Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL யார் மீது குற்றம்? -Tamil Novel

Status
Not open for further replies.
அத்தியாயம் 05

அழைப்பை துண்டித்து விட்டு நிமிர்ந்தவன் ஒட்டுமொத்த எரிச்சலையும் தனக்குள்ளே விழுங்கிக் கொண்டான்.

அவர் மேல் இருக்கும் கோபத்தை அந்த டாக்டரிடம் காட்டி விடக் கூடாது என்பதில் அவ்வளவு கட்டுப்பாடாய் இருக்க வேண்டிய நிலை அவனுக்கு...

"சாரி மிஸ்டர்.ராம்... சொல்லுங்க"

"மிஸ்டர். அஜய் நீங்க கெஸ் பண்ணா மாதிரி புல் பாடி செக்கப் பண்ணி பாத்ததுல இவர் ஒரு காலு ஊணமா தான் இருக்கு... உங்க கெஸ்ஸிங் கரெக்ட் தான்... இட்ஸ் அ மர்டர்... பட் ஏன் அவரு நடக்க முடியா நிலையில காட்டுக்குள்ள போனாருன்னு எனக்கே யோசனையா இருக்கு"

"மிரட்டல் ஆர் கிட்னாப்பா இருக்கலாம் டாக்டர்... என்னன்னு எங்களுக்கும் சரியா தெரில... எனிவேஸ் தேங்க் யூ பார் யூர் கோப்பரேஷன்" கை குழுக்கி விட்டு வெளியேறி நடந்து வந்து கொண்டிருந்தவனின் மூளை அதி தீவிரமான சிந்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

.....

"தோ வர்றேன்" நர்ஸ் ஒருவர் வந்து அழைத்திருக்க அவசரமாக ஐ. சி. யு வுக்கு விரைந்து வந்து கொண்டிருந்தவர் யோசனையில் வந்து கொண்டிருந்த அஜய்யுடன் மோத, தன் மீதும் பிழையிருப்பதை உணர்ந்தவன் "சாரி மேடம்" என்றான் அவசரமாக...

அவனை பார்த்து அதிர்ந்து நின்றிருந்தவருக்கு ஏனோ பயத்தில் வியர்த்து வழிந்தது.

"மேடம் ஆர் யூ ஓகே?" அவன் வார்த்தைகளில் திடுக்கிட்டு கலைந்தவர்

"ஐ... ஐ... அம் ஓகே... சாரி" பேசக் கூட முடியாமல் நா சண்டித்தனம் செய்து வைக்க அவசரமாக திரும்பி நடந்தவருக்கு அவனை கண்டதிலிருந்த படபடப்பு நீங்கவே இல்லை....

தோள்களை குலுக்கி விட்டு திரும்பி நடந்தவனுக்கும் அவர் அதிர்ச்சி சற்றே வித்தியாசமாகப் பட்டாலும் அவன் அதை கருத்தில் கொள்ளாதது தான் இங்கு பெரும் பிழையாய் போயிற்று...

.......


"விஷ்ணு சார்... மித்ரன் சாரை எங்கே இவ்வளவு நேரமா காணும்?"

"அவன் ஹாஸ்பிடல் போயிருக்கான்னு நீங்க தானே மதி சொன்னீங்க... அப்பறமும் என்ன கேள்வி?"

"ஏன் நான் சொன்னா திரும்ப கேள்வியே கேக்க கூடாதா நானு?"

"கேக்கலாமே நல்லா கேக்கலாமே... அதுக்கு ஏன் சூலாயுதம் ஏந்துன அம்மன் மாதிரி ஒரு முறைப்பு? "

"எதே?? சூலாயுதம் ஏந்துன அம்மன் மாதிரியா? என்னை பாத்தா எப்பிடி தெரியுது உங்களுக்கு? "

"ஹாஹா... சொல்லட்டுமா? "

"சொல்லுங்க"

"கர்மா இஸ் பூமெரங் ஆம்... அதனால நீங்க சொன்ன அதே டயலாக நான் திருப்பி படிக்குறேன்... சத்தியமா மனுஷன மாதிரி மட்டும் தெரில" சொல்லி விட்டு அவன் சிரிக்க பல்லை கடித்தாள் பெண்.

"என்ன நக்கலா? "

"இல்லையா பின்னே?"

"உங்க கூட மனுஷன் பேசுவானா?"

"ஆமாமா மனுஷங்க பேச மாட்டாங்க தான்" அதற்கும் அவன் கலாய்க்க

"சார் போதும் சார்" விட்டால் அழுது விடுவாள் போலும்...

"ஓகே ஓகே... " வாய் பொத்தினாலும் இன்னும் சிரிப்பு பீரிட்டது விஷ்ணுவுக்கு...

"இப்பிடியே பண்ணி கிட்டு இருந்தீங்கன்னா அப்பறம் நீங்க வந்த இடத்துல லவ்வர்ஸை சேத்து வெச்சிகிட்டு சுத்திட்ருக்கீங்கன்னு சொல்லிடுவேன் மித்ரன் சார் கிட்ட"

"என்ன சொல்லிடுவேன்" திடீரென பின்னால் கேட்ட குரலில் அதிர்ந்தாலும் விஷ்ணுவை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி பழிப்பு காட்டினாள் பாவை...

"அதுவா மச்சான்... மதி இருக்காங்கல்ல... அவங்களுக்கு உன் மேல லவ்... "

"நோ நோ மித்ரன் சார்... அப்பிடி எதுவும் இல்ல.. விஷ்ணு சார் தான் வந்திருக்க ப்ரஸ்ல ஒவ்வொரு பொண்ணா காட்டி அவ நல்லா இருப்பாளான்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க"

"அடிப்பாவி... பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வேணாமா?" அவன் அதிர வாய் பொத்தி சிரித்தாள் அவள்.

"வாட் இஸ் திஸ் விஷ்ணு? "

"ஆமா வாட் இஸ் திஸ் விஷ்ணு... அவ சொன்னா நம்பிடுவியா... பொய் சொல்றாடா அவ... நண்பனை பத்தி தெரியாதாடா உனக்கு? "

"தெரிஞ்சதால தான் கேட்டேன்... " அவன் போலியாய் நெஞ்சில் கை வைப்பது கண்டு அவள் பக்கென சிரிக்க தானும் புன்னகைத்தவன்

"சரி டீடெயில்ஸ் கேட்டேன்ல? எங்கே கொடு" என்றான் கடமை தவறாது...

"இதோ இருக்கு டா... " அவன் நீட்டவும் மதியிடம் சேகரிக்க சொல்லி இருந்த டீடெயில்ஸையும் வாங்கிக் கொண்டான்.

"லெட்ஸ் கோ விஷ்ணு... ப்ரஸ் மீட் இருக்கு... அவனுங்களுக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சோம்னா விடியும் வரை விட மாட்டானுங்க... சீக்கிரமா கண்டு பிடிச்சிடுவோம்னு சொல்லிட்டு நகர வேண்டியது தான்... அப்பறம் மதி.. உங்க ஏரியாக்குள்ள நடந்திருக்க மர்டருங்கறதால உங்களையும் கார்னர் பண்ணுவாங்க... பீ கேர்புல்... பின் வழியா போங்க... நாங்க சமாளிச்சிட்றோம்... அண்ட் நைட்டுக்கு மப்டில போலிஸை காட்டை சுத்தி நிக்க வெச்சிடுங்க"

"ஓகே சார்" அவள் சல்யூட் அடிக்க தலையசைத்து விட்டு நண்பனுடன் இணைந்து நடந்தான் அஜய் மித்ரன்.


***

ஐ. சி. யு க்குள் இருந்தவருக்கு அப்போதும் படபடப்பு நீங்குவதாய் தெரியவே இல்லை..

நல்ல வேலையாக அவனுக்கு அவரை அடையாளம் தெரிந்திருக்கவில்லை..

இல்லையென்றால்???

நினைக்கவே நடுங்கியது அவருக்கு...

ஆபரேஷன் ஒன்றிற்காய் உள்ளே நுழைந்தவர் உடல் நடுக்கத்தில் அதை செய்ய முடியாதென உணர்ந்து, சொல்லி விட்டு வெளியே வந்து விட்டார்.

'கடவுளே... இது என்ன சோதனை... அவன் எப்படி இங்கே வந்தான்? ' மனதில் எழுந்த கேள்விகளுக்கு அவனிடமல்லவா பதில் இருக்கிறது.

"டாக்டர்... ஆர் யூ ஓகே?" ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் அவர் அமர்ந்து கொண்டிருந்த நீளிருக்கையருகே அவசரமாக வந்தமர்ந்தார்.

"என்னாச்சு?"

"நத்திங் சுமதி... கொஞ்சம் தலை வலி மாதிரி இருந்துது... அதான்.."

"ஓஹ்... டேப்லெட் போட்டீங்களா? இல்லன்னா வீட்டுக்கு கிளம்பறீங்களா? "

"நோ டாக்டர்... இன்னிக்கு முக்கியமான ஆப்பரேஷன் இருக்கு... வீட்டுக்கு போக முடியாது..."

"இட்ஸ் ஓகே ராஜி... நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க... நான் பாத்துக்கறேன் " சரியென்றவன் தன்னறைக்கு விரைந்தார்.


***


இரவு...

"மச்சான்... வெளியில ஏதோ சத்தம் கேக்குதுடா..." இருவர் கொடுத்த குடும்ப விபரங்களையும் அலசிக் கொண்டு அமர்ந்திருந்தவனை கலைத்தான் ப்ளாட்டின் ஜன்னலருகே நின்றிருந்த நண்பன்.

"கீழ போயி பாத்துட்டு வா" இயந்திர கதியில் மொழிந்தவன் பார்வையை திருப்பாதது கண்டு

"பெரிய சின்ஸியர் சிகாமனி... போடா" நக்கலடித்து விட்டு நகர நண்பன் வார்த்தைகளில் இளம் கீற்றாய் புன்னகை மலர்ந்தது மித்ரனின் உதடுகளில்....

.....

"மித்ரா நாம மப்டிக்கு மதி ஸ்டேஷன் போலிஸை நிறுத்தி இருந்தோம்ல... அவனுங்கள்ல ஒருத்தன் செத்து கிடக்குறானாம்டா... அது மட்டுமில்லாம காட்டுக்குள்ள எவனோ தீயை வேற வெச்சிருக்கானாம்டா" மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நண்பன் வந்து ஒப்பித்ததில் சடாரென தன்னிருக்கையை விட்டு எழுந்திருந்தான் மித்ரன்.


யார் மீது குற்றம்?

தொடரும்...

27-07-2021.


 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom