Kalai karthi
Well-known member
- Messages
- 380
- Reaction score
- 358
- Points
- 63
ஷர்தாவே சொல்லியிருக்கிறாள்.ஆம்னியில் ஷர்தா அப்பாவா?. அண்ணாவா?.சிவாவா?.விசி ஷர்தாவை விரும்புகிறானா?.
Nice
சுனையைவிட்டு விலகிவந்ததும், "லூசு, நீ ஏன் மச்சிமுனியைப் பார்க்காம கண்ணை மூடிக்கிட்ட?" என்று திட்டினான் வீசி.
அவள் தனது சிறுவயது மீன் பயக்கதையை பேய்க்கதை லெவலுக்கு பில்டப் செய்து அவனுக்கு சொன்னாள்.
வீசி வாய்விட்டு சிரித்து மீண்டும் அவளுக்கு லூசுபட்டம் கட்டினான்.
ஆனால், அதில் அவளுக்கு துளிகூட கோபம் வரவில்லை. காற்று களைத்துவிட்ட சிகையில் அழகாய் தெரிந்தவனின் கம்பீரமே ஆட்டுக்குட்டியாய் அவன் காலடியில் அவளைக் கட்டிப்போட்டுவிட்டது.
சுனைநீரை குடித்துவிட்டு, தீர்த்தமென பாட்டிலிலும் கொஞ்சம் நிரப்பிக்கொண்டு மன நிறைவுடன் இருவரும் கீழே இறங்கினார்கள்.
ஏறும்போது இருந்த சோர்வும், கடினமும் இறங்கும்போது இருக்கவில்லை. யாரோ தங்களை கைபிடித்து, விறுவிறுவென கீழே இழுத்துச்செல்வது போலவே இருவரும் உணர்ந்தார்கள்.
தரைக்கு வந்ததும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அருகில் பூக்காரப் பெண்மணி ஒருவர் மல்லிகை மொட்டுகளை அழகாக தொடுப்பதைப் பார்த்து அதிலேயே லயித்திருந்தாள் ஷ்ரதா.
வீசி அவளை கலைப்பதுபோலக் கேட்டான். "பூ வேணுமா உனக்கு?"
"இல்ல, மல்லிப்பூ வச்சா எனக்கு தலைவலிக்கும்.. அவங்க எவ்ளோ ஃபாஸ்ட்டா அழகா கட்டுறாங்கயில்ல?" என்றாள்.
அவனிடம், "ம்ம்" ஏமாற்றமாய் வந்தது.
அந்த சமயம் பார்த்து ஒரு சேட்டுப்பையன் மணியடித்துக்கொண்டே பஞ்சுமிட்டாய் விற்றுக்கொண்டு செல்ல, "பஞ்சுமிட்டாய்" என்று கத்தி நிறுத்தி வீசிக்கும் சேர்த்து அவளே பஞ்சுமிட்டாய் வாங்கிக்கொடுத்தாள் ஷ்ரதா.
வாங்கியவள் அதை தன் கல்லூரி சென்று சேர்ந்தபின் சாப்பிட்டு இருக்கலாம். ஆசையில் அங்கேயே பிரித்து வம்பில் மாட்டிக்கொண்டாள்.
தனது முகமூடியை அவிழ்த்து ஆர்வமாக பஞ்சுமிட்டாயை தின்றுகொண்டிருந்தவள் தன்னை ஒரு ஆம்னி கடந்து சென்றதையும், அது மீண்டும் ரிவர்ஸ் எடுத்து வந்து அருகில் நெருங்கிச் சென்றதையும் கவனிக்கத் தவறிவிட்டாள்.
![]()
காதல் கணம் கூடும்…
உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.
கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️
54 நாட்களில் 50 ஆயிரம் வாசிப்புகளை பெற்றிருக்கிறார்கள் ஷ்ரதாவும் வீசியும். உங்களின் ஏகோபித்த வரவேற்புக்கு நன்றி ப்ரெண்ட்ஸ்💋
கீழே உள்ள பள்ளத்தாக்கில் குதித்து என்னோடு கருத்துப்பரிமாறிக் கொள்ளலாம் ப்ரெண்ட்ஸ்😊
கருத்துத்திரி,
கருத்துப்பள்ளத்தாக்கு
Kandipa sis. Wait panren . Keep rocking ❣️Ok da. But neenga guess panni irukkiradhuku konjam different ah dhan story pogumnu ninaikiren shalu maa. Poruththirundhu pakkalam shalu maa😘