dharshini chimba
Saha Writer
- Messages
- 308
- Reaction score
- 228
- Points
- 43
"ப்ளீஸ்! என்னை விட்ருங்க. என்னால வரமுடியாது" என்று அவளின் கெஞ்சலை எதிர்முனை ஏற்றதாய் தெரியவில்லை.
கண்களில் இருந்து வழியும் கண்ணீரை கூட துடைக்க தோன்றாமல் மெல்லியகுரலில் கெஞ்சிக்கொண்டிருந்தான்.
கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்ற அவளின் அன்னை எதையோ மறந்து விட்டதாக எடுத்துவர வீட்டிற்குள் வர, அவளின் அழுகையை பார்த்தவர் பதறிப்போனார்.
அன்னையை பார்த்ததும் போனை துண்டித்துவிட்டவள் அவரின் கேள்விக்கு பதில் கூறமுடியாமல் அழுது கொண்டே இருந்தாள்.
"என்னம்மா? ஏன் அழுவுற? யாராவது ஏதாவது சொன்னாங்களா? மிஸ் சார் ஏதாவது பள்ளிகூடத்துல அடிச்சாங்களா திட்னாங்களா? என்ன பிரச்சனை சொன்னா தான தெரியும்" என்று கேள்விகளை பதறிய நெஞ்சோடு அடுக்கி கொண்டே போக.
எதுவும் பேசாமலே அமைதியாய் நின்றாள் பத்தாம் வகுப்பு படிக்கும் அவரின் பெண் சிந்து.
"எவனாவது லவ் ப்னட்றேன்னு உன் பின்னாடி திரிஞ்சி தொல்லை பன்றானா? எதுவா இருந்தாலும் பயபடாம அம்மாகிட்ட சொல்லுடா சிந்துமா?" என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்.
"அம்மா..." என்று தயங்கியவளை பார்த்து "சொல்லுடா எதுக்கும் பயபடாதே நான் அம்மா இருக்கேன் என்ன..?" என்றார்.
"அம்மா அந்த பசங்க என்னை ரொம்ப தொல்லை பண்றாங்கம்மா " என்று தேம்பி தன்னை கட்டிக்கொண்டு அழும் மகளை பிடித்து தன் முன் நிற்க வைத்து.
"எந்த பசங்க? என்ன தொல்ல பண்றாங்க?" என்றார் பதறும் எண்ணத்தோடு.
"நம்ம தெருவுல இருக்க அந்த பையன் ஜகன் தான்மா... " என்று முடிக்காமல் அழுபவளிடம் "அந்த காலேஜ் படிக்கிற பையனா?" என்று கேட்க.
"ஆமாம்" என்று தலை ஆட்டினாள்.
"என்ன பண்ணான்.?" என்று கேட்க.
"தினமும் டுயுஷன் போயிட்டு வரும் போது என் பின்னாடியே வருவான். அவனுக்கு பயந்து சைக்கிள வேகமா ஓட்டிட்டு வந்துடுவேன். போன வாரம் திங்கள் அன்று வரும் போது சைக்கிள் பஞ்சர் ஆகிடுச்சு.. அப்போ பயந்துகிட்டே வேகமா சைக்கிள் தள்ளிட்டு வரும்பொழுது என் முகத்தில துணியை வைத்து மூடி கட்டாயபடுத்தி இழுத்துட்டு போய்..." என்று மேலும் தேம்ப.
"இழுத்துட்டு போய்..." என்றார் இதயம் துடிக்காமல்.
"என்னை நாசமாகிட்டான்மா... நா... எவ்ளோ... கெஞ்சினேன்... சத்தம் போட்டேன்... அங்க ஒருத்தருமே இல்ல... அதோட இதை வெளில சொன்னா உன் முகத்தை அடையாளம் தெரியாம உருகுலைச்சு. கொலை செஞ்சி எங்கயாவது தூக்கி வீசிடுவேன்ன்னு மிரட்டினா...ன்மா" என்று மேலும் பேசமுடியாமல் அழுதுகொண்டே இருந்தாள்.
