Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL மாண்புறு மங்கையே - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
மாண்புறு மங்கை
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்


யே
 
Last edited:

Chithu.h

New member
Messages
5
Reaction score
8
Points
3
மாண்புறு மங்கையே - முன்னோட்டம்

"மேடம் இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இந்த அறைக்குள்ள அடைஞ்சு கிடக்க போறீங்க...?" என்று பின்னே கைகளை கட்டிக் கொண்டு அவளது முகத்தை பார்த்து கேட்டார் சந்திரவதனா. அந்த முகத்தில் என்றும் அவள் காணும் கம்பீரம் இன்றும் குறையாது பிரதிபலிக்க, அவரை ஒரு நொடி இமைக்காது பார்த்தாள் சுடர்.
"ஆசிட் முகத்துல தானே பட்டது. உன் திறமையில இல்லையே... இந்த ஆசிட்டால உன் முகத்தோடு சேர்ந்து உன் திறமையும் வெந்து போயிடல. இன்னும் ஏன் டி இந்த அறைக்குள்ள அடைஞ்சு கிடக்கிற, நான் உன் முகத்தை பார்த்து வேலைப் போட்டு கொடுக்கல, உன் திறமை, உனக்குள்ள இருக்க அந்த திறமையை பார்த்து தான் வேலை கொடுத்தேன்.
இந்த அறைக்குள்ள முடங்கிட்டால் உன் அழகு முகம் திரும்ப வந்திடுமா...?
எப்படி டி மனசு வருது, உன் அப்பா காசுல சாப்பிடவும் உன் அம்மா பணிவிடையில இருக்கவும்.. என் சுடர் அப்படியா, தன் தேவைக்கு தானே பார்க்கிறவளாச்சே இப்படி உட்கார என்ன காரணம். உன் முகத்தை காரணம் சொல்லாதே, உன் திறமை உன் முகத்துல ஒளிந்திடல.
உன்னை போல முகத்துல ஆசிட் பட்ட பெண்கள் வாழலையா...? பெண்களுக்கு தேவை அழகான முகம் இல்ல, பெண்களுக்கு தன்னம்பிக்கையும் திமிரு தான் அழகு அது தான் தேவையும் கூடன்னு சொல்லுவ, உன் திமிரும் தன்னம்பிக்கை எங்க? உன் முகத்தோட போயிருச்சா... ஊருக்கு தான் உன் உபதேசமா உனக்கு இல்லையா...? உன்னை பார்த்து தான் நம்ம கடையில் வேலை செய்ற அத்தனை பெண்களும் தன்னம்பிக்கையோடு வாழ்றாங்க. நீ முடங்கி போய், அதை உடைச்சிடாதே. உன்னை முடக்கி போடுற விஷயத்திலிருந்து வெளிய வா..." என்று அந்த அறையே அதிரும் படி கத்தினார்.
"மேம், என்னால் முடியும் தோணல... இனியும் முன்ன போல தன்னம்பிக்கையோடு வாழ முடியும் நம்பிக்கை இல்லை மேம்..." அமிலத்தால் வெந்திருந்த அவளது வதனத்தில் கண்ணீர் தடம் பதிய இயம்பியவளை கண்டு மேலும் பல்லை கடித்தவர்,
"அப்போ இது நாள் வரைக்கும் உன் முகம் தான் உன் நம்பிக்கையா...? உன் பேச்சுக்களும் செயல்களும் வெறும் வார்த்தைகள் தானா. முட்டாள் முகம் போனால் உன் நம்பிக்கையை இழந்துடுவீயா...?
அழகா இருக்கிற பொண்ணுங்கனால தான் சாதிக்க முடியுமா...? சாதிக்க தேவை முகம் தான் எந்த வள்ளுவரும் சொல்லல. தினமும் உன் கனவை எண்ணி பெருமையா சொல்லுவீயே, அந்தக் கனவையும் சேர்த்து தான் அறைக்குள்ள அடைந்து கிடக்கீயோ...?
நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்... நீ இல்லேன்னா எனக்கு இன்னொருத்தி. உனக்கு எப்படி..? எத்தனை நாட்களுக்கு முடங்க போற... அப்பா காசுல வாழ முடிவு பண்ணிட்டீயோ... சொந்தம்மா கடை வைக்க கூட அப்பாகிட்ட காசு வாங்க கூடாதுன்னு நினைக்கிற ஆள் தான் இப்ப மூணு வேலையும் அவர் காசுல சாப்பிடுறன்னு நியாபகம் இருக்கா...?
இப்போ தான் உன்னை பார்க்க அசிங்கமா இருக்கு"என்றவர் முகம் சுளிப்பத்தைக் கண்டு வெட்கி போனாள் கலைச்சுடர்.
"மேம், அப்படி பார்க்காதீங்க. என்னால அந்தப் பார்வை ஏத்துக்க முடியல..." தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"எனக்கும் கூட உன்னை அப்படி பார்க்க இஷ்டம் இல்லை சுடர். உன் முடிவு என்னை அப்படி பார்க்க வைக்குது. இதற்கு மேல் உன் விருப்பம்..." என்றவர் வெளியே செல்ல, கண்ணடியில் தன் முகத்தை பார்த்து முதல் முறையாக முகம் சுளித்தாள்.

 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom