Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மழையோடு நம் காதல் - கதை

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43

30. சந்தேகத்தின்...உண்மை​

'என்ன சொல்கிறாள் இவள் ? குழந்தையிடம் கூறியதெல்லாம் நடக்க போகிறது என்றால் என்ன அர்த்தம்? இவள் குழந்தையுடன் தங்க போகிறாளா? அப்படியென்றால் எங்களுடன் தங்கபோகிறாளா?"' என்று அவள் கூறியதையே நினைத்து குழம்பிக்கொண்டிருந்தான்.

'என்னை விரும்புகிறாளா? இது எப்படி சாத்தியமாகும் நான் ஏற்கனவே திருமணம் ஆனவன்... அதுவும் ஒரு குழந்தைக்கு தந்தை. என்னை எப்படி? இல்லை ... எது எப்படி ஆனாலும் இதை நடக்க விடகூடாது இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்." என்று முடிவெடுத்தான்.

அங்கே வர்ஷினியின் எண்ணத்தில் சர்வதா கேட்ட கேள்வி ஒன்று ஓடி கொண்டிருந்தது.

"அம்மா உங்க....துக்கு..... சோ....ட்டோ...ல..... உதடுக்கு கீழ கருப்பா குட்டி..யா ஒன்னு இது...தே இப்ப எங்கே?" என்றாள்.

"எந்த போட்டோலமா?" என்று கேட்க”வீட்டு..த.... நீங்க....தும்... அப்பா....வும் இருந்த சோ...ட்டோ...ல" என்றது குழந்தை.

"செல்விக்கு மச்சம் இருந்தது போல அதை தான் கேட்கிறாள்?" என்று நினைத்துக்கொண்டு அவளின் லாக்கெட்டில் இருந்த செல்வி போட்டோவை உற்று பார்த்தாள். அதில் செல்விக்கு மச்சம் இருந்தது.

"அம்மா உங்க சொ...டோ...வ எதுக்கு இப்படி பா...க்தி...ங்க?" என்றவுடன் சிரித்து மழுப்பிவிட்டாள்.

'உலகத்தில் ஒரே போல் ஏழு பேர் இருப்பதாக கூறுவார்கள். ஆனால் எப்படி ஒரே இடத்தில பக்கத்து பக்கத்தில் இருக்க முடியும்? எப்படி செல்வியும் நானும் ஒரே இடத்துல ஒரே மாதிரி இருக்க முடியும் இதுல எதோ தப்பா இருக்க மாதிரி இருக்கே?' என்று யோசித்தவள். தனக்கு தெரிந்த ஒருவருக்கு போன் செய்து விவரத்தை கூறி செல்வியின் உடன்பிறந்தோர் பற்றி மிக நுணுக்கமாக விசாரிக்க சொன்னாள்.

அவரும் இரண்டு நாளில் பதில் கூறுவதாக கூறியுள்ளார்.

வீட்டிற்கு வந்தவள் தாத்தாவிடம்,”தாத்தா எனக்கு அக்கா தங்கை யாராவது இருக்காங்களா?" என்றாள்.

"இல்லைடா வர்ஷு.” என்றார்.

"தாத்தா நான் பிறக்கும்போது நீங்களும் பாட்டியும் அம்மாகூடயா இருந்திங்க?' என்றாள்.

"இல்லடா உங்க அம்மாவை ஹாஸ்பிடல்ல சேர்க்கும்போது நான் இங்க இல்ல... ஒரு வாரம் லண்டன் போயிருந்தேன். வந்தா நீ இருந்த. ஏன்?” என்று சிரித்தார்.

"இல்ல தாத்தா சும்மா கேட்டேன்" என்று கூறிவிட்டு தன் அறைக்கு போய்விட்டாள்.

"அப்போ ஏதோ நடந்துருக்கு? என்னவா இருக்கும்?" யோசித்து குழம்பியவள் அப்படியே உறங்கிப்போனாள்.

சரவணன் வீட்டில் சர்வதாவிற்கு சாதம் ஊட்ட”அ....ப்பா அ...ம்மா சூப்ப......ரா கதை சொன்னா.....ங்க" என்று விழிகளின் கருமணி மகிழ்ச்சியில் மின்ன கூறியதை கண்டு அவன் மனம் கலக்கமுற்றது.

'குழந்தை எங்க ஆரம்பித்துவிட்டாள்.' என்று தான் நினைத்தது நடந்துவிட்டது போல் தோற்றியது அவனுக்கு.

வர்ஷினி குழந்தையின் மனதில் அம்மா இருப்பதாக தவறான கருத்தை விதைத்துவிட்டாள்.

"என்ன செய்ய போகிறேன் நான்?" என்று குழம்பினான்.

'நாளைக்கு வரட்டும் அவளை இனி வரவே கூடாதுன்னு சொல்ல்லிடனும்' என்று யோசித்து கொண்டே சாப்பிட்டு முடித்தான்.

தூங்குவதற்காக அவனின் மடியில் படுத்து கொண்டிருந்த குழந்தை”அப்பா அம்மா என....க்கு பா....ட்டு சுப்ப....ரா பாதி....னாங்க நீயம் பா..து பா" என்றது.

கண்களை மூடிமனதில் அவனுக்கு தெரியாமல் குடி புகுந்தவளை அர்ச்சனை செய்து கொண்டு பாட ஆரம்பித்தான்.

"நிலவே என்னிடம் நெருங்காதே. நீ நினைக்கும் இடத்தில நான் இல்லை...

மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நான் இல்லை ............" என்று பாட ஆரம்பித்தான்.

தலையை கோதிக்கொண்டே பாடியதில் குழந்தை தூங்கி இருந்தது.

மறுநாள் வர்ஷினி சர்வதாவை பார்க்க செல்லவில்லை.

குழந்தை”அம்மா ஏன் வரல?" என்று கேட்க ஆரம்பித்து விட்டாள். என்ன சொல்வது என்று தெரியாமல் மிகவும் திண்டாடி போனான் சரவணன்.

மறுநாளும் வரவில்லை.”அவ்ளோதான். இனி வரமாட்டாள். குழந்தையை எதாவது சொல்லி சமாளித்துவிடலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் போது வந்தாள் வர்ஷினி.

"இப்ப எதுக்கு வந்த?" என்று கோபமாக கேட்டான்.

"நான் சர்வதாவை பார்க்கணும்" என்று கூறினாள் குனிந்தபடி.

"இல்லை. நீ பார்க்கமுடியாது. ரெண்டு நாளா உன்னை கேட்டு என்னை ரொம்ப தொந்தரவு பண்ணிட்டா. இப்ப தான் ஏதோ சொல்லி சமாளிச்சிறுக்கேன். ப்ளீஸ் நீ போய்டு" என்றான் அவளின் விழிகளை நோக்காமல்.

"இல்லை. இனி அவளோட அம்மாவா நான் இருக்க தான் போறேன்" என்றாள் துணிவாக.

"நடக்காதத பத்தி ரொம்ப யோசிக்கிற" என்றான் சற்று காட்டமாக.

"நீங்க என்னை அவகிட்ட இருந்து விலக்கி வைக்கணும்னு நினைச்சாலும் நான் விடமாட்டேன்" என்றாள்.

"உனக்கு சொன்னா புரியாதா? இதனால உங்க ரெண்டு பேரோட வாழ்கையும் பாதிக்கும். உனக்குன்னு ஒரு வாழ்க்கை வரும்போது பெரிய பிரச்சனையாகும். அதனால நீ போய்டு." என்றான்.

"எனக்கு கல்யாணம் ஆகும்போது இதெல்லாம் நடக்கும்னு சொல்றிங்க இல்ல? ஆனா எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்ல... நம்பிக்கையும் இல்ல... அப்படி ஒன்னு என் வாழ்க்கைல நடக்க போறதும் இல்ல." என்றாள் வர்ஷினி.

"அது உன் தனிப்பட்ட விஷயம் அதுல நான் தலையிட விரும்பலை” என்று அவன் உதடு கூறினாலும் அவன் மனதில் ஊசி தைப்பது போல் ஒரு வலியை உணர்ந்தான்.

"முடிவா என்ன தான் சொல்றிங்க?" என்று அவனை பார்த்து கேட்டாள்.

"எங்க வாழ்க்கைல நீ வராதன்னு சொல்றேன்" என்றான் அழுத்தமாக.

சற்று நேரம் அவன் விழிகளை நேருக்குநேர் உற்று பார்த்தவள். அவன் அவளை பார்க்காமல் தடுமாறுவதை கவனித்துவிட்டு.”அப்ப நான் சொல்றதை கேட்டுக்கோங்க. இதுவரைக்கும் சர்வதாக்கு மட்டும் தான் அம்மாவா இருக்கணும்னு நினைச்சேன். ஆனா உங்க வாழ்க்கைல செல்விக்கு அப்புறம் மனைவிங்ற ஸ்தானத்துல இனி நான் மட்டும்தான் இருப்பேன். உங்களால கூட என்னை தடுக்க முடியாது. கூடிய சீக்ரதுல சந்திப்போம். வரேன்." என்று சர்வதாவை சந்திக்காமலே போய்விட்டாள்.

சரவணன் தான் ஆட்டம் கண்டு நிற்கிறான்.

நேராக வீட்டிற்கு போனவள் தன் தாத்தாவின் அருகில் அமர்ந்தாள்.

"தாத்தா” என்றாள் தயக்கமாய்.

"என்னம்மா?" என்று தலை கோதி விட்டார்.

"தாத்தா நான் ஒருத்தரை விரும்புறேன்" என்றாள் மெதுவாக.

திட்டுவாரோ என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது மாறாக அவளின் தாத்தா சிரித்து கொண்டிருந்தார்.

"யார்மா அது? நான் பேசணுமா? இல்லை அவரே வந்து உன்னை கேட்பாரா ?" என்றார்.

"தாத்தா" என்றாள் நம்பாமல்.

"சொல்லுடா.. நானும் உன்னை சின்ன வயசுல இருந்து பார்த்துட்டு வரேன். இதுவரைக்கும் யாரையும் விரும்புறேன்னு சொன்னதுமில்ல... வேற யாரும் உன்னை பத்தி கேள்வியும் பட்டதில்ல.. இப்போ நீயே வந்து சொல்லும் போது நிச்சயம் அவன் நல்ல பையனா தான் இருப்பான்." என்றார்.

"தாத்தா.. அவர பத்தி சொல்றதுக்கு முன்னாடி உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்" என்றாள்.

"சொல்லும்மா.. என்கிட்ட பேச என்ன ?" என்றார்.

"தாத்தா நீங்க நினைக்கிற மாதிரி நான் உங்க பேத்தி இல்ல" என்றாள்.

"என்னம்மா சொல்ற?" என்றார் மிகுந்த அதிர்ச்சியாய்.

