Magizh Kuzhali
New member
- Messages
- 2
- Reaction score
- 1
- Points
- 1
மறுபிறப்பு...!!!
சென்னையில் அந்தச் சிறு மருத்துவமனையில் உள்ள சிறு சிகிச்சை அறையினுள் உடம்பில் உள்ள அத்தனை எலும்புகளும் உடைந்தால் ஏற்படும் அளவு வலியுடன் இருந்த சகியின் உடல் முழுவதும் வியர்வையில் குளித்திருந்தது. இயல்புக்கு அப்பால் உடம்பில் நடுக்கத்துடன் கைகளில் அதைவிட அதிக நடுக்கத்துடன் அதைப் பிடித்து இருந்த தன்னவன் வீராவை பார்த்தாள்.
கைகளில் இருக்கும் அதிக நடுகத்திற்கு காரணம் அவளுடையதோடு சேர்ந்து அவனுடைய கைகளில் நடுக்கமுமே காரணம். முதல் முறையாய் அவன் கண்களில் பயமும் உடலில் பதட்டத்தையும் உணர்கிறாள். குனிந்து ஒரு வினாடி தன் வயிற்றை பார்க்க அது பந்துபோல் பெரிதாக உப்பி இன்னும் சில நிமிடங்களில் வெடித்துவிடுவேன் என்று பயமுறுத்திக்கொண்டு இருந்தது. மீண்டும் தன்னவனை காண அவள் கண்கள் சொருக நினைவுகள் பத்து மாதம் பின்னோக்கி சென்றது.
அந்த ஏகாந்தமான இரவு வேளையில் “என்னங்க” குரல் முழுவதிலும் வெட்கம் நிரம்பி இருக்க தன்னை அழைத்த மனைவியைத் திரும்பியும் பாராமல் மடிகணினியினுள் தலையை நுழைத்து இருந்தான்.
அவ்வளவு பெரிய வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே. வேலைகார பெண்மணி காலை ஆறு மணிக்கு வந்து மாலை ஆறு மணிபோல் கிளம்பிவிடுவாள். கீழே நான்கு அறைகள், சமையலறை, பூஜை அறை மேலே இரண்டு பெரிய அறைகள் மிதி இடத்தை ரூப் கார்டன் போல் அமைக்கப் பெற்றிருக்க அதன் ஒருபுறம் நிச்சல்குளம் தன் இடத்தைப் பெற்றிருந்தது. அதற்குமேல் மொட்டைமாடி மட்டும் தான். மேலே இருந்த வலபக்க அறையில் அவர்கள் இருந்தனர்.
“வீரா....” சற்றே இழுத்து குழைந்த குரலில் அழைக்கச் சட்டென அவளை நோக்கினான். அவள் பெயர் சொல்லி அழைப்பதே மிகவும் நெருங்கிய நேரங்களில் மட்டுமே என்பதால்.
“என்னம்மா?” கண்களில் கனிவுடன் அவளைப் பார்த்தான். இன்னுமும் மடிகணினியை விட்டு அவன் கைகள் இன்னும் விலகவில்லை. ஏனினும் அந்தப் பார்வையும் கனிவும் கூடத் தனக்கு மட்டுமே கிடைப்பது என்பதால் அதுவே போதுமானதாய் இருந்தது அவளுக்கு.
மெதுவாக நகர்ந்து அவன் தோளில் சாய்ந்தவள் அவனின் வலது கரத்தை எடுத்துத் தன் வயிற்றில் பொத்திக்கொண்டவள் அவனை நிமிர்ந்து பார்க்க, சட்டென ஒரு மின்னல் அவன் கண்களில்
“நிஜமாகவா?” குரலில் சந்தோசம் இருந்தாலும் துள்ளல் இல்லை, குரல் ஏறியிருந்தாலும் அதில் ஒருவித அழுத்தமும் அமைதியும் குடிக்கொண்டு இருந்தது.
“ம்ம்....” அவனைப் பற்றித் தெரிந்த புரிந்த காரணத்தால் லேசாய் நாணமுற அவனில் முகம் புதைத்தாள்.
“ரொம்ப சந்தோசமா இருக்கு குட்டிம்மா” என்று நெற்றியில் முத்தம் வைத்தவன். “இனி நீ எந்த வேலையும் செய்ய வேணாம், சித்ராவ இருந்து மொத்த வேலையும் முடிக்கச் சொல்லு, இன்னும் மணி வேணும்னா கொடுத்துடலாம், ஓகே வா? என் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே ராஜாவா வளரணும்”
அதைக் கேட்டுக் கிளுக்கி சிரித்தாள் அவள். ஏனினும் அவன் பாசம் அவளுக்கு நெகிழ்ச்சியை கொடுத்தது.
“என்ன சிரிப்பு?” என்று கேட்டவன்,
“சரி இனி நீ தான் கேர்புல்லா இருக்கணும், ரொம்ப ஸ்ட்ரைன் பணிக்காத இப்போ நீ தூங்கு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துடுறேன்” சொன்னவன் அவள் பதிலை எதிர்பாராமல் அவள் தலையை எடுத்து மெதுவாகக் கட்டிலில் சாய்த்தவன் தன் கணினியோடு அடுத்த அறைக்குச் சென்றுவிட்டான்.
