Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL மாதினி - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Madhu Ravi

New member
Vannangal Writer
Messages
4
Reaction score
3
Points
3
மாதினி டீஸர்...





"என்ன விளையாடுறீங்களா இவ்வளவு நாள் யாரையோ கைக் காட்டி மாப்பிள்ளையினு சொன்னிங்க.. ஆனா இப்போ என்னடான்னா யாருன்னு தெரியாத ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்க.. நோ வே!!!" என்றவள் கோவத்தில் பொறிந்து தள்ளினாள் கண்ணுக்கினியாள்..



கல்யாணம் நின்று விட்டதே கவலையில் இருந்த அவள் தந்தை, இன்று தன் மகளின் கோவத்தை பார்த்ததும் என்ன செய்வதென்றே புரியாமல் கையை பிசைந்துக் கொண்டிருக்கிறார்..



இந்த கல்யாணம் மட்டும் நின்று விட்டால் தன் மகளின் வாழ்வு என்ன ஆகும்...வந்த வரனை விட்டால் இனிமேல் தன் மகள் மணமேடை ஏறுவாளா?..இல்லை இந்த நின்று போன கல்யாணத்தை காரணம் கொண்டு எதாவது..... என்று இனியாளின் தாய் மனது தாறுமாறாக சிந்தித்தது... அடுத்த நொடி அவளை பேச விடாது இனியாளை கையை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு மணப்பெண்ணின் அறைக்குள் சென்று கதவை அடைத்தார்...



நடப்பவை அனைத்தும் கண்ணில் அக்நி கக்க பார்த்துக் கொண்டிருந்த அக்நிதுருவன் அவள் பேசிய பேச்சில் தன் அன்னையை பார்த்து, "இப்போ சந்தோஷமா மாம்!" என்றான்..



"அக்நி.. அந்த பொண்ணு கல்யாணம் நின்ன கவலையில பேசுறா டா..எனக்கு அந்த பொண்ண பத்தி தெரியும் ரொம்ப நல்ல பொண்ணு" என்ற தன் அன்னையை கண்டு "அம்மா!!!" என பல்லை கடித்துக் கொண்டு சீறினான்..



"இங்க பாரு அக்நி.. இந்த அம்மா மேல உனக்கு பாசம் இருந்தா இந்த கல்யாணத்தை நீ பண்ணிக்கணும்..இது என்மேல சத்தியம்" என்றவர் அங்கிருந்த சேர் ஒன்றில் அமர்ந்துக் கொண்டார்...



இதன் பிறகு அவனால் என்ன பேச முடியும்.. அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கும் தன் அன்னையே கூறும்பொழுது...ஆனால் அவனுக்கு இந்த திடீர் திருமனத்தில் விருப்பம் இல்லை..மேலும் இவ்வாறு பேசிய அந்த பெண்ணை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற எண்ணம் அவனுள் ஓடிக் கொண்டே இருந்தது..



பத்து நிமிடம் கழித்து வெளியே வந்த இனியாளின் தாய் தன் கணவர் அருகில் நின்றுக் கொண்டார்...இனியாளின் தந்தை கண்களால் 'என்ன ஆனது' என கேட்க, 'அவள் யோசிக்கிறாள்' என்றார்..




மண்டபமே அடுத்த என்ன நிகழ போகிறது என்று இருந்தது...இனியாளின் தந்தையை பார்த்த அக்நி, " நான் உங்க பொண்ணு கிட்ட ரெண்டு நிமிஷம் பேசணும்' என்று அவள் இருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்தான்..



தன் மகன் நிச்சயம் ஏதோ செய்யப் போகிறான் என்று சுதாரித்தார் அவன் அன்னை காதம்பரி ... உடனே அவர் ஓர் திட்டம் தீட்டி அதனை செயல்படுத்த ஆரமித்தார்..



உள்ளே வந்தவன் கட்டிலில் அமர்ந்திருந்த அவளை பார்த்தான்..அவளோ அவன் வந்ததை ஒரு பொருட்டாகவே மதிக்காது கோவத்தில் அமர்ந்திருந்தாள்...



அவள் முன் வந்து நின்றவன், அவள் முகத்திற்கு நேரே சொடக்கிட்டு அழைக்க, அப்போது தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்...



ஏற்கனவே செம கோவத்தில் இருந்தவள், இவனது இந்த திமிறில் இன்னும் கோவம் அதிகரித்துக் கொண்டே சென்றது..இருந்தும் பொறுமை காத்தாள்...



"இங்க பாரு எனக்கு இந்த கல்யாணத்தில துளி கூட விருப்பம் இல்லை... எனக்குன்னு ஒரு கரியர் இருக்கு...என்னோட கரியருக்கு கல்யாணம் செட்டே ஆகாது...அப்பறம்...." என்று அவன் நிறுத்த, அவனை என்ன என்பது போல பார்த்தாள்...




"எனக்கு ப்ரைன் டியூம்பர் இருக்கு..இன்னும் ஒரு வருஷத்தில செத்துடுவேன்" என்று ஒரு குண்டை தூக்கி போட, கோவம் போய் அதிர்ச்சி கலந்த பார்வையில் அவனை பார்த்தாள்...




அவள் பார்வையை புரிந்ததும் சிறிது மென்மையாக, "ப்ளீஸ் என்னை நீ கல்யாணம் பண்ணி உன்னோட லைப் வேஸ்ட் பண்ணிடாத... எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடு" என்று இரண்டடி எடுத்து வைத்தவன், திரும்பி அவளை பார்த்து விட்டு செல்ல எத்தனிக்க, அவள் "ஒரு நிமிஷம் நில்லுங்க" என்றாள்..



அவன் அதே இடத்தில் நிற்க, "உங்க விருப்பப்படியே இந்த கல்யாணத்தை நிறுத்திடுறேன்" என்றாள்...அதை கேட்டு சிறு புன்னகையுடன் வெளியேறி விட்டான்...



