Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நினைவலைகள்

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதைகள்

கவிதை1: அப்பா
உன்
உயிரினில்...
உதிரத்தில்...
ஒரு பாகமாய்
என்னை உருவாக்கினாய்...
உன்
வயிற்றினில்
ஈரைந்து மாதங்கள்
சுமந்து என்னை
பெற்றெடுக்க
வில்லை தான்...
ஆனாலும்
நான் உருவான
நொடி முதல்
உன் நெஞ்சினில்
சுமக்கின்றாய்
ஆயுள் முழுவதும்
சுகமாய்...
உன் தாயே
வந்து பிறந்ததாய்
என்னை பார்க்கும்
உன் விழிகள்...
கடவுளே
தந்தையின் வடிவில்
வந்ததாய் நோக்கும்
என் விழிகள்...
அதட்டுவதே அதிகம் என
அடிப்பதை தள்ளி வைப்பாய்...
இப்படித்தான் ஆகவேண்டும்
என்று திணிக்காமல்...
என் விருப்பத்தில்
என்னை செதுக்கினாய்...
விதியின்படி
பெண்பிள்ளையான நான்
மருமகளாய் வேறிடத்தில்
அடிவைத்து புதுமனை புக...
ஆதியும் அந்தமுமான
என் மகாலக்ஷ்மி
என்னை பிரிந்தாள்
என துயர்கொள்ளும்
தகப்பன்சாமி நீயே!
முற்பிறவியில் நான்
செய்த பலனாய்
தந்தையெனும் ரூபத்தில்
வந்த தெய்வமே...
உள்ளத்தால் என்றும்
உன்னை மறவாத
உன் அன்பு மகள்...
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 2:

கைம்பெண்
ஆணென்பதையும் மறந்து
சுற்றி சுற்றி வந்தாயடா
என் மனதை கவர,
உன் வித்தைகளின் பிடியில்
சிக்காமல் லாவகமாய்
தள்ளி சென்றபோதும்
விடாமல் உன்னை
நுழைத்து கொண்டாய்
என் மனதில்...
எனக்குள்ளே போராட்டங்கள் பல
உன்னை எதிர்த்தும் ஆதரித்தும்
நடந்து கொண்டே தான் இருந்தது
இருந்தும் வென்று விட்டாய்
என் மனதை...

அதோடு நிற்காமல்
வீடேறி பெண் கேட்டு
பல சோதனைகளை கடந்து
மணவறையில் மங்கையென்னை
கைப்பிடித்தாய் அன்பே!
இக்கணம் முதல்
என்னை முழுதும் ஆட்கொண்டவள்
நீ மட்டும் தானடி சகியே
என் சரிபாதியே! என்றாய்.
முன்பிருந்ததை விட பலமடங்கு
உன் கெஞ்சலும் கொஞ்சலும்
நாளுக்கு நாள் என்னிடம் வளர்ந்து
உன் அன்பை மழையாய்
பெய்தாயடா...
என்னை உன் ஆயுள் முழுதும்
சுமப்பேன் என்று
உள்ளங்கையில் தாங்கினாயே!
ஆகாயத்தில் சுகமாய்
உன் அணைப்பில்
கட்டுண்டு இருந்த என்னை
நொடிதனில் சுவாசமற்ற
மலராய் மாற்றியது
உன் எதிர்பாரா மரணம்.
என்னை சுற்றி
இருள்மட்டும் சூழ்ந்திருக்க
அதில் மின்மினியாய்
உன் நினைவுகள் மட்டும்
சுழன்று கொண்டிருக்க,
காதிருந்தும் செவிடானேன்
கண்ணிருந்தும் குருடானேன்
வாயிருந்தும் ஊமையானேன்
இறுதியில் நீ இல்லாமல்
என்
உயிர் இருந்தும் பிணமானேன்.
தங்கத்தின் ரதமாய் இருந்த
மகனை முழுங்கிவிட்டாள் பாதகி
என ஊர் ஏச,
பெற்றவர்களும் உறவினர்களும் தூற்ற,
உயிர் உள்ளவரை உன்னுடன்
இருப்பேன் என்றாயே!
ஒருவேளை
நீ இல்லையென்றால்
அதன்பிறகு என்ன செய்யவேண்டும்
என்றும் கூறாமல் சென்றதேனோ?
உன் தீண்டலின் இனிமையில்
என் மேனி இன்னும் தகிக்கின்றது...
கெஞ்சல்களின் மொழியில்
உன் விழிகள் என்னை எரிக்கின்றது...
உன்
கொஞ்சல்களின் நினைவில்
தீயாய் சூழ்கிறது என் மனம்...

உயிர்விடும் முன்
என்னோடு வா என்றிருந்தால்
விட்ருப்பேன் இம்மேனியோடு
என் உயிரையும் சேர்த்து...
நீ இல்லாமல் வெறும்
கூடாய் நிற்கின்றதே
என் செய்வேன் அன்பே !
தர்ஷினிசிம்பா
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 3:

"காதலென்பது யாதெனில்"

உருகி உருகி
காதலித்தாலும்
விரும்பியவளை
அக்கினியின்முன்
தனதாக்கி கொள்ளும்பொழுதே ஆண்மகனின் காதலுக்கு
தனி அழகு...
என் உயிரே
நீ தான் கண்மணியே
என்றுரைத்தாலும்
நீயும் என்னுயிர் தான்
அன்பே என்றுரைத்து
ஊரார் முன் கரம்பற்றி
தன்னை தரும் பொழுது
பெண்மையின் அழகே
தனி அழகு...
அக்காதலும்
வாழ்க்கை செல்ல செல்ல
ஆயிரம் சண்டைகள்
வந்தாலும்
நீயா நானா என்றில்லாமல்
ஒருவரின் கோபத்தை
மற்றவர் தணிக்க முயலும்
நேரம் உங்களின்
காதல் பேரழகு...
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 4:

"உடலின் உண்மை"

திருமணமான புதிதில்
வரும் சண்டைகள் போல்
உன் சீண்டல்களில்
என் முகம் சிவக்கும்
அதை காணவே
மேலும் எல்லைமீறும்
உன் விரல் தீண்டலின்
நர்த்தனங்கள் என் மேனியில்.
சீண்டல், கேலி, கிண்டல், கொஞ்சல்,
கெஞ்சல் என்னும் வரிசையில் சேர்ந்தது
சிறிதாக ஆரம்பித்த
நம் வார்த்தை மோதல்
ஒன்றுமில்லாத விடயத்தில்
வலு பெற்ற சினத்தின்
வெளிச்சமாய்
இதோ இன்று
என் பிறந்தவீட்டின்
மெத்தையில் நகம்
கடித்தபடி நான் மட்டும்..
வாசலை தாண்டும்முன்
என் விரல்பிடித்து
நீ தடுத்திருந்தால்
தஞ்சமடைந்திருப்பேன் உன் நெஞ்சத்தில்...
வந்துவிட்டேன் வீராப்பாய்
ஆனால்,
என் மனம் மட்டும் உன்னிடமே
சிறை வைத்திருக்கிறாய்
என்பதை மறந்துவிட்டு.
விழிகள் மூடினாலும்
இருளில் மின்னும்
பிரகாசமாய் புன்னகைத்தபடி
வந்து நிற்கிறாயடா
மனதில்...
ஏனடி உனகிந்த வேலை
என்று என் மனமே
எள்ளி நகையாட...
அவையெல்லாம் சட்டைசெய்யாமல்
உன் நினைவில்
அலைகிறது என் நெஞ்சம்...
எவ்வளவு
சோகமோ சுகமோ
உன் கைவளைவுக்குள்
நுழைந்து மறந்துவிட்டு
நிம்மதியான உறக்கம்
வேண்டுமென கெஞ்சுகிறது
என் இதயம்
வழி தெரியாமல்
தவிக்கிறேனடா...
என்னை உரிமையாய்
இழுத்துசெல்லும்
உன் உரிமைகலந்த
கோபத்தை காண
தவமிருக்கிறேனடா
என்னை மேலும்
தவிக்கவிடாமல் விரைந்து வருவாயடா
மனம் கவர்ந்த என் மன்னவனே!

-தர்ஷினிசிம்பா
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 5:

"உலக கவிதை தினம்"

உலக கவிதை தினம்
வானவில்லை வளைத்து மெருகூட்டிய
உன் புருவத்தின் பிறைநிலவில்
வதைவதென்னவோ என்
பருவம்தானடி...
மீன்விழியாலென நினைத்திருக்க
வண்ணத்துப்பூச்சிகளும்
உன் விழிகளில் தஞ்சம்புக ஏங்குதடி...
கோவைபழமும் கொஞ்சிட
கெஞ்சும் உன் இதழோவியம்
படித்திடத்தான் மலர்களும்
தவம் கிடக்குதடி...
நின் வதனத்தின் அழகு
பெருமழையாய் என்னுள் பெய்திட,
பேரிடராய் உன்னையே
தந்து என்னுள் கரைந்திடும்
நாள் வருமோ? என்று போராட்டம்
வெடிக்குதடி என்னுள்ளே!
உன் விழிகளை கண்ட நொடி
என் சுவாசத்தில் கலந்தவள் நீதானடி!
அனைவரும் கவிதைக்கென்று
ஒரு நாள் கொண்டாடிட,
உலக கவிதை தினமாம்...
எங்கோ ஒரு மூலையில்
சுற்றிக்கொண்டிருந்த
என்னையும் கவிஞனாக்கிய
பேரழகின் பெருமைக்குரியவள் நீதானடி!
மற்றவருக்கு தான் ஆண்டுக்கு
ஒருநாள் கவிதை தினம்.
உன்னை காணக்கூட
தேவையில்லை அன்பே!
என் மனக்கண்ணில் உந்தன்
அழகிய மலர்முகம் தோன்றிடும்
வேளையில் நித்தமும் ஆயிரம்
கவிபடைக்கிறேனடி கண்ணே!
ஆகையினால் அனுதினமும் எனக்கு
கவித்தினம் தானடி உன்னாலே!