"தாத்தா அம்மாவை அட்மிட் பண்ண ஹாஸ்ப்பிட்டல்ல குழந்தை இறந்தே தான் பிறந்திருக்கு. அதனால அம்மாவுக்கு தெரிஞ்சா இதை தாங்க மாட்டாங்கன்னு அப்பா அங்கேயே இன்னொரு தம்பதிக்கு பிறந்த ரெட்டை குழந்தைகள்ள ஒரு குழந்தைய விலைக்கு வாங்கிட்டார்... அதாவது என்னை வாங்கிட்டார்." என்றாள் மெதுவாக அழுது கொண்டே.

"என்னம்மா என்ன என்னவோ சொல்ற?" என்றார் நம்பாமல்.

"உண்மை தான் தாத்தா.... எனக்கு இன்னைக்கு தான் தெரியும். நல்லா விசாரிச்சிட்டேன். நம்ம கம்பெனி புது டை அப் வச்சிருக்க சரவணத்தமிழனோட மனைவி தான் என்னோட அக்கா. நாங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ். நான் தனியா ஒரு டிடெக்டிவ் கிட்ட சொல்லி விசாரிச்சிட்டேன். அக்கா இப்ப உயிரோட இல்லை. நான் அவரை தான் விரும்புறேன் ரொம்ப நல்லவர் தாத்தா. அக்கா இல்லாம் அவரும் குழந்தையும் ரொம்ப கஷ்டப்படறாங்க. ப்ளீஸ் தாத்தா நீங்க தான் ஏதாவது பண்ணனும்." என்றார்.

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை மா. இவ்ளோ பெரிய விஷயம் நடந்துருக்கு. உங்க அப்பா ஒரு வார்த்தை கூட சொல்லலை." என்று கண்களை மூடி பெருமூச்சி விட்டார்.

"தாத்தா எனக்கு இந்த சொத்தெல்லாம் எதுவும் வேணாம் தாத்தா. ஆனா நீங்க மட்டும் என்னை எப்பவும் உங்க பேத்தியா பார்த்தா போதும்" என்றாள் அழுதுகொண்டே.

"என்னடா நீ? அவனுக்கு பிறக்கலைன்னா என்னடா? நீ தான் என் பேத்தி இந்த சொத்துக்கு எல்லாம் ஒரே வாரிசு நீ மட்டும்தான்." என்றார்.

"தாத்தா நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்" என்று தன் திட்டத்தை கூறினாள்.

"உனக்கு சரின்னு பட்டதை தைரியமா செய்ம்மா. ஏன்னா என்னைக்கும் நீ தவறான வழில போகமாட்ட. எனக்கு நல்லா தெரியும்" என்றார்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43

31. வர்ஷினியின் அதிரடி​

அடுத்து வர்ஷினி சென்று நின்ற இடம் சரவணதமிழனின் தாத்தா வீடு....

அவனின் தாத்தாவிடம் நடந்தவைகளை கூறி அவரின் முடிவிற்காக அவர் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள்.

"தாத்தா நான் நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டேன். நானும் ஏழு மாசமா அவருக்காக காத்திருக்கேன். ஆனா, எந்த பலனும் இல்ல. இதனால பாதிக்கப்படறது என் அக்காவின் மகள் சர்வதாகுட்டி தான். நான் நிச்சயமா அவளை என் அக்கா குழந்தையா பார்க்கலை. அவளை என் குழந்தையா தான் பார்க்கறேன். என் அக்காகூட வாழ தான் எனக்கு கொடுத்து வைக்கல. ஆனா அவளின் உயிராய் இருக்கும் இவர்களுடன் காலம் முழுக்க வாழ ஆசைப்படறேன். அவர் இதுக்கு நிச்சயம் ஒத்துக்கமாட்டார். ஏன்னா அவர் மனம் முழுக்க நிறைந்திருப்பவள் என் அக்கா தான். நானும் அதை அழிக்க விரும்பல. அவளாகவே நானும் இருக்க ஆசைப்படறேன்." என்று கண்ணீரோடு கூறினாள்.

அவள் பேசுவதையே கேட்டு கொண்டிருந்தவர்.

"என் பேரனுடைய வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்னு நானும் வருந்தாத நாள் இல்லை. ஆனா, நீ சொல்றத கேட்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. சர்வதா குட்டிக்கு நாங்க எல்லாரும் எவ்வளவு பாசத்தை காட்டி வளர்த்தாலும் அவளுக்கு அவ அம்மா வேணும், அவளுடைய அம்மாவாவே உன்னை நினைக்கும்பொழுது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைம்மா." என்று தன் விழிகளை மெதுவாக மூடியபடி கேட்டார்.

"இப்ப நான் என்ன செய்யணும் சொல்லுமா அவன்கிட்ட பேசணுமா?" என்றார்.

"இல்ல தாத்தா யாரும் பேசி புரியவச்சு வரக்கூடாது உண்மையான அன்பு. உங்களுக்கு இதை பத்தி சொல்லி உங்க அபிப்ராயம் என்னனு கேட்டுட்டு போக தான் வந்தேன்.”

"எங்க எல்லாருக்குமே நீ என் பேரன் வாழ்க்கைல துணையா வரணும்னு நினைக்கறது ரொம்ப சந்தோஷம். நீ என்ன செஞ்சாலும் நாங்க உனக்கு துணையா இருப்போம்" என்றார்.

சரவணனின் அக்கா வந்து அவளை கட்டிக்கொண்டு”ரொம்ப நன்றி வர்ஷினி உனக்கு ரொம்ப பெரிய மனசு" என்றாள்.

"என்ன அண்ணி சொல்றிங்க? காதலுக்கும் கருணைக்கும் நூழிலை வித்யாசம் இருக்கு. அதோட விதயாசத்தை உங்க தம்பிக்கு புரிய வைக்கப்போறேன். நான் சர்வதாவை என் மகளா நினைக்கிறன். அவரை எப்போ காதலிக்க ஆரம்பிச்சேனோ அப்போவே அவரை என் கணவனா நினைச்சு வாழ ஆரம்பிச்சிட்டேன். இனி அதை யாராலும் மாத்த முடியாது" என்றாள் மெல்லிய புன்னகையுடன்.
"அதுக்கு பதில் அவரை தான் மாத்தனும். என்னால முடியும்னு நினைக்கிறன். அதுக்கு முதல்ல நான் அங்க போக போறேன். என்னை உள்ள விடமாட்டார். ஆனா, நான் சர்வதாவுக்காக அங்க போய் தான் ஆகணும் அவகிட்ட நான் பத்துநாள் கழிச்சு அவகூட எப்பவும் இருப்பேன்னு சொல்லிருக்கேன். அதை காப்பாத்தனும். அவ என்னை எதிர்ப்பார்த்திட்டிருப்பா" என்றாள் எல்லோரையும் பார்த்தபடி.

"உங்க வீட்ல ஒன்னும் ..." என்று அவனின் அக்கா இழுக்க.

"நான் எங்க தாத்தாகிட்ட பேசிட்டேன். அவரும் எனக்கு எந்த கெட்ட பேரும் வராம நேர்மையா எது நடந்தாலும் சரின்னு சொல்லிட்டார்." என்றாள்.

"ஆனா கல்யாணம் ஆகாம அங்க போய் இருந்தா அது நல்லா இருக்காதும்மா" என்றார் அவனின் தாத்தா.

"தாத்தா நிச்சயமா எனக்கும், அவருக்கும் கெட்ட பேரு வராது. நீங்க சரின்னு சொல்லுங்க அவர் கட்ற தாலியோட தான் அந்த வீடுக்குள்ள காலடி எடுத்து வைப்பேன்." என்றதும் எல்லோரின் முகத்திலும் ஒரு நொடி அதிர்ச்சி பரவ.

"யாரும் பயப்பட வேண்டாம் எனக்கு ஒன்னும் ஆகாது" என்று சிரித்தாள்.

"உனக்கு ஒன்னும் ஆகாதும்மா... ஆனா அவன் இதுக்கெல்லாம் சம்மதிப்பானா?" என்றார்.

"அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் தாத்தா. அடுத்த முறை உங்களை பார்க்க வரும்போது அவருடைய மனைவியா சர்வதாவின் அம்மாவா தான் வருவேன். என்ன? அவர் மனம் மாற இன்னும் கொஞ்ச நாள் ஆகும். உடனே என்னை ஏற்றுகொள்ளமுடியாது. பரவால்லை அவர் மனம் மாறும் வரை நான் காத்திருப்பேன்." என்றாள் நம்பிக்கையாய்.

"அப்போ எங்க எல்லாருக்குமே சம்மதம்மா" என்றனர் ஒரே மனதாய்.

இங்கே சரவணன் வீட்டில் என்ன நடக்கிறது பார்ப்போம்....

"அப்பா அம்மா வே....தும்...." என்று சாப்பிடாமல் அடம்பிடித்து கொண்டிருந்தாள் நம் குட்டி தேவதை சர்வதா.

"சரோ குட்டி அப்பா சொல்றத கேப்பல்லடா செல்லம்?" என்றான்.

"ஹ்ஹம் நான் கேட்க..மாத்.. தேன் ..எனக்கு அம்மா.. இப்பயே..வேது..ம்" என்றது திரும்பி.

"இங்க பாரு அப்பாக்கு அடம்பிடிச்சா சுத்தமா பிடிக்காது உனக்கு தெரியும்ல? அம்மா நம்ம கூட இல்லடா. சாமிகிட்ட போய்டாங்க. அப்பா இருக்கேன்ல உனக்கு என்ன வேணும்னு சொல்லு அப்பா வாங்கித்தரேன்" என்றான்.

"எனக்கு ஒன்தும் வே....ந்தாம் போ.... அம்மா எ...ன்கூட இருப்பே....ன்னு சொல்லி இது....க்காங்க ...... அம்மாவை கூ...ட்டி... த்து... வ..த வதை...க்கும் உன் பே...ச்சு க்கா..க்கா..." என்று கோபித்துக்கொண்டு உள்ளே ஓடியது.

சரவணத்தமிழனால் சமாளிக்க முடியாமல் மிகவும் திணறினான். இப்படியே ஒரு வாரம் ஆகியும் சர்வதா அம்மாவை கேட்பதை நிறுத்தவில்லை.

குழந்தையின் மனதில் தேவையல்லாத ஆசையாய் உண்டாக்கியதற்கு சரவணத்தமிழனுக்கு வர்ஷினியின் மேல் அளவுகடந்த கோபம் உண்டானது.

நாளுக்கு நாள் சர்வாதாவின் அம்மா ஏக்கம் பெருகிக்கொண்டே போனதே தவிர குறைந்த பாடில்லை வர்ஷினிக்கும் சர்வதாவை தவிக்க விட மனமில்லை தான், இருந்தாலும் அமைதி தான் நினைப்பது நடக்க வேண்டும் என்பதால் அமைதியாய் காத்தாள்.

