Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed மழையோடு நம் காதல் - கதை

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

20. விரல்களின் வாசிப்பில் மன்னிப்பு!​

'யார் வந்தா நமகென்னடி நம்ம படிக்கிற வேலைய மட்டும் பார்ப்போம்" என்று தன் தோழிக்கு பதில் கூறிவிட்டு அடுத்து வரப்போகும் பாடத்தின் புத்தகத்தை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளின் கவனத்தை கலைக்கும் விதமாக வந்தது அவளின் மொபைல் ஓசை.

"நமக்கு யாரு இந்த நேரத்துல மெச்செஜ் பண்ண போறா? அப்பாம்மாகூட பேசறதில்லை. நம்ம புருஷன் சுத்தம். அவருக்கு அவர் வேலைதான் முக்கியம். ஒருவேளை இந்த கம்பனிக்காரன் எவனாவது அனுப்பியிருப்பானோ?" என்று நினைத்துக்கொண்டு திறந்து பார்க்கையில், அவள் கண்களையே நம்பமுடியவில்லை. அந்த குறுஞ்செய்தி அவள் கணவனிடம் இருந்து தான் வந்திருந்தது.

இரண்டு மெச்செஜ் முழுவதும்”சாரி” என்றிருந்தது.

'ஹக்கும்... வீட்ல இருக்கும்போது நேரடியா பேசறதுக்கு நேரமில்லை, இப்போ இந்த சாரிய அவன் டைப் பண்ணியா அனுப்பியிருப்பான்? நிச்சயமா இல்லை. பிராடு பைய, ஒரு தடவை டைப் பண்ணிட்டு அப்படியே காபி பேஸ்ட் பண்ணிருப்பான். அவனாவது இவ்ளோநேரம் டைப் பண்ணி டைம் ஸ்பென்ட் பண்றதாவது?' என்று யோசித்து கொண்டிருக்கும்போதே அடுத்த செய்தி வந்தது”ஐ லவ் யூ” என்று அந்த மெச்செஜ் முழுவதும் இருந்தது.

'என்ன சாருக்கு இன்னைக்கு லவ் ஓவரா பொங்குது?' என்று நினைக்கும்பொழுதே அடுத்ததும் வந்தது.

"பேபிமா! நீ நிச்சயமா என்ன நினைகிறேன்னு நான் கரெக்டா சொல்லட்டா? இவனுக்கு நம்மகூட பேசறதுக்கே டைம் ஸ்பென்ட் பண்ணமுடியல இவன் எங்க இதெல்லாம் டைப் பண்ணிருக்க போறான். பிராடு பையன்னு தான் நினைச்ச? உன் மேல சத்தியமா இல்லல்ல. குட்டிம்மா இந்த உலகத்துல நீ அதிகமா நேசிக்கிற என் மேல சத்தியமா நான் தான் இதெல்லாம் டைப் பண்ணி அனுப்பினேன். ஐ மிஸ் யூ சோ மச் டி செல்லம். ஐ வான்ட் யூ பேட்லி டார்லிங்" என்று வந்திருந்தது.

'டேய்! எனக்கு இங்க வேலை இருக்கு. உன் லவ் தான் அன்னைக்கே தெரிஞ்சிருசே? இந்த மெச்செஜ் டைப் பண்ணி என் டைம் வேஸ்ட் பண்ணாத. உன்னோட பொன்னான வேலைய பாரு. என்ன டிஸ்டர்ப் பண்ண. ஐ வில் கில் யூ" என்று சிரித்துக்கொண்டே அனுப்பினாள்.

"ஐ லவ் யூ சொல்லவேண்டிய வாயால ஐ கில் யூ சொல்லலாமா செல்லம். இவ்ளோதூரம் கெஞ்சுரேனே இந்த மாமாவை மன்னிக்க கூடாதா? அன்னைக்கு... நான்... ப்ம்ச்... நான் உனக்கு இன்னைக்கு எல்லாத்தையும் சொல்லிடறேன் பிளிஸ்டி.. நீ இப்படி என்னை அவாய்ட் பண்றது என்னால தாங்க முடியலடி.. ஐ லவ் யூ சோ மச்.. எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்க கூடாதா? நான் பாவம்ல?" என்று தன் கணவன் அனுப்பியதை படித்து சிரித்தாள்.

"என் படிப்பு முக்கியம்னு முடிவெடுத்து தான் என்கிட்டே இருந்து ஒதுங்கி இருக்கன்னு நினைச்சேன். அந்த லெட்டர்ல நீ எழுதி இருந்தத பார்த்துட்டு, நீ என்னை ரொம்ப நேசிக்கிற. இன்னும் பத்துநாள்ல தான் காலேஜ் முடியபோகுதே எதுக்கு உன்கிட்ட இருந்து பிரிஞ்சிருக்கனும்னு நினைச்சேன். ஆனா, நீ என் உணர்வுகளோட விளையாடற?" என்று திரும்பி அனுப்புகையில் அவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளி எட்டி பார்த்தது .

"ஐ ஆம் சாரி" என்று வந்தது.

பதிலேதும் இவள் அனுப்பாமல் இருக்க,”ஐ லவ் யூ" என்று வர.

"ஐ ஹெட் யூ” என்று அனுப்பினாள்.

"இட்ஸ் ஓகே. ஐ லவ் யூ" என்று பதில் வர சிரித்தாள்.

'பொண்டாட்டிகிட்ட லவ்வகூட சொல்ல தெரியாதவன். இவனை எல்லாம் பெத்தாங்களா? இல்ல செஞ்ஜாங்களான்னே தெரியல?' என்று தன் விழிகளில் வழியும் நீரை துடைத்தபடி நினைத்தாள்.

"நான் உன்னை உடனே பார்க்கணும்"என்று அடுத்த செய்தி வர...

"முடியாது. எனக்கு கிளாஸ் ஸ்டார்ட் ஆக போகுது. ஈவனிங் வீட்ல பார்க்கலாம்” என்று அனுப்பினாள்.

"இன்னும் எவ்ளோநேரம் இருக்கு கிளாஸ் ஆரம்பிக்க?" என்று சரவணத்தமிழன் அனுப்ப.

"இன்னும் அஞ்சுநிமிஷம் தான் இருக்கு. பட் என்னால வெளியல்லாம் வரமுடியாது. யூ பெட்டர் கோ அண்ட் சி யுவர் வொர்க்" என்று அனுப்பினாள்.

"நோ. ஐ வான்ட் டு சி யூ இம்மிடியட்லி. நான் உன் கிளாஸ் ரூம் வெளிய வரவா?" என்று கேட்டான்.

"ஐயோ சாமி. இன்னும் ஒருவாரம் தான் இருக்கு காலேஜ் முடிய. என் படிப்புக்கு உலை வச்சிராத. எனக்கு கிளாஸ் ஸ்டார்ட் ஆக போகுது நான் அப்புறம் பேசறேன்" என்று அனுப்பிவிட்டு மொபைலை கிழே வைத்தவள், தன் எழுத்து பணியை தொடர்ந்தாள். அதனால் உள்ளே வந்தவனை கவனிக்கவில்லை.

"ஹேய்! செம்ம சூப்பரா இருக்காருடி. இவர் தான் நமக்கு சேப்டி கிளாஸ் எடுக்க போறாரு போல. இவனை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவள்" என்று தன் தோழி வாய் ஓயாமல் பாராட்டி கொண்டிருப்பதை கேட்டு நிமிர்ந்தவள்.”ஹேய் இவன் எங்கண்ணன்டி" என்று கூறிவிட்டு தன் வேலையை தொடர நினைத்தவள்.”இரு இரு ஒரு நிமிஷம்" என்று தன் கண்களை நம்பாமல் மீண்டும் நிமிர்ந்து பார்த்தாள்.

'இந்த பயலுக்கு இங்க என்ன வேலை? அதுவுமில்லாம இவன் அவனோட பிரெண்டு இல்லை...? ரெண்டும் சேர்ந்து ஏதாவது வேலை காட்டுதுங்களோ?' என்று தன்னையே கேள்வி கேட்டு கொண்டிருக்கும் போதே பிரபு பேச ஆரம்பித்தான்.

"ஹாய் எவ்ரிஒன்! மை நேம் இஸ் பிரபு. உங்களுக்கு சேப்டி கிளாஸ் எடுக்கணும்னு உங்க காலேஜ்ல இருந்து ரெக்வெஸ்ட் பண்ணி கேட்டதால நாங்க வந்திருக்கோம்" என்றவனின் கண்கள் கடைசியாக அவன் சகோதரியின் மேல் நிலைக்க, அவள் முறைத்தாள்.

"வி ஆர் பிரம் கிரைம் பிரான்ச். உங்களுக்கு நான் தான் சொல்லிக்கொடுக்கிறதா இருந்தது ஆனா, எங்க கிரைம் பிரான்ச் ஹெட் இங்க பக்கத்துல ஒரு முக்கியமான வேலையா வந்ததால, இன்னைக்கு மட்டும் அவர் உங்களுக்கு கிளாஸ் எடுப்பார். சவுத் இந்தியா டீம்க்கு அவர் தான் ஹெட். சோ அவரோட டைம் ரொம்ப ப்ரிசியஸ் ஆனது. உங்களுக்கு த்ரீ டேஸ் கிளாஸ். மத்த ரெண்டு நாள் நான் எடுப்பேன். சோ யூ ஆல் வெல்கம் மிஸ்டர்.சரவணத்தமிழன்" என்று வெளியே சென்று எட்டி பார்க்க மிகுந்த கரவொளியின் நடுவில் மிடுக்கும் ஆண்மையின் மொத்த வடிவமாய் பார்ப்பவர்களின் கண்ணில் நிலைத்து நிற்கும் உருவில் கம்பிரத்தோடு உள்ளே சிரித்தபடி நுழைந்தான் நம் தாமரைசெல்வியின் கணவன்.

தன் மொத்த வகுப்பையும் திரும்பி பார்த்த செல்வி மிகவும் கடுப்பானாள். 'பின்னே, அவள் கணவனை அடுத்த பெண்கள் தங்களின் விழிமூடாது சைட்டடித்தால்.... அவளுக்கு குளுகுளு என்றா இருக்கும்?'

அவளின் விழிகளே அவனை விட்டு நகர மறுத்தன, இத்தனை நாள் பழக்கத்தில் ஒரு நாள் கூட இவ்வளவு மிடுக்காய் உடை அணிந்து அவள் பார்த்ததே இல்லை.

"ஹேய்! செம்மையா இருகார்டி உங்க அண்ணனை விட பயங்கர ஹாட்டா செம ஸ்மார்ட்டா இருக்கார் இல்லடி? உங்க அண்ணன் தான அப்போ உனக்கு இவரையும் தெரியுமா?" என்று சரவணத்தமிழனிடம் இருந்து கண்களை அகற்றாமல் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள் அவள் தோழி.

தன் கையால் வாயை மூடுமாறு சைகை செய்தவள், அவனை பார்க்காமல் கிழே குனிந்து இருந்தாள்.

"ஹலோ குட் ஆப்டர்நூன் கய்ஸ்! ஐ ஆம் சரவணத்தமிழன். நான் இதுவரைக்கும் எந்த பொது நிகழ்ச்சிலயும் கல்ந்துகிட்டதில்லை இன்பாக்ட் நீங்க எல்லாரும் தான் முதல்ல என்னை இந்த பொது இடத்துல ஆபீசரா பார்க்கிறிங்க" என்றதும் கரவொலி அதிர்ந்தது.

"என் பிரெண்ட் அண்ட் என் டிபார்ட்மென்ட்கு மட்டும் தான் என்னை இந்த போஸ்ட்ல தெரியும். இன்னும் சொல்ல போனா.... என் வுட்பிக்குகூட தெரியாது" என்று தாமரைச்செல்வியை அவன் விழிகள் நாட, அவளின் விழிகளில் அதிர்ச்சி நிறைதிருந்தது.

'என்னது பொண்டாட்டி நான் இங்க இருக்கும்போது வுட்பியா? யாருடா அவ? மகனே நீ இன்னைக்கு என்கிட்டே செத்த. உன்னை கொல்லாம விடப்போறதில்லை' என்று நினைத்து கொண்டிருக்கும்போதே மற்ற பெண்களிடம் ஒரே சலசலப்பு.

"கொடுத்துவச்சவடி அந்த பொண்ணு. இவரை மாதிரி ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க போறால்ல?" என்று கிசுகிசுப்பது காதில்விழ, உலை இல்லாமலே செல்வியின் மனது கொதிக்க ஆரம்பித்தது.

"இன்னும் பத்து நாளல்ல எங்களுக்கு கல்யாணம்." என்று கடிகாரத்தை பார்த்தவன்.

"டென் மினிட்ஸ் இதுலையே போய்டுச்சு. ஓகே லெட்ஸ் சி த கிளாஸ்" என்று ஆரம்பித்தவன் சேப்டி பற்றி நிறைய விஷயங்களை சொல்லிககொடுத்தான்.

அவனின் விழிகள் அவ்வபொழுது செல்வியின் விழிகளை சந்தித்து வந்தது.

அரைமணிநேரம் வகுப்பெடுத்து முடித்தவன்.

"ஓகே. இன்னைக்கு என்னோட கிளாஸ் முடிஞ்சுது. நாளைல இருந்து மிஸ்டர்.பிரபு வருவார். இது படிக்கற வயசு. பைனல் இயர் வேற? சோ படிப்புல முழுகவனத்தை செலுத்தி நல்லா படிங்க. பெஸ்ட் ஆப் லக். சி யூ கய்ஸ்" என்று வெளியே செல்ல எத்தனித்தவன் திரும்பி,”ஹ்ம்ம்.... ஒன்னு சொல்ல மறந்துட்டேன்" என்றான்.

எல்லோரின் விழிகளும் ஆர்வமாய் அவனின் இதழையே மொய்க்க...
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

21. உயிர்களின் காதல்!​

"எனக்கு பத்து நாள்ல கல்யாணம்னு சொன்னேன். ஆனா, பொண்ணு யார்னு சொல்லவே இல்லையே? இன்பாக்ட் நான் இங்க வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம். எஸ் ஷி இஸ் இந் யுவர் கிளாஸ் ஒன்லி. அண்ட் வி ஹாவ் அ ஸ்மால் பைஹ்ட். ஷி ரெப்யூஸ்ட் டு சி மீ ... சோ ஐ கேம் ஹியர் டு சி ஹெர்." என்று தன் விழிகளை செல்வியிடம் நிறுத்தி தொண்டையை கனைத்தான்.

"யாருடி அது ?" என்று எல்லோருக்கும் ஒரு ஏமாற்றம் கலந்த எதிர்பார்ப்பு தோன்ற.

"போச்சு. இப்போ நான் தான்னு சொன்னான். அவ்ளோதான், நான் செத்தேன். எனக்கு கல்யாணம் ஆனதே யாருக்கும் தெரியாது. என்னை கொல்ல போறாளுங்க. கன்பார்ம்ட்" என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே..

அவளின் ஆசைக்கணவன் போட்டு உடைத்தான்.

"அவங்க பேர் தாமரைச்செல்வி" என்று அவளை பார்க்க...

"ஐ ஹேட் யூ பார் திஸ்" என்று அவன் விழிகளை நோக்கி அவனுக்கு மட்டும் புரியும்படி இதழ் அசைக்க, சரவணத்தமிழனின் எண்ணத்தில் குறும்புமின்ன”இட்ஸ் ஓகே டியர். ஐ லவ் யூ" என்று கண்ணடித்து கூறினான் சத்தமாக.

பலத்த கரகோஷம் எழ,”ஐ வில் கில் யூ” என்றாள்.

"இட்ஸ் மை ப்ளஷர். ஐ ஆம் வெய்டிங்" என்று விட்டு”ஓகே சி யூ கேர்ல்ஸ். பை” அன்று அங்கிருந்து செல்வியை பார்த்தபடி வெளியேறினான்.

"அடிப்பாவி எங்ககிட்ட சொல்லவே இல்லை நீ" என்று எல்லோரும் அவளை நச்சரிக்க தன் போனை எடுத்தவள்”ஹொவ் டேர் யூ? இப்படி எல்லார்கிட்டயும் மாட்டி விட்டுட்டியே" என்று குறுஞ்செய்தி அனுப்ப.

"ஐ லவ் யூ!"

"ஐ ஹேட் யூ" என்று இவள் திரும்பி அனுப்பினாள்.

"இல்ல உன்னால அது முடியாது" என்று பதில் வர வெட்கப்புன்னகை ஒன்று அவள் சிந்தினாள். அவன் தன்னை பற்றி சரியாக புரிந்து வைத்திருக்கிறான் என்று நினைத்தவள்.

"எஸ்! ஐ ஹேட் யூ பார் லவிங் யூ திஸ் மச்” என்று தட்டிவிட்டாள்.

"ஐ ஆம் சாரி. ஐ லவ் யூ... ப்ளீஸ் கேவ் மீ அ செகண்ட் சான்ஸ். ஐ வில் டேபநெட்லி ஷோ ஹொவ் மச் ஐ லவ் யூ இன் திஸ் வேர்ல்ட்" என்று இருந்தது.

அதை படித்ததும் பாறையே கரையும் எனும் பொழுது பாவையவளின் காதல்மனது கரையாதா?

"ஹ்ம்ம்..." என்று மட்டும் அனுப்பினாள்.

"அப்படினா நீ என்னை மன்னிச்சிட்ட தான?" என்று அனுப்பினான்.

"ஆமாம்" என்று அனுப்பிய அடுத்த நொடி ஸ்மைளியினால் முத்தங்களை மெஸேஜில் நிரப்பி அனுப்பினான்.

"ஹ்ம்ம். பைன். நீ மெச்செஜ்லையே கொடுத்திட்டு இரு. நேர்ல யூ ஆர் நாட் அலவ்ட்" என்று அவனை சீண்டினாள்.

"அதை நீ சொல்லக்கூடாது... யூ ஆர் ஆல்வேஸ் மைன். ஐ ஹாவ் ஆல் ரைட்ஸ் டு கிஸ் யூ மை ஸ்வீட் பொண்டாட்டி" என்று வந்தது.

"அப்ப இன்னைக்கு என்னை யாரோ அவங்க வுட்பின்னு சொன்னாங்க. இன்னும் கல்யாணத்துக்கு பத்துநாள் இருக்கே அதனால நான் என் பிரெண்ட்கூட ஹாஸ்டல்ல தங்கலாம்னு நினைக்கிறன்" என்று மீண்டும் அவனை சீண்டினாள்.

"ஐ வில் ஷோ யூ வ்ஹூ ஐ ஆம்?" என்று ஒற்றை வரியில் பதில் வர என்ன பண்ணுவான் என்று எண்ணும்பொழுதே உள்ளுக்குள் ஒரு கலக்கம் உண்டானது.

வகுப்பு முடிந்தவுடன் தோழியின் வீட்டுக்கு சென்று சிறிதுநேரம் செலவிட்டு யோசனையில் வண்டியை ஒட்டிக்கொண்டு வீட்டுக்கும் வந்து சேர்ந்துவிட்டாள்.

மணி ஏழு காட்ட வீடு பூட்டி இருந்தது.

"என்ன இன்னும் இவர் வரலையா?" என்று யோசித்தவள்.

அவளுடன் நீண்ட நேரமாக பேசாமல் இருப்பது உறைக்கவே”கோவிச்சிக்கிட்டான் போல" என்று நினைத்தவள் கதவை திறக்கவும் அங்கே அவள் உள்ளே காலடி எடுத்துவைத்தவுடன், மேலே இருந்து பலூன் உடைந்து அவளின் தலைமுதல் பாதம் வரை பூக்களால் அர்ச்சனை நடந்தது.

இன்பஅதிர்ச்சியாக இருந்தது அவளுக்கு. அதோடு நில்லாமல் வீடு முழுவதும் மல்லிகையுடன் ரோஜாமொட்டுகள் சேர்ந்து கோர்த்து மாலையாய் தொங்கிகொண்டிருக்க வீட்டின் எல்லா இடத்திலும் மலர்கள்.

"இதெல்லாம் எப்போ செஞ்சான் எப்படி செஞ்சான்?” என்று யோசித்தாலும் அவளின் காதல் கணவன் அவளுக்காக மெனக்கெட்டு செய்திருந்த ஒவ்வொன்றையும் ரசித்தாள்.

எல்லாவற்றையும் பார்த்து பிரமித்தபடி தன் அறைக்கு உடை மாற்ற செல்ல அங்கே அன்று அவள் செய்திருந்த அலங்காரங்களைவிட ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக அலங்கரிக்க பட்டு இருந்தது.

அதைபார்த்து மலைத்தவள் விழிகளும் இமைக்க மறந்தன. இதழ்களும் மூட மறந்தன.

திடீர் என்று அவள் செங்கழுத்தினில் சூடனா வெப்ப காற்று பரவி அவளின் உடல் முழுவதும் சிலிர்க்க விழிகளை இறுகமூடி கொண்டாள்.

"செல்வி. ஐ மிஸ் யூ..." என்று கிறங்கும் குரலில் அவனின் குரல் கிறங்கடிக்க தன்னை மறந்து...

"ஹ்ம்ம்..." என்று பேச்சு வராமல் தடைப்பட்டு நின்றாள்.

"ஐ லவ் யூ சோ மச்" என்று பின்னால் இருந்து அவளை தன்னோடு சேர்த்தணைக்க.”ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு அன்னைக்கு ஒரு எக்ஸ் மினிஸ்டருக்கு எதிரா எவிடென்ஸ் கிடைச்சதாகவும் மிகவும் முக்கியமான ரகசியமான விஷயம் என்பதால் யாராவது அதை திட்டமிட்டு திருட முயர்ச்சி செய்வதற்க்குள் அதை நான் கண்டிப்பாக பார்வையிடவேண்டும் என்றதனால் தான் நான் செல்லவேண்டியதாயிற்று, அதே மினிஸ்டர் தான் உன்னையும் மிரட்டினது" என்று அவன் மூச்சுவிடாமல் கூறியும் அவள் அசையாமல் நிற்க... அவளை தன் புறம் திருப்பி அவள் இதழினை நோக்கி குனிந்து அவளின் சம்மதம பெறுவதற்காக காத்திருந்தான்.

அவளின் இதழ் தானாக அவனை சென்றடைய தேனை பருக காத்திருந்த வண்டு அவளின் ஆசையோடு தன்னுடைய காதலும் சேர்ந்து கொள்ள அங்கே இரு உயிர்கள் ஓருயிராக சங்கமிக்க ஆரம்பித்தது.

அங்கே காற்றுக்கே இடமில்லாத பொழுது நமக்கென்ன வேலை....

மறுநாள் விடிந்து வெகுநேரமாகியும் தன்னவள் விழிக்காமல் இருக்க, அவளின் நிலவு முகத்தை கண்ணிமைக்காமல் ரசித்து கொண்டிருந்தான் சரவணன்.

தனக்காக அவளின் பெற்றோரை விட்டுவிட்டு வந்து யாருமில்லாமல் கஷ்டபடுவதையும் தன்னாலேயே அவளை சிறிது நாள் சரியாக கவனிக்கமுடியாமல் போனதையும் எண்ணி மிகவும் வருந்தினான்.

இனி எக்காரணத்தை கொண்டும் அவளுக்குபிறகு தான் எல்லாமே என்று முடிவெடுத்திருந்தான்.

இன்று முழுவதும் அவளுடனே இருக்க முடிவு செய்து தன் வேலைக்கு விடுமுறை கூறியிருந்தான்.

சிறுகுழந்தை போல் தன் மார்பினில் புதைந்துக்கொண்டு உறங்கும் சின்னசிறு உருவத்தை தன் கைகளால் வருடிக்கொடுத்துக்கொண்டே அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

"ஹ்ம்ம் சும்மா இருடா... எனக்கு தூக்கம் வருது" என்று மெதுவாய் சிணுங்கியபடி அவனின் வலக்கரத்தை தன் இருகைகளுக்குள் கொண்டு சென்று தலையணை போல் வைத்து கொண்டு உறங்க அவனின் இதழில் புன்னகை அரும்பியது. 'என்னை எவ்ளோ மிஸ் பண்ணிருக்கா?' என்று தனக்குள் நினைத்தபடியே இன்னும் இறுக்கி அணைத்தான்.

இப்படி இவர்கள் வாழ்கை இனிமையாக தொடங்கி ஒவ்வொரு நாளும் இன்னும் இன்னும் நெருக்கம் அதிகரிக்க ஒருத்தரை விட்டு இன்னொருத்தர் இல்லாமல் ஒருநிமிடம் கூட இருக்கமுடியாது என்ற நிலைக்கு வந்தனர் .

இப்படி இருந்தாலும் இவர்களின் செல்ல சண்டைகளும் நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர குறையவில்லை. செல்வியின் படிப்பு முடிந்துவிட செல்விக்குள் மட்டும் சொல்லமுடியாத ஒரு துயரம் ஓடிக்கொண்டிருந்தது.

"என்னடா செல்வி? ஏன் அப்பப்ப ஒரு மாதிரி கவலை ஆகிடற? அம்மா அப்பா ஞாபகம் வந்துருச்சா? உனக்கு அவுங்கள பார்க்கணும் போல இருந்தா, நீ போய் பார்த்துட்டு வாடா. எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல" என்று அவளை ச்மாதானப்படுத்தினான்.

"அதெல்லாம் இல்லை சரோ எனக்கு..." என்று தலைகவிழ்ந்தபடி தயங்க.

"என்ன ம்மா சொல்லுடா? உன் மனசில ஏதோ ஒரு விஷயம் அரிச்சிட்டே இருக்கு. என்னனு சொன்னா தான தெரியும்?" என்று கனிவாய் கேட்டான்.

"எனக்கு எங்கம்மா சொன்னது பலிச்சிடுமான்னு பயமா இருக்கு" என்று அவள் விழிகளில் நீர் அரும்ப பதறி போனான் சரவணன்.

"என்ன சொல்ற நீ?" என்று கேட்டான் அவளை தன்னோடு சாய்த்து.

"நான் காலம் பூரா, உங்க குழந்தையை பெத்துக்ககொடுக்காம போயடுவனொன்னு..." என்று சொல்லிமுடிக்கும் முன் அவளை அதட்டினான்.

"என்ன பேசற நீ? நாம சேர்ந்து வாழ ஆரம்பிச்சு ரெண்டு மாசம் தான ஆகுது. அதுக்குள்ள என்ன அவசரம்?" என்று அவள் விழிகளில் பதிலை தேட.

"சரி அமைதியா தூங்கு. எல்லாமே நல்லதா நடக்கும்" என்று அவளை தன் மடி மீது சாய்த்து தலைகோத உறங்கிபோனாள்.

இரண்டு வாரம் செல்வியின் முகம் சரி இல்லாமல் சரவணன் எவ்வளவு சொல்லியும் எதையோ இழந்தமாதிரியே அமைதியாக இருந்தாள்.

அன்று ஞாயிற்று கிழமை அவனும் அவளுடன் இருக்க எண்ணி விடுமுறை எடுத்துவிட்டான்.

சமையல் செய்து கொண்டிருந்தவள் திடீர் என்று வேகமாக உள்ளே ஓட ஆபிஸ் விஷயமாக போனில் பேசி கொண்டிருந்தவன்.

அவள் ஓடுவதை பார்த்து பின்னாடியே ஓடினான். அவள் வாந்தி எடுத்து கொண்டிருந்தாள்.

"என்னாச்சு செல்வி, உடம்பு சரி இல்லையா? வா டாக்டர்கிட்ட போயிட்டு வரலாம்" என்று கூப்பிட அவள் வர மறுத்து தலையாட்டினாள்.

"இங்க பாரு இப்ப எல்லாம் ஒரே வாந்தி ஜுரமா இருக்கு. உடனே நாம டாக்டர் கிட்ட போகணும். வா” என்று அவளை கட்டாயபடுத்த.”எனக்கே தெரியும் இதுல டாக்டர் கிட்ட எதுக்கு போகணும்?" என்று அவள் கூறினாள்.

"என்ன தெரியும் உனக்கு?" என்று ஒன்றும் புரியாமல் கேட்டான்.”ஹ்ம்ம் நீங்க அப்பா... ஆக போறிங்கன்னு தெரியும்" என்று அவன் நெஞ்சினில் புதைந்தாள் .

"என்ன சொல்ற நீ ?" என்று கேட்டுக்கொண்டே இருந்தவன் உண்மை உரைக்க அவளை தட்டாமாலை தூக்கி சுற்றினான்.

"இறக்கி விடு டா. எனக்கு திரும்பி வொமிட் வருது எரும விட்ரா" என்று செல்வி கத்த,”என்னடி அதுக்குனு இப்படி திற்ற” என்று அவளை இறக்கி தன் மடி மீது அமரசெய்து அவள் முகத்தினை நோக்க வெட்கத்தில் இருகைகளாலும் தன் முகத்தை மூடி கொண்டாள்.

"ஹேய்..! இதுக்கு தான இவ்ளோ நாளா அழுதுட்டு இருந்த இப்போ சந்தோஷமா?" அவள் முகத்தினை நிமிர்த்தி கேட்டான்.

'ஆமாம்' என்று தலையாட்டினாள் செல்வி.

"நாளைக்கு டாக்டர்கிட்ட போயிட்டு வந்துடலாம்" என்று சந்தோஷத்தில் முத்த மழையால் அவளின் முகத்தை நனைத்தான் நாளை தங்களுக்கு மிக பெரிய இடி விழப்போவது தெரியாமல்...
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

22. உன்னை போல் உயிரோவியம்!​

"சரி நாளைக்கு தான ஹாஸ்பிடலுக்கு போகலாம். இப்ப நான் போய் சமைக்கனும். என்னை விடுங்க" என்று தன் முகத்தை அவளின் கூந்தலில் புதைந்து வாசம் பிடித்து கொண்டிருந்தவனிடம் கூறினாள்.

"ஹ்ங்...ஹ்ம்.. முடியாது... எனக்கு இந்த உலகத்துலயே யாராலையும் கொடுக்கவே முடியாதளவுக்கு சந்தோஷதமான விஷயத்தை சொல்லிட்டு இப்போ நீ போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?" என்று சிறுகுழந்தை போல் சிணுங்கினான்.

"எனக்கு புரியுது ஆனா உங்க பிள்ளைக்கு புரியுமா? எனக்கு ரொம்ப பசிக்குதே" என்றாள் பாவமாக.

"அச்சச்சோ சாரிடா. பட் நீ கொஞ்ச நாளைக்கு சமையல் ரூம் பக்கமே வரக்கூடாது புரியுதா? உனக்கு என்ன சாப்பிடணும்னு ஆசையா இருந்தாலும் சொல்லு நான் செஞ்சு தரேன்" என்றான் அன்பு கட்டளையாக.

"நான் செய்யற ஒரே உருப்படியான வேலை அதுமட்டும் தான் இப்போ அதையும் வேணாம்னா நான் என்ன தான் செய்யறது?" என்றாள் பொய்யான கவலைமுகத்துடன்.

"நம்பிட்டேன் நீ ரொம்ப பேசுற. இப்படியே கூட கூட பேசிட்டு இருந்த? அப்புறம் நீ பேசாம இருக்க என்ன பண்ணணுமோ அதை செய்வேன்" என்று விஷமமாய் கண்ணடித்து புன்னகைத்தான்.

தாமரையின் இதழாய் பெண்ணவளின் கன்னங்கள் சிவக்க அவன் நெஞ்சினில் தஞ்சம் புகுந்தாள் வெட்கத்தில்.

அவளுக்கு பிடித்த புளிசாதம், எலுமிச்சை, மாங்காய் என வாய்க்கு ருசியாய் அன்று ஒரே நாளில் எல்லாம் சமைத்து டைனிங் டேபிளில் அடுக்க அவனுக்குள் தந்தையான சந்தோஷத்தை அவளால் நன்கு உணர முடிந்தது.

"யோவ்! உன் அக்கப்போருக்கு அளவே இல்லையா? பசிக்குதுன்னு சொன்னேன்.... நான் என்ன பொண்ணா இல்ல பிசாசா? கொஞ்சமா ஏதாவது சாப்பிட கொடுங்கண்ணா இப்படி மொத்தமா ஒரு வாரத்துக்கு சேர்த்து சாப்டிட்ற மாதிரி அடுக்கி வெச்சா என்ன அர்த்தம்?" என்று தன் இடுப்பில் அவள் கை முறைக்கும் அழகினை கண் கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தான் சரவணன்.

"நான் இங்க எவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கேன். அங்க பாரு இங்க மக்கு மண்டைல ஏதாவது இருக்கான்னு" என்று திட்டி கொண்டிருந்தாள் செல்வி.

"ஐ லவ் யூ" என்றான் அவளை நெருங்கியபடி.

"என்ன?" என்றாள் ஒன்றும் புரியாமல்.

"நான் சொன்னது கேக்கலையா? இல்லை, என்னை இன்னொரு முறை சொல்ல சொல்றியா?"என்று கண்ணடித்தான்.

"போ... நான் உன்கூட பேசமாட்டேன்" என்று கோபித்து கொண்டு திரும்பிநின்றவளை.

"சாரி. சும்மா விளையாட்டுக்கு கிண்டல் பண்ணேன். நீ தானே பசிக்குதுன்னு சொன்ன உனக்கு எது சாப்பிடனும் போல இருக்கோ அதை சாப்பிடு. இன்னைலர்ந்து நீ நல்லா சாப்பிடனும் இப்போ நீ மட்டும் தனி ஆள் இல்லை" என்றான்.

"ஹ்க்கும் .... அதானே பார்த்தேன் உன் புள்ளை மேல அதுக்குள்ள அக்கறை வந்துடுட்சோ?" என்று அவனை முறைக்க.

"இல்ல இல்ல குட்டிம்மா! அதெல்லாம் நாளைக்கு டாக்டர்கிட்ட போய் கன்பார்ம் பன்றவரைக்கும் நாமளே ரொம்ப கான்பிடென்ட்டா இருக்கக்கூடாது" என்றான் தெளிவாக.

"நீ உண்மைலேயே சிபிஐ ஆபீசரா?" என்றாள் புருவம் உயர்த்தி.

"என்னடி திடிர்னு இப்படி கேட்டுட்ட?" என்றான் அதிர்ச்சியாக.

"பின்ன நொடிக்கு ஒரு முறை மங்குனி என்பதை நிருபித்து கொண்டே இருக்கிறாய்." என்று சிரியஸாக முகத்தை வைத்துகொண்டு கூறினாள்.

"என்னது? நான் மங்குனியா? உன்னை இன்னைக்கு விட்டாதானே இரு வரேன்...” என்று அவளை துரத்த.

"இல்ல.. இல்ல... வேணாம்டா.. என்னை ஓட வைக்காத" என்று அந்த அறையையே வளம் வந்து கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் மூச்சி மிகவும் வாங்கி நின்றவள்.”சரி சாரி. நான் சொன்னதை வாபஸ் வாங்கிடறேன்" என்று கூற.

"ஆமா. நீ பேசறத எல்லாம் பேசிட்டு அப்புறம் ஒண்ணுமே தெரியாத மாதிரி வாபஸ் வாங்கிட்றேன்னு சொல்வியா?" என்றபடி அவளை நெருங்கினான்.

"நான் தான் முதல்லயே சொன்னேன்ல.. உனக்கு வாய் ரொம்ப அதிகமா இருக்குன்னு... அதனால..." என்று அவளின் முகத்தை தன் கரங்களால் ஏந்த..

"இல்ல வேணாம் ... நான் சொல்றத முதல்ல கேளு.." என்று கூற வந்ததை கூற விடாமல் தன் இதழால் அவளின் செவ்விதழை மூடினான்.

சீரான மூச்சிக்கு திணறி அவனை பிடித்து தள்ள முயற்சிக்க,”மங்குனின்னா சொன்ன என்னை?" என்று அவள் காதோரத்தில் கேட்டான்.

அவன் நெஞ்சினில் முகம் புதைத்தவள்”ஆமாம்.. பின்ன... நான் ப்ரெக்நென்சி டெஸ்ட் வீட்லயே செக் பண்ணி பாஸிடிவ் ரிசல்ட் வந்தப்புறம் தானே உன்கிட்ட சொல்றேன்". என்றாள்.

"அடிப்பாவி. என்கிட்டே சொல்லவே இல்லையே. உன்னை அப்புறம் கவனிச்சிக்குறேன். சரி முதல்ல உக்காரு சாப்பிடு" என்று அவளுக்கு பரிமாறினான்.

அவளுக்கு பிடித்த புளிசாதம் ஒரு வாய் சாப்பிட்டவள் வேகமாக எழுந்து ஓட,”என்னம்மா நல்லா இல்லையா? அவ்ளோ மோசமாகவா செஞ்சுருக்கேன்” என்று அவள் பின்னாலேயே ஓடினான்.

வயிற்றில் ஒன்றுமே இல்லை என்றாலும் குமட்டல் நிற்காமல் குமட்டி குமட்டி வாந்தி எடுத்து மிகவும் சோர்ந்து போனாள். அவன் அவ்வளவு செய்தும் ஒரு வாய் சாப்பிட முடியாமல் குமட்டியது.

அவளின் நிலை காண சகியாது அவனும் அவளை விட்டு ஒரு நொடியும் நகராமல் தன் மடியின் மேல் அவள் தலைவைத்து கோத உறங்கி போனாள் செல்வி.

இரண்டு மணி நேரம் உறங்கிய பின்னர் எழுந்தவள் அவனை பார்க்க அவள் தன் மடி மீது தலை வைத்திருந்ததால் படுத்து உறங்காமல் உட்கார்ந்த மாதிரியே சுவரில் சாய்ந்து கண் மூடி இருந்தான்.

"என்னங்க ஏன் இப்படி உக்கார்ந்தே தூங்கறிங்க? என்னை எழுப்பி இருக்கலாம்ல?" என்று அவனை எழுப்ப பதறி அடித்து கொண்டு எழுந்தவன்.”செல்விம்மா உனக்கு இப்ப எப்படி இருக்கு?" என்று அவள் தலை கோதினான்.

"எனக்கு இப்ப பரவால்லை. ஆனா ரொம்ப பசிக்குது சாப்பிடவும் பயமாருக்கு" என்றாள் கொஞ்சம் பயம் கலந்த விழிகளோடு.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை உனக்கு சாப்பிட பிடிக்லைன்னா விட்று. நான் உனக்கு ஜூஸ் போட்டு தரேன். அது குடி சாப்பாடு தான் சாப்பிடனும்னு இல்லை. சத்தானது எதுவா இருந்தாலும் சாப்பிட்டா போதும்" என்று சமையலறை சென்று மாதுளம் ஜூஸ் போட்டு கொண்டு வந்தான்.

சாப்பிட மறுத்தவளை”வாம்மிட் பண்ணாலும் பரவால்லை கொஞ்சமா சாப்பிடு வயிறு காலியா விட கூடாது அசிட் பார்ம் ஆகும்" என்று வற்புறுத்தி சாப்பிட வைத்தான்.

"தாத்தா பாட்டிக்கு சொல்லலாம் அவங்க ரொம்ப சந்தோச படுவாங்க" என்று போனை எடுக்க அவன் தாத்தாவே போன் செய்தார்.

"தாத்தா எப்படி இருக்கீங்க? உங்களுக்கு நூறு ஆயுசு இப்போ உங்களுக்கு போன் பண்ணலாம்னு எடுக்குறேன் அதுக்குள்ள நீங்களே பண்ணிடீங்க" என்றான் சந்தோஷமாய்.

"என்ன பேராண்டி உன் குரல்ல இவ்ளோ சந்தோஷம் தெரியுது. என் பேத்தி எப்படி இருக்கா? அவளை கூட்டிட்டு வந்து எங்க கண்ல காட்டிட்டு போக கூடாதா?" என்றார்.

"தாத்தா நீங்க கொள்ளு தாத்தா ஆக போறீங்க" என்றான்.

"ரொம்ப சந்தோஷம்பா. எப்போ இது மாதிரி ஒரு செய்தியை சொல்லுவன்னு நாங்க எல்லாரும் காத்திருந்தோம்." வீட்டில் உள்ள அனைவரும் மாறி மாறி பேசி வீடே சந்தோஷத்தில் நிறைந்தது.

இரவு அவளை வற்புறுத்தி இரண்டு வாய் சாப்பிட வைத்து உறங்க சென்ற பின்னர்”உனக்கு என்ன குழந்தை பிடிக்கும்? குட்டிம்மா" என்று அவளை தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு கேட்டான்.

"நீங்க சொல்லுங்க. உங்களுக்கு எந்த குழந்தை பிடிக்கும் பொண்ணா, பையனா?" என்று அவன் விரலை வருடியபடி கேட்டாள்.

"எனக்கு பொண்ணு பையன் எதுவா இருந்தாலும் ஓகே ஆனா ?" என்று இழுத்தான்.

"என்ன ஆனா? சொல்லுங்க” என்று ஆர்வமாய் அவனை பார்க்க.

"அதுவந்து எனக்கு உன்னை மாதிரியே அழகா ஒரு குட்டி பாப்பா வேணும்" என்றான்.

"அப்போ பெர்மிசன் கிராண்டட்" என்றாள் சிரித்தபடி.

வெகுநேரம் தங்களது கனவை பற்றி ஒருவருக்குள் ஒருவர் பரிமாறிக்கொண்டு நிம்மதியாக உறங்கினர்.

மறுநாள் காலை எட்டு மணி ஆகியும் இருவரும் உறங்கி கொண்டிருக்க வாசலில் அழைப்பு மணி கேட்டது.

"என்னங்க காலிங் பெல் அடிக்குது யாருன்னு போய் பாருங்க" என்றாள் எழாமல்.

"போடா குட்டிம்மா. எனக்கு டயர்டா இருக்கு நான் இன்னும் கொஞ்சநேரம் தூங்குறேன். நீயே போய் பார்" என்று தூங்கினான்.

"நீ எல்லாம் என்னய்யா ஆபிசர், எட்டு மணி வரைக்கும் தூங்கற?" என்று வேண்டுமென்றே அவனை சீண்ட.

"அடியேய் தூங்கறதுக்கும் வேலைக்கும் என்னடி சம்மந்தம்? மரியாதையா போய்டு அப்புறம் காலைலேயே என்ன பண்ணுவேன்னு தெரியாது" என்று கண்களை மூடியபடியே கூற.

"ஆமாமா போடா" என்று வெளியே எழுந்து வந்தவள் வாசலை திறக்க, அங்கே கதவின் முன் ஒரு பூங்கொத்து இருந்தது.

"என்னதிது யார் இத வச்சிட்டு போயிருப்பா?" என்று நினைத்து கொண்டே அந்த பூங்கொத்தை எடுத்து படித்தவளின் கண்களில் நீர் வழிந்தது.

"யாருடா செல்வி?" என்று அவள் பின்னாலேயே வந்தவன் அவள் அசையாது சிலை போல் நிற்கவே”என்னம்மா அது?" என்று அவளிடம் இருந்து வாங்கி படிக்க விழிகள் சிவக்க கோபம் தலைகேறியது.

அப்படி அதில் என்ன தான் இருந்தது......?
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

23. அதிர்ச்சியின் உச்சம்!​

ரௌத்திரத்தின் உச்சத்தில் இருந்த சரவணன் தன் போனை எடுத்து பிரபுவுக்கு போன் செய்தான்.

"ஹலோ!” என்று எதிர்முனையில் இருந்து குரல்வரவும்”அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? நான் தான் ரெண்டு நாள் வர முடியாதுன்னு சொன்னேன்ல நீங்க அவனை அர்ரெஸ்ட் பண்ண வேண்டியது தான" என்று கோவத்தில் கர்ஜித்தான்.

எதிர்முனையில் அளித்த பதில் திருப்தி அடையாமல்,”இங்க பாரு அவன் வீட்டுக்கே பொக்கே அனுப்பி மிரட்டியிருக்கான்.” என்று கத்தவும்.

எதிர்முனையின் பதிலை கேட்டு யோசித்தவன்.

"ஓகே. இன்னைக்கு ஒரு நாள் விட்டுடுங்க நாளைக்கு நான் வந்து விலங்கிடுவேன்" என்று போனை கோபமாய் கட் செய்தான்.

அழுது கொண்டிருக்கும் செல்வியின் அருகில் சென்றவன்.”இதுகெல்லாமா அழறது? நான் உன்னை லவ் பண்ணதே உன் தைரியம் ரொம்ப பிடிச்சி தான். சோ, இனி நீ அழகூடாது" என்று கூறி அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

அந்த கடிதத்தை மீண்டும் படிக்க இன்னும் கோபம் தலைகேறியது. அதில்”என்னம்மா.....?

அன்னைக்கே சொன்னேன். உன் புருஷன என்கிட்டே இருந்து விலகி இருக்க சொல்லுன்னு. ஆனா, கேக்கமாட்டான் போல இருக்கு?

அப்புறம் உன் குழந்தைக்கு அப்பான்னு சொல்லிக்க அவன் இருக்க மாட்டான்.

உன் குங்குமத்துக்கு நான் காரன்ட்டீ இல்ல.

புள்ளை புருஷன் ரெண்டு பேரையும் தொலைச்சிட்டு நீ எதுக்கு இருக்கணும்னு நினைக்கும் நிலைக்கு போக போற, அதனால உன் புருஷன்கிட்டே இப்பவாது என்னை விட்டுட சொல்லு"
என்று இருந்தது.

மறுபடி கதவு தட்ட பட மிகுந்த கோபத்துடன் கதவை திறந்தவன் வாசலில் இருப்பவர்களை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியானான்.

"வாங்க வாங்க தாத்தா.. பாட்டி.. அத்தை.. மாமா.. அக்கா.. மாமா... எல்லாரும் எப்படி இருக்கீங்க?" என்று எல்லோரையும் ஒரே தாவலில் கட்டியணைத்தான்.

அத்தையை பாத்தவுடன் பொங்கி வந்த அழுகையை கட்டுபடுத்த முடியாமல் செல்வி”அம்மா" என்று அவர் கழுத்தை கட்டி கொண்டாள்.

"என்னடா செல்வி? ஏன் ஒரு மாதிரி இருக்க? என்ன விஷயம் சொல்லு?" என்று கேட்டார் வாஞ்சையுடன் தலை கோதிவிட்டார்.

சரவணத்தமிழன் அழகாய் தன் கண்களை உருட்ட,”டேய்! நீ என்னடா அவகிட்ட சொல்லக்கூடாதுன்னு மிரட்டுற தொலைச்சிடுவேன். போ அந்த பக்கம்" என்றார் அவனின் அக்கா.

"இல்லைக்கா. நான் ஒன்னும் சொல்லலையே" என்று தன் அக்கா மகளை தூக்கி,”ஹாய் டார்லிங்! எப்படி இருக்கீங்க? மாமாக்கு ஒரு கிஸ் குடேன்" என்று தூக்கி சுற்றினான்.

"ம்ம் மாமா” என்று அவன் கன்னத்தில் தன் பிஞ்சு இதழளால் முத்தமிட்டது அந்த குட்டி தேவதை.

"செல்வி! என்னடா? உடம்பு ரொம்ப முடியலையா? ஏன் ஒரு மாதிரி இருக்க ?" என்று மீண்டும் சரவணனின் அத்தை கேட்டார்.

"அம்மா! அதுவந்து ...." என்று அவள் இழுக்க.

"நான் சொல்றேன்” என்று நடந்தவைகளை எல்லாம் கூறினான்.

"என்னப்பா மாசமா இருக்க புள்ளைக்கு இதுமாதிரி சொன்னா அவ மனசு கஷ்டபடாம என்ன பண்ணும்? நாங்க சாயந்திரம் வரைக்கும் இங்க தான் இருப்போம். நீ போய் முதல்ல உன் வேலைய முடிச்சிட்டு வா" என்று தாத்தா கட்டளையாக கூற, போகவே மனம் இல்லாமல் தயங்கி தயங்கி நின்றான்.

"டேய்! நாங்க ஒன்னும் உன் பொண்டாட்டிய கடிச்சி சாப்பிட மாட்டோம். நீ பயப்படாம போயிட்டு வா" என்று அவனின் அக்கா கூறியவுடன்”சரிக்கா" என்று செல்வியை பார்த்து தலையசைக்க அவளும் தலையசைத்து விடை கொடுத்தாள்.

அன்று முழுவதும் அவர்கள் அனைவரும் அங்கேயே இருந்தனர். செல்வியை ஒரு வேலை செய்யவிடாமல் தாங்கினர்.

இரவு ஏழு மணி சரவணன் வந்தவுடன்”என்னப்பா அந்த அமைச்சர அர்ரெஸ்ட் பண்ணியாச்சா ?" என்று தாத்தா கேட்டார்.

"ஹம் ... பண்ணியாச்சு தாத்தா நாளைக்கு கோர்ட்ல சப்மிட் பண்ணனும்" என்று உள்ளே சென்று உடை மாற்றி திரும்பியவனின் விழிகள் கட்டிலில் சோர்வாக கண்களை மூடி படுத்திருந்தவளின் அருகில் அமர்ந்து”செல்வி என்னடா? ரொம்ப டயர்டா இருக்கா? எதாவது சாப்டியா?" என்று அவள் தலையை வருட, கண்களை திறந்து அவனை கண்டவள் எழுந்து அவனை கட்டிக்கொண்டாள்.

"நீங்க வர வரைக்கும் பயந்துகிட்டே இருந்தேன். சாப்டிங்களா?" என்றாள்.

"ஹம் சாப்பிட நேரமில்லை ... இதோ இப்போ சாப்பிட்றேன்" என்று சொல்ல”வாங்க நான் எடுத்து வைக்கிறேன்" என்று எழுந்தவளின் கரம் பற்றி”இல்ல நான் சாப்டுக்கிறேன். உனக்கு எப்டி இருக்கு அதை முதல்ல சொல்லு" என்றான்.

"எனக்கு ஒன்னும் இல்ல. லேசா மயக்கமா இருக்கு அவ்ளோதான். நான் நல்லா இருக்கேன்" என்றாள்.

"சரி. வா எல்லாரும் வெளிய இருக்காங்க அங்க போலாம்" என்று வெளியே வந்தார்கள் இருவரும்.

"எழுந்துட்டியா செல்வி? இந்தா ஜூஸ் இதை குடி நீ சரியா சாப்பிடலை” என்று தன் கையில் இருந்த கிளாசை அவளிடம் நீட்டினாள் சரவணனின் அக்கா.

"எல்லோரும் சாப்பிடலாம் வாங்க" என்று பாட்டி கூப்பிட அனைவரும் ஒன்றாக அமர்ந்தனர்.

பாட்டி தன் கரத்தால் எல்லோருக்கும் சாப்பாடு உருட்டி கொடுக்க செல்வி ஆச்சர்யமாய் பார்த்தாள்.

"என்னடா அப்படி பார்க்கிற? நம்ம வீட்ல எல்லாரும் ஒண்ணா இருந்தா ஒரு நாளைக்கு ஒரு தரமாவது இப்படி பாட்டி உருட்டி கொடுப்பாங்க" என்றார் தாத்தா.

மெல்லிய புன்னகை ஒன்றை வீசிவிட்டு அவளும் ஒரு வாய் வைக்க மீண்டும் குமட்டி கொண்டு வர எழுந்து ஓடினாள்.

"நீங்க எல்லாரும் சாப்பிடுங்க நான் பார்த்துகிறேன்" என்று உள்ளே சென்றான்.

மொத்தமும் வாம்மிட் செய்து மிகவும் சோர்வாக அமர்ந்தாள் செல்வி.

"நாளைக்கு காலைலேயே டாக்டர்கிட்ட போய்டலாம். சரியா?" என்று சொன்னான் .

"சரி" என்று தலையாட்டிவிட்டு அவன் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டாள்.

"என்னடா செல்வி தூங்கறாளா?" என்று உள்ளே வந்தார் தாத்தா.

"ஆமாம் தாத்தா" என்றான்.

"சரிப்பா. செல்வி இப்ப மாசமா இருக்கால்ல, அதனால் நீங்க ரெண்டு பேரும் அங்க வந்துருங்க" என்றார்.

"தாத்தா ரொம்ப முக்கியமான கேஸ் போயிட்டு இருக்கு.. அதனால என்னால வரமுடியாது. அதுவும் இல்லாம செல்வியும் என்கூட இருக்கட்டும் நான் பார்த்துக்குறேன். சீமந்தம் பண்ணி கூட்டிட்டு போகும் போது அங்கேயே வந்துடறோம்" என்றான்.

சிறிதுநேரம் யோசித்தவர்”சரிப்பா. ஆனா செல்வியை பத்திரமா பார்த்துக்க வேணா பாட்டி அத்தை யாராவது இருக்க சொல்லட்டுமா ?" என்றார்.

"இல்ல தாத்தா இருக்கட்டும். நான் பார்த்துகிறேன்" என்றான்.

"சரிப்பா. அப்பா நாங்க கிளம்பறோம்" என்றார்.

"ஏன் தாத்தா காலைல போலாம்ல?" என்று கூறினான்.

"இல்லப்பா இருக்கட்டும். நாங்களும் அடிக்கடி வந்து பார்த்துக்குறோம்" என்றார்.

"சரி தாத்தா" என்று அவரகளுக்கு வழி அனுப்பி வைத்தான்.

மறு நாள் விடியலில் அவன் போன் அடிக்க”ஹலோ" என்று எடுத்து பேசினான்.

அவன் கைவளைவுக்குள் செல்வி அசந்து உறங்கி கொண்டிருக்க மெதுவான குரலில் சீறினான்”ஏன் நான் இல்லாம உங்களால ஒண்ணுமே பண்ண முடியாதா?” என்று கோபமாக கேட்க.

"என்னங்க என்னாச்சு?" என்று எழுந்தாள் செல்வி.

"ஒன்னும் இல்லடா நீ தூங்கு" என்று வெளியே எழுந்து வந்தான்.

"சரி வரேன்" என்று போனை கட் செய்து யோசனையில் இருக்க,”என்ன ஆபீஸ் போகனுமா?" என்று மெதுவாக கேட்டபடி வந்தாள் செல்வி.

"ஹம்.." என்றான்.

"இப்ப என்ன? பத்து மணிக்கு தான அப்பாய்ன்மென்ட் வாங்கி இருக்கு. நீங்க கிளம்பி போயிட்டு ஹாஸ்பிட்டலுக்கு வந்துருங்க நான் அங்க வந்துடறேன்" என்றாள்.

"உன்னை தனியா எப்படி?" என்று இழுக்க.

"நான் என்ன சின்ன குழந்தையா? நான் வந்துருவேன் நீங்க பயபடாம போங்க” என்றாள்.

சரவணன் சென்ற பின் நேரம் ஆக செல்வி கிளம்பி ஸ்கூட்டியில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாள்.

அங்கே சரவனத்தமிழனுக்கு போன் வந்தது.

"ஹலோ!" என்றான்.

"என்ன? எங்க ஐயாவ அர்ரெஸ்ட் பண்ணிட்டா எல்லாம் முடிஞ்சிதா?" எதிர்முனையில் கேட்க.

"டேய் எவன்டா நீ? நேரல வாடா?" என்று கத்தினான்.

"இப்ப எதுக்கு கத்தற? உன் பொண்டாட்டி இப்போ ஸ்கூட்டில போயிட்டு இருக்கா. முடிஞ்சா போய் காப்பாத்திக்க" என்று போன் கட் ஆனது.

அதிர்ச்சியோடு மிரண்டு நின்றான் சரவணன்.

"பிரபு. இதை நீ பார்த்துக்க நான் உடனே போய் செல்விய பார்க்கணும்" என்றான்.

"சரிடா. நீ சைன் பண்ணிடல்ல. நான் பார்த்துக்குறேன் நீ கிளம்பு" என்று அனுப்பி வைத்தான் பிரபு.

"ஹலோ செல்வி! எங்க இருக்க?" என்று போனில் கேட்டான்.

"சரி. நீ பொறுமையா போய்டே இரு. நான் உன் பின்னாடியே வந்துருவேன் பார்த்து பத்திரமா போ" என்று போனை வைத்துவிட்டு வேகமாக அவள் இருக்கும் இடம் நோக்கி வண்டியை செலுத்தினான்.

பின்னால் வரும் வண்டி தன் ஸ்கூட்டியின் அருகில் இடிப்பது போல் வருவதை கவனித்த செல்வி வேகமாக ஓட்ட தொடங்கினாள்.

பின்னால் வந்த வண்டியும் வேகமெடுத்து வந்து செல்வியின் வண்டியில் லேசாக இடித்ததில் வண்டியில் இருந்து வயிறை கிழே விடாமல் கை ஊன்றி கிழே விழுந்தாள்.

அச்சமயம் சரியாக அங்கு வந்து சரவணின் வண்டி வந்து நிற்க மேலும் அவளை இடிக்காமல் வேகமாக அங்கிருந்து சென்றது அந்த வண்டி.

பதறிக்கொண்டு அவளிடம் ஓடிய சரவணன் செல்வி மயக்கமுற்று இருப்பதை பார்த்து தன் காரில் அவளை கிடத்தி அவன் வண்டியை ஓட்ட அவள் வண்டியை வீட்டுக்கு கொண்டு செல்லுமாறு டிரைவருக்கு உத்திரவிட்டான்.

வேகமாக மருத்துவமனைக்கு வண்டியை செலுத்தினான்.

அடுத்த பத்து நிமிடத்தில் மருத்தவமனை வாசலில் நின்றது அவன் வண்டி.

வேகமாக செல்வியை தன் கரங்களால் அள்ளிக்கொண்டு மருத்துவமனை உள்ளே சென்றான் .

சிகிச்சை செய்துமுடித்து வெளிவந்த டாக்டர்”சரவணன் உள்ள வாங்க” என்றதும் உள்ளே சென்றவன் அங்கே செல்வி தலையிலும் கையிலும் கட்டோடு இருந்தாள்.

வேகமாக அவளிடம் சென்றவன்”செல்வி" என்று கண்களில் கண்ணீரோடு அவளை கட்டி கொண்டான்.

"எனக்கு ஒன்னும் இல்லங்க ஆனா பாப்பாக்கு...?" என்று விம்ம .

"உக்காருங்க மிஸ்டர்.சரவணன்" என்று டாக்டர் கூற, அவர் எதிரில் அமர்ந்த சரவணன்”செல்விக்கு ஒன்னும் இல்லல்ல?" என்று பதட்டமாய் கேட்டான்.

"ஒன்னும் இல்ல பயபடாதிங்க. அவங்க நல்லா இருக்காங்க. இந்த ஆக்சிடென்ட்டால அவங்களுக்கு ஒண்ணுமில்ல. ஆனா..” என்று இழுத்தார்

நிம்மதி பெருமூச்சி விட்டவன் மீண்டும் பதட்டமானான்”ஆனா என்ன டாக்டர்?"

"அவங்க கர்பப்பை ரொம்ப வீக்கா இருக்கு. அவங்களால ஒரு குழந்தைய சுமக்கிற அளவுக்கு இன்னும் ப்ரிப்பேர் ஆகல. அப்படியே கண்டினியூ பண்ணாலும் டெலிவரி அப்ப அவங்க உயிருக்கு அது ரொம்ப ஆபத்தா போய்டும். சோ ஐ ஆம் சாரி டு சே. யூ பெட்டர் அபார்ட் திஸ் பேபி" என்றதும், இடிவிழுந்தது போல் இருவரும் நொறுங்கினர்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

24. மறைந்தும் பிறந்தாள்​

"டாக்டர் இதுக்கு வேற எதுவும் வழி இல்லையா?" என்றான் சரவணத்தமிழன் மெதுவான குரலில்.

'இறைவனின் அருளால்... தன்னவனின் அன்பினால் தனக்கு கிடைத்த பொக்கிஷம்... தானாக வந்த வரம் அதை நழுவவிட்டு பின் அதற்காக மறுபடியும் ஏங்கி நிற்க வேண்டிய நிலை வந்துவிடுமோ? எங்கே தன் தாய் சொன்ன சொற்கள் பலித்துவிடுமோ?' என்று எண்ணி அஞ்சிக்கொண்டிருந்தாள் செல்வி.

"கன்சிவ் ஆகறத்துக்கு முன்னாடியே ஒருமுறை செக் பண்ணியிருந்தா தெரிஞ்சிருக்கும். ஆனா, இப்ப எது பண்ணாலும் ரிஸ்க் தான். சோ நீங்க தான் டிசைட் பண்ணணும்” என்றார்.

'உன் விழிகளில் இருந்து வந்து விடுவேன்' என்று மிரட்டும் ஒரு துளி கண்ணீரை கண்களை மூடி வெளிவராமல் செய்தவன்.

"டாக்டர் எனக்கு முதல்ல செல்வி தான் முக்கியம் அதனால் அவளுக்கு எது நல்லதோ அதை...." என்று முடிப்பதற்குள்.

"எனக்கு இந்த குழந்தை வேணும் டாக்டர்" என்றாள் தடுமாற்றம் இல்லாமல் தெளிவாக.

"என்ன?" என்று அதிர்ச்சியாய் அவளை நோக்கினான்.

"என்னை மன்னிச்சிடுங்க. எந்த காரணத்துக்காகவும் நான் இந்த குழந்தையை கலைக்கமாட்டேன்." என்றாள் மீண்டும்.

"செல்வி என்ன பேசற நீ? இன்னும் இந்த உலகத்துக்கே வராத குழந்தைக்காக எனக்கு உயிரான உன்னை என்னால இழக்க முடியாது. ப்ளீஸ்டா அவசர படாத. இப்ப இல்லன்னா இன்னும் ஆறுமாசத்துக்கு அப்புறம் மறுபடியும் பெத்துக்கலாம்." என்றான் கெஞ்சுதலாய்.

"நீங்க என் உயிரை பத்தி யோசிக்கிறீங்க... நான் எனக்குள்ள இருக்கிற உங்க உயிரை தான் பார்க்கிறேன். இன்னைக்கு என் வயிற்றில் நான் சுமக்கும் உங்களின் கரு நிஜம். இதை அழித்துவிட்டால் இன்னும் ஆறு மாதமோ ஒரு வருடமோ கழித்து மீண்டும் கரு நிற்கும் என்பது நம் கற்பனை... எனக்கு கற்பனையை விட நிஜம் பிடித்திருக்கிறது. இதற்கு மேல் என்னை கட்டாயப்படுத்தாதீர்கள்." என்று கூறவும் அவள்மேல் இருந்த காதல் பல மடங்கானாலும் அவளை இழந்து விடக்கூடாது என்பதில் கோபம் தலைக்கேறியது. தன்னை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டவன்.

"டாக்டர்! எங்களுக்கு ஒரு நாள் டைம் கொடுங்க. நாளைக்கு வந்து எங்க பதிலை சொல்லிடறோம்" என்று கூறினான்.

'என்ன ஆனாலும் சரி. என் உதிரத்தை உயிராக்கி என்னையே அரணாக்கி தேவைபட்டால் என் உயிரையும் பலிகொடுத்து உன்னை ஈன்ரெடுப்பேன்' என்று தன் வயிற்ரை மெதுவாய் தடவி பார்த்துக்கொண்டவள்.

"எத்தனை நாள் ஆனாலும் என் பதில் ஒன்னு தான். யார் என்ன சொன்னாலும் என் பதில் ஒன்னு தான் இந்த குழந்தைய நிச்சியமா பெத்தெடுப்பேன். அதை தடுக்கற யாரா இருந்தாலும் என்னை விட்டு ஒதுக்கி வச்சிருவேன். யாரா இருந்தாலும் அப்படின்றதுல நீங்களும் தான் அடக்கம்." என்றவளை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு திரும்பி அவளை பாராமல் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினான்.

அவனின் கோபம் அவளை உலுக்க. சிலையென அங்கேயே சிலநிமிடம் நின்றவள். பின் அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டினுள் அமைதியாய் நுழைந்து அவனை தேட தங்களின் படுக்கை அறையில் ஜன்னலோரத்தில் நின்று எதையோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

மெதுவாக அவனின் பின்னால் வந்து அமைதியாக நின்றாள்.

அவள் வருவது தெரிந்தும் எதுவும் பேசாமல் அவனும் கண்களை மூடி நின்றான்.

அவனின் பயம் புரிந்தாலும் தனக்கும் அந்த பயம் உள்ளுக்குள் இருக்கிறது என்றாலும் எப்படியும் சமாளித்து ஆகவேண்டும் என்று எண்ணிக்கொண்டு பின்னாலிருந்து அவனை அணைத்தாள்.

எதுவும் பேசாமல் நின்ற நிலையிலேயே அவன் நிற்க அவனின் விழிகளில் இருந்து மட்டும் கண்ணீர் கொட்டியது.

"சரோ ப்ளீஸ். நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க... எனக்கு ஒன்னும் ஆகாது... நீங்க வீனா பயபடாதிங்க" என்று முடிக்கும் முன் திரும்பி அவளை முன்புறமாக அணைத்தவன்.

"ஏண்டா இப்படி பண்ற? ப்ளீஸ். இந்த குழந்தை வேண்டாம் எனக்கு நீ வேணும் எனக்குன்னு யாரும் இல்லாதப்ப எல்லாரையும் கொண்டு வந்து சேர்த்தவ நீ.. என் வாழ்க்கைல வசந்தம் எனும் வாசலை திறந்து வைத்தவள் நீ... என் இறுதி மூச்சு வரை உன்னோடு பயணிக்க வேண்டும் என்று நான் ஆசைபட்டு கொண்டிருக்க... நீ மட்டும் இந்த விஷயத்தில் உன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஏன் இப்படி அடம் பிடிக்கிறாய். கண்ணம்மா ப்ளீஸ் நான் சொல்வதை கேள். இந்த குழந்தை இல்லை என்றால் வேறு குழந்தை பெற்று கொள்ளலாம். ஆனால் நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது" என்று சிறுகுழந்தை போல் தேம்ப.

ஆண்பிள்ளை என்றாலும் அவன் மனமோ ரோஜா இதழை போல் மென்மையாக இருப்பது அவளுக்கு புரிந்தது தான் என்றாலும் தன் மேல் இத்தனை பாசம் வைத்திருக்கும் கணவனுக்கு தன்னால் ஒரு பிள்ளையை பெற்று கொடுக்க முடியாமல் போய் விடுமோ? என்ற பெரும் பயம் ஆழ்மனதில் குடிகொண்டிருந்தது.

"இங்க பாருங்க சரோ ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.. டாக்டர் கண்டிப்பா 1௦௦% உங்க உயிருக்கு ஆபத்து இருக்கு நீங்க கண்டிப்பா கலைச்சிடுங்கன்னு சொல்லிருந்தா நானும் ஒத்துகிட்டு இருந்திருப்பேன், ஆனா டாக்டர் என்ன சொன்னாங்க? டெலிவரி டைம்ல ரிஸ்க் இருக்க சான்ஸ் இருக்குனு டைலாமொவா தான சொல்றாங்க. ப்ளீஸ் லெட் அஸ் கிவ் அ சான்ஸ் டு திஸ் பேபி... ப்ளீஸ் நீங்க என்கூட இருக்கும் போது என்னை பார்த்துக்க மாட்டிங்களா... ப்ளீஸ் சே எஸ்..." வரமாய் பெற்றதை இழந்துவிடக்கூடாது என்று அவனின் கண்களுக்குள் தன் விழிகளை ஊடுருவி விடைதேடினாள்.

எதுவும் பேசாமல் சென்று கட்டிலில் ஒரு பகுதியில் சென்று படுத்துக்கொண்டான்.

அவள் எவ்வளவு கூப்பிட்டும் கண்களை திறக்காமல் போகவே வெளியே சென்றுவிட்டாள்.

இப்படியே இரண்டு நாள் அவளுடன் பாராமுகமாக இருந்தான் சரவணத்தமிழன்.

அப்படியாவது தான் சொன்னதற்கு ஒத்துகொள்வாளா? என்ற நப்பாசையில் இருந்தான். வீட்டில் உள்ள அனைவரும் எவ்வளவு எடுத்து கூறியும் கேட்காமல் தன் முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று தெளிவாக கூற எல்லோரும் அமைதியாக திரும்பினர்.

ஆனால், அவளோ மிக பிடிவாதக்காரி என்பது தெரியும் அவனுக்கு. இரண்டு நாளும் சாப்பிடாமல் இருந்தவளின் நிலை காண சகியாமல் அவளுக்கு பிடித்த சமையலை செய்து எடுத்துவந்து அவளுக்கு ஊட்டினான்.

அவளின் பிடிவாதத்தால் அவனையும் சமாதானப்படுத்தினாள் செல்வி.

அங்கே வந்து இருக்கும்படி எல்லோரும் கூறியும் அவனுடன் தனித்திருக்க விரும்பி வளைகாப்பு முடிந்தவுடன் வருவதாக கூறிவிட்டாள். சரவணத்தமிழன் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான். இப்படியே ஐந்து மாதங்கள் கடந்துசென்றன.

