிதம் செய்."



அருண் தன் செல்போனில் பைரப்பாவை அழைத்தான். பேசிவிட்டு வைத்தவன் "நமக்கு கிடைத்த செய்தி நம்பகமானது தான் பாஸ்.பைரப்பா அமுதன்பத்து நாட்களாக தன் வீட்டிற்கு வரவில்லை என்று சொல்கிறான்."



" ரைட்.அமுதன் மும்பை போனதற்கு பிறகு தான் விபரீதம் தொடங்கி இருக்கிறது. நாம் விசாரணையை அங்கிருந்து தான் துவக்க வேண்டும்"



இருவரும் விவாதித்து கொண்டிருந்த அதே நேரம் தன் ஆபிஸ் கேபினில் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி .எதிரே உட்கார்ந்திருந்த வினோதா" சொல்லுங்கள் சார். ஏதேனும் பிரச்சனையா?" என்றான்.



முகத்தின் வீக்கம் வற்றிப் போய் பழைய பேசும் திறனை திரும்ப பெற்றிருந்த கிருஷ்ணமூர்த்தி அவளை அசுவராசியமாக பார்த்தார்.



"பாடு வினோதா! ஒரு பெட்ரோலிய கெமிக்கல் கம்பெனியை வாங்க முடிவு பண்ணி வைத்திருக்கிறேன் பொன் முட்டையிடும் வாத்து அந்த புராஜக்ட். இருக்கிற எல்லா பேங்கிலும் கடன் வாங்கியும் கொஞ்சம் பணம் போதவில்லை.அமுதனின் பெயரில் உள்ள கம்பெனி ஷேர்கள் கொஞ்சத்தை விற்றால் என் வேலை எளிதாக முடிந்துவிடும். அந்த பாவிப்பயல் கையெழுத்து போட விரும்பாமல் எங்கோ காணாமல் போய் விட்டான். அவனது சில கையெழுத்துகள் எனக்கு உடனடியாக தேவைப்படுகின்றன. வயதான காலத்தில் இந்த தகப்பனுடன் கண்ணாமூச்சி ஆடுகிறான் என் மகன். விளையாடும் வயதா இது?" என்றார் கிருஷ்ணமூர்த்தி .



"இந்த ஷேர்களை விற்காமல் சமாளிக்க முடியாதா?" என்றாள் வினோதா.



"சமாளிக்க முடியும்.கடைசி ஆப்சன் அது தான். நான் முன் வைத்த காலை பின்வைத்ததில்லை. நான் யாருக்காக இப்படி எல்லாம் ஓடியாடிசம்பாதிக்கிறேன் என்பதை இந்த பையன் புரிந்துகொள்ள வேயில்லை."



"கவலைப்படாதீர்கள் சார். எல்லா பிரச்சனைகளும் தீரும். தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை."



" இப்படி நீ ஆறுதல் சொல்லும் போது என்னோட வயது தானாகவே குறைகிறது வினோதா. இதோ இந்த பைலில் ஒரு பத்து கையெழுத்து போட்டுவிட்டால் என் கவலைகள் பின்னங்கால் பிடறியில் பட ஒடி விடும்." என்ற கிருஷ்ணமூர்த்தி பைலை மேஜையில் வைத்தார்.



"அலட்டிக் கொள்ளாதீர்கள். கூலாக இருங்கள். உங்கள் பீபி ஏறி விடப் போகிறது."



"நீ இருக்கும் போது என்னுடைய வாதைகள் எதுவும் எனக்கு நினைவுக்கு வருவதில்லை.சரி. நாளை நடக்கும் பார்டிக்கு நீயும் வருகிறாய் தானே?"



"ஹ்யூர் சார்"



"இந்த மாதிரி பிஸ்னஸ் பார்டிகளில் கலந்து கொண்ட அனுபவம் உனக்கு உண்டா வினோதா?"



"நிறையவே எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறது சார் !"



"நல்லது.!" என்ற கிருஷ்ணமூர்த்தியின் மனதில் படுத்திருந்ததந்திர நரி எழுந்து உட்கார்ந்தது. சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பவன் முட்டாள் .சந்தர்ப்பங்களை உருவாக்குபவன் புத்திசாலி என்றது நரியின் ஓலம். நாளை இந்நேரம் வினோதாவை படுக்கையில் வீழ்த்தியிருக்க வேண்டும் என்று நினைத்தார் கிருஷ்ணமூர்த்தி .



அன்று இரவு நடைபெறப்போகும் விபரீதத்தை அவர் அறிந்திருக்கவில்லை.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 20



மறுநாள் காலை தூங்கி எழுந்து குளித்து விட்டு வந்த வினோத் கண்ணாடியை பார்த்து தலை சீவி கொள்ள துவங்கினான். அப்போதுதான் தூங்கி எழுந்த அருண் "என்ன பாஸ்? சீக்கிரம் எழுந்து விட்டீர்கள் ? நைட் முழுவதும் தூக்கம் வரவில்லையா?" என்றான்.



"ஆமாம். இந்த கேஸ் என்னை நிரம்பவே குழப்புகிறது. நான் இன்று கிருஷ்ணமூர்த்தியை சந்திக்க முடிவு செய்திருக்கிறேன்" என்றான் வினோத்.



"அவரிடம் என்ன பேசப் போகிறீர்கள்?" என்ற அருண்பிரஸ்ஸில் பேஸ் டைப் பிதுக்கினான்.



"அவரிடம் பேச இரண்டு விசயங்கள் இருக்கின்றன. ஒன்று ராகேஷ் அமுதனைக் கொல்வதற்காக காத்திருப்பது. இன்னொன்று அமுதனின் உடைகள் அணிந்தபாடி கிடைத்திருப்பது.இந்த இரண்டாவது விசயத்தை சொல்வதா வேண்டாமா என்று தான் ரொம்ப நேரம் யோசித்து கொண்டிருக்கிறேன்."



அதை விட மிக முக்கியமான விசயத்தை மறந்து விட்டீர்கள்" என்றான் அருண்வாஸ் பேசணில் எச்சிலை துப்பியபடி.



"என்ன அது?" என்றான் வினோத் குழப்பமாக.



"அந்த பிக் B யாரென்று நமக்கு தெரிய வேண்டும். அவன் தான் இந்த ஸ்கிரீன் பிளேவின் ரைட்டர். அவனை கண்டுபிடித்து விட்டால் எல்லா விசயங்களும் எளிதாக விளங்கி விடும"



"ம். நல்ல வேளையாக இதை நினைவுபடுத்தினால்.இதையும் அவரிடம் பேசி பார்க்கிறேன்." என்றான் வினோத்.



அருண் டவலை எடுத்து கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.



"அருண்.! உனக்கு ஒரு நல்ல சேதி. உனக்கு அதிர்ஷ்டமிருந்தால் இன்று நீ கிருஷ்ணமூர்த்தியின் பர்சனல் செக்ரட்டரி வினோதாவை சந்திக்க நேரலாம். இதுவரை இரண்டு, மூன்று முறை அவளது குரலை மட்டுமே கேட்டிருக்கிறேன். அதை வைத்து சொல்கிறேன். அவள் பிரமாதமான அழகியாகத்தான் இருக்க வேண்டும்" என்றான் வினோத்.



மறுநொடியில் பாத்ரூம் கதவு வெடித்து திறக்க வெளிப்பட்ட அருண் " பாஸ்! மெய்யாலுமா சொல்கிறீர்கள்?" என்றான்.



"இப்போது தான் ஆர்க்கிமிடீஸ் போல நிர்வாணமாக வந்து நிற்கிறாய். என் கண்கள் செய்த பாவம். இதையெல்லாம் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது" என்றான் வினோத் சுவர் பக்கம் திரும்பியபடி.



"ஒ! சாரி பாஸ்! இதோ பத்து நிமிடத்தில் ரெடியாகி விடுகிறேன்" என்றான் அருண்.



அருண் பாத்ரூம் கதவை மீண்டும் சாத்திக் கொண்டு விட்டான். வினோத் தன் கைகடிகாரத்தை கையில் கட்டும் போது அவனது செல்போன் அலற ஆரம்பித்தது.



யார் என்று பார்த்தான் வினோத். டிஸ்ப்ளே கிருஷ்ணமூர்த்தி என்றது.



"ஹலோ" என்றான் வினோத்.



மறுமுனையில் கிருஷ்ணமூர்த்தியின் குரல் பதட்டமாக ஒலித்தது.



" வினோத்! என் மகனை பற்றி எதாவது தகவல் தெரிந்ததா?" அவரது குரலில் பரபரப்பும் பரவசமும் சேர்ந்து ஒலித்தது.



"அதைப் பற்றி பேசத்தான் நான் அங்கு வருவதாக இருந்தேன். நீங்களாக போன் செய்து உங்கள் மகனைப் பற்றி விசாரிப்பது இது முதல் முறை. ஏன் அமுதனைப் பற்றி புதிதாக ஏதாவது செய்தி கிடைத்திருக்கிறதா?"



"ஆமாம். இங்கே ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. சொன்னால் நீ நம்ப மாட்டாய்"



"பரவாயில்லை. எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். நான் நம்புகிறேன்"



" அமுதன் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறான். அதுவும் இதே ஊரில் "



" என்ன சொல்கிறீர்கள்?"



"பார்த்தாயா? நம்ப மறுக்கிறாய்"



"இல்லை. நான் நம்புகிறேன்.அவன் உயிரோடு இருப்பதாகத் தான் நானும் நம்புகிறேன். அதை ருசுப் படுத்த என்னிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. நீங்கள் எந்த ஆதாரத்தை வைத்து அமுதன் உயிரோடு இருப்பதாக நம்புகிறீர்கள்?"



"அந்த முந்நூறு கோடி ரூபாய் ஷேர் மார்கெட் பைலில் அமுதன் கையெழுத்து போட்டு வைத்திருக்கிறான் . நேற்று இரவு இந்த அதிசயம் நடந்திருக்கிறது. அவன் இங்கே தான் எங்கேயோ ஒளிந்து கொண்டு நம்முடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறான். என் அலுவகம் வரை அவன் வந்து போயிருக்கிறான். ஆனால் என்னை சந்திக்காமல் போயிருக்கிறான். ஏன் என்னை தவிர்க்கிறான் என்று எனக்கு தெரியவில்லை."



" அவன் உயிரோடு இருப்பது உண்மையென்றால் அவன் வெளியே வராமல்இருப்பது தான் அவனுக்கு பாதுகாப்பு."



"என்னப்பா சொல்கிறாய்?"



வினோத் ராகேஷ் அமுதனை கொல்ல காத்திருப்பதையும், அமுதனின் உடைகள் அணிந்த பாடி கிடைத்திருப்பதையும் எடுத்து கூறினான். மறுமுனையில் கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சியுடன் அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தார். பீரோவில் கிடைத்ததுண்டு சீட்டை பற்றி சொன்னவன்" அந்த Bஉங்களுடைய எதிரிகளில் ஒருவனாக இருக்க வேண்டும். இல்லை அனுகூல சத்ருவாக கூட இருக்கலாம்" என்றான்.



கிருஷ்ணமூர்த்தியின் மனதில் பத்ரியின் பெயர் நங்கூரம் போல இறங்கியது.
 

Latest posts

New Threads

Top Bottom