நாட்கள் நகர சரவணத்தமிழன் மனப்போரட்டதில் தவிக்க ஆரம்பித்தான்.

தன் கொடுமபத்துடன் சேர்ந்து இருக்கலாம் என்றால் தன் செல்வி வாழ்ந்த இந்த வீட்டை விட்டு செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. தன் வாழ்க்கை இப்படி ரணகளமாய் மாறிவிட்டதே என்று அவனையே நொந்துகொண்டிருந்த வேளையில் அவனை காக்கும் தேவதையாய் வந்தாள் வர்ஷினி.

கம்பெனிக்கு செல்ல ரெடி ஆகிகொண்டிருந்தவன் விழிகள் வாசலை நோக்க அங்கே வர்ஷினி நின்று கொண்டிருந்தாள்.

"நீ எதுக்கு இங்க வந்த? நான் கொலைகாரனா மாறதுக்குள்ள ஒழுங்கு மரியாதையா போய்டு” என்று கர்ஜிக்க.

"இப்படி கோபப்படறதால நான் போக போறதில்லை. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அதுக்கு தான் வந்தேன்" என்றவளை ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்பது போல் பார்த்தான்.

"அது .....”என்று கூறுவதற்குள்.

"உள்ள வா" என்றான்.

"இல்ல இருக்கட்டும். சர்வதா எங்க?" என்று பார்வையை சுழலவிட.

"அவள் தூங்குறா" என்று சொல்ல வந்ததை சொல்லிவிட்டு கிளம்பு என்ற தோரணையில் கையை கட்டிக்கொண்டு நிற்க.

"தாமரை செல்வி ......" என்று ஆரம்பித்ததும்”உனக்கு அவள் பெயரை சொல்லுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. என்னையும் என் குழந்தையும் நீ படுத்துறது போதாதா?" என்று வேகமாக கூறியவன் பின் தான் அவன் கூறியதன் அர்த்தம் புரிய விழிகளை மூடி அமைதியாக நின்றான்.

'அப்போ நான் நினைச்சதுல பாதி நடந்துருக்கு. இப்போ என் வேலை சுலபமாகிடுச்சு' என்று நினைத்தவள்.

"எனக்கும் தாம்ரைச்செல்விக்கு என்ன உறவுன்னு சொல்ல தான் இங்க வந்தேன்" என்றாள்.

'இப்ப என்னை கதை சொல்ல போகின்றாய்?' என்று சந்தேகமாய் அவளை பார்க்க.

"அவள் என்னுடைய உடன்பிறந்த அக்கா" என்று கூறியவுடன் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான சரவணன்,”என்ன சும்மா எதையாவது உளராத" என்றான் நம்பாமல்.

"உண்மையை தான் சொல்றேன். என்னை நம்புங்கள்." என்று நடந்த எல்லாவற்றையும் கூறினான்.

அவள் கூறும் எதையும் நம்பவும்முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் அமைதியாக இருந்தான்.

"அம்மா.... அம்மா ....." என்று துள்ளி குதித்து உள்ளே இருந்து ஓடி வந்தாள் சர்வதா.

"ஹாய் சர்வதா குட்டி. எப்டி இருக்கீங்க?" என்று கேட்ட படியே அவளை தூக்கி முத்தமழை பொழிந்தாள்.

"அப்பா பார்த்தி....யா நான் தான் சோதே....ன்ல அம்மா வதுவா....ங்கன்னு" என்று துள்ளி குதித்து ஆனந்த கூத்தாடியது.

"அம்மா இனி என் கூ...த தா...னே இதுப்பீ,,,,ங்க" என்று அவளை அவளின் முகத்தை பார்க்க அவளின் விழிகளோ அவனின் சம்மதத்தை எதிர்நோக்க.

அவனோ முகத்தை திருப்பிக்கொண்டான்.

"சரோ அவங்களால இங்க நம்ம கூட இருக்க முடியாது டா" வேணா நாளைக்கு உன் கூட வந்து விளையாடட்டும்" என்று சமாளிக்க நினைத்து கூற.

"இல்ல அம்மா என் கூ...த தான் இதுப்பா...ங்க" என்றது அழுத்தமாய்.

வர்ஷினியின் கையை பிடித்து இழுக்க,”சரோ குட்டி. நான் அம்மா உன் கூட இருக்கணும்னா ஒரே ஒரு கண்டிஷன் இருக்கு" என்றாள்.

"என்ன அம்..மா? எது..வா இது..ந்தா..லும் என..க்கு ஓகே" என்றது தாமதிக்காமல்.

சரவணனை நோக்கி”நீங்க ஒன்னும் சொல்லலையே?" என்று கேட்டாள்.

"நான் என்ன சொல்றது? நீ இங்க வராம இருந்தாலே போதும்னு நினக்கறேன் நீ இங்கயே இருகறேன்னு சொல்லிட்டு இருக்க. இங்க எப்படி நீ எங்ககூட இருக்க முடியும் பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?" என்றான்.

"நடக்காத எதையும் சொல்லி குழந்தைக்கு ஆசை வளர்க்காதே?" என்றான்.

"இல்ல நான் நடக்கப்போறதை தான் சொல்றேன்" என்று அவனை பார்த்தபடி குழந்தையின் அருகே குனிந்து,”சரோ குட்டி அம்மா எவ்ளோ நாள் கழிச்சி வீட்டுக்கு வரேன் அதனால அப்பா கையால என் கழுத்துல செயின் போட்டாத்தான் உள்ள வரமுடியும். என்ன செய்யலாம்?" என்று யோசிப்பது போல் கேட்க.

"என்னவோ ப்ளான் பண்ணிட்டா?" என்று சந்தேகமாய் அவளை சந்தேகமாய் பார்த்துக்கொண்டிருந்தான்.

"செயி..ன் தான.. மா அப்..பாவ நான் போட சொல்லு....தேதே...ன்" என்று கூறவும்”செயின்க்கு எங்க போறது அதனால தான் அம்மாவே வாங்கி வந்துவிட்டேன்" தன் பையில் இருந்த மஞ்சள் நிற தாலி கயிறை வெளியே எடுத்தாள்.

அதை பார்த்து விழிகள் விரிய ஆட்டம் கண்டு அதிர்ச்சியோடு நின்றான் சர்வணத்தமிழன்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43

32. எதிர்பார்த்த முடிவு​

சரவணத்தமிழனின் பரந்த விழிகளின் கருமணிகளில் இருந்து நெருப்பு பந்து அவளை நோக்கி வருவதை உணர்ந்து சர்வதாவிடம் பேச ஆரம்பித்தாள்.

"சர்வதா குட்டி. அம்மா எவ்ளோ நேரம் வெளியவே நிக்கறது. சீக்கிரம் போட சொல்லுடா. எனக்கு ரொம்ப பசிக்குது நீ சாப்டியா?" என்று கிசுகிசுக்கு குரலில் கேட்டாள்.

"என்ன உனக்கு இதெல்லாம் விளையாட்டா போயிருச்சா? கனவுல கூட நீ நினைக்கிறது எதுவும் நடக்காது. சோ, நீ உன் நேரத்தை வீணாக்காம வேற வேலை இருந்தா போய் பாரு." என்றான் கோபமாய்.

" சொல்லிட்டிங்க. சரி, நான் கிளம்பிடறேன் ஆனா என் பொண்ணையும் கூட்டிட்டு போறேன்" என்றதும் இன்னும் கோபம் தலைக்கேற.” நான் இதுவரைக்கும் எந்த பொண்ணையும் கை நீட்டினதில்ல. அதனால தயவுசெஞ்சு நீயாவே போய்டு” என்று உள்ளே போனான்.

"அப்பா எதப்பா நீ ? அம்மாக்கு கா...து... வதி...க்கும் சீக்...கீதம் தெயின் போது....ப்பா எதக்கும் அம்மாக்கும் பதி..க்குது சாப்...புதம்...." என்றது பாவமாய்

"சரோ நீ உள்ள போ. இவங்க உன் அம்மா இல்லை. புரியாம பேசற. அடம் பிடிக்காத" என்றதும்

"இல்ல அம்மா இ....தாம நான் வத.....மாட்டேன்" என்று வாசலில் வர்ஷினியுடன் சென்று நின்றுக்கொண்டாள்.

வேகமாய் வெளியே வந்தவன் ஸர்வதாவை தூக்க குனிந்தான். சர்தா வர்ஷினியின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டதும்”சரோ நீயா ஒழுங்கா வந்துரு" என்றான்.

எதுவும்பேசாமல் அமைதியாக நிற்கும் குழந்தையை அடிக்க கை ஓங்கியவனை மெதுவாக தள்ளிவிட்டாள்.

"இங்க பாருங்க. என் குழந்தை மேல கை வச்சிங்க , அப்புறம் நான் மனுஷியாவே இருக்கமாட்டேன்." என்றாள்.

"ஏய் என்னடி பேச்சுக்கு பேச்சு உன் குழந்தை உன் குழந்தைன்னு சொல்ற நீயா பெத்த? என்னை இன்னும் அதிகமா பேசவைக்காத" என்றான்.

"இல்ல.... நான் பெத்துக்கலை தான்.... ஆனா இவ என் அக்கா குழந்தை. எனக்கு தான் என் அக்காகூட சேர்ந்து வாழக்கொடுத்து வைக்கலை. ஆனா, அவளோட உயிரான உங்க ரெண்டு பேரையும் இனி தனியா விட்றதா இல்ல. ஒன்னு உங்ககூடயும் குழந்தையோடையும் தான் இனி வாழப்போறேன், இல்ல என் உயிரை இங்கயே விட்ருவேன். நான் உங்களையும் குழந்தையையும் மிகவும் நேசிக்கிறேன். நீங்க ரெண்டுபேரும் இல்லாம என்னால இனி இருக்க முடியாது. இப்ப என்ன தான் முடிவா சொல்றிங்க?" என்று கேட்டாள்.

"நிச்சயமா இவள் தாமரைச்செல்வியின் தங்கச்சி தான்... இல்லனா அவள் இங்க இருந்தா என்ன பேசுவாளோ அப்படியே பேசறாளே? கடவுளே சரியான ஜெராக்ஸ் காப்பிய அனுப்பி வச்சிருக்கியே? இப்ப எப்படி சமாளிக்கிறது?" என்று நினைத்து கொண்டிருக்கையில்...

"மறுபடியும் கேக்குறேன் இப்ப என்ன தான் முடிவு பண்ணி இருக்கீங்க?" என்று கேட்டாள்.

அவன் அமைதியாக இருப்பதை பார்த்தவள்”ஹ்ம்ம் இப்ப தான் கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சிருக்கார். எடுத்தோம் கவுத்தொம்னு இப்பயே உன் முடிவ சொல்லுனு சொல்றத விட்டுட்டு கொஞ்சம் டைம் கொடுக்கணும்" என்று யோசித்தவள்.

