dharshini chimba
Saha Writer
- Messages
- 308
- Reaction score
- 228
- Points
- 43
30. சந்தேகத்தின்...உண்மை
'என்ன சொல்கிறாள் இவள் ? குழந்தையிடம் கூறியதெல்லாம் நடக்க போகிறது என்றால் என்ன அர்த்தம்? இவள் குழந்தையுடன் தங்க போகிறாளா? அப்படியென்றால் எங்களுடன் தங்கபோகிறாளா?"' என்று அவள் கூறியதையே நினைத்து குழம்பிக்கொண்டிருந்தான்.'என்னை விரும்புகிறாளா? இது எப்படி சாத்தியமாகும் நான் ஏற்கனவே திருமணம் ஆனவன்... அதுவும் ஒரு குழந்தைக்கு தந்தை. என்னை எப்படி? இல்லை ... எது எப்படி ஆனாலும் இதை நடக்க விடகூடாது இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்." என்று முடிவெடுத்தான்.
அங்கே வர்ஷினியின் எண்ணத்தில் சர்வதா கேட்ட கேள்வி ஒன்று ஓடி கொண்டிருந்தது.
"அம்மா உங்க....துக்கு..... சோ....ட்டோ...ல..... உதடுக்கு கீழ கருப்பா குட்டி..யா ஒன்னு இது...தே இப்ப எங்கே?" என்றாள்.
"எந்த போட்டோலமா?" என்று கேட்க”வீட்டு..த.... நீங்க....தும்... அப்பா....வும் இருந்த சோ...ட்டோ...ல" என்றது குழந்தை.
"செல்விக்கு மச்சம் இருந்தது போல அதை தான் கேட்கிறாள்?" என்று நினைத்துக்கொண்டு அவளின் லாக்கெட்டில் இருந்த செல்வி போட்டோவை உற்று பார்த்தாள். அதில் செல்விக்கு மச்சம் இருந்தது.
"அம்மா உங்க சொ...டோ...வ எதுக்கு இப்படி பா...க்தி...ங்க?" என்றவுடன் சிரித்து மழுப்பிவிட்டாள்.
'உலகத்தில் ஒரே போல் ஏழு பேர் இருப்பதாக கூறுவார்கள். ஆனால் எப்படி ஒரே இடத்தில பக்கத்து பக்கத்தில் இருக்க முடியும்? எப்படி செல்வியும் நானும் ஒரே இடத்துல ஒரே மாதிரி இருக்க முடியும் இதுல எதோ தப்பா இருக்க மாதிரி இருக்கே?' என்று யோசித்தவள். தனக்கு தெரிந்த ஒருவருக்கு போன் செய்து விவரத்தை கூறி செல்வியின் உடன்பிறந்தோர் பற்றி மிக நுணுக்கமாக விசாரிக்க சொன்னாள்.
அவரும் இரண்டு நாளில் பதில் கூறுவதாக கூறியுள்ளார்.
வீட்டிற்கு வந்தவள் தாத்தாவிடம்,”தாத்தா எனக்கு அக்கா தங்கை யாராவது இருக்காங்களா?" என்றாள்.
"இல்லைடா வர்ஷு.” என்றார்.
"தாத்தா நான் பிறக்கும்போது நீங்களும் பாட்டியும் அம்மாகூடயா இருந்திங்க?' என்றாள்.
"இல்லடா உங்க அம்மாவை ஹாஸ்பிடல்ல சேர்க்கும்போது நான் இங்க இல்ல... ஒரு வாரம் லண்டன் போயிருந்தேன். வந்தா நீ இருந்த. ஏன்?” என்று சிரித்தார்.
"இல்ல தாத்தா சும்மா கேட்டேன்" என்று கூறிவிட்டு தன் அறைக்கு போய்விட்டாள்.
"அப்போ ஏதோ நடந்துருக்கு? என்னவா இருக்கும்?" யோசித்து குழம்பியவள் அப்படியே உறங்கிப்போனாள்.
சரவணன் வீட்டில் சர்வதாவிற்கு சாதம் ஊட்ட”அ....ப்பா அ...ம்மா சூப்ப......ரா கதை சொன்னா.....ங்க" என்று விழிகளின் கருமணி மகிழ்ச்சியில் மின்ன கூறியதை கண்டு அவன் மனம் கலக்கமுற்றது.
'குழந்தை எங்க ஆரம்பித்துவிட்டாள்.' என்று தான் நினைத்தது நடந்துவிட்டது போல் தோற்றியது அவனுக்கு.