"ஐயோ ..." என்று தன் நெஞ்சை இரு கைகளாலும் பிடித்து கொண்டு இதயம் துடிக்கமறந்து கதறி அழுதார்.
"நீ என்கிட்டே சொல்லிருக்க வேண்டியது தான..?" என்று அழுதவர் கேட்க.
"அம்மா அதோட இல்லாம... அவன் பிரென்சுங்கலையும் கூட்டிட்டு வந்து தினமும் என்னை சித்ரவதை பண்றாங்க... ப்ளீஸ் என்னை விட்டுடுங்க நான் ஸ்கூலுக்கும் போகலை டியூஷனுக்கும் போகலை நான் வீட்டுகுள்ளையே இருந்திட்றேன் வெளிய போக பயமா இருக்கு. நான் எங்கயும் போகலை..." என்று சொன்னதையே திரும்பி திரும்பி கூறி கொண்டு முகத்தில் அடித்துக்கொண்டு அழுதவளை நெஞ்சோடு அணைத்துகொண்டவர், "ஐயோ அடபாவிங்களா சின்ன பொண்ணுன்னு கூட பாக்காம இப்டி பண்ணிடிங்களே... பாவிங்களா...???" என்று அழுதுகொண்டே புலம்ப.
"இப்பகூட... நீ வரலைன்னா உன்ன கொலைப்பன்னிடுவோம்னு மிரட்றாங்கம்மா. எனக்கு பயமா இருக்கு. நான் வீட்டுகுள்ளையே இருக்கேன் வெளிய எங்கயும் போக மாட்டேன். நான் பள்ளிக்கூடம் போகலை. எனக்கு பயமா இருக்கும்மா..." என்று சொன்னதையே சொல்லிக்கொண்டு மயங்கி விழுந்தாள் சிந்து.
"ஐயோ.. சிந்து..." என்று அவளை தாங்கி பிடித்த அன்னை. உடனே தன் கணவருக்கு செய்தி சொல்லாமல் உடனே வீட்டிற்கு வருமாறு போனில் கூறினார்.
என்னவோ ஏதோ என்று பதறி அடித்து கொண்டு ஓடி வந்த கணவனிடம் கூற இருவரும் சிந்துவை கூட்டிகொண்டு அந்த கயவனின் வீட்டிற்கு சென்று அவனை தெருவில் இழுத்து போட்டு தர்ம அடி உதைத்தனர். அதோடு நிற்காமல் அவனையும் கூட்டி கொண்டு போலிஸ் ஸ்டேஷன் சென்று அந்த பதினெட்டு வயது சிறுவனின் மேல் புகார் கொடுத்தனர்.
அதோடு மற்ற சிறுவர்களையும் கைது செய்து அடைத்தனர்.
வெளியே சென்றாலே எல்லோரின் பார்வைகளும் தன் மேல் வித்யாசமாய் படுவதை எண்ணி நொந்து போன சிந்து வீட்டை விட்டு வெளியே செல்ல மறுத்தாள்.
வீட்டின் உள்ளேயே அடைந்து கிடந்தாள்.
"நான் என்ன தப்பு பண்ணேன். ஏன் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பாக்கறாங்க " என்று தன்னை தானே கேட்டு கொண்டு அழும் மகளை பார்க்க பிடிக்காமல் தன் தம்பி வீட்டிற்கு அனுப்பி வைத்தார் சிந்துவின் அப்பா.
"சிந்து கொஞ்ச நாளைக்கு சித்தப்பா வீட்டுக்கு போயிடு வாடா. " என்றவுடன் "சரிப்பா" என்று மாற்றத்தை எண்ணி சித்தப்பா வீட்டிற்கு பயணித்தாள்.
சித்தியும் சித்தப்பாவும் அவளை நன்றாக கவனித்து கொண்டனர். வெளியில் எங்கும் செல்லாமல் இருந்தவளை வற்புறுத்தி கோவிலுக்கு பார்க்கிற்கு என்று நாலு இடங்களுக்கு கூட்டி சென்றனர்.