முதலில் அவன் அக்கறையிலும் பாசத்திலும் நனைந்தவள் அவன் விலகலில் ஏமாற்றமாக உணர்ந்தாள். ஏதோ ஒன்று மனதில் காலி ஆகுவது போன்ற எண்ணம். ஒன்றும் செய்யமுடியாமல் முகம் கசங்க அப்படியே கண்களை மூடிப் படுத்துவிட்டாள். அவள் கேட்டால் அவன் இருப்பான் தான். ஆனால், அதுவா அவளுடைய தேவை? அவனைப் பற்றித் தெரிந்தும் தேவையில்லா எதிர்பார்க்கிறோமே என்று அவள்மேலே அவளுக்குக் கோவமாய் வந்தது.
இந்தியாவிலேயே முதன்மை இடத்தில் இருக்கும் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் நிதி மேலாளராய் இருக்கிறான். அவனின் கிழ் இருவது அணிதலைவர்கள் ஒவ்வொரு அணியிலும் பணிரெண்டு பேர்க்கொண்ட அணியாக இயங்கி வருகிறது. சற்று அழுத்தமான வேலைதான், ஆனால், இவனோ பிடித்தமாக வேலை பார்க்கிறான்.
அவளுக்குத் தாய் தந்தை இல்லை. கல்லூரி காலத்திலேயே இருவரும் ஒரு விபத்தில் தவறிவிட பெரியம்மா வீட்டில் வளர்ந்தவள். இருவரும் ஒருவகையில் சொந்தம் தான். ஒரு திருமண வீட்டில் வீராவின் அம்மா பார்த்துப் பிடித்துப்போய் திருமணம் முடிந்தது.
அவனும், அன்பானவன் தான். ஆனால் வேலை வேலை என்று அதிலேயே ஓடிக்கொண்டு இருப்பவன். பொறுப்பானவன் தான், ஆனால் வேலையில் கூடதல் பொறுப்பு. தாய் மட்டுமே, அவரும் இப்போது வெளிநாட்டில் இருக்கும் அவன் தங்கையுடன் வசித்து வருகிறார். அக்கறையோ, பாசமோ, காதலோ எதையும் எளிதில் வெளிபடுத்திவிடமாட்டான். அவர்கள் திருமணம் முடிந்து ஐந்து மாதகள் கடந்த நிலையில் இந்தப் புதுவரவு.
அவனைப் பற்றி யோசித்தபடி அப்படியே உறங்கிப்போன மனைவியைத் தன் வேலை முடித்துக்கொண்டு வந்தவன் காண, அவன் உதட்டில் சிறு புன்னகை. அவளருகில் சென்று படுத்தவன் பின்னோடு அனைத்து அவள் மணிவயிற்றில் வருடி மீண்டும் நெற்றியில் முத்தமிட்டவன் தானும் உறங்கிப் போனான்.
உறுதி படுத்த நகரில் பெரிய மருத்துவமனை அழைத்துச் சென்றவன் அடுத்தடுத்த நாட்களும் ஓட்டம் ஓட்டம் ஓட்டம், அன்போடும் அக்கறையோடும் ஓரிரு வார்த்தை உதிர்ப்பவன் நடுத்தர வயதாகிய சித்ராவிடம் அவளை ஒப்படைத்துவிட்டு தன் கடமையைக் காண ஓடிவிடுவான்.
முதல் மூன்று மாதகளும், அவள் ஓய்ந்துபோனாள் என்று சொன்னால் அது மிகையாகது. எந்தவித வாசனை முகர்ந்தாலும் குமட்டிக்கொண்டு வர, ஒரு வாய்க்குமேல் உள்ளே செல்லமாட்டேன் என வெளியேறியது சாப்பாடு. ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் வாந்தி வருவது போல் தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டே இருக்கும் உணர்வு இருந்தாலே தாங்க முடியாமல் நடந்துக்கொண்டே இருப்போம்
முழுதாக மூன்று மாதம் முடிவுவரை இதே தொல்லையாய் உணர்ந்தாள். எதை உண்டாலும் மசக்கை பாடாய் படுத்தியது. அதனால் உடலில் சக்தி இல்லாமல் சோர்ந்து போய்ப் படுத்தபடியே இருப்பாள். அதையும் மீறிச் சற்று நடந்தாலும் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. சித்ரா தான் பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொண்டாள். அமைதியின் உருவாய் இருக்கும் சகியை அவளுக்கு எப்போதும் பிடிக்கும், தாயில்லா பெண் என்ற கூடுதல் வேறு.
காலையில் செல்பவன் மதிய உணவை அலுவலகத்திலேயே முடித்துக்கொண்டு இரவு ஏழு மணி போலவே வீட்டிற்க்கு திரும்பிவான். அவன் வரும்போதும் சோர்ந்து சோர்ந்து படுக்கும் மனைவியைக் கண்டு மனமிறங்கினாலும் அவளைத் தோளில் சாய்த்து மிரட்டி இரண்டு வாய் அதிகம் உண்ண வைப்பவன் தானும் உண்டுவிட்டு அவளுக்கான மருந்துகளைக் கொடுத்துவிட்டு அவளைப் படுக்கச் செய்பவன் தன்னை இழுக்கும் கடமைக்காகப் பழையபடி கணினியுடன் அமர்ந்துவிடுவான்.
அவன் வேலை முடித்துவரும்போது இருக்கும் சோர்வில் அவள் தூங்கியே விடுவாள். நடுயிரவில் கூட அவளுக்கு மசக்கை படுத்தினாலும் நாள் முழுக்க வேலை செய்துவிட்டு வரும் கணவனை எழுப்ப மனம் வராமல் அடுத்த அறை சென்று உலாவ ஆரமித்தாள். அதை வீராவிற்கு தெரியாமலும் பார்த்துக்கொண்டாள். கணவனின் அருகாமையை மனம் நாடினாலும், அவனைத் தொந்தரவு செய்வதுபோல் இருக்குமோ என அமைதியாகவே இருந்தாள். நாளுக்கு நாள் உடல் தளர்வு அதிகரிக்கவே மிகவும் நொந்துப்போனாள்.
ஒருவழியாய் இரண்டரை மாதம் முடித்துச் சில நாட்களில் மசக்கை கொஞ்சம் கொஞ்சமாக நிற்க அந்த மாத முடிவில் பரிசோதனை வரச் சொன்னதால் அதைக் கணவனுக்கு நினைவூட்ட,
“ஸ்ஸ்ஸ் மறந்தே போயிட்ட சகி...ஊப்ஸ்...இது தெரியாம நான் வேற...” தனக்குள் பேசிக்கொண்டு இருந்தவனை கண்டு
“என்னங்க?” என்று இவள் அவன் தோள் தொட
“இல்ல...வெளிநாட்ல இருந்து எங்க முக்கியமான ஒரு கிளிஎன்ட் வராங்க இந்த வாரம் முழுக்க அவங்களுக்கு...அவங்களோட...”
அவன் ஏதோ யோசித்தபடி கூறிக்கொண்டு இருக்க ஒரு நிமிடம் முகம் தொங்கி போனவள் மறுநிமிடம் அவன் காணுமுன் செயற்க்கையாய் முகத்தில் புன்னகை பூக்க
“பரவாயில்லைங்க, டிரைவர் வரச் சொல்லுங்க நான்... நான் போயிட்டு வந்துக்குறேன்”
“ஒ...தாங்க்யு பேபி...உப்ப் இதுக்கு தான் நீ வேணும்னு சொல்றது. என்னைச் சரியா புரிஞ்சிக்கிற அதும் சரியான நேரத்துல” அவள் கன்னம்பற்றிச் சிரித்தவன் “சரி நேரமாச்சு தூங்கலம்டா” என்று கூறி அவளை அனைத்து படுக்க முகத்தில் வலியுடன் அவனுடன் வாகாய் பொருந்தினாள்.
ஐந்தாம் மாதம் அவள் பெரியம்மா வீட்டிலிருந்து பூச்சுடலுக்கான ஏற்பாட்டைச் சொல்ல அவளுள் மகிழ்ச்சி குமிழியது. ஆசை ஆசையாய் காத்திருந்தாள். சிறுவயது முதல்லே ஒற்றை பெண்ணாய் பிறந்ததாலோ என்னமோ மக்கள் கூட்டம் என்றால் அவளுக்கு மகிழ்ச்சி. எந்த ஒரு விஷேசம் என்றாலும் குதித்துக்கொண்டு திரிவாள். இதுவோ திருமணம் முடிந்து அவளுக்கே அவளுக்கான நிகழ்ச்சி, அவர்களின் புது வரவுக்கான நிகழ்ச்சி.
ஆசையாசையாய் வீராவிடம் சொல்ல
“என்றைக்கு கண்ணம்மா?”
“DD/MM” அவள் கூற
“அன்றைக்கா? ம்ம்...வேற தேதில்ல வைக்க முடியாதாடா?” சற்றே யோசைனையோடு அவன் கேட்க
“இல்லை அன்றைக்கு நாள் நல்லா இருக்குனு பெரியம்மா சொன்னங்க” தயக்கமாய் கூற
“ஓகேம்மா நம்ம வீட்டில் தானே? சரி தான்” அவன் சரியெனச் சொல்லும் வரை அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தவள் பின் முகம் மலர அவனைக் கட்டிக்கொண்டாள்.
முதல் நாளே அனைவரும் வந்துவிட அங்கே இங்கேயெனச் சுற்றிக்கொண்டு இருந்த சிட்டுக்களும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த பெரியவர்களும் அவள் வயது நபர்களோடு கதைகளும் பேசியபடி அன்றைய நாள் முழுவதும் சந்தோசமாய் புன்னகையுடன் திரிந்தாள். மாலை சற்று முன்னதாகவே வீட்டிற்க்கு வந்துவிட்ட கணவன் அதற்க்கு மேலும் தேன் பூசிய பலாசோலையானான்.
குதுகலத்தோடு அவனை நோக்கி வேகமாய் நகர்ந்த சகி சற்றே புடவை தடுக்க
“சகி...பாத்தும்மா” என்று பதறி இவன் தாங்க
“வயித்துபுள்ளதாச்சி இப்படியா தலைகால் புரியாம புருசன கண்டா ஒடுவ” ஒரு பெரியவர் அதட்ட
“அவங்களுக்கு காலைல இருந்து புருஷன காணாம கண்ணு பூத்தே போச்சு...இப்போ அவங்கக்கிட்ட ஓடாம உனக்கு வெத்தலை பாக்கா மடிச்சி கொடுத்துட்டு இருக்கும்” நடுவயது பெண்மணி கேலி பேச
முகம் செக்க செவேல் என்று சிவந்த சகியை ஒரு நொடி ரசித்தவன் பின் அது பொய்யோ எண்ணும் வண்ணம் முகத்தைச் சாதாரணமாய் வைத்து “சகி...மேலே நம்ம ரூம்க்கு வா” என்று கூறிவிட்டு போக
“ஒஹோ.........” என்று இளவட்டங்கள் கத்த அவர்களை அடக்கியபடி காப்பியுடன் மேலே சென்றாள்.
யாருடனோ கைபேசியில் பேசியபடி அவள் கொடுத்த காபியை அருந்தியவன், பேசிவிட்டு அவள்புறம் திரும்பினான்.
