Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யாரென்று தெரிகிறதா...... ? - 1

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
34
Reaction score
31
Points
33
வணக்கம் நட்புக்களே....

நான் உங்கள் மேகலா அப்பாதுரை. இன்று நான் என் முதல் கதையோட முதல் அத்தியாயம் தொடங்கிய நாள். கதை எழுத மட்டுமில்ல... அந்த கதையை நல்லா விமர்சிக்கவும் எனக்கு வருங்கிறது என்று கனல்விழி காதல்..... ரிவ்யூ மூலமாக தான் தெரிஞ்சிக்கிட்டேன். என் கதைக்கு வந்த வரவேற்பை விட என் ரிவ்யூவிற்க்கு நீங்க குடுக்குற வரவேற்ப்பும், அதற்காக நீங்கள் காத்திருப்பதும் எனக்கு மகிழ்ச்சியை தந்த விசயங்கள். அப்படி நான் குடுக்கும் ரிவ்யூவை கொஞ்சம் வித்தியாசமா செய்யலான்னு இருக்கேன்.




அதற்காக இதுவரை ஒரு வாசகரா சகாப்தம் தளத்தில் இருந்து வந்த நான், இன்று முதல் இங்கே இந்த நிகழ்வின் மூலம் சகாப்தம் குழுமத்தில் நானும் இணைகிறேன் என்று மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இனி இங்கும் நீங்கள் என்னை காணலாம்.


சகாப்த்தில் நானும் இணைந்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியதும் இது உங்கள் இடம் நீங்க என்ன நினைக்கிறீங்களோ செய்யுங்க மேகீன்னு என்னை வரவேற்ற என் அன்புத் தோழி நித்யாவிற்கு நான் நன்றிகள் சொல்லப் போவதில்லை. நட்பிற்குள் நன்றி இருக்கக் கூடாதென்பது என் கொள்கை. என் அன்பை மட்டுமே அவருக்கு உரித்தாக்குகிறேன். லவ் யூ நித்தி டார்லிங்




நான் இப்போ சொல்லப் போற விசயம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்ன்னு நினைக்கிறேன். சின்னப் பிள்ளையா இருக்கும் போது நிறைய விளையாடியிருப்போம். ஆனா இப்போ நாமெல்லெல்லாம் பெரியவங்களான பின்னாடி அப்படி விளையாடுறதில்லை.... அதனால நமக்கு பிடிச்ச மாதிரி ஒரு சின்ன விளையாட்டு விளையாடலான்னு இருக்கேன்.



என்ன விளையாட்டுன்னா.... நாம எல்லோரும் நிறைய கதைகளைப் படிக்கிறோம். நமக்கு படிச்ச அந்த கதைகளோட சுருக்கத்தை சுவாரஸ்யமா குடுத்திடுவேன். அந்த கதை எழுதிய எழுத்தாளர் யார்....? அந்த கதையின் தலைப்பு என்ன....? இதை நீங்க கண்டுபிடிக்கனும். கண்டுபிடிச்சவங்க உடனே கமெண்ட் பண்ணுங்க..... அதோட அந்த கதையில் உங்களுக்கு பிடிச்ச கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க.



இது எழுத்தாளர்களையும், வாசகர்களையும் உற்சாகப்படுத்த மட்டுமே.... அதனால் யார் மனதையும் புண்படுத்தும்படியான கருத்துகள் வேண்டாம் நட்புக்களே.... என்ன நான் சொல்றது சரியா....?



வாரவராம் திங்கள் கிழமை அன்று நம்ம சகாப்தம் தளத்தில் கதைச் சுருக்கம் வெளியிடப்படும். உங்களுக்கு ஒரு நாள் அதாவது இருபத்து நான்கு மணிநேரம் நேரம் வழங்கப்படும். சரியா சொல்ற நபர்க்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு ....



யாரென்று தெரிகிறதா..? இதுதான் நாம விளையாடப் போகும் விளையாட்டு. விளையாட நான் ரெடி.... என்னோடு விளையாட நீங்க ரெடியா.... ? வாங்க விளையாடலாம்.
 

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
34
Reaction score
31
Points
33
வணக்கம் செல்லங்களே....
யாரென்று தெரிகிறதா.....? விளையாட்டிற்க்கு ஒரு கதைச் சுருக்கத்தோடு வந்திருக்கேன். எப்பவும் கதையை அதன் போக்கில் யோசிக்காம என் போக்கில் யோசிக்கப் போறேன். தப்பா இருந்தா தயவு செஞ்சு மன்னிச்சுக்கோங்க... அதுக்காக உருட்டு கட்டையெல்லாம் தூக்கக்கூடாது சொல்லிட்டேன் மீ ரொம்ப கீரீன்சாண்டுய்யா....

சரி... சரி... வளவளன்னு அரட்டை அடிக்காம கதையச் சொல்லுன்னு நீங்க கேக்கறது எனக்குப் புரியுது. அப்போ கதைக்குப் போவோமா.... ?

நம் கதையின் நாயகன் நம்மில் வாழும் பெருபான்மையான ஆண்மகன்களில் ஒருவன் என்றே எனக்குத் தோன்றியது. அவளை பார்த்தது முதல் அவள் மீது தீராக் காதல் கொண்டு விரும்புகிறான் அந்த பிடிவாத நாயகன். அதை அவளிடமும் தெரிவிக்கிறான். ஆனால் அவளோ தன் தாய் காட்டுபவனே தனக்கு மாப்பிள்ளை என்று கூற, கணவரில்லா அந்த தாயைக் கண்டு மணம்முடிக்க கேட்கிறான். அவரோ அவளுக்கு ஏற்கனவே நிச்சயிக்கபட்டு விட்டதென்றும் விரைவில் திருமணம் என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகிறார்.

தான் விரும்பிய பெண்ணை எப்படியும் அடைந்தே தீரவேண்டுமென்ற வெறி அவனுக்கு. நினைத்ததை நடத்தி முடிக்கும் எண்ணம் கொண்டவனால் இந்த தோல்வியை ஏற்க முடிவதில்லை. எப்படியும் அவளை தன்னவளாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் இங்கேதான் தவறு செய்கிறான். ஊருக்கு புறப்பட்டவளை கடத்தி அவளின் விருப்பமின்றி அவளை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான்.

அங்கே அவனுக்கு அவன் செயல் நியாயமென படுகிறது. அவளை அடைந்துவிட்டால் தன்னால் திருமணம் நின்று விடும் என்று நினைத்து திருமணத்தை நிறுத்தவென அவன் செய்த செயல் அவள் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. அந்த நேரத்தில் அவள் தன்னை காத்துக் கொள்ள நடத்தும் போராட்டங்களும், இது கனவாயிருக்க கூடாதா என்று அவள் வேண்டுவதும், முருகா, முருகா என்று முருகனைச் சரணடையும் போதும், அந்த முருகனே கைவிட்டுவிட்டானென பின்னாளில் கடவுளை நிந்திக்கும் பொழுதும் படிக்கும் நம் ஒவ்வொருவரையும் நிச்சயம் புரட்டிப் போட்டிருக்கும்.

அதையே காரணமாக வைத்து அவளை மணக்கச் சொல்லிக் செக் வைக்கும் போது, ஒரு தாயாய் அந்த பெண்மணி முடிவெடுத்து அவனுடன் கட்டாயமாய் அவளை மணம் முடித்து வைக்கும் போது பதறிப் போனது மனம். ஆனால் அவனின் காதல் மணமும் என் கண்முன் விரிந்தது.

திருமணத்தை விருப்பமில்லாது தன் தாயாருக்காக செய்து கொள்பவள் அந்த திருமணத்திலிருந்து விலக தன் உயிரையே விட நினைக்கிறாள். அதற்கான தருணத்திற்காய் காத்திருக்கிறாள். அந்த சமயத்தில் அவனின் குழந்தைக்குத் தாயாகிறாள். அதையே தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறாள்.

அவனோ அவள் மீது அளவுகடந்த காதலுடன் இருக்கிறான். தான் செய்த செயல் தவறென்று உணர்ந்து அவளிடம் அவள் உயிருக்காய் மன்றாடுகிறான். அவளின்றி தன் வாழ்வே இல்லையென தன் உயிரையும் இழக்கத் துணிகிறான்.

அவனின் காதல் வென்று அவள் குழந்தையுடன் உயிர்ப்பெற்று வருகிறாள். முடிவில் அவனின் உயிரைவிடத் தன்னை அதிமாய் காதலிக்கும் அவன் மணம் புரிந்து அவனை ஏற்றுக்கொள்கிறாள்.

யாரென்று தெரிகிறதா.... ?

படித்ததும் கண்டுபிடிச்சிடுவீங்கன்னு நினைக்கிறேன். அவளோட தன்மானத்தையும், அவனோட ஆழ்ந்த காதலையும் கண்டு பிரமித்து திரும்ப திரும்ப படித்த எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று .... எழுத்தாளர் யார் ....? கதையின் தலைப்பு என்ன .... ?
வாங்க விளையாடலாம்.
 

New Threads

Top Bottom