மனம் சற்று அமைதி அடைவதுபோல் இருந்தது சிந்துவுக்கு அவளின் சித்தி மிகவும் பாசமாய் பார்த்து கொண்டார்.
அவளுடன் செலவிடும் நேரங்களை அதிகரித்தார்.
அவளுக்கு பிடித்த விளையாட்டுகளை அவளிடம் இருந்து கற்றுகொள்கிறேன் என்ற பெயரில் அவளின் கவனத்தை சற்று திசை திருப்பி கொண்டிருந்தார்.
அவளுக்கு பிடித்த செஸ், காரம் ,தாயம் பல்லாங்குழி என எல்லாவற்றையும் விளையாடினர் பெண்கள். சித்தப்பாவும் வீட்டில் இருக்கும் நேரத்தில் அவளோடு செஸ் காரம் விளையாடுவதில் செலவழித்தார்.
சிந்து இங்கு வந்து இன்றோடு பத்து நாள் ஆகிவிட்டது.
ஒரே ஒரு விஷயம் அவளை உறுத்தி கொண்டிருந்தது. அது அவளின் சித்தப்பா மகன் ஜகத்.
எப்பொழுதும் தான் வந்துவிட்டால் தன்னுடன் கூட்டு சேர்ந்து வீட்டையே ரெண்டாக்கும் அண்ணன் இன்று வரை அவள் முகம் காண மறுக்கிறான். அவள் இருக்கும் அறையினுள் நுழைவதில்லை. அவளுடன் பேசுவதில்லை.
'நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக அண்ணன் என்னை தண்டிகின்றான்' என்று உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டுகொண்டே இருந்தது.
"சிந்துமா இங்க பக்கத்துல ஒரு கல்யாணம் நீயும் வா நாம ரெண்டு பெரும் போயிட்டு வந்துரலாம்" என்று வந்தார் சித்தி.
"இல்ல சித்தி நான் வரலை. நீங்க போயிட்டு வாங்க. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு" என்றாள்.
"ஏண்டா உடம்பெதும் சரி இல்லையா? ஹாஸ்பிடல் போலாமா?" என்று அருகில் வந்தார்.
"இல்ல சித்தி அதெல்லாம் ஒண்ணுமில்லை. நானும் சித்தப்பாவும் நைட் காரம் ரொம்ப நேரம் விளையாடினோம் அதான் தூக்கம் பத்தலை. தூங்கனா சரி ஆகிடும். நீங்க போயிட்டு வாங்க நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்." என்றாள்.
"சரி டா. சித்தப்பா அவங்க பிரெண்ட பார்க்க போயிருக்கார். மதியம் வந்துருவார். அண்ணனுக்கு இன்னைக்கு காலேஜ் லீவ் தான். வீட்ல தான் இருக்கான். எதாவது வேணும்னா அவன்கிட்ட கேளு. நான் ஒரு மணி நேரத்துல போயிட்டு வந்துருவேன் சரியா?" என்றார்.
"சரி சித்தி." என்றாள் சிரித்தபடி.
இப்பொழுது தான் கொஞ்சம் பழைய சிந்துவாக கலகலப்பாக மாறிக்கொண்டிருந்தாள்.
சித்தி சென்றுவிட அவள் மட்டும் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து ஜகத் வந்து சோபாவில் அமர்ந்து அவனும் டி.வி பார்க்க ஆரம்பித்தான்.
"எங்க எல்லாரும்" என்றான் தூக்க கலகத்தில்.
"சித்தி கல்யாணத்துக்கு போயிருக்காங்க. சித்தப்பா பிரெண்ட் வீட்டுக்கு போயிருக்கார். உனக்கு எதாவது வேணுமா?" என்றாள் அவனை பாராமல்.
"ஹ்ம்ம் எனக்கு பசிக்குது. " என்றான் வேறெங்கோ பார்த்தபடி.
"பிரெஷ் ஆகிட்டு வா. தோசை ஊத்தறேன்" என்று சமையலறை சென்றாள்.
சரி என்று தலையாட்டி உள்ளே சென்றான்.
இரண்டு தோசைகளை வார்த்தபின் தனக்கும் பசிப்பது போல் இருக்க மூன்றாவது தோசைக்கும் மாவை கல்\லீல் ஊற்ற தன்னை யாரோ பின்னிருந்து அணைப்பது போல் தோன்ற உடலில் நெருப்புபட்ட உணர்ச்சி வெடுகென்று திரும்ப அவளின் மூச்சு படும் அளவிற்கு அருகில் நின்றிருந்தான் ஜகத்.
ஒரு நொடி மூச்சே நின்று விட்டது அவளுக்கு. சற்று விலகி "தோசை ஊத்திட்டேன் எடுத்துட்டு வரேன். நீ ஹாலுக்கு போ" என்றாள் அவனின் பார்வை தன் மேல் ஊர்வதை உணர்ந்தவள்.
வெளியே செல்லாமல் அங்கேயே நிற்பதை கண்டு அவனை கேள்வியாய் பார்க்க அவன் அவளை பார்வையாலேயே துகிலுரித்தபடி நெருங்கி கொண்டிருந்தான்.
"அண்ணா என்ன வேணும். போங்க நான் எடுத்துட்டு வரே..." என்று முடிக்க விடாமல் அவளை கட்டிக்கொள்ள முயற்சி செய்ய அவனை பிரயத்தனப்பட்டு தள்ளிவிட்டாள்.
"அண்ணா ஏன் இப்டி பண்றீங்க? ப்ளீஸ் ஹாலுக்கு போங்க." என்று கெஞ்சும் அவளை மேலும் ஜகத் நெருங்க.
"சீ தள்ளிபோ" என்று ஓட நினைத்தவளின் கூந்தலை பிடித்து இழுத்து தனதருகே வர செய்தான்.
"டேய் நான் உன் தங்கச்சிடா. என்னை விடு." என்று கத்தினாள்.
"நீயா நீ என் கூட பொறந்தவ இல்ல. பேசாம அமைதியா இரு " என்றான்.
"ப்ளீஸ் என்னை விட்று" என்று கரம் கூப்பி கெஞ்சியவளை கோபத்தோடு பார்த்தவனின் கரம் பதம் பார்த்தது அவளின் கன்னத்தை.
"சத்தம் போட்ட உன்னை கொன்றுவேன்" என்று மேலும் தன்னோடு சேர்க்க.
அவனின் எண்ணங்கள் அவளுக்கு அருவருப்பை தந்தது. "அவனுங்களுக்கும் உனக்கும் எந்த வித்யாசமும் இல்லை. என்னை விடு நான் எங்க அம்மா அப்பாகிட்ட போகணும்" என்று அழுதாள்.
"என்னடி ரொம்ப தான் பண்ற. ஏற்கனவே அந்த பசங்களோட இருந்தவ தான நீ" என்று கேட்டான்.
"கொஞ்ச நேரம் அமைதியா இரு. அப்புறம் எப்பவும் போல நீ உன் வேலையை நான் என் வேலையை பார்க்கிறேன்" என்று அவளை பலவந்த படுத்த, அவனை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளிவிட்டு "நான் எந்த தப்பும் செய்யல நான் எந்த தப்பும் செய்யலை... என்னை விட்ருங்க... " என்று அழுதபடி கத்திகொண்டே வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தலைதெறிக்க ஓட எதிரே வந்த வண்டி நிறுத்தமுடியாமல் அவளின் மீது மோதியதில் பத்தடி உயரத்திற்கு மேலே தூக்கிவீசப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிழே விழுந்தாள்.
அவளை துரத்திகொண்டே வந்தவன் அவளை நெருங்கி தொட முயர்ச்சிக்க உயிர்போகும் நிலையிலும் தொடாதே என்ற தீ பார்வையில் மிரண்டு இரண்டடி தள்ளி போனான். அங்கிருந்த மக்களின் உதவியோடு மருத்துவமனைக்கு கூட்டிசெல்ல தீவிர கண்காணிப்பில் அனுமதிக்கபட்டாள் சிந்து.