வர்ஷினி குழந்தையின் மனதில் அம்மா இருப்பதாக தவறான கருத்தை விதைத்துவிட்டாள்.
"என்ன செய்ய போகிறேன் நான்?" என்று குழம்பினான்.
'நாளைக்கு வரட்டும் அவளை இனி வரவே கூடாதுன்னு சொல்ல்லிடனும்' என்று யோசித்து கொண்டே சாப்பிட்டு முடித்தான்.
தூங்குவதற்காக அவனின் மடியில் படுத்து கொண்டிருந்த குழந்தை”அப்பா அம்மா என....க்கு பா....ட்டு சுப்ப....ரா பாதி....னாங்க நீயம் பா..து பா" என்றது.
கண்களை மூடிமனதில் அவனுக்கு தெரியாமல் குடி புகுந்தவளை அர்ச்சனை செய்து கொண்டு பாட ஆரம்பித்தான்.
"நிலவே என்னிடம் நெருங்காதே. நீ நினைக்கும் இடத்தில நான் இல்லை...
மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நான் இல்லை ............" என்று பாட ஆரம்பித்தான்.
தலையை கோதிக்கொண்டே பாடியதில் குழந்தை தூங்கி இருந்தது.
மறுநாள் வர்ஷினி சர்வதாவை பார்க்க செல்லவில்லை.
குழந்தை”அம்மா ஏன் வரல?" என்று கேட்க ஆரம்பித்து விட்டாள். என்ன சொல்வது என்று தெரியாமல் மிகவும் திண்டாடி போனான் சரவணன்.
மறுநாளும் வரவில்லை.”அவ்ளோதான். இனி வரமாட்டாள். குழந்தையை எதாவது சொல்லி சமாளித்துவிடலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் போது வந்தாள் வர்ஷினி.
"இப்ப எதுக்கு வந்த?" என்று கோபமாக கேட்டான்.
"நான் சர்வதாவை பார்க்கணும்" என்று கூறினாள் குனிந்தபடி.
"இல்லை. நீ பார்க்கமுடியாது. ரெண்டு நாளா உன்னை கேட்டு என்னை ரொம்ப தொந்தரவு பண்ணிட்டா. இப்ப தான் ஏதோ சொல்லி சமாளிச்சிறுக்கேன். ப்ளீஸ் நீ போய்டு" என்றான் அவளின் விழிகளை நோக்காமல்.
"இல்லை. இனி அவளோட அம்மாவா நான் இருக்க தான் போறேன்" என்றாள் துணிவாக.
"நடக்காதத பத்தி ரொம்ப யோசிக்கிற" என்றான் சற்று காட்டமாக.
"நீங்க என்னை அவகிட்ட இருந்து விலக்கி வைக்கணும்னு நினைச்சாலும் நான் விடமாட்டேன்" என்றாள்.
"உனக்கு சொன்னா புரியாதா? இதனால உங்க ரெண்டு பேரோட வாழ்கையும் பாதிக்கும். உனக்குன்னு ஒரு வாழ்க்கை வரும்போது பெரிய பிரச்சனையாகும். அதனால நீ போய்டு." என்றான்.
"எனக்கு கல்யாணம் ஆகும்போது இதெல்லாம் நடக்கும்னு சொல்றிங்க இல்ல? ஆனா எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்ல... நம்பிக்கையும் இல்ல... அப்படி ஒன்னு என் வாழ்க்கைல நடக்க போறதும் இல்ல." என்றாள் வர்ஷினி.
"அது உன் தனிப்பட்ட விஷயம் அதுல நான் தலையிட விரும்பலை” என்று அவன் உதடு கூறினாலும் அவன் மனதில் ஊசி தைப்பது போல் ஒரு வலியை உணர்ந்தான்.
"முடிவா என்ன தான் சொல்றிங்க?" என்று அவனை பார்த்து கேட்டாள்.
"எங்க வாழ்க்கைல நீ வராதன்னு சொல்றேன்" என்றான் அழுத்தமாக.
சற்று நேரம் அவன் விழிகளை நேருக்குநேர் உற்று பார்த்தவள். அவன் அவளை பார்க்காமல் தடுமாறுவதை கவனித்துவிட்டு.”அப்ப நான் சொல்றதை கேட்டுக்கோங்க. இதுவரைக்கும் சர்வதாக்கு மட்டும் தான் அம்மாவா இருக்கணும்னு நினைச்சேன். ஆனா உங்க வாழ்க்கைல செல்விக்கு அப்புறம் மனைவிங்ற ஸ்தானத்துல இனி நான் மட்டும்தான் இருப்பேன். உங்களால கூட என்னை தடுக்க முடியாது. கூடிய சீக்ரதுல சந்திப்போம். வரேன்." என்று சர்வதாவை சந்திக்காமலே போய்விட்டாள்.