திடிரென்று வயிறுவலிப்பதாக செல்வி கூற டாக்டர் வீட்டிற்கே வந்து பார்த்துவிட்டு”செல்விக்கு ஏற்கனவே பிரச்சனை இருப்பதாலும் குழந்தை பெரிதாக வளருவதால் கருப்பை விரிவதால் இந்த நிலை. இன்னும் கவனமாக பார்த்துகொள்ள வேண்டும்" என்று அறிவுரை கூறிவிட்டு சென்றார்.

அவளின் உடல்நிலை கருதி அவளிடம் இருந்து தள்ளி இருந்தாலும் அவள் இந்த நொடி தான் உண்மை என்று அவனை விடாமல் துரத்தி அன்பு மழையை பொழிந்தாள்.

இந்த மாதம் முழுவதும் வேலைக்கு விடுப்பு எடுத்திருந்தான் சரவணன். இதோ ஒன்பாதவது மாதம் தொடங்கி இரண்டு நாள் ஆக இன்னும் இரண்டு நாளில் வளைகாப்பு வைத்திருந்தார்கள். யாரும் எதிர்பார்க்காமல் அன்றே பதினைந்து நாளைக்கு முன்னரே அவளுக்கு வலி எடுக்க மருத்துவமனிக்கு கூட்டி சென்றான்.

டெலிவரி வார்டிற்க்குள் உள்ளே போவதற்கு முன் கூட,”என்னங்க நிச்சியம் எனக்கு ஒன்னும் ஆகாது ... ஒருவேளை எனக்கு ஏதாவது நடந்துவிட்டால் நமக்கு பிறக்கபோகும் குழந்தையை எந்த காரணத்துக்க்காகவும் நீங்க வெறுக்க கூடாது. ஏன்னா நானே தான் அது. அதோட நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும். எனக்கு இதெல்லாம் செய்வேன்னு சத்தியம் பண்ணிக்கொடுங்க அப்போ தான் நான் உள்ளயே போவேன்" என்று அடம்பிடிக்க வேறு வழி இல்லாமல் ஒத்துகொண்டான் சரவணத்தமிழன்.

அங்கே அவன் பயந்த மாதிரியே எல்லாம் நடந்துவிட்டது. வெளியே தைரியமாய் இருக்கின்ற மாதிரி காட்டிக்கொண்டாலும் அவளும் பெண் தானே பிரசவ வலியின் பயத்தினால் பி.பி அதிகமாக அவளுக்கு எல்லாம் எதிராக நடந்தது. அழகிய பிஞ்சு பெண் பிள்ளையை ஈன்றெடுத்து இந்த உலகத்தையும் அவளுக்காக இருந்த இரண்டு ஜீவன்களையும் விட்டு சென்றுவிட்டாள்.

அவளின் இறுதி சடங்கில் எல்லோரும் கலந்து கொள்ள அவளின் பெற்றோரையும் அழைத்து வரச்சொன்னான். அவர்கள் வரமறுக்க. தானே அந்த பிஞ்சு குழந்தையை தூக்கி கொண்டு அங்கே சென்றவன்”இங்க பாருங்க. நீங்க செஞ்சத நான் என்னிக்குமே மன்னிக்கமாட்டேன். ஆனா உங்க பொண்ண இன்னையோட நீங்க என்னைக்கு நினைச்சாலும் பார்க்கமுடியாது. அவமேல நீங்க எவ்வளவு அன்பா இருந்தீங்கன்னு எனக்கு தெரியும். கடைசியா ஒரு தடவையாவது பார்த்துடுங்க. அப்போதான் அவ ஆத்மா சாந்தி அடையும்" என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டான்.

பின்னாலேயே வந்தவர்கள் அவர்களின் பெண்ணின் நிலைக்கு தாங்களும் ஒரு காரணம் என்று கூனி குறுகினர்.

காலம் கடந்து திருந்தி எந்த பிரயோஜனமும் இல்லை அல்லவா?....

இதோ அவளின் உடல் இந்த மண்ணிலே விதைக்க பட்டது.

அன்றே தன் வேலையை ராஜினாமா செய்த சரவணத்தமிழன் தாத்தா பாட்டி என அனைவரும் எவ்வளவு வற்புறுத்தியும் அவளுடன் வாழ்ந்த வீட்டைவிட்டு வரமுடியாது என்று அங்கேயே தனியாக குழந்தையுடன் வாழ ஆரம்பித்தான்.

ஒவ்வொரு நாளும் நரகமாக அவள் இல்லாம கழிய... அந்த பிஞ்சுமுகத்தை பார்த்து தன்னை தேத்தி கொண்டிருக்க.. அந்த குழந்தையின் ரூபத்தில் அவளே தன்னுடன் இருப்பதாய் நினைத்து கொண்டிருந்தான்.

தாத்தா வற்புறுத்தி அவனுக்கு சேர வேண்டிய சொத்தை அவனுக்கு பிரித்து கொடுத்தார்.

அதனால் அவன் பெயருக்கு நாலு பெரிய கம்பெனிகள் எழுதிவைக்கபட்டிருந்து.

இரண்டு வருடங்கள் ஓட அவளின் அக்கா கணவர் தான் அதையும் சேர்த்து கவனித்து கொண்டிருந்தார்.

"டேய் தம்பி இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே இருப்பாய்... கம்பெனிக்கு போய் வாடா... உன் மன மாற்றத்திற்கு வழி வகுக்கும்" என்று ஒருநாள் கூற.

"சரிக்கா" என்றான்.

இனி தன் கம்பெனிகளை தானே கவனித்து கொள்ள முடிவெடுத்து தன் கம்பெனியில் முதல் அடி எடுத்து வைத்தான்.

இந்த மாற்றமே தன் புதுவாழ்விற்கு அடித்தளம் என்று அவன் அன்று அறியவில்லை....
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

25. வாழக்கையின் இன்னொரு பயணம்...​

தன் வாழ்க்கையின் இறுதிவரை உடன் இருப்பாள் என்று நினைத்தவள் பாதியிலேயே விட்டுச்செல்ல சரவணத்தமிழன் மிகவும் நொறுங்கி போனான். இருந்தும் அவள் விட்டு சென்ற பொக்கிஷம். அவளுக்கு நிகரான தங்களின் குழந்தையின் சிரிப்பிலும் அணைப்பிலும் அவளையே காண்கின்றான்.

"குழந்தையை தனியாக உன்னால் பார்த்து கொள்ள முடியாது. என்னிடம் கொடுத்து விடு நான் என் மகளாக வளர்கிறேன் நீயும் இங்கேயே வந்துவிடு" என்று அவன் அக்கா கூறியும்”இல்லைக்கா. அது என்னால் முடியாது இன்று நான் மூச்சுவிட்டு கொண்டிருப்பதும் இவளால் தான். இனி வாழபோவதும் இவளுக்காக தான். இவளுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்" என்று தன் குட்டி இளவரசியை அள்ளி ஆசை தீர முத்தமிட்டான்.

"சரி. அப்போ உனக்கும் வேணாம் எனக்கும் வேண்டாம். வாரத்தின் ஐந்து நாட்கள் நீ பார்த்துக்கொள் மீதி இரண்டு நாளும் நீங்கள் இருவரும் அங்கே நம் வீட்டிற்கு வந்துவிடுங்க. உங்கள் இருவரையும் நான் பார்த்துகொள்கிறேன். சரியா?" என்று ஆர்வமாய் கேட்க, சிறிதுநேரம் யோசித்தவன்.

'இவள் என் அன்பை மட்டுமில்லாமல் எல்லோர் அன்பையும் பெறவேண்டும் அதற்க்கு இதுவும் நல்ல வழி தான்' என்று யோசித்து”சரிக்கா! நீ சொன்ன மாதிரியே செஞ்சுருலாம்" என்று ஒத்துக்கொண்டான்.

"டேய் சரவணா! அப்படியே இதுக்கு ஒத்துக்கிட்ட மாதிரியே நான் சொல்லப்போற விஷயதுக்கும் ஒத்துக்கடா" என்று தயங்கியபடி கூறினாள்.

"அக்கா. நீ என்ன சொல்ல போறன்னு எனக்கு தெரியும். ப்ளீஸ் அதுமட்டும் என்னால முடியாது. அதனால என்ன கம்பெல் பண்ணாத" என்று கூறி உள்ளே சென்றுவிட்டான்.

"டேய் சரவணா! நான் சொல்றத கேளுடா. எவ்ளோ நாள் தான் நீ இப்படியே இந்த சின்ன குழந்தைய வச்சிக்கிட்டு கஷ்ட்டபடுவ? உனக்கு பிடிச்சமாதிரி ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கடா. எங்களுக்கு நீ சந்தோஷமா இருந்தாலே போதும்" என்று முடிக்க.

"அக்கா அவள் என் கூட வேணா ஒரு வருஷம் தான் வாழ்ந்துருக்கலாம். ஆனா, அந்த ஒரு வருஷத்துல என் ஜென்மம் முழுக்க வாழவேண்டிய எல்லா சந்தோசத்தையும் தந்துட்டு தான் போயிருக்கா. அவளை மறக்கனும்றது நான் இறந்தா தான் நடக்கும்" என்று கூறினான்.

"டேய் என்னடா? இப்படி சொல்லிட்ட. சரி நான் இதை பத்தி எதுவும் சொல்லல. போதுமா" என்று குழந்தையை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.

"சாரிக்கா. உன்கிட்ட இப்படி பேசணும்னு என் எண்ணம் இல்லை. ஆனா, உங்க எல்லாருக்கும் பொய்யான நம்பிக்கைய கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனாலதான்..." என்று நினைத்துக்கொண்டான்.

இப்படியே அலுவலகம் செல்ல ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.

உடையிலும் தோற்றத்திலும் முன்னர் இருந்த துடிப்புடன் கூடிய மாற்றம் தெரிந்தது.

ஷேவ் செய்யாத தலையும் அயன் பண்ணாத சட்டையும், எதையோ இழந்த முகமும் என வலம் வந்து கொண்டிருந்தவன். இப்பொழுது அலுவலகம் செல்ல ஆரம்பித்தபின் உடையும் முகத்திலும் ஒரு பொலிவுடன் கூடிய மிடுக்கு தெரிந்தது.

அலுவலகத்திற்கு கூட தன் குழந்தையை கூட்டி செல்வான். அங்கே இருக்கும் எல்லா பெண்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினான். யாராலும் அவனை அவர்கள் பக்கம் இழுக்க முடியவில்லை.

அங்கே உள்ளே தன் பெரிய அறையை இரண்டாக பிரித்தபின், அதில் தன் குழந்தை விளையாடுவதற்கு என ஏற்பாடுகளையும் கூறி செய்து முடித்தான்.

அவன் அறையின் உள்ளேயே குழந்தையின் அறையும் இருந்தது.

குழந்தைக்கு தேவையான எல்லா விளையாட்டு பொருட்களும் அத்யாவசிய பொருட்களும் கொண்டு வந்து குவிக்கப்பட்டன.

சரவணத்தமிழன் முக்கியமான மீட்டிங் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் குழந்தையை தன்னுடன் வைத்துக்கொண்டான். மீட்டிங் நேரத்தில் தன்னால் குழந்தையுடன் இருக்க முடியாது என்பதால், குழந்தைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கூறினான்.

"பேபி! அப்பா ஒரு முக்கியமான மீட்டிங்க அட்டென்ட் பண்ணப்போறேன். சோ, நீங்க சமத்தா விளையாடிட்டு இருக்கனும். இங்க பாருங்க, இதுல டைம் செட் பண்ணிருக்கேன். இந்த அலாரம் அடிக்கிறதுக்குள்ள நான் கண்டிப்பா உங்க முன்னாடி இருப்பேன். சோ, நீங்க அழக்கூடாது சரியா? இங்க எல்லா பொம்மையும் இருக்கு. ஹரி அங்கிள் உங்ககூட இருக்க போறாரு. உங்களுக்கு என்ன வேணும்னாலும் கேளுங்க. சரியா, அப்பா போட்டா?" என்று பதிலுக்காக பொறுமையாக காத்திருப்பான்.

"ச....தி..... ப்பா....போ ........" என்று அதன் மழலை மொழியில் கொஞ்சியபடி கூறும். அதன் கன்னத்தில் மெல்லிய புன்னகையுடன் முத்தமிட்டுவிட்டு செல்வான்.

இதோ ஆறு மாதங்கள் சென்றதே தெரியவில்லை கம்பனிக்கு வந்து ....

இப்பொழுது அவனுக்கு மிக பெரிய ப்ராஜெக்ட் ஒன்று கிடைப்பதற்காக தயார் செய்து கொண்டிருக்கிறான்.

நாளை காலை மீட்டிங்... தங்கள் கம்பனிக்கு நிகரான மிக பெரிய கம்பெனி அதனுடன் டை-அப் வைத்து கொள்ள இன்னொரு கம்பெனியை தேடிக்கொண்டிருகிறது.

போன் அடிக்கும் சத்தம் கேட்டு குழந்தை எழக்கூடாதென்று வேகமாக எடுத்து”ஹலோ!" என்றான்.

"ஹலோ! மிஸ்டர்.சரவணன்" என்று குரல் கேட்டது.

"யா ஆன் தி லைன். வ்ஹூ இஸ் இட்?" என்று கேட்டான்.

அவனின் உயர்அதிகாரி கிரைம் பிரான்ச்சில் இருந்து பேசியவர்.

"சரவணன் எப்போ ஜாயின் பண்ண போறீங்க" என்று கேட்க.

"சார் நான் இந்த வேலையே வேணாம்னு எழுதி கொடுத்துட்டேன் பட் நீங்க அதை அக்செப்ட் பண்ணாம ஸ்லீப்பிங் மோடில் வைத்திருக்கிறீர்கள்."

"எஸ் சரவணன். உங்களை மாதிரி சின்சியர் ஆபிசர நாங்க இழக்க விரும்பலை. சோ, நீங்க எப்போ வேணாலும் திரும்பி வந்து ஜாயின் பண்ணிக்கலாம்" என்றார்.

"ரொம்ப தேங்க்ஸ் சார். பட் நான் திரும்பி வந்து ஜாயின் பண்ற மாதிரி ஐடியா இல்லை." என்றான் தெளிவாக.

"வி வில் வெய்டிங் பார் யூ" என்று வைத்துவிட யோசனையில் இருந்தான்.

தனக்கு மிகவும் பிடித்த வேலை தான் என்றாலும் தன் மகளுக்காக அதில் போக வேண்டாம் என்று முடிவுசெய்தான்.

மறுநாள் மீட்டிங் அப்பாவும் மகளும் ரெடி ஆகிவிட்டார்கள்.

"ஹலோ சொல்லுங்க அக்கா" என்றான் போனை காதில் வைத்தபடி.

"சரவணா பாப்பாவ போகும் போது இங்க கூட்டிட்டு வந்து விட்டுட்டு போடா... நான் பார்த்துக்குறேன்..." என்று கூறினாள் அவன் அக்கா.

"இல்ல அக்கா. உங்களுக்கு வேணும்னா ஈவனிங் கூட்டிட்டு வந்து காட்றேன் பட் என்க்கூட மீட்டிங்க்கு என் லிட்டில் பிரின்சஸ் வரணும். அவ என்னோட லக்கி பிரின்சஸ்." என்று சிரித்தான்.

"சரிடா. அப்ப ஈவனிங் இங்க வந்துருங்க ரெண்டு பேருக்கும் டின்னர் இங்க தான்."என்றாள்.

"ஓகே. டன் அக்கா." என்று சிரித்துக்கொண்டு போனை வைத்தான்.

"பேபி பிரின்சஸ் கேன் வி கோ?" என்று கேட்க, அவனையே பார்த்து கொண்டிருந்த சர்வதா குட்டி”ஹ்ம்ம்” என்று தலை ஆட்டி சிரித்தது.

சர்வதாவிற்க்கு இப்பொழுது ரெண்டே மூக்கால் வயது தன் அப்பாவுடன் மிகவும் ஒட்டி கொண்டாள். ஓரளவுக்கு நன்றாக பேச ஆரம்பித்துவிட்டாள்.

"அ...ப்பா... அ...ம்மா... சோ...ட்டோ...” என்று தன் அம்மாவின் போட்டோவை காட்ட.

"இதோ போலாம் டியர் வாங்க" என்று இருவரும் செல்வியின் படத்திற்கு முன் நின்று கண்களை மூடி பிராத்தித்தனர்.

"போலாமா குட்டிம்மா?" என்று அவளை தூக்கி கொண்டு காருக்கு போனான்.

அந்த பெரிய கட்டிடத்தின் முன் சரவணனின் கார் நின்றது.

இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது மீட்டிங் ஆரம்பிக்க. தன் மகளை தூக்கி கொஞ்சியவன்”சர்வா குட்டி! அப்பாக்கு இந்த மீட்டிங் ரொம்ப முக்கியமானது. அரைமணி நேரம் ஆகும் இது முடிய. அதுவரைக்கும் நீங்க ஹரி அங்கிள்கூட இருங்க" என்றவன் எப்பவும் போல அந்த மொபைலில் அரைமணி நேரம் ஐந்து நிமிடம் என்று செட் செய்து கொடுத்தான்.

"இந்தாங்க.. இதுல அப்பா டைம் செட் பண்ணிட்டேன். அதுவரைக்கும் நீங்க ஏதாவது விளையாடிட்டு இருங்க. பசிச்சா அங்கிள் உங்களுக்கு ப்ரூட்ஸ் ஸ்நாக்ஸ் எல்லாம் தருவாங்க சாப்பிடுங்க. நான் வந்திடுவேன். நீங்க மை டியர் கியூட் லிட்டில் பிரின்சஸ் தான சமத்தா இருப்பிங்க தான? அப்பா போகட்டா? கிவ் மீ அ ஆல் தெ பெஸ்ட் கிஸ்" என்று கன்னத்தை காட்டினான்.

சின்னசிறு இதழ்களால் தன் அப்பாவின் கண்களில் முத்தமழை பொழிந்தது அந்த குழந்தை.

"பொ...ய்த்து ... வா... பா.... டைம் ... க்கு ... வ...ந்து...டு..." என்றது மழலை மொழியில்.

"சரிடா" என்று வாட்சை பார்த்தவன் நேரம் ஆகியதால் ஹரிக்கு கண்ஜாடை காட்டிவிட்டு உள்ளே சென்றான்.

ஹரி சரவணனின் ப்.ஏ சில சமயம் சர்வதாவின் ப். ஏவாக மாறிடுவான்.

உள்ளே செல்லும் தன் வாழக்கை இதோடு மாற போகிறது என்பது தெரியாமல் செல்கிறான் நம் சரவணன்.

அந்த பெரிய கான்பிரென்ஸ் ஹாலில் இந்த மீட்டிங்கிற்காக இன்னும் பத்து கம்பனிகளில் இருந்து வந்திருந்தனர்.

எல்லோருக்கும் ஒரு சிநேகமான சிரிப்பை உதிர்த்துவிட்டு தனக்காக ஒதுக்கப்பட்ட சேரில் அமர்ந்தான். அது சரியாக அந்த கம்பெனி சி.இ.ஒ சேருக்கு வலது பக்கத்தில் இருந்தது.

அந்த பெயர் பலகையில்”யவர்ஷினி எம்.பி.ஏ., எம்.எஸ்.டபிள்யூ.," என்று இருந்தது.

அந்த பெயரே வித்யாசமாக இருந்தது அவனுக்கு.

எல்லோரும் வந்துவிட அந்த கம்பெனி சி.இ.ஒ மட்டும் வருவதற்காக காத்து கொண்டிருந்தனர் அனைவரும்.

சில நிமிடம் கழித்து”குட்மார்னிங் எவ்ரிஒன்” என்று குரல் வந்த திசையில் எல்லோரின் பார்வையும் திரும்ப நம் சரவணனின் விழிகளில் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது..
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

26. குழந்தையின் குரல்!​

அங்கே பார்த்தவனின் விழிகளில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. அச்சு அசல் அவனின் தாமரைசெல்வியே நேரில் வருவது போல் இருந்தது அங்கு வந்த பெண்ணின் உருவமும் உடலமைப்பும் மட்டுமில்லாமல் அவளின் முகமும்.

அதிர்ச்சியில் இருந்து மீளாத சரவணத்தமிழனின் மனம் 'இவள் உண்மையிலேயே என் செல்வி போல் இருகின்றாளா இல்லை செல்வியையே நினைத்து கொண்டிருப்பதால் எனக்கு அப்படி தோன்றுகிறதா?' அவளையே வைத்தவிழி மாறாமல் பார்த்துkகொண்டிருக்க தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தவள், சரவணன் தன்னையே பார்ப்பது எரிச்சலை மூட்ட”ஹலோ மிஸ்டர்! வாட் ஆர் யூ டூயிங்? இதுக்கு முன்னாடி பொண்ணுங்களையே பார்த்தது இல்லையா? இடியட்" என்று அவனுக்கு மட்டும் கேட்கும் அடிக்குரலில் சீர... அப்பொழுதுதான் தான் அவளையே பார்த்துக்கொண்டிருப்பது சரவணனுக்கு உரைத்தது.

"ஷட் அப்! மிஸ். யவர்ஷினி. ஹோல்ட் யுவர் டங்க் அண்ட் மைன்ட் யுவர் வோர்ட்ஸ் டு வ்ஹூம் யூ ஆர் டாகிங்க். ஐ ஆம் நாட் தட் டைப் ஆப் கய்ஸ். யூ காட் தாட். அண்ட் சாரி பார் லூகிங் யூ லைக் தட்" என்று படபடவென அவளுக்கு மட்டும் கேட்டுக்கும் குரலில் பொரிந்து தள்ளிவிட்டு எழ முயற்சித்தவனை அவளின் குரல் தடுத்தது.

"இட்ஸ் ஓகே. ஐ ஆம் ஆல்சோ சாரி பார் ச்கோல்டிங் யூ." என்றாள் அவனை பார்க்காமல் எல்லோரையும் பார்த்தபடி.

அவனும் சற்று சமாதானம் ஆகி அமர்ந்தவன் அவளை அதற்க்கு பிறகு பார்ப்பதை தவிர்த்தான் என்றாலும் அவனின் மனதுக்கு அது கேட்கவில்லை. அவனுடைய செல்வி போல் இருப்பதால் அவனின் முகம் அவ்வபொழுது அவளிடம் சென்று வந்தது.

"ஹலோ குட்மோர்னிங்! ஜென்டுல் மேன்ஸ் ஐ ஆம் வெரி ஹாப்பி டு சி யூ ஆல் இன் திஸ் மீட்டிங். நாம இப்ப இங்க எதுக்காக வந்துருக்கோம்னு எல்லாருக்கும் நல்லா தெரியும் இருந்தாலும் ஐ வில் எக்ஸ்ப்ளைன்." என்று எழுந்தவள் அவளின் இருக்கைக்கு பின் இருந்த பெரிய ப்ரொஜெக்டர் ஸ்க்ரீனிடம் சென்றாள்.

தன் கம்பெனி மேற்கொள்ளவிருக்கும் ப்ரொஜெக்டை சுருக்கமாக விவரித்தவள். தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தாள்.

"அண்ட் இன்னொன்னும் நான் சொல்லிக்கிறேன். எங்க அப்பாவை பத்தி உங்களுக்கு தெரியும்னு நினைக்கறேன். ஹி இஸ் எக்ஸ். மினிஸ்டர் கமலநாத். நான் எதுக்கு இப்படி சொல்றேன்னா? நிறைய பேருக்கு இது தெரிஞ்சிருக்கும் அப்படியே இதையும் தெரிஞ்சிகோங்க. என் அப்பா செய்த சில வேலைகள் எனக்கு பிடிக்காததினால நான் எங்க வீட்ல இருந்து சின்ன வயசுலயே வெளிய வந்துட்டேன். எங்க பாட்டி வீட்ல தான் வளர்ந்தேன் அண்ட் இந்த கம்பனிகூட என் தாத்தாவோட சொத்து தான். அதை பார்த்துக்குற பொறுப்பு முழுதையும் என்கிட்ட கொடுதிருக்காரு எங்க தாத்தா. எதுக்கு சொல்றேன்னா எங்க அப்பாவை வச்சி என்னை யாரும் எடை போடாதிங்க. ஐ ஆம் ஜஸ்ட் ஆப்போசிட் டூ ஹிம். எதுவா இருந்தாலும் ஸ்ட்ரைட்பார்வர்ட் தான். எனக்கு நேர்மையா இருக்கறது தான் பிடிக்கும். சோ, என்கூட டைஅப் வச்சிக்கிற கம்பெனியும் அப்படிதான் இருக்கணும்னு எதிர்பார்ப்பேன்.

மீன் டைம், இந்த டைஅப் கம்பெனீஸ் எல்லாம் எங்க கம்பெனி கூட ஈக்வெலா இருக்கணும்னு முடிவு பண்ணி அவங்களுக்கு மட்டும் தான் இங்க மீட்டிங் அரேன்ஜ் பண்ணிருக்கோம். பிகாஸ் இந்த ப்ரோஜெக்க்டுல யூ ஹாவ் டு ஸ்பென்ட் லார்ஜ் அமௌன்ட் வித் அஸ். அதான்.. ஓகே இப்போ எல்லாத்தையும் எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டேன். உங்க கொடேஷன் கொடுத்திட்டு போங்க. நாளைக்கு ஈவனிங் உங்களுக்கு தெரிஞ்சிரும் யார்க்கு ப்ரோஜெக்ட்னு. ஓகே கய்ஸ் ஐ ஹாவ் அனதெர் மீட்டிங் சி யூ சூன்." என்று எழுந்தவள் மின்னல் வேகத்தில் அந்த இடத்தைவிட்டு மறைந்தாள்.

கண்களை மூடி ஒரு நிமிடம் தான் பார்த்த அவள் உண்மை தானா என்று யோசித்தவன் தன் மகளின் நினைவு வர தன் கை கடிகாரத்தை பார்த்து”ஒஹ் ஷிட் !" என்று வேகமாக வெளியே ஓடினான்.

முன்னே சென்று கொண்டிருக்கும் யவர்ஷியை கூட கவனிக்காமல் வேகமாக ஓடினான்.

"இவன் எதற்காக இப்படி ஓடுகிறான்" என்று அவனை பார்த்து யோசித்தபடி லிப்டில் முதல் மாடியில் தன் அறைக்கு சென்று ஜன்னலின் திரையை விளக்கி அவனை பார்த்தாள்.

அங்கே,

சர்வதா ஹரியை ரெண்டாக்கி கொண்டிருந்தாள்.

வேகமாக அவளிடம் ஓடியவன்.”சாரிடா சாரு குட்டி. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. ரியல்லி சாரி" என்று கெஞ்ச.”சார் நீங்க கொடுத்துட்டு போன அலாரம் அடித்தவுடன் பாப்பா அழ ஆரம்பிச்சிடாங்க. நான் எவ்ளோ சமாளித்தாலும் ஒன்னும் முடியலை" என்று கூறினான்.

"என்ன ஹரி? குழந்தை அழ ஆரம்பிச்ச உடனே நீங்க உள்ள தூக்கிட்டு வரவேண்டியது தான?" என்று சற்று கோபமாக கேட்டான்.

"சார் இந்த மீட்டிங் ரொம்ப முக்கியமானதுன்னு சொன்னிங்க. அதான் எப்படியாவது சமாளிச்சிடலாம்னு நினைச்சேன். சாரி சார்" என்றான் மெதுவாக.

"இங்க பாருங்க சர்வதா குட்டி" என்று அழுது கொண்டிருக்கும் மகளை தூக்கி தன் காரின் மேல் உட்கார வைத்தவன் தன் காதுகள் இரண்டையும் இரண்டு கரங்களால் பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்டான்.

"சாரிடா மீட்டிங் முடிய லேட் ஆகிடுச்சு. இனி இப்படி அப்பா பண்ணமாட்டேன் சாரி பேபி" என்று கெஞ்ச அவனின் கெஞ்சலை கொஞ்சலாய் பார்த்து சிரித்தது அந்த பிஞ்சு முகம்.”ச...தி... வி...து .... போ....லாம்.... பா...ப்பா...க்கு....... ப.....சி .......” என்று சொல்லவும் மெல்லிய புன்னகை அரும்ப அவளை அள்ளி அணைத்து முத்தமிட்டான்.

"சரிடா போலாம். பாப்பாக்கு பசிக்குதா? நீங்க ஹரி அங்கிள்கிட்ட சொல்லிருக்கலாம்ல டா? அங்கிள் உனக்கு எல்லாம் கொடுத்துருப்பாங்க இல்லடா" என்று அவள் முடியை கோதியபடி கேட்டான்.

"நீ... தா..ன் ....பா ...வே...து..ம்" என்று சொல்லி தன் தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டது.

இவை எல்லாவற்றையும் மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த வர்ஷினிக்கு ஆர்ச்சர்யமும் அதிர்ச்சியுமாக இருந்தது.

"என்ன?? இவன் ஒரு குழந்தையின் தந்தையா? பார்ப்பதற்கு அப்படி தெரியவே இல்லையே? அப்புறம் எதற்காக இவன் தன்னை அப்படி பார்த்துக்கொண்டிருந்தான். அந்த குழந்தை எவ்வளவு அழகா இருக்கு. அந்த குழந்தைய பார்த்தா எனக்கு எங்கேயோ பார்த்த ஞாபகமா இருக்கு" என்று யோசித்து கொண்டிருக்க.

"மே..ம் ஆபீசியல் மீட்டிங் ரெடி. எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்று சொல்ல.”ஹம் ஓகே. நான் வரேன்” என்று இரண்டாவது தளத்தில் நடக்கும் மீட்டிங் அறைக்கு சென்றாள்.

மறுநாள் எல்லோரும் ப்ராஜெக்ட் யாருக்கு என்பதை அறிய கூடி இருந்தார்கள்.

குழந்தையை வழக்கம் போல் ஹரியிடம் கொடுத்துவிட்டு செல்ல முயற்சித்தான்.

"அப்பா... சீ...க்கீ....தம்......வ....ந்...து....டு.....பா" என்று அவன் கண்களில் மாறி மாறி முத்தமிட்டு கெஞ்சிக்கொண்டிருந்தது அந்த பிஞசு இதழ்கள்.

"சரிடா குட்டி. அப்பா சீக்கிரம் வந்துருவேன்" என்று மகளின் நெற்றியோடு தன் நெற்றியை மோதினான்.

"சார்! மேம் உங்களை பாப்பாவை உள்ள தூக்கிட்டு வர சொன்னாங்க” என்று வர்ஷினியின் பி.ஏ கூறியதும்”சரி" என்று குழந்தையிடம் திரும்பி”செல்ல குட்டி! உன்னையும் உள்ள கூட்டிட்டு வர சொல்லிட்டாங்க. ஆனா, நீ அங்க சமத்தா இருப்பியா?" என்று சற்று கவலையாக கேட்டான்.

"ச....தி....ச....ம.....த்தா.....இது.....பே....ன்” என்றது வேகமாய்.

"சரி போலாம்” என்று தூக்கி சென்றான்.

உள்ளே சென்று தன் மடியில் அமர்த்திக்கொண்டு காத்திருக்க வர்ஷினி உள்ளே நுழைந்தாள்.

"குட் ஈவினிங் !” என்று பேசிக்கொண்டே இருந்தவள் விழிகள் அவ்வப்பொழுது சர்வதாவின் மேல் சென்று வந்தது.

தன் அப்பா கொடுத்த மொபைலில் இருந்த கேமை சத்தம் வராமல் விளையாடிக்கொண்டிருந்தாள் சர்வதா.

"மிஸ்டர்.சரவணன் கம்பெனி தான் இந்த டை அப் ப்ராஜெக்ட்காக செலக்ட் பண்ணிருக்கு. வி ஆர் கோயிங் டு ஒர்கிங் பார் பைவ் இயர்ஸ்" என்றவுடன் தன் தந்தையின் பெயர் கூப்பிடப்படுவதை கேட்ட குழந்தை நிமிர்ந்து யவர்ஷினியை பார்த்ததும்,”அப்பா... அம்....மா ப்பா... அம்...மா..." என்று கத்தியது அந்த அறையில் திரும்பி எதிரொலித்தது.

அதிர்ச்சியில் உறைந்தனர் அனைவரும் அங்கே சரவணனையும் சேர்த்து...
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

27. குழந்தையின் ஏக்கம்​

"அப்பா... அம்மா.. ப்பா.. அம்மா..." சர்வதா கத்தியதில் எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி குடிகொள்ள...

குழந்தையின் குரல் கேட்டு திரும்பிய யவர்ஷினி தன்னை தான் அம்மா என்கிறது என்று புரிய நடப்பது ஒன்றும் புரியாமல் விக்கித்து நின்றாள்.

கூறியதோடு நில்லாமல் தன் தந்தையிடம் இருந்து தாவி கீழே இறங்கியவள் யவர்ஷினியை நோக்கி”அம்மா” என்று கைகளை வி்ரித்தபடி ஓடி வர, அதன் எதிர்பார்ப்பை பொய்யாக்க விரும்பாமல் குனிந்து இரண்டு கைகளாலும் அள்ளி தூக்கினாள்.

நிலைமையை உணர்ந்து வேகமாக எழுந்து குழந்தையிடம் சரவணத்தமிழன் நகர அதற்குள் தன்னை தூக்கியவளை அன்னையென நினைத்து முத்தமழை முகத்திலே பொழிந்து கொண்டிருந்தது அந்த மழலையின் சுடர்.

"ஹாய் ! உங்க பேரு என்ன?" என்று சிரித்தபடி கேட்டாள்.

எல்லோரும் தன்னையே கவனிப்பதை உணர்ந்தவள்.”ஓகே சி யு ஆல். மிஸ்டர்.சரவணன் அக்ரீமெண்ட் சைன் பண்ணிட்டு வாங்க” என்று குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக வெளியே சென்றாள்.

எல்லோரும் அங்கிருந்து களைய, சரவணன் நிலைkகொள்ளாமல் அக்ரீமெண்ட்டில் கையெழுத்திட்டவன் வேகமாக,”உங்க மேடம் எங்க இருக்காங்க?" என்றான்.

"சார்! மேல முதல் தளத்துல இருக்காங்க உங்களை வர சொன்னாங்க" என்றாள் அந்த பணிப்பெண்.

"சரி" என்று தலையசைத்தவன் எண்ணத்தில் ஆயிரம் கேள்விகள் குடைந்து கொண்டிருந்தது. அவள் அறையின் முன் நின்றவன்.அறையின் கதவை தட்டினான்.

" எஸ் கம் இன்" என்று குரல் வரவும் உள்ளே சென்றவன் ஸ்தம்பித்து நின்றான். அங்கே தரையில் போர்வை விரித்து அதில் சர்வதா யவர்ஷினி மடியில் அமர்ந்திருக்க... யவர்ஷினியோ சர்வதாவிற்கு பால் சாதம் ஊட்டி கொண்டிருந்தாள்.

அவள் அன்னையை முதல்முறையாக பார்ப்பதாக எண்ணி”அம்மா எ...ங்க போ...ன...அ..ப்பா...உன் சோ...ட்.டோ..கா...ட்டி ...." என்று கேட்டாள்.

"சரிடா நீ முதல்ல சாப்பிடு” என்று ஊட்டினாள்.

"நீ ...எங்கே....யும்... போ....கா..த..." என்று அவள் கழுத்தை கட்டிக்கொண்டது.

நிலைமை கை மீறி போவதை உணர்ந்து 'இல்ல இப்படி நடக்க கூடாது. இதை இங்கயே முடிக்கணும் வளரவிடக்கூடாது' என்று மனதினுள் நினைத்தபடி அவர்களை நெருங்கி,”ஸர்வதா குட்டி வாங்க போலாம்” என்று கையை நீட்டினான்.

"அப்.....பா அம்...மா கூ..டி... போ...தா...ம் பா" என்றாள்.

"சரோ குட்டி. இவங்க நம்ம அம்மா இல்லை. நாம போலாம்டா" என்று தூக்கப்போனவனிடம் போகாமல் யவர்ஷினியிடம் புதைந்து கொண்டது.

"சரோ. அப்பா சொல்றேன் இல்ல. இவங்க அம்மா இல்ல வா” என்று இழுத்தான்.

"ப்ளீஸ் இருங்க. குழந்தை அழுதில்ல இவங்க அம்மா எங்கே ?” என்று கேட்கவும் பதட்டத்தில் வெடித்தான்.

"இங்க பாருங்க அதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாதது. குழந்தை ஏதோ தெரியாம சொல்றா? நீங்க எங்களுக்கு நடுவுல வராதீங்க. என்கிட்டே இருந்தும் என் குழந்தைகிட்ட இருந்தும் ப்ளீஸ் ஸ்டே அவெ" என்று குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக வெளியேறினான்.

அவன் போவதையே பார்த்து கொண்டிருந்தவளிடம்”மேம் உங்க அப்பா வந்துருக்காங்க" என்று கூறிய பணிப்பெண்ணை முறைத்து பார்த்துவிட்டு”அப்படி யாராவது வந்தால் அனுமதிக்க கூடாது என்று கூறி இருக்கிறேனே... எதற்கு இப்பொழுது வந்து என்னிடம் கூறுகிறீர்கள்?" என்று கேட்டு கொண்டிருக்கும் போதே அவளின் அப்பா உள்ளே வந்துவிட்டார்.

"என்னம்மா நான் வந்துருக்கேன்னு தெரிஞ்சும் என்னை பார்க்கமாடேன்ற?" என்று கேட்டார்.

"நீங்க செய்யற வேலையே பிடிக்காம தான உங்களை விட்டு விலகி இருக்கேன். எதுக்காக அப்ப கூட என்னை வந்து தொல்லை பண்றிங்க?" என்று கோவமாய் கேட்டாள்.

"நீ என்கிட்டே பேசறத விட்டப்புரம் கூட நான் மாறாம தான் இருந்தேன்மா... இப்போ தான் நான் மாறிட்டேன் இல்ல. அப்பகூட ஏன் என்னை மன்னிக்க மாட்ற?" என்று கேட்டார்.

"செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு இப்போ வந்து நான் மாறிட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? எல்லாம் சரி ஆகிடுமா?" என்று கேட்டாள்.

"அதைவிடு இப்ப எதுக்கு அந்த சி.பி.ஐ இங்க வந்துட்டு போறான்.?" என்று கேட்க அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

"யார் சி.பி.ஐ? எப்போ வந்தாங்க ?" என்று கடுப்பாய் கேட்க.

"இப்போ குழந்தைய தூக்கிட்டு போறானே அவன் தான் மா... அதான் எதுக்கு இங்க வந்தான் கேக்குறேன்?"

"என்ன உளறிங்க? அவர் இங்க ஒரு ப்ராஜெக்ட் விஷயமா வந்துட்டு போறாரு. நீங்க வேற யாரையோ சொல்றிங்க” என்றாள் நம்பாமல் .

"இல்லை அவன் சி.பி.ஐ ஆபிசர் சரவணத்தமிழன் தான். எனக்கு நல்லா தெரியும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னை இவன் தான் அர்ரெஸ்ட் பண்ணான். அவனுடைய மனைவிய கூட நான் சாகடிக்க ஆள் அனுப்பிட்டேன். வண்டியும் இடிச்சிருச்சி ஆனா கடைசி நேரத்துல அந்த பொண்ணு அசப்புல உன்னை மாதிரியே இருந்ததா சொன்னாங்க... அதனால் விட்டுட்டேன்” என்று கூறவும், கோவமாக”அப்போ என்னை மாதிரி இல்லன்னா அந்த பொண்ணை அன்னைக்கே சாகடிச்சிருப்பிங்க இல்லை?" என்று கேட்டாள்.

"ஆனாலும் அந்த பொண்ணு இப்போ இறந்திடுச்சு. முதல்ல சந்தோஷப்பட்டேன் ஆனா இப்போ வருதப்படுறேன். அவன் அந்த குழந்தைய வச்சிக்கிட்டு தனியா ரொம்ப கஷ்டப்பட்றான்னு கேள்விபட்டேன்" என்று கூறி கொண்டிருந்தார்.

"சரி. இப்போ உங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு இங்க வந்திங்க?" என்றாள்.

"நான் தான் மாறிட்டேனே இப்போ கூட அப்பாவை மன்னிக்க கூடாதா?" என்றார் வருத்தமாய்.

"நான் மாறிட்டேன்னு நீங்க சொல்லக்கூடாது நான் தான் சொல்லன்னும். எங்க அப்பா மாறிட்டார்னு எனக்கு எப்போ தோணுதோ அப்போ நானே உங்களை தேடி வரேன் இப்போ போங்க” என்றவளிடம் எதுவும் பேசாமல் வெளியே சென்றுவிட்டார்.

அதற்க்கு பின் கழுத்து வரை இருந்த வேலையில் கவனம் செலுத்தியதால் சர்வதாவை பற்றி யோசிக்க மறந்துவிட்டாள்.

அங்கே வீட்டில் சர்வதா”அம்மா.. அம்மா..” என்று அரற்றி கொண்டிருந்தாள்.

என்ன செய்வது என்று புரியாமல் விழித்து கொண்டிருந்தான் சரவணன்.

"சர்வதா குட்டி நாம இன்னைக்கு கோவிலுக்கு போலாமா?" என்று அவளை தயார் செய்து அவர்கள் இருவரும் பக்கத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றார்கள்.

அங்கே முருகனுக்கு உகந்த நாள் என்று அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள். மனமுருகி கண்களை மூடி வேண்டியவன் 'கடவுளே என் குழந்தைக்கு இதுவரைக்கும் அம்மா இல்லைன்ற கவலை இல்லாம வளர்த்தேன். எப்போ அந்த ய்வர்ஷினியை பார்த்தாளோ அன்னைலர்ந்து அம்மா அம்மான்னு ஏங்குறா. எனக்கு என்ன செய்யறதுன்னு புரியலை அவள் மனச மாத்தறதுக்கு முயற்சி செய்யப்போறேன் அதுக்கு நீங்க எப்பவும் எனக்கு துணையா இருக்கனும்' கண்ணீர் வருவது கூட அறியாமல் வேண்டியவன். அங்கிருந்து பிரகாரத்தை சுற்றி வந்தான்.

குழந்தையுடன் கிழே அமர்ந்தவன்”சர்வதா குட்டி இங்கேயே விளையாடுடா எங்கயும் போக கூடாது" என்று இறக்கிவிட்டான்.

"ச...தி...ப்பா..." என்று விளையாடியது.

விளையாடிக்கொண்டிருந்த குழந்தையுடன் புதியதாய் இருகுழந்தைகள் வந்து விளையாட பார்த்து சிரித்து கொண்டே போனை எடுத்து பேசியவன் குழந்தையை கவனிக்க தவறிவிட்டான்.

விளையாடி கொண்டிருந்த இரு குழந்தைகளும் சர்வதாவை வெளியே அழைத்து சென்றுவிட்டனர்.

விளையாடி கொண்டிருக்கும் போதே அவள் கழுத்தில் இருந்த செயினை கழற்றினர்.

தூரத்தில் இருந்து இதை கவனித்த இரு ஜோடி கண்கள் வேகமாக சர்வதாவிடம் ஓடி வந்தன.

அதே நேரம் உள்ளே குழந்தையை காணாமல் தேடிக்கொண்டு வெளியே ஓடிவந்தான் சரவணத்தமிழன்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

28. மீண்டும் வருவாள்​

"சர்வதா" என்று கூப்பிட்டபடி வெளியே தேடி வந்தவன் கண்ட காட்சி...

எவ்வளவு வேலை இருந்தாலும் செய்து முடித்ததும் அந்த சின்ன குழந்தை”அம்மா... அம்மா..." என்று அழுதுகொண்டே சென்றது வர்ஷினியின் மனதில் நெருடிக்கொண்டே இருந்தது.

இருந்தாலும் என்னவென்று சொல்வது? முதல்முறையாக பார்க்கும் ஒரு குழந்தை பார்த்த பார்வையிலேயே அம்மா என்று அழைக்கும் நேரம் ஒரு பெண்ணின் மனது என்ன நிலையை சந்திக்கும் என்பதை விவரிக்க முடியுமோ?

முன்பின் தெரியாதவருடைய விஷயத்தில் தான் என்னவென்று மூக்கை நுழைப்பது? இதில் இருந்து விலகி இருங்கள் என்று கூறிய பிறகு மீண்டும் சென்று கேட்கவும் முடியவில்லை. அதற்காக அந்த குழந்தையின் அலறலை அலட்சியம் செய்யவும் முடியவில்லை... முள்ளின் மேல் இருப்பதுபோல் இருந்தது வர்ஷினிக்கு. உண்ண பிடிக்கவில்லை உறக்கமும் வரவில்லை மன அமைதிகாக இறைவனை தேடி வந்த இடத்தில அவள் கண்ட காட்சி நெஞ்சை பதற வைத்து.

ஆம்!

அங்கே சர்வதாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை இரு சிறுவர்கள் வலுக்கட்டாயமாக கழட்டுவதை கண்ட வர்ஷினி, வேகமாக ஓடி குழந்தையை தூக்கினாள்.

சங்கிலியை பறித்த சிறுவனின் சட்டையை பிடித்து”டேய் யாரு நீங்க? உங்களை யாரு அனுப்பினா? குழந்தை கழுத்தில் இருந்த சங்கிலி எங்க? கொடு டா" என்று பிடுங்கி கொண்டு”உங்களை போலீஸ்ல புடிச்சி கொடுக்கறேன்" என்றதும்.

"இல்லக்கா எங்களை மன்னிச்சிடுங்க. அம்மாக்கு உடம்பு சரி இல்லக்கா. மருந்து வாங்க காசில்லை. அதனால தான்க்கா இப்படி பண்ணிட்டோம். இனி, இதுமாதிரி பண்ண மாட்டோம்" என்று கெஞ்சவே”ஏன்டா பொய் சொல்றிங்களா? உங்க அப்பா எங்க?” என்று கேட்டாள்.

"அக்கா அப்பா இல்லக்கா. அம்மா மட்டும் தான்க்கா. எங்களை விட்ருங்க... நாங்க எங்க அம்மாகிட்ட போறோம்" என்று கண்களை கசக்கியபடி அழுதுக்கொண்டிருந்தனர்.

"உங்க அம்மா எங்க இருக்காங்க?" என்று கேட்கவும்”அம்மா இங்க தான் பக்கதுல கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல இருக்கு அக்கா" என்றனர்.

தன் டிரைவரை அழைத்து”போயிட்டு இந்த பசங்களோட அம்மாக்கு என்ன உடம்புக்குனு விசாரிச்சி வேற நல்ல ஹாஸ்பிடல்ல சேர்த்து காசுகட்டிட்டு வாங்க." என்று தன் பர்சில் இருந்து சில ஆயரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து”டேய் பசங்களா திருடறது ரொம்ப தப்பு. அதுவும் சின்ன குழந்தைகிட்ட திருடறது அதை விட ரொம்ப தப்பு புரியுதா? இனிமே இது செய்யாதிங்க. நீங்க படிக்கலையா?" என்றாள்.

"இல்லக்கா காசில்லக்கா" என்றனர் பாவமாய்.

"சரி. இந்தாங்க இது என்னோட விசிடிங் கார்ட் . உங்க அம்மாக்கு உடம்பு சரி ஆகிடுச்சுன்னா கண்டிப்பா என்னை வந்து பாருங்க. நான் உங்க அம்மாக்கு நல்ல வேலை போட்டு தரேன். அதோட உங்களையும் படிக்க வைக்கிறேன்" என்று கூறினாள்.

"இவங்கள பத்திரமா கூட்டிட்டு போங்கண்ணா. அவங்க வீட்டு அட்ரெஸ்சையும் வாங்கிட்டு என்னை வந்து பார்க்க சொல்லிட்டு வாங்க" என்றாள்.

"சரிங்கம்மா” என்று அந்த சிறுவர்களை கூட்டி கொண்டு போனார் அவளின் டிரைவர்.

இதை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த சரவணனுக்கு செல்வியே அங்கு நிற்பதுபோல் தெரிந்தது. மறுபடியும் மனம் அவள் புறம் திரும்புவதை விரும்பாமல் வேகமாக வந்து குழந்தையை பிடிங்கிக்கொண்டு”உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? எதுக்கு திரும்ப திரும்ப எங்ககிட்ட வரிங்க?" என்று கோவிலின் உள்ளே சென்றுவிட்டான்.

'என்ன இவன்? இவனாக வந்தான் இங்கு என்ன நடந்தது என்று கூட தெரியாமல் இப்படி திட்டிவிட்டு செல்கிறானே?' என்று தனக்குள் பேசிக்கொண்டு கையில் இருந்த சங்கிலியை பார்த்தாள்.

"ஒஹ்! இது அந்த குழந்தைது கொடுக்கலையே?" என்று யோசித்தபடி அந்த சங்கிலியில் இருந்த லாகெட்டை திறந்து பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

அதில் சரவணன் ஒரு பக்கமும் இன்னொரு பக்கத்தில் செல்வியும் இருக்க, தன்னை போலவே அந்த பெண் இருப்பதை பார்த்தபின் தான் அவளுக்கு எல்லாம் புரிந்தது.

'அப்பா சொன்னது போல அந்த பொண்ணு என்னை மாதரியே இருக்கா... அதனாலதான் அந்த குழந்தைகூட என்னை அம்மான்னு நினைக்கிறாள். அப்போ... இவன் என் மேல் காரணமில்லாமல் கோபப்படுவது கூட என்னை பார்த்தவுடன் அவன் மனது மிகவும் சங்கடப்படுகிறது.' என்று எல்லாவற்றையும் கோர்வையாக பார்த்தவள் நேராக கோவிலின் உள்ளே சென்றாள்.

அங்கே சரவணன் குழந்தையின் அருகே அமர்ந்து கண்களை மூடிக்கொண்டிருந்தான்.

"சரவணன்" என்று குரல் கேட்டவுடன் கண்களை திறந்து வர்ஷினியை கண்டவுடன் கண்களை திரும்ப மூடிக்கொண்டான்.

"இந்தாங்க உங்க பாப்பாது செயின். வெளிய ரெண்டு பசங்க பாப்பா கழுத்துல இருந்து இதை எடுத்துட்டாங்க" என்று அவனிடம் நீட்டினாள்.

அமைதியாக அதை வாங்கி கொண்டவன் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

'ஒரு தாங்க்ஸ் கூட சொல்ல முடியாதா இவனால?' என்று யோசித்தவள்.

'இவனுக்கு எல்லாம் தெரிஞ்சி தான் குழந்தைய தூக்கிட்டு வந்துருக்கான்' என்று அமைதியாக திரும்பி வெளியே வந்துவிட்டாள்.

அவள் செல்வதையே விழிமூடாமல் பார்த்துக்கொண்டிருந்தான் சரவணன்.

அவர்கள் இரு கம்பனியும் தொழில் தொடங்கி இன்றோடு ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. நல்ல முன்னேற்றத்துடன் தொழில் போய் கொண்டிருந்தது.

அன்று நடந்த சம்பவதிற்க்கு பிறகு சர்வதாவை இவளின் கம்பனிக்கு கூட்டி வருவதில்லை. அவனும் தேவை இல்லாமல் வருவதில்லை. முக்கியமான மீட்டிங் என்றால் மட்டும் வருவான். மற்றபடி அவனது பி.ஏ ஹரியை அனுப்பிவிடுவான்.

இந்த ஆறுமாதத்தில் வர்ஷினி தனி டிடெக்டிவ் மூலம் சரவணத்தமிழன் பற்றியும் செல்வியோடு அவன் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் அறிந்து கொண்டாள்.

அவனை பார்த்த அன்றே அவளுக்கு அவன் மேல் ஒரு ஈர்ப்பு உண்டானது. இத்தனை கம்பனிகளை கட்டி ஆளும் ஒரு பெண் என்பதாலும் பார்ப்பதற்கு சிலையென தோன்றும் எழில் கொஞ்சும் அழகினாலும் எல்லோரையும் கவர்ந்தபடி வளம் வந்தாலும் யாரையும் தன்னிடம் நெருங்க விடமாட்டாள்.

