Malar Bala
Member
- Messages
- 39
- Reaction score
- 72
- Points
- 18
நிசப்த நிமிடங்கள்
இரவு நேரத்தில் கல்யாண அலங்காரங்களில் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் நின்றது அந்த சுமங்கலி திருமண மண்டபம். சுற்றியுள்ள கிராமங்கலுக்கு இருக்கும் ஒரே திருமண மண்டபம் என்பதால் அங்கு உள்ள அனைத்து திருமணமும் அம்மண்டபத்துலையே நடைபெறும். இன்றோ அம்மண்டபத்தின் உரிமையாளர்களின் இல்ல விழா என்பதால் மிக பிரம்மாண்டமாக காட்சி அளித்தது. அக்கிராமத்தின் பெரிய குடும்பத்துக்கு சொந்தமானது இம்மண்டபம். அண்ணன் தம்பிகள் நான்கு பேர். நான்கு பேரும் திருமணம் முடிந்த பிறகும் பாசத்தால் இன்று வரை பிரியாமல் கூட்டு குடும்பமாகவே உள்ளனர். கடைசி தம்பியான முருகனுக்கு மட்டுமே ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தை உண்டு மற்ற அனைவருக்கும் இரண்டு ஆண் பிள்ளைகளே இருந்தது. குடும்பத்தில் பிறந்த ஒரே பெண் வாரிசு என்பதாலும் கடைசியாக பிறந்ததால் வயதிலும் சிறியதாய் இருப்பதால் அவ்வீட்டில் அனைவருக்கும் செல்லமாக முடி சூடா இளவரசியாகவே இருந்தால் மாயா. விடிந்தால் மாயாவிற்கு திருமணம்.. கிராமமே பெரிய வீட்டு திருமணத்திற்கு ஆவலாக காத்திருந்தது.பெரிய வீட்டின்மூத்தவர் பெயர் மாரியப்பன் அவரே அக்கிராமத்தில் தலைவரும் ஆவார். ஊரில் அனைவரது நலத்தையும் கண்ணெ காப்பார். பாதி பேர் அவரது பண்ணையிலேயே வேலை செய்கின்றனர். எனவே அவ்வீட்டின் இளவரசியாகிய மாயா அக்கிராமத்திற்கே இளவரசி ஆனால். அனைவரும் அவர்கள் வீட்டு திருமணமாகவே கருதினர். இரவு பெண் அழைப்பு முடிந்து அனைவரும் உறங்க சென்றுவிட்டனர். மாயாவிற்கு தான் தூக்கமே வரவில்லை. விடிந்தால் கல்யாணம் இதுவரை ஒருமுறை கூட மாப்பிள்ளையை பார்க்க வில்லை..
சங்கரன். மாயாவின் இரண்டாவது பெரியப்பா முத்துவின் நண்பர் மாணிக்கத்தின் ஒரே மகன். பக்கத்து கிராமத்தை பூர்விகமாக கொண்ட அக்குடும்பம் தொழில் நிமித்தமாக மாணிக்கத்தின் சிறு வயதிலேயே சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டார்கள் எனினும் அவர்களது நட்பு இன்று வரை தொடர்ந்து வந்தது. ஒரு விசேஷத்தில் மாயாவை பார்த்த மாணிக்கம் தன் மகனுக்கு பெண் கேட்டார்.நண்பர்கள் உறவினர்கள் ஆனால் நன்மையே என்று மாரியப்பனும் சம்மதித்து விட்டார். சங்கரன் வெளிநாட்டில் இருந்ததால் பெண் பார்க்கும் சடங்கிற்கு வரவில்லை பிறகு அவன் வந்த பின்பும் இருவரும் பார்த்து கொள்ள இயலவில்லை.
மாயாவின் தந்தை முருகனுக்கு சிறு வயதில் இருந்தே கட்டிடகலைகளில் நாட்டம் அதிகம் இருந்ததால் கல்லூரியை சென்னையில் கட்டிடகலை பாடம் எடுத்து படித்தார் அப்பொழுது தன்னுடன் படித்த பெண்ணை விரும்பி வீட்டில் பேசி திருமணமும் முடித்து கொண்டார். பெரியவர்கள் சம்மதத்துடன் நடைப்பெற்றாலும் கலாச்சாரம் வேறுப்பாட்டால் அத்திருமணத்தில் பல குளறுபடிகள் அரங்கேறின. இது பிற்காலத்தில் தொடர்ந்தால் குடும்பத்தில் அனைவருக்கும் சங்கடம் தான் மிஞ்சும் என்று மாரியப்பன் எண்ணினார். எனவே முருகன் தம்பதியினர் ஆசைப்பட்டது போல் கட்டட தொழிலை சென்னையில் தொடங்க அனுமதி கொடுத்தார். அவர்கள் மிக வேகமாக அதில் வளர்ச்சியும் அடைந்தனர். மாயா பிறந்த பின்பு அடிக்கடி கிராமத்திலும் தங்க ஆரமித்தனர். மாயாவின் மழலையும் குறும்பு தனமும் அனைவரையும் கவர்ந்து அவ்வீட்டையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின் அவர்களுக்குள் மொழி கலாச்சாரம் எல்லாம் விலகி மாயாவே நிறைந்திருந்தாள். மாயாவிற்கு சிறு வயதில் இருந்தே அவள் ஆசை படுவது முழுதும் கேட்கும் முன்பே கிடைத்து விடும் என்பதால் அவள் எதற்கும் ஏங்கியது கிடையாது. அவளது பத்தாவது பிறந்த தினத்தை ஒரு அனாதை ஆசிரமத்தில் கொண்டாடினார்கள் அங்கு இருந்த குழந்தைகளை பார்த்ததும் மாயா மிகவும் வருந்தி போனாள். அவர்களது அடிப்படை தேவைகளை அந்த வயதிலிருந்தே தாயிடம் கேட்டு அவளால் முடிந்த அளவு செய்ய தொடங்கினாள்.வளர வளர அதை தன் கடமையாகவே செய்ய தொடங்கி விட்டாள். ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது நன்றாக வாழும் மக்களின் கடமை' என்பாள்.
சென்னை கலெக்டர் அவரது உயிர் தோழி ரேவதி என்பதால் அவளிடம் பேசி ஒரு முகாம் ஒன்று ஏற்பாடு பண்ணியிருந்தாள். அதில் ரேவதியும் கலந்து சில நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவுன்சிலிங் போல் உரையாற்றினாள். சங்கரன் வெளிநாட்டில் இருந்து வந்ததும் இதே நேரத்தில் தான் என்பதால் மாயாவால் அவனை பார்க்க முடியவில்லை. முகாமின் முழு பொறுப்பும் மாயாவுடையதாக இருந்தது. அதனால் அவளை அப்பொழுது பார்க்க இயலாது என்று கூறியதற்கு.. சங்கரன் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதே முக்கியம் நாங்கள் தான் வாழ்க்கை முழுக்க ஒன்றாக இருக்க போகின்றோமே என்று கூறிவிட்டாராம். மாயாவிற்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. திருமணம் பேச்சு ஆரம்பத்ததில் இருந்து அவளுக்கு இருந்த ஒரே கவலை தன்னை முகாம், பெண்களுக்கு உதவி என்று இல்லாமல் வீட்டில் சாதாரனமான பெண்ணைப் போல் இரு.. இது எல்லாம் நமக்கு தேவை இல்லை என்று சொல்லிவிடுவானோ என்ற கவலை அவளுள் இருந்தது. ஆனால் அதுவும் நீங்கிவிட்டது.பார்கலாம் பார்க்கலாம் என்று திருமண நாளும் வந்து விட்டது. தன்னை புரிந்து கொண்டதற்கும் மற்றும் தனக்காக காத்திருந்ததற்கும் நன்றி கூறலாம் என்றால் எப்படி சந்திப்பது அதுவும் இந்த மண்டபத்தில் என்று யோசித்து கொண்டிருந்தவளின் கவனம் அவளது தொலைபேசியின் அழைப்பால சிதறியது. ரேவதி தான் கூப்பிட்டு இருக்கிறாள்.
“சொல்லுங்கள் கலெக்டர் மேடம்.. என்ன பேசும் அளவிற்கு நேரம் இருக்கின்றதா?” என்று கோபமாக கேட்டாள்.
மாயாவும் ரேவதியும் சிறு வயதில் இருந்தே தோழிகள் இப்பொழுது தன் திருமணத்திற்கே வரவில்லையே என்று கோபத்தில் தான் இப்படி பேசுகின்றாள் என்று ரேவதிக்கும் புரிந்தது.
ரேவதி சிரித்து கொண்டே” மாயமோகினி மேடம் நீங்கள் கலெக்டர் மேல் கோபமாக உள்ளீர்கள் என்று புரிகின்றது. ஆனால் இப்பொழுது அவர்கள் அவருடைய தோழியின் திருமணத்திற்கு சென்று கொண்டிருப்பதால் உங்கள் திட்டை எல்லாம் மூட்டைகட்டி வையுங்கள் பிறகு வாங்கி கொள்வார்கள்” என்றாள்
அதை கேட்டதும் மாயா மிகவும் மகிழ்ச்சி ஆனால். எங்கு வருகிறார் என்று கேட்டு அரைமணி நேரத்தில் வந்துவிடுவாள் என்று தெரிந்ததும் தனக்கு துணையாக இருந்த மாமியை பார்த்தாள். அவர் மிகவும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். பாவம் திருமணம் வேலைகளில் கலைத்து விட்டாள் என்று மாயாவிற்கு தோன்றியதும் அவளே மெதுவாக அறையை விட்டு வெளியில் வந்தாள்.
வெளியில் வந்த மாயாவிற்கு சிறிது வினாடிகள் ஒன்றுமே புரியவில்லை.உள்ளே நுழைந்த பொழுது சடங்கில் கவனம் செலுத்தியதால் மண்டபத்தை சரியாக கவனிக்கவில்ல. இப்பொழுது அதை பார்த்து பிரமித்து போனாள். அவளை பார்த்ததும் அங்கு நாற்காலிகளை அடுக்கி கொண்டிருந்தவன் அவளிடம் ஓடி வந்தான்.”என்ன தாயீ இன்னும் தூங்கவில்லையா? விடியற்காலை முகூர்ததம்.. எலும்பனுமே.. எதுவும் வேண்டுமா? சொல்லு தாயி நான் கொண்டாருரேன்.” என்றான்.
சிறு முறுவலுடன் அவனிடம். “இல்லை அண்ணா என் தோழி பட்டனத்திலிருந்து வருகிறாள் அதுதான் வந்தேன். ஆனால் இந்த அலங்காரம் என்று யோசையோடு நிறுத்தினாள்.
அதற்கு” அது அருண் தம்பியின் ஏற்பாடுமா..” என்றான்.