"ப்ளட் நிறைய போயிருக்கு ரொம்ப அடிபட்டிருக்கு. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது." என்று டாக்டர்கள் கை விரித்துவிட்டனர்.
உள்ளே இருந்து வந்த நர்ஸ் "யாரு இங்க ஜகத். உங்கள்ட பேசணுமாம் உள்ள போங்க" என்றாள்.
கால்கள் நடுங்க மெதுவாக உள்ளே சென்றவனிடம் "நான்.. உன் ... கூட ... பிறந்திருந்தா... இப்படி பண்ணி..ருக்க மாட்டல்ல... தங்கச்சியும்... அம்மாவும்... ஒன்னு .. தான... சித்திய இது மாதிரி தப்பா நினைக்க முடியுமா... அங்க.... இருக்கா. முடியலைன்னு,.... தானே ஆறுதலுக்காக இங்க வந்தேன்.... பொண்ணுன்னு பேரக்கேட்டாலே .... போதும்ல உங்களுக்கு....ரத்த்தமும் சதையும் உள்ள.... ஒரு ....பொம்மை ல... அவளுக்குன்னு ஒரு மனசு இருக்கு அதுல நிறைய லட்சியம் ...ஆசை ...லா இருகுன்றத...... எப்போ ....புரிஞ்சிக்க போறீங்க... உங்களுக்கு இடையில் . நான் பொண்ணா பொறந்ததுக்கு ரொம்ப வெக்க படறேன் ... நான் போறேன் .... உனக்கு கல்யாணம் ஆச்சுன்னா உனக்கு வர போற பொண்டாடிகிட்ட அவங்கண்ணன் இப்படி நடந்துகிட்டான்னு தெரிஞ்சா உன்னால அவகூட சந்தோஷமா வாழமுடியுமா...?" என்று மூச்சு பலமாய் வாங்க.
"என்னை மன்னிச்சிடு" என்றான் அழுதபடி.
"அதெப்படி நீங்..க லவ் ப...ண்ற கல்யாணம் பண்ற ...பொண்ணு மட்டும்...சுத்தமா இருக்க...னும் நீங்க மட்டு...ம் மத்த பொண்ணுங்...களை உங்க இஷ்டத்துக்கு நாசப்படுத்த....லாம் இல்ல... நாளைக்கு நானே உனக்கு பொண்ணா பொறந்த என்ன..... பண்ணுவ? என்கிட்டயு...ம் அப்டி தான் நடந்துகுவியா... போடா.. உங்களை மாதிரி ஆம்பளைங்...களே இப்டி தான் இல்ல ......எனக்கு இங்க வாழ பிடிக்கலை.. நான் போறேன்......" என்று மூச்சு மேலேழும்ப நிலை குத்திய பார்வையோடு மரணத்தை தழுவினாள் சிந்து.
அவளின் கேள்வியில் மூளை பலமான அதிர்வலைகள் ஏற்பட அவளை தவிர மற்ற அனைத்தையும் மறந்து கால் போனபோக்கில் நடக்க தொடங்கினான்.
அவன்வாயில் இருந்து உதிக்கும் மந்திரமாக மாறிப்போனது " என்னை மன்னிச்சுடு".
சகோதர சகோதரிகளே என்னை முதலில் மன்னிக்கவும் என் கதைகளில் வரும் ஆண் கதாபாத்திரங்களை கூட நெகடிவ் காரக்டரில் காண்பிக்க விரும்பாதவள் நான்.
என் வாழ்க்கைல நான் பார்த்த ஆண்கள் எல்லோருமே நல்லவர்களாக தான் இருக்கிறார்கள். ஆனாலும் இன்னைக்கு பெரும்பாலான பெண்களோட நிலை சமூகத்துல இது தான். நிஜத்தில் நடந்தித்தை பாதி கற்பனையோடு தந்திருக்கிறேன். ஆண் சகோதரர்கள் என்னை மன்னிக்கவும். இது ஒரு அவேர்நஸ் தான். உங்களின் கருத்துகளை பகிரவும்.