“பேபி...” அவன் முகமே ஏதோ தவறாக உணர்த்த கலவரமாய் அவனைக் காண
“நான்...அவசரமா நாளைக்கு மும்மை கிளம்பனும்” அவள் சந்தோஷம் மொத்தத்திலும் அவன் வெந்நீரை கொட்ட திகைத்து விழித்தாள்.
“ஐ நோ, நாளைக்கு பங்க்ஷன் வைத்துட்டு இப்படி சொல்ல எனக்கும் சங்கடமா தான் இருக்கு ஆனா, ஒரு சிக்கல் ஆகிடுச்சு திடீர்ன்னு போக வேண்டிய நிலைமை. ஹோப் யு அன்டர்ஸ்டாண்ட்”
அவள் எப்படியும் புரிந்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் அவன் பேச அதைக் கலைக்க விரும்பாமல் சிறிது நேரம் அமைதியாய் தன்னை நிலை படுத்திக்கொண்டாள். எப்போதும் போல் ஒரு சிறு புன்னகையை முகத்தில் பூசிக்கொண்டவள்
“எப்போ ப்ளைட்?” என்று கேட்க
“ஊப்ப் குட்டிம்மா” என்று இவனும் தளர்ந்தவன் “மார்நிங் ஐ கேன் பி ஹிர் ஒரு ஒரு மணி நேரம் என்னால பங்க்ஷன்ல இருக்க முடியும் அதை நிறுத்த வேணாம். அப்புறம் தான் நான் கிளம்பனும்....உங்க வீட்டில...”
“நான் பேசிக்கிறேன்ங்க”
“தேங்க்ஸ் தேங்க் யு”
.....................................................................................................
முதல் மூன்று மாதம் மசக்கை என்றால் அதன்பின் பார்பதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று ஒரு ஊந்துதல். அவளுக்கு நா நமநம என்றது. பின் ஏழாம் மாத தொடக்கத்திலிருந்து ஏதோ ஒரு உருவமில்லா உருண்டை நெஞ்சை அடைத்துக்கொண்டு கிழேவும் இறங்க மாட்டேன் மேலேவும் வரமாட்டேன் என்று அடம்பிடிக்க ஆரமித்தது. எதையுமே ஓரிரு வாய்மேல் உண்ண முடியாமல் வயிறு தம் என்று உணர்வோடு இருந்தது.
எட்டாம் மாதம் தொடங்கி நாட்கள் நகர நகர அடிவயிற்ரை எப்போதும் முட்டும் உணர்வு. சிறுநீர் வருவது போலவே ஒரு வகை உணர்வு ஆனால் உணர்வு மட்டுமே வரவில்லை. இரவெல்லாம் தூங்கா இரவானது உள்ளே இருக்கும் சின்ன வாண்டின் உருளலால்.
எப்போதும் கணவனின் கவனம் கலையா வண்ணமே சகித்து கொள்வாள் அனைத்தையும். பெண்ணின் குழந்தைபேறுகாலம் முழுமையும் அனுபவிக்கும் ஒவ்வொரு வலியும் அவஸ்த்தையும் கணவனின் தோள் சாய்ந்தே கறைப்பால் பெண்ணவள், இங்கோ அதற்கான வழியே இல்லை என்றானது.
பெண்களின் பல கஷ்டங்களில் மிக முக்கியமானது பிரசவ சுமை. அப்படி என்ன சங்கடங்கள் என்று அறியாமல் இருக்கும் பல கணவன்மார்களின் ஒருவனாய் இவனும் இருந்தான். முதலில் எல்லாம் அவளின் சோர்வை கண்டு அக்கறை காட்டியவன் அதன் பின்னான அவள் இயல்பு நிலை கண்டு தன் வேலையில் முழ்கி போனான் எப்போதும் போல்.
தன் வேதனை தான் கூற முடியவில்லை என்றால், சந்தோசமான குழந்தையின் நகர்வைக் கூடப் பகிர முடியவில்லை முதல் தடவையை தவிர. ஆசையாய் ஸ்பரிசித்தவன் அடுத்தடுத்த நேரங்களில் அதை உணர முடியாமல் வேலை பளுவில் மூழ்கினான். அப்படியான ஒவ்வொரு விஷயமும் அவளுக்கு அழுத்தத்தைக் கொடுத்தாலும் அனைத்தையும் மனதிலேயே பூட்டி வைத்தாள். மொத்தமாய் வெடிக்க போவது அறியாமல் இருவரும் இன்றைய நாளைக் கடந்தனர்.

வளைகாப்பு அன்றும் இப்படி ஏதும் நடக்காமல் நல்லபடியாகவே முடிந்தாலும், தாய் வீட்டிற்கு அனுப்பாமல் தன்னுடனே இருத்திக்கொண்டான் வீரா.
“நான் பாத்துக்கிறேன்...எனக்குச் சகி இல்லாம கஷ்டம்...சம்ருதாயம் எல்லாம் வேணாமே அவ இங்கயே இருக்கட்டும்” சொல்லிவிட்டு அவன் விலக இவள் தான் பெரியவர்களிடம் மாட்டிக்கொண்டாள். வீராவின் தாயும் இந்தியா வந்துவிட சற்றே அவர்களைச் சமாளித்து அனைவரையும் வழி அனுப்பினர் மாமியாரும் மருமகளும்.
மகனைப் பற்றி அறியாத தாய் உண்டோ? ஆனால் திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே மகளுடன் தங்க சென்று இப்போது தான் வந்திர்ப்பவர். மகனின் கோரிக்கையில் அவனிடம் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்றே எண்ணினார். பின்னே யாரையும் எதிர்பாகாமல் வாழும் மகன், மனைவியைத் தளப்ரசவத்திற்க்கு கூட அனுப்பவில்லை என்றால் அவரும் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?