‘சரி அண்ணா வேலைகளை காலையில் பார்த்து கொள்ளலாம் நேரம் ஆகிவிட்டது அல்லவா சென்று உறங்குங்கள்' என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அங்கிருந்து நகர்தவளின் மம் அருணிடம் சென்றது. அருண் மாயாவின் சகோதரர்களுள் ஒருவன். ஒரு நாள் கிராமத்திர்க்கு விடுமுறைக்காக வந்திருந்த பொழுது மண்டபம் ஒரு திருமணத்திற்காக அலங்கரிக்க பட்டு கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மாயா அவ்வேலைகளை மேற்பார்வைபார்த்து கொண்டிருந்த அருணிடம் சென்று 'என்ன அண்ணா என்ன செய்கிறீர்கள் ஏன் இவ்வளவு பூக்கள்? என்று கேட்டாள்.
அருண்.. “திருமணதிற்கு அலங்கரிக்க வென்று வரவலைத்த மலர்கள்.. இவைகளை வைத்து தான் மண்டபத்தை அலங்கரிக்க வேண்டும்” என்றான்
“ஏன்?!।“ மாயா..
அருண்.. “ என்ன ஏன்?”என்றான்
“பூக்களை வைத்து அலங்கரித்தால் அப்பூக்கள் எல்லாம் ஒரே நாளில் வதங்கி விடுமே” என்றாள்.
சரி ப்லாஸ்டிக் பூக்களை வைக்கலாமா என்றான்.
“ம்கும்.. கூடாது அது மக்க நாள்ஆகுமே ? என்றாள்.
“தெரிகிறது அல்லவா? சரி நீ கூறு உன் திருமணத்திற்கு எவ்வாறு அலங்காரம் இருக்க வேண்டும்?” என்று கேட்டான்.
சிறிது நேரம் சிந்தித்து விட்டு..
மாயா “ எனக்கு பூக்கள் வேண்டாம் அது ஒரு நாள் விழாவிற்காக வதங்க கூடாது.. பிளஸ்டிக்கும் வேண்டாம்.. ம்ம்ம்… மற்றபடி உங்கள் இஷ்டம் அண்ணா” என்றாள்.
அருண் சிரித்து கொண்டே “ சரி, பூக்கள் படிக்காமல் செடிகளில் இருந்தால் மட்டும் அது வதங்காதா?” என்றான்
“ மனிதர்கள் என்றோ இறக்க தானே போகிறார்கள் இன்று நான் கொலை செய்து கொளகிறேன்.. என்று கூறுவீர்களா அண்ணா?” என்று மாயா கேட்ட கேள்விக்கு விழித்து விட்டு.. வாயாடி உன்னிடம் பேசி மீல முடியாது என்று சென்றது நேற்று நடந்தது போல் இருந்தது மாமாவிற்கு.
இந்த நிகழ்வை மாயாவே மறந்து போனால் ஆனால் அருண் மறக்கவில்லை போலும். மலர்கள் எதுவும் உயோகிவில்லை மாறாக மண்டபம் முழுக்க பல வண்ண கலவைகளை கொண்டு வரைந்தே அழங்கரித்திருக்கின்றான். ஆங்காங்கே இளம் தம்பதிகள் நிற்பது போலவும் விளையாடுவது போலவும் அனைத்துமே அருமையாக இருந்தது. தூன்களில் எல்லாம் ஏதோ ஒரு திரவியம் போல வைத்து உள்ளான். அதன் மனம் மண்டபம் முழுக்க வியாபித்து உள்ளது. இவை அனைத்தும் பார்க்க பார்க்க மாயாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன. எத்தனை அழகான குடும்பம் தனக்கு கிடைத்து உள்ளது என்று எண்ணி கொண்டிருந்த பொழுதே யாரோ அவளை நோக்கி வருவது போல் இருந்தது. திரும்பி பார்த்தால் அங்கு வந்து நின்றது கல்யாண மாப்பிள்ளை சங்கரன் தான்.
அவனை அங்கு எதிர் பார்க்காததால் மாயாவிற்கு என்ன பேசுவது என்றே தெரியாமல் விழித்து கொண்டிருந்தால். இவள் பேச வெட்க படுவதாக நினைத்து சங்கரன் பேச தொடங்கிவிட்டான். அவன் பேச பேச மாயா வின் நெற்றியில் சிந்தனை முடிச்சிக்கள் வில தொடங்கி விட்டன.
“ என்ன மாயா இந்த நேரத்தில் இங்கு நிற்கின்றாய்? தூக்கம் வரவில்லையா? எனக்கும் இங்கு தூக்கம் வரவில்லை.. கிராமத்தில் இருந்து பழக்கமில்லையா அதுதான். நீயெல்லாம் இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்தவள் இல்லையா?”
இங்கே வளர்ந்தேனா!! என்ன கூறுகின்றான் என்றே புரியவில்லையே என்று அவள் அதை பற்றி கேட்பதற்குள் அவனே தொடர்ந்தான்..
“நான் படிக்காத கிராமத்து பெண்தான் வேண்டும் என்று என் தந்தையிடம் மிக தெளிவாக கூறிவிட்டேன். வீட்டிலேயே இருந்து என்னை மட்டுமே கவனிக்க போகிரவள் ஏன் படித்திருக்க வேண்டும்? ஆனால் பரவாயில்லை நீ அழகாக தான் இருக்கின்றாய்!” என்றான்.
அதற்கு பதில் கூறும் முன் மாணிக்கம் அங்கு வந்து விட்டார். “ என்னடா? உன்னிடம் தான் தாலி கட்டும் முன்பு பெண்னை பார்க்க கூடாது என்றேன் அல்லவா? இது கிராமம்.. யாராவது பார்த்தால் திருமணத்தையே நிறுத்தி விடுவார்கள் என்று கூறிக்கொண்டே கையுடன் அழைத்து சென்று சங்கரனை அவன் அறையில் விட்டு வந்தார் மாணிக்கம்.
