Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பசியோடு ஒர் இரவு

Renugadevi Devi

New member
Messages
1
Reaction score
0
Points
1
பசியோடு ஓர் இரவு

இரவு பதினொன்று முப்பது மணி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு தெருவிளக்குகளின் வெளிச்சத்தோடு உறங்கும் பிளாட்பார வாசிகள்

வயிற்று பசி ஒரு பக்கம் இருந்தாலும்
இருட்டிக் கொண்டு வரும் கண்களோடு கையில் இருந்த குழந்தையை நழுவவிடாமல் பிடித்துக்கொண்டு
கால்போன போக்கில் நடந்தாள் அவள்

வீறிட்டு அழும் குழந்தையுடன்
அதற்கு மேல் நடக்க முடியாமல்
ஒரு கடைவாசலில் அமர்ந்தாள்

அவளின் மாராப்பை விலக்கி
வறண்ட மார்பில் பாலுக்காக முட்டி
மோதியது அந்த பச்சிளம் குழந்தை

கத்தி கத்தி குழந்தைக்கு விக்கல் வந்துவிட்டது , எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அவள் பசியை பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் அந்த பச்சிளம் குழந்தை
தாங்குமா,,,,,,,

தன் முன் வெளிச்சத்தோடு வந்த நின்ற பைக்கை பார்த்தாள்
அவள் முன் வந்து நின்றான் ஒருவன் அவனும் பசியோடுதான் அவளை நாடி
வந்து நின்றான்
காமப்பசியில்
குழந்தையின் விக்கலை
பார்த்தாள்
குழந்தை மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தது

அவனது பசியை தீர்த்தாள்
வீக்கத்தோடும்,
நகக்கீறல்கலோடும்
மார்பு காம்புகள், கன்னிப்போய் இரத்தத் திட்டுகள்லோடு மாறிப்போயிருந்தது அவளது வறண்ட மார்பு

அனைத்து வலியையும் பொறுத்துக்கொண்டு
அவனது காமப் பசியை தீர்த்தாள் குழந்தையின் நிலையை எண்ணி

அவன் நீட்டிய ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை பார்த்தவள்
கண்களில் நீரோடு
என் பிள்ளைக்கு பால் வாங்கிக் கொடுக்குறியா

அவள் அப்படிக் கேட்டது
அவனை என்ன செய்ததோ
ரூபாயை அவளிடம் அவன்
முன் போட்டு விட்டு வேகமாக பைக்கை எடுத்துக்கொண்டு எங்கயோ
பால் வாங்கிக் கொண்டு வந்தான்

அந்தப் பாலை வேகமாக தன் பிள்ளைக்கு ஊட்டினாள் அந்த தாய்
குழந்தையின் வாயில் இருந்து பால் ஒருபுறம் வெளியே வந்தது
குழந்தையின் உயிர் பிரிந்து உயிர்ப்பு
20 நிமிடம் ஆகி இருந்தது

--------- ரேணுகா தேவி,,,,
 

New Threads

Top Bottom