எவ்வளவு பெரிய தொழில் அதிபராக இருந்தாலும் ஒரு அடி தள்ளியே நிறுத்தி பழகிவிட்டாள். அப்படி இருக்க தன்னையும் ஒரு ஆடவன் ஒதுக்கி வைக்கிறான் என்றால்.. அதுவும் பார்த்த முதல் சந்திப்பிலேயே தன்னை உதாசினப்படுத்திவிட்டு போனது, தன்னையும் தன் குழந்தையையும் நெருங்க வேண்டாம் என்று கூறியது என எல்லா விஷயங்களிலும் அவள் மனதை அவன் ஆக்ரமித்துவிட்டிருந்தான்.

அவனை தூரத்தில் இருந்து பார்த்தபடியே ரசித்து ஒரு தலையாய் விரும்ப தொடங்கி இருந்தாள் வர்ஷினி. கூடவே சர்வதாவையும் தன் குழந்தையாய் எண்ணினாள்.

இதோ ஆறு மாதத்திற்கு பிறகு இப்படியே இவனை விட்டா சரி வராது... எப்படியாவது அவன் மனதில் தான் இடம் பிடிக்கவேண்டும் என்று முடிவு செய்து அவனுடைய ஆபிஸிற்கு செல்கிறாள்.

அவளை கண்டதும்... முதலில் அதிர்ந்தாலும் பின் சுதாரித்து கொண்டு,”வாங்க வர்ஷினி! என்ன இந்த பக்கம்? சொல்லி இருந்தா ஹரிய அனுப்பி இருப்பேனே?" என்று அவளை பார்க்காமல் விழிகளில் வேறு எதையோ பார்த்துக்கொண்டு கேட்டான்.

"ஏன் சரவணன் நான் உங்க ஆபிசிற்க்கு வரக்கூடாதா? இங்க பக்கதுல என் பிரெண்ட் வீடு வந்தேன். அப்படியே உங்க ஆபிசையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்" என்று அந்த அறையை முழுவதும் நோட்டமிட்டாள்.

"இல்ல. அப்படி எல்லாம் இல்ல. நீங்க எப்ப வேணாலும் வரலாம். இதுவரைக்கும் வந்ததில்லையா அதான் கேட்டேன்" என்றான் மழுப்பலாக.

"சர்வதா எப்படி இருக்கா?" என்றாள் அவனை நேராக பார்த்து.

"ஹீம்.. நல்லா இருக்கா" என்றான் ஒற்றை வரியில்.

"நீங்க தப்பா நினைக்கிலேன்னா நான் அவளை பார்க்கட்டுமா? எனக்கு ஆசையா இருக்கு" என்றாள் கெஞ்சலாக.

சில நிமிடம் தயங்கியவன்.”சரி" என்று குழந்தை இருக்கும் அறைக்குள் அவளை அழைத்துச்சென்றான்.

சர்வதா இவளை கண்டதும்”அம்மா ..." என்று ஓடிவந்து அவளின் கழுத்தை கட்டிக்கொண்டு முகத்தில் முத்தமழை பொழிந்தது.

"சர்வதா குட்டி ..." என்று அவளும் குழந்தையை தூக்கி உச்சி முகர்ந்தாள்.

"அம்...மா ஏன்.. மா எ.. னை.. வி.து..ட்டு ஊது...க்கு போ..தி...ங்க?" என்று பாவமாய் குழந்தை கேட்க வர்ஷினி திரும்பி சரவணனை பார்த்தாள்.

அவன் தடுமாறுவதை பார்த்துவிட்டு.”இல்லடா குட்டி. அம்மாக்கு ரொம்ப முக்கியமான வேலை. அதனால போய்டேன். சாரி இனி இப்படி நடக்காது” என்று காதை பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்க குழந்தை சிரித்தது.

"சதி...ம்மா அப்போ.. இதி..மே... நீ...க எ..ன்னை விது...த்து போ..க.. மாதி...ங்க..ல்ல?" என்று கேட்டதும் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"சரோ செல்லம்! அம்மாக்கு இன்னும் அந்த வேலை கொஞ்சநாள் இருக்கு. அதனால உன்கூட தங்க முடியாதுடா” என்றாள்.

"அப்போ.. எ..தை.. வி..த்..து மது...பதி..யும் போயடுவிங்களா?" என்று ஏக்கமாய் கேட்க .

"இல்லடா அம்மா தினமும் உன்னை வந்து டென் மினிட்ஸ் பார்த்துட்டு உன்கூட ஒரு மணி நேரம் இருந்துட்டு போறேன் சரியா?" என்று கூற”சரி" என்று தலையாட்டியது.

சரவணன் தான் முறைத்து கொண்டிருந்தான்.

'இது..ம் கொ..த.. நே.த..ம் என்.. கூ..த.. விளை..யா..தி..த்து இது..க்கீ..ங்க..ளா?" என்று கேட்க,”சரி" என்று சரவணனிடம் திரும்பி”உங்களுக்கு வேலை இருந்தா பாருங்க. நான் கொஞ்சநேரம் பாப்பா கூட ஸ்பென்ட் பண்றேன்." என்றதும் எதுவும் கூறமுடியாமல் தலையாட்டிவிட்டு அமைதியாக வெளியேறினான்.

'மறுபடியும் இவள் என் குழந்தையிடம் இணைகிறாளே இது நல்லதிற்கா என்ன சொல்வது என்றே தெரியவில்லையே?' என்று புலம்பிக்கொண்டிருந்தான்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

29. கண்ணாமூச்சி காதல்​

ஒரு மணிநேரம் ஆகியும் வர்ஷினி வெளியே வராததால் சரவணன் மிகவும் சீற்றம் கொண்டு 'இப்படியே போனா.... பாப்பா அப்புறம் உண்மை தெரிஞ்சா ரொம்ப கஷ்டபடுவா. இவ எதுக்கு இப்ப திடிர்னு வந்து எங்க ரெண்டு பேரையும் கஷ்டபடுத்துறா?"' என்று தனக்குள் கேட்டவாறே அந்த அறையின் பக்கவாட்டு சுவரில் சாய்ந்து என்ன நடக்கிறது என்று கவனித்தான்.

அங்கே தன் கைக்கடிகாரத்தை பார்த்த வர்ஷினி”சர்வதாகுட்டி அம்மாக்கு டைம் ஆகிடுச்சுடா. நான் கிளம்பட்டுமா?" என்று அவள் தலையை கோதியபடி கேட்க,”இல்லமா.... இன்னு....ம் கொத.. நே..த...ம் ப்ளீஸ்....” என்று கெஞ்சியது.

என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க,”அம்மா எத..க்கு நீங்..களும் அப்..பாவும் இது..க்க.. மாதி..தி.. அப்..பாக்கு அம்..மா அப்..பா சாமி..கிட்..ட போய்..தா..ங்க... அப்..ப உங்..களு..க்கு அப்..பா அம்..மா எங்க?" என்று கேட்டது.

"அதுவாடா, அம்மாக்கு சின்ன வயசா இருக்கும் போது என்னோட அம்மா சாமிகிட்ட போய்டாங்க. அப்பா மட்டும் தான். ஆனா எனக்கு அவர் செய்யறது பிடிக்காது. அதனால நான் தாத்தாகிட்ட வந்துட்டேன். தாத்தா ரொம்ப நல்லவர். அவர் தான் எனக்கு எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்தார்." என்றாள்.

"என்ன.... தொ...ல்லி....கொடு....த்தார்?" என்றது பாதி மழலையில்.

"ஹ்ம்ம் பொண்ணுனா நிமிர்ந்த பார்வையும் நேர்கொண்ட நடையும் நல்ல எண்ணமும் இருக்க வேண்டும்னு சொல்லிக்கொடுத்தார்." என்றாள்.

"அப்ப..தினா என்ன...?" என்று கேட்டது குழந்தை.

"அது நாம தப்பு பண்ணலைனா யாருக்காகவும் பயப்படக்கூடாதுன்னு சொல்லிருக்கார்". என்றாள்.

"சரி நீ படு நான் கதை சொல்றேன் ...” என்றவள்.”ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாறாம். அவருக்கு கண்ணு தெரியாது... காதும் கேக்காது..... ஆனா ரொம்ப புத்திசாலி. அதனால என்ன பண்ணாராம்? தன் நாட்டு மக்களில் நல்ல புத்திசாலியான ஒருத்தரை தேர்ந்தெடுத்து அடுத்த அரசனாக்கனம்னு... அதனால என்ன பண்ணாரு... அந்த ஊர்ல இருந்த இருபதுல இருந்து இருபத்தி அஞ்சு வயசு வாலிப பசங்களை கூப்பிட்டு ஒரு கைப்பிடி விதையை கொடுத்து தினமும் தண்ணி ஊத்தி வளர்க்க சொன்னாராம். யாருடைய செடி நல்லா வளருதோ அவங்க தான் அடுத்த ராஜான்னு சொன்னாராம்.

அவங்களும் தினமும் தண்ணீர் ஊத்தி செடியை வளர்த்தாங்க. எல்லாருடைய செடியும் நல்லா வளர்ந்துச்சு. அவர் அரண்மனையுடைய தோட்டக்காரன் சோமுவும் அரசர் கொடுத்த விதையை செடியாக்க தினமும் தண்ணி ஊத்தினானாம்... ஆனா ஒரு சின்ன புல்லு கூட முளைக்கல மத்த எல்லார் செடியும் வளர்ந்துச்சு. எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிடாங்க.

கடைசி நாளும் வந்துச்சு. அரசரும் வந்தாரு. எல்லாரும் அவங்க அவங்க செடியை காட்டினாங்க. ஆனா சோமுகிட்ட எதுவுமே இல்லாததால.”அரசே நான் தினமும் தண்ணீரை ஊற்றினேன். ஆனால், என்னவென்று தெரியவில்லை” என்று முகம் வாட,”உனக்கு தெரியலைன்னா என்ன? எனக்கு தெரிஞ்சிடுச்சு நீ தான் அடுத்த அரசர்." என்றார்.

"அய்யா! ஆனால் நான் எவ்வளவு தண்ணீர் ஊற்றியும் என் தொட்டியில் தான் செடியே வரவில்லையே?” என்றான் ஒன்றும் புரியாமல்.

"அதனால் தான் நீ அரசன் என்றேன். புரியவில்லையா? நீ எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அதில் செடி வராது. ஏன் என்றால் நான் கொடுத்த விதைகள் வறுக்கபட்டவை. மற்ற எல்லோரும் நான் ககொடுத்த விதைகளை தூக்கி வீசிவிட்டு அவர்கள் வாங்கி வந்து விதைத்திருக்கிறார்கள். நீ மட்டும் தான் நான் என்ன கொடுத்தேனோ அதை விதைத்தாய். ஆக நீ மட்டும் தான் நேர்மையாக இருந்திருக்கிறாய். நேர்மையோடு இருப்பது ஒரு அரசனுக்கு முக்கியகுணம்" என்று அவனுக்கு அரசனாக பட்டம் சூட்டினார்." என்று முடித்தாள்.

"இதில் இருந்து என்ன புரிகின்றது சரோ? நாம என்ன நடந்தாலும் நேர்மையா இருக்கனும். பொய் சொல்லக்கூடாது. புரியுதா ?" என்றாள்.

"ஹய் தூ..ப்ப..ரா இது..ந்த..து கதை. எத..க்கு தின..மும் இதே.. மா..தி..தி.. கதை.. சொதிறி..ங்க..ளா அம்..மா?" என்றது அந்த பிஞ்சு கண்களில் ஏக்கத்தோடு.

"கண்டிப்பா சொல்றேன்டா. சரி அப்ப நான் கிளம்பட்டுமா?” என்றாள் குழந்தையை பார்த்து.

வெளியில் நின்று இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த சரவணத்தமிழனுக்கு, என்ன தான் அன்னையாய் மாறி நான் பார்த்துகொள்ளவேண்டும் என்று முயற்சி செய்தாலும் அன்னை இருந்து வளர்ப்பதுபோல் வராது. ஏன் செல்வி இப்படி பண்ண? எங்க ரெண்டு பேரையும் இப்படி தவிக்க விட்டுட்டு நீ மட்டும் நிம்மதியா போயிட்டியே? இங்க நாங்க தவிக்கிறது உனக்கு தெரியலையா? உன் இடத்தில உன்னை போலவே உன் உருவத்தில் வந்து என்னை அலை கழிக்கிறாள்' என்று விழிகளில் நீர் கசிய சர்வதா அடுத்து கேட்ட கேள்வியில் அரண்டு போனான்.

இதோ இவர்களின் கண்ணாமூச்சி காதல் ஆரம்பமாகிவிட்டது...... சொல்வதற்கு அவளும் தயங்குகிறாள் ஏற்றுகொள்வதற்கு இவனும் தயாராகவில்லை என்னவாகும் இவர்களின் நிலைமை இதே போல் போனால்?

"அம்மா! அப்பா என்..கூட.. தான.. இது..க்கார். அப்..ப தீ..ங்க மட். .டும் ஏன் என்..கூட இல்லை? நீங்களும் என் கூட இருங்க அம்மா ப்ளீஸ்" என்று கெஞ்சியது.

அவளின் கேள்வியில் செல்வியே தவித்து போனாள். அவளுக்கு சரவணன் வெளியே நிற்பது தெரியும் தான்.... என்ன சொல்வது என்று முழித்தபடி,”சரோகுட்டி. இன்னும் பத்து பதினைந்து நாள்ல அம்மாக்கு வேலை முடிஞ்சிடும். அப்போ நான் கண்டிப்பா உன்கூட வந்து தங்க முயற்சி பண்றேண்டா குட்டி ப்ளீஸ்" என்றாள் அவளும் கெஞ்சுதலாய்.

"சதி..ம்மா. அப்போ எத..க்கு ஒரு பா..த்து பாது..ங்க. நான் தூங்..கு..தேன்" என்று அவள் மடியில் தன் தலையை வைத்து படுத்து கொண்டது.

அவளின் பதிலில் மிகவும் கோபமான சரவணன் 'என்ன நினைத்து குழந்தைக்கு இதுமாதிரி எல்லாம் நம்பிக்கை தருகிறாள் இவள்?' என்று கொதித்து கொண்டிருந்தான்.

அவனின் கோபத்திற்கு மருந்தாக அமைந்தது அவளின் குரலில் வந்த கானம்.

"குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா ....

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா ...

........................................................................

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா ....."என்று கண்களை மூடி மனமுருகி பாடினாள்.

அவளின் இனிமையான குரலில் சர்வதா தூங்கிவிட அவளை நன்றாக கிடத்திவிட்டு அவள் எழுந்து வெளியே வந்தாள்.

இன்னும் கண்களை மூடி சுவரில் சாய்ந்தபடி நின்றிருக்க, அவனை கண்டவள் எதுவும் பேசாமல் வெளியேற கதவை திறந்தாள்.

"ஒரு நிமிஷம்” என்று தடுத்தது அவனின் குரல்...

திரும்பாமல் அப்படியே நின்றாள் அமைதியாக ...

"எதற்காக என் குழந்தையின் மனதில் ஆசையை விதைக்கிறாய்? அந்த பிஞ்சு மனது நீ சொல்வது எல்லாம் நடக்காது என்று தெரியும்பொழுது என்ன பாடுபடும்? நீ யார் என் குழந்தையிடம் இப்படி எல்லாம் பேச?" என்றான் கோபமாக.

"நான் ஒன்றும் உங்களை நெருங்கலை புரிஞ்சுதா உங்களுக்கு? குழந்தையோட ஏக்கத்தை போக்கணும்னு நினைக்கிறன். கொஞ்ச நாளைக்கு.... அவளுக்கு விவரம் தெரியுற வரைக்கும். ப்ளீஸ்! அப்புறம் அவ பக்கத்துல வரவேமாட்டேன்" என்றாள் அவனை சமாளிக்க.

அவள் கூறுவது அவனுக்கு புரிந்தாலும்”நானும் என் குழந்தையின் நல்லதுக்காகவும் உன் நல்லதுக்காகவும் தான் சொல்றேன். இப்பத்துல இருந்தே அவளின் அம்மா இல்லை என்பதை அவள் உணரட்டும் அது பழகிடும். விவரம் தெரிய ஆரம்பிச்சதும் உண்மை தெரிஞ்சா அவளால அதை தாங்கிக்க முடியாது. அதோடு உன் வாழ்க்கையும் தேவை இல்லாம சிக்கல்ல போய் முடியும்.

அதனால தேவை இல்லாத பொய்யான வாக்குகளை கொடுப்பதை நிறுத்திவிடு. முடிந்தால் என் குழந்தையை பார்க்கவராமல் இருப்பது நல்லது" என்றான் அவளை பார்க்காமல்.

"இல்லை என்னால ஒரு குழந்தை கஷ்டப்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது... அதோடு நான் எதுவும் பொய் கூறவில்லை என்ன நடக்க போகிறதோ அதை தான் சொல்கின்றேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.

அவள் கூறியதன் அர்த்தம் புரியவே சில நிமிடம் புரிந்தது அவனுக்கு.

ஆணி அடித்ததை போல் அதே இடத்தில சிலையாய் நின்றான்.
 

New Threads

Top Bottom