மெளனபெருவெளி
அத்தியாயம் 1
ஓ... என்ற அடர் இருள், அந்த இருளில் எந்த பொருள் எங்கே இருக்கிறது என்று கண்களுக்கு புலபடுத்த முடியாநிலை. சூழ் அமைதி மயான பயத்தை மூட்டியது. இருளில் துவாரகா அங்கும் இங்குமாய் பதற்றத்திலும், பயத்திலும் நடக்கிறாள். முகமெல்லாம் வியர்வை துளிகள். வீடு இருளில் இருக்க வாசலில் வெளிச்சம் ஏதோ இரண்டு நிழலாடுகின்றது. மெல்ல துவாரகா சாவி துவாரங்கள் வழியே பார்த்த போது தடி தடியாக இரண்டு பேர் முகம் முழுவதும் ஒருவனுக்கு முடி மற்றொருவனோ இன்னும் பயங்கரமாக இருந்தான். மூச்சை மெல்ல இழுத்து விட்ட துவாரகா தாடையில் பூத்திருந்த வியர்வைகளை கைகளால் ஒத்தி கொண்டாள். படபடவென கதவை அடித்தனர் வெளியில் இருந்த அந்த முரடர்கள். துவாரகாவிற்கு நெஞ்சு படபடத்தது. சத்தம் அதிகமானது ஒருவன் இன்னொருவனிடம் சொன்னான் "ஆள் இல்லை போல"
"எத்தனை மணி ஆனாலும் இருந்து செஞ்சிவுட்டு போயிடனும்டா பணம் வாங்கிட்டோம்"
துவாரகா விழிகள் இருட்டிலும் விரிந்து வெளிர்ந்தது. அய்யோ என்ன ஆகுமோ என்ற பீதி துவாரகாவின் சிந்தனையை முடக்கி விட்டது. சுவரோடு சுவராக சரிந்து கலக்கத்தில் அமர்ந்தாள். அந்த நொடி பொழுது அவளின் கைபேசி கனத்த சத்தத்துடன் கதறியது. பயத்தில் மொபைலை கைநழுவவிட்டாள். வெளியில் நின்ற இருவரும் துவாரகா உள்ளே இருப்பதை உணர்ந்து கொண்டார்கள்.
" ஏய்... கதவு திறடி" மீண்டும் படப்பட சத்தம். துவாரகா முகமெல்லாம் வியர்வை நா உலர்ந்து தொண்டையை அச்சம் கவ்வ ஆரம்பித்தது.
நிக்கி மினாஜ் லில் பேபி பஸ்சின் ஆடியோ சுவரே தெரிக்கும், புளோரே இடிந்து விழும்படி ஒலித்தது.
ஏய், மை கனக்ட் ஜெஸ்ட்
நவ் செண்ட் மை விரிஸ்ட் பேக்
டெல் திஸ் பிட்ச்ஷஸ்,
"கிவ் மை டிரிப் பேக்"ஸ்டப்பெரி
ப்பேராரி, விப் தட்
லைட் டூ லுக் பேக் வேன்
ஹீ-ஹச்-ஹச்-ஹிட் தட்...
சிந்துவால உறைந்து மூடப்பட்ட விண்டுவை போல, அகதா சாலிட் உட்கட்டில் மேல் கிடந்த துணிப்போர் மெல்ல அசைந்தது, நெளிந்தது.கைகள் இரண்டு மேலெழும்பி அதில் வலதுகை கட்டிலின் மேல் கத்திகொண்டு கிடந்த மொபைலை துலாவி எடுத்து யார் என்றெல்லாம் பார்க்காமலேயே கட் செய்து சத்தத்தை அணைத்தது. மீண்டும் விடாது எழுந்த ரிங்டோன் எரிச்சலை ஏற்படுத்தியது இம்முறை அட்டன் செய்து மொபைலையும் குவிந்து கிடந்த துணிகளுக்குள் புதைய செய்தது கைகள். யார் என்று பெயரை பார்க்காமலே
"ஹலோ... " என்றாள் துவாரகா.
"ஹோய் ஊத்தவாய் இன்னும் எழும்பலயா" ஆணின் குரல் புத்துணர்ச்சியாக ஒலித்தது.
"லேட் நைட் தான் வந்தேன் அதான்" சோம்பலும், தூக்கமும் கலந்து முணுமுணுப்பாக குரல் எழுப்பினாள்.
"சரி ஓ. கே. நீ தூங்கு" கட் செய்ய இருந்த போன் கால்லை இடைமறித்து "ஹிம்.... ஆங்.. பிரித்வி நீ எப்போ வர" வார்த்தைகள் இப்போது தெளிவாகவும் பலமாகவும் எழுந்தது.
"துவாரகா என்னோட ஸூட்டுவேசன் புரிஞ்சிக்கோ. நான் வர ஒன் ஆர் டூ வீக்ஸ் ஆகும்" பிடிக்கொடுக்காமல் பேசினான் பிரித்வி.
"இதே தான் ஒன்மந்தா சொல்லிகிட்டு இருக்க" சலித்து கொண்டாள்.
பீ... பீ... பீங்..... லைன் கட்டானது தெரியாமலே "ஹலோ.. ஹலோ.." காட்டு கத்தலாககத்தி கொண்டு இருந்தாள் "ச்சீ... கட்பண்ணிட்டான்" கோபித்துக்கொண்டவளாய் துணிமூட்டையை விட்டு வெளிவராமலே கிடந்தாள்.
நேரம் ஓட மண்ணை பிளந்து வரும் வித்து போல ஆடைகளுக்குள் இருந்து எழுந்தாள் துவாரகா. கட்டிலை விட்டு கால்கள்தரையில் விழுந்தன. எழுந்து நின்றாள் முழு நிர்வாணமாக ஜன்னல்களும் வெட்கப்பட்டு அடைந்திருக்க அறையை இருள் கவ்வியிருந்தது. நீரில் மூழ்கியே இருந்து வழுவழுத்து போன அள்ளி தண்டினை ஒத்தகால்கள் இரண்டும் கண்ணாடியை தேடி பயணபட்டன.
ஆளுயர கண்ணாடியின் முன் நின்று தன் அழகை முன்னும் பின்னும்பார்ததுக்கொண்டாள்.
தண்டு கால்களும், அளவான தொடையும், யோனியும்,வயிறும், கச்சை இல்லா மார்பும், கழுத்தும், முகமும் எவ்வளவு வெளிப்படையாக, மொழியின் இலக்கணம் போல உடலின் கட்டமைப்பு பிழையில்லா விதிகளின் தொகுப்பாகியிருந்தது. திறந்த அழகை கண்டு அவள் கண்களே சற்று நாணியது. அவ்விடம் விட்டு நேராக குளியல்அறைக்குள் நுழைந்தாள் உறக்கம் களைய சோம்பல் மறைய குளியல் ஆடிமுடித்தாள். குளியலறை விட்டு ஈரம் சொட்டசொட்ட மீண்டும் படுக்கை அறைக்குள் வந்தவள் கீழே கிடந்த டவலை எடுத்து உடலை துவட்டாமல் கீழே கிடந்த படியே அதன் மேல் கால்களை மட்டும் துடைத்து டவலை உதைத்து ஓரமாக தள்ளினாள். தனது அறையில் இருந்த டிரஸிங் டேபுளை நோக்கி நடந்தாள் அதன் மேல் ஏற்கனவே கிடந்த தொளதொள மேல் சட்டையை எடுத்து மேனிக்கு திரையிட்டாள். அவசர கதியில் ஹர் டிரையரை தேடினாள். தலையின் ஈரம் சொட்டி இலேசான ஆடையும் கண்ணாடி போல வதனத்தை திறம்பட காட்டியது. அறையில் தேடி பார்த்து விட்டு ஹாலுக்கு வந்து டீவி சோட்கேசை ஆராய்ந்தாள் ஒரு மூலையில் இடம் பிடித்து இருந்த ஹர் டிரையரை எடுத்து தலைமயிரை உலர்த்தினாள். அந்நேரம் தரையில் ஓடி விளையாண்டு கொண்டிருந்த கரப்பான் ஒன்று அவள் கால்களுக்கு இடையே ஊடுருவி கொண்டிருந்தது, அவ்வளவு தான் பயந்து போனவளாய் கால்களை உதறினால். அந்த அதிர்வினால் கீழே விழுந்து குப்புற கவிழ்ந்த கரப்பான் முண்டியது எழ முடியாமல் ரவுண்ட் அடித்தது.
சிறிது நேரம் அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். சிலநாள் முன் படித்த கட்டுரை ஒன்று மூளைக்கு உந்தியது தலை துண்டிக்கப்பட்ட கரப்பானால் ஒருவாரத்துக்கு மேல் உயிர் வாழ முடியும், கரப்பானக்கு முறையான சர்குலண்டரி சிஸ்டம் கிடையாது, தலையில்லாத கரப்பான் பட்டினியால் மட்டுமே உயிர் விடும்.ஒரு கரப்பானால் 40 நிமிடங்கள் மூச்சை அடக்கிக்கொள்ள முடியும் ஒரு மனிதனால் 30 வினாடிகள்தாம் மூச்சை அடக்க முடியும். 8.2 மில்லிசகேண்டுக்களில், உங்கள் அசைவை உணர்ந்து விடும் கரப்பான் ஒரு நொடிக்கு 80 செ.மீ., வேகத்தில் ஓடும், இது சிறுத்தையை விட ஐந்து மடங்கு அதிக வேகம்" பெருமூளைப் புறணியில் ஓடியது துவரகாவிற்கு.
என்ன ஒரு அருவருப்பு மேலேல்லாம் ஊருகிறது இரவெல்லாம் யாரோ என்னை நோட்டம் விடுவதை போலான உணர்வு, பயம் இதனால் தானா. இந்த பயம் தீவிரமான விரும்பத்தகாத உணர்ச்சி . அது ஆக்ரோஷத்தை அதிகரிக்கும் அல்லது அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க எதிர்வினைகளை உருவாக்கும். யோசித்த விநாடியே சதக்... சதக்.... இரண்டு மூன்று முறை அதை மிதித்தாள் தரையோடு தரையாகி வெள்ளை இரத்தம் பஜக் என்று தெரித்து மடிந்தது.