Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

Status
Not open for further replies.
மார்கழித் திங்கள்..!

அத்யாயம் - 15

பூத்துக் குலுங்கும் பூங்கொத்தாய் பூரிப்புடன் வீட்டிற்கு வந்த பவித்ரா நேராக பாட்டியின் அறைக்குள் நுழைந்து அவளருகில் அமர்ந்து கொண்டாள்..!

" என்ன கண்ணு போய்ட்டு வந்துட்டியா..."

" ஆமா பாட்டி... ப்ரோக்ராம் ரொம்ப நல்லாருந்தது.. எனக்கு... ரொம்ப பிடிச்சுருக்கு... " கண்களில் அவன்..!

" அப்படியா.. ஹ்ம்ம்.. அந்த காலத்லலாம் இப்டி வெளிவாசல்லாம் போய் பாட்டு டான்ஸெல்லாம் பாத்ததில்லே.. ஆமும் அடிப்படியும் தான் கதி.. அப்படியே எப்டி எப்டியோ மாறி காலம் போயிடுத்து.. ஹ்ம்ம்.. நானும் நன்னா பாடுவேன்.. ம்ம்ம்.." கண்கள் மின்ன தேய்ந்து போன மெல்லிய குரலில் பக்தி பாடல் ஒன்றை பாடியபடி சிரித்தாள் பாட்டி.. முகத்தில் சங்கோஜம் வெட்கமும் பூத்தது.. பவித்ராவும் சிரித்தாள்.. ஏனோ சந்தோஷம் முழுமையாகப் பரவி இருந்தது அவளுள்.. பவித்ராவின் சந்தோஷம் பாட்டியின் சந்தோஷமாகியது..!

" சரியா வரலை.. குரல் போயுடுத்து.. ஹாஹா.. "

" ரொம்ப நன்னா பாடறே பாட்டி... அழகாத்தான் இருக்கு உன் குரல்.."

பாட்டியின் முகத்தில் பெருமிதம் தவழ்ந்தது.. " சரி கண்ணு.. நாழி ஆயுடுத்து.. பேச ஆரம்பிச்சா நான் பாட்டுக்கு பழங்கதைய பேசின்டு இருப்பேன்.. மனசு பூரா பழைய நெனப்பு தான் இருக்கு.. ம்ஹ்ம்.. போய் சாப்ட்டு தூங்கு பவி.. போ.." கூறிக்கொண்டே தனக்குள் ஏதோ பேசியபடி படுத்துக் கொண்டாள் சுகுமாரி பாட்டி..

தன் அறைக்குள் வந்து உடைமாற்றி தரையில் படுத்துக் கொண்டாள் பவி.. சாப்பிட ஏனோ பிடிக்கவில்லை.. பசி இல்லை.. மனம் நிறைந்து பொங்க வயிறும் நிறைவானது..! இன்று அவனை பார்த்த நொடியில் ஏற்பட்ட மாற்றம் மறுபடியும் மறுபடியும் மனம் அசைபோட்டு அவனை வேறு வேறு கோணங்களில் காட்டிக் கொண்டிருந்தது.. கண்மூடினாலும் மாலையில் நடந்த நிகழ்வுகள் ஒளிநாடாவைப் போல் உருண்டு ஓடிக் கொண்டே இருந்தது. எப்டி இதை எடுத்துக் கொள்வதென அவளுக்கு புரியவில்லை.. எதனால் அவனை இத்தனை பிடித்துப் போனது.. தெரியவில்லை.. அவனது பார்வை இன்று புதிதாய் இருந்தது.. அதில் ஏதோதோ அர்த்தங்கள் பொதிந்தது போல்.. பருவம் திடீரென விழித்தெழுந்தது போல் ஓர் உணர்ச்சி பீரிடல்..! ஏனோ ஏகாந்த தவிப்பாய் இருந்தது அவளுக்கு.. எதனால் இத்தனையும் என அவளால் அனுமானிக்க இயவில்லை.. ஆனால் ஏதோ ஒன்றை மனம் ஏற்றுக் கொண்டு நம்பிக்கை வித்தை விதைத்த வண்ணம் இருந்தது.. அது சரியா தவறா என முறையிட புத்தி குறுக்காக வரவில்லை.. ஆராய்ந்து பார்க்க விரும்பவில்லை.. அந்த நினைவுகள் மட்டுமே சுவையாக சுவைத்து சுவைத்து பார்த்தது.. புதிய ருசி... அறியாத ருசி.. உண்மையா பொய்யா,சாதகமா பாதகமா.. எதையும் ஆராயவில்லை.. எண்ணக் கோர்வைகள் அவனை அழாக காட்சிப் படுத்தியபடி..! அந்த சிந்தனையில் மூழ்கியவாறே உறங்கிப் போனாள் பவித்ரா..

மறுநாள் காலை..

உள்ளங்கைகளில் கண்விழிப்பவள் அன்று விட்டுப் போன நினைவுகளுடன் விழித்துக் கொண்டாள்.. ஆழ்நிலை உறக்கத்தில் மேலோடிய நினைவுகள் விழிப்புடன் அவளை பற்றிக் கொண்டன. புது உற்சாகம் பிறக்க காலை பணிகளை துள்ளலுடன் ஆரம்பித்தாள்..

நமக்குள் ஊற்றெடுக்கும் உற்சாகம் தொற்றுநோயாய் சுற்றி உள்ளவர்களையும் பற்றிக் கொள்ளும் என்பது போல பவியின் புத்துணர்ச்சி அனைவரது முகத்திலும் காரணமறியா சந்தோஷத்தை பரவச் செய்திருந்தது..!

கல்லூரியிலும் எந்தவித சங்கடமோ ஊடலோ இன்றி இலகுவாக நகர்ந்தது போன்ற உணர்வு..! கல்லூரி முடிந்து வீட்டிற்குள் நுழைந்தாள்.. கையிலிருந்த அலைபேசி அழைத்தது..!!

எடுத்துப் பார்த்தவள் கண்கள் ஒரு கணம் விரிந்து நிலைத்தது.. !

அலைபேசியில் ரிஷி காத்துக் கொண்டிருந்தான்.. மூளைக்குள் ஏதோ மின்சாரம் பாய்ச்சியது போல் இருந்தது.. சுற்றுமுற்றும் பார்வையை ஓட விட்டாள்.. போனை எடுப்பதா வேண்டாமா என.. சுதாரித்து வாயிலின் அருகில் இருந்த மாடிபடியில் வேகமாக ஏறினாள்.. போன் ஒலித்துக் கொண்டே இருந்தது.. அவள் மொட்டை மாடியை சரியாக அடைய கட் ஆனது போன்.. சோர்ந்து போய் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. திரும்ப அவனை அழைக்க ஒருவித தயக்கம் வந்தது.. " போன் பண்ணலாமா.. வேண்டாமா.." யோசித்தபடி இருக்க திரும்பவும் அழைத்தான்..

கண்கள் மின்ன போனை எடுத்தாள். " ஹ.. ஹலோ... "

" ஹாய் பவித்ரா.. ரிஷி பேசறேன்.."

" ம்ம்ம்.... சொல்லுங்க... "

" எ.. எப்டி இருக்கீங்க... "

" ம்ம்ம்..... "

..............

சில நிமிடங்கள் மெளன பரிபாஷை நடந்தது.

" அப்பறம்..... " இவளே கேட்டாள்.

" நேத்து ப்ரோக்ராம் நல்லா இருந்ததா.."

" ஹாஹா.. நல்லாருந்தது.. "

" புடுச்சுருக்கா.."

" ஆ.... என்னது.... " திடுமென மின்னல் வெட்டியது அவளுக்குள்.

" இ.. இல்ல.. ப்ரோக்ராம் புடுச்சுருக்கான்னு கேட்டேன்.. " சிரித்தான்.

" ஹாஹா.. ம்ம்ம்... "

" அ.. அப்பறம்.. உ.. உங்க... உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. "

" ம்ம்.. சொல்லுங்க.."

" அது... போன்ல பேச முடியாது.. அது... கொஞ்சம் காபி ஷாப் வரீங்களா.."

" கா... காபி ஷாப்பா.... எ.. என்ன விஷயம்..."

" ............."

கொஞ்சம் படபடவென இருந்தது அவளுக்கு..

" கொஞ்சம் உன்கிட்ட பேசனும்.. அதான்... நேத்திலேந்து மைன்ட் டிஸ்டர்ப்டா இருக்கு... அதான்... உன்னோட பேசி...."

" என்கிட்ட பேசி.... ம்ம்ம்..."

" கொஞ்சம் வரியா.. ப்ளீஸ்... "

தன்னைப் போல் அவனது தவிப்பும் வார்த்தைகளில் தெரிவதை உணர்ந்தாள்..

" ம்ம் சரி.. எப்போ வரனும்.. "

" ஆறரை மணிக்கு வர முடியுமா.."

" ஹ்ம்.... சரி.... "

மெல்லிய சிரிப்புடன் போனை அணைத்தான்.

அவனை திரும்ப பார்க்க செல்வது பவிக்கு உள்ளுக்குள் சந்தோஷத்தை அளித்தது.. அவன் அழைத்த காரணம் என்னவென்று அறிந்தும் அறியாமல் இருந்தது அவளுக்கு..

வேகமாக கீழே இறங்கி வந்தவள் யாரிடமும் பேசாமல் அறைக்குள் தயாராக ஆயத்தமானாள்..

" பவி... வந்துட்டியா.. ஏன் இவ்ளோ நேரமாச்சு.. க்ளாஸ் லேட் ஆயுடுத்தா.." பங்கஜம் கேட்டுக் கொண்டே உள்ளறைக்குள் வந்தாள்..

பவி பரபரப்புடன் இருக்க.. " என்னடி இத்தன பரபரப்பு.. எந்த ட்ரெயின பிடிக்க போறே.. எங்க கிளம்பறே.."

பவிக்கு பக்கென்று இருந்தது.. அவனை பார்க்க போகிறேன் என சொல்ல முடியுமா... " இ... இல்லமா.. இங்க.. கோயிலுக்கு தான்.. ப்ரெண்ட்.... வரேன்னு சொல்லிருக்கா.. அ.. அதான்.."

" அதுக்கெதுக்குடி இவ்ளோ டென்ஷனா இருக்கே... காபி கலந்துண்டு வரேன்.. சாப்டு மெதுவாப் போ... கால்ல வெந்நீர ஊத்திண்டாப்ல பறக்கறியே.."

பவிக்கு தன்னை நினைத்து கோபம் வந்தது... " சே... எதுக்கு இத்தன பரபரப்பு.. சந்தேகப்பட மாட்டாளா.. நானே காட்டிக்குடுத்திடுவேன் போலவே.." கொஞ்சம் அமைதியாகி சிரித்தாள்..

" அதெல்லாம் ஒன்னுமில்லமா.. அவ ஆறரைக்கு வந்துடறேன்னா.. அதான்.. நீ காபி கொண்டு வா.."

" ஹ்ம்.. இங்க இருக்கற கோயிலுக்கு போக எவ்ளோ நாழி ஆயிடப் போறது.. மணி ஆறுதானே ஆறது.. "

" ஆ... ஆமால்ல.. சரி.. நான் மொகத்த அலம்பிண்டு வரேன்.. காபி கொண்டுவா.." கூறுவிட்டு கொள்ளை பக்கம் சென்றாள்.. என்னதான் அமைதியாக இருக்க நினைத்தாலும் ஒருவித படபடப்பு தெரிந்தது..

அம்மா கொடுத்த காபியை மண்டிக் கொண்டு வேகமாக தயாரானாள்.. பசும் மஞ்சள் நிறப் புடவையில் தேவதை போல நின்றாள்.. தலையில் அம்மா மல்லிகை பூ வைத்துவிட இன்னும் அழகு கூடியது..

" என் கண்ணே பட்டும்.. இந்த புடவையில அழகா இருக்கே பவி.." நெட்டி முறித்தாள் பங்கஜம்.

மொபைலை பர்சுக்குள் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

ஹாலில் ரெடியாக ஸ்ரீதர் நின்று கொண்டிருந்தான்.. " பவி.. நானும் வரேன் கோயிலுக்கு.. எனக்கு போர் அடிக்குது.."

பக்கென்று இருந்தது.." ஏய்.. நீ ல்லாம் வரப்டாது.. போய் படிடா.. உயிரெடுத்துண்டு.."

சங்கூத ஆரம்பித்தான்..

" சே... அம்மா.... இங்க பாரு இவன.."

" அவனையும் கூட்டிண்டு போயேன்டி... கோயிலுக்கு தானே.. குழந்தை அவனே வரேங்கறான்.. ஒரு எட்டு கூண்டின்டு போய்ட்டு வா பவி.." பங்கஜமும் சேர்ந்து கொள்ள குலைநடுங்கியது பவித்ராவிற்கு..

" ஐயோ.... அ... அம்மா.. வெளையாடறியா.. அங்க என் ப்ரென்ட்ஸெல்லாம் வர்ரா... கோயிலுக்கு போயிட்டு அப்டியே கடைக்கு போறோம்.. வர நாழி ஆயிடும்.. இந்த கோட்டான கூட்டிண்டு போனா அத வாங்கு இத வாங்குன்னு உயிர எடுப்பான்.. என் ப்ரென்ட்ஸ் முன்னாடி என்ன அவமான படச் சொல்றியா... டேய்.. ஒழுங்க இங்கயே இருந்தா பைவ் ஸ்டார் பெரிய சாக்லேட் வாங்கிண்டு வருவேன்.. இல்லைனா ஒன்னும் கெடையாது.. சும்மாதான் வரனும்.. என்ன.." டீல் செய்ய ஆரம்பித்தாள் பவி..

அழுது புரண்டவன் படக்கென எழுந்து அமர்ந்தான்.. காதுவரை வாய் பிளந்து பற்களை காட்டியது.. " சாக்லேட்டா... அப்டினா ரெண்டு வேனும்.. அப்பதான் இருப்பேன்.. இல்லைனா வருவேன்.." அவன் டீமான்டை ஆரம்பித்தான்..

" சே... சனி... வாங்கித் தரேன்.. வாய மூடின்டு போய் பாடத்தபடி.. இன்னிக்கு ஹோம் ஒர்க் முடுச்சாத்தான் ரெண்டு தருவேன்... புருஞ்சதா.. "

கண் கண்ணாடி கீழே விழும் அளவிற்கு தலையை வேகமாக ஆட்டி இளித்தான்..

நிம்மதி பெருமூச்சு வந்தது பவிக்கு.. கைக்கடிகாரத்தை பார்த்துகொண்டே கிளம்பினாள்.. மணி ஆறேகால் எனக் காட்டியது..

வேக நடையுடன் புறப்பட்டாள்..

மணி ஆறு நாற்பத்தைந்து..

உள்ளுக்குள் ஒருவித பயம் பரவி இருந்தது.. அம்மாவிடம் பொய் சொன்னது மனதை என்னவோ செய்தது.. தான் ஏதோ தவறு செய்வதாக உள்ளுக்குள் ஓர் போராட்டமாக இருந்தது.. அதையும் மீறி அவனை காணவேண்டும் என்ற ஆவல் அவளை தூண்டி நடையை துரிதப்படுத்தியது..

ஒரு வித தயக்கமும் அச்சமும் சேர அந்த காபி ஷாப்பிற்குள் நுழைந்தாள்.. குப்பென வியர்த்தது.. கால் நடக்க இயலாமல் தடுமாறியது.. கண்கள் நாலாபுறமும் சுழல தெரிந்தவர்கள் யாராவது இருப்பார்களா என்ற எச்சரிக்கை உணர்வு மூச்சடைக்க செய்தது.. வேறொரு ஆடவனை காண இது வரை தனியாக சென்றது இல்லை.. கல்லூரி நண்பர்களுடன் கூட இப்படி எங்கும் சென்றதில்லை..

கையிலிருந்த கைக்குட்டையால் முகத்தை துடைத்தபடி உள்ளே
நகர்ந்து சென்றாள்.

அவன் இருக்கிறானா எனக் கண்கள் தேடியது.. கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.. கடைசியாக இருந்த இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான்.. இவளைப் பார்த்து எழுந்து கை அசைத்தான்..

ஏதோ ஒரு நிம்மதி பரவ புன்னகையுடன் அவனிடம் சென்று நின்றாள்...

" ஹாய்.... உட்காருங்க... லேட் ஆயிருச்சா... நான்.. ஆறுமணிக்கே வந்துட்டேன்.." கண்கள் மின்னியது.. அருகில் இருந்த இருக்கையை காட்டினான்.

அவனுடன் அருகில் அமர தயக்கப்பட்டு எதிர் இருக்கையில் தயங்கி தயங்கி நுனியில் அமர்ந்து கொண்டாள். அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் முகத்தில் வியர்வை முத்துக்கள் உருண்டோடியது..

அவன் முகத்திலும் ஒரு படபடப்பு இழையோடியது..

இருவரும் பேசாமல் சுற்றும் முற்றும் பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தனர்..

" என்ன சாப்படறீங்க... " அவன் ஆரம்பித்தான்.

" எ..எதுவேனா ஓகே.... "

அவன் ஆர்டர் செய்துவிட்டு அவளைப் பார்த்தான்.. இருவரது பார்வையும் அவ்வப் பொழுது உரசி ஆராய்ந்து கொண்டிருந்தது..

" அப்பறம்... அ... வீட்ல கூட சொல்லல.. கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு வந்தேன்.. அதான்.. கொஞ்சம் சீக்கிரம் கிளம்பனும்.. என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா..."

" ஓ... நானும்.. வெளில போறேன்னு சொல்லிட்டு.. " சிரித்தான்.. அவன் பார்வை ஆயிரம் அர்த்தங்கள் சொல்ல துடித்தது..

" எனக்கு... என்ன... யாரும் இவ்ளோ டிஸ்டர்ப் பண்ணதில்ல.. ரெண்டு நாளா மனசுல ஏதோ சொல்லத் தெரியாத உணர்வு.. "

" யாரு... " அவள் சட்டென கேட்க அவன் தடுமாறிப் போனான்..

" அ.. அது... உன்ன பாத்தா மனசுல ஒரு நிம்மதி.... சந்தோஷம்.. ஏன்னு தெரியல.. "

மெள்ள தலைசாய்ந்து சிரித்தாள்..

" ஓ..... ம்ம்ம்..... அப்பறம்.."

" விளையாட்டுக்கு சொல்லல.. கொஞ்ச நாளா உன்கிட்ட பேசனும் பார்க்கனும்னு தோனுது.. "

பவிக்கு லேசாக புரிய ஆரம்பித்தது.. அவனும் தன்னைப் போல உணர்வது அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது..

" எ.. என்ன பேசனும்னு... "

" தெரியல......" கடகடவென சிரித்தான்.. அவன் பற்கள் தெரிய சிரித்தது அவளுக்கு பிடித்திருந்தது.. அவன் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றியது.. தனக்குள்ளும் அந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை சொல்ல தயக்கமாக இருந்தது..