சரவணன் தான் ஆட்டம் கண்டு நிற்கிறான்.
நேராக வீட்டிற்கு போனவள் தன் தாத்தாவின் அருகில் அமர்ந்தாள்.
"தாத்தா” என்றாள் தயக்கமாய்.
"என்னம்மா?" என்று தலை கோதி விட்டார்.
"தாத்தா நான் ஒருத்தரை விரும்புறேன்" என்றாள் மெதுவாக.
திட்டுவாரோ என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது மாறாக அவளின் தாத்தா சிரித்து கொண்டிருந்தார்.
"யார்மா அது? நான் பேசணுமா? இல்லை அவரே வந்து உன்னை கேட்பாரா ?" என்றார்.
"தாத்தா" என்றாள் நம்பாமல்.
"சொல்லுடா.. நானும் உன்னை சின்ன வயசுல இருந்து பார்த்துட்டு வரேன். இதுவரைக்கும் யாரையும் விரும்புறேன்னு சொன்னதுமில்ல... வேற யாரும் உன்னை பத்தி கேள்வியும் பட்டதில்ல.. இப்போ நீயே வந்து சொல்லும் போது நிச்சயம் அவன் நல்ல பையனா தான் இருப்பான்." என்றார்.
"தாத்தா.. அவர பத்தி சொல்றதுக்கு முன்னாடி உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்" என்றாள்.
"சொல்லும்மா.. என்கிட்ட பேச என்ன ?" என்றார்.
"தாத்தா நீங்க நினைக்கிற மாதிரி நான் உங்க பேத்தி இல்ல" என்றாள்.
"என்னம்மா சொல்ற?" என்றார் மிகுந்த அதிர்ச்சியாய்.
"தாத்தா அம்மாவை அட்மிட் பண்ண ஹாஸ்ப்பிட்டல்ல குழந்தை இறந்தே தான் பிறந்திருக்கு. அதனால அம்மாவுக்கு தெரிஞ்சா இதை தாங்க மாட்டாங்கன்னு அப்பா அங்கேயே இன்னொரு தம்பதிக்கு பிறந்த ரெட்டை குழந்தைகள்ள ஒரு குழந்தைய விலைக்கு வாங்கிட்டார்... அதாவது என்னை வாங்கிட்டார்." என்றாள் மெதுவாக அழுது கொண்டே.
"என்னம்மா என்ன என்னவோ சொல்ற?" என்றார் நம்பாமல்.
"உண்மை தான் தாத்தா.... எனக்கு இன்னைக்கு தான் தெரியும். நல்லா விசாரிச்சிட்டேன். நம்ம கம்பெனி புது டை அப் வச்சிருக்க சரவணத்தமிழனோட மனைவி தான் என்னோட அக்கா. நாங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ். நான் தனியா ஒரு டிடெக்டிவ் கிட்ட சொல்லி விசாரிச்சிட்டேன். அக்கா இப்ப உயிரோட இல்லை. நான் அவரை தான் விரும்புறேன் ரொம்ப நல்லவர் தாத்தா. அக்கா இல்லாம் அவரும் குழந்தையும் ரொம்ப கஷ்டப்படறாங்க. ப்ளீஸ் தாத்தா நீங்க தான் ஏதாவது பண்ணனும்." என்றார்.
"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை மா. இவ்ளோ பெரிய விஷயம் நடந்துருக்கு. உங்க அப்பா ஒரு வார்த்தை கூட சொல்லலை." என்று கண்களை மூடி பெருமூச்சி விட்டார்.
"தாத்தா எனக்கு இந்த சொத்தெல்லாம் எதுவும் வேணாம் தாத்தா. ஆனா நீங்க மட்டும் என்னை எப்பவும் உங்க பேத்தியா பார்த்தா போதும்" என்றாள் அழுதுகொண்டே.
"என்னடா நீ? அவனுக்கு பிறக்கலைன்னா என்னடா? நீ தான் என் பேத்தி இந்த சொத்துக்கு எல்லாம் ஒரே வாரிசு நீ மட்டும்தான்." என்றார்.
"தாத்தா நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்" என்று தன் திட்டத்தை கூறினாள்.
"உனக்கு சரின்னு பட்டதை தைரியமா செய்ம்மா. ஏன்னா என்னைக்கும் நீ தவறான வழில போகமாட்ட. எனக்கு நல்லா தெரியும்" என்றார்.