ஒன்பதாம் மாத தொடக்கத்தில் வளைகாப்பு வைத்ததால், பிரசவத்திற்கு இன்னும் பதினைந்து நாள் இருக்கும் நிலையில், வீராவின் அம்மா குழந்தை நல்லபடியாய் பிறக்க வேண்டும் என்று வேண்டியபடி பழனி சென்று வருவதாய் கூறி சென்றார், மகனின் மேல் இருக்கும் நம்பிக்கையில்!?
எப்போதும் போல் அலுவலகம் சென்று வந்தவன் எப்போதும்விட சோர்வாய் மிகவும் களைப்புடன் வீடு திரும்பினான். நுழையும்போதே வரவேற்பறையில் அமர்ந்து இருந்த மனைவியைக் கண்டு லேசாய் புன்னகைத்தவன் மேலே தங்கள் அறை நோக்கிச் செல்ல இவளும் மெது மெதுவே அவன் பின்னோடு சென்றாள்.
சிறு குளியல் ஒன்றை போட்டவன் இரவு உடையுடன் வெளியே வர இவள் படுத்திருக்கவே தன் கணினியை எப்போதும் போல் உயிர்பித்தான்.
பொதுவாகவே இந்த மாதிரி சமயங்களில் மூட் ஸ்விங் எண்ணும் மனநிலை மாற்றம் அவளை வாட்டினாலும் எதையும் வெளி காட்டாமல் இருந்தாள் யார் மீதும். அன்று பார்த்து மிகவும் மன அழுத்தமாய் இருக்க ஒருவகையான பயம் மனதை கவ்வ கணவனின் துணையை மிகவும் நாடியது. அவனைத் தேடி வந்தவள், சற்றே கண்ணசந்துவிட சிறிது நேரத்திலேயே விழித்தவளின் கண்களை எட்டியது மடிகணினியுடன் அமர்ந்திருக்கும் வீரா. சுள்ளென்ற கோவம் வெடிக்க
“நான் இவ்வளவு சோர்வா இருக்கேனே என்ன ஏதுன்னு ஏதாவது உங்களுக்குக் கேட்கனும்னு தோணுதா?” திடீரெனச் சத்தமாய் பேசிய மனைவியை ஒரு திடிகிடளுடன் கவனித்தான் வீரா. அவள் அப்படி பேசி இந்த ஒன்றை வருடத்தில் அவள் பார்த்ததே இல்லையே?
“என்னாச்சும்மா?” அவனுமே சோர்வை இருந்தாலும், ஒரு முக்கியமான ப்ராஜெக்ட்டில் அவன்கீழ் இருக்கும் அணி சொதப்பிவிட இன்றைய இரவுக்குள் அதை முடித்து அனுப்பவேண்டிய கட்டாயத்தில் அவன் அனைவரும் செய்து அனுப்பும் வேலையைச் சரி பார்த்தபடி இருக்க அதை முடித்து அனுப்பும் தருவாயில் மனைவியின் திடிர் தாக்குதலில் முதலில் ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு.
“ஒரு நிமிஷம்” என்று கூறி வேலையை முடித்ததை சரி பார்த்து மின்அஞ்சல் அனுப்பியவன் நிமிர
தான் இவ்வளவு கோவமாய் பேசியும் அவன் அவனின் வேலையைப் பார்பதை வெறித்தவள் அவன் நிமிரும்போது அங்கு இல்லை. இறங்கி கீழே வர ஆரமித்து இருந்தாள். அவளின் திடீர் கோவமும் அதன் பின்னான விலகலும் சட்டென அவனைப் பாதிக்க அவனும் பின்னோடு எழுந்து சென்றான்.
“சகி....” அவன் கூப்பிட அவள் நிற்கவில்லை
“சகி நில்லுன்னு சொல்லுறேன் இல்லை?” சற்றே அழுத்தம்மாய் உரைக்க
பாதி படிகளைக் கடந்து இருந்தவள் சட்டென நின்னு மேலே நின்றுக்கொண்டு இருந்த அவனை ஏறிட்டாள்.
“நீங்க நின்றீர்களா?” அவளும் முதல் முறையாய் ஒருவகை அழுத்தமாய் கேட்க அவன் புரியாமல் முழித்தான். அதைக் கண்டு கசப்பாய் முறுவலித்தவள் மேலும் கீழே இறங்க. அன்று வரை அவள் புன்னகையில் உள்ள வலியை உணராதவன் முதல் முறையாய் அதைக் கண்டுகொண்டான்.
“சகி...?”
“ஒன்றை வருஷம்...முழுசா முடிஞ்சி போச்சு...உங்கள புரிஞ்சிக்கணும் புரிஞ்சிக்கணும்னு நினைச்ச நான் இன்னைக்கு வரைக்கும் நீங்க என்ன புரிஞ்சிபீங்கனு நினைச்சேன்...நான் ஒரு முட்டாள்.” அவள் ஆங்காரமாய் கத்த
“குட்டிம்மா?” அவள் திடீர் ஆவேசத்தின் அர்த்தம் புரியாமல் நின்றான்.
“முதல்ல பரவாயில்லை...ஆனா...ஆனா...இப்போ நமக்குன்னு ஒரு குழந்தை வரபோகுது...”சற்றே மூச்சு வாங்க அவள் பேச
“நீ கொஞ்சம் அமைதியாகுடா”
“வேணாம்...இந்த மெஷின் வாழ்க்கை வாழ்ந்து வாழ்ந்து எனக்குக் கழுத்தை நேரிக்குது......” அவள் சொல்ல அவன் திகைத்தான்
“இல்லம்மா...சாரி...எனக்குத் தெரியலை…நான்...இனி...நான்…” அவன் திணற
“ஹே...என்ன? சரி கண்ண மூடுங்க”
“ஏன்ம்மா?”