"சரி. இன்னைக்கு சாயந்தரம் ஆறுமணி வரைக்கும் உங்களுக்கு டைம் தரேன். இதே தெருவுல இருக்க பிள்ளையார் கோவில்ல தான் உட்க்கார்ந்துட்டு இருப்பேன். நீங்க உங்க நல்ல முடிவ சொல்ற வரைக்கும் என் தொண்டைல தண்ணி கூட இறங்காது. அதுக்கப்புரமும் நான் இருக்கறதே உங்க கைல தான் இருக்கு" என்று வேகமாக வாசலை நோக்கி நடந்தாள்.

"அம்மா நானும் வ...தென்” என்று வேகமாக அவளின் காலை ஓடிவந்து கட்டிக்கொண்டது சர்வதா.

சரவணனை திரும்பிபார்க்க அவன் பார்வையில் ஒரு கோபம் தெரிந்தது.”இல்லடா சரோ குட்டி. அம்மா சாயந்திரம் வந்துருவேன். அதுவரைக்கும் நீ சமர்த்தா இருக்கனும் சரியா?" என்று கேட்க.

"இல்ல மா நானும் உ....ன்கூ....த வ...தென்" என்று அழ தொடங்கியது.

"இல்ல குட்டிமா. அம்மா சொன்னா செய்வேன் தானே. நீ இப்ப அப்பாகிட்ட போ" என்று குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு பார்க்க”சதி...மா நீ கந்தி...ப்பா வத....னும்" என்றது.

"சரி டா" என்று வெளியேறினாள்.

போகும் வர்ஷினியையே குழப்பத்தோடு பார்த்துக்கொண்டிருதான் சரவணத்தமிழன்.

உள்ளேவந்து தன் செல்வியின் படத்தின் முன் நின்று பார்த்துகொண்டிருக்க படத்திற்கு வைக்க பட்டிருந்த பூவில் இருந்து ஒரு மலர் சம்மதமாய் கிழே விழ அதிர்ச்சியாய் படத்தில் இருக்கும் செல்வியையே கூர்ந்து நோக்கினான்.

"என்னடா அப்படி பார்க்கற? எனக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா நீ வேற கல்யாணம் பண்ணிகிறேன்னு தான சொன்ன? இப்ப பண்ணிக்கோ" என்று சொல்வது போல் இருந்தது.

விழிகளில் நீர் வழிய”தலைபாடா அடிச்சிகிட்டேன். நீ தான் எனக்கு முக்கியம்னு... ஆனா நீ என்னடான்னா பெரிய தியாகி மாதிரி குழந்தைய பெத்து என் கைல கொடுத்துட்டு போய் சேர்ந்துட்ட" என்று போட்டோவை பார்த்து பேசிக்கொண்டிருந்தான்.

"அப்பா அம்..மாவை வெ..திய அனுப்..பித்து இ..ப்போ ஏன் அம்மா..வையே பார்..த்துட்டு இது..க்க ?" என்று கேட்டாள் சர்வதா.

குழந்தை கேட்டதில் மேலும் குழப்பத்துடன் உள்ளே சென்று தனியாக அமர்ந்த யோசிக்க ஆரம்பித்தான்.

"இவள் உருவத்தில் தான் என் செல்வியை போல் இருக்கிறாள். ஆனால் அவள் இல்லை. என்னால் எப்படி செல்வி இருந்த இடத்தில அவளை வைத்து பார்க்கமுடியும்?" என்று தனக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தான்.

சர்வதாவிர்க்கு சாப்பாடு ஊட்டிவிட அம்மா இல்லாமல் சாப்பிடமுடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள். இதற்கு ஒரே வழி அவளை திருமணம் செய்வது தான் என்றும்... ஆனால் என் குழந்தைக்கு மட்டும் அம்மாவாக இருப்பதென்றால் இந்த முடிவிற்கு சம்மதம் என்று கூறவேண்டும் என்று முடிவெடுத்து குழந்தையை கூட்டிக்கொண்டு கோவிலுக்கு சென்றவன். அங்கே விழிகளை மூடியபடி அமைதியாக அமர்ந்திருந்த வர்ஷினியை கண்டான்.

அவளை கண்டதும்”அம்மா" என்று வேகமாக அவளிடம் ஓடி கட்டிக்கொண்டது.

இவர்கள் இருவரையும் கண்டவள் சரவணனை நோக்க,”இங்க பாரு. எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல ஆனா, நீ என் குழந்தை மனசுல அம்மான்னு சொல்லி, அவ மனச இப்ப கலைச்சிட்ட. அதுக்காக உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா ஒரு கண்டிஷன் இருக்கு" என்று அவளை பார்க்க.

"என்ன?" என்பது போல் வர்ஷினி பார்த்தாள்.

"என் குழந்தைக்கு மட்டும் நீ அம்மாவா இருப்பேன்னும் எப்பவும் என்னை நெருங்க மாட்டேன்னும் எனக்கு இந்த கோவில்ல வச்சி சத்தியம் பண்ணு. நாளைக்கு காலைல உன் கழுத்துல தாலி கட்றேன்." என்று அவளை கேள்வியாய் பார்க்க,”முதலில் சர்வதாவை பார்த்துக்கொண்டால் போதும்" என்று நினைத்தவள்.”சரி" என்று அவனுக்கு சத்தியம் செய்தாள்.

"சரி. இப்போ நீ உன் வீட்டுக்கு போ. உங்க வீட்ல பேசி எல்லாரும் சரின்னு சொன்னாங்கன்னா? நாளைக்கு காலைல பத்து மணிக்கு இங்க கூட்டிட்டு வா. வரும் பொழுது சாதாரண காட்டன் புடவையும் எந்த நகையும் போடாம வா” என்று கூறி விட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு நடந்தான்.

"அப்பா அம்மா.... அம்மா ....” என்று கத்த வர்ஷினியை திரும்பி பார்த்தவன் மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு”அம்மா நாளைக்கு நம்ம கூட வந்துருவாங்க" என்று கூறியபடி வெளியேறினான்.

அவன் கூறியதை கேட்டவள் உள்ளம் கூத்தாடியது”எஸ்” என்று கையை மடக்கி எகிறி குதித்தாள்.

தன் தாத்தா வீட்டிற்கு நேராக சென்றவன் எல்லோரிடமும் நலம் விசாரித்து அளவலாவியபின் அமைதியாய் இருக்க, தாத்தாவே ஆரம்பித்தார்.”என்னப்பா ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லி எங்க எல்லாரையும் கூப்பிட்டு உக்காரவச்சிட்டு நீ அமைதியா இருக்க... என்ன விஷயம் சொல்லுப்பா?" என்று வர்ஷினி கூறி எல்லாவற்றையும் அறிந்தவர் ஒன்றும் அறியாதவர் போல் கேட்டார்.

'என்ன சொல்வது? எப்படி சொல்வது?' என்று புரியாமல் முழிக்க அவனே சொல்லட்டும் என்று அமைதி காத்தனர்.

"நான் வர்ஷினிய கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கிறேன். அவள் செல்வியோட தங்கச்சி. என்னையும் பாப்பாவையும் ரொம்ப விரும்புறா. அதனால தான் இந்த முடிவு பண்ணிருக்கேன். உங்க எல்லார் கிட்டயும் சொல்ல தயக்கமா இருந்தது" என்று இழுத்தான்.

"எங்க எல்லார்க்கும் ரொம்ப சந்தோஷம்பா. வர்ஷினி எங்க எல்லார்கிட்டயும் சம்மதம் வாங்கிட்டு தான் உன்கிட்ட வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டா. இதை நீயா சொல்றியா இல்லையான்னு பார்க்க தான் நாங்க அமைதியா இருந்தோம்." என்று சிரித்தார்.

"இப்போ நான் என்ன பண்ணனும் ?" என்று கேட்க”தாத்தா நாளைக்கு காலைல பிள்ளையார் கோவிலுக்கு எல்லோரும் வந்துருங்க தாத்தா” என்று சொல்ல,”சரிப்பா. நீ சந்தோசமா இருந்தா போதும்" என்று கண்களை மூடிக்கொண்டார்.

ஆனால் சரவணத்தமிழனை இரு விழிகள் ஆசையோடும் கோபத்தோடும் பார்த்துக்கொண்டிருந்தன. ' இந்த திருமணம் நடக்குமா என்ன நான் இருக்கும்பொழுது?' என்பது போல் இருந்தது அந்த பார்வைக்கான அர்த்தம்....
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43

33. எதிர்ப்பு!​

அங்கிருந்து வரும்பொழுது சர்வதா சொன்னது அவன் செவிகளில் கேட்டுகொண்டே இருந்தது.

கோவிலில் ,

"அப்பா! நாதைக்கு நான் அம்மா கூ..த..வே வதென்...” என்றது.

என்ன சொல்வது என்று தெரியாமல் ஒரு சில நொடி அமைதியாக இருந்தவன்.”இல்லடா நாளைக்கு அம்மா சீக்கிரம் வரணும்ல உன்னை கூட்டிட்டு போய்ட்டா லேட் ஆகுமே..." என்றான் பாவமாய்.

"சதிப்பா நான் உ...ன்கூட...யே இது...க்கேன்" என்றாள் சிரித்தபடி.

"சரிடா செல்லகுட்டி” என்று கணத்தில் முத்தமிட்டு நடந்தார்கள்.

நேராக ஜவுளிக்கடைக்கு சென்று வர்ஷினிக்கென்று ஒரு புடவையை தேர்வு செய்தான். ஒரு சில நகைகளும் வாங்கியவன். தான் கொண்டு போய் கொடுக்க மணம் இல்லாமல் ஹரியிடம் கொடுத்தனுப்பினான்.

"மேம்! சார் உங்ககிட்ட இந்த பார்சலை கொடுத்துவிட்டு வரசொன்னார்." என்று தந்துவிட்டு கிளம்பினான்.

'என்னதிது?' என்று பிரிதவளுக்கு கடிதம் ஒன்று தென்படவே அதனை படிக்க ஆரம்பித்தாள்.

"இதில் இருக்கும் நகைகளையும் புடவையையும் நாளைக்கு போட்டுகொண்டு வா. உன்னை விரும்பி மணக்க வில்லை அதனால் உன் வீட்டில் இருந்து உன்னை தவிர ஒரு பொருள் கூட என் வீட்டினுள் நுழைய கூடாது. சிம் கார்டை கழட்டி கொடுத்திருக்கும் புது போனில் போட்டுகொள். நாளை பார்க்கிறேன்." என்றான்.

அதில் இருந்த புடவை வான் நீல நிறத்தில் இருந்தது. ஒரு சிறிய நெக்லஸ், ஆரம் ஒரு ஜிமிக்கி தோடு இருந்தது. அதோடு ஒரு ஸ்மார்ட் போனும் இருந்தது.

