Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL பாதம் பார்த்து வேதம் சொல்ல வா! - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited by a moderator:

சாய் லஷ்மி

New member
Vannangal Writer
Messages
13
Reaction score
15
Points
3
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

நன்றி சிஸ்டர் 🌹🌹🌹
 

சாய் லஷ்மி

New member
Vannangal Writer
Messages
13
Reaction score
15
Points
3
ஹாய் ப்ரெண்ட்ஸ்😘😘😘!
வணக்கம், எல்லோரும் எப்படியிருக்கிங்க? உங்களின் நலம், நன்று என்று நம்பிக்கை கொள்கிறேன்❤️.

சகாப்தம் தளத்தில் இப்படியோர் அழகான வண்ணங்கள் நிறைந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் நித்யா சிஸ்டர். மேலும் கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்💐💐💐💐

எமது வண்ணம்- பச்சை
கதை கரு - கிராம மக்களின் வாழ்வியல், எளிய மக்களின் வாழ்வில் பற்றியது.

என்னுடைய கதையின் கதைக்கரு- கிராம மக்களின் வாழ்வியல் பற்றியது. துருணன் என்கிற கதாபாத்திரத்தின் மூலம், கிராம மக்களையும், அவர் தம் வாழ்க்கையையும், அவர்களின் உணவு, பழக்க வழக்கங்கள், அவர்களின் ஆரோக்கியம் பற்றியும் தான் எடுத்துரைக்க போகிறேன். இதில் குறிப்பிடப்படும் மருத்துவம் சம்பந்தப்பட்ட அத்தனையும் நம் வாழ்வில் தைரியமாக உபயோகிக்கலாம். அதனால் எவ்வித பக்கவிளையும் வராது. அது என்னவென்று போக... போக கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். வாங்க கதைக்குள் போகலாம்.

பாதம் பார்த்து வேதம் சொல்லவா…?
சாய்லஷ்மி

வேதம் – 1
அதிகாலை நாலரை மணியளவில், சேவல் கூவும் சத்தம், பசுக்கள் கூப்பிடும் சத்தம், ஆடு கத்தும் சத்தம், காகம் கரையும் சத்தம், எங்கிருந்தோ மயில் அகவும் சத்தம் என்று, ஒவ்வொரு வகையான ஒலிகளையும், அவற்றின் உயிரினங்களையும் வியந்து பார்த்தபடியும், ரசித்துக் கேட்ட படியும், தன் கழுத்தில் தொங்க விட்டிருந்த ஒளிப்படக் கருவியின் மூலம், தன்னை ஈர்த்தவற்றை ஆசையாகவும், விதவிதமாகவும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள், பெண்களுக்கான வெள்ளை நிற மேல் சட்டையும், நீலக் கால்சட்டையும் அணிந்திருந்த, பார்ப்பதற்கு முப்பது வயதுடைய அயல்நாட்டுப் பெண் ஒருத்தி.

அப்போது, அவளைக் கடந்து சென்று கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து, "ஹலோ...! ஹலோ...! நில்லுங்கள், நில்லுங்கள்!" எனக் கூக்குரலிட்டாள்.
அவர் நின்றார்.

அருகில் சென்று, "வணக்கம். என் பெயர் லாரா. இந்தியாவில் உள்ள கிராமங்களைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறேன். எனக்கு, உங்க கிராமத்தைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா? ப்ளீஸ்…" என்று, மனம் விரும்பிக் கேட்பது போன்று, கைகளைக் கூப்பி வேண்டினாள்.

அவளிடம் தென்பட்ட எதுவோ ஒன்று அவருக்கு நம்பிக்கை கொடுக்கவும், சில நொடி யோசித்து விட்டு, "வாங்கோ, பேசிண்டே போகலாம். ஏன்னா, எனக்கு நாழி ஆகிறது. கோயில்ல பூஜை பண்ணனும்..." எனக் கூறியபடி நடக்க ஆரம்பித்தார், அந்த ஒருவரான அவ்வூர் கோயில் குருக்கள்.

இருவரும் கோயிலை நோக்கி, நடக்க ஆரம்பித்தார்கள்.

"இந்தியா ரொம்ப அருமையா இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது என்று மக்கள் கூறினார்கள். இந்த மலர்ச்சோலை கிராமத்தில் என்ன சிறப்பு இருக்கிறது?" என்று ஆர்வமாகக் கேட்டாள், லாரா.

அவளின் பேச்சில், இதழோரமாய் புன்னகைத்துக் கொண்டவர், "கிராமங்கன்னாலே ஒரு தனிச் சிறப்புண்டு. அதுவும், இயற்கையின் அருட்பார்வை கிடைக்கப் பெற்ற கிராமங்கள்ல ஒன்றான, எங்கள் மலர்ச்சோலை கிராமம், அழகிய பசுமையான கிராமம் மட்டுமில்ல, கடவுளின் அருட்பார்வை கிடைக்கப் பெற்ற ஒரு புண்ணிய நகரமாகும்.

இங்க பிரசித்தி பெற்ற, கைலாசநாத சுவாமி கோயில் உண்டு. தட்சிணாயண, உத்ராயணப் புண்ணிய நேரமான... அதிகாலை நாலரை மணியளவுல இருந்து, ஆறு மணி வரை... கோயிலிலுள்ள மூலவர் மீது, சூரியன் ஒளிபடும். அச்சமயம், கோயில் ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும், எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும் படியான கட்டட அமைப்புடன், இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கும்.

கோயில் கட்டட அமைப்பிலே, இது ஒரு விஷேசமான அம்சமாகும். இந்தப் புண்ணிய நேரத்துல, கிழக்கு பார்த்து நின்னுட்டு, அந்தப் புனிதமான குளத்துல நீராடிண்டு, சூரியபகவான வேண்டிண்டா... உடல் நலமும், உள்ள நலமும் பெறலாம் என்பது, காலம் காலமாக இருந்து வரும் ஐதீகம்." என்றார்.

இருவரும் பேசிய படி கோயில் குளத்தின் அருகே வந்தவுடன், சூரியனின் நிழல் குளத்தில் விழும் அதிசயக் காட்சியை, லாராவிற்குக் காண்பித்தார்.

உடனே, கோயில் குளத்தை புகைப்படம் எடுத்த படி, "இப்போ இந்த நிழலை பூஜை செய்வதற்கு ஆட்கள் வருவார்களா?" என ஆர்வத்துடன் வினாவினாள்.

குருக்களோ, குளத்தில் இறங்கி சூரிய பகவானை தரிசித்துவிட்டு, "யார் யார் வருவான்னு, நேக்கு சரியாத் தெரியாது, ஆனா, ஒரே ஒரு ஆளு வருவான்." என்றார்.

"அப்படியா! அவர் யார்?"

"நவ நாகரீகமான இந்தக் காலத்திலும், இந்த வழிப்பாட்டு முறையை, இந்த ஊர்லயே நேரம் தவறாது, நாளும் தவறாது, முறையா கடைப்பிடிக்கும் ஒரே நபர்னா, அது துருணன் தான். ஒரு சிலர் அவனை சித்தர்னு செல்லுவா, வேறு சிலர், அவனை கிறுக்கன்னு சொல்லுவா, மற்றும் பலர் அவனை வைத்தியர்னு அழைப்பா!” என்று குருக்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, சிறிது தூரத்திலே, குளத்தை நோக்கி துருணன் வந்து கொண்டிருந்தான்.

அவனைக் கை காட்டி, “அவன் தான் துருணன். எனக்கு நாழி ஆகிறது. நான் வர்றேம்மா..." என்று நகர்ந்தார் குருக்கள்.

அவரிடம் நன்றி தெரிவித்துவிட்டு, துருணன் புறம் திரும்பியவள், 'இவர் என்ன செய்யப் போகிறார் என்று மறைந்திருந்து பார்க்கலாம்.' என்று
ஆர்வத்துடன், தனது ஒளிப்படகருவி மூலம், அவனைக் காணொளி எடுப்பதற்காகவும், பக்கத்தில் இருந்த மரத்தின் அருகில் போய் மறைந்து நின்று கொண்டாள், லாரா.

பார்ப்பதற்கு மல்யுத்த வீரனைப் போன்று திடகாத்திரமான உடல் அமைப்புடன், துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு குளத்தின் அருகே வந்தவன், படித்துரையின் மீது துண்டை வைத்துவிட்டு, குளத்திற்குள் இறங்கினான் துருணன்.

உடல் முழுவதும் நனையுமாறு நான்கைந்து முறை முங்கி எழுந்துவிட்டு, பின்னர் தொண்டையைச் செருமி சத்தம் போட்டு, "காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி,
எங்கும் பூசனை உலகோர் போற்றப்
புசிப்பொடு சுகத்தை நல்கும்,
வாசி ஏழுடைய தேர்மேல்
மகாகிரி வலமாய் வந்த தேசிகா,
எனை ரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி!" என்று, எல்லா வளங்களையும் அருளும் சக்தி வாய்ந்த சூரிய பகவானுக்கு உரிய மந்திரத்தை, கதிரவனின் கதிரொளியை நோக்கி, மனதார பத்து முறை மொழிந்துவிட்டு, கண்களை மூடிக் கொண்டான்.

'அய்யனே! அருள் தரும் கதிரவனே! இந்த உலகம் உள்ள வரை, உன் அருள் பார்வை, உலக மக்களை காத்திட வேணும்யா' என்று மனதிற்குள் ஆழ்ந்த பிராத்தனை புரியத் தொடங்கினான்.

அவ்வேளையில், "எப்பா என்னால வலி தாங்க முடியல, அம்மாஅஅஅ... வலிக்கிது ஆ...ஆங்" என்று, தன்னைத் தோளில் தூக்கிச் சுமந்த படி, குளத்தின் அருகே வேகமாக நடந்து, அல்ல… ஓடி வந்து கொண்டிருக்கும் தந்தையிடம் அழுது புலம்பினான் சிறுவன் ஒருவன்.
அச்சிறுவனின் அலறல் சத்தம், குளத்திற்குள் கண்களை மூடி நிற்கும் துருணனின் காதிற்கு எட்டவில்லை போலும், மனம் ஒன்றி தியானத்திலே இருந்தான்.

அதனை லாராவும், காணொளியாக எடுத்துக் கொண்டிருந்தாள்.

பதட்டத்துடன் மகனை இறக்கிவிட்டவர், 'சாமி கும்பிட்டுட்டு இருக்கிறவன கூப்பிட்டா, என்ன சொல்வானோ?' என்ற யோசனையுடன், மகனையும் துருணனையும் மாறி... மாறி பார்த்த படி,
"வைத்தியேன், சாமி கும்பிட்டுட்டு வரட்டும், அது வரை கொஞ்சம் பொறுடா கண்ணு!" என்று, மகனின் வேதனையை, தான் வாங்கிக் கொள்ள முடியாது, அவனைச் சமாதானப் படுத்தவும் தெரியாது, துருணனின் வருகைக்காகக் காத்திருக்க முயன்றார்.

சுமார் ஒரு இருபது நிமிடம் கழித்து, தியானத்தை முடித்துவிட்டு குளத்துப் படிக்கு வருபவனிடம், "எப்பா, துருவா! எம்புள்ளைய மாடு முட்டிருச்சு, கீழ விழுந்துட்டான். கொஞ்சம் என்னென்னு பாரு, முதுகு வலிக்குன்னு ரொம்ப அழுறான்." என்று விபரத்தைக் கூறினார்.

"பழகுன மாடா இல்ல புதுசாண்ணே?" என்று சிறுவனின் தந்தையிடம் கேட்டபடி, சிறுவனை அருகில் அழைத்து, அவனது முதுகை நீவி விட ஆரம்பித்தான், துருணன்.

சிறுவனோ, துருணன் கை பட்டதும் வலியில் அலறினான்.

மகனின் கதறலை பதட்டத்துடன் பார்த்த படி, "புதுசுப்பா அதேன் அது வேலைய காட்டிருச்சி" என்று சிறுவனின் தந்தை ஆதங்கப்படவும்,

வலியில் கத்திக் கொண்டிருக்கும் சிறுவனுக்கு சமாதானம் கூறிய படி முதுகை நீவி முடிந்தவுடன், "ஏண்ணே மாடு மேல போய் பழியப் போடுறீங்க? உங்க மகனுக்கு ஒண்ணுன்னதும், நீங்க எப்படி துடிக்கறீங்க? அது போலப் பழகுன இடத்துல இருந்து பிரிஞ்சி வந்த மாட்டுக்கும் எவ்வளவு வருத்தம் இருக்கும்? அன்பு எல்லாத்துக்கும் ஒண்ணுதாண்ணே! மாட்டுக்கு ஐந்தறிவுங்கறதால, அதால சிலத புரிஞ்சிக்க முடியாது. நமக்கு அப்படி இல்லண்ணே.

உங்க பையன் மேல வைக்கற பாசத்துல, கொஞ்சோண்டு அது மேலையும் வைங்க. உங்கள ஒண்ணும் பண்ணாது. நீங்க கொடுக்கறத திண்ணுட்டு அன்போட, உங்க காலச் சுத்திட்டு கிடக்கும்ணே! முதல்ல மாட்ட சரிப்படுத்துங்க, அது கோபத்துல இருக்கு போல" எனச் சிரித்த முகமாகக் கூறினான், துருணன்.

அவனின் அறிவுரையைக் கேட்பவர் போல பாவணை செய்தவர், "சரிப்பா.... பையனுக்கு அடி ஏதும் பலமா பட்டுருச்சா? நரம்பு ஏதும் சுளுக்கிருக்கான்னு நல்லா பாருப்பா!" என்று, அவரின் கவனம் முழுவதும் மகனின் மீதே இருந்தது.

"பையனுக்குப் பெரிசா ஒண்ணும் அடிபடல, சின்னக் காயந்தாங்க. மஞ்சள எண்ணெயில குழம்பி, காயம் ஆறுற வரை, காயம் பட்ட இடத்துல தடவுங்க. நாளைக்கு ஒரு நாள் நீவி விட்டா, வலி சுத்தமாப் போயிடும்” என்று, சிறுவனின் புறம் திரும்பியவன்,

“தலைகாணி வச்சு, ஒரு வாரம் படுக்கக் கூடாது, என்னடா? உனக்கு ஒண்ணுமில்ல. போய் நல்லா விளையாடு." என்று, சிறுவனின் பயந்த முகத்தைப் பார்த்து ஆறுதல் கூறிவிட்டு, துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டான், துருணன்.
"சரிப்பா, ரொம்ப நன்றி" என்று, மறுபடியும் மகனை தோளில் போட்டுக் கொண்டு நகர்ந்தார், அவர்.

இது வரை நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த லாரா, அவனிடம் பேசலாம் என்று, அவனது நடையைத் தடை செய்வது போல, வேகமாக அருகில் வந்து,

“வணக்கம் சார், நான் லாரா. சீனாவில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கு இந்தியாவைச் சுற்றிப் பார்க்க ரொம்ப ஆசை. அதனால் இங்கு வந்தேன். இன்று, உங்களைப் பற்றி, கொஞ்சம் தெரிந்து கொண்டேன். இன்னும், நிறைய உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைபடுகிறேன்." என்று பல் வரிசை தெரிய சந்தோஷமாகக் கூறினாள்.
அவளது முகம் பார்க்காமல், அவள் கூறியதை காதில் வாங்கிக் கொண்டவன், அவள் புறம் திரும்பாது, நேர்கொண்ட பார்வையுடன்,

"எங்க இந்தியாவைப் பத்தி, தெரிந்து கொள்ள விருப்பம் காட்டும் உங்க ஆர்வத்த மதிக்கறேன். என்னைப் பத்தி தெரிந்து கொள்ள, உங்களுக்கு அவசியமில்லன்னு நினைக்கறேன்." என்று பட்டும் படாமல் கூறிவிட்டு, வீர நடை போட்டான், துருணன்.

அவனின் தீர்க்கமான பேச்சும், வீர நடையும் லாராவை ஈர்த்தது. 'இவர் மிகவும் ரசனைக்குரியவராக இருக்கிறார்' என்று தனக்குள் எண்ணிய படி, மேலும் கிராமத்திற்குள் நடக்க ஆரம்பித்தாள்.
வீடு.. வீடாகச் சென்று கிராம வாழ்வியல் பற்றியும், அப்படியே துருணனைப் பற்றியும், ஊர் மக்களிடம் ஆர்வமாக விசாரித்தாள்.

"அந்தத் தம்பியா? ரொம்ப நல்ல தம்பி. என்ன? அதுக்குக் கோபம் மட்டும் மூக்குக்கு மேல வரும். மத்த படி, எங்களுக்கு உடம்புக்கு ஏதாவது பிரச்சனைனா நாங்க, அந்தத் தம்பி கிட்ட தான் வைத்தியம் பார்க்கப் போவோம்." என்றனர்.
மற்றொருவன், "அவனா? அவன் ஒரு கிறுக்கே. ஆங்... உங்களுக்கு புரியம் படி சொல்லணும்னா சிஸ்டர், ஹீ... வாஸ் அ... ஆங் ஒரு சைகோ" எனச் சொல்லி இளக்காரமாய் சிரித்தான்.

அவ்வூரில் அவனைப் பிடிக்காதவர்களில் ஒருவனாய் இருப்பான் போலும் என்ற எண்ணத்தில், இதழோர புன்னகையுடன்,

"ஏன் சார், அவரைப் பற்றி இப்படிச் சொல்றீங்க?" என்று அழகாகத் தமிழில் சரளமாகப் பேசினாள், லாரா.

"சிஸ்டர், அவனை விடுங்க. நீங்க நல்லா தமிழ் பேசறீங்களே? அது எப்படி?" என்று யோசனை வந்தவன் போலக் கேட்கவும்,

"நான், தமிழ் நன்கு கற்றுக் கொண்டதற்குப் அப்புறம் தான் இந்தியாவிற்கு வந்தேன். இந்த மொழி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி வணக்கம்." என்று, அவனுக்கொரு கும்பிடு போட்டு, சிரிப்புடன் நகர்ந்தாள்.

மேலும், ஊருக்குள் நடை போட்டவள் பள்ளிக் கூடத்தைக் கண்டதும், அங்கு சென்று பார்வையிட்டாள்.

அவளையும், அவளது உடையையும் அவள் புகைப்படம் எடுப்பதையும் பார்த்தபடி இருந்த ஆசிரியர்களில் ஒருவர், லாராவை அருகே அழைத்து, விசாரணை பொதிந்த பார்வை ஒன்றை, அவள் மீது செலுத்தினார்.

"யாரும்மா நீ, எதுக்கு எங்க பள்ளிக்கூடத்த போட்டோ எடுக்கற?" என்று கேட்டார்.
அவரிடம் தன்னைப் பற்றித் தெரிவித்துவிட்டு, தனது அதிகாரப் பூர்வமான பாஸ்போர்ட், இன்னும் பிற ஆவணங்களை எடுத்துக் காண்பித்தாள், லாரா.

அவற்றைப் பார்த்துவிட்டு, "ஓ... வெளிநாட்டு டூரிஸ்ட்டா?" என்று இளகுவாகக் கேட்டார் ஆசிரியர்.
கழுத்து வரை ஒண்ணு போல வெட்டபட்டிருந்த மூடிக்கற்றைகள் அசைய, ஆமா என்பது போல வேகமாகத் தலையாட்டினாள்.

"ஆஹாங்" என்று அவரும் தலையை ஆட்டிய வண்ணம், அவளை மேலும் கீழும் பார்வையால் அளவெடுத்தார்.

"சார், உங்க கிராமத்தில் வசிக்கும் துருணனைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்ல முடியுமா?" என்று லாரா கேட்கவும்,

"அந்தப் பையன் என்ன இந்த ஊரு கலெக்டரா? அவனைப்பத்தி பக்கம் பக்கமா பெருமையாச் சொல்ல? இங்கதேன் சில நேரம், சித்தர் போல, வெட்கமில்லாம கோமனத்தக் கட்டிக்கிட்டு சுத்திட்டு இருப்பான். அவனையும் நம்பி, காய்ச்ச, தலவலின்னா உடனே அவனைத் தேடி ஊர் மக்க ஓடுதுக, என்னத்தச் சொல்ல? கவர்மெண்ட் செலவு பண்ணி ஆஸ்பத்திரி கட்டுனா, அங்க ஆள் இல்லாம, இவனால ‘ஈ’ ஆடாது." என்று சலித்துக் கொண்டார்.

அவரின் பேச்சைக் கேட்டு தலையாட்டிக் கொண்டவள், "நன்றி, உங்களைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைக்கிறேன்." எனக் கூறிவிட்டு நகர்ந்தாள், லாரா.

எதிரே ஒரு பெண் ஆசிரியை நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளை அணுகி, பள்ளிக் கூடத்தைப் பற்றியும், அக்கிராமத்தைப் பற்றியும் கேட்டாள்.

"எங்க ஊர்ல விவசாயம் சிறப்பா நடக்கும். ஊர் பள்ளிக் கூடத்துல படிப்பு மட்டும் நாங்க சொல்லிக் கொடுக்கல. விவசாயம், யோகா, சிலம்பம், தியானம், தமிழ் மருத்துவம் இதெல்லாம் சொல்லிக் கொடுக்கறோம்." எனப் பெருமையாகக் கூறினாள், ஆசிரியை.

கண் விரியக் கேட்டுவிட்டு, "நான் இந்த மாதிரி மற்ற கிராமங்களில் கேள்வி படவில்லையே? இங்க தான் முதன் முதலாகக் கேள்விப் படுகிறேன்." என்று லாரா சன்னமாகச் சிரிக்கவும்,

ஆசிரியையும் சிரித்த படி, "ஆரம்பத்துல இந்த மாதிரி, எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி எதுவும் பிள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்கல. இப்போ நாலு வருஷமா துருணன் என்கிறவர் மூலமாத்தான், இந்த தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தமிழ் மருத்துவம் பற்றி சொல்லிக் கொடுத்துட்டு வர்றோம்." என்றவுடன்,

துருணன் என்ற அவனின் பெயரைக் கேட்டதும் பரவசம் ஆகினாள், லாரா.
"அந்தத் துருணனைப் பற்றி மேலும் கொஞ்சம் சொல்ல முடியுமா?"

நடந்த படி, "துருணன், இந்த ஊரு ஆளு. ரொம்ப நல்ல பையன். டிகிரி படிச்சிட்டு, கம்பெனி வேலைக்கு போற ஆம்பளப் பசங்க இருக்கற இந்தக் காலத்துல, விவசாயம்... சிலம்பம், தியானம், நீச்சல் பயிற்சி, தமிழ் மருத்துவம்னு தான் கற்றுக்கிட்டதை, மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கறான். கற்றுக்கொடுக்கறதுக்காக யாருகிட்டையும் அவன் காசு கூட வாங்கறது இல்ல. அதனால எங்க மாணவ, மாணவிகளை, அவனை நம்பி பயிற்சிக்கு அனுப்புவோம்." என்று சிரித்த முகமாக பதிலளித்தாள், ஆசிரியை.

துருணனைப் பற்றிய விஷயங்களை கேள்விப் பட்டதில், இந்த கிராமத்தில் ஓர் குறிப்பிடத்தக்க நல்ல மனிதர் என்று எண்ணியவாறு, ஆசிரியையிடம் விடைபெற்றுக் கிளம்பினாள் லாரா.

Word- 1384

கதையை ஆரம்பத்திலிருந்து படித்து தங்களது நிறை, குறைகளை கமெண்ட்டில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 
Last edited:

சாய் லஷ்மி

New member
Vannangal Writer
Messages
13
Reaction score
15
Points
3
வேதம் - 2

பங்குனி மாதம், பகல் பண்ணிரெண்டு மணி. ஆள் அரவமற்ற தோப்பில், கனத்த இதயத்துடன் கால் போன திசையில் நடக்க ஆரம்பித்தாள், மாரிகா.
அவள் மனதிற்குள், மிகப்பெரிய போரே நடந்து கொண்டிருந்தது.


"சாரி சார்....! உங்க டாட்டர் ப்ராப்ளத்த, குணப்படுத்தக் கூடிய ஸ்டேஜை தாண்டிட்டாங்க" என்று மருத்து மணையில் சொல்லியதையே, திரும்ப... திரும்ப மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தாள்.


'ஏன், எனக்கு மட்டும் இந்த நிலமை? அப்படி, நான் என்ன பாவம் பண்ணினேன்? எல்லோரையும் மாதிரி நானும் வாழணும்னு ஆசைப்பட்டேன். அது தப்பா? எனக்கு இருக்கற பிரச்சனையை, யாராலும் சரி பண்ண முடியாதா?


என்னால மம்மிக்கும், டாடிக்கும் ரொம்பக் கஷ்டம்' என்று, ஆயிரம் கேள்விகளை... தனக்குள் கேட்ட படி... மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த... வளைந்து, நெளிந்து செல்லும் பாதையில் எங்கே போகிறோம்? என்ற யோசனை அற்றவளாக, வெகு தூரம் நடை போட்டாள்.


மனம் சொல்வதை உடலும், உடலின் மொழியை அல்லது வலியை மனதும் உணராமல், எவ்வளவு தூரம் அந்தப் பாதை போகிறதோ? அவ்வளவு தூரம் போகத் துடித்தது, அவளது கால்கள்.


நடந்து செல்லும் வழியில் ஒரு கிணற்றைக் கண்டதும், உடனே அவளுடைய மனம் ஏனோ அதில் நின்றது. நடப்பதற்குக் கால்கள் நகர மறுத்தது. எண்ணம் தாருமாறாகச் சிந்திக்கத் தொடங்கியது.


'எனக்கிருக்கற எந்தப் பிரச்சனையும் இந்தப் பிறவில தீரப் போறது கிடையாது. அப்போ, நான் ஏன் உயிர் வாழணும்?' என்ற எண்ணம் எழவும், மனம் வெதும்பிய படி கண்கள் கலங்க... கிணற்றையே பக்கவாட்டுத் தோற்றத்தில் வெறித்துப் பார்த்தாள்.


சில நொடியில், 'செத்திட வேண்டியது தான். போதும் இனிமே உடம்பாலும், மனசாலும் தாங்கிக் கொள்ளத் தெம்பு இல்ல, தைரியமும் இல்ல செத்திடலாம். இது தான் கடைசி வழி.


மம்மி, டாடி... ஐ அம் சாரி.... உங்களுக்கு என்னால கஷ்டம் தான். நான் செத்துட்டா, நீங்களாவது நிம்மதியா இருக்கலாம். என்னை நினைச்சு, நீங்க கஷ்டப்பட்டுட்டே இருப்பீங்க. நான் போறேன் மம்மி.’ என அழுத படி, ‘நான் சாகணும்... சாகணும்' என, மந்திரத்தை உச்சரிப்பது போல உதடுகள் அசையாமல் மனதிற்குள் உச்சரித்த படி, வேகமாகக் கிணற்றின் அருகே சென்று... கண்களை மூடி, வேறு எதையும் யோசிக்காது தொப்பென்று கிணற்றுக்குள் விழுந்தாள், மாரிகா.


கிணற்றினுள் பச்சைப் பசேலெனப் பாசம் படர்ந்து தவளை, புழுக்கள், மேலும் ஓரிரண்டு தண்ணீர் பாம்புகள் தண்ணீரில் நெளிந்தும், மிதந்தும், நகர்ந்தும் கொண்டிருந்தன.


அதனைப் பார்த்த நொடி பயத்துடன், 'கடவுளே! என்னை நீ வாழத் தான் வைக்கல, சீக்கிரம் சாகவாவது விடு' என்று துக்கத்துடனும், சொல்ல தெரியாத பயத்துடனும், இறைவனிடம் கேட்டுக் கொண்டாள்.


சில நொடிகளில் தண்ணீரில் மூழ்கியவளுக்கு மூச்சு முட்டத் தொடங்கவும், கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை அறியாமல் கிணற்றுக்குள் புதைய ஆரம்பித்தாள்.


அரை மயக்கத்தில் கண்கள் மூடப் போகும் நேரத்தில், கலங்கிய நீரில்... கருப்பாக ஒரு உருவத்தைக் கண்டதும் திகில் அடைந்தவள், மூச்சு விட முடியாமல் தவிப்புடனும், அதீத பயத்துடனும் மயங்கினாள், மாரிகா.


மறுநாள்....
கண்களைத் திறக்க கஷ்டப்பட்டுத் திறப்பது போலத் திறந்தாள், மாரிகா.

உடனே அவளது முகத்தருகே வந்து, "ஏம்மா... நீ பாட்டுக்கு சாக துணிஞ்சுட்ட? உசுரோட மதிப்பு என்னென்னு உனக்குத் தெரியுமா?" என, முகமறியாத வயதான பெண்மணி ஒருத்தி அவளிடம் கேட்டாள்.
அவள் பேசுவது நன்றாக காதிற்குள் எட்டவும், "ஓ.... மை காட்... நான் இன்னும் உயிரோட வா இருக்கேன்?" எனக் கவலையுடன் கண்களை விழித்தாள், மாரிகா.


அதில் வயதான பெண்மணிக்கு கோபம் ஏழவும், பற்களை நறநறவென கடித்தபடி, சின்னவளை வைச்ச கண்ணு மாறாமல் முறைத்தாள்.


அதனை அறிந்த சின்னவளின் உதடுகள் பயத்துடன், "இது... இது என்ன இடம்? நான் எப்படி இங்க வந்தேன்" என்று கரகரத்த குரலில் கேட்டாள்.


வயதான பெண்மணியோ முகத்தை வேறு புறம் திருப்பி, "எப்பா ராஜா... என்ன இந்தப் பொண்ணு, இப்படி பேசிட்டு இருக்கு?" எனச் சடைத்தாள்.


மாரிகாவும், அவள் திரும்பிய திசையை நோக்கித் திரும்பினாள்.


முழு கைச்சட்டையை, அரைக் கையாக மடித்து விட்ட படி ஒருவன் அருகில் வந்து, "இப்போ எப்படி இருக்கு? நல்லா மூச்சு விட முடியுதா? வயிறு வலிக்குதா? இல்ல பசி எடுக்கற மாதிரி இருக்கா?" என்று இதமான குரலில் கேட்டான்.


அவனது கேள்வியில், 'இவங்க டாக்டர் போல?’ என்று தனக்குள் அனுமானித்துக் கொண்டவள், "ஆங்... மூச்சு விட முடியுது டாக்டர், லேசா பசிக்கறது போல தான் இருக்கு" என்று பம்மிய படி கூறினாள், மாரிகா.


அச்சமயம், "ம்மோவ் பருவதம்மா... சீக்கிரம் வா, எனக்கு ஒரே வயித்து வலியா இருக்கு!" என்று, யாரோ கத்திக் கூப்பிடுவது கேட்கவும்,


உடனே பெண்மணி எழுந்து சென்றாள்.


அப்போது தான், அவ்விடத்தை சுற்றி முற்றிப் பார்த்தாள், மாரிகா. ஏதோ வைத்தியசாலையில் இருப்பது போலத் தோன்றவும்,


"நான் எப்படி இங்க வந்தேன் டாக்டர்? எனக்கு எதுவும் ஞாபகமில்ல" எனத் திருதிருன்னு முழித்தபடி கேட்டாள்.


"நான் தான் தூக்கிட்டு வந்தேன்" என்று, அவளது கைப்பிடித்து நாடி பார்த்தான்.


'தூக்கிட்டு வந்தாங்களா?' என்று அவள் யோசிக்க,


"உங்க வீட்டு விலாசம் இல்ல, வீட்டு ஆட்கள் போன் நம்பர் சொல்லுங்க?" என்று, தன் சட்டை பையிலிருந்து போனை எடுத்தான்.
பதில் சொல்லாது அமைதியாக இருந்தாள், மாரிகா.


அவளின் மெளனத்தைக் கலைப்பது போல, "ம்கூம்" என கணீரென்று தொண்டையை செறுமினான்.


அதில்... ஏதோ நினைவில் இருந்து மீண்டவளாக, அவனது கண்களைச் சந்தித்தாள், மாரிகா.


அவனோ, பட்டன் போனில் விரல் வைத்த படி, அவளையே உறுத்து விழித்துக் கொண்டிருந்தான்.


அவனின் கண்களுக்கு ஏதோ சக்தி இருப்பதை அவ்வேளையில் உணர்ந்தவள், மெல்ல அப்பார்வைக்கு அஞ்சிய படி, தன்னுடைய தந்தையின் நம்பரைக் கூறினாள், மாரிகா.


உடனே, அந்த நம்பருக்கு கால் செய்துவிட்டு, "பேரென்ன?" எனக் கேட்டான்.

"மாரிகா"

போன் அட்டன் ஆனதும், "வணக்கம், நான் மாஞ்சோலை கிராமத்துல இருந்து துருணன் பேசுறேன். உங்க பொண்ணு மாரிகா எங்க வீட்ல தான் இருக்காங்க"


"..................................."


"ஆங்...ஆமாங்க. உங்க பொண்ணு நல்லா இருக்காங்க, பயப்படத் தேவையில்ல. நீங்க மாஞ்சோலை வந்ததும், வைத்தியர் வீடு எங்க இருக்குன்னு கேளுங்க. யார் கிட்ட கேட்டாலும் சொல்லுவாங்க." எனப் பேசிவிட்டு, போனை வைத்தான்.


'பெயர் துருணன், வைத்தியரா?' என அவன் பேச்சில் புரிந்துக் கொண்டவள், யோசனை வந்தவளாக,"நான்... கிணத்துக்குள்ள பார்த்தது உங்களையா?" என்று பயத்துடனும், சந்தேகத்துடனும் கேட்டாள்.



"ஆமா..." என்றவன், அவளது கண்களை பரிசோதித்தான், துருணன்.


"நீங்க, அங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க? ஆங்... முக மூடி போட்டுட்டு அப்பப்பா... உங்களைப் பார்த்துட்டு ரொம்ப பயந்துட்டேன்" எனக் கண்களை மூடித் திறந்து கொண்டாள்.



துருணனோ சன்னமாய் இதழோரமாய் சிரித்தபடி, "பயப்படுறவங்க தான் கெணத்துக்குள்ள குதிச்சிங்களாங்கும்?" என நக்கலாக கேட்டான்.


அதில், வாயை மூடிக் கொண்டாள் மாரிகா.


அவர்களில் அருகில் வந்து, "ப்பா... இவன என்ன சொல்லி திட்றது? நேத்து தண்ணீ அடிச்சானாம், இன்னைக்கு வயித்த வலிக்கிதுங்கிறான்" என்றாள் துருணனின் பாட்டி பருவதம்மா.



உடனே எழுந்தவன் கோபமாக, "யோவ் கெளம்பு... கெளம்பு" என்று உச்சஸ்தாதியில் கத்தினான் துருணன்.



அதில் மாரிகாவின் உடல் திடுக்கிட்டது. 'இப்போ நம்ம கிட்ட பிண்ணனி பாடகர் எஸ்.பி.பி போல இனிமையா பேசுனவனா? இப்படி கணீர்னு... கத்துறது?' என்று அவனையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருத்தாள்.


"ஹே இல்லப்பா, நானா குடிக்கல. மாமா, மச்சான்க சேர்ந்து ஊத்தி விட்டான்க. இருந்தாலும் நான் சொன்னேன், இந்த மாதிரி பத்தியம் இருக்கேன்னு, அவங்க கேட்கல. இப்போ வயித்து வலியால நான் அவஸ்தை படுறேனப்பா" எனவும்,


மறுபடியும், சட்டையை மேலும் மடித்து விட்டு கொண்டவன், "இந்தா மரியாதையா கெளம்பு, கெளம்பு... கெளம்பு இடத்த காலி பண்ணு" என்று கோபமாக, அந்த ஆளை கழுத்தைப் பிடிச்சு விரட்டாத குறையாகக் கத்தினான் துருணன்.



அதில் எதிரில் இருந்த ஆளு, "ம்மா... பருவதம்மா, உங்க பேரன் கிட்ட நீங்க தான் எடுத்துச் சொல்லணும். நீங்க சொன்னாக் கேட்பான். நான் பாவபட்ட ஆளு, எனக்கு மூணு பொம்பளப் புள்ளைங்க, நாலு பசங்கன்னு உங்களுக்கே தெரியும். அவங்க நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க" எனப் பருவதம்மாவிடம் கெஞ்சினான்.


உடனே மனமிறங்கிய பருவதம்மா, "சரி... சரி இனிமே நீ குடிக்காத என்ன?" எனவும்,



"ஆச்சி... இவன யாரு இத்தன புள்ள பெத்துக்கச் சொன்னா? நல்லா வாய்ல வருது. இதுல உனக்கு கோட்டர் வேற கேட்குதோ?" என்று கோபமாய் தலையை கோதி கொண்டான்.


"யோவ் மாப்ள... என் மூணு பொண்ணுங்கல்ல ஒரு பொண்ண நீ கட்டிக்கோயேன். நான் தண்ணீ அடிக்கறதையே விட்ருவேன், உன் மேல சத்தியமய்யா" என்று அந்த ஆள் முன்னே எட்டு வைத்து துருணன் அருகில் வரவும்,
அந்த ஆளை அடிக்க கையை உயர்த்தினான். ஆனால் அடிக்கவில்லை.
"உடம்பு சரியில்லன்னு பார்க்கறேன். இல்ல அடிச்சே கொன்னுருவேன் ஓடிடு. என்ன பத்தி உனக்குத் தெரியும்ல? என் கிட்ட வைத்தியத்துக்கு வந்தா... சொன்னத சொன்ன படி கடைபிடிக்கணும். அப்படி இல்லன்னா, உன் உசுரே போனாலும் நான் கண்டுக்க மாட்டேன். நீ கெளம்பு" என நகர்ந்தான், துருணன்.
அதைப் பார்த்தவுடன், படுத்திருந்த பெஞ்சில் இருந்து பயத்தில் எழுந்தமர்ந்தாள், மாரிகா.



அந்த ஆளோ வயிற்றைப் பிடித்த படி, "ம்மோவ் ஏதாச்சும் மருந்து இருந்தா கொடேன், வலி தாங்க முடியல" என, அடி வயிற்றில் கை வைத்த படி புலம்ப ஆரம்பித்தான்.


அவனைப் பார்த்து மாரிகாவிற்கே பாவமாய்ப் போனது.


மெதுவாக அந்த ஆள் அருகே சென்று, "நீ போய் உன் பொண்டாட்டிய அனுப்பு. அப்போ தான், எம் பேரன் மலை இறங்குவான். அவனுக்கு பொம்பளங்க கண்ணீர் சிந்தினா மனசு தாங்காது. அதனால, உன் பொண்டாட்டிய கண்ணீர் விட்டு, உனக்கு மருந்து கேட்கச் சொல்லு, ராஜா தருவான்" என்று அறிவுரை கொடுத்தாள், பருவதம்மா.


அதனைக் கேட்டுட்டு, அடுத்த நொடி ஓட்டமாய் ஓடினான் அந்த ஆள்.



அப்போது எதார்த்தமாக மாரிகாவின் புறம் திரும்பிய பருவதம்மா, "ஏம்மா... பசிக்கறது போல இருக்குன்னு சொன்னீயே? சோறு கொண்டு வரவா?" என்று கேட்டதும்,
சரியென்று தலையாட்டினாள்.


"அங்க கொள்ளைப்பக்கம் போய் பல்லு விலக்கிட்டு வா" என்று, உத்தரவிடுவது போல கணீரென்ற குரலில் கூறிவிட்டு, பருவதம்மா நகரவும்,



கொள்ளைபக்கம் என கை காட்டிய திசையில் இருந்த அறைக்குள் நுழைந்து, பற்பசையைத் தேடினாள், மாரிகா.



அங்கு, மண்ணால் ஆன பாத்திரம், மூடி போட்டு வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்து திறந்து பார்த்தாள், நல்ல நறுமணம் வீசியது. "என்ன சமைக்கறதுக்கு யூஸ் பண்ற பொடி மாதிரி தெரியுது. இதைப் போய் இங்க வச்சிருக்காங்க" என்று தனக்குள்ளே கேட்டபடி, டூத் பேஸ்ட், ப்ரெஷ் இல்லாமல் வெறும் வாயையும், முகத்தையும் கழுவிவிட்டு... தான் படுத்திருந்த பெஞ்சில் சென்று அமர்ந்தாள்.



அவள் முன், மண்பாண்டத்தால் ஆன தட்டை வைத்து, அதன் மேல் வாழை இலையைப் போட்டு, சோற்று பருக்கையை அள்ளி வைத்தாள், பருவதம்மா.



அள்ளி அள்ளி வைக்கவும், "போ... போதும் பாட்டி, நான் இவ்வளவெல்லாம் சாப்பிட மாட்டேன்." என்று பதறிய படி கூறினாள், மாரிகா.



அவளின் கூற்றில் ஆச்சரியமாக வாயைப் பிளந்த படி, "ஏம்மா... இப்படி சாப்பிட்டா இல்லாத நோயெல்லாம் வரும்மா. வயசு புள்ள இரண்டு தட்டுச் சோறு சாப்பிட வேணாம்? கொஞ்சம் கூட சாப்பிடப் பழகும்மா. உன்னைப் பார்த்தாலே நல்லா சாப்பிடாம சீக்காளி ஆன மாதிரி தெரியுற!" என்று திட்டி படி, நிறைய காய்கறி சேர்த்து செய்த குழம்பை, சோற்றின் மேல் ஊற்றினாள்.



தன்னை நோயாளி என்று திட்டியதை நினைத்து, கவலையுடன் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டாள் மாரிகா. அந்தக் கவலை அழுகையாக மாறி உருவெடுக்கவும், தானாக அவளது கண்கள் கலங்கின, மூக்கை உருஞ்சினாள்.



அவளை நிமிர்ந்து பார்த்ததும், "ஏம்மா, இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு மூக்க உருஞ்சுற? சாப்பிடும்மா" என்று கொஞ்சம் நயந்து கூறினாள்.



அதில் சிறிது சமாதானமாகி, அமைதியாக சோற்றின் மேல் உள்ள காய்கறியை எல்லாம் எடுத்து, ஒரு ஓரமாய் வைத்துவிட்டு, சோற்றை பிசைய ஆரம்பித்தாள், மாரிகா.



அதனைப் பார்த்துட்டு, "எப்பா ராஜா, இந்தப் புள்ள சாப்பிடறதப் பார்த்து எனக்கு கோபமா வருது, நீ வா என்னென்னு வந்து கவனி." என்று பருவதம்மா நகர்ந்தாள்.



மற்றொரு அறையிலிருந்து வெளியே வந்தவன், அவளை நோக்கினான்.


அவளும், அவனை நோக்கினாள்.


"உங்க உடம்பு ஏன் இப்படி ஆச்சுன்னு காரணம் தெரியுமா?" என, அவளிடம் கேட்டான் துருணன்.



'அது தெரியாமத் தானே, தான் சாகச் சென்றது. எத்தனை ட்ரீட்மெண்ட், ஊசி, மாத்திரை' என்று கவலையுடன் மனதிற்குள் நினைத்துவிட்டு, "எ... என்ன காரணம்? எதனால இந்த ப்ராப்ளம் எனக்கு வந்தது? உ.... உங்களுக்குத் தெரியுமா? சொல்லுங்க? ப்ளீஸ்" என்று, விசும்பியபடி கேட்டாள், மாரிகா.



"முதல்ல இலைலே வச்சத அப்படியே சாப்பிட்டு முடிங்க சொல்றேன்" என்று அவளருகில் இருந்த மரச்சேரில் அமர்ந்து, அங்கிருந்த புத்தகத்தை கையில் எடுத்தான்.



'மில்ட்ரி ஆபிசர் போல பேசுறதப் பாரு' என்று அவனை மனதிற்குள் திட்டிவிட்டு,
அழுகையை அடக்கிக் கொண்டு, ஒவ்வொரு பருக்கையாக எண்ணிச் சாப்பிடுவது போல சாப்பிட ஆரம்பித்தாள், மாரிகா. மேலும் காய்கறியை வேறு எடுத்து ஆராய்ச்சி பண்ணி, வாய்க்குள் கஷ்டப்பட்டு முழுங்குவது போலத் திணிக்க ஆரம்பித்தாள்.



வலின்னு வந்த ஆளோட மனைவி வந்து, துருணனிடம் மருத்து கேட்டு கண்ணீர் விட்டாள். "எப்பா, நீதாம்பா என் புருஷனக் காப்பாத்தணும்." என்று மான்றாடினாள்.



"நான் என்ன கடவுளா உங்க புருஷனக் காப்பாத்த? போங்கக்கா...! வேலை இருந்தா பாருங்க. அது தான் நமக்கு சோறு போடும், உங்க புருஷன நம்பினா, உங்களுக்குச் சோறு கிடைக்காது." என, பிடி கொடுக்காதவன் போலப் பேசினான், துருணன்.



அதனைக் கேட்டுட்டு, 'பாவம்... மருந்து கொடுத்தாத் தான் என்னவாம்? ரொம்ப பண்றான்.' என்று மாரிகா மனதிற்குள் அவனை பற்றி ஒரு தவறான அனுமானத்தை வடித்துக் கொண்டாள்.



"அவரு ஒழுங்காத்தான் நீ சொல்ற படி கேட்டுட்டு இருந்தாரு, ஆனா, கூட இருக்கற ஆளுக சரியில்லப்பா. நேத்து, வேணா வேணாங்க ஊத்திவிட்டுட்டான்க. இப்போ இவரு வலியில அவஸ்தப்படுறாரு. உன்ன... என் தம்பியா நினைச்சு கேட்கறேன்ப்பா, அவருக்கு மருந்து கொடுப்பா." என்று மனம் உருகிக் கேட்கவும்,




அவனின் மனம் உருகிவிட்டது. பெருமூச்சு விட்டு தன்னை சமன் செய்து கொண்டு, "ஆச்சி... அந்த ஆளுக்கு என்னென்னு பாருங்க.” என்றவன்,



அந்தப் பெண்ணின் புறம் திரும்பி, “போங்க... போய் மருந்து வாங்கிக்கோங்க. இனிமே தண்ணீலாம் அடிக்கக் கூடாதுன்னு சொல்லுங்க, அதுக்குப் பதிலா கிணத்துல தண்ணீ இறைக்கச் சொல்லுங்க. வயிறாவது குறையும்." என்று கூடுதலாக அறிவுரை வேறு வழங்கினான், துருணன்.



இவை அனைத்தும் பார்த்த படி சாப்பிட்டு முடித்தவள், "டா... டாக்டர்... இப்போ சொல்லுங்க? எனக்கு எதுனால இந்த ப்ராப்ளம் வந்தது? ப்ளீஸ், சீக்கிரம் சொல்லுங்க?" என அவனிடம் கேட்டாள், மாரிகா.



அவளின் கேள்விக்கு பதில் சொல்ல ஆயத்தமானவன், கையில் உள்ள புத்தகத்தை மேஜையின் மீது வைத்தான்.



அவன் திரும்பி, தன்னை பார்த்து கூறும் வார்த்தைக்காகத் தவமாய் காத்திருப்பது போல தவிப்புடன் இருந்தாள், மாரிகா.



துருணனோ, அவள் சாப்பிட்ட தட்டை ஒரு தரம் பார்த்துட்டு, தட்டைக் கைக்காட்டி, "இந்த கருவேப்பிலை, சின்ன வெங்காயம், தக்காளி இதெல்லாம் சாப்பிடாததால தான் உங்களுக்கு இந்த பிரச்சனை வந்தது." என்று அசால்டாகக் கூறினான்.



அதனைக் கேட்டதும் அவளால், அந்தக் காரணத்தை ஒத்துக் கொள்ள முடியவில்லை. 'எவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டலில் எல்லாம் போய் ட்ரீட்மெண்ட் பார்த்துட்டு வந்திருக்கேன். இந்த சின்ன காரணத்தால தான், எனக்கு இந்த ப்ராப்ளமாங்கும்' என்ற சலிப்புடன், அவனிடம் மேற்கொண்டு இது பற்றி கேள்வி கேட்காமல், அமைதியாக சாப்பிட்ட இடத்தை விட்டு நகர்ந்து உட்கார்ந்தாள்.



அவளையே கவனித்துக் கொண்டிருந்தவன், "சாப்பிட்டத எடுத்துட்டுப் போய் உள்ள ஆச்சி இருப்பாங்க, அவங்க கிட்ட கொடுங்க. நம்ம வேலைய, நாம தான் செய்யணும், இதுனாலையும் உங்க உடம்பு பாதிக்கக் காரணம்" என கூறிவிட்டு நகர்ந்தான்.




அவனின் பேச்சுகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றிருக்க கவலைப்பட்டவள், 'ச்சை நான் நிம்மதியா செத்திருப்பேன், இவன் வந்து அதைத் தடுத்திட்டு, இப்போ இது காரணம்... அது காரணம்னு பீலா விடுறான். திமிராப் பேசுறான்.' என்று அவனை மனதிற்குள் திட்டிய படி எழுந்தாள், மாரிகா.

Word- 1614

ஹாய் ப்ரெண்ட்ஸ்! நம்ம துருணன்னை பற்றியும், அவனது குண நலனை பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டிங்க. அவனை பற்றி ஓரிரு வரி இந்த அத்தியாயத்துல படிச்சத வச்சு உங்க கருத்தை தெரிவிங்க. கண்டிப்பா உங்களுக்கு நம்ம ஹூரோவ பிடிக்கும்ன்னு நம்புறேன்.
கருத்து த்ரி


 
Status
Not open for further replies.
Top Bottom