Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிமிர்ந்து நில்! நிலாப்பெண்ணே!

ChitraDevi

New member
Messages
2
Reaction score
2
Points
1
தோழிகளே இது என்னுடைய இரண்டாவது சிறுகதை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.



நிமிர்ந்து நில்! நிலாப்பெண்ணே!



நிலா இருபத்தி நான்கு வயதான,அழகான யுவதி.இந்த அவசர உலகில் , அவள்

அலுவலகத்திற்கு வேகமாக கிளம்பினாள்., அவள் கிளம்பும் வேகத்தை பார்த்து, அவளின் தோழி மது, அடியே நிலா என்ன இன்று இவ்வளவு சீக்கிரமா கிளம்புற என கேட்க, எங்க கம்பெனிய ஒரு புது கம்பெனி டேக் ஓவர் பண்ணுறாங்க,புது எம் டி இன்னைக்கு வரார். அதான் நேரத்தோடு கிளம்புறேன், எனக்கு சாப்பாடு வேண்டாம் நீ உனக்கு மட்டும் செஞ்சுக்கோ.


நான் ஆஃபிஸ் விட்டு வந்து மற்ற வேலைகளை பார்க்கிறேன் பை என்று கூறி ஸ்கூட்டி சாவியை எடுத்து கொண்டு புறப்பட்டு விட்டாள் நிலா.



வெளியே சென்ற நிலாவை பார்த்துக்கொண்டிருந்த மதுவோ, சிரிப்பையே மறந்துவிட்ட தன் தோழியை நினைத்து எப்படி இருந்தவள் இப்படி ஆகிவிட்டாள் ,என வருந்தினாள். சீக்கிரம் தனது

தோழியின் வாழ்வு மலர வேண்டும் என கடவுளிடம், பிரார்த்தனை வைத்து விட்டு அவளும் அலுவலகத்திற்கு கிளம்பினாள்.



நிலாவும், மதுவும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய தோழிகள். ஒன்றாகவே கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தனர்.கேம்பஸ்ஸில் மதுவிற்கு சென்னையிலும், நிலாவிற்கு பெங்களூரிலும் வேலை கிடைத்தது . தோழியை பிரிவது சற்று வருத்தம் என்றாலும், தாய், தந்தையோடு பெங்களூரிலே இருக்கலாம் என்பதிலே ரொம்ப மகிழ்ச்சி நிலாவிற்கு, அப்படி இருந்த நிலா, இன்று எல்லோரையும் விட்டு விட்டு நல்ல வேலையையும் ராஜினாமா செய்து விட்டு,தோழியோடு சேர்ந்து அபார்ட்மெண்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி சாதாரணமான கம்பெனியில் வேலைக்கு சென்று வருகிறாள்.



நிலா ஸ்கூட்டியை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றாள். எல்லோரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.இவளை பார்த்தவுடன் எல்லோரும் காலை வணக்கம் கூற இவளும் பதில் வணக்கம் கூறி விட்டு தனது கேபினுள் நுழைந்தாள். இவள் மெயில் செக் செய்யும் போது இன்டர்காம் அழைத்தது.


ஹலோ சார், ஓகே சார். எல்லாமே தயாரா இருக்கு. இதோ வருகிறேன் சார். எம் டி தான் நிலாவை அழைத்திருந்தார் தனது அறைக்கு,

மெல்ல கதவை தட்டிவிட்டு மேனஜிங் டைரக்டர் என்று பெயர் போட்டிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

ராம்நாத் தான் பார்த்திருந்த கோப்பிலிருந்து தலை நிமிர்த்தினார். வாம்மா நிலா எல்லா ஏற்பாடும் சரியா இருக்கா? நான் இன்னிக்கே அறிமுகம் முடிந்ததும் ரிலிஃப் ஆகிவிடுவேன், அதனால் எல்லாமே சரியா இருக்கனும்.



எல்லா ஃபைலும் சரியாக இருக்கிறது சார். கம்ப்யூட்டரிலும் ஃபைல் பண்ணிட்டேன் சார்

என்றாள் நிலா.

ஓகே நிலா யாரையும் வேலையிலிருந்து அவர் நீக்கமாட்டார் , அதனால் யாரும் கவலைப் பட வேண்டாம்.

ஷார்ப்பா 9'o க்ளாக் வந்துடுவார், நீ போய்

எல்லோரையும் ரிசப்ஷன்ல அசெம்பிள் ஆகசொல்லுமா, நானும் ஐந்து நிமிடங்களில் வருகிறேன் என்றார்.



சரியாக ஒன்பது மணிக்கு ஆடி காரிலிருந்து ஸ்டைலாக இறங்கி வந்தான் ஆதித்யன். கார் சாவியை வாட்ச்மெனிடம் குடுத்து பார்க் பண்ண சொல்லிவிட்டு உள்ளே வேகமாக நுழைந்தான்.