'இதெல்லாம் ரொம்ப ஓவர். நான் எவ்வளவு பெரிய தொழில் சாம்ப்ராஜியத்தின் ராணி என்றாலும் என்னை கட்டளையிட இவர் பொது போலவே ' என்று நினைத்தவள் உடனே அவனுக்கு போன் செய்தாள்.

"ஹலோ" எதிர்முனையில் குரல் கேட்டதும்.

"ஹெலோ! நான் வர்ஷினி பேசுறேன்" என்றாள்.

"தெரியுது சொல்லு!" என்றான் குரலில் சுரத்தே இல்லாமல்.

"நீங்க அனுப்பின எல்லாம் வந்து சேர்ந்துருச்சு. ரொம்ப நல்லா இருக்கு." என்றாள்.

"உனக்கு பிடிக்கலன்னாலும் எல்லாத்தையும் போட்டுகிட்டு தான் ஆகணும்" என்றான்.

"நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்கறேன் ஒன்னை தவிர. என்னால தாத்தா இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு வளர்த்த இந்த பிசினெஸ்ஸ அப்படியே பாதில விட்டுட்டு வர முடியாது. டெய்லியும் ஆபிஸ்க்கு போலன்னாலும் வாரத்துல மூணு நாளாவது நேர்ல போயிட்டு மத்த நேரம் வீட்ல இருந்தே பார்த்துப்பேன்" என்றாள் தெளிவாக.

"இங்க பாரு உன் சுதந்திரத்துல நான் என்னைக்கும் தலை இட மாட்டேன். அதே போல உங்க வீட்லர்ந்து ஒரு சின்ன பொருள் கூட எடுத்துட்டு வரகூடாது, ஏன்னா உன்னையே என் பொண்ணுக்காக தான் நான் கல்யாணம் பண்றேன். சோ நீ பாட்டுக்கு அது இதுன்னு எதையாவது கொண்டுவந்து தொலைக்காதே." என்றதோடு நில்லாமல்”இங்க வந்தப்புறம் உனக்கு தேவையானது எல்லாமே இருக்கும் ஆனா என் செல்வியோட எந்த பொருளையும் நீ தொடக்கூடாது சொல்லிட்டேன். மத்தபடி நீ பிசினெஸ் பார்த்துகுறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. நாளைக்கு பார்க்கலாம்." என்று வைத்துவிட்டான்.

வர்ஷினிக்கு உள்ளுக்குள் சிறிது பயம் இருந்தாலும் சந்தோஷமும் இருக்க தான் செய்தது.

' எவ்ளோ கோவமா பேசினாலும் இப்பயே எனக்காக இதையெல்லாம் வாங்கிஅனுப்பி இருக்கார். நிச்சயமா எனக்கான இடம் அவர் இதயத்துல இருக்கு நான் தான் வெளிய கொண்டுவரணும். உரிமையா கோவிவ்கரதுல கூட அவர் அழகு தான். எப்படியோ நாம் நினைத்தபடி மாம்ஸ் திருமணதிற்கு சம்மதித்து விட்டார். இப்போ என்னை ஒதுக்கி வச்சாலும் சீக்கிரமே அக்கா இடத்தில இல்லையில்லை அக்காவாகவே என்னை பார்க்க ஆரம்பிப்பார். அது வரைக்கும் நான் விடறதா இல்ல' என்று பெருமூச்சிவிட்டாள்.

வீட்டில் தாத்தாவிடமும் பாட்டியிடமும் கூறியவுடன் தங்களின் பேத்திக்கு இவ்வளவு எளிதாக திருமணம் நடப்பதில் அவர்களுக்கு வருத்தம் இருந்தாலும் அவளின் ஆசை என்பதால் குறுக்கே நிற்கவில்லை.

வர்ஷினியின் தந்தை தான் தாம் தூம் என்று குதித்து கொண்டிருந்தார்.

"இங்க பாருங்க எனக்கு அவரை பிடிச்சிருக்கு. எல்லாதுக்கும் மேல தாமரைசெல்வி எங்க அக்கா. உங்களுக்கு விருப்பம் இருந்தாள் வாங்க இல்லைனா விட்ருங்க." என்றாள் கோபமாக.

ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியாய் நிற்க...”என்ன ஒன்னும் புரியலையா? இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறிங்களா?" என்று அவருக்கு எல்லாவற்றையும் கூறினாள். அதற்கு மேல் அவரும் மறுக்கவில்லை.

"ஹலோ" என்றதும்

"ஹலோ! நான் யாருன்றது உனக்கு தேவையில்லாத விஷயம். நீ அவனை கல்யாணம் பண்ண கூடாது மீறி நடந்துதுன்னா யாருக்காக கல்யாணம் பண்ணனும்னு நினைகிறிங்களோ அந்த குழந்தை இருக்காது." என்று மிரட்டவும்.

"ஏய் நீ யாரு முதல்ல அதை சொல்லு? நேரடியா பேசறதுக்கு வக்கில்லாம நீ போன்ல பயந்து பேசிட்டுருக்க? நீ என்னை மிரட்டுறியா?"

"நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். இந்த கல்யாணம் நடக்காம இருக்கறது தான் எல்லாருக்கும் நல்லது."

"உனக்கு வேணா நல்லதா இருக்கலாம் எங்களுக்கு நல்லது இல்ல. இந்த கல்யாணம் நடந்தே தீரும் உன்னால முடிஞ்சத பார்த்துக்க. முதல்ல உனக்கு தைரியம் இருந்தா என் முன்னாடி வந்து சொல்லு" என்று அழைப்பை துண்டித்தாள் வர்ஷினி.

உடனே சரவணத்தமிழனை அழைத்து நடந்தவைகளை கூறி சர்வதாவை கவனமாக பார்துகொல்லுமாறு கூறினாள்.

புருவங்கள் முடிச்சிட 'யாராக இருக்கும் என்று யோசித்தவனுக்கு ஒன்றும் புலப்படவில்லை.'“சரி நான் பார்த்துக்குறேன் நீ பயபடாத" என்றான்.

கலகலவென சிரித்தவள்”பயமா? எனக்கா? என்னோட வீக்னெஸ் நீங்க ரெண்டு பெரும் தான் உங்க ரெண்டு பேருக்கும் எதவுதுன்னா நான் பயந்துடுவேன்னு யாரோ ஒரு கோழை மிரட்டுனா பயந்துடுவேனா? எதுக்கும் உங்களை எச்சரிக்கலாமேன்னு சொன்னேன் அவ்ளோ தான். பாப்பாவ பத்திரமா பார்த்துகோங்க" என்றாள்.

'அதானே அக்காவ மாதிரி தான நீயும் இருப்ப நான் தான் தேவை இல்லாம பயப்படுறேன்' என்று நினைத்தவன். தான் அவளுக்காக கவலைபடுவதை னியாநிது சிந்திகலானான்.

'அவளை எனக்கு பிடிக்காதுன்னு சொன்னேன் அப்புறம் ஏன் பயப்படனும். என் செல்வியின் உருவில் இருக்கும் பிம்பம் அவள். தூரத்தில் வைத்து பார்த்துகொண்டிருந்த என்ன ஐ வலிய வந்து உன்ன்டன் வாழ்கிறேன் என்கிறாள். என் செய்ய?" சிந்தனையில் ஓடி கொண்டிருந்த நேரம் கண்களை உறக்கம் தழுவிக்கொண்டது மீண்டும் விழித்தபோது மணி ஆரை தொட்டது.

கோவிலுக்கு இருவரும் தயாராகி வந்த நேரம் எல்லோருமே வந்திருந்தனர் இருவரை தவிர...

"வர்ஷினி எங்க?" என்று சரவனந்த்தமிழன் வினவ.

"அவள் அக்காவின் படத்தின் முன் வணங்கிவிட்டு வருகிறேன் என்று உங்களின் வீட்டுக்கு போய் இருக்கிறாள்" என்றார்கள்.

அவன் மனதில் ஏதோ நெருடலாய் இருக்க தன் அதமக்கையிடம் குழந்தையை கொடுத்துவிட்டு வீட்டுக்கு விரைந்தான்.

வீட்டின் உள்ளே நுழையும் முன் அவன் கண்ட காட்சி பதற வைத்தது.

"இங்க பாரு உனக்கு என்ன வேணும்? எதுக்கு இப்ப என்னை கொல்லனும்னு பார்க்கிற" என்று கோபமாய் கேட்டு கொண்டிருந்தாள் வர்ஷினி.

அவளின் எதிரே கையில் சரவணனின் துப்பாக்கியோடு நின்றிருந்தாள் சரவணத்தமிழனின் அத்தை மகள் நிஷா.

"செல்வி அக்கா எங்க மாமாவோட இருந்தப்ப எனக்கு ஒன்னும் தெரியல ஏன்னா அவங்க தான் மாமாவ எங்க கூட சேர்த்து வைச்சாங்க. அதுவரைக்கும் மாமா மேல எனக்கு எந்த விதமான ஈர்ப்பும் உண்டாகல. ஆனா அக்கா தவறினதும் மாமா கைகொழைந்தைய வச்சிக்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டப்ப நான் மாமாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு அவரை சந்தோசமா வாசிக்கணும்னு நினைச்சி அப்ப மாமவ விரும்பா ஆரம்பிச்சேன். அப்பகூட மாமா என்னை அவர்பக்கத்துல நெருங்க விடல. அவரும் என்னை ஒரு னாலும் தவறான கண்ணோட்டத்துல பார்த்ததில்லை.

திடிர்னு ஒருன் நாள் நீயா வருவா எங்க மாமாவ கல்யாணம் பண்ணிகிறேன்னு சொல்லுவ நான் பார்த்துகிட்டு சும்மா இருக்கணுமா? அதான் மாமா உன்னை பிடிக்கலைன்னு சொன்னார் இல்லை ஒழுங்கா அப்பாய் பொய் இருக்க வேண்டியது தான. இப்ப பாரு தேவை இல்லாம உன் உயிர் போக போகுது. செல்வி அக்கா மாதிரி இருகேன்ற ஒரே காரணத்தால சர்வதாவ வச்சி மாமாவ கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிட்டல்ல நீ உங்க அக்காகிட்டேயே போ. நான் எங்க மாமாவையும் குழந்தையும் பார்த்துக்குறேன்" என்பர் துப்பாக்கியை வர்ஷிணியின் முன் நீட்டினாள்.

"நிஷா நீ என்ன பண்ற? அவ என்ன பண்ணா?" என்று இருவருக்கும் நடுவில் நின்றான்.

"மாமா நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணாதிங்க."