" எ.... எப்டி.. சொல்றதுன்னு தெரியல.. எ.. எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.... ஐ திங்க்....."

வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க தடதடக்கும் இதயத்தோடு நெஞ்சம் அவசரமாய் ஏறி இறங்க , கண்கள் விரிய அவன் சொல்லப்போகும் வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்தாள் பவி..

ஐ திங்க்... ஐ 'ம் இன் ல......" வார்த்தையை முடிக்கும் முன்னே பின்னாலிருந்து ஒரு குரல் அவன் கவனத்தை கலைத்தது..

திடுக்கிட்டு இருவரும் திரும்பினர்..

" ஹாய்.. ரிஷி.... " அதிசய பார்வையுடன் அங்கு வந்து கொண்டிருந்தாள் ஜனனி..

அவளைப் பார்த்த கணத்தில் இருவருக்கும் கோபமும் வெறுப்பும் பொங்கி சட்டென மனநிலையை மாற்றியது..

" ஹே..... ரிஷி.. சர்ப்ரைசிங்... நீங்க இங்க இருப்பேள்னு எதிர்பார்க்கலே.." வேகமாக வந்தவள் அவனருகில் வந்து அமர்ந்து கொண்டாள்..

" ஹாய்...." மரியாதை புன்னகையை உதிர்த்தான் ரிஷி.. இதயம் தவித்தது..

பவித்ராவின் முகம் கோபத்தில் இறுகியது.. இருவரையும் மாறி மாறி பார்த்தவன் சங்கடத்தில் நெளிந்தான்..

" என்னோட ஃப்ரெண்ட ட்ராப் பண்ணிட்டு அப்டியே ஷாப்பிங் போலாம்னு வந்தேன் கார்ல.. ஹாஹா.. காட் சேக்.. உங்கள பாப்பேன்னு எதிர்பாக்கவே இல்லை.. " பவியை சட்டை செய்யாது அவனது கைகளை கோர்த்துக் கொண்டாள்..

பவி கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டாள்..

நாசூக்காக அவளது பிடியிலிருந்து விலகியவன்.. " ஓ... க்ரேட்... "

" கூட யாருமே இல்லை போர் அடிக்குமேன்னு நெனச்சேன்.. அம்மா கூட க்ளப் மீட்டிங்க்கு போய்ட்டா.. லக்கீலி நீங்க இங்க இருக்கேள்.. கம் வித் மீ ரிஷி.. ஜாலியா ஷாப்பிங் பண்ணின்டு வரலாம்.. உங்களோட தனியா பேச டைம் கெடச்சது.. ஹாஹா.."

" இ... இல்ல... ஒரு முக்கியமான விஷயமா... இவங்களோட.. "

" ஹே ரிஷி... கமான்.. லெட்ஸ் கோ..."

அவள் இங்கிதமே இன்றி தன்னை இழுத்துச் செல்வது ரிஷிக்கு கோபத்தை மூட்டியது.. அதுவுமின்றி இந்த சமயத்தில் பவிக்கு எதிரே... நினைக்க நினைக்க முகம் சிவந்தது..

" இல்ல ஜனனி.. இவங்க எனக்காக வந்திருக்காங்க.. வி ஆர் இன் இம்பார்ட்டன்ட் கான்வர்சேஷன்... சோ..."

" ஹே.... ப்ளீஸ் டா... கம்... இவங்க கொஞ்ச நேரம் இங்கயே வெயிட் பண்ணட்டும்.. வெய்ட் பண்ண மாட்டாங்களா..ம்ம்.. கமான்... " பவித்ராவை ஓர் வெறுப்புடன் பார்த்தபடி அவன் கைகளை பிடித்து எழுந்து நிப்பாட்டினாள்.

அதற்கு மேல் பொறுக்காமல்.. " பவி... ப்ளீஸ்... ஒரு ஃபைவ் மினிட்ஸ்... வந்தர்ரேன்... சாரி.. ப்ளீஸ் வெயிட் பண்ணு.. " பவியிடம் கூறிவிட்டு ஜனனியுடன் நடந்தான்.

துள்ளியபடி அவன் கைகளை பிடித்துக் கொண்டு வாசலைத் தாண்டி சிறிது தூரம் ஜனனி நடக்க..

" ஜனனி.. நில்லு.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.." அவளை நிப்பாட்டினான்.. முகம் கொஞ்சம் இறுகி இருந்தது..

" யா.... டெல் மி ரிஷி...." கண்களை விரித்து கேட்டாள்.

" ஜனனி.. ஐ யம் நாட் இன்ட்ரஸ்ட்டட் வித் யூ.."

" வாட்... " புரியாமல் விழித்தாள்..

" எனக்கு உன்மேல இஷ்டம் இல்ல.. நா.. நான்.. வேறொரு பொண்ண லவ் பண்றேன்.."

" எ... என்ன... என்ன சொல்றீங்க.." அதிர்ச்சியில் முகம் சுறுங்கியது அவளுக்கு.

" சாரி.. இப்போ என்கூட பேசிட்டு இருந்தாளே அவளதான் லவ் பண்றேன்.. மனசார.. என்னோட லவ்வ ப்ரபோஸ் பண்ணதான் அவள இங்க வரச் சொன்னேன்.. "

அவன் கூறக் கூற அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருந்தவள் மெள்ள தலை குனிந்தாள்.. சில நிமிடங்கள் அமைதியில் கடந்தது..

மெள்ள தலை நிமிர்த்தியவள்.. " சுந்தரி ஆன்டி உங்களுக்கு சம்மதம் உங்களுக்கு என்ன பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களே.. அ.. அது.."

அவளை தீர்க்கமாக பார்த்தவன்.. " அம்மாவுக்கு என் காதல் விஷயம் தெரியாது.. அவங்களுக்கு வசதியா இருக்கற நீங்க மருமகளா வரனும்னு ஆசை.. பட்... எனக்கும் பிடிக்கனுமே.. டூ த ஃப்ராங்க்... உங்க திங்கிங் லெவல் வேவ் லெங்க்த் வேற.. என்னோட வேவ் லெங்க்த் வேற.. அது ஃப்யூசர்ல நம்ம ரெண்டுபேரோட வாழ்க்கையுமே பாதிக்கும்.. அதுவுமில்லாம.. எனக்கும் உங்க மேல எந்த அபிப்ராயமும் இல்ல.. பவித்ராதான் எல்லா விதத்துலயும் எனக்கு ஏத்தவளா இருப்பா... இருக்கா..."

அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

" எங்க முதல் சந்திப்பே மோதல்ல தான் ஆரம்பிச்சது... ஆனா... போகப் போக...." அவன் சிரித்தபடி கூறிக் கொண்டிருக்க..

" ஸ்டாப்.... ஐ டோன்ட் நீட் எனி எக்ஸ்பலனேஷன் அன்ட் யுவர் புல்ஷிட் லவ் ஸ்டோரிஸ்.. பிடிக்கலன்னு முன்னாடியே சொல்லிருக்க வேண்டியது தான.. என்ன ஏன் டிஸ்டர்ப் பண்ணிங்க... " கொஞ்சம் சத்தமாக கேட்டாள்... கைகள் மெள்ள நடுங்கியது..

" ஜ.. ஜனனி.. நீ தான் என்ன சுத்தி சுத்தி வந்த... நா.... "

அவள் முகத்தில் வெறுப்பு புன்னகை விரிந்தது.. " ஹூம்... நான்தான் முட்டாள்... சாரி... இனிமே உங்ககிட்ட வரமாட்டேன்.. பை.." அவனை பார்க்காமல் வேகமாக நடந்து சென்றாள்..

அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்... அவள் கண்களிலிருந்து மறைய பவியின் நினைவு வந்தது... வேகமாக காபி ஷாப்பின் உள்ளே நுழைந்தான்..

அங்கே கோபமும் குழப்பமுமாக எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தாள் பவித்ரா.. இவன் வந்து எதிரே அமர்ந்ததும் வெடுக்கென எழுந்தாள்.

" நான் கெளம்பரேன்.. நேரம் ஆச்சு.." போகப் போனாள்.

" ஹே... பவி.. வெய்ட் வெய்ட்.. என்ன ஆச்சு.. "

" இல்லைங்க.. உங்களுக்கு நெறைய வேல இருக்கும்.. கேர்ள் ப்ரண்ட்ஸ்ஸ வேற மேனேஜ் பண்ணனும்.. பிசியா இருப்பீங்க.. நான் வேற எதுக்கு.. "

" பவி.. ப்ளீஸ்.... நீ நெனைக்கற மாதிரி எதுவும் இல்ல.. கொஞ்சம் உட்காரு..." அவன் கண்கள் கெஞ்ச மெள்ள அமர்ந்தாள்..

" அவங்க ஜனனி.. வீட்ல அம்மா எனக்கு தெரியாம பாத்த பொண்ணு.. என்னோட விருப்பத்த கேக்காம அவங்கள்ட சம்மதம் சொல்லிட்டாங்க... பட்.. எனக்கு இஷ்டம் இல்ல.. "

நம்பிக்கை இன்றி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

" உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. நேத்து நான் பங்ஷனுக்கு வந்தது கூட உனக்காகத்தான்.. உன்ன பாக்கனும்கறதுக்காக மட்டும் தான்.."

கொஞ்சம் கண்களில் மகிழ்ச்சி பூக்க அவனை பார்த்தாள்..

" எஸ் பவி.. என்னமோ தெரியல.. எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு.. உன்னோட அமைதியா.. உன்னோட கோபமா.. எது... எதுன்னு சொல்லத் தெரில... நீ என் தப்ப.. அந்த இன்சிடென்ட விளக்கின முறை எல்லாம் என்ன உன்கிட்ட கட்டி போட்டுருச்சு.. உன் கூட பேசினா சந்தோஷமா இருக்கு.. உன் கூட இருக்கனும்னு தோனுது.. உன்கிட்ட சொல்லிடனும்னு நேத்து உன்ன பாத்ததிலேந்து ஒரே தவிப்பு.. அ.. அதான் நானே போன் பண்ணி உன்ன வர சொன்னேன்.."

கொஞ்சம் நம்பிக்கை துளிர்க்க முகம் மெள்ள மலர்ந்தது அவளுக்கு..

" நீ எனக்கு வேனும் பவி... என்ன புரிஞ்சுக்கற.. என்ன மதிக்கற... என் மனசுக்கு புடுச்ச ஒரு பொண்ணு தான் எனக்கு வாழ்க்கை துணைவியா வரனும்னு எதிர்பார்த்தேன்.. நீ எனக்கு கெடச்ச.. மத்த பசங்க மாதிரி டேட்டிங் சாட்டிங்னு மூனுமாசம் பேசி எல்லாம் முடுச்சுட்டு போற சீப் லவ் இல்ல.. என் மனசுல நீதான் எனக்குன்னு புரிஞ்சப்பறம் தான் உன்கிட்ட சொல்லனும் வந்தேன்.."

மூச்சுவிடாமல் அவன் கூறக் கூற முகத்தில் சந்தோஷ ஒளி பரவ வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள் பவித்ரா..

" இதுக்கு மேல என்ன எப்டி வெளிப்படுத்தறதுன்னு தெரியல... ஐ.... ஐ லவ் யூ பவித்ரா.." கையில் இருந்த சின்ன அட்டை பெட்டியில் வைத்திருந்த ஒற்றை ரோஜாவை அவளிடம் நீட்டி சிரித்தான்..

உடலெங்கும் மின்சாரம் பரவி சூடாக, மயிர்கால்கள் சிலிர்க்க தனைமீறி வந்த ஆனந்த சிரிப்பை அடக்க இயலாமல் நடுங்கும் கைகளில் அந்தப் பூவை பற்றினாள்.. சம்மதமாக..!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
மார்கழித் திங்கள்..!

அத்யாயம் - 16

விடைபெற மனமின்றி அவன் சென்ற பாதையை பார்த்துக் கொண்டே வீட்டுக்கு கிளம்பினாள் பவித்ரா..! கையில் அந்த ஒற்றை ரோஜா அவளைப் போல் மேனியெங்கும் நீர் பூத்து இருந்தது.. அதை கைப்பைக்குள் வைத்துக் கொள்ள விரும்பாமல் கைகளிலே பிடித்தபடி வீட்டிற்குள் நுழைந்தாள்..

வாசலில் தயாராக காத்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.. அவள் கைகளை ஆராய்ந்தான்..

" சாக்லேட் எங்க.... " முறைப்புடன் அவன் கேட்க அப்பொழுதுதான் நினைவு திரும்பியவளாக திருதிருவென விழித்தாள்..

" அம்மா.......... ஆஅஅ..." வாயை பிளந்து கத்தியபடி அங்கேயே கீழே படுத்து உருண்டு பிரண்டான்.

" அய்யோ.. டேய்.. டேய்.. வாய மூடு.. சாரி.. சாரி.. வர்ர அவசரத்துல மறந்துட்டேன்.. நாளைக்கு வாங்குத் தரேன்.."

" ஆஅஅஅ.... எனக்கு இப்பவே வேணும்.."

" சனி.... படுத்தாத.. டேய் தம்பி.. நாளைக்கு வாங்கித் தரேன்.. ப்ளீஸ்டா.. என் கண்ணுல.. "

அவளையே குறுகுறுவென பார்த்தவன் படக்கென எழுந்து அமர்ந்தான்.. " அது என்ன பூ... உன் கைல இருக்கே.. "

அப்பொழுதுதான் கையில் பூவை நினைவில்லாம் கையிலேயே வைத்திருப்பது தெரிந்தது பவித்ராவிற்கு.. என்ன சொல்வதெனத் தெரியாமல் தடுமாறினாள்.. " அ.. அது.. என்.. எனக்கு வாங்கிண்டேன்.. உனக்கென்னடா... லூசு.. ".

" அது எனக்கு வேணும் குடு... "

" அடி... அதெல்லாம் தர முடியாது போடா.. "

பே............ சங்கூதினான்.

" அழுந்துண்டு இங்கே கெட... " என எழுந்தவள் கையிலிருந்த பூவை பிடுங்கிக் கொண்டு ஓடினான்..

ஒரு கணம் அதிர்ந்த பவித்ராவிற்கு மூச்சடைத்தது.... " டேய்.... " அவனை துரத்திக் கொண்டு உள்ளே ஓடினாள்.. அவன் பங்கஜத்திடம் நேராக சென்று நின்றான்..

" அம்மா.. அம்மா.. இங்க பாரு... அவளுக்கு மட்டும் பூ வாங்கிண்டு வந்திருக்கா.. எனக்கு சாக்லேட் வாங்கிண்டு வரல.."

பின்னால் ஓடி வந்தவள் தயக்கத்துடன் நின்றாள்..

" என்னடி பவி.. ஊட்டி ரோஸ் அழகா இருக்கே.. யார் வாங்கிக் குடுத்தா.." பங்கஜம் அந்த பூவை வாங்கி சுற்றி சுற்றி பார்த்தாள்.

தடக் தடக்கென இதயம் அடித்தது பவித்ராவிற்கு... கண்கள் பயத்துடன் தடுமாறியது..

" இ... இல்லம்மா... என் ஃப்ரெ... ஃப்ரென்ட்...... மா... மாலினி இருக்கால அவ.. அவ வாங்கிக் குடுத்தா.. அவளுக்கு வாங்கிண்டா.. அப்டியே.. " கண்கள் பூவையும் அம்மாவையும் மாறி மாறி பார்த்தது..

" நன்னா அழகா இருக்கு... தண்ணீல போட்டு வெச்சா ரெண்டு மூனு நாளைக்கு வாடாது.. பத்ரமா வெச்சுக்கோ.. வாடிடாம... இந்தா.." பங்கஜத்திடமிருந்து வாங்கிய பின்பே மூச்சு வந்தது பவிக்கு..

" அம்பி.. அக்கா நாளைக்கு சாக்லெட்டு வாங்கித் தருவா.. அழதைக்கு பாடத்த படி.. என்ன.." ஸ்ரீதரை சமாதானப் படுத்தியபடி பங்கஜம் வேலையில் மூழ்க நிம்மதி பெருமூச்சுடன் தன் அறைக்குள் நுழைந்தாள் பவி..

உடை மாற்றாமல் அப்படியே அந்த பூவுடன் அமர்ந்து கொண்டாள்.. மென்மையான ரோஜா இதழ்களை மெள்ள விரல்களால் வருடினாள்.. உடலெங்கும் ஓர் சிலிர்ப்பு பரவ வெட்கத்துடன் சிரித்துக் கொண்டாள். கண்களில் அவன் சிரித்தபடி பூவை நீட்டியது நிழலாக ஆடியது.. அவனது ஒவ்வொரு அங்க அசைவும் அவன் கண்களின் பாஷையும் கண்முன்னே விரிந்து அவளை மயக்கத்தில் ஆழ்த்தியது.. " இது தான் காதலா.. ஹாஹா.. இப்டி யாருமே என்ன கட்டிப் போடலயே.. காதல்னா இப்டிதான் இருக்குமா.. எப்ப பாத்தாலும் அவன் நினைவாவே இருக்குமா.. அப்போ நானும் அவன காதலிக்கறேனா.. உண்மையா.. அவன மாதிரி உயிருக்கு உயிரா.. ஹா.. தெரியல.. ஆனா.. அவன ரொம்ப பிடிச்சிருக்கு.. அவனோட இருக்கனும் பேசனும்னு தோனுது.. அதுதான் காதல்னா.. அப்போ நானும் அவன காதலிக்கறேன்.. " வெட்கத்தில் முகம் சிவக்க தலை குனிந்தாள்.. திடீரென ஓர் சிந்தனை வந்தது.. " சரி... காதலிக்கனும்னா அடுத்து என்ன பண்ணனும்.. சினிமால காமிக்கற மாதிரி மரத்த சுத்தி சுத்தி டூயட் பாடனுமா.. " தன்னையும் அவனையும் மரத்தை சுத்தி ஓடியபடி டூயட் பாடுவதுபோல் கற்பனை எழ தன்னை அறியாமல் கடகடவென வாய்விட்டு சத்தமாக சிரித்தாள்..!

" சீ.... செட் ஆகல... காமெடியா இருக்கு.."
கூறிக் கொண்டே அந்த பூவினை எடுத்து கன்னத்தில் ஒத்திக் கொண்டாள்.. அவன் கைகள் தீண்டுவதாய் ஓர் மென்மை படற கண்கள் மூடி ரசித்தாள்..!

இங்கே....


தன் விரல்களை வருடியபடி படுக்கையில் படுத்துக்கிடந்தான் ரிஷி.
தன்னிடமிருந்து பூவை வாங்கும் போது பவியின் பஞ்சு விரல்கள் மெத்தென்று தன் விரலைத் தீண்டயது இப்பொழுது நினைக்க ஓர் அதிர்வு அவனுக்குள் எழுந்தது...!

" இப்டி கோபக்காரியா இருக்காளே.. ம்ம்ம்.. நல்ல வேள நான் சொன்னத புரிஞ்சுக்கிட்டா ... இல்லேனா.. அவளுக்கு என்ன புரியவைக்க பின்னாலயே சுத்தி இருக்கனும்.. தேவதாஸ் மாதிரி தாடி வளத்துகிட்டு.. ஹாஹா.. " தன் மழுமழு கன்னத்தை தடவி சிரித்தான்..

" ஹூம்.. அவ அவ்ளோ அழகு இல்லதான்.. இருந்தாலும் இவ்ளோ அழகா தெரியறாளே.. அவ சிரிப்பு.. அந்த.. அந்த பார்வை.. ஹப்பா..

" பாத்தா கரன்ட் ஷாக் அடுச்சா மாதிரி இருக்கு.. ஹாஹா.. எவ்ளோ நல்ல கேரக்டர்.. அவ எனக்கு ஒய்ஃபா வந்தா உண்மையிலே நான் அதிர்ஷ்ட சாலிதான்.." மனம் நிறைந்த சந்தோஷத்துடன் கண்கள் மூடினான்..!

உறக்கம் வரவில்லை... கண்களுக்குள் அவள் வந்து இம்சித்தாள்.. சிரித்தாள் , வெட்கப்பட்டாள், கண்ஜாடை பேசினாள். முழுவதுமாய் நிறைந்தாள்..!

இங்கு உறக்கம் இன்றி பவியும் புரண்டு கொண்டிருந்தாள்.. வாழ்க்கையின் முதல் திருப்பு முனை.. காதலெனும் வலையில் தானும்..! அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் மதுரமாய் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.. மூடிய கண்களுக்குள் நெருக்கமாய் வந்து அமர்ந்து கொண்டான்.. இடைவெளியின்றி.. கைகளை கோர்த்துக் கொண்டான் கனவாய். தன் மூச்சுக்காற்றை சுவாசிக்கச் செய்தான்.. உயிராய்.. அனலை தேகத்தில் பொழியச் செய்தான்.. அணைத்து..!
கனவுகளுக்கு மட்டும் என்றும் எல்லையில்லா சுதந்திரம் உண்டு.. எதையும் கோர்க்கவும் சேர்க்கவும்.. நிஜத்தில் நடக்காத நிகழ்வுகளை நிகழ்த்தும் நிழலாய்.. நிஜமாய்.. மேல்மட்ட நினைவுகளை உருமாற்றி உருமாற்றி நம் ஆசைகளில் தோய்த்து அழகிய உண்மையாய் ஆழ்மன புதையலில் புதைத்து ஒரு நாள் நிஜமாக்கிக் கொடுக்கும் அதிசய கருவி கனவுகள்..! கற்பனையின் எல்லைதாண்டி சிந்தனையை களவாடும் கள்வன்..! காதலுக்கு என்றும் துணை இந்தக் கனவுகள்..! கற்பனைக் கோட்டையை வானளாவ கட்டித் தருவது..!

கனவுகளின் நினைவுகளில் மூழ்கியபடி அரைதுக்கத்தில் நேரத்தைக் கடத்தினாள் பவித்ரா..!

காலை..

" பவி... பவி.... எந்திரி மா... என்னடி இது... மணி ஏழாறது.. இன்னும் தூங்கிண்டு இருக்கே... என்ன ஆச்சு.. உடம்புக்கு சரியில்லையா.. எப்பவும் விடிகாலைல எழுந்திடுவியே.. பவி.. பவி... " பங்கஜம் கேட்டுகி கொண்டே பவியின் நெற்றியில் கை வைத்தாள்..

எங்கிருந்தோ அழைப்பது போல் காதுகளில் ஒலி பரவ , இளம்சூடான கைகள் நெற்றியில் பட மெள்ள கண்விழித்தாள் பவித்ரா.. கண்கள் சிவந்திருந்தது..

" என்னடி கண்ணு... கண்ணெல்லாம் சிவந்திருக்கே.. உடம்புக்கு முடியலையா.. அதான் சொல்றது.. வேள கெட்ட வேளைல வெளில போகாதேன்னு.. எதயாவது பாத்து பயந்துட்டியா பவி.. " வாஞ்சையுடன் அவள் கேட்க...

ஏனோ சிரிப்பு வந்தது பவிக்கு.. அவன் சிரித்த முகம் கண்களில் வந்து நின்றது..

" என்னடி.... சிரிக்கறே.. "

" ம்ஹ்ம்.. ஒன்னுமில்ல... நைட் தூக்கமே வரலை... அதான்.. வேறெத பாத்தும் பயப்படல... ஸ்ரீதரா நானு... ஹா.."

" ஹ்ம்.... வளந்துட்டா.. நீ பெரிய மனுஷியா.. நீ இன்னும் குழந்தைதான்... பேசாதைக்கு காலேஜூக்கு லீவப் போட்டு ரெஸ்ட் எடு.. மத்யானத்துக்கு மொளகு ரசம் பண்றேன்.. கனகனன்னு இருக்கும்.. எல்லாம் சரியாப் போய்டும்.."

" ஐயோ... லீவா.. சான்சே இல்ல.. கிளம்பறேன்.." கூறியபடி எழுந்து வேகமாக சென்றாள்..

காலேஜில் கலகலப்புடன் நகர.. யாரிடமும் முக்கியமாக ரம்யாவிடம் அவனை பார்த்தது பற்றி கூறக் கூடாது என நினைத்துக் கொண்டாள் பவி..

" என்னடி பவி.. முகம்லாம் ஒரு மாதிரியா இருக்கு.. கண்ணெல்லாம் வீங்கி போயிருக்கு... நைட்டெல்லாம் தூங்கலையா.. என்ன மேட்டரு.. " சந்தேகத்துடன் இவளை சீண்டினாள் ரம்யா..

கொஞ்சம் குழப்ப பயமாக அவளை பார்த்தவள்.. " அதெல்லாம் ஒன்னுமில்லையே.. பக்கி.. மொதல்ல உன் கண்ண டாக்டர்ட்ட செக் பண்ணு.. உன்ன மாதிரி நான் என்ன கண்ணு முழுச்சு சமையல் கலையா கத்துக்கறேன்... ஹூம்.."

" அடியே... ஒனக்கும் ஒரு காலம் வரும்.. கல்யாணம் ஆகி போனா புருசனுக்கு புடுச்சத பண்ணி போட்டே ஆகனும்.. அப்ப பெப்பபே னு முழுச்சுக்கிட்டு கெடந்த உன்ன ஊட்டுக்கு துரத்திடுவான்.."

சடாரென ரிஷியின் நினைவு வந்தது.. " ஆமா.. அவனுக்கு என்ன பிடிக்கும்.. என்ன சாப்பட பிடிக்கும்.. என்ன கலர் பிடிக்கும்.. அவனும் கோபப் படுவானா சரியா எதையும் பண்ணலேனா.. கல்யாணத்துக்கப்பறம் என்ன அன்பா நடத்துவானா.. சே.. நேத்துதான் லவ்வே சொல்லிருக்கான்.. எதை எதையோ யோசிக்கறேன் பாரு.. ஹ்ம்.. என் ரிஷி அப்படிபட்டவன் இல்ல.. என்ன எப்பவும் பாத்துப்பான்.. மை ஸ்வீட் ராஸ்கல்.." சின்னப் புன்னகை பூத்தது..

" என்னடி சிரிக்கற.. ம்ம்ம்.. "

" ஆ... அதெல்லாம் ஒன்னுமில்லையே.." சமாளித்தாள் பவி..

மாலை...

ரம்யாவுடன் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள் பவி.. கையில் வைத்திருந்த போன் ஒலித்தது.. எடுத்து பார்த்தவள் கொஞ்சம் தடுமாறினாள்..

ரிஷி இவள் ஏற்ப்புக்காய் காத்திருந்தான்..

அருகில் ரம்யா சுவாரசியமாய் எதோ கதை பேசிக் கொண்டிருக்க என்ன செய்வதெனத் தெரியாமல் விழித்தாள்..

" ஏய் ஒட்டகம்.. போன் அடிக்குது பாரு... பராக்கு பாத்துட்டே வர்ர.. " ரம்யா கூற..

படபடப்புடன் போனை அணைத்தாள் பவி..

" யாருடி... பேசலையா.. "

" அ... அது... மார்க்கெட்டிங் கால்டி.... இவங்களோட எப்ப பாத்தாலும் தொல்ல... " அசட்டுச் சிரிப்பு சிரித்தாள்..

மறுபடியும் போன் அடித்தது.. மறுபடியும் ரிஷி..

சட்டென போனை சுவிட்ச் ஆஃப் செய்து பேகினுள் தினித்துக் கொண்டாள்.. கொஞ்சம் படபடப்பாய் இருந்தது.. ரம்யாவிற்கு ஏதும் தெரிந்துவிடுமோ என்ற கலவரம் அவள் கண்களில் நிழலாடியது..

" என்னடி.. உம்முனே வர்ர... என்ன ஆச்சு.."

" ஒன்னுமில்ல... வேகமா நட.. ஆடி அசஞ்சுகிட்டு.. சீக்கரம் போலாம்.."

அவளை விநோதமாகப் பார்த்தாள் ரம்யா.. ஏதோ உறுத்தியது..

ரம்யா விடைபெற்று செல்ல சிறிது நேரம் பொறுத்தவள் போனை எடுத்து ஆன் செய்தாள்.. அவனுக்கு பேசலாமா என ஒரு தவிப்பு.. சுற்றும் முற்றும் பார்த்தவள் மெள்ள அவன் நம்பருக்கு போன் அடித்தாள்.. முதன் முறை அவனுக்கு தான் போன் செய்வது அவளுக்குள் ஒரு பெரும் அச்சத்தை உண்டு பண்ணியது.. போனை எடுத்தான்..

" ஹலோ... ஏ பவி என்ன ஆச்சு.. ஏன் போன எடுக்கல.. சுவிட்ச் ஆஃப்னு வேற வந்துச்சு.."

" இல்ல.. பிரண்ட் கூட இருந்தா.. அதான்.. எடுக்க முடியல.. "

" ஓ... அதனாலென்ன சாதாரணமா பேசலாமே.."

" அவளுக்கு நம்ப விஷயம் தெரியாது.. தெரிஞ்சா ரொம்ப ஓட்டுவா.. அதுவுமில்லாமா அவள்ட்ட எப்டி சொல்றதுன்னு ஒரு தயக்கம் வேற... அதான்.."

" ஓஹ்... சும்மாதான் போன் பண்ணேன்.. உன்கூட பேசனும் தோனிச்சு.. ஹாஹா.. அதான்.. " அவன் கூற பவியின் முகத்தில் நாணப் புன்னகை நெளிந்தது...

" என்ன.. பேச்சையே காணும்.. உன்ன பாக்கனும் போல இருக்கு.. மீட் பண்ணலாமா.. "

" பாக்கனுமா.. டெய்லி வெளில வரமுடியாதே.. வீட்ல என்னனு கேப்பாங்களே.. நேத்துகூட கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டுதான் வந்தேன்.. "

" ஹ்ம்ம்ம்..... " பெருமூச்சு எழுந்து அடங்கியது அவனுக்குள்..

" அப்போ பாக்க முடியாதா.. ம்ம்ம்.." ஏக்கமாக கேட்டான்..

" வெள்ளிக் கிழமை கோயிலுக்கு வருவேன்.. அங்க வேணா பாக்கலாம்.. பட்.. ஒக்காந்தெல்லாம் பேச முடியாது.. யாராவது பாத்துட்டா அவ்ளோதான்.. ஜஸ்ட் பாத்துக்கலாம்.."

" ஹாஹாஹா... சரி.. உன்ன பாத்தே என் காதல வளத்துக்கறேன்.. போன்லயாவது பேசலாமா கூடாதா.."

" அ... அது.. பேசலாம்.. ஆனா... யாராவது இருந்தாங்கன்னா பேச முடியாது.. "

" என்னம்மா.. இப்டி பண்றியேமா... "

கலுக்கென சிரித்தாள் பவித்ரா..

" நான் ப்ரீயா இருக்கும் போது கால் பண்றேன்.. ஓகேவா... அப்பறம் சன்டே ஃப்ரீயாதான் இருப்பேன்.. அப்போ பேசலாம்.. "

" ஹப்பா... அது போதும்.. சரி செல்லம்.. வெள்ளிக்கிழமை அம்மனை தரிசிக்க கோயிலுக்கு வர்ரேன்.."

" ஹாஹா... ஓகே.. டைம் ஆச்சு.. ரோட்ல நடந்துகிட்டே பேசிகிட்டு இருக்கேன்.. வீடு வந்துரும்.. அப்பறம் பேசலாமா.. " பவி தயங்கிக் கூற..

" எஸ் மை லார்ட்.. உங்க உத்தரவு.. " அவன் சிரிக்க.. போனை கட்செய்தாள் பவி..

உடலெல்லாம் மெல்லிய வெப்பம் பரவி இருந்தது.. அவனுடன் பேசியது ஏனோ ஒரு மிதப்பை அளித்தது.. என்ன பேசினோம் என்பதை மறந்த ஒரு தடுமாற்ற தவிப்பு அவளை ஆட்கொண்டு இருந்தது.. மெள்ள நடந்தபடி அவனுடன் பேசியதை அசை போட்டபடி வீட்டை அடைந்தாள்..!

இரவு மணி எட்டு..

மறுபடியும் அவனுடன் பேச வேண்டும் என்ற தவிப்பு அவளை அலைக்களித்தது.. பாடபுத்தகழ் திறந்து கிடக்க கவனம் செல்லாது கனவுகளில் மூழ்கி இருந்தாள்.. எப்படி அவனுடன் பேசுவது என்ற சிந்தனை மனதில் முட்டி மோதி அவளை இம்சை படுத்தியது.. போனை எடுத்து எடுத்து அவன் பெயரையே பார்த்துக் கொண்டாள். அவன் பெயர் கூட அவளுக்கு இன்பத்தை கொடுத்தது.. அதற்குமேல் பொறுக்காமல் மெள்ள எழுந்து தன்னறையை விட்டு வெளியே வந்தாள்.. ஹாலில் அப்பாவும் பாட்டியும் உட்காந்திருக்க ஸ்ரீதர் மும்முறமாக எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தான்..

மாடிக்கு சென்று அவனுடன் பேசலாம் என தீர்மானித்தவள் அவர்களைக் கடந்து நடந்தாள்.. உள்ளுக்குள் ஒரு பயம் சூழ்ந்திருந்தது.. அப்பா ஏதாவது கேட்டாள்... அவள் யோசிக்க அப்பாவும் சரியாக கேட்டார்..

" பவி...எங்க போறே..."

பக்கென்று இருந்தது அவளுக்கு.. " இ... இல்லப்பா.. ஒரே புழுக்கமா இருக்கு.. அ.. அதான்.. மாடிக்கு போய் கொஞ்சநேரம் காத்தாட..." திக்கித் திணறிக் கூறினாள்..

" ராத்ரி வேள.. தனியாப் போகாத.. ஸ்ரீதரக் கூண்டின்டு போ.. "

" ஸ்ரீதரா.. ஹ்ம்.. வெளங்கிடும்.. " மனதில் நினைத்துக் கொண்டு.. " அப்பா நா என்ன சின்ன பொண்ணா.. பயப்படறதுக்கு.. நானே போய்ட்டு வர்ரேன்.. பத்து நிமிஷம் இருந்துட்டு வந்துடறேன்.. " அவர் பதிலை எதிர்பார்க்காமல் விடுவிடுவென நடந்தாள்.. உள்ளுக்குள் பதட்டம் சூழ்ந்தது.. வேகமாக மாடி ஏற மூச்சு வாங்கியது..

மெல்லிய லைட் வெளிச்சத்தில் மென் தென்றல் வீச அந்த இருள் ஓர் ரம்யமான சூழ்நிலை உருவாக்கி இருந்தது.. கருநீல ஆடை புனைந்த வானம் நட்சத்திர அலங்காரத்தில் மின்னிக் கொண்டிருந்தது.. பிறைநிலா வெண்பற்களை காட்டி ஜொலித்தது.. அந்த ஏகாந்த சூழ்நிலையும் மென்தென்றலின் தாலாட்டும் அவள் உடலில் கனலேத்த இதயத் துடிப்பின் ஓசை தாங்க இயலாது மெல்லிய படபடப்புடன் அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.. அழைப்பு மணியின் ஒவ்வொரு ஓசையும் இதயத்தில் ஜதிபாடி அவளை
மூச்சடைக்க செய்தது..

மூன்றாம் மணிஓசையில் உயிர்பெற்றான்..

" ஹாய் பவி... சர்ப்ரைசிங்... உண்மையா உனக்கு போன் பண்ணலாமான்னு நெனச்சுகிட்டே மாடிக்கு வந்தேன்.. ஹாஹா.." அவனது நிறைந்த மகிழ்ச்சி வார்த்தைகளில் தெரிந்தது..

" நா.. நானும் மாடில தான் இருக்கேன்.."

" ஹாஹா.. யாரும் இல்லையா பக்கத்துல.. நானும் நீயும் மட்டும் தானா.."

" ஹ்ம்ம்ம்... ஆமா... " கீற்றால் இதழ் விரிந்தது..

அடுத்து என்ன பேசுவது எனத் தெரியாமல் மெளன பாஷையை பரிமாறிக் கொண்டனர்..

" இ... இங்க நைட் மோட் ரொம்ய அழகா இருக்கு.. ரம்யமா... நீயும் கூட இருக்க.. பறக்கற மாதிரி இருக்கு.. " மெல்லிய சூட்டில் தன் உடலை அணைத்துக் கொண்டான்..

அவளுக்கும் அதே நிலை.. சொல்லாமல் தலை ஆட்டினாள்.. கண்கள் மெல்ல சிவந்தது..

" இப்போ நீ இங்க இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்.. அப்டியே உன் கைய கோர்த்துகிட்டு.. வானத்து நிலாவ ரசிச்சா.. ஹப்பா.. யோசிக்கவே அப்டி இருக்கு.. எப்போ வருவ பவி.. ம்ம்.." அவன் வார்த்தை கெஞ்சலும் கொஞ்சலுமாய் இருந்தது..

" ஹா..ஹா.. ரெண்டு வீட்லயும் சம்மதிச்சா.. "

" ஹாஹாஹா... சரிதான்.. எனக்கு நீதானு ஆனதுக்கப்பறம் யாரோட சம்மதம் வேணும்.. யார் தடுத்தாலும் உன்ன விட்டுகொடுக்க மாட்டேன்.."

" ஓ.... " பவிக்கு சந்தோஷம் நெஞ்சடைத்தது..

" வெள்ளிக் கிழமை கோயிலுக்கு வருவீங்க தானே.. " ஏக்கத்துடன் கேட்டாள்..

" எங்க இருந்தாலும் எல்லாத்தையும் விட்டுட்டு ஓடி வருவேன்.. என் லவ்வர பாக்கறத விட என்ன வேல.. ம்ஹ்ம்.. ரெண்டு நாள் இருக்கே.. அதான்.. எப்டி கடத்த போறேனோ.. "

பவிக்கும் இரண்டு நாட்கள் என்பது தாங்க முடியாத தூரமாய் இருந்தது.. " ம்ம்ம்.. " முனகினாள்..

நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது.. என்ன பேசுகிறோம் என்ற பிரக்ஞை இன்றி மெளனத்திலும் வார்த்தையிலும் உறவாடினர்.. பிறைநிலா மட்டுமே சாட்சியாய் நின்றிருந்தது..!

" பவி.... பவி.... இன்னும் என்ன பண்ணின்டு இருக்க அங்க... சாப்ட வா.. மணி ஒம்போது ஆயிடுத்து.." கீழிருந்து அம்மா கூக்குறலிட... அப்பொழுதான் பவிக்கு நினைவுக்கு வந்தது தான் வந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டதென..

" அய்யோ.. அம்மா கூப்படறாங்க.. நா கீழ போனும்.. அப்பறம் பேசறேன்... " அவள் பதட்டபட..

" சரி... ம்ம்.. பவி.. போறதுக்கு முன்னாடி.. ஒ... ஒன்னு.. தருவியா.... " தடுமாறிக் கேட்டான்.

" எ.. என்னது.. " புரியாமல் அவள் விழிக்க.

" அ.. அது.. ஒரே ஒரு கி..... கிஸ்... "

அவன் கேட்டதும் வயிற்றிலிருந்து புறப்பட்ட மின்சாரம் உடலெங்கும் பரவி மூளையை தாக்கியது.. " ஹையோ.. "

" ப்ளீஸ் பவி... ஒரே ஒரு கிஸ்.. குடுத்தா போதும்.. ரெண்டு நாள் மேனேஜ் பண்ணிக்கறேன்.. ப்ளீஸ்.. " அவன் ஏக்கமாய் கேட்க...

வேறு வழியின்றி அவசரமாய் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெல்லிய சத்தத்துடன் முத்தத்தை அனுப்பினாள்.. " வெட்கம் பிடுங்கித் தின்றது அவளை.. கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்..

" ம்ஹ்ம்.... ச்ச்ச்... " அவனும் கொடுக்க உடலெல்லாம் நடுங்கிப் போனது அவளுக்கு.. மயக்க நிலையில் தலை கிர்ரென ஒரு கணம் சுழன்றது போல் இருந்தது..

" ஓகே பை டியர்... ஐ லவ் யூ.. " அவன் வார்த்தைகள் தீயில் நெய்யூற்ற.. அதற்கு மேல் தாங்க இயலாதவளாய் விடை கொடுத்து போனை அணைத்தாள்..!

அம்மா மறுபடியும் அழைக்க , வேகமாக கீழே இறங்கினாள் உணர்ச்சிப் பெருக்குடன்..!


For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
மார்கழித் திங்கள்..!

அத்யாயம் - 17

ரிஷியுடன் பேசிய மகிழ்ச்சியில் அன்றிரவும் தூக்கமின்றி கனவுகளில் கடந்தது அவளுக்கு..! அவனுக்கும்..!!

இரண்டு நாள் செல்ல..

காலேஜில் பாடத்தில் சுரத்தில்லாமல் அமர்ந்திருந்தாள் பவி.. சொல்லத் தெரியாத அவஸ்தையாய் இருந்தது.. அவன் தந்த முத்த சத்தம் உணர்ச்சியை கிளரச் செய்தது.. மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் ரம்யாவுடன்..!

" என்னடி.. ஒட்டகம்.. இந்த செமஸ்டர்லயாவது பர்ஸ்ட் மார்க் வாங்குவியா இல்ல செவன்டி தானா.. "

" ம்ஹ்ம்.. இவ என்னமோ பர்ஸ்ட் மார்க் வாங்கற மாதிரி.. நீயும் அதான.. நானும் அதான்.. " பவி முறைத்தாள்..

" கோவுச்சுகாதடி கேமல்.. கழுத்த நீட்டி நீட்டி பேசறதப் பாரு.. ஹாஹாஹா..." அவள் சீண்டிவிட..

" அடிங்க... உன்ன.... " பவி அடிக்க முயற்சிக்க அவள் விலகி ஓடினாள்.. சரியாக பவியின் போனும் ஒலித்தது.. குழப்பத்துடன் போனை எடுத்தவள் ரிஷி அழைப்பதைக் கண்டு அதிர்ந்தாள். ரம்யா திரும்பி வருவதற்குள் போனை அணைக்கலாம் என நினைக்கயில் ரம்யா அருகில் வந்திருந்தாள்.. அவளின் எதிரே பேச பயந்து போனை படக்கென அணைத்து பேகிற்குள் சொறுகினாள்..!

" ஓய்.. யார் போன்ல... என்ன மறைக்கற... "

" ஒ.. ஒன்னுமில்லையே.. மார்க்கெட்டிங் கால்.. அதான்.." எச்சிலை விழுங்கிக் கொண்டாள்..

" இல்லையே.. திருட்டு முழி முழிக்கற.. ஒழுங்கா போனக் காட்டு.. " அவள் பொய்யாய் மிரட்ட தயக்கத்துடன் போனை எடுத்துக் கொடுத்தாள் பவி..

அதில் வந்த காலை பார்த்த ரம்யா முகம் குழப்பத்தில் சுறுங்கியது. " யாரிடி இது ஆர்..எல்.. ம்ம்ம்.. யாய்.. மார்க்கெட்டிங்கால்னு பொய் சொல்றியா.. ஒழுங்கா சொல்றியா.. இல்ல அந்த நம்பருக்கு போன் அடிக்கட்டுமா.. "

" ஐயோ.. ப்ளீஸ் வேண்டாம் ரம்மி.."

" அப்போ யாருன்னு சொல்லு.. "

" அது.. அது.. அவருதான்டி... "

" எவரு டி அந்த அவரு... "

" ரிஷி டி... "

கொஞ்சம் குழப்பத்தில் ஆழ்ந்த ரம்யா முகம் பிரகாசமானது.. " யாரு.. நம்ம ஊறுகா பார்ட்டியா... அவன் எதுக்கு உனக்........ ஆமா ரிஷிக்கு ஆர் ஓகே.. அந்த எல்... " புரியாமல் குறுகுறுவென பவியை பார்த்தவள் கண்களை விரித்தாள்..

பவி தடுமாறி தலையை தாழ்த்திக் கொள்ள.. " அடியே... என்ன நடக்குது இங்க.. எல் னா லவ்வரா.. "மெல்லிய அதிர்ச்சி பரவ பவியை பார்த்தாள்.

கண்களில் பயத்துடன் மெள்ள சிரித்தாள் பவி..

" அடிப் பாவி.. அஞ்சு வருஷமா ஒன்னா சுத்தறோம்.. என்கிட்ட கூட மறச்சிட்டியே.. அப்படி என்னடி பெர்சனல்.. அதக் கூட சொல்ல மாட்டேனா என்ன பிரண்ட்ஷிப் டி.. போ.. உன்கூட பேச மாட்டேன்.." ரம்யா கோபம் கொள்ள..

" யேய்.. யேய்.. ப்ளீஸ்டி ரம்யா.. உன்கிட்ட எதையாவது மறச்சிருக்கேனா.. இ.. இத.. இத எப்டி சொல்றதுன்னு தெரியலடி.. அவன்.. அவன்தான் வந்து ப்ரபோஸ் பண்ணான்.. இன்னும் முழுசா ஒரு வாரம் கூட ஆகலடி.. எனக்கு இதெல்லாம் புதுசு.. உன்கிட்ட சொல்றதுக்கு வெக்கமா இருந்தது.. அதான்... " பவி பயந்து பயந்து கூற... கடகடவென சிரித்தாள் ரம்யா..

" அடியே.... பெரிய ஆளுதான் நீ.. அமுக்குனியா இருந்துட்டு என்ன வேல பாத்திருக்க பாரு.. ம்ம்ம்.. அவன் தான் ப்ரபோஸ் பண்ணான்னா மேடத்துக்கு இஷ்டம் இல்லையா.. அதனாலதான் கூட இருக்கும்போதே மறச்சு மறச்சு பேசினியா.. அடியே ஒட்டகம்.. நல்லா சீனப் போடற.. "

" ஏய்.. சீ... அப்டிலாம் இல்ல.. அவன் தான் போன் பண்ணி, போன் பண்ணி.. "

" பண்ணி.. பண்ணி.. ஹாஹா.. என்ன பண்றான்.. ம்ம்.. இனிமே ஊறுகா பாட்டிலா கிப்ட் வரும்.. சாப்ட்டு ஒடம்பத் தேத்து.. "

" சே.... லூசு... "

" ஆமாடி.. நா லூசுதான்.. நீ தான் வெவரமாயிட்டயே.. வெறும் போன்ல மட்டும் தானா.. இல்ல... அதுக்கும் மேல.. டேட்டிங் , டச்சிங் , கிஸ்ஸிங்கலாம் நடந்துருச்சா... "

" அடச் சீ போடி... " முகம் முழுக்க சிவந்து வெட்கம் பிடிங்கித் தின்க , ரம்யாவை செல்லமாக அடித்தாள்..

" ஹாஹா.. கூல் டவுன் பேபி.. காதல்ல இனிமே இதெல்லாம் சகஜம் தான்.. எனிவே... ரொம்ப சந்தோஷம் பவி.. நல்ல செலக்ஷன் தான்.. ரெண்டு பேரும் சண்டக் கோழியா இருந்து ஒன்னாயிட்டீங்க.. ஐ'ம் சோ ஹேப்பி டி.. "

" அவர் உண்மையாவே என்ன விரும்பறார் ரம்மி... எனக்கும் அவர்மேல ஒரு ஈர்ப்பு வந்தது... எப்டின்னு தெரியல.. பட்... எங்க காதல் இந்த காலக் காதல் மாதிரி சீக்கரம் அழுஞ்சு போற காதல் இல்ல.. ஆத்மார்த்தமா நேசிக்கிறோம்.. ரெண்டு பேருமே ஒரு புரிதலோட தான் காதல சொன்னோம்.. " கண்களில் காதல் மின்னக் கூறினாள் பவித்ரா..

" ஓ.... காவியக் காதலா... நடத்து நடத்து.. இனிமே எம்பாடுதான் திண்டாட்டம்.. நேரங்காலம் இல்லாம நீங்க போன்ல கடல போடுவீங்க.. என்ன எங்க கண்டுக்க போற.. ம்ஹ்ம்.. "

" சே... நீ என்னோட பெஸ்ட் பிரண்ட்.. உன்னவிட்டா எனக்கு ஆதரவா யாரிடி இருக்க.. "

" சரி.. சரி.. டயலாக்லாம் போதும்.. அவன்ட சாரி சாரி..அவர்ர்ர்ட்ட பேசு.. பாவம் புள்ள வாடிற போவுது.. "

" சீ... போடி... " சினுங்கலுடன் பவி கூறினாலும் அவனுடன் பேச மனம்
துடித்துக் கொண்டிருந்தது..

" ஓகே பவி.. நான் கெளம்பரேன்.. பை.." ரம்யா விடை பெற்று கிளம்ப பவி வேகமாக போன் எடுத்து அவனுக்கு அடித்தாள்.

" ஹாய் பவி... " தேனினிமை குரல் செவியில் தித்தித்தது..

" ஹலோ... "

" என்ன.. பிரண்ட் இருந்தாளா கூட... போன கட் பண்ணிட்ட.. "

" ம்ம்ம்... "

" அப்பறம்... இன்னிக்கு வெள்ளிக் கிழமை.. அம்மன தரிசிக்க கோயிலுக்கு போனும்.. அம்மன் அருள் கிடைக்குமா.." அவன் யாசிக்க...

" ஹாஹாஹா... கண்டிப்பா.. " மனம் நிறைந்த சிரிப்புடன் தலை ஆட்டினாள்.

" சரியா ஆறு மணிக்கு வந்துடுவேன்.. நீ ஏழு மணிக்கு வந்தாக் கூட போதும்.. ஹாஹா.. "

" வந்துர்ரேன்.. ஓகே பை.. வீ்ட்டுகிட்ட வந்துட்டேன்.. "

" ஓகே... ஓகே... பை டியர்.." அவன் கட் செய்ய.. போனை கைகளில் அடக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்..

அன்றும் கொஞ்சம் பரபரப்புடன் கிளம்பினாள் பவி.. " அம்மா, கோயிலுக்கு போய்ட்டு வரேன்.." கூறிக் கொண்டே வாசலுக்கு வர இடுப்பில் கைகளை ஊனியபடி நின்றிருந்தான் ஸ்ரீதர்.. " நானும் வருவேன்... "

மெள்ள அவனைப் பார்த்து சிரித்தவள் பையிலிருந்து பெரிய ஃபைவ் ஸ்டார் சாக்லெட்டை எடுத்து அவன் முன் ஆட்டினாள்.. கீழே இறங்கிய கண்ணாடியின் வழியே கண்கள் விரிய அகலத் திறந்த வாயில் வாநீர் வழிய லபக்கென பற்றினான் ஸ்ரீதர்.. " பவி... தாங்க்ஸ்... போயிட்டு வா.. நா வரல.. " கூறிக் கொண்டே சாக்லெட்டை பிரித்தபடி உள்ளே ஓடினான் ஸ்ரீதர்..

அவனை சமாளிக்க உதவியாய் இருக்கும் என ஏற்கனவே வாங்கி வைத்த சாக்லேட் கைகொடுத்ததை நினைத்து சிரித்தபடி வேகமாக நடையைக் கட்டினாள் பவி..!

நீல வானம் சூரியனின்றி மங்கி இருக்க ஆங்காங்க வெண்மேகங்கள் ஆடையென தவழ்ந்து கொண்டிருந்தது.. நட்சத்திர பட்டாளம் வைரக் கற்களாய் ஜொலிக்க அந்திப் பொழுது ஆனந்தத்தை பொழிந்து கொண்டிருந்தது..!

மங்கள இசையுடன் தெய்வீக மணம் கமழ கோயில் வாசலை அடைந்தவள் மெள்ள சந்நதியை நோக்கி நடந்தாள். சுற்றும் முற்றும் கண்கள் அவனைத் தேடியது..! அதிகக் கூட்டமில்லாமல் ஒன்றிரண்டு பேர் பிரகாரத்தை சுற்றிக் கொண்டிருக்க கர்பகிரகத்தின் முன் நின்று கை கூப்பி கண்மூடினாள். கடவுளை தரிசித்துவிட்டு திரும்பியவள் பின் வெள்ளை வேட்டி சட்டையில் கண்கள் மூடி கம்பீரமாக நின்றிருந்தான் ரிஷி. வெண்மையான நெற்றியில் சந்தனமும் குங்குமமும் பளிச்சிட சுருண்ட கருமை முடிக் கொத்து நெற்றியில் தவழ்ந்து விளையாடியது.. சிவந்த கன்னங்களும் தடித்த மீசையும் இணைய மறுத்த அவன் சிவந்த உதடும் அவனை அழகாகக் காட்டியது.. இவன் எனக்கானவன் என்ற சிறிய கர்வம் மனதில் தலைதூக்க கண்ணகலாமல் அவனையே பார்த்தாள் பவித்ரா..

கூப்பிய கைகளை தளர்த்தி கண்களை விழித்தவன் முன் செந்தாமரையாய் நின்றிருந்தாள் பவித்ரா.. பின்னி முடிந்த கூந்தல் இடையுடன் சேர்ந்தாட.. மெல்லிய புருவங்கள் மத்தியில் வரைந்த கோபிப் பொட்டு இதழில் நிறத்துடன் போட்டியிட.. கோலிக் குண்டு கண்கள் அவனையே நினைத்து மேலேற.. நீள்வட்ட முகத்தின் கள்ளமில்லா சிரிப்பும் அவனை கொள்ளை கொண்டது.. அவளை பார்த்து பிரமித்தவன் சுதாரித்து கடவுளை கும்பிட்டு இவளிடம் திரும்பினான்..

தன்னை நிலை மறந்ததை நினைத்து வெட்கப்பட்ட பவியும் தலையை தாழ்த்திக் கொண்டாள்.. ஆரத்தியை பெற்றுக் கொண்டு இருவரும் வெளியே வந்தனர்... இடைவெளி விட்டு..!

கைகோர்த்து நடக்க வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் இருந்தாலும் இடைவெளிவிட்டே நடந்தனர் இருவரும்..! பிரகாரத்தில் காலாற நடந்தபடியே ஒருவரை ஒருவர் பார்வையில் பேசிக் கொண்டனர்..

" சாரி.. உங்க ஃப்ரெண்ட் இருப்பாங்கன்னு தெரியாம போன் பண்ணிட்டேன்.. "

" பரவால்ல.. அவளுக்கும் தெரிஞ்சு போச்சு.. "

" ஐயோ... அப்பறம்... "

" ஹாஹா.. அவ என்னோட க்ளோஸ் பிரண்ட் தான்.. அவகிட்ட நான் எதையும் இதுவர மறச்சதில்ல.. பட்.. இந்த விஷயம்... சொல்லல... ஹா... நீங்களே சொல்லவெச்சுட்டீங்க..." சிரித்தாள்..

" ஓ... அப்ப நல்லது தான்.. தனியா மீட் பண்ண ஹெல்ப் பண்ணுவாங்கள்ள.. "

" ம்ம்ம்... " கண்களில் காதல் வழிந்தது..

நடந்த களைப்பில் படியில் அமர்ந்தனர்.. கொஞ்சம் தூரமாய்..!

" அப்பறம்.. உங்களுக்கு என்ன பிடிக்கும்.." பவி ஆர்வமுடன் அவனது விருப்பங்களை அறிந்து கொள்ளக் கேட்டாள்..

" உன்னத் தான் பிடிக்கும்.. " கண்கள் மின்ன அவன் சிரிக்க..

" ஹய்யோ... " வெட்கத்தில் தலை குனிந்தாள்.

" இப்போதைக்கு உன்ன.. உன்ன மட்டும் தான் பிடிச்சிருக்கு.. கண்ண மூடினா கனவுல வர்ர.. கண்ணத் திறந்த நீ தான் இருக்க.. யாரப் பாத்தாலும் நீயாத் தெரியற.. இப்பக் கூட பாரு.. அந்த நிலால கூட நீ தான் தெரியற.. நீலக் கடல்ல நீந்தற அன்னப் பறவை மாதிரி.. வைரத்த எறச்சுவிட்ட நட்சத்திரத்துக்கு நடுவுல.. தேவதை மாதிரி நீ தான் தெரியற.. " அண்ணாந்து அவன் வானத்தையே பார்க்க..

கடகடவென சிரித்தாள் பவி.. முழுமையாய் அவனில் கலந்தாள்.." உண்மையாவா.. ஆ... கவிஞர்கள்லாம் பொய் சொல்வாங்கன்னு கேள்விப் பட்ருகேனே.. இந்த கவிஞரும் அப்டித்தானா... "

" ஹா... காதலிக்கற ஒவ்வொருத்தரும் கவிஞர் தான்.. அதுவும் உன்ன மாதிரி பொண்ணு பக்கத்தில இருந்தா.. கற்பனை பொங்காதா என்ன.."

இவர்களை விநோதமாகப் பார்த்துக் கொண்டே ஒருவர் படியேறச் செல்ல , அமைதியாயினர் இருவர்..

நேரம் போவதே தெரியாமல் ஏதேதோ கதை பேசினர்.. மனம் விட்டு..! மனதினை பறிமாறிக் கொண்டு.. உணர்வுகள் ஒன்று கலக்க..!

வானம் முழுமையாய் இருட்ட.. சுற்றியிருந்த விளக்குகள் பிரகாசிக்க இறுதி பூஜையின் மணி ஒளிக்க... நினைவு வந்தவளாய் அவசரமாக கடிகாரத்தை பார்த்தாள்.. நேரம் எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது..

" ஐயோ.. டைம் ஆச்சு.. நான் கெளம்பறேன்.. ப்ளீஸ்.. அப்பறம் பாக்கலாம்.."

" எப்போ... " ஆர்வமாய் அவன் கேட்க.. திகைத்தாள்..

" எப்பன்னா... எப்டி சொல்றது... "

" சன்டே... காபி ஷாப்.. " புருவத்தை உயர்த்தி வினவினான்..

" ம்ம்ம்... சரி.. " அவசரத்தில் தலையாட்டிவிட்டு வேகமாக நடந்தாள். அவள் செல்வதையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ரிஷி..

கோயிலின் நடை சாத்த , புறப்பட்டு வீட்டிற்கு வந்தான்.. ஹாலிலே சுந்தரவல்லியும் , சந்திரசேகரும் அமர்ந்திருக்க அசதியுடன் அமர்ந்தான்..

" என்னடா... பட்டு வேட்டியும் சட்டையுமா இருக்கே.. எங்க போய்ட்டு வந்தே.. அம்மா லேடிஸ் க்ளபுக்கு போய்ட்டு வர்ரதுக்குள்ள.. சொல்லவே இல்ல.. ஏண்ணா.. எங்க போனான்.." சுந்தரவல்லி சந்திரசேகரிடம் கேட்க..

" நேக்கென்ன தெரியும்... எங்கயோ வெளில போனும்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்.. இப்போ எங்க போனா என்ன.. ஆம்பள பையன் நாலு எடத்துக்கு போய்ட்டு தான் வரனும்.. பொம்மணாட்டிகள் தான் ஆத்த பாத்துண்டு அடக்கமா இருக்கனும்.. நான் சிங்கக் குட்டிய பெத்தவன்.. எனக்கென்ன பயம்.. ராஜாவாட்டம் எப்டி இருக்கான் பாரு.. அத விட்டுட்டு எங்க போனே.. எதுக்கு போனே ன்னு.. ஹ்ம்ம்.." வெறித்தார் அவளை...

" அச்சோ.. இதுக்கு போய் கோச்சுண்டு.. ஏன்டா ரிஷி.. எங்க போனே..."

" சும்மா... கோயிலுக்கு போனும்னு தோனித்து.. அதான்.. "

" என்கிட்ட சொல்லிருந்தேன்னா நானும் வந்திருப்பேன்ல்யோ.. மார்கழி மாசம் முட்டும் போனது.. ரொம்ப நாளாயிடுத்து.. பரவால்லை.. அடுத்த வாரம் போயிக்கலாம்.. ரிஷி.. கண்ணா.. என் கண்ணே பட்டும் போல இருக்கு.. பட்டு வேட்டி சட்டைல மாப்ளையாட்டம் இருக்கே.. இப்டியே எந்த பொண்ணாவது பாத்தா ஒடனே தாலி கட்டிக்கறேன்னு கூட வந்துடுவா.. ஹாஹா.."

பெருமிதத்துடன் தன் மகனை பார்த்தார் சந்திர சேகர்.. " என் பையனுக்கு என்னடி குறை.. ராஜகோபாலசாரியார் வம்சம் சோட போகுமா.. எல்லாரும் ராஜாவட்டம் தேஜஸ்வியா தான் இருப்பா என்னாட்டம்.. எம்பையனாச்சே.. அவன கல்யாணம் பண்ணிக்கு ஆயிரம் பொண்கள் க்யூல நிப்பா.. டேய் கண்ணா... இப்பவே ம் ன்னு சொல்லு.. எத்தன பொண்கள் ஜாதகம் குவியறதுன்னு பாரு.. பாக்கட்டுமா... " அவர் கேட்க..

கூச்சத்துடன் சிரித்தான் ரிஷி.. " இப்போ எதுக்குப்பா... கொஞ்ச நாள் போகட்டும்.. பாத்துகலாம்.. "

" ஏன்டா.. வயசு என்ன ஆறது.. உன் வயசுலே எனக்கு கல்யாணம் ஆகி நீ அஞ்சு வயசு... தெரியுமோன்னோ.. ஹூம்.. எங்களுக்கும் வயசாறது.. பேரன் பேத்திய பாக்க ஆச இருக்காதா.. உன் அம்மா பாக்கத்தான் சிரிச்சு பேசிண்டு சுத்தின்டு இருக்கா.. உடம்பில சத்தே கெடையாது.. நோதுகுளி.. ஜில்லா ஜட்ஜ் பேத்தி, பெரிய குடும்பம் அடக்கமான பொண்ணுனு கட்டிட்டா.. இவா வகையறாவ பத்தி சொல்லனும் னா இன்னைக்கு முழுக்க போதாது... ஹூம்.. " அவர் வெறுப்புடன் பழைய கதையை கிளர.. தடுமாறிய சுந்தரவல்லி அவரை அமைதி படுத்த பேச்சை மாற்றினாள்.

" விடுங்கோ... இப்போ எதுக்கு பழங்கதைய பேசிண்டு.. காலாகாலத்ல அவனுக்கு ஒரு பொண்ண பாத்து முடிக்க பாக்கனும்.. அதவிட்டுட்டு.. எதை எதையோ பேசிண்டு இருக்கேளே.. கண்ணா.. நீ போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணின்டு வா.. சாப்படலாம்.." கொஞ்சம் கலவரத்துடன் ரிஷியை அங்கிருந்து அனுப்பினாள் சுந்தரவல்லி.. அவன் கிளம்பிச் செல்ல தயக்கத்துடன் சந்திர சேகரை பார்த்தாள் சுந்தரி..

இரவு..

கால்மேல் காலைப் போட்டபடி மெத்தையில் சாய்ந்து படுத்திருந்தார் சந்திரசேகர்.. உறக்கம் வராமல் அமர்ந்து கொண்டிருந்தாள் சுந்தரவல்லி..

" என்னடி. சுந்து.. தூங்கலையா.. என்ன யோஜனை.. "

" இல்ல.. ரிஷிக்கும் கல்யாண வயசாயிடுத்து.. அவனுக்கும் நம்ம அந்தஸ்துக்கு ஏத்தா மாதிரி வசதியான எடத்துல ஒரு பொண்ண பாத்து கட்டி வெச்சுட்டா நிம்மதி.. "

" அதுக்கு எதுக்கு கவலப்பட்டுண்டு இருக்க.. நேரம் வந்துடுத்துன்னா எல்லாம் காலா காலத்ல நடக்கும்.. இப்பவே நெனச்ச ஒடனே கல்யாணம் நடந்திடுமா.. கண்டதப் போட்டு குழப்பிக்காம
பேசாம படுத்து தூங்கு.."

" அதில்லேணா.. எங்க லேடிஸ் கிளப் பிரசிடென்ட் அகிலா வைத்யநாதன் இருக்கால்யோ.. அவ பொண்ணு ஜனனி.. நன்னா படிச்சவ.. வெளிநாட்டுக்கெல்லாம் போய் படிச்சிருக்கா.. அழகா இருப்பா.. நீங்க கூட எங்க செக்ரட்டரி பையன் கல்யாணத்துக்கு வந்தப்ப பாத்தேளே.. நியாபகம் இருக்கா.. அவ தான்.. சொத்து பத்து அந்தஸ்து எல்லாம் நமக்கு மேல தான்.. சொத்து பத்தே நூறு நூத்தம்பது கோடிக்கு மேல தேரும்.. அகிலா ஆத்துக்காரர் பெரிய பிஸ்னஸ் மேக்னட்.. ஜனனி நுனிநாக்குல இங்கிலீஷ் பேசினா நாலெல்லாம் கேட்டுண்டே இருக்கலாம்.. ஜோவியலா எல்லாரோடையும் நன்னா பழகறா.. மேல்நாட்ல இருக்கறவா மாதிரி என்னமா மார்டர்னா இருக்கா தெரியுமா.. ரிஷிக்கு பொறுத்தமான ஜோடி.. அவளையே முடிச்சுடலாமான்னு யோசிக்கறேன்.. என்ன சொல்றேள்.."

அவள் கூறக் கூற முகம் கடுகடுத்தது சந்திர சேகருக்கு..

" உனக்கென்ன பைத்தியமா.. பணமிருந்தா.. என்ன பெரிய அந்தஸ்து.. நாம என்ன கொறஞ்சவாளா.. அதுமில்லாம அங்கையும் இங்கயும் அலஞ்சதுகள்லாம் சரிப்பட்டு வராது.. மெத்த படுச்ச பொண்கள் தலகனத்தோட திரியுங்கள்.. மரியாதை மட்டெல்லாம் இருக்காது.. பெரியவாள மதிக்கற ஆத்துக்கு அடங்கின பொண் தான் நம்ம ரிஷிக்கு சரிப்பட்டு வரும்.. நாளைக்கே கல்யாணம் முடுஞ்சு வேலைக்கு போறேன்னு வெளில கெளம்பிட்டான்னா.. இவன பொண்டு சட்டிமாதிரி ஆத்ல ஒக்காந்து சமைக்க சொல்றியா.. என் பையன் ஆம்பள சிங்கம்.. இவன் பின்னாடிதான் அவ தலை குனிஞ்சு வரனும்.. அவ பின்னாடி இவன் தல குனிஞ்சு போகப்டாது.. அந்த பொண்ணு வெளிநாட்டுக்கு போயெல்லாம் படிச்சுட்டு வந்துருக்கான்னு சொல்றே.. எப்டி எப்டி இருந்திருப்பாளோ.. யார் கண்டது.. கண்ட கழிசடைகள்லாம் நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்.. அப்பறம் என் ப்ரெஸ்டீஜ் என்ன ஆறது.. ஹூம்.. குடும்பப் பொண்ணா கண்ணுக்கு லட்க்ஷணமா அவனுக்கு அடங்கி இருக்கற பொண்ணாத்தான் அவனுக்கு பாக்கனும்.." படபடவென அவர்கூற மலைத்துபோனாள் சுந்தரவல்லி..

" இ... இல்லண்ணா.. அவ.. அவ பரதநாட்யம்லாம் கத்துண்டு இருக்கா.. ட்ரெடிஷ்னல் தான். நன்னா ஆடறா.. நெறைய ப்ரோக்ராம் பண்றா.. நம்ம ரிஷிக்கு... பிடிக்கும்... அவாள்ட பேசி பா....." அவள் முடிக்கும் முன்னே..

" ரொம்ப நன்னாருக்கு நீ பொண் பாக்கற லக்ஷணம்.. அவ ஆடட்டும் நாமெல்லாம் சுத்தி ஒக்காந்து தாளம் போடுவோம்.. என்ன.. ரொம்ப நன்னாருக்கும்.." நக்கலாக அவளை பார்த்து சிரித்தார்..

" இதுல என்னனா இருக்கு... டான்ஸ் ஆடறது பெருமை தானே.. "

" நன்னா.. பேஷா ஆடட்டும்... யார் வேண்டாம்னா.. அது அவோ இன்ட்ரஸ்ட்.. அத வேண்டாம்னு சொல்றதுக்கு நமக்கு எந்த ரைட்சும் கெடையாது.. நம்ம ரிஷிக்கு வேண்டாம்னு சொல்றேன்.. " அவள் வாயை அடைத்தார்.

அதற்குமேல் பேச ஏதுவுமின்றி மெளனமானாள் சுந்தரவல்லி..!

அப்பா பிள்ளை இருவரும் இப்படி இருக்கிறார்களே என்ற வருத்தம் அவளை அலைக்கழித்தது.. அகிலாவிடம் பேசி அவளை சம்மதிக்க வைத்தாயிற்றே.. இனி என்ன செய்வது என குழம்பினாள்.. எப்படியாவது ரிஷியை சம்மதிக்க வைத்துவிட்டால் போதும் என இருந்தது அவளுக்கு.. அவன் மூலம் இவரை சரி கட்டிவிடலாம் என திட்டம் மனதில் ஓடியது.. அடுத்த முயற்சியாக என்ன செய்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள்.

பெரிய சம்பந்தம் கைவிட்டு போய்விடக் கூடாதே என்ற கவலை அவளை தாக்க உறக்கம் வராமல் யோசித்தபடியே அந்த இரவுப் பொழுதை கடத்தினாள் சுந்தரவல்லி..!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 18

ஏற்கனவே பேசி வைத்தாற்போல் பவி ஞாயிற்றுக் கிழமை ரிஷிப் பார்க்கவேண்டும் என மதியம் ரம்யா வீட்டிற்கு செல்வதாய்க் கூறி கிளம்பினாள்..

" ஹாய்.. பவி... வா..வா.. ரொம்ப நாளாச்சு நீ எங்கவீட்டுக்கு வந்து.. "

" என்னடி பண்ணிட்டு இருக்க ரம்பம்.. வீட்ல யாரையும் காணும்.."

" அம்மாவும் தம்பியும் ஒரு மேரேஜ் பங்ஷனுக்கு போயிருக்காங்க.. நமக்கு இந்த கூட்டம்லாம் ஆகாதா.. அதான் நிம்மதி தூங்கிட்டு ஃப்ரீயா இருக்கேன்.. என்ன சாப்படற.. "

" ஒன்னும் வேணாம்.. படிக்கறதெல்லாம் இல்லையோ.. எப்பபாரு தூக்கம் , சமையல் இதானா.. "

" ஹூம்.. நல்லாத்தான் கேக்கற.. பைனல் இயர் எக்ஸாம் வேற நெருங்கிருச்சு.. படிக்கனும்.. ஆனா இந்த புக்க பாத்தாலே தூக்கமா வருதே.. ஏன்டி.."

" வரும்.. ஏ வராது.. ஒழுங்கா படுச்சு பாஸாகற வழியப் பாரு.. நீதான அடுத்து எல்லாம்.."

" சரிதான் பவி.. அத நெனச்சாத்தான் பயமா இருக்கு.. கஷ்டப்பட்டு அம்மா எஞ்சினியரிங் சேத்துவிட்டுடாங்க.. படுச்சு வேலைக்கு போயி அவங்களுக்கு ரெஸ்ட் குடுக்கனும்.. எனக்கும் ஆசையாத் தான் இருக்கு.. பட் இந்த சோம்பேறித்தனத்தால படிக்கவே போரா இருக்கு.."

" அடி.. போரா.. இனிமே அந்த மாதிரி சொல்லக் கூடாது.. எவ்ரி சன்டே நானும் வரேன்.. சேர்ந்து படிக்கலாம்.. இந்த எக்ஸாம்ல நல்ல மார்க் எடுத்தாத்தான் கேம்பஸ் இன்டர்வ்யூ எதாவது அட்டன்ட் பண்ணி கம்பெனில நுழையலாம்.. இப்ப இருக்கற சூழ்நிலைல வேல கிடைக்கறதே குதிர கொம்பா இருக்கு.. "

" சரிதான் பவி.. உனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. என்ன மாதிரியா.. நீ கல்யாணம் பண்ணிட்டு ஊறுகாய் கம்பெனி நடத்த போயிடுவ.. வேலைக்கா அலையனும்.."

" ஏய்... அடி.. நக்கலடிக்கறியா.. உன் விளையாட்டு புத்தி போகவே போகாது.. ஒழுங்கா புக்கெடு... படிக்கலாம்.. " அவளை கடிந்து கொண்டாலும் அவள் கூறியது ஏனோ வெட்கம் பரவச் செய்தது.. அவனுடன் தனக்கு திருமணம்.. நினைக்க நினைக்க வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது..

அந்த சிந்தனையை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இருவரும் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தனர். சந்தேகங்களை பேசி களைந்தபடி படிப்பில் ஆழ்ந்தனர்..

நேரம் ஐந்தரையைத் தொட , பவியின் போன் ஒலிக்க ஆரம்பித்தது..

எடுத்துப் பார்த்தவள் தயங்கினாள்.. " ரம்மி... நான் கெளம்ரேன்டி... நே..நேரம் ஆச்சு.."

" ஓய்... என்ன... எப்பவும் ஆறு ஏழு மணிவரைக்கும் இருப்ப.. இப்ப என்ன.. அவர்ர்ருக்கிட்டேந்து காலா.. "

வெட்கமாக தலை அசைத்தாள் பவி..

" ஹூம்... இனிமே இருன்னு சொன்னா நீ கேக்கவா போற.. நடத்து நடத்து.."

" தாங்க்ஸ் டி.. கிளம்பரேன்.." வேகமாக பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் பவி..

காஃபி ஷாப்...

முதன் முறை இருந்த பயம் கொஞ்சம் அகன்று ஆர்வமுடன் உள்ளே நுழைந்தாள் பவி.. எப்பொழுதும் போல கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தான் ரிஷி அதே விரிந்த புன்னகையுடன்.. பார்த்தவள் சிறிய புன்னகை சிந்தியபடி நடந்து சென்று அமர்ந்தாள்.. வழியில் மூன்று முறை அவனிடம் பேசிய போதும்
புதிதாக பார்த்துக் கொண்டனர் இருவரும்..!

" ஹாய்.. என்னாச்சு முகம் டல்லாருக்கு.." கேட்டான்.

" அதெல்லாம் ஒன்னுமில்ல.. எக்ஸாம் நெருங்கிட்டு இருக்கு.. சோ.. ஆப்டர்நூனே ஃப்ரெண்ட் வீட்டுக்கு வந்துட்டேன்.. படிச்சுட்டு இருந்தோம்.. நீங்க.. கால் பண்ணீங்களா.. அதான்.. ஒடனே கெளம்பி வந்துட்டேன்.."

" ஓ.. நைஸ்.. நல்லா படிப்பியா.. "

" ஏதோ ஓரளவுக்கு.. க்ளாஸ் பர்ஸ்ட் இல்ல.. பட்.. எபோவ் செவன்ட்டி தான்.."

" தட் சவுண்ட்ஸ் குட்.. ஹாஹா... நானும் அப்டிதான்.. ரொம்ப படிப்பாளிலாம் இல்ல.. க்ளாசுக்கு மக் அடிச்சுட்டு ப்ரென்ட்சோட ஊர சுத்துவேன்.. பட்... எக்ஸாம்ஸ் வந்தா சீரியஸ் ஆயிடுவேன் நல்ல பையனா.. "

" ஹாஹா... அப்பறம்.. உங்களுக்கு எதுல இன்ட்ரஸ்ட்.. அன்னிக்கே கேட்டேன்.."

" அன்னிக்கே சொன்னேனே.. நீ தான்னு.."

" ஹே.. ப்ளீஸ் ரிஷி.. ஓஹ் சாரி.. அப்டி கூப்படலாமா..."

" என் பேரு அதானே.. தாராளமா கூப்படலாம்.. எனக்கு அவுட் டோர் கேம்ஸ் ரொம்ப பிடிக்கும்.. தென் ட்ரெக்கிங்.. ஃப்யூ டைம்ஸ் போயிருக்கேன்.. எக்ஸைட்டிங்.. உனக்கு என்ன பிடிக்கும்..."

" எனக்கு... பாடுவேன்.. பாட்டுன்னா ரொம்ப இஷ்டம்.. எம்பாட்டி கூட நன்னா பாடுவா.. "

" ஓ.. ரியலி... உனக்கு பாட்டி இருக்காங்களா.. நைஸ்.. வீட்டுல எல்டர்ஸ் இருந்தாலே ஒரு சந்தோஷம் தான்.. ஐ ரெஸ்பெக்ட் எல்டர் பீப்பிள்.. அவங்க அனுபவஸ்தர்கள்.. வாழ்க்கையோட வலி என்னன்னு புரிஞ்சவங்க.. நான் பெரியவங்க வார்த்தைக்கு கட்டுப்படுவேன்.. நான் அம்மா செல்லம் தான்... அப்பாதான் கொஞ்சம் ஸ்ரிக்ட்.. எதாவது வேனும் த்ரூ அம்மா தான்.. என் அப்பா பேச்ச தட்ட மாட்டேன்.." அவன் கூற பவிக்குள் மெல்லிய சங்கடம் முளைத்து அடங்கியது.. அன்று அவன் வீட்டுக்கு சென்ற போது ரிஷியின் அப்பா நடந்து கொண்ட முறை அவளை கோபமுறச் செய்திருந்தது.. பெண்களை கட்டுப் பெட்டித்தனமாக பார்க்கும் அவரின்
குணம் பவிக்கு ஓர் அலர்ச்சியை அவர் மீது ஏற்படுத்தி இருந்தது.. ரிஷியும் அப்படி இருப்பானா என்ற சந்தேகம் அடிமனதில் கேள்வியை எழுப்பி பயத்தை உண்டு பண்ணியது.. " சே.. சே.. அவன் அப்படி இல்ல.. பெண்கள மதிக்கறவன்.. நான் கோபப்பட்டப்போ கூட தன் தவற புரிஞ்சு என்கிட்ட பேசினவனாச்சே.. என் ரிஷி அப்படி இல்ல.. " நம்பிக்கை ஊற்று அவளை முகம் மலரச் செய்தது..

" உன் வீட்ல நீ யார் செல்லம்.."

" எல்லாருக்கும்.. ஹாஹா... முக்கியமா பாட்டிக்கு.. பாட்டிக்கு பெட் நான்தான்.. எனக்கு செல்லம் என் தம்பி.. அறுந்த வாலு... ஹாஹா.." கண்களில் அன்பு குடிகொண்டது அவளுக்கு..

" அன்னிக்கு உன்கூட வந்தானே அவனா.. உனக்கு கூடப் பொறந்தவங்க எத்தன பேர்.."

" நானும்.. என் தம்பியும் மட்டும் தான்.."

" வெரி நைஸ்.. ஐ லைக் தட் பாய்.. " அவன் கூறிக் கொண்டிருக்க சுற்றுமுற்றும் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என கொஞ்சம் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பவி..

" என்னாச்சு பவி.. "

" அ... ஒன்னுமில்ல... இங்க அடிக்கடி என் பிரண்டோட வருவேன்.. தெரிஞ்சவங்க யாராவது வந்துடுவாங்களோன்னு ஒரு... "

" ஹ்ம்.. அப்போ.. வேற எங்கயாவது போலாமா.. உனக்கு விருப்பம்னா.."

" இ... இல்ல.. இப்போ எங்கயும் வேண்டாம்.. டைம் வேற ஆச்சு..."

" ஏன்.. என்கூட வண்டில வரமாட்டியா.. ம்ம்ம்.. பயமா..."

" அ... அதெல்லாம் இல்ல.. நெக்ஸ்ட் டைம் வேணா... போலாமே.." தயக்கத்துடன் அவனை பார்த்தாள்..

" ஹஹ.. சரி... அப்பறம்... " அவன் ஏதோ கேட்க வாயெடுக்க.. கடிகாரத்தையே பார்த்தபடி தவிப்புடன் இருந்தாள்..

" என்ன பவி.. டைம் ஆச்சா.. " சிரித்தான்..

" ஃப்ரெண்ட் வீட்டுக்கு போய்ட்டு வரேன்னு வீட்ல சொல்லிட்டு வந்தேன்.. அ.. அதான்.." சங்கடத்துடன் சிரித்தாள்..

" ஹ்ம்ம்.... உன்கூட இருக்கற கொஞ்ச நேரம் எனக்கு அந்த நாள் பூரா சந்தோஷத்த குடுக்குது.. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தின்னா இன்னும் ஹேப்பி ஆகும்.. ஹ்ம்ம்.. வாட் டு டு.. " அவளை ஏக்கத்துடன் பார்த்தான்.. தலை கவிழ்ந்து சிரித்தாள்..

" சரி.. நெக்ஸ் எப்போ தரிசனம்.. எங்க.. ஃபிரை டே.. கோயில்.. ஓகே வா.. " அவன் கேட்க..

" அப்பறம் போன் பண்ணி சொல்றேனே.. "

"ஹ்ம்ம்.. ஓகே.. அப்பறம்... கடைசியா.. போறதுக்கு முன்னாடி.. ஒரே.. ஒரு.. " அவன் விவரமாய் பார்க்க..

" ஹய்யயோ... நோ.. நோ.. " கூச்சத்தில் குறுகியபடி எழுந்து கொண்டாள்.. " அப்பறமா... "

" ஹ்ம்... போன்ல மட்டும் தானா.. "

" ஹாஹா.. எஸ்... பை.... " கை அசைத்துவிட்டு விடை பெற்றாள்..

காற்றாய் மறைந்து போனாள் அவன் கண்களை விட்டு..! கலையாத கனவாய் நின்றாள் கண்களில்..! காதல் தான் எத்தனை சுகமானது... சுகமான இம்சை.. உள்ளத்தில் பரவி உடலை பிழிந்தெடுக்கும் கண்ணுக்கு தெரியாத நோய்.. மருந்தினால் ஆற்ற முடியா பெருநோய்.. சிலருக்கு சிலகாலம்.. பலருக்கு பலகாலம்.. உயிர்வரைத் தீண்டி தித்திக்கும் தேன்.. பருவகாலத்தில் உருவாகும் காதல் பகடைக் காயாய் உருட்டி அல்லவா விளையாடுகிறது.. ஒன்றை மட்டுமே காட்சிபடுத்தி.. ஹார்மோன்களில் களியாட்டமாக..! சிறு உரசல் கூட சிலிர்ப்பை உண்டு செய்கிறதே.. கண்களின் தீண்டல் கூட காயத்தை உண்டு செய்கிறதே.. கரையேற நினைத்தாலும் இயலாத பேராழி அல்லவா.. இனிக்கும் கடல்.. மூழ்கி மூழ்கி மூச்சடைத்து முத்துக்குளிப்பதில் அலாதி இன்பத்தை தரும் ஆனந்த அறல் அல்லவா..! அதனில் மூழ்கிப் போய் வெளிவர விரும்பாமல் அவள் கடந்த பாதையையே பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி. அவளே தன் எல்லாம் என..!

இங்கு..

என்ன செய்வது என்ற குழப்பத்துடன் தடுமாறிக் கொண்டிருந்தாள் சுந்தரவல்லி..!

"அகிலாட்ட பேசி நல்ல நாளா பாத்து நம்பாத்துக்கு பேச வரச் சொல்லிட்டா.. மிஸ்டர் வைத்யநாதன் எவ்ளோ பெரிய பிஸ்னஸ் மேன்.. அவரும் அகிலாவும் வந்து இவர்ட்ட பேசினா என்ன சொல்ல முடியும்.. ஒப்புத்துக்குண்டு தானே ஆகனும்.. ரிஷி சின்ன பையன்.. அப்பா பேச்ச தட்டுவானா.. ரெண்டு பேரையும் சரிகட்ட இதவிட்டா வேறவழியில்ல.. " விபரீதமான சிந்தனை ஓடியது சுந்தரவல்லி மனதில்..!

தாமதிக்காமல் அகிலாவிற்கு போனடித்தாள் சுந்தரவல்லி.. ரிங் போய்க் கொண்டே இருந்தது.. மறுபடியும் அடித்தாள்.. மூன்று நான்கு ரிங் போக போனை எடுத்தாள் அகிலா..

" ஹலோ.. "

" ஹாய் அகிலா.. சுந்தரி பேசறேன்.. ஹவ் ஆர் யூ.. "

" யா ஃபைன் சுந்தரி.. டெல் மி.. "

" உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்.. பேசலாமா.. "

" என்ன விஷயம்.. "

" இல்ல நம்ப ஜனனி ரிஷி விஷயமா பேசலாம்னு.."

" ஓ... ரியலி சாரி சுந்தரி.. ஜனனிக்கு நார்த் சைட் டான்ஸ் ப்ரோக்ராம் நாலஞ்சு பிக்ஸ் ஆகி இருக்கு.. இப்போ கெளம்பிண்டே இருக்கோம்.. எய்ட்டோ கிளாக் ஃப்ளைட்.. சோ.. ப்ரோக்ராம் முடிய ஒரு ட்வென்டி ட்வென்டி ஃபைவ் டேஸ் ஆகும்.. அங்க ஃப்ரீயா பேச முடியாது.. சோ வந்ததும் பேசிக்கலாமா.."

" ஓ.. அப்டியா.. சொல்லவே இல்லையே.. சரி.. ஜாக்ரதையா போட்டு வாங்கோ.. பை.."

ஸ்ருதி இறங்கிப் போக போனை வைத்தாள் சுந்தரவல்லி.. " இன்னும் இருபது நாள் ஆகும்கறாளே.. சரி.. அவ மனசு மாறாம இருந்தா சரி.. இவாள மேனேஜ் பண்ணிக்கலாம்.. இந்த இடம் மட்டும் அமஞ்சுடுத்துன்னா.. என் லெவல் வேற தான்.." மனதில் புது உத்வேகத்தை கூட்டிக் கொண்டு வேலையில் மூழ்கினாள் சுந்தரவல்லி..

" யார் மம்மி போன்ல.. " ஜனனி கேட்க..

" சுந்தரி தான்.. வேற யாரு.. ஓகே பேபி கெட்டிங் லேட்.. கெளம்பலாமா.. டிரைவர் எங்க போய்ட்டான்.. " அகிலா பேசியபடியே வெளியேற ஜனனிக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது.. ரிஷியை நினைத்து.. அம்மாவிடம் கூறிவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளே ஓடியது.. அம்மாவை தற்போது மூட்அவுட் செய்வது சரியல்ல , சமயம் பார்த்து சொல்லிவிட வேண்டும் என தீர்மானித்தாள் ஜனனி..

நாட்கள் மெள்ள நகர்ந்தது..

அவ்வப் பொழுது போன்னில் பேசி , சிரித்து , வெட்கப்பட்டு , கூச்சம் கரைந்து வளர்ந்தது ரிஷி பவியின் காதல்..!

மறுவாரம் ஞாயிற்றுக் கிழமை..

காலையிலேயே ரிஷியின் அழைப்பு அவளை மனதாங்கலை தூண்டிவிட்டது.. ரம்யாவின் வீட்டுக்கு செல்வதாய் கூறிவிட்டு கிளம்பினாள் பவி..

ரம்யாவுடன் அரட்டை படிப்பு என நேரம் நகர டாண் என ஐந்தரைக்கு அழைப்பு விடுத்தான் ரிஷி..

" என்னடி ஒட்டகம்.. உங்காளு பயங்கரமா பங்க்சுவாலிட்டி மெயின்டன் பண்றான்.. கடிகார முள்ள பாத்துக்கிட்டே ஒக்காந்திருப்பான.. எப்படி உன்ன கூப்படலாம்னு... காலைல வந்ததும் ஒருமணி நேரம் கடலை போட்டீங்கள்ல.. அப்புறம் என்ன.. ஐயாவுக்கு நேர்ல பாத்தா தான் ஆகுமா.. ம்ம்ம்.. ஆமா ஒரு டவுட்டு.. அப்புடி என்னடி மணிக்கணக்கா பேசுவீங்க.. எல்லா லவ்வர்ஸூம் இப்புடித்தான் இருக்காய்களா.. "

" ஆ... நீயும் லவ் பண்ணி பாரு அப்ப தெரியும்.. " பவி நாணப் புன்னகையுடன் கூற..

" அய்யே.. சீ.. சீ.. நமக்கு அதெல்லாம் செட் ஆவாது... நைட்டு புல்லா கண்ண முழுச்சு யாரு பேசிட்டு கெடக்கறது... சும்மா பீச்சு பார்க்குன்னு சுத்திட்டு அன்பே கண்ணேன்னு அவன் வழிவான்.. நாதா கண்ணான்னு திரும்ப வழியனும்.. அய்யய்யே நமக்கு ஆகாதும்மா... நல்லா சமைச்சமா , வயிறு முட்ட தின்னிட்டு நிம்மதியா தூங்கினமான்னு இல்லாம.. அது சொர்க்கம்டி... நீ பாவம்.. "

" ஆமாடி... ஒரு விதத்துல ரொம்ப இம்சையாத்தான் இருக்கு.. அவன பாக்கலேன்னா.. அவன் பேசலேன்னா அந்த நாள் முழுக்க டல்லான மாதிரி இருக்கு.. பேசிட்டே இருக்கனும் போல இருக்கு.. பாத்தா.. பாத்துட்டே இருக்கனும் போல இருக்கு.. லவ்னா இப்டிலாம் இருக்கும் யோசிச்சு பாத்தது கூட இல்ல.. படத்துல காமிக்கறமாதிரி நாலு பாட்டு ரெண்டு டூயட்டோட முடியறதுன்னு நெனச்சேன்.. பட்.. ரியலி கஷ்டம்தான்.." அலுத்துக் கொண்டாள் பவி..

" ஹாஹா.. அனுபவி.. அனுபவி.. " நக்கலாக சிரித்தாள் ரம்யா..

" ஹே... டைம் ஆச்சு.. அவர் காத்துட்டு இருப்பாரு.. நான் கெளம்பரேன்.." பவி அவசரப்பட..

" அடியே.. மூஞ்சிய கீஞ்சிய கழுவிட்டு ஃப்ரெஷ்ஷா போடி... அப்புறம் ஒங்காளு பயந்துறப் போறான்.. "

" சீ... மூஞ்சியப் பாரு.. " கூறினாலும் சந்தேகம் எழ முகத்தை அலம்பிக் கொண்டு கிளம்பினாள்..

அவளுக்காய் காஃபி ஷாப் வாசலின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தான் ரிஷி..

" ஹாய்... கொஞ்சம் லேட்டாச்சு.. சீக்கரம் வந்துட்டீங்களா.." பவி படபடப்புடன் கேட்க..

" கூல்.. இப்பத்தான் வந்தேன்.. போலாமா.. "

" வாங்க உள்ள போலாம்.. " பவி காபிஷாப் உள்ளே நடக்க..

" ஹே... இங்க இல்ல... வேற எடத்துக்கு போறோம்.. வண்டில உட்காரு.."

" வண்டிலயா... " பவி தயக்கத்துடன் அவனை பார்த்தாள்..

" என்கூட வரமாட்டியா.. ம்ம்ம்.. நல்ல பையன்தான்மா நான்.. " அவன் பவ்யமாய் குனிந்து நிற்க , சிரித்தாள் பவி..

" ம்ம்ம்.. சரி.. இங்க வேண்டாமே.. யாராவது பாத்துட்டா.. அப்டி கொஞ்சதூரம் தள்ளி வரீங்களா.. ப்ளீஸ்.. நான் முன்னாடி போறேன்.." அவனை கெஞ்சலாக அவள் கேட்க..

" ஹூம்.. ஓகே... போலாம்.."

அவன் வண்டியை தள்ளிக் கொண்டு வர பவி முன்னால் நடந்தாள்... அந்த ரோட்டைத் தாண்டி சிறிது தூரம் சென்று நின்று கொண்டாள்..

அருகில் வந்த ரிஷி.. " வண்டில ஏற இங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே மேடமுக்கு.. " அவன் குறும்பாகக் கேட்க ,

" இல்ல... " சிரித்தபடி வண்டி அமர ஆயத்தமானாள்.. முன்னால் அவன் அமர்ந்திருக்க அவன் தோளை பற்றாமல் எப்படி ஏறி அமர்வது என்று தடுமாற.. " பரவால்ல.. என்ன பிடிச்சுட்டு உட்காரு.. "அவன் ஒப்புதலுடன் தலை அசைத்தான்.. தனை மீற வந்த வெட்கத்தில் தலை குனிந்த படியே மெள்ள அவன் தோளினை பற்றிக் கொண்டு மெதுவாக ஒருபுறமாக ஏறி அமர்ந்தாள்.. முதன் முறை இருவரின் தேக ஸ்பரிசம் உள்ளுக்குள் ஓர் கிளர்ச்சியை உண்டு பண்ணியது.. அவளது பஞ்சு விரல்கள் அவனது தோளினில் பதிந்து தீயாய் சுட பறப்பது போல் இருந்தது அவனுக்கு.. அவனது வலிந்த தோளினை பற்றியவள் உள்ளுக்குள் பூகம்பம் வெடிக்க தனையறியாமல் அவனது தோளினை அழுந்தப் பற்றினாள்.. சில கணங்களில் தன்னிலை உணர்ந்து
கைகளை சட்டென விடுவித்து தன் மடியில் வைத்துக் கொண்டாள்.. இருவரின் மெல்லிய தேக உரசல் அனலை பற்றச் செய்தது.. உடலின் வெப்பம் கூடியது.. அவனது இருப்பு அவளுக்கும் , அவளது இருப்பு அவனுக்கும் ஓர் மன நெருக்கத்தை உண்டாக்கியது.. ஒருவருடன் ஒருவர் கலந்த நிலையாக..!

வாகனத்தை மெல்ல இயக்கினான்.. மேலே படர்ந்த மாலைநேர வாடைக் காற்று உள்ளுக்குள் ஏதோ செய்தது.. அங்கங்கே சாலைத் தடங்களில் இவளது கைகள் அவனது முதுகை உரச உணர்ச்சிப் பெருக்கில் இருவரும் லயித்தனர்.. அரைமணி நேரப் பயணம் நொடிநொடியாய் உணர்வில் கலந்து நெடுந்தூரப் பயணமாக்க அந்த நெடுஞ்சாலையைத் தாண்டி பரந்து விரிந்த கடற்கரையை அடைந்து நின்றது வண்டி..!

மறுபடியும் அவன் தோளைப் பற்றி இறங்கினாள்..!

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.. இருளை நோக்கி நகர்ந்த வானம் ஒளியினை மங்கச் செய்ய நீல நிறத்தை துறந்து கடலும் கருஞ்சாயம் பூசிக் கொள்ள ஆரம்பித்தது..! அடிக்கும் காற்றில் பறந்த ஆடையை இழுத்துபிடித்தபடி முகத்தில் கோலமிட்ட முடியினை ஒதுக்க இயலாமல் தவித்தாள் பவி..

அவனுக்கு அவளை பார்க்க ஒரு புறம் சிரிப்பாவும் ஒரு புறம் பாவமாகவும் இருந்தது.. " இஃப் யூ டோன் மைன்ட்.. நான் வேனா ஹெல்ப் பண்ணட்டுமா.. " அவன் கேட்ட , தயங்கியவளாய் தலை அசைத்தாள்..

முகத்தில் அலைந்த அவளது மென்மையான முடிக் கற்றையை தன் விரல்களால் பிடித்து அவள் நெற்றி பரப்பை வருடியபடி காதுமடலின் ஓரம் செறுகிவிட அவன் சூடான விரல்கள் அவள் பின் மடலை வருட துடிதுடித்துப் போனாள் பவித்ரா.. உடலின் மென்மையான உணர்ச்சியூட்டும் இடங்களில் ஒன்றான காது நுனிமடலை அவன் விரல்கள் உரச தலைசுற்றி மயக்கம் வருவது போல் இருந்தது பவிக்கு.. சங்கடத்தில் நெளிந்தாள்.. " போதும்... போதும்.. இட்ஸ் ஓகே.. " அவனை நாகரீகமாக தவிர்த்தாள்..

சுற்றும் முற்றும் இளம் காதல் ஜோடிகள் ஆங்காங்கே பின்னிக் கிடக்க , முதன் முறையாக இதையெல்லாம் பார்க்கும் பவி கொஞ்சம் பயந்து கண்களை விலக்கிக் கொண்டாள்.. ரிஷியை தடுமாற்றத்துடன் பார்த்து... " இ... இவங்க... இப்டி.. "

" தே ஆர் லவ்வர்ஸ்.. சோ அன்ட் சோ.. "

" அ... அதுக்காக... இப்டிலாம்.... பப்ளிக்ல... " நெஞ்சம் ஏறி இறங்க அவனை பார்த்தாள் கலவரத்துடன்.

" பயப்படாத.. சம் பீப்பிள் ஆர் லைக் தட்.. அந்த பக்கம் ஃப்ரீயா இருக்கு.. அங்க போய் உட்காந்துக்கலாம் வா.. " அவன் கூற அவன் பின்னால் இரண்டடி தள்ளியே நடந்தாள்..

அவன் அமர அவன் அருகில் இடைவெளிவிட்டு அமர்ந்து கொண்டாள்.. ஒருவித மனப்போராட்டதுடன் இருந்தது அவளுக்கு..

" ஹ்ம்.... எதாவது சாப்படறியா... சுண்டல் , பஜ்ஜி.. வாங்கிட்டு வரவா.. "

" ஒ.. ஒன்னும் வேண்டாம்... இங்கயே இருங்க... இருட்ட ஆரம்பிச்சிருச்சு வேற.. " சுற்றுமுற்றும் பார்த்தபடி ஒரு பாதுகாப்பின்மையை உணர்ந்தாள் அவள்..

அவளது மனஉணர்வை புரிந்து கொண்டவன் ஆதரவாக பேசினான்.. " பவி... நான் இருக்கேன் பயப்படாத.. ஹா.. "

மெள்ள தலை அசைத்தாள்.. அவளை சகஜநிலைக்கு கொண்டு வர பேச்சை மாற்றினான்.. " பவி.. உன்ன இப்ப பாத்தாலும் ஆச்சர்யமாத்தான் இருக்கு.. முதன் முதல்ல உன்ன கோயில்ல பாத்தப்ப நீ என்ன அதிரடியா திட்டினியே.. அது இன்னும் கண்ணுலே நிக்குது.. ஹா... அந்த பொண்ணா என்ன லவ் பண்ணி என் கூட பேசிட்டு இருக்கறது.. அதிசயம் ப்ளஸ் சந்தோஷமா இருக்கு.."

" ஹாஹா... எனக்கும் ஆச்சர்யமாத்தான் இருக்கு.. லைஃப் இஸ் மிஸ்ட்ரியஸ்.. விநோதமானது.. யாரை யாருக்கோ எப்டி எப்டியோ முடுச்சு போட்ருது.. நெனச்சு பாக்க ஒரு பக்கம் சிரிப்புதான் வருது.. இந்த ஸ்வீட் ராஸ்கல்தான் எனக்கானவன்னு நெனச்சு பாத்தா.."

" ஹே.. ராஸ்கலா நானு.. ஆ... ம்ம்ம்.. உன்ன.. " அவன் சிரிப்புடன் அவள் கைகளைப் பற்ற செய்வதறியாது தவித்தாள் பவி..

கைகளைப் பற்றியவன் மெள்ள அவள் விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொள்ள ஒரு வித மயக்கமாக இருந்தது பவிக்கு.. அவனது பற்றுதலை விட மனமில்லை.. இருப்பினும் இந்த ஸ்பரிச சுகம் இச்சூழ்நிலையில் மேலும் அவனைத் தூண்டி விடக் கூடாது என்ற உணர்வுடன் நாசூக்காக விடுவித்துக் கொண்டாள்.. விரல்களை மண்ணில் அலையவிட்டபடி அவள் பேச்சை திசை திருப்ப , அவனது விரல்களும் மணலை அள்ளி அளந்தது.. அருகே இருந்த அவளது விரல்களை அவ்வப்பொழுது பட்டும் படாமலும் தீண்டிக் கொண்டிருந்தது.. முடிவில் அவன் கைகள் அவள் கைகளின் மேல் உரிமையுடன் படர , சொல்வதறியாது அமைதியானாள் பவித்ரா.. அவனின் கரம் தனக்கானவள் என்ற நம்பிக்கையுடன் அவள் கரத்தில் பதிந்திருந்தது.. இதயம் ஒரு புறம் படபடக்க தவிர்க்கும் தைரியமின்றி அடங்கினாள் அவள்..!

வார்த்தைகள் காற்றுடன் உறவாடி கண்கள் காதல் தீயில் உருகிக் கொண்டிருக்க , விரல்கள் ஒன்றுடன் ஒன்றாய் கலந்து இறுகியது..!

பேசிய வார்த்தைகள் தீர்ந்து போக , மெளனம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தது.. இரு ஜீவன்களின் மத்தியில் இணைப்பு பாலமாக..!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 19

குளிர் காற்று போர்வையாய் மூட , விரலோடு கோர்த்து விலகா நினைவை விதைத்துச் சென்ற ரிஷியின் ஸ்பரிசம் விரல்கள் எங்கும் தம்பூரா இசைக்க ஜதிபோடும் இதயத்தின் ஒலிகூட்டும் இரவை ரசித்தபடி வீட்டினை அடைந்தாள் பவித்ரா..

ஹாலில் சாப்பிட அமர்ந்திருந்த அப்பா அவளை பார்த்து சுவரில் மாட்டி இருந்த கடிகாரத்தை பார்த்தார்.. மணி ஒன்பதை தொட்டுக் கொண்டிருந்தது.. அவளிடம் எதுவும் கூறாமல் உள்ளிருந்து வந்த பங்கஜத்தை முறைக்க , எதுவும் புரியாமல் அம்மாவுடன் சமையல் கட்டிற்குள் புகுந்து கொண்டாள் பவி..

" ஏன்டி , மணி என்ன ஆறது.. காலைல போனவ.. சாப்டியா இல்லையா எதுவும் தெரியல.. அப்டி என்னடி ப்ரெண்டோட அலட்டல்.. இவ்ளோ நாழி கழுச்சு வந்தா , பெத்தவா தவிச்சுபோவான்னு தெரியாது.. உங்கப்பா உன்னண்ட சொல்ல முடியாதைக்கு என்மேல கோவத்த காட்றார்.."

" அம்மா... ரம்யா ஆத்துக்குத்தானே போய்ட்டு வந்தேன்.. எக்ஸாம்ஸ் நெருங்கறது.. படிக்க வேண்டாமா.. அப்டியே நேரம் ஆயிடுத்து.. இப்போ என்னவாம் அவருக்கு.. நான் என்ன ஊரச் சுத்திட்டா வரேன்..." சகஜமாக பொய் கூறினாள்..

" நன்னா இருக்கு... உங்க ரெண்டு பேர் கிட்டயும் மாட்டிண்டு நான் முழிக்கறேன்... போ.. போய் அவருக்கு டிபன் பறிமாறு.. கொஞ்சம் கூல் ஆவர்.." கையிலிருந்த பாத்திரத்தை கொடுத்து அனுபினாள் பங்கஜம்.

பாத்திரத்துடன் வெளி வந்தவள் அமைதியாக அவருக்கும் பாட்டிக்கும் பரிமாறிவிட்டு நகர்ந்தாள்.

" பவி.... " அப்பாவின் குரல் தடுக்க திரும்பினாள்..

" சொ.. சொல்லுங்கோப்பா.. "

" படிப்பெல்லாம் எப்டி போயிண்டு இருக்கு.. எப்போ எக்ஸாம்.."

" இ... இன்னும் கொஞ்சநாள் இருக்குப்பா.. ஏன்.. எதுகுப்பா.."

" ஒன்னுமில்ல.. இனிமே ஆத்துக்கு சுருக்க வந்துடு.. அப்பறம்.. உன் ப்ரெண்ட இங்க வந்து படிக்க சொல்லு.. உனக்கும் வசதியா இருக்கும்.. கல்யாணம் ஆகப்போற பொண்ணு.. அநாவஸ்யமா நீ அலைய வேண்டாம்.." அவளை அர்த்தத்துடன் அவர் பார்க்க திக் என இருந்தது பவிக்கு..

" ச.. சரிப்பா... " கலக்கத்துடன் அவரை பார்த்துவிட்டு நகர்ந்தாள் பவி.. உள்ளுக்குள் ஏதோ தேவையில்லாத பயம் தோன்றி மறைந்தது..

அன்றைய இரவு வேறுவேறு சிந்தனையில் சிதற தூங்க இயலாமல் தடுமாறினாள்... " அப்பா ஏன் அப்டி சொன்னார்.. எதாவது தெருஞ்சுடுத்தா.. இ.. இல்ல.. ரிஷியோட என்ன பாத்திருப்பாரா.. ஹையோ.. அப்டிலாம் ஒன்னும் இருக்காது.. அப்டி ஏதாவது பாத்திருந்தா இப்டி சாந்தமா பேசுவாரா.. இருக்காது.. " மனதை சமாதானப் படுத்திக் கொண்டாள்.. இருப்பினும் மனதின் உள்ளே சஞ்சலம் கூடியது..

அடுத்த இரண்டு மூன்று நாட்கள் சொல்லத் தெரியாத தவிப்பும் பயமும் சந்தோஷமும் மாறி மாறி அவளை உணர்வுக் கலவை ஆக்கி இருந்தது..

அன்று மாலை.. ரிஷியின் அழைப்பு வந்தது.. ஆர்வமுடன் எடுத்தாள்.. அந்த நிலையில் அவளை புத்துணர்ச்சி படுத்துவதாய் இருந்தது அவனது அழைப்பு..!

" ஹலோ மேடம்.. என்ன போனையே காணும்.. என்ன மறந்திட்டியா.. "

" ஹையோ.. அதெல்லாம் இல்ல.. காலேஜ் படிப்புன்னு அப்டியே போயிடுச்சு.. " முகத்தில் புன்னகை அவளை அறியாமல் பூத்திருந்தது..

" சரி.. உன்ன பாக்கனுமே.. மூனு நாள் ஆச்சு உன்ன பாத்து.."

" ஹா.. ஹா.. ஜஸ்ட் மூனு நாள் தான ஆகுது.. அதுக்குள்ள என்ன.."

" ஹூம். அன்னிக்கு உன்கைய புடுச்சதுலேந்து என் மனசு என்கிட்ட இல்ல.. உன்னையே சுத்தி சுத்தி வருது.."

" ம்ம்ம்.. சரிதான்.." சிரித்தாள்..

" என்ன சிரிக்கற.. எப்போ பாக்கலாம் பேபி.." ரிஷி கொஞ்ச அப்பாவை நினைத்து பயம் வந்தது பவிக்கு..

" படிக்கனும்.. ஈவினிங் லேட்டானா வீட்ல. பயப்படறாங்க... அதான்... எப்டி.. வர்ரதுன்னு.."

" ஹூம்.. குட்.. நல்ல பேரண்ட்ஸ் தான்.. பொம்பளைங்க நைட் தனியா போனா அவங்களுக்கு மனசு கஷ்டம் தானே.." அவன் கூற அவளுக்கு ஒருமாதிரியாக இருந்தது.

" அப்போ.. மீட் பண்ண முடியாதா.."

" தெரியல... சன்டே வேணா கொஞ்சம் இயர்லியரா வந்தீங்கன்னா பாக்கலாம்.."

" ஷூயர்... ஐ' ம் வெய்ட்டிங்.. "

" ஓகே... பை... " போனை அணைத்தாள் பவி.. அவனை காண வேண்டும் என திடீர் ஆவல் முளைத்து விரிந்தது..

வழக்கம்போல வேலைநாட்கள் ஓட அன்று ஞாயிறு.

எப்படி அவனைக் காண்பது , என்ன சொல்லி செல்வது என்ற தவிப்பாய் இருந்தது..

வீட்டுக் கூடத்தில் அப்பாவும் பாட்டியும் அமர்ந்திருக்க மெள்ள பூனை நடையுடன் கிளம்பினாள் பவித்ரா.. அப்பாவின் குரல் தடுத்தது..

" பவி... எங்க கெளம்பிட்ட.. "

" இ.. இல்லப்பா.. ர... ரம்யா வீட்டுக்கு... படிக்க..."

" ஏன்.. அவள இங்க வரச் சொல்ல சொன்னேனே.. "

" அ.... அது... வந்து.. " பவி தடுமாற உள்ளே புகுந்தாள் சுகுமாரி பாட்டி.

" ஏன்டா நடேசா... அவ என்னமோ ப்ரெண்டோட படிக்கனும்கறா.. போய்ட்டு வரட்டுமே.. இங்க உட்காந்துண்டு நம்ம சத்தத்துக்கு நடுவுல படிக்க முடியுமா.. நீ போய்ட்டு வா பவி.. சுருக்க வந்துடு. ஜாக்ரதை.. "பாட்டி விடை கொடுக்க நிம்மதி பெருமூச்சுடன் வெளியேறினாள் பவி..!

" அவளுக்கு ரொம்ப செல்லம் காட்டறே.. ஹூம்." சலித்துக் கொண்டார் நடேசன்.

துள்ளலுடன் வேகமாக ரம்யா வீட்டிற்கு விரைந்தாள்..

வழக்கம்போல அரட்டை கொஞ்சம் படிப்பு கொஞ்சம் என நேரம் கரைந்தது.. பவி அடிக்கடி மணியை பார்த்துக் கொண்டாள்.. இருப்பு கொள்ளவில்லை.. அவளது தவிப்பை பார்த்துக் கொண்டிருந்த ரம்யா மெதுவாக ஆரம்பித்தாள்..

" என்னடி வான்கோழி.. அடிக்கடி கடிகாரத்தையே பாத்துட்டு இருக்க.. ஒரு நிலைல இல்லியே.. மணி இப்பதான் மூனு ஆகுது.. உன் ஆளு கூப்பட இன்னும் ரெண்டரை மணி நேரம் இருக்கு.. அதுக்குள்ள பறக்கறியே..! காதல்ல பொறுமை அவசியம் கண்ணு.." கண்ணடித்தாள்.

" இல்லடி... இன்னிக்கு கொஞ்சம் சீக்கரம் பாக்கலாம்னு பிளான் பண்ணோம்.. அதான்.. மூன்றைக்கு கெளம்பனும்.. "

" ஏன்.. ஆறுமணிக்கு பாத்து எட்டுமணி வரைக்கும் கடலை போடறது பத்தலையா.. ம்ம்ம்.. என்னாடி லவ்வு இது.. "

" அ.. அதுக்கு இல்ல ரம்மி.. அடிக்கடி வீட்டுக்கு லேட்டா போறத கவனிச்சுட்டாங்க.. போன சன்டே அப்பா கோவமா இருந்தாரு.. அதான் சீக்கரம் பாத்துட்டு சீக்கரமா வீட்டுக்கு போலாமேன்னு.. தெரிஞ்சுடுமோன்னு பயமா இருக்கு ரம்மி.."

" ஹூம்.. லவ்வ சொல்லும் போது இந்த பயம் வரலையோ.. ரொம்ப பயப்படாதடி.. இருக்கற வரைக்கும் ஹேப்பிய இரு.. எப்படியும் ஒரு நாள் தெரிஞ்சுதான ஆகனும்.. அப்போ இருக்கு வேடிக்க.. ஹாஹா.." அவள் நக்கலாக சிரிக்க..

" யேய்.. ஏன்டி நீ வேற பயமுறுத்தற பக்கி.. நானே அவஸ்தைல இருக்கேன்.."

" ஹாஹாஹா.. பீ ஹேப்பி மேன்.. காதல்னா சிலபல சண்டைகள பாத்துதான ஆகனும்.. ஒன்னா வாழனும் முடிவெடுத்துட்டேல.. பின்ன.."

" ஹூம்.. அவரத் தவிர வேற யாரும் என் வாழ்க்கை துணையா நெனச்சு பாக்க என்னால ஆகாது ரம்மி.. நான் ரொம்ப கான்பிடன்டா இருக்கேன் அதுல.."

" அப்பறம் என்ன... விடு கழுத.. ஆனாது ஆகட்டும் பாக்கலாம்..." ரம்யா தெம்பூட்ட புன்னகை பூத்தாள் பவி..

சரியாக அழைப்பு விடுத்தான் ரிஷி...

" ஹலோ.. இதோ.. ரெடியா தான் இருக்கேன்.. வரேன்.. வெயிட் பண்ணுங்க.." சொல்லிவிட்டு போனை வைத்தாள்..

" அடியே பவி.. அப்டி என்ன பேசுவீங்கன்னு ஒரு ரன்னிங் கமன்ட்ரி குடுக்கறியா.. அப்பறமா கால் பண்றேன்.. என்னன்னு தெருஞ்சுக்க ஆசையா இருக்கு.."

"அடச் சீ.. போடி லூசு.. நான் கெளம்பறேன்.. பை.." அவளிடம் விடை பெற்று கிளம்பினாள் பவி..

காபி ஷாப்பின் முன் நின்றிருந்த ரிஷியை பார்த்து புன்னகைத்தபடி முன்னால் நடக்க ஆரம்பித்தாள்.. பின்னால் அவனும் வண்டியை மெதுவாக உருட்டியபடி சென்றான்..