ரிசப்ஷனில் நின்றிருந்த ராம்நாத் கை குலுக்கி பொக்கே கொடுத்து வரவேற்றார்.பிறகு ஆஃபிஸ் ஸ்டாப்ஸ் எல்லோரையும் அறிமுகம் செய்தார். இறுதியாக நிலாவை தன்னுடைய பி.ஏ என்று அறிமுகம் செய்ய நிமிர்ந்து புதிய எம்.டியை பார்த்த நிலா சர்வமும் நடுங்க அதிர்ந்து நின்றாள்.



ஆதித்யன் தன் கூரிய விழிகளால் அவளை பார்த்துக் கொண்டே ராம்நாத்திடம் "என்ன சார் உங்க பிஏ அதிர்ச்சியா நிற்கிறாங்க நான் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லையா" ஐ மீன் இன்றே பொறுப்பேற்று கொள்வேன் என்று எதிர்பார்க்கவில்லையா என வினவ, ராம்நாத்தோ அதெல்லாம் ஒன்றுமில்லை Mr ஆதித்யன். நிலாவிற்கு உடம்பு முடியவில்லை என நினைக்கிறேன். நிலா என மெல்ல அசைத்து ஆர் யு ஓகே என ராம்நாத் வினவ, ஆங் என கனவிலிருந்து விழித்தாள் போல் பதறி இருவரிடமும் மன்னிப்பு கேட்டாள்.



எதுக்கு மன்னிப்பு கேட்கிறிங்க மிஸ் நிலா என

ஆதித்யன் வினவினான். நிலாவோ என்ன சொல்வது என்று விழிக்க, ராம்நாத்தோ இடையில் நுழைந்து வாருங்கள் ஆதித்யா உங்க கேபினுக்கு போகலாம் என அழைத்துச் சென்றார். அப்பாடா என பெருமுச்சு விட்டாள் நிலா.



ராம்நாத் சிறிது நேரத்தில் இன்டர்காமில் நிலாவை அழைத்தார்.

நிலா இனி ஆதித்யன் சாருக்கு கீழே தான் உனக்கு வேலை . நான் வருகிறேன் என புறப்பட்டு விட்டார்.

ஆதித்யாவோ நிலாவை உற்று பார்த்திருக்க ,நிலாவோ தலை குனிந்திருந்தாள்.

சற்று நேரம் அமைதியாக இருந்த ஆதி, மிஸ் நிலா என அழைத்து , கம்பெனி ஸ்டாப்ஸ் எல்லோரிடமும் இரண்டு வருட காண்ட்ராக்டில் சைன் வாங்கிடுங்க, நான் வேலையை ஆரம்பித்த பிறகு யாரும் வேலையை விட்டு நிற்க கூடாது. எனக்கு எதையும் பாதியில் விட்டுச் சென்றால் பிடிக்காது.எதையும் என்பதை அழுத்திச் சொன்னான்.நிலாவோ கண்களில் வலியோடு சரி எனக் கூறி விட்டு வெளியேறினாள்.

நிலா எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஆஃபிஸிலிருந்து வீட்டிற்கு கிளம்பும் போது சோர்வாக இருந்தாள். ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது மேலே இருந்து ஆதி கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.




சென்னையின் டிராபிக்கில் நீந்தி அவள் அப்பார்ட்மெண்ட் வந்து சேரும்போது ரொம்பவே சோர்ந்து விட்டாள். இவள் வீட்டைத் திறந்து உள்ளே வரும்போது மது சோபாவில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

வா நிலா ஏன் ரொம்ப டயர்டா இருக்கிற, மதியம் சாப்பிட்டியா இல்லையா என வினவ, நிலாவோ இல்லடி ரொம்ப தலைவலி, நான் போய் ஓய்வு எடுக்கிறேன்,நீயே டின்னர் செய்யிறியா சாரிடி.

உதை வாங்கப் போற, நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். நான் காஃபி போட்டு வரேன், குடிச்சிட்டு போய் ரெஸ்ட் எடு என்றாள் மது.



தனது அறைக்கு சென்ற நிலா பழைய நினைவுகளில் மூழ்கினாள்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு பெங்களூரில்

உள்ள ஒரு பங்களாவில் ஒரே பரபரப்பாக இருந்தது. அந்த வீட்டின் இளவரசியை பெண் பார்க்க வருகின்றனர், அதான் இந்த அமர்க்களம். வீட்டின் தலைவர் கிருஷ்ணன் , மனைவி நிர்மலா,

ஒரே மகள் நிலா. N&N Co என்ற பெயரில் பல கம்பெனிகள் நடத்தி வருகிறார்.எல்லாவற்றிற்கும் ஒரே வாரிசு நிலா தான்.

நிலா படித்துமுடித்தவுடன் திருமணத்திற்கு பார்க்க ஆரம்பிக்க நிலாவோ, தான் ஒரு வருடத்திற்கு வெளியிடத்தில் வேலை பார்க்கனும்பா, பிறகு நம் கம்பெனியை பார்த்துக் கொள்கிறேன். அதற்கு பிறகு திருமணத்திற்கு பாருங்கள் என்றாள். கிருஷ்ணனும் தன் மகளின் விருப்பத்தை நிறைவேற்றினார்.இதோ இப்போது தான் ஒரு வருடத்திற்கு பிறகு வரன் பார்க்கிறார்.

ஆதித்யா கன்ஸ்ட்ரக்ஷன் , ஆதித்யா பைனான்ஸ்..கம்பெனியின் எம்.டி சித்தார்த்தோட மகன் ஆதித்யன் தான் நிலாவிற்கு பார்த்திருக்கும் வரன்.

சரியாக ஐந்து மணிக்கு தயாராகி கீழே வந்தான் ஆதித்யன். டேய் ஆதி இவ்வளவு அவசரம் கூடாது டா,முதல் ஆளாக கிளம்பி வந்திருக்க என வம்பு வளர்த்தான், ஆதியின் நண்பனும், மற்றும் அவனின் தங்கை ஸ்வேதாவின் கணவனுமாகிய செழியன்.

அவன் முதுகிலே ஒன்று போட்ட ஆதி, டேய் எனக்கு நேரம் தவறாமை ரொம்ப முக்கியம்.போய் சீக்கிரம் ரெடியாகு.எங்க அந்த குட்டி வாண்டு கிளம்பிட்டாளா?என, என்னது உன் தங்கை குட்டி வாண்டா "அனகோண்டா" டா அவ என்றான் செழியன்.


அக்கடச்சூடு என்று விட்டு, சோஃபாவில் சென்று அமர்ந்தான் ஆதி.

அங்கே புசுபுசுவென மூச்சிவிட்டுக் கொண்டு நின்றிருந்த ஸ்வேதா, டேய் நான் உனக்கு அனகோண்டாவா, உன்ன சும்மா விடமாட்டேன் என்று கூறி தனது கணவனை துரத்தினாள்.

அங்கு வந்த வைஜயந்தி,தன் மகளின் தலையிலே குட்டி கல்யாணம் ஆகி ஆறு மாதமாகிறது.இன்னும் பொறுப்பு வரவேயில்லை, இன்னும் சின்ன பிள்ளை மாதிரி ஓடி பிடித்துக்கொண்டு, வா என்னோட "அங்கு எடுத்து செல்லும் பொருட்களை "அடுக்கி வைப்போம்.

அப்பா வந்த உடனே கிளம்பனும் , என்று மகளை கையோடு பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்.

சற்று நேரத்தில் சித்தார்த் வந்தவுடன் அனைவரும் கிளம்பி பெண் பார்க்கச் சென்றனர்.



பெண் பார்க்கும் வைபவம், மாதிரி இல்லாமல்,இரு வீட்டாரும் நட்பு ரீதியிலான சந்திப்பாக ஏற்பாடு செய்தனர்.ஏற்கனவே, நிர்மலாவும் , வைஜயந்தியும் நெருங்கிய தோழிகள்.இப்பொழுது தம் மக்களுக்கு திருமணம் செய்து உறவினர்களாக ஆவல் கொண்டனர்.

அதற்கு தான் இந்த சந்திப்பு.

சரியாக ஏழு மணிக்கு கார் வந்து நின்றது. மாப்பிள்ளை வீட்டார் அனைவரையையும் வெளியே வந்து வரவேற்றனர். இரு வீட்டாரும் கலந்து பேசி காஃபி, டிபன் சாப்பிட்டனர்.

ஆதித்யாவிற்கு தோட்டத்தை சுற்றி காண்பிக்கும்மாறு நிலாவிடம் கூறினார் கிருஷ்ணன்.

வாருங்கள் என்று கூறி ஆதியை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள்.

இப்போ லைட் வெளிச்சம் இருந்தாலும்,பகலில் பார்த்தால் இன்னும் அழகாக இருக்கும், அதனால் இன்னொரு நாள் பார்க்கலாமா, இப்போ இங்க உட்கார்ந்து பேசுவோமா என நிலா வினவ ,ஓ.கே என்றான் ஆதி.

நான் நேரடியாகவே சொல்லிறேன் ஆதி, எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. என்னப் பத்தி சொல்லனும்னா நான் படபடனு பேசுவேன்.மனசில எதையும் வைச்சுக்க மாட்டேன்.