"இல்லைட நிஷா குட்டி. நான் என்னைக்குமே உன்னை மனைவின்ற கண்ணோட்டத்துல பார்த்ததில்ல, அதுவும் இல்லாம வர்ஷினி என்ன பண்ணா? அவங்க அக்கா குழந்தைக்கு தானே தாய் ஆகணும்னு நினைகிறா அதுக்காக அவ வாழ்கையே பணயம் வைக்க துனிஞ்சிட்டா. இது தப்பு அவளை நீ எதுவும் பண்ணகூடாது. படிக்கிற காலத்துல படிக்க மட்டும் தான் செய்யணும் தேவை இல்லாத சிந்தனை எல்லாம் இருக்க கூடாது. முதல்ல அந்த துப்பாக்கிய என்கிட்டே கொடுத்துடு." என்று அவளிடம் நெருங்க”மாமா கிட்ட வராதிங்க உங்களையும் சுற்றுவேன்" என்றாள்.

அவள் கூறுவதை கேட்காமல் முன்னே நகர துப்பாக்கியை அவன் முன் நீட்டினாள் நிஷா.

"வேண்டாம் நிஷா அவரை எதுவும் செய்து விடாதே" என்று அவனுக்கு முன்னாள் கைகளை விரித்தபடி மறைத்துக்கொண்டு நின்றாள் வர்ஷினி.

"மாமாவும் என்னை ஏமாத்திட்டார் அவரும் எனக்கு தேவை இல்ல உங்க ரெண்டு போரையும் உயிரோட விட மாட்டேன்" என்று துப்பாக்கியை அழுத்த குண்டு பாய்ந்து வந்து வர்ஷிணியின் இடது கை தோல் பட்டையில் சொருகியது.

"அஹ... அம்மா..." என்று சரவணனின் மடியிலேயே சரிந்தாள் வர்ஷினி.

"அய்யய்யோ என்ன காரியம் செஞ்ச நிஷா. உன்னை என்னைக்குமே நான் மன்னிக்கவே மாட்டேன். கடவுளே உனக்கு என் மீது இறக்கம் வருவது இல்லையா? முதலில் செல்வியை பறித்து கொண்டாய். இப்போ வர்ஷியையும் இப்படி செய்துவிட்டாயே. என் மீஎது யார் அன்பு வைத்தாலும் அவர்கள் உனக்கு பிடிப்பது இல்லை அவர்களை என்னிடம் இருந்து பிரித்து விடுகிறாய் என்று தானே இந்த பெண்ணை என்னிடம் நெருங்க விடாமல் பார்த்துக்கொண்டேன். குழந்தையும் இவளும் அன்பாக இருப்பதை பார்த்து இருவரும் ஒன்றாக இருந்தாள் நன்றாக இருக்கும் என்று தானே இந்த கல்யாணத்திற்கு சம்மதித்தேன். இல்லையென்றால் தூரத்தில் இருந்தே பார்த்துகொண்டிருந்திருப்பேனே" என்று வாயில் வந்ததை எல்லாம் புலம்பி கொண்டிருக்க வர்ஷினிக்கோ மிகவும் மக்ழ்ச்சியாக இருந்தது. அவனே வர்ஷியினை விரும்புவதாக கூறியது அவள் காதில் ரீங்காரமிட்டு கொண்டிருந்தன.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43

34. இனிதே முடிந்தது!​

வலியில் கண்ணீர் வழிந்தாலும் வர்ஷினியின் விழிகள் அவனையே நோக்கி கொண்டிருந்தன.

மெதுவாக நடந்து வர்ஷினியிடம் வந்த நிஷா”வர்ஷுக்கா சாரிக்கா" என்றதும் எரித்துவிடுவது போல் அவளை நோக்கிய சரவணனன்.”ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போய்டு" என்றான்.

"வர்ஷுக்கா நான் வேணும்னே தான்க்கா உங்களை சுட்டேன். அன்னைக்கு நீங்க வீட்டுக்கு வந்து பேசினப்பவே மாமாவை அதிகமா விரும்பறது தெரிஞ்சுது. மாமாவும் அவரை அறியாமலே உங்களை விரும்பறார். ஆனால் அவரால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் முழுமனதோடு உங்களை ஏற்றுக்கொண்டு தான் திருமணம் செய்யவேண்டும் என்று நினைத்துதான் உங்கள் பின்னாலேயே வந்தேன். இப்பொழுதுகூட உங்களை சுட்ட பின் தான் மாமா உங்கள் மீது வைத்திருக்கும் அன்பை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அதனால்தான் கையில் சுட்டேன் இருந்தாலும் தவறு தான் என்னை மன்னித்துவிடுங்கள் அக்கா" என்று கண்ணீர் விட்டாள்.

இருவருமே ஒரு நொடி அசைவற்று போனார்கள். 'இந்த சின்ன பெண்ணிற்கு தெரிந்தது கூட எனக்கு தெரியவில்லையே' என்று சரவணனும் 'தனக்கு உதவ இந்த பெண் இப்படி ஒரு வேலையை செய்திருக்கிறாளே' என்று வர்ஷினியும் எண்ணி கொண்டனர்.

"ஆ.." என்று வலியில் வர்ஷினி துடிக்க.

"முதல்ல ஹாஸ்பிடல் போலாம்" என்று அவளை எழுப்பினான்.

"இல்லை முதல்ல நீங்க கட்ற தாலி என் கழுத்துல ஏறட்டும் அப்புறம் தான் நான் எங்கேயும் வருவேன்" என்றாள்.

"நான் தான் உன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லிவிட்டேனே அப்புறம் என்ன முதலில் உன் காயத்திற்கு சிகிச்சை செய்யவேண்டும்" என்றான்.

"இல்லை இன்னொரு நாளிற்காக என்னால் காத்திருக்க முடியாது. இன்றே இப்பொழுதே என் கழுத்தில் தாலியை கட்டுங்கள்" என்று பிடிவாதம் பிடிக்க,”எதில் ஒற்றுமையாய் இருகிறீர்களோ இல்லையோ? இந்த பிடிவாதம் பிடிப்பதில் மட்டும் நகல் போல் இருக்கீறிர்கள்" என்று மெல்லிய புன்னகையோடு உள்ளே சமையலறை சென்றவன் கத்தி மற்றும் ஒரு சில மருத்துவ உபகரணங்களோடு வந்தான்.

போலிஸ்க்காரன் அல்லவா? சிறிது அவசர உதவியும் தெரியும் அல்லவா?

"மாமா எதற்காக கத்தி எல்லாம் எடுத்து வருகிறீர்கள்" என்று நிஷா கேட்க அவளை முறைத்தபடி,”ஹ்ம்ம் நீ செஞ்ச வேலைக்கு என்ன கரண்டியா எடுத்துட்டு வரமுடியும். போய் வெந்நீர் எடுத்துட்டு வா" என்றான்.

"சாரி மாமா" என்றாள் கண் சிமிட்டியபடி.

"கண்ணை நோன்டி எடுக்க போறேன் பார்... கழுதை... போன்னு சொல்றேன்ல" என்று அதட்டினான்.

"இதோ போறேன்" என்று உள்ளே ஓடினாள்.

"நீ தான் பெரிய ஜான்சிராணி ஆச்சே. வலிக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ." என்று புல்லட்டினை வெளியே எடுத்தான்.

வலி அளவுக்கதிகமாக இருந்தாலும் சற்று தாங்கி கொண்டாள் வர்ஷினி. எல்லாம் முடிந்துகட்டு போட்டுவிட்டான்.

எல்லோரும் கோவிலுக்கு செல்ல அங்கே வர்ஷினியை பார்த்த எல்லோரும் அதிர்ச்சியில் பதறி போயினர்.

"ஐயோ என்னம்மா இது கைல கட்டு?" என்று கேட்க.

இருவரின் பார்வைகளும் நிஷாவிடம் செல்ல அவளோ விழிகளால் கெஞ்சினாள்.

"என்ன மூணு பேரும் ஒன்னும் சொல்லாம திருதிருன்னு முழிச்சிட்டு இருக்கீங்க" என்று தாத்தா அதட்ட.

"ஒன்னும் இல்ல தாத்தா. நான் தான் கிழே பிளாஸ்டிக் கவர் இருக்கறத பார்க்காம வழுக்கி விழுந்துட்டேன் கைல அடிபட்ருச்சு" என்றாள் வர்ஷினி வேகமாக.

"ஹாஸ்பிடல் போலாம்மா" என்றார் வர்ஷினியின் தந்தையான எக்ஸ் எம்.எல்.ஏ.

"இல்லப்பா தேவை இல்ல. அவரே மருந்து போடுட்டுட்டாரு.” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே ஐயர்,”நேரம் ஆகறது பொண்ணு மாப்பிளைய கூட்டிட்டு வாங்க" என்றார்.

"சரி வாங்க கூப்பிட்றாங்க போலாம்" என்று இருவரையும் கூட்டி சென்று மணவறையில் அமரவைத்தனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள அங்கே காதல் மொழிகளும் பரிமாறி கொள்ளப்படுகின்றன.

இருப்பினும் சரவணனின் விழிகளில் ஒரு வித தயக்கம் இருப்பதை வர்ஷினி புரிந்து கொண்டிருந்தாள்.

ஒரே நாளில் தன்னை ஏற்று கொள்ளவேண்டும் என்று நினைக்கமுடியாது நேரம் வேண்டும் அவருக்கும் என்று அமைதியாய் இருந்தாள்.

"அம்மா..." என்று வர்ஷினியை கட்டிக்கொண்டது சர்வதா குட்டி.

ஐயர் மந்திரம் கூற சரவணனின் கரங்களால் மங்கள நான் வர்ஷினியின் கழுத்தில் பூட்டப்பட இருவரும் இல்வாழ்கையில் இணைந்தார்கள்.

கோவிலை சுற்றி வீட்டுக்கு எல்லோரும் புறப்பட காரில் ஏறிய சமயம் வர்ஷினியும் சரவணனும் வர தனி கார் இருந்தது.

"வர்ஷினி" என்று குரல் மட்டும் கேட்டதால் யார் தன்னை அழைப்பது என்று திரும்பி பார்த்தாள் யாரும் இல்லாததால் குழப்பம் அடைய”வர்ஷு.." என்று அவள் அருகில் மீண்டும் அதே குரல் கேட்டது.

திரும்ப அங்கே ஒளியிலே ஓர் உருவம் ஆம் ... அவள் அக்காவின் உருவம் தெரிந்தது.

"அக்கா ..." என்று அவளை கட்டி அணைக்க முயல... முடியாமல் அவள் ஒளியினுள் சென்று வந்தது வர்ஷினியின் கரங்கள்.

"வர்ஷு... உன்னால என்ன தொட முடியாதுடா" என்றாள் ஆத்மாவாய் நின்ற செல்வி.

"அக்கா உன் ஆத்மா சாந்தி அடையாம இருக்கா?" என்றாள்.

"என் ஆத்மா எப்படி சாந்தி அடையும் வர்ஷு... என் கணவரும் குழந்தையும் என் அன்பில்லாமல் தவித்து கொண்டிருக்கும் பொழுது நான் எப்படி நிம்மதியாய் இருக்க முடியும்" என்றாள் செல்வி.

"அக்கா" என்று வர்ஷினி அழ.

"அழாதே வர்ஷு. இவரும் இரண்டு வருடங்களாக என்னை மறந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என்று பார்த்தேன். அவர் என்னை மறக்கவே இல்லை. அப்பொழுது தான் உன்னை பார்த்தேன். உன்னை அவருடன் சேர்த்து வைக்கவேண்டும் என்று அன்று சர்வதா குட்டியின் மூலம் எல்லோர் முன்னிலையிலும் உன்னை அம்மா என்று அழைக்க வைத்தேன். நான் நினைத்த மாதிரியே நடந்துவிட்டது. உங்கள் திருமணமும் முடிவாகிவிட்டது ஆனால் உங்கள் மாமா மட்டும் என் மேல் இருந்த அன்பால் உன் மேல் இருக்கும் அன்பை உணர மறுத்தார். அதனால் தான் நிஷாவின் மூலம் நான் தான் உன்னை சுட்டேன். என்னை மன்னித்து விடுடா. ஆனால், நான் எண்ணியது நடந்துவிட்டது. உன் மாமா நீ அவர் வாழ்வில் முக்கியமானவள் என்று உணர்ந்து கொண்டார். இப்பொழுது எனக்கு நிம்மதி. இருந்தாலும் ஒரே ஒரு ஆசை..." என்றாள் செல்வி.

"என்னக்கா?" என்றாள் தூரத்தில் போனில் பேசிக்கொண்டிருக்கும் சரவணனை பார்த்தபடி.

"நான் ஒரே ஒரு தடவை உன் மாமாவிடம் செல்வியாக பேச வேண்டும். அதற்கு உன்னால் மட்டும்தான் உதவ முடியும்" என்றாள்.

"சொல்லுக்கா. நான் என்ன செய்யணும்?" என்றாள் ஆர்வமாக.

"நான் உன் உடம்பில் நுழைய எனக்கு அனுமதி தரவேண்டும். ஒரு சில விஷயங்களை உன் மாமாவிற்கு தெளிவு படுத்த வேண்டும்" என்றாள்.

சிரித்தபடி”சரி அக்கா. உயிரோடு இருக்கும் போது நாம் இருவரும் ஒன்றாக இருக்க முடியவில்லை. இப்படியாவது ஒன்றாக இருக்கும் வாய்ப்பு கிடைத்ததே" என்றாள் வர்ஷினி.

சரவணன் அருகில் வருவதை பார்த்த வர்ஷினி”அக்கா மாமா வரார்...." எனும் பொழுதே வர்ஷினியின் உடலுக்குள் சென்றுவிட்டாள் செல்வி.

சரவணனையும் குழந்தையையும் ஆசை தீர கண் இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தாள் செல்வி.

"என்ன அப்படி பார்த்துட்டு இருக்க வர்ஷினி?" என்று கேள்வி கேட்டான்.

எதுவும் பேசாமல் சர்வதாவை வாங்கி ஆசை தீர முத்தம் கொடுத்தாள்.

"பார்த்து பார்த்து கைய ஸ்ட்ரேயின் பண்ணாத" என்று சிரித்தான்.

அமைதியாய் சிரித்தாள்.

அந்த சிரிப்பில் ஒரு முழுமையை உணர்வது போல் இருக்க”ஏறு எல்லாரும் போய்ட்டாங்க. கிளம்பலாம்" என்று சர்வதாவை பின் சீட்டில் அமரவைத்துவிட்டு, காரின் முன்கதவை திறந்துவிட வர்ஷினி உருவில் இருந்த செல்வியும் ஏறிக்கொண்டாள்.

கார் கதவை மூடிய பின்”நான் உங்ககிட்ட பேசணும்" என்றாள் அமைதியாக.

"சொல்லு" என்று கேட்க,”சரோ" என்றாள் மெதுவாக.

'அந்த குரல் அழைத்த விதம் எல்லாம் உயிர் நாடி வரை சென்று தீண்டி செல்வியை நினைவு படுத்த' அவளை உற்று நோக்கினான்.

"என்ன அப்படி பார்க்கிறிங்க. நான் உங்க செல்வி தான்" என்று கூற மூச்சும் நின்று விடும் போல் இருந்தது அவனுக்கு.

மறுநொடி அவளை ஆற தழுவி கொண்டு”செல்வி" என்று கண்ணீரில் கரைந்தான்.

"சரோ அழாதிங்க. நான் உங்ககிட்ட இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்னு சத்யம் வாங்கன அப்புறமும் நீங்க பண்ணிக்கலை. அதனால வர்ஷினிய நான் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன். இவ வர்ஷினி மட்டும் இல்ல நானே தான் அவள். அவகூட நீங்க சந்தோஷமா வாழ்ந்தா தான் என் ஆத்மா சாந்தி அடையும்" என்றாள் சிரித்தபடி.

"உன் விருப்பம் அது தான்னா அப்படியே செய்றேன் செல்வி. ஆனா நீ என்னை விட்டு போகாத ப்ளீஸ்" என்று கெஞ்சினான்.

"இல்லை சரோ. இவ்ளோ நாள் உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு போக முடியல. ஆத்மாவா அலைஞ்சிட்டு இருந்தேன். இப்போ என் மனசு நிறைஞ்ச்சிடுச்சு. என் காலம் முடிஞ்சிடுச்சி நான் போகணும். போனாலும் என்றும் உங்களுடன் தான் இருப்பேன். எனக்கு விடை கொடுங்கள். இன்னொரு ஆசையும் இருக்கிறது” என்றாள் கண்ணீரோடு.

"என்னம்மா?" என்றான் வாஞ்சையாய்.

"நீங்கள் மீண்டும் உங்களின் போலீஸ் வேலைக்கு செல்லவேண்டும். அந்த வேலையை விட்டுட்டு எப்படி வருந்துகிறிர்கள் என்று எனக்கு தெரியும்" என்றாள்.

"சரி செல்வி" என்று அவளை அணைத்து கொண்டான்.

"நான் வரேன் சரோ" என்று அவன் நெற்றியிலும் இறுதியாக இதழிலும் மென்மையான முத்தமிட்டு வர்ஷினியின் உடலில் இருந்து வெளியேறினாள்.

"செல்வி" என்று அழுதவனை வர்ஷினி ஆறுதல் கூறினாள்.

"மாமா அழாதிங்க. அக்காக்கு நீங்க அழறது பிடிக்காது. நீங்க எப்பவுமே சிரிச்சிட்டு இருக்கணும்னு தான் என்னை உங்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறாள்" என்று அவன் தலையை மென்மையாய் வருட தலை அசைத்து ஆமோதிப்பதாய் சிரித்தான் சரவணனன்.

இதோ இவர்களின் புதிய வாழ்க்கை பயணம் ஆரம்பிக்க நாம் தடையாய் இல்லாமல் விலகிடுவோம்.

சரவணனும் வர்ஷினியும் சர்வதாவும் மக்ழ்ச்சியாக வாழ்ந்தனர்.

சரவணனுக்கு அன்றில் இருந்து”மழையோடு வந்த காதலாய்" மாறினாள் வர்ஷினி.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43

35​

செல்வி வந்து சென்றதன் தாக்கம்... வர்ஷினி தான் தன் அருகில் அமர்ந்திருக்கிறாள் என்றாலும் சரவணன் விழிகளுக்கு அவள் செல்வியாகவே தெரிந்தாள்.

அவள் வேண்டாம் என்று கூறியும் சரவணன் கேட்காமல் ஹாஸ்பிட்டல் கூட்டிச்சென்று சிகிச்சை அளித்தபின் வீடு வந்தனர்.

சற்றுமுன்பு இருந்த தயக்கம் இப்போது இல்லை அவனுக்கு.

இதுவரை விருப்பமில்லாததால், வர்ஷினி செல்வி போல் இருப்பாள் என்று மட்டும் தெரியும் மற்றபடி இப்பொழுது தான் அவளை இவ்வளவு நெருக்கத்தில் பார்ப்பதால் ஓரவிழியில் அவளை பருகியபடி வாகனத்தை ஓட்டி கொண்டிருந்தான்.

"என்னை மன்னித்துவிடு வர்ஷினி. உன்னை ரொம்ப கஷ்டபடுத்திவிட்டேன்" என்றான் வண்டியை ஒட்டியபடி.

வீட்டின்முன் இறங்கியவுடன் ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்ப, தூங்கிகொண்டிருக்கும் குழந்தையை எங்கு படுக்கவைப்பது என்று யோசித்தபடி இருக்க, அவள் எண்ணம் புரிந்தவனாக சரவணன்.

"வர்ஷினி பாப்பாவ கொடு, உள்ளே தூங்க வச்சிடறேன்" என்று குழந்தையை வாங்கிக்கொண்டு சென்றான்.

சில சடங்குகளை செய்து முடித்த பின் வந்திருந்த அனைவரும் கிளம்பிவிட, வீட்டில் சரவணனும் வர்ஷினியும் மட்டும் தனித்துவிடப்பட்டனர்.

குழந்தையின் அருகில் அமர்ந்திருந்தவளிடம்”வர்ஷினி" என்றான்.

"என்ன மாமா?"

"கைல காயத்துடன் இருப்பதால் எதையும் ரொம்ப ஸ்ட்ரேயின் பண்ணிக்காத. உனக்கு எது வேணும்னாலும் என்னை தயங்காம கேளு" என்றான்.

"சரி மாமா"

"அப்புறம் ..."

"ஹ்ம்ம்.. சொல்லுங்க"

"இல்ல. நேத்து உன்கிட்ட ரொம்ப ஹார்ஷா பீகேவ் பண்ணிட்டேன். ஐ ஆம் சாரி." என்றான் தயங்கியவாறு.

"விடுங்க மாமா. எல்லாம் எதிர்பாத்து தான் உங்களை கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணேன்" என்றாள் மெதுவாய் சிரித்து.

"உன்னோட திங்க்ஸ் ஏதாவது எடுத்துட்டு வரணும்னா உங்க வீட்லர்ந்து எடுத்துட்டு வந்துக்க. நான் எதுவும் சொல்ல மாட்டேன்" என்று கூற,”சரி” என்று சிரித்தாள்.

"எங்க அக்கா வந்து பேசினவுடனே ஆளே மாறிட்டிங்க" என்று கேட்டதும் எதுவும் சொல்லாமல் அமைதியாய் ஜன்னலோரத்தில் சென்று வெளியே வெறித்தபடி நின்றான்.

"சரி விடுங்க மாமா. அக்கா எப்பவும் நம்ம கூட தான் இருப்பாங்க" என்று அவன் தோளை தொடவும் திரும்பியவனின் விழிகளில் கண்ணீர் வழிந்தது.