“ம்ம்...க்ளோஸ் இட்” அவள் உரைக்க அவனும் தன் இமைகளை மூடினான்.
“இப்போ நான் என்ன உடை போற்றுக்கேன்னு சொல்லுங்க பக்கலாம்” புருவங்களைச் சுருக்கியவன் இடவலமாய் தலையை ஆட்டினான்.
“தெரியுதா? நான் எதுக்கு கோவபடுறேன்னு?” சொல்லிவிட்டு அவள் திரும்பக் கட்டியிருந்த புடவை தடுக்கி அப்படியே பின்னால் சரிந்தாள்... “அம்மாமாமா.....” என்ற அலறலுடன், கடைசி இரண்டு படிகளில் நின்று இருந்தாலும் வயிற்றில் உள்ள கணம் தாளாமல் இடுப்பில் சுருக்கென வலி இழுத்தது.
“சகி............”
கத்தியபடி அவன் ஓடி வந்து அவளைத் தாங்க, சற்றே இடுப்பை பிடித்தபடி அவள் அவனிடமிருந்து விலகிப் படிதூணிலேயே சாய்ந்து அமர்ந்தாள்.
“கண்ணம்மா?” அவள் கண்கள் கலங்கி உதட்டைக் கடித்து தன் வலி பொறுக்க, அவன் மனதில் பிசைந்தது.
“நம்ம குழந்தை உருவானதுல இருந்து இப்போ வரைக்கும் ஒரு ஒரு நாளும் எவ்வளவு விஷயங்கள் சொல்ல இருக்கும் தெரியுமா?”
“ஹோஸ்பிட்டல் போலாம்டா ப்ளீஸ்.....” அவன் கெஞ்ச அவள் மறுத்தாள்.
“முதல் மூணு மாசமும் வாந்தி வாந்தியா வரும் கண் தொறக்கவே முடியாம இருட்டினு வரும்....உங்க தோள் சாஞ்சி அழனும் போல இருக்கும்...” அவள் தவிப்பை இப்போது உணர்பவனாய் அவன் தவிக்க அவளோ விட்டத்தை வெறித்தாள்.
“சாதாரண பேறுகாலம்னு தான் நானும் நினைச்சியிருந்தேன் ஆனா...அனா...எவ்வளவு பேர் இருந்தாலும் உங்கள தானே என் மனசு தேடுச்சு....அஅ...” அவள் இடுப்பை பிடித்தபடி வலியில் முனக அவன் கண்களில் நீர் தேங்கியது.
“எதுவுமே சாப்பிட முடியாம திடிர்னு அழணும்னு திடிர்னு சிரிக்கனும்னு கொஞ்சிக்கனும்னு, மடில தலை சாய்த்து படுத்துக்கணும்னு... அப்புறம்...கொஞ்சம் சாதாரணம் ஆகிடுச்சு...நானும் என்னையே தேதிக்கினேன்......” அவள் பல்லைக் கடித்தபடி பேச அவன் துடித்தான்
“சாரிமமா...சாரி...இப்போ வாடா...ப்ளீஸ்...”
“எனக்கு ஒன்னுமில்லை” அப்போதும் அவன் தவிப்பை குறைக்க தன் வலி மறைக்க, அவன் கை அவளுடையதை பற்றியது.
“எல்லாமே சாப்பிடனும்னு தோணும் ஆனா ரெண்டு வாய் மேல எறங்காது...இரவு முழுசா தூங்க விடாம உள்ள ஏதோ உருண்டுட்டே இருக்க மாதிரி இருக்கும்...” சின்ன வலியுடன் கூடிய சிரிப்பு அவளில் “எல்லாம் குட்டி தான் இப்போவே அம்மாவ பாடாய் படுத்துது....”
அவள் கூற அவளுக்குத் துணையாய் இல்லாமல் போனோமே என்று கூசி போனான், அவனுடைய பிள்ளையும் அல்லவா? தாய் உடம்பில் சுமந்தாள், தந்தை மனதில் சும்மக்க வேண்டும் அல்லவா? ஆனால் அவன் ஓடி ஓடிச் சம்பாதிப்பது அவர்களுடைய வளமான வாழ்வுக்காகத் தானே?
“கால்லாம் பயங்கரமாய் வீங்கிடுச்சு தெரியும்மா? சித்ரா தான் தைலம்லாம் தடவி உருவிவிட்டு சுடுதண்ணிலாம் வெச்சி அமுக்கி விடுவா” இப்போது அவள் கால்களை அவன் துன்பமாய் வருட
“சரி...சங்கடங்கள விடுங்க...முதல் ஸ்பரிசம் அப்புறம் உங்ககிட்ட குட்டியோட ஒரு ஒரு நகர்வும் சொல்லிச் சந்தோச படனும்னு எவ்வளோ தவிப்பேன் தெரியுமா?” சின்னப் பிள்ளைபோல் சின்னுங்க அழுகையுடன் கூற “குட்டிக்கு நம்ம பேசுறதுலாம் இப்போவே கேட்குமாம் தெரியும்மா? நம்ம ரெண்டு பேரும் ஒன்ன குட்டிக்கூட பேச எனக்கு எவ்வளவு ஆசை தெரியும்மா?” தேம்பலாய் அவள் கூற
“குட்டிம்மா...மன்னிச்சுடுடா....எனக்கு…எனக்குத் தெரியலைம்மா” அவன் அழுகையாய் அவன் வயிற்றில் புதைய, எதையெல்லாம் இழந்திருக்கிறோம்...கடமை கடமையென ஓடிக் காதலை மறந்தோமேயெனக் கூனி குறுகி போனான்.
