Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

Status
Not open for further replies.

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 20

புன் சிரிப்புடன் வீட்டில் நுழைய வாசலிலே நின்றிருந்த அம்மாவின் கோபமான குரல் பவியை திடுக்கிடச் செய்தது..!

" ஏன்டி.. எவ்ளோ நேரமா உனக்கு கால் பண்றது.. எங்கடி போய்ட்டு வர.. " பங்கஜம் சத்தமாகக் கேட்க பவிக்கு திக்கென்று இருந்தது.. விழித்தாள்..

" நீ போனை எடுக்கலையேன்னு ரம்யாவுக்கு போன் பண்ணா அவ என்னவோ இப்ப வந்துடுவா அப்ப வந்துடுவான்னு சொல்றா.. மணி என்ன ஆறது.. ம்ம்ம்.. உங்கப்பா உனக்காக எவ்ளோ நாழி வெயிட் பண்றார் தெரியுமா.. உனக்கு செல்லங்குடுத்தது தப்பா போயிடுத்து.. இது சரியில்ல பவி சொல்லிட்டேன்.." பங்கஜம் கடுமையாக பேச வெலவெலத்து போனாள் பவி..

" இ.. இல்லம்மா.. ரம்யா ஆத்லேந்து கெளம்பிட்டேன்.. பஸ் கெடைக்கல.. அ.. அதான்.." தயங்கி தயங்கி பொய் சொன்னாள்.

" டைம் ஆயிடுத்துன்னா ஒரு போன் பண்ண மாட்ட.. மனசு கெடந்து அடுச்சுக்கறது.. எத்தன போன்கால் பண்றது.. போன பாரு.."

தடுமாறி பேக்கினுள் இருந்த போன எடுத்து பார்த்தாள்.. வீட்டிலிருந்தும் ரம்யாவிடமிருந்தும் பத்து கால்களுக்கு மேல் வந்திருந்தது.. ரிஷியுடன் இருக்கும் போது ரம்யா போன் செய்து வம்பு செய்வாளோ என சைலன்ட் மோடில் போட்டது அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது..

" போன்.. வைப்ரேட்ல இருந்ததால கவனிக்கலம்மா.. "

" நன்னாதான் இருக்கு போ... அப்பா ரொம்ப கோபமா இருக்கார். உன்கிட்ட முக்கியமா பேசனும்னு ஆறுமணிலேந்து காத்துண்டு இருக்கார்.. இப்டி பண்றியே பவி.. மொதல்ல உள்ள போ.. " அவள் இழுத்துக் கொண்டு நடக்க பதட்டத்துடன் உள்ளே சென்றாள் பவி..!

பாட்டி குழப்பமாக அமர்ந்திருக்க , நடேசன் பொறுமையின்றி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.. பவி உள்ளே நுழைய..

" என்ன பவி இது.. உன் இஷ்டத்துக்கு வெளில போயிட்டு வர்ரே.. வயசாயிடுத்து இல்ல.. ஒரு பொறுப்பு வேண்டாம்.. ஆத்ல தேடுவாளேன்னு ஒரு பயம் இருக்கா.. அப்டி என்ன ப்ரண்டாத்துக்கு போய் படிக்கறது.. இங்க படிச்சா ஆகாதா.. வயத்துல நெருப்ப கட்டிண்டு நாங்க இங்க இருக்கனும்.. நீ எதுக்கும் கவல படாதைக்கு போயிடுவே.. அப்டிதானே.." நடேசன் படபடவென கொட்ட பயத்துடன் அவரை பார்த்துக் கொண்டிருந்தாள் பவி..

" இ... இல்லப்பா.. சீக்கறம் கெளம்பிட்டேன்.. போன் சைலன்ட்ல இருந்தது.. சா.. சாரிப்பா.." தலையை கவிழ்ந்து கொண்டாள்.. தொண்டையை அடைத்தது.. அப்பா எதற்காகவும் இவ்வளவு உணர்ச்சிவசப் பட்டதில்லை..

" உனக்கு நல்ல மாப்ள அமையனுமேன்னு நான் அங்கயும் இங்கயும் அலஞ்சுண்டு இருக்கேன்.. நீ என்னடான்னா.. நேரங்கெட்ட நேரத்ல வர்ரே.." நடேசன் மறுபடியும் பொறும.. சுகுமாரி பாட்டி இடைமறித்தாள்..

" சரிடா... எதோ ஃப்ரண்டோட படிக்கனும் போயிருக்கா.. போன்தான் சைலன்ட்ல இருந்திருக்கே.. அதுக்கு அவோ என்ன பண்ணுவா.. அதுக்கு குழந்தைய இப்டி பேசறியே.. விடு.. " பாட்டி பேச கோபமானார் நடேசன்.

" அவளச் சொல்லி குத்தமில்ல , எல்லாம் நீ குடுக்கற செல்லம்.. நாளைக்கு இன்னொரு ஆத்துக்கு போக வேண்டியவ.. இப்டி பொறுப்பில்லாம இருந்தா எப்டிமா.."

பாட்டியின் முகம் மாறியது.. " நடேசா.. கோபத்ல பொறுமை இழக்காத.. அதான் காரணத்த சொல்லிட்டாளே.. பவித்ரா பொறுப்பில்லாத பொண்ணு இல்ல.. அவள எதுவும் சொல்லாத.. நேக்கு சங்கடமா இருக்கு.." அவரை கடிந்து கொண்டு பவியை அழைத்தாள்.." வாடி கண்ணு.. பாட்டிட்ட வா.."

பாட்டியிடம் சென்று அமர்ந்தவள் பாட்டி தலையை வருட தொண்டை அடைத்த அழுகை குபுக்கென கண்களில் நீராய் வழிந்தது.. பாட்டியின் மடியில் தலை சாய்ந்து கொண்டாள்..

அவ்வளவு நேரம் கோபமாய் இருந்த நடேசனுக்கு அவளது கண்கள் கலங்குவதைக் கண்டு மனம் தவித்தது..

" பவி... அப்பா உன் நல்லதுக்கு தானே சொல்றேன்.. இனிமே இப்டி இருக்காதம்மா.. என்ன... சந்தோஷமான விஷயம் உன்ன வெச்சுண்டு எல்லார்கிட்டயும் சொல்லனும் காத்துண்டு இருந்தேன்.. நீ வரலைன்னதும் கொஞ்சம் கோபப்பட்டுட்டேன்.. " வாஞ்சையுடன் அவளை பார்த்தார்..

என்ன விஷயம் என எல்லோரும் அவரை பார்க்க..

" என்னடா சந்தோஷமான விஷயம்.. மத்யானம் வெளில போய்ட்டு வந்ததுலேந்து எதுவும் சொல்லவே இல்லையே.. " பாட்டி நடேசனை ஆர்வமாக பார்க்க.. பவிக்கு குழப்பத்துடன் கலக்கமும் சேர்ந்து கொண்டது..

" பகவான் கண்ண தெறந்துட்டார்.. நம்ம பவிக்கு நல்ல வரன் ஒன்னு வந்துருக்கு.. அதச் சொல்லனும்னு தான் காத்துண்டு இருந்தேன்.." அவர் கூற கூற பவியின் அடிவயிற்றில் பயம் பற்றிக் கொண்டது..

" ஜாதகம் பார்க்க குடுத்திருக்கேளா.." பங்கஜம் சலிப்புடன் கேட்க..

" ஜாதகம் குடுத்து பொறுத்தமும் பாத்துட்டா.. நம்ம சோம சேகரோட ஒன்னுவிட்ட தங்கை பையன். அவன் ஆத்துக்குதான் போய்ட்டு வரேன்.. ரெண்டு பேரோட ஜாதகத்லயும் ஏழு பொருத்தம் இருக்கு.. அடுத்த வாரம் பாக்க வரேன்னு சொல்லிருக்கா..." கண்கள் ஒளியேற அவர் கூற..

பவிக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றியது.. பேரிடி விழுந்ததுபோல் தலையில் கையால் அழுத்திக் கொண்டாள். இதயம் தாறுமாறாய் எகிரியது..

கலங்கிய கண்களுடன் அப்பாவையே வெறித்துப் பார்த்தாள்.. தன் காதல் கனவு இப்படி ஒரே நொடியில் தரைமட்டமாகும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.. சிறிது நேரத்திற்கு முன்வரை இருந்த அத்தனை சந்தோஷமும் கரைந்து வடிந்து காய்ந்து போனது..

பாட்டியின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி பரவ பவியை பார்த்தாள்.. மெள்ள அவளை அணைத்துக் கொண்டாள்..

" என்ன.. எல்லாருக்கும் சந்தோஷம் தானே.. பொண்ணு பாக்கறது சிம்பிளா இருந்தா போதும்னு சொல்லிட்டா அவா.. பையன் போட்டோ குடுத்திருக்கா.. இத பாருங்கோ.. பவி நீயும் பாரு.." அவர் படத்தை காமிக்க அதை பார்க்கும் நிலையில் இல்லாமல் தலையை கவிழ்த்துக் கொண்டாள் பவி..

" நம்ப பவி போட்டாவ பாத்து அவாளுக்கு ரொம்ப புடுச்சு போச்சாம்.. எதையும் பெருசா எதிர்பார்க்க மாட்டாளாம்.. சம்பிரதாயத்துக்கு அடுத்த வாரம் நல்ல நாள் பாத்து பொண்பாக்க வராளாம்.. ஓகே ஆயிடுத்துன்னா அப்பவே தட்டு மாத்திண்டுடலாம்னு சொல்லிருக்கா.." நிம்மதியுடன் சிரித்தார்.

" பையன் எப்டி ஏதுன்னு நன்னா விஜருச்சியா.. நல்ல குடும்பம் தானே.." பாட்டி கொஞ்சம் கலக்கத்துடன் கேட்டாள்..

" நல்ல பையன்.. நல்ல கம்பெனில வேல பாக்கறான்.. வசதியான குடும்பம்தான்.. ஒரே பையன்தான்.. பிக்கல் பிடுங்கல் இல்லை.. நம்ம சோமசேகரன் குடும்பம் பத்தி நோக்கு தானே தெரியுமேம்மா.."

" பவிக்கும் பிடிக்கனுமே.. அவ விருப்பத்தையும் கேக்க வேண்டாமா.."

" அவ என்னமா சின்ன பொண்ணு.. பிடிச்சுருக்கு பிடிக்கலன்னு சொல்ல என்ன இருக்கு.. நம்ப பவி அப்டிலாம் வேண்டாம்னு சொல்ல மாட்டா.. இல்லையா பவி.. பையன் ராஜாவாட்டம் இருக்கான்.. அப்புறம் என்ன.. என்ன பங்கஜம்.. போட்டோவ நீயும் பாத்துக்கோ.." அவளிடம் போட்டோவை குடுத்தார்.. பங்கஜத்திற்கும் இந்த வரன் சரியானதென தோன்றியது.. புன்னகையுடன் தலையாட்டினாள்..

" இல்லடா... இன்னும் படிப்பு முடிக்கலையே... அதுக்குள்ள.. " பாட்டி ஆரம்பிக்க..

" அம்மா , திரும்ப ஆரம்பிக்காதே.. படுச்சு முடுச்சாலும் ஒருத்தனுக்கு வாக்கப்பட்டு அவாத்துக்கு தானே போயாகனும்.. இந்த வரன் கைகூடட்டும்.. வேனும்னா அப்பறம் சொல்லிக்கலாம்.. அதுக்கும்மேல அவா உடனே கல்யாணத்த முடிக்கனும்னா பண்ணிட வேண்டியதுதான்.. உன் பேத்திக்கு நல்ல வரன் அமைஞ்சதேன்னு சந்தோஷ பட்டுக்கோ.. வேற எதுவும் சொல்லாதே.." அவர் கொஞ்சம் கோபத்துடன் கூற பாட்டி அமைதியானாள்..

உள்ளுக்குள் ஆயிரம் பூகம்பம் வெடிக்க அமர்ந்திருந்தாள் பவித்ரா.. என்ன செய்வது எனத் தெரியாமல் திக்குமுக்காடி போனாள்.. ஒருபக்கம் கோபமும் ஒரு பக்கம் அழுகையும் வந்தது.. ரிஷியை விரும்புவதை சொல்லிவிடுவோமா என எண்ணம் அவளை தூண்டியது.. வாய் வரை வந்த வார்த்தைகள் மேலெழ தைரியமின்றி தொண்டைக்குழியில் சிக்கி வெளிவர இயலாமல் மூழ்கி மூழ்கி நெஞ்சுக்குள் புதைந்தது.. கனத்த எண்ணங்கள் நெஞ்சம் அடைக்க கண்களில் ஏனோ நீர் வழிந்தது.. கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள்.. வேகமாக எழுந்து அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்..

பின்னால் உள்ளே வந்த பங்கஜம்.. " பவி.. எதுக்கிப்ப கண்ண கசக்கிண்டு இருக்கே.. அப்பா ஏதோ கோபத்ல பேசிட்டார்... அதுக்கு போய் அழலாமா.. குழந்த மாதிரி.." கண்களை துடைத்துவிட்டாள்.

அவளிடமாவது தன் காதலை சொல்லிவிடலாமா என இருந்தது.. பவி வாயெடுக்க..

" பவி... ஒரு விஷயம்.. அப்பா சொல்றதும் நியாயம் தானே.. எப்டியும் படிப்பு முடுச்சாலும் கல்யாணம் பண்ணின்டு அடுத்தாத்துக்கு போய்தான் ஆகனும்.. நல்ல குடும்பமா அமஞ்சிருக்கு.. அது இதுன்னு மனச குழப்பிண்டு இருக்காதே.. நடக்கறது நல்லபடியா நடக்கும்.. உனக்கேத்தவனா தான் இருப்பான் பாரு.. கல்யாணம் ஆயிடுத்துன்னா , போகப் போக எல்லாம் பழகிடும்.. அப்பறம் வேல பாக்கனும் அது இதுன்னு நீ நெனச்சுண்டு இருந்ததெல்லாம் சில்லியான விஷயமா போய்டும்.. அதனால அவா வரும்போது எதுவும் உணர்ச்சி வசப்பட்டுடாதே.. அப்பறம் அப்பா ஒடஞ்சு போயிடுவார்.."

" அ... அது.. அது இல்லமா.. நா.. நா..." பவி திக்கி திணற..

" படிக்கனும் , வேல பாக்கனும்.. அதானே.. கல்யாணம் ஆயிடுத்துன்னா உன் ஆத்துகாரர் ஒப்புதலோட வேலைக்கு போயேன்... யார் வேண்டாம்கறா.. அவர் சரின்னு சொல்லிட்டா வேற யார் கேக்க போறா உன்ன... சரியா.. மனச விடாம இரு.. உன் மனசுபோல நடக்கும்.. இன்னும் என்ன கண்ண கசக்கிண்டு.. சிரி.. சிரி.. " பங்கஜம் அவள் கன்னத்தை கிள்ள..

வெடிக்க காத்திருந்த உணர்வுகளை அழுத்தி அடக்கி மெள்ள சிரித்தாள் பவி... விதியின் சதியை எண்ணி..

" சரி.. சரி.. ட்ரெஸ்ஸ மாத்திண்டு முகத்த அலம்பிண்டு வா சாப்படலாம்.. அப்பா காத்துண்டு இருப்பார்.." கூறிக் கொண்டே சென்றாள் பங்கஜம்..

யாரிடமும் சரியாக பேசாமல் , சாப்பிடப் பிடிக்காமல் ஏனோதானோவென கொறித்துவிட்டு தன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்..

ரிஷியிடம் உடனே கூற வேண்டும் என மனம் அடித்துக் கொண்டது.. அவனை பிரிவதா என நினைக்கையிலே உடல்நடுங்க
உணர்வு பீறிட்டு எழுந்தது.. மெள்ள அழுதாள்.. சத்தம் வெளியில் கேட்டுவிடுமோ என தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.. அந்த வேளையில் அரவணைப்பு தேவைப்பட்டது பவிக்கு.. ஆறுதல் கூற யாருமின்றி தலையணையை இறுக பற்றிக் கொண்டு கரைந்தாள்.. ரிஷி பார்த்த தினம் முதல் அவன் காதல் சொன்னது அவன் விரல் ஸ்பரிசம் அவனது அணைப்பு முதல் முத்தம் என அத்தனையும் கண்முன்னே தோன்றி அவளை இம்சித்தது... ரிஷியின் முகம் கண்முன் நிழலாடி அவளை சோகக் கடலில் ஆழ்த்தியது.. இரவு முழுக்க உறக்கமின்றி தீவிர சிந்தனையில் இருந்தாள்..

மறுநாள் காலை..

உடலெல்லாம் வலிக்க , சிவந்த கண்கள் தூக்கமின்றி பொங்கி போய் எரிந்தது.. மெள்ள எழுந்து வெளியே வந்தாள்.. காலை வெகுநேரமாகி இருந்தது.. அப்பா வேலைக்கு சென்றிருந்தார்.. அம்மா அடுக்களையில் இருக்க தள்ளாடியபடி வெளியே வந்தாள்.. ஹாலில் பாட்டி அமர்ந்திருந்தாள்..

" என்ன பவி.. உடம்பு சரியில்லையா.. அம்மா வந்து எழுப்பினா எந்திரிக்கவே இல்லையே.. நான் தான் தூங்கட்டும்னு விட சொல்லிட்டேன்.. என்னாச்சு கண்ணு.."

" ஒ.. ஒன்னுமில்ல பாட்டி... " சுரத்தில்லாமல் கூறியபடி அங்கிருந்து அகன்றாள். மனம் சஞ்சலத்தில் உழன்று கொண்டிருந்தது..

குளித்து முடித்து ஏதோ பறி கொடுத்தது போல் அமர்ந்திருந்தாள்.. உணவு உண்ண பிடிக்கவில்லை.. ரிஷியிடம் உடனே இதைப் பற்றி கூற வேண்டும் என மனம் பதைபதைத்தது.. அவனிடம் கூறினாள் என்ன செய்வான்.. எனை கூட்டிப் போக வருவானா.. இல்லை அப்பா பேச்சை கேட்டு எனை விட்டுவிடுவானா.. குழப்பத்தில் மனம் அலைந்தது..

" பவி.. கண்ணு.. இங்க கொஞ்சம் வாயேன்.. " பாட்டி அழைக்க.. விருப்பமின்றி மெள்ள எழுந்து சென்றாள்.

" என்னம்மா.. என்ன ஆச்சு.. "

.................

" சொல்லும்மா.. அப்பா வரன் பாத்தது பிடிக்கலையா.. என்ன செய்யறது பவி.. அவன் அவசரப் படறானே.. திரும்ப திரும்ப எத்தன தடவ சொல்றது.. அவன் பிடிவாதமா இருக்கானே.. எனக்கும் ரொம்ப கவலையாத்தான் இருக்கு.. வர்ர வரன் நல்ல குடும்பமா இருக்கனும்.. உனக்கு சம்மதம்னாத் தான் இந்த கல்யாணம் இல்லைனா வேண்டாம்னு நானே அவன்ட்ட சொல்லிடறேன். என்ன சரியா.. அதுக்காக கவல பட்டுண்டு உடம்ப கெடுத்துக்காதடி செல்லம்.."

பீறிட்டு வந்த அழுகையை அடக்க இயலாமல் பாட்டியின் மடியில் தலை சாய்ந்து குலுங்கினாள்..

" பவி... என்னம்மா இது.. குழந்த மாதிரி இருக்கியே.. அழாத.. தைரியமா இருக்கனும் என்ன மாதிரி.. எது இருந்தாலும் என்கிட்ட சொல்லு.. உன் விருப்பம் தான்.." சுகுமாரி தலையை வருடிக் கொடுத்தாள்..

பாட்டியிடம் தன் காதலைப் பற்றி சொல்லி விடலாமா என்ற எண்ணம் மனதிற்குள் ஓடியது பவிக்கு.. கண்களை துடைத்தபடி பாட்டியை பார்த்தாள்..

" சொல்லுமா.. "

" பாட்டி... எ.. எனக்கு இந்த கல்யாணத்திலே இஷ்டம் இல்ல பாட்டி.."

" ம்ம்ம்.. பொண் பார்க்கதானே வரேன்னு சொல்லிருக்கா.. பாக்கலாம்.. அதுக்குள்ள எதுவும் முடிவெடுக்காதே.. உன் அப்பாவும் கேக்க மாட்டேங்கறானே.."

" அ... அது.. இல்ல பாட்டி... நா... நா... " திணறினாள்..

" சொல்லு கண்ணு.. பாட்டிட்ட தானே சொல்ற.. பயப்படாத.."

" நா... நா.... வேற... ஒருத்தர... " தடுமாறி தலை குனிந்தாள் பவி.. பாட்டி புரிபடாமல் குழப்பமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

" நான் ஒருத்தர விரும்பறேன் பாட்டி.." பவி திக்கி திக்கி கூற.. சுகுமாரியின் முகத்தில் அதிர்ச்சி அலை பரவியது..

" எ.. என்னடி சொல்றே..." அதிர்ந்து போனாள்..

மெள்ள அசைத்தபடி தலையை குனிந்தாள் பவி..

" ஆமாம் பாட்டி.. நான் கல்யாணம் பண்ணின்டா அவரத் தான் பண்ணிப்பேன்.. " அழுத்தமாக கூறினாள்..

அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாக சுகுமாரி ஒரு கணம் வாய்பேச இயலாமல் தடுமாறினாள்.. " எ.. என்ன சொல்றே பவி.. நே.. நேக்கு புரியலை.."

" நான் ஒருத்தர விரும்பறேன் பாட்டி . அவரும் என்ன விரும்பறார்.. கல்யாணம்னா அவரோட மட்டும் தான்... வேற யாருக்கும் என் வாழ்க்கைல இடமில்ல பாட்டி." தீர்க்கமாக மெல்லிய குரலில் கூறினாள் பவி..

" என்னடி.. திடீர்னு தலைல கல்லத் தூக்கிப் போடறயே.. யார்டி பவி அது.." பாட்டி பதட்டத்துடன் கேட்க..

" நான் கோயிலுக்கு போகும் போது ஒரு மாமி பாப்பேன்னு சொல்வேன்ல.. அவங்க பையன்.. பேரு ரிஷி.."

" இதுவரைக்கும் எதுவும் என்கிட்ட சொன்னதில்லையே.. திடீர்னு எப்டி பவி.. நீ அப்டி பட்ட பொண்ணு இல்லையே.. " ஆச்சர்யமும் அதிர்ச்சியும் பொங்க பார்த்தாள் சுகுமாரி..

தலையை குனிந்து கொண்டாள் பவி.. சிறிது நேரம் அமைதியில் கடக்க..

" பவி... நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது.. உன் வயசுல இந்த மாதிரி வர்ரது சகஜம் தான் பவி.. அ.. ஆனா.. அதெல்லாம் ஒரு நிலைல ஒன்னுமில்லைனு ஆயிடும்.. வயசு கோளாரு.. யாரு எப்டின்னுலாம் பாக்காது.. மனசு பேதலிச்சுதான் போகும்.. எங்க காலத்லே பத்து பதினஞ்சு வயசுக்குள்ள கல்யாணம் பண்ணி வெக்க இதுவும் ஒரு காரணம்..

புரியாத வயசுலயே கல்யாணம் பண்ணி வெச்சுட்டா , இவன் தான் உனக்கு இவ தான் உனக்குன்னு ஒருத்தரோட பந்தத்த ஏற்படுத்தி விட்டுட்டா,மனசு கண்டதத் தேடி அலையாது.. ஒரு கட்டுப்பாடு ரெண்டுபேருக்குள்ளயும் இருக்கும்னு நம்பினா.. ஆனா, இப்போ காலம் மாறி பருவ வயச தாண்டி கல்யாணம் பண்ணி வைக்கும் போது தன் விருப்பம் தனக்கானது இதுதான்னு மனசு தேவையில்லாதத கற்பனை பண்ணிக்கறது.. அது மாதிரி நீயும் வெறும் படோடோபத்தையோ அழகையோ பாத்து ஏமாந்துடாத பவி.. காலம் ரொம்ப கெட்டுகிடக்கு.. அவன் எப்படி ஏதுன்னு எதுவும் யோசிக்காம மனச லயிக்க விட்டுடாதே.. அப்பறம் எல்லாருக்குமே சங்கடம் தான்.. உனக்கு ஒன்னுன்னா என்னால தாங்க முடியாது பவி.." பாட்டியின் கண்களில் நீர் கோர்க்க..

" இல்ல பாட்டி.. நான் விரும்பறது வெறும் பணத்த பாத்தோ , அழக பாத்தோ இல்ல பாட்டி.. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பேசி புருஞ்சுண்டுதான் விருப்பத்தையே சொன்னோம்.. அவரும் என்ன மனப்பூர்வமாதான் விரும்பறார்.. பார்த்ததும் காதல் , அதுக்காக உயிரையே தருவேன்கற மாதிரியான சினிமா காதல் இல்ல பாட்டி.. எனக்கும் வயசாயிடுத்து.. யோசிக்கற பக்குவம் இருக்கு.. அவரோட குணத்த பாத்துதான் சம்மதிச்சேன்.. அவருக்கும் என்மேல உண்மையான ப்ரியம் இருக்கு.. அத என்னைக்கும் நான் விட்டுக் குடுக்க மாட்டேன்.. எப்போ இருந்தாலும் , எனக்கு வாழ்க்கை துணையா இருந்தா அது அவர் மட்டும் தான்.." தெளிவாகக் கூறினாள் பவி..

என்ன சொல்வது என பேச இயலாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுகுமாரி.. அமைதியில் சிலநிமிடங்கள் கரைந்தது..

" அ.. அப்பாட்ட பேசி நீதான் சம்மதிக்க வைக்கனும் பாட்டி.." பவி கூற சுகுமாரி முகம் கலக்கத்தில் சுறுங்கியது..

" எ.. எப்டி பவி அவன்கிட்ட சொல்றது.. ஏற்கனவே ஒரு மாப்பிள்ளைய பாத்து வரச் சொல்லிருக்கான்.. இப்போ போய் அவன்கிட்ட எப்டி சொல்றதுடி.. வானதுக்கும் பூமிக்கும் குதிப்பானே.. அவன் ஒத்துக்கனுமே பவி.." பெருமூச்செறிந்தாள் சுகுமாரி.

" எனக்கு உன்னவிட்டா வேறு யாரும் இருக்கா.. நீ... நீ தான் பேசி சம்மதிக்க வைக்கனும்.. ப்ளீஸ் பாட்டிம்மா.. " பவி கண்கள் கசிந்தது.

குழப்பமும் மன பாரத்துடனும் பெருமூச்செரிந்து அரைகுறையாக தலை அசைத்தாள் சுகுமாரி..

இங்கு..

ஊரிலிருந்து அகிலா வந்துவிட்ட சேதி அறிந்த சுந்தரவல்லி உடனே அவளுக்கு கால் செய்தாள்..!

" ஹாய் அகிலா.. ஊர்லேந்து வந்தாச்சா.. ப்ரோக்ராம்லாம் எப்டி இருந்தது.. ஜனு குட்டி நன்னா ஆடினாளா.. அவள பாத்து ரொம்ப நாளாச்சு.. உன்னையும் பாத்துதான்.. ஹாஹா.. "

" யா.. எஸ் சுந்தரி.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சது.. ரொம்ப நன்னா ஆடிட்டா.. ஒரே பாராட்டு மழைதான் போ.. ஹ்ம்.. கிளப் ஆக்ட்டிவிட்டீஸ்லாம் எப்டி போயிண்டு இருக்கு.. அப்பறம் ஹவ் இஸ் ரிஷி.. " அகிலா கேட்டாள்.

" அவன் நன்னா இருக்கான்.. அதான் ஏற்கனவே ரிஷி ஜனனி பத்தி உன்கிட்ட பேசனும்னு சொல்லிருந்தேனே.. நீ கூட ஊருக்கு போய்ட்டு வந்து பேசறேன் சொன்னியே.. "

" ஓ... எஸ்.. எஸ்... நியாபகம் இருக்கு.. பேசலாம்.. ஃப்ரீயா இருந்தா ஆத்துக்கு வா..."

" கண்டிப்பா.. நான் ஒரு யோஜன பண்ணி வெச்சுருக்கேன்.. அத உன்கிட்ட கலந்து பேசி ஒரு முடிவெடுத்திடலாமேன்னு நினச்சேன்.."

" ம்ம் சரி சுந்தரி.. வா.. கொஞ்சம் வெளில போனும் போனை வெச்சுடவா.."

" ஓகே.. ஓகே.. பாக்கலாம்.." சிரிப்புடன் போனை கட் செய்தாள் சுந்தரவல்லி.. மனதில் எப்படியும் இதை நடத்திவிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது..

போனை கட்செய்து திரும்பிய அகிலா முன் நின்றிருந்தாள் ஜனனி..

" யாரும்மா போன்ல.."

" சுந்தரி.. ஏதோ முக்கியமா பேசனுமாம்.. வரேன் சொன்னா.. அபோட் யுவர் மேரேஜ்.."

" அம்மா.. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லமா.. சொல்லிடு அவங்கள்ட்ட.."

" ஒய் ஜனு.. என்ன திடீர்னு.. வாட் ஹேப்பண்ட்.." அதிர்ச்சியாக பார்த்தாள் அகிலா..

" எஸ்.... எனக்கு ரிஷி வேண்டாம்.."

" என்ன ஜனு.. இப்டி சொல்ற.. நீங்க ரெண்டு பேரும் க்ளோஸா தானே இருந்தேள்.. உனக்கு அவன புடுச்சுருக்குன்னு தானே சுந்தரிகிட்ட இந்த ப்ரபோஸையே ஒத்துண்டேன்.. அதபத்தி பேசதான் அவ வரேன்னு சொல்லிருக்கா.. நெள.. நீ இப்டி சொல்றே.. எதாவது சண்ட போட்டுண்டேளா.. நீ அவன விரும்பறே தானே.." அகிலா குழப்பத்துடன் கேட்க..

" நான் அவன விரும்பறேன்... பட்.. அவன் என்ன விரும்பலயே..." ஜனனி சொல்ல அகிலாவிற்கு அதிர்ச்சி முகத்தில் பரவியது..

" வாட் டு யூ மீன்..."

" எஸ் மம்மி.. ஹீ லவ்ஸ் சம் அதர் கேர்ள்... அவன் வேறொருத்திய லவ் பண்றான்.."

" என்னது.. என்ன சொல்ற ஜனு.. ஹி.. ஹி இஸ் நாட் லைக் தட் பெர்சன்.. எப்படி சொல்றே ஜனு.."

" ஆமாம்மா.. அவனுக்கு என்ன பிடிக்கலையாம்.. வேற பொண்ண லவ் பண்றேன்.. என்கிட்ட வராதன்னு நேரடியாவே சொல்லிட்டான்.. எ.. எனக்கு அவமானமா போச்சும்மா.." ஜனனி கண்கள் கலங்க அகிலா துடித்து போனாள்..!

அவள் முகம் கோபத்தில் இறுகியது.!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 21

ஜனனி சொன்னதைக் கேட்டு கோபமானாள் அகிலா..!

" ஹூம்.. ஏதோ தெரிஞ்ச குடும்பமாச்சே.. பையனும் பாக்க நன்னா இருக்கான்.. உனக்கும் புடுச்சிருக்குன்னு சொன்னதாலதான் இந்த ப்ரபோசலுக்கே ஒத்துண்டேன்.. நம்ம அந்தஸ்துக்கு அவ ஈடா.. பழகின தோஷத்துக்கு ரொம்ப விருப்பப்பட்டு கேக்கறாளேன்னு சரின்னு சொன்னா இந்த சுந்தரி இப்டி பண்ணிட்டாளே.. இப்பவே கால் பண்ணி அவள்ட்ட கேக்கறேன்.. என்ன நெனச்சுண்டு இருக்கா அவ.." படபடப்புடன் கத்திய அகிலாவை சமாதானப் படுத்தினாள் ஜனனி..

" மாம்.... வெயிட்.. இந்த லவ் மேட்டர் அவங்களுக்கு தெரியாது.. சுந்தரி ஆன்டிக்கு தெரியவேண்டாம்னு ரிஷி சொன்னான்.. லீவ் இட் மா.. நமக்கு தேவையில்லாதது.. நெக்ஸ்டைம் அவங்க கேட்டா எனக்கு பிடிக்கலன்னு சொல்லிடு.. தட்ஸ் இட்..."

" ஹவ் கேன் ஐ லீவ் இட் ஜனு.. இத நான் சும்மா விடமாட்டேன்.. உனக்கென்ன வேற பையனா கிடைக்க மாட்டான்.. நம்ம ராஜசேகர் பையன் நிதேஷ் யூஎஸ்ல வேலை பாத்துண்டு இருக்கான்.. ராஜசேகர் உன்ன பொண் தர சொல்லி கேக்காத நாளில்லே.. ஹூம் அதெல்லாம் விட்டுட்டு..... " முகத்தில் வெறுப்பு தாண்டவமாடியது..

" ப்ச்... மாம்.. ஐ' ம் சோ டிஸ்டர்ப்டு.. இப்போ எந்த பையனும் வேண்டாம்.. ஐ நீ்ட் சம் பிரீத்.." கூறிவிட்டு சலிப்புடன் சென்றாள் ஜனனி..