இதையெல்லாம் கேட்ட மாயா தான் ஒன்றும் புரியாமல் நின்ற இடத்தில் ஆணி அடித்தது போல் அசையாமல் நின்றாள்.
மகனை விட்டு விட்டு தயங்கி தயங்கி மாயாவிடம் வந்த மாணிக்கம்.. “ என் மகன் கிராமத்தில் உள்ள படிக்காத பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி விட்டானம்மா. ஒரே மகன், எங்கள் குடும்ப தொழில் வேறு இருக்கு. படித்த பெண் என்றால் அவனுக்கு உதவியாக இருக்கும் என்றால் கேட்கவே மாட்டேன் என்று விட்டான் அதனால் தான் இப்படி ஒரு பொய் கூறி விட்டேன். நீதான் அவனை மாற்ற வேண்டும் என்று கைகூப்பி கேட்டு விட்டு அங்கு நில்லாமல் சென்று விட்டார்.
மாயாவின் கோபம் உச்சியை தொட்டது. என்ன அநியாயம்? அவர் பிள்ளை வாழ்க்கைகாக என் வாழ்க்கையை அளிப்பாராமா? திருமணம் அடிப்படையே நம்பிக்கை அல்லவா? ஒரு பொய்யில் எப்படி ஆரம்பம் ஆகும்? அதிலும் அந்த சங்கரன்! எப்படி பேசினான். அவனை பார்த்து கொள்ள ஏன் படிக்க வேண்டும் என்று கேட்கிறான்? இன்று பெண்கள் எதை எதையோ சாதிகின்றார்கள் ஆனால் இவனை மணந்து கொள்ள படிக்காத பெண் வேண்டுமாம். அதிலும் பெண்களுக்கு படிப்பு கட்டாயம் என ஊர் ஊராகச் சென்று விழிப்புணர்வு ஆற்றும் என்னிடமே!! மாயா கோபத்தில் இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே நின்றிறுப்பாளோ அதற்குள் ரேவதி அங்கு வந்து விட்டாள். சிறு வயதில் இருந்தே தோழிகள் என்பதால் மாயாவின் முகத்தை வைத்தே ரேவதி ஏதோ பிரச்சினை என்று கண்டுகொண்டாள்.
“என்னடி கல்யாண பெண் வம்பிழுக்கலாம் என்று வந்தால் இப்படி ஏதோ போல் நிற்கின்றாயே!” என்றாள். “இல்லை.. என்னுடன் வா” என்று ரேவதி யின் கையை பிடித்து மண்டபத்தின் வெளியில் அழைத்து வந்தால்.
ரேவதிக்கு தோழி ஏன் இப்படி செய்கின்றாள் என்று ஒன்றுமே புரியவில்லை ஆனால் ஏதோ பிரச்சினை என்று மட்டும் புரிந்தது.
வெளியில் வந்ததும்.. “ஏய்! உள்ளே பெண்ணை காணவில்லை என்று எதுவும் கலவரம் ஆக போகின்றது உள்ளே சென்று பேசலாம்” என்றாள் ரேவதி.
“அதெல்லாம் பார்த்து கொள்ளலாம் முதலில் எங்காவது உக்காரலாம் பொரு டி” என்று கூறிவிட்டு சுற்றிலும் தேடினாள். கடைசியாக ரேவதி வந்த காரிலையே இருவரும் சென்று அமர்ந்தார்கள்.
“இப்பொழுதாவது சொல்லி தொலையேன் டி… என்னை ஏன் இப்படி படுத்துகிறார்?” என்று ரேவதி பொறுமையை இழந்தாள்.
அவளை ஆச்சரியமாக பார்த்து விட்டு மாயா தொடர்ந்தால்.. “ என்ன கலெக்டர் அம்மா! இப்படி கோபம் வருகின்றது? பல நெருக்கடியான சூழ்நிலையிலும் பொறுமையாக கையால வேண்டியது உங்கள் கடைமையல்லவா?” என்றவள் ரேவதியின் முறைப்பை பார்த்து நிறுத்தினாள்.
சரி சரி கூறுகின்றேன் என்று ரேவதி வரும் முன் நடந்த அனைத்தையும் கூறி கொண்டிருந்தாள். அப்போது மண்டபத்தின் உள்ளே ஒரு பெண் வருவதை காரின் கண்ணாடி வழியே பார்த்த தோழிகள் பேசுவதை நிறுத்தி விட்டு அவளை கவனித்தனர்.
இந்த 12 மணி இரவில் யார் இவள்? என்று பேசிக் கொண்டே காரில் இருந்து கீழே இறங்கினர்.
அங்கு அந்த நேரத்தில் காரில் இருந்து இறங்கிய பெண்களை பார்த்து அந்த புதிய பெண் பயந்தே போனால். அவளின் பயத்தை பார்த்த மாயா..
“நீங்கள் ஏதோ பிரச்சினையில் இருப்பதாக தெரிகின்றது. எங்களால் உதவ முடியுமா இல்லையா என்று பேசி தெரிந்து கொள்ளலாம் முதலில் இங்கு நிற்பதை விட எங்களுடன் இந்த காரில் ஏறி கொள்ளுங்கள் நீங்கள் யார் கண்ணிலும் படாமல் இருக்கலாம் அல்லவா?”என்றாள்.
அவளது கடைசி வாக்கியம் மாயா சிந்தித்தது போல் வேலை செய்தது.. வேகமாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். ஆனாலும் அவளது பயம் போகவில்லை.
ரேவதி மெதுவாக அந்த புதியவளிடம் பேச தொடங்கினாள் “ உங்கள் பெயர் என்ன? நீங்கள் யார்?”
“ஜானகி.நான் இந்த ஊரை சேர்ந்தவள்” என்று திக்கி திக்கி கூறினாள்.
அவள் பொய் கூறுகிறாள் என்று தெரிந்து தோழிகள் ஒருவருக்கு ஒருவரை பார்த்து கொண்டனர். மீண்டும் ரேவதியே தொடர்ந்தாள்.
இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டாள்..
“நான் மணப்பெண்ணின் தோழி அவளை பார்க்க வந்தேன்.” ஜானகி
“பிறகு ஏன் பயத்துடன் இருக்கின்றீர்கள்?”
“இருட்டில் பயந்து விட்டேன்… ஆஆஆ…” இப்பொழுது என்ன நடந்தது என்று ஜானகி தன் கன்னத்தில் கை வைத்து கொண்டு யோசித்தாள். அவள் வரிசையாக பொய் கூறவும் பொறுமை இழந்து அரைந்தது மாயாவே தான். ஜானகி அடியை வாங்கிக் கொண்டு பயத்துடன் ரேவதியையும் மாயாவையும் மாறி மாறி பார்த்தாள். ரேவதிக்கே அந்த பெண்ணை பார்க்க பாவமாக இருந்தது.
“மாயு!! ஏன்டி அவளை அடித்தாய்” என்றாள்.
“நாம் அவளிடம் விசாரிப்பது அவளுக்கு உதவி செய்யதான்.. அதை புரிந்து கொள்ளாமல் நம்மிடமே பொய் கூறினால் என்ன செய்வது?” என்றாள் மாயா.
ஜானகி உடனே அழ தொடங்கிவிட்டாள். ரேவதி பதறி போய். “ அழாதீற்கள் பிறகு அதற்கும் இந்த மோகினி அடிப்பாள்.. என்ன பிரச்சினை என்று கூறுங்கள் முதலில் நீங்கள் யார்?” என்று கேட்டாள்.
“என் பெயர் ஜானகி. நான் ஒரு பிரச்சினையில் சிக்கி உள்ளேன். வெளியில் சொல்லும் நிலையில் இல்லை' என்றாள் அழுகையின் நடுவில்.
மாயா “இங்கே பாரம்மா.. இவள் கலெக்டர். இவளிடம் உன் பிரச்சினையை கூறு எங்களால் உனக்கு உதவ முடியும்.. அதை முதலில் நம்பு” என்று அவளது கையை பிடித்து கொண்டு கூறினாள்.
சிறிது விநாடிகள் யோசித்து விட்டு அந்த ஜானகி அவளது பிரச்சினைகளை கூற ஆரம்பித்தாள்
“என் ஊர் மதுரை பக்கம் ஒரு கிராமம். என்னுடன் சேர்ந்து என் பெற்றோர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள். அக்கா வை கட்டி குடுத்த இடத்தில் அவளை மிகவும் மோசமாக நடத்தினர் பையன் ஒரு குடிகாரன். அடிக்கடி அவளை அடித்து வரதட்சணை கேட்பார். பெண்ணின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்து கவலையில் எங்கள் அப்பா ஒரு நாள் இறந்தும் விட்டார். எனக்கு அடுத்து இரண்டு பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் அக்கா வையும் நல்ல படியாக வாழ வைக்க வேண்டும் என்று வேலை தேட ஆரம்பித்தேன். எங்கள் ஊரில் ஒருவர் வெளிநாட்டில் கடை வைத்திருந்தார் அவர் என்னை அவருடன் அங்கு அழைத்து சென்று விட்டார் அந்த கடையை பார்த்து கொள்வதே என் வேலை. அங்கு தான் அவரை சந்தித்தேன்.”என்றாள்
யாரை? என்று ரேவதி கேட்டாள்.
“அவர் பெயர் சங்கரன். இந்த மண்டபத்தில் நாளை நடைபெற உள்ள திருமணம் அவருக்கு தான்.”என்றாள்.
“அதுசரி இதனால் தான் படிக்காத பெண் கேட்டானா!”என்றாள் ரேவதி.
“பொரு ரேவதி பிரச்சினை இது மட்டும் அல்ல வேறு ஏதோ இருக்கின்றது” என்று கூறிவிட்டு ஜானகியை உற்று பார்த்தாள் மாயா.
ரேவதி விளங்காமல் ஜானகியை பார்த்தால்.
“ஆம். எங்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகனும் இருக்கின்றான். நாங்கள் இருந்த நாட்டில் திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் என்பது வித்தியாசமாக இல்லை. இவனும் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். முதலில் அவரை நான் நம்பவில்லை ஆனால் தினமும் என்னை சந்தித்தார். பிறகு எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். என்னை வேளைக்கு செல்ல வேண்டாம் என்றும் மகனை ஆரோக்கியமாக வளர்ப்பதே உன் கடமை என்றார். என் வீட்டையும் அவரே பார்த்து கொண்டார். பெரிய தங்கைக்கு வேளை வாங்கி கொடுத்தார். மாதம் மாதம் என்னிடம் பணம் கொடுத்து அனுப்ப சொன்னார். உன் குடும்பம் என் குடும்பம் என்று தனி தனியாக எதுவும் இல்லை என்றார். அக்காவை போல் நம் வாழ்க்கை இல்லை நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்று நானும் நம்பினேன். இங்கு அவரது அப்பாவும் அவரது திருமணம் பேச்சை தொடங்கினார். சங்கரன் நாம் திருமணம் செய்து கொள்ள நேரம் வந்து விட்டது என்றார். ஆனால்..” என்று நிறுத்தினாள்.
“ஆனால்?” என்று மாயா எடுத்து கொடுத்தாள்.
“இந்தியா வருவதற்கு டிக்கெட் போட்டு இருந்தோம். ஏற்கனவே குழந்தை இருப்பது தெரிந்தால் இங்கு அவர் குடும்பம் மானம் போய்விடும் எனவே அவனை என் அம்மா வீட்டில் விட்டுவிட்டு செல்லலாம் என்றார். அம்மா வீட்டில் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வாங்கினோம் அதில் ஒன்றை என் மகன் உடைத்து விட்டான். அவரும் வேலைக்கு சென்றதால் நான் மட்டும் வேறு வாங்க சென்றேன். அன்று அந்த மாலில் வேறு ஒரு பெண்ணுடன் அவரை பார்த்தேன். முதலில் வேலை விசயமாக வந்திருப்பார்கள் என்று தான் நினைத்தேன்… ஆனால் இல்லை என்று அவர்கள் நெருக்கத்தை வைத்து கண்டுகொண்டேன். அப்பொழுதே அவரிடம் சென்று கேட்டேன். ஆனால் அவர் என்னை வீட்டிற்கு அழைத்து வந்து பெல்ட்டால் அடித்தது மட்டும் இல்லாமல் என்னை அங்கேயே விட்டுவிட்டு இந்தியா வந்துவிட்டார். பிறகு தான் தெரிந்தது என் வங்கியில் என் பெயரில் ஒரு ரூபாய் கூட இல்லை என்றும். இந்தியா வருவதற்கு கூட காசில்லாமல் விழித்தேன். என் தங்கையின் வேலையையும் பறித்து விட்டார். கடைசியாக என்னை அங்கு அழைத்து சென்றவரே டிக்கெட் போட்டு இந்தியா அழைத்து வந்தார்” என்றாள்.
ரேவதிக்கு இன்னும் முழுதாக புரியவில்லை என்று அவள் முகப் பாவனையில் தெரிந்தது. மாயா அவளை கேள்வியாய் நோக்கவும்..
“இவள் கூறுவது புரியவில்லை.. அவன் ஏன் அப்படி விட்டு வந்தான். அந்த அளவு கெட்டவன் என்றால் ஏன் திருமணம் செய்து கொள்ள விரும்பினான் என்று கேட்டாள்.”
மாயா எனக்கு இந்த சந்தேகம் உள்ளது என்று கூறி ஜானகியை பார்த்தாள்.
“எனக்கும் அவர் செயல் முதலில் புரியவில்லை இந்தியா வந்ததும் அவரை தேடி சென்றேன். அவருக்கு திருமணம் என்று கேள்வி பட்டு அவரை தேடி இந்த ஊருக்கு வந்தேன். அவரிடம் பேசி பயன் இல்லை என்றாள் பெண்ணிடம் என் நிலைமையை கூறலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர்..” என்று நிறுத்தி விட்டு மீண்டும் அழ தொடங்கினாள்.
தோழிகள் இருவருக்கும் உண்மையான பூகம்பம் இனிதான் வெளிவர போவதாக தோன்றியது. இருவரும் ஜானகி சொல்வதையே கவனமாக கேட்டு கொண்டிருந்தனர்.
“ நான் அவரிடம் சென்று கேட்டேன். அவர் என் மகனுக்கு ஒரு வழி சொல்லவில்லை என்றால் மணபெண்ணிடம் முறையிடுவேன் என்றேன். அவர் எங்கள் மகனை பிடித்து கொண்டு உண்மையை வெளியில் கூறினாள் என் மகனை கொன்று விடுவேன் என்று மிரட்டினார். யாரிடமும் சொல்லவில்லை என் மகனை திருப்பி தரும் படி கேட்டேன் கல்யாணம் முடியும் வரை நான் பிரச்சினை பண்ணாமல் இருந்தால் மட்டுமே அவனை உயிருடன் தருவேன் என்று விட்டார்” என்று கூறி மீண்டும் அழ தொடங்கினாள்.
தோழிகள் இருவருமே அதிர்ந்து போனார்கள்.எப்படி தன் மகனை தானே கொள்ள முடியும் என்று ரேவதி தனக்கு தானே பேசினாள்.
அழுது கொண்டிருந்தவள் “ பிறகு ஏன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினீர்கள் என்றுகூட கேட்டேன்.” என்றாள்.
என்ன கூறினான் என்று கேட்டாள் மாயா.
“எனக்கு பல பெண்களுடன் பழக்கம் உள்ளது. படிக்காத உன்னை மணந்து கொண்டாள் கடைசிவரை அடிமையாக இருப்பாய் என்று எண்ணினேன். அதனால் தான் வேலைக்கு கூட அனுப்ப வில்லை.உன் பண தேவைகளை கூட நான் பார்த்து கொண்டான். ஆனால் நீ நீயாக அனைத்தையும் கெடுத்துக் கொண்டாய். அதுவும் நல்லதற்கு தான். இப்பொழுது இப்படி ஒரு கிராமத்தில் பெண் எடுக்கின்றேன். வரதட்சணை யாக பணமும் கிடைக்கின்றது கூடவே பெண்ணும் அழகாக இருக்கின்றாள். வேண்டுமானால் நீ என்னுடன் வெளிநாட்டில் தங்கி விடு இவளை இந்தியா வில் விட்டு செல்லுவோம் என்றார்” என்று கூறி மீண்டும் அழுதாள்.
ரேவதி”அவனை உடனே என்ன செய்கின்றேன் பார் என்று வேகமாக காரை விட்டு இறங்க சென்றாள். மாயா அவளை தடுத்து.. “இல்லை இப்பொழுது நம்மால் ஒன்றும் செய்ய முடியாது” என்றாள்.
ரேவதி “என்னடி? ஏன் அப்படி சொல்கின்றாய்” என்றாள்.
ஜானகியின் மகன் அவனிடம் இருக்கின்றான் இந்த அளவு செய்தவன் நிச்சயமாக எதுவேண்டுமானாலும் செய்வான் என்றாள்.
ரேவதியும் யோசித்து விட்டு இப்போது நாம் என்ன செய்வது என்று கேட்டாள்.
ஜானகி.. “எப்படியாவது இந்த திருமணத்தை நடக்க விட கூடாது மணபெண்ணும் என்னை போல ஒரு பெண் தானே என்று கூறி அழுதாள்.”
ரேவதி.. “ இவள் பெயர் மாயா. இவள் இப்படி பல பிரச்சினைகளில் இருக்கும் பெண்களை காப்பாற்றுவதே வாழ்க்கையாக வைத்து உள்ளாள். இன்னும் ஒரு முக்கிய விசயம் இவள்தான் கல்யாண பெண்” என்று ரேவதி கூறியதும் ஜானகி அதிர்ந்து போனாள்.
“ஐயோ உங்களுக்கு உண்மை தெரிந்தால் என் மகனை கொண்று விடுவதாக சொன்னாறே..” என்று கூறி பயத்தில் பொழம்பினாள்..
மாயாவும் ரேவதியும் ஒருவழியாக அவளை சமாதானம் செய்து விட்டு “கவலை படாதே உன் மகனை உன்னிடம் சேர்ப்பது எங்கள் பொறுப்பு” என்றார்கள்.
ஜானகியும் ஒருவழியாக சமாதானம் ஆனால்.
“ஏற்கனவே மணி விடியற்காலை 3 ஆகி விட்டது ஆறு மணிக்கு முகூர்த்தம். இன்னும் மூன்று மணி நேரத்திற்குள் கண்டு பிடித்து ஆக வேண்டும்” என்றாள் மாயா.
“ம்.. ஜானகி நீ எப்போது சங்கரிடம் கடைசியாக பேசினாய் எங்கு பேசினாய்?” என்று கேட்டாள் ரேவதி.
“நீங்கள் என்னை பார்ப்பதற்கும் ஒரு மணி நேரம் முன்புதான் அவரை பார்த்தேன். மண்டபம் இருக்கும் தெரு முக்கில் தான் அவர் காரில் பேசினோம்” என்றாள்.
“அப்படி என்றாள் உன்னை பார்த்து விட்டு வந்துதான் என்னிடம் பேசி உள்ளான். ஆனால் அதற்குள் எங்கு அந்த சிறுவனை மறைத்து வைத்திருப்பான்?” என்றாள் மாயா.
“நிச்சயம் இங்கு உள்ள ஒருவரின துணை இல்லாமல் அவனால் இதை செய்ய முடியாது. அந்த ஆள் யாரென்று நாம் முதலில் தேட வேண்டும்” என்றாள் ரேவதி.
எப்படி? என்றாள் ஜானகி.
“தெரியவில்லை தேடித்தான் ஆக வேண்டும் அதிலும் சங்கரனுக்கு சந்தேகம் வராமல் மூன்று மணி நேரத்திற்குள்.” என்றாள் ரேவதி.
அங்கு சில நிசப்தமான நிமிடங்கள் கடந்து சென்றன.பிறகு.. முதலில் நீ உள்ளே செல் மாயா. இதற்கு மேல் ஒவ்வொரு வராக எழ தொடங்கி விடுவார்கள். என்றாள் ரேவதி.
அதுவும் சரியாக பட்டதால் ஜானகியை காரிலையே இருக்க சொல்லிவிட்டு தோழிகள் இருவரும் மண்டபத்திற்குள் நுழைந்தார்கள். அங்கு வந்த வேலை ஆள் “தாயீ உங்களை தான் உங்கள் மாமி தேடி கொண்டு உள்ளார். நான் நீங்கள் கலெக்டர் அம்மா உடன் இருந்ததை சொன்னேன். உங்களை கூட்டி வர சொன்னார் “ என்றான்.
“நான் அவலுடன் இருந்தது எப்படி உங்களுக்கு.. ஓ நாற்காலி அடிக்கி கொண்டிருந்தீர்கள் அல்லவா? என்றாள்.
“ஆமா தாயீ.” என்றான்.
“ஏன் அண்ணா வேறு யாராவது மண்டபத்தில் இருந்து வெளியிலோ உள்ளையோ வந்தார்களா? என்று விசாரித்தாள் மாயா.
“ஏன் தாயீ கேட்குறீர்கள் என்று கேள்வி எழுப்பிவிட்டு சிறிது யோசித்து.. மாப்பிள்ளையும் கந்தனும் வெளியில் சென்றார்கள் பிறகு மாப்பிள்ளை மட்டும் வந்தார்.” என்றார்.
“எப்போ?” என்றாள்.
“உங்களிடம் பேசி கொண்டிருந்தார் இல்லையா? அப்போது தான் தாயீ” என்றான்.
மாயா ரேவதியை பார்த்ததும். ரேவதி “கந்தன் இந்த ஊரா என்று விசாரித்தாள். இல்லை அவன் மாப்பிள்ளை ஊர் இங்கிருந்து இரண்டு கிராமம் தள்ளி உள்ளது என்றான்.
மாயா “அண்ணா நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என்றாள்.
அவன் யோசனையுடன் என்னம்மா என்றான். ரேவதியை காட்டி இவளை அந்த கந்தனின் ஊருக்கு யாருக்கும் சொல்லாமல் அழைத்து செல்ல வேண்டும் என்றாள். அவனும் சம்மதித்தான். அதற்குள் மாயாவின் மாமி அங்கு வரவே பேச்சை நிறுத்தினர்.
“ கல்யாண பெண் எங்கு ஊர் சுற்றுகிறார். யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? என்று கத்தினாள். பிறகு மாயாவை அழைத்து சென்று மணப்பெண் அலங்காரம் செய்ய தொடங்கினர். வரிசையாக ஆட்கள் வர தொடங்கியதால் ரேவதிக்கும் அழைத்து கேட்க முடியவில்லை. முகூர்த்த நேரமும் நெருங்கி பெண்னை மேடையில் கூட்டி சென்று விட்டனர். சடங்குகள் நடந்தேர மாயாவின் பொருமையும் காற்றில் கரைந்து கொண்டிருந்தது. தாலியை ஆசிற்வாததிற்காக எடுத்து சென்ற பொழுதே ரேவதி உள்ளே நுழைந்தாள். மாயாவின் கேள்வியான பார்வைக்கு கண் சிமிட்டி வெற்றியை உறுதி செய்தாள். சிறுவனை காப்பாற்றி விட்டார்கள் என்று தெரிந்ததும் அவள் அமர்ந்து இருந்த நிலையை விட்டு எழுந்து நின்றாள். திடிரென பெண் எழுந்ததும் அனைவரும் புரியாமல் அவளையே பார்த்தனர். ஆனால் அவள் பார்வை வாசலை நோக்கி இருந்ததும் அனைவரும் வாசலின் பக்கம் திரும்பினர். அங்கு கையில் ஒரு சிறுவனுடன் ஜானகி வந்து நின்றாள். அவள் கையில் குழந்தையை பார்த்ததும் சங்கரன் மாயா தான் இதற்கு காரணம் என்று புரிந்து கொண்டான். அங்கிருந்து எழுந்து ஜானகியை முறைத்து விட்டு. மாயாவிடம் திரும்பினான்.
“படிக்காதவள் என்று கல்யாணம் செய்து கொள்ள நினைத்தால்.. உன்னை என்று மாயாவின் கழுத்தை நெரிக்க வந்தான். ஆனால் வினாடி பொழுதில் அவனை தடுத்து சரமாரியாக நான்கைந்து அடிகள் விழுந்தன. என்ன நடக்கின்றது என்று புரியாமல் பார்தவனை பார்த்து.. மாயா “ நான் கராத்தேயில் ப்ளாக்பெல்ட் என்பதை கூட உன் அப்பா உன்னிடம் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. அப்படி சொல்ல வேண்டும் என்றாள் முதலில் என் வேலையை பற்றி கூறவேண்டுமே. என்ன முழிக்கின்றாய் பெண்கள் நலம் மையம் என்று வைத்து பெண்களுக்கு எதிரான தீமைகளை ஒழிப்பதே என் வேலை என்றாள். கீழே நிற்பது என் தோழி சென்னையின் கலெக்டரும் கூட என்றாள். சங்கரனுக்கு நன்றாக மாட்டி கொணடோம் என்பது மட்டும் புரிந்தது.
வேறு வழி இல்லாமல் அனைவரின் முன்பும் ஜானகியின் கழுத்தில் தாலி கட்டினான். பெரியவர்கள் அனைவரும் சங்கரனை கொன்றுவிடும் அளவு கோபத்தில் இருந்தனர். அவர்களை அமைதி படுத்திய மாயா..
ஜானகியிடம் “இத்தனை விஷயங்களுக்கு பிறகும் இவனை நம்புகின்றாயா?” என்று கேட்டாள்.
“இல்லை மாயா. வேறு ஒரு பெண்ணோடு பார்த்த பொழுதே இவனை வெறுத்து விட்டேன். எப்போ என் மகனை பகடகாயாக மாற்றினானோ இவனெல்லாம் மனிதனே இல்லை.. ஆனாலும் இவனை மணந்ததற்கு காரணம் என் மகன் இவனது மகன் தான் என்ற அடையாளதிற்காக மட்டுமே. உங்களிடம் கூறியது போல் இவன் மேல் நானே புகார் கொடுக்கின்றேன் என்றாள். இதை எதிர் பார்க்காத சங்கரன் ஜானகியை அடிக்க கைகளை ஓங்கினான் ஆனால் அதை ஜானகியே தடுத்து விட்டாள். அவள் கண்களில் இருந்த கோபத்தை பார்த்ததும் சங்கரன் இவளை இனி அடிமை படுத்த முடியாது என்று புரிந்து கொண்டான். அங்கு வந்த காவலர்கள் சங்கரனை கைது செய்து சென்றனர். ஜானகி அவள் மகனுடன் ரேவதி மாயாவுடன் சென்னனக்கு சென்றாள். அந்த சிறுவனின் வாழ்கையில் இனி தந்தை என்பவன் ஒரு ஆண் எப்படி இருக்க கூடாது என்பதற்கான எடுத்து காட்டாக மட்டுமே இருப்பான். அவன் வாழ்க்கையில் நல்ல ஆண்மகனாக வாழ்வான் என்ற நம்பிக்கையோடு நாமும் அத்திருமணத்தில் இருந்து விடைபெறுவோம்.