தன் வாழ்நாளை எண்ணி கொண்டிருக்கும் அவனை கண்டதும் ஏனோ அவன் மேல் சிறு பரிவு ஏற்பட்டது இனியாளுக்கு..




வெளியே வந்தவன் தன் அன்னையின் அருகில் அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரமித்தான்... வெளியே வந்த இனியாள் ஏதோ சொல்ல வர, அதற்கு முன் அவள் தந்தை அவளை இடைமறித்து "இனியா ஒரு ரெண்டு நிமிடம் உன்கூட பேசணும்டா" என்றார்..


"சரி ப்பா" என்க, இருவரும் அறைக்குள் சென்று விட, முதலில் அவள் தந்தையே ஆரமித்தார்.. "என்ன முடிவு பண்ணிருக்க இனியா?" அவர் கேட்க



"அப்பா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் ...ஏன்னா அவருக்கு...." என்று கூற வந்தவளை பாதியிலே நிறுத்தியவர், "இனியா அப்பா நீ கேட்டதையெல்லாம் மறுப்பே சொல்லாம செய்தேன்...நீ சொன்ன வார்த்தைக்காக தான் நம்ப தாத்தா ஊருக்கே போனோம்..எல்லாமுமே உனக்கு பிடிச்ச மாதிரி தான் பண்ணேன் ...இந்த ஒரு விஷயத்தில அப்பா சொல்றதை கேளுடா..அந்த பைய தங்கமானவர்டா" என்று கெஞ்சும் குரலில் கூறினார்...



எப்பொழுதும் இந்த நிலையில் தன் தந்தையை அவள் கண்டதில்லை...ஆனால் இன்று என்னிடமே அவர் கெஞ்சிக் கொண்டிருக்கிறாரே என்று வருந்தினாள்...இருந்தும் இந்த திருமணத்தை செய்தாலும் என் வாழ்வு என்ன ஆகி போகும்... வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கும் அவரை திருமணம் செய்தால் என்ன ஆகும்..அதுமட்டுமின்றி அவருக்கு இந்த திருமணத்தில் துளிக் கூட விருப்பம் இல்லையே என்று மனதிற்குள் குழம்பிக் கொண்டிருந்தாள்...

தன் மகள் கல்லென நிற்பதை கண்டு "இனியா நேரம் இல்லைடா... வேணும்னா உன்னோட காலில் கூட விழுகிறேன்" என்று விழ போனவரை அவசர அவசரமாக தடுத்தவள், "அப்பா!!! என்ன பண்றிங்க.. நீங்க போய் என்னோட காலில் விழுக போறீங்க.. என்ன அப்பா" என்று கண்ணீர் விட ஆரமித்தாள்...



"எனக்கு வேற வழி தெரிலடா..இந்த கல்யாணம் நின்னா உன்னோட வாழ்க்கையே வீணா போய்டும்" என்றவரை பார்த்து என்ன சொல்வாள் அவள்..என்றும் இத்தகைய நிலையை கண்டிடாத தன் தந்தை இன்று தன் வாழ்க்கைக்காக தன்னிடமே கெஞ்சிக்கிறாரே அவர் சொல்வதை கேட்பதா!!... இல்லை தன்னை திருமணம் செய்தால் நிச்சயம் உன் வாழ்வு முழுமையடையாது என்று கூறும் அவன் சொல்வதை கேட்பதா!... என்று நினைத்து பார்க்க மண்டையே வெடித்து விடும் போல இருந்தது அவளுக்கு...முடிவு எடுக்க முடியாமல் இருதலைக் கொள்ளியாக தவித்தாள்...









படித்து விட்டு கருத்துகளை தெரிவிக்கவும் நண்பர்களே...😊


 

Madhu Ravi

New member
Vannangal Writer
Messages
4
Reaction score
3
Points
3
மாதினி - 01







புலர்ந்தும் புலராத அந்த காலை வேளையில், ஆதவன் உதிக்க தொடங்குவதை கண்டு சேவல் "கொக்கரக்கோ"!! என ஊரிற்கே கேட்கும் படி கூவத் தொடங்கியது...


சேவல் கூவும் சத்தமே அந்த ஊரின் அலாரமே.... இன்றளவும் கிராமத்தில் சேவல் கூவும் சத்தத்தை வைத்து எழுவதும் சூரியனை வைத்து மணியை கணக்கிடுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது...

அந்த சேவல் கூவிய சத்தத்தில் எந்த ஒரு சலிப்பும் இன்றி கண் விழித்து எழுந்து அமர்ந்தாள் அவள்...

எழுந்ததும் குளியலறைக்குள் புகுந்தவள், அரை மணி நேரத்தில் குளித்து விட்டு அன்றின் மலர் போல் புத்துணர்ச்சி பொங்க தன் தலையை துவட்டியபடி, தன் தாவணியை கண்ணாடியை பார்த்து சரிசெய்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்...


நடு கூடத்தில் அவள் வரவும் அவளது தந்தை, "அம்மாடி நான் வயல் வெளி வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்..உங்க அம்மா சமயல் கட்டுக்குள்ள ஏதோ போட்டு உருட்டிட்டு இருக்கா இப்போ போனா ரெண்டு திட்டு விழுகும்..நீ அவகிட்ட சொல்லிடு" என்றதில் வாயை பொற்றிக் கொண்டு சிரித்தவள், "இருந்தாலும் அம்மாக்கு ரொம்ப பயப்படுறீங்க ப்பா" என்றாள்...

தன் தந்தையை போய் வருமாறு கூறி விட்டு, தன் தலை முடியை துண்டைக் கொண்டு கட்டியவள், கோலப்பொடியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்து சேர்ந்தாள்...

அப்போது எதிர் வீட்டிலிருந்து பாத்திரம் பண்டமெல்லாம் உருட்டும் சத்தம் கேட்க, "மறுபடியும் ஆரமிச்சுட்டா இவள்" என நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டு வாசலை கூட்டி தண்ணீரை தெளிக்க, எதிர் வீட்டிலிருந்து அவள் வயதுடைய ஒருத்தி தூக்கக் கலக்கத்தில் தட்டு தடுமாறி வாசலுக்கு வந்து நீட்டி முறித்தாள்...


"குட் மார்னிங் வசு தண்ணீரை அவள் முகத்தில் தெளித்து விட்டு காலை வணக்கத்தை கூற, அவள் அப்போது தான் கண்ணை திறந்து பார்த்து, "ஹேய் குட் மார்னிங் கண்ணு" என்றாள்...

அதில், "ப்ச் என்ன அப்டி கூப்பிடாதன்னு எத்தனை தடவை உன்கிட்ட சொல்லிருக்கேன்".. கடுப்பில் அவளை பார்த்து முறைக்க,
"சரி சரி புள்ள கோவிச்சுக்காத... குட் மார்னிங் கணுக்கினியாள் போதுமா" என்க,


"அது... சரி என்ன வாசுகி!.. எத்தனை இடத்தில் விழுந்து வாறுன..வீட்டில ஒரே சத்தமா இருந்தது "


"அத ஏன்டி கேக்குற..மேல கிடந்த பாத்திரத்தை எல்லாம் கீழ போட்டு வீட்டையே பரப்பி வெச்சுருக்கு எங்க ஆத்தா...காலையில தூக்க கலக்கத்தில ஒவ்வொரு பத்திரத்திலையும் நாலு இடி வாங்கிட்டு வாங்கிட்டு வரத்துக்குள்ள".. சோக கீதம் வாசிக்க ஆரமித்தாள்...



அதை கேட்டு வாய் விட்டு சிரித்தவள், கோலத்தை போட ஆரமிக்க, எதிரே இருந்த வாசுகியும் தண்ணீரை தெளித்து கோலத்தை போட ஆரமித்தாள்...இருவரும் பேசிக் கொண்டே கோலத்தை போட்டு முடிக்கும் வேளையில் இரு சிறுவர்கள் மிதிவண்டியில் சீறி வந்து இருவர் கோலத்தில் அருகில் நின்றவர்கள், "இனியா அக்கா இந்தாங்க பூசணிப்பூ" என்று குடுக்க, அதை வாங்கிக் கொண்டு "என்னடா இன்னிக்கு கேக்காமலே பூ வருது" எனக் கேட்டாள் புருவத்தை உயர்த்தி..

"அக்கா என்னோட மாமனார் தான் உன்கிட்ட குடுக்க சொல்லி குடுத்தாரு" என்றதும் கணுக்கினியாள் மலங்க மலங்க விழித்தபடி, "உன்னோட மாமனார் யாருடா?..அவரு எதுக்கு என்கிட்ட குடுக்க சொன்னாரு ?" கேட்டாள்..

"அக்கா நான் தானே உன்ன கல்யாணம் பண்ணிக்க போற...அப்போ உங்க அப்பா எனக்கு மாமனார் தானே" அவன் கூறிய நொடி, "எடு விளக்கமாத்த... ஏன்டா முளைச்சு மூணு இலை விடுல..அதுக்குள்ள உனக்கு இனியா கேக்குதோ" என்று வாசுகி கையில் விளக்கமாரை தூக்கிக் கொண்டு நிற்க, அந்த சிறுவனோ "அக்கா இவனும் உனக்கு பூ எடுத்துட்டு வந்துருக்கா" என்றதும் வாசுகி மலங்க மலங்க விழித்தாள்...


அந்த சிறுவன் கூறியதை கேட்டதும் இனியாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை... சிரித்தபடியே அந்த இரண்டு சிறுவர்களையும் வீட்டிற்கு துரத்தி விட்டவள், வாசுகியை பார்க்க, அவளோ "பாத்தியா டி இதெல்லாம் பிஞ்சுயில பழுத்துடுத்துங்க..."


"விடு டி சின்ன பைய தானே...சும்மா உன்ன சீண்டிட்டு போறாங்க டி" என்று கோலப்பொடியை எடுத்துக் கொண்டு "சரி வசு நான் தாத்தா வீடு வரைக்கும் போறேன் நீ வரியா" என்கவும் வாசுகி "இதென்ன கிறுக்கு தனமான கேள்வி..தாத்தா வீட்டுக்கு நான் வராம இருப்பேனா...சரி உங்க அப்பத்தா கிட்ட நல்ல கோழிய அடிச்சு குழம்பு வெக்க சொல்லு..எங்க வீட்டில இன்னிக்கு கத்திரிக்காய் சாம்பாராம்மா...இன்னிக்கு எஸ்கேப் ஆகிடனும்" என்றவளை கண்டு நமட்டு சிரிப்புடன் "சரி வா" என்று தனது இல்லத்திற்குள் சென்றாள் கணுக்கினியாள் ...


காலை உணவை தன் தாயின் கை வண்ணத்தில் ஒரு பிடி பிடித்து விட்டு , ஒரு ஏப்பம் விட, அவள் அம்மா வாயில் கை வைத்துக் கொண்டு "ஆளையே முழுங்கின மாதிரி ஏப்பத்தை பாரு... இப்படியா பட்டிக்காட்டா பஞ்சு மிட்டாயே பார்த்த மாதிரி முழுங்குவ" அவள் அம்மா குறை கூறவும், முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு "அம்மா நாளைக்கு நான் இருக்க மாட்டேன்ல அதான் இன்னிக்கே ஒரு பிடி பிடிக்கிற" என்றாள்


"ஏய் என்னடி காலையில அவசக்குணமா பேசுற"

"அம்மா இல்லாம ம்மா..நாளைக்கு தான் நான் ஊருக்கு போயிடுவேன்ல அத தான் இப்டி சொன்னேன்" என்று இழிக்கவும், "மாடு ஒழுங்கா பேச தெரியுதா உனக்கு" என்று அவள் மண்டையிலே நங்கென கொட்டி விட்டு சென்று விட்டார்...

அவர் கொட்டியதில் "ஹா!!" என முணங்கியவள், உச்சி மண்டியை தேய்த்துக் கொண்டிருக்கையில் அவள் அலைபேசி ஆங்கில பாட்டை பாடிக்கொண்டிருந்தது...

சமையல் கட்டில் இருந்த கணுக்கினியாளின் அன்னை அம்சவேணி வேண்டுமென்றே கரண்டியை கீழ போட்டு, "ஒரு தமிழ் பாட்ட வெச்சா தான் என்னவா...புரியாத பாட்டை வெச்சுருக்க" என்று அவள் அன்னை கேட்டதில், "அம்மா சும்மா இரு ம்மா " என்று போனை எடுத்து காதில் வைத்தவள், "குட் மார்னிங் டி(D)" என்க, மறுபுறம் "குட் மார்னிங் டி... எப்போ ஊருக்கு வரதா உபதேசம்


"சூன் டி..மே பீ இன்னிக்கு நைட் கிளம்பிடுவேன்..டிக்கெட் கூட புக் பண்ணிட்டேன் என்றதும்

"அப்பாடி... சீக்கிரம் வாடி..நீ இல்லாம ஒன்னும் ஓடல" எதிரே கூறியதை கேட்டதும், "போதும் போதும் நைட் கிளம்பி காலையில வரேன்..நீ பாத்து போ.. டேக் கேர் ஆப் யூர் செல்ப் .. என்று போனை வைத்தாள்...


போனை அணைத்து விட்டு நிமிர, அவள் அன்னை கையில் கரண்டியுடன் அவள் எதிரே நின்றுக் கொண்டிருந்தாள்...அதை கண்டு ஒரு நொடி திடுக்கிட்டு போனவள், "அம்மா! ஏன் என்ன அடிக்க போறவ மாதிரி நிக்கிற"

"யாரு கூட இங்கிலிபீஸ்ல பேசிட்டு இருந்த"

"அம்மா தீப்தி தான் போன் பண்ணா...அதுக்கு ஏன் என்ன இப்டி குறுகுறுன்னு பாக்குற.."

"இல்ல டி எனக்கும் நாலு வார்த்தை இங்கிலிபீஸ சொல்லி குடேன்...நானும் நாலு பேர் கிட்ட பேசிட்டு திருவேன்ல" ஆவலுடன் அம்சவேணி கேட்டிட,

"அம்மா அதா அப்பா இருக்கிறாரே அவர் கிட்ட கேட்க வேண்டியது தானே" என்றதற்கு, தோள்பட்டையில் தன் தாடையை இடித்துக் கொண்டு, "அந்த மனுஷ நான் கேட்டவுடனயே சொல்லிட்டு தான் மறுவேலை பாப்பாரு பாரு... சொல்லி குடுக்க இஷ்டம் இல்லையினா போடி" முகத்தை திருப்பிக் கொண்டு அவர் செல்லவும், "ஐயோ அம்மா!" என்று தன் தாயின் பின்னே சென்று பின்னிருந்துக் கட்டிக் கொண்டவள், "தாத்தா வீட்டுக்கு போய்ட்டு வந்து சொல்லி தரேன் புஜ்ஜி ம்மா" என்று தன் தாயின் கன்னத்தில் முத்தமிட்டு மலை இறங்க வைத்து விட்டு, "வரேன் அம்சு" சிட்டாக பறந்து விட்டாள்...


பின்ன அங்கு மட்டும் அவள் நின்றிருந்தால் அவள் அம்சு என்றதும் கரண்டி பறந்து வந்திருக்கும்...


ஓடி வாசல் வரைக்கும் வர, அப்போது அவள் தந்தை சோம சுந்தரமும் உள்ளே வந்தார்...இவள் ஓடி வந்ததை கண்டு, "என்ன கண்ணு ஓடி வர"

"ஒன்னும் இல்ல ப்பா வழக்கம் போல அம்மா கிட்ட கொஞ்சம் விளையாடுனேன்" கண் சிமிட்டி கூறியவளை கண்டு புன்னகைத்தவர், "இங்க வா கண்ணு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று அவள் கை பிடித்து நடுகூடத்தில் இருந்த சோபாவில் அமர வைத்தார்...

"அம்சு" என்றழைத்ததும், கணவரின் குரல் கேட்டு ஓடோடி வந்து விட, சோம சுந்தரம் இனியாவை பார்த்து, "கண்ணு அப்பா உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்டா" என்றதும்
கணுக்கினியாளின் முகம் சற்று அதிர்ச்சியுடன் தன் தந்தையை நோக்கியது...


கல்யாணம் வேண்டாம் என்று கணுக்கினியாள் கூறுவாள் என்று சோம சுந்தரம் நினைத்திருக்க, "கல்யாணமா!! ஏங்க இப்போ என்ன அவளுக்கு வயசாகுதுன்னு நம்ப பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெக்க போறீங்க..அவளே சின்ன குழந்தைங்க" என்ற அம்சவேணியை அப்பாவும் மகளும் பேவென பார்த்துக் கொண்டிருந்தனர்...

"அம்மா வழக்கபடி பார்த்தா அப்பா தான் இந்த வார்த்தைய சொல்லணும் ஆனா இங்க பேச்சும் மாறுது எல்லாமுமே மாறுதே" இனியாள் தலையை சொறிய, சோம சுந்தரமும் ஆம் என்பதை போல தலையை அசைத்தார்..

இருவரையும் பார்த்து முறைத்துக் கொண்டே, "உங்களுக்கு எங்க தெரிய போகுது என்னோட பீலிங்கு" என்று தாடையை தோள்பட்டையில் இடித்துக் கொண்டு சென்று விடவும், தன் அன்னையை ஆச்சரியமாக பார்த்தவள், "அப்பா...அம்மா இங்கிலிஷ் எல்லாம் பேசுறாங்க பாரேன்...எல்லாம் அந்த வசு தான் சொல்லி குடுத்துருப்பாள்... ஆனா அப்பா எனக்கு ஒன்னு மட்டும் புரில... நான் கேள்விப்பட்ட வரைக்கும் வாத்தியார் பொண்ணு தான் மக்கு..ஆனா இங்க வாத்தியார் பொண்டாட்டி மக்கா இருக்கே" என்று தன் தந்தையிடம் சொல்லிய நொடி சமையல் கட்டிலிருந்து கரண்டி பறந்து வந்தது..


"அப்பா நான் கிளம்புறேன் இங்கிருந்தா என்னோட வாய் சும்மா இருக்காது".. கரண்டியை பார்த்துக் கூறி எழுந்தவளை, "நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலியே ம்மா...உனக்கு இஷ்டம் இருந்தா சொல்லு...உன்ன நான் கட்டாயப்படுத்துல" என்றார்..

அதை கேட்டு சிறு புன்னகையுடன் தன் தந்தையின் கையை பிடித்து, "அப்பா நீங்க என்ன பண்ணாலும் நான் சரி தான் சொல்லுவேன்...ஆனா நீங்க என்னோட விருப்பத்தை கேட்டதுனால சொல்றேன்...என்னோட லைப்க்கும் என்னோட பிரச்சினைய புரிஞ்சி ஒருத்தர் என்ன ஏத்துகிட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாங்கனா உங்க சம்மதத்துடன் எந்த மறுப்பும் தெரிவிக்காம கல்யாணம் பண்ணிக்கிறேன் சரியா ப்பா" என்று கூறி விட்டு சென்றாள்..
செல்லும் மகளை சிறு புன்னகையுடன் பார்த்தவருக்கு முகத்தில் சிறு வேதனையும் தெரிந்தது...."எங்களோட கவனக் குறைவால இன்னிக்கு நீ இவ்வளவு பெரிய கஷ்டத்தை அனுபவிக்கிற இனியாள்...அவன் மட்டும் இன்னிக்கு உயிரோட இருந்திருந்தா.." என்று தனக்குள் நினைத்து மருவிக் கொண்டிருந்தவரின் தோளில் கை வைத்து, "நீங்க என்ன நினைச்சு கவலைப்படுறீங்க எனக்கு தெரியும்ங்க எனக்கும் அந்த கவலை போகல..அதனால தான் அவளுக்கு பாக்கிற மாப்பிள்ளை அவளுக்கு ஏத்த மாதிரி இருக்கணும்ங்க அதுல நம்ப எந்த குறையும் வெக்க கூடாது" என்று அம்சவேணி கூறினார்...

ஆனால் இந்த திருமணத்தில் அவள் வாழ்வே கேள்விகுறியாகி போவது இருவருக்கும் தற்போது புரியவில்லை...



வீட்டை விட்டு வெளியே வந்த இனியாள் மெல்ல நடக்க ஆரமித்தாள்... வாசுகி அழைத்து செல்லும் எண்ணம் அவளுக்கு சுத்தமாக மறந்து போயிருக்க, அவள் பால் நடக்க ஆரமித்தாள்...வாசலுக்கு வந்த வாசுகி நடந்து செல்லும் இனியாளை கண்டதும் வேகமாக நடையை செலுத்தி, அவளுடன் நடந்துக் கொண்டே, "ஏன்டி இப்படியா விட்டுட்டு போவ"...மூச்சு வாங்க கேட்டவளை அப்போது தான் பார்த்தாள்...

"ஏய் சாரி டி உன்ன பத்தி மறந்தே போய்ட்டேன்" என்றவள், அவள் கையை பிடித்துக் கொண்டு மீண்டும் நடக்க ஆரமித்தாள்...


சிறிது தூரம் சென்றதும் இனியாள், "வசு உங்க வீட்டில கல்யாணம் பண்ணிக்க சொன்னா நீ ஏன்டி பண்ணிக்க மாட்டேன்னு அடம்பிடிக்கிற"
"அட போடி கல்யாணம் பண்ணா தனியா எங்கேயும் நிம்மதியா போக முடியாது டி...உனக்கே தெரியும் ஸ்கூல் கிராமத்தில..காலேஜ்ஜூம் பக்கத்துல இருக்க ஒரு இத்துப்போன காலேஜ்... எங்கேயாவது வெளியில போலாம்னு பார்த்தா வீட்டுல விட மாட்டிங்கிறாங்க"....என்றவள் இனியாளை தீயென முறைக்க ஆரமித்தாள்...

அவள் முறைப்பதை கண்ட இனியாள், "என்ன ஏன்டி இப்டி முறைக்கிற... "


"பின்ன உன்கிட்ட நான் எத்தனை தடவை கேட்டேன்..நீ மட்டும் நாடு நாடா சுத்திற..என்ன இங்க இருக்க டெல்லிக்கு கூட்டிட்டு போக சொன்னா போலாம் போலாம் சொல்லி இழுத்தடிச்சிட்டு இருக்க" என்று வாசுகி மூக்கு சிவக்க முறைக்கவும், அவளை பார்த்து ஈஈ என இழித்தவள், "என்னடி பண்றது மாசத்தில கிடைக்கிற நாலு நாள் லீவ மொத்தமா எடுத்துட்டு உன்ன பாக்க திருச்சி வந்துடுறேன்... ஒரு நாள் லீவ் போட்டு உன்ன டெல்லிக்கு கூட்டிட்டு போறேன் ப்ரோமிஸ்" என்றவளை பார்த்து சலித்துக் கொண்டு வேக நடை எடுத்தாள்...


ஐந்து நிமிடத்தில் இனியாவின் தாத்தா வீட்டை வந்தடைந்தனர் இருவரும்... உள்ளே நுழையும் போதே வீட்டு வாயிலில் அவ்வளவு கூட்டம் இருக்க, வாசுகி இனியாவின் காதில், "என்னடி உங்க தாத்தா இலவசமா ஏதாவது தருகிறார் போல கூட்டம் அலை மோதுது" என்க, அவளை ஒரு கணம் பார்த்து விட்டு "பேசாம வாடி" என இழுத்துக் கொண்டு கூட்டத்தின் நடுவே புகுந்து முன்னே வந்தனர்...
இனியாவை கண்டதும், "அடடே வாடா இப்போ தான் உங்கள நினைச்சுட்டு இருந்தேன் நீங்களே வந்துட்டீங்க" என இனியாவின் தாத்தா தமிழேந்தி கூறிட,
"தாத்தா என்ன ஆச்சு ஏன் இத்தனை பேர் இங்க இருக்காங்"க அனைவரையும் பார்த்தபடி கேட்டாள்..

"அது ஒன்னுமில்ல தாயி இந்த வருஷம் விளைச்சல் எப்டி இருந்ததுன்னு கேட்டுட்டு இருந்தேன் ம்மா" என்றார்...


"சரி தாத்தா நீங்க பேசிட்டு இருங்க..நான் போய் பாட்டிய பாக்குறேன்" என்று வாசுகியை அழைத்து கொண்டு உள்ளே சென்றார்...

வீடே கமகமக்கும் சமையல் வாசனையால் சூழ்ந்திருக்க வாசுகி மோப்பம் பிடித்து, "இன்னிக்கு செம்ம சாப்பாடு போல இனியா "என்றவள் சமையல் கட்டில் நுழைந்துக் கொண்டாள்...

இவளை திருத்த முடியாது என்று நினைத்துக் கொண்டு அங்கிருக்கும் தன் அறைக்கு வந்தவள் தனது மடிக்கணினியை உயிர்ப்பித்து முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என ஆராய ஆரமித்தாள்...

அச்சமயம் அவள் அலைபேசி ரீங்காரமிட முகப்பு திரையில் ஓம் என்றிருக்க, அதை பார்த்து சிறு புன்னகை அவள் முகத்தில் தவிழ்ந்தது...


போனை எடுத்து காதில் வைத்தவள், "சொல்லு தீப்தி" என்க, மறுபுறம் அழைப்பில் இருந்த தீப்தி எதிரே இருந்த ஓமை பார்த்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்...

"உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை" என்று அவள் காதில் இருந்த போனை வாங்கியவன், "செம்ம இனியா...எங்க நீ கண்டுபிடிக்க மாட்டியோன்னு நான் பயந்தே போய்ட்டேன்"

"ஏன் ஓம் என்ன வெச்சு மறுபடியும் பெட் கட்டுனியா என்ன ?"


"ஈஈ கண்டுப்பிடித்து விட்டாயா இனியாள் "

"பரவால்லயே ஓம் சரியா பேசிறியே...ம்ம்ம் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் ஓம்" என்றவள், "சரி எதுக்கு போன் பண்ணிங்க"

"ஒன்னும் இல்ல இனியா...மேடம் நீ எப்போ வரிங்கன்னு கேட்டாங்க..நானும் சொல்லிட்டேன் பட் தீப்தி தான் இத காரணமா வெச்சு உனக்கு போன் பண்ணிட்டா "

"தீப்தி கிட்ட சொல்லு நான் நாளைக்கு காலையில அவள் கூட இருப்பேன்னு அண்ட் தென் நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் ஒரு சர்ப்ரைஸ் நியூஸ் இருக்கு" என்றவள் போனை அணைத்து விட்டாள்..

அழைப்பு துண்டித்தது கூட தெரியாமல் "இனியா என்ன சர்ப்ரைஸ்... ஹலோ இனியா.. ஹலோ.. ஹலோ.." என ஓம்கர் கத்திக் கொண்டிருக்க, அவன் காதில் இருந்த போனை பிடுங்கி, "அவள் வெச்சு பல நிமிஷம் ஆகிடுச்சு" என்றாள்...

"இனியா நம்பிலுக்கு ஒரு சர்ப்ரைஸ் நியூஸ் வெச்சுருக்கா தீப்தி" என்க, அவனை ஏற இறங்க பார்த்தவள், அவன் தலையில் நங்கென கொட்டி விட்டு, "அது நமக்கு ஓம்கர்" என்றாள்...

ஓம்கர் வடமாநிலத்திலிருந்து படிக்க வந்த இளைஞன்... கல்லூரியில் சேரும் பொழுது தமிழ் துளிகூட தெரியதவனாக இருந்தவன், தீப்தி மற்றும் இனியாவின் நட்பால் தமிழும் வளர்ந்தது மூவரின் நட்பும் வளர்ந்தது...
அன்று முதல் இன்று வரை மூவரும் ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள்...


"சரி விடு தீப்தி... அப்பப்போ தமிழ் கொஞ்சம் கோளாறு ஆகிடுது" என்றவன் கேவலமாக சமாளிக்க, "தமிழ் மட்டுமில்ல உன்னோட மூளையும் அப்பப்போ கோளாறு ஆகிடுது" என்று கேமராவை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்...


மதியம் சாப்பாட்டை வாசுகி ஒரு பிடி பிடித்துக் கொண்டிருக்க, இனியாளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்...அமைதியாக சென்றுக் கொண்டிருந்த விருந்து தமிழேந்தி தன் பேத்தியுடன் "ஏத்தா உங்க அப்பா உன்கிட்ட எதாவது சொன்னனா டா" என ஆரமிக்க, வாசுகி சாப்பிடுவதை விடுத்து பேத்தியையும் தாத்தாவையும் மாறிமாறி பார்க்க ஆரமித்தாள்...

மூவரும் இனியாளை ஆர்வமாக பார்க்க, அவளோ சாதாரணமாக "ம்ம்ம் ஆமா தாத்தா.. எனக்கு அப்பா கல்யாணம் பண்ணி வெக்கறதா சொன்னாரு நானும் ஓகே சொல்லிட்டேன் தாத்தா" என்று சாப்பிடுவதில் நாட்டம் காட்டினாள்..


அவ்வளவு தான் அவள் கூறிய சரி என்பதில் உச்சி குளிர்ந்து போனார் தமிழேந்தி... பிறகு என்ன உடனே அவளுக்கு ஏற்றப்போல் ஒரு பையனை தேடும் பணி ஆரம்பம் ஆனது...உடனே தரகரை அழைத்து விசியத்தை கூற, அடுத்த பத்தாவது நிமிடத்தில் கையில் புகைப்படங்களுடன் அவரும் வந்து நின்றார்.

தன் தாத்தா இவ்வளவு வேகமாக திருமண ஏற்பாட்டில் ஈடுபடுகிறாரா என்று வியந்து போனாள் அவள்... வாசுகி மனதில், "இதுல ஏதாவது நல்ல வெளியூர் பையனா பாத்திட வேண்டியது தான்" என கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள்...

மாப்பிள்ளை புகைப்படங்கள் வரிசையாக அவள் கையில் வந்தது..ஒவ்வொரு புகைப்படத்தையும் உற்று நோக்கி விட்டு கீழே வைத்தாள்... தமிழேந்தியும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க, இறுதியில் அவள் பதில், "தாத்தா யாருமே நல்ல இல்லை" என்றாள்...இதை கேட்டு அவருக்கு சப்பென்று ஆகி விட இருந்தும்

"விடு த்தா வேற போட்டோ இருந்தா உனக்கு அனுப்பி விடுறேன் நீ நல்லா பாத்து முடிவு பண்ணிட்டு சொல்லு" என்றவர் தரகரிடன் "என்னோட பேத்திக்கு ஏத்த மாதிரி நல்ல மாப்பிள்ளையா கொண்டு வா" என கூறி அனுப்பி வைத்தார்..
"சரி தாத்தா நான் கிளம்பிறேன் நைட் ஊருக்கு போகணும்" என்றவள் எழுந்து வாசுகியை அழைக்க, அவளும் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு அவளுடன் சென்றாள்...

"என்னடி முகம் சோகமா இருக்கு என்ன ஆச்சு?" இனியாளின் கேள்வியில் "ஒன்னும் இல்ல டி அதுல எதாவது நல்ல பைய நம்பளுக்கு கிடைப்பான்னு பார்த்த ஆனால் எவனும் என்னோட மேட்ச் ஆகல" என்றவளை அர்த்த பார்வை பார்த்து வைத்தாள்..

அன்று இரவு சென்னை செல்லும் பேருந்திற்காக தந்தையும் மகளும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தனர்..பேருந்து வருவதற்கு நேரம் இருப்பதால் இருவரும் அங்கிருக்கும் ஹோட்டல் ஒன்றில் காபி அருந்திக் கொண்டிருந்தனர்...

"இனியா கண்ணு அடுத்து எதாவது ப்ரோஜெக்ட் கிடைச்சுருக்கா டா" அவள் தந்தை கேட்கவும், "இல்ல ப்பா இன்னும் எந்த ப்ரோஜெக்ட்டும் வரல மே பீ இப்போ போய் ட்ரை பண்ணா கிடைச்சிடும் ப்பா" என்றவள் காபி அருந்தினாள்...


"சரி டா" என்று அவர் அமைதியாகி விட, "அப்பா டைம் ஆச்சு நீங்க கிளம்புங்க பஸ் வந்துருக்கும் நான் கிளம்புறேன்" என அவள் பையை எடுக்கவும், "இரு டா நானும் வரேன்" என்று அவளுடன் சென்றார்...

பேருந்து இருப்பிடத்தை கண்டுபிடித்து இனியாளின் பேருந்தில் ஏறிக் கொள்ள பேருந்து கிளம்பியதும் இனியாவின் தந்தையும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்...



அவளுக்கு தெரியவில்லை இதன் பிறகு அவள் வாழ்க்கை அவளுக்கே தெரியாமல் பல விசயங்களை திணிக்க போகிறது என்று.. வாழ்க்கையின் ஸ்வரஸ்யத்தை முன்னதே அறிந்து விட்டால் வாழ்க்கை வெறுத்துப் போய் விடும் அல்லவா...கடவுள் அவளுக்கான முடிச்சை போட ஆரம்பித்து விட்டார்...



சென்னை இரவு 10 மணி,
அந்த கருமை நிறம் படர்ந்த அகன்ற தார் சாலையின் நடுவே விளக்குகள் பிரகாசித்துக் கொண்டிருந்தது...பத்து மணி என்பதால் வாகனங்களின் போக்குவரத்து மிதமாகவே காணப்பட்டது... அந்த தார் சாலையில் கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது...



அந்த காரினுள் இக்கால இளைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற அவர்களின் கனவு நாயகன் ஒருவன் தன் ஐபோனை பார்த்தபடி பின் சீட்டில் அமர்ந்திருந்தான்...அவன் தான் அக்நிதுருவன்... தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளத்திற்கு சொந்தக்காரன் அவன்... சினிமா துறையில் நாயகனாய் கொடிக் கட்டி பறந்துக் கொண்டிருப்பவன் அக்நிதுருவன்...பெயருக்கு ஏற்றப்போல் அக்நியை போன்றவன், எதிரே நிற்பவரின் கேள்விகளுக்கு தன் அக்நி பார்வையால் பதிலை மொழிப்பான்...



ஐபோனை பார்த்துக் கொண்டிருந்தவனின் போனில் ஒரு அழைப்பு வந்தது...திரையில் அம்மா என்றிருக்க, அதை ஏற்று "யா மாம் சொல்லுங்க" என்றான்..

"அக்நி எங்க இருக்க?.. எப்போ வீட்டுக்கு வருவ?".. அவன் அம்மா கேட்டதில், "மாம் இப்போ தான் ஷூட்டிங் முடிஞ்சது..வீட்டுக்கு தான் போய்ட்டு இருக்கேன்" என்றான்..

"இன்னிக்கு நீ உன்னோட வீட்டுக்கு போக வேண்டாம்..நேரா இங்க வா உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு" என்றவர் அவனது பதிலை கேட்காமல் வைத்து விட்டார்... அவர் சொல்லியதை கேட்டு அர்த்த புன்னகையை உதிர்த்தவன் "எனக்கு தெரியும் மாம் நீங்க எதுக்காக என்ன வர சொல்றிங்கனு" என்று போனை பார்த்து மனதில் நினைத்து கொண்டான்...டிரைவரிடம் "அம்மா வீட்டுக்கு போங்க" என்றவன் மீண்டும் போனில் மூழ்கி போனான்...


வீடும் வந்தது...கார் அந்த அழகான பங்களா கதவை தட்டி வீட்டின் வாசலில் வந்து நின்றது... காரை விட்டு இறங்கியவன், "கார் எடுத்துட்டு வீட்டில விட்டுடுங்க..நாளைக்கு நான் கூப்பிடுறேன் அப்போ வந்து பிக்அப் பண்ணிக்கோங்க" என்று கூறி விட்டு உள்ளே நுழைந்தான்...
அவன் வருவான் என்பதற்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார் அவன் அன்னை காதம்பரி...தன் மகன் வருவதை கண்டதும் எழுந்தவர், "போய் பிரெஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம்" என்க

"அம்மா நான் ஷூட்டிங் ஸ்பாட்லயே சாப்பிட்டு தான் வந்தேன்...என்ன எதுக்காக வர சொன்னிங்க அதை சொல்லுங்க" என்றான் சிறு எரிச்சலுடன்

அதற்கு அவர் கூறினார், "ஏன் உனக்கு தெரியாதா நான் எதுக்காக உன்ன இங்க வர சொன்னேன்" என்றதும்
" ப்ச்! மாம்!!... நான் தான் சொல்லிட்டேனே எனக்கு கல்யாணம் வேண்டாம்..என்னோட லைப்க்கும் மேரேஜ்க்கும் செட் ஆகாது மாம் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க"

"அப்போ கல்யாணம் பண்ணிக்காமலே இருக்க போறியா"

"ஆமா மாம்... ஐ காண்ட் ஹாண்டில் எனி ரிலேஷன்ஷிப்...கல்யாணமே பிரச்சினை தான்" என்றான் எரிச்சலுடன்


"சரி என்னோட கேள்விக்கு பதில் சொல்லு இப்டி படத்தில நடிச்சு பணம் சம்பாதிச்சு வெச்சு நாளைக்கு என்ன பண்ண போற" காதம்பரி கேள்வியில் பேச்சற்று நின்றான்..

"என்ன கண்ணா பதில் இல்லையா உன்கிட்ட... இத்தனை பணத்தையும் சம்பாரிச்சு நாளைக்கு உனக்குன்னு ஒரு வாரிசு இல்லாம குப்பையில போட போறியா உன்னோட உழைப்பினால் வந்த பணத்தை" அவள் கூறுவதை கேட்டு அமைதியாகவே இருந்தான்...

"ஏன்டா கல்யாணம் உனக்கு என்ன பிரச்சனை தர போகுது...ஏன் நான் உங்க அப்பாவ கல்யாணம் பண்ணி உன்ன பெத்துக்கலையா...சந்தோஷமா இல்லையா சொல்லு பாக்கலாம் "


"ப்ச் அம்மா!!..நீ கல்யாணம் பண்ணும் போது அப்பா ஒரு சாதாரண ஆள்...ஆனால் என்ன கல்யாணம் பண்ணிக்க நினைக்கறாவங்க எல்லாம் என்னோட பணத்துக்காகவும் அழகுக்காகவும் தான்...எனக்கு அந்த மாதிரி ரிலேஷன்ஷிப் வேண்டாம் ப்ளீஸ் மாம் அண்டர்ஸ்டாண்ட் மை பீலிங்ஸ்" என்றவன் சோபாவில் அமர்ந்துக் கொள்ள

"இதான் உன்னோட பிரச்சினையா..அம்மா உனக்கு பொண்ணு பாக்குறேன்..அந்த பொண்ணு உனக்கு ஏத்த மாதிரி இருந்தா எந்த வித மறுப்பு சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிறியா" முகத்தில் ஒரு வித எதிர்பார்ப்புடன் அவனை நோக்கி கேட்க, தன் அன்னையின் முகத்தை ஒரு நிமிடம் உற்று கவனித்தவன், "அந்த பொண்ணு ரிலேஷன்ஷிப் மட்டுமில்ல என்னோட கரியருக்கு தகுந்த மாதிரி இருக்கணும் மாம்.. அப்டி ஒரு பொண்ண நீங்க பார்த்தா நான் எந்த மறுப்பும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றான்...

இது போதும் காதம்பரிக்கு...இந்த வார்த்தைக்காக தான் 1 வருடம் காத்துக் கொண்டிருந்தார்...வந்த வரன்கள் அனைத்தும் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தவன், இன்று அதற்கான காரணத்தைக் கண்டறிந்து ஒரு வழியாக இன்று தீர்வுக் கண்டு விட்டார்... இனிமேல் என்ன அக்நிதுருவனுக்கு மணமகள் தேடும் பணி தான்...அக்நிதுருவனுக்கு ஏற்றாற்போல் அக்நிதேவி வருவளா இல்லை குரலிலும் குணத்திலும் இனிமையை கொண்டிருக்கும் இனிமையானவள் வருவளா ....
 
Status
Not open for further replies.
Top Bottom