ரோடின் திருப்பத்தில் வண்டி நிற்க ஏறி அமர்ந்து கொண்டாள்.. அவன் தோளை பற்றிக் கொண்டு.. தயக்கமின்றி..!

வண்டி பறக்க நெடுஞ்சாலை தாண்டி கடற்கரையை அடைந்தனர்.. பகல் பொழுது ஆதலால் கூட்டம் அவ்வளவாக இல்லாமல் மஞ்சள் பொன்குவியலாக சிதறிக்கிடந்தது மணல்.. கால் புதைய மெள்ள நடந்தபடி சென்றனர்.. எந்த தயக்கமும் இன்றி அவன் அவள் கைகளை பற்றிக் கொண்டு நடந்தான்.. ஆதரவாக..!

அவனுடன் தோளோடு தோள் உரச நடப்பது ஒரு இன்பத்தை கொடுத்தது பவிக்கு.. அவனும் விலகாது ஒட்டியபடியே வந்தான்.. கரையைத் தாண்டி முண்டி அடித்து ஓடி வரும் நுரை அலைகள் கால்களை தழுவி மணலை கரைத்துக் கொண்டு ஓடியது.. பவிக்கு மகிழ்ச்சி தாளவில்லை.. ஓடிச் சென்று அலைகளுடன் விளையாடினாள். நீரினை அள்ளி அவன்மீது தெளித்து சிரித்தாள்.!

" ஹே.. ஹாஹா.." புது உற்சாகம் கூட துள்ளிக் குதித்து அவளுடன் விளையாடினான் ரிஷி.. அவள் நீரினை வாரி வாரி இறைக்க.." ஏய் பவி.. பவி.. உன்ன..." தண்ணீரில் தள்ளாடியபடி சென்று கைகளை வளைத்துப்பிடித்து அவளை அணைத்தக் கொண்டான்..!

முழுமையாய் அவனது கட்டுக்குள் தான் அடங்கி இருப்பதைக் கண்டு ஒரு கணம் மூச்சு நிற்க , கூனிக் குறுகி தலை கவிழ்ந்தாள் பவித்ரா.. உடலெங்கும் ரத்தநாளங்கள் மின்சாரத்தைக் கடத்த , தாயின் சிறகில் அடங்கும் குட்டியாய் அவனது இளஞ்சூட்டு மார்பில் தஞ்சமானாள்.. வலுவான அவனது கைகள் அவளது வளைக்கரத்தை அழுந்திக் கொண்டிருக்க , ஓடிவந்த பெரு அலை இருவரையும் சேர்த்து அடித்துக் கொண்டு கரையை நோக்கி பாய்ந்தது.. அவர்களது உள்ளமும் காதல் அலையின் தாக்கம் தாளாமல் மோகக் கரையில் ஒதுங்க சலனித்தது.!

அலையின் அலைகழிப்பில் இருவரும் நிலையிழக்க ஒருத்தரின் ஒருத்தர் மேல் விழுந்து புரண்டு தண்ணீருடன் கரையின் மணலில் ஒதுங்கினர்..!

அவனது கைகள் அவளது கைகளை பிடித்திருக்க சுதாரித்து எழுந்து கொண்டு அவனிடமிருந்து விலகி அமர்ந்து கொண்டாள். நீர் வழிய சொட்ட சொட்ட அமர்ந்திருந்த பவித்ராவைக் கண்டு மனம் சஞ்சலம் அடைய அவளருகில் வந்து சட்டென ஓர் மெல்லிய முத்தத்தை கன்னத்தில் பதித்தான் ரிஷி..

அதை சிறிதும் எதிர்பார்க்காத பவி , இதயம் படபடக்க உடல் நடுங்கிப் போனாள்.. எதிர் பாரா முத்தம்.. காதலனின் முதல் முத்தம்.. மீசை மயிற்கற்றை தீண்டிய மென்முத்தம்.. ஆடவனின் முத்தம். தேனையும் தீயையும் ஒருசேர வார்த்தது அவள் இதயத்தில்..!


தாங்க இயலா அவள் நெஞ்சம் மூச்சை அடைத்து வேகமாக மேலேறி இறங்கியது.. ஒரு வித பய தவிப்புடன் சட்டென அவனை விலக்கினாள்..! வெட்கமும் கூச்சமும் சொல்லத் தெரியா கோபமும் மனதில் மூள கலவையான உணர்வை தாழ இயலாது விரிந்த பார்வையை அவன் மீது வீசினாள்.. கண்கள் கொஞ்சம் கலங்கிப் போனது..

சுதாரித்த ரிஷி அவள் அருகில் கொஞ்சம் இடம்விட்டு அமர்ந்து கொண்டான்.. உணர்ச்சி மீறலில் தவறு செய்து விட்டோமோ என்ற தவிப்பு அவனது முகத்தில் பிரதிபலிக்க தலையை தாழ்த்திக் கொண்டான்..

பேரலையின் சத்தம் மட்டும் காதுகளை அடைத்தது.. மெளனமாக அமர்ந்திருந்தனர் , மனப் பேராழியின் பொங்கும் அலையின் வலிமை தாங்காமல்..!

சிறிது நேரம் போக , குற்ற உணர்ச்சியுடன் அவளை ஏறெடுத்தான் ரிஷி.. " ஐ.. ஐம் சாரி... பவி.. ஏதோ.. ஒரு... வேகத்துல.. " அவள் பதிலுக்காய் காத்திருந்தான்..

கோபமாகத் திரும்பியவள் குழந்தை போல பாவமாய் அவன் கெஞ்சி நிற்பதைக் கண்டு ஏனோ தனை அறியாமல் சிரிப்பு வர இதழ் மெள்ள விரிந்து புன்னகையை சிந்தியது.. அதை மறைக்க இயலாமல் பொய்யான கோபமாய் அவனை முறைத்தாள்..! அவளது விரிந்த கண்களிடம் அவன் குறுகிய கண்கள் யாசிக்க.. தனை மீறி கடகடவென சிரித்தாள் பவித்ரா.. மூச்சு வந்தவனாய் தானும் மெள்ள சிரித்தான் ரிஷி..!

" பண்றதெல்லாம் பண்ணிட்டு சிரிப்ப பாரு.. ஹூம்.." உதட்டை சுழித்துக் கொண்டாள்..

அவளது மறைமுக ஒப்புதல் அவனுக்கு தைரியம் கொடுக்க , மணலில் பதிந்திருந்த அவளது கைவிரல்களை கோர்த்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான்.. ஈரமணல் நீர் வார்த்தது அவனது கன்னத்தில்.. மணலுடன் சேர்த்து அவள் கைகளை அழுத்தி கண் சிமிட்டினான்.. " நீ எனக்கானவ தானே.. அந்த உரிமைல முத்தம் கொடுத்தேன்.. இப்டி தண்ணீல நனஞ்சு நின்னா எவன்தான் சும்மா இருப்பான்.. பளீர்னு இருக்கற கன்னத்தப் பாத்ததும் முத்தம் குடுக்கனும் போல இருந்தது.. ஹூம்.. மூக்கு கீழ இருக்கற செர்ரி பழத்ததான் குறி வெச்சேன்.. ப்ச்ச்.. மிஸ் ஆயிருச்சு.." முகத்தில் சோகத்தை அவன் காட்ட , வெட்கி கண்களை தாழ்த்திக் கொண்டாள் பவித்ரா.. உள்ளூர தேன் ஊறியது..!

அதை மறைத்து.." ஹூம்.. குறி வெப்பீங்க.. இப்போதைக்கு ஜஸ்ட் லவ்வர்ஸ்தான் நாம.. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்.. "

அவளருகில் வந்து நெருக்கமாக அமர்ந்தவன்.. " பவி.. யார் சொன்னாலும் சொல்லாட்டினாலும் நீ தான் என் வொய்ஃப்.. உன்ன தவிர என் மனசுல வேற யாருக்கும் இடம் கிடையாது.. என் மனக் கோட்டையின் மகாராணி நீ தான்.."

சந்தோஷம் மனதில் பீறிட.. " ஹூம்... அதுக்கு உங்க வீட்ல சம்மதிக்கனுமே.. "

" ஏன் சம்மதிக்க மாட்டாங்க... உன்ன மாதிரி ஒரு அடக்கமான பொண்ண வேணாம்னு சொல்வாங்களா.. வீட்டை அழகா பாத்துண்டு என்ன கவனுச்சுக்கப் போற உன்னவிட்டா வேற யாரு கிடைப்பாங்க.. அப்பாக்கு உன்ன கண்டிப்பா பிடிக்கும்.. வீட்டோட இருக்கற அடக்கமான பொண் தான் எனக்கு பாக்கனும் அவர் சொல்வாரு.. ஜனனி மாதிரி ஜோவியலா ஊர சுத்தர பொண்ணுனா எங்க குடும்பத்துக்கு ஆகாது.. அவ இஷ்டத்துக்கு வெளில போய்ட்டு வந்தா சரியா இருக்குமா.. அவர் அதை ஒத்துக்கமாட்டார்.." ரிஷி கூற பவியின் புருவங்கள் சுறுங்கியது..

" அப்பாக்கு சரி.. நீங்க இந்த காலத்து பையன் தானே.. பெண்கள் சுதந்திரமா தன்னிச்சையா செயல்படறது உங்களுக்கு சம்மதம் தானே.."

" ஹாஹா... என்னதான் மாடர்னா பெரிய படிப்பு படுச்சாலும் எப்பவுமே ஆண்களுக்கு ஒருபடி கீழ தான பெண்கள்.. ஒருத்தனுக்கு அவ வாக்கப்பட்டுட்டா அவ அவனுக்கு அடங்கித் தான போனும்.. அவளோட லைப் அவன நம்பித்தானே.. அவனோட அரவணைப்புல தானே அவளோட சந்தோஷம் எல்லாம்.. அதுக்குமேல சுதந்திரமா தன்னிச்சையா செயல்பட என்ன இருக்கு அவளுக்கு.." அவன் சிரித்துக் கொண்டே கூற..

அதிர்ந்து போனாள் பவித்ரா.. " அ... அப்போ எனக்கும் அதானா.. என்னோட ஆசைன்னு எதுவும் இருக்க கூடாதா.. எனக்கான சுதந்திரம்னு எதுவும் கிடையாதா.. படிப்பு முடிஞ்சு வேலைக்கு போனும்னு இருக்கேன்.. "

" என்னையே முழுசா உன்கிட்ட ஒப்படைக்க போறேன்.. என் அன்பு முழுக்க உனக்குதான்.. நீ தான் எனக்கு எல்லாமே.. எப்பவும் நான் உன்ன அன்பா பாத்துப்பேன்.. என்ன கவனிச்சுக்கறது தானே உன்னோட சிந்தனையா இருக்கனும்.. அதுதானே கரெக்ட்.. அதுதானே இயல்பு.. மேரேஜ் ஆனப்பறம் வேலைக்கு போய் வேறென்ன பெருசா பண்ண போற நீ.. ம்ம்ம்.." அவள் கன்னத்தை மெள்ள வருடியபடி கூறினான் ரிஷி..

அவனது உண்மையான எண்ணம் பவிக்கு அதிர்ச்சியை கொடுத்தது.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. தன் மீது அதீத அன்பை பொழிகிறவன் உள்ளுக்குள் ஓர் ஆணின் கர்வம் ஒளிந்து தலை தூக்குவது அவளை துணுக்குறச் செய்தது.. அன்பு என்ற ஆயுதத்தால் பெண்களை அடிமையாக வைத்திருக்க நினைக்கும் ஆண்வர்கத்தின் ஓர் கொடுக்காய் தெரிந்தான் அவன்..!

" ஹூம்.. கல்யாணம் ஒரு கைவிலங்குங்கறது அந்த காலத்லேந்து இன்னும் மாறாது போல.. பட்.. நான் கொஞ்சம் வித்யாசமானவ.. எனக்கானத
விட்டுக் கொடுக்கற குணம் என்கிட்ட எப்பவும் கிடையாது.. அது எதுவா இருந்தாலும்.." அவனது கண்களையே பார்த்துக் கூறினாள்.. அதன் கள்ளச் சிரிப்பில் அவன் கர்வம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது.. அதை அடக்க வேண்டும் என தீர்மானித்தாள் பவி..!

" ஹூம்... அதெல்லாம் அப்பறமா பேசிக்கலாம் பவி.. இப்போ கொஞ்சம் ஜாலியா பேசிட்டு இருக்கலாமே.. "

மொத்தமாய் வடிந்துபோன மகிழ்ச்சி, காய்ந்த போன மணல்போல் வறண்டு போகாமல் இருக்க மெள்ள சிரித்தாள் பவி..!

அவன் ஏதேதோ கதை பேச , அவன் உண்மையான அன்பில் கொஞ்சம் நீர் வார்த்துக் கொண்டாள்.. ரிஷி அப்பாவின் குணம் மரபாக அவனறியாது ரிஷியையும் அர்த்தமின்றி தொற்றிக் கொண்டிருப்பது கபடமில்லா அவன் சிரிப்பில் தெரிந்தது அவளுக்கு... அவனுடன் விவாதித்து திருத்துவது சரியில்லை , அவனாகத் தன்னை புரிந்து கொள்ள ஓர் சந்தர்பத்தை உண்டாக்க வேண்டும் என தீர்மானித்தாள்..!

சூரியன் கீழ் வானத்தை நோக்கிச் சரிய கை கோர்த்தபடி ஆறிய மணலில் கால் புதைய நடந்தனர் இருவரும்..

தூரத்தில் ஓர் உயர் ரக கார்வந்து நிற்க , எங்கோ பார்த்த ஞாபகமாய் ஆர்வமாக அதை கவனித்தான் ரிஷி..

" என்ன ரிஷி.. யாரு.. "

" இல்ல.. அந்த கார பார்த்த மாதிரி ஞாபகம்.. நம்மூர்ல இந்த கார்லாம் ரேர் தான.. "

ஆர்வமுடன் பவியும் பார்க்க , கதவைத் திறந்து கொண்டு வெளியே இறங்கினாள் ஜனனி..! அவள் பின்னே இரண்டு மூன்று நாகரீகப் பெண்கள் இறங்கிவர எல்லோரும் கடற்கரையை நோக்கி வருவது தெரிந்தது.

" அது.... ஜனனி தான.. " பவி கேட்க..

" ஆ.. ஆமாம்.. பவி.. ஒரு நிமிஷம் அவள்ட்ட பேசிட்டு வரலாமா.."

" எதுக்கு.. அதான் அவங்கள பிடிக்கலன்னு சொல்லிட்டீங்களே.. இப்போ போய்... எப்டி..." பவி தயங்க..

"பரவால்ல.. வா... முக்கியாமாத்தான்.." அவன் அவளை இழுத்துக் கொண்டு ஜனனியை நோக்கி நடந்தான்.. நண்பிகளுடன் சத்தமாக சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தவள் இவர்கள் இருவரும் வருவதைக் கண்டு கொஞ்சம் குழப்பத்துடன் முகம் மாறினாள்..

" ஹாய்... ஜனு.. ஹவ் ஆர் யூ.. " ரிஷி புன்னகையுடன் விசாரிக்க.. என்ன என்பது போல் அவனைப் பார்த்தால் ஜனனி..

" ஃப் யூ டோன்ட் மைன்ட் உங்கள்ட்ட கொஞ்சம் தனியா பேசனும்..." ரிஷி கூற.. நண்பிகளை திரும்பிப் பார்த்து இவர்களுடன் நடந்தாள் ஜனனி.. கொஞ்ச தூரம் சென்று நிற்க..

" சொல்லுங்க.. என்ன விஷயம்.."

" அ... அது... அன்னிக்கு நான் பேசினது உங்கள பாதிச்சிருக்கும்.. ஐ 'ம் சாரி.. "

அமைதியாக அவனையே பார்த்தாள்..

" ஏற்கனவே உன்கிட்ட சொன்னமாதிரி பவியும் நானும் இப்பதான் லவ்வ சொல்லி பாத்து பேசி கொஞ்சம் பழக ஆரம்பிச்சிருக்கோம்.. அம்மாக்கு தெரியாது.. இவ பைனல் இயர் இன்ஜினியரிங்ல இருக்கா.. இப்போ வீட்ல தெரியறது அவ்ளோ சரியா இருக்குமான்னு தெரியல.. அதான்.."

" சோ..." அதுக்கென்ன என்பது போல் பார்த்தாள்.

" பவியோட படிப்பு முடுஞ்சதும் நானே எங்க வீட்ல சொல்லி இவள மேரேஜ் பண்ணிக்க அவங்க சம்மதம் கேக்கலாம்னு இருக்கேன்.. சோ... அதுவரைக்கும் இந்த விஷயம் அம்மாக்கு தெரியாம இருக்கறது நல்லது.. நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும் ஜனு.." அவன் உதவியாக அவளை கேட்க.. இருவரையும் மாறி மாறி பார்த்தவள் மெள்ள தலை அசைத்தாள்..

" தேங்க்ஸ் ஜனு.. " சந்தோஷமாக இருவரும் விடைபெற , ஆறிப்போன புண்ணில் விழுந்த கீறலாய் வலித்தது ஜனனிக்கு.. அவர்கள் இருவரும் கைகோர்த்து நடப்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அலையின் சத்தத்துடன் போட்டியாய் அவள் மனமும் கத்தியது..!

அவன் தன்னை பெண்கேட்டு வருவான் என நினைக்க நினைக்க மனதில் சந்தோஷப் பூக்கள் பூத்து குலுங்கியது பவிக்கு.. மெள்ள அவன் தோளில் தலை சாய்ந்து அவன் கைகளை இறுக்கிக் கொண்டாள் வார்த்தையால் உறவாடிக் கொண்டிருந்தாள்.. நேரம் கரைவதை உணராமல்..!

" சரி.. போலாமா பவி.. டைம் ஆச்சு.. " அவன் கேட்க இன்னும் சிறிது நேரம் அவனுடன் இருக்கலாமா எனத் தோன்றியது.. மனமின்றி தலை அசைத்தாள்..

வண்டியில் ஏறி அமர்ந்தவள் அவனது இடையினை தன் மென்கரத்தினால் வளைத்து உட்கார , அதன் கதகதப்பில் லயித்தவன் வண்டியை வேறு பாதையில் செலுத்தினான்.. நீண்ட பாதையில் வானத்து நிலவின் பால் ஒளியில் தென்றலின் அணைப்புடன் இன்பமாக அந்த பயணத்தில் லயித்து போயினர் இருவரும்..

கடைசியாய் காபி ஷாப்பின் முன் நிறுத்தி விடைபெற விருப்பமின்றி அவன் விடை கொடுக்க.. கனவுகளுடன் நடந்தாள் பவி.

நடந்து வந்த பாதையின் தூரம் அறியாமல் , அவன் தந்த முத்தத்திலும் , அவன் அணைப்பிலும் கலைந்தவள் சந்தோஷ மயக்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்தாள்..!

ஓர் பேரிடி அவளுக்காய் காத்திருந்தது..!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom