Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ராதை மனதில் - Comments

Anitha Sundar

Active member
Messages
113
Reaction score
61
Points
28
அத்தியாயம் 14

பிரகாஷும் அதற்கு சேரி என்று கூறினான். அந்த சமயத்தில் ராதையின் வீட்டில் தன் காதலைக் கூறிவிடலாம் என்று பிரகாஷும் முடிவெடுத்தான்.

அதே சமயம் பிரகாஷின் வீட்டில் விஜயகுமார் மைதிலி மற்றும் கோதை இருந்தனர். "அப்புறம் விஜயகுமார் நீங்க எங்களுக்கு சம்பந்தி ஆகப் போறீங்க ரொம்ப சந்தோஷம் ஆனாலும் இந்த விஷயம் பிரகாஷிற்கு தெரியாமல் பண்ணுவது தான் மனதிற்கு ஏதோ நெருடலாக இருக்கிறது" என்றார் ஆறுமுகம்

"ஏங்க சும்மா இருங்க பிரகாஷை எப்படி ஒத்துக்க வைப்பதுனு எனக்கு தெரியும் கோதை தான் இந்த வீட்டு மருமகள்" என்றாள் விஜயா. அங்கு நின்றுக்கொண்டிருந்த வனிதாவிடம் நான் தான் வெற்றி பெற்றேன் என்பது போல பாவனை காட்டினாள் கோதை.

அன்று இரவு ராதை க்கு வனிதா கால் பண்ணினாள்." ஏய் ராதை எங்க அத்தை திடிரென்று என் அப்பாக்கு கால் பண்ணி நல்ல விஷயம் முடிவாகப் போது வீட்டிற்கு சீக்கிரம் வாங்க என்று சொன்னாங்க நாங்களும் போனோம் அங்க போய் பார்த்தா உன் அக்கா பெரியப்பா பெரியம்மா வந்திருந்தாங்க.. நான் உன் கிட்ட சொல்லவே இல்லை ஒரு மாசம் முன்னாடி நம்ம இங்க கோயம்புத்தூர் வந்த சமயமே பிரகாஷ் என்னை கல்யாணம் பண்ண மாட்டேனு சொல்லிட்டாரு அதுக்கு அப்புறமும் அவரையே நினைச்சிட்டு இருக்க நான் லூசா என்ன அதனால் எங்க வீட்டிற்கு பொய்ட்டோம் அப்போவே என் அத்தை சொன்னாங்க இந்த மாதிரி ஒரு தடவை உன் அக்காவை எங்கயோ பாத்துருக்காங்க இப்பொ என் ரூட் கிளியர் ஆயிடுச்சு பிரகாஷ் க்கு வேற முறைப் பொண்ணும் இல்லை அதனால் கோதையை என் அத்தைக்கு பிடிச்சு போச்சுனு என் கிட்ட சொன்னாங்க ஆனா பிரகாஷூம் விரும்புறாரு போல அவங்க இரண்டு பேரும் ஜோடியாக சுத்தும் போதே நினைச்சேன்" என்றாள் வனிதா.


" வனிதா உன்கிட்ட நான் கொஞ்சம் பேசனும் அதை ஃபோனில் பேச முடியாது நேர்ல தான் பேசனும் அந்த ரூஃப் டாப் ஹோட்டலுக்கு வரியா" என்று கேட்டாள் ராதை." சேரி டி வரேன்" என்ற வனிதாவிடம்" நீ என்னை வந்து கூட்டிட்டு போ டி" என்றாள் ராதை." நீ எப்போ தான் வண்டி ஓட்ட கத்துப்பியோ உன் அக்கா காரே ஓட்டுறாள்" என்றாள் வனிதா.

சேரி டி நாளைக்கு பேசிக்கலாம் என்று கால்லை கட் செய்தவள் நேராக தன் பாட்டியிடம் சென்று "பாட்டி அக்கா க்கும் பிரகாஷ்க்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கனும் வேண்டிக்கோங்க" என்று கூறிவிட்டு படுக்க சென்று விட்டாள். இராஜேஸ்வரி கொஞ்ச நாட்களாகவே ராதையின் குழப்பமான முகத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் பேத்தியே வாயைத் திறந்து சொல்லட்டும் என்று காத்திருந்தார்.

பிரகாஷின் மொபைல் எண்ணை பிளாக் செய்திருந்தாள் ராதை. அதனால் அவளிடம் பேச நினைத்த பிரகாஷிற்கு ஏமாற்றம் மட்டும் தான் கிடைத்தது. சேரி இன்னும் ஒரு வாரம் தான இருக்கு அப்போது அவளுடைய பெரியப்பா விடம் பேசி விடலாம் என்று நினைத்தவன் துங்கச் .

அடுத்த நாள் மாலை வனிதா ராதையை ரூஃப் டாப்பிற்கு அழைத்துச் சென்றாள். சாப்பிடுவதற்கு ஆர்டர் செய்துவிட்டு ராதையிடம் திரும்பிய வனிதா "சொல்லு டி எதற்கு வர சொன்ன" என்று கேட்டாள். அவள் கேட்டு முடித்த அடுத்த நிமிஷம் ராதை மடமடவென அழ ஆரம்பித்தாள். "ஏய் ராதை என்ன ஆச்சு எதாவது பிரச்னையா சொல்லு எதுனாலும் என் கிட்ட சொல்லு" என்றாள். அவளிடம் பிரகாஷ் தன்னை கோவில் பக்கத்தில் சந்தித்தது தன்னை காதலிப்பாதாய் கூறியது பின் இப்போது அவன் நம்பரை பிளாக் செய்த வரை அனைத்தையும் கூறினாள்.


"ராதை நீ சொல்ற கதையைக் கேட்டு எனக்கு தலையே சுத்துது.. எனக்கு இப்போ தான் புரியுது எதற்கு அத்தான் இரண்டு வருஷம் முன்னாடி உன் நம்பர் கேட்டாருனு செம கமுக்கம் டி அவரு" என்றாள். "என் பிரச்சனைக்கு எதாவது தீர்வு சொல்லு டி மனசே ஒரு மாதிரி இருக்கு ஒரு குறி சொல்றவங்க வேற என்னை ஜாக்கிரதையா இருக்க சொன்னாங்க தனியா வெளியே போக வேணானு சொன்னாங்க அது வேற பயமா இருக்கு அது மட்டும் இல்லாமல் அவன் வருவான் உன்னை அடைந்தே தீருவேன்னு சொன்னாங்க அதுல இருந்து எனக்கு பிரகாஷைப் பார்க்கவே பயமா இருக்கு டி" என்றவளின் கை நடுங்கியது.

ராதை ரிலாக்ஸ் ஆகு.. நீ பிரகாஷை விரும்புறியா? என்று கேட்டாள் வனிதா. இல்லை டி உண்மையா இல்லை எனக்கு இந்த காதல் கல்யாணத்துல இப்போ விருப்பம் இல்லை நம்ம வயசு இருபத்தி ஒன்று தான டி ஆகுது இன்னும் அட்லீஸ்ட் மூன்று வருஷம் எனக்கு வேலை பார்க்கனும் என்றாள் ராதை. "நீ பிரகாஷ் ப்ரபோஸ் பண்ண அப்போவே உன் வீட்டில் சொல்லிருக்கலாம்ல டி உன் வீட்டில் இல்லைனாலும் அந்த பிரகாஷ் பைத்தியம் அதான் உன் அருமை அக்கா கோதை கிட்டயாவது சொல்லிருக்கலாம்" என்றாள் வனிதா சலிப்பாக.

"நான் அன்னிக்கே சொல்லலாம்னு தான் டி நினைச்சு வீட்டிற்கு வந்தேன் ஆனால்"என்று அன்று நடந்த பிரச்சனை பற்றிக் கூறிவிட்டு அழுதாள்." பெரியப்பா பெரியம்மா வும் பிரகாஷை மாப்பிள்ளை பார்க்க போனதுக்கு அப்பறம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்னால இந்த கல்யாணத்துல எதாவது பிரச்சனை வந்திடக்கூடாது" என்று அழுதாள் ராதை.


"பிரச்சனையா பிரகாஷ் உன்னை காதலிச்சிட்டு கண்டிப்பா கோதையை கல்யாணம் பண்ண மாட்டாரு ராதை இந்த வாரம் எல்லாரும் ஊட்டி போறீங்கல கோதை பிறந்தநாளுக்காக அவங்க எங்களையும் இன்வைய்ட் பண்ணிருக்காங்க பிரகாஷ் அத்தானுக்கே இந்த விஷயம் தெரியாது அதனால நானும் உன் கூட இருப்பேன் பயப்படாத எனக்கு தெரிஞ்சு கோதைக்கும் பிரகாஷ் க்கும் மேரேஜ்னு அவளுடைய பிறந்தநாள் அன்னிக்கு சொல்லுவாங்கனு நினைக்கிறேன் அப்படி தான் என் அத்தை மாமா பேசிக்கிட்டாங்க"என்றாள் வனிதா.

" அது ஏன் பிரகாஷ் கல்யாணத்தை அவர் கிட்ட இன்னும் சொல்லல" என்று சந்தேகமாகக் கேட்டாள் ராதை." என்னொட கெஸ் என்னனா என் அத்தைக்கு பிரகாஷ் னா உயிரு அவர் கோதையை காதலிச்சிருந்தா இந்நேரம் கோதையிடம் காதலை சொல்லிருப்பார் கோதையிடம் இதுவரைக்கும் சொல்லலை அதனால் பிரகாஷிற்கு காதல் பிடிப்பு இல்லாத கோதையை கல்யாணம் பண்ணி வெச்சாங்கனா பிரகாஷ் தன் அம்மா மேல இருக்கும் பாசம் விலகாது கோதையையும் தன் கைக்குள்ள போட்டுக்கலாம்னு பிளான் தான் அதுப்போக உன் பெரியப்பா பெரியம்மா வைட்டு பார்ட்டி பணக்காரங்க ஈக்வல் டூ பணக்காரங்க அவ்வளவு தான் டி லாஜிக்" என்றாள் வனிதா.

" சேரி டி இப்போ நான் என்ன பண்றது" என்ற ராதையிடம்" நீ ஒன்னும் பண்ண வேண்டாம் டி பிரகாஷ் தான உன்னை விரும்புறாரு இதுல உன் தப்பு எதுவும் இல்லை பொறுமையாக வேடிக்கை பார்ப்போம் உன் மேல அம்பு பாய்ந்தால் நீ அவரை விரும்ப வில்லைனு சொல்லிடு அப்பறம் பிரகாஷ் பாடு கோதை பாடு நமக்கென்ன" என்றாள் வனிதா.

" ஐய்யோ கோதை அக்கா மனசு கஷ்டப்படகூடாது டி" என்ற ராதையிடம்" நீ இப்படியே அன்னை தெரசா மாதிரி பேசிகிட்டு இரு உனக்கே ஆயிரம் பிரச்சனை இருக்கு நீ உன் அக்கா மேல பாவப்படுற.. அவளால் தான் இவ்வளவு பிரச்சனை ஒருத்தன் தன்னை காதலிக்குறானானு தெரியாம அவனை அடைஞ்சே தீரனும் கங்கனம் கட்டிட்டு குடும்பத்தோடு வந்து மாப்பிள்ளை கேட்டிருக்காங்க எவ்வளவு சுயநலவாதி உன் அக்கா இவள் பிரகாஷை கல்யாணமே பண்ணாலும் அந்த வாழ்க்கை அவளுக்கு நல்லா இருக்குமா என்ன" என்று ஆதங்கத்துடன் கூறினாள் வனிதா." வனிதா ப்ளிஸ் போதும் அக்கா நல்லா இருக்கனும் பிரகாஷ் கூட சேரி நம்ம கிளம்பலாம்"என்று இருவரும் கிளம்பினர்.
nice
 

Anitha Sundar

Active member
Messages
113
Reaction score
61
Points
28
அத்தியாயம் 15

இப்படியே ஒரு வாரம் சென்றது. அன்று கோதை யின் இருபத்தி மூன்றாம் பிறந்தநாளை ஒட்டி அனைவரும் ஊட்டிக்கு கிளம்ப தயாராகினர். விஜயகுமாரின் காரிலிலேயை அனைவரும் ஏறினர் அவருடையது எட்டு பேர் உட்கார வசதி உள்ள கார் என்பதால் அவர்கள் குடும்பத்திற்கு அது சரியாக இருந்தது.

இங்கே சிவமாறன் வீட்டில் அனைவரும் தயாராகத் தொடங்கினர். வனிதா வும் அவள் குடும்பமும் காலையிலேயே விஜயா வீட்டிற்கு வந்தனர். சிவமாறனை அழைத்த ஆறுமுகம் தாங்களும் ஊட்டி வருவதாய் விஜயகுமார் அழைத்ததாய்க் கூறினார். தன் தந்தையும் விஜயகுமாரும் நண்பர்கள் என்று சிவமாறனுக்குத் தெரியும் ஆனாலும் ஏதோ அவனுக்கு இடித்தது. எப்படி இருந்தாலும் நாம் ராதையை மணம் முடிக்க கேட்க இதான் நல்ல வாய்ப்பு நம் குடும்பமும் வருகிறது இதான் நல்ல சூழ்நிலை என்று நினைத்தான் பிரகாஷ்.

சிவமாறனின் வண்டியில் தன் தந்தை தாய் வந்தனர். விஜயபூபதி வண்டியில் மணிகண்டன் குடும்பமும் வந்தனர். இப்படியே இவர்கள் பயணம் தொடங்கியது.


தன் மேல் தப்பே இல்லை என்றாலும் தன்னால் பிரச்சனை ஏழ உள்ளதை நினைத்து ராதையின் மனம் வாடியது. கோயம்புத்தூரில் இருந்து ஊட்டி செல்ல ஏறத்தாள இரண்டு மணி நேரம் ஆனது. அங்கு மொத்தம் ஐந்து காட்டேஜ் புக் செய்து வைத்திருந்தார் விஜயகுமார்.

ஊட்டி யின் அழகைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் ஏராளம். மனதை வருடும் குளிரும் அந்த குளிருக்குள் கிடைக்கும் இதமும் படர்ந்திருந்த மலையும் செடி கொடிகளும் ஊட்டியை வந்து காண்போருக்கு அதை விட்டுச் செல்ல மனமே இருக்காது என்கிற அளவுக்கு அவர்களுக்குள் தாக்கம் ஏற்படுத்தியது.

அனைவரும் சந்தோஷமாக இருந்தனர். "அம்மா மாமா லாம் எப்போ வருவாங்க எனக்கு ரொம்ப எக்ஸ்சைட்டடா இருக்கு மா எவ்வளவு வருஷம் ஆச்சு அவங்களைப் பார்த்து" என்றாள் கோதை. "மாமா அத்தை பாட்டி தாத்தா எல்லாம் வராங்க கோதை அவங்களுக்கு இரண்டு காட்டேஜ் போட்டுருக்காரு அப்பா" என்றாள் மைதிலி. "ஒகே மா அப்போ கிருஷ் வரலையா" என்று கவலையாகக் கேட்டாள்." நீயும் கிருஷ் யும் தான் சின்ன வயசிலிருந்து க்ளோஸ் உனக்கு தான் தெரியனும் அவன் வரனா இல்லையானு" என்றாள் மைதிலி." ம்ம் நான் காலில் சொன்னேன் மேசேஷ் லயும் சொல்லிருக்கேன்" என்றாள் கோதை யோசனையாக.


முதலில் விஜயகுமார் குடும்பம் காட்டேஜை சென்றடைந்தனர். வந்தவர்களை வரவேற்பதற்காக முன்னமே சென்றடைந்தனர். மொத்தம் ஐந்து காட்டேஜை புக் செய்திருந்தார் விஜயகுமார். ஒவ்வொரு காட்டேஜிலும் மூன்று அறைகள் இரண்டு பாத்ரூம் ஒரு சமையலறை மற்றும் மார்டன் ஹவுஸ் எனப்படும் வசதிகள் அனைத்தும் உள்ளது. சமையல் செய்வதற்கு எப்போதுமே மயில்சாமி என்பவர் இருப்பார் அவரும் அவர் மனைவி முத்தாயி இருவருமே விஜயகுமாரின் குடும்பத்திற்கு எட்டு வருடம் பழக்கம். எப்போதெல்லாம் ஊட்டி வருகிறார்களோ இவர்கள் தான் வித விதமாய் சமைத்துப் குடுப்பார்கள்.

விஜயகுமார் குடும்பம் வரும்போதே மணி மாலை நான்கு ஆனது அவர்களை வரவேற்ற மயில்சாமி அவர்களுக்கு குடிக்க அந்த ஊட்டி குளிருக்கு இதமான சூடான காப்பியும் பஜ்ஜி யும் செய்துக் கொடுத்தார். மயில்சாமி இம்முறை தனது தம்பியையும் அவனுடைய மனைவியையும் வேலைக்கு ஒத்தாசையாக இருக்க கூட்டிக்கொண்டு வந்தார்.

கோதை க்கு அடுத்த நாள் பிறந்தநாள் என்பதால் அவளுக்கு உற்சாகம் அதிகமாக இருந்தது. ராதை எப்போதும் போல் பாட்டியுடன் அமைதியாக அமர்ந்திருந்தாள். மாலை ஆறு மணியளவில் பிரகாஷ் குடும்பம் அந்த காட்டேஜிற்கு வந்தடைந்தனர்.

விஜயகுமாரின் வரவேற்பு பிரகாஷ் குடும்பத்தை மெய் சிலிர்க்க வைத்தது. ஆனால் பிரகாஷிற்கு என்னவோ இடித்துக் கொண்டே இருந்தது.

"பாட்டி நம்ம ஒரு காட்டேஜ்ல இருக்கோம் இன்னும் இரண்டு பிரகாஷ் வீட்டுக்கு மற்ற இரண்டு யாருக்கு பாட்டி பெரியப்பா நண்பர்கள் யாராவது வராங்களா?" என்று கேட்டாள் ராதை. "இல்லம்மா மைதிலி யோட அப்பா அம்மா மற்றும் அவளின் அண்ணன் குடும்பம் தான் வராங்க" என்றார் இராஜேஸ்வரி." என்னது பாட்டி அவங்க குடும்பமா! " என்று அதிர்ச்சியாகக் கேட்டாள்."

"ஏன் ராதை ம்மா பயப்படுற அவங்களுக்கும் உனக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை உன்னை அவமானம் படுத்துற மாதிரி எதாவது பேசுனா நீயும் திருப்பி கொடுக்கனும் நீ ஒன்னும் முன்ன மாதிரி சின்ன பொண்ணு இல்லை" என்றார் இராஜேஸ்வரி. "பெரியப்பா பெரியம்மா என்னை அவங்க சொந்த மகள் மாதிரி பாத்துக்குறாங்க அதுக்காகவே நான் அமைதியா தான் இருப்பேன் பாட்டி" என்று மனதில் நினைத்தாள் ராதை.

பிரகாஷ் வந்ததில் இருந்தே ராதையைப் பார்க்க முடியவில்லை அவள் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். வனிதா ராதையின் அறைக்கு வந்து அவளை உற்சாகப் படுத்தினாள். ஆனாலும் ராதை முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை சோகமாகவே" இருந்தது" ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க" என்று வனிதா அவளின் முகத்தைப் பார்த்துக் கிண்டல் அடித்து பாடினாள்.
" ஏய் கொஞ்சம் சும்மா இரு வனிதா ப்ளிஸ்" என்று சலிப்பானாள் ராதை." ஆமா பின்ன அந்த பிரகாஷ் அத்தானுக்கு பயந்து நீ இப்படி இருக்க அதான் உன் மூடை மாத்தலாம்னு பாடுனேன் ஆனா அதுவும் உனக்கு பிடிக்கலை" என்றாள் வனிதா. "ம்ச் இப்போ நான் பயப்புடுறது பிரகாஷ் விஷயத்தை நினைச்சு இல்லை டி இது வேற"என்ற ராதைக்கு பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த விஷயம் நியாபகம் வந்தது.
Nice ud interesting
 