"செல்வி எனக்கு மனைவியாய் மட்டும் இல்லாமல் இந்த உலகத்துல இருக்க எல்லா உறவுகளுமாய் இருந்தா... அவளும் நானும் வாழ்ந்த காலம் கொஞ்ச நாள் தான். ஆனால் அதிலே எங்களின் முழு வாழ்கையும் வாழ்ந்திருந்தோம். நீ வந்த பின்புகூட என்னால அவளை மறக்கமுடியாது எதுவாய் இருந்தாலும் செல்விக்கு பின் தான் எல்லோருமே" என்றான்.

இதை கேட்டு முகம் வாடுவாள் என்று அவளை நோக்க, பிரகாசமாய் சிரித்து கொண்டிருந்தாள் வர்ஷினி.

"நான் என்னைக்குமே அதுக்கு தடையா இருக்க மாட்டேன்" என்று அவன் அருகில் நெருங்க”ஹக்க்கும்... வர்ஷினி" என்றான் மெதுவாக”சொல்லுங்க” என்று மேலும் நெருங்க.

"அது வந்து இப்போதைக்கு ..." என்று இழுக்க.

"இப்போதைக்கு என்ன?" என்று நின்றாள்.

"இப்போதைக்கு உன் கை முழுவதும் குணமாகட்டும். பின் நம் வாழ்கையை ஆரம்பிக்கறது பத்தி யோசிக்கலாம்" என்றான்.

"அவ்ளோ தானா?" என்று புருவம் உயர்த்தி கேட்டாள்.

"ஹம்..” என்று தோளை குலுக்கி தலை ஆட்டினான் சரவணன்.

"உங்களுக்கு சுத்தமா பொய் சொல்லவராது. நமக்கு கல்யாணம் நடந்துருச்சி. இனி, எப்போ வேணா நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். நானா என்னைக்கும் உங்களை தொந்தரவு செய்யமாட்டேன். எப்போ என்னை உங்க மனைவியாய் மனசார நினைக்கிறிங்களோ அன்னைக்கு மத்தத் பத்தி யோசிப்போம். நேரமாச்சு தூங்குங்க" என்று சர்வதாவின் அருகில் சென்று படுத்துக்கொண்டாள்.

இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன சரவணனும் வர்ஷினியும் ஒளிவு மறைவு இன்றி மனம் விட்டு பேச ஆரம்பித்தனர்.

"அம்மா.. அம்மா..” என்று வர்ஷினியை தேடி கொண்டு சமையலறை ஓடினாள் சர்வதா.

"என்னடா குட்டி" என்று தூக்கி கொண்டு அங்கிருந்த சேரில் அமர்ந்தாள்.

"அம்மா பசிக்குது" என்றாள்.”எனக்கும் தான் அம்முகுட்டி. ஆனா, என்ன செய்யறது நம்ம சமையல்காரர் இன்னும் சமையலை முடிக்கலையே.” என்று பெருமூச்சிவிட்டாள்.

"என்னது சமையல்காரனா? உங்க ரெண்டு பேருக்கும் இதோ வரேன். வாய் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு. கல்யாணம் மட்டும் அடம்பிடிச்சி பண்ணிகிட்டா... ஆனா சமைக்க தெரியல... வாய்மட்டும் பாரு எட்டு ஊருக்கு கிழியுது. என் தலை எழுத்து ரெண்டு கல்யாணம் பண்ணேன். ரெண்டுத்துக்குமே சமைக்க தெரியல. நான் தான் சமைக்கக் வேண்டியிருக்கு" என்று கத்திக்கொண்டிருக்க.

"செல்வி எங்க இருக்க நீ? உன் புருஷன் சொன்னத கேட்டியா? உனக்கு சமைக்க தெரியலைன்னு திட்றாரு. எங்கடி இருக்க? செல்வி.." என்று கத்தினாள் வர்ஷினி.

"அடிப்பாவி. என் செல்வி இந்த உலகத்துல இல்லனாலும் நீ சொன்னத கேட்டா என்கிட்டே சண்ட போட்துறக்காகவே வருவாடி." என்று அவள் வாயில் ஒரு ஆப்பிள் துண்டை வைத்து அடைத்தான்.

"ஒன்னாவது நம்மளுக்கு அடங்குதுங்களா பாரு?" என்று தன்னை நொந்து கொள்வதை போல் சொல்ல வர்ஷினி விழுந்து விழுந்து சிரித்தாள்.

"அம்மா எனக்கு பசிக்குது... நீ.. பா...து . சிதி...கி...த” என்று இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்து முறைத்துக்கொண்டு சர்வதா நிற்க.

"சர்வதா குட்டி பேசாம மூணாவதா ஒரு அம்மாவை நல்லா சமைக்க தெரிந்த அம்மாவை கூட்டிட்டு வரேன்டா தங்கம்' என்று சொல்லவும்.

"என்னது நான் இங்க இருக்கும்போது இன்னொரு அம்மாவா உங்களை...” என்று வர்ஷினி துரத்த, சரவணனும்”சும்மா சொன்னேன்டா வர்ஷும்மா.. பேய் இருக்கும் போது யாராவது பிசாசு கூட்டிட்டு வருவார்களா?" என்று பாவமாய் கேட்டான்.

"உங்களை...” என்று காதை பிடித்து திருகினாள்.

"தூப்பர் மம்மி ..." என்று கை தட்டி துள்ளி குதித்தது சர்வதா குட்டி.

"செல்லகுட்டி. இங்க வாங்க அப்பா உங்களுக்கு ஐஸ்கிரீம் செஞ்சிருக்கேன். உங்க ரூம்ல போய் சாப்பிடுங்க யாருக்கும் கொடுக்கக்கூடாது" என்று அவளுக்கு கொடுத்து அனுப்பினான்.

"அப்போ எனக்கு.. திஸ் இஸ் டூ பேட்" என்று மெதுவாக நடந்தவள் அவனிடம் இருந்த இன்னொரு பெரிய கப்பை பிடுங்கி கொண்டு ஓடினாள்.

"ஏய் நில்லு. பிடுங்கிட்டா ஓடற?" என்று அவள் பின்னாலே ஓடினான்.

"உன்னால பிடிக்க முடியாது மாம்ஸ்." என்று அவர்கள் அறைக்குள் சென்று கட்டிலின் மேல் அம்ர்ந்து வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.

பின்னாலேயே ஓடிவந்தவன் அவள் ருசித்துசாப்பிடும் அழகை கண்டு வாசலிலேயே கைகளை கட்டிக்கொண்டு நின்றான்.

சாப்பிட்டு கொண்டிருந்தவள் தன் அருகில் நிழல் ஆடுவதை பார்த்து தலை தூக்கினாள்.

"ஐஸ்கிரீம் ரொம்ப நல்லா இருக்கு மாமா" என்று தலையை தாழ்த்தி கொண்டாள்.

அவனும் எதுவும் பேசாமல் கிழே சென்றுவிட்டான்.

"என்ன அமைதியா போய்ட்டாரு. இந்நேரத்துக்கு ஏதாவது சண்ட நடந்திருக்கணுமே" என்று யோசித்தபடி கிழே வந்தாள்.

"கோவிலுக்கு போகணும் புடவை ஏதாவது கட்டிக்கிட்டு ரெடி ஆகிடு" என்று அவளை பார்க்காமல் சொல்லிவிட்டு போய்விட்டான்.

மாலை இருவரும் கோவிலுக்கு சென்று வீடு வந்த பின்னர் இரவு உணவு அமைதியாக முடிந்தது.

சர்வதா தூங்கிவிட அவளின் அறையில் தூங்கவைத்துவிட்டு வந்தவன்.

"நான் உன்கிட்ட பேசணும்” என்றான் வர்ஷினியை பார்த்து.

டி.வி பார்த்து கொண்டிருந்தவள்,” சொல்லுங்க மாமா.. எதாவது முக்கியமான விஷயமா?" என்றாள்.

அவர்களின் அறை நோக்கி சென்று கொண்டே”ஆமா" என்றான் ஒற்றை வரியில்.

டி.வி யை ஆப் செய்துவிட்டு உள்ளே சென்றவள்.

"சொல்லுங்க” என்றாள்.

எதுவும் பேசாமல் அவள் அருகினில் சென்று நின்றவன் மெல்ல,”நான் உன்னை என் மனசார மனைவியா ஏத்துகிட்டேன்" என்றான்.

அவன் கூறியதன் அர்த்தம் புரியவே சில நொடிகள் தேவைப்பட்டது வர்ஷினிக்கு.

"அப்படினா நீங்க என்கூட சேர்ந்து வாழணும்னு நினைக்கிறிங்களா?" என்றாள் நம்பாமல்.

தலையை மட்டும் ஆட்டி மெல்ல சிரித்து அவளை தன்னோடு அணைத்துக்கொண்டான்.

ஆயிரம் தான் அவனின் அன்புக்காக ஏங்கிக்கொண்டிருந்தாலும் திடிரென்று இப்படி ஒரு அரவணைப்பு அவளின் உடலை லேசாக நடுங்க செய்தது.

"உனக்கும் என்கூட சேர்ந்து வாழ சம்மதம் தானே?" என்று கேட்ட நொடி அவன் நெற்றியில் தன் இதழினை பதித்து தங்களின் வாழ்கையை இனிதாய் தொடங்கினர் இந்த தம்பதியினர் .

நாட்களும் இனிமையாய் நகர இப்பொழுது சர்வதாகுட்டிக்கு இன்னொரு குட்டிப்பாப்பா வரப்போகும் சந்தோஷம். ஆம் வர்ஷினி இப்பொழுது எட்டு மாதம் சரவணன் அவளை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டான்.

"அம்மா அம்மா எனக்கு குட்டி பாப்பா வேணும்" என்று அவள் பின்னாலேயே அலைந்து கொண்டிருந்தாள் சர்வதா.

"சரிடா குட்டி. உன்கிட்டே கொடுத்துட்றேன். நீ தான் பாப்பாவ பத்திரமா பார்த்துக்கணும் சரியா?" என்று வர்ஷினி கேட்க.

"ஒஹ் நான் ந...த்தா... பா...து..பே..னே” என்றது தன் கையில் இருக்கும் பொம்மையை அணைத்தபடி.

சரவணனும் போலீஸ் வேலையில் சேர்ந்துவிட்டான். பிசினெஸ்ம் பார்த்துக்கொண்டான்.

இனிதே அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க சர்வதாவுக்கு தான் மிகவும் மகிழ்ச்சியானது.

இருவரும் வீட்டில் எந்நேரமும் ஒரே ரகளை செய்தனர்.

சமயலறையில் சத்தமில்லாமல் பின்னால் சென்று வர்ஷினியின் இடுப்பை கிள்ள, ”ஆ .." என்று அலறியவளின் இதழை மூடினான்.

"இப்ப எதுக்குடி இப்படி கத்தற" என்று கேட்க, ”எதுக்குடா என்னை கிள்ளுன?" என்றாள்.

"என்னது டாவா உன்னை" என்று துரத்த இவர்களின் வாழ்வும் இவ்வாறே இனித்து கொண்டிருந்தது.
 
Top Bottom