Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழி மாத முதல் நாள்..!
விடிந்தும் விடியாத கருநீல வானில் பெளர்ணமி நிலா ஒளியைப் பொழிந்து கொண்டிருக்க, அதன் கிரணங்களில் நனைந்த மையிருட்டு அதிகாலை மெல்ல சோம்பல் முறித்து புத்தம் புதிய ஆக்சிஜனை சுவாசிக்க ஆரம்பித்தது..

மெல்லிய பனிப்புகை அந்த தெருவையே நிறைத்திருக்க, பச்சைத் தண்ணீரில் முழுகிய தேகம் மெல்ல நடுங்க.. அரிசிமாவினை இரு விரல்களின் இடையே வழியச் செய்து லாவகமாக பெரும் பெரும் இழைகளாக தெருவாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள் பவித்ரா..

சாணமிட்ட வாசலின் மெல்லிய வாசனை நாசியை நிரப்ப , குளிர் காற்றுடன் அதனையும் சேர்த்து முழுமையாக உள்ளிழுத்து வெளியேற்றினாள்.. உள்ளுக்குள் ஓர் சுகம் பரவுவதை ரசித்தபடி அழகான வளைவுகளுடன் பெரும் கோலத்தால் வீதியை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள்..

நனைந்திருந்த நீண்ட கூந்தல் தாவணியைத் தாண்டி அவளது பின்முதுகில் ஓர் சில்லிப்பை பரவச் செய்திருந்தது.. மை தீட்டாத கருவிழிகள் கோலத்தின் வளைவுகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தது.. பருவ வயதைத் தாண்டி சில வருடங்களே ஆன அவளது தேக வனப்பு பாவாடை தாவணிக்குள் ஒளிந்து கொண்டு பூரித்தது..

அவ்வப்பொழுது மெல்லிய தன் கீழுதடை பற்களுக்கு தீண்டக் கொடுத்து ஈரமாக்கிக் கொண்டிருந்தாள்.. சிரிக்கும் கண்கள் அவளது இதழோரம் விரியும் புன்னகையுடன் போட்டிபோட்டது.. வாழைத் தண்டாய் நீண்ட கைகள் அநாயசமாக இங்கும் அங்கும் ஓடி சம்பங்கி விரல்கள் கோலப்பொடியை சீராக தூவிக் கொண்டிருந்தது.!

மையமாய் பூசணிப்பூவை வைத்து ஓர் சந்தோஷத் திருப்தியுடன் வீட்டின் உள் நுழைந்தாள்..!

சுப்ரபாதம் மெல்லிய ஒலியில் அறையெங்கும் பரவ, சாம்பிராணியின் வாசம் தெய்வீக மணம் கமழச் செய்தது..

"அம்மா.. அம்மா.. நேரமாச்சு.. நான் கோயிலுக்கு போய்ட்டு வரேன்.. சாமி புறப்பாடு ஆயிடும்..." சத்தமிட்டுக் கொண்டே ஏத்திக்கட்டிய பாவாடையை சரிசெய்தபடி கண்ணாடியின் முன்வந்து நின்றாள்.. விரிந்த கூந்தலில் தளர்வான பின்னலிட்டு , நெத்தியின் நடுவே வேர்வையால் நனைந்திருந்த குங்குமப் பொட்டை சரிசெய்து கொண்டாள்...

"பவி... இந்த காபிய அப்பாக்கும் பாட்டிக்கும் குடுத்துட்டு போடி கண்ணு.. அம்மா கிச்சன்ல வேலையா இருக்கேன்... " உள்ளிருந்து குரல் கொடுத்தாள் பங்கஜம்..

"தோ.. வரேன்.. " அவசரமாக கண்ணாடியில் தனை முழுமையாக ஒருமுறை பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் மானைப்போல துள்ளிக் குதித்து ஓடினாள் பவித்ரா...

"அம்மா.. நேரமாச்சு. சீக்கரம் கொடு... பாட்டி எங்க இருக்கா.. குளிச்சிண்டு இருந்தாளே.... அப்பா பூஜ ரூம்லதானே இருக்கார்.. ரெண்டுபேருக்கும் குடு.. குடுத்துட்டு வந்துட்ரேன்..."

தாம்பாளத்தில் இரண்டு டபராக்களுடன் மணமணத்த காபி டம்பளரை அள்ளிக் கொண்டு வேகமாக பாட்டியின் அறைக்குள் நுழைந்தாள்...

"பாட்டி.... பாட்டி.. இந்தா.. காபி.... சாப்ட்டுட்டு அப்பறமா ஜபம் பண்ணு.."

புன்முறுவல் பூக்க அமர்ந்திருந்தாள் பாட்டி சுகுமாரி.... "பவி கண்ணு.. நீயும் ஒருவாய் விட்டுக்கோ.. இந்தா..." அன்புடன் டம்பளரில் ஆவிபறந்த காபியை ஆத்தி கொஞ்சமாய் அவளிடம் நீட்டினாள்..

"ம்ம்ம்.. பாட்டி.. அதுவே கொஞ்சமாத்தான் இருக்கு... நீ குடி.."

"ஒத்தவாய் தான்.. வாங்கிக்கோ கண்ணு..." அவளது வாயில் ஊட்டிவிட்டாள் பாட்டி...

பவித்ராவிற்கு பாட்டி என்றாள் உயிர்.. இருவரும் தோழிகள் வேறு.. தன் அத்தனை சந்தோஷத்தையும் பாட்டியுடன் தான் பகிர்ந்துகொள்வாள்..

"சரி.. சரி... நீ சாப்பிடு... அப்பாக்கு குடுத்துட்டு கோயிலுக்கு போனும்.." பூஜை அறையை நோக்கி ஓடினாள் பவித்ரா..

"அப்பா காபி.. " பூஜையில் மூழ்கிய அப்பாவை பார்த்து மெல்லிய குரலில் கூறியவாரே காபிகோப்பையை ஓரமாக வைத்துவிட்டு திரும்பினாள்..

"அம்மா... கோயில் மணி அடிக்க ஆரம்பிச்சுட்டா.. நான் போயிட்டு வந்துட்ரேன்.. என்ன..."

"காபி ஒருமடக்கு குடுச்சுட்டு போம்மா.. போய்ட்டு வர நாழி ஆயிடும்.."

"வேண்டாமா.... வந்து சாப்பிட்டுக்கறேன்.." கூறியவாரே துளசி மாலையுடன் கிளம்பினாள் பவித்ரா..

ஆங்காங்கே சில பெண்களும் ஆண்களும் பூஜைக் கூடையுடன் நடந்து கொண்டிருக்க, விடிந்தும் விடியாத ரம்யமான காலைப் பொழுதில் இரண்டு தெருக்கள் தாண்டி இருந்த ஆலயத்தை நோக்கி வேகநடையிட்டாள்..

மேளதாளத்துடன் மங்கல ஒலி கேட்க கோயிலின் உள்ளே சலசலத்தது.. செறுப்பணியா காலினை நீரினில் கழுவி புறப்பாடு நடக்கும் இடம் நோக்கி நகர்ந்தாள்..

நீண்ட பிரகாரத்தினைச் சுற்றி கர்ப கிரகத்தின் முன்னால் அமைந்திருக்கும் மண்டபத்தில் நுழைய , பல்லக்கில் உத்சவ மூர்த்தி தாயாருடன் எழுந்தருளிக் கொண்டிருந்தார்.

" ஹப்பா புறப்பாடு இன்னும் ஆகல.." நிம்மதியுடன் கர்பகிரகத்தை நோக்கி விரைந்தாள்.. நின்ற திருக்கோலத்தில் நிமிர்ந்திருந்த திருமாலின் தேஜஸ் தீபங்களின் ஒளியில் மின்னியது..

என்றும் போல் அன்றும் பிரமிப்புடன் பார்த்தவண்ணம் அருகில் சென்று கையில் வைத்திருந்த துளசி மாலையை அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டு கும்பிட்டாள்..

அர்ச்சகர் காட்டிய ஆரத்தியை கண்ணில் ஒற்றிக் கொண்டு பிரசாதமாய் அளித்த சிறுதுளசியை கைகளில் அடக்கிக் கொண்டு வெளிவந்தாள்.

உத்சவமூர்த்தி புறப்பாட்டிற்கு தயாராக இருக்க , சுற்றி நின்ற கூட்டத்தினுள் புகுந்து நின்று கொண்டாள்.

கோவிந்தா... நாராயணா.. வெங்கடரமணா.... கோஷம் எழுப்பிக் கொண்டே நால்வர் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு முன்னேறினர்..

சுற்றி நின்ற கூட்டம் அப்படியே வாசலை நோக்கி திரும்ப.. நடுவில் நின்ற பவித்ரா தடுமாறி ஒரு அடி எடுத்து வைக்கவும்.. அடுத்த அடிஎடுத்து வைப்பதற்குள் தன் முதுகில் தடாலென விழுந்து பாரம் அழுத்த.. ஒரு கை தன் இடுப்பில் பதிவதை உணர்ந்து சுதாரித்து திரும்பி பார்த்தாள் தன் மேல் விழுந்தவனை..

பளீரென வெளிர் நிற நெற்றியில் சாந்து நீண்டிருக்க , கருத்த சுருண்ட முடி முன்னேவிழ , பெரிய கருப்பு கண்கள் எங்கோ பார்த்திருக்க திருத்திய மீசையின் கீழ் அரக்கு நிற இதழ்கள் ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தது.

இவளை ஒருசேர அழுத்தியபடி அவன் முன்னே விழ.. அவனை தள்ளிவிட்டு பக்கவாட்டில் விலகிக் கொண்டாள்..

தன்பக்கம் திரும்பியவனை எரித்து விடுவதுபோல் பவித்ரா பார்க்க, அவன் ஒன்றும் அறியாதவன் போல் கை எடுத்து கும்பிட்டுக் கொண்டிருந்தான்..

பல்லக்கு முன்னே நகர பின்னால் கூட்டமும் ஓட.... விலக்கிக் கொண்டு வெளிவந்தாள் பவித்ரா... அவனும் கூட்டத்தை விலக்கி வெளிவந்து இவளருகில் நிற்க... கடும்கோபம் ஆட்கொண்டது அவளை..

"ஹலோ..... மேனர்ஸ் இல்ல... "

"என்னது.... " அவள் பக்கம் திரும்பியவன் அவள் தனை முறைத்து பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு குழம்பிப் போனான்..

மெல்ல அவனுக்கு மட்டும் கேட்கும்படி உறுமினாள் " உன் பொறுக்கித் தனத்துக்கு இது இடமில்ல... போடா வெளிய.."

அதிர்ச்சி முகத்தில் பரவ அவளையே வெறித்தான்..

" நான் என்ன பண்ணேன்.." கோபம் தலைக்கேறியது அவனுக்கு..

பொறுக்கி.... மெல்ல முனுமுனுத்தபடி அவள் செல்ல..

என்ன நடந்தது.. எதற்கு அவள் இத்தனை கோபப்படுகிறாள் எனப் புரியாமல் விழித்தான்..

பின்னால் திரும்பியவள் " இனிமே இந்த மாதிரி பப்ளிக் ப்ளேஸ்ல மிஸ்பிஹேவ் பண்ண அப்பறம் அவ்வளவு தான்... பீ கேர்ஃபுல்... திஸ் இஸ் ஃபர்ஸ்ட் அன்டு லாஸ்ட் வார்னிங்..."

அவனது பதிலை எதிர்பாராது விடுவிடுவென அவள் நடந்து செல்ல அவளை வைத்தகண் வாங்காது ஸ்தம்பித்து நின்றிருந்தான் அவன்..

அவன் ரிஷிகேஷ்...

"ரிஷி... ரிஷி... எங்க போன.. வா போலாம்.. நேரமாச்சு.." அவன் அம்மா சுந்தரவல்லி அவனை இழுத்துக் கொண்டு நடக்க... திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டு சென்றான்..!

இடையினை பிடித்த அவனது வன்கரங்களின் அழுத்தமான ஸ்பரிசம் வீடு செல்லும் வரை ஒட்டிக் கொண்டே வந்தது அவளுக்கு...

யோசனையுடனும் கோபத்துடனும் வேகமாக வந்தவள் வாசலின் தாழ்வாரத்தை கவனிக்காமல் பட்டென ஓட்டுக் கூரையில் தலையை இடித்துக் கொண்டாள்.... ஸ்ஸ்ஸ்ஆஆஆ.... தலையை தேய்த்துக் கொண்டே வேகமாக பாட்டியின் அறைக்குள் நுழைந்து ஓரமாக அமர்ந்து கொண்டாள்..

"என்னம்மா... கோயிலுக்கு போயிட்டு வந்துட்டியா.."

"ம்ம்ம்.... இந்தா துளசி..." பாட்டியிடம் பிரசாதத்தை நீட்டிவிட்டு அமைதியாக ஓரமாக அமர்ந்து தலையை குனிந்து கொண்டாள்..

தள்ளாடியபடி அருகில் வந்தமர்ந்து அவளது தலையை மெல்ல வருடினாள் பாட்டி...

"என்னாச்சு குழந்தைக்கு... ஒருமாதிரியா இருக்கியே.. எப்பவும் கோயிலுக்கு போய்ட்டு வந்தா சந்தோஷமா துள்ளிண்டு இருப்ப.. ம்ம்ம்...."

"ஒன்னுமில்ல பாட்டி... லேசா தலவலிக்குது..."

மெல்லிய புன்னகை பாட்டியின் வரியேறிய இதழில் ஓடியது... " பவி... ஒன்னப்பத்தி நேக்கு தெரியாதா.. ம்ம்ம்... பாட்டிட்ட நீ தான் எதுவும் மறைக்கமாட்டியே... என்ன நடந்தது சொல்லு.."

ஹூம்..... பெருமூச்சுடன் பாட்டியின் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்..

"பாட்டி.... கோயிலுக்கு போனேனா.. அங்க ஒரே கூட்டம்.. அங்க ஒருத்தன் என்ன.. என்ன பின்னடிலேந்து கட்டிபுடுச்சுட்டான் பாட்டி... தள்ளி விட்டுட்டேன்.. பாக்க நல்ல லட்சணமா நல்லவன் மாதிரி நின்னுன்டு இருந்தான். ஆனா, வொர்ஸ்ட் ஃபெல்லோ... எனக்கு படபடன்னு வந்துடுச்சு... நல்லா நறுக்குனு நாலு வார்த்த கேட்டுட்டு வந்துட்டேன்..."

"கூட்டம் ஜாஸ்தினியே... கூட்டம் தள்ளினதுனால உன்மேல விழுந்துட்டானோ என்னவோ... சரியா கவனிச்சியா..." பாட்டி நிதானமாய் சந்தேகத்தை எழுப்ப..

அவளையே உற்றுப் பார்த்தாள் பவி.. அப்படியாக இருக்குமோ என ஒரு ஐயம் வினாடியில் மின்னல் போல் வெட்டியது...

"சே.. சே... அவன் வேணும்னே தான் பாட்டி பண்ணிருக்கான்.. இந்த காலத்ல பசங்க அப்டித்தான் இருக்காங்க.. பஸ்ல போனா இடிக்கறது.. மேல கை வைக்கறது.. இன்டீசன்ட்.. உனக்கு எங்க தெரியும்.. என் பிரண்ட் புவனாவுக்கு இப்டிதான் , பஸ்ல ஒருத்தன் ரொம்ப க்ளோசா வந்து நின்னுருக்கான்.. அவ பயந்து விலகி போயிருக்கா.. அப்பவும் அவன் பக்கத்துலயே வந்து நின்னுன்டு இருந்துருக்கான்.. பாவம்.. அவ என்கிட்ட சொல்லிருக்கா.."

"ஹாஹா... பவி... சில பேர் அப்டி பண்றதால எல்லாரும் அப்டிதான் இருப்பாளா... சொல்லு... சரி போகட்டும்... அத மறந்துடு... இனிமே ஜாக்ரதையா போயிட்டுவா.. என்ன.. சரி.. டைம் ஆச்சு.. காலேஜூக்கு கெளம்பனுமே.. போ... போ.. "

ம்ம்ம்.... சரி.... கொஞ்சமாய் மனம் குழம்பியபடி காலேஜிற்கு கிளம்ப ஆயத்தமானாள் பவித்ரா... உள்ளுக்குள் ஏனோ அவன்மீது ஓர் வெறுப்பு பரவி இருந்தது..!

இங்கு....

ரிஷி பெரும் குழப்பத்தோடு நடந்து கொண்டிருந்தான்.. இப்படி திடீர் தாக்குதலை அவன் இதுவரை எந்த பெண்ணிடமும் பெற்றதில்லை.. அவள் சொன்ன வார்த்தைகள் காதில் திரும்ப திரும்ப கேட்க ஓர் வெறுப்பும் கோபமும் பரவ முகம் சிவந்தது.. " பெரிய இவ... "

"என்ன ரிஷி... மூட்அவுட் ஆன மாதிரி இருக்க.. என்ன ஆச்சு.. " அம்மா கேட்க , ஒன்றும் இல்லையென தலையாட்டினான்..

"ரிஷி.. இது மார்கழி மாசம்.. ஆண்டாள் கண்ணன நினச்சு அவன வழிபட்டமாசம்.. மாதத்தில் நான் மார்கழினு கீதைல கண்ணன் சொன்னமாதிரி அவனோட மாசத்துலயே அவனையே நெனச்சு முப்பது நாலும் திருப்பாவை உருகி உருகி பாடிருக்கா.. சோ.. நீ மிஸ் பண்ணாம இந்த மாசம் முழுக்க விடிகாலைல எழுந்திருச்சு கோயிலுக்கு வந்தா வேண்டினதெல்லாம் நடக்கும்.. சரியா..."

"அம்மா.. டெய்லி அஞ்சுமணிக்கு எந்திருக்கனுமா... மா... ப்ளீஸ்... ஏதோ நீ கூப்பிடியேன்னு இன்னிக்கு வந்தேன்.. டெய்லிலாம் முடியாதுமா.. ப்ளீஸ் என்ன விட்ரு... சாயங்காலம் ரிலாக்ஸா வந்து பாத்துக்கறேன்.."

"டேய் கண்ணா.. சின்ன குழந்தை மாதிரி அடம்புடிக்கறியே..விடியக் காலைல எந்திருச்சு இப்டி சுத்தமான காத்த சுவாசிச்சா உடம்புக்கு எவ்ளோ நல்லது தெரியுமா.. மூளை சுறுசுறுப்பா இருக்கும்.. சோ.. இந்த மாசம் முழுக்க நீ சீக்கரம் எழுந்திச்சு குழுச்சுட்டு கோயிலுக்கு போற.. அப்பறம் உன்னோட லைஃப் எப்டி மாறப்போகுதுன்னு பாரு.." சிரித்தபடி சுந்தரவல்லி கூற கண்ணெதிரே பவித்ராவின் முகம் தோன்றி எரிச்சலூட்டியது...

மறுநாள்..

காதைப் பிளக்கும் ஒலியுடன் அலறியது மொபைல்...

படக்கென கண்விழித்தவன் சிவந்த கண்களை கசக்கியபடி எழுந்துப் பார்த்தான்.. மணி ஐந்து..

"சே..... அம்மாவோட பெரிய தொல்லை.." அலாரத்தை அணைத்துவிட்டு போர்வையை முழுவதுமாய் மூடியபடி அதன் கதகதப்பில் மயங்கினான் ரிஷி..

சிறிது நேரம் போக.. போர்வையை யாரோ இழுப்பதை உணர்ந்து விலக்கிப் பார்த்தான்.. சுந்தர வல்லி புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள்...

குட்மார்னிங் ரிஷி...

அம்மாவை சிறிது எரிச்சலுடன் பார்த்தபடியே எழுந்தான்...

"அம்மா... " சினுங்கினான்..

"கிளம்பு கிளம்பு... டைம் ஆச்சு.. கோயில்ல புறப்பாடு ஆரம்பிச்சுடும்... வந்து தலைக்குமேல வேல இருக்கு..."

ஹூம்... அலுப்புடன் எழுந்து பாத்ரூமிற்குள் நுழைந்தான்..!

அலங்கார விளக்குகள் கோபுரமெங்கும் மினுமினுக்க பூக்கூடையுடன் உள்ளே நுழைந்தனர் இருவரும்..

காலை புத்துணர்ச்சியில் மனம் சுகித்தாலும் ஓரத்தில் ஏனோ இனமறியா கோபம் தங்கியிருந்தது..
பிரகாரத்தை சுற்றுவிட்டு பல்லக்கு மண்டபத்தில் நுழைந்தனர் இருவரும்..
அனிச்சயாக கண்கள் இங்கும் அங்கும்
உருண்டோடியது... வண்ண வண்ண பாவாடைத் தாவணியில் நின்ற இளம் பெண்களை அவ்வப் பொழுது ஆராய்ந்தது..

கூட்டத்தின் பின்னால் நின்று கொண்டான் ரிஷி....

"டேய் ரிஷி.... முன்னாடி வா... சாமிய பக்கத்துல பாக்கலாம்.." சுந்தரவல்லி அவனது கைகளை பிடித்துக் கொண்டு கூட்டத்தின் முன்னே இழுத்துச் சென்றாள்.. எங்கே அவள் முன்னால் நிற்பாளோ என மனம் குறுகுறுத்தது..

கண்ணுக்கு எட்டியவரை அவளைக் காணவில்லை... மனதில் ஏற்பட்ட படபடப்பு கொஞ்சம் அடங்கியது..

இங்கே....

"பவி.... பவி... இன்னும் கோயிலுக்கு போலயாம்மா.. நேரம் ஆயுடுத்தே.." அம்மா சமையலறையில் இருந்து கூக்குரலிட்டாள்...

பாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டு அவளது கால்விரல்களில் சொடுக்கெடுத்துக் கொண்டிருந்தாள் பவித்ரா...

"பவிகுட்டி.. அம்மா கூப்படறா பாரு.. கோயிலுக்கு போலயா இன்னிக்கு..."

".........."

"என்னாச்சு.."

"இல்ல பாட்டி... ஏனோ பிடிக்கல.."

"ம்ம்ம்.. நேத்தைக்கு நடந்ததையே மனசுல வெச்சுண்டு இருந்தா எப்டி பவி... நீ பாட்டுக்கு போயிட்டு வா.. ஒன்னும் ஆகாது.."

"ம்ம் ஹூம்.. இல்ல பாட்டி... நாளைக்கு போயிக்கறேன்.." மெள்ள அவளது பாதமாட்டில் தலை சாய்ந்து படுத்துக் கொண்டாள்...

இரண்டு மூன்று நாட்கள் குழப்பத்திலும் சங்கடத்திலும் நகர...

அன்று மாலை....

"ஹலோ.... ரிஷி... அம்மா பேசறேன்.. கோயிலுக்கு வந்தேன் டா... கொஞ்சம் வந்து கூட்டிண்டு போறியா... இருட்டிடுத்து...."

ம்ம் ஓகே... பத்து நிமிஷத்துல வர்ரேன்....


பைக்கில் பறந்து வந்து அந்த கோயிலின் வாசலின் எதிரே நிப்பாட்டினான்.. ஸ்டாண்டை போட்டுவிட்டு திரும்பியவன் ஆச்சர்யக் குழப்பத்துடன் கண்களை விரித்தான்...

அங்கே....

சுந்தரவல்லியின் கூட சிரித்து பேசியபடி வந்து கொண்டிருந்தாள் பவித்ரா.. குழப்பத்துடன் முன்னே நடந்தான்..

எதேச்சியாக நிமிர்ந்து பார்த்த பவித்ராவின் முகம் அதிர்ந்தது.. அவன் தன்னை நோக்கி வர வர உள்ளுக்குள் கலவரம் மூண்டது... மெல்ல சுந்தரவல்லியை ஒட்டி நடக்க ஆரம்பித்தாள்..

"ஹே... ரிஷி... வந்துட்டியா... வா.. ஓகே பவித்ரா... நான் வரேன்மா.." அவளிடம் விடைபெற்று அவனுடன் சுந்தரவல்லி செல்ல குழப்பத்துடன் இருவரையும் பார்த்து நின்றாள் பவித்ரா..

சிறிது தூரம் பேசிக் கொண்டு நடந்த ரிஷி , அம்மாவிடம் ஏதோ கூறிவிட்டு இவளின் அருகில் வந்து நின்றான்...

தடுமாறி பின்வாங்கியவளிடம்.. " இந்த பொறுக்கியோட அம்மாதான் அவங்க... இன்னிக்கு காலைல கோயிலுக்கு வரமுடியல.... ஹூம்ம்ம்..." நக்கலாக கூறிவிட்டு ஓர் புன் சிரிப்புடன் நகர்ந்தான்..

அவள் கண்ணகலாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா..!

தொடரும்..
 

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் திங்கள்..!

அத்யாயம் 2

அவன் செல்வதையே கண்ணகலாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் மெள்ள நடக்க ஆரம்பித்தாள்... திரும்பத் திரும்ப அவன் கூறியது மனதில் ஓடியது.. அவனது அம்மா சாந்தமான சிநேகமான குணத்திற்கு இப்படிப் பட்ட பிள்ளை தவறு செய்வானா என மனம் கொஞ்சம் தடுமாறியது... ஒருவேளை அன்று அவன் தெரியாமல்தான் தன்மீது விழுந்திருப்பானோ.. நான் தான் தவறான நினைத்துவிட்டேனோ.. ஒருவேளை அவன் நல்லவனாக இருந்தால்.... சே... அவன பொறுக்கின்னு நெனச்சுட்டேனே.. இல்ல... அவன் அம்மாக்கு முன்னாடி நடிக்கறானா... சே... சே.... இருக்காது.. நான் தான் தப்பா புருஞ்சுகிட்டேன்.... பாட்டிகூட சொன்னாளே... அச்சச்சோ.. அன்னிக்கு நடந்தத அவன் அம்மாகிட்ட சொல்லிருப்பானா... அவங்க என்ன பத்தி என்ன நெனச்சிருப்பாங்க... ஐயோ.. அவசரத்துல என்னலாம் பேசிட்டேன் அவன்கிட்ட.... " தன்மீதே ஓர் வெறுப்பு வர சிந்தனை அங்கும் இங்கும் அலைபாய்ந்தது...

கோயிலிலிருந்து சிந்தனையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.. ஹாலில் அமர்ந்தபடி அப்பா ஷோஃபாவில் அமர்ந்திருக்க பக்கத்தில் அவள் குட்டி தம்பி ஸ்ரீதர் டீவியை பார்த்துக் கொண்டிருந்தான்.. அம்மா அப்பாவுடன் ஏதோ பேசிக் கொண்டிருக்க யாரையும் சட்டை செய்யாது விடுவிடுவென பாட்டியின் ரூமிற்குள் சென்று ஒரு ஓரமாக அமர்ந்தாள்... முகத்தில் குழப்ப ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தது..

அவள் வேகமாக வந்து அமர்ந்ததையும் அவள் குழப்பத்துடன் இருந்ததையும் கவனித்த பாட்டி பொறுமையாக அவளே கூறட்டும் என அமைதியாக ஜபம் செய்ய ஆரம்பித்தாள்...

சிறிது நேரம் அமைதியாக சென்றது... வெளிஹாலில் அப்பாவும் அம்மாவும் ஏதோ பேசிக் கொண்டிருப்பது கேட்டது.. அதில் கவனம் செலுத்தாமல் மெளனமுடன் அமர்ந்திருந்தாள்... உள்ளுக்குள் ஏனோ சொல்லத் தெரியாத கோபமும் ஆத்திரமும் மூண்டது...

பாட்டி தன்னிடம் கேட்பாள் என அவ்வப் பொழுது பாட்டியை ஓரக் கண்களால் பார்த்தக் கொண்டிருந்தாள்.. பாட்டி கவனிக்காது போகவே... கொஞ்சம் தொண்டையை செறுமினாள்...

மெள்ள தலை நிமிர்ந்த பாட்டி புன்முறுவலுடன் தன் வேலையைத் தொடர்ந்தாள்...

அதற்கு மேல் பொறுமை காக்க முடியாத பவித்ரா எழுந்து பாட்டியின் அருகில் வந்தாள்....

பாட்டி... பா..ட்டி..... நா வந்திருக்கேன்....

அவளை ஏறிட்ட பாட்டி சிரித்தபடி.. " என்னடிமா புதுசா சொல்றே... எந்தூர்லேந்து வந்தே... ம்ம்ம்.. என்ன விஷயம்.. கோவப்படாம சொல்லறியா.. சொல்லு..."

பொத்தென்று அவளருகில் அமர்ந்து பாட்டியின் கைகளை பிடித்துக் கொண்டாள்.. ஆதரவாக அவளது கைகளை பற்றிய பாட்டி தலையாட்டினாள்... ம்ம்.. சொல்லு கண்ணு...

பாட்டி... அன்னைக்கு அந்த பையன பத்தி சொன்னேனே...

யாரு.... யாரப்பத்தி சொன்னே... ஞாபகம் இல்லையே.....

அய்யோ பாட்டி.... அதான்... கோயில்ல ஒருத்தன் என்மேல விழுந்தான்னு சொன்னேனே... அவன்தான்...

ஓ... ஆமா... ஆமா..... இன்னிக்கும் வந்திருந்தானா... ம்ம்ம்... எதாவது சேஷ்டை பண்ணானா... பாட்டி பொறுமையாகக் கேட்டாள்.

இல்ல பாட்டி... கோயில்ல ஒரு மாமிய பார்த்தேன்... வெளக்கேத்தறதுக்கு தீப்பட்டி கேட்டா... கொடுத்தேன்.. ரொம்ப ஸ்நேகமா பேசிட்டு இருந்தாங்க.. ரொம்ப நல்ல மாமி.. சிரிக்க சிரிக்க பேசினா.. ரெண்டு பேரும் பேசின்டே வந்தமா....

அமைதியாக அவள் சொல்வதையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள் பாட்டி...

வெளில வந்து பாத்தா அந்த பையன் என்ன பாத்துண்டு நின்னுண்டு இருந்தான்.. எனக்கு படபடன்னு வந்துருச்சு..