-தர்ஷினிசிம்பா
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 6:

"எங்கள் சேவையின் முடிவு"

மருத்துவ சேவையில்
மூழ்க ஆசைகொண்டு
மருத்துவத்தை நாடி
படித்தேன் வெறியோடு...

கொடிய நோயின் தாக்கத்தில்
மக்கள் துயர் துடைக்க
நான் பெற்ற பிள்ளையை
தவிக்க விட்டுவிட்டு
பெற்றெடுக்காத பிள்ளைகளுக்காக
அயராது உழைக்க
விழைந்தோடி வந்தேன்
மருத்துவமனைக்கு...

பல நாள்
இரவு பகல் பாராமல்
ஊண் உறக்கம் இல்லாமல்
அயராது கண்விழித்து
மருத்துவம் பார்த்திட,
உன்னையும் பிடிப்பேன்
எங்கே ஒடுவாய் என்று
கொரோனாவெனும்
கொடியநோய்
என்னையும் ஆட்கொள்ள
முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டேன்.

இன்று விளைவோ,
கைதொடும் தூரத்தில்
என் கைக்குழந்தை
"வேற ஒன்னும் வேணாம்
அம்மா மட்டும் போதும்...
வாம்மா வீட்டுக்கு போகலாம்"
என்ற கதறலினை கேட்டும்
உள்ளுக்குள் ஊமையாய் அழுது
மனம் கல்லாய் சமைந்திருக்க,
என் சக ஊழியரின்
மரணத்தை காட்டிலும்
வலி தந்தது அவரை அடக்கம் செய்ய
இடம்கொடுக்க மறுக்கும்
உங்களுக்கா சேவைசெய்ய
என் பிள்ளையை தவிக்கவிட்டேன்
என்று தலைகுனிகிறேன்
ஆழ்ந்த வருத்தத்தில்...

இருந்தும் மீண்டும் எழுகிறேன்
"நீங்கள் தான் கடவுள்"
என்று வரும்
அடுத்த உயிரை
காப்பாற்ற...
எத்துணை துயர்வரினும்
காப்பதே என் கடமை..

"மருத்துவத்துறையில் இந்த இக்கட்டான நேரத்தில் உயிரையும் பொருட்படுத்தாது உழைக்கும் ஒவ்வொரு உள்ளத்திற்கும் இக்கவிதை சமர்ப்பணம்"

-தர்ஷினிசிம்பா
 
Last edited:

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 7:

"நெஞ்சுரம் கொண்டு நின்று"

காட்டிலும் வாழ்க்கையுண்டு
கண்ணம்மா
நாட்டிலே வாழ்க்கையுண்டோ?

நெஞ்சம் பதறுதடி
கண்ணம்மா
உந்தன் பூவுடல்
புழுதியில் காண்கையிலே...

கண்கள் பனிக்குதடி
கண்ணம்மா
உன்னை நாசம் செய்தது ஏன்??
நீ மலரா மொட்டல்லவோ??

பெற்றவள் பெண் தானே
கண்ணம்மா
அவன் தேகத்தேடலுக்கு
உடன்பிறந்தவள் மேனி
கிட்டதில்லையோ?

ஓர் பாவம் அறியாத
பச்சிளம் துளிர் நீயே
இரையானது ஏனடியோ?

கண்ணம்மா!

விலங்குகளும் குழந்தையின்மேல்
நேசம் பொழியுதடி
கண்ணம்மா
!

மானுட மிருகங்களோ
சிசுவென பாராமல்
உன்மேல் பாய்ந்தது
தவிறில்லையோ?

என் மகள் மட்டுமன்றி
கண்ணம்மா
பெண் பிள்ளை பார்க்கையிலே
மனம் கலங்கி போவதுண்டு...
பெண்கள் தெய்வமென்று
வணங்கிய பூமியன்றோ??

கண்ணம்மா

இன்றோ
உன் நிலை காண்கையிலே
செந்நீர் வழியுதடி
கண்ணம்மா...