திருமணத்திற்கு பிறகு நான் எங்க அப்பாவோட பிஸ்னஸ்ஸ பார்த்துப்பேன்,இது என்னோட கன்டிஷன், உங்களுக்கு ஓகே ன்னா மேற்கொண்டு பேசலாம் என, ஆதியோ அவளை கூர்ந்து நோக்கி ஐ லவ் யூ நிலா என்றான்.

திகைத்து போய் நிலா அவனைப் பார்க்க அவனோ மெல்ல கண் சிமிட்டினான்.

நான் உன்னை இரண்டு வருடமாக காதலிக்கிறேன், உன் கனவுகள் பற்றி அறிந்து தான் ஒதுங்கி நின்றேன்.இப்போ அம்மாவா உன்னை பற்றி சொன்னதும் அதை பற்றிக் கொண்டேன் .எனக்கும் ஓகே ,வா "உள்ளே போய் சொல்வோம் ," என அவள் கையைப் பிடித்து அழைத்து சென்றான்.

உள்ளே பூரிப்புடன் வந்த இருவரையும் பார்த்த உடனே எல்லாருக்கும் புரிந்து விட்டது.

தோழிகள் இருவரும் அப்ப நாளைக்கு ஜோசியரிடம் சென்று நாள் குறித்து விட்டு வரலாம் என்றனர்.



ஜோதிடரோ இருவருக்கும் உடனடியாக திருமணம் செய்ய வேண்டும்.இல்லையென்றால்

திருமணத்தில் பல குழப்பங்கள் ஏற்படும் என கூறிவிட, அடுத்த முகூர்த்தத்திலே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

நிலாவிற்கு தான் நேரமே இல்லை. தான் செய்யும் ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருந்ததால், அதிக நேரம் ஆஃபிஸில்லே இருக்க வேண்டிருந்தது.



திருமணத்திற்கு முதல் நாள் வீட்டில் விருந்தினர்கள் எல்லோரும் வந்து ஒரே கொண்டாட்டமாக இருந்தது.



நிலாவை தோழிகள் எல்லோரும் கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

நிலாவின் போன் அடித்தது, தோழிகள் சிரித்தனர், மாப்பிள்ளை சாரால் கொஞ்சம் நேரம் கூட பேசாமல் இருக்க முடியாதோ என கேலி செய்ய

நிலாவோ ஏய் சும்மா இருங்கடி "இது கம்பெனி கால்" என்றாள்.



அந்த போன் காலால் அவளது வாழ்க்கையே திசை மாறியது..



படபடவென கதவு தட்டும் ஓசையில் திடுக்கிட்டு விழித்தாள் நிலா.

நிலா, நிலா என மது அழைக்க, இதோ வர்றேன்டி..



நிலா"தலைவலி பரவாயில்லையா" நல்லா தூங்கினாயாடி என மது வினவ, இப்போ வலி இல்லை, நல்லா தூங்கிட்டேன், சரி வா நாம சாப்பிடலாம். கொஞ்சநாள் சீக்கிரம் ஆஃபிஸ் போகனும், என்றாள் நிலா.

மதுவும் நிலாவும் பேசிக்கொண்டு இரவு உணவை முடித்துக் கொண்டனர்.



மறுநாள் காலையில் நிலா பதற்றத்துடனே ஆஃபிஸிக்கு கிளம்பினாள்.

உள்ளே நுழைந்து தன் கேபினில் அமர்ந்தவுடன் இன்டர்காம் அலறியது.



அதை எடுத்து பேசியவள், வரேன் சார் என்றாள்.

மெல்ல தன்னை திடப்படுத்தி கொண்டு அவன் அறைக்குச் சென்றாள்.



மிஸ் நிலா நேற்று அக்ரிமென்ட் ரெடி பண்ண சொன்னேனே, தயாரா இருக்கா என ஆதித்யன் வினவ "இதோ எல்லாருடைய டாக்குமெண்டும் இந்த ஃபைலில் இருக்கு சார்"என்றாள் நிலா.



ஓகே மிஸ் நிலா டென் மினிட்ஸ் கழித்து இதில் உள்ள ஆர்டர் படி ஒவ்வொருவராக வரச் சொல்லுங்க. இப்ப நீங்க போகலாம் என கூறி விட்டு ஃபைலில் தன் கவனத்தைச் செலுத்தினான்.



நிலா வெளியே சென்றவுடன் அந்த ஃபைலில் இருந்து சில காகிதங்களை எடுத்து விட்டு வேறு சில காகிதங்களை வைத்தான்.



தன் நாற்காலியை மெல்ல ஆட்டிக்கொண்டே மெல்ல புன்னகைத்தான் ஆதி ,நிலா டியர் இன்னும் சற்று நேரத்தில் நீ "நிலாஆதித்யன்" ஆகப் போகிறாய், என்னுடைய காத்திருப்புக்கு இன்றே முற்றுப்புள்ளி வைக்கிறேன் பார் என்று மனதில் கூறிகொண்டான்.



சற்று நேரத்தில் ஒவ்வொருவராக வந்து கையெழுத்து போட்டனர். கடைசியாக வந்த நிலா மேலோட்டமாக படித்துவிட்டு, நாம் ரெடி பண்ணதுதானே என்று வேகமாக கையெழுத்து போட்டு விட்டு வெளியேற முயன்றாள்.

ஆதியோ மிஸ் நிலா, எதுக்கு இவ்வளவு வேகம்

கொஞ்சம் பொறுமையாக இருங்க, என்று விட்டு சாரி,சாரி இனிமே நீ மிஸ் நிலா கிடையாது,மிசஸ் நிலா ஆதித்யன் புரிகிறதா என்று விட்டு சற்று முன் அவள் கையெழுத்திட்ட டாக்குமெண்டை நீட்டினான்.

இன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் ஆகிடுச்சு,இனி நான் தான் உன் கணவன் புரிகிறதா? இனிமேல் எந்த பிரச்சனையும் கண்டு பயந்து செல்லாதே நிமிர்ந்து நில்!

நிலாவோ ஏன் இப்படி பண்ணிங்க ஆது என்று கூறி அவன் சட்டையைப் பிடித்து கதறினாள்.

ரிலாக்ஸ் நிலா என்று அவளை சமாதானம் படுத்தினான்.இங்க பாரு நிலா எனக்கு எல்லாம் தெரியும், உன்னை எந்த காரணத்திற்காகவும் விட்டு தர முடியாது புரிகிறதா, இப்போ உன் வீட்டுக்கு போய் ஓய்வு எடு. நாளைக்கு காலையில் நமக்கு திருமணம். ஈவினிங் ரெடியா இரு பெங்களூர் கிளம்பனும்,எங்கேயும் போகலாம் என்று நினைக்காதோ உனக்கு ஷேடோ போட்டிருக்கேன்.

இப்போ டிரைவரிடம் சொல்லிவிட்டேன் , காரில் போ,என்றான் ஆதி.

அவளோ ஒன்றும் சொல்லாமல் கண்ணீரை துடைத்து கொண்டு ,வெளிய வந்து தன் பொருட்களை எடுத்து கொண்டு புறப்பட்டாள்.

அவளுக்கு இப்ப தனிமை தேவைப்பட்டது.



வீட்டிற்கு வந்து தன் அறைக்குள் நுழைந்தாள்,அது வரை கட்டுப்படுத்திருந்த அழுகை மீண்டும் பெருகியது.



அந்த பொல்லாத நாட்களின் நினைவுகளை நோக்கி பயணித்தாள்.



அன்று அந்த ஃபோன் கால் வந்ததும், தன் தோழிகளிடம், ஏய் நீங்கள் மெகந்தி வைச்சுக்கோங்கடி, எனக்கு ஆஃபிஸில் அவசர வேலை வந்துடுச்சு, நான் ஒன் ஹவர்ல வந்துடுறேன். வந்து நான் மெகந்தி போட்டுக்கிறேன், என்றாள் நிலா.

ஏய் இப்போ போய் எப்படி தனியா போவ நாங்கள் வரோம்டி, என்றாள் மது.

நீ இப்போ தான் சென்னையிலிருந்து வந்த கொஞ்சம் நேரம் ஓய்வு எடு, நான் வந்துடுறேன்.



நிலா தன் அம்மா அப்பாவிடமும் போராடி ஆஃபிஸ்க்கு கிளம்பினாள்.

டீம் மெம்பர்ஸ் எல்லோரும் சின்சியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.இவளும் போய் அவர்களோடு சேர்ந்து வேலை பார்த்து பிரச்சனையை சால்வ் செய்து விட்டு கிளம்பும்போது மணி ஆறாகிருந்து.

ஸ்கூட்டியில் கிளம்பினாள் நிலா. இரண்டு தெரு தள்ளி இருட்டான பகுதியில் ஒரு ஆட்டோவில் இருந்து ஒரு பெண் ஹெல்ப் பண்ணுங்க என கத்தி கொண்டு இருந்தாள்.



அங்கிருந்த ஒன்றிரண்டு பேரோ என்ன செய்வது என்று பேசிக்கொண்டிருந்தார்கள் தவிர யாரும் உதவவில்லை.

நிலா சற்றும் யோசிக்காமல் வண்டியை வேகமாக ஒட்டிக்கொண்டு சென்று ஆட்டோவின் குறுக்கே நிறுத்தி , அவர்கள் சுதாரிக்கும் முன் கைப்பையிலிருந்து பெப்பர் ஸ்பேரையை எடுத்து ஆட்டோ டிரைவர் மற்றும் அந்த பெண்ணின் கையைப்பிடித்து கொண்டிருந்த மற்றொரு தடியன் இருவரின் முகத்திலும் அடித்தாள். அதில் எரிச்சல் உற்ற ஆட்டோ டிரைவர் நிலாவை பிடித்து தள்ளினான். அருகில் இருந்த கூர்மையான கல் வயிற்றில் குத்தியது.ஒரே ரத்த வெள்ளத்தில் நிலா மயங்கினாள். உள்ளே இருந்த பெண்ணோ, கண் எரிச்சலில் அவன் கையை விட்டதும், கீழே விழுந்த நிலாவிடம் ஓடி வந்தாள். அதற்குள் மக்கள் கூட்டம் வந்ததும் ஆட்டோ டிரைவர் நழுவ பார்த்தான், ஆனால் அவ்விருவரையும் இழுத்து அடித்து போட்டு போலிஸில் ஒப்படைத்தனர்.



அந்த பெண்ணோ ஆம்புலன்ஸ்க்கு அழைத்து நிலாவை ஹாஸ்பிடலில் சேர்ந்தாள்.



நிலாவின் கைப்பை நடந்த கலவரத்தில் எங்கோ சென்று விழுந்து விட்டது.

நிலா மயக்கத்தில் இருந்ததால் அவர்களின் வீட்டிற்கு தகவல் சொல்ல முடியவில்லை.



அந்த பெண்ணோ தன் தந்தைக்கு விவரம் கூறி வரவழைத்தார்.

பெரிய செல்வந்தர் வீட்டுப்பெண்,கார் ரிப்பேர் ஆனதால், ஆட்டோவில் ஏறினாள். அந்த டிரைவரோ வழியில் வேறு நபரை ஏற்றவும் தான் கத்தினாள்.

தன் தந்தை வந்ததும் அவரை நோக்கி சென்று அழுதாள். ஒன்னும் ஆகாது மா, நான் பார்த்துக்கொள்கிறேன் ,நீ வீட்டிற்கு போ என்றார் அவர்.

இல்லை பா நான் இங்கே இருக்கிறேன் என்றாள் அவள்.

அங்கு நிலா வீட்டிலோ " நிலாவை காணவில்லை என்று ஒரே பதட்டத்தில் இருந்தனர். மாப்பிள்ளை விட்டினரும் வந்து விட்டனர். ஆதி அவளின் ஆஃபிஸ்க்கு அழைத்து கேட்டான். ஆறுமணி இருக்கும் போது கிளம்பி விட்டாள் என தகவல் கூறினார்கள்.

நிலாவின் அம்மா நிர்மலா ஒருபக்கம் அழ, ஆதியின் அம்மா ஒரு பக்கம் அழ, உறவினர்கள் எல்லாம் திருமணத்தில் விருப்பமில்லாமல் சென்று விட்டாளோ என சலசலக்க, டென்ஷன் ஆன ஆதி, கொஞ்சம் எல்லோரும் அமைதியாக இருக்கிறீர்களா! நான் போய் நிலாவை தேடப் போறேன்.அவளோடத்தான் வருவேன் நீங்கள் எல்லோரும் போய் படுங்க. ஸ்வேதா அம்மாவையும் அத்தையையும் அழைச்சிட்டு போய் எதாவது சாப்பிட வை.

நானும் செழியனும் போய் பார்க்கிறோம். அப்பா என் அழைத்து மாமாவும், நீங்களும் போய் உங்க நண்பர் டி ஐஜி யா இருக்கிறாரே அவரிடம் தனிப்பட்டு உதவி கேளுங்கள், என்று கூறி விட்டு ஆதி புறப்பட்டான்.



அங்கு ஹாஸ்பிடலிலோ நிலாவை செக் செய்த டாக்டரோ வெளியே நின்றிருந்த இருவரையும் நிலா இருக்கும் ரூமிற்குள் அழைத்து, பேஷண்டோட ரிலேட்டிவ்ஸ் வந்தாச்சா என வினவ" இல்லை டாக்டர் பேஷண்ட் கண் விழித்தாள் தான் தகவல் சொல்ல முடியும்" என்றார்.

ஓ என்றார் டாக்டர்.இன்னும் கொஞ்சம் நேரத்தில் கண் விழித்து விடுவா‌ர்கள் .அவங்க வயிற்றில் ஆழமா அடிபட்டிருக்கு ,ஸ்கேன் பண்ணி பார்த்ததுல அவங்க யூட்ரஸ் வீக்கா இருக்கு, குழந்தை பெற்றுக் கொள்வது ரொம்ப கடினம்.

மாத்திரை எழுதி கொடுக்கிறேன், அதை ரெகுலராக எடுத்துக் கொண்டால், நாளைடைவில் சரியாகிவிடும் என்றார்.



நிலா டாக்டர் உள்ளே நுழையும்போதே கண் விழித்து விட்டாள். அவர் கூறியதில் முன் பாதியை கேட்டு அதிர்ந்தவள், பின் பாதியை கவனிக்க தவறினாள்… அதனால் தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது எனக் கருதி ஆதியின் வாழ்க்கையை விட்டு செல்லும் முடிவை எடுத்து விட்டாள்.



சற்று நேரம் கழித்து கண் முழித்து , அந்த பெண்ணிடம் தன் தந்தைக்கு விவரம் கூற சொல்லி ஃபோன் நம்பர் கொடுத்தாள். அடுத்த அரைமணி நேரத்திலே எல்லோரும் ஹாஸ்பிடல் வந்துவிட்டனர்.



எல்லோரும் வந்து இப்படி திருமணம் தள்ளிப் போய்விட்டதே என வருந்தி, நடந்தை கேள்விப்பட்டு, அவளையும் திட்டினர்.இன்னும் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும் என திட்டினர்.



எல்லோரையும் சமாளிக்க முடியாமல் எனக்கு டயர்டா இருக்கு தூங்கனும் என நிலா கூற, அனைவரும் வெளியேறினர்.ஆதியோ வந்ததிலிருந்து ஒரு வார்த்தையும் பேசாமல் அவள் கையைப் பிடித்துக் கொண்டு கட்டில்

அருகில் அமர்ந்து இருந்தான்.அவளுக்கும் அந்த ஆறுதல் தேவையாகத்தான் இருந்தது, இருப்பினும் இதை வளரவிடக் கூடாது என்று எண்ணி, அவனையும் வெளியே போகச் சொன்னாள். நான் அந்தப் பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டும் எனக் கூற, ஆதி வெளியேறினார்.

அந்தப் பெண்ணிடம் இங்கு பார் பெண்ணே நிமிர்ந்து நில்!.

நாம் என்னைக்கும் தைரியமாக இருக்கனும் , நம் கைகளில் உள்ள பொருட்களே நமக்கு ஆயுதம்.

கைப்பையை வீசலாம், காலால் உதைக்கலாம்,நம் தைரியம் தான் முக்கியம், நிமிர்ந்து நில் ! துணிந்து செல். எனிவே என்னை காப்பாற்றியதற்கு நன்றி,எனக் கூறி வழி அனுப்பி வைத்தாள்.அந்த பெண்ணோ உங்கள் சந்திச்சது ரொம்ப மகிழ்ச்சி, நானும் உங்களைப் போல இருக்க முயற்சி செய்கிறேன், என்று கூறி தனது தந்தையுடன் கிளம்பி விட்டாள்.



டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தவுடன், எல்லோரும் திருமணப் பேச்சை ஆரம்பித்தனர். நிலாவோ எனக்கு இப்போ திருமணம் செய்வதில் விருப்பமில்லை என்று கூறினாள். ஆதியும், மற்றவர்களும் எவ்வளவோ எடுத்து கூறினாலும் மறுத்துவிட்டாள்.



சித்தார்தோ சிறிது நாள் போகட்டும் அப்புறம் பேசலாம் என தன் மனைவியையும், மகனையும்

அழைத்து கொண்டு புறப்பட்டு போய் விட்டார்.



அவர்கள் புறப்பட்டதும் தன் மகளின் அருகில் வந்த கிருஷ்ணன்,ஏம்மா என்னடா பிரச்சினை அப்பாகிட்ட சொல்லுமா என வினவ, நிலாவோ கொஞ்சம் நாள் நான் தனியா இருக்க விரும்புகிறேன். சென்னைக்கு போறேன், ஆனால் யாரிடமும் நான் எங்க இருக்கிறேன் என்று சொல்லக்கூடாது. அப்புறம் ஆதியோட திருமணத்தை ட்ராப் பண்ணிடுங்க, நாளைக்கு கிளம்புறேன் ,நானே உங்கள காண்டாக்ட் பன்னுறேன். இப்ப நான் ரெஸ்ட் எடுக்க போறேன்

என்று சென்று விட்டாள்.



பிறகு அவர்கள் என்ன சொல்லியும் நிலா சென்னைக்கு செல்வதை தடுக்க முடியவில்லை.



ஆதி எவ்வளவோ கேட்டும்,நிலா வீட்டினர் நிலாவை பற்றி எந்தவொரு தகவலும் கூறவில்லை ‌, ஆதியும் கோபம் கொண்டு நிலா வீட்டிற்கு வருவதில்லை ‌.



இப்படியே சென்று கொண்டிருந்த ஆதியின் வாழ்க்கையில் திடிர் திருப்பமாக அந்தப் பெண் நுழைந்தாள்.



நிலா காப்பாற்றிய பெண் ஒரு விழாவில் ஆதியை பார்த்து ஓடி வந்து தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டாள். எப்படி சார் இருக்கிங்க, மேடம் நல்லா இருக்காங்களா, மாத்திரை எல்லாம் தொடர்ந்து எடுத்து கொண்டிருக்கிறார்களா, உங்க மேரேஜ் முடிச்சிருச்சா என படபடவென கேள்விகளால் துளைத்து எடுத்தாள். ஆதியோ திருமணம் வேண்டாம் என்று சென்று விட்டாள், என

அவளோ ஏன் யூட்ரஸ்ல சின்ன பிரச்சினை என்று தானே சொன்னாங்க,அதற்காக வா திருமணம் வேண்டாம் என்றார்கள் என,ஆதியோ எல்லா விவரங்களையும் அவளிடம் கேட்டு கொண்டு நன்றி கூறி விடைப்பெற்றான்.



வீட்டிற்கு வந்தவன், நிலா எங்கு இருக்கிறாள்,என்ன செய்கிறாள், என்ற தகவல்களை அறிந்து, உடனே திட்டம் திட்டி, ,அவளை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்வதற்கு இரு வீட்டாரிடமும் அனுமதியும் வாங்கி,நடத்தியும் முடித்துவிட்டார். இதோ நாளை கோவிலில் திருமணம் சந்தோஷத்தில் ஆதி,எப்போ மாலை வரும் தன்னவளை அழைத்து செல்லாம் என காத்திருந்தான்.



நிலாவோ பழைய நினைவுகளில் இருந்து மீண்டாள். நிலா,ஆதியின் பிடிவாத்திற்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் எல்லாவற்றையும் அடுக்கி வைத்து தயாராகினாள். மதுவிடம், ஃபோனில் எல்லாவற்றையும் கூறி, நான் புறப்படுகிறேன், மது "ஆதி ஐந்து மணிக்கு வந்துவிடுவான்" என்றாள்.

மதுவோ நான் இரவு காரில் கிளம்பி வருகிறேன், நம்ம பிரண்ட்ஸோட, நீ கவலை படாமல் கிளம்பு என்றாள்.

ஆதி சரியாக ஐந்து மணிக்கு வந்துவிட்டான்.

நிலாவை வேகமாக கிளம்பச் செய்து விமானம் மூலம் பெங்களூர் வந்தடைந்தனர்,

நேராக வீட்டிற்கு செல்லாமல், இவள் அட்மிட் ஆன ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றான்.

ஹாஸ்பிடல் வந்ததும் கீழே இறங்கு நிலா என்றான்.

நிலாவோ எதுக்கு இங்க வந்திருக்கோம் என வினவ, ஆதியோ டாக்டர் பாத்துட்டு வரலாம் வா என்றான்.

இருவரும் ஏற்கனவே நிலாவை பார்த்த டாக்டரிடம் சென்று பேசினார்கள்.

நிலாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை புரிய வைத்தான் ஆதி.

காரில் ஏறியவுடன் ஆதி நிலாவிடம் இப்ப புரிகிறதா உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று, குழந்தை பிறக்க சற்று தாமதமாகலாம். அடுத்தவர்கள் என்ன கூறுவார்கள் என்று எண்ணாமல் நான் நமக்காக தோன்றும்போது குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றாலும் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம். எனக்கு நீ தான் முக்கியம். என் அன்பு உன்னை பலவீனப்படுத்துவதை, நான் அனுமதிக்க மாட்டேன். என் நிலாப்பெண் எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். நிமிர்ந்து நில்! நிலாப் பெண்ணே! என்றான்.

ஆது என்று அவன் தோளில் சாய்ந்து கதறி அழுதாள். பிறகு சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தான். எல்லாருடைய பாச மழையில் நனைந்தாள் நிலா.

மறுநாள் அழகிய விடியலில் கோவிலில் நிலாவிற்கும்,ஆதிக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அவர்கள் மகிழ்ச்சியாக தங்கள் திருமண வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள் நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.



பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நிமிர்ந்து நிற்க வேண்டும் தோழிகளே!தைரியம் ,துணிச்சல், நேர்மை ,இதுவே நம்ம ஆபரணமாக இருக்கவேண்டும் தோழிகளே! நன்றி!​
 

Marish98

New member
Messages
12
Reaction score
6
Points
3
நிமிர்ந்து நில் அருமை சகோ
 
Top Bottom