சரி.. அந்த மாமிதான் இருக்காளேன்னு கொஞ்சம் தைர்யமா நின்னுட்டு இருந்தேன்... திடீர்னு பாத்தா அவன் பாட்டுக்கு எங்ககிட்ட வந்துட்டேன்.. எனக்கு கோவமா வந்துருச்சு... ம்ஹூம்.... கடைசில பாத்தா அந்த மாமியோட பையனாம் அவன்.. பெரிய இவனாட்டம் ரொம்ப நல்லவன் மாதிரி என்கிட்ட வந்து பேசிட்டு போனான்..

மென்புன்னகையுடன் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் பாட்டி..

பவித்ரா கொஞ்சம் கோபமானாள்.... பாட்டி... நீ ரொம்ப நல்லவதான்.. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.. ஆனா... சில சமயம் நீ இப்டி அமைதியா நிதானமா இருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கல.. இவ்ளோ சொல்றேன்... அமைதியாவே இருக்கயே.. எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டியா... ம்ம்ம்.. படபடவென கொட்டினாள்.

பாட்டி அப்பொழுதும் அவளைப் பார்த்து சிரித்தாள்..

பவித்ரா ஏதோ கூற வாயைத் திறக்க... ஹாலில் அப்பா அழைக்கும் குரல் கேட்டது..

ப்ச்.... கொஞ்சம் அறையை எட்டி பார்த்துவிட்டு பாட்டியிடம் பேச எத்தனித்தாள்...

பவி.. பவி.... அங்க என்ன பண்றே... அப்பா கூப்படறார் பாரு.. காதுல விழலையா.. பவி.... பவி.. அம்மாவும் சத்தமிட்டாள்...

அம்மா... நீயும் கொஞ்சம் வாயேன்.. உன்கிட்டயும் ஒரு விஷயம் பேசனும்... நடேசன் அழைக்க...

பவி கண்ணு... வா... அப்பா கூப்படறான் பாரு... வந்து நாம பேசிக்கலாம்... முகத்த சாந்தமா வெச்சுண்டு வா.. அவளை அழைத்துக் கொண்டு பாட்டியும் ஹாலுக்கு வந்தாள்..

சோபாவில் அமர்ந்திருந்த அப்பா பங்கஜத்தின் முகத்தை பார்க்க அவள் மெள்ள தலை அசைத்தாள்..

பவியிடம் திரும்பியவர்.." பவி இன்னும் எத்தனை நாளைக்குதான் பாட்டியோடயே பேசின்டு இருப்ப... ம்ம்ம்... " மெள்ள சிரித்தார்...

புரியாமல் பவி பாட்டியை பார்க்க... பாட்டி தன் மகனை பார்க்க.... என்ன ரெண்டு பேரும் முழிக்கறேள்... எல்லாம் சந்தோஷமான விஷயம் தான்... அம்மா இங்கே உக்காரு உன்கிட்ட சில விஷயம் பேச வேண்டிருக்கு.....

அம்மா.. நீ மட்டும் தான் எனக்கு எல்லாம்... உன்முகம் தவிர பெரிசா சொந்தம்னு யாரும் எனக்கு இல்ல.. பாட்டியை பார்த்து நடேசன் கூறினார்...

ஹூம்... சரிடா... சொல்ல வந்தத சொல்லு..

எல்லாமே காலாகலத்தில நடக்கனும்னு பங்கஜம் ப்ரியப்படறா.. அவ சொல்றதும் நியாயம் தானே.. பவிக்கும் வயசு ஏறிண்டே போறது... இத்துணூண்டா பாத்தது.. தத்தகா பித்தகான்னு ஓடிவந்து கட்டிப்பா... இப்போ பாத்தா மாதிரி இருக்கு.. ஹாஹா... திரும்பி பாக்கறதுக்குள்ள வருஷம் தான் எப்படி ஓடறது... அதுக்குள்ள கிடுகிடுன்னு எப்டி வளந்துட்டா பார்.. ஓர் சந்தோஷ பெருமூச்சை சொரிந்தார்..

அதுக்கென்ன நடேசா இப்போ.. பொண் குழந்தைகள்னா அப்படித்தான்.. ஒருவயசுக்கு மேலே கடகடன்னு வளந்துடுவா..

ம்ஹூம்.. அதனாலதான்....

என்ன என்பதுபோல பவியும் பாட்டியும் விழிக்க.. செறுமிக் கொண்டு ஆரம்பித்தார் நடேசன்...

ம்ம்ம்... நம்ம பவி குட்டிக்கு மாப்ள பாக்க ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்மா.. இது சரியான வயசுன்னு நெனைக்கறேன்.. பங்கஜமும் அதத்தான் சொல்றா... நீ என்ன சொல்றே..

பாட்டி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்..

தன்னந்தனியா என்ன வளத்து ஆளாக்கி ஒரு சரியான வேலைல உட்கார வெச்சு எனக்கேத்தா மாதிரி பங்கஜத்த எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சு.... இதுவரை எனக்கு எல்லாமே நீதான்மா பண்ணே.. அதுமாதிரி நம்ம பவிக்கும் நீதான் மா எல்லாத்தையும் நடத்தி வைக்கனும்.... நம்மாத்ல உன்னோட ஒப்புதல் இல்லாம என்ன நடந்திருக்கு.. சொல்லு.. உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நான் நடக்கறேன்... பவி சின்ன பொண்ணு... அவளுக்கு இதெல்லாம் புரியாது... நீதான் அவளுக்கு சொல்லி புரிய வெக்கணும்.. குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுக்கறது பெரியவா கடமைதானே.. எனக்கும் அந்த பொறுப்பு இருக்கில்யா.. அதான்.. என்ன பவி.. சரிதானே.. அப்பா உனக்கு நல்லது தான் பண்ணுவேன்.. தலையை மென்மையாக வருடினார்..

பவித்ரா எதுவும் பேச முடியாமல் மெளனமாயிருந்தாள்..

சுகுமாரி பாட்டியின் முகத்தில் சந்தோஷ புன்னகை விரிந்தது... ஆசையுடன் பேத்தியை திரும்பி பார்த்தாள்.. பவித்ரா முகத்தில் பயமா கோபமா எனத் தெரியாத உணர்ச்சியோடு இருந்தது...

நடேசா..."நம்ம ஆத்து மொத விஷேஷம்... சந்தோஷம்டா... ஆனா.."

ஆனா என்னம்மா...

கடமையை முடிக்கணுனோ, அடுத்தவா சொல்றான்னோ இல்ல ஆர்வத்துலயோ அவசரப்படாம நன்னா விசாரிச்சு... எதுவா இருந்தாலும் வெளிப்படையாக பேசி முடிவு எடுப்பா என்றாள்... அதில் அனுபவமும் அக்கறையும் சேர்த்து இருந்தது..

பவி... பாட்டி சொன்னத கேட்டியோல்லியோ.. எல்லாம் நல்ல படியா நடக்கும்.. உனக்கு மாப்பிள்ளை பார்கற வேலைய ஆரமிக்க போறேன்... என்றார் நடேசன் சிரித்துக் கொண்டே...

அதனால பாட்டியோட நன்னா இப்பவே பேசி கொஞ்சிக்கோ... நீயும் சமத்து பொண்ணு... புத்திசாலி எல்லாம் அனுசரிச்சு நடந்துப்ப... சந்தோஷமா என் வேலைய ஆரமிக்கரேன்..

நடேசா... நடக்கறது நல்லபடியா நடக்கும்.. நீ ஆரம்பிக்கறத ஆரம்பி.. எல்லாம் அவன் முடுச்சு வெப்பான்..

ரொம்ப சந்தோஷம்மா... பங்கஜம் ஒனக்கு சந்தோஷம் தானே.. ஹா.. சரி சரி... கொஞ்சம் வெளில போய்ட்டு வந்துடரேன்.... நம்ம சாம்பு பையன் அமெரிக்கா போறானாம்.. போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துட்ரேன்.. பங்கஜம்... நைட் டிபன் வேண்டாம்... அவாத்ல சாப்ட சொல்லிருக்கா.. போய்ட்டு வந்துட்ரேன்.. நடேசன் கிளம்ப.. பாட்டியும் எழுந்து தன் அறையை நோக்கி நகர்ந்தாள்..

பின்னால் சென்ற பவித்ரா கோபமுடன் பாட்டியின் கையை பிடித்தாள்...

என்ன கண்ணு... என்ன ஆச்சு...

பாட்டி.... அப்பா பாட்டுக்கு ஏதோ நியூஸ் மாதிரி கல்யாணம்னு சாதாரணமா சொல்லிட்டுப் போறார்.. நீயும் தலையதலைய ஆட்டிண்டு வர்ரே.. என்ன பத்தி யாரும் யோசிக்க மாட்டீங்களா... எனக்குன்னு விருப்பம் எதுவும் இருக்ககூடாதா.. மொதல்ல அவர் என்னோட சம்மதத்த தானே கேக்கனும்.. ம்ம்ம்.... இது என் லைப் பத்தினது.. என்கிட்ட சில விஷயம் கேக்கனும்.. சொல்லனும்.. என்னதான் நான் உங்க சொல்பேச்சு கேக்கற பொண்ணா இருந்தாலும் என் ரைட்ஸ்னு இருக்கு.... இது என் லைப்.. நீங்களே எல்லாத்தையும் முடிவெடுத்தா.. சே..... படபடவென பொறிந்து விட்டு வேகமாக அந்த அறையைவிட்டு வெளியேறினாள் பவித்ரா...

அவளையே பார்த்துக் கொண்டிருந்த பாட்டி மெள்ள அமர்ந்தாள்... பழைய நினைவுகள் அலையலையாய் மனதில் ஓட அப்பாவின் குரல் காதுகளில் ஒலித்தது....!

நம்ம சுகுமாரிக்கு வரன் பாத்துட்டேன்.. பையன் கவர்மென்ட் ஆபிஸ்ல கிளர்க் உத்யோகம்.. பார்க்க நன்னா லக்ஷணமா இருக்கான்.. நேக்கு சரின்னு படறது... ஜாதகம் பாத்துட்டு அவாள நேர வரச் சொல்லிடலாம்.. வர்ர தையிலயே கல்யாணத்த முடுச்சுடலாம்.. அவளுக்கும் வயசு ஏறிண்டே போறது.. பதினாறு முடியப் போறது.. எத்தனை நாளைக்கு நம்பாத்லயே வெச்சுண்டு இருக்கறது.. ஹூம்ம்ம்... சலித்துக் கொண்டார்

கூடத்தில் அமர்ந்திருந் சுப்ரமணியன் பொதுப்பட பேசிக் கொண்டிருக்க..

அடுக்களைக்குள் நின்றிருந்த அவர் அம்மாவும் மனைவி ருக்மணியும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...

தலை மொட்டை அடிக்கப்பட்டு காவிபுடவை முட்டாக்கு போட்டிருந்த சுப்ரமணியின் அம்மா வேதவள்ளி , ருக்மணியை குழப்பத்துடன் பார்த்தார். மெல்லிய குரலில்.. " ருக்கு... யாரந்த பையன்... நம்மடவாளா.. சொந்தமா.. அந்நியமான்னு தெரியலையே... கொஞ்சம் விஜாரி அவன்கிட்ட..."

கண்களை விரித்த ருக்மணி.. ஐயயோ நா.. நான் எப்படி கேக்கறது.. கோபப்படுவாரே.. நீங்க கேளுங்கோ...

நானா.. நன்னா சொன்னே போ.. அம்மாவக் கண்டாலே ஆகாது அவனுக்கு.. உன்கிட்டயாவது ஏதோ பாவப்பட்டு ரெண்டு வார்த்தை பேசறான்.. அவன் குணம்தான் நோக்கு தெரியுமே.. இந்தாத்ல அவன் வெச்சது தானே சட்டம்.. ம்ம்.. மெதுவாக் கேளுடி.. வேதவல்லி காதுபடக் கூறினாள்..

எப்படி கேட்பது எனத் தடுமாறியபடி.. " அந்... அந்த பையன் யாரு... அவா பூர்வீகம் என்ன.." மெல்லிய குரலில் ருக்மணி தயங்கி தயங்கி கேட்க..

கோபம் விறுவிறுவென ஏறியது சுப்ரமணியத்துக்கு " யாரு.. என்னன்னு எல்லாம் நேக்கு தெரியும்.. உனக்கெதுக்கு அதெல்லாம்.. உன்கிட்ட சொன்னா நீ என்ன செய்யப்போறே.. அவாத்ல போய் சம்மந்தம் பேசப் போறியா.. பொம்மணாட்டியா போய் அடுப்படி வேலைய மட்டும் பாரு... புரியறதா.. டீடெல் சொல்லனுமாம்... வாய் நீண்டுடுத்து.. அதிகாரமாய் அவளை அடக்கினார்..

உள்அறையில் நின்று கொண்டிருந்த சுகுமாரி மருண்ட விழிகளுடன் தன்அம்மாவின் தோளினை மெள்ளப் பற்றினாள்.. கைகளை மெள்ள பற்றிக் கொண்டாள் ருக்மணி..

சுகுமாரி... அப்பா சொன்னதக் கேட்டேள்யோ... நோக்கு மாப்ள பாத்துட்டார்.. இனிமே ஆத்து வேலையெல்லாம் நீயா பண்ண கத்துக்கனும்.. என்ன.. புக்காத்ல நம்மாத்தபத்தி நல்ல மதிப்பு இருக்கனும்.. அது உன் கைலதான் இருக்கு.. புரியறதா..

ம்ம்ம்... கொஞ்சம் பயத்துடன் எதுவும் கேட்கத் தெரியாமல் தலை அசைத்தாள் சுகுமாரி..

சுகு.... அப்பாக்கு இலைய போடு.. நாழி ஆயுடுத்து.. போ போ... இப்பவே பரிமாற கத்துக்கோ.. நாளைலேந்து புடவை கட்டிக்க பழகணும்.. புருஞ்சதா.. எதித்தாத்து மணி வந்தான்னா அவனன்ட தள்ளியே நின்னு பேசு.. ம்ஹூம்.. அவன்பாட்டுக்கு அடுபங்கரைக்கு வந்து பேசறான்.. நம்மாத்து பையன் தான் , இருந்தாலும் பாக்கறவா தப்பா நெனச்சுப்பா.. அப்பாவபத்திதான் தெரியுமே உனக்கு.. சும்மா இருக்கமாட்டார்.. என்ன புரியறதா... போ... ருக்மணி கண்டிப்புடன் கூறினாள்..

அம்மாவுடன் கூட செல்வதைத் தவிர படிதாண்டாத சுகுமாரி ஏதோ ஓர் பெரும்பொறுப்பை மனதில் ஏற்றிக் கொண்டு தலை அசைத்தாள்..

வாசலில் ஏதோ சத்தம் கேட்டது... மணி உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்..
பாகவதர் ஸ்டைலில் முடியை வளர்த்து காடாதுணியில் தொளதொள பேண்டுடன் ஓர் ஜிப்பாவை அணிந்தபடி வெடவெடவென வளர்ந்து இருந்தான்..

மாமா.... செளக்யமா... பாட்டி எப்டி இருக்கேள்.. கால் வலின்னு சொன்னேளே சரியாயிடுத்தா.... அம்மா பக்ஷணம் பண்ணினா... சுகுமாரிக்கு புடிக்குமேன்னு கொஞ்சம் குடுத்துவிட்டா.. எங்க இருக்கா... சுகு... சுகு... கூப்படிக் கொண்டே உள்ளறைக்குள் நுழைந்தான் மணி..

டேய் மணி நில்லு.. இங்க வாடா... சத்தமாக கூப்பிட்டார் சுப்ரமணி..

கொஞ்சம் குழப்பத்துடன் அவரை ஏறெடுத்தான் மணிகண்டன்... என்ன மாமா...

இங்க பார்... இனிமே சுகுக்கு அத குடுக்கறேன்.. இதக் குடுக்கறேன்னு இந்தாத்துக்கு வரப்டாது... புரியறதா.. அவோ கல்யாண வயசுக்கு வந்துட்டா... அவளுக்கு வரன் பாத்துண்டு இருக்கு.. இங்கவந்து அவளண்ட சிரிச்சு பேசறத பாத்தேன்.. படவா.. பிச்சுடுவேன்... போ.. எது குடுக்கறா இருந்தாலும் உங்காமவயோ தங்கையையோ கொண்டு வரச் சொல்லு.. கெளம்பு.. ம்ம்ம்.. அவர் தடித்த குரலில் சத்தமிட...

வெலவெலத்து போனான் மணிகண்டன்.. "சரி... சரி மாமா.." பயந்த பார்வையுடன் வெளிரி வெளியேறினான் அவன்..

தன்னுடன் ஐந்தாவது வகுப்புவரை படித்த பள்ளித் தோழன் மணிகண்டனை அப்பா திட்டுவதை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த சுகுமாரி பேயறைந்து போய் நின்றாள்...

திடீரென யாரோ தோளைத் தொட்டு உலுக்குவதைக் கண்டு அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள் சுகுமாரி...

பாட்டி..... அம்மா சாப்படக் கூப்படறா... வா... ஸ்ரீதர் தன் கண்ணாடியை ஏத்திக்கொண்டே பாட்டியை இழுத்தான்..

ம்ஹூம்.......... நீண்ட பெருமூச்சுடன் நினைவலைகளிலிருந்து திரும்பிய பாட்டி மெள்ள எழுந்து அவனுடன் நடக்கலானாள்...!


அம்மா.... அம்மா.... எங்க இருக்க... குளிக்கறதுக்கு பாத்ரூம்ல துண்டு வெக்கனும்னு எத்தன தடவ சொல்றது.. பாத்ரூமிலிருந்து கத்தினான் ரிஷி...

ஹப்பா... ஏன்டா கத்ற... அதான் உன்ரூம் கப்போர்ட்லயே இருக்கே... எடுத்துக்க வேண்டியதுதானே... எல்லாத்துக்கும் அம்மா வரனும்.. ம்ஹூம்.. நாளைக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு ஆயுடுத்துன்னா நான் வரமாட்டேன் தெருஞ்சுக்கோ.... வர்ரவ என்னமாதிரி இருப்பான்னு கனவுக் கோட்ட கட்டாத.. இந்த காலத்து பொண்கள் அப்டி இருக்க மாட்டா... நீதான் அவாளுக்கு சேவகம் பண்ணின்டு இருக்கனும்.... ஹாஹா... சின்ன குழந்த மாதிரி இருக்கான்.. எப்பத்தான் பெரிய மனுஷன் ஆகப்போறானோ... வர்ரவ பாடு திண்டாட்டந்தான்.... சமையலறையிலிருந்து சிரித்தபடி பதில் கூறினாள் சுந்தர வல்லி...

எரிச்சலுடன் வெளிவந்தவன் அலமாறியில் இருந்த துண்டை எடுத்துக் கண்டிக் கொண்டான்.. நிலைக் கண்ணாடியில் தன் கட்டுமஸ்தான தேகத்தை பெருமையுடன் பார்த்துக் கொண்டவன் முகத்தில் ஓர் சிறிய புன்னகை இழையோடியது... உடை அணிந்து கொண்டு மெல்லிய வாடையுடன் சென்ட்டை பூசிக் கொண்டு வேகமாக வெளியே வந்தான்..

அம்மா.. அம்மா... டைம் ஆச்சு... டிபன் ரெடியா... டைனிங் டேபிளில் வந்து அமர்ந்து கத்தினான்..

பாத்திரத்துடன் வெளியே வந்தவள் அவனை முறைத்தாள்... " இன்னும் எத்தன நாளைக்குத்தான் என்ன மிரட்டறன்னு பாக்கலாம்... காலாகாலத்ல ஒரு பொண்ண பாத்து உன் தலைல கட்டி வெச்சுடறேன்.. அப்பறம் எனடன பண்றன்னு பாக்கலாம்... ஹாஹா..

மம்மி... யார் வந்தாலும் இந்த ரிஷிக்கு நீ தான் ஃபர்ஸ்ட்.. யூ ஆர் த பெஸ்ட் மாம் இன் த வேர்ல்ட்.. உனக்கு அப்பறம் தான் எல்லாம்... எவ வந்தா என்ன.. டூ ஸ்டெப் பேக் தான்.. நான் சொல்றதத்தான் அவ கேக்கனும்.. இந்த ஃபெமினிஸம் , பெண்ணீயவாதம் பேசிண்டு இருக்கற பைத்தியங்கள என் தலைல கட்டி வெச்சுடாத.. அப்பறம் அவ கதி அதோ கதிதான்...

ஹா..ஹா... அப்படியே உங்க அப்பா மாதிரி பேசற.. வம்சம் மாறுமா.. ஆம்பளைக்கு அழகே கம்பீரம் தான்... ஆனா... கண்ணா.. காலம் மாறிடுத்து.. பொண்கள் இப்போ எல்லாத் துறையிலயும் முன்னேறிண்டு இருக்கா.. ஆணுக்கு சமமா... உன் பாச்சாலாம் பலிக்காது.. கல்யாணம் ஆனப்பறம் உன் பொண்டாட்டி பின்னாடி கைகட்டிண்டு நீ நடக்கப்போறத பாக்கத்தான போறேன்..

நெவர்..... அது ஒருநாளும் நடக்காது அம்மா... எவ்ளோ தான் பெரிய படிப்பு படுச்சாலும் எந்த உயரத்துக்கு போனாலும் பெண் ஒரு ஆணுக்கு கீழதான்.....

ஹா.. இப்டி பேசின ஆம்பளைகள் எத்தன பேர பாத்துருக்கேன்.. ம்ஹூம்.. உனக்கு அடங்கின பொண்ண தேடறதுக்குள்ள எம்பாடு திண்டாட்டந்தான்.. இந்த காலத்து பொண்கள் எங்க அடக்க ஒடுக்கமா இருக்கா.. எல்லாம் தலைகீழ்.. பாக்கலாம் பகவான் வழி விடட்டும்.. ரிஷி கண்ணா.. உனக்கும் வயசாயிண்டே போறது.. இந்த தை வந்த இருபத்தி ஆறு முடியறது.. அப்பாட்ட சொல்லி ஒரு பொண்ணு பாக்க சொல்லவா... என்னாலயும் முடியலடா.. கைவலி.. கால்வலின்னு அப்பப்ப உடல் உபாதை தர்றது.. சரியா..

ம்ம்ம்.... கொஞ்சம் சிந்தனையில் ஆழ்ந்தவன்.. அம்மா..... இப்போ வேண்டாமே... பேச்சுலர் லைஃப கொஞ்சநாள் எஞ்ஜாய் பண்றேனே .. கல்யாணம் ஆயுடுச்சுன்னா... கொண்டாட்டி குழந்தை குட்டின்னு பொறுப்பு கூடிடும்.. ஐ ஹேவ் டு ப்ளான் மை ஃப்யூசர்.. சோ..

இப்போதைக்கு இந்த பேச்ச எடுக்காத ப்ளீஸ்.. கைகளை தட்டிலேயே அலம்பிவிட்டு வாசலை நோக்கி விரைந்தான் ரிஷி...

ம்ம்ஹூம்.. என்ன இப்டி சொல்லிட்டு போறான்.. அவன் அப்பா வரட்டும்... அவர பேசச் சொல்லி ஒரு முடிவெடுக்கனும்.. மனதில் தீர்மானித்துக் கொண்டு அடுத்த வேலையில் ஆழ்ந்தாள் சுந்தரவல்லி..

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
Last edited:

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் திங்கள்.!
அத்யாயம் 3

அந்த பிரம்மாண்ட துணிக்கடையால் அத்தெருவில் எப்பொழுதும் திருவிழாக் கூட்டம் தான்.. இதில் வார இறுதி நாள் ஆஃபர் என இன்னும் கூட்டம்..!

"ஏய் பவி... எரும.. வீட்ல ஏசில ஒரு துக்கத்தப் போட்ருப்பேன்.. இந்த மட்டமத்தியான வெய்யில்ல என்னை அலைய வெச்சு இந்த கூட்டத்துல.. ம்ம்ம்" என அலுத்துக்கொண்டாள் ரம்யா.

நா எருமைனா நீ பொறுமை ரம்மி கண்ணு.. என பவித்ரா நக்கலடிக்க.... ஆமா ரம்மி கும்மி.. ரம்மு பீர்னு என் பேர கொல பண்ணு.... எனக்குன்னு வந்து வாச்ச பாரு ஃபிரண்டுனு.. என லேசாக அவள் கன்னத்தில் இடித்தாள் ரம்யா..

இருவரது ஐந்து வருட கல்லூரி நட்பு வெகு இயல்பாக நெருக்கமான நட்பாக மாறியிருந்தது... பவித்ராவின் ஒரே நட்பும் ரம்யாவுடன் தான்... வெளியில் எங்கு சென்றாலும் அது ரம்யாவுடன் தான்..

சரி வா... காட்டன் டிரெஸ் எல்லாம் தர்டு ஃப்ளோர்ல தான்... வா அங்க போலாம் ரம்மி... பவி அழைக்க...

அய்யயோ.. காட்டன் டிரஸ்ஸ பாத்தா விடமாட்டயே.. தயவு செஞ்சு ரொம்ப நேரம் ஆக்காம சீக்கரம் முடிடி மை ஒட்டகசிவிங்கி..

ஏய்.. ஒத... நான் என்ன அவ்வளவு உயரமாவா இருக்கேன் தலைய நீட்டிக்கிட்டு.. எத்தந்தரவ சொல்லிருக்கேன் பப்ளிக்ல என்ன அப்டி கூப்டாதடின்னு.. ஹூம்.. பொய் கோபம் காட்டினாள்..

ஹா.. ஹா.. பவி கண்ணு நான் என்ன பொய்யாவா சொல்றேன்... இப்டி நெலக்கதவு இடிக்கறமாதிரி வளந்துருக்க... பின்ன எப்படி கூப்படிவாங்களாம்.. சோ... செல்லமா நீ ஒட்டகந்தான்...

ஹேய்.... வளவளன்னு பேசிட்டே இருக்கியே.... உன் வாய் வலிக்காதாடி... மிஸ் ரம்மி...

அது பழகி போச்சுபா.. பேசலேன்னா எனக்கு பைத்தியமே பிடுச்சுடும்.. அதான் கேக்கறதுக்கு நீ இருக்கியே.. மை பெஸ்ட் ஃபிரண்ட்...

போதும் போதும்.. காதுல ரத்தம் வழியறது எனக்குதான தெரியும்.... ஹே தர்டு ஃப்ளோர் வந்திருச்சு.. பேசாம எங்கூடவா.. டிஸ்டர்ப் பண்ணாத...

உத்தரவு மஹாராணி.... போடி.. நா அப்டிதான் பேசிட்டு வருவேன்.... என்ன பண்ணுவ.. ஆ....

வந்து தொல....

இருவரும் அந்த பரந்த குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தனர்.. அந்த அறை முழுவதும் மனிதத் தலைகள்.. தப்பு தப்பு மங்கையர் தலைகள்...!

ஹப்பா.. எவ்ளோ கூட்டம்.. பவிகுட்டி.. நீ சமத்தா உள்ள எல்லாம் சுத்திபாத்துட்டு மெதுவா துணி எடுத்துட்டு வா.. நான் கொஞ்சம் ஏசில ஒக்காந்து தூங்கிக்கறேன்... என்ன.. ரம்யா கூற கடுப்பானாள் பவித்ரா....

ஏய்.. ரம்யா.... வெளையாடாத.. வா... ப்ளீஸ்.. நீதான் நல்லா செலக்ட் பண்ணுவ... வா.. அவளை இழுத்துக் கொண்டு மனிதக் குவியல்களுக்குள் புகுந்தாள் பவித்ரா..

அந்த அறையை சுற்றி சுற்றித் தேடித் தேடி டிசைன் கலர் குவாலிட்டி என ஆராய்ந்து ஆராய்ந்து , இரண்டு மணி நேர தேடலுக்குபின் ஒருவழியாய் இரண்டு பெரிய பைகளை நிறப்பிக் கொண்டு கைவலிக்க இருவரும் கவுண்டர் பக்கம் வந்தனர்.. பில் கவுண்டர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது..

மலைத்துப் பார்த்த இருவரும் அயர்ந்து போயினர்...

ஏய் பவி... என்னடி இது.. திருவிழாவுல நீர்மோர் குடிக்க வந்த கூட்டம் மாதிரி இவ்ளோ கூட்டம் நிக்குது... யப்பா.. என்னால இந்தக் கூட்டதுல நிக்கமுடியாது பா.. நீயே போய் நில்லு... கூறியவாரே அருகில் இருந்த சேரில் பொத்தென அமர்ந்தாள் ரம்யா..

ஹேய் ரம்யா... என்னடி.. இந்த கூட்டத்துல என்ன தனியா கோத்துவிட்டு நீ எஸ்கேப் ஆகபாக்கற...

ஆங்... உனக்குதான டிரெஸ் எடுத்த.. நீயே போய் நில்லு... க்ம்ம்... நம்மளால ஆகாதுப்பா... பேய் கூட்டமா இருக்கு.. எவே நிக்கறது..

ஹே... ரம்மி செல்லம்.. இப்டி பண்ற பாத்தியா... சே... சரி... கொஞ்சநேரம் வெயிட் பண்ணி பாப்போம் கூட்டம் குறையுதான்னு.. உட்காந்து தொல... பவியும் அவளருகில் அமர்ந்தாள்...

அந்த கூட்ட சலசலப்பில் அருகில் ஏதோ பரிச்சயமான குரல் கேட்க திரும்பிப் பார்த்தாள் பவித்ரா...

அம்மா..... என்னாலலாம் அங்கபோய் பில் போட முடியாது.. வெரி சாரி... நீதான் போய் லைன்ல நிக்கனும்... செம்ம லேடிஸ் கூட்டமா இருக்கு...

டேய்.. டேய்... ரிஷி.. என்னால ரொம்ப நேரம் நிக்க முடியாதுடா... ப்ளீஸ்டா.....

ரிஷி அவன் அம்மா சுந்தர வல்லியிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பவித்ராவிற்கு குப்பென்று வியர்த்தது..

எந்த க்ஷணமும் அவர்கள் பார்த்துவிடக்கூடும்.. சுந்தரவல்லியிடம் போய் பேசுவோமா வேண்டாமா என பவித்ரா குழம்பிக் கொண்டிருக்க, வரிசையை நோக்கி வந்த சுந்தரவல்லி எதேச்சியாக பவித்ராவை பார்த்து ஓர் ஆச்சர்ய புன்னகை உதிர்த்தாள்...

ஹே.. பவித்ரா.. நீ எங்க இங்க.. வீக் என்டு ஸ்பெஷலா.. ஹா..ஹா.. ட்ரெஸ் வாங்கிட்டியா....

ஆமாம் ஆன்டி... வாங்கியாச்சு.. பில்தான் போட முடியல.. எவ்ளோ கூட்டம் பாருங்க..

ஆமாமாம்.. என் பையன்கூட அங்க போய் நிக்க முடியாது லேடிஸ் கூட்டமா இருக்குன்னு வந்துட்டான்.. இரு அவன உனக்கு அறிமுகப் படுத்தறேன்.. எனக்கூறிவிட்டு திரும்பி ரிஷியை அழைத்தாள்.


இருவரையும் பார்த்தபடி அருகில் வந்தான் ரிஷி..

பவித்ரா... இது என்னோட பையன் ரிஷி.. மெடிக்கல் லைன்ல ஒர்க் பண்றான்... ரிஷி.. இது பவித்ரா... நம்ம பெருமாள் கோயில்ல பிரண்ட் ஆனோம்.. ஹா..ஹா.. ரொம்ப நல்ல பொண்ணு.. ரொம்ப அமைதி...

அவளைப் பார்த்து ஓர் ஏளனப் புன்னகையை உதிர்த்தவாரே தலையாட்டினான்....

சரி... அம்மா... நான் போய் கியூல நிக்கறேன்.. நீயும் வரியா.. இல்ல லேட்டாகுமா வர...

இருடா.. இவங்களும் அதுக்குதான் வெயிட் பண்றாங்க.. பவித்ரா... நீயும் போறியா... சுந்தர வல்லி கேட்க...

அம்மா... நீயே போய் கியூல நில்லு.. அவங்க வரட்டும்.. ரிஷி சொல்ல அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள் பவித்ரா..

டேய் நீயும்வாடா.... ப்ளீஸ்..

ஹூம்... நான் போய் நிப்பேன்.. ஆனா.. அப்பறம் அங்கேயும் இலவச பட்டம் எனக்கு கெடைக்கும்... அதுதான் யோசிக்கறேன்.... பவித்ராவை பார்த்துக் கொண்டே அமைதியாகச் சொன்னான் ரிஷி.. பவித்ரா கண்களை தாழ்த்திக் கொண்டாள்...

டேய்... என்னடா.. என்னமோ சொல்ற.. ம்ம்ம்... சுந்தரவல்லி முழிக்க..

ரிஷி பவித்ராவை அர்த்தத்துடன் பார்த்திக் கொண்டிருந்தான்... அவளும் ஓர் குற்றவுணர்வுடன் அவனை பார்க்க...

அருகில் இருந்த ரம்யா பவியை லேசாக கிள்ளினாள்... " ஹலோ.. நான் இங்க ஒருத்தி இருக்கேன்.. நியாபகம் இருக்கா.. ம்ம்ம்....

ஸ்ஹாா.... ஹேய்... சாரி டி.. சாரி.... வா.. நாமலும் க்யூல போய் நிக்கலாம்.. ஓகே ஆன்டி அந்த இரண்டாவது வரிசை குறைஞ்சமாதிரி இருக்கு... நாங்க போறோம்.. எனக் கூறியவாரே அவனை நேர் கொண்டு பார்க்க முடியாமல் ரம்யாவை இழுத்துக் கொண்டு அந்த கூட்டத்தில் மறைந்தாள் பவித்ரா.. அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி..

கடையைவிட்டு வெளியில் வந்த பவித்ராவின் முகம் மாறி இருப்பதைக் கண்ட ரம்யா குழப்பமானாள்...

ஏன்டி... முகம் ஒரு மாதிரி இருக்கு... துணியெடுக்க ஜாலியாத் தான வந்த.. அந்த அம்மாவும் நல்லாத்தான பேசினாங்க... திடீர்னு ஏதோ திருடினவ மாதிரி கடையவிட்டு வேகமா வந்துட்ட.. என்னாச்சு பவி...

கொஞ்சம் கண்களை சுழலவிட்ட பவி மெதுவாகப் பேசினாள்... ஒரு விஷயம் இருக்கு ரம்யா... நாம அஞ்சுநாளா பாக்கலேல.... அப்போ.... ம்ம்ம்... இரு சொல்றேன்... ஏதாவது காபி ஷாப் போய் பேசலாம்... எனக் கூறியபடி நடந்தவள் அடுத்த தெருவில் தெரிந்த பிரபல காபி ஷாப்பிற்குள் ரம்யாவை கூட்டிக் கொண்டு நுழைந்தாள்..

என்னவாக இருக்கும் என்ற ஆவல் தாங்காமல் அவளுடன் சென்று அமர்ந்தாள் ரம்யா....

இருவருக்கும் மேல்நாட்டுவகை காபியை ஆடர் செய்துவிட்டு , ஏதோ அவஸ்தையில் நீண்ட பெருமூச்சுவிட்டாள் பவி..

ஏய்... என்னடி ஓவர் ரியாக்ஷன் பண்ற.. என்னனு சொல்லித் தொல... ஆர்வம் தாங்கல... என்ன ஆச்சு... ம்ம்ம்.... சொல்லு..... அவள் அவசரப் படுத்த கையமர்த்தினாள் பவி...

சொல்றேன்.. சொல்றேன்... நாம இப்போ துணிக்கடைல பாத்தோமே.. அந்த அம்மா.. அவங்க பையன்....

ஆமா.... கூர்ந்து கேட்க ஆரம்பித்தாள் ரம்யா...

அவங்க கோயில்ல அறிமுகமானவங்க.. எப்பவும் போல மார்கழி முதல்நாள் கோயிலுக்கு போயிருந்தேனா.. விடிகாலையில... அப்போ கோயில்ல செம்ம கூட்டம்.....

சரி.....

கூட்டத்தோட கூட்டமா எல்லாரும் வேண்டிக்கிட்டு வெளில வந்தமா.. அப்போ... பின்னாடி வந்த இவன் என்மேல சாஞ்சு இடுப்புல நல்லா அழுத்தி கைவெச்சுட்டான்...

அப்பறம்.. என்ன பண்ண... கொஞ்சம் அதிர்ச்சியுடன் ரம்யா கேட்டாள்..

வந்த கோபத்தில.. என்ன பொறுக்கித் தனம் பண்றியான்னு நல்லா நறுக்குன்னு திட்டிவிட்டுட்டேன்.. அவன் ஏதோ சொல்ல வந்தான்.. நா கேர் பண்ணாம விடுவிடுனு வெளில வந்துட்டேன்...

அதிர்ச்சி மாறாமல் ரம்யா அவள் சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்தாள்..

அப்பறம் ரெண்டு மூனுநாள் கோயிலுக்கே போல... என்னமோ மாதிரி இருந்துச்சு... அப்பறம் டூ டேஸ் பேக் ஈவினிங் கோயிலுக்கு போயிருந்தேன்.. அப்போ அந்த அம்மா பழக்கம் ஆனாங்க.. அவங்கள கூட்டிட்டு போக இவன் வந்திருந்தான்.. அப்பதான் தெருஞ்சது இவங்க பிள்ளைனு.. அ... அதான்.. அவன மறுபடியும் பாத்ததும் இப்போ ஒருமாதிரி இருக்கு...

அமைதியானார்கள் இருவரும்.. ஆனால் உள்ளுக்குள் விநாடிக்கு விநாடி பல எண்ணங்கள் ஓடியது பரவக்கு.. உடனே வீட்டுக்கு போயிடவேண்டும் என இருப்பு கொள்ளாமல் தவித்தாள்....

ஏய்.. இதுக்கு போய் ஏண்டி இவ்ளோ கலவரமாற.. அவன் உன் மேல விழுந்தான் நீ அவன திட்டின.. சரிதான.. விடு.. இதுக்குபோய் இவ்ளோ ஒரி ஆவற.. கமான் பவித்ரா.. பீ கூல்...

சாரிடி ரம்மி... நான் வீட்டுக்கு போகனும் வா கெளம்பலாம்... என எழுந்து கொண்டாள் பவித்ரா..

ம்ம்ம்.. சரிவா.. கெளம்பலாம்.. இருவரும் கிளம்பினர்..

என்னடி.... கடையையே அள்ளிண்டு வந்துட்டியா.. ஹாஹா... எத்தன பை கொண்டு வரா பாருங்கோ... சிரித்த படி பங்கஜம் பவித்ராவை வரவேற்க , சுரத்தே இல்லாமல் பைகளை டீபாயில் வைத்துவிட்டு அமர்ந்தாள்...

என்னம்மா... ஒரே காட்டன் டிரஸ்ஸா வாங்கி குவிச்சுட்ட போல.. ஹாஹா.. நன்னாருக்கு.. நன்னாருக்கு... அப்பாவும் தம்பியும் ஆர்வமுடன் அம்மா பிரித்து காட்டியதை பார்த்து சிரித்தனர்..

ஏய் பவி... எனக்கு ஒன்னும் வாங்கலயா.. எல்லாம் உனக்கே வாங்கிட்டு வந்துருக்க.... பாரும்மா இவள.. தம்பி ஸ்ரீதர் தன் கண்ணாடி வழியே அவளை முறைத்தான்..

எல்லோரும் மாறிமாறி பேசிக் கொண்டிருக்க அங்கு இருக்க ஏனோ பிடிக்காமல் தன் அறையை நோக்கி நகர்ந்தாள்.. அருகில் இருந்த அறையில் பாட்டி படுத்திருக்க அவளிடம் செல்ல மனமில்லாமல் தன்அறைக்குள் சென்று தனியாக அமர்ந்து கொண்டாள்..

மனம் ஏனோ குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது.. ரிஷி , நான் திட்டினத அவன் அம்மாட்ட சொல்லிடுவானா.. அந்த அம்மா என்னபத்தி என்ன நெனைப்பாங்க.. சரியான வாயாடி , அடக்கம் இல்லாதவன்னு நெனைப்பாங்கல்ல... சே... பேசாம அவன்கிட்ட ஒரு சாரி சொல்லிடுவோமா... சிறிய குற்றவுணர்வு மேலெழுந்தது..

சாரியா... நா எதுக்கு சொல்லனும்.. திடீரென கோபம் கொப்பளித்தது.. அன்னிக்கு அவன் செஞ்சதுக்கு யாரா இருந்தாலும் அப்படித்தான் பேசிருப்பாங்க.... நானும் அதத்தான் பண்ணேன்... என் மேல என்ன தப்பு இருக்கு... ம்ம்ம்... அன்னிக்கு எப்டி என்மேல விழுந்து என் முதுகுல முழுசா சாஞ்சு என்ன கட்டிப்புடிக்கற மாதிரி என் இடுப்புல கைவெச்சு அழுத்தி........ அதை நினைக்க நினைக்க கோபத்திலிருந்த மனம் ஏனோ சட்டென மாறி கொஞ்சமாய் சலனப்பட ஆரம்பித்தது.. உள்ளுக்குள் இனம்புரியாத உணர்வு ஒன்று கிளர்ந்தெழுந்து முகத்தில் ஓர் சிரிப்பை உண்டு பண்ணியது.. கண்கள் நிலைத்திருக்க அதில் லயித்தவள் வெட்கமும் கூச்சமும் வர மெள்ள தலை கவிழ்ந்தாள்..

அன்னிக்கு நான் நடந்துண்டது தப்புதான்... தெரியாமத் தானே சத்தம் போட்டேன்... அவன் பாட்டுக்கு அவன் அம்மாட்ட சொல்லிட்டான்னா.. எப்படி என்பிள்ளைய சொல்லபோச்சுன்னு சண்டைக்கு வந்துட்டாங்கன்னா... சே.. பேசாமா அவன் அம்மாவோட வரும்போது தனியா பார்த்து சாரி கேட்டுட வேண்டியதுதான்.. அதோட முடுஞ்சுடும்... தேவையில்லாம.. இவ்ளோ சிம்பிளா முடியற விஷயத்த போய் நான் ஏ இவ்ளோ அலட்டிக்கறேன்.. பேசாம இருக்கறத விட்டுட்டு... சே... பவி நீ சிலசமயம் தேவையில்லாம குழம்பற... தன்னைத் தானே திட்டியபடி சிரித்தாள்.. மனம் கொஞ்சம் லேசானது..

பவி... பவித்ரா.... எங்க இருக்க... என் கண்ணாடிய காணமே.. பவி....

பாட்டி அழைக்க நினைவு சட்டென விலகியது பவிக்கு.. எழுந்து பாட்டியின் அறைக்குள் நுழைந்தாள்....

நேராக சென்று அலமாறியில் இருந்த கண்ணாடியை எடுத்து பாட்டியிடம் நீட்டினாள்.... இந்தா... இங்க இருக்கு....

சிரித்துக் கொண்டே வாங்கிய சுகுமாரி , வயசாச்சுல்ல.. அதான்.. எத எங்க வெச்சோம்னு ஞாபகம் வரமாட்டேங்குது.. ம்ஹூம் பழசெல்லாம் அச்சுபதுஞ்ச மாதிரி நல்லா ஞாபகம் இருக்கு.. இப்போ நடக்கறதுதான்.... புன்னகை பூத்தாள்..

பவிமா.. எதோ துணிகடைக்கு போனும்னு சொன்னியே.. போய்ட்டுவந்தாச்சா.. பாட்டிட்ட காட்டவே இல்லியே.. ம்ம்ம்..

வாங்கிட்டேன் பாட்டி... கொஞ்சம் தலவலிக்கறா மாதிரி இருந்தது.. நீயும் படுத்துண்டு இருந்தியா.... அதான்....
தலைவலியா... பட்டபடிக்கற வெயில்ல போகாதேன்னு சொல்றது.. கேக்கறியா... வெடிக்காலைல பச்ச தண்ணில குளிச்சுட்டு ஈரத்தலையோட இருக்கே.... கசாயம் எதும் குடிக்கறியா... அம்மாட்ட சொன்னியா ... சுகுமாரி பேசிக் கொண்டே போக...

அய்யோ... பாட்டி இப்போ இல்ல.. சரியாயிடுத்து... நீ பேச பேசறத கேட்டு தலைவலி வந்துடும் போல இருக்கு... ஹா...ஹா... வாய்விட்டு சிரித்தாள்...

பாட்டியும் நகைத்துக் கொண்டே.. அப்பறம்... யாரோட போனே... உன் சிநேகிதி ரம்யாவோடயா....

ஆமா.... கடைல ஒரே கூட்டம்... கவுண்டர் முன்னாடி எவ்ளோ கூட்டம் நிக்கறது... ஒருவழியா நின்னு வாங்கிண்டு வந்துட்டோம்... அப்பறம்........ என நிறுத்தினாள் பவி...

என்ன என்பது போல பார்த்த பாட்டி " சொல்லு... அப்பறம்..."

அந்த... அந்த மாமி இருக்கால்ல... அவா அங்க வந்திருந்தா....

யாரு.....

அதான்.... கோயிலுக்கு வருவான்னு சொன்னேனே.... அந்த பையனோட அம்மா....

ஓ.. அவாளா..... ம்ம்ம்....

ஆமா... அந்த பையனும் வந்திருந்தான்.. சொல்லிவிட்டு நிறுத்தினாள் பவி...

அவளை ஆராய்ந்தபடி பார்வையை ஓடவிட்டாள் பாட்டி சுகுமாரி...

சிறிது நேரம் போக... எதேச்சியா தான் அவாள பாத்தேன்.. அவங்க ரெண்டுபேரும் துணி எடுக்க வந்தாங்க போல.... கவுண்ட்டர் முன்னாடி நின்னுன்டு இருந்தா... என்ன பாத்ததும் ஓடி வந்துட்டா அந்த மாமி....

ம்ம்ம்...

அங்கு நடந்ததைப் பற்றி சொல்வதா வேண்டாமா என சிறு தடுமாற்றத்துடன்... அப்பறம் பேசிட்டு கிளம்பிட்டாங்க... நாங்களும் வந்துட்டோம்.. புன்னகைத்தாள்...

ம்ம்ம்..... வேறொன்னும் இல்லையே... அர்த்தத்துடன் கேட்டாள்...

அவ்ளோதான்.. வேறென்ன.... சரி பாட்டி ஒனக்கும் எனக்கும் சூடா காபி எடுத்துண்டு வர்ரேன்.... எனக் கூறிக் கொண்டே நழுவினாள் பவித்ரா...

மறுநாள் மாலை....

கோயிலில் கூட்டம் கொஞ்சம் கம்மியாக இருக்க, மெல்லிய குளிர் தென்றலை ரசித்தபடி பிரகாரத்தில் காலாற மெதுவாக சுற்றிவிட்டு வாசல் அருகில் வந்தாள் பவி.. சுவாமியை தரிசித்துவிட்டு சுந்தரவல்லியும் வெளியே வர இருவரும் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்...

மாமி... எப்டி இருக்கீங்க.. ஸ்வாமி சந்நதில உங்கள தேடினேன் காணல.. அதான் பிரகாரத்த சுத்திட்டு கெளம்பினேன்... லேட்டாயிடுத்தா...

ஆமா பவித்ரா... ஆத்ல கெஸ்ட் வந்துட்டா... அவாள கெளப்புவிட்டுட்டு வர நேரம் ஆயிடுத்து..

கண்களை மெதுவாக இங்கும் அங்கும் அலையவிட்டபடியே... உங்க பையன் வரலியா மாமி... மெதுவாகக் கேட்டாள்...

அவனும் டியூட்டிக்கு போய்ட்டான்.... வர்ரதுக்கு நேரம் ஆகும்னான்.. ஏதோ ஆடிட்டாம்... ஹூம்.. அதான் நானே ஆட்டோவ புடுச்சு வந்துட்டேன்....

ஓ அப்படியா... பவியின் முகம் சுறுங்கியது...... மாமி... உங்காம் எங்க இருக்கு... பாவம் ரொம்ப தூரத்லேந்து வரேள் போலவே.. நூல்விட ஆரம்பித்தாள்..

சே... சே..... ரொம்ப தொலவெல்லாம் இல்லை... இங்க தான் இந்திரா நகர்.. ஜஸ்ட் ரெண்டு கிலோமீட்டர்தான்... எங்க போகனும்னாலும் எம்பையன் தான் எப்பவும் கூட்டிண்டு போவான்.. அம்மா மேல அவனுக்கு அலாதி ப்ரியம்... ரொம்ப பொறுமை... ரொம்ப மரியாதை.. பொண்கள்ட முகம் குடுத்து பேச மாட்டான்.. அவ்ளோ சமத்து... தவமா தவமிருந்து கெடச்சவன்... அவன் பத்தி சொல்லனும்னா நேரம் பத்தாது.. இப்டித் தான் நேத்து எதித்தாத்து மாமிக்கு முடிலைன்னதும் ஓட்டமா ஓடி அவாளா ஆஸ்பத்ரில சேத்து... ராவெல்லாம் கண்ண முழுச்சு........ மாமி ராமாயணமாக அளந்து கொண்டே போக... பவியின் முகம் அஷ்டகோணலாய் போனது... வேறுவழியின்றி வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தாள்... மாமி நிறுத்தியபாடாய் இல்லை...!!

மா.. மாமி... நேரமாச்சு... இருட்டிருச்சு.. ஆத்ல தேடுவா.... நா கெளம்பரேனே.... பாவமாய் பார்த்தாள்....

இரும்மா.... என்ன அவசரம்.. போலாம்... வேணும்னா உன்ன ஆட்டோல கொண்டுவிட்டு நான் போறேன்.. இதுல என்ன வந்திருக்கு.. ஒருத்தருக் கொருத்தர் ஒத்தாசையா இல்லாம என்ன வேண்டி கிடக்கு....

அய்யயோ.. அதெல்லாம் வேண்டாம் மாமி.... எங்காம் இங்க பக்கம் தான்... நான் போயிக்கறேன்... மெல்ல நழுவினாள்...

சரி... பவித்ரா.... பாத்து போ... அப்பறம் எங்காத்துக்கு ஒருநாள் வாயேன்... ஆரஅமர பேசலாம்.... ரிஷியும் அவ அப்பாவும் மட்டும் தான்...

இ... இல்ல.. மாமி... பாக்கறேன்..

கூச்சப்படாதடிமா... நம்பாம்தான்... இப்போ ஒருஎட்டு வந்துட்டு காபி சாப்டுட்டு போறியா .. ஒன்ன திரும்ப கொண்டு விட்டுடறேன்....

இல்ல மாமி... அப்பறம் வரேன்....

சரி.... ஞாயித்து கிழமை வா.. அப்பதான் ஆத்ல எல்லாரும் இருப்பா... அவாளுக்கு உன்ன இன்ட்ரோடியூஸ் பண்ணி வெக்கறேன்.. இது தான் என் பிரண்டுன்னுட்டு.... கடகடவென சிரித்தாள்...

ரிஷியிடம் பேச சந்தர்ப்பம் தானாக அமைந்ததை எண்ணி நிம்மதியுடன் அவளிடம் விடைபெற்று நடந்தாள் பவித்ரா... ஞாயிற்று கிழமையை எதிர்பார்த்தபடி... ஆனால்..

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் 4

ஞாயிற்றுக் கிழமை ரிஷியை பார்த்து பேச சந்தர்ப்பம் தானாக அமைந்ததை எண்ணி நிம்மதியுடன் நடந்து கொண்டிருந்த பவியின் எதிரே... வண்டியில் வந்து கொண்டிருந்தான் ரிஷி...

திடீரென அவனைப் பார்த்து மனம் படபடக்க சட்டென பின்னால் திரும்பி பார்த்தாள்.. சுந்தரவல்லி ஆட்டோவில் ஏறிக் கொள்ள வண்டி கிளம்பி விட்டிருந்தது...

மூளை கணநேரத்தில் யோசிக்க , ரிஷி அவளை கடந்து போகும் முன் கைகளை நீட்டி அவனை வேகமாக நிறுத்தினாள்..
சடர்ன் பிரேக் போட்டவன் முகத்தில் விரைப்பான கேள்விக்குறி..!

எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் கொஞ்சம் தயங்கினாள்.. அவன் ஏதாவது கேட்பான் என அவன் முகத்தை பார்த்தாள்... அதில் எந்த சலனமும் இல்லை... என்ன என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்..

"அது.... அது... ஐ யம் சாரிங்க.."

"எதுக்கு..." முகத்தில் எந்த எதிர்வினையும் இல்லை...

"இ.. இல்ல... அன்னிக்கு... உங்கள..... தப்பா நெனச்சு... சாரி... அப்பறம் தான் தெருஞ்சது... அதான்.. உங்கள்ட்ட மன்னிப்பு கேட்கலாம்னு.... ஐ யம் ரியலி சாரிங்க..." அவள் கூறிக் கொண்டிருக்க பதில் ஏதுவும் கூறாமல் அவளை ஏளமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வண்டியை கிளப்பி நகர்ந்தான்..

பவி முகத்தில் அதிர்ச்சி அலைஅலையாய் பாய்ந்தது.. கணநேரத்தில் கோபம் தலைக்கேறியது... "சே... நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேக்கறேனே... காதிலே வாங்காமப் போறான்.. பெரிய இவன்னு நெனப்பு... மேனர்ஸ் இல்லாதவன்.. சே... இவன்ட போய் மன்னிப்பு கேட்டேன் பாரு.. என்னை சொல்லனும்..." அவமானமாய் இருந்தது அவளுக்கு.. சுற்றும் முற்றும் பார்வையை ஒருமுறை ஓடவிட்டாள், யாராவது பார்த்திருப்பார்களோ என..

"சரியான ஈகோ புடுச்சவனா இருப்பான் போல.. திமிரு... போட்டும்... போனா எனக்கென்ன.. நான் பண்ண மிஸ்டேக்கு மன்னிப்பு கேட்டாச்சு... இனி அவனோட எனக்கென்ன பேச்சு.." மனதில் பொறுமியபடி வீட்டை நோக்கி நடந்தாள்.. இருந்தும் உள்ளுக்குள் ஓர் உறுத்தலும் , இயலாமையும் அவளை அலைக்களித்தது..

வீ்ட்டிலும் அதே நிலை தொடர இரண்டுநாள் சுரத்தில்லாம் சென்றது.. மாலை நேரம் மட்டும் தவறாமல் கோயிலுக்கு சென்று வந்தாள்...

தினமும் கோயிலில் சுந்தரவல்லியை பார்க்க வேண்டிய கட்டாயமாகியது.. அவளும் இவளை தன் வீட்டிக்கிற்கு அழைத்து செல்ல பவியை வற்புறுத்திக் கொண்டே இருந்தாள்.. ரிஷி அவன் அம்மாவை அழைத்து போக வருவதை நினைத்து சுந்தரவல்லி கிளம்புமுன்னே அவசர அவசரமாக வீட்டிற்கு வந்துவிடுவாள்..

சனிக் கிழமை மாலை...

"ஹாய்... பவித்ரா..." கோயிலில் நுழையுமுன்னே வாசலில் இவளுக்காய் காத்துக் கொண்டிருந்தாள் சுந்தரவல்லி..

"சொல்லுங்கோ மாமி.. எப்ப வந்தீங்க..."

"ஒரு பத்து நிமிஷம் ஆயிடுத்து.. நீ வருவேன்னு காத்துண்டு இருக்கேன்.. வா, சேர்ந்தே போலாம்.."

"ம்ம்ம்... சரி மாமி..." சுரத்தில்லாமல் அவளுடன் சென்றாள் பவி...

சாமியை கும்பிட்டுவிட்டு பிரகாரத்தில் இருவரும் நடந்து கொண்டிருந்தனர்...

"பவித்ரா.. இந்த சுடிதார் உனக்கு ரொம்ப நன்னா இருக்கு.. புதுசா.. கலரும் சூப்பர்.. என் கண்ணே பட்டுடும் போல.." ஒரு கையால் நெட்டி முறித்தாள்..

"ஆமா மாமி.. அன்னிக்கு துணிக்கடைல பாத்தோமே.. அப்போ எடுத்தது தான்.."

"ஓ... ஆமா.. அன்னிக்கு நிக்காம கொள்ளாம நீ பாட்டுக்கு உன் பிரண்டோட கெளம்பி போய்ட்டியே.. ஹூம்... நானும் ரிஷிய கெஞ்சி கெஞ்சி அவன் லேடீஸ் கூட்டத்துல நிக்கமாட்டேன்னு சொல்லிட்டான்.. அப்பறம் நான் பில் போட்டு வர ஒரு மணி நேரம் ஆச்சு... ஹா..ஹா.." அவள் சொல்ல ரிஷியின் முகம் மெள்ள வந்து போனது பவிக்கு..

"பவித்ரா.. நாளைக்கு சன்டே... ஞாபகம் இருக்குல்ல... கண்டிப்பா நீ எங்க வீட்டுக்கு வரனும்... சரியா... எத்தன மணிக்கு வரே.."

"அய்யோ.... மாமி... நாளைக்கு... நாளைக்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... என்னால வர முடியாது... இன்னொரு நாள் வர்ரேனே.." தடுமாறினாள் பவி...

"உன் வயசு பொண்கள் லேட்டா எழுந்து மொபலை கட்டிண்டே அழற இந்தகாலத்ல நீ இவ்ளோ பக்தி சிரத்தையோட மார்கழி மாசம் நாள் தவறாம தினம் கோயிலுக்கு வர்ரியே.. அது தாண்டிமா எனக்கு புடிச்சிருக்கு உன்ன.. அதான் எங்காத்துக்கும் உன்ன கூப்படறேன்.. "

"சன்டே அப்டி என்ன வேலை இருக்கப் போறது.. சோ.. நாளைக்கு நீ வர.. சும்மா ஆத்த பாத்துட்டு ஒரு ஹாஃபனவர் இருந்துட்டு போ... ஒன்னும் ஆகாது.. காலைல ஒன்பது மணிக்கு இங்க வந்துடு.. இங்கேந்தே போய்டலாம்.. என்ன.."

"இ.. இல்ல.. மாமி.. ஆத்ல கேட்கனும்.."

"ஏன்.. எங்காத்துக்கு போறேன்னு சொன்னா விடமாட்டாளா.. சொல்லு.. நானே வந்து பேசரேன்.. உங்க வீடு எந்த தெருல இருக்கு.. அட்ரஸ் சொல்லு.. நானே வந்து உங்காத்ல பேசி கூட்டிண்டு போறேன்.."

"அய்யயோ.. அதெல்லாம் வேண்டாம் மாமி... உங்களுக்கு எதுக்கு சிரமம்.. ஹூம்.. நானே இங்க வர்ரேன்.."

இருவரும் வெளியே வந்தனர்..

அவன் எதிரே நிற்கிறானா என கண்கள் ஒருமுறை தேடியது... "சரி மாமி.. வர்ரேன்.."

"பத்ரமா போயிட்டுவா.. ரிஷி வந்துடுவான்... நான் வெயிட் பண்றேன்.."

அவளிடம் விடைபெற்று வந்தவள் மனம் அலைபாய்ந்தது... "சே... அவன பாக்க வேண்டாம்னு பாத்தா.. இந்த மாமி விடமாட்டேங்கறாளே.. அவங்க வீட்டுக்கு போனா அவன பாக்கனும்.."

"பெரிய இவன் மாதிரி சீன் வேற காட்டுவான்.. என்ன பண்றது.. என்ன பண்றது.." யோசனையில் ஆழ்ந்தாள்.. இருப்பினும் உள்ளூர ஒரு குறுகுறுப்பு இருந்தது.. "போய் தான் பாப்பமே.. என்ன பண்ணிடப் போறான்.. அவன் அந்தபக்கம் மூஞ்சிய திருப்பிக்கிட்டானா.. நா இந்த பக்கம் திருப்பிக்கறேன்.. அந்த மாமி தானே கம்பல் பண்ணி கூப்படறா... அவாளுக்காக போறேன்.. ஜஸ்ட் ஹாபனவர்... அவ்ளோதான்... கெளம்பிடனும்.." இறுதியாக ஒரு முடிவெடுத்தாள்..

மறுநாள் காலை..

ரோஜாப்பூ நிறத்தில் சின்ன சின்ன வெள்ளை பூக்கள் போட்ட புத்தம் புது காட்டன் புடவையில் பளிச்சென நின்றிருந்தாள் பவித்ரா...

தலையில் சூடிய குண்டு மல்லிச்சரம் மணம் கமழ்ந்தது..

இடது கையில் கட்டி இருந்த கைக் கடிகாரத்தை பார்த்தபடி கோயில் வாசலின் ஓரமாக நின்றிருந்தாள்.. "ஹூம்.. மணி ஒன்பதரை ஆச்சே.. இன்னும் அந்த மாமிய காணலையே.. என்ன ஆச்சு.. பத்து நிமிஷம் பாத்துட்டு கெளம்பிட வேண்டியது தான்.. அப்பாட்ட வேற ரம்யாவோட வெளில போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.. ஹூம்.." சுற்றும் முற்றும் கண்களை அலைய விட்டாள்..

பத்துநிமிடம் கடக்க.. கிளம்பலாம் என நடக்க ஆரம்பித்தாள். பின்னால் இருந்து குரல் கேட்டது.. "பவித்ரா... பவித்ரா.."

திரும்பினாள்..... ரிஷியுடன் வண்டியிலிருந்து இறங்கினாள் சுந்தரவல்லி.. வேகமாக இவளருகில் வந்தாள்..

"சாரி பவித்ரா.. கொஞ்சம் லேட்டாச்சு.. இவன்தான் லேட் பண்ணிட்டான்.. ரிஷியை பார்த்து அலுத்துக் கொண்டாள்.. நான் தனியா ஆட்ல வந்துட்லாம்னு தான் பாத்தேன்.. இவன் எங்கயோ கடைக்கு போனுமாம்.. போறவழில கொண்டு விடறேன்னான்.. அதான்.."

அவனைக் கண்டதும் தலையை தாழ்த்திக் கொண்டாள்..

"சரி... ரிஷி... நீ கடைக்கு போயிட்டு ஆதுக்கு வந்துடு.. நானும் பவித்ராவும் ஆட்டோல போய்க்கறோம்.."

சரி... இவளை சட்டை செய்யது அவன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருப்பது எரிச்சலை தந்தது..

அவன் கிளம்ப இவளை கூட்டிக் கொண்டு ஆட்டோவில் ஏறினாள் சுந்தரவல்லி...

வழியில் தன் வீட்டைப் பற்றியும் தன் மகனைப் பற்றியும் சுந்தரவல்லி ஏதேதோ பேசிக் கொண்டு வந்தாள்..

பெரிய ரோட்டைக் கடந்து ஒரு தெருவில் நுழைந்தது ஆட்டோ.. மேல்மத்தியஸ்தர்கள் வாழும் இடமாக பெரிய பெரிய வீடாக இருபுறமும் வரிசையாக இருந்தது.. ஆங்காங்கே மரங்கள் வளர்ந்து நிழலை பரப்பிக் கொண்டிருந்தது..

தன் வீடு அமைந்தது போல எந்த சலசலப்புமின்றி அமைதியாக இருந்தது அந்த வீதி.. ஆங்காங்கே சிலர் நாய்களை பிடித்துக் கொண்டு நடக்க அந்த வீதியின் இடதுபுறம் திரும்பியது ஆட்டோ.. எல்லா வீடுகளையும் சிறிது பிரமிப்புடன் பார்த்தபடி வந்தாள் பவித்ரா..

"அதோ.. அந்த வீடுதான்.. டிரைவர் அங்க நிப்பாட்டுங்க.." மாமி கைகாட்ட வலப்புறத்தில் இரண்டு வீடுகள் தள்ளியிருந்த வீட்டின் முன் நிப்பாட்டினான்..

"பவித்ரா... வீடு வந்துடுத்து.. வா.. இறங்கு.."

"எவ்வளவுப்பா ஆட்டோக்கு.."

அவன் கூறிய பணத்தை எந்த பேரமும் இல்லாமல் சுந்தரவல்லி எடுத்துக் கொடுத்தது சிறு புன்னகையை பூக்க செய்தது பவிக்கு... தான் அப்படி இல்லை என்பது ஒரு பக்கமாக ஓடியது..

மிகப் பெரிதாக இருந்த கருப்பு கலர் கிரில் கேட்டை திறந்து இவளை அழைத்துப் போனாள்.. மூன்றடுக்கு மாடியுடன் அகலமாக இருந்த வீட்டை கண்விரிய பார்த்தாள் பவித்ரா..

வீட்டின் முன் சின்ன தோட்டமும் ஆங்காங்கே குட்டை மரங்களும் வளர்ந்து கண்ணுக்கு குளுமையாக இருந்தது..

தேக்குமரத்தினால் செய்த வாசல் கதவு மூடி இருக்க காலிங் பெல்லை அழுத்தினாள் சுந்தரவல்லி..

சிறிது நேரம் போக உள்ளிருந்து திறக்கும் சத்தம் கேட்டது...

பளபளக்கும் வெள்ளை முடியுடன் கொஞ்சம் இளமையான ஓர் பெரியவர் கதவைத் திறந்தார்..

"வா.. வா.. இவ்ளோ நேரம் ஆயுடுத்தா.."

"ம்ம்ம்.. இவதான் பவித்ரா.. என்னோட புது ஃபிரண்ட்.." சிரித்தாள்..

"பவித்ரா... இது தான் என் ஹஸ்பண்ட்.. மிஸ்டர் சந்திரசேகர்... ரிடயர்டு பேங்க் மேனேஜர்... வா.. வா.. உள்ள வா.."

"வாம்மா..." அவரும் அழைக்க மெள்ள உள்ளே நுழைந்தாள் பவித்ரா...

அடுத்த கணம் எங்கிருந்தோ ஓடி வந்த அல்சேஷன் நாய் ஒன்று உருமலுடன் இவளை நோக்கி பாய்ந்து வந்தது..

அய்யயோ.. பவி பயந்து பின்னால் விலக..

"ரிச்சர்டு.. ரிச்சர்டு... காம் டவுன்.." அதன் கழுத்து கயிற்றைப் பற்றி அதை அடக்கினார் சந்திர சேகர்..

"பவித்ரா.. பயப்படாத.. இது எங்க பெட் டாக் தான்... ஒன்னும் பண்ணாது.. ஏய் ரிச்சர்டு கண்ணா.. இது நம்ம கெஸ்ட்.." சிரித்தபடி அதை தடவிக் கொடுத்தாள்... அதுவும் வாலாட்டிக் கொண்டு அமைதியுடன் உள்ளே ஓடியது..

திடீரென ஏற்பட்ட அதிர்ச்சி மறையாமல் சுற்றும் முற்றும் பார்த்தபடி
உள்ளே நுழைந்தாள் பவித்ரா..

அகலமான ஹாலின் நடுவே நீண்ட சோபா போடப்பட்டிருந்தது.. நடுவே டீபாய்..

"உட்காரும்மா... என்ன சாப்படற.."

அவளை அமரச் சொல்லிவிட்டு இருவரும் எதிரே அமர்ந்தனர்..

"எதுவும் வேண்டாம் மாமி.."

அந்த அறையை சுற்றி பார்த்தாள்.. உயர் ரக கலைப் பொருட்கள் ஆங்காங்கே கொலுவிருக்க ஓர் மெல்லிய அமைதி பரவி இருந்தது.. சத்தத்துடன் வாழ்ந்த பவிக்கு என்னவோ போல இருந்தது..

உன்ன பத்தி சுந்தரி டெய்லி சொல்வா.. இந்த காலத்ல இப்டி ஒரு பொண்ணான்னு.. அவ ரொம்ப ஹோம்லி.. நீயும் அப்டித்தான்னு சொன்னா... பொண்கள்னா அப்டிதானே இருக்கனும்.. ஹாஹா.." சந்திர சேகர் சிரிப்புடன் சொல்ல பவி மையமாய் புன்னகைத்தாள்..

"ஏம்மா... உங்காத்ல எத்தன பேர்.. அப்பா என்ன பண்றார்..." அவர் விபரங்களை கேட்க தயங்காமல் மெதுவாக கூறினாள் பவித்ரா.. "அப்பா அம்மா பாட்டி அப்பறம் நான் என் தம்பி.. அப்பா கவர்மண்ட் ஆபிஸ்ல வேல பாக்கறார்... அம்மா ஹவுஸ் ஒய்ப்.. தம்பி நைன்து படிக்கறான்.. நான் பீ ஈ கம்யூட்டர் சயின்ஸ் பைனல் இயர்.."

"ஓ.... குட்.. இந்த காலத்ல பொண்கள் நெறைய படிக்கறா.. வேலைக்கு போறா.. என்னமோ அவா தான் குடும்பத்த தாங்கற மாதிரி.." சந்திர சேகர் அவ்வாறு கூற சுருக்கென ஏறியதி பவிக்கு...

"இதோ... இவளும் பீ.ஏ.. தான்.. கல்யாணம் புதுசுல வேலைக்கு போனும்னா... நான் தான் எதுக்குன்னு வேண்டாம்டேன்.. இவ சம்பாதுச்சுதான் ஆகனும்னு எதுவும் இல்லை.." பெருமிதத்துடன் சிரித்தார்...

"நான் வேலைக்கு போவேன் அங்கிள்.. எங்க வீட்ல பொண்கள்கற ரெஸ்ட்ரிக்ஷன்லாம் இல்ல.." அழுத்தமான அவரை பார்த்துக் கொண்டு கூறினாள் பவித்ரா....

சிரித்தார்.. "ஹா... ஹா... காலம் மாறிடுத்து.. பெண்களுக்கு சம உரிமை அப்படி இப்டினு பிணாத்திண்டு.."

அவருக்கு பதிலடி குடுக்க பவி ஏதோ கூறவர....

வாசலில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது...

ரிஷி நுழைந்து கொண்டிருந்தான்...

"வாடா... வாங்கிட்டியா... வா... வந்துஉட்கார்.. நம்மாத்து கெஸ்ட்டோட பேசலாம்..." சிரிப்புடன் அவனை வரவேற்றாள் சுந்தரவல்லி..

"ஹாய்.... ஹவ் ஆர் யூ.." பவியைப் பார்த்து சிரிப்புடன் அமர்ந்தான்..

அவனது மாற்றம் ஆச்சர்யம் அளித்தது பவிக்கு...

"சரி... நீங்க பேசின்டு இருங்கோ.. காபி போட்டு எடுத்துண்டு வர்ரேன்.." சுந்தரவல்லி நகர்ந்தாள்..

"வல்லி... நான் மாடிக்கு போறேன்.. பேங்கிங் வேல கொஞ்சம் இருக்கு... அங்க கொண்டு வந்துடு.." கூறிய படியே சந்திர சேகரும் நகர...

ரிஷியும் பவியும் தனித்து விடப்பட்டனர்..

அவன் என்ன பேசப் போகிறான்.. தன்னை மன்னித்துவிட்டானா என அவனையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா...

"அப்பறம்... என்ன படிக்கற..." ஆரம்பித்தான்...

"பீ. ஈ.. கம்யூட்டர் சயின்ஸ்... பைனல் இயர்..."

"எந்த காலேஜ்..." அதே புன்னகை முகம் மாறாமல் கேட்டான்..

சந்தோஷத்துடன் தன் காலேஜைப் பற்றிக் கூறியவள்... " தேங்க்ஸ்... நீங்க அந்த இன்ஸிடன்ஸ்க்காக என்ன மன்னிச்சதுக்கு... " பவி முகம் மலர அவன் முகம் மாறியது..

"எக்ஸ்க்யூஸ் மீ... வீட்டுக்கு வந்த விருந்தாளிங்ககிட்ட மேனர்ஸ் இல்லாம நடந்துக்க கூடாது , என் கோபத்த காட்ட கூடாதுன்னுதான் பொறுமையா பேசினேன்.. டோன்ட் திங்க்.. ஐ ம் அக்சப்ட் யூ..."

"உங்களுக்கெல்லாம் வானத்துலேந்து குதிச்சதா நெனப்பா... ம்ம்ம்... ஆம்பளைங்கன்னா பொறுக்கி... நீங்களாம் ரொம்ப நல்லவங்க... அப்படியா... ஆ..." அவன் முகம் இறுகுவதைக் கண்ட பவி கொஞ்சம் அதிர்ந்து போனாள்..

"இ.. இல்ல.... ரியலி... நா.... உங்கள.. தப்பா... புரிஞ்சுகிட்டு...... அதான்..." அவள் தடுமாற...

"லூக் மிஸ்.... பவித்ரா.... பொண்ணுங்கன்னா.. பெரிய ஏஞ்சல்ஸ் கெடையாது... நீங்க சிரிச்சதும் நாங்க உங்க கால்ல விழ , நீங்க கோபப்பட்டா பயந்து போக... எப்பவும் லேடிஸ் ஆண்கள விட கொஞ்சம் கீழதான்.. எல்லா விதத்திலயும்.. மைன்டலயும்... சோ... கொஞ்சம் கால தரைல வெச்சு நடங்க... வானத்துல பறக்க வேண்டாம்..
ஓகே.."

அவன் பேசிக் கொண்டே போக என்ன பேசுவது எனத் தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா..

உள்ளிருந்து காபி கோப்பையுடன் சுந்தரவல்லி நுழைய.. அமைதியானான் அவன்..

"பவி... காபி எடுத்துக்கோ.. ரிஷி.. இந்தா.. என்ன ரெண்டு பேரும் சுவாரசியமா பேசிட்டு இருந்தீங்க போல.. நா வந்ததும் சைலன்ட் ஆயிட்டீங்க.. உள்ள இருந்ததால என்னன்னு புரியல.. உன்ன மாதிரிதான் பவி , ரிஷியும்.. வெரி ரிசர்வ்டு.. வெரி ப்ரெண்ட்லி... எல்லாரையும் மதிப்பான்.." சுந்தரவல்லி பெருமைப்பட ஓரப் புன்னகையுடன் பவியைப் பார்த்தான் ரிஷி..

தலையைக் குனிந்து கொண்டு மெள்ள முறைத்தாள் பவி...

"ஓகேம்மா... நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..
ரூமுக்கு போறேன்.." பவித்ராவை கண்டு கொள்ளாமல் அம்மாவிடம் கூறவிட்டு வேகமாக நகர்ந்தான் ரிஷி..

பவிக்கு சூடேரியது....!

தொடரும்

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
Last edited:

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் திங்கள்..!

அத்யாயம் - 5

அவளைக் கண்டு கொள்ளாமல் அவன் செல்ல பவிக்கு சூடேரியது.. சே.. மேனர்ஸே இல்லாதவன்...

பவி... என்ன ஆச்சு.. அமைதியாவே இருக்க... காபி சாப்பிடு... ஆறிடப் போறது... சுந்தரவல்லி விளிக்க , தலை நிமிர்ந்து பார்த்தாள் பவி..

மடமடவென காப்பிக் கோப்பையை வாயில் சாய்த்துக் கொண்டு எழுந்தாள்..

ஓகே மாமி... நான் கெளம்பரேன்.. நேரம் ஆயிடுச்சு.. வீட்ல தேடுவாங்க..

அப்படியா...சரிம்மா.. நீ வந்தது ரொம்ப சந்தோஷம்... ஃப்ரீயா இருக்கும் போது அப்பப்போ வா... என்ன.. இத உன் வீடுமாதிரி நெனச்சுக்கோ..

ம்ம்ம்.... புன்னகையை உதிர்த்து கிளம்பினாள் பவித்ரா...

பவி.. ஒரு நிமிஷம்.... இதோ வந்துட்ரேன்... உள்ளே சென்ற சுந்தரவல்லி குங்குமச் சிமிளுடன் ஒரு சிறிய துணியையும் தட்டில் கொண்டு வந்தாள்... இந்தா இத எடுத்துக்கோ..

குங்குமத்தை நெற்றியில் கீற்றிட்டுக் கொண்டு அதை பெற்றுக் கொண்டு கிளம்பினாள் பவி..!

ஆட்டோ பிடித்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்தாள்... உள்ளுக்குள் அவன் மீது கோபம் கோபமாக வந்தது... என்ன ஒரு திமிரு.. ஒருதடவ இன்சல்ட் பண்ணது பத்தாதுன்னு என்ன வார்த்தையெல்லாம் சொல்லிட்டான்.. அந்த மாமி பேச்ச கேட்டு அவங்க வீட்டுக்கு போனது என் தப்பு.. இவன் மட்டும் என்ன பெரிய மேதாவி மாதிரி பேசிட்டு போறான்.. வந்த கோவத்துல ஒரு அறை விட்டுருக்கனும்.. அப்ப தெருஞ்சிருக்கும்..

பொறுமிக் கொண்டே வீட்டிற்குள் வந்தாள்..

வீட்டிற்குள் நுழைந்தவள் தன்னறைக்கு சென்று அமர்ந்து கொண்டாள். மறுபடியும் மறுபடியும் அவன் கூறியது நினைவலையில் ஓடியது.. நாள் முழுக்க அவனது சிந்தனையாகவே இருந்தது... அவன் கூறியதையே திரும்பத் திரும்ப ஆராய்ந்தது.. மனதை சமாதானப் படுத்த இயலாமல் புகைந்தாள்..

சே... இனிமே அந்த மாமிகிட்ட கூட பேசக் கூடாது... எப்டி அவாய்ட் பண்றது.. அதுக்காக.. கோயிலுக்கு போகாம இருக்க முடியுமா.. என்ன இது வேண்டாத தொல்லை... சே... இது இவ்ளோ பெரிய விஷயமாகி என் நிம்மதியே குலைக்கறதே.. மனதுக்குள் புலம்பினாள்..

வெளியில் எதுவும் நடக்காதது போல் முகத்தை வைத்துக் கொண்டு வலம் வந்தாள்.. இருப்பினும் இருமுறை அவன் தன்னை அவமானப் படுத்தியதும் , அவனது அலட்சிய வார்த்தைகளும் அவளை அலைக்கழித்தது..

எப்பொழுதும் பொங்கும் சந்தோஷமின்றி ஒருவித இருக்கத்துடன் இருந்தாள்.. வீட்டில் இருந்தவர்கள் பார்வைக்கு புலப்படாமல். அடிக்கடித் தனியாக அமர்ந்து அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.. அவனது வார்த்தைகள் அவளை மிக பாதித்தது.. நாட்கள் இப்படியாக ஓடியது.. ஒருவாரம் தாண்ட...

சுகுமாரி பாட்டிக்கு மட்டும் அவளது மாற்றத்தை மெலிதாய் உணர முடிந்தது.. அவளது கல்யாணப் பேச்சை எடுத்த பிறகுதான் பவித்ரா மனநிம்மதி இன்றி அலைகிறாள் எனத் தோன்றியது.. அவ அப்பா.. வரனப்பத்தி பேசினப்பறம், தன்கிட்ட தன் சமதத்தை கேக்கலைன்னு கோபப்பட்டாளே.. அவ மனசுலயும் தன் வாழ்க்கைய பத்தின அபிப்ராயம் இருக்காதா.. எப்படி இருக்கனும் ஆசை இருக்கும் தானே.. அந்த காலத்ல நமக்கு பண்ணினது மாதிரி இந்த தலைமுறைக்கும் ஆகிடக் கூடாது.. சுதந்திரமே இல்லாம..! பெரியவா பேச்சக் கேட்டு நடக்கற பொண்ணு.. பாவம் குழந்தை.. மனசுல எதையோ வெச்சுண்டு சொல்ல மாட்டாம தடுமாறறா. நம்ம பெரிய மனிஷியா இருக்கோம்.. அவளுக்கு நான்தானே ஆறுதலா இருக்கனும்.. அவ மனசுக்கு புடுச்சாத் தான் எந்த பையனா இருந்தாலும் கல்யாணம்.. அவ விருப்பம்தான்.. நாம கூட இருந்து அவளோட ஆசைய நிறைவேத்தனும்.. மனதில் சிந்தனைகள் ஓட பவியை அழைத்தாள் பாட்டி சுகுமாரி..

பவி கண்ணு.. இங்க வா...

என்னபாட்டி.. என்ன வேணும்... காபி கொண்டுவரவா...

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... இங்கவந்து உட்கார்..

என்ன என்ற குழப்பத்துடன் மெதுவாக அவளருகில் அமர்ந்தாள் பவித்ரா...

சொல்லு பாட்டி... என்ன விஷயம்...

அவள் கண்களை பார்த்துக் கொண்டிருந்தாள் பாட்டி... முகத்தை சட்டெனத் தாழ்த்திக் கொண்டாள் பவி..

பவி... என்ன ஆச்சு.... ம்ம்ம்....

ஒன்றும் தெரியாதவள் போல் விழித்தாள்... என்ன ஆச்சு... ஒன்னுமில்லையே... நல்லாத்தான இருக்கேன்.. ம்ம்...

பாட்டி மென்மையாக புன்னகைத்தாள்.. இல்லையே .. இந்த ஒருவாரமா உன்ன கவனுச்சுண்டுதான் வரேன்... என்னவோ போல இருக்கியே..

சமயோஜிதமாக சிரித்தாள்.. இல்லியே.. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்..

அப்படியா... எப்பவும் கலகலன்னு ஆத்த சுத்தி சுத்தி வருவே... பாட்டி பாட்டின்னு என்ன ஒட்டிப்பியே... இப்போ பாட்டிய கண்டுக்கறதே இல்லையே... ம்ம்ம்...

அ... அது... தடுமாறினாள்.. பாட்டி.. அப்படில்லாம் எதுவுமில்ல... பைனல் இயர் எக்ஸாம் , படிப்பு , ஆத்து வேலை அப்டி இப்டின்னு போயிடறதா.. அதான் உன்கூட ஒக்காந்து பேச முடியல.. ஹூம்.. பாட்டிமா.. நீ தான் எனக்கு ப்ரண்ட் , ஃபிலாசஃபர் எல்லாமே... உன் கிட்ட மறைப்பேனா.. நீ எதுவும் வருத்தப் பட்டுக்காத.. நான் எப்பவும் போல சந்தோஷமா தான் இருக்கேன்..... சரியா..

இல்ல பவி.. உன் மனசு எனக்குத் தெரியும்.. மனச போட்டு அலட்டிக்காத.. சரியா... அப்பா சொல்லிட்டான்.. அதுக்காக அவன் பாக்கற மாப்பிள்ளையத் தான் நீ கட்டிக்கனும்னு இல்லை.. இந்த கல்யாணத்தப் பொறுத்தவரையில உன் இஷ்டம் தான் கண்ணு.. அதுக்கு எப்பவும் உன் பாட்டி துணையா இருப்பா.. சரியா.. அத நெனச்சே கவலப்படாதைக்கு சந்தோஷமா இரு.. பாட்டி இருக்கேன்.." அவள் கன்னத்தை வாஞ்சையுடன் வருடினாள் சுகுமாரி..

"அதெல்லாம் ஒன்னுமில்ல பாட்டி.. நீ எப்பவும் என்கூட இருப்பன்னு எனக்கு தெரியும்.. ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுவியா..."

"என்ன கண்ணு..."

"அப்பாட்ட சொல்லி இந்த கல்யாணத்த போஸ்ட்போன் பண்ணிடு.. காலேஜ் படிப்பெல்லாம் முடிஞ்சு கொஞ்ச நாளைக்கு நான் ஃப்ரீயா இருந்துக்கறேனே... ம்ம்ம்.."

"ஹா.. ஹா.. சரி சொல்றேன்.. படிப்பு முடுச்சு ஒரு மூனு மாசமோ.. ஆறுமாசமோ தானே... அதுக்குள்ள நல்ல வரன் உனக்கு அமையும்.. அப்போ வேணும்னா கல்யாணத்த மட்டும் கொஞ்சம் தள்ளி போட்டுக்க சொல்லிடலாம்.. இப்போ அவன் பாக்கறபடி பாக்கட்டும்.. எடுத்த எடுப்புலயே வேண்டாம்னு சொன்ன சங்கடப் பட்டுடுவான்.. பாவம்.."

"ஹூம்... சரி பாட்டி... நான் ரம்யாவ பாத்துட்டு வந்துடறேன்.. ஒருவாரம் ஆச்சு அவள பாத்து... வரேன் பாட்டி.." பவி கிளம்பினாள்..

அவள் நடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சுகுமாரியின் கண்களில் அந்த நினைவு வந்து போனது...

"அம்மா...... நேக்கு... இப்போ எதுக்கு கல்யாணம்.. வேண்டாமே.. " மருண்ட கண்களுடன் அம்மாவை பார்த்து மெதுவாகக் கூறினாள் சுகுமாரி...

அவளை விநோதமாகப் பார்த்தாள் ருக்மிணி.. " அச்சச்சோ.. என்னடி இது, புதுசா கல்யாணம் வேண்டாம் அது இதுன்னு பெரிய மனுஷி மாதிரி பேசறே... அப்டிலாம் சொல்லக் கூடாது..
அப்பா கேட்டார் அவ்வளவு தான்.. தாண்டவம் ஆடிடுவர்.. பொண் குழந்தைகள் வயசுக்கு வந்துட்டா அடுத்து கல்யாணம் தானே.. கல்யாணம் பண்ணின்டு வாய்க்கு ருஜியா சமைச்சுப் போட்டுண்டு குழந்தை குட்டிகளோட ஆத்துகாரற நன்னா பாத்துக்கறத விட்டுட்டு வேற என்ன இருக்கு பொண்களுக்கு.. தொங்கத் தொங்க தாலி கட்டிண்டு பூவும் பொட்டோட சுமிங்கிலியா இருக்கறது தானே பொண்ணா பொறந்ததுக்கு பெருமை.. அதுதானே சாஸ்வதம்..

தெரண்ட குழந்தைகளுக்கு காலாகாலத்ல கல்யாணம் ஆனுமேன்னு அவாஅவா வயத்துல நெருப்பக் கட்டிண்டு தவிக்கறா.. நோக்கென்ன தெரியும்.. சின்னகுட்டி.. இனிமே இப்டிலாம் பேசப்டாது.. ஆத்துப் பெரியவா சொல்றத கேட்டு நடக்கனும்.. எதையோ யோஜன பண்ணின்டு இருக்கக் கூடாது... சரியா..

ம்ம்ம்... மெள்ளத் தலையாட்டினாள் சுகுமாரி..

அடுப்பில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த வேதவல்லியிடம் திரும்பி.. "பாருங்கோம்மா.. இப்பவே இப்படி எதுத்து கேள்வி கேக்கறதுகள்.. என்ன சொல்றது... எனக்கு கல்யாணம் ஆகும்போது வயசு எட்டு... அவருக்கு பதினாலு.. அப்போ நீங்க ரங்கன புள்ளையாண்டு இருந்தேள்.. ஞாபகம் இருக்கா.. ஹாஹா.. அந்த மாதிரி இவளுக்கும் பண்ணாம இல்லாதைக்கு இந்த வயசுல கல்யாணம் எதுக்காம்.. என்ன சொல்றது.. ஊரும் உலகமும் கெட்டுப் போயிடுத்து.. ஹூம்.. சுகு.. ஆத்த பெருக்கிட்டு கைகால் அலம்பி நெத்திக்கு இட்டிண்டு பூஜ ரூம்ல வெளக்கேத்திடுமா.. சந்த்யா காலம் ஆகப்போறது.. இத பார். தாவணி தலப்ப பின்னால தொங்கவிட்டுண்டே வேல பாக்கக் கூடாது... நன்னா இறுக்க கட்டிக்கனும்.. சரியா.. போ...

ம்ம்ம்... சரிம்மா.. தலையாட்டினாள். வேறெதுவும் கேட்கத் தோணவில்லை..

மாலை, வேலை முடிந்து உள்ளே நுழைந்தார் சுப்ரமணியன்..

எதிரே சுகுமாரி கையில் ஒரு கதை புத்தகத்தை வைத்துக் கொண்டு சிரித்தபடி ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள்.. புத்தகத்தில் ஆழ்ந்தவள் அவர் வருவதை கவனிக்கவில்லை..

அதைப் பார்த்து கோபம் தலைக்கேற அவளை முறைத்தவர் சத்தமாக செறுமினார்.. சடாரென நிமிர்ந்தவள் எழுந்து நின்று விலகினாள்.. "வா... வாங்கோ... வாங்கோப்பா.."

" ருக்கு.. அடி ருக்கு.. இங்கவாடி.. " சத்தமாகக் கூப்பிட்டார்..

பதறிக் கொண்டு வெளியே வந்தவள் அறையின் ஓரமாய் நின்று கொண்டு தலைப்பால் தோளை மூடிக்கொண்டாள்.. என்ன என்பது போல அவரைப் பார்க்க..

" நன்னா வளத்து வெச்சிருக்கே உன் சீமந்த புத்ரியை.. யார் வர்ரா.. யார் போறான்னு கூட தெரியாதைக்கு நடுவீட்ல வெக்கமில்லாம சிரிச்சுண்டு ஒக்காந்திருக்கா.."

"என்ன புஸ்தகம்டி அது.." அவள் கையில் இருந்ததை படக்கெனப் பிடிங்கிப் பார்த்தார்..

குழந்தைகளுக்கான கதைப் புத்தகமென அட்டைப் படத்தில் தெரிந்தது.. தூக்கி எறிந்தார் அதை..

" நன்னாருக்கு.. கல்யாணம் ஆகி புக்காத்துக்கு போக வேண்டிய வயசுல கதைபுத்தகத்த படுச்சுண்டு ஒக்காந்திரு.. அங்க போனப்பறம் அவா என்ன காரி துப்பட்டும்.."

பயத்துடன் கண்களில் மெள்ள நீர் கோர்த்தது.. அம்மாவை மெள்ள திரும்பிப் பார்த்தாள். அவள் கண்களால் சமாதானம் செய்தாள்..

"குழந்த ஏதோ நேரம் போலையேன்னு..."


" ஆமா.. இப்போ நேரம் போலயேன்னு கண்டத படிப்பா.. நாளைக்கு அங்க போயும் இதத்தான செய்வா.. பேசறா பாரு.. கூறுகெட்டத் தனமா.."

