அத்தியாயம் 16
ராதை நீண்ட நேரமாக ஏதோ யோசித்துக் கொண்டிருக்கும் போதே வனிதா அவளை உலுக்கினாள். "என்னனு சொல்லுடி அப்போ தான் உன் பயத்துக்கு எதாவது தீர்வு என்னால சொல்ல முடியும்" என்றாள் வனிதா. "சொல்றேன் டி... என்னுடைய சின்ன வயசில் நான் நிறைய பேசுவேன் என் பேச்சை எல்லாரும் ரசிப்பாங்க மகிழ்ச்சியாகி சிரிப்பாங்கனு பாட்டி சொல்லு வாங்க.. எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து என் பெரியப்பா பெரியம்மாவை நான் அம்மா அப்பானு தான் கூப்பிட்டு இருக்கேன் நான் அவங்க தான் என் உண்மையான அப்பா அம்மானு நினைச்சிட்டு தான் பத்து வருஷம் வளர்ந்தேன் என் பெரியப்பா பெரியம்மா பாட்டி எல்லாருமே என் கிட்ட நான் யாருன்ற உண்மையை மறைச்சி தான் வளர்த்தாங்க. கோதை அக்கா வும் என்ன சொந்த தங்கச்சினு தான் நினைச்சிட்டு இருந்தாங்க எங்க பேர் கூட இரத்த சகோதரிகள் போல தான் இருக்கும் ஆண்டாள் கோதை கோமகள் ராதைனு எங்களோட வாழ்க்கை இப்படி பொய்ட்டு இருக்கும் போது தான் மைதிலி பெரியம்மா வீட்ல இருந்து அவங்களை பார்க்க வந்தாங்க.
மைதிலி பெரியம்மா வளர்ந்த ஊர் பெங்களூர் அவங்க அப்பா அந்த காலத்து இன்ஜீனியர் பெங்களூரில் செட்டில் ஆயிட்டாங்க மைதிலி பெரியம்மா வுடைய குடும்பம் ரொம்ப பெரிய பணக்காரங்க.. நான் பிறந்ததில் இருந்து மைதிலி பெரியம்மா வீட்டில் யாரையும் பார்த்தது இல்லை ஏன்னா அவங்க மொத்த குடும்பமே பத்து வருஷமா கனடாவில் இருந்தாங்கலாம். மைதிலி பெரியம்மா க்கு கூட பிறந்தது ஒரு அண்ணா அவர் கனடாவில் ஒரு ஐடி கம்பெனி வெச்சிருக்கார்.அவங்க எல்லாருமே ஏப்ரல் மாசம் இந்தியா வந்தாங்க. அது வரைக்கும் சந்தோஷமா இருந்த என் வாழ்க்கையில் அவங்க வந்த பின்பு தான் புயல் அடிச்சது.
ஏப்ரல் மாசம் பரிட்சை லாம் முடிஞ்சு நானும் கோதை அக்காவும் வீட்டிலேயே நல்லா ஆட்டம் போட்டோம். அந்த சமயத்தில் தான் ஒரு தாத்தா பாட்டி ஒரு அன்கிள் ஆன்ட்டி ஒரு பையன் ஒரு பொண்ணு வந்தாங்க. அவங்க எல்லாருமே வந்த அன்னிக்கே கோதை அக்கா "தாத்தா பாட்டி மாமா" அப்படீன்னு சந்தோஷத்தில் குதிச்சாங்க. ஆனா எனக்கு அவங்க யாருன்னு கூட தெரியல. அப்போலாம் பெரியப்பா காலையில் போனா இரவு தான் வருவாங்க இராஜேஸ்வரி பாட்டி ஒரு சொந்தகாரங்க கல்யாணத்திற்காக பம்பாய்க்கு போயிருந்தாங்க.
மைதிலி பெரியம்மா எனக்கு அவங்களை தாத்தா பாட்டி மாமா அத்தைனு அறிமுகம் படுத்தினாங்க நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் ஆனா அவங்க எல்லாருமே கோதை அக்காவை தான் கொஞ்சுவாங்க அவங்க கிட்ட தான் அந்த சாக்லேட் பாக்ஸ் லாம் கொடுப்பாங்க பொம்மைகள் எல்லாமே அக்கா கிட்ட தான் கொடுப்பாங்க ஏன் அந்த பசங்க கூட கோதை அக்கா கிட்ட தான் விளையாடிட்டே இருப்பாங்க என்னை விளையாட்டுக்கு சேர்த்துக்க மாட்டாங்க எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்துது அதனால நான் மைதிலி பெரியம்மா கிட்ட இதை சொல்லலாம்னு பேசப் போன அப்போ அவங்க அறையில் அந்த தாத்தா பாட்டி மாமா அத்தை அப்பறம் அந்த பையன் இருந்தாங்க.. கோதை அக்காவும் அந்த பொண்ணும் அவ பேரு யசோதா நினைக்கிறேன் வெளியில் விளையாடிட்டு இருந்தாங்க. மைதிலி பெரியம்மா அந்த அறையில் அழுதுட்டு இருந்திருகாங்க ஆனா நான் சின்ன பெண் தான நல்லா பேசுவேன் ஆனா விவரம் தெரியாம அவங்க முன்னாடியே மைதிலி பெரியம்மா கிட்ட போய் அவங்க மடியில் உட்கார்ந்து அழுக ஆரம்பித்தேன் "அம்மா பாட்டி தாத்தா மாமா அத்தை எல்லாரும் அக்கா கிட்ட தான் சாக்லேட்ஸ் கொடுத்தாங்க என்கிட்ட சிரிச்சு பேச கூட மாட்டுறாங்க ஏன் இந்த பையன் கூட என்னை விளையாட்டுக்கு சேர்த்துக்க மாட்டுறான்" என்று அவனை கை காட்டி மைதிலி பெரியம்மா விடம் அழுதேன்.அந்த பையன் பேர் கூட சரியா எனக்கு நியாபகம் இல்ல வனிதா ஏதோ கிருஷ்னு நினைக்கிறேன் அவனுக்கு அப்போ வயசு ஏறத்தாழ பதினாறு இல்ல பதினேழு இருக்கும். நான் அவனை கை காட்டி பேசி அழுத உடனே எல்லார் முன்னாடியும் அந்த கிருஷ் என் கையை முறுக்கி விட்டு "கண்ட அனாதை லாம் என்னைய கைய நீட்டி பேசக் கூடாது.. நான் எவ்வளவு பெரிய கோடிஸ்வரன் தெரியுமா உன் அப்பா அம்மா செத்து பொய்ட்டாங்க நீ இந்த வீட்டு பொண்ணே இல்லைனு கையை முறுக்கியவன் என் கையில் நல்லா கிள்ளிவிட்டான். எனக்கு பயங்கர வலி அழுது துடிச்சிட்டேன் நான் போகும் முன்னாடியே ஏதோ பிரச்சனை வந்து தான் மைதிலி பெரியம்மா அழுதுட்டு இருந்திருக்காங்க இந்த பையன் என்கிட்ட இப்படி சொல்லி முரட்டுதனமா நடந்துப்பானு யாரும் எதிர்பார்க்கலை நான் வலியில் துடிச்சிட்டு இருக்கும் போது தான் மைதிலி பெரியம்மா சுயநினைவுக்கே வந்தாங்க போல.. என்னை அவனிடம் இருந்து பிரிச்சு என் கையில் தடவி வலிக்குதா ராதை அம்மு அழாதீங்க என்று என்னை ஆறுதல் படுத்தினவங்க அவங்க அண்ணனிடம் "பையனை இப்படி தான் முரட்டு தனமா வளர்ப்பீங்களானு" கேட்டாங்க. உடனே அவங்க அண்ணி க்கு கோபம் வந்திருச்சு "நீ இதோ நிக்குதே இந்த அனாதை க்காக இரண்டாவது குழந்தை பெத்துக்காம குடும்ப கட்டுப்பாடு ஆரப்பரேஷன் பண்ணிட்டு நிக்குற என் பையன் சொன்னதுல என்ன தப்பு இவளை லாம் போட்டு அடிச்சிருக்கனும் நல்லா இவளை அனாதை ஆசிரமத்தில் சேர்த்துருக்கனும்" என்று அந்த ஆன்ட்டி மனசாட்சியே இல்லாம பேசுனாங்க வனிதா என்று சொல்லும் போதே ராதை யின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வனிதா வின் முகத்திலும் கண்ணீர் வந்துக்கொண்டிருந்தது.
" சாரி டி என் கதையைச் சொல்லி உன் டிரிப்பை வேஸ்ட் பண்றேன் நான் இத்தோட இந்த கதையை நிறுத்துறேன் போதும்" என்று கண்களைத் துடைத்தாள் ராதை. "ராதை ப்ளிஸ் எனக்கு எல்லாத்தயையும் சொல்லனும் இது என் மேல் சத்தியம்" என்று தன் தலையில் கை வைத்தாள் வனிதா.
அந்த ஆன்ட்டி அப்படி பேசுன போது யாருமே அவங்க வாயை அடக்கல இன்ஃபக்ட் எல்லார் முகத்திலயும் ஒரு சின்ன சந்தோஷம் தெரிஞ்சிது என்னை அவங்க அப்படி பேசுனதுக்கு மைதிலி பெரியம்மா மட்டும் தான் அழுதுட்டே இருந்தாங்க ஒரு சின்ன பெண்ணின் மனது கசங்கி சுக்கு நூறா போச்சுனு யாருமே என் மேல் ஒரு குறைந்த பட்சம் மனிதாபிமானம் கூட வைக்கவில்லை. இவங்க இப்படி பேசுன உடனே என்னால அந்த அறையில் இருக்க முடியல நான் என்னோட அறைக்கு போய் முதன் முறையாக அந்த பதினொன்று வயதில் கதவைச் சாற்றித் தாழ் போட்டேன் அப்போ இருந்து என் பேச்சுக்கும் மனதுக்கும் சேர்த்து தாழ்பாள் போட்டுவிட்டேன். மைதிலி பெரியம்மா நிறைய தடவை கதவை தட்டினாங்க ஆனால் நான் வரமாட்டேனு மட்டும் சொன்னேன் கதவைத் திறக்கவில்லை. பின் கோதை அக்கா கதவைத் தட்டினார்கள் அப்போதும் என்னிடம் அசைவில்லை கோதை அக்கா நான் கதவைத் திறக்கவில்லை என்றதுமே அழத் தொடங்கினார் அப்போது அக்கா பக்கத்தில் அந்த பையன் இருந்திருக்கான் அவன் அக்காவிடம் "கோதை நீ ஏன் அழுற அவள் ஒரு அனாதை அவளால் தான் உனக்கு குட்டி தங்கையோ தம்பியோ இல்லாமல் போச்சு அவள் ஒன்னும் செத்து துளையமாட்டா நீ வா நம்ம விளையாடலாம்" என்று அவளைக் கூட்டிச் சென்றான் அவன். அன்று இரவு பெரியப்பா வந்து என் அறைக் கதவை தட்டும் வரை நான் கதவைத் திறக்கவில்லை.
பெரியப்பா கதவை தட்டியவுடன் கதவைத் திறந்து பெரியப்பாவை கட்டிப்பிடித்து அழுதேன்." அப்பா நான் அனாதைனு சொல்றாங்க அனாதைனா அப்பா அம்மா இல்லாதவங்க தான அப்போ நீங்க என் அப்பா இல்லையா" என்று அழுதுக்கொண்டே இருந்தேன். அப்போது பெரியப்பா மைதிலி என்று பெரியம்மாவை கத்தி அழைத்து பெரியம்மா வந்த உடனே அவர்களை கன்னத்தில் அறைந்தார். இதைப் பார்த்த பெரியம்மாவின் குடும்பத்தினர் பெரியப்பா விடம் என்னை அனாதை ஆசிரமத்தில் சேர்க்க வேண்டும் என்று சண்டை போட்டனர். அவர்களை எதிர்த்து பெரியப்பா வால் ஒரு வார்த்தை பேசமுடியவில்லை ஏனெனில் பெரியப்பா வின் தொழில் வளர்ச்சிக்காக பெரியம்மாவின் அண்ணனிடம் தான் முப்பது கோடி கடன் வாங்கினார் இந்த விஷயம் எனக்கு பின்னாளில் தான் தெரிய வந்தது. பெரியப்பா வால் என்னை விடவும் முடியவில்லை அவர்களை எதிர்த்தும் பேச முடியவில்லை.அவர் அவர்கள் அனைவரிடமும் கை எடுத்து கும்பித்தார் "என் தம்பி பிரபாகரின் பெண்ணை என்னால் அனாதை ஆசிரமத்தில் சேர்க்க முடியாது" என்றார்.
"இந்த விபி ஃகுருப்ஸை நீங்க ஒத்த ஆளா பார்த்து சம்பாதிக்குறீங்க ஆனா உங்களுடைய காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து இறந்த தம்பி யின் மகள் எங்கள் வீட்டு இளவரசி கோதையைப் போல வசதியை அனுபவிக்கக் கூடாது நாங்க இதற்கு ஒரு நாளும் சம்மதிக்க மாட்டோம்" என்றார் மைதிலி யின் அண்ணன் சேதுராமன்.
இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்த நாள் காலை இராஜேஸ்வரி பாட்டி வந்தபின் பேசிக்கோள்ளலாம் என்று நினைத்தார் விஜயகுமார் அன்று இரவு எப்போதும் தன் பெரியம்மா கூட படுக்கும் ராதை தனியாக படுத்தாள் புண்பட்ட மனது என்பதால் மைதிலி யும் ராதையின் போக்கில் விட்டுவிட்டார். ஆனால் அப்போ அப்போ அவளை வந்து பார்த்துக் கொண்டாள்.
அடுத்த நாள் எப்போதும் போல விஜயகுமார் தன்னுடைய கம்பெனியிக்கு கிளம்பினார். மைதிலி யிடம் ராதையை எப்போதும் கண்காணிக்குமாறு சொல்லிவிட்டுச் சென்றார். விஜயகுமார் கிளம்பும் போது ராதை தூங்கிக்கொண்டிருந்ததால் அவளை பாசமாக ஒரு பார்வையை விட்டு தன்னுடைய கம்பெனி க்குச் சென்றார்.
அன்று ராதை யாரிடமும் பேசவில்லை அவள் கோதையிடம் விளையாடாமல் தன் அறையிலேயே ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தாள். மைதிலி அவளை ஒருவாறு சமாதானம் செய்து சாப்பாடு மேஜைக்கு அழைத்து வந்தார். யார் தன் எதிரே அமர்ந்திருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் ராதை சாப்பிட ஆரம்பித்தாள். "யசூ யூ நோ சம்திங்.. இந்த விட்டில ராதை னு ஒரு அனாதை இருக்கு அந்த பொண்ணு ஒரு அனாதைனு மட்டும் தான் நினைச்சேன் ஆனா அவளோட நடிப்பு சான்ஸே இல்லை நேற்று கதவை சாற்றி அப்படி இப்படின்னு பண்ணி அத்தையை மாமா கிட்ட அடி வாங்க வெச்சிட்டா சரியான விஷம்" என்று என்னை முறைத்துக் கொண்டே தன் தங்கையான அப்பெண்ணிடம் கூறினான் அவன் அந்த மனச்சாட்சி இல்லாத மிருகம் என்று இப்போது தன்னிலை க்கு வந்தவள் வனிதாவிடம் திரும்பினாள்.
" ஏன் வனிதா அவன் கிட்ட நான் முன்ன பின்ன பேசினது இல்லை ஒரு சின்ன பெண்ணிடம் அவன் எப்படி அப்படி பேசலாம் அவனுக்கு என்னை பற்றி என்ன தெரியும் அவன் அப்படி பேசுன உடனே எனக்கு அழுகை வந்தது அதற்குப் பின் என்னால் சாப்பிட முடியவில்லை. அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன் நல்ல வேளை அப்போ தான் பாட்டி பம்பாயில் இருந்து வந்தாங்க. அவங்க வந்த உடனே அவங்க கிட்ட ஓடிப்போய் அழுது நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டேன்.
பாட்டி உடனே என் பெரியப்பாவிற்கு கால் செய்து அவரை வீட்டுற்கு வர வைத்து கேள்வி கேட்க ஆரம்பித்தார். "விபி க்ருப்ஸ் விஜயகுமார் உருவாக்கியது இல்லை இது என் கணவருடையது அப்படி இருக்கும் போது விஜயகுமாருக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை தான் பிரபாகரனுக்கும் இருக்கிறது. உங்கள் குடும்பம் எங்களை விட வசதி வாய்ப்பு அதிகமாக இருக்கலாம் நீங்கள் விஜயகுமாரிற்கு பணம் உதவி செய்திருக்கலாம் கடன் உதவி செய்திருக்கலாம் அதற்காக என்னுடைய பேத்தியை அனாதை ஆசிரமத்தில் சேர்க்க என்னால் முடியாது அதே போல் அவளைப் பற்றி பேசும் உரிமை உங்களுக்கும் கிடையாது விஷ்வநாதன் அண்ணா காந்திமதி மதினி சேதுராமன் தம்பி அப்புறம் லட்சுமி என்று அவர்கள் நால்வரையும் ஒருதடவை கூப்பிட்டு உங்கள் வீட்டிலும் ஒரு பெண் இருக்கிறது பெண் பிள்ளைகளை எவ்வளவு பாதுகாப்பாக வளர்த்து கரைசேர்ப்பது என்பது தெரிந்தும் நீங்கள் மனசாட்சி இல்லாமல் நடந்தது வருத்தமாக இருக்கிறது என்றவர் விஜயகுமாரிடம் திரும்பி "நானும் ராதையும் ஊட்டி கெஸ்ட் ஹவுஸிற்குச் செல்கிறோம் திரும்பி வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்று ராதையை அழைத்து டிரைவரை வைத்து ஊட்டிக்குச் சென்றார்.
விஜயகுமாருக்குமே ராதைக்கு ஒரு சின்ன மாற்றம் இருந்தால் மனசு தெளிவாக ஆகும் என்று நினைத்தார்." இதற்குப் பிறகும் ராதையைப் பற்றி யாரும் பேச வேண்டாம்" என்று பொதுவாக சொல்லிவிட்டு மறுபடி அலுவலகம் சென்று விட்டார்.
ஆனாலும் மைதிலியின் அண்ணன் சேதுராமன் மற்றும் அண்ணி லட்சுமி ராதையைப் பற்றி தப்பாக தான் கூறினர் இவளால் உனக்கும் உன் பெண்ணிற்கும் கண்டிப்பாக பிரச்சனை வரும் என்று அவளிடம் கூறினர். அப்போது அவர்களுடைய புதல்வன் கிருஷூம் இருந்தான் அவன் மனதில் ராதையைப் பற்றி ஏறிய தப்பான எண்ணவோட்டங்கள் இன்னும் பலமானது. இவர்கள் பேசின அனைத்தையும் மறுத்த மைதிலி ராதையுடம் இதனை மறைத்து விட்டார்.
"நானும் பாட்டியும் ஊட்டி சென்ற பின் பாட்டி என்னைப் பற்றி அனைத்தையும் சொன்னார்கள் அப்போது இருந்தே நான் என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன் என்னுடைய முழு கவனம் படிப்பில் மட்டும் தான் இருந்தது. அதனால் தான் எனக்கு மேக்கப் அழகு பர்ட்டே பார்ட்டி ஸ்கூட்டி கார் எதிலுமே நாட்டம் இல்லை என் இன்ஜினியரிங் படிப்பும் மெரிட்டில் கிடைத்ததால் கட்டணம் பெரிதாக இல்லை" என்று சொல்லி முடித்தாள் ராதை.
" ஐ அம் வெரி சாரி ராதை உனக்கு அம்மா அப்பா இல்லை ஆனா நீ பணக்காரீனு நினைச்ச ஆனா நீ பணம் இருந்தும் ஒரு ஏழை"என்று அழுதாள் வனிதா." எனக்கு பணம் தேவை இல்லை வனிதா ஆனால் பெரியம்மா குடும்பத்தின் கடுஞ்சொற்கள் இப்போ நினைச்சாலும் தூக்கம் வராது" என்று அழுத கண்களைத் துடைத்தாள் ராதை.
" சேரி அந்த கனடா குடும்பம் எப்போ
இந்தியாவிற்கு இப்போ வந்தாங்க"என்று கேள்வியாய் கேட்டாள் வனிதா. "அவங்க பெங்களூரில் செட்டில் ஆகி ஒரு நாலு வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன் டி மைதிலி பெரியம்மாவும் கோதை அக்கா வும் பேசறதை வெச்சு தெரியும்.. உண்மையை சொல்லனும்னா அவங்க இந்தியாவுல செட்டில் ஆனது தெரிஞ்சு தான் நான் வேண்டும் என்றே சென்னை கல்லூரி தேர்வு செய்து ஹாஸ்டல் சேர்ந்தேன். கண்டிப்பா இந்தியாவுல செட்டில் ஆனதுக்கு அப்புறம் அடிக்கடி மைதிலி பெரியம்மாவைப் பார்க்க வருவாங்க அவங்க முகத்திலே முழிக்கக் கூடாதுனு தான் சென்னை ஹாஸ்டலில் சேர்ந்தேன் அதற்கு பிறகு இந்த நாலு வருஷம் வேண்டும் என்றே கோதை அக்கா பிறந்தநாள் பார்ட்டி அப்போ எக்ஸாம் பிராக்டிகல்ஸ் அது இதுனு பொய் சொல்லி போகிறதை தவிர்த்தேன் ஏன்னா மைதிலி பெரியம்மா குடும்பத்திற்கு கோதை அக்கா என்றால் உயிர் அதனால் கண்டிப்பாக அக்காவின் பிறந்தநாளுக்கு வந்திருப்பார்கள் அதுலயும் அந்த பையனும் என் அக்காவும் பெஸ்ட் பிரண்ட்ஸ் போல அடிக்கடி அக்கா அவன் கூட ஃபோன் பேசுவாங்க நேரில் கூட மீட் பண்ணனு என்கிட்ட சொல்லுவாங்க. நல்ல வேளை நானும் அந்த குடும்பமும் அந்த சம்பவத்திற்குப் பிறகு இன்னும் பார்க்கவில்லைனு நிம்மதியாக இருந்தேன் ஆனா இன்னிக்கு மொத்த குடும்பமே வராங்கப் போல அதுல இருந்து ஒரே தலைவலியா இருக்கு டி" என்றாள் ராதை சோர்வாக.
" நீ நிம்மதியாக இரு டி பத்து வருஷம் முன்னாடி நடந்த விஷயம் உன்னை பார்த்தே பத்து வருஷம் ஆகுது உன்னை மறந்துருப்பாங்க.. சேரி எனக்கொரு டவுட் டி நீ சொல்றதை வெச்சு பார்த்தா அந்த கனடா குடும்பம் சிவமாறன் அத்தானை விட பணக்காரங்களா இருப்பாங்க அந்த திமிரு புடிச்ச பையனுக்கும் ஏறத்தாழ சிவமாறன் அத்தான் வயசு தான் இருக்கும்.. உன் அருமை கோதை அக்கா வுக்கு அவன் முறைப் பயன் தான அவனை ஏன் அவள் கரெக்ட் பண்ணல அட்லீஸ்ட் நீயாவது சிவமாறன் அத்தானை நிம்மதியா பிரச்சனையே இல்லாமல் கல்யாணம் பண்ணிருக்கலாம்ல"என்ற வனிதாவை இம்முறை ராதை முறைத்தாள்." ஒருவேளை அந்த கிருஷ் பையன் பிரகாஷ் அத்தான் மாதிரி ஸ்மார்ட் இல்லை போல சுமார் பீஸ் போல"என்று வனிதாவே ராதை முறைத்ததால் பதில் சொல்லி சமாளித்தாள். நான் அவனை அந்த பிரச்சனையோடு பார்த்தது தான் டி அதற்கு பிறகு நான் அவனை பார்த்தது இல்லை அவன் புகைப்படம் கூட பார்த்தது இல்லை" என்று கூறினாள் ராதை.