“வயிறு வளர வளர ஏதோ அடிவயித்த முற்ற மாதிரியே இருக்கும்...தொண்டை வரை ஏதோ அடைச்சு வெச்ச மாதிரி இருக்கும்...ம்ம்...”அவனை அருகே அழைத்தவள் அவன் நகர...”பாத்ரூம் வர மாதிரியே இருக்கும்...அழுத்தமா போகக் கூடாதுன்னு டாக்டர் வேற சொல்லிட்டாங்க...” அவள் அடமாய் கூற அதனின் சங்கடங்கள் புரிந்தவனாய் அவன் தவித்தான் இப்போது.
மிகவுமே கடினமான நேரங்களில் அவளுடன் தான் இல்லாது போனோமே என்று மறுகினான் தன்னை எவ்வளவு தூரம் தேடியிருப்பாள் என்பது புரிய மன்னிப்பை தவிர வேற ஏதும் சொல்ல முடியவில்லை.
“மன்னிச்சுடு கண்ணமா இனிமேல் நான்....”
“அம்மாமா....” அவள் அலறலில் அவன் தவிக்க...
“முடியலை....வலிக்குது” சிறு குழந்தைபோல் தேம்பி தேம்பி அழுதபடி அவள் இடுப்பை பிடித்துக்கொண்டு பக்கவாட்டில் சரிய
“சகி....சகி........” அவள் கன்னம் தட்ட அப்போது தான் உள்ளே நுழைந்த அவன் தாயார் பதறிக்கொண்டு உள்ளே ஓடி வர
“வீரா...என்னப்பா? என்னாச்சு?” தன் வயதையும் மீறி அவர் ஓட
“அம்மா...சகி........”
“தூக்குப்பா.......ஆஸ்பத்திரி போலாம் சீக்கிரம்” அவர் சொன்னபின்னே தன் சுயம் அடைந்தவன், பரபரப்பாய் செயல்பட தேவையான அத்யாவசிய பொருட்கள் சிலதை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.
இதுவரை இப்படியொரு சிறு மருத்துவமனையில் அவர்கள் நாடியதில்லை. இருக்கும் சூழ்நிலைக்குப் பணம், பதவி, அந்தஸ்த்து, அனைத்தும் தவிடுபொடியாக்கப் பயம் பயம் பயம் மட்டுமே.

“அவங்க ஹஸ்பன்ட் உள்ள கூப்பிடுங்க” மருத்துவர் சொல்லவே அந்தச் செவிலியர் அவனை அழைக்க வெளியே ஓடினார் நிலைமையில் தீவிரம் புரிந்து.
உள்ளே வந்தவனை பார்த்த அந்த வயதான பெண்மணி “சார்...எவ்வளவு சொல்லியும் அவங்க ஒத்துழைக்க மாற்றங்க...இப்படியே போச்சுனா தாய் சேய் ரெண்டு பேர்க்குமே ரிஸ்க்...பிபி ஹையா இருக்கு. சிகிச்சை பண்ண வலிப்பு வர வாய்ப்பு இருக்கு. சோ, இயற்க்கை பிரசவம் தான் ஆகனும். நல்லா மூச்சை இழுத்து விட்டுப் புஷ் பண்ண சொல்லுங்க முக்கச் சொல்லுங்க...தலை வெளியே வந்துட்டா பரவாயில்லை இல்லைனா.......” அவர் சொல்லமால் விலக அவன் உயிர் நின்று துடித்தது.
வாடிய கொடியாய் அவள் படுத்திருக்க அவளருகில் வேகமாய் சென்று அவள் கைகளைப் பற்றினான். அவன் ஸ்பரிசத்தில் கண் விழித்தவள் மீண்டும் கண்களை மூடிக்கொள்ள
“பேபி...சகி...ப்ளீஸ்...ட்ரை இட்”
“ம்ம்....”
“என்னைப் பாரும்மா…சகி...” லேசாய் அவள் கன்னம் தட்ட அவள் முழித்தாள்
“நம்ம பேபிம்மா உள்ளே கஷ்ட படுது. ப்ளீஸ்டா நான் சொல்லுறது கேட்குதா?”
“வீ....ரா....” அவள் கண்கள் கசிய
“பேபி மூச்சை இழுத்து விட்டுப் புஷ் பண்ணும்மா...நான் இருக்கேன் கூட...ட்ரை பண்ணும்மா தயவு செய்து...” அவன் துடிக்க அவன் கண்களின் தவிப்பை கண்டவள் அவன் சொன்ன படி முயற்ச்சிக்க ஆரமித்தாள்.

இன்றைய காலகட்டத்தில் பலர் வீட்டில் நடப்பது இது. சில வருடங்கள் முன்பானால் பெண்களில் வலிகளைப் புரிந்துக்கொள்ளா கணவன்மார்கள் அதிகம். அதைவிட பெண்களின் எந்த வலியையும் வெளியே சொல்வதே பெரும் பிழை. பூட்டி பூட்டி வைத்தே ஆண்களுக்குப் பெண்களின் கஷ்டங்கள் புரியாது போனது. பெண்கள் தெய்வ பிறவி என்று கூறுவது தற்பெருமைக்காக அல்ல. ஒருநாள் இருநாள் வலிக்கே உயிர்போவது போல் துடிக்கும் நம்மில் பலர் இருக்கின்றோம். வாழ் முழுவதும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு வலியைத் தாங்குகிறாள் பெண்ணவள்.
இயற்க்கை தான். உடல் வலி தான். ஆனால் மனதைரியம் மட்டுமே இதைத் தாங்கும் சக்தியை அனைத்து பெண்களுக்கும் கொடுக்கிறது. திருமணத்திற்கு முன்பு வரை பெண்ணாய் தாயாய் பெற்றவள் அந்த மனவலியை கொடுக்கத் திருமணதிற்கு பின் கணவனையே மனம் நாடுகிறது பெண்ணவளுக்கு.
பணம், சொகுசு, பதவி, தேவை, தகுதி, ஆசையென அனைத்தையும் தான் கொடுக்கிறோமே என்று கூறும் பல ஆண்களுக்குப் புரிவதில்லை, அதெல்லாம் இல்லாவிட்டால் சரமம் தான் படுவாள் என்றும், துணை, மனசக்தி, அமைதி, அன்பு, பாசம், பரிவு, ஆதரவு, இதெல்லாம் இல்லாவிட்டால் உடைந்தே போவாள் என்று.
பிரசவம் – ஒரு மறுபிறப்பு. அதில் தோண்ட தோண்ட புதைந்து இருக்கும் பெண்ணவளின் பயம். அதைப் போக்கும் சக்தி அவளவனுக்கு மட்டுமே அதிகம் இருக்கும் என்று புரிய வேண்டும்.
இக்காலத்தில் அனைத்தும்...பெண்களின் அனைத்து ஸ்ரமமும் எதிர்பாலான ஆண்களுக்குத் தெரிந்தாலுமே புரிந்துக்கொள்ள முயலாமல் அதனால் என்ன, என்று தான் விலகிப் போகின்றனர்.
**தெரிந்தாலும் புரிந்துகொள்ளா ஒரு நிலை**

“ங்க...ங்க...அ....ங்க...அ.....” பளீர் அழுகையுடன் இவ்வுலகுக்கு வருகை தந்தாள், சகி-வீராவின் புதல்வி. சந்தோச பூரிப்பில் முகம் நினைய தன்னவளை நோக்க அவளும் லேசாய் இதழ் விரித்தாள்.
“சார் இந்தாங்க” செவிலியர் குழந்தையைக் காட்ட
கண்கள் சொருகும் மனைவியைக் கண்டவன் குழந்தையை வாங்காமல் “நர்ஸ்...டாக்டர்...சகி....” அவன் பயப்பட
“ஒண்ணுமில்லை சார்...பிரசவ மயக்கம் தான்.” அவர் கூற அப்போதும் ஒருமுறை அவள் முகத்தை வருடி நெற்றியில் முத்திரை பதித்து விலகியே தன் மகவை கையில் ஏந்தினான். ரோஜா குவியலென இருந்தாள், ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவள்.
அதன்பின் வந்த நாட்கள், மாதங்கள், வருடங்கள், ஏன் அந்தப் பிறப்பு முழுவதும் வாழ்ந்தான் வீரா, தானும் மறுபிறப்பு எடுத்தவனாய்.

வீரா மாறிவிட்டான்...!!! சகியோ அவர்கள் மாகவோ மாற்றிவிட்டாள் என்று கூட வைத்துக்கொள்ளாம். நம்மில் பலர் மாறப் போவது எப்போது? மாற்றப் போவது எப்போது?
இதெல்லாம் வெளியே சொல்லக் கூடாது, தெரிய கூடாது, அது தப்பு இது தவறு, என ஒவ்வொரு விடயத்தையும் மறைத்து மறைத்தே பெண்களின் துன்பம் ஆண்களுக்குப் புரியாமலே போய்விட்டது.
ஒரு ரசம் தானே வைத்தாய், ஒரு குழம்பு தானே செய்தாய், வீட்டில் தானே இருக்கிறாய், வெறும் தூரம் தானே லேசான இடுப்பு வழிக்குப் படுத்துக்கொண்டே இருப்பாயா வேலை எல்லாம் யாரு செய்றது?, தொட்டதுக்கெல்லாம் செலவா? வீட்டில் இருக்க எதுக்கு இது? எதுக்கு அது? ஐயோ எனக்குத் தலை வலிக்குது, உடம்பு வலிக்குது, நாளெல்லாம் வேலை பார்த்துட்டு வந்தா வீட்டிலையும் உன்னால ஏதும் செய்ய முடியாதா? வெட்டியாய் தானே இருக்கிறாய்? இன்னும் பல பல சொற்கள்..............தினம் தினம் பெண்கள் சகித்து போகும் விஷயங்கள்.
இதெல்லாம் ஒரு விஷயமா என்று எழுதிருக்கிறது என்று யோசிக்கிறீகளா? ஒரே ஒரு நாள் உடல் வலியுடன் நாள் முழுவதும் ஓடி ஓடி வேலை செய்து தூங்க கூட முடியாமல் தவித்து ஒரு ஆறுதல் வார்த்தை கூடக் கிடைக்காமல் இருந்து பாருங்கள். உடலின் வலியைவிட மனவலி அதிகம் என்று புரியும்.
வீராவாக ஊதாசினமாய் இருப்போரும் சகியாய் சகித்து போவோரும் இனியாவது மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். இனி பிறக்கும் மகவுகளாவது பிறர் வலியைப் புரிந்து, அறிந்து, சார்ந்து, தாங்கி, வாழட்டுமே...?!
நன்றி...!!!
மகிழ் குழலி

****************