அகிலாவிற்கு மனம் தாங்கவில்லை.. சுந்தரவல்லி வரும் பொழுது நன்றாக கேட்க வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டாள்..

இங்கே பவி நிலைகொள்ளாமல் இருந்தாள்.. ரிஷியை நேரில் பார்த்து பேச வேண்டும் என இருந்தது.. உடல் வேறு சோர்ந்திருந்ததால் அன்று எங்கும் வெளியில் செல்ல அம்மா விடவில்லை.. தவித்துப் போனாள் பவி.. அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாமா என போனை எடுத்தாள்.. அவனை மறுநாள் சந்திக்க வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காத்திருந்தாள்.. அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் அயர்ந்து போய் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பவி.. உள்ளுக்குள் ஏதேதோ சிந்தனை அவளை அலைக்கழித்தது..

அரைமணி நேரம் செல்ல.. அவனிடமிருந்து அழைப்பு வந்தது.. வீட்டுக்குள் இருப்பதால் அவனிடம் பேச வழியின்றி கட் செய்தாள்.. மறுபடியும் இரண்டு மூன்று முறை அழைப்பு வர கட் செய்து , நாளை பேசுகிறேன் என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு செய்திகளை அழித்தாள்..!

மறுநாள் அவனை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற தவிப்பில் காலையில் வேகமாக எழுந்து கிளம்பினாள்..!

" ஏன்டி பவி.. நேத்து நாரா கிடந்தே.. உடம்பு சரியாயிடுத்தா.. இன்னிக்கு ஒரு நாள் லீவப் போடேன்.. " பங்கஜம் பாந்தமாய் கேட்க ,

" இல்லமா.. சரியாயிடுத்து.. நான் கிளம்பரேன்.." கூறியவாரே பாட்டியிடம் வந்தாள்..

" பாட்டி.. நா... நான் காலேஜ் கிளம்பரேன்.. பாத்துக்கோ.." அர்த்தத்துடன் பார்த்துவிட்டு கிளம்பினாள் பவி.

ஆழ்ந்த சிந்தனையுடன் தலை ஆட்டினாள் சுகுமாரி.. நடேசனிடம் எப்படி கூறுவது என்ற எண்ணம் உள்ளுக்குள் அரித்துக் கொண்டு இருந்தது.. அவன் சம்மதிப்பானா , இல்லை பூகம்பம் வெடிக்குமா.. என்ன முடிவெடுப்பான், கோபத்தில் ஏதாவது செய்துவிட்டால்.. நினைக்க கொஞ்சம் பயம் மனதை கவ்வியது.. பவியின் ஆசை சரியானதா என்ற குழப்பமும் மனதை குடைந்தது.. அவள் வளர்ந்திருந்தாலும் வெளிவிஷயங்கள் , வெளி மனிதர்களை எடைபோடத் தெரியாத பருவமாயிற்றே.. அவன் எப்படி பட்டவனோ.. தன் கணவன் போல இருந்தால்.. நினைக்க நினைக்க கொஞ்சம் நடுங்கியது சுகுமாரி பாட்டிக்கு.. இருப்பினும் பவி இவ்வளவு தீர்மானமாக இருப்பது கொஞ்சம் அவள் மீது ஒரு நம்பிக்கையையும் கொடுத்தது.. பவியின் பார்வை சரியானதாக இருக்கும் என்று..!

காலேஜிற்கு சென்ற பவி அங்கு எந்த கலகலப்பும் இன்றி வெறுமையாய் இருப்பது ரம்யாவிற்கு குழப்பத்தையும் வருத்தத்தையும் அளித்தது..

" என்னடி பவி.. வந்ததுலேந்து பாத்துட்டு இருக்கேன்.. உம்முனே இருக்க.. என்ன ஆச்சு.. நேத்துவேற லீவு.. எத கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டேங்கற.. என்னடி ஆச்சு.. என்கிட்ட கூட சொல்லமாட்டியா.." ரம்யா கேட்க.

அதுவரை அடக்கி வைத்திருந்த பாரம் மனதை அசைக்க கண்களில் நீர் துளிர்த்தது அவளுக்கு..

" ஹே... என்னடி ஆச்சு.. எதுக்கு அழற.. ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ப்.. இது க்ளாஸ்.. என்கூட வா.. கார்டன் பக்கம் போலாம்.." பதறிப் போன ரம்யா பவியை தனியாக இழுத்துக் கொண்டு சென்றாள்.. வாயை திறக்காமல் பவி விசும்ப...

" ஏய்.. என்னதான்டி ஆச்சு.. பவி.. ப்ளீஸ் சொல்லு.."

" ஹ்ம்.. எ.. எங்க வீட்ல மாப்ள பா... பாத்துட்டாங்க.."

" ஃபிக்ஸ் ஆயிருச்சா.." அதிர்ந்து கேட்டாள்..

" கிட்ட தட்ட அப்டித்தான்.. அவங்களுக்கு என்ன பிடிச்சு போச்சாம்.. இந்த வாரம் பொண்ணு பாக்க வராங்க.."

" ஓ.. நேரப் பாத்து உன்ன பிடிக்கனுமே.. ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்துவரனுமே.. அதுக்குள்ள ஏன் பவி பயப்படற.."

" இ.. இல்ல பவி.. கண்டிப்பா ஒத்துப்பாங்கன்னு அப்பா.. அப்பா சொல்லிட்டார்... எ.. எனக்கு என்ன பண்றதுன்னே புரியலடி."
தொண்டை அடைத்தது பவிக்கு..

" ஹே.. பவி.. பயப்படாத.. ரிஷிக்கு சொல்லிட்டியா.. "

" நேத்து வீட்ல இருந்ததால பேச முடியல.. மெசேஜ் அனுப்சேன்.. இ.. இன்னிக்கு பாக்கலாம்னு.."

" லூசு.. காலைலே என்கிட்ட சொல்லிருக்கலாம்ல.. மொதல்ல அவனுக்கு போனப் போடு.. இப்பவே அவன பாத்துட்டு விஷயத்த சொல்லிடுவோம்.. நானும் வரேன்.."

" இ... இப்போ எப்டிடி.. க்ளாஸ் இருக்கே.."

" அடியே.. வாழ்க்கையே கேள்விக்குறி ஆகப்போகுது.. இப்ப போய்.. அதெல்லாம் உடம்பு சரியில்லன்னு சொல்லிட்டி பெர்மிஷன் போட்டுக்கலாம்.. அவனுக்கு போன் பண்ணி ஹாபனவர்ல வரானான்னு கேளு.." ரம்யா அவசரப்படுத்த போனை எடுத்து அவனை அழைத்தாள் பவி.. ரிங் போய் கொண்டே இருந்தது.. திரும்பவும் போன் செய்தாள்.. கட் ஆனது.. அவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.. மீட்டிங்கில் இருப்பதாய்..

" சே.. நிலமை புரியாம.. ஹூம்.. சரி வா.. அவன் கால் பண்ணின உடனே சொல்லிட்டு கிளம்பலாம்.. வா.. " ரம்யா அலுத்துக்கொண்டே பவியுடன் க்ளாஸ் ரூமை அடைந்தாள்..

நேரம் மதியத்தை தாண்டியது.. அவனிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.. சோர்ந்து போனாள் பவி..

மணி மூன்றைத் தாண்ட போன் ஒலித்தது.. அறையில் எல்லோரும் அமைதியாய் இருக்க போன் அலறல் மட்டும் சப்தமாக கேட்டது.. பாடம் நடத்திக் கொண்டிருந்த மிஸ் இவளை முறைத்து பார்க்க.. வேகமாக எழுந்து வெளியில் வந்தாள், அட்டண்ட் செய்ய..

" ஹாய் பவி குட்டி.. என்ன காலைலயே போன் பண்ணிருக்க.. ம்ம்ம்.. என்ன பாக்க அவ்ளோ அவசரமா.. முக்கியமான மீட்டிங்ல இருந்தேன்.. அதான் பேச முடியல.. எப்போ பாக்கலாம்.. இன்னிக்கு லீவா.." அவன் ஆர்வமாக பேசிக் கொண்டே போக..

" ரிஷி.. ஒரு நிமிஷம்.. உங்கள்ட முக்கியமா பேசனும்.. அ.. அதான் கால் பண்ணேன்.." குரலில் ஓர் படபடப்பு தெரிந்தது..

" எ.. என்னாச்சு பவி.. எனி திங் ப்ராப்ளம்.." கொஞ்சம் கலவரமானான்..

" ம்ம்ம்.. ஆமா.. உங்கள பாக்கனும்.. வரமுடியுமா.."

" ஷூயர்.. ஷூயர்.. காஃபி ஷாப் வந்திடறயா.. ஐ'ல் பி தெயர் வித் இன் ஹாபனவர்.. "

" ம்ம்ம்.. சரி... "

உள்ளே வந்து ரம்யாவின் அருகில் அமர்ந்தாள்..

" போன்ல யாரு.. ரிஷியா.."

" ம்ம்ம்..."

" வரேன் சொல்லிட்டானா.." அவள் தலை அசைக்க.. அப்போ கிளம்பலாம் வா.." ரம்யா பரபரத்தாள்.. பவி ஆசிரியரை பார்க்க , வேகமாக எழுந்த ரம்யா பவியை இழுத்துக் கொண்டு முன்னே நடந்தாள்..

நேராக ஆசிரியரிடம் சென்று.. " மிஸ்.. இவ பாட்டிக்கு சீரியஸ்.. இப்போதான் கால் வந்தது... நாங்க உடனே போனும்.." முகத்தை பதட்டமாக வைத்துக் கொண்டு கூறினாள்.. ஆசிரியர் தலை அசைக்க.. பவியை இழுத்துக் கொண்டு வெளியேறினாள் ரம்யா..

இருவரும் அந்த காபி ஷாப்பை அடைந்திருந்தனர். அங்கு காத்துக் கொண்டிருந்தான் ரிஷி..

" என்னாச்சு பவி.. வா.. உள்ள போய் பேசலாம்.." இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.. தனி பகுதியில் மூவரும் அமர்ந்தனர்..

" சொல்லு பவி.. " அவன் கேட்க , சொல்ல முடியாமல் வார்த்தை அடைத்து வந்தது பவிக்கு.. தலையை கவிழ்ந்து கொண்டாள்.. அருகில் இருந்த ரம்யா அவளது தோளை ஆதரவாக பற்றியபடி அவனிடம் கூற ஆரம்பித்தாள்..

" ரிஷி.. இவங்க வீட்ல இவளுக்கு மாப்ள பாத்துட்டாங்க.. இந்த வீக் பொண்ணு பாக்க வராங்களாம்.. அல்மோஸ்ட் பிக்ஸ் ஆன மாதிரிதான்.."

" என்ன சொல்றீங்க.." அதிர்ந்து போனான் ரிஷி..

" எஸ்... இவங்க அப்பா இதுக்கு ஒத்துக்குவாரான்னு தெரியாது.. வீட்ல யார்கிட்டயும் சொல்லமுடியாம தடுமாறறா.. நீங்கதான் இதுக்கு வழி சொல்லனும்.." ரம்யா படபடவென கூற சிந்தனையில் ஆழ்ந்தான் ரிஷி.. சிறிது நேரம் மெளனத்தில் கரைய, அவனையே பார்த்துக் கொண்டிருந்த ரம்யா கொஞ்சம் கோபமானாள்..

" என்ன மிஸ்டர் ரிஷி.. எதுவும் பேசாம இருக்கீங்க.. நீங்க அவள உண்மைலே லவ் பண்றீங்கதானே.. இல்ல ஜஸ்ட் டைம் பாஸூக்கா.. ஒன்னுமே சொல்லமாட்டிக்கிறீங்க..." ரம்யா கேட்க..

" நீங்க நினைக்கற மாதிரி நான் இல்ல.. ரைட்... பவிய என் உயிருக்கு உயிரா நேசிக்கறேன்.. எப்படி இவங்க வீட்ல பேசறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.. இப்போ கூட இவ வீட்டுக்கு போய் இவங்க அப்பாகிட்ட பேசிடுவேன்.. எனக்கொன்னும் பயமில்ல.. சினிமாத்தனமா சண்ட போட்டு தூக்கிட்டு வர நான் முட்டாள் இல்ல.." கொஞ்சம் விரைப்புடன் கூற ரம்யா தலைகவிழ்ந்தாள்...

" அதுக்கப்பறம் இவ நிலைய நினச்சு பாருங்க.. நிம்மதியா இருக்க முடியுமா.. எங்க கல்யாணம் எல்லாரோட ஒப்புதலோட ஊரறிய ஜாம்ஜாம்னு நடக்கனும்.. நாங்க ரெண்டு பேரும் தப்பு எதுவும் பண்ணல.. ஓடி போறதுக்கு..! எதையும் சிந்திக்காம எமோஷனலா முடிவெடுக்கறது முட்டாள்தனம்.. அத நான் என்னிக்கும் பண்ண மாட்டேன்.. எங்க வீட்ல நான் பேசி சம்மதம் வாங்கறேன்.. நீ ஒன்னும் பயப்படாத பவி , நான் இருக்கேன்.. பொண்ணு பாக்கத்தான வராங்க.. பாத்துட்டு போட்டும்..." ரிஷி பவியின் கைகளை பற்ற , அவன் பார்வையில் தெரிந்த நேசத்தில் நெஞ்சம் நிறைந்தாள் பவித்ரா.!

பவியை சமாதான படுத்தி அனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்தான் ரிஷி..
அம்மா சமையல்கட்டில் இருக்க , அப்பா ஹாலில் பேப்பருடன் அமர்ந்திருந்தார்..

எப்படி சொல்வதென்ற தயக்கத்துடன் நேராக தன் அறைக்கு சென்று அமர்ந்து கொண்டான்.. எதுவாக இருந்தாலும் அம்மாவின் மூலம் அப்பாவிடம் ஒப்புதல் பெறுவது ரிஷியின் வழக்கம்.. ஆனால் , காதல் விஷயத்தை சுந்தரவல்லியிடம் வெளிப்படையாகக் கூற தயக்கமும் ஒருவித பயமும் உள்ளுக்குள் ஓடியது..!
இருப்பினும் அவளிடம் பேச வேண்டிய கட்டாயம் அவனை தூண்டிக் கொண்டே இருந்தது.. தவிப்புடன் இருந்தான்..

இன்னும் ஓரிரு தினங்களுக்குள் சுந்தரவல்லி கொஞ்சம் இலகுவாக இருக்கும் சமயத்தில் தனிமையில் பேசி சம்மதத்தை பெற வேண்டும் என்ற தீர்மானத்தான் ரிஷி..! அப்பாவிடம் நேரடியாக இந்த விஷயத்தை சொல்வது சரியல்ல என நினைத்துக் கொண்டான்.. உள்ளுக்குள் ஒருவித படபடப்பு இருந்து கொண்டே இருந்தது.. பவியிடம் தைரியமாக கூறிவிட்டாயிற்று.. எப்டி எல்லோருடைய சம்மதத்தையும் பெற்று அவளை கரம் பிடிப்பது என நினைக்கையில் மலைப்பாக இருந்தது.. மனம் தளரக் கூடாது.. தனக்குள் சொல்லிக் கொண்டான்.." என்னோட பவிய நான் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. அவ இல்லாம என் வாழ்க்கைய நினச்சு பாக்கவே முடியாது.." நினைக்க நினைக்க அவனுள் ஓர் வைராக்யம் ஊற்றெடுத்தது.. அவள் நினைவுகளோடு உறங்கிப் போனான்..

இரண்டு நாட்கள் இப்படியே செல்ல , அம்மாவிடம் அவ்வப்பொழுது மகிழ்ச்சியாகப் பேசி அவளிடம் இந்த விஷயத்தை பற்றி பேச தயாராக்கிக் கொண்டிருந்தான்.. ரிஷி மகிழ்ச்சியாக இருப்பது சுந்தரவல்லிக்கும் அவனை சரிகட்டிவிடலாம் என்ற எண்ணம் ஓடியது..

அன்று ,

" ரிஷி கண்ணா... இன்னும் எவ்ளோ நாளைக்குத் தான் இப்டியே கல்யாணம் வேண்டாம்ன்னு தள்ளிப் போட்டுண்டே இருப்பே.. ம்ம்ம்.." சுந்தரவல்லி ஆரம்பித்தாள்..

" ஹாஹா.. பண்ணிக்க வேண்டியதுதான்.. இனிமே என்னம்மா.. அதுக்குதான் நேரம் வந்துடுத்தே.." மேலோட்டமாக விஷயத்தை ஆரம்பித்தான் ரிஷி.. சுந்தரவல்லிக்கு தன் கணக்கு பலிக்கபோகும் நேரம் வந்ததென குஷியானது..

" ரிஷி கண்ணா.. அம்மா பேச்சத்தான் நீ தட்டமாட்டியே.. சரின்னு ஒரு வார்த்த சொன்னேனா உடனே வேலைல இறங்கிடுவேன்.." ஜனனியை மனதில் வைத்து அவள் கேட்க..

" உன்கிட்ட தானேம்மா எல்லாத்தையும் ஷேர் பண்றேன்.. என்னோட ஆசைய நீ நிறைவேத்தி வைக்கமாட்டியா என்ன.." ரிஷி தன் ஆசையை கூறினான்..

" உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் ரிஷி.. உனக்கு அழகா ஒரு கல்யாணத்த பண்ணி வெச்சுட்டு நீ நல்லபடியா ஜாம் ஜாம்னு வாழறத பாக்கனும்னுதான் ஆசப்படறேன். ஆனா உங்கப்பா தான் எதுக்கெடுத்தாலும் அது இதுன்னு பேசி எதையும் செய்ய விடமாட்டேங்கறார்.. நீ எப்பவும் என் பேச்ச கேப்பன்னு நேக்கு தெரியும்.." அவள் புன்னகைக்க.. தன் காதலைப் பற்றி சொல்ல சந்தர்ப்பம் வந்ததென நினைத்தான் ரிஷி.

" அ.. அப்போ.. எனக்கு.. " வார்த்தைகளை கோர்க்குமுன்னே..

" ரிஷி.. உன் ஒப்புதல் போதும்.. அம்மாட்ட விட்டுடு நான் பாத்துக்கறேன்.. நீ எதுக்கும் கவலப்படாத.. அப்பாவ சமாளிக்க ஒரு வழி வெச்சுருக்கேன். அதிரடியா இறங்கினாத்தான் சரிவரும்.. இன்னிக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டிட்டு வந்துடறேன்.." சுந்தரவல்லி இடை மறித்து பேசிக் கொண்டே போனாள்..

கொஞ்சம் குழம்பிப் போன ரிஷி..." அ.. அது... நான் சொல்ல வந்தது..."

" நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.. கொஞ்சம் கிளப் வரைக்கும் போக வேண்டிய வேலை இருக்கு.. போயிட்டு வந்துட்டு பேசறேன்.. " மடமடவெனக் கிளம்பினாள் சுந்தரவல்லி.. என்ன சொல்வதெனத் தெரியாமல் குழம்பிப் போனான் ரிஷி..

ரிஷியையும் அழைத்துச் செல்ல வேண்டாமென ஆட்டோவை வைத்துக் கொண்டு அகிலா வைத்யநாதன் வீட்டிற்கு கிளம்பினாள் சுந்தரவல்லி..

பெரிய காம்பவுன்ட் வாலினுள் நுழைந்து நின்றது ஆட்டோ.. மனதில் ஓர் படபடப்புடன் உள்ளே நுழைந்தாள் சுந்தரி..

ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த அகிலாவை பார்த்ததும் சந்தோஷம் பீரிட்டது..

" ஹாய் அகிலா.. எப்டி இருக்கே.. உன்கிட்ட அவசரமா பேசனும்னு தான் சொல்லாம கொள்ளம கிளம்பி வந்துட்டேன்.. ஹவ் ஆர் யூ.."

" யா... குட்... " வேண்டா வெறுப்பாய் கூறினாள் அகிலா.. அவளருகில் சென்று அமர்ந்து கொண்ட சுந்தரவல்லி பேச்சை ஆரம்பித்தாள்..

" ஜனு இல்லையா.. வெளில போயிருக்காளா.. அப்பறம் , ரிஷி ஜனு கல்யாண விஷயமா நான் ஒன்னு யோசனை பண்ணிருக்கேன்.. என் ஆத்துக்காரர் கொஞ்சம் முரண்டு.. ரிஷி அப்டி இல்ல.. அவன் சம்மதம் சொல்லிட்டான்.. அதான்.. நீயும் உங்க ஆத்துக்காரரும் எங்காத்துக்கு ஒருதரம் ஃபார்மல் விசிட் வந்தேள்னா எல்லாருமா பேசி ஒரு முடிவுக்கு வந்துடலாம்.. என்ன சொல்றே.." சுந்தரி படபட வென கொட்டினாள்..

" ஃபார் வாட்... " கொஞ்சம் கோபம் ஏற , கேட்டாள் அகிலா..

" என்ன அகிலா... எதுக்குன்னு கேக்கறே... எல்லாம் ஜனி ரிஷி கல்யாணத்த பத்திதான்.. உங்க ஆத்துக்காரர் வந்து பேசினா , இவருக்கு
உங்க அருமை பெருமை புரியும்.. நிச்சயம் சம்மதிச்சுடுவார்.. அப்பறம் நல்ல நாளா பாத்து தட்ட மாத்திண்டிட வேண்டியதுதான்.. இந்த கல்யாணம் முடுஞ்சா நேக்கு நிம்மதி.."

" எதுக்காக நாங்க வரனும்.. ஹ்ம்.. உன் பையனுக்கு எத்தனபேர பாப்பே.. காதலிக்க ஒருத்தி.. கல்யாணம் பண்ணிக்க வசதியா ஒருத்தியா.. ஹவ் க்ளவர்.. "

" எ.. எத்தன பொண்ணா.. என்ன சொல்றே.. " கொஞ்சம் அதிர்ந்தாள் சுந்தரி..

" லுக் சுந்தரி.. நீ இப்டி என்னை ஏமாத்துவேன்னு நான் கனவுல கூட நெனச்சு பாக்கல.. என் ஸ்டேட்டஸூக்கு, ஜனுவோட அழகுக்கு , பசங்க க்யூல வந்து நிப்பாங்க.. பெரிய இடத்தையெல்லாம் விட்டுட்டு ஸ்டேட்டஸ் பாக்காம உன் பையனை பாத்தேன் பாரு.. என்ன சொல்லனும்.. அவனுக்கு என்ன அவ்ளோ ஹெட்வெயிட்.. வேற பொண்ண காதலிக்கறான்னா முதல்லயே சொல்ல வேண்டியதுதானே.. அது இல்லாம என் பொண்ண இன்சல்ட் பண்ணி... சே.. அவள வேண்டாம்னானாமே.. அவன் யாரு என் பொண்ண ரிஜக்ட் பண்ண.. நான் இப்ப சொல்றேன்.. ரிஷி ஜனுக்கு வேண்டாம்.. எனக்கும் உன் சம்பந்தம் வேண்டாம்.. இனிமே இதப் பத்தி பேச என்கிட்ட வராதே.. பழகின ப்ரண்ட்னால இதோட நிறுத்திக்கறேன்.." கொந்தளித்த அகிலாவைக் கண்டு மூச்சடைத்துப் போனாள் சுந்தரவல்லி.. ஒரு நிமிடம் என்ன பேசுவதென்றே தெரியாமல் முழித்தாள்..

" எ.. என்ன சொல்ற அகிலா.. ரிஷி.. ரிஜக்ட் பண்ணானா.. காதல் அது இதுங்கறே.. என் பையன் அப்டிபட்டவன் இல்ல.." படபடத்தாள் சுந்தரவல்லி.

" ஹூம்.. நல்ல அம்மா நல்ல பையன்.. நல்ல ட்ராமா.. ஜனு ரிஷிய வேண்டாம்னு சொல்லிட்டா.. எனக்கும் தான்.. தட்ஸ் இட்.. இதோட இந்த பேச்ச நிப்பாட்டிப்போம்.." முகத்தை திருப்பிக் கொண்டாள் அகிலா..

" இங்க பார் அகிலா.. உன் பொண்ணுக்கு இஷ்டமில்லைங்கறதுக்காக என் பையன் மேல பழி போடாத.. அவன் அப்படிபட்டவன் இல்ல.."

" ஹோ... ரியலி.. புவர் மதர்.. போ.. போய் உன் பையன்கிட்டயே கேளு.. என்ன சொன்னான்னு.. அப்போ தெரியும் அவனோட லக்ஷனம்.. ஜனு நாட் லைக் தட்.. என் பொண்ணுக்கு பொய் சொல்லனும்கற அவஷ்யம் இல்லே.. அவளுக்கு ரிஷி மாதிரி ஒரு பையன் தேவையும் இல்ல.. யூ கேன் கோ நெள.." முகத்தில் அடித்தார்போல் அகிலா கூற , கோபமும் அதிர்ச்சியும் அவமானமும் ஒரு சேர அங்கிருக்க பிடிக்காமல் வேகமாக கிளம்பினாள் சுந்தரவல்லி.. மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் முளைத்து அவள் மென்னையை பிடித்தது.. ரிஷி அப்படி எதுவும் செய்திருக்க மாட்டான் என திட்டவட்டமாக நம்பினாள்.. ஜனனி மீதும் அகிலா மீதும் இனம்புரியாத கோபம் பொங்கியது.. ஆற்றாமையும் தோல்வியும், உடைந்து போன கனவுகளும் அவளுக்குள் கோபக் கனலை ஊற்றியது..

ஆட்டோவிலிருந்து இறங்கி வேகவேகமாக வீட்டின் உள்ளே வந்தவள் கிச்சனுக்கு சென்று மடமடவென நீரினை அருந்தினாள்.. மனம் சாந்தமடைய மறுத்தது.. தன் மகனை விட்டுக்குடுக்க அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.. துவண்டுபோய் சோஃபாவில் அமர்ந்தாள்.. வெளியில் சென்ற சந்திரசேகர் உள்ளே நுழைந்தார்..

" என் சுந்து அசந்து உட்காந்து இருக்கியே.. என்ன ஆச்சு... வெயில்ல போய்ட்டு வந்தியா.."

அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.. அவரிடம் சொன்னால் தன்னை எங்கு அவமானப்படித்தி விடுவாரோ என உள்ளுக்குள் பொறுமியபடி முனுமுனுத்தாள்.. " ஒன்னுமில்ல.. லேசா தலைவலி.. அவ்ளவுதான்.."

அவர் சிரித்தபடி மாடிக்கு சென்றுவிட வெளியில் சென்றிருந்த ரிஷி உள்ளே நுழைந்தான்.. சுந்தரி கவலையுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அவளருகில் வந்து அமர்ந்தான்.

" என்னம்மா.. ஒருமாதிரியா இருக்கே.. கிளப்புக்கு போயிட்டு வரேன்னு சொன்னே.. என்ன ஆச்சு.."

அவனை முறைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்..

" என்னம்மா ஆச்சு.. ஏன் இப்டி பாக்கற.." ரிஷிக்கு கொஞ்சம் கலக்கம் பிறந்தது..

நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறி மாறி எழ அவனை ஊடுருவப் பார்த்து அவன் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாள்.. தன் மகன் தன்னிடம் எதையும் மறைப்பதில்லை என்ற நம்பிக்கை அவளது பார்வையில் ஓர் எதிர்பார்ப்பை தூண்டி விட்டிருந்தது.. மெள்ள கண்களை தாழ்த்திக் கொண்டான் ரிஷி..

" எ.. என்ன ஆச்சுமா.. "

" அகிலா வீட்டுக்கு போயிருந்தேன்.." அவனை முழுமையாக பார்த்தபடியே கூறினாள்..

" யா.. யாரு... உ.. உங்க பிரெசிடென்ட் வீட்டுக்கா.." தடுமாறினான்.. முகத்தில் வியர்வை பூத்தது..

" ஆமா.. எல்லாம் உன் கல்யாண விஷயமாத்தான்.. அவள்ட்ட பேசி ஒரு முடிவெடுத்திடலாம்னு போனேன்.. ஹூம்.. அந்த அகிலா இப்டி பேசுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.."

" எ... என்ன.. சொன்னா.."

" அவ பொண்ண உனக்கு தர மாட்டாளாம்.. உன்னபத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லி சப்ப கட்டுகட்றா.. நீ ஏதோ ஒரு பொண்ண லவ் பண்றியாம்.. ஜனனிய இன்ஸல்ட் பண்ணிட்டியாம்.. என்னலாமோ சொல்றா.. அவ பொண்ணுக்கு மாப்ளைகள் க்யூல நிக்கறாளாம்.. ஏன் , உனக்குந்தான் என்ன குறை.. இவோ இல்லைனா , வேற பொண்ணே கிடைக்காதா.. உன் அழகுக்கும் திறமைக்கும் ஆயிரம் பொண்கள் வருவா.. நமக்கென்ன அந்தஸ்து இல்லையா.. ஆஸ்தி இல்லையா.. என்னமோ இவ மட்டும் தான் பணக்காரின்னு நெனப்பு.. ஹூம் , அப்பா ஏற்கனவே சொன்னார்.. வெளிநாட்டுக்கு போய் டாம்பீகமா திரிஞ்சதுகள்லாம் சரிப்பட்டு வராதுன்னு.. சரியா போச்சு.. ஹூம்.. உன்ன இப்டி பேசுவான்னு நெனச்சே பாக்கலை.. நேக்கு படபடவென வந்துடுத்து.. போட்டும் போன்னு வந்துட்டேன்.. இனி அவோ சவகாசமே வேண்டாம்.." கண்களில் வெறுமை இழையோடியது..

அமைதியாகவே இருந்தான் ரிஷி..

" கண்ணா.. ரிஷி.. உன்ன பத்தி நேக்கு நன்னாத் தெரியும்.. அவ சொல்றத நம்பிடுவேனா... அவ முன்னாடியே உனக்கு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி அவோ மூக்க ஒடைக்கறேன்.. நம்ம கிளப் மெம்பர் அருணா சீதாராம் இருக்காளே.. அவ பொண்ணு நளினா , சாஃப்ட்வேர் இஞ்சினியரா இருக்கா.. அவ அப்பா கோடீஸ்வரர்.. சொத்து பத்து ஏராளம்.. நமக்கு ஏத்த இடம்.. அவள்ட்ட பேசி உனக்கு முடுச்சுபுடறேன்.. அவ எம்பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டா.. அந்த பொண்ணும் லக்ஷ்ணமா இருப்போ.. அருணாவ இங்கயே வரச் சொல்லி...." சுந்தரவல்லி பேசிக் கொண்டே போக ரிஷி இடைமறித்தான்..

" அம்மா.......... நா.... நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்.. " ரிஷி அமைதியாகக் கூற , பாதியில் பேச்சை நிறுத்தி அவனை புரியாமல் பார்த்தாள்...

" என்ன.... என்ன சொன்னே..." அவனை குழப்பத்துடன் ஏறிட்டாள்..

" நான் ஒருத்திய லவ் பண்றேன்.. அவள மனசார விரும்பறேன்.. அவளத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. " ரிஷி தெளிவாகக் கூற..

அவன் மீது வைத்திருந்த அத்தனை நம்பிக்கையும் ஒரு நொடியில் இடிந்து விழுந்து தரைமட்டமாகி அவள் இதயத்தை தாக்க விரிந்த கண்களுடன் அதிர்ச்சியாய் பார்த்தாள் சுந்தரவல்லி.. " எ.. என்னடா சொல்ற.. அ.. அப்போ அகிலா சொன்னது.. உ.. உண்மையா.."

" ம்ம்ம்....." மெள்ள தலை அசைத்தான் ரிஷி..!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 22

அறையில் தவிப்புடன் அமர்ந்திருந்தாள் பவித்ரா.. இன்னும் மூன்று நாட்களில் பெண்பார்க்க வருவதாய் அப்பா சொன்னது அவளை இனம் புரியாத கலக்கத்தில் ஆழ்த்தியது.. தனக்கிருக்கும் ஒரே துணை பாட்டி மட்டும் தான்.. அவளும் அமைதி காப்பது பவிக்கு அச்சத்தை ஊட்டியது.. எழுந்து பாட்டியின் அறைக்கு சென்றாள்.. சுகுமாரி பாட்டி படுத்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.. அருகில் சென்று அவள் கால்மாட்டில் அமர்ந்தாள் பவி.. மெள்ள கால்களை பவி பிடிக்க , நினைவு திரும்பியவளாய் பவியை ஏறிட்டாள் சுகுமாரி..

" என்ன கண்ணு.. எப்ப வந்தே.. பாக்கவே இல்ல பாரு.. நெனப்பு முழுக்க ஏதோ பழய சிந்தனை.. எப்பத்தான் என் மனசு ஆறுமோ.. ஹ்ம்ம்.." பெருமூச்செறிந்தாள்..

பவி எதுவும் பேசாது அவளை பார்த்துக் கொண்டிருந்தாள்.. பார்வையில் தவிப்பேற கண்களால் பாட்டியிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தாள்..

" ஹ்ம்ம்.. கொஞ்சம் பொறுமையா இரு பவி.. உங்கப்பாட்ட நேரம் பாத்து பதவீசாத் தான் பேசனும்.. அவன் குணம் தான் நோக்கு தெரியுமே.."

" இன்னும் பொறுமையா இருந்தா என் வாழ்க்கையே போய்டும் போல இருக்கே பாட்டி.. அவா மூனு நாள்ல பாக்க வரேன்னு சொல்லிருக்காளே.. பிக்ஸ் ஆயிடுத்துன்னா நான் என்ன பண்றது பாட்டி.. மனச வேற இடத்துல வெச்சுண்டு ஜடம் மாதிரி இன்னொருத்தனோட வாழ முடியாது பாட்டி.. அதுக்கு பேசாமா போயிடலாமான்னு தோன்றது..." பவி குலுங்க...

" சீ... அசடு.. எல்லாமே முடுஞ்சு போயிடுத்தா என்ன.. வாழ்க்கைல எல்லாத்தையும் சந்திக்கற தைர்யம் வேணும்.. ஒத்த புள்ளையோட தன்னந்தனியா இருந்து , அவன வளத்து ஆளாக்கி என் கடமைய செஞ்சிருக்கேன்.. மனசுல வைராக்யம் இருக்கனும்.. கடைசி வரைக்கும் போரடற குணம் வேனும்.. அதவிட்டுட்டு இப்படி அபத்தமாலாம் யோசிக்கப்டாது.. புரியறதா.. இன்னிக்கு அவன் வரட்டும்.. பேசிடலாம்.. உன் சந்தோஷம் தான் நேக்கு முக்கியம்.. அதுக்கு உன் செலக்ஷன் சரியான்னு நேக்கு தெரியனும்.. அவன் என்ன பண்றான்.. அவன் அப்பாம்மாலாம் என்ன பண்றா.. அவா குடும்பத்த பத்தி சொல்லு.."

கண்களை துடைத்துக் கொண்டாள்.." அவர் மெடிக்கல் லைன்ல இருக்கார் பாட்டி.. பெரிய கம்பெனி தான்.. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. அவர் அப்பா ரிடயர்ட் பேங்க் மேனேஜர்.. அம்மா ஆத்லதான் இருக்கா.. ரொம்ப நல்ல டைப்.. நல்ல பேமிலி.. கொஞ்சம் வசதியானவா தான்.. ஒரே பையன்.."

" அவா பூர்வீகம் எதுவும் தெரியுமா.."

" அ.. அதெல்லாம் தெரியல பாட்டி.. அவர் தாத்தா கோயம்புத்தூர் பக்கம் பெரிய கப்பெனில மேனேஜரா இருந்தாராம்.. அம்மாவோட பூர்வீகம் எதுவும் சொன்னதில்ல.."

" ஹ்ம்.. நல்ல குடும்பம் தானே.. அவனுக்கு உன்மேல விருப்பம் இருக்குதானே.. கடைசி வரைக்கும் உன்ன கண் கலங்காம பாத்துக்கனுமே.. அவன் அம்மா அப்பாலாம் எப்டி , நல்லவாளா.."

" அவர் அம்மா மூலமாத்தான் அவரே பழக்கமானார்.. அவா ரொம்ப நல்ல டைப்.. ஜோவியலா பழகுவா.. என்னை அவாளுக்கு ரொம்ப பிடிக்கும்.. அவாத்துக்கு ஒருதரம் கூட்டிண்டு போயிருக்கா.. அவர் அப்பா தான் கொஞ்சம் பழமைவாதி.. "

" அப்போ.. அவாளுக்கு விஷயம் தெரியுமா.. "

" இ... இல்ல பாட்டி.. அவர்ட்ட பொண் பார்கற விஷயத்த சொல்லிட்டேன்.. அவர் ஆத்ல பேசி சம்மதம் வாங்கறேன்னு சொல்லிருக்கார்.. அதுக்குள்ள அப்பா எதாவது முடிவெடுத்துட்டார்னா என்ன பண்றது.. நீ கொஞ்சம் பேசிடு பாட்டி.."

" ஹ்ம்... நல்ல குடும்பமாத் தான் தெரியறது.. நடேசன் வரட்டும் பேசறேன்.." பாட்டி சொல்ல கொஞ்சம் மன ஆறுதல் கொண்டாள் பவித்ரா..

மாலை வேலை முடித்து வீட்டிற்கு திரும்பினார் நடேசன்.. கைகால் அலம்பிக் கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தார்.. பாட்டியுடன் அமர்ந்திருந்த பவித்ராவிற்கு அடிவயிற்றை பிசைந்தது.. பாட்டியை பார்த்தாள்.. அவளிடம் கை அமர்த்திவிட்டு மெதுவாக எழுந்து ஹாலுக்கு வந்து அமர்ந்தாள்.. புன்னகையுடன் அம்மாவை பார்த்து " ம்ம்... இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு வர்ர வெள்ளி கிழமை சாயங்காலம் வர்ரேன்னு சொல்லிருக்கா.. இன்னிக்கு தான் நேரடியா பையனோட அப்பாட்ட பேசினேன்.. ரொம்ப நல்ல மனுஷன். அவ்ளோ மரியாதை.. பொண்ணாத்துக்காரான்னு எந்த இளக்காரமும் இல்லாதைக்கு நன்னா பேசிண்டு இருந்தார்.. அவர் பையனுக்கு ரெண்டு மூனு இடத்துலேந்து பொண்கள் வந்துருக்காம்.. மாப்ளையாண்டனுக்கு நம்ம பவித்ராவத்தான் ரொம்ப புடுச்சு போய்டுத்தாம்.. வெள்ளிக்கிழமை அன்னிக்கே தாம்பூலம் மாத்திண்டிடலாம்னு சொல்லிட்டார்.. ஹாஹா.."

" ம்ம்ம்.. சந்தோஷம்.." சுகுமாரி சுரத்தில்லாம் பதிலளித்தாள்..

" நேக்கு பரிபூரண சம்மதம்னு சொல்லிட்டேன்.. இதவிட நல்ல வரன் நம்ம பவித்ராக்கு அமையாது.. பகவானா பாத்து அமச்சு குடுத்துட்டார்.. நான் பண்ண பூஜைக்கு கைமேல பலன் கெடச்சுடுத்து.. அவா வெரி சிம்பிள்.. அவர் பையன் அவ்ளோ ரிசர்வுடு டைப்பாம்.. அப்பா சொல்றதுக்கு மறுத்து பேச மாட்டானாம்.. அப்பறம்..." அவர் பேசிக் கொண்டே போக பாட்டி அவரையே பார்த்து
கொண்டிருந்தாள்..

அவர் புகழாரத்தை முடித்து நிறுத்த , " நடேசா.. உன்கிட்ட முக்கியமா ஒரு விசயம் சொல்லனும்.." பாட்டி நிதானமானத் தொடங்கினாள்..

" சொல்லு.. உன் பேத்தி முரண்டு புடிக்கறாளா.. கல்யாணம் வேண்டாம்னு
.. எங்க அவோ.. ரூம்ல உட்காந்துண்டு உன்ன அனுப்சுவிட்டாளா.. ஹூம்.." பார்வையில் சிறிது கோபம் தெரிந்தது..

" நடேசா.. நான் சொல்றது கொஞ்சம் நிதானமா கேப்பியா... படபடன்னு இருக்காதே.. "

" ம்ஹ்ம்.. இவ்வளவு வருஷம் நிதானமாத் தானேம்மா நடந்துண்டு இருக்கேன்... அப்டி தானே நீ என்ன வளத்திருக்கே.."

" கல்யாணம்கறது ஆயிரம் காலத்து பயிர்.. பயிரிடற நிலமும் சோட போயிடப்படாது.. விதையும் சோடையா இருக்கப்டாது.. அப்பத்தான் சம்சார வாழ்க்கை வளந்து பரிமளிக்கும்.. அந்த காலம் மாதிரி இவன் தான் உனக்கு ஆத்துக்காரர்.. இவ தான் ஆத்துக்காரி.. இவர் சொல்படித்தான் நடக்கனும்.. அவர் ஆடுன்னா ஆடனும் , பாடுன்னா பாடனும்கறது இந்த காலத்துக்கு சரியா வராது.. உனக்கு பங்கஜத்த பாக்கும்போதே அவளோட விருப்பத்த கேட்டுட்டுத்தான் கல்யாணத்தையே பண்ணினேன்.. நியாபகம் இருக்கா.. என்னிக்காவது உங்க ரெண்டுபேருக்கும் பிணக்கம் வந்துருக்கா.. இவ்ளோ வருஷம் ஒருத்தருக்கொருத்தர் தோள் கொடுத்து தானே வாழ்ந்திருக்கேள்.."

சுகுமாரியை விநோதமாக பார்த்தார் நடேசன்..

" இப்போ காலம் மாறிடுத்து.. பொண்கள படிக்க வைக்கறோம்.. வேலைக்கு அனுப்பறோம்.. அவாளுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கோம்.. " நிறுத்தினாள்.

" இப்போ என்ன சொல்ல வர்ரே.. அவளுக்கு கல்யாணம் வேண்டாம்னா விட்டுடறதா.. அவளுக்கு என்ன தெரியும் சொல்லு.. எதாவது அனுபவப் பட்ருப்பாளா.. இல்ல இந்த பந்தத்தோட அருமைதான் தெரியுமா.. படிப்பு வேலை மட்டுமே எல்லாம்னு ஆயிடுமா.. அதத் தாண்டி வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கு.. ஒரு துணை வேணும்.. குழந்தை குட்டிகள் வேணும்.. அப்பத்தான் வாழ்க்கை முழுமை அடையும்.. அதுக்கு காலாகாலத்ல ஒரு கல்யாணம் பண்ணிக்கனும்.. அத சரியான நேரத்ல பண்ணி வெக்க வேண்டியது பெத்தவா கடமை.. அதத்தான் நான் செஞ்சுண்டு இருக்கேன்.. அது அவளுக்கு புரியாட்டியும் நோக்கு புரியும் தானே.. மூனு தலைமுறைய பாத்தவளாச்சே.. வாழ்க்கையோட சாராம்சத்த அனுபவஸ்தி நீதானம்மா அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கனும்.. அதவிட்டுட்டு உன் பேத்தி சொல்றான்னு என்கிட்ட பேசறியே..."

இவர்கள் பேச பங்கஜமும் அங்கு வந்து நின்று கொண்டாள்..

" டி பங்கஜம்... பாரு அம்மாவ , அவ பேத்திய விட்டுக் கொடுக்க மனசில்லாதைக்கு என்னோட மல்லுகட்டிண்டு இருக்கா.." அவர் கூற பங்கஜமும் சேர்ந்து கொண்டாள்.

" அம்மா.. அவளுக்கு செல்லங்குடுத்தது போதும்னு தோன்றது.. வேளை கெட்ட வேளைல வெளில போய்ட்டு வர்ரா.. வயத்துல நெருப்பக் கட்டிண்டு இருக்க வேண்டி இருக்கு... ஊரும் ஒலகமும் கெட்டு கடக்கு.. வயசு பொண்ணு வெளில போய்ட்டு வர்ரதுக்குள்ள உசுர கைல புடுச்சுண்டு இருக்க வேண்டிருக்கு.. கல்யாணம்னு ஒன்னு ஆயிடுத்துன்னா ஆம்படையான் பாத்துப்பானா.. ஒருத்தன் கைல புடுச்சு குடுத்தா நமக்கு நிம்மதிதானே.."

இருவரையும் மாறி மாறி பார்த்த சுகுமாரி மெள்ள செருமிக் கொண்டாள்..

" நடேசா.. ரெண்டு பேரும் சொல்றது நியாயம் தான்.. இல்லைனு சொல்லலை.. ஆனா சொல்ல வந்த விஷயத்த சொல்ல விடாதைக்கு ரெண்டு பேரும் அனுமானம் பண்ணின்டு பேசினேள்னா என்ன பண்றது..."

" அப்படி என்ன விஷயம்.. சொல்லு.." நடேசன் தயாராக..

" ம்ஹ்ம்..... பவிக்கு கல்யாணத்லே இஷ்டம் இருக்கு.. ஆனா..."

" ஆனா... என்னவாம்.."

" இந்த பையன் வேண்டாம்.."

" ஏன்.. இவனுக்கு என்ன குறச்சலாம்.. நல்ல பேமிலி , நல்ல பையன் , கைநெறய சம்பாதிக்கிறான்.. வேறென்ன வேணும்.. இதவிட நல்ல மாப்ளை எங்க கெடைப்பான்... முடுஞ்சா அவளையே பாக்க சொல்றியா.. நல்ல பையனா.."

மெல்லிய படபடப்பு மேலிட வேகமாக கிளம்பிய மூச்சினை நிறுத்தி , நிதானமாக கூறினாள் சுகுமாரி.." ஆமாம்.. அவளே ஒரு பையன பாத்துட்டா.."

புரியாமல் நடேசனும் பங்கஜமும் விழிக்க..

" பவித்ரா ஒரு பையன விரும்பறா.. அ.. அவன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறா.." சுகுமாரி கூற , நடேசனின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது..

" என்னது.. விரும்பறாளா... லவ்வா.. எங்க அவ.. பவி.. பவி.. வாடி இங்க.." கோபத்துடன் கத்தினார் நடேசன்..

ரூமிற்குள் அமர்ந்து இவர்களை பேசியதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பவித்ராவிற்கு அப்பா சத்தமாகக் கூப்பிட உடலெல்லாம் நடுங்கியது.. மிரட்சியுடன் மெள்ள எழுந்து தடுமாறியபடி ஹாலுக்கு வந்தாள்..

" என்னடி.... பாட்டி என்னவோ சொல்றா.. அவ்ளோ பெரிய மனிஷி ஆய்ட்டியா.. ஆ.. தோ பார்.. லவ்வு அது இதுன்னு எவனையாவது கூட்டிண்டு வந்தே பொலி போட்டுவேன்.. உன்ன வெளில அனுப்சது படிக்கத்தான்.. கண்டவனோட ஊர் சுத்த இல்லே.."

அவரை பார்க்க இயலாமல் தலையை தாழ்த்திக் கொண்டாள்.. கண்களில் நீர் முட்டியது..

" இதுக்குதான் தினம் ஸ்நேகிதி ஆத்துக்கு படிக்க போறேன்னு ஊர் சுத்திட்டு வரியா.. இதுக்கு உன் ஸ்நேகிதியும் உடந்தையா.. ம்ம்ம்.... இனி அவாத்துக்கு போனே.. அவ்ளவுதான்.. நீ லேட்டா வரும்போதே சந்தேகப் பட்டேன்.. என் பொண்ணு அப்டிலாம் இல்லைன்னு நம்பினேன்.. என் தலைலயே மண்ணள்ளி கொட்ட பாக்கறியா.. இந்த கன்றாவில்லாம் இந்த ஆத்ல நடக்கப்டாது.. ஒழுங்கா மரியாதையா நான் சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்கறே.. அவாளுக்கு நான் வாக்கு குடுத்துட்டேன்.. என்ன தலை குனிய வெச்சுடாதே.. அப்பறம் நான் என்ன செய்வேன்னு நேக்கே தெரியாது... லவ்வாம் லவ்வு.. பொழப்பத்து போய் திரியறியா... இதுக்கு பாட்டி துணை வேற.. ஏம்மா.. அவதான் எதோ கூறுகெட்டு போய் சொல்றான்னா.. பெரிய மனிஷி நீயும் அவளுக்கு புத்திமதி சொல்றத விட்டுட்டு , ஒன்னுந்தெரியாம என்கிட்ட பேச வந்துட்டே.. " நடேசன் கொதித்தெழ பவி கண்களில் நீர் கொட்ட ஆரம்பித்தது..

" நடேசா......." பாட்டியின் குரல் அதிர ஒரு கணம் அறையே அமைதியானது.. அனைவரும் ஸ்தம்பித்து அவளை பார்த்தனர்..

" கோபத்ல என்ன பேசறோம்னு புரியாம குதிக்காதே.. நான் அனுபவஸ்தி தான்.. கல்யாணம் பண்ணின்டு அத்தன கொடுமையும் பாத்தவ.. அத்தனையும் அனுபவிச்சவ.. எது சரி எது தப்புன்னு புரியாதவ இல்லே... நோக்கென்ன தெரியும் உன் அம்மாவ பத்தி.. ஹ்ம்ம்.. எடுத்தமா கவுத்தமா ஆச்சுன்னு போறவ இல்ல உங்கம்மா.." பாட்டியின் குரல் உயர அடங்கினார் நடேசன்..

" அ... அது இல்ல அம்மா... அவ சின்ன பொண்ணு.. அவ எதோ சொல்றான்னு நீயும்...."

" என்ன மாதிரி என் பேத்தியும் கஷ்டபடப்டாதுன்னு தான் இத்தன தூரம் உன்கிட்ட பேச வந்தேன்.. எல்லா ஆசையும் தொலச்சுட்டு , ஜடம் மாதிரி ஒருத்தனோட ஆசைக்கு தலையாட்டிண்டு அவன சந்தோஷப்படுத்தறது மட்டுமே வாழ்க்கைனு வாழ்ந்துட்டு செத்துப் போயிட கூடாதுனு தான் சொல்றேன்.. என் பேத்தியாவது சுதந்திரமா அவ ஆசைப்பட்ட வாழ்க்கைய வாழனும்னு தான் நான் விரும்பறேன்.. அவளுக்கு மனசுக்கு புடிக்காம நம்ம கட்டாயத்துக்காக ஒருத்தன கட்டிண்டு அவனுக்கு பிள்ளை பெத்து குடுத்துட்டு ஒரு அடிமை மாதிரி அவ வாழக் கூடாது.."

கொஞ்சம் அதிர்ச்சியுடனே எல்லாரும் பாத்துக் கொண்டிருந்தனர்..

" என் வாழ்க்கைய பத்தி சொன்னா இந்த நாள் முழுக்க போதாது.. ஹ்ம்ம்.. அதெல்லாம் மீறி உன்ன வளத்து ஆளாக்கி , ஒரு குடும்பத்த அமைச்சிருக்கேன்.. என் குழந்தைக்கு எந்த இடஞ்சலும் வரப்டாதுன்னு ஒவ்வொரு விஷயத்தையும் பாத்து பாத்து உன்ன இத்தன தூரம் காத்து வளத்த எனக்கா ஒன்னுந் தெரியாது... " பொறிந்தவள் மெள்ள சாந்தமானாள்.. பெருமூச்சு எழுந்து அடங்கியது..

சிறிது நேரம் அமைதியாகக் கடந்தது.

" ம்ஹ்ம்ம்... அதெல்லாம் விடு.. என் கதை என்னோடையே போட்டும்.. அது ஆராத ரணம்.. ம்ஹ்ம்ம்.. பவி வாழ்க்கையாவது நன்னா இருக்கனும். அவ யாரையோ எவரையோ கூட்டிண்டு வந்து இவனத்தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு முன்னாடி வந்து நிக்கலை.. நம்ம சம்மதத்தோட தான் எதுவும் நடக்கனும் நெனச்சதனால தான் தன் விருப்பத்த சொல்றா.. நாமும் பெரியவாளாட்டம் நடந்துக்கனும்.. அந்த பையன் நல்ல வேலைல இருக்கான். அவாத்துப் பேரும் இவளுக்கு நல்ல பரிச்சயமாம்.. வாழப்போறவ அவதானே.. உன் ஒப்புதலுக்குதான் காத்துண்டு இருக்கா... இனி பவியோட வாழ்க்கை உன் முடிவுலதான் இருக்கு.. நல்லதோ கெட்டதோ உன் பொண்ணு வாழ்க்கை எப்டி அமையனும் நீயே முடிவெடு.. ஆனா , அவ மனச நோகடுச்சுடாதப்பா.. " பாட்டி முத்தாய்பாய் முடிக்க..

தலையை குனிந்தபடி அமர்ந்தார் நடேசன்.. உள்ளுக்குள் புகைந்தது.." இப்டி இவ என்ன இக்கட்ல விடுவான்னு நெனச்சு பாக்கலை.. ஏற்கனவே பொண்ணு பாக்க அவாள வரச் சொல்லியாச்சு.. இந்த சூழ்நிலைல நான் என்னம்மா முடிவு பண்றது.. எனக்கு துளி கூட இஷ்டமில்லை.. காதல் அது இது எல்லாம் ஆரம்பத்ல நன்னாருக்கும்.. போகப் போகக் கசந்து போய்டும்.. கல்யாண வாழ்க்கைங்கறது வேற.. எல்லா சங்கடங்களும் வரும்.. அப்பறம் வருத்தப்பட்டு பிரயோஜனம் இருக்காது.. அது அவளுக்கு புரியலையே.. " வெறுப்புடன் பவியை பார்த்தார்..

நேரம் வெறுமையில் கரைந்தது..

பவித்ரா கண்களை துடைத்தபடி பேச ஆரம்பித்தாள்.

" அ... அப்பா.. உங்க பேச்சுக்கு மீறி நான் எதுவும் இதுவரை பண்ணதில்லே.. என்னோட முடிவும் தப்பா இருக்காதுப்பா.. அவர வேனும்னா வரச் சொல்றேன்.. பேசிப் பாருங்கோ.. ரொம்ப நல்லவர்ப்பா.. எ.. என்ன மனசார நேசிக்கறார்.. "

அதற்கும் அவர் மனம் ஏற்கவில்லை.. அமைதி காத்தார்..

" நடேசா.. நம்மாத்து பொண்ணு வாழ்க்கை சந்தோஷமா அமஞ்சா நமக்கும் தானே சந்தோஷம்.. அதுக்கு தடையா நாம இருக்க கூடாதில்லையா.. அம்மா சொல்றேன் கேளு நடேசா.. வேற வரன் அமஞ்சுடுத்துன்னு அவாள்ட்ட பேசிச் சொல்லிடு.. இந்த பையன் ஆத்லேந்து பெரியவாள வரச் சொல்லி பேசலாம்.." சுகுமாரி வழி சொல்ல எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியில் சென்றார் நடேசன்.. அவரது மனம் சஞ்சலத்தில் உழன்றது..

பங்கஜமும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அமைதியாக சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்..

கலக்கத்துடன் பார்த்த பவிக்கு புன்னகையுடன் நம்பிக்கை ஊட்டினாள்
சுகுமாரி.

இங்கு..

" என்னடா சொல்றே... ல.. லவ் பண்றியா.. என்ன விளையாடிண்டு இருக்கே.. யாருடா அது..."

" பவித்ரா..."

அதிர்ந்து போனாள் சுந்தரவல்லி..

" யாரு.. ந.. நம்ம.. கோயிலுக்கு வருவளே.. அ.. அந்த... பவித்ரா வா.."

" ம்ம்ம்.." மெள்ள தலை அசைத்தான்..

சுந்தரவல்லியின் முகம் சுருங்கியது..
" நல்ல அடக்கமான பொண்ணு , நன்னா பேசறாளேன்னு ஆத்துக்கு கூட்டிண்டு வந்தா இப்டி பண்ணிட்டாளே.. இந்த காலத்து பொண்கள நம்ப முடியல.."

கொஞ்சம் சூடானான் ரிஷி..

" அம்மா.. ஸ்டாப்.. நீ நெனைக்கற மாதிரி அவ கிடையாது.. சொல்லப் போனா நான் தான் முதல்ல அவள பிரபோஸ் பண்ணேன்.. நேக்கு அவள பிடிச்சிருக்கு.. எனக்கு கல்யாணம்னா அவ கூடத்தான்.. அப்பாகிட்ட நீதான் பேசனும்.. " தீர்க்கமாய் கூறினான்.

" ஏன்டா ரிஷி.. அம்மாகிட்டையே இப்டி பேசறயேடா.. அந்த அளவுக்கு முத்திடுத்தா... சொத்து பத்தோட இருக்கற பொண்களையெல்லாம் விட்டுட்டு அவள பிடிச்சிருக்குங்கறயே.. இது உனக்கே நியாயமா இருக்கா.. அந்த பவித்ரா நம்ப அந்தஸ்துக்கு ஏத்தவளா.. அவள லவ் பண்றேங்கறியே.." பொங்கினாள்..

அமைதியாக இருந்தான் ரிஷி..

" சொல்லுடா.. அம்மா அம்மான்னு பின்னாடியே வருவியே.. அம்மா பேச்ச தட்ட மாட்டேன்னு கனவுக் கோட்டையெல்லாம் கட்டிண்டு இருந்தேனே.. ஹ்ம்.. இப்டி ஷாக் மேல ஷாக்கா குடுக்கறயே.." கொஞ்சம் கண் கலங்கினாள் சுந்தரவல்லி..

இவர்கள் சத்தத்தை கேட்டு மாடியிலிருந்து வேகமாக இறங்கி வந்தார் சந்திர சேகர்..!

" என்ன ஆச்சு.. எதுக்கு சத்தமா பேசிண்டு இருக்கே சுந்து.. ஆத்து பொண்கள் கத்திண்டும் கீசிண்டும் இருந்தா ரொம்ப நன்னாருக்கும்.." கடிந்து கொண்டார்..

" எதுக்கெடுத்தாலும் என்னையே குத்தஞ்சொல்லுங்கோ.. இந்தாத்துக்கு வந்ததுலேந்து வாயை மூடிண்டு தானே இருக்கேன்.. அதுதான் வாழ்க்கைன்னு ஆயிடுத்து.. எங்காத்ல இருந்தப்போ நான் தான் ராணி.. தாங்கி தடுக்கிடுவா.. ஒத்தப் பொண்ணா பொறந்து ராஜாத்தி மாதிரி வாழ்ந்துட்டு இங்க வந்து கஷ்டப்படறேன்.. எங்காத்து மனுஷாளக் கண்டா ஊரே பணிஞ்சு போகும்.. எங்கப்பா டாம்பீகம் என்ன, அம்மாவோட பவிசு என்ன... ஹ்ம்.. நான் தான் தப்பி பொறந்துட்டேன்.. வாயில்லா பூச்சியா..!"

" இப்போ எதுக்கு உங்காத்து புராணத்த பாடறே..."

" அதுதான் ஒன்னுமில்லைன்னு ஆயிடுத்தே.. ஹ்ம்ம்.. இவனக் கேளுங்கோ.. உங்க சீமந்த புத்ரன் லவ் பண்றானாம்.. அவன கண்டிக்கறத விட்டுட்டு.. என்னையே குறை சொல்லுங்கோ.." முறைத்தாள்..

கொஞ்சம் அதிர்ந்து ரிஷியையும் சுந்தரவல்லியையும் மாறி மாறி பார்த்தார்..

" என்னடி பித்துக்குளி மாதிரி உளரரே.. ரிஷி லவ் பண்றானா.. என்னடா ரிஷி.. அம்மா என்னமோ சொல்றா.." குழப்பத்துடன் அவனை பார்த்தார்..

" ஆமாப்பா.. " தலை அசைத்தான் ரிஷி..

" யாருன்னு கேளுங்கோ... உங்க பரம்பரைன்னு பெருமையா பீத்திப்பேளே.. ராஜகோபாலச்சாரியார் பரம்பரை.. "

" யாருடா.. அவோ... யாரு... ம்ம்ம்.. ஜனனியா.. இவ பிரெசிடென்ட் பொண்ணு.. அது மாதிரி எதாவது இழுத்துண்டு வந்துட்டியா... "

" இல்லப்பா.. நம்ப பவித்ரா.."

" ந.. நம்ப பவித்ராவா... யாருடா அது.. நம்ப பவித்ரா.." புருவம் நெறித்தார்..

" அதான் நான் கோயில் பாத்து ஸ்நேகிதம் பண்ணின்டேனே.. அந்த பொண்ணு... நம்பாத்துக்கு வந்திருக்காளே.." சுந்தரவல்லி இடைமறித்தாள்.

கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தவர்.. " ஓ... அந்த பொண்ணா.. ஹ்ம்ம்.. அந்த பொண்ணு கொஞ்சம் தலைகனம் ஆச்சே.. வேலைக்கு போவேன் அது இதுன்னு தன் சுதந்திரத்த பேசித்தே.. நம்பாத்துக்கு ஒத்து வருமா.. "

" அ.. அவ அடக்கமான பொண்ணுதாம்ப்பா.. நான் சொன்னா கேட்டுப்பா.. அவளை வேலைக்கு அனுப்புற அளவுக்கு நான் ஒன்னும் குறஞ்சு போயிடலயே.. ந.. நம்பாத்துக்கு ஏத்த பொண்ணா இருப்பா.."

" ம்ம்ம்.. அவ அப்பா ஏதோ கவர்மன்ட் உத்யோகம் பாக்கறார்னு சொன்னா மாதிரி ஞாபகம்.. மிடில்கிளாஸ் ஃபேமிலி.. ம்ஹ்ம்.. " யோசனையில் ஆழ்ந்தார்..

இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி..

" ஹ்ம்.. நம்பாத்துக்கு ஏத்த பொண்ணா அடக்க ஒடுக்கமா இருந்த சரி.. பணம் காசு நம்பகிட்ட இல்லாததா.. ஏன்டி சுந்தரி.. நோக்கென்ன.. சரியா.. நீ பாக்கற பாக்கறன்னு காத்துண்டு இருந்து அவனே ஒரு பொண்ண தேடின்ட்டான்.. இன்னும் என்ன சொல்ல இருக்கு.. "

மனசு அடங்காமல் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தாள் சுந்தரவல்லி.. பணக்கார பெண்ணை ரிஷிக்கு கட்டிக் கொடுத்து பவிசோடு வாழலாம் என்று நினைத்ததெல்லாம் கனவாகிப் போனது அவளுக்கு கோபத்தை உண்டாக்கியது..

" ரிஷி.. அம்மாவ கொஞ்சம் தனியா விடு.. அவளே யோஜனை பண்ணிட்டு சொல்லட்டும்.. நேக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.." ரிஷியின் அப்பா பச்சை விளக்கு காட்ட , சுந்தரவல்லியின் ஒப்புதலுக்காக காத்திருந்தான் ரிஷி..!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 23

எதுவுமே பிடிக்காமல் மனம் வெதும்ப காலேஜில் பெயருக்கு அமர்ந்திருந்தாள் பவித்ரா.. உள்ளமெல்லாம் கசந்துபோய் இருந்தது.. இனி என்ன நடக்கும் என்பது அறியாமல் கண்ணை கட்டிவிட்டது போல் எதிர்காலம் கருமை மூடி இருந்தது.. படிக்கப் பிடிக்கவில்லை.. அருகில் இருந்த தோழிகளுக்கு அவளது இந்த அமைதி குழப்பத்தை தருவித்தாலும் ரம்யாவிற்கு புரிந்தது அவள் ஏதோ இக்கட்டில் மாட்டியுள்ளாள் என.. அதைப் பற்றி கேட்டு அவளை காயப்படுத்த வேண்டாம் அவளே கூறட்டும் எனக் காத்திருந்தாள்..

ரம்மியுடன் கூட சரியாக பேசவில்லை பவித்ரா.. தனக்குள்ளே புழுங்கிக் கொண்டிருந்தாள்.. ரிஷியும் இந்த இரண்டு மூன்று நாட்களாக எதுவும் பேசவில்லை.. அவனும் கைவிட்டுவிட்டானோ என்ற எண்ணம் மூலையில் அச்சத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தது.. இன்னும் இரண்டு நாள் கழிய பெண்பார்க்க அவர்கள் வந்துவிடுவார்கள்.. அவர்களுக்கு பிடித்துப் போனால் அவ்வளவு தான்.. எல்லாம் முடிந்தது.. படிப்பும் பாதியில் நிறுத்திவிடுவார்கள்.. என் வாழ்க்கையும் இன்னொருத்தன் கைப்பிடியில்.. பொம்மையாக..!

மனம் அடித்துக் கொண்டது.. யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் போல இருந்தது பவிக்கு.. சொல்லும் தெம்பில் மனம் இல்லை.. இதழ்களின் மூடியால் மனதிற்கு பூட்டுப்போட்டுக் கொண்டிருந்தாள்..

பவியின் தவிப்பும் வேதனையும் முகத்தை வாட்ட , அதற்கு மேல் பொறுமையின்றி அவளிடம் பேசினாள் ரம்யா..

" ஹே.. பவி.. என்னடி ஆச்சு.. ஏன் இப்டி ஒக்காந்திருக்க.. என்கிட்ட சொல்ல மாட்டியா.."

" ம்ம்.. ஒன்னுமில்ல.. என்கிட்ட எதுவும் கேக்காத.. எனக்கு எதுவும் பிடிக்கல.. "

" யேய்.. என்னடி இது.. அப்படி என்னதான் ஆச்சு.. எதுவும் பிடிக்காம போக.. சொல்லுடி.. ஊருல ஒலகத்துல நடக்காததா உனக்கு நடந்திருச்சு.. இடுஞ்சு போறதுக்கு.. இப்ப சொல்லப் போறியா இல்லையா.. ஒழுங்கா சொல்லு.. " ரம்யா நச்சரிக்க..

" இ... இங்க சொல்ல முடியாது.. லஞ்ச்ல சொல்றேன்.." பவி தனிந்து வர புன்னகையுடன் அவள் கைகளை கோர்த்துக் கொண்டாள் ரம்யா..

மதிய இடைவேளையில் , பவியை இழுத்துக் கொண்டு தனி பெஞ்சில் போய் அமர்ந்தாள் ரம்யா..

" ம்ம்ம்.. இப்போ சொல்லு.. பைசல் பண்ணிடுவோம்.. " ரம்யா பரபரத்தாள்..

வீட்டில் நடந்தது அத்தனையும் ஒன்றுவிடாமல் தயங்கித் தயங்கிக் கூறினாள் பவித்ரா.. முழுவதும் அக்கரையுடன் கேட்டுக் கொண்டிருந்த ரம்யா முகத்தில் சிரிப்பு படர்ந்தது..

" ஹூம்.. இவ்ளோ தானா.. அதான் வீட்ல சொல்லியாச்சுல.. அப்பறம் என்ன.. நீ லவ் பண்றேன்னு சொன்னதும் வாடி செல்லக்குட்டின்னு மடில வெச்சு கொஞ்சுவாங்களா.. உனக்காவது பரவால்ல உங்கப்பா திட்டிட்டு விட்டுட்டார்.. வெளில இதவிட கொடுமைலாம் நடக்குது.. ஹ்ம்.. நீதான் ஸ்ட்ராங்கா இருக்கனும்.. கப்பல் கவுந்தாமாதிரி உக்காந்தா கெடச்சுருமா.. போராடனும்.."

அவளை முறைத்த பவி சோகமானாள்.. " எனக்கு தைரியம் இல்லாம இல்லடி.. ஆனா அப்பா , சரி இல்லைனு எதுவுமே சொல்லாமாட்டேங்கறார்.. என்கிட்ட பேசறது கூட இல்ல.. அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.. அவர் பாட்டுக்கு வர்ர மாப்பிளைய கட்டிகிட்டு தான் ஆகனும்னு சொல்லிட்டார்னா நா.. நான் என்ன பண்றது.. ரிஷியும் ஒன்னும் சொல்லல.. அதான் பயமா இருக்கு.. அவங்க வீட்ல என்ன சொன்னாங்கன்னு தெரியல.. மனசுல நிம்மதியே போச்சு ரம்மி.. இந்த வெறுமையான அமைதி என்ன கொல்லுது.. எங்கயாவது கண்காணாத இடத்துக்கு ஓடிப் போயிடலாமான்னு இருக்கு.." கண்களில் நீர் துளிர்த்தது..

" அடச்சீ.. லவ்னா பேரண்ட்ஸ் உடனே ஒத்துக்க மாட்டாங்க பவி.. இது எல்லா இடத்துலயும் நடக்கறது தானே.. என்னதான் நாம லவ் பண்ற ஆள் உத்தமனா நல்ல வேல பாக்கறவனா இருந்தாலும் அவங்க பாத்து வைக்கற மாப்பிள்ளைதான் ஒசத்தின்னு அவங்களுக்கு நம்பிக்கை.. லவ் பண்றவங்க சுத்த வேஸ்ட்டுன்னு அவங்களுக்கு நெனப்பு.. ஹூம்.. இத எந்த காலத்லயும் மாத்த முடியாது.. நாம தான் பேசி பேசி சரி பண்ணனும்.. நம்ம நிலைலேந்து எந்த காரணத்துக்காகவும் பின்வாங்கக் கூடாது.. அதுதான் உன் பாட்டி உனக்கு சப்போர்ட்டா இருக்காங்கல்ல.. அப்பறம் எதுக்கு பயப்படற.. கண்டிப்பா உங்கப்பா ஏத்துப்பார் பாரு.. என்ன பத்தி அவர் என்ன வேணா நெனச்சுட்டு
போட்டும்.. லவ்வுக்கு ஹெல்ப் பண்ணாத பிரண்ட் ஒரு பிரண்டா.. அதனால அவர் சொன்னத மனசுல வெச்சுட்டு நீயே குழம்பிக்காத.. சரியா.. அவன்ட்ட பேசிக் கேட்டுடுவோம்.. அவனுக்கு போன் அடி.." ரம்யா கூற..

பவி தயங்கினாள்.. " அவர்தான் சம்மதம் வாங்கிட்டு பேசறேன்னு சொன்னாரே.. அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியலியே.. அவரும் என்ன சங்கடத்துல இருக்காறோ.. இப்ப போய்.. கால் பண்ணா...."

" அடியே.. என்ன பேசற.. அவன் எப்ப சம்மதம் வாங்கறது.. எப்ப பேசறது... இதெல்லாம் ஆறப் போடக் கூடாது.. சட்டுபுட்டுன்னு முடுச்சுடனும்.. எஸ் ஆர் நோ.. எஸ்ஸூனா ஓகே.. இல்லைனா அதிரடி ஆட்டத்த தொடங்க வேண்டியதுதான்.. நேர அவன் வீட்டுக்கே போய் ஒக்காந்திட வேண்டியதுதான்.. கால் பண்ணி குடுடி போன.. நான் பேசறேன்..." ரம்யா பவியிடம் போனை பிடிங்கி ரிஷிக்கு டயல் செய்தாள்..

இரண்டு ரிங்கில் போனை எடுத்தான் ரிஷி... " ஹாய் பவி.. நானே பேசனும்னு நெனச்சேன்.. எப்டி இருக்க.. என்ன ஆச்சு..."

" இங்க நிலமை ரொம்ப கவலைக்கிடமா இருக்கு.. உங்க நிலமை எப்டி இருக்கு மிஸ்டர் ரிஷி.."

குரலில் வித்யாசம் தெரிய கொஞ்சம் குழம்பினான்.. " யா.. யாரு.. பவி... தானே.."

" ஹலோ.. நான் ரம்மி பேசறேன். பவி ஃப்ரெண்ட்.. என்ன ஆச்சு சார்.. இன்னும் எவ்ளோ நாள் ஆகும் உங்க வீட்ல சம்மதம் குடுக்க.. அதுக்குள்ள பவியோட மேரேஜே முடுஞ்சிடும் போலவே.. பேசினீங்களா இல்ல அப்டியே டீல்ல விட்டுட்டீங்களா.. ஆ.. " ரம்யா படபடக்க போனை பிடிங்கினாள் பவி..

ரம்யாவை முறைத்துவிட்டு ரிஷியிடம் பேசினாள்.. " ரிஷி.. பவி.. எப்டி இருக்கீங்க.. சொ.. சொல்லிட்டீங்களா.." கலக்கம் மேலிட கேட்டாள்..

" ஹ்ம்ம்ம்.. " பெருமூச்சு எழுந்தது அவனிடம்.. " சொல்லிட்டேன் பவி.. அப்பாக்கு சம்மதம்... அம்மாதான் இன்னும் ஏத்துக்கல.. என் கூட பேச மாட்டேங்கறாங்க.. ரெண்டு மூனுநாள் விட்டுட்டு திரும்ப பேசலாம்னு இருக்கேன்.."

" நா.. நானும் வீட்ல சொல்லிட்டேன்.. அப்பா ரொம்ப கோவப் பட்டார்.. என்கூட பேசல.. அ.. அம்மாக்கும் இதுல இஷ்டம் இல்ல.. பாட்டி மட்டும் தான் இப்போதைக்கு எனக்கு துணை.. அவங்கதான் அப்பாட்ட சொன்னாங்க... நீ... நீங்க வந்து பேசறீங்களா.."

" கண்டிப்பா வரேன்.. ஒரு டூ த்ரீ டேஸ் டைம் குடேன்.. ப்ளீஸ்.. அதுக்குள்ள அம்மாட்ட பேசி கன்வீன்ஸ் பண்ணிடறேன்.. கண்டிப்பா எனக்கு நம்பிக்கை இருக்கு.. அம்மா ஒத்துப்பாங்க.." நம்பிக்கை அளித்தான் ரிஷி..

" எவ்ளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுங்க ரிஷி.." கெஞ்சலாகக் கூறினாள்.. அவன் சம்மதம் தெரிவிக்க மனமின்றி போனை அணைத்தாள் பவித்ரா..

பவியின் கலக்கம் ரிஷியையும் தொற்றிக் கொள்ள வேலையில் கவனம் செலுத்தாமல் அமர்ந்திருந்தான்.. அம்மா ஏன் இப்படி இருக்கிறாள் என வெறுப்பாய் வந்தது.. வேலையை முடித்தும் முடிக்காமல் வீட்டிற்கு கிளம்பினான்..

வீட்டிற்குள் நுழைய , இவனைக் கண்ட சுந்தரவல்லி முகத்தைத் தூக்கிக் கொண்டு சமையல்கட்டிற்குள் நுழைந்தாள்.. இவனுடன் எதுவும் பேசவில்லை..

ரிஷியும் பின்னால் சென்றான்..

" அம்மா.. அம்மா.." அமைதி மட்டுமே பதிலாய் வந்தது..

" அம்மா... இங்க பாரு.. எதுக்கு இப்ப மவுனப் போராட்டம் நடத்தற.. "

"................"

" அம்மா.... " அவளைப் பிடித்து திருப்பினான்.. " என்னதாம்மா உன் பிரச்சனை.. என்னமோ எதிரிய பாக்கறமாதிரி பாக்கற.. நடந்துக்கற.. என்கிட்ட பேச மாட்டியா.. அப்டி என்னதான்மா தப்பு பண்ணேன்.. இப்போ என் கூட பேசுவியா மாட்டியா.."

" என்னடா பேச சொல்ற.. அம்மா ஆசைல மண்ணள்ளி கொட்டிட்டு பேசு பேசுங்கற.. "

" அ.. அப்போ.. என்னோட விருப்பத்துக்கு இங்க இடம் கிடையாதா.. சின்ன வயசுலேந்து என்னோட எல்லா ஆசையும் நிறைவேத்தி வெச்சியே.. இத.. இத மட்டும் ஏன்மா.."

" ரிஷி.. நீ ஆசப்படறது எல்லாத்துக்கும் என்னால தலையாட்ட முடியாது.. இத்தன நாளா கூட இருந்தும் எல்லாத்தையும் மறச்சுட்டியே.. நா.. நான்.. என்னெல்லாம் கனவு கண்டுண்டு இருந்தேன்.. உனக்கொரு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுக்கனும்னு தான்டா இவ்ளோ செஞ்சேன்.. ஆனா.. நீ.. நீ.. உன் வாழ்க்கையை நீயே முடிவு பண்ணிட்ட.. இனிமே பேச என்ன இருக்கு.. அம்மாவ கிறுக்கச்சி ஆக்கிட்டேல்யோ.. ம்ம்ம்.. அதுதான்ட தாங்கல.." கண்களில் துளி நீர் எட்டிப் பார்த்தது சுந்தரவல்லிக்கு.

" அ.. அம்மா... அதுக்கு....." அவன் பேச வாயெடுக்க அங்கிருந்து நகர்ந்தாள் சுந்தரி..

இப்படி இரண்டு நாட்கள் அவள் பின்னால் சுற்றி சுற்றி ஒப்புதல் பெற ரிஷி போராட போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள் சுந்தரவல்லி..

வெள்ளிக்கிழமை அன்று..

" அம்மா... இன்னும் எத்தன நாளைக்குத் தான் இப்டி இருப்பே.. என்னதான் முடிவு பண்ணி இருக்கே.." ரிஷி பொறுமை இழந்து சுந்தரவல்லியை கேட்டான்

" இனிமே நான் முடிவு பண்ண என்ன இருக்கு.. அதான் எல்லாம் நீயே முடிவு பண்ணிட்டியே.."

" அம்மா.. ப்ளீஸ்.. முடிவு பண்ணிட்டேன்.. முடிவு பண்ணிட்டேன்கறயே.. என் வாழ்க்கை துணையை நான் தேர்ந்தெடுத்தேன்.. அவள கல்யாணம் பண்ணிட்டேனா என்ன.. உன் சம்மதமும் வேணும்னு தானே இவ்ளோ தூரம் காத்துண்டு இருக்கேன்.. சொல்லு பாப்போம்.. பெத்தவா எப்டி போனா என்ன.. என்னோட வாழ்க்கை சந்தோஷமா இருந்தாப்போதும்னு நெனைக்கறவன் இல்லமா நான்.. பவியும் அப்படித் தானே இருக்கா.. இன்னும் என்னம்மா உன் பிரச்சனை.. பவியை எனக்கு அறிமுகம் பண்ணதே நீ தான்.. ரொம்ப அடக்கமான பொண்ணு.. பொறுமை.. இந்த காலத்ல இப்டி ஒரு பொண்ணானு அவள பத்தின இமேஜ ஒசத்தி விட்டது நீதான்.. இப்போ நீயே இப்டி சொன்னா.. என்னம்மா நியாயம்..! " ரிஷி பொங்க..

" உண்மைதான்.. கோயில்ல முதன் முதலா அவள பாக்கும்போது அவளோட மென்மையான பேச்சு , சாத்வீகம் எல்லாமே அவமேல ஒரு பரிச்சயத்த உண்டு பண்ணித்து.. இல்லைனு சொல்லல.. ஆனா.. உனக்கு ஒய்ஃபா , நம்பாத்துக்கு மாட்டுப்பொண்ணா வர அவளுக்கு என்ன குவாலிட்டிஸ் இருக்கு.. அவ பேமிலிக்கு தான் என்ன தகுதி இருக்கு.. அவா பேமிலி எப்டி என்னவோ.. ஒன்னுந்தெரியாம என்ன சொல்லச் சொல்றே.. மனசுக்கு புடுச்சா எல்லாம் ஆச்சா.. லவ் மேரேஜ் பண்ணவாள்ல பாதிக்கு மேல கோர்ட்லதான் நிக்கறா.. டிவோர்ஸ்க்கு..!" அலட்சியமாக அவனை பார்த்தாள்.

" ஹூம்.. எங்களப் பத்தின உன் அபிப்ராயம் இவ்ளோதானாமா.. ரியலி சேட்.. சரி.. உன் பேச்சுக்கே வரேன்.. உனக்கு அவ பேமிலிய பிடிச்சா ஓகே தானே.. அப்போ நேர்ல போய் பேசிடலாம்.. அப்பறமும் உனக்கு பிடிக்கலைனா விட்டுடலாம்..
என்ன சொல்றே..."

சுந்தரவல்லி இந்த அதிரடி முடிவை எதிர்பார்க்கவில்லை.. " அ... அது.." தடுமாறினாள்..

" தட்ஸ் இட்.. ஈவினிங் அவாத்துக்கு போறோம்.. ரெடியாகு.." கூறிவிட்டு வெளியேறினான் ரிஷி..

மாலை

காலேஜ் முடித்து தயக்கம் பயத்துடனும் வீட்டிற்குள் நுழைந்தாள் பவி.. இன்று பெண்பார்க்க வருகிறார்களே.. அதை எப்படி சமாளிப்பது.. அப்பா முடித்துவிடுவாரா என்ற பயம் மனமெல்லாம் பரவி இருந்தது..

எப்பொழுதும் கலகலவென இருக்கும் வீடு மூன்று நாட்களாக அமைதியில் வெறுமையாக இருந்தது.. யாரும் யாரிடமும் அவ்வளவாக பேசிக் கொள்ளவில்லை.. பாட்டி மட்டுமே பவியை ஆறுதலாக நடத்தினாள்..

உள்ளே நுழைந்தவள் நேராகப் பாட்டியின் அறைக்குள் சென்றாள்.. சேரில் சாய்ந்து அமர்ந்தபடி புத்தகம் ஏதோ வாசித்துக் கொண்டிருந்தாள் சுகுமாரி.. பவியைக் கண்டு புன்னகைத்தாள்.. " வாடி கண்ணு.. காலேஜ் முடுஞ்சதா.."

" ம்ம்ம்..." தலை அசைத்துவிட்டு சோகமாக பாட்டியை பார்த்தாள்.. " பாட்டிமா.. அப்பா.. எதாவது சொன்னாளா.. இன்னிக்கு அவா பொண் பார்க்க வரான்னு சொல்லிருந்தாளே.."

" அவன்தான் ஒருவாரமா ஒன்னும் பேச மாட்டேங்கறானே.. இன்னிக்கு வெள்ளிக் கிழமைதானே.. அவா வருவான்னுதான் தோன்றது.. உன் அப்பா இன்னும் வரலையே.. ஒரு வேளை அவாள கூட்டிண்டு வரானோ என்னவோ.. எதுக்கும் நீ முகத்த அலம்பின்டு நல்ல புடவையா கட்டிக்கோ.. வெளிமனுஷா வரும்போது அழுது வடுஞ்சுண்டு இருக்கப்டாது.. போ.."

" பா... பாட்டி... எனக்கு இஷ்டமே இ.. இல்ல பாட்டி.. எதுவுமே பிடிக்கல..."

" பவி... உன் அப்பாகிட்ட உரைக்கறமாதிரி சொல்லிட்டேன்.. அப்படியும் அவாள வரச் சொல்லிருந்தான்னா வர்ரவாள்ட்டயே பேசிடறேன்... என்ன ஆனாலும் நான் பெத்துக்கறேன்.. போதுமா.. நீ போய் ரெடியாகு..." பாட்டி கட்டளையிட மனமில்லாமல் தயாராகச் சென்றாள் பவி..

பங்கஜம் எந்தவித சந்தோஷமின்றி சமையல்கட்டிலேயே இருந்தாள்.. பவி தயாராகி அடுக்களைக்குள் நுழைந்தாள்..

" அ... அம்மா... காபி தரியா.."

எந்த பதிலும் கூறாமல் காபியை கலந்து டங்கென்று மேடையில் வைத்தாள் பங்கஜம்..

" அம்மா.. ஏம்மா நீயும் இப்டி பேசாம என்ன இம்சிக்கறே.. அப்படி என்ன கொலைக் குத்தம் பண்ணேன்.. சொல்லு.." பவி உடைந்து போக.. அவளை முறைப்புடன் பார்த்தாள் பங்கஜம்..

" உயிரக் கொல்றத விட மனசக் கொல்றது பெரிய பாவம் டி.. அதப் பண்ணிட்டு என்ன பண்ணேன்னு கேக்கறியே..."

பவி அமைதியாக இருந்தாள்..

" உங்கப்பா இதுவரை இப்டி இருந்ததே இல்ல.. என்னன்ட கூட முகம் குடுத்து பேச மாட்டேங்கறார்.. அவர் மனச நோகடுச்சுட்டியேடி.. இத்தன நாளா கல்யாணம் வேண்டாம்னு தான் தள்ளிப் போடறேன்னு நெனச்சுண்டு இருந்தான்... ஹ்ம்.. நம்பினேன்.. ஆனா , நீ காதல் கத்ரிக்காய்னு சொல்வேன்னு எதிர் பாக்கலே.. குழந்தைன்னு உன்ன நம்பின என்னையும் ஏமாத்திட்டே.. பெத்தவள்ட்ட பொய் சொல்ற அளவுக்கு தைர்யம் வந்துடுத்து உனக்கு.. இதுக்குமேல உன்கிட்ட என்ன பேசச் சொல்றே

" அ... அம்மா.. பொய் சொல்லி உங்கள ஏமாத்தி இருந்தா காத்துண்டு இருப்பேனா.. என் மனச புருஞ்சு என்னோட நியாயமான ஆசைய நிறைவேத்துவேள்னு தானே உண்மைய பூரா சொன்னேன்.. என்ன ஏம்மா புருஞ்சுக்க மாட்டேங்கறே.."

" பெத்தவா மனச குளிர வைக்கறது தான் புள்ளைகளோட கடன்.. அதப் புரிஞ்சிண்டு உன் அப்பா சொல்றத கேட்டு நட.. அவர நிம்மதியா இருக்கவிடு.. அவ்ளவுதான் சொல்ல முடியும்.. அதுக்குமேல உன் இஷ்டம்.." கூறுவிட்டு வெளியேறினாள் பங்கஜம்..

உள்ளே அப்பா நுழையும் சப்தம் கேட்க ஹாலுக்கு விரைந்தாள் பவி.. யாரிடமும் எதுவும் பேசாமல் வழக்கம்போல தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார் நடேசன்.. ஹாலில் அமர்ந்திருந்த பாட்டியை குழப்பத்துடன் பார்த்தாள் பவி..

பாட்டி மெள்ள பேச்சை ஆரம்பித்தாள்.. " நடேசா... அவா வரலையா.."

" யாரு...."

" அதான் பவிய பாக்க வரான்னு சொன்னியே.. அவா..."

" யாரும் வரலை.. இனியும் யாரையும் வரச் சொல்லப் போறது இல்லை.. அவாள ஆத்துக்கு கூட்டிண்டு வந்து அசிங்கப்படுத்தி நானும் அசிங்கப்பட விரும்பலை... அதனால என் பொண்ணுக்கு இஷ்டமில்லைன்னு நேரடியாவே சொல்லிட்டேன்.. அதான் அவளே பார்த்தப்பறம் நான்வேற கிறுக்கு மாதிரி மாப்ளையத் தேடி அலையனுமா.. எப்டியோ போட்டும்..." வெறுப்புடன் கூறிவிட்டு பேப்பரில் மூழ்கினார்.

திடீரென வாசலில் அரவம் கேட்க அனைவரும் பார்த்தனர்..

அங்கே , ஸ்ரீதருடன் ரிஷியும் சுந்தரவல்லியும் உள்ளே வந்து கொண்டிருந்தனர்..

பார்த்த பவிக்கு ஒரு நிமிடம் நெஞ்சம் அடைப்பது போல் இருந்தது.. இதயம் படபடவென அடித்தது.. ரிஷி எதுவும் கூறாமல் இப்படி திடீரென சுந்தரவல்லியுடன் வருவான் என அவள் எதிர்பார்க்கவில்லை.. உடல் கொஞ்சம் நடுங்க வியர்த்தது பவிக்கு..!

சந்தேகத்துடன் நடேசன் மாறி மாறி ஸ்ரீதரையும் ரிஷியையும் பார்த்தார்..

" யா.. யாரு.. வேணும்.. ஸ்ரீதரா யாருடா இவா.." நடேசன் புரியாமல் விழிக்க பவிக்கு என்ன சொல்வதென நா எழவில்லை..

" அப்பா.. இவர் பவியோட ஃப்ரண்ட்.. நம்பாத்த தேடிண்டு வந்தா , கூட்டிண்டு வந்தேன்.. ஏய் பவி , அன்னிக்கு சூப்பர்மார்கெட்ல இவர பாத்தோமே , நீ கூட பயந்துண்டு ஓடி வந்தியே.." நக்கலாக சிரித்தான்..

நடேசன் பவியை பார்க்க.. கண்கள் விரித்து எச்சிலை விழுங்கிக் கொண்டாள்... " அ.. அப்பா.. இவர்தான் ரிஷி.. இது.. அவங்க அம்மா.."

சுற்றுமுற்றும் வீட்டினை ஆராய்ந்து கொண்டிருந்த சுந்தரவல்லியை பார்த்து மரியாதை நிமித்தமாய் அழைத்தார்.. " வாங்கோ... உட்காருங்கோ.."

இருவரும் வந்து அமர்ந்துகொள்ள, அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் நேரம் அமைதியில் கடந்தது..

பவியை பார்த்து சுகுமாரி கண்களால் கேட்க , மெள்ள தலை அசைத்தாள் பவி..

" எப்டி இருக்கேள்.. நீங்க வந்ததுல சந்தோஷம்.. " அமைதியை உடைத்தாள் சுகுமாரி..

பாட்டி கேட்க தலை அசைத்தாள் சுந்தரவல்லி.. " நன்னா இருக்கோம்.. "

" இவன்தான் உங்க பையனா.. லக்ஷனமா இருக்கான்.. முகம் களையா இருக்கு.. என்ன பண்ணின்டு இருக்கேப்பா " பாட்டி ரிஷியை பார்த்து கேட்க சுந்தரவல்லிக்கு பெருமையாக இருந்தது..

" அவன் மெடிக்கல் லைன்ல இருக்கான்.. பெரிய உத்யோகம்.. கை நெறய சம்பாதிக்கறான். என் ஒரே பையன்.." சந்தோஷம் முகத்தில் பூத்தது..

" ஓ.. அப்படியா.. பவி குடுத்து வெச்சவ.. இப்டி ஒரு பையன் மாப்பிள்ளையா வர.. இது என் பையன் நடேசன்.. கவர்மன்ட் உத்யோகத்லே இருக்கான்.. இது என் மாட்டுப் பொண்ணு பங்கஜம்.. ஒரு பேரன் ஒரு பேத்தி.. " பாட்டி அறிமுகப் படுத்த அவர்களைப் பார்த்து மெள்ள தலையாட்டினாள் சுந்தரி..

நடேசனுக்கும் அவர்கள் இருவரையும் பார்த்து நல்லவிதமாகப் பட மென்மையாகப் புன்னகைத்தார். பங்கஜம் அமைதிகாத்தாள்.. பாட்டி பங்கஜத்திடம் சாப்பிடக் குடுக்கச் சொல்ல உள்ளே சென்றாள்.. பின்னால் பவியும் செல்ல.. மெள்ள சுகுமாரி விஷயத்தை ஆரம்பித்தாள்..

" அப்பறம் பவி விஷயத்தச் சொன்னா.. உங்களுக்கு.."

சுந்தரவல்லியின் முகம் கொஞ்சம் இறுகியது.. " ரிஷியும் அவன் விருப்பத்தச் சொன்னான்.. இருந்தாலும் இந்த காலத்லே பசங்க ஸ்பீடாத்தான் இருக்கா.. பெத்தவாளுக்கு சிரமம் குடுக்கறது இல்லே.. ஹ்ம்.. அந்த காலம் மாதிரியா..." ரிஷியை ஏளனமாகப் பார்த்தாள்..

" அதுவும் சரிதான்.. இருந்தாலும் அவா சரியான முடிவத்தான் எடுக்கறா.. இல்லையா.." சுகுமாரி சரிக்கட்டப் பார்த்தாள்..

" ஹூம்.. இவனுக்கு பெரிய பெரிய இடத்திலேந்து பொண்கள் க்யூல வந்து நிக்கறா.. அதெல்லாம் வேண்டானுட்டு... ஹ்ம்.. என்ன பண்றது.. " சலிப்புடன் முகத்தை சுழித்தாள் சுந்தரவல்லி..

" அதனால என்னம்மா.. வாழப் போறவா அவா தானே... ஒருத்தருக்கொருத்தர் அந்யோன்யமா வாழனும்லயா.. மனசுக்கு புடுச்சா தானே வாழ்க்க இனிக்கும்.." பாட்டி பதவீசாகப் பேசினாள்.

" ஹ்ம்.. அதமட்டும் தானே இந்த காலத்ல பாக்கறா.. பெத்தவா மத்தவா சந்தோஷத்த பத்திலாம் யோசிக்கறது இல்லையே.. அந்த காலம் மாதிரியா.. சொந்த பந்தங்களோட கலந்து பேசி , ஒன்னுமன்னா கூடி பெரியா சம்மததுக்கு காத்து கெடப்பா.. ஹ்ம்.. இப்போ அதெல்லாம் கனாவாயிடுத்து.. யாரை குறை சொல்றது.. " குறைபட்டுக் கொண்டாள் சுந்தரி..

" காலம் மாறின்டே தானே இருக்கு.. என் காலம் வேறே.. உங்க காலம் வேறே.. இப்போ இருக்கற ஜெனரேஷன் வேற.. கால மாற்றத்த ஏத்துண்டு தானே ஆகனும்.. " சுகுமாரிப் பாட்டி அவளை சமாதானம் செய்தாள்..

"ஹ்ம்ம்ம்.. " பெருமூச்சு எழுந்து அடங்கியது சுந்தரிக்கு.. " சரிதான்.. ஒத்தபுள்ளையா போய்ட்டான்.. அவன் வாழ்க்கை நன்னா இருக்கனும்கறது தான் என்னோட ஆசையெல்லாம்.. அந்தஸ்து வசதிக்கு ஏத்த இடம்தான் இல்லைன்னு ஆய்டுத்து.." குத்தலாகக் கூறினாள் சுந்தரி..

நடேசனுக்கு சுறுக்கென்று இருந்தது.. " மாமி.. சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்கோ.. எங்காத்ல எல்லா வசதியோடையும் தான் எம்பொண்ண வளத்திருக்கேன்.. ஒரு கொறை வெச்சதில்லை.. அவ கல்யாணத்துக்குன்னு வேண்டியதை சேமிச்சிருக்கேன்... கண்கலங்காம பாத்துக்கற ஒரு நல்ல வரனாத்தான் பாத்துண்டு இருந்தேன்.. திடுதிப்புன்னு இப்டி சொல்லிட்டா.."

சுந்தரவல்லியின் முகம் மாற , அங்கு நிசப்தம் சூழ்ந்தது.. காபி பலகாரத் தட்டுடன் பவியும் பங்கஜமும் உள்ளே நுழைய சுகுமாரி பாட்டி பேச்சை மாற்றினாள்..

" போனது போட்டும் விடுங்கோ.. இனி நல்லதாவே யோசிப்போம்.. பவி எல்லாருக்கும் குடுமா.. எடுத்துக்கோங்கோ.. பவி நன்னா சமைப்பா.. நல்ல படிப்பாளி.. எதையும் சட்டுனு புருஞ்சுக்கறவ.. உங்க ரெண்டு பேரையும் எங்களுக்கு புடுச்சிருக்கு.. உங்களுக்கு சம்மதம்னா ஒரு நல்ல நாள் பாத்து பேசி முடுச்சுப்புடலாம்.."

காப்பி கோப்பையை உறிஞ்சியபடியே மெள்ள யோசனையில் ஆழ்ந்தாள் சுந்தரி.. ரிஷிக்கும் பவிக்கும் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருந்தது..

" ஹ்ம்ம்... ரிஷி சொன்னப்போ நேக்கு அவ்வளவா விருப்பமில்லை தான்.. பொய் சொல்லப்டாதில்யோ.. நான் எதையும் ஃப்ராங்க்கா பேசிடறவ.. உங்களலாம் ஒருதரம் பாத்துட்டு முடிவச் சொல்லுன்னு கம்பல் பண்ணிதான் கூட்டிண்டு வந்தான்.. எங்களவுக்கு வசதி இல்லாட்டாலும்... நல்ல பேராத்தான் இருக்கேள்.. எங்காத்துக்காரரும் சரின்னுட்டார்.. ஹூம்ம்ம்.. அதுக்குமேல நான் என்ன சொல்ல இருக்கு.. பகவான் விட்ட வழி.. "

" அ... அப்போ உங்களுக்கு சம்மதம் தானே.." பாட்டி மறுபடியும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள.. புன்னகையுடன் தலை அசைத்தாள் சுந்தரி..

" நடேசா.. நீ என்ன சொல்றே.. பங்கஜம் நீயும் சொல்லிடுமா.. எல்லாரோட சம்மதத்தோடதான் இந்த கல்யாணம் நடக்கனும்னு குழந்தைகள் பெரியவா ஒப்புதலுக்காக காத்துண்டு இருக்கா.. அவாளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுக்கறது நம்ம பொறுப்பு.." சுகுமாரி கேட்க நடேசன் பங்கஜத்தை பார்த்தார்.. அவள் புன்னகையுடன் தலை அசைக்க..

" எம்பொண்ணு போற எடத்துல நன்னா இருந்தா எனக்கும் பங்கஜத்துக்கும் சந்தோஷம்.. எனக்கு சம்மதம்மா.." நடேசன் முடிவைக் கூறினார்..

பவிக்கு ஆனந்தத்தில் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.. தன்னை அறியாமல் கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பித்தது.. தலையை குனிந்து கொண்டாள்... ரிஷியும் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போய் அம்மாவை அணைத்துக் கொண்டான்..!

" ரொம்ப சந்தோஷம்.. ரொம்ப சந்தோஷம்.. நேக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. ஹ்ம்ம்.. இந்த சமயத்ல உங்காத்துக்காரர் இருந்திருந்தா இங்கயே தட்ட மாத்திண்டு இருந்திருக்கலாம்." சுகுமாரி பாட்டி சஞ்சலம் கொண்டாள்..

" ஹாஹா.. அவர் எப்பவும் பிசி.. அவா பரம்பரையே அப்டித்தான்.."

" அவர் பூர்வீகம் எந்தூரு.." சுகுமாரி கேட்க..

" புலியூர் கோட்டை... அவர் தாத்தா பெரிய வக்கீல்.. பேரு ராஜகோபாலச் சாரியார்... என்னோட கொள்ளுதாத்தா தயவுலதான் அவர் தாத்தா படுச்சு வக்கீலானவர்.. அந்த விஸ்வாசத்துக்கு அவர் பேரன எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சா.. எங்கம்மா ஆத்து பரம்பரை பத்தி சொல்லனும்னா இந்த நாள் போதாது.. என் முப்பாட்டனார் புலியூர் கோட்டை ஜட்ஜா இருந்தவர்.. அவருக்கு நாலு பையன்கள்.. என் கொள்ளுத் தாத்தா மாஜிஸ்தரேட்டரா இருந்தவர்.. சுந்தரேசன்னு சொன்னா ஊருக்கே தெரியும்... " சுந்தரவல்லிக் கூறிக் கொண்டிருக்க சுகுமாரிப் பாட்டியின் முகம் சட்டென இருண்டது..

" என் தாத்தா சதாசிவம் வெள்ளக்காரா கோட்டைல வேலை பாத்தவர்.. பாட்டியும் தாத்தாவும் அத்தன கம்பீரம்.. டாம்பீகம்.. சொத்துக்காரா.. ம்ஹ்ம்.. நாலு மாமாக்களோட பெருங்குடும்பத்லே வாழ்ந்தவ நான்.. எங்கப்பா தான் ஒன்னுமில்லாதைக்கு புரோகிதம் பாத்துண்டு இருந்தார் , ஆத்து மாப்ளையா.. எங்கம்மாக்கு ஒத்த பொண்ணா பொறந்ததால என்ன தாங்கிதடுக்கிடுவா.." சுந்தரவல்லி ஆலாபிக்க சுகுமாரி பாட்டிக்கு கண்கள் சிவந்து முகம் இறுக ஆரம்பித்தது..

" நீ.... நீ.. கோமதியோட பொண்ணா.." பாட்டி தடுமாறிக் கேட்க.. ஆச்சர்யத்தில் கண் விரித்தாள் சுந்தரவல்லி..

" ஆ... ஆமா... உங்களுக்கு என்னத் தெரியுமா... "

பாட்டிக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது.. " தட்டுதடுமாறி வேகமாக எழுந்தாள்..

" எங்காத்து பொண்ண உன் பையனுக்கு தர முடியாது... நீ... நீங்க கெளம்புங்கோ.. இனிமே இங்க வர வேண்டாம்..."

சுகுமாரி முகம் சிவந்து சத்தமாகக் கூற அனைவரும் அதிர்ந்து போயினர்..!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 24

ஒன்றும் விளங்காமல் அனைவரும் திகைத்து நிற்க சுகுமாரி சத்தமாகக் கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்..!

அத்தனை சந்தோஷமும் ஒரு கணத்தில் புயலாய் மாற , விக்கித்துப் போய் நின்றாள் பவி.. என்ன நடக்கிறது எனப் புரியாமல் அதிர்ச்சியில் விழித்துக் கொண்டிருந்தனர் ரிஷியும் , சுந்தரவல்லியும்..!

" பா... பாட்டி.. பாட்டி.. எ... என்ன சொல்ற.." பவி பதறிக்கொண்டு பின்னால் போக...

" இந்த கல்யாணம் நடக்காது.. அவன மறந்துடு.. " கோபமாகக் கூறிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள் சுகுமாரி..

சுந்தரவல்லியை சமாதானப் படுத்த பவி திரும்ப ஹாலுக்கு ஓடினாள்..

அதற்குள் சுதாரித்த சுந்தரவல்லி கோபம் மேலிட அங்கிருந்து விடுவிடுவென வெளியேறினாள்.. யாரை சமாதானப் படுத்துவது எனத் தெரியாமல் ரிஷி அவளை கூப்பிட்டுக் கொண்டு பின்னால் ஓட.. படபடக்கும் நெஞ்சமுடன் வாசலையும் அறையையும் மாறி மாறி பார்த்து , கண்களில் நீர் நிறைய உள்ளறைக்குள் ஓடி கதவை மூடிக் கொண்டாள் பவித்ரா..

ஸ்தனங்கள் இரண்டும் வேகமாக ஏறி இறங்க முகத்தை கைகளில் புதைத்துக் கொண்டு விக்கி விக்கி அழுதாள்.. இத்தனை தூரம் தனக்கு ஆதரவாக இருந்த பாட்டி இப்படி ஒரு நிமிடத்தில் மாறுவாள் என அவள் கனவிலும் நினைக்கவில்லை..!

சுகுமாரி பாட்டி அறைக்குள் சென்று அமர்ந்து திக்கு முக்காட நடேசனும் பங்கஜமும் பின்னால் சென்றனர்... " அம்மா.. அம்மா.. என்ன ஆச்சு.. ஏ இப்டி.. மூச்சு வாங்கறது பார்.. படுத்துக்கோ.. என்ன ஆயிடுத்து உனக்கு.. எதுக்கு இவ்ளோ கோவப் பட்டே.. நே.. நேக்கு ஒன்னும் புரியலை.. அவா.. அவா யாரு..." நடேசன் கேட்க.

" இப்போ எதுவும் கேட்காதே நடேசா.. எ.. எனக்கு படபடன்னு இருக்கு.. எது.. எது நடக்கக் கூடாதுன்னு நெனச்சேனோ.. அது.. அது நடந்துடுத்து.. போதும்.. நான் பட்ட கஷ்டம் போதும்.. அவளுக்கும் அது நடக்க வேண்டாம்... பவிக்கு இந்த சம்பந்தம் வேண்டாம் நடேசா.. அ.. அவளுக்கு வேண்டாம்.." கூறிக் கொண்டே தலைசாய்த்து கண்களை மூடினாள் சுகுமாரி.. எதுவும் பேச இயலாமல் அங்கிருந்து நகர்ந்தனர் இருவரும்..

பழைய நினைவுகள் அத்தனையும் பெருமழையாய் மனதில் அடிக்க , கண்கள் படபடக்க முனகிக் கொண்டிருந்தாள் சுகுமாரி..

பங்கஜம் எவ்வளவோ வற்புறுத்தியும் எதுவும் சாப்பிடாமல் அறைக்குள்ளே அழுது கொண்டு இருந்தாள் பவித்ரா.. பாட்டி மீது கோபமும் வெறுப்பும் மனதில் உற்பத்தி ஆகிக் கொண்டே இருந்தது.. இரவு முழுக்க மன சஞ்சலத்துடன் உறங்காமல் இருந்தாள்..

இரண்டுநாளும் எந்த சிந்தனையின்று அந்த அறையிலேயே முடங்கிக் கிடந்தாள்.. பவியை பார்க்க வேதனை கொண்டு பங்கஜம் தான் போராடிக் கொண்டிருந்தாள்.. சுகுமாரி பாட்டியும் வெளியில் வராமல் உள்ளேயே இருந்தாள்..

திங்கட்கிழமை..

உறக்கமின்றி எழுந்தவள் யாரிடமும் எதுவும் பேசாமல் காலேஜிற்கு கிளம்பினாள் பவி.. பாட்டியின் மீது த்ரேஷம் வளர்ந்தது மனதில்..

" ஏம்மா பவி.. கண்ணெல்லாம் வீங்கி போயிருக்கே.. காலேஜூக்கு போனுமா.. கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா.. பாட்டி எதோ பழைய கோபத்லே அப்டி பேசிட்டா... அவா யாரு என்னன்னு தெரியலை.. இது வரை பாட்டி இப்படி த்ரேஷமா எதுவும் சொன்னதில்ல.. என்ன ஏதுன்னு கேட்டு சரி பண்ணுவோம் பவி.. நீ மனசு உடஞ்சு போயிடாதே.. நேக்கே தாங்கள.. " பவியை மெள்ள அணைத்து கண்களை துடைத்து விட்டாள் பங்கஜம்..

அம்மாவின் அணைப்பு உள்ளிருந்த சோகத்தை மேலும் பெரிதாக்க அவள் தோள் சாய்ந்து கண்ணீர் வடித்தாள் பவி.. " ம்ஹ்ம்.. பா.. பாட்டி இப்படி பேசுவான்னு நான் எதிர்பாக்கலேம்மா.. சுந்தரி மாமியும் கோவமா போய்ட்டா.. எ.. எனக்கும் மட்டும் ஏம்மா இப்டி.. " மெள்ள குலுங்கினாள்..

" அழாதடி தங்கம்.. எல்லாம் சரியாப் போகும்.. இதுக்குத்தான் இந்த காதல் கத்ரிகாய்லாம் வேண்டாம்னு சொல்றது.. யார் எவர்னு தெரியாம மனச பறிகுடுத்துட்டு இப்டி நிக்கறே பாரு.. " ஆசுவாசப் படுத்தினாள் பங்கஜம்..

நீண்ட பெருமூச்சு எழுந்தது பவிக்கு.. " நான் காலேஜ் கெளம்பறேன்மா.. இங்க இருக்க பிடிக்கல.."

கொஞ்சம் பயம் கொண்டாள் பங்கஜம்.. " போய்தான் ஆனுமா.. ம்ம்ம்.. ஜாக்ரதையா போய்ட்டுவா.. எதுவும் தப்பிதமா யோசிக்காதே.. குழப்பத்துல புத்தி ஏதேதோ யோசிக்கும்.. மனச அலட்டிக்காத பவி.. எல்லாம் நல்லதா நடக்கும்.. பெருமாள வேண்டிண்டு போ.. சரியா.. போன் கைல வெச்சிருக்கேள்யோ.. அம்மா அப்பறமா லட்ச் டைத்ல பேசறேன். என்ன.. சாந்தமா இரு பவி.." பயத்தில் நூறுமுறை அவளைத் தேற்றி அனுப்பினாள் பங்கஜம்.. பெத்த மனம் பித்தாகிப் போனது..

வழியில் பெருமாள் கோயிலைக் கண்டவள் நின்று வாசலில் இருந்தே அவனிடம் யாசகம் கேட்டாள்.. முதல் சந்திப்பு கண்களில் காட்சியாய் விரிந்தது.. "எங்க ரெண்டு பேரையும் உன் சன்னதிலயே பாக்க வெச்சு , மனச சேர்த்துட்டு இப்டி விளையாடறயே.. ஏ இப்டி பண்றே.. எனக்கு ரிஷி வேணும்.. நீ தான் சேர்த்து வைக்கனும் பெருமாளே.." அங்கிருந்தே மனமுருக வேண்டிவிட்டு கிளம்பினாள்

காலேஜின் அத்தனை சத்தத்திற்கு இடையிலும் அமைதியாக இருந்தாள் பவி..யாரிடமும் பேசவில்லை..

அஜீரணமாகிப் போன நினைவுகள் மேலெழுந்து மேலெழுந்து தொண்டையை அடைத்தது.. விழுங்க இயலாமல் நெஞ்சத்தில் சேர்ந்து மூச்சு முட்டியது.. ரம்யாவிற்கு புரிந்து போனது.. தனிமையில் அவளிடம் பேசினாள்..

" என்ன பவி.. ரிஷி அவங்க வீட்ல பேசிட்டானாமா.. என்ன சொல்றான்.."

" ஹ்ம்ம்.... எல்லாம் முடுஞ்சிருச்சு.. இ... இனிமே ஒன்னுமில்ல.."

" ஏய்.. என்னடி ஆச்சு.. இப்டி பேசற.." கலவரமானாள் ரம்யா.. எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தாள் பவி.. கண்கள் சிவந்திருந்தது..

" பவி.. ப்ளீஸ்.. சொல்லு.. என்ன ஆச்சு.."

" என் லைஃப் அவ்ளோ தான்.. நா.. நான் அவர் மேல ஆசப் பட்டிருக்கக் கூடாது.. என் தப்புதான்.. இந்த மனசு வேதனைலதான் இருக்கனும்னு தலை எழுத்து.. "

" ஹே.. ஏன்டி இப்டிலாம் பேசற.. எனக்கு பயமா இருக்கு பவி.. என்னதான்டி நடந்தது.. அவங்க வீட்ல ஒத்துக்கமாட்டேன்டாங்களா.. நா.. நான் வேணா பேசி பாக்கவா.." ரம்யா அச்சப்பட..

மெள்ள இருபுறமும் தலை அசைத்தாள் பவி.. " அ.. அவங்கவீட்ல சம்மதம் வாங்கி அவங்க அம்மாவ எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு.. ம்ஹ்ம்.. எல்லாமே நல்லபடியா முடியற நேரம்.. எ.. என் பாட்டி.. அவங்கள வெளில போகச் சொல்லிட்டாங்க.. இனிமே எங்க வீட்டுக்கு வரவேண்டாம்னு.."

"எ.. என்னடி உளர்ர.." ரம்யா அதிர்ந்து போனாள்.. பவி நடந்ததை முழுமையாகக் கூற விக்கித்து போனாள் ரம்யா.. " உங்க பாட்டிக்கு என்ன பைத்தியமா.. அவங்கதான்டி உனக்கு சப்போர்ட்டா இருந்தாங்கன்னு சொன்ன.. கூடி வர்ர நேரத்துல இப்டி உடைச்சு போடறாங்க.. ரொம்ப மோசம்.. கூட இருந்தே இப்டி கழுத்தறுத்துட்டாங்களே.. "

பவி எதுவும் கூறாமல் அமர்ந்திருந்தாள். வெறுமை முழுமையாய் பரவி இருந்தது..

" அப்டி என்னடி அவங்கமேல கோபம்.. அவங்களுக்கும் உங்க பாட்டிக்கும் என்ன சம்பந்தம்.. அப்டியே இருந்தாலும் வாழப் போறவ நீதான.. உன் விருப்பத்துக்கு தடை போட அவங்க யாரு.. எல்லாரும் ஒத்துக்கிட்ட நேரம் இப்டி கெடுத்துவிட்டுடாங்களே.. பவி... அதான் உங்க அப்பா அம்மாவும் , அவங்க வீட்லயும் சம்மதம் சொல்லிட்டாங்கள்ல.. பேசாம உங்க அப்பாவ அவங்க வீட்ல பேசி சமாதானம் பண்ண சொல்லு.. பாட்டி கெடக்காங்க.."

" ஹ்ம்.. அ.. அப்பா பாட்டி சம்மதம் இல்லாம எதுவும் பண்ணமாட்டாங்க.. ஏற்கனவே காதலிக்கறேங்கறதுக்கே கோவப்பட்டாரு.. இப்போ பாட்டியும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. அவர் எப்டி போவாரு.. என் லைப் அவ்வளவு தான்.. "

" சே.. உண்மையாவே ரொம்ப கஷ்டமா இருக்கு பவி.. என்ன சொல்றதுன்னு தெரியல.. பொறுமையா இரு.. உன் லவ் ஸ்ட்ராங்கா இருக்குன்னு அவங்களுக்கு தெரிஞ்சாதான் எதாவது வழி பிறக்கும்..வெயிட் பண்ணு வேறெதாவது வழி இருக்கான்னு பாப்போம்.. " ரம்யா வேறெதும் சொல்லத் தோன்றாமல் அமைதியானாள்..

இடையிடையே பங்கஜம் போனில் பவியிடம் பேசினாள்..

அந்த பொழுதை கழித்துவிட்டு வீட்டிற்கு வந்தாள் பவி.. எப்பொழுதும் பாட்டியிடம் சென்று பேசிவிட்டு வரும் பவி அன்று அவளறைக்கு செல்வதை தவிர்த்தாள்.. ஏனோ எதிரியாகத் தெரிந்தாள் பாட்டி..
ரிஷியிடமும் பேச மனம் வரவில்லை.. அவனை அவமானப் படுத்திவிட்டு திரும்ப எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேசுவது எனத் தடுமாறினாள்..

நடேசனும் சுகுமாரிப் பாட்டியிடம் இதைப் பற்றி பேசாமல் அமைதி காத்தார்.. அம்மா கொஞ்சம் ஆஸ்வாசம் ஆகட்டும் என்று..

இப்படியே தவிப்புடன் ஒருவாரம் ஓடியது..

அன்று ஞாயிற்றுக் கிழமை..

ரிஷியிடமிருந்து கால் வந்தது.. எடுத்துப் பேசவே பயமாக இருந்தது பவிக்கு.. மாடிக்கு சென்று தயக்கத்துடன் மெள்ள எடுத்தாள்..

" ஹலோ... பவி... "

" ம்ம்ம்.. சொல்லுங்க ரிஷி.. எ.. எப்டி இருக்கீங்க.."

" ஹ்ம்ம்.. எதோ இருக்கேன்.. என்ன ஆச்சு உங்க பாட்டிக்கு.. அம்மா ரொம்ப கோபத்ல இருக்காங்க.. உங்க பாட்டி ஏன் அப்டி பேசினாங்க.. எதனால.. நான் அத எதிர்பாக்கல.. ரொம்ப ஷாக்கிங்கா இருந்தது.. ரொம்ப மூட் அவுட் ஆயிருச்சு.. அ.. அதான் உன்கிட்ட கூட பேசல.. நீயாவது கால் பண்ணுவேன்னு பாத்தேன்.. ப்ச்.. பண்ணல.. மனசு கேக்கல.. அதான் கால் பண்ணேன்.."

பெருமூச்செறிந்தாள் பவி.." எ.. எனக்கும் உங்கள்ட்ட பேச ரொம்ப தயக்கமா இருந்தது ரிஷி.. வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அவமானப் படுத்தினமாதிரி ஆச்சே.. எந்த முகத்த வெச்சுட்டு உங்கள்ட்ட பேசறதுன்னு பயமாயிருச்சு.. அதான் கால் பண்ணல.. ஐ... ஐ' ம் ரியலி சாரி ரிஷி.. எ.. என்ன மன்னிச்சிடுங்க.."

" ஹே.. இதுல உன்மேல என்ன தப்பு இருக்கு.. நீ என்ன பண்ணுவ பாவம்.. உங்க பாட்டி பண்ணினதுக்கு.. இப்போ இவங்கள எப்டி சமாளிக்கறதுன்னு தான் ரொம்ப யோசனையா இருக்கு.. "

" நம்ப கல்யாணம் நடக்குமான்னு ரொம்ப பயமா இருக்கு ரிஷி.. உ.. உங்கள விட்டுட்டு வேறொருத்தரோட வாழ என் மனசு இடம் குடுக்காது.. நா.. நா... செத்.." அவள் தேம்பி அழ..

" பவி.... ப்ளீஸ்.. நம்ப கல்யாணம் நிச்சயம் நடக்கும்.. நீ எனக்குத்தான்.. எல்லாரோட ஒப்புதலோடதான் நம்ம கல்யாணம் நடக்கனும்னு காத்திட்டு இருக்கேன்.. ஹூம்.. உன்ன கூட்டிட்டு போய் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க எவ்வளவு நேரம் ஆகும்.. ம்ம்ம்.. அது வேண்டாம்னுதானே பொறுமையா இருக்கேன்.. எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியனும்.. உங்க பாட்டிக்கு எங்க அம்மா என்ன உறவு.. அவங்களுக்கு என்ன துரோகம் செஞ்சாங்க... இது எனக்கு தெரியனும் பவி.. எங்க அம்மாக்கும் அது தெரியாம ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்காங்க.. உங்க பாட்டி எதாவது சொன்னாங்களா.."

" இல்ல ரிஷி.. அன்னிக்கு நடந்ததுலேந்து நான் பாட்டிட்ட பேசல.. பிடிக்கல.. வெறுப்பா வருது.. அவங்கள்ட பேசினா வெடுச்சிடுவேனோன்னு இருக்கு.."

" பவி.. பொறுமையா கேளு.. நமக்காகத் தானே.."

" சரி.. உங்களுக்காகத்தான்.."

" ம்ம்ம்... நீ எதுவும் மனச போட்டு குழப்பிக்காத.. நான் இருக்கேன்.." ரிஷி கூற கொஞ்சம் தெம்பாய் இருந்தது பவிக்கு..

போனை அணைத்து கீழே இறங்கி வந்தவள் மெள்ள பாட்டியின் அறைக்கு சென்றாள்.. சுகுமாரி கண்ணயர்ந்திருந்தாள்.. மெள்ள அழைத்தாள் பவி.. " பா.. பாட்டி.. பாட்டி.." எழுந்திருக்கவில்லை.. கொஞ்சம் சத்தமாக அழைத்தாள்..

" ஆ.... " திடுக்கிட்டு விழித்தாள் சுகுமாரி.. எதிரே பவி நிற்க கண்களை குறுக்கி என்ன என்பது போல் பார்த்தாள்.. பவிக்கு எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் தயங்கினாள்.. மனதை திடப்படுத்திக் கொண்டு தொண்டையை செறுமினாள்..

" பா.. பாட்டி... சுந்தரவல்லி மாமி உ... உங்களுக்கு உறவா..."

சுகுமாரியின் முகம் இறுகியது.. அமைதியாக இருந்தது..

" சொ... சொல்லு பாட்டி.. " பவி அழுத்திக் கேட்க பாட்டி தலை நிமிர்ந்து அவளை முழுமையாகப் பார்த்தாள்..

" உனக்கெதுக்கு அதெல்லாம்.. அவ யாராவாவது இருந்துட்டுப் போட்டும்.. அந்த கதையெல்லாம் உனக்கெதுக்கு.."

பவி கொஞ்சம் சூடானாள்.. " இ.. இதுல என்னோட லைஃப் ச... சம்பந்தபட்டிருக்கறதால தான் கேக்கறேன்.."

அவளை ஆழமாக பார்த்தாள் சுகுமாரி.. " உன்னோட வாழ்க்கை.. ம்ம்.. இன்னும் நீ வாழவே ஆரம்பிக்கல பவி.. அவாளபத்தி நீ ஒன்னும் தெருஞ்சுக்க வேண்டாம்..."

" ஏன் தெருஞ்சுக்கக் கூடாது.. நான் வாழப் போற இடம்.. அவாளப் பத்தி நான் தானே தெரிஞ்சுக்கனும்.. "

பவியை முறைப்புடன் பார்த்தாள் சுகுமாரி.. " பவி.. அந்த கனவெல்லாம் மறந்துடு.. உனக்கு அவா சம்பந்தமே வேண்டாம்.. இந்த கல்யாணம் நடக்காது.."

பவிக்கும் கோபமும் அழுகையும் கொப்பளித்தது.. " ஏன் பாட்டி... ஏன் நடக்காது... உனக்கும் அவாளுக்கும் என்ன பகை.... உங்க பகைல என் வாழ்க்கைய ஏன் சீரழிக்கறேள்.. இது உனக்கே நியாயமா இருக்கா.." சத்தமாகக் கத்தினாள்.. ஹாலில் அமர்ந்திருந்த நடேசனும் பங்கஜமும் கலவரத்துடன் உள்ளே நுழைந்தனர்..

பாட்டி ஒருகணம் அதிர்ந்து அவளைப் பார்த்தாள்.. " நான்... நான் உன் வாழ்க்கைய சீரழிக்கறேனா.. உன்ன காப்பத்த தான்டி அவாள வெளியேத்தினேன்.. என்ன தெரியும் உனக்கு.. ஹூம்... பேச வந்துட்டா..." முகத்தை திருப்பிக் கொண்டாள்..

" பவி.. நீ கொஞ்சம் அமைதியா இரு.. அம்மா.. நீ தானே இவா கல்யாணம் நடக்கனும்னு பிரியபட்டே.. இப்போ நீயே வேண்டாம்னு சொன்னா என்னம்மா அர்த்தம்.. உனக்காகத் தானே நானும் ஒத்துண்டேன்.. இப்போ இவள இப்படியே பட்டமரமா நிக்க வைக்கட்டுமா சொல்லு.." நடேசன் கேட்க..

கொஞ்சம் அமைதிகாத்த சுகுமாரி.. " நான்.. சொல்றத புருஞ்சுக்கோ நடேசா.. அ.. அவளுக்கு வேற நல்ல வரனா பாக்கலாம்.." தயங்கிக் கூறினாள்..

" அதுக்கு நான் உயிரோட இருக்கனும்.. வேற யாருக்காவது என்ன தானம் பண்ணேள் அன்னிக்கே மருந்த குடுச்சுடுவேன்..." பவி பொங்கிக் கதற அனைவரும் ஸ்தம்பித்தனர்.

" பவி... என்னடி இதெல்லாம்.. அபசகுனமா பேசின்டு.. அம்மா உண்மையச் சொல்லுங்கோ.. என்ன காரணம்னு தெரியாம எதுவும் பண்ண முடியாது.. " பங்கஜம் தன்மகளின் வேதனை கண்டு கோபமானாள்.

சுகுமாரிப் பாட்டியின் கண்கள் ஓரித்தில் நிலைத்திருந்தது.. கண்களுக்குள் பழைய காட்சிகள் படமாய் ஓட நீர் திரண்டு மெல்லிய கோடாய் வழிந்தது..

" டேய் குருமூர்த்தி... மொதராத்திரி.. பாத்து பதவீசா நடந்துக்கோ.. அவோ சின்ன பொண்ணு.. என்ன.." பட்டு மாமா காதைக் கடிக்க வெட்கச் சிரிப்புடன் தலை அசைத்தான் குருமூர்த்தி..

பெரிய கூடத்தின் ஓரமாய் அமைந்திருந்த அந்த அறை பூக்களால் நிறைந்திருந்தது. குருமூர்த்தி அசட்டுச் சிரிப்புடன் நிற்க , வேர்வையில் குளித்து விரித்த கண்களுடன் பயந்தபடி நின்றிருந்தாள் சுகுமாரி..

வாத்யார் வந்து நல்ல நேரம் பார்த்து மந்திரங்கள் ஓதி பையனை உள்ளே அனுப்ப.. சுகுமாரியை தைலாவும் , அத்தையும் மாமியும் கையில் பால் சொம்பை திணித்து ஏதேதோ சீண்டி விளையாடினர்.. அவர்கள் ஜாடைமாடையாய் ஏதேதோ கூற ஒன்றும் புரியாமல் விழித்தாள் சுகுமாரி.. சுற்றி நின்றவர்கள் அவளை உள்ளே அனுப்ப ஓர் பெருங்குரல் அவளைத் தடுத்தது..

திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க , பர்வதம் கம்பீரமாக வந்து நின்றாள்.. " இதோ பாருங்கோ.. எம்பையனுக்கு ரவைக்கு காபி சாப்ட்டுதான் பழக்கம்.. பாலெல்லாம் அவன் குடிக்கமாட்டான்.. பொண்ணு கைல காப்பி சொம்ப குடுத்து அனுப்புங்கோ.. சாயங்காலம் போட்டுத் தந்த காபி கழனித்தண்ணா இருந்தது.. அதமாதிரி இல்லாதைக்கு திக்கா போட்டு குடுங்கோ.. கவனிப்புஞ் சரியில்லே.. ஒன்னுஞ்சரியில்லே.. டி சுகுமாரி... மலங்க மலங்க நிக்காதே.. என்ன புருஞ்சதா.." பர்வதத்தின் முறைப்பு குலை நடுங்கச் செய்தது சுகுமாரிக்கு..

வழக்கமே இல்லாமல் முதலிரவிற்கு காபியை கேட்கிறாளே என ருக்மணியும் , வேதவல்லியும் அடுக்களைக்கு ஓடினர்.. தயாராக நேரம்பிடிக்க...

" ஹூம்... எல்லாம் தாமசம்.. உங்காத்ல யாருமே சுறுசுறுப்பு கெடையாதா.. ஏங்கானும் சுப்ரமண்யம்.. என் சொந்தக் காராளுக்கு படுக்க அறை தயார் பண்ணி குடுக்க சொன்னா கூடத்லே படுக்கச் சொன்னேளாமே.. ம்ம்ம்.. தட்டுகெட்டு போனவான்னு நெனச்சீரோ.. " பர்வதம் உச்சஸ்தாயில் கத்த..

" ஹையோ.. அ... அதெல்லம் இல்ல மாமி.. இருந்தது நாலு ரூம்புதான் அதுல உங்காத்து பேர் தான் இருக்கா.. பத்தாதைக்கு கூடத்ல படுத்துக்கலாம்னு சொன்னேன்.. அவ்ளவு தான்.." குறுகினார் சுப்ரமண்யம்..

" நன்னாத்தான் கவனிக்கிறீர் ஓய்.. பெருங்குடும்பம்னு தெரியும்லயோ.. வாடகைக்கு ஒரு எடத்த புடுச்சு விடறது.. எலிவலை மாதிரி இந்த இத்துணூன்டு மண்டபம் யாருக்கு பத்தும்.. ஒன்னுமில்லாதவா குடும்பத்லே பொண்ணெடுத்தா இப்டித் தான்.. ஹூம்.." இளக்காரமாய் பார்த்தாள் பர்வதம்..

பேச வாயின்றி அமைதியாக இருந்தார் சுப்ரமண்யம்..

சுடசுட காபி சொம்பை துணியில் பிடித்தபடி ஓடி வந்தாள் தைலா.. அதை சுகுமாரியின் கையில் திணித்து பால் சொம்பை வாங்கிக் கொண்டாள்..

மெள்ளிய துணியில் சூடுதாங்காமல் விரல்கள் சுட்டது சுகுமாரிக்கு..

" நாழி ஆயிடுத்து.. நல்ல நேரம் போயிண்டு இருக்கு.. பொண்ண உள்ள அனுப்புங்கோ.. டி குமாரி.. அவனுக்கு கொதிக்க கொதிக்க குடுக்காதே.. நன்னா ஆத்தி குடு.. என்ன.. ஒன்னுந்தெரியாதவள தானம் பண்ணிட்டு.. ஹூம்.. ஏம்மா ருக்மிணி.. பொண்ணுக்கு மாத்துத் துணி குடுத்துவிட்டேளா.. " பர்வதம் சத்தமாகக் கேட்க பெற்றவள் கூனிப் போனாள்.. மெள்ள தலை அசைத்தாள்..

காப்பி சொம்புடன் சுகுமாரி உள்ளே நுழைய கதவு மூடப்பட்டது.. மடிசார் புடவை மூட்டையாக உடலை சுற்றி இருக்க , நகைகள் முள்ளாய் குத்த , தலையில் சுற்றிய பூச்சடை பின் முதுகில் நீர் பொழிய கசகசத்து போயிருந்தாள்.. அடுத்து என்ன நடக்க போகிறது.. எதற்கு அவனுடன் இருக்க வேண்டும் , எதற்கிந்த சம்பிரதாயம் என எதுவும் புரிபடாமல் ஒருவித பயத்துடன் மருண்ட கண்களுடன் உள்ளே நடந்தாள் சுகுமாரி..

சின்ன விளக்கு மட்டும் எறிய , பல்லைக் காட்டிக் கொண்டு கட்டிலின் மையத்தில் அமர்த்திருந்தான் குருமூர்த்தி.. முன்பின் தெரியாத ஒருவனுடன் தனித்து விடப்பட்டது பெரும் அச்சத்தை உண்டாக்கியது சுகுமாரிக்கு.. தட்டுத் தடுமாறி அருகில் சென்று நின்றாள். அவனைப் பார்க்க தைரியமின்றி தலையைக் குனிந்து கொண்டாள்..

" சுகு.. ஏன் பயப்படறே.. வா.. வந்து உட்காரு..." அழைத்தான்..

மெள்ள தலை நிமிர்ந்து பார்த்தவள்.. " உங்க... உங்க பக்கத்ல சரிசமமா ஒக்காந்துக்கப்டாதுன்னு அம்மா சொன்னா.. மொதல்ல சேவிக்கனும் சொன்னா... சேவிச்சுடவா.." மெலிதாகக் கேட்டாள்..

முகத்தில் ஆண் கர்வம் விரிந்தது அவனுக்கு.. " ம்ம்ம்... சேவி.. சேவி.. நன்னாத்தான் வளத்திருக்கா.."

அவன் காலைத் தொட்டு வணங்கிவிட்டு எழுந்து நின்றாள்.. அதன் பின் நகர்ந்த அந்த இரவு அவளுக்கு கலவரத்தையே தந்தது..!!

மறுநாள்..

விடிந்தும் விடியாத காலையில் கதவு அடித்துத் தட்டப்படும் ஓசை கேட்டது.. கீழே தரையில் படுத்திருந்தவள் திடுக்கிட்டு எழுந்தாள்.. குருமூர்த்தி கட்டிலில் ஏகாந்தமாய் கிடந்தான்.. அவனைப் பார்க்க பயமாக இருந்தது.. ஒதுங்கி வந்து வேகமாக கதைவைத் திறந்தாள்..

வாசலில் பெரியவர்கள் நிற்க.. பர்வதம் அவளை தலையோடு காலாய் உற்றுப் பார்த்தாள்.. கூசியது சுகுமாரிக்கு..

சடங்குகள் எல்லாம் முடிந்து படையோடு கிளம்பினார்கள்..

லோக நாயகி எங்கு சிண்டு முடியலாம் என பார்த்துக் கொண்டிருந்தாள்.. கிடைத்தது வாய்ப்பு.. வேகமாக பர்வதத்திடம் வந்து காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.. கேட்டு பர்வதம் முகம் கோபத்தில் சிவந்தது..

" ஓய் சுப்ரமண்யம்.. இங்க வாரும்.. என்னங்கானும் கட்டு சாதக் கூடைல இட்லியக் காணம்.. ம்ம்ம்.. புளுச்சுப்போன தயிருஞ்சாதமும் , புளியோதரையும் கட்டிருக்கேள்.. எங்களப் பாத்தா என்ன இழுச்சவாயின்னு எழுதி ஒட்டி இருக்கா.. என்ன ஓய் கல்யாணம் நடத்தினீர்.. நேத்தைக்கு என்னடான்னா இலைல ரெண்டே ரெண்டு பதார்த்தப் போட்டு சப்பக் கட்டு கட்டினீர்.. இன்னிக்கு என்னடான்னா பழயஞ்சாத்த பெசஞ்சு கொடுக்கறே.. ம்ம்ம்.. உம்பொண்ண தானம் பண்ணியாச்சுங்கற திமிரா...

ஆமா.. பாக்கி இருக்கற இருபது பவுன் நகைய எப்பப் போடப்போறேள்.. இந்தாங்கோ அண்ணா.. எல்லாத்தையும் நானே கேக்கனுமா.. ஊமையா நிக்கறேளே.. " சுப்ரமணியத்திடம் கத்திவிட்டு சதாசிவத்திடம் கடிந்து கொண்டாள்..

பதறிப் போன சுப்ரமண்யம்.. " ஐயோ.. மன்னிக்கனும்.. எதோ தெரியாம பண்ணிட்டா , இட்லிய இப்பவே தயார் பண்ணச் சொல்றேன்.. கொஞ்சம் பொறுத்துக்கோங்கோ.." பம்மினார்..

" என்னங்கானும்... நகையப்பத்தி கேட்டா இட்லிய குடுக்கறேங்கறே.. இப்போ மீதி நகையப் போடலயோ உம்ம பொண்ண இங்கயே விட்டுட்டு போயிடுவேன்.. உம்மாத்லயே வெச்சுக்கோ.."

" அய்யோ.. அப்டிலாம் பண்ணிடாதேள்.. ஆ.. ஆறுமாசம் அவகாசம் கேட்ருந்தேனே.. நீங்களும் ஒப்புத்துண்டேளே.." பதறினார் சுப்ரமண்யம்..

" ஹூம்.. உம்ம உபசாரத்தப் பாத்து நேக்கு நம்பிக்கையே போய்டுத்து.. நகைய தயார்பண்ணிட்டு பொண்ண நீயே கூட்டிண்டு வாரும்... டேய் குரு மூர்த்தி கெளம்புடா.. லோகா எல்லாத்தையும் வண்டில ஏத்துடி.. அண்ணா வாங்கோ போலாம்.." அவள் கர்ஜித்துக் கொண்டே நகர.. பின்னால் குருமூர்த்தியும் எந்தவித உணர்வுமின்றி சென்றான்..

" ஐயயோ.. மாமி.. மாமி... கோபப்படாதேள்.. எப்டியாவது.. என் தலைய அடமானம் வெச்சாவது நகைய குடுத்தடறேன்.. என் பொண்ண வாழவெட்டி ஆக்கிடாதேள்.. சம்பந்தி நீங்களும் கொஞ்சம் சொல்லுங்கோ.." காலில் விழாத குறையாகக் கெஞ்சினார் சுப்ரமண்யம்.. அதிர்ச்சி மேலிட கண்களை விரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் சுகுமாரி..

கொஞ்சம் மனசிறங்கியவளாய் " ஹூம்.. ஏதோ பாவம் பாத்து விடறேன்.. இந்த மாசத்துக்குள்ள நகையப் போடலே உம்ம பொண்ண உம்மாத்துக்கு அனுப்ச்சு புடுவேன்.. ஜாக்ரதை... அடியே குமாரி.. போய் வண்டில ஏறு.. பொண்ண பெத்ருக்கார் பாரு பொண்ண.. ஜடம் மாதிரி.. போ.. போ..." பர்வதம் இளக்காரமாக மிரட்ட பின்னால் நின்ற லோகநாயகி வாய் பொத்தி சிரித்தாள்..

மனதில் சுமையுடன் பயத்தையும் கலவரத்தையும் சுமந்து கொண்டு மெள்ள குதிரை வண்டியில் ஏறினாள் சுகுமாரி.. அடுத்து நடக்கப் போகும் கொடுமைகள் அறியாமல்..!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
Last edited:

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 25

வீட்டில் நுழைந்த கையாய் சுகுமாரியை வேலை வாங்க ஆரம்பித்தாள் பர்வதம்..

" உங்காத்ல ஒக்காந்துண்டு இருக்கறா மாதிரி இங்க இருக்கப்படாது புரியறதா.. போய் சாதாரண உடைய உடித்திண்டு இத பீரோல வெச்சுட்டு வா.. கசங்கிடப் போறது.. நகையெல்லாம் நாள்கிழமைக்கு போட்டுக்கலாம்.. இந்த ரெட்டவடம்லாம் எதுக்கு.. குடு பீரோவுலே வெச்சுடறேன்.. இந்த பாரு குமாரி.. நீ தான் ஆத்து மூத்த மாட்டுப் பொண்ணு.. எல்லாருக்கும் வேண்டிய நீதான் கவனுச்சுக்கனும்.. புரியறதா.. வா.. அடுப்புல பாலக் காச்சி எல்லாருக்கும் காபி போட்டு குடு.. எப்டி உங்கம்மா வளத்திருக்கான்னு பாக்கறேன்.. " அடுக்களைக்குள் கொண்டு விட்டாள்..

" ம்ம்ம்.." கண்களை விரித்து தலை அசைத்தாள் சுகுமாரி..

தட்டுத் தடுமாறி பாலைகாச்சி காபி கலந்து கொண்டு வந்தாள்.. கூடத்தில் பட்டாளமாய் உட்காந்திருக்க கொஞ்சம் தடுமாற்றத்துடன் அனைவருக்கும் கொடுத்தாள்.. வாங்கிக் குடித்த பர்வதம் முகம் சுறுங்கியது.. " ஏன்டி , உங்காத்ல சக்கரை போட்டெல்லாம் காபி குடிக்க மாட்டேளா.. ஹூம் கசந்து வழியறது.. ஒரு காபி கூட போட்டுத் தர சொல்லித்தரலையா உங்கம்மா.. மண்டபத்ல அத்தன ஜம்பமா பேசினா.. இவ்வளவுதான் அவோ லட்சனமா.. தலைலெழுத்து.. " தலை அடித்துக் கொள்ள.. அவசரத்தில் சக்கரை கலக்காதது அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது சுகுமாரி.

" ம.. மன்னுச்சுக்கோங்கோ.. அவசரத்துல மறந்துட்டேன்.." கொஞ்சம் அவமானமாய் இருந்தது..

" ஹூம்.. நன்னாத்தான் இருக்கு.. சக்கரை டப்பாவை இங்க வெச்சுட்டு குரு மூர்த்திக்கு காபிய கொண்டு குடு.. பாவம் புள்ளை களச்சு போயிருக்கான்.. போ.." பர்வதம் மிரட்ட அடுக்களைக்குள் ஓடினாள் சுகுமாரி..

" ஹூம்.. நானும்தான் பொண்ண பெத்துருக்கேன்.. கோமதி என்னமா வேலை பாப்பா.. எந்த வேலையா இருந்தாலும் சட்டுனு முடிச்சுட்டு வந்துடும் என் குழந்தை.. இத மாதிரியா... ஹூம்.. பிரமஹத்தி.."

பர்வதத்தின் அதிர்ந்த குரல் சுகுமாரிக்கு கலக்கத்தை உண்டு பண்ணியது. விழுங்கிக் கொண்டாள்.. குருமூர்த்தி வெட்டி முறித்தது போல் கட்டிலில் மல்லாந்து கிடக்க.. அவனை அழைத்து பானத்தை கொடுத்தாள்.. வாங்கியவன் அயர்வாய் அவளைப் பார்த்தான்...

" சுகு.. காலெல்லாம் ஒரே வலி.. கொஞ்சம் கால அமுக்கி விடு.. " கட்டளையிட்டான்.. கட்டிலின் மேல் அமரப் போனவளை கண்களால் சுட்டான்.. " கீழ உட்காரு.."

தரையில் அமர்ந்து அவனது கால்களை அமுக்கிவிட்டாள்.. தன் பிஞ்சு விரல்கள் நோக..! நேரம் ஆக பர்வதத்தின் குரல் அவளை அதிரச் செய்தது.... " டீ குமாரி.. என்னடி பண்ணின்டு இருக்கே.. உள்ள உனக்கென்ன வேலை.. வாடி இங்க.." பதறி பாதியில் எழுந்தாள்.. அவன் முறைத்தான்..

" அ.... அம்மா கூப்படறா.. வந்துடறேன்.. " பாவமாய் பார்த்தாள்.. அவன் வெறித்துவிட்டு திரும்பிப் படுத்தான்.. அவசரமாக வெளியில் ஓடி வந்தாள்..

" காபிய குடுத்தமா வந்தமான்னு இல்லாதைக்கு என்ன பண்ணின்டு இருக்கே.. ம்ம்ம்...நான் சொன்னாத்தான் உள்ள போனும்.. இங்க ஆயிரத்தெட்டு வேலைய வெச்சுண்டு அங்க என்ன குழசல்..." பர்வதம் கண்களை உருட்டினாள்.. என்ன சொல்வதெனத் தெரியாமல் தலை ஆட்டினாள் சுகுமாரி..

" எம்பொண்ணு கோமதிக்கிட்ட கேட்டுண்டு ரவைக்கு சாப்பாடு பண்ணிடு.. உந்தோப்பனார் குடுத்துவிட்டு கட்டுசாதமெல்லாம் ஊசிப் போயிடுத்து.. பழயதக் குடுத்துப்புட்டு ஜம்பம் வேறே.. ஹூம்.. அதக் கொண்டு போய் கொல்லைல கொட்டிட்டு சூடா பொங்கலும் , இட்லியும் பண்ணிடு.. இருபத்தி ரெண்டு பேர் இருக்கா.. "

" தலையத் தலைய ஆட்டிண்டு நிக்காதைக்கு போ.. போயி வேலையப் பாரு.. கோமதி.. கண்ணு.. அவளுக்கு எப்டி சமைக்கனும்னு கத்துக்குடு.. ஒன்னுந்தெரியாதவள தலைல கட்டிட்டா.. நீதானே கண்ணு பிரமாதமா பண்ணுவியே.. போம்மா.. போய் பாத்துக்கோ.." தன் மகள் கோமதியிடம் அன்பு பொங்க கூறினாள் பர்வதம்..

" ம்ம்.. சரிம்மா.. மன்னி வா.. " பெருமை பொங்க கூட்டிக் கொண்டு நடந்தாள் கோமதி.. பர்வதத்தின் ஆறாவது குழந்தை.. ஒரே செல்வமகள்..!

பாதி தெரிந்தும் தெரியாமலும் கோமதி ஏதோ சொல்லிக் கொடுக்க , நன்றாக சமைக்கும் சுகுமாரி குழம்பிப் போனாள்.. " உப்பு இவ்ளோ போட்டா கரிக்குமே.. காரம் ரொம்ப ஜாஸ்தி.. சாம்பாருக்கு இவ்ளோ ஆகாதே.. " சுகுமாரி கேட்க கோபமானாள் கோமதி.

" நான் சொல்றத செய்.. நேக்கு தெரியாதா.. என்னமோ கரைகண்டவ மாதிரி பேசறியே.. ம்ம்ம்.." முறைத்தாள்..

எதற்கு வம்பென்று அவள் கூறிய அளவைப் போட்டு சமைத்து முடித்தாள் சுகுமாரி.. அனைவரும் அமர ஒற்றை ஆளாய் பரிமாறினாள்.. சாப்பிட்டவர்கள் முகம் அஷ்டகோணலாக , லோகநாயகி பர்வதத்தை சீண்ட ஆரம்பித்தாள்...

" ஏன்டி பர்வதம்.. உன் நாட்டுப் பொண்ணுக்கு நடக்கத்தான் தெரியாதுன்னு பாத்தா , சமைக்கக் கூட தெரிலீயேடி.. இப்டி காரத்தையும் உப்பையும் அள்ளிக் கொட்டினா உடம்பு என்னதுக்கு ஆறது.. பாவம்டி நீ.. நோக்கு வாச்சது அவ்ளவு தான்.. என்னமோ போ.."

பர்வதம் எரிமலையானாள்..

" ஏன்டி , நோக்கு சமைக்க சொல்லிக் கொடுத்தும் பண்ண வராதா.. எம்பொண்ணுட்டயே கத்துக்க ஆகலேன்னா எதுக்கு லாயக்கு நீ.. ஹூம்.. எல்லாம் என் தலையெழுத்து.."

" ஆமம்மா.. உப்புக்கும் காரத்துக்கும் அளவு சொன்னா அவ இஷ்டத்துக்கு போடறா.. எம்பேற கெடுத்துடுவா போலவே.. இனி நீ ஆச்சு உன் மாட்டுப் பொண்ணு ஆச்சு.. இனிமே நேக்கு சொல்லாதே.. நீயே பாத்துக்கோ.. ஹூம் வாய்ல வெக்க விளங்கலே.." தன் பங்கிற்கு கோமதி தூற்றிவிட்டு எழுந்தாள்..

அனைவரும் பாதி வயிருடன் எழுந்திருக்க சுகுமாரிக்கு கண்களில் நீர் கொண்டது..

" எல்லாத்தையும் கொண்டு மாட்டுக்கு கொட்டு.. மனூஷா சாப்படற மாதிரியா இருக்கு.. கர்மம்.." பர்வதம் அர்ச்சித்துவிட்டு நகர்ந்தாள்.. கலக்கத்தில் உணவருந்தாமல் அங்கேயே அமர்ந்து கொண்டாள்..

இரவு பதினொன்றைத் தாண்ட , ஊர் நியாயத்தையும் , வெற்றுப் பேச்சையும் பேசிவிட்டு அனைவரும் படுக்க , பர்வதம் சுகுமாரியை அறைக்குள் உறங்க அனுமதி தந்தாள்.. உடலெல்லாம் கலைத்துப் போக மெதுவாக நடந்து உள்ளே நுழைந்தாள் சுகுமாரி.. அவளுக்காய் காத்திருந்தவன் அவள் வர புன்னகைத்து அர்த்தமாய் பார்த்தான்.. அன்று இரவு அரைகுறை உறக்கத்துடன் கடக்க.. விடியக் காலையில் சத்தமாக எழுப்பினாள் கோமதி..

" மன்னி... மன்னி... இன்னும் என்ன தூங்கிண்டு இருக்கே.. மணி ஆயிடுத்து... எந்திரி.. போய் லெஷ்மிய குளிப்பாட்டிட்டு பாலக் கரந்துண்டு வா.. அம்மாக்கு காலைல அஞ்சு மணிக்கு காபி குடிக்கற பழக்கம்.." கூறிவிட்டு அவள் சென்று உறக்கத்தைத் தொடர , தலை சுற்ற தட்டுத் தடுமாறி எழுந்த சுகுமாரி குளித்து முழுகி , பாத்திரத்துடன் தொழுவத்திற்குள் நுழைந்தாள்..

இதுவரை மாட்டிடம் பால் கறந்த பழக்கமில்லாமல் பயத்துடன் நின்றாள்.. லக்ஷ்மி அவளை அன்புடன் பார்க்க மெல்லிய சந்தோஷத்துடன் அதற்கு தடவிக் கொடுத்தாள்.. குறுகிய நேரத்தில் அது சுகுமாரியிடம் ஒட்டிக் கொள்ள , அதை குளிப்பாட்டி பொட்டிட்டு மடுவை பிடித்து பால் கரந்தாள்.. அதற்குத் தீணி வைத்துவிட்டு, அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க , அடுத்தடுத்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்..

வழக்கம்போல் அவளை ஏசியபடி அவளது உபசரனைகளை ஏற்றுக் கொண்டனர்.. நாட்கள் ஓடியது.. சமைப்பது வீட்டு வேலைகளைச் செய்வது , எல்லோரையும் கவனிப்பது மட்டுமே அவளின் தலையாயக் கடமையாக விதிக்கப்பட்டது.. ஊதியமில்லா சேவகன் போல் இரவுபகல் பாராமல் உழைத்தாள்.. பர்வதத்தின் குத்தல் பேச்சையும் , கோமதியின் திமிரையும் , குருமூர்த்தியின் அலட்சிய போக்கையும் பொறுத்துக் கொண்டு அனுசரித்து நடக்க ஆரம்பித்தாள்.. எல்லோரும் உண்டது போக மிச்சத்தை சாப்பிட்டாள்..

வீட்டு மாப்பிள்ளையாய் இருந்த சடகோபன் மட்டும் சுகுமாரியிடம் கொஞ்சம் கனிவாய் நடந்து கொண்டான்..

கோமதி கர்பமானாள்.. உள்ளமெல்லாம் பூரித்துப் போக பர்வதம் தன் மகளை அலுங்காமல் குலுங்காமல் பார்த்துக் கொண்டாள்.. கோமதியை கவனிக்கும் பொறுப்பும் சுகுமாரியின் தலையில் விழுந்தது.. சின்னப் பெண் என்று பாராமல் அனைவரும் அவளை ஏவினர்..

ஒருபுறம் உடல் உளைய மறுபுறம் மனம் புழுங்க வாய் பேசாமல் ஜடம் போல் இருந்தாள்.. மகிழ்ச்சி என்பது மருந்துக்குக் கூட இல்லாமல் போனது.. அவளை ஒரு பொருட்டாகவே கருதவில்லை குரு மூர்த்தி.. அவனுக்கு அவள் உடல் தேவைப்பட்டது அவ்வளவே.. அதுவுமின்றி அவனது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது.. அடிக்கடி இரவு வெளியில் சென்று வருவதும் , பல நாட்கள் இரவில் வராமலும் இருந்தான்..

சுகுமாரிக்கு கொஞ்சம் கொஞ்சம் அவன் நடத்தை மீது சந்தேகம் வர ஆரம்பித்தது.. நடுஇரவில் அவன் வரும் பொழுது அவன் மீது அடிக்கும் மல்லிகைப் பூ வாசமும் ஜவ்வாது வாசமும் அவன் தவறு செய்வதை ஊர்ஜிதப் படுத்தியது.. அவன் தீண்ட அருவருப்பாய் இருந்தது.. அதையும் மீறி அவனது அத்துமீறல் அவளை ரணமாக்கியது..

சில நாட்கள் செல்ல.. இரவில் அவனுடன் உறங்க பர்வதமோ , கோமதியோ விடுவதில்லை.. அறையின் வாயில் கதவிற்கு முன்னால் கோமதி படுத்துக் கொண்டு அவளை உள்ளே செல்ல தடையாக இருந்தாள்..

உள்ளுக்குள் கலவரம் மூண்டிருந்தது சுகுமாரிக்கு.. தன் கணவன் தன்னைவிட்டு போய்விடுவானோ என்ற பயம் அவளை அலைக்கழித்தது..

ஒருநாள் இரவு...

வழக்கம்போல அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு பின்னரவு அவள் அறைக்குள் செல்ல எண்ண அங்கு வாசலில் கோமதி படுத்துக் கொண்டு உறங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள்..

அவளை எழுப்ப மனமின்றி ஒரு ஓரமாக தாண்டிச் செல்ல , பர்வதத்தின் குரல் அவளை வெலவெலக்கச் செய்தது..

" அடியே.. கூறுகெட்டவளே.. அறிவில்ல.. கர்பவதிப் பொண்ண தாண்டறயே உனக்கு கூறு இருக்கா.. புள்ளைய வயத்துல சுமந்துண்டு இருக்கா எம்பொண்ணு , அவளத் தாண்டி உன் பாவத்த சேக்கறியா.. என் பரம்பரையே நாசமாப் போகனும்னு நெனைக்கறியா.. வந்து ஒரு வருஷம் ஆயுடுத்து.. உனக்குத்தான் வயத்துல ஒன்னும் மொலைக்கலே.. அதுக்காக எம்பொண்ணு வயத்துல வளர்ரத
அழிக்கப் பாக்கறியே படுபாவி.. நீ நன்னா இருப்பியா.. அப்படி என்னடி சல்லாபம் வேண்டி இருக்கு.. சீ... " பர்வதம் உச்சஸ்தாயில் கத்த , அனைவரும் எழுந்து கொண்டனர்.. சுற்றி எல்லோரும் அவளை அசிங்கமாகப் பார்க்க கூசியது சுகுமாரிக்கு.. அங்கேயே செத்துவிடமாட்டோமா எனத் தோன்றியது.. இதயத்தை கிழித்த கூரிய வார்த்தைகளை கேட்க இயலாமல் காதுகளை மூடிக் கொண்டாள். கண்களில் நீர் பொழிந்தது.

" என்னடி முழுச்சுண்டு இருக்கே.. எம்பொண்ணு கால்ல விழுந்து மன்னிப்பு கேளு.. தப்பு பண்ணிட்டேன்னு.. ம்ம்ம்.." பர்வதம் கண்களை உருட்ட , சுயமரியாதை அத்தனையும் மனதில் புதைத்து கோமதியின் கால்களைப் பற்றினாள் சுகுமாரி.. கோமதிக்கு சந்தோஷத்தில் முகம் மலர்ந்து போனது.. அன்றிலிருந்து சமையல்கட்டே படுக்கை அறை ஆனது சுகுமாரிக்கு..

நாட்கள் முட்களாய் நகர.. குரு மூர்த்தி வீட்டிற்கு வருவதை அவ்வப் பொழுது தவிர்த்திருந்தான்.. வந்தாலும் அவனது காம வேட்கையைத் தணித்துக் கொள்ள இவளை உபயோகப் படுத்திக் கொண்டான்.. சில நேரங்களில் பகலென்றும் பாராமல்..! அறையைவிட்டு வெளிவரும் சுகுமாரிக்கு அனைவரது கேளியான அசிங்கப் பார்வை ஊசியாய் குத்தியது.. கல்யாணமாகாத நாலு மச்சினன்களின் ஜாடையான கிண்டல் பேச்சும் , அவளை பார்த்தவிதமும் தலைகுனிய வைத்தது..

குருமூர்த்தியின் ஆரப்பாட்டம் அதிகமாக பொறுக்க இயலாமல் ஒரு நாள் பர்வதத்திடம் கூறினாள்.. " அ.. அம்மா.. அ.. அவர் போ... போக்கே.. சரி.. இல்ல.." தட்டுத் தடுமாற..

" யாரோட போக்க சொல்றே... நீ ரொம்ப நல்லவளோ.. யாரடி சொல்றே.. ம்ம்ம்.." பர்வதம் கர்ஜிக்க..

" அ... அவர் தான்.. வேளைகெட்ட வேளைல வெளில போய்ட்டு வர்ரார்.. அவர் மேலே.. எதேதோ வாசன வர்ரது... அவர.. கொஞ்சம்.. கண்டிச்சு..." சுகுமாரி நிறுத்தும் முன்னே எரிமலையானாள் பர்வதம்..

" என் பிள்ள சொக்கத் தங்கம்.. அவனையே குறை சொல்றியே உன் நாக்கு அழுகிப் போகாது.. ஆம்பளைனா நாலு எடத்துக்கு போய்ட்டு வரத்தான் செய்வான்.. பொண்டுசட்டி மாதிரி ஆத்லயா உட்காந்து இருப்பான்.. அவன் போக்க சொல்ல நீ யாருடி.. பெரிய கரைகண்டவளோ.. ஒரு புள்ளைய பெத்துகுடுக்க வழியக் காணும்.. அவன குறை சொல்றியோ.. இதுதான் முதலும் கடைசியும்.. இனியும் அவனப் பத்தி பேசினியோ.. உங்காத்துக்கு உன்ன துரத்திப்புடுவேன்.. சொன்னபடி நகையப் போட வக்கில்லே உங்கப்பனுக்கு.. வாய் மட்டும் நீளறது.. வாய மூடிண்டு போடி... வந்துட்டா.. " ஆங்காரியாய் கத்தினாள்..

அதற்குமேல் பேச வழியின்றி ஊமையானாள் சுகுமாரி..

கோமதிக்கு பெண்குழந்தை பிறந்தது.. அதற்கு சுந்தரவல்லி எனப் பெயர் வைத்து அமர்க்களமாக பண்டிகை வைத்துக் கொண்டாடினாள் பர்வதம்..
சுந்தரவல்லிக்கு இரண்டரை வயது நிறைய.. சூள் கொண்டாள் சுகுமாரி..

நாட்கள் நகர , வயிற்றின் சுமையும் ஏற அதனுடன் வேலைகளை செய்து வந்தாள்.. கவனிக்க ஆள் இல்லை.. அதே இளக்கார பார்வை , அதே மிஞ்சிய சாப்பாடு என நாட்கள் நகர்ந்தது.. பெற்றவர்களைக் காண வேண்டும் என மனம் அடித்துக் கொண்டது.. குருமூர்த்தியிடம் சொல்லியும் எந்த பிரயோஜமும் இல்லாமல் போனது..

பெண்கள் சவகாசம் மட்டுமின்றி வேறு சில கெட்ட பழக்கங்களும் அவனை சிதைக்க ஆரம்பித்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் நோய்வாய்ப் பட ஆரம்பித்தான்.. சுகுமாரியின் பெற்றோர் இரண்டு மூன்று முறை வந்து பார்த்து சென்ற போதும் அவர்களுடன் அவளை அனுப்ப சம்மதிக்கவில்லை பர்வதம்..

சீமந்தத்தை செலவு செய்து மண்டபத்தில் நடத்திவிட்டு அவளை அழைத்துப் போக கட்டளை இட்டாள் பர்வதம்.. வேறுவழியின்றி கடனை வாங்கி சுகுமாரிக்கு சீமந்தம் நடத்தி அவளை அழைத்துப் போனார்கள்..

அழகான ஆண்பிள்ளை பிறந்தது.. மகிழ்ந்து போயினர் சுப்ரமண்யமும் ருக்மணியும்.. பையன் வீட்டிற்கு செய்தி அனுப்பியும் யாருமே வரவில்லை.. தகுந்த சீரோடு மாப்பிள்ளைக்கு தங்க அணிகலனும் வைத்து பெண்ணையும் குழந்தையையும் கூட்டி வருமாறு மறுசெய்தி சொல்லிவிட்டாள் பர்வதம்.. குருமூர்த்தி கூட தன் குழந்தையை பார்க்க வரவில்லை..

சோர்ந்து போனாள் சுகுமாரி.. மேலும் மேலும் சுமையேற நொடிந்து போனார் சுப்ரமண்யம்.. இருந்த நிலத்தை விற்று அத்தனை சீரையும் செய்து சுகுமாரியை கொண்டு விட்டார்..

பச்சை உடம்புக்காரி எனப் பாராமல் அந்தக் கூட்டம் அவளை ஏவ ஆரம்பித்தது.. குழந்தையையும் கவனித்துக் கொண்டு மற்றவர்கள் தேவையையும் நிறைவேற்றி மாடுபோல வேலை செய்தாள் சுகுமாரி.. உடல் மெலிந்து போனது..!

ஒருவருடம் செல்ல , குருமூர்த்தி காசநோயில் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையானான்.. நெஞ்சம் அடித்துக் கொண்டது சுகுமாரி.. கல்லானாலும் கணவன் என்ற ஸ்தானம் அவளை நிலைகுலையச் செய்தது.. குழந்தை பிறந்து ஒருவருடம் ஆகாத நிலையில் அவன் நோய்வாய்ப் பட்டதைக் கண்டு குழந்தையை தூற்ற ஆரம்பித்தாள் பர்வதம்..

" எந்த நேரத்ல பொறந்ததோ சனியன் அப்பன இப்டி படுக்கைல போட்டுடுத்தே.. அடியே குமாரி இந்த தரித்திரத்த அவன்கிட்ட விடாதே.. சீ.."

நாட்கள் நகர நகர குருமூர்த்தியின் நிலை கவலைக்கிடமானது.. எத்தனையோ வைத்தியம் பார்த்தும் பலனின்றி ஒரு நாள் கண்களை மூடினான் குருமூர்த்தி..

நிற்கதியான சுகுமாரி கதறி அழுதாள்.. பிள்ளையைக் கண்டு அரற்றினாள்..

பெற்ற பிள்ளைய பறிகொடுத்த பர்வதத்திற்கு வெறி ஏறியது.. " இந்த பீடை எப்பப் பொறந்ததோ அப்பவே எம்பையனுக்கு சனி பிடுச்சுடுத்து.. நன்னா இருந்தவன் அல்பாய்சுல போய்ட்டானே.. வந்த ஒரு வருஷத்துல அப்பன முழுங்கிடுத்தே.. இது இனிமே என்வீட்டுக்குள்ள இருக்கக் கூடாது.. தூக்கிண்டு வெளில போ.. போய்த்தொலை.. தரித்திரம் தர்த்ரம்.." குழந்தை நடேசன் மீது தன் ஆத்திரம் அத்தனையும் கொட்டித் தீர்த்தாள் பர்வதம்.. கோமதியும் சேர்ந்து கொண்டு சுகுமாரியை கரித்துக் கொட்டினாள்..

" இவ வந்த வேளை தாம்மா.. எங்கண்ணனுக்கு இப்டி ஆய்டுத்து.. எப்போ காலடி எடுத்து வெச்சாளோ அப்பவே இந்தாத்து சந்தோஷம் போயிடுத்து.. இனி இவ இந்தாத்துக்குள்ள இருந்தா நாம எல்லாரும் ஒவ்வொருத்தரா போக வேண்டியதது தான்.. இவள ஆத்ல சேக்காதே.. அந்த மாட்டுத் தொழுவத்துல இருக்கச் சொல்லு... இவ திமிருக்கு அது தான் தண்டனை.. மாட்டோட மாடா கெடக்கட்டும்... அப்பத்தான் புத்தி வரும் இவளுக்கு.. "

அந்த சூழலில் குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வது எங்கு செல்வது என மனம் புழுங்கி தவித்துப் போனாள் சுகுமாரி.. ஈமக் காரியம் எல்லாம் முடிய ,மாட்டுத் தொழுவத்தில் ஓர் வேலைக்காரி போல் ஆனாள்..

கொள்ளையிலே பாத்திரம் கழுவ துணி துவைக்க மாட்டைக் கழுவஎன எல்லா வேலையையும் அவள் தலையில் கட்டினர்.. என்றாவது ஒரு நாள் தன்னையும் தன் குழந்தையையும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் மீந்து போன சாதத்தை சாப்பிட்டு வாழ்ந்தாள் சுகுமாரி..

நாட்கள் மெள்ள நகர , தத்தி தத்தி நடக்க ஆரம்பித்தான் நடேசன்.. கஷ்டத்திலும் அவனது பிஞ்சு மொழி அவளை மனம் குளிரச் செய்தது.. அவனது கள்ளச் சிரிப்பில் கரைந்து போனாள்.. இப்படியே சில நாள் செல்ல..

அன்று...

வேலையில் மூழ்கி இருந்த சுகுமாரி கவனிக்காத பொழுது நடேசன் தத்தி தத்தி நடந்து வீட்டின் உள்ளே சென்றான்.. அங்கு சுந்தரவல்லி விளையாட்டாய் அவனைக் கொஞ்ச.... அவ்வளவே...

ஆவேசமாக வெளியில் வந்தாள் கோமதி..

" ஏன்டி.. உனக்கு அவ்வளவு திமிராப் போயிடுத்தா.. உன் குழந்தைய உள்ள அனுப்ச்சு ஒறவு கொண்டாடப் பாக்கறியா.. அப்படியே நீயும் ஒட்டிக்கலாம்னு.. அந்த சனியன் எங்க எல்லாரோட உயிரையும் எடுத்துண்டு போறதுக்கா.. எம்பொண்ணு சின்ன குட்டின்னு அவளோ ஸ்நேகம் பண்ண வெச்சு சாதுச்சிடலாம்னு நெனப்போ.. அம்மா.. இங்க வா... " அவள் கத்திய கத்தில் வீடே அங்கு திரண்டது..

பர்வதம் தன் பங்கிற்கு சத்தமிட.. அதற்கு மேல் பொறுக்காத சுகுமாரி முதன் முறையாக எதிர்த்து பேசினாள்..

" அப்படி என்ன என் குழந்தை பண்ணிடுத்து.. எதோ தெரியாம உள்ள வந்துட்டான்.. நான் கவனிக்கலை.. அவன் உன் அண்ணன் பையன் தானே.. அவனுக்கும் இந்தாத்ல உரிமை உண்டு தானே.. " சுகுமாரி படபடவென பேச வெறித்தாள் கோமதி..

" பாத்தியாம்மா இவ திமிர.. உரிமை உண்டாமே.. அந்த குழந்தைய வெச்சு சொத்துல பங்கு வாங்கிக்கலாம்னு திட்டம் போட்ருக்கா.. எவ்ளோ நெஞ்சழுத்தம் பாரு.." தன் நந்துருணித் தனத்தை ஆரம்பித்தாள் கோமதி.. கண்கள் சிவந்தாள் பர்வதம்..

" புள்ளையே போய்ட்டான்.. அவன் பெத்தது இங்கெதுக்கு.. பங்கு போட நீயாருடி.. பிச்சக்கார குடும்பத்துல பொறந்துட்டு எஞ்சொத்த ஏப்பம் விட பாக்கறியா... மொதல்ல உன் புள்ளைய தூக்கிண்டு இங்கேத்து வெளிய போடி.. பாவம் பாத்து சோத்தப் போட்டா எஞ்சோத்துலயே கைய வெக்கறியா வீணாப் போனவளே... டி கோமதி அவ பெத்தத தூக்கி வெளில வீசுடி.. தூக்கிண்டு போட்டும்.." பர்வதம் கத்த உள்ளே ஓடினாள் கோமதி...

" ஏய்.. நில்லுடி.. எங்குழந்தை மேல கைய வெச்சே.. அப்பறம் உன் கை இருக்காது.... "உக்ரமானாள் சுகுமாரி.

அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து வெலவெலத்துப் போயினர்..

வேகமாக உள்ளே நுழைந்து நடேசனை இடுப்பில் இடுக்கிக் கொண்டு கம்பீரமாக வெளியில் வந்தாள் சுகுமாரி..

"உங்கள மாதிரி கேடுகெட்டவாகிட்ட இருந்தா என் குழந்தையும் கெட்டுப் போயிடும்.. என் ஆத்துக்காரர் வாழ்ந்த இடத்துல இருக்கனும் , சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதுன்னுதான் , பிச்சைகாரி மாதிரி நீங்கள்ளாம் நடத்தினப்பையும் இத்தன நாள் வாயப் பொத்திண்டு இருந்தேன்.. உங்க சொத்துபத்துக்காக இல்லே.. மனசு மாறி என்னையும் குழந்தையையும் ஏத்துப்பேள்னு நம்பினேன்.. எப்போ என் குழந்தையையே தூக்கி எறியத் துணிஞ்சேளே இனிமே உங்க சொந்தமும் வேண்டாம் பந்தமும் வேண்டாம்.. என் குழந்தைய ராஜாமாதிரி வளக்க நேக்கு தெரியும்.. எப்பாடு பட்டாலும் என் குழந்தைய வளத்து காமிப்பேன்.. அந்த வைராக்யம் நேக்கு இருக்கு.. இனிமே உங்க யாரு முகத்லையும் முழிக்க மாட்டேன்.. இது சத்யம்.. உறவு அத்து போயாச்சு.. இனிமே என் குழந்தை வாழ்க்கைல கேடு செய்யனும் நெனச்சேள்
இந்த சுகுமாரி ஆங்காரி ஆயிடுவேன் ஜாக்ரதை.." மூச்சிறைக்கக் கூறிவிட்டு அவர்கள் முகத்தில் விழிக்காமல் நடேசனை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் சுகுமாரி..!

பேயறைந்தது போல் அனைவரும் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்..!

பவித்ராவும் பங்கஜமும் அதிர்ச்சி விலகாது பார்த்துக் கொண்டிருக்க , நடேசன் கண்களில் நீர் மெள்ள வழிந்து ஓடியது.. சுகுமாரியின் கால்களை கட்டிக் கொண்டார்..

" அம்மா.. நீ.. நீ இத்தன கொடுமையைத் தாங்கிண்டு என்ன வளத்தியா.. ஒரு... ஒரு வார்த்தை கூட இது வர சொன்னதில்லையே... " அவர் கலங்க அவரது தலையை மென்மையாக வருடினாள் சுகுமாரி..

" எல்லாம் உனக்காகத்தான் நடேசா.. என் குழந்தைய யார் எது சொன்னாலும் என்னால தாங்க முடியாது.. மறுபடியும் அதே குடும்பத்துல எப்டி என் பேத்திய குடுப்பேன்.. சொல்லு.."

பாட்டி கேட்க.. அத்தனைபேரிடத்திலும் அமைதி மட்டுமே பதிலாக வந்தது..!!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 26

சுகுமாரி கேட்ட கேள்விக்கு பதிலறியாமல் அந்த இடமே அமைதியில் ஆழ்ந்தது..!

" ஹ்ம்ம்ம்.. சொல்லப்டாது... வாயால சொல்ல முடியாத அளவு கஷ்டப்பட்ருக்கேன்.. குழந்தையோட பொறந்தாத்துக்கு வந்தேன்.. இருந்த நிலம்புலம்லாம் வித்து கஷ்ட ஜீவனத்துல இருந்த அப்பாக்கு சுமையா நானும் சேர்ந்துண்டேன்.. பொண்ணு வாழ்க்கை இப்டி ஆயுடுத்தேன்னு புழுங்கிப் புழுங்கி ஒரு நாள் அவரும் போய் சேர்ந்துட்டார்.. அம்மா மட்டுமே துணையா இருந்தா.. எனக்கு படிப்பு அவ்வளவா கிடையாது.. ஆனா, ஒரு வேலை சொன்னா அத சட்டுன்னு புடுச்சுண்டு பண்ணிடுவேன்.. இருக்கறதெல்லாம் வித்து வித்து சாப்டாச்சு.. ஒரு கட்டத்லே ஜீவனம் நடத்தவே காசு இல்லாம போயுடுத்து.. மாத்து துணி இல்லாமே , சாப்பாட்டுக்கே கஷ்டம்... அம்மா வடாம் வத்தல்லாம் நன்னாப் பண்ணுவா.. அவளன்ட கத்துண்டு வடகம் வத்தல் போட்டு பிழைக்கலாம்னு தொடங்கினேன்.. அம்மா முடியாதவ.. என்ன பாத்து பாத்து வேற அவ தினம் அழுது அழுது சுகவீனமாயிட்டா.. அதனால நானே பண்ண ஆரம்பிச்சேன்.. ஆரம்பத்ல யாரும் வாங்கலே.. ஆத்லயே உட்காந்திருந்தா நடக்காதுன்னு உன்னையும் இடுப்புல தூக்கிண்டு வீடு வீடாப்போய் விக்க ஆரம்பிச்சேன்.. ஏதோ ஒன்னு ரெண்டு விக்கும்.. ஆனா நான் மனம் தளரலை.. உன்ன நல்லபடியா வளக்கனும்கற வைராக்யம் என் மனசுல ஊரிண்டே இருந்தது.. உன்ன நன்னா படிக்க வெச்சு , தலை நிமிந்து நீ வாழப் பாக்கனும்கறது தான் என்னோட சிந்தனை முழுக்க இருந்தது.. தனிமனிஷியா இந்த சமூகத்ல வாழறது ரொம்ப கஷ்டமாத்தான் இருந்தது.. பலரோட ஏச்சு பேச்சும் , தப்பான பார்வையும்... ஹூம்.. அத்தனையிலும் என்னையும் காத்துண்டு உன்னையும் நான் நெனச்சபடி நன்னா வளத்தேன்.. நீயும் நன்னா படிச்சு நல்ல உத்யோகத்த தேடின்டே.. ம்ஹ்ம்..... நான் கஷ்டப்பட்டதுக்கு நீ எனக்கு நிம்மதிய குடுத்தே ராஜா.. மனசு குளுந்துதான் போயிருந்தது.. ஆனா... விதி இப்படி வலிய வந்து நம்ம குடும்பத்துக்கு வினை செய்யும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கலே.. " கண்களில் நீர் நிறைய தலை குனிந்தாள் சுகுமாரி..

" அம்மா.. அம்மா.. அப்படி எதுவும் நடாக்காதும்மா.. நான் அது நடக்க விடமாட்டேன்.. அத்துப் போன உறவு அத்துப் போனதாவே இருக்கட்டும்.. பவிக்கு வேறு நல்ல மாப்ளையா பாத்து ஜாம் ஜாம்னு கல்யாணத்த பண்றேன்.. நீ பட்ட கஷ்டத்துக்கு நம்ம குடும்பம் நன்னா வாழனும்மா.. " நா தழுதழுக்கக் கூறினார் நடேசன்..

பவித்ராவிடம் திரும்பி.. " பாட்டி சொன்னதெல்லாம் கேட்டேல்யோ.. அந்த குடும்பம் நமக்கு வேண்டாம்.. இனியும் அவன்தான் வேணும்னு பிடிவாதம் பிடிக்க மாட்டேன்னு நம்பறேன்.. உன்ன பொண்ணு பாக்க வரேன்னு சொன்னவாள்ட பேசி சம்மதிக்க வைக்கறேன்.. அவனையே முடுச்சுடலாம்... இதுல எந்த மாத்தமும் இல்லே.." கூறிவிட்டு நகர்ந்தார்..

பவித்ராவிற்கு தலையில் இடியை இறக்கியது போல் இருந்தது.. எதுவும் பேச இயலாமல் தடுமாறினாள்.. ஒரு புறம் ரிஷி , மறுபுறம் பாட்டி.. மனம் நிலையில்லாமல் அலை பாய்ந்தது.. பாட்டியின் மீது பரிதாபம் ஏற்பட்ட போதும் ரிஷியை மறப்பது ஆகாத செயலாய் இருந்தது.. மனப் போராட்டத்தில் இடிந்து போனாள்.. எல்லாம் முடிந்தது போல் ஓர் உணர்வு.. தானும் ஜடம்போல வாழவேண்டும் என்பதை நினைக்க நினைக்க கண்ணீர் அருவிபோல பொங்கியது.. சத்தமாக அழ முடியாமல் அறைக்குள் நுழைந்து குமுறினாள்.. பங்கஜத்திற்கு யாரை சமாதானப் படுத்துவது எனத் தெரியாமல் தவித்தாள்..

பொழுதெல்லாம் எதையோ பறிகொடுத்தது போல் அமர்ந்திருந்தாள் பவித்ரா.. நினைக்க நினைக்க உள்ளுக்குள் ரணம் ஏறிக்கொண்டே போனது.. இனி இந்த வாழ்க்கை வேண்டுமா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.. யாரிடமாவது தன் ஆற்றாமையை கொட்டி அழுது தீர்க்க வேண்டும் போல் இருந்தது பவிக்கு.. நெஞ்செல்லாம் அடைத்த வலியில் மூச்சு முட்டிப் போனது.. இரண்டு நாட்கள் இப்படியே கடக்க , காலேஜிற்கு செல்லவும் பிடிக்காமல் வீட்டில் இருக்கவும் பிடிக்காமல் மொட்டை மாடியே கதியென கிடந்தாள்.. தன் நிலை உணர்ந்து பாட்டி மனம் இறங்குவாளா என தவித்தாள்.. பாட்டி தன் முடிவில் தீர்க்கமாய் இருந்தாள். மறுபடியும் பாட்டியிடம் எப்படி பேசுவது என வழி தெரியவில்லை.. உள்ளுக்குள் புகைந்து புகைந்து மருகினாள்..!

பங்கஜத்திற்கு தன் மகளின் நிலை கண்டு மனம் கலங்கியது.. ஆறுதலான வார்த்தைகளைக் கூறி அவ்வப்பொழுது தேற்ற முயன்றாள்..

" பவி.. ஏன்டி இப்டி வாழ்க்கைய இழந்தவ மாதிரி இருக்கே.. நாம நினைக்கறது எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்க முடியாதும்மா.. விதி ரொம்ப வலியது.. அது அதன் போக்குல தான் நம்மள இழுத்துண்டு போகும்.. எங்கயோ இருந்தவன உன்ன பாக்க வெச்சு மனச சலனப்படுத்தி , அவனே நம்ம உறவுக்காரனாக்கி இப்போ தள்ளி நிக்க வைக்கறது.. இத்தனைக்கும் அவன் உன்ன கல்யாணம் பண்ணிக்க முறை உள்ளவன்தான்.. என்ன பண்றது.. இத்தன கொடுமைய பாட்டிக்கு பண்ணிட்டாளே அவா.. அந்த கஷ்டம் நீயும் படப்படாதுன்னு தானே பாட்டி பதறரா.."

"
பாட்டி சொல்றதுலயும் அர்த்தம் இருக்கத்தானே செய்யறது.. உன் பாட்டிக்கே இத்தன கொடுமை பண்ணவா அவ பேத்தின்னு தெரிஞ்சா உன்ன என்ன பண்ணுவா.. சொல்லு.. தெய்வாதீனமா அந்த மாமி வாயாலயே உண்மைய வர வெச்சு , சரியான சமயத்ல உன்ன காப்பாத்திட்டார் பகவான்.. எல்லாரும் ஒத்துண்டப்பறம் எதுக்காக அவாள பத்தி பாட்டி கேக்கனும்... அந்த மாமி சொல்லனும்.. பெருமாள் இருக்கார்.. புருஞ்சுக்கோ பவி.. இன்னிக்கு அவன் நமக்கு இல்லையேன்னு வருத்தமாத் தான் இருக்கும்.. ஆனா , அவன கல்யாணம் பண்ணின்டு நீ நரக வேதனைய அனுபவிச்சா... அப்ப தோனும்.. பாட்டி சொன்னது சரின்னு.. அதனால மனச போட்டு அலட்டிக்காம எல்லாம் கனவா நெனச்சு மறந்துடு.. உனக்குன்னு நல்ல வாழ்க்கை அமையும்.. கலங்காதடி பட்டு.. பெத்த வயிறு துடிக்கறது.. நீ சாப்படாம இருக்கறத பாத்தா நேக்கு சோறு எறங்க மாட்டேங்கறது.. தயவு செஞ்சு எல்லாத்தையும் மறந்துட்டு புது மனிஷியா வாடி கண்ணு.. அப்பத்தான் என் மனசு ஆறும்... "

" மறந்துடு மறந்துடுங்கறயேம்மா... எப்டிமா முடியும் , நெனச்ச உடனே தூக்கி எறியறதுக்கு.. இத்தன போராட்டுத்துக்கு நடுவுலயும் அவருக்கு நான் தான் எனக்கு அவர்தான்னு தீர்க்கமா ரெண்டு பேரும் இருந்ததாலதானேம்மா இத்தன தூரம் அவர் வந்து பாத்து , பேசி... ம்ஹ்ம்ம்... மார்கழி மாசம் எப்போ அவர பாத்தேனோ.. அந்த கோதை மாதிரி நானும் அவர என் மனசுல ஏத்துண்ட்டேன்மா.. இனி வேற கல்யாணம் வேற ஒருத்தன்னு என்னால.. என்னால.. மனச மாத்திக்க முடியாதும்மா... ஆண்டாளப் போல நானும் அவர நெனச்சுன்டே கன்னியாவே காலத்த கழுச்சடறேன்.. அந்த கிருஷ்ணனுக்கு கருணை இருந்தா எங்கள சேத்து வைக்கட்டும்.. இல்லைனா இப்டியே இருந்துட்டு செத்துப் போயிடறேன்.. வேற யாரோடையும் வாழ என்னால முடியாது..." பவி தீர்க்கமாய் சொல்ல பங்கஜம் கலக்கம் கொண்டாள்..

" இப்டி அடம்பிடிக்கறியே பவி.. அப்பா இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டார்.. யார்கிட்ட போய் நான் மண்டியிடறது.. பகவானே.. எம்பொண்ணு வாழ்க்கைல இப்டி விளையாடறியே.. நீதான் அவளுக்கு நல்லவழி காட்டனும்.." கவலை கொண்டபடி பூஜை அறைக்கு சென்றாள் பங்கஜம்..

சிறிது நேரத்தில்..

போன் அடித்தது.. சுரத்தில்லாமல் பார்த்தாள் பவித்ரா. ரிஷி அழைத்துக் கொண்டிருந்தான்.. மனது முழுக்க சங்கடத்தில் பிசைய அவனிடம் என்ன சொல்வதெனத் தெரியாமல் பரிதவித்தாள் பவித்ரா.. இரண்டு மூன்று முறை அவன் அழைத்தும் எடுத்துப் பேச மனம் வரவில்லை.. சிறிது நேரம் விட்டு அவன் மறுபடியும் அழைக்க... நடுங்கும் கைகளுடன் எடுத்து காதில் வைத்தாள்..

" ஹலோ... ஹலோ.. பவி... எ... என்ன ஆச்சு.. ஏன் போன எடுக்கல.."

அமைதியாக இருந்தாள்..

" பவி.... லைன்ல இருக்கியா.. ஹலோ.." கொஞ்சம் பதட்டமானான்..

" ம்ம்ம்.... " மெள்ள முனகினாள்..

" ஹப்பா.. என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்... ஆர் யூ ஓகே.. "

" ம்ம்ம்... " அழுகை முட்டிக் கொண்டு வந்தது..

" அப்பறம்.. எதாவது விஷயம் தெரிஞ்சதா.. பாட்டிக்கிட்ட பேசினியா.. மூனு நாளா எனக்கு போனே பண்ணலயே.."

எதைச் சொல்வது.. எப்படி சொல்வது எனத் தடுமாறினாள்.. " பே.. பேசிட்டேன் ரிஷி.. "

" அப்படியா.. என்ன சொன்னாங்க.. அம்மாவ அவங்களுக்கு எப்டி தெரியுமாம்.. என்ன விஷயத்துனால அவங்க அப்டி பேசினாங்க.. பழய பகையா.. எதாவது அம்மா தப்பு பண்ணிட்டாங்களா.. என்னன்னு சொன்னா சரி பண்ண பாக்கலாம்.. " அவன் கேள்விகளை அடுக்க..

" பாட்டி....... அ... அம்மாவோடு மாமி..."

" வாட்... மாமின்னா.. மாமாவோட ஒய்ஃபா.. அப்போ.. அ.. அம்மாக்கு தெரிஞ்சிருக்கனுமே.. எ.. எப்டி.. " அவன் குழம்பிப் போக..

பவி முழுக்கதையும் போனில் எப்படி விளக்குவது எனத் தடுமாறினாள்.. " ரிஷி.. பாட்டி... பாட்டி... ரொம்ப ஹர்ட் ஆகிருக்காங்க.. அது வெரி சாட் ஸ்டோரி.. எ.. எல்லாத்தையும்.. போன்ல பேச முடியாது.. ஆனா... ஒன்னு மட்டும் நிச்சயம்.. ந.. நம்ப கல்யாணம் ந... நடக்காது.. " கனத்த குரலுடன் பவி கூற.. அதிர்ந்தான் ரிஷி..

" எ... என்ன சொல்ற பவி.. புரியறமாதிரி சொ.. சொல்லு.. வேற வழியே இல்லியா.. அப்டி என்ன நடந்தது.."

" எதுவும் பேசற மனநிலைல இப்ப நான் இல்ல ரிஷி.. உ.. உங்களுக்கு நான் இல்லன்னு.. தெரிஞ்சுபோச்சு.." பவி உடைய..

" பவி... ப்ளீஸ்.. எதா இருந்தாலும் நான் சரி பண்றேன்.. தயவுசெஞ்சு மனச தளர விடாத... ப்ளீஸ் பவி.. உன்ன பாக்க முடியுமா.. நீ... நீ வரமுடியுமா..."

" ஹ்ம்ம்.... "

" நாளைக்கு ஈவினிங் அம்மா கோயிலுக்கு போனும்னு சொன்னாங்க.. அங்க வரியா.. அவங்களுக்கும் விஷயம் தெரிஞ்சா இதுக்கு ஒரு ரூட்காஸ் கண்டுபிடிக்கலாம்.. வந்துடறியா.."

" ம்ம்ம்... சரி.." நம்பிக்கை இன்றி தலை அசைத்தாள்..

மறுநாள் மாலை...

கொஞ்சம் படபடப்பாக இருந்தாள் பவி.. ரிஷியை பார்க்க செல்வது அப்பாவுக்கோ பாட்டிக்கோ தெரிந்தால் அவ்வளவுதான்.. பெரிய பூகம்பமே வெடித்துவிடும்.. கோயிலில் வேறு யாரும் பார்த்துவிட்டால்.. பயம் அடிவயிற்றை கவ்வியது.

நேரம் வேறு ஆகிக் கொண்டே போனது.. கடிகாரத்தை பார்த்து பார்த்து தவித்தாள்.. ஏனோ கைகாலெல்லாம் நடுங்கியது.. மனதில் ஓர் சஞ்சலம் பரவ அப்படியே அமர்ந்திருந்தாள்.. அவனுடன் சேர வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் உழன்றாலும் உடலின் சக்தியெல்லாம் வடிந்து போக எழத் திராணியின்றி உட்காந்திருந்தாள்.. சுந்தரவல்லி தன்னைக் கண்டு என்ன சொல்வார்களோ.. அன்று பாட்டி விரட்டியது போல் தன்னை கண் கொண்டு பார்க்காமல் விரட்டி விடுவாளோ என்ற சிந்தனை அடிவயிற்றை பிசைந்தது.. போவதா வேண்டாமா என்ற குழப்பம் மேலிட தயக்கத்துடன் இருந்தாள்.. மணி ஆறாக போன் ஒலித்தது.. ரிஷிதான் அழைத்திருந்தான்..

நடப்பது நடக்கட்டும் என எழுந்து தயாரானாள்.. பங்கஜம் உள்ளே வந்தாள்.. " என்ன பவி.. எங்க கிளம்பிட்டே.. "

" ம்ம்ம்.. கோ.. கோயிலுக்குமா.. மனசு சரியில்லே.. அதான் கோயிலுக்கு போயிட்டு வரலாம்னு.."

பங்கஜம் அவள் முகத்தை ஆராய்ந்தாள்.. பவியின் கண்களில் தெரிந்த மெல்லிய பயம் அவளுக்கு புரிந்தது... சிறிது நேரம் அவளை கூர்ந்து பார்த்தவள்.. " தனியாப் போறியா.. நானும் வரட்டுமா பவி.."

பவி மெள்ள அதிர்ந்தாள்.. " இ.. இல்லம்மா.. நா.. நானே போய்ட்டு வந்துடறேன்.."

" ம்ம்ம்.. பாத்து போய்ட்டு வா பவி.. பெருமாள்ட்ட உன் கவலையெல்லாம் கொட்டிட்டு வா.. நல்லது நடக்கட்டும்.. அப்பா வர்ரதுக்குள்ள போய்ட்டு வந்துடு.. சரியா.. " அர்த்தத்துடன் அவளுக்கு விடை கொடுத்தாள் பங்கஜம்.

கிளம்பி கோயிலை அடைந்தாள் பவித்ரா.. என்ன பேசுவது.. சுந்தரவல்லியை எப்படி எதிர் கொள்வது என கலக்கத்துடன் கோயிலுக்குள் நுழைந்தாள்.. சுற்றும் முற்றும் அவர்களைத் தேடியபடியே நடந்தாள்.. போனில் ரிஷியை அழைத்து பேசலாமா என நினைக்க , சந்நதியின் உள்ளிருந்து ரிஷியும் சுந்தரவல்லியும் வெளிப்பட்டனர்.. முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் குழந்தையின் மனநிலையோடு தயங்கித் தயங்கி முன்னே சென்றாள் பவி.. பின்னால் திரும்பி சந்நதியை சேவித்துவிட்டு திரும்பிய சுந்தரவல்லியின் முன் போய் நின்றாள்.. எதேச்சியாக திரும்பிய சுந்தரவல்லி ,பவித்ராவைக் கண்டு கொஞ்சம் அதிர்ந்து போனாள்.. மின்னிய கண்கள் கண நேரத்தில் கோபமாக மாறியது.. தலையை திருப்பிக் கொண்டு நடந்தாள்.. அருகில் நின்றிருந்த ரிஷி , அவளை அழைத்தான்.. " அ.. அம்மா.. பவி வந்திருக்கா.. உ.. உன்ன பாக்க.."

" என்ன யாரும் பாக்க வேண்டாம்.. இங்கிதமே இல்லாம வெளில துரத்தினவாட்ட எனக்கென்ன பேச்சு.. எனக்கு மானம் மரியாதை இருக்கு.. ரிஷி.. வா போலாம்.. " கூறிவிட்டு நகர்ந்தாள்.. ரிஷி பவியிடம் பேசு என செய்கை காட்ட வேகமாக சுந்தரவல்லியின் முன் போய் நின்றாள்..

" மாமி.. ப்ளீஸ்.. ஒரு ரெண்டு நிமிஷம் நான் சொல்றத கேக்க முடியுமா.. "

" உன்கிட்ட எனக்கென்ன பேச்சு.. வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்.. இவன் நீதான் வேணும்னு அழுச்சாட்யம் பண்ணதால உங்காத்துக்கு வந்தேன்.. என்கிட்ட பணியறாமாதிரி பேசி என்ன சம்மதிக்க வெச்சு , வேணுமின்னே கடைசில அசிங்க படுத்திட்டேள்.. எனக்கென்ன தலையெழுத்தா.. கண்டவாள்ட்ட பேச்சு வாங்கறதுக்கு.. இது வரைக்கும் யாரும் என்கிட்ட இப்படி தரக்குறைவா நடந்துண்டதில்ல.. நானும் அப்படி சீப்பட்டவ இல்லே.. அப்படி என்ன கொலைகுத்தம் பண்ணிட்டேன்னு உங்க பாட்டி கோவமா பேசினா.. பெரியவான்னு மரியாதை குடுத்து பேசினது என்தப்பு.. ஹ்ம்.. உங்க பாட்டி உங்க பூர்வீகம் யாரு எவர்னு கூட நேக்கு தெரியாது.. என்கிட்ட எதுக்கு கோவப்படனும்.. இனி யார் சொன்னாலும் ஏன் உன் பாட்டியே என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டாலும் இந்த கல்யாணம் நடக்காது.. என்ன, குடும்பத்தோட நாடகமாடறேளா.. என்ன பாத்தா எப்டி தெரியறது.. எதோ பழகின பாவத்துக்கு உன் குணத்துக்குத்தான் அன்னிக்கு பேசாம வெளில போய்ட்டேன்.. இல்லைனா இந்த சுந்தரவல்லிய பத்தி தெரிஞ்சிருக்கும்.. இனிமே உன்கிட்ட பேச எதுவுமில்லை.. நீ கெளம்பிடு.. என் பையன் மனச கலச்சதெல்லாம் போதும்.. இனி அவன தொந்தரவு பண்ணே நான் சும்மா இருக்க மாட்டேன்.. " பொறிந்து விட்டு நடக்க ஆரம்பித்தாள் சுந்தரவல்லி..

ரிஷிக்கே சுந்தரவல்லி பேசியது அதிர்ச்சியை தந்தது.. பவி அதற்குமேல் பேச தடுமாற ஓடிச் சென்று அம்மாவை நிப்பாட்டினான்.. " அம்மா.. ப்ளீஸ் கொஞ்சம் நில்லு.. உன் கோபம் நியாயம் தான்.. எனக்கும் அன்னிக்கு கோபம் வந்தது.. இவ பாட்டி கத்தினதுக்கு இவ எப்டி பொறுப்பாக முடியும்.. அவளுக்கே அது அதிர்ச்சியாத்தான் இருந்தது.. அவ நிலைலேந்து பாரும்மா.. என்ன நடந்ததுன்னு தெரியாம நீ சத்தம் போடறது நன்னால்ல மா... அவ சொல்ல வர்ரத கொஞ்சம் கேளு.. ப்ளீஸ்.. " ரிஷி சமாதனமாய் பேச , பவியை முறைத்தாள் சுந்தரவல்லி..

" அப்படி என்ன பெரிய சிதம்பர ரகசியத்த சொல்லப் போறா.. சொல்லச் சொல்லு.. உனக்காக இதையும் கேட்டுக்கறேன்.. இப்போ நீ தானே பெரிய மனுஷன்.. ஹ்ம்.. சொல்லவந்தத சொல்லிட்டு போடிம்மா.. அப்பறம் இதுக்கும் என்ன போட்டு இம்சிப்பான்."

" எ... எங்க பாட்டி சுகுமாரி.. உ.. உங்க மாமாவோட ஆத்துக்காரி.. உங்க மாமி.."

" என்னது... மாமியா.. இது என்ன கட்டுகதை..."

" பாட்டி தான் சொன்னா.."

" ஹூம்.. எனக்கு நாலு மாமாக்கள்.. நாலு மாமிகளையும் நேக்கு தெரியும்.. எனக்கு தெரியாம எங்கேந்து மொளச்சா இந்த புது மாமி... யாரையோ நெனச்சுண்டு உங்க பாட்டி புத்தி சுவாதீனம் இல்லாம உளரிருக்கா.. அதையும் நம்பின்டு வந்துட்டே.. ஹூம்.. மாமியாம்.." சுந்தரவல்லியின் முகத்தில் ஏளனம் தாண்டவமாடியது..

மூச்சை ஒரு முறை இழுத்து வெளிவிட்ட பவித்ரா மெதுவாக கேட்டாள். " உங்களுக்கு குருமூர்த்தின்னு ஒரு மாமா இருந்தாரா.. "

சுந்தரவல்லியின் முகம் சட்டென மாறியது.. குழப்ப ரேகைகள் முகமெங்கும் பரவியது..

" அ.. அவர்... என் மூத்த தாய் மாமா.. அவர்.. அவருக்கென்ன.. அவர் நான் சின்ன பொண்ணா இருக்கும் போதே போய்ட்டாரே.. "

" அவரோட ஆத்துக்காரிதான் என் பாட்டி... பேர் சுகுமாரி.."

" என்னது.. " அதுவரை படபடப்பாக பேசிக் கொண்டிருந்த சுந்தரவல்லியின் கண்கள் சுறுங்க சிந்தனை பின்னோக்கி நகர்ந்தது.. யோசனையுடன் ஓரமாய் அமர்ந்தாள்.. சிறிது நேரம் அமைதியில் கடந்தது.

" எனக்கு நாலஞ்சு வயசிருக்கும் போதே அவர் போய்ட்டாரே.. அவரோட ஆத்துக்காரி பண்ண கொடுமையாலதான் அவர் அல்பாயிசுல செத்து போய்ட்டார்னு எங்கம்மா சொல்லிருக்கா.. அதுக்கபறம் அந்த மாமி சொத்த குடுக்க சொல்லி சண்டை போட்டுண்டு ஆத்தவிட்டே போய்ட்டான்னு சொல்லக் கேள்வி.. அதுக்கப்பறம் அவாளப் பத்தி எங்காத்ல பேசினது இல்லே.. எனக்கு அ.. அவாள பாத்த ஞாபகம் இல்லயே... "

" நீங்க அவளா பாத்திருக்கேள்.. எங்க அப்பாவோட விளையாடி இருக்கேள்.. சின்ன வயசுல.." பவி கூற சுந்தரவல்லி புரியாமல் கண் விரித்தாள்..

" என்ன.. நேக்கு.. நேக்கு தெரியுமா.. என்ன சொல்றே.."

" உங்காத்து வேலைக்காரிய ஞாபகம் இருக்கா.. அவா குழந்தை.. மாட்டுத் தொழுவத்துல தங்கி வேல பாத்தாளே.." பவி பூடகமாய் கேட்க சுந்தரவல்லியின் புருவம் நெறிந்தது.. சிறு வயது நினைவுகளை திரும்ப நினைவுக்கு கொண்டு வர கண்களை குறுக்கினாள்..

சிறிது நேரம் நகர குறுகிய கண்கள் விரிந்து ஒளிர்ந்தது.. " ஆ... ஆமா.. கொள்ளைல ஒரு மாமி பத்துபாத்ரம் தேய்க்க துணி துவைக்கன்னு இருந்தா.. அவா.. அவாளுக்கு என்ன.." குழப்பத்துடன் சுந்தரி பார்க்க..

" அவங்கதான் உங்க மூத்த மாமி.. குருமூர்த்தி மாமாவோட ஆத்துக்காரி.. என் பாட்டி சுகுமாரி.. " பவி கூற ஒரு நிமிடம் அதிர்ந்து அவளை பார்த்தாள் சுந்தரவல்லி..

" எ.. என்ன சொல்றே... " வார்த்தைகள் தடுமாற..

" ம்ம்ம்.. ஆமா.... அவங்க.. "அருகில் அமர்ந்து பவித்ரா பாட்டியின் கசப்பான வாழ்க்கைக் கதையை கூற ஆரம்பித்தாள்..

பவி ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல சுந்தரவல்லியின் முகம் அதிர்ச்சியில் உறைந்து போனது.. ரிஷியும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனான்..!

பவி பொறுமையாக நிதானமாக பாட்டிக்கு நடந்த கொடுமைகளை ஒவ்வொன்றாக காலக் குறிப்புடன் விளக்க , சுந்தரவல்லிக்கு முகம் வியர்வை வழியக் கன்னிப்போனது.. அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர இயலாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்..

" இப்ப சொல்லுங்க.. பாட்டி கோவப்பட்டது தப்பா.. அவா நிலைல இருந்தா யாரா இருந்தாலும் அப்படி தானே யோசிப்பா..." பவி கேட்க பெருங்குழப்பத்துடன் பதிலளிக்காமல் அமர்ந்திருந்தாள் சுந்தரவல்லி..

நேரம் கடந்து கொண்டே இருந்தது..

" நான் இப்போ சொன்னதெல்லாம் உண்மை.. என் பாட்டி பொய் சொல்ல மாட்டா.. நானும் தான்.. என் பாட்டி பட்ட ரணத்துக்கு மருந்தே இல்ல.. ஆறாத வடு அது... எந்த பொண்ணுக்கும் நடக்கக் கூடாதத என் பாட்டி அனு அனுவா அனுபவிச்சிருக்கா.. வீட்ட விட்டு வெளில வந்தப்பறம் அவ பட்ட கஷ்டத்த கேக்க என்னாலயே முடியலே.. அதையெல்லாம் தாங்கிண்டு வைராக்யத்தோட என் அப்பாவ வளத்து ஆளாக்கி இருக்கா.... ஹ்ம்ம்.. எனக்கும் அப்படி ஆயிடுமோ பயந்து , மறுபடியும் இன்னொரு ரணம் வேண்டாம்னுதான் அன்னிக்கு நீங்க யாருன்னு தெரிஞ்ச உடனே உங்கள வெளில போகச் சொல்லிட்டா.. " பவி நிறுத்த அங்கு ஓர் வெறுமை பரவியது..

" இனிமே நான் சொல்றதுக்கு எதுவுமே இல்லே.. உயிருக்கு உயிரா நேசிக்கற ரிஷி ஒரு பக்கம் , பாசப் போராட்டத்துல இருக்கற பாட்டி ஒரு பக்கம்.. ரெண்டுக்கும் நடுவுல நான் தத்தளுச்சுண்டு இருக்கேன்.. வேற கல்யாணம் பிக்ஸ் பண்ண அப்பாவும் தீர்மானமா இருக்கார்.. என் நிலைமை யாருக்குமே புரியல.. ம்ஹ்ம்.. எங்க கல்யாணம் நடக்கறதும் நடக்காததும் , பாட்டியோட ரணத்த ஆத்தறதும் அவன் கைலதான் இருக்கு.." சந்நதி நோக்கி கை காமித்தாள்.

"பாட்டி எதுக்கு கோவப்பட்டான்னு தெரியாம நீங்க சங்கடப்படக் கூடாதுன்னுதான் இத்தனையும் சொன்னேன்.. ஹ்ம்ம்.. என் வாழ்க்கை விதிப்படி நடக்கட்டும்.. கெளம்பறேன்.." பாரம் இறங்கிய மனமுடன் பவி கூறிவிட்டுக் கிளம்ப..

சுந்தரவல்லியின் மனம் பாரத்தை ஏற்றிக் கொண்டு படபடத்தது..!

அடுத்த முடிவை நோக்கி..!!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 

Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
மார்கழித் தங்கள்.!

அத்யாயம் - 27

பவித்ரா கூறிவிட்டு செல்ல அவளை பார்த்தபடியே அப்படியே அமர்ந்திருந்தாள் சுந்தரவல்லி.. மனமெல்லாம் பாரம் கூடி இருந்தது.. அவள் கூறியது , உண்மையில்லாப் பொய்யென ஒதுக்கவும் இயலவில்லை.. பொய்யில்லா உண்மையென்று ஏற்கவும் இயலவில்லை.. தன் குடும்பத்தில் நடந்த விஷயங்கள் பல தன்னிடம் மறைக்கப்பட்டதா , தானும் அப்பாவத்திற்கு ஆளானவளா என நினைக்க நினைக்க மனம் சஞ்சலம் கொண்டது..! பின்னோக்கி ஓடிய சிந்தனையை இழுத்துப்பிடிக்க இயலாமல் கண்கள் நிலைத்திருக்க அமர்ந்திருந்தாள்..!

" அம்மா.. அம்மா... " ரிஷி உலுக்க திடுக்கிட்டு நினைவு திரும்பினாள்..

"டைம் ஆச்சுமா.. நடை சாத்தப் போறா.. வா போலாம்.." அவன் அழைக்க மெள்ள எழுந்து சந்நதியின் முன் நின்று சேவித்தாள்.. மனம் ஏனோ தவறு செய்தது போல் சஞ்சலம் கொண்டது.. சிறிது நேரம் அப்படியே நின்று விட்டு மெள்ள நடக்க ஆரம்பித்தாள்..

ரிஷி எதுவும் பேசாமல் அவளுடன் வெளியே வந்தான்.. கோயிலில் இருந்து வெளி வந்த பின்னும் அவளால் வெளிவர இயலவில்லை.. மனம் இறுக்கம் கொண்டது..!

இருவரும் வீட்டினை அடைந்தனர்.. எந்த சிந்தனையும் இன்றி நேராக சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள். விழிகள் ஓரிடத்திலேயே நிலை கொண்டது.. பாட்டியின் கதை அவளுள் ஓர் பாதிப்பை உண்டு செய்ததை ரிஷி உணர்ந்திருந்தான்.. அவளை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து நகர்ந்தான்..

எவ்வளவு நேரத்துளிகள் அங்கு அமர்ந்திருக்கிறோம் எனத் தெரியாமல் எண்ண ஓட்டத்தில் லயித்திருந்த சுந்தரவல்லியின் சிந்தனையை கலைத்தார் சந்திரசேகர்..!

" சுந்து... சுந்து... என்ன ஆச்சு.. இப்டி உட்காந்து இருக்கே.."

" ஆ... ஒ.. ஒன்னுமில்லண்ணா.. ஒ.. ஒன்னுமில்ல.." மெள்ள தலை அசைத்தாள்.

அவளருகில் அமர்ந்தவர் தனிந்த குரலில் கேட்டார்.. " இல்லியே... எப்பவும் கலகலன்னு சுத்திண்டு இருப்பே.. இப்டி அமைதியா உட்காந்து நான் பாத்ததில்லையே.. ம்ம்ம்.. என்ன ஆச்சு.."

பெருமூச்சு எழுந்தது அவளுள்..

" அந்த பாட்டி உன்ன திட்டி அனுப்பிச்சத நெனச்சு இன்னும் வருத்தப்பட்டுண்டு இருக்கியா.. எதோ தராதரம் தெரியாம பேசிட்டா.. வயசானவா தானே.. விடு.. அந்த பொண்ணுக்கு நம்ம பையன கல்யாணம் பண்ணிக்க குடுப்பினை இல்லை.. அவ்வளவுதான்.. ஹா.." சிரிப்புடன் அவர் கூற.. பதிலேதும் கூறாமல் அமர்ந்திருந்தாள்.

அதற்குமேல் அவளை தொந்தரவு செய்ய விருப்பமின்றி தள்ளிச் சென்றார்..

தன் அம்மாவின் குணத்தையும் பாட்டி தாத்தாவின் குணத்தையும் பார்த்து பல நேரங்களில் அஞ்சி இருக்கிறாள். அந்த குடும்பத்தில் தப்பிதமாக தான் பிறந்து விட்டேனோ என பல சமயங்களில் நினைத்ததுண்டு.. ஆனால் காலப் போக்கில் எல்லாம் பழகிப் போக தானும் வீண் ஜம்பத்துடன் உலவி வந்ததை நினைவு கூர்ந்தாள்.. பவி கூறிய விஷயத்தால் தன் வாழ்வில் நடந்த அத்தனை கசப்பான நிகழ்வுகளும் நினைவுகளில் வந்து வந்து போனது.. சந்தோஷமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் இடியாக விழுந்த அத்தனை சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி அவள் நினைவில் நிழலாடியது.. திருமணம் முடிந்து அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாய் அதன்தாக்கத்திலிருந்து வெளி வந்ததும் , அதனையெல்லாம் மறந்து வேறு பாதையில் பயணித்து வந்த போதும் , பவியின் சொற்கள் பழசையெல்லாம் கிளரிவிட்டு சென்றதாய் உணர்ந்தாள்..!

சமையலில் கவனமில்லாமல் , எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தாள்.. என்னவென்று சொல்லத் தெரியாத சங்கடம் நெஞ்சை பிசைந்தது..

ஒரு வாரம் இப்படியே கடக்க , அவளை கவனித்துக் கொண்டிருந்த சந்திரசேகர் மறுநாள் அவளை அமர வைத்து பேச ஆரம்பித்தார்..

" சுந்து.. உட்காரு.. உன்கிட்ட பேசனும்.."

என்ன கேட்கப் போகிறாரோ என்ற மனக் கலக்கம் வந்து வந்து போனது.. மெதுவாக அமர்ந்தாள்..

" ஹ்ம்ம்ம்... உனக்கு என்ன ஆச்சு.. ஒரு வாரமா பாக்கறேன் எதோ பறிகுடுத்தவ மாதிரி உலவிண்டு இருக்கியே... என்ன விஷயம்.. "

அப்பொழுதும் தன்குடும்பத்தில் நடந்த கொடுமைகளைச் சொல்லத் தயங்கி செயற்கைப் புன்னகை உதிர்த்தாள்.. " ஒ.. ஒன்னுமில்லையே.. நான்.. நான் நன்னாத்தான் இருக்கேன்.. ஒன்னுமில்லண்ணா.."

" சுந்து.. உனக்கு நடிக்க வராது.. இருபத்தி ஆறு வருஷமா உன்கூட வாழ்ந்துண்டு இருக்கேன்.. உன்னோட முகத்த வெச்சே கண்டுபுடுச்சுடுவேன்.. இதுவரைக்கும் ரெண்டு பேரும் எதையும் மறைச்சது கிடையாது.. அப்படித்தான் வாழ்ந்துண்டு இருக்கோம்.. ஆத்துக்காரர்னா வெறும் அதிகாரம் பண்றவன் மட்டும் இல்ல.. அனுசரனையா நடத்துக்கறவனும் தான்.. பொண்களோட கட்டுப்பாட்டுக்கு விதி போடறவன் தான் ஆனா , இரக்கம் இல்லாதவன் இல்ல நான்.. நீ சங்கடத்துல இருக்கும் போது அத பகிர்ந்துக்கதான் விரும்புவேன்.. உன்ன கைப்பிடுச்சது எந்த சூழ்நிலைலன்னு நோக்கே தெரியும் இல்லையா.. அன்னிக்கு சொன்னது தான்.. உன் சுக துக்கத்ல நேக்கும் பங்குண்டு.. உன் ஆத்துக்காரர்கற உரிமையோட கேட்கறேன்.. என்ன ஆச்சு.. சொல்லு.. சால்வ் பண்ண முடியுமான்னு பாக்கறேன்.."

தன் கல்யாணம் நடந்தவிதம் சட்டென கண்களின் முன் வந்து நிழலாட தலையை கவிழ்த்துக் கொண்டாள்.. சிறிது நேரம் அமைதியில் கடக்க..

மெள்ள தொண்டையை செறுமிக் கொண்டு பேசினாள்.. " போ.. போன வெள்ளிக் கிழமை.. அந்த பொண்ணு பவித்ராவ கோயில்ல பாத்தேன்.. என்ன பாக்கத்தான் வந்துருப்பா போல.. ரிஷி சொல்லி வந்தாளான்னு தெரியலை.. அவ.. அவ சொன்ன விஷயம் என்ன உருக்கிடுத்து.. அது.. அதுலேந்து என்னால வெளில வர முடியலை.. ஏதோ.. கில்ட்டி ஃபீலிங்.."

" என்ன சொன்னா அவ... " சந்திரசேகர் தீவிரமாகப் பார்த்தார்..

" அவ பாட்டி... சுகுமாரி.. எ.. என்னோட மூத்த தாய்மாமாவோட ஒய்ஃபாம்.."

" எ.. என்னது.. உனக்கு நாலு மாமா தானே.. அவாதான் பிரிஞ்சு போயி.. இவர் எந்த மாமா.." முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது..

கண்களில் கலக்கம் பரவ திக்கி திக்கி அத்தனையும் சொன்னாள் சுகுமாரி.. பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் அவளை கண்ணிமைக்காமல் பார்த்தார்.. அவள் எல்லாம் சொல்லி முடிக்க..

" இத அத்தனையும் நீ நம்பறயா சுந்து.. அந்த பொண்ணு பொய் சொல்லிருந்தா..."

சுந்தரவல்லி இல்லை என தீர்க்கமாக தலை அசைத்தாள்.. " அவ சொன்ன பல விஷயங்கள் என் மனசுக்கு உண்மைன்னு தான் படறது.. என் சின்ன வயசுல நடந்ததெல்லாம் அவாளுக்கு எப்படி தெரியும்.. அந்த பொண்ணு அவள ஏத்துக்கனும்கறதுக்காக இதலாம் எப்டி சொல்லுவா. அதுவுமில்லாம எங்காத்ல நடந்த விஷயங்கள் தான் உங்களுக்கு தெரியுமே.. எந்த சூழல்ல நம்ம கல்யாணம் நடந்ததுன்னு.. அம்மா பாட்டியும் அப்படித்தான்.. அதுதான் நேக்கு மனக் கலக்கமா இருக்கு.."

பெரும் அமைதியில் ஆழ்ந்தார்..

" இப்போ.. நான் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியலே.. ஒரு பொண்ணுக்கு மனசறிஞ்சு துரோகம் பண்ணிருக்கா.. அ.. அதுக்கு.. எனக்கு ஒன்னும் புரியல.."

அவளையே கூர்ந்து பார்த்தார்.. " அப்படிதான்னு நீ நம்பினா. தீர்வு உன் கைலதான் இருக்கு.." அவர் அர்த்தத்துடன் கூற கனமான மனமுடன் மெள்ள தலை ஆட்டினாள் சுந்தரவல்லி..!

மறுநாள் மாலை...

சுகுமாரி பாட்டி ஹாலில் அமர்ந்திருக்க , வாசலில் காரின் ஹார்ன் ஒலி கேட்டது..

யாரென பார்க்க ஸ்ரீதரை அனுப்பினாள் சுகுமாரி.. ஓடிச் சென்ற பார்த்தவன் அதே வேகத்தில் திரும்ப வந்தான்.. " பாட்டி அந்த அங்கிளும் ஆன்டியும் திரும்ப வந்துருக்கா.. கூட யாரோ ஒரு தாத்தா.."

" யாருடா அது.. " சுகுமாரி குழப்பமடைய..

" அதான் பாட்டி அன்னிக்கு நீ சண்டை போட்டியே.. அவா தான்.." அவன் கூறிக் கொண்டிருக்க சுந்தரவல்லி ரிஷி , சந்திர சேகருடன் உள்ளே நுழைந்தாள்..

பாட்டியின் முகம் கோபத்தில் சட்டென சிவந்தது..

" உங்கள யாரு வரச் சொன்னா.. எதுக்கு திரும்ப திரும்ப வந்து இம்சை படுத்தறே.. என்ன நிம்மதியா இருக்க விடமாட்டேளா... கெளம்புங்கோ.." பாட்டி சத்தமிட உள்ளுக்குள் இருந்த பங்கஜமும் பவியும் ஹாலுக்கு ஓடி வந்தனர்.. மூவறையும் கண்ட பவித்ரா திக்குமுக்காடிப் போனாள்.. எதற்காக வந்திருப்பார்கள் என உள்ளூற பயம் ஓடியது.. பங்கஜமும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அதே சமயத்தில் வேலைக்கு சென்ற நடேசனும் குழப்பத்துடன் உள்ளே நுழைந்தார்.. இவர்களைக் கண்டு பதட்டமடைந்தார்..

" எ.. எதுக்கு வந்தேள்.. ஆ.. பிரச்சனை பண்ணாம கிளம்புங்கோ.. சொல்றேன்லயோ.. கிளம்புங்கோ.. " படபடத்தார்..

" சார்.. நான் சொல்ல வர்ரத கொஞ்சம் கேளுங்கோ.. நாங்க பிரச்சனை பண்ண வரலை.. சுந்தரவல்லி பாட்டிட்ட மன்...." சந்திரசேகர் கூற வருவதை முழுமையாகக் கேட்காமல் நடேசன் குரலை உயர்த்தினார்..

" நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.. கேட்டதெல்லாம் போதும்.. இப்போ போப்போறேளா இல்லையா.. உங்க உறவே வேண்டாம்.. பேசாம போங்கோ.."

" இ.. இல்ல.. நீங்க தப்பா புரிஞ்.."

" நான் சரியாத்தான் புருஞ்சுண்டு இருக்கேன்.. குடும்பத்தோட வந்து பயமுறுத்தறேளா.. நான் நெனச்சா...."

" ஹையோ... நான் சொல்ல வர்ரத..."

மூவரும் பேச வந்ததை பேசமுடியாமல் தடுமாற...

" அப்பா......." அதிர்ந்த குரல் அனைவரையும் அமர்த்தியது.. பவித்ரா மூச்சிறைக்க நடுவில் வந்து நின்றாள்..

" கொஞ்சம் அமைதியா இருக்கியா.. அவ்ளோதூரம் பாட்டி துரத்தி அடுச்சப்பயும் திரும்ப வந்துருக்கான்னா அதுக்கு நல்ல காரணமே இருக்காதா.. சொல்லப் போனா அவா திரும்பி வரனும்கற அவஸ்யம் அவாளுக்கு இல்ல.. போடின்னு என்ன தூக்கி எறிச்சுட்டு போக எவ்வளவு நேரம் பிடிச்சிருக்கும்.. பாட்டி கதைய முழுக்க அவாளுக்கு சொல்லிட்டேன்.. அவா என்ன சொல்ல வரான்னு கேட்டுட்டு அப்பறம் பேசு... ப்ளீஸ்.." பவி தவிப்புடன் கூற அவளை வெறித்துவிட்டு அமர்ந்தார் நடேசன்.. சுகுமாரி பாட்டி படபடப்பு மேலிட பவியையும் சுந்தரவல்லியையும் பார்த்தாள்..!

" நீங்க உட்காருங்கோ.. அம்மா அவாளுக்கு தண்ணு கொண்டுவா.." பவி பங்கஜத்திடம் கூற நடேசனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே சென்றாள் பங்கஜம்.. நீரினைக் கொண்டு வந்து கொடுத்தாள்..

கொஞ்சம் ஆசுவாசமாக... சுந்தரவல்லி பேச ஆரம்பித்தாள்.


கண்களில் கலக்கம் இருந்தது.. " மா.. மாமி.. எ.. என்ன மன்னுச்சுடுங்கோ.."

கோபம் குறையாமல் சுகுமாரி பார்த்துக் கொண்டிருக்க..

" நீ.. நீங்க தான் என் மாமின்னு நேக்கு தெரியாது.. உங்களுக்கு நடந்த கொடுமை எதுவும் எனக்கு தெரியாது. நீங்க சொன்னத பவி சொன்னப்பறம் தான் உங்களுக்கு நடந்த கொடுமையெல்லாம் நேக்கு தெரிஞ்சது.. நீங்க எங்காத்த விட்டு போகும் போது எனக்கு வயசு நாலு அல்லது அஞ்சு தான் இருக்கும்.. அப்போ நடந்த விஷயத்த புருஞ்சுக்கற வயசு எனக்கு இல்ல.. எ.. எங்காத்ல ஆத்துவேலை பாக்கற ஒரு பொண்ணாத்தான் ஞாபகம் இருக்கு.. எங்க பாட்டி அம்மாவ பத்தி அவா குணம் பத்தி நேக்கு தெரியும்.. அந்த குடும்பத்துல பொறந்தவ தான் நானு.. ஆ... ஆனா நான் அப்படி இல்ல மாமி.. நீங்க நினைக்கற மாதிரி நான் இல்ல.. நீங்க த்ரேஷம் கொண்டதுக்கு நூத்துக்கு நூறு சதவிகிதம் நியாயம் இருக்கு.. அத.. அத தப்புன்னு சொல்ல எ.. எனக்கு எந்த தைர்யமும் கிடையாது.. அ.. அன்னைக்கு நீங்க கோபப் பட்ட போது எனக்கு உங்க மேல வெறுப்பு இருந்தது.. அவமானத்ல கோபம் வந்தது.. ஆ.. ஆனா , உங்க கோபம் நியாயம்னு புரிஞ்சப்போ எ.. எனக்கு என்மேலேயே ஒரு வெறுப்பு வந்தது.. அ.. அப்படிப்பட்ட குடும்பத்ல பொண்ணா பொறந்துட்டோமேன்னு.. பவி சொன்னத நான் உண்மையா நம்பறேன்.. எந்த வித உள்நோக்கத்தோடயும் அவ பேசல.. அவ எல்லாம் சொல்லி முடுச்சப்பக் கூட இது எஙக கல்யாணத்துக்காக சொல்லலை உங்க மனசு சங்கடத்துலயும் குழப்பத்லையும் இருக்கப்படாதுன்னு தான் சொன்னேன்னு சொன்னா.. அ.. அது அவளோட பெருந்தன்மையத் தான் காண்பிச்சது.. " சுந்தரவல்லி கனமான மனதுடன் பேச பாட்டியின் முகம் மெல்ல மாறியது.. கோபத்திலிருந்து மெதுவாய் சாந்தமானாள்...

" இப்போ கூட எங்குடும்பம் தப்பானது இ்ல்ல அவா அப்படி பண்ணிருக்க மாட்டான்னு உங்களண்ட வாதட வரல.. அந்த அளவுக்கு கல்நெஞ்சக் காரியா நான் இல்ல.. ஹ்ம்... தப்பி பொறந்துட்டேன்.. என் அம்மா பாட்டி குணம்லாம் எனக்கு வரலை... நல்ல வேலை.. உங்கள நோகடுச்சதுக்குத்தான் பகவான் எங்க குடும்பத்த மொத்தமா பிரிச்சானோ என்னவோ.. என் பதினஞ்சு வயசு வரைக்கும் மாமா மாமிக்கள் அம்மா அப்பா தாத்தா பாட்டின்னு எல்லா சொந்தத்தோடையும் ராஜ உபசாரத்தோடதான் வாழ்ந்தேன்.. ஆத்துக்கு ஒத்த பொண்ணுன்னு தங்கத் தட்ல தாங்கித் தடுக்கிடுவா.. பெரிய பரம்பரை பணம் பவிசுன்னு கர்வத்தோட தான் இருந்தேன்.. எப்போ ஒவ்வொரு மாமாக்களுக்கும் கல்யாணம் ஆச்சோ.. வினை தானா தேடி வர ஆரம்பிச்சது.. தன்னவிட உசத்தியான குடும்பத்ல பொண்ண எடுத்துத்தான் பாட்டி பாத்து பாத்து கல்யாணம் பண்ணி வெச்சா.. வந்த மாமிக்கள் ஒவ்வொருத்தரும் தன் ஆம்படையான கைக்குள்ள போட்டுண்ட்டா.. ஹ்ம்.. ஆத்ல சண்டை சச்சரவுகள் ஆரம்பிச்சது.. அப்போதான் அம்மா பாட்டியோட குணம் தெரிய ஆரம்பிச்சது.. வாய்க்கு வந்தபடி ஏச்சும் பேச்சும்... ஒருத்தர ஒருத்தர் தூத்திப் பேசிண்டு வம்பளந்துண்டு த்ரேஷம் வளத்துண்டு.. வீடு வீடா இல்லாம போய்டுத்து..

ஹ்ம்... அத்தனையிலும் எந்த பாதிப்பும் இல்லாம இருந்தவர்னா எங்கப்பா ஒருத்தர் தான்.. அவரால தான் நான் இப்பவும் கொஞ்சம் நல்லவளா இருக்கேன்.. தலைகனத்தோட திரிஞ்சப்பலாம் என்ன அடக்கி வெச்சவர் அவர்தான்.. அவர் சொன்ன புத்திமதிகள் எனக்கு அப்பறம் அப்பறமாத்தான் உரைக்க ஆரம்பிச்சது.. அம்மாவோட இருக்கறச்ச வெட்டி ஜம்பம் மட்டும் தான் தலைதூக்கி இருந்தது.. தாத்தாவும் இவா இம்சை பொறுக்காம ஒருநாள் கண்ண மூடிக்க, அதுக்கப்பறம் தான் நிஜமான வாழ்க்கை என்னனு நேக்கு புரிய ஆரம்பிச்சது.. பணத்துக்கு முன்னாடி சொந்த பந்தமெல்லாம் சும்மான்னு புரிஞ்சது.. மாமிகள் பேச்சக் கேட்டுண்டு மாமாக்கள் சொத்தெல்லாம் பிரிச்சுண்டு போய்ட்டா.. பொண்களுக்குத்தான் அப்போலாம் சொத்துல உரிமை கிடையாதே.. எங்க பாட்டியையும் நிர்கதியா விட்டுட்டு எங்களுக்கும் சல்லி பைசா தராம எல்லாத்தையும் கொண்டு போய்ட்டா.. உங்களுக்கு பண்ண பாவத்த பாட்டியும் அம்மாவும் அப்பறம் தான் அனுபவிச்சா.." மூச்சுவிடாமல் சுந்தரவல்லி கூறி வர.. சுகுமாரி பாட்டி கண்களில் லேசாக ஈரம் பூத்தது..

" அப்பாக்கு புரோகிதம் தான்.. ஒரு ஓட்டு வீட்லதான் தங்கி இருந்தோம்.. எனக்கும் கல்யாண வயசு ஆயிடுத்து.. எங்க பாட்டி பத்தி தெரிஞ்சவா யாரும் பையனத் தரலை.. கொஞ்ச நாள்ல அப்பாவும் போய் சேந்துட்டார்.. என்ன செய்யறதுன்னே தெரியாத நிலை.. எதோ என்ன பீஏ வரைக்கும் எங்கப்பா படிக்க வெச்சிருந்தாலும் வேலைக்கு போற அளவுக்கு அப்போ தைர்யம் இல்லே.. அந்த சமயத்துல தான் இவரோட தாத்தா எதேச்சியா எங்களப் பார்த்தார்.. அம்மாவோட தாத்தா அவருக்கு பண்ண உதவிய மறக்காம பிரதி உபகாரமா இவருக்கு என்ன கல்யாணம் பண்ணி வெச்சா... வாழ்நாள் முழுக்க உன் கண்கலங்காம பாத்துப்பேன்னு சத்ய பிரமானம் பண்ணின்டு தான் எனக்கு மூனு முடுச்சு போட்டார்.. இன்னி வரைக்கும் காப்பாத்திண்டு இருக்கார்.. என் பழைய கதையெல்லாம் இவருக்கு
தெரியும்.. எங்க அம்மா போற வரைக்கும் அவாள கவனுச்சுண்டது இவர்தான். என்ன வேலைக்கு அனுப்சதில்லே.. பிற்போக்கான குடும்பமா இருந்தாலும் என்ன என்னிக்கும் தவிக்கவிட்டதில்லே.." சுந்தரவல்லி நிறுத்த பாட்டி கொஞ்சம் இளகி இருந்தாள்..

" உ... உங்களுக்கு பண்ண பாவத்துக்கு பிராயசித்தம் தேடித் தான் இங்க வந்தேன்.. உண்மையிலே எம் மனசு தவிச்சுடுத்து மாமி.. எங்காத்துக்காரா பண்ணின கொடுமைக்கெல்லாம் நான் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுக்கறேன்.. எங்கள ம.. மன்னிச்சு ஏத்துக்கோங்கோ மாமி.. " கண்ணீருடன் பாட்டியின் கால்களில் விழுந்து சுந்தரவல்லி நமஸ்கரிக்க , சுகுமாரிக்கு உடலெல்லாம் புல்லரித்துப் போனது..

" எ... எழுந்திரு.. எழுந்திரும்மா..." அவளது தோள்களைத் தாங்கி தூக்கினாள் பாட்டி..

" இ.. இது.. பொய்யான நடிப்பு இல்ல மாமி.. மனசார தான் உங்களண்ட மன்னிப்பு கேக்கறேன்.. மன்னிச்சேன்னு சொல்லுங்கோ.. அப்பத்தான் என் மனசு ஆறும்.."

" ஐயோ.. மன்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசாதம்மா.. நீ.. நீ.. இவ்ளோ நல்லவன்னு நே.. நேக்கு தெரியாம போயிடுத்து.. நீ.. நீ தான் என்ன மன்னிக்கனும்.. உ.. உன்ன புரிஞ்சுக்காம.. நான்.. நான்தான்.. " பாட்டி முழுவதுமாய் நெகிழ்ந்து வார்த்தை வராமல் சுந்தரவல்லியின் தலையை வருடினாள்..

" எங்காத்து சொந்தம்னு யாரும் இல்லையேன்னு உள்ளூர சங்கடப்படாத நாளே இல்லை.. சொந்தம்னு பேருக்கு இருந்தவாள்லாம் விலகிப் போய்ட்டா.. அ.. அந்த பெருமாள் தான்.. பவித்ராவ எனக்கு காமிச்சு எ.. எனக்கு மறுபடியும் சொந்தத்த தேடித் தந்துருக்கார்.. " கையெடுத்து கும்பிட்டாள் சுந்தரவல்லி.

" பிராயச்சித்தமா உங்க பேத்திய என் மாட்டு பொண்ணாக்கிக்க ஆசப் படறேன்.. இவா மூலம் பிரிஞ்ச நம்ம குடும்பம் சேரட்டும்.. அதுக்கு நீங்க தான் மனசு வெக்கனும் மாமி.. பவித்ரா எங்காத்துக்கு மாட்டுப் பொண்ணா வரனும்னு மனப்பூர்வமா விரும்பறேன்.. ரிஷியும் அவள மனசார விரும்பறான்.. உங்க பொண்ண என் பொண்ணு மாதிரி பாத்துப்பேன்.. அவள கண்கலங்காம பாத்துக்கறது என்னோட கடமை.. இது சத்யம்.. நான் தேடிக்கற பிராயசித்தம்.."

பாட்டியின் உத்தரவிற்காய் சுந்தரவல்லியும் ரிஷியும் காத்திருக்க..

" என் பேத்தியோட சந்தோஷத்துக்கு அவளோட நியாயமான சுதந்திரத்துக்கு எந்த பங்கமும் உண்டாக்காத ஒரு பையன் அமையனும்னு தான் பெருமாள பிராத்தனை பண்றேன்.. என் பேத்திய காலம் முழுக்க பாத்துப்பியா... " சுகுமாரி கேட்க அருகில் வந்த ரிஷி அவளது கையின் மேல் தன் கையை வைத்து அழுத்தினான்..

" பொண்கள்னா ஆண்களுக்கு ஒருபடி கீழ தான்.. ஆணோட துணையில்லாம அவாளால தனுச்சு எதுவும் பண்ண முடியாதுங்கற எண்ணத்தோடதான் இது நாள் வரைக்கும் இருந்தேன் பாட்டி.. அதையெல்லாம் நீங்க ஒடச்சு போட்டுட்டேள். நீங்க ஒரு பாடம்.. ஒரு பொண்ணு நெனச்சா ஆண்களுக்கு மேலே இருக்க முடியும்.. அகம்பாவத்தால அடக்காம அவன அன்புல அரவணச்சு போறாங்கறத புருஞ்சுண்டேன்.. பவியோட சுதந்திரத்துக்கு நான் எப்பவும் தடையா இருக்க மாட்டேன் பாட்டி.." ரிஷி மனப்பூர்வமாய் கூறினான்..

மனம் நிம்மதியாக சுகுமாரி பாட்டி நடேசனை பார்த்தாள்.. அத்தனையும் பார்த்து உணர்ச்சி வசப்பட்டிருந்த அவர் புன்னகையுடன் தலை அசைக்க பாட்டி இதழ் விரித்தாள்..

" இந்த சம்பந்தம் நேக்கு சம்மதம்..." பாட்டி சொல்ல..

பவி வேகமாக ஓடி வந்து பாட்டியை கட்டிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.. பேச வார்த்தை இன்றி இருவரும் தங்கள் கோபத்தை உடைத்தெரிந்து கட்டிக் கொண்டனர்.. பாட்டியின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது..

" தே... தேங்க்ஸ் பாட்டி.. உ.. உன்கூட பே.. பேசாம இருந்ததுக்கு மன்னிச்சுக்கோ.."

" ஹ்ம்.... உன் சந்தோஷம் தான் என் சந்தோஷம்.. நீ நன்னா இருக்கனும் கண்ணு... அந்த நிம்மதியோட நான் போய் சேந்தா போதும்.." அவளை அணைத்து தலையை வருடிக் கொடுத்தாள் சுகுமாரி..

அத்தனை பேர் முகத்திலும் சந்தோஷம் கூத்தாட.. பங்கஜம் வேகமாக உள்ளே சென்று வெற்றிலை பாக்கு தட்டை கொண்டு வந்து நடேசன் கையில் கொடுத்தாள்..

" ரொம்ப வருஷம் கழுச்சு சொந்தமெல்லாம் சேந்திருக்கேள்... இதே சந்தோஷத்தோட இப்பவே தாம்பூலம் மாத்திண்டுடலாம்.. எங்க பொண்ண உங்க பையனுக்கு தர எங்களுக்கு முழு சம்மதம்.. இந்தாங்கோ." தட்டை இருவருமாய் சேர்ந்து சுந்தரவல்லி தம்பதியரிடம் கொடுக்க..

" எங்களுக்கும் என் பையன உங்க பொண்ணுக்கு கொடுக்க பரிபூரண சம்மதம்.. " தட்டை மாற்றிக் கொண்டனர்..

சுகுமாரி பாட்டி முழுமையான மகிழ்ச்சியில் கனிந்து போயிருந்தாள்.. ஆனந்த கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது..

" ரிஷி ,ரெண்டு பேருமாச் சேந்து பாட்டி கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கங்கோ.. " சந்திரசேகர் சொல்ல.. பவியும் ரிஷியும் இருவரும் இணைந்து பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்..

மனமெல்லாம் சந்தோஷம் பூக்க பவித்ராவின் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டான் ரிஷி..!

மகிழ்ச்சியுடன் நாட்கள் நகர பவியும் தன் படிப்பை வெற்றிகரமாக முடித்தாள்.

பெரியவர்கள் பார்த்து குறித்த ஓர் சுபயோக சுப தினத்தில் சுகுமாரி பாட்டியின் தலைமையில், அனைவரின் நல் ஆசியோடு பவித்ராவின் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டினான் ரிஷிகேசன்..

கோதையை ஆட்கொண்ட அந்த அரங்கனின் சந்நதியின் முன்...!
அளவில்லா அவன் பேரருளுடன்..!!


சுபம்.

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
Status
Not open for further replies.
Top Bottom