" சுகுமாரி... இது தான் கடைசி... இனிமே புஸ்தகத்த வெச்சுண்டு அங்கஇங்க ஒக்காந்துண்டு பல்ல காமிச்சுண்டு இருந்தியோ அவ்வளவு தான்.. ஜாக்ரதை

பொண்ணா அடக்கமா ஆத்து வேல கத்துண்டு இருக்கியா... குதிரு மாதிரி வளத்து வெச்சிருக்கேள்.. ஒரு வேலைக்கும் லாயிக்கு இல்லையேன்னு சம்மந்தி பேர் நாளைக்கு என்ன கேள்வி கேட்டா நான் எங்க போய் முட்டிக்கறது.. பொறந்த ஒன்னும் பொண்ணா போய்த் தொலஞ்சுடுத்து.. அடுத்தத எதையும் பெத்துக் குடுக்க உங்கம்மாக்கு துப்பு இல்லை.. வயத்த அடச்சுப் போச்சு.. பெண்ண பெத்தவன் தல குனிஞ்சு போக வேண்டிய துர்பாக்யம் எனக்கு... தலையெழுத்து.. இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா ஆத்து வேலய பண்ணப் பழகு.. புரியறதா.. போ...." அவர் கர்ஜிக்க மூச்சடைத்துப் போய் அடுக்களைக்குள் ஓடினாள் சுகுமாரி..

தொண்டையை அடைக்க கண்களில் நீர் வழிந்தது.. சத்தமில்லாமல் கேவிக் கேவி அழுதாள்.. பின்னால் வந்த ருக்மணி அவளை அணைத்துக் கொண்டு கண்களை அழுந்த துடைத்துவிட்டாள்..

" அழாதடி கண்ணு.. அப்பா உன்னோட நல்லதுக்கு தானே சொல்றார்.. நாளைக்கு இன்னொரு ஆத்துக்கு போக வேண்டியவ நீ.. அங்க போய் அவா எல்லாரையும் அனுசருச்சு போக வேண்டியது உன் கடமைம்மா.. பெரியவா எதாவது சொல்றான்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.. இனிமே புஸ்தகத்த வெச்சுண்டு ஒக்காறப் படாது.. அம்மாவோட அடுக்களைல வேலய கவனுச்சுக்கோ.. சரியா.. தோளில் சாய்த்துக் கொண்டாள்..

"ருக்கு.. ருக்மணி.. அங்க என்ன பண்ணின்டு இருக்கே.. உன் பொண்ண சமாதானம் பண்ணது போதும்.. இங்க வா..."

ருக்மணி வெளியே வர பின்னால் வேதவல்லி பாட்டியும் நின்று கொண்டாள்..

" சம்மந்திப் பேர் நாளைக்கு சாயங்காலம் சம்மந்தம் பேச வர்ரா.. அவா முன்னாடி இவோ அங்க இங்க அலஞ்சுண்டு இருக்க போறா.. பாத்து உள்ளே இருந்துக்க சொல்லு.. நாப்பது பேர் வர்ராலாம் வண்டி கட்டிண்டு.. அத்தே , மாமா , சொந்தம் பந்தம்னு அவாத்து பேர் பெரும்படையாம்.. புரியறதா.. அவாளுக்கு வேண்டிய பக்ஷணங்கள் தயார் பண்ணிடு... கூடமாட ஒத்தாசைக்கு சுகுமாரியையும் வெச்சுக்கோ.. என்ன.. நான் போயி.. நம்மாத்து மனுஷள்கிட்ட சேதி சொல்லிட்டு வந்துட்ரேன்.." அவளது பதிலை எதிர்பாராமல் கட்டளை இட்டவாரு துண்டைத் தட்டி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார்..

ருக்மணி , வேதவல்லி முகத்தில் சந்தோஷ ரேகை ஊர்ந்தது...

" சுகுமாரி.. உன்ன பொண்ணு பாக்க வர்றாலாம் நாளைக்கு.. நன்னா அலங்காரம் பண்ணிக்கனும்.. ருக்கு.. அந்த மயில்கண் நிறத்துல பட்டுப் புடவை இருக்கே.. போன ஆடிக்கு வாங்கினதே.. அது புதுசாத்தானே இருக்கு அத கட்டிக்கச் சொல்லு.. தங்க விக்ரகம் மாதிரி ஜொலிப்பா... என் கண்ணு.." பாதிபோன பல்தெரிய சிரித்தபடி சுகுமாரியின் கன்னத்தை வருடியவாரு நெட்டி முறித்தாள் வேதவல்லி பாட்டி..

புதுப் புடவை கட்டிக் கொள்ளும் ஆசையில் கவலை மறந்து சிரித்தாள் சுகுமாரி..

நினைவுகளில் மூழ்கியவள் முகத்திலும் புன்னகை விரிந்திருந்தது..

.......

ஹாய் ரம்மி... எப்டிடி இருக்க... விரிந்த புன்னகையுடன் அவள் வீட்டின் உள் நுழைந்தாள் பவித்ரா...

ஹே.. ஒட்டகம்.. எப்டி இருக்கடி.. வாட் எ சர்ப்ரைஸ்.. என்னடி திடீர்னு வந்திருக்க.. ஒரு வாரமா ஆளயே காணும்... வா.. வா... அவளை இழுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினாள் ரம்யா....

யேய்... கேக்கறேன்ல... என்ன ஒரு வாரமா ஆளையும் காணும் ஃபோனையும் காணும்.. என்ன ஆச்சு..

ஒ... ஒன்னுமில்லடி... எக்ஸாம்ஸ் வருதுல்ல.. அதான் படிப்புல மூழ்கிட்டேன்..

இன்னது... படிப்புல மூழ்கிட்டியா.. அடியே... என் காதுலயே பூ சுத்தாத.. உன்னப் பத்தி எனக்கு தெரியும்.. முகத்துலயும் சந்தோஷத்தையே காணும்.. குச்சி முட்டாய் வாங்கித் தரலைன்னு வீட்ல சண்ட போட்டியா... அப்பா எதாவது திட்டிட்டாரா.. ஆ.. ஹாஹா.. பெரிதாகச் சிரித்தாள்..

பவித்ராவிற்கு பக்கென்று இருந்தது.. பாட்டி கூறியது போல இவளும் கேட்கிறாளே என...

சீ... நான் ஹேப்பியாத்தான் இருக்கேன்... உங்களுக்கெல்லாம் தான் அப்டி தெரியுது...

உங்களுக்கா.... ஆ... அப்போ கன்பார்ம் தான்... எதோ திருட்டுத் தனம் பண்ணிருக்க.. ஒழுங்கா சொல்லிரு... இல்ல.. புடுச்சு கீழ தள்ளி விட்ருவேன்...

அமர்ந்திருந்த அவளை பிடித்து பின்னால் சாய்க்க....

ஏய்ய்ய்..... பக்கி... விடு என்ன..

ஹா.. ஹா... பவி.. உன் மூஞ்சியே காட்டிக் குடுத்திருது நீ மூட் அவுட்ல இருக்குன்னு.. என்கிட்ட சொல்லக் கூடாதா...

பவிக்கு கொஞ்சம் அவமானமாக இருந்தது... சே... இப்டி எல்லாருக்கும் தெரியும்படியா இருப்ப பவி.. நீ சுத்த வேஸ்ட்.." தன்னைத் தானே கடிந்து கொண்டாள்..

கொஞ்சம் அமைதியானவள் பேச ஆரம்பித்தாள்...

அன்னிக்கு அந்த துணிக்கடைல பாத்தோமே.. அந்த அம்மா, அவங்க பையன்...

ம்ம்ம்... நைஸ் கை... அழகா இருக்கான்ல....

ஆமா... அழகு.. அது ஒன்னுதான் குறைச்சல்.. முட்டாள்....

என்னடி ஆச்சு.....

அந்த அம்மா அவங்க வீட்டுக்கு வரனும்னு ஒரே பிடிவாதமா இருந்தாங்க.. நான் வரலைன்னு சொண்னேன். கேக்கல.. போன ஞாயித்து கிழமை வீட்டுக்கு வந்தே ஆகனும்னு கம்பல் பண்ணி கூட்டிட்டு போயிட்டாங்க..

ம்ம்ம்... சரி....

அங்க அவனும் இருந்தான்..

சோ வாட்....

"சரியான திமிருடி அவனுக்கு.. பெரிய இவனாட்டம் என்ன கண்டுக்கவே இல்ல.. என்ன இன்சல்ட் பண்ற மாதிரி தெனாவெட்டா நடந்துக்கிட்டான்.. எனக்கு செம்ம கடுப்பு... அவங்க வீடாச்சேன்னு அடக்கிட்டு இருந்தேன்.. இதுவே வெளி இடமா இருந்தா வேறமாதிரி ஆகியிருக்கும்..." ஜாக்ரதையாக அங்கு நடந்ததை முழுமையாகக் கூறாமல் மேலோட்டமாய் அவனது குற்றத்தை மட்டும் கூறினாள் பவித்ரா..

என்ன பத்திதான் உனக்கு தெரியுமே.. எனக்கு இந்த ஈகோ புடுச்சவங்களக் கண்டாலே பிடிக்காது.. தூர வெளகிடுவேன்னு...

ம்ம்ம்... அப்டி என்னதான்டி பண்ணான்..

அவன் ஏற்கனவே என்கிட்ட மிஸ்பிகேவ் பண்ணி திட்டு வாங்கினான்னு சொன்னேன்ல.. அத மனசுல வெச்சுகிட்டு திமிரா நடந்துகிட்டான்.. சரி.. அந்த மாமியோட முகத்துக்காக அவன்ட்ட ஃபார்மாலிட்டிக்கு பேசினேன்.. என்னவோ உலகத்துலயே இவன் ஒருத்தன் தான் ஆம்பள மாதிரி சீனக் காமிச்சுட்டு எழுந்து போயிட்டான்.. வந்த கோவத்துல செம்ம மூட் அவுட்.. ஒருவாரமா எனக்கு அத ஜீரணிக்கவே முடியல... அதான் எங்கயும் போல.. கோயிலுக்கு கூட.. போனா அந்த மாமிய திரும்ப பாக்கனும்.. என்னால சும்மா இருக்க முடியாது... தேவையில்லாம அவங்கள்ட இதைப்பத்தி பேசவும் முடியாது.. வேண்டாத வேலடி எனக்கு..

படபடவென அவள் பேச அவளை பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா....

ம்ஹூம்.. இந்த பசங்களுக்கே பெரிய இவனுங்கன்னு நெனப்பு... கொஞ்சம் அழகா ஹேன்ட்ஸமா இருந்தாப் போதும் வானத்துலேந்து வந்தவங்க மாதிரி திரிவாய்ங்க... நீ அவன விட்ருக்க கூடாதுடி.. நானா இருந்தா அந்த எடத்துலயே லெப்ட் அன்டு ரைட் வாங்கிருப்பேன்...

பவிக்குள் ஓர் சந்தோஷப் புன்னகை மின்னியது.. ஆமாடி நீ சொல்றது ரொம்ப கரெக்ட்... பெரிய இவன்னு நெனப்பு.. என்னலாம் பேசறான்....

என்னது.....

ஆ.... ஒ... ஒன்னுமில்ல... என்ன கண்டுக்காம தெனாவெட்டா போனான்ல அத சொன்னேன்..

ம்ம்ம்... பவி... இத இப்டியே விடக் கூடாது... அவனுக்கு நீ நோஸ் கட் குடுத்தே ஆகனும்.. அவனப் பாக்க அடுத்த சான்ஸ் வரும் போது ஒரு புடி புடுச்சிடு... நாம என்ன கிள்ளுக்கீரையா அவனுக்கு...

என்ன நடந்தது என முழுவதும் அறியாத ரம்யா பவியை ஏத்திவிட...

ம்ம்ம்... தலை அசைத்தாள் பவித்ரா..


தொடரும்..
 

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 6

ரம்யா ஏத்திவிட உள்ளுக்குள் குபுகுபுவென கோபம் பொங்கியது பவித்ராவிற்கு..!

எஸ்... அவனுக்கு நான் யாருன்னு காட்டனும் டி... கொஞ்சம் விட்டா ரொம்ப ஓவராப் பேசறான்.. இரு, சரியான நோஸ்கட் குடுக்கறேன்.. அதுக்கப்பறம் அவன் என்பக்கம் தலைவெச்சே படுக்கக்கூடாது.. பொறுமினாள்...

ஏய் பவி... ரொம்ப டென்ஷனாவதடி.. விடு.. சின்ன பய.. அதுக்கு போயி.. மண்ட காஞ்சுக்கிட்டு.. வா.. ரொம்பநாள் கழுச்சு வீட்டுக்கு வந்திருக்க.. உனக்கு காளான் சூப் செஞ்சு குடுத்து என் சமையல் கலை திறமைய டெஸ்ட் பண்ணிக்கறேன்.. நேத்துதான் யூடியூப்ல வீடியோ பாத்தேன்...

ஓய்... நான் என்ன லேப்ல இருக்கற எலியா.. என்ன வெச்சு சோதனை பண்ண.. யப்பா வேணாம்டி.. நான் கெளம்பறேன்... கொஞ்சநாளாச்சும் உயிரோட இருந்துக்கறேன்.. பவி பதறி எழ அவளை பிடிக்க பின்னால் துரத்தினாள் ரம்யா...

ஏய்... ஓடாதடி... நில்லு.. என் சமையல உன்னவிட்டா சாப்பிட யாரும் கெடையாதுடி...

கோபத்தை மறந்து அதிர் சிரிப்புடன் ஓடி விளையாட ஆரம்பித்தாள் பவித்ரா..!

ஒருவாரமாய் இருந்த மன சஞ்சலம் கொஞ்சம் குறைய நிம்மதியானாள் பவித்ரா..

அவளுடன் சேர்ந்து கலகலவென பொழுது நகர...

யேய்.. ரம்மி... மணி நாலுடி... நேரம் போனதே தெரியல... மத்யானம் சாப்ட வரேன்னு வீட்ல சொல்லிட்டு வந்தேன்.. திட்டப் போறாங்க..

ஹலோ.. அதான் வயிறுமுட்ட ஒரு பான சோத்த காலி பண்ணேல.. அப்பறம் என்ன... எங்க வீட்டுக்குதான் வந்துருக்கன்னு அம்மாக்கு தெரியும்ல.. ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. ஒக்காரு அஞ்சு மணிக்கு போகலாம்.. அவளது கைகளைப் பிடித்து இழுத்து அமர்த்தினாள்...

பக்கி... விட மாட்டியே.. அந்த காவ்யா யாரையோ லவ் பண்றாளாமே... யாருடி அது.. உனக்கு மேட்டர் தெரியுமா... ஊர்கதை பேச ஆரம்பித்தார்கள்...

நேரம் நகர.... கடிகாரத்தைப் பார்த்தாள்... மணி ஐந்தே கால் ஆகி இருந்தது...

ஹே ரம்மி.. மணி ஆயிருச்சுடி.. நான் வீட்டுக்கு போய்ட்டு இன்னிக்காவது கோயிலுக்கு போனும்.. ஒரு வாரமா எங்கயும் போகல.. ஒரே டென்ஷன்.. இன்னிக்குதான் நிம்மதியா இருக்கேன்... அந்த அம்மா வர்ரதுக்குல்ல போய்ட்டு ஓடி வந்துரனும்... அவங்க பாத்துட்டா திரும்ப எதாவது பேசிட்டு இருப்பாங்க...

அட... ஏன்டி இப்டி இருக்க.. பாத்தா என்ன.. நீ பாட்டுக்கு போய்ட்டு வா... பேசினா பட்டும் படாம ஒரு ஹை.. ஒரு பை.. அவ்ளோதான்.. சொல்லிட்டு வந்துரு.. இதுக்கு போயி... பட்... அவன் சிக்கினான்.. விட்ராத....

சரிடி... நா கெளம்பரேன்.. கிளம்பினாள்.. மறுபடியும் அவனை ரம்யா நினைவூட்ட உள்ளுக்குள் பொங்க ஆரம்பித்தது..

அவன் நினைவுகள் உள்ளே வந்து அமர்ந்து கொள்ள யோசனையுடன் நடக்க ஆரம்பித்தாள்...

இரண்டு தெருக்கள் தள்ளி அந்த கோயிலின் வழியே நடந்து வந்தாள்..

கண்கள் கொஞ்சம் கலக்கத்துடன் கோயில் வாசலையும் சுற்றுப்புறத்தையும் பார்த்துக் கொண்டே வந்தது.. அவர்கள் தென்படவில்லை...

ஹப்பா... பெருமூச்சுடன் கடக்க.. பின்னால் யாரோ கை வைக்க அதிர்ந்து திரும்பினாள்...

ஹாஹாஹா.... பவித்ரா.. நான் தான்...
சிரித்தபடி நின்றிருந்தாள் சுந்தரவல்லி..

இவ்ளோ பயந்த பொண்ணா இருக்கியே... நீ என்னத் தான் தேடறன்னு நேக்கு தெரியும்.. அந்த கடைக்குள்ள இருந்தேன்.. நீ பாப்பியோன்னு நெனச்சேன்.. ஹாஹா.. அவள் பேசிக் கொண்டிருக்க பவித்ராவின் கண்கள் சுற்றும் முற்றும் தேடியது... அவன் எங்கேனும் நின்று கொண்டிருக்கிறானா என...

என்னடிமா... நாம்பாட்டு பேசின்டே இருக்கேன்.. நீ சுத்தி சுத்தி பாத்துண்டு இருக்கே.. பயந்துட்டியா.. நல்ல பொண்ணு... ஆமா.. ஒருவாரமா உன்னக் காணலயே.. கோயிலுக்கு காலைலே வந்துட்டு போயிடறயா.. ஹூம்.. என்னாலதான் முடியமாட்டேங்கறது... ரிஷி எந்திருச்சாத்தானே.. அவன்தான் கொண்டு வந்துவிடனும்....

அவன் பெயரைக் கேட்டதும் உள்ளுக்குள் ஏதோ மின்னல் வெட்டியது..

இ.. இல்ல மாமி... எக்ஸாம்ஸ் வருது... படிக்க வேண்டி இருக்கு.. அதான்... வரமுடியல...

சமத்து... படிப்பையும் பாத்துக்கணும்.. அதுக்காக ஒரேடியா.. ஸ்ட்ரெயின் பண்ணிக்காதே.. அப்பப்போ கோயில் குளம்னு வந்தாத்தான் மனசுக்கு ரிலாக்ஸ்டா இருக்கும்... ஆமா.. எங்க போயிட்டு வர்ரே.. குழப்பத்துடன் கேட்டாள் சுந்தரவல்லி...

நான் எங்க போனா இவங்களுக்கு என்ன.. கோபம் வந்தது பவித்ராவிற்கு.. அடக்கிக் கொண்டாள்..

ப்ரெண்ட் வீட்டுக்கு மாமி.. குரூப் ஸ்டடி..

ஓ.... சரிசரி.. ரிஷி என்ன விட்டுட்டு எங்கோ போனான்.. அதான் அவன் வர்ர வரைக்கும் எதாவது வாங்கலாமேன்னு கிப்ட் ஷாப்புக்கு போனேன்... நீயும் வாயேன்.. உனக்கு எதாவது வாங்கித் தர்ரேன்.. அதுக்குள்ள அவன் வந்துடுவான்...

அய்யயோ.. அதெல்லாம் வேண்டாம்... நா.. நான் கெளம்பறேன்..

கூச்சப்படாத.. மாமிதானே வாங்கித்தர்ரேன்... வா.. வா.. அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு கடைக்குள் சென்றாள்..

இது என்ன தொல்லை என மனதில் நினைத்துக் கொண்டு அவளுடன் வேண்டா வெறுப்பாய் சென்றாள் பவித்ரா..

அவன் வருவதற்குள் சென்றுவிடவேண்டும் என்ற மனம் அவசரப் படுத்தியது.. அவனைப் பார்த்தாள் எங்கு தன் நிலை மறந்து பொங்கிவிடுவோமோ என பயந்தாள்..

மாமி.. நேரம் ஆச்சு.. ஆத்ல தேடுவாங்க.. நான் கெளம்பறேனே..ப்ளீஸ்..

இரும்மா... ரெண்டே நிமிஷம்..

ஏம்பா.. அந்த டிசைனர் வளையல் இருக்கே, அத எடு.. கடைக்காரனிடம் பேச ஆரம்பித்தாள்..

அவன் எந்த சமயமும் வருவான் என வாசலையே பாத்துக் கொண்டிருந்தாள் பவித்ரா....

சுந்தரவல்லியின் மொபைல் ஒலித்தது...

ஹலோ... வந்துட்டியா... இங்க தான் கோயில் எதுத்தாப்ல.. கிப்ட் ஷாப் இருக்கே.. ஆ.. அங்கதான்.. வா... போனை கட் செய்தாள்..

ரிஷிதான்.. வந்துட்டான்.. இங்க வரச் சொல்லி இருக்கேன்..

பவித்ரா கலவரமானாள்.. மாமி... நா கெளம்பரேன்.. உங்களுக்கு புடுச்சத வாங்கி வெச்சுடுங்க.. அப்பறம் வந்து வாங்கிக்கறேன்.. வேகமாக கிளம்பினாள்....

இரும்மா.. ரிஷியும் வந்துடுவான்.. அவன் செலக்ஷன் ரொம்ப நன்னாயிருக்கும்..

உள்ளே கொஞ்சம் படபடக்க செய்வதறியாது நின்றிருந்தாள் பவி..

அவன் தேடியபடி உள்ளே நுழைந்தான்... அம்மாவுடன் இவள் நிற்பதைக் கண்டு கொஞ்சம் முழித்தபடி அருகில் வந்தான்.. இவளைக் கண்டு கொள்ளாததுபோல் நேராக அவன் அம்மாவிடம் போய் நின்றான்..

குபுகுபுவென கோபம் பொங்கியது பவித்ராவிற்கு...

என்னமா.. இங்க.. யாருக்கு கிப்ட்...

நம்ம பவித்ராவுக்கு தான் ரிஷி.. அவள் கூற...

அலட்சியமாய் பவியைப் பார்த்தான்.. பவித்ரா முறைப்புடன் அவனை வெறித்தாள்..

சும்மா எதாவது வாங்கிக் குடுக்கலாமேன்னு.. அன்னிக்கு வீட்டுக்கு வந்தப்ப கூட ஒன்னும் தரலை.. பாவம்... ரிஷி நீ தான் நல்லா செலக்ட் பண்ணுவியே , நல்லதா ஒரு ஜோடி எடுத்துக்குடேன்...

அம்மா.... எனக்கு என்ன தெரியும்.. அதுவும் தேவதை மாதிரி இவ்ளோ அழகா இருக்கறவங்களுக்கு நா எப்டி செலக்ட் பண்றது.. நக்கலாக அவளை பார்த்துக் கொண்டே கூறினான்..

பவிக்கு எரிச்சல் மண்டியது... அமைதியாக இருந்தாள்..

போடா... ஏய் இது ரொம்ப அழகா இருக்கு.. பவித்ரா உனக்கு இது புடுச்சுருக்காம்மா....

ம்ம்ம்... பல்லை கடித்துக் கொண்டு தலை ஆட்டினாள்...

அதை பேக் செய்து அவளிடம் நீட்டினாள்... பெற்றுக் கொண்ட பவித்ரா எழுந்து கொண்டாள்...

நான் கெளம்பரேன் மாமி..

ம்ம்ம்.. சரிம்மா... சந்தோஷம்.. நாங்களும் கெளம்பறோம்.. மூவரும் கடையைவிட்டு வெளிவர...

எதிரே பார்த்த சுந்தரவல்லி கண்விரித்தாள்... " ஏய் கோமதி.. ரிஷி.. கோமதி மாமிடா.. இரு ரெண்டு வார்த்தை பேசிட்டு வந்துடறேன்.. அவனது பதிலை எதிர்பாராமல் ரோட்டைக் கடந்து அந்தப் புறம் சென்றாள்...

பவியும் ரிஷியும் தனியாக விடப்பட்டனர்...!

ரிஷி எங்கோ மூலையை பார்த்து நிற்க இதுதான் சரியான சமயமென அவனை அழைத்தாள் பவித்ரா..

ஹலோ... ஹலோ மிஸ்டர்...

குழப்பமாக திரும்பியவன் என்ன என்பது போல் பார்த்தான்..

லூக்... நேர விஷயத்துக்கு வர்ரேன்.. நீ நெனைக்கறது மாதிரி நான் வனத்துல பறக்கறவ இல்ல.. நான் தேவதைதான்.. அதுல எனக்கு பெருமைதான்.. ஆனா கண்ண மூடிட்டு திரியறவ இல்ல.. அன்னிக்கு நீ பேசினத்துக்கு உன் வீடுன்னு பாக்காம சத்தம் போட்ருப்பேன்... பட் , நா அந்த மாதிரி பொண்ணு கெடையாது.. மேனர்ஸ் இல்லாம உன்னமாதிரி பேச.. நான் கற்பனைல மெதக்கறவ இல்ல.. நல்லா கண்ணத் திறந்து தரையப் பாத்து நடக்கறவதான்.. தேவைனா நேருக்கு நேரா பேசற தைரியமும் இருக்கு.. உனக்கு என்ன பெரிய இவன்னு நெனப்பா... நான் தப்பு செஞ்சுட்டேன்னு உன்ன மதிச்சு மன்னிப்பு கேக்க வந்தா.. மூஞ்சிய திருப்பிட்டு போற.. சரி , முதல் தரம் ஏதோ கோவத்த மனசுல வெச்சுக்கிட்டு அப்பிடி பண்ணினனு விட்டா , உங்க வீட்டுக்கு வந்து சாரி கேட்ட என்கிட்டையே அப்டி பேசற.. ஆ... நீ ஆம்பளைன்னா , கொம்பா மொளச்சிருக்கு உனக்கு.. சொல்லப் போனா அன்னிக்கு நடந்ததுக்கு நீ தான் எனக்கிட்ட மன்னிப்பு கேட்ருக்கனும்.. தெரியாத ஒருத்தன் மேல விழுந்து கட்டிபுடுச்சா எந்த பொண்ணும் பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டா.. நானாவது திட்டிட்டு விட்டுட்டேன்.. இன்னொருத்தியா இருந்தா அந்த இடத்துலே உன் கன்னம் பழுத்திருக்கும்..

சரி , நீ தெரியாம பண்ணிட்டன்னு தெரிஞ்சப்பறம் நானே வந்து சாரிகேட்டேன்ல.. ஒன்னு அக்சப்ட் பண்ணிருக்கனும்... இல்ல நீயாவது மன்னிப்பு கேட்ருக்கனும்.. அதெல்லாம் இல்லாம பொண்ணுங்க எல்லாரும் ஈகோ புடுச்சவங்க மாதிரி பேசற.. வீணா வம்புக்கு இழுத்து சண்டை போடற ரகம் நான் இல்ல.. தெரிஞ்சுக்கோ.. உன் தப்ப நினச்சு என்கிட்ட ஒரு சாரியாவது கேக்க தோனிச்சா.. ம்ம்.. நீ எவ்ளோ பெரியா ஆம்பளையா இருந்தாலும் எனக்கு கவல இல்ல.. நான் செஞ்சது தப்புன்னா தலகுனிஞ்சு மன்னிப்பு கேப்பேன்.. அதே நேரத்துல என்ன மதிக்காத யாரையும் நான் மதிக்க மாட்டேன்.. இனிமே உன் ஆம்பளத்தனத்த என்கிட்ட காட்டாத.. இதுவே கடைசி.. மைன்ட் இட்.. அழுத்தமாக அதே நேரம் மெல்லிய குரலில் உள்ளிருந்த அத்தனையையும் படபடவென கொட்டித் தீர்த்தாள்..


எதுவும் பேச இயலாமல் மெல்லிய அதிர்ச்சியுடன் அவளையே கண்விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி... முகத்தில் ஈ ஆடவில்லை..

நான் கெளம்பறேன்.. உன் அம்மாகிட்ட சொல்லிடு.. அவனது பதிலை எதிர்பாராமல் விடுவிடுவென கிளம்பினாள் பவித்ரா.. உள்ளுக்குள் பாரம் இறங்கியது போல் இருந்தது...

அவனுக்குள் பாரம் ஏறியது...!!

கோமதி மாமியிடம் பேசிவிட்டு திரும்பிய சுந்தரவல்லி , ரிஷி ரோட்டையே கண்ணிமைக்காமல் பார்த்திருப்பதை கண்டு அவனை உலுக்கினாள்..

ரிஷி.. ரிஷி... என்னடா பிரம்மபுடுச்சவன் மாதிரி ரோட்டையே பாத்துண்டு இருக்க.. பவித்ரா எங்க.... போய்ட்டாளா...

மீண்டவன் மெள்ள தலை அசைத்தான்..

பாவம்டா.. ரொம்ப நல்ல பொண்ணு.. சரி சரி முழுச்சுண்டு நிக்காம வண்டி எடு.. நாழி ஆச்சு....

பவித்ராவின் இத்தனை ஆணித்தரமான பேச்சு அவனை மலைக்க வைத்தது.. வண்டியில் செல்லும் போது அவள் பேசுவதே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.... முதன் முதலாக, தன்மேல் தப்பு இருக்குமோ என்ற எண்ணம் மனதில் குறுகுறுத்தது அவனுக்கு..

வீட்டில் இறங்கியவன் எதுவும் பேசாமல் அவன் அறையை நோக்கி சென்றான். உள்ளுக்கும் ஏதோ ஒரு வித கலக்கம் முதன்முதலாகத் தோன்றியது.. இது வரை எந்த பெண்ணிடமும் இப்படிப்பட்ட போதனையை கேட்டதில்லை.. சின்னவயதிலிருந்து அம்மாவும் அப்பாவும் கூட இத்தகைய அறிவுரையை நடுமண்டையில் அடித்தால் போல் கூறியதில்லை.. அவனை தான் ஆண் என்ற பெருமை கொள்ளும் சிந்தனையுடன் தான் வளர்த்திருந்தனர்.. அப்பாவின் கர்வம் அப்படியே உடம்பில் ஊறி இருந்தது.. கல்லூரித் தோழிகள் கூட இவனை விலகி நின்று பார்த்திருந்தார்களே ஒழியே இவனுடன் உரிமை கொண்டாடியதில்லை.. இவனும் தான் ஓர் ஆண் , அந்த மரியாதையிலே அவர்கள் விலகிச் சென்றார்கள் என்பதை உணரவில்லை..

ஹூம்ம்ம்.. ஒரு நீண்ட பெரு மூச்சு எழுந்தது.. ரூமின் கண்ணாடியின் முன் நின்று தன்னைத் தானே பார்த்துக் கொண்டான்...

தினமும் வனப்புடன் தன்னைக் காட்டும் அந்த கண்ணாடி இன்று ஏனோ அவனை அவ்விதமாகக் காட்டவில்லை..

தவறு செய்து அப்பாவின் முன் நிற்கும் குழந்தை போல் முகம் வாடி இருந்தது.. அவனுக்கே அவன் மேல் பரிதாபம் எழுந்தது.. " சீ.. என்ன பெரிய இவளா.. அவ சொன்னதையே நெனச்சு இப்டி இருக்க.. நீ ஆம்பளடா.. ஆம்பள ஆம்பள மாதிரி தான் இருக்கனும்.. அவ என்னமோ நியாஸ்தினி மாதிரி போதன பண்ணிட்டுப் போறா.. அவமட்டும் ஒழுங்கா.. சாரி கேக்கறாலாம்... நீயும் சாரி கேக்கனுமாம்.. சரியான திமிர் புடுச்சவ.." மனம் ஒரு ஓரமாய் அவனைத் தூண்டி விட்டது.

இருப்பினும் தன் தவறை உணர்ந்து ஒருபுறம் ஊமையாகி நின்றது.. கண்ணாடியையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.. தனைப் பார்க்க ஏனோ பிடிக்கவில்லை.. திரும்பிக் கொண்டான்..

என்ன செய்வதெனத் தெரியவில்லை.. உடைந்து போன நிலையில் மனம் இருந்தது.. அவள் மீது ஒருபுறம் கோபமும் மறுபுறம் குழப்பமும் வந்தது..

அவ நியாயப்படியே வருவோம்.. அன்னிக்கு நான் தெரியாம இடிச்சதுக்கு அவ தான சத்தம் போட்டா.. என்ன ஏதுன்னு சொல்லாம கண்டபடி திட்டினா , எந்த ஆம்பளைக்குதான் கோபம் வாரது.. அது தெருஞ்சும் அவள சட்ட பண்ணாம போனா.. அவளுக்கு கோபம் வருமா... என்னங்கடா நியாயம் இது.. சரி , திட்டிட்டு போனவ போவேண்டியது தான.. எதுக்கு என் பின்னாடி வந்து வந்து சாரி கேக்கனும்.. நான் கேட்டனா.. நான் ஆம்பள.. ஒரு பொண்ணு திட்டினதையே மறந்து அவள கண்டுக்காம போனா.. விடவேண்டியதுதான.. இவள மதிச்சு சாரி கேக்கனுமாம்... சே... இவளுங்கள புருஞ்சக்கவே முடியல.. ஒன்னா கீழே விழ வேண்டியது இல்லைனா தலமேல ஏறி நிக்க வேண்டியது.. கால தரைல வெச்சு நடக்கறவ , தரைய பாத்தே போக வேண்டியது தான.. சும்மா..

தன் மீதான நியாயங்களை அடிக்குக் கொண்டான்.. திடீரென ஒரு கேள்வி எழுந்தது..

ஏன்டா.. அவதான் தன் தப்ப புரிஞ்சுக்கிட்டு மன்னிப்பு கேக்கறாள்ல.. சரின்னு ஒரு வார்த்த சொன்னா கொறஞ்சா போயிடுவ.. அவள சும்மா சும்மா சீண்டினா.. அதான் வெடிச்சுட்டா.. நீ பண்ணதும் தப்பு தான்... அவள்ட்ட நீ சாரி கேக்கறது தான் நியாயம்..

கேள்விக்கு பதில் தெரியாமல் தடுமாறினான்.. இப்படி , ஒரு பெண்கிட்ட மன்னிப்புன்னு எதுவுமே இதுவரை கேட்டதில்லையே.. அது... அது.. ஒரு ஆணுக்கு அழகா.. ஆண்ணா கம்பீரம் தானே.. அடங்கிப் போறதா ஆம்பளத் தனம்.. நான் ஆம்பிள.. ஆம்பளத் தனத்தத தான் காமிப்பேன்.. அவ ஆப்டர் ஆல் ஒரு பொண்ணு அவ தான் அடங்கி போனும்... அதுதான சரி...

முட்டாள்... உன்ன மதிக்கறவள மதிக்காம நீ என்னடா பெரிய... மனம் உரைக்க இடித்திட கொஞ்சமாய் தலை குனிந்தான்..

அவளது ஒவ்வொரு செயலும் கண்முன்னே நிழலாடியது... ஒருதடவ திட்டினவ மறுபடியும் பார்த்தப்ப மன்னிப்பு கேட்டாலே.. இன்னொருத்தியா இப்டி பண்ணிருப்பாளா.. அதையும் அலட்சியமா எடுத்துட்டு போன என்கிட்ட வீட்டுக்கு வந்து கூட சாரி சொன்னாலே.. அப்பவும் அவள சீண்டி தான பாத்தேன்.. அவ சொன்னமாதிரி அங்கயே எல்லாருக்கும்
முன்னாடியும் என்ன அவமானப் படுத்தி இருக்கலாம்... ஏன்.. இப்போ கூட அம்மா இருக்கும் போது கூட பொறுமையாத்தான இருந்தா.. யாரும் இல்லாத சமயத்துல தான தன்னோட உணர்வுகள வெளிப்படுத்தினா.. ஒருத்தியால எத்தன அவமானத்த பொறுத்துக்க முடியும்... ஹூம்..

அவ பொறுப்பானவதான்.. நாகரீகம் தெரிஞ்சவதான்.. இல்லேன்னா இப்டி நடத்திருப்பாளா.. ஷீ இஸ் குட்..

அவள போய் சாதாரணப் பொண்ணா நெனச்சு ரொம்ப தப்பா பேசிட்டேனே.. ரியலி ஐ யம் அஷ்ஷேம் ஆஃப் மி.. என்ன நினச்சு உண்மையா நான் வெக்கப்படறேன்.. தைரியமான பொண்ணுதான்.. மெள்ள சிரித்துக் கொண்டான்..

அவன் மனதில் அவள் நல்ல விதமான பிம்பத்துடன் இப்பொழுது தெரிந்தாள்..!
 

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 7

தன்னுடைய ஆத்திரம் அத்தனையும் ரிஷியிடம் கொட்டிவிட்டு விறுவிறுவென வீட்டிற்குள் வந்த பவித்ரா பாட்டி ஹாலில் அமர்ந்திருப்பதை பார்த்தும் பார்க்காதது போல் உள்ளறைக்கு சென்றாள்..

சுகுமாரி பாட்டிக்கு விநோதமாய் இருந்தது.. பவி என்றும் இத்தனை பதட்டத்துடன் இருந்ததில்லை.. அவளது செயல் புதிதாகவும் விநோதமாகவும் இருந்தது பாட்டிக்கு..

சில நாட்களாகவே பவியின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததை உணர்ந்தவள் அவளை சமாதானம் செய்யலாமென மெள்ள பவியை அழைத்தாள்..

பவி.... பவி... இங்க கொஞ்சம் வரியா..

எரிமலை கொதித்து அடங்கினாலும் சூடு தனியாது என்பது போல் அவனிடம்
கொட்டித்தீர்த்த பின்னும் உள்ளுக்கும் அனல் பொங்கிக் கொண்டுதான் இருந்தது...

மனதிற்குள் தன் ஞாயத்தை , தான் தவறாக அவனிடம் பேசவில்லை என தர்கம் செய்து கொண்டிருந்தாள்... அவ்வேளையில் பாட்டியின் அழைப்பு எரிச்சலை கொடுக்க....

விடுவிடுவென வந்தவள் கொஞ்சம் வெறுப்புடன் அதிர்ந்து கேட்டாள்.." என்ன பாட்டி.... இப்போ என்ன வேணும் உனக்கு"

அவளது இந்த எதிர்ப்பை எதிர்பார்க்காத பாட்டியின் முகம் சட்டென கருத்தது.. புருவங்கள் குழப்பத்துடன் குறுகின...

ஒரு நிமிடத்தில் தன் சுயத்திற்கு வந்த பவி பாட்டியை பார்க்க தடுமாறினாள்.. " சொல்.. சொல்லு பாட்டி..." கண்கள் மன்னிப்பு கேட்டது..

அவளது முகத்தை சஞ்சலத்துடன் பார்த்த பாட்டி " ஒன்னுமில்ல... நீ வேலைய பாரு.." சுறுக்கெனக் கூறிவிட்டு முகத்தை தாழ்த்திக் கொண்டாள்..

தனக்கிருந்த மனப் புழுக்கத்தில் என்ன சொல்வதெனத் தெரியாமல் வேகமாக உள்ளே சென்றாள் பவித்ரா...

பவியின் இந்த திடீர் மாற்றத்தை பாட்டியால் ஏற்க முடியவில்லை.. மனதைப் பிசைந்தது.. எத்தனையோ முறை பவி கோபப் பட்டிருக்கிறாள்.. இருந்தாலும் அவள் முகத்தில் இத்தனை வெறுப்பு தெரிந்ததில்லை.. மனம் அலைக்கழித்தது சுகுமாரிக்கு.. தன்னிடமிருந்து பவித்ரா விலகுகிறாளோ என்ற தவிப்பும் தன்னை அவமரியாதை செய்த கோபமும் ஒருசேர அவளை கலங்கச் செய்தது.. சோர்ந்து போன முகத்துடன் தன் அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள்.. பவித்ரா திரும்ப வந்து தன்னை சமாதானம் செய்வாள் என்ற அவளது நம்பிக்கை பொய்த்துப் போனது.. கண்களை மூடிக் கொண்டாள்.. காய்ந்த விழி கொஞ்சமாய் நீர் பூசிக் கொண்டது..!

சொல்லத்தெரியாத உணர்வுடன் தன் அறையில் அமர்ந்திருந்தாள் பவித்ரா.. உணர்வுக் கலவையாக இருந்தது மனம்.. வெறுப்பு , வேதனை , கோபம் , சோகமென உணர்வுகள் மாறி மாறி பிரதிபலித்தன..

இருவரிடம் இருந்த பாசப் பாலத்தில் நூலிழை விரிசல் கோடிட்டது..!

இரவெல்லாம் உறக்கமின்றி புரண்டு புரண்டு படுத்தாள் பவித்ரா.. இதுவரை யாரிடம் உணர்ச்சிப் பீரிட பேசியதில்லை.. ரிஷியிடம் மட்டும் ஏன் இத்தனை கோபம்.. யாரோ மூன்றாம் மனிதன் போல் அவனை புறக்கணிக்க மனம் இயலவில்லையே.. அவனோடு கொட்டித்தீர்த்த கோபம் பாட்டியையும் சுட்டுவிட்டதே... " சே.. பாட்டிட்ட நான் அப்டி பேசிருக்கக் கூடாது... என்னதான் உள்ளுக்குள்ள கோவமா இருந்தாலும் பாட்டிட்ட எரிஞ்சு விழுந்திருக்க வேண்டாம்.. பாவம் முகம் எவ்ளோ சுருங்கிடுத்து.." மனம் கொஞ்சம் சஞ்சலப் பட்டது பவிக்கு...

இங்கே....

சுகுமாரிப் பாட்டியும் பவியை நினைத்து தூக்கமின்றி புரண்டு கொண்டிருந்தாள்.. " அவ்ளோ பெரிய மனுஷி ஆய்ட்டாளா.. அவள இன்னும் குழந்தையாத்தானே பாத்துண்டு இருக்கேன்.. எதனால இத்தன கோபம்.. பாட்டிய பிடிக்கலயோ.. ஒரு வயசுக்கு மேல பாசம் அன்பெல்லாம் மறஞ்சுதான் போயிடுறது.. அவளும் வளந்துட்டாள்யோ.. தன்னிச்சையா முடிவெடுக்கற வயசு.. இனிமே என்கிட்ட அன்பா நடந்துப்பாளா.. இனிமே நான் அத எதிர்பார்க்க கூடாது.. பாவம். அவ கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சதிலேந்து தானே பவி இப்டி மாறி போய்ட்டா.. இனி, நான் சொல்றதெல்லாம் கேட்டுப்பாளா.. ஹூம்.. ஆனா, அவ வாழ்க்கை இன்னொருத்தரோ கட்டாயம் ஆகிடக் கூடாது... அவ விருப்பம் போல சந்தோஷமா இருக்கனும்.. இத.. யார்க்கிட்ட சொல்றது.. அவளுக்கு தெளிவாப் புரியறமாதிரி யார் பேசறது.. நடேசன்கிட்ட சொன்னா ஆகாது.. அவனுக்கு பொண்களோட மனசு எங்க புரியும்.. பங்கஜத்துக்கிட்ட சொல்றதுதான் சரி.. தன் பொண்ணோட வாழ்க்கைய பத்தின கவலை அம்மாக்குத்தானே இருக்கும்.. நாளைக்கு முதல்வேளையா பங்கஜதுகிட்ட சொல்லி.. பவித்ராகிட்ட பேசச் சொல்லனும்.." மனசுக்குள் தீர்மானித்தவாறு கண்களை மூடிக் கொண்டாள் சுகுமாரி பாட்டி.. தூக்கம் ஏனோ தூரமாகியது.

அதிகாலையே எழுந்து அமர்ந்த பாட்டியின் சிந்தனை முழுதும் பவியின் மீதே இருந்தது.. " அவ என்னதான் கோபப்பட்டாலும் என் பேத்திதானே.. உடனே பங்கஜத்துக்கிட்ட சொல்லிடனும்.. நேரத்தைப் பார்த்தாள்.. மணி நாலைத் தொட்டுக் கொண்டிருந்தது.. ஹூம்.. பெருமூச்சுடன் அப்படியே அமர்ந்திருந்தாள்.. உறக்கமில்லா இரவும் மன உலைச்சலும் சேர்த்து தலையை கனக்க வைக்க மனம் மெள்ள பின்னோக்கி சென்றது..

" என்ன எழவுக்கு இப்படி ஓரமா ஒக்காந்துண்டு இருக்கே.. போ..
போய் தயாராகு.. ருக்கு.. என்னடி பாத்துண்டு இருக்கே.. அவளக் கூண்டிண்டு போய் தாயார் பண்ணு.. அவாள்லாம் வந்துடுவா.. "

ஏதோ மனபயத்தில் சொல்லத் தெரியாமல் அமர்ந்திருந்த சுகுமாரிக்கு அழுகையாய் வந்தது..

" வாடி கண்ணு.. எதுக்கிப்போ கண்ண கசக்கிண்டு இருக்கே.. பயப்படப் படாது... அவாள்லாம் வந்து உன்ன பாத்துட்டு போப்பறா.. அவ்வளவு தான்.. உடனே அவாத்துக்கு உன்ன அனுப்சிடுவோமா.. மண்டு.. அவாளுக்கு உன்னப் பிடிக்கனும் , தக்ஷணை ஒத்து வரனும்.. அதுக்கபறம் நல்ல நாள் பாத்து , பெருமாள் அனுகிரஹத்தோட உன்ன கர சேக்கனும்.. கொஞ்சநாள் நீ நம்மாத்ல தான் இருப்பே.. "

"பாவம் குழந்தை... இப்பவே அவாத்துக்கு அனுப்சுடுவோம்னு பயப்படறா.. சொல்லத் தெரியாதைக்கு அழறா.. நான் பாத்துக்கறேன்... நீங்க பாருங்கோ.." சமாதனமாய் பேசினாள் ருக்மணி...

சுகுமாரியை அழைத்துக் கொண்டு உள்ளறைக்குள் சென்று அலங்காரத்தை ஆரம்பித்தாள்... ஏனோ மனசை அழுத்தியது சுகுமாரிக்கு..

" அம்மா... எழுந்துட்டேளா... மணி ஆகலயே.. என்னம்மா ராத்திரி சரியா தூங்கலயா.. கண்ணல்லாம் செவந்து போயிருக்கே.. " பாந்தமாய் பேசியபடி உள்ளே நுழைந்தாள் பங்கஜம்..

கவனம் வெளிவந்த சுகுமாரி அவளை பார்த்து தலை அசைத்தாள்.. " பங்கஜம்.. இங்க வா.. உன்கிட்ட பேசனும்.."

" ஏம்மா உடம்புக்கு ஏதாவது படுத்தறதா... " கொஞ்சம் கலவரத்துடன் அருகில் வந்தாள் பங்கஜம்.

" இங்க உட்கார்... நேக்கு ஒன்னுமில்லை.. பவித்ராவ பத்திதான்.."

" அவளுக்கு என்ன...." குழப்பத்துடன் ஏறிட்டாள் பங்கஜம்..

" வந்து... கொஞ்ச நாளா அவோ அமைதியா இல்லையே... கவனிச்சியா.."

கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்த்தாள்... அவளுக்கு என்னம்மா.. நன்னாத் தானே இருக்கா... நேக்கு ஒன்னும் வித்யாசம் தெரிலீயே.."

" இல்ல பங்கஜம்.. அன்னிக்கு கல்யாணப் பேச்சு எடுத்ததிலேந்து அவோ சரியா இல்லை.."

" என்னம்மா... இப்டி சொல்றேள்... கல்யாணம் வேண்டாங்கறாளா..." நெஞ்சம் படபடக்கக் கேட்டாள் பங்கஜம்..

" அப்டி இல்லே பங்கஜம்.. அவ சின்ன பொண்ணு.. பெரியவா பேச்சக் கேட்டு நடக்கறவோ.. அம்மா அப்பா பேச்ச மீறாதவ.. இருந்தாலும்.. அவளுக்குன்னு தனிப்பட்ட ஆசை இருக்கும்லயா..."

" நாம என்னம்மா அவ ஆசைக்கு தடையா இருக்கப் போறோம்.. வாழப்போறவ அவ தான்.. அவளுக்கு ஏத்த வரனாப் பாத்துதானே முடிக்கப் போறோம்.. "

" சரிதாம்மா... இருந்தாலும் அன்னிக்கு நடேசன் அவள்ட சொல்லாம , அவ ஆசை என்னனு கூட கேட்காம , என்கிட்ட பேசினது அவளுக்கு ஒருமாதிரி ஆயுடுத்து.. தனியா என்கிட்ட பொலம்பிட்டா.. தன் முடிவ கேட்காம நாமெல்லாம் சேந்து வரன முடுச்சுடுவோமோன்னு பயப்படறா.. அன்னிலேந்து அவோ சரியா பேசறது கூட இல்லை... ஏதோ பறிகொடுத்தவ மாதிரி இருக்கா... நேத்துக் கூட நான் சாதாரணமா கூப்பிட்டப்போ திடீர்னு கோவப் பட்டுட்டா.. நேக்கு ஒரு மாதிரி ஆயுடுத்து.."

கண்கள் விரிய அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் பங்கஜம்..

" இப்போ என்னம்மா பண்றது.."

" நான் திரும்ப போய் அவள சமாதானம் பண்ண முடியாது.. வெடுக்குனு எதாவது பேசிட்டான்னா நேக்கு தாங்காது.. அப்படி பேசற பொண்ணு கெடையாதுதான்... அதான்...."

" சொல்லுங்கோ.. "

" நீ போய் பாந்தமா அவள்ட்ட பேசி அவளுக்கு புரியவை. நம்மாத்ல அவ ஆசைக்கு மீறி எதுவும் கட்டாயமா செஞ்சுடமாட்டோம்னு.. சரியா.."

கொஞ்சம் கவலை மேலிட தலை அசைத்தாள்..

" பங்கஜம்.... பாத்து சாந்தமா பேசும்மா.. குழந்தை ஏற்கனவே சஞ்சலத்தோட இருக்கா... இன்னொரு விஷயம்.. இது நடேசனுக்கு தெரிய வேண்டாம்.. தெருஞ்சா பாவம் ரொம்ப சங்கடப் படுவான்... என்ன..."

" ம்ம்ம்... சரிமா.." தலை அசைத்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்..

அவளிடம் சொல்லியதில் மனதில் சிறிது பாரம் குறைய மெள்ள படுத்துக் கொண்டாள் பாட்டி..

உள்ளுக்குள் இருந்த தவிப்பு அந்த அதிகாலைக் குளிரில் மறைந்து போயிருந்தது பவித்ராவிற்கு... என்றும் போல் அன்றும் விடிகாலையில் எழுந்து குளிக்கச் சென்றாள்.. சில்லென்ற தண்ணீர் தலையில் வழிய சிலர்ப்புடன் உடலில் ஓர் புத்துணர்வையும் தந்தது.. மனதும் சந்தோஷத்தில் குதூகலித்தது... பாட்டியிடம் கோபம் காட்டியதை மறந்து ரிஷிக்கு சரியான பதிலடி கொடுத்ததை நினைத்து மனம் உற்சாகம் கொண்டது.. அதை ரம்யாவிடம் சொல்ல வேண்டும் என்ற ஆவல் மனதில் பொங்க வேகமாகக் குளித்து முழுகி வாசலில் சாணம் தெளித்து கோலம் வரைந்தாள்.. அன்று ஏனோ கோலம் மிக அழகாய் வந்தது போல் ஓர் நிறைவு.. அவ்வப்பொழுது ரிஷியின் அதிர்ந்த முகம் தோன்றி சிரிப்பை மூட்டியது..

கொஞ்சம் பூரிப்புடன் வளைய வந்தாள்.. எப்பொழுதும் போல் பாட்டிக்கு தேவையானதை கொடுத்துவிட்டு வந்தாள்.. சிரித்து ஸ்நேகமாய் பேசினாலும் ஏதோ ஒன்று இருவருக்குள் வெளிப்படையாகப் பேச தடையாய் இருந்தது..

காலை உணவை முடித்துக் கொண்டு அம்மாவிடம் சொல்லிவிட்டு ரம்யா வீட்டிற்கு கிளம்பினாள்.

வீட்டின் வாசலின் முன் பிரஷ்ஷை வாயில் குதப்பியபடி அமர்ந்தாள் ரம்யா...

"ஹாய் ரம்மி.." சந்தோஷத்துடன் உள்ளே நுழைந்தாள் பவித்ரா...

ஆச்சர்ய குழப்பத்துடன் கண்விரித்தாள் ரம்யா.. பொறு என கைகளால் அமர்த்திவிட்டு உள்ளே சென்று முகம் கழுவிக் கொண்டு வந்தாள்..

"ஓய்.... என்னடி இது ஆச்சர்யம்... விடிக்காலைலே என்ன பாக்க ஓடி வந்துட்ட.."

"விடிக்காலைலயா... ஏய்.. டைம் என்ன... ஒன்பது மணி ஆயிருச்சு.. நீ இன்னும் பல்லு கூட தேய்க்காம ஒக்காந்துக்கிட்டு இருக்க... டர்ட்டி ஃபெல்லோ..."

"ஹூம்.. நமக்கெல்லாம் ஒன்பது மணிக்கு மேலதான் விடியும்.. இன்னிக்கு என்னமோ சீக்கரம் முழுச்சுட்டேன்... அதவிடு.. அப்பறம்.. என்ன முகத்துல சந்தோஷக் களை தாண்டவமாடுது.. என்ன விஷயம்.."

"ஒன்னுமில்ல டி... சும்மா உன்ன பாத்துட்டு கடல போடலாமேன்னு.." சிரித்தாள்..

"அடியே... ஒட்டகம்.. விஷயம் இல்லாம நீ வரமாட்ட.. சொல்லு.. நானும் சந்தோஷப் பட்டுக்கறேன்.."

"அது... அது.. அவன லெப்ட் அன்டு ரைட் வாங்கிட்டேன்.. ஹா.. ஹா.."

"யாரு.... அந்த கோயில் பார்ட்டியா.. ஆ.. சூப்பர்டி... எப்போ.. "

"ஹ்ம்.. நேத்தே தான்.. நீ வேற என்ன ஏத்திவிட்டுட்டியா.. அந்த கடுப்போட போயிட்டு இருந்தேனா.. கரெக்ட்டா கோயில் பக்கம் அந்த மாமி வந்தாங்க.. என்னடா இது சங்கடம்னு ,போலாம்னு கெளம்பறதுக்குள்ள அவனும் வந்துட்டான்.. இதுல ஃகிப்ட் வேற..

அவன் வாங்கித்தந்தானா... ஆச்சர்யத்துடன் கேட்டாள் ரம்யா..

சீ. சீ.. அவனா... சரியான ஈகோ பார்ட்டி.. அந்த மாமிதான்.. ஏதோ ஆசையா வாங்கித்தர்ரேன்னு.. வந்தவன் என்ன கண்டுக்காம அவன் அம்மாகிட்ட பேசிட்டு இருந்தான்.. அந்தமாமி சும்மா இல்லாம அவன செலக்ட் பண்ண சொன்னாங்களா.. அதுக்கு நக்கலடிச்சான்.. செமயா ஏறிருச்சு.. அந்த மாமி அந்த பக்கம் போனப்பறம்.. தனியா சிக்கினான்... பிடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டேன்.. அவன் முகத்த பாக்கனுமே... ஈயாடல.. ஹாஹா..

சூப்பர்டி பவி.. இப்டி பட்டவங்கள சும்மாவிடக்கூடாது.. என்ன திமிரு அவனுக்கு.. வெல் டன்...

ஹூம்.. எனக்கே கொஞ்சம் பாவமாப் போச்சு.. நான் இப்டி பேசுவேன்னு அவன் எதிர்பார்க்கவே இல்ல.. திருப்பி எதுவுமே பேசல..

ஹா.. இப்போ புருஞ்சிருக்கும் உன்னப் பத்தி.. இனிமே உன் வழிக்கு வரமாட்டான் பயபுள்ள... ஹாஹா....

ஆமாடி.. மனசு இப்பத்தான் ஆறிச்சு.. அதான் உன்கிட்ட சொல்லனும்னு வந்தேன்.. இருந்தாலும் ரொம்ப கோபப்பட்டுட்டோமோன்னு சின்ன வருத்தம் எனக்கு..

அட விடுறி.. சரியாத்தான் பேசிருக்க.. வா.. சூடா பில்டர் காபி சாப்பிட்டு கொண்டாலாம்.. ஸ்வீட் எடு.. கொண்டாடு... ஹாஹாஹா...

அவளுடன் சேர்ந்து சிரித்தாலும் பவியின் மனதில் அவன்மீது ஓர் வருத்தம் ஓடியபடியே இருந்தது...

எல்லா அரட்டையும் முடிந்து மதியம் வீட்டிற்கு வந்தாள்..

அவளிடம் பேச சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தபடி காத்திருந்தாள் பங்கஜம்..

நடேசன் இல்லாத அந்த நேரத்தில் தான் பவியிடம் பேசக்கூடும் என்பதால் அவளிடம் கேட்டுவிடலாம் என அவளறைக்குள் நுழைந்தாள் பங்கஜம்..

எங்கு தொடங்குவது , எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் கொஞ்சம் தயங்கியபடி பவியையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

என்னம்மா..

ஒ.. ஒன்னுமில்ல... ரம்யா ஆத்துக்கு போய்ட்டு வந்துட்டியா.. அவாத்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா..

ம்ம்ம்... தலையசைத்தவள் பங்கஜம் ஏதோ கேட்கத் தடுமாறுவதைப் பார்த்து குழம்பினாள்...

என்னம்மா... எதுக்கோ தயங்கறியே.. என்ன விஷயம்.. சொல்லு..

ம்ம்ம்.. பவி... உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லயாடி.. நேரடியாக கேட்டாள்..

கொஞ்சம் அதிர்ச்சி கலக்க விழித்தவள் அம்மாவை உற்றுப் பார்த்தாள்...

அ... அப்டிலாம் ஒன்னுமில்லம்மா.. ஏன்... இந்த திடீர் சந்தேகம் இப்போ....

இல்லம்மா.. அப்பா கல்யாணப் பேச்சு எடுத்ததுலேந்து நீ ஒருமாதிரியா இருக்கே.. அதான்..

பவிக்கு புரிந்தது.. பாட்டியின் வேலை என்று.. கொஞ்சம் சிரிப்பும் வந்தது...

பாட்டி ஏதாவது சொன்னாளா..

சே.. சே.. பாட்டி எதுக்குடி சொல்றா.... எனக்கே நன்னா தெரியறது.. ஏதோ சிந்தனைலயே இருக்கேன்னு.. பெத்த அம்மாக்கு தெரியாத தன் பிள்ளையப் பத்தி.. நானே தான் கேக்கறேன்.. சொல்லு.. உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லியா.. உனக்கு பிடிக்காம நாங்க எந்த வரனையும் முடிக்க மாட்டோம்.. ஒத்த பொண்ணு.. உன் கல்யாணம் உன் இஷ்டப்படி ஜாம்ஜாம்னு நடக்கும்.. சரியா.. நீ மனசப் போட்டு அலட்டிக்காத.. அப்பாட்ட நேரம் வரும்போது நான் பேசறேன்...

பவிக்கு ஒருபக்கம் சிரிப்பும் ஒருபக்கம் பாவமாய் இருந்தது.. ரிஷியினால் தான் மனசங்கடம் கொண்டதை எப்படி சொல்வாள்..

அம்மா... அது எனக்கு தெரியும்மா.. இருந்தாலும் படிப்பு முடுச்சுட்டு திறமையா கொஞ்சநாள் வேல பாத்து சம்பாதிக்கனும்னு ஆசை.. அதுக்குள்ள அப்பா கல்யாணம் அது இதுன்னதும் மூட்அவுட் ஆயிட்டேன்.. அவ்ளவு தான்.. அப்பாட்ட சொல்லி ஒரு ஒருவருஷமாவது கல்யாணத்த தள்ளிப்
போடு.. அது போதும்..

ஹ்ம்ம்.. என்னமோடிமா.. காலாகாலத்ல உன்ன ஒருத்தன் கையில புடுச்சு கொடுத்துட்டா நாங்க நிம்மதியா இருப்போம்.. சரி.. நான் பேசறேன்.. கொஞ்சம் சமாதானத்துடன் அங்கிருந்து சென்றாள் பங்கஜம்..

அப்படி இப்படி என்று ஒருவாரம் ஓட...

அன்று...

ஹாலில் அமர்ந்து டீவியை பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா..

சுகுமாரி பாட்டியும் அமர்ந்திருக்க , பங்கஜம் காயை நறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்..

பவியின் மொபைல் சினுங்கியது.

யாராக இருக்குமென எடுத்துப் பார்த்தாள்.. புது நம்பராய் இருந்தது.. எடுத்து அட்டண்ட் செய்தாள்..

"ஹலோ... யாரு..."

"ஏய்.. பவித்ரா.. நான் தான் சுந்தரவல்லி.. நன்னாருக்கியா.. "

அய்யய்யோ... இது எங்க போன்ல வந்தது.. மனசுக்குள் கலவரமாகி சுதாரித்தாள்..

"ஆ.. ஆ.... மாமி.. நல்லா இருக்கேன்.. என்னோட நம்பர்.... உங்கள்ட்ட.... எப்டி.. "

" ஏய்.. மறந்துட்டியா.. அன்னிக்கு எங்காத்துக்கு வரச்சொன்னப்போ உன் நம்பரக் கேட்டேனே... நீதான் குடுத்தியே.. மறந்துட்டியா.. ஹாஹா..."

சே.. தலையில் இடித்துக் கொண்டாள்... "ஆ.. ஆமா மாமி மறந்தே போய்ட்டேன்.. எப்டி இருக்கீங்க.." முகம் அஷ்ட கோணலாய் கதக்களி ஆடியது...

"ரொம்ப நன்னா இருக்கேண்டிமா... இப்போதா உன்ன பாத்தா மாதிரி இருக்கு.. அதுக்குள்ளயும் ஒருவாரம் ஓடிடுத்து.. ஹா..ஹா.."

"ஹிஹி... ஆமால்ல...." அசடு வழிந்தாள். அய்யோவென இருந்தது பவிக்கு... இது எதுக்கு போன் பண்ணித் தொல்ல பண்றது.. ஹூம்.. அவன் விட்டாலும் இது விடாது போலிருக்கே.. மனதில் கருவிக் கொண்டாள்..

"சொல்லுங்கோ மாமி.. என்ன விஷயம்.."

"ஏண்டிமா.. விஷயம் இருந்தாத்தான் உன்னண்ட பேசனுமா.. சும்மா கால் பண்ணக் கூடாதா... ம்ம்ம்..."

"அய்யோ.. அப்டிலாம் இல்லமாமி.. நீங்க எப்ப வேணா கால் பண்ணலாம்.. நான் சும்மாதானே இருக்கேன்..." அழுத்தமாகச் சொன்னாள்..

"என்னது...." மாமி குழப்பமாக

"ஒன்னுமில்ல மாமி.. சொல்லுங்க.."

"வர்ர ஞாயித்துக்கிழமை நீ ஃப்ரீ தானே.."

அய்யயோ..... திரும்ப வீட்டுக்கு கூப்பிடவா.. மனதிற்குள் படபடத்தாள்..

"இ.. இல்ல மாமி... அன்னிக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு..."

"என்னது.. சன்டே ஸ்பெஷல் கிளாஸா.."

அய்யயோ கண்டுபுடுச்சுடுத்தே.. " இ... இல்ல மாமி.. ப்ரண்ட்... பிரண்ட் ஆத்ல.. க்ரூப் ஸ்டடியத்தான்.. ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லிட்டேன்.."

"நோ.. அன்னிக்கு உனக்கு ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இருக்கு.. நீ வர்ர.. "

குழப்பத்தின் உச்சத்திற்கு சென்றாள் பவி... அன்னிக்கு மாதிரி எதாவது நகைக் கடைக்கு கூண்டிண்டு போய் அத வாங்கித்தறேன் இத வாங்கித் தறேன்னு எழவெடுக்கப் போறது.. பதைபதைத்தாள்..

"மாமி.... க்ளாஸ.. சே க்ரூப் ஸ்டடிய மிஸ் பண்ணக் கூடாதே..."

"ஒருநாள் மிஸ் பண்ணா குடி முழுகிப்போயிடாது... நீ வர்ரே... ரிஷி கூட நீ வருவியான்னு ஆர்வமா கேட்டான்..."

"என்னது.... " அந்த வார்த்தையைக் கேட்டதும் ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தது.. உள்ளே ஒரு குறுகுறுப்பு..

"அ.. அப்டியா... எங்க.. எங்க மாமி வரனும்.."

இடத்தைக் கூறி மாமி போனைக் கட்செய்ய... பவியின் முகத்தில் அவளை அறியாமல் ஓர் பிரகாசம் குடிகொண்டது..!
 

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் திங்கள்..!

அத்யாயம் - 8

மாமியிடம் பேசி போனை கட் செய்ய..

யாரு பவி போன்ல.. பங்கஜம் கேட்டாள்..

அதான்மா.. கோயில்ல ஒரு மாமிய பாத்தேன்னு சொன்னேன்ல.. அவங்க தான்...

என்னவாம்..

சன்டே... எதோ... ஏதோ.. பங்ஷனாம்.. வரனும்னு சொன்னாங்க..

அப்டியா.. போய்ட்டு வாயேன்.. சும்மாதான இருப்பே.. நாலு எடத்துக்கு போய் நல்லதா நாலு மனுஷாள பாத்து பழகிக்கனும்.. போய்ட்டு வா..

ஹூம்... எனக்கு தானே தெரியும்.. மனதிற்குள் பதிலளித்தாள்..

ஞாயிற்று கிழமை..

கொஞ்சம் படபடப்பாக இருந்தது பவிக்கு.. ரிஷி என்னை கேட்டானாமே.. என்னவா இருக்கும்.. புத்தி மாறிடுத்தா.. அடங்கிப் போயிட்டானா.. இல்ல.. என்ன கடுப்பேத்த கேட்ருப்பானா.. என்ன இருந்தா என்ன.. போயிதான் பாப்போமே.. மனதிற்கு சமாதானம் சொல்லி கிளம்பினாள்..

சுந்தரவல்லி சொன்ன இடத்திற்கு சென்று அவளைத் தேடினாள்.. மெயின்ரோடில் இருபுறமும் கடைகளாக இருக்க,சுற்றிச் சுற்றி பார்த்தாள்.

ஒரு பத்து நிமிடம் செல்ல, எதிரே கையை ஆட்டியபடி வந்தாள் சுந்தரவல்லி..

நீண்ட பெரிய சுடிதார் அணிந்து கண்களுக்கு குளுமை கண்ணாடி அணிந்திருந்தாள்.. பவிக்கு ஒரு நிமிடம் சந்தேகம் வர முழித்தாள். அவள் அருகில் வர வரத் தான் தெரிந்தது அது சுந்தரவல்லி என்று. கொஞ்சம் ஆச்சர்யப்பட்டு போனாள்..

" என்னடிம்மா... அப்டி ஆச்சர்யமா பாக்கறே.."

" ஒ... ஒன்னுமில்ல மாமி.." கண்கள் அவளை மேலும் கீழும் மேய்ந்தது.

" ஓ... சுடிதார் போட்டுண்டு இருக்கேன்னு பாக்கறியா.. ஹா.. ஹா.. கோயில் குளம்னு போனாத்தான் புடவை.. மத்தபடி சுடிதார் தான்.. இந்த ட்ரெஸ்ல நன்னாருக்கேனா.. ஹா.."

" ரொம்ப நன்னாருக்கேள்..." பபூன்போல பெரிய கெளன் ஸ்டைல் சுடிதாரில் அவளை பார்க்க சிரிப்பாய் வந்தது பவிக்கு.. அடக்கிக் கொண்டாள்..

" வா.. போகலாம்.. " பவியை கூட்டிக் கொண்டு அந்த கடைத் தெருவின் வழியே சென்றாள்..

இன்று என்ன களேபரம் செய்யப் போகிறாளோ என மனம் தடதடத்தது..

கொஞ்சம் தூரத்தில் ரிஷி நிற்க , அவனைப் பார்த்தவள் கண்கள் கொஞ்சம் மின்னியது.. அருகில் இருவரும் சென்றனர்..

" டொட்டடொய்ங்ங்ங்.... வாயில் பீஜிஎம் போட்டுக் கொண்டே கைகளை விரித்து எதிரே காட்டினாள் சுந்தரி..

அங்கே..

ஊறுகாய் வகைகளும் , வடகம் வத்தல் என பலப்பல உணவுப் பண்டங்கள் ஒரு டேபிளின் மேலே அடிக்கி வைக்கப் பட்டிருந்தது..

முகம் சுருங்க சுந்தரவல்லியின் முகத்தை ஏறிட்டாள் பவி.. புருவம் நெறிந்தது..

" தி இஸ் அவர் பையோ நேசுரல் ஃபுட் பிராடக்ட் ஸ்டால்.. ஹவ் இஸ் இட்.. நைஸ்னா.." அகலச் சிரித்தாள்..

அதிருப்தியில் இருந்த பவியின் முகம் வலுக்கட்டாயமாக புன்னகையை பரவ விட்டது..

" வாவ்... சோ நைஸ் மாமி.. இது.. இது.. உங்க ஸ்டாலா.."

" எஸ்... எங்க லேடிஸ் கிளப்ல மாசம் ஒருதரம் இந்த மாதிரி ஸ்டால் போடுவோம்.. அதுல வர்ர பணத்த ஏழை குழந்தைகள் படிப்புக்கு கொடுத்துடுவோம்.. அமேசிங் நோ.. " அவள் முகத்தில் பெருமிதம் தாண்டவமாடியது..

"யா... யா..." பவியின் முகத்தில் டன் கணக்கில் அசடு வழிந்தது..

"ரிஷியும் எனக்கு ஹெல்ப் பண்ணுவான்.. யூ நோ.. அவனுக்கு சமூக சேவைன்னா ரொம்ப இஷ்டம்.. "

ரிஷியை ஏறெடுத்துப் பார்த்தாள்.. மெல்லிய ஸ்நேகப் புன்னகை அவன் கண்களில் நெளிந்தது..

ஹாய்.... ஹவ் ஆர் யூ..

யா.. ஃபைன்.. நீங்க..

எஸ்.. வெரி ஃபைன்.. பற்கள் தெரிய புன்னகைத்தான்..

பவி.. நீயும் எங்களோட க்ளப்ல ஜாயின் பண்ணி சமூக சேவை பண்ணலாம்.. இது எல்டர் லேடிஸ் க்ளப் தான்.. இருந்தாலும் தெரிஞ்சவன்னு கேட்டுப் பாக்கறேன்.. "

" ச.. சரி மாமி.. ஷூயர்.."

" இதப் பாத்தியா.. கத்ரிக்கா ஊறுகாய்.. எங்களோட புது பிராடக்ட்.. இட்ஸ் வெரி டேஸ்ட்டி.. ஒன்னு வாங்கிக்கோ.. இத பாத்தியா.. பொடலங்காய் வத்தல்... திஸ் இஸ் ஆல்சோ....." சுந்தரவல்லி பேசிக் கொண்டே போக பவியின் பார்வை ரிஷியின் மீது பதிந்திருந்தது...

இன்று ஏனோ அவன் அழகாகத் தெரிந்தான்.. சந்தன நிறத்தில் முக்கால் டிராயரும் , குங்குமச் சிவப்பு பனியனும் அணிந்திருந்தான்.. வெண்மையான முகத்தில் செக்கச் சிவந்திருந்த இதழில் புன்னகை விரிந்திருந்தது.. அளவான கருமையான மீசை மேலுதடை மெலிதாய் மறைத்திருக்க அடர் புருவங்கள் வெளிர் கண்களின் மேல் அவ்வப் பொழுது ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.. சுருள் கேசம் சிறு கொத்தாய் முன்னே புரண்டு நெற்றியில் கோலம் வரைந்து கொண்டிருந்தது..

தனை மறந்து சில கணம் அவனை ரசித்தவள் சுந்தரவல்லி அழைக்க சட்டென திரும்பினாள்..

எதையோ காட்டி விளக்கிக் கொண்டிருந்தாள் சுந்தரவல்லி.. சிறு வெறுப்புடன் திரும்பி அவனைப் பார்த்தவள் முகத்தில் மெலிதாய் கோபம் படர்ந்தது..

இரண்டு மூன்று இளம் பெண்கள் அவனைச் சுற்றி சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்க அவன் அவர்களுடன் சுவாரசியமாய் பேசுவது ஏனோ பிடிக்காமல் போனது அவளுக்கு.. ஹூம்... முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..

"டேய் ரிஷி.. பவித்ரா வருவாளான்னு கேட்டியே.. வந்துருக்கா பாரு..
ரெண்டு வார்த்த பேசேன்...

" ஓ.. சாரிம்மா.. கஸ்டமர்கிட்ட பேசின்டு இருந்ததால மறந்துட்டேன்.."

"ஹாய்... எப்டி இருக்கீங்க.. அன்னிக்கு கடைல பாத்தது.. ம்ம்ம்.." என்ன பேசுவதெனத் தெரியாமல் தடுமாறினான்..

அவனது இந்த மாற்றம் பவிக்கு ஒருவித ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது..

"அ.. அந்த.. கிஃப்ட் நல்லா இருக்கா.. போட்டுப் பாத்தீங்களா.. அம்மா செலக்ஷன் எப்பவும் எக்ஸலண்ட்டா இருக்கும்..." சிரித்தான்.

" ரொ...ரொம்ப நல்லா இருந்தது.. தாங்க்ஸ்..." பவிக்கும் என்ன பேசுவதெனத் தெரியவில்லை..

அமைதியாக நின்றிருந்தனர்..

பக்கத்து ஸ்டாலில் இருந்த ஒரு மாமி சுந்தரவல்லியை அழைக்க " பவி.. புராடக்ட்லாம் பாத்துண்டு இரு வந்துட்டரேன்.. மல்லிகா மாமி எதுக்கோ கூப்படறா.. ரிஷி பாத்துக்கோ.." கூறிக் கொண்டே நகர்ந்தாள்..

அவள் செல்ல இருவரும் தனிமையில் விடப்பட்டனர்..

டேபிளில் பரப்பி வைக்கப்பட்டிருந்த பண்டங்களை எடுத்து பார்க்க ஆரம்பித்தாள் பவி..

" இ.. இங்க இருக்கற பொருட்கள் எல்லாம் ரியல் ஹோம் மேட் ப்ராடக்ட்.. லேடிஸ் தயாரிச்சது.. எல்லாமே தரமானதா இருக்கும்.. லேடிஸோட திறமை பொண்ணான உங்களுக்கு தெரியாமப் போகாது.. ஹ்ம்.. நீ.. நீங்களும் வாங்கி சப்போர்ட் பண்ணுங்க.. " கொஞ்சம் படபடப்புடன் மெலிதாய் புன்னகைத்தான் ரிஷி..

"ஹா.. நீ.. நீங்களா லேடிஸ் பத்தி இப்படி பேசறது.. "ஆச்சர்யம் மாறாமல் கேட்டாள் பவி..

"எஸ்.. ஏ.. நானேதான் பேசறேன்.. நான் ஒன்னும் பெண்களுக்கு எதிரி இல்லங்க.. "அவளது கண்களை நோக்கியவாறு ஆண்மை மிடிக்குடன் சிரித்தான்..

" நைஸ்.. " அவனது கண்களை கண்ணோடு நோக்கினாள். இருவரும் புதிதாய் பார்த்துக் கொண்டனர்.. உள்ளுக்குள் ஏதோ ஸ்நேக உணர்வு பரவி இருந்தது..

இதுவரை இருந்திராத பரிச்சய உணர்வு இருவரிடமும் பரவ கொஞ்சம் சகஜமாய் பேச ஆரம்பித்தனர்..

கொஞ்சம் நேரம் செல்ல சுந்தரவல்லி வந்தாள்..

" என்ன பவித்ரா.. புராடக்ட்லாம் பாத்தியா.. புடுச்சிருக்கா.. ரெண்டுபேரும் நன்னா பேசிடுண்டு இருந்தேள் போலவே.. ரிஷிக்கு ஹ்யூமர் சென்ஸ் ஜாஸ்தி.. கொஞ்சம் கூச்ச சுபாவம்.. பழகிட்டான்னா சிரிக்க சிரிக்க பேசுவான்.. கோபத்துல அவனப்பா மாதிரி.. புடுச்ச புடிய விடமாட்டான்.." சுந்தரவல்லி பெருமையாகச் சொல்ல பவியின் முகத்தில் சிறிய மாற்றம் தெரிந்தது..

"சார் வரலியா மாமி.."

"அவரா.. ஹ்ம்.. இந்தமாதிரி விஷயங்கள்லாம் அவருக்கு பிடிக்காது.. ஏதோ எனக்கு நேரம் இருக்கேன்னு பண்றேன்.. ரிஷி அப்டியில்ல.. பாவம் எனக்காக ஓடியாடி வேலைசெய்வான்.. சமத்து.."

மெல்லிய புன்னகையுடன் அவனை மறுபடியும் பார்த்தாள்.. உள்ளுக்குள் ஏனோ அவனை பிடித்திருந்தது..

"ஓகே மாமி.. நான் கிளம்பரேன்.. டைம் ஆச்சு.."

வந்தது வந்தே ஏதாவது வாங்கிண்டு போடிமா.. உங்க பக்கத்துல இருக்கற வீடுகளுக்கும் சொல்லு.. சரியா..

இரண்டு ஊறுகாய் பாட்டில்களை வாங்கிக் கொண்டு விடை பெற்றாள் பவி..

வரேங்க.. பாக்கலாம்.. ரிஷியை பார்த்து தலை அசைக்க அவனும் கை அசைத்து விடை கொடுத்தான்..

இளங்காற்று முகத்தில் பரவ அதை ரசித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள் பவி.. ஏனோ மனம் சந்தோஷத்தில் குதூகலித்தது..

அவளது சந்தோஷத்தைக் கண்டு வீட்டிலிருந்த அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது. குறிப்பாக சுகுமாரி பாட்டிக்கு..

எப்பொழுதும்போல் துள்ளிக் குதித்தபடி உற்சாகமாக இருந்தாள் பவி.. மனதில் பாரம் முழுமையாய் குறைந்தது போல் இருந்தது..

அதை கவனித்த பங்கஜம் நேராக பாட்டியிடம் வந்தாள்..

அம்மா.. கவனிச்சேளா.. பவி எவ்வளவு சந்தோஷமா இருக்கா.. பாக்கவே மனசுக்கு நிம்மதியா இருக்கு.. அன்னிக்கு நீங்க சொன்னப்பறம் நான் அவளண்ட போய் பேசினேன் பாருங்கோ.. அதான்.. ஹாஹா.. சமத்து பொண்தான்.. புருஞ்சுப்பா.. இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்.. கொஞ்சநாள் போட்டும்னா.. சரி.. உன் இஷ்டம்னு சொல்லிட்டேன்.. அதான் திரும்ப பழய படி நன்னா ஜாலியாயிட்டா.. என் பொண்ணு நான் சொன்னா எப்பவும் கேட்டுப்பா.. ஹாஹா.."

சுகுமாரி மத்யமாய் சிரித்தாள்.. " தெரியும்டி பங்கஜம்.. அதான் உன்ன பேசச் சொன்னேன்.

இருவரும் பேசிக் கொண்டிருக்க தனி அறையில் அமர்ந்திருந்த பவித்ராவிற்கு இருப்புக் கொள்ளவில்லை.. உடனே ரம்யாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளை நச்சரித்தது.. போனை எடுத்து கால் பண்ணினாள்.. இரண்டு மூன்று ரிங் போக அவள் எடுத்தாள்.

" என்னடி ஒட்டகம்... இன்னேரத்துல கால் பண்ற.. எப்டி இருக்க.. இன்னிக்கு சன்டே.. வருவன்னு பாத்தேன்.. உனக்கா ஸ்பெஷல் டிஷ் எல்லாம் பண்ணனும்னு காத்துட்டு இருந்தேன்.."

" இவ ஒருத்தி.. அதெல்லாம் விடு.. சொல்ல வந்த மேட்டற கேளு.."

" அப்டி என்னடியம்மா சுவாரசியமான விஷயம்.."

" அது... அது... அந்த பையன இன்னிக்கு பாத்துட்டு வந்தேன்.."

" ஏய்.. அன்னிக்கி விட்ட டோஸ்ல அவன் உன் பக்கமே தலைவெச்சு படுக்கமாட்டான்னு சொன்ன.. என்ன திடீர்னு.. நீயே போய் பத்தியா... எதுக்குடி... "

" ஹூம்.. நானா ஒன்னும் போகல.. அந்த மாமி இருக்காங்கல்ல.. அவங்க ஏதோ ஸ்டால் போடறேன்.. நீ வரனும்னு ஃபோர்ஸ் பண்ணாங்க.."

" அதுக்கு.."

" தட்ட முடியல.. வயசானவங்க.. ஆசையா கூப்படறாங்க.. போகாம இருந்தா நல்லா இருக்காதுன்னு.."

" சரிதான்.. அப்பறம்.. "

" அங்க... அங்க அவனும் இருந்தான்டி.."

" உன்ன பாத்துட்டு ஓடி போய்ட்டானா..."

" சீ.. அதெல்லாம் இல்ல.. அன்னிக்கி நா விட்ட டோஸ் நல்லா வேல செஞ்சிருக்கு.. மரியாதையா பேசினான்.. அவங்க ஹோம் மேட் புராடக்ட வாங்க சொன்னான்.."

" அதான பாத்தேன்.. மார்க்கெட்டிங் பண்றதுக்காக உன்கிட்ட நல்லபடியா பேசிருக்கான்.. இந்த பசங்களே இப்டிதான்டி.. "

" சீ.. சீ.... இல்லடி.. அவனோட சேன்சஸ் நல்லாவே தெருஞ்சது.. நல்லா சிரிச்சு பேசினான்.. பாவம் நல்ல பையன் தான்டி.. அவங்க புட் புராடக்ட தயாரிக்கற பெண்கள பத்தி உயர்வா பேசினான். அவன் மோசமானவன் இல்லடி.. பெண்கள மதிக்கறவன் தான்.. ஏதோ கோவத்துல என்கிட்ட அப்டி நடந்திருக்கான்.."

" இங்க பார்ரா... சர்டிபிகேட் வேறயா.. நல்லாத்தான் இருக்கு.. அடியே.. அப்டிலாம் ஒடனே இவனுகள நம்பிடாதடி.. தேவைனா பல்ல இளிப்பானுங்க.. அப்பறம் தலமேல ஏறி ஒக்காருவானுங்க.."

" சே... அவன் அப்டி இல்லடி.. அவன் நல்ல குணம் உள்ளவன் மாதிரிதான் தெரியுது.."

" என்னமோ போ.. நீ சொல்ற.. கேட்டுக்கறேன்.. அப்பறம்.. என்னத்த வாங்கின.."

" ரெண்டு ஊறுகாய் பாட்டில் வாங்கினேன்டி.. எல்லாம் ஹோம் மேட்... நீயும் ரெண்டு வாங்கிக்கறியா.. சூப்பரா இருக்கும்.. அவங்களுக்கும் ஹெல்புல்லா இருக்கும்.."

" அடியே.. என்கிட்டயே மார்கெட்டிங் பண்ற அளவுக்கு உன்ன மாத்திட்டானா.. ஹ்ம்.. நானும் ஹோம்மேடா நெறய ட்ரை பண்றேன்.. அவங்க கடைல போட்டு விக்கச் சொல்றியா... போவியா அந்தபக்கம்... ஹூம்... என்கிட்டே ஊறுகாய் விக்கறதப் பாரு..."

" ஹாஹாஹா..." வாய்கொள்ளாமல் சிரித்தாள் பவி.. "சரிடி.. அப்பறம் வரேன்... பை.. போனை வெக்கட்டுமா.."

" வெச்சுருடி... அப்பத்தான இன்னும் நாலு வீட்டுக்கு போய் ஊறுகாய் விக்க முடியும்.. என்னமோ போ.. எங்க போகப்போவுதோ இது.. ஹூம்.. ஓகேடி பை.." போனை அவள் கட்செய்ய.. அவனின் முகம் கண்களை நிறைத்தது பவிக்கு..

" அவ சொல்றமாதிரிலாம் அவன் கிடையாது.. நல்லவன்தான் போல.. இந்த ரம்மிக்கு யாரையும் சரியா ஜட்ஜ் பண்ண தெரியல.. சும்மா ஊறுகாய் பாட்டில் விக்க என்கிட்ட சிரிச்சு பேசுவானா என்ன.. அவன் இருக்கற ஸ்மார்ட்னசுக்கு ஆயிரம் பேர் க்யூல வருவாங்க.. ஹா.. இருந்தாலும் கொஞ்சம் அந்த ஆம்பளத் திமிரு கண்ல தெரியுது... சோ வாட்.. ஆம்பளைன்னா அந்த மிடுக்கு இருக்கத் தானே செய்யும்.. பெண்கள பாத்து வழிஞ்சுகிட்டு நிக்காத குணம்.. கொஞ்சமா கம்பீரம்.. ஹீ இஸ் எ மேன்லி கை.. குட்.." தனையறியாமல் சிரிப்பு மலர்ந்தது அவளுக்கு..

" என்னடா ரிஷி.. அங்கயே பாத்துண்டு இருக்க.. யாரப் பாத்துண்டு இருக்க.. ம்ம்ம்.."

அவனது கண்கள் அவள் சென்ற பாதையை அநிச்சயாக அவ்வப் பொழுது பார்த்துத் திரும்புவதைக் கண்ட சுந்தரவல்லி குழம்பினாள்..

" ஆ.. ஒ... ஒன்னுமில்லையே.. யாராவது கஸ்டமர்ஸ் வர்ராங்களான்னு பாத்துட்டு இருக்கேன்.. நத்திங்.." சமாளித்தான்..

மாலை..

பவி ஹாலில் உட்கார்ந்து தம்பியுடன் விளையாடிக் கொண்டிருக்க , சுறுசுறுப்புடன் உள்ளே நுழைந்தார் நடேசன்..

முகத்தில் சந்தோஷக் களை பரவியிருந்தது..

"என்ன பவி.. அம்பியோட விளையாடிண்டு இருக்கியா.. ஹா.. இன்னும் விளையாட்டு பொண்ணாவே இருக்கே.. கல்யாண வயசு ஆயுடுத்து.. ம்ம்ம்.."

சோபாவில் அமர்ந்தவர் குரல் கொடுத்தார்.. "பங்கஜம்... பங்கஜம்... இங்க கொஞ்சம் வாயேன்.. பவி.. பாட்டியையும் கொஞ்சம் அழச்சுண்டு வாயேன்.."

குழப்ப ஆச்சர்யத்துடன் அவரைப் பார்த்தவள் " என்ன விஷயம்பா.. எல்லாரையும் கூப்படறேள்.." கேட்டாள்..

" எல்லாம் நல்ல விஷயம் தான்.. நோக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயுடுத்து.. போ.. போ.. பாட்டிய கூட்டிண்டு வா.." கூறியபடி சிரித்தார்..

கொஞ்சம் படபடப்பு ஏற உள்ளறைக்கு சென்றாள்..

சேரில் அமர்ந்தபடி கதை புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த பாட்டி அவள் வருவதைக் கண்டு ஏறெடுத்தாள்..

" பாட்டி... அப்பா உன்ன கூப்படறா.. வா..."

" என்னவாம்... " கண் கண்ணாடி கழற்றியபடி கேட்டாள்..

" தெரியலை.. வா.. " அவளை கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு ஹாலுக்கு நடந்தாள் பவித்ரா..

அங்கே பங்கஜமும் நின்றிருக்க பாட்டியை அமரவைத்துவிட்டு அம்மாவிடம் ஒட்டி நின்றாள் பவித்ரா..

எல்லார் முகத்திலும் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவல் கூடி இருந்தது..

ஒருமுறை அனைவரையும் பார்த்தவர் மெள்ள சிரித்தார் நடேசன்.

" என்னடா நடேசா... எங்கள எல்லாரையும் வரச் சொல்லிட்டு நீ பாட்டுக்கு சிரிச்சுண்டு இருக்கே.. என்ன விஷயம்.." பொறுமை தாங்காமல் பாட்டி கேட்க..

" எல்லாம் நல்ல விஷயம் தான்மா.. நம்ம பவிக்கு நல்லது நடக்க நேரம் கூடிடுத்து.."

குழப்பமாக அனைவரும் பார்க்க..

" என் ஆபிஸ் கொலிக் கோவிந்தன் தெரியுமோல்யோ.. அவனன்ட நம்ம பவியோட கல்யாண விஷயம் பத்தி ரெண்டு நாளைக்கு முன்ன பேசிண்டு இருந்தேன்.. இன்னிக்கு அவனுக்கு தெரிஞ்ச வரன் ஒன்னு இருக்குன்னு சொல்லி பவியோட ஜாதகத்த வாங்கிண்டு போயிருக்கான்."

பாட்டியின் முகத்திலும் பவியின் முகத்திலும் மெல்லிய அதிர்ச்சி பரவியது.. பங்கஜம் சங்கடத்துடன் நெளிந்தாள்..

எல்லோரையும் பார்த்தவர்.. " ஏன் எல்லாரும் அமைதியா இருக்கேள். சந்தோஷமான விஷயம் தானே.." கேட்டார்.

" பையன் யாரு.. எந்த ஊர் காரா.. பையன் என்ன பண்றானாம்.. " பங்கஜம் கவனத்தை திசை திருப்பினாள்..

"அதுவா.. பையன் பீஈ படிச்சிருக்கானாம்.. எம் என் சி கம்பெனில மேனேஜர் உத்யோகமாம்.. இந்த சின்ன வயசுலேயே.. பவியவிட அஞ்சு வயசு பெரியவன்.. அவ்ளவுதான்.. அப்பா புரோகிதம் தான். பையன நன்னா படிக்க வெச்சுருக்கார்.. ஆத்துக்கு மூத்த பிள்ளையாம்.. இன்னும் ரெண்டு பொண் குழந்தைகள் இருக்காம்.. நல்ல பொண்ணா அவனுக்கு ஏத்தா மாதிரி தேடிண்டு இருக்காலாம்.. அதான் நம்ம பவி ஞாபகம் வந்ததாம்.. உடனே ஜாதகத்த குடுன்னு வாங்கிண்டு போய்ட்டான்.. "

"ஹூம்... ஜாதகம் பொருந்தி வரனும்.." பங்கஜம் ஆஸ்வாசமானாள்..

" ஏன் பங்கஜம்.. நம்ம பவி குட்டி ஜாதகத்துக்கு என்ன குறைச்சல்.. ராஜயோக ஜாதகம்.. போற எடத்துல ஜாம் ஜாம்னு இருப்பா பாரு.. பையன் சொந்தமா வீடுவேற கட்டிமுடுச்சுருக்கானாம்.. ராஜாவாட்டம் இருப்பானாம்.. இந்த வரன் அமஞ்சுடுத்துன்னா அடுத்த முகூர்த்தத்லே முடுச்சுட வேண்டியது தான்.." அவர் கூறக் கூற பவிக்கு அதிர்ச்சி கூடிக் கொண்டே போனது..

சுகுமாரி பாட்டி முகம் சட்டென வாடிப் போனது..

" இன்னும் குழந்தைக்கு படிப்பே முடியலயே.. அதுக்குள்ள..." இழுத்தாள் பங்கஜம்..

" அதனால என்ன.. இந்த காலத்ல நல்ல வரன் அமையறதே கஷ்டம்.. நாம கண்டீஷன் போட்டுண்டு இருக்க முடியுமா... பகவான் அனுக்ரஹத்ல எல்லாம் நன்னா முடியும் பாரு... சரி.. சரி.. நல்லா சூட ஒரு பில்டர் காபி போட்டு எடுத்துண்டு வா.. " அவர் சுற்றி இருப்பவர்களின் மனநிலை எதையும் யூகிக்காமல் நிம்மதி பெருமூச்சுவிட்டார்..

பவிக்கு சொல்லத் தெரியாமல் வந்தது.. வெடித்துவிடும் கோபம் பொங்கியது.

பாட்டி அவளை கண்களால் சமாதானம் செய்ய பங்கஜம் அவளை இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

" அம்மா... அப்பா பாட்டுக்கு மாப்ள பாக்க ஆரம்பிச்சுட்டார்.. உன்கிட்ட தானே சொன்னேன்.. இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்னு.. சொல்லலயா அவர்கிட்ட.. " மெல்லிய குரலில் கடிந்து கொண்டாள்..

" இ.. இல்லம்மா.. நேரம் பாத்து தானே அவர்கிட்ட சொல்லனும்.. அதான்.. நீ பொறுமையா இரு.. நான் சமயம் பாத்து பதவீசா சொல்றேன்.. எடுத்தோம் கவுத்தோம்னு சொல்ல முடியாதும்மா.."

" அதுக்கு.. அவர்பாட்டுக்கு கல்யாணம் வரை போய்ட்டார்.. அவன் யாரு என்னனு கூட எனக்கு தெரியாது.. அவனுக்கு புடுச்சா மட்டும் போதுமா.. எனக்கு பிடிக்க வேண்டாமா.. அவன் ஓகே சொன்னா ஒடனே கல்யாணம்கறாரே.. சே.."

" பவி.. டென்ஷன் ஆகாதடி.. இப்போதானே ஜாதகம் குடுத்திருக்கார்.. அதுக்குள்ள எல்லாம் ஆயிடுமா.. பொறு.. "

" நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது.. ஒடனே அவர்ட்ட சொல்லி இதுக்கு ஒரு
முடிவு கட்டு.. இல்லேனா நானே அவர்ட்ட போய் சொல்லிக்கறேன்.."

" அய்யோ.. அந்த மாதிரி எதுவும் பண்ணிடாதே.. நான் பேசிக்கறேன்.. நீ உன் ரூமுக்கு போ.. "

ஹூம்... வெறுப்புடன் படபடவென தன் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள் பவித்ரா..!

நடேசனிடம் எப்படி சொல்வதென யோசனையில் ஆழ்ந்தாள் பங்கஜம்..!
 

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் திங்கள்..!

அத்யாயம் - 9

எப்படி நடேசனிடம் கூறுவது எனக் குழப்பத்துடன் சமையல்கட்டில் பங்கஜம் யோசனையில் ஆழந்திருந்தாள்..

சுகுமாரி பாட்டிக்கு வருத்தம் மேலிட தன் மகனிடம் எப்படி சொல்வதெனத் தெரியாமல் தன் அறையில் சோர்ந்து அமர்ந்திருந்தாள்..

காலையில் இருந்த அத்தனை சந்தோஷமும் வடிந்துவிட ஓர் வெறுமையுடன் ஜன்னலை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் பவித்ரா..

இதை எதையுமே உணராத நடேசன் சந்தோஷ நிம்மதியுடன் ஹாலில் டீவியை பார்த்துக் கொண்டிருந்தார்..

நேரம் நகர...

" அண்ணா.. டிபன் ரெடியாயிடுத்து.. சாப்படறேளா.. " பங்கஜம் அவரை அழைத்தாள்..

" ம்ம்.. பேஷா சாப்படலாமே.. டேய் ஸ்ரீதரா அக்காவையும் பாட்டியையும் கூப்டு.. ஒன்னா ஒக்காந்திடலாம்.."

அவன் தலையாட்டியபடி ஆடிக் கொண்டே பவித்ராவின் அறைக்கு சென்றான்..

" பவி... பவி... ஏய் அக்கா.. அப்பா சாப்ட கூப்படறா.. வா.."

" நா வரல.. எனக்கு பசிக்கல.. நீ போ.."

" அப்பாாாா... பவிக்கு பசிக்கலயாம்.. வரமாட்டேங்கறா.. " கத்திக் கொண்டே ஹாலுக்கு ஓடினான்..

" என்னாச்சு பவி.. ஏன் சாப்பாடு வேண்டாங்கற.. வா... ரெண்டுவாய் சாப்ட்டு போ.. ராத்திரி சாப்டாம தூங்கப்டாது.. " ஹாலிலிருந்து அவர் குரல் கொடுக்க..

" அய்யோ.. சே.. இந்த குட்டிச் சாத்தான் இருக்கானே.. அவன.. " மனதில் பொறுமியபடி " தோ.. வரேன்பா..." கூறிக்கொண்டே பாட்டியின் அறைக்குள் நுழைந்தாள்..

" பாட்டி வா சாப்படலாம்.. அப்பா கூப்படறார்..."

" நேக்கு பசி இல்ல பவி.. மனசு என்னவோ போல இருக்கு.. நீங்க சாப்டுங்கோ... நேக்கு வேண்டாம்.."

ஹ்ம்ம்ம்.... அருகில் வந்து பாட்டியின் நெற்றியை வாஞ்சையுடன் வருடினாள் பவி... " பாட்டிம்மா.. மனசு வருத்தப்பட்டுட்டியா.. விடு.. "

" இல்லடி கண்ணு... உங்கப்பா அவசர கதியா இருக்கானே.. நான் என்ன பண்ணட்டும் சொல்லு... உனக்கு நல்ல வரனா அமைஞ்சு செளகர்யமா சந்தோஷமா நீ இருக்கனும்.. என் வாழ்க்கை மாதிரி உன் வாழ்க்கையும் ஒருத்தனோட கைல சிக்கிண்டு வெளிவரமுடியாம திணறிடப்படாது.. அதான் நேக்கு பயமா இருக்கு.. வசதியானவன் , அழகானவனா இருந்தாப் போதுமா... குணமானவனா இருக்கனுமே.. உன்ன நல்லபடியா பாத்துக்கறவனா இருக்கனும்.. பெருமாள்ட்ட தினம் அதான் பிராத்தனை பண்றேன்.. அத நெனச்சு நெனச்சுதான் மனசு நோகறது.. "

எதுவும் பேச முடியாதபடி அமைதியாக இருந்தாள் பவி..

" பவி குட்டி.. நீ கவலப் படாதடி.. உனக்கு நல்ல வாழ்க்கை அமச்சு குடுக்காம இந்த உசுரு போகாது.. அது மட்டும் திண்ணம்.. " கண்களில் துளி நீர் கரைந்து வழிந்தது..

" பாட்டிமா.. அழாத.. அழாத.. அப்டிலாம் ஒன்னும் ஆகாது... நான் ஜாம் ஜாம்னு இருக்கப் போறத பாக்க நீ இருப்பே.. அப்டி அப்பா கைகாட்டினா ஒடனே நான் ஒத்துண்டிடுவேனா.. என் விருப்பம் தான்.. அதான் அம்மாட்ட பேசச் சொல்லிருக்கேன்.. கொஞ்ச நாளைக்கு தள்ளிப் போட சொல்லி.. அதுக்கபறம் எனக்கேத்த ஒருத்தன் வராமலப் போயிடுவான்.. இதுக்கு போயி.. வா... சாப்படலாம்.."

" உனக்கென்னடி ராஜாத்தி.. உனக்கேத்த ராஜகுமாரன் கண்டிப்பா வருவான்.. "

" எப்படி... குதிரைலயா... ஹாஹாஹா.." பவி கலுக்கென சிரிக்க பாட்டியும் சேர்ந்து கொண்டாள்.

" விளையாட்டு.. ஹாஹா.. " பவியின் கன்னத்தைச் சேர்த்து நெட்டி முறித்தாள் சுகுமாரி.

" சரி.. சரி.. வா.. அப்பா காத்துண்டு இருக்கார்.. சாப்பிட்டு நிம்மதியா படுத்துக்கோ.." கைத்தாங்கலாக பாட்டியைக் கூட்டிக் கொண்டு ஹாலுக்குள் நுழைந்தாள்..

பாட்டியை சேரில் அமர்த்திவிட்டு அப்பாவின் அருகில் தரையில் அமர்ந்தாள் பவித்ரா..

" என்ன.. பாட்டியும் பேத்தியும் கொஞ்ச ஆரம்பிச்சுட்டேளா.. எத்தனை நாளைக்கு.. " சிரித்தார்..

" உனக்கென்னடா.. எப்பவும் பவி இப்டித்தான் இருப்பா.." பாட்டிக்கு சிறிது கோபம் வந்தது.

" சரி.. சரி.. உன் பேத்தி ஆச்சு.. நீ ஆச்சு.. நேக்கென்ன.. ஹாஹா.. பங்கஜம் இலையப் போடு... " சந்தோஷக் களிப்பில் சிரித்தார் நடேசன்..

அனைவரும் சாப்பிட்டு எழுந்திருக்க பங்கஜத்தைப் பார்த்து கண்களால் ஜாடை செய்தாள் பவி..

சரி சரியென தலையாட்டியபடி விலகினாள் பங்கஜம்..

இரவு அவர்களது அறையில் அமர்ந்திருந்தனர் பங்கஜமும் நடேசனும்..

வெற்றிலையை மென்றபடி அசூயையாய் மெள்ள கட்டிலில் சரிந்து கொண்டார்..

அவரிடம் எப்படி ஆரம்பிப்பது என தயக்கத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் பங்கஜம்..

" என்ன பங்கஜம்.. சந்தோஷம் தானே.. அவோ கல்யாணம் நல்லபடியா முடுஞ்சா பெரும் கடன் தீர்ந்தது.. அப்பறம் ஸ்ரீதர் படுச்சு முடுச்சு வேலைக்கு போய்ட்டான்னா , ரிட்டர்யமன்ட்ட வாங்கிண்டு கிருஷ்ணா ராமான்னு பெருமாளுக்கு சேவை செஞ்சுண்டு காலத்த தள்ளிடலாம்.. ஹ்ம்.. பகவான் அனுக்ரஹம் பண்ணனும்.. என்ன சொல்றே.."

ஹ்ம்ம்ம்.. பெருமூச்சொன்றை சொரிந்தாள் பங்கஜம்..

" அ.. அண்ணா.. நா ஒன்னு சொன்னா கோவிச்சுக்காம கேட்டுப்பேளா.."

" சொல்லு.. இத்தன வருஷமா கேட்டுண்டு தானே இருக்கேன்.. " இதழ் விரிந்தார்..

" அது.. அது... பவி..
பவி.. இப்பத்தான் கலேஜ் ஃபைனல் இயர் போயிண்டு இருக்கா... இன்னும் படிப்பு முடிய நாலு மாசம் இருக்கு.. அதுக்குள்ள கல்யாணமான்னு பவி யோசிக்கறா.."

" யோசிக்கறாளா.. எதுக்காம்.. அவளுக்கென்ன சின்ன பொண்ணு.. எதுஎது எப்பப்ப நடக்கனுமோ அது அது அப்பப்போ நடக்கனும். நடத்திடனும்.. காலம் போனா அப்பறம் யோசிச்சு பிரயோஜனம் இருக்காது.."

" இல்ல... படிப்பு முடுச்சுட்டு ஒரு ஒரு வருஷமாவது வேல பாத்துண்டு , வெளி உலகத்த பத்தி தெரிஞ்சுக்கலாம்னு ப்ரியப் படறா.. அதான்.." இழுத்தாள்..

கொஞ்சம் முகம் மாறியது நடேசனுக்கு.. " பங்கஜம்... நீ என்ன புருஞ்சுண்டுதான் பேசறயா.. இல்லே... அவதான் புரியாம சொல்றான்னா நீயும் என்னன்ட வந்து சொல்றியே.. "

" அப்டி இல்லண்ணா.. வந்து.... பாவம் குழந்தை நம்மாத்ல இன்னும் கொஞ்சநாள் இருக்கனும் ஆசப்படறா.."

நடேசனின் முகத்தில் கொஞ்சம் ஏக்கம் நிறைந்தது..

" நான் என்ன நம்ம குழந்தைக்கு கெட்டதா பண்ண போறேன்.. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு தானே அவசரப் படறேன்.. எம்பொண்ண நானே வெரட்டி அடிப்பேனா... ஹ்ம்.. ஒரு அப்பாவோட கவலை பொண்களுக்கு புரியாது.. " கொஞ்சம் அமைதியானார்.. " அதான் அவ படிப்பு முடிய நாலஞ்சு மாசம் இருக்கே.. அது வரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும்.. அது போதுமே.. இந்த மாதிரி கல்யாணத்த தள்ளிப்போடறது.. அப்பறம் வேலைக்கு போவேன்னு கொடிபிடிக்கிறது.. இப்டியே இருந்து முப்பது வயசு ஆகியும் கல்யாணம் ஆகாம நிக்கறது எல்லாத்தையும் சுத்துமுத்தும் நெறைய பாத்துட்டேன்.. நம்மாத்ல அது மாதிரி நடக்க நான் விடமாட்டேன்... அதே சமயம் அவ விருப்பத்துக்கு மாறா எதையும் செய்யமாட்டேன்.. நல்ல பையனத்தான் தேடிப் புடுச்சு அவள தாரவாத்து கொடுப்பேன்.. புரியறதா.. அவள்ட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிடு... அப்பா மேல கோபப்பட்டாலும் பரவால்ல.. பெத்துக்கறேன்.." படபடவென கூறிவிட்டு படுத்துக் கொண்டார் நடேசன்..

அதற்கு மேல் என்ன பேசுவதெனத் தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் பங்கஜம்..!

மறுநாள் காலை..

பூஜையை முடித்து ஆபிஸிற்கு கிளம்பிய நடேசன் நேராக சுகுமாரியின் அறைக்குள் நுழைந்தார் ..

" என்னடா நடேசா..ஆபிஸ் கிளம்பிட்டியா.. "

" ம்ம்... அம்மா.. உன்கிட்ட ஒருவிஷயம் பேசனும்.."

" சொல்லுப்பா.. என்ன விஷயம்..."

" பவி கல்யாணம் பத்திதான்.. நேத்து பங்கஜம் எதோ சொல்லிண்டு இருந்தா.. பவி என்னவோ படிப்ப முடுச்சுட்டு வேலைக்கு போகனும்.. இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்றாளாம்.. "

" அ.. அவ.. ஆசப்படறது தப்பில்லையே நடேசா.."

கொஞ்சம் படபடப்பானார் நடேசன்.. " என்னம்மா.. உன் பேத்திக்கு நீ புத்திமதி சொல்வேன்னு பாத்தா.. நீயே இப்டி பேசறே.. அவளுக்கு செல்லம் குடுத்ததெல்லாம் போதும்... வயசு ஆயிடுத்து.. அடுத்த வீட்டுக்கு போய் வாழ வேண்டியவ.. கண்டத யோசிச்சுண்டு இருக்கா.. அவளுக்கு புத்திமதி சொல்லி வை.. காலம் கெடக்கற கெடப்பு உனக்கு தெரியாதது இல்லே.. சரியா.. நானே அவள்ட்ட பேசிடுவேன்.. அது சரியா வராதுன்னு தான் உங்கள்ட சொல்றேன்.. பங்கஜத்துக்கிட்டயும் சொல்லிருக்கேன்.. அவள ஒப்புக்க வைக்கறது உங்க பொறுப்பு.. நான் கெளம்பறேன் டைம் ஆயுடுத்து.." கண்டிப்புடன் சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பினார் நடேசன்..

அவர் செல்வதை சஞ்சலத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சுகுமாரி பாட்டியின் கனத்தமனம் நீரில் மூழ்கிய கல்லாய் கடந்த கால நினைவுகளில் அமிழ்ந்தது..

உள்ளறையில் அமர்ந்திருந்தாள் சுகுமாரி..

மூத்ததாய் பிறந்த தான் ஒரு ஆண்பிள்ளையாக இல்லாமல் பெண்ணாய் பிறந்தது அப்பாவிற்கு கோபமாக இருந்தாலும் வளர வளர எதோ கொஞ்சம் குறைந்திருந்தாலும் , அவ்வப் பொழுது அது வெளிப்படுவதும் , இயற்கையாக உள்ள கோபம் , தான் ஒரு ஆண்பிள்ளை குடும்பத்தலைவன் தன் பேச்சிற்கு மறுபேச்சு கிடையாது என்ற அப்பாவின் குணம் சுகுமாரிக்கு புரிந்து தான் இருந்தது.. இதனால் எந்த பெரியபாதிப்பும் இல்லை... பழக்கமான ஒன்றாகிவிட்டது.. ஆனால்.. இந்த கல்யாணம்.. நினைத்தாலே அடிவயிறு சில்லிட்டு உடல் துவள ஓர் பயம் பரவியது அவளுக்கு..

" அவா வந்து பாத்த உடனே அப்பா என்ன அனுப்பிடுவாளா.. அவாள்லாம் எப்படி இருப்பா.. அந்த பையன்.. அவன் எப்படி பேசுவான்.. அய்யயோ அவன்னு சொல்லிட்டேனே.. தப்பு.. தப்பு.. அவர்னுதானே சொல்லனும்... அப்பறம் மரியாதை இல்லைனு நெனச்சுப்பாளே.. அவா எதாவது சொல்லிட்டா அப்பறம் அப்பா , பாட்டி சொன்னா மாதிரி விஷ்வரூபம் எடுத்துடுவாரே.. அம்மா பாவம்.. அவளுக்கும் திட்டுவிழும்.. " நேரம் காலமின்றி அவ்வப்பொழுது மனதில் பலப்பல சிந்தனைகள் ஓடியது..

கூடவே நாட்களும்...!

பெண்பார்க்கும் படலம் நிகழும் அந்த நாளும் வந்தது..

தாழ்வாரம் , கூடம், சமையலறை என, மல்லிகை , சந்தனமும் பன்னீர் , நெய் வாசமென வீடே மணத்தது..

ருக்மணியும் , வேதவல்லியும் அடுப்பங்கரை புகையில் கண்கள் சிவந்து வியர்த்துக் கொண்டிருக்க , அடுத்தாத்து செம்பா மாமியும் ,
அவள் பெண் தைலாவும் சிரித்தபடி உள்ளே நுழைந்தனர்..

" என்ன ருக்மிணி மாமி... சமையல் பலே ஜோர் போலவே.. தெருமுழுக்க மணக்கறதே.. உங்க கைப்பக்குவமே தனிதான்.. ம்ம்.. மைசூர் பாகா அடுப்புல.. தேங்குழல் வேறயா.. ம்ம்ம்.. வாசன இழுக்கறது.. ஹாஹா.." கண்களால் பக்ஷணங்களை மேய்ந்தபடி விசாரணை மேற்க் கொண்டாள் செம்பா மாமி.

" ஆமாண்டி செம்பா.. ஒத்த பொண்ணு.. அவளுக்கு வரன் பாக்க வர்ராளே.. வர்ர எடம் பெரிய இடமாம்.. அவாள உபசாரம் பண்றத்ல எந்த குறையும் இருக்கப்டாதுன்னு அம்பி சொல்லிட்டான். எதிர் பேச முடியுமா.. பாவம் அதான் ருக்கு வெடிக்காலைலயே ஆரம்புச்சுட்டா.." வேதவல்லி புடவை தலைப்பால் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தபடி அங்கலாய்த்தாள்..

" செம்பா.. சுகுமாரி உள்ளதான் இருக்கா... உன் பொண்ணுதான் நன்னா புடவ கட்டிவிடுவாளே.. ரெண்டு பேருமா அவளுக்கு அலங்காரம் பண்ணி தயார் பண்ணிடுங்கோ.. நாழி ஆயுடுத்து வேறே.. அதுக்குள்ள அவா வந்துட்டா அம்பி சத்தம் போடுவன்.. மடமடன்னு அவள தயார் படுத்திடுறியா.."

" ஓ.. தாராளமா.. சொல்லனுமா மாமி.. எங்க இருக்கா அந்த சின்னகுட்டி.. தைலா வாடி..." தன் பெண்ணையும் அழைத்துக்கொண்டு உள்ளறைக்குள் சென்றாள் செம்பா.

சொந்தங்கள் சூழ்ந்திருக்க அந்த வீடே களைகட்டியது..

உள்அறையின் நடுவே பாவாடை தாவணியில் நின்றிருந்த சுகுமாரி பயம் பரவிய முகத்துடன் மெள்ள சிரித்தாள்..

அரக்கு நிறத்தில் நீல நிற பாடர் போட்ட பட்டுப்புடவையை கைகளில் கசக்கிக் கொண்டு விழித்துக் கொண்டிருந்தாள்.. " என்னடி சுகு குட்டி.. புடவை கட்டிக்கலாமா.. தைலா.. அந்த கதவ சாத்திட்டு வாடிம்மா.. " எனக்கூறியவாறே புடவையை வாங்கி பிரிக்க ஆரம்பித்தாள் செம்பா... ஒடிசலாய் நெடுநெடுவென வளர்ந்திருந்த சுகுமாரியை அப்படியும் இப்படியும் ரங்கராட்டினம் சுத்த வைத்து உருட்டிப் புரட்டி அவளுக்கு புடவை கட்டி விடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது இருவருக்கும்..

" ஏன்டி ஒட்டடை குச்சி.. ஆள் மட்டும் இவ்ளோ ஒசரமா வளந்திருக்கே.. உடம்புல கொஞ்சம் சதை இருக்கா பாரு.. எப்படிடீ இவளோ அகல ஜரிகை புடவைய உனக்கு கட்டி விடறது.. ம்ம்ம்.. பேசாம புடவைய தரைல விரிச்சுப் போட்டு படுத்து உருண்டுடு.. அப்ப வாச்சும் உடம்புல சுத்திக்கறதான்னு பாப்போம்.." தைலா அவளை சீண்ட சுகுமாரி வேர்த்து வழிய அவளை பாவமாகப் பார்த்தாள்..

" டி தைலா.. போதும்டி உன் பிரசங்கமும் வாய்துடுக்கும்... அவளே பாவம் மருண்டு போயிருக்கா.. அவள சீண்டிண்டு.. சீக்கரம் புடவைய கட்டி அந்த நகையப் பூட்டி பூவ வெச்சுவிடு.. நாழி ஆயிடுத்து.." செம்பா மாமி விரட்ட மளமளவென ஒருவழியாய் அலங்காரம் முடிந்தது..

வாசலில் குதிரைவண்டியின் சத்தம் கேட்கவும் வீடெங்கும் பரபரப்பானது..
தோளில் இருந்த துண்டை இடுப்பில் சுத்திக் கொண்டு வாசலை நோக்கி விரைந்தார் சுப்ரமணியன்..

" வாங்கோ.. வாங்கோ.. வரனும் வரனும்.. சாம்பு அந்த பாய விரி... நீங்க உள்ள வாங்கோ.." கொஞ்சம் கூனிட்டு அவர்களை வரவேற்றார் சுப்ரமணியன்..

பத்து பதினைந்து பேர்கள் புடைசூழ உள்ளே நுழைந்தனர் பர்வதமும் , சதா சிவமும்.. அம்மா பின்னால் பட்டுவேட்டி சட்டையுடன் மெல்லிய சிரிப்புடன் வந்தான் குருமூர்த்தி.. மாப்பிள்ளை பையன்..!

வீட்டை கண்களால் அளந்தபடி உள்ளே நுழைந்த பர்வதம் கொஞ்சம் டாம்பீகமாகத் தென்பட்டாள்..!

அனைவரும் கூடத்தில் வந்து அமர உபசார வார்த்தைகளும் குசல விசாரிப்புகளும் இருபுறமும் பரிமாறப்பட்டது..

சிறிது நேரம் போக..

அம்மாவின் அருகில் அமர்ந்திருந்த குரு மூர்த்தி உள்அறையை அவ்வப் பொழுது பார்த்தபடி தலையை குனிந்து கொண்டான்..

" இப்படி வெறுமன பேசிண்டே இருந்தா நேரம் போயிண்டே இருக்கும்.. பொண்ண வரச் சொல்லுங்கோ.." பர்வதம் தன் கணவர் சதாசிவத்திடம் சிடுசிடுக்க அவர் சுப்ரமணியிடம் சத்தமாகக் கேட்டார்.. " பொண்ண அழச்சுண்டு வர்ர எண்ணம் இருக்கா.. "

" க்ஷமிக்கனும்... இதோ.. " பவ்யமாய் கூறிய சுப்ரமணி ருக்மிணியை பார்த்து முறைக்க , அவள் செம்பா மாமியிடம் கண்களால் ஜாடை காட்ட , இருவரும் ஆளுக்கு ஒருபுறமாய் பிடித்தபடி உள்ளறையிலிருந்து சுகுமாரியை அழைத்து வந்தனர்.. ஜிலீரென உள்ளுக்குள் படபடப்பு அதிகரிக்க , அடி எடுத்து வைக்கக் கூட திராணியின்றி தடுக்கிய புடவையில் தட்டுத் தடுமாறி கூடத்திற்கு வந்து நின்றாள் சுகுமாரி..

கூட வந்த ருக்மணியும் , செம்பாவும் அவளை தனித்துவிட்டு பின்னால் விலக , தனியாக அனைவரின் முன் , என்ன செய்வதெனத் தெரியாமல் விழிகள் மருண்டபடி நின்றிருந்தாள் சுகுமாரி..

" பெரியவாள நமஸ்காரம் பண்ணிக்கோ.. " அதட்டலாக சுப்ரமணி சொல்ல.. கண்களில் நீர் திரள தட்டுத்தடுமாறி விழுந்து நமஸ்கரித்து மெள்ள எழுந்தாள்..

நிமிர்ந்து அனைவரையும் பார்க்க தைரியமின்றி தலையை குனிந்து கொண்டாள்..

" என்ன.. பொண்ணு மலங்க மலங்க பார்த்துண்டு இருக்கா.. வாய் பேச வராதா..." பர்வதத்தின் அருகில் இருந்த மாமி உசுப்பேத்த..

" ஹூம்.. அப்டி ஊமப் பொண்ணா எம்பையனுக்கு பாப்பேன் லோகா.. " என கம்பீரமாகக் கூறிய பர்வதம் குழைந்து நின்றிருந்த சுகுமாரியை பார்த்தாள்.. " ஏன்டிமா பொண்ணே.. ஒரு பாட்டு பாடு.. கேப்போம்.. டேய் மூர்த்தி இங்க கேளுடா.." என்று பர்வதத்தின் குரல் உயர்ந்து ஒலித்தது அந்த சபையில்..

விக்கித்துப் போன சுகுமாரியின் இமைகள் படபடக்க, கைகால் உதற..

ருக்மணி பதட்டத்துடன் " வந்து.. வந்து.. குழந்தைக்கு தனியா பாட்டுன்னு எதுவும் சொல்லிவைக்கலை.. ஆத்ல ஸ்லோகம் சொல்வா.. நாள் கிழமை விடமாட்டா.." தயங்கித் தடுமாறிக் கூறினாள்..

" என்னது... ஒரு பாட்டு பாடக்கூடத் தெரியாதா.. குதிர் மாதிரி வளந்துருக்கா.. வெடவெடன்னு வளந்திருக்கா ஒழிய இவ்ளோ ஒல்லியா இருக்காளே.. ஆத்ல சாப்பாட்டு கஷ்டமோ.. இவ்வளவுதான் உங்க வளர்ப்பு.. ம்ஹூம் ஒன்னும் சரி இல்லையே... ம்ம்.. ஆத்துக்காரியம் பெரிய குடும்ப முறை எல்லாம் இவளுக்கு தெரியுமா..." எனத் தலையோடு காலாய் சுகுமாரியை ஏளனப் பார்வையோடு பார்த்தாள் பர்வதம்..

" இது என்னடி மரப்பாச்சிக்கு புடவை கட்டினாப்ல இருக்கு.. பாத்துக்கோ பர்வதம்.. நம்மாத்துக்கு இவ சரியா வருவாளா.." அருகில் அமர்ந்திருந்த பருத்த மாமி ஒருத்தி பர்வதத்திடம் குறைகூற..

" ஹூம்.. பெத்தவா சரியா கவனுச்சுண்டாத்தானே.."சுப்ரமணியை அலட்சியமாகப் பார்த்தாள் பர்வதம்..

அத்தனை ஆர்ப்பாட்டம் செய்யும் சுப்ரமண்யன் பர்வதத்தின் குரலுக்கு முன்னால் அடங்கிப் போனார்.. மாப்பிள்ளையின் தாயார் என்ற ஸ்தானத்தால்..

தன் பெண்ணை நடுக்கூடத்தில் நிறுத்தி ஆளாளுக்கு பேசுவது தீயாய் சுட்டது ருக்மணிக்கு..

இத்தனை களேபரத்திலும் எந்த கவலையும் இன்றி மாப்பிள்ளை தோரணையுடன் சிரித்துக் கொண்டிருந்தான் குருமூர்த்தி..!!


For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
Status
Not open for further replies.
Top Bottom