சிவசக்தி என்றானே
கண்ணம்மா
...
இன்று உன் நிலைகண்டு
ஆணென்று
வெட்கி தலைகுனிந்தானோ?

நம் பாட்டனான
முண்டாசு பாரதியும்...
வீழ்வதும் வாழ்வதுமே
கண்ணம்மா
நின்கையில் உள்ளதடி
நெஞ்சுரம் கொண்டு

நிமிர்ந்து நில்லடி
கண்ணம்மா!

காளியின் உருவம்கொண்டு
வந்தது வரட்டுமென்று
அவன் உயிரையும்
குடித்திடடி...

-தர்ஷினிசிம்பா
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
கவிதை 7:

"நெஞ்சுரம் கொண்டு நின்று"

காட்டிலும் வாழ்க்கையுண்டு
கண்ணம்மா
நாட்டிலே வாழ்க்கையுண்டோ?
நெஞ்சம் பதறுதடி
கண்ணம்மா
உந்தன் பூவுடல்
புழுதியில் காண்கையிலே...
கண்கள் பனிக்குதடி
கண்ணம்மா
உன்னை நாசம் செய்தது ஏன்??
நீ மலரா மொட்டல்லவோ??
பெற்றவள் பெண் தானே
கண்ணம்மா
அவன் தேகத்தேடலுக்கு
உடன்பிறந்தவள் மேனி
கிட்டதில்லையோ?
ஓர் பாவம் அறியாத
பச்சிளம் துளிர் நீயே
இரையானது ஏனடியோ?

கண்ணம்மா!
விலங்குகளும் குழந்தையின்மேல்
நேசம் பொழியுதடி
கண்ணம்மா
!
மானுட மிருகங்களோ
சிசுவென பாராமல்
உன்மேல் பாய்ந்தது
தவிறில்லையோ?
என் மகள் மட்டுமன்றி
கண்ணம்மா
பெண் பிள்ளை பார்க்கையிலே
மனம் கலங்கி போவதுண்டு...
பெண்கள் தெய்வமென்று
வணங்கிய பூமியன்றோ??

கண்ணம்மா
இன்றோ
உன் நிலை காண்கையிலே
செந்நீர் வழியுதடி
கண்ணம்மா...
சிவசக்தி என்றானே
கண்ணம்மா
...
இன்று உன் நிலைகண்டு
ஆணென்று
வெட்கி தலைகுனிந்தானோ?

நம் பாட்டனான
முண்டாசு பாரதியும்...
வீழ்வதும் வாழ்வதுமே
கண்ணம்மா
நின்கையில் உள்ளதடி
நெஞ்சுரம் கொண்டு

நிமிர்ந்து நில்லடி
கண்ணம்மா!
காளியின் உருவம்கொண்டு
வந்தது வரட்டுமென்று
அவன் உயிரையும்
குடித்திடடி...
-தர்ஷினிசிம்பா
Superb ma
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 8:

"பேசும் பொற்ச்சித்திரமே!"

உற்றார் உறவினர் எவரும் மீதியில்லை!
வீதியில் நடக்கையில் என்நிலை சொல்லி
எள்ளி நகையாடிடும் கூட்டத்தின் நடுவே
மாட்டிக்கொண்ட மானடி கண்ணம்மா!

வீதியேமேல் என்றெண்ணுமளவிற்கு
நஞ்சின் உச்சமாய் நெஞ்சை
பிசைந்திடும் ஏச்சுக்கள்
வீட்டிலே கேட்டபொழுதெல்லாம்..
என்றோ ஒருநாள் இந்நிலை
மாறிடுமென்று வெந்து நொந்திருந்த இளங்கன்றடி கண்ணம்மா!

இருண்டிருந்த மேகமாய்
நெஞ்சம் கணத்திருந்த வேளை
இனி வாழ்வென்பது கனாவாகிடுமோ??
என்றிருகையில்
சில்லென்ற மழைச்சாரலாய்
சிந்திய என் கருவறைத்தங்கம்
நீதானடி கண்ணம்மா...

இப்புவியில் யான்பெற்ற பிறவியை
பூர்த்தி செய்ய இறைவன் அளித்த
என் பெண்மையின் வரமடி நீயெனக்கு...

மலடி என்ற உயிர்குடிக்கும் வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்த
என் வானத்து வெண்ணிலவே!

தாய்மையெனும் குளுமையில்
என்னை நனைத்து என் துயர்போக்க வந்த என் தாயல்லவோ.... நீ...பேசும் பொற்சித்திரமன்றோ... கண்ணம்மா...??

-தர்ஷினிசிம்பா
 

New Threads

Top Bottom