Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யாரென்று தெரிகிறதா...... ? - 3

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
34
Reaction score
31
Points
33
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்......

யாரென்று தெரிகிறதா உங்க வரவேற்பும், பங்களிப்பும் பார்த்து மெர்சலாய்ட்டேன் செல்லங்களா..... சென்ற வாரம் சரியாக "ஒரு போர்களமும், இரண்டு பூக்களும். எழுத்தாளர் வைரமுத்து என்ற விடைச் சொல்லி கீரீடத்தையும், வாசகப்பேரிகைப் பட்டத்தையும் வெல்பவர் Siva Punniya அவர்கள். வாழ்த்துகள் Siva Punniya. எட்டு மாதங்களாக சைலண்ட் ரீடரா இருந்த உங்களை பேச வைத்ததே எனக்கு கிடைத்த வெற்றி என் ப்ரியங்களும், பேரன்பும்.




இனி இந்த வார கதைச் சுருக்கத்தை பார்ப்போமா.....?
இன்று நாயகியின் பார்வையில் பார்ப்போமா...?




ஒரு பெண் இரண்டாம் மணம் புரிவதென்ன அவ்வளவு பெரிய குற்றமா...? என் தந்தை இறந்தபின் தனி பெண்ணாய் என்னை வளர்த்த என் தாயாரை மிகவும் பிடித்து மணந்து கொண்டார் ஜமீன்தார். அவருக்கு குழந்தைப் பேரில்லாக் காரணத்தால் அவரின் சகோதரி மகனை தன் வாரிசாக்கியிருந்தார். என் தாயை மட்டும் மனைவியாய் ஏற்காமல், என்னையும் தன் சொந்த மகளாய் ஏற்றுக்கொண்டார். சிறுமியாய் அவ்வீட்டினுள் என்னை முதன்முதலாய் அழைத்துச் சென்றவன் அவனே..... அவனே அந்த ஜமீனின் வாரிசு.



ஜமீனில் நுழைந்த நாள் முதலாய் என் பிறப்பையும்,இறந்த என் தந்தையையும் கேவலமாய் பேசுவதே அந்த வீட்டின் இளையராணி என் சின்ன அத்தையின் வழக்கமாயிற்று. அவரை அத்தை என்று அழைப்பது அவருக்கு பிடிக்காது.



சொத்தின் வாரிசாய் நானும், அதிகாரம் செலுத்த என் அன்னை வந்ததையும் ஏற்கமுடியாமல் அவர் செய்த செயல்கள் என் மனதை ஆழமாய் பாதித்துவிட்டது. கடைசியாய் அவர் கட்டிய திருட்டுப் பட்டத்தை பொறுக்கமாட்டாமல் வீட்டை விட்டு வெளியேறி படித்து என் தந்தையைப் போலவே நாடகத்தையும், நாட்டியத்தையும் என் லட்சியமாய் கொண்டு வெற்றிபெற்றேன். எனக்கென்று ஒரு வழி எனக்கென்று ஓர் உலகம் என்று இருக்கையில் திரும்பவும் அவன் என் வாழ்வினுள் வந்தான் என் தாயின் உடல்நிலை சரியில்லையென்று.



மீண்டும் நாடகங்கள் அரங்கேரியது. முகமுடி அணிந்த முகம் என்னைக் கண்காணிக்கிறது. என் தாயாருக்காய் அவன் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வது எனக்கு ஆச்சரியம் இல்லை. அவன் நல்லவனென்று எனக்குத் தெரியும். ஆனால் அவன் பார்வையில் உள்ள மாற்றம் நான் அறியாதது. அவனை நான் விரும்புகிறேனோ.....



அவனுக்குத் திருமணமாம் அத்தைகாரி முடிவு செய்துவிட்டாள். அதற்கேன் என் மனம் இவ்வளவு பாடுபடுகிறது. தவியாய் தவித்துப் போகிறேனே... என் தாயாருடன் இருக்கவும் முடியாமல், அவனை விட்டு விலகவும் முடியாமல், இந்த ஜமீனில் இருக்கவும் இயலாமல் இதென்ன நரகவாழ்க்கை......



நான் யாரென்று தெரிகிறதா.....?
அவன் யாரென்று தெரிகிறதா.....?
 

New Threads

Top Bottom