Anitha Sundar

Active member
Messages
113
Reaction score
61
Points
28
அத்தியாயம் 16

ராதை நீண்ட நேரமாக ஏதோ யோசித்துக் கொண்டிருக்கும் போதே வனிதா அவளை உலுக்கினாள். "என்னனு சொல்லுடி அப்போ தான் உன் பயத்துக்கு எதாவது தீர்வு என்னால சொல்ல முடியும்" என்றாள் வனிதா. "சொல்றேன் டி... என்னுடைய சின்ன வயசில் நான் நிறைய பேசுவேன் என் பேச்சை எல்லாரும் ரசிப்பாங்க மகிழ்ச்சியாகி சிரிப்பாங்கனு பாட்டி சொல்லு வாங்க.. எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து என் பெரியப்பா பெரியம்மாவை நான் அம்மா அப்பானு தான் கூப்பிட்டு இருக்கேன் நான் அவங்க தான் என் உண்மையான அப்பா அம்மானு நினைச்சிட்டு தான் பத்து வருஷம் வளர்ந்தேன் என் பெரியப்பா பெரியம்மா பாட்டி எல்லாருமே என் கிட்ட நான் யாருன்ற உண்மையை மறைச்சி தான் வளர்த்தாங்க. கோதை அக்கா வும் என்ன சொந்த தங்கச்சினு தான் நினைச்சிட்டு இருந்தாங்க எங்க பேர் கூட இரத்த சகோதரிகள் போல தான் இருக்கும் ஆண்டாள் கோதை கோமகள் ராதைனு எங்களோட வாழ்க்கை இப்படி பொய்ட்டு இருக்கும் போது தான் மைதிலி பெரியம்மா வீட்ல இருந்து அவங்களை பார்க்க வந்தாங்க.


மைதிலி பெரியம்மா வளர்ந்த ஊர் பெங்களூர் அவங்க அப்பா அந்த காலத்து இன்ஜீனியர் பெங்களூரில் செட்டில் ஆயிட்டாங்க மைதிலி பெரியம்மா வுடைய குடும்பம் ரொம்ப பெரிய பணக்காரங்க.. நான் பிறந்ததில் இருந்து மைதிலி பெரியம்மா வீட்டில் யாரையும் பார்த்தது இல்லை ஏன்னா அவங்க மொத்த குடும்பமே பத்து வருஷமா கனடாவில் இருந்தாங்கலாம். மைதிலி பெரியம்மா க்கு கூட பிறந்தது ஒரு அண்ணா அவர் கனடாவில் ஒரு ஐடி கம்பெனி வெச்சிருக்கார்.அவங்க எல்லாருமே ஏப்ரல் மாசம் இந்தியா வந்தாங்க. அது வரைக்கும் சந்தோஷமா இருந்த என் வாழ்க்கையில் அவங்க வந்த பின்பு தான் புயல் அடிச்சது.


ஏப்ரல் மாசம் பரிட்சை லாம் முடிஞ்சு நானும் கோதை அக்காவும் வீட்டிலேயே நல்லா ஆட்டம் போட்டோம். அந்த சமயத்தில் தான் ஒரு தாத்தா பாட்டி ஒரு அன்கிள் ஆன்ட்டி ஒரு பையன் ஒரு பொண்ணு வந்தாங்க. அவங்க எல்லாருமே வந்த அன்னிக்கே கோதை அக்கா "தாத்தா பாட்டி மாமா" அப்படீன்னு சந்தோஷத்தில் குதிச்சாங்க. ஆனா எனக்கு அவங்க யாருன்னு கூட தெரியல. அப்போலாம் பெரியப்பா காலையில் போனா இரவு தான் வருவாங்க இராஜேஸ்வரி பாட்டி ஒரு சொந்தகாரங்க கல்யாணத்திற்காக பம்பாய்க்கு போயிருந்தாங்க.

மைதிலி பெரியம்மா எனக்கு அவங்களை தாத்தா பாட்டி மாமா அத்தைனு அறிமுகம் படுத்தினாங்க நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் ஆனா அவங்க எல்லாருமே கோதை அக்காவை தான் கொஞ்சுவாங்க அவங்க கிட்ட தான் அந்த சாக்லேட் பாக்ஸ் லாம் கொடுப்பாங்க பொம்மைகள் எல்லாமே அக்கா கிட்ட தான் கொடுப்பாங்க ஏன் அந்த பசங்க கூட கோதை அக்கா கிட்ட தான் விளையாடிட்டே இருப்பாங்க என்னை விளையாட்டுக்கு சேர்த்துக்க மாட்டாங்க எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்துது அதனால நான் மைதிலி பெரியம்மா கிட்ட இதை சொல்லலாம்னு பேசப் போன அப்போ அவங்க அறையில் அந்த தாத்தா பாட்டி மாமா அத்தை அப்பறம் அந்த பையன் இருந்தாங்க.. கோதை அக்காவும் அந்த பொண்ணும் அவ பேரு யசோதா நினைக்கிறேன் வெளியில் விளையாடிட்டு இருந்தாங்க. மைதிலி பெரியம்மா அந்த அறையில் அழுதுட்டு இருந்திருகாங்க ஆனா நான் சின்ன பெண் தான நல்லா பேசுவேன் ஆனா விவரம் தெரியாம அவங்க முன்னாடியே மைதிலி பெரியம்மா கிட்ட போய் அவங்க மடியில் உட்கார்ந்து அழுக ஆரம்பித்தேன் "அம்மா பாட்டி தாத்தா மாமா அத்தை எல்லாரும் அக்கா கிட்ட தான் சாக்லேட்ஸ் கொடுத்தாங்க என்கிட்ட சிரிச்சு பேச கூட மாட்டுறாங்க ஏன் இந்த பையன் கூட என்னை விளையாட்டுக்கு சேர்த்துக்க மாட்டுறான்" என்று அவனை கை காட்டி மைதிலி பெரியம்மா விடம் அழுதேன்.அந்த பையன் பேர் கூட சரியா எனக்கு நியாபகம் இல்ல வனிதா ஏதோ கிருஷ்னு நினைக்கிறேன் அவனுக்கு அப்போ வயசு ஏறத்தாழ பதினாறு இல்ல பதினேழு இருக்கும். நான் அவனை கை காட்டி பேசி அழுத உடனே எல்லார் முன்னாடியும் அந்த கிருஷ் என் கையை முறுக்கி விட்டு "கண்ட அனாதை லாம் என்னைய கைய நீட்டி பேசக் கூடாது.. நான் எவ்வளவு பெரிய கோடிஸ்வரன் தெரியுமா உன் அப்பா அம்மா செத்து பொய்ட்டாங்க நீ இந்த வீட்டு பொண்ணே இல்லைனு கையை முறுக்கியவன் என் கையில் நல்லா கிள்ளிவிட்டான். எனக்கு பயங்கர வலி அழுது துடிச்சிட்டேன் நான் போகும் முன்னாடியே ஏதோ பிரச்சனை வந்து தான் மைதிலி பெரியம்மா அழுதுட்டு இருந்திருக்காங்க இந்த பையன் என்கிட்ட இப்படி சொல்லி முரட்டுதனமா நடந்துப்பானு யாரும் எதிர்பார்க்கலை நான் வலியில் துடிச்சிட்டு இருக்கும் போது தான் மைதிலி பெரியம்மா சுயநினைவுக்கே வந்தாங்க போல.. என்னை அவனிடம் இருந்து பிரிச்சு என் கையில் தடவி வலிக்குதா ராதை அம்மு அழாதீங்க என்று என்னை ஆறுதல் படுத்தினவங்க அவங்க அண்ணனிடம் "பையனை இப்படி தான் முரட்டு தனமா வளர்ப்பீங்களானு" கேட்டாங்க. உடனே அவங்க அண்ணி க்கு கோபம் வந்திருச்சு "நீ இதோ நிக்குதே இந்த அனாதை க்காக இரண்டாவது குழந்தை பெத்துக்காம குடும்ப கட்டுப்பாடு ஆரப்பரேஷன் பண்ணிட்டு நிக்குற என் பையன் சொன்னதுல என்ன தப்பு இவளை லாம் போட்டு அடிச்சிருக்கனும் நல்லா இவளை அனாதை ஆசிரமத்தில் சேர்த்துருக்கனும்" என்று அந்த ஆன்ட்டி மனசாட்சியே இல்லாம பேசுனாங்க வனிதா என்று சொல்லும் போதே ராதை யின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வனிதா வின் முகத்திலும் கண்ணீர் வந்துக்கொண்டிருந்தது.

" சாரி டி என் கதையைச் சொல்லி உன் டிரிப்பை வேஸ்ட் பண்றேன் நான் இத்தோட இந்த கதையை நிறுத்துறேன் போதும்" என்று கண்களைத் துடைத்தாள் ராதை. "ராதை ப்ளிஸ் எனக்கு எல்லாத்தயையும் சொல்லனும் இது என் மேல் சத்தியம்" என்று தன் தலையில் கை வைத்தாள் வனிதா.

அந்த ஆன்ட்டி அப்படி பேசுன போது யாருமே அவங்க வாயை அடக்கல இன்ஃபக்ட் எல்லார் முகத்திலயும் ஒரு சின்ன சந்தோஷம் தெரிஞ்சிது என்னை அவங்க அப்படி பேசுனதுக்கு மைதிலி பெரியம்மா மட்டும் தான் அழுதுட்டே இருந்தாங்க ஒரு சின்ன பெண்ணின் மனது கசங்கி சுக்கு நூறா போச்சுனு யாருமே என் மேல் ஒரு குறைந்த பட்சம் மனிதாபிமானம் கூட வைக்கவில்லை. இவங்க இப்படி பேசுன உடனே என்னால அந்த அறையில் இருக்க முடியல நான் என்னோட அறைக்கு போய் முதன் முறையாக அந்த பதினொன்று வயதில் கதவைச் சாற்றித் தாழ் போட்டேன் அப்போ இருந்து என் பேச்சுக்கும் மனதுக்கும் சேர்த்து தாழ்பாள் போட்டுவிட்டேன். மைதிலி பெரியம்மா நிறைய தடவை கதவை தட்டினாங்க ஆனால் நான் வரமாட்டேனு மட்டும் சொன்னேன் கதவைத் திறக்கவில்லை. பின் கோதை அக்கா கதவைத் தட்டினார்கள் அப்போதும் என்னிடம் அசைவில்லை கோதை அக்கா நான் கதவைத் திறக்கவில்லை என்றதுமே அழத் தொடங்கினார் அப்போது அக்கா பக்கத்தில் அந்த பையன் இருந்திருக்கான் அவன் அக்காவிடம் "கோதை நீ ஏன் அழுற அவள் ஒரு அனாதை அவளால் தான் உனக்கு குட்டி தங்கையோ தம்பியோ இல்லாமல் போச்சு அவள் ஒன்னும் செத்து துளையமாட்டா நீ வா நம்ம விளையாடலாம்" என்று அவளைக் கூட்டிச் சென்றான் அவன். அன்று இரவு பெரியப்பா வந்து என் அறைக் கதவை தட்டும் வரை நான் கதவைத் திறக்கவில்லை.

பெரியப்பா கதவை தட்டியவுடன் கதவைத் திறந்து பெரியப்பாவை கட்டிப்பிடித்து அழுதேன்." அப்பா நான் அனாதைனு சொல்றாங்க அனாதைனா அப்பா அம்மா இல்லாதவங்க தான அப்போ நீங்க என் அப்பா இல்லையா" என்று அழுதுக்கொண்டே இருந்தேன். அப்போது பெரியப்பா மைதிலி என்று பெரியம்மாவை கத்தி அழைத்து பெரியம்மா வந்த உடனே அவர்களை கன்னத்தில் அறைந்தார். இதைப் பார்த்த பெரியம்மாவின் குடும்பத்தினர் பெரியப்பா விடம் என்னை அனாதை ஆசிரமத்தில் சேர்க்க வேண்டும் என்று சண்டை போட்டனர். அவர்களை எதிர்த்து பெரியப்பா வால் ஒரு வார்த்தை பேசமுடியவில்லை ஏனெனில் பெரியப்பா வின் தொழில் வளர்ச்சிக்காக பெரியம்மாவின் அண்ணனிடம் தான் முப்பது கோடி கடன் வாங்கினார் இந்த விஷயம் எனக்கு பின்னாளில் தான் தெரிய வந்தது. பெரியப்பா வால் என்னை விடவும் முடியவில்லை அவர்களை எதிர்த்தும் பேச முடியவில்லை.அவர் அவர்கள் அனைவரிடமும் கை எடுத்து கும்பித்தார் "என் தம்பி பிரபாகரின் பெண்ணை என்னால் அனாதை ஆசிரமத்தில் சேர்க்க முடியாது" என்றார்.

"இந்த விபி ஃகுருப்ஸை நீங்க ஒத்த ஆளா பார்த்து சம்பாதிக்குறீங்க ஆனா உங்களுடைய காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து இறந்த தம்பி யின் மகள் எங்கள் வீட்டு இளவரசி கோதையைப் போல வசதியை அனுபவிக்கக் கூடாது நாங்க இதற்கு ஒரு நாளும் சம்மதிக்க மாட்டோம்" என்றார் மைதிலி யின் அண்ணன் சேதுராமன்.

இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்த நாள் காலை இராஜேஸ்வரி பாட்டி வந்தபின் பேசிக்கோள்ளலாம் என்று நினைத்தார் விஜயகுமார் அன்று இரவு எப்போதும் தன் பெரியம்மா கூட படுக்கும் ராதை தனியாக படுத்தாள் புண்பட்ட மனது என்பதால் மைதிலி யும் ராதையின் போக்கில் விட்டுவிட்டார். ஆனால் அப்போ அப்போ அவளை வந்து பார்த்துக் கொண்டாள்.

அடுத்த நாள் எப்போதும் போல விஜயகுமார் தன்னுடைய கம்பெனியிக்கு கிளம்பினார். மைதிலி யிடம் ராதையை எப்போதும் கண்காணிக்குமாறு சொல்லிவிட்டுச் சென்றார். விஜயகுமார் கிளம்பும் போது ராதை தூங்கிக்கொண்டிருந்ததால் அவளை பாசமாக ஒரு பார்வையை விட்டு தன்னுடைய கம்பெனி க்குச் சென்றார்.

அன்று ராதை யாரிடமும் பேசவில்லை அவள் கோதையிடம் விளையாடாமல் தன் அறையிலேயே ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தாள். மைதிலி அவளை ஒருவாறு சமாதானம் செய்து சாப்பாடு மேஜைக்கு அழைத்து வந்தார். யார் தன் எதிரே அமர்ந்திருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் ராதை சாப்பிட ஆரம்பித்தாள். "யசூ யூ நோ சம்திங்.. இந்த விட்டில ராதை னு ஒரு அனாதை இருக்கு அந்த பொண்ணு ஒரு அனாதைனு மட்டும் தான் நினைச்சேன் ஆனா அவளோட நடிப்பு சான்ஸே இல்லை நேற்று கதவை சாற்றி அப்படி இப்படின்னு பண்ணி அத்தையை மாமா கிட்ட அடி வாங்க வெச்சிட்டா சரியான விஷம்" என்று என்னை முறைத்துக் கொண்டே தன் தங்கையான அப்பெண்ணிடம் கூறினான் அவன் அந்த மனச்சாட்சி இல்லாத மிருகம் என்று இப்போது தன்னிலை க்கு வந்தவள் வனிதாவிடம் திரும்பினாள்.

" ஏன் வனிதா அவன் கிட்ட நான் முன்ன பின்ன பேசினது இல்லை ஒரு சின்ன பெண்ணிடம் அவன் எப்படி அப்படி பேசலாம் அவனுக்கு என்னை பற்றி என்ன தெரியும் அவன் அப்படி பேசுன உடனே எனக்கு அழுகை வந்தது அதற்குப் பின் என்னால் சாப்பிட முடியவில்லை. அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன் நல்ல வேளை அப்போ தான் பாட்டி பம்பாயில் இருந்து வந்தாங்க. அவங்க வந்த உடனே அவங்க கிட்ட ஓடிப்போய் அழுது நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டேன்.

பாட்டி உடனே என் பெரியப்பாவிற்கு கால் செய்து அவரை வீட்டுற்கு வர வைத்து கேள்வி கேட்க ஆரம்பித்தார். "விபி க்ருப்ஸ் விஜயகுமார் உருவாக்கியது இல்லை இது என் கணவருடையது அப்படி இருக்கும் போது விஜயகுமாருக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை தான் பிரபாகரனுக்கும் இருக்கிறது. உங்கள் குடும்பம் எங்களை விட வசதி வாய்ப்பு அதிகமாக இருக்கலாம் நீங்கள் விஜயகுமாரிற்கு பணம் உதவி செய்திருக்கலாம் கடன் உதவி செய்திருக்கலாம் அதற்காக என்னுடைய பேத்தியை அனாதை ஆசிரமத்தில் சேர்க்க என்னால் முடியாது அதே போல் அவளைப் பற்றி பேசும் உரிமை உங்களுக்கும் கிடையாது விஷ்வநாதன் அண்ணா காந்திமதி மதினி சேதுராமன் தம்பி அப்புறம் லட்சுமி என்று அவர்கள் நால்வரையும் ஒருதடவை கூப்பிட்டு உங்கள் வீட்டிலும் ஒரு பெண் இருக்கிறது பெண் பிள்ளைகளை எவ்வளவு பாதுகாப்பாக வளர்த்து கரைசேர்ப்பது என்பது தெரிந்தும் நீங்கள் மனசாட்சி இல்லாமல் நடந்தது வருத்தமாக இருக்கிறது என்றவர் விஜயகுமாரிடம் திரும்பி "நானும் ராதையும் ஊட்டி கெஸ்ட் ஹவுஸிற்குச் செல்கிறோம் திரும்பி வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்று ராதையை அழைத்து டிரைவரை வைத்து ஊட்டிக்குச் சென்றார்.

விஜயகுமாருக்குமே ராதைக்கு ஒரு சின்ன மாற்றம் இருந்தால் மனசு தெளிவாக ஆகும் என்று நினைத்தார்." இதற்குப் பிறகும் ராதையைப் பற்றி யாரும் பேச வேண்டாம்" என்று பொதுவாக சொல்லிவிட்டு மறுபடி அலுவலகம் சென்று விட்டார்.

ஆனாலும் மைதிலியின் அண்ணன் சேதுராமன் மற்றும் அண்ணி லட்சுமி ராதையைப் பற்றி தப்பாக தான் கூறினர் இவளால் உனக்கும் உன் பெண்ணிற்கும் கண்டிப்பாக பிரச்சனை வரும் என்று அவளிடம் கூறினர். அப்போது அவர்களுடைய புதல்வன் கிருஷூம் இருந்தான் அவன் மனதில் ராதையைப் பற்றி ஏறிய தப்பான எண்ணவோட்டங்கள் இன்னும் பலமானது. இவர்கள் பேசின அனைத்தையும் மறுத்த மைதிலி ராதையுடம் இதனை மறைத்து விட்டார்.

"நானும் பாட்டியும் ஊட்டி சென்ற பின் பாட்டி என்னைப் பற்றி அனைத்தையும் சொன்னார்கள் அப்போது இருந்தே நான் என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன் என்னுடைய முழு கவனம் படிப்பில் மட்டும் தான் இருந்தது. அதனால் தான் எனக்கு மேக்கப் அழகு பர்ட்டே பார்ட்டி ஸ்கூட்டி கார் எதிலுமே நாட்டம் இல்லை என் இன்ஜினியரிங் படிப்பும் மெரிட்டில் கிடைத்ததால் கட்டணம் பெரிதாக இல்லை" என்று சொல்லி முடித்தாள் ராதை.

" ஐ அம் வெரி சாரி ராதை உனக்கு அம்மா அப்பா இல்லை ஆனா நீ பணக்காரீனு நினைச்ச ஆனா நீ பணம் இருந்தும் ஒரு ஏழை"என்று அழுதாள் வனிதா." எனக்கு பணம் தேவை இல்லை வனிதா ஆனால் பெரியம்மா குடும்பத்தின் கடுஞ்சொற்கள் இப்போ நினைச்சாலும் தூக்கம் வராது" என்று அழுத கண்களைத் துடைத்தாள் ராதை.


" சேரி அந்த கனடா குடும்பம் எப்போ
இந்தியாவிற்கு இப்போ வந்தாங்க"என்று கேள்வியாய் கேட்டாள் வனிதா. "அவங்க பெங்களூரில் செட்டில் ஆகி ஒரு நாலு வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன் டி மைதிலி பெரியம்மாவும் கோதை அக்கா வும் பேசறதை வெச்சு தெரியும்.. உண்மையை சொல்லனும்னா அவங்க இந்தியாவுல செட்டில் ஆனது தெரிஞ்சு தான் நான் வேண்டும் என்றே சென்னை கல்லூரி தேர்வு செய்து ஹாஸ்டல் சேர்ந்தேன். கண்டிப்பா இந்தியாவுல செட்டில் ஆனதுக்கு அப்புறம் அடிக்கடி மைதிலி பெரியம்மாவைப் பார்க்க வருவாங்க அவங்க முகத்திலே முழிக்கக் கூடாதுனு தான் சென்னை ஹாஸ்டலில் சேர்ந்தேன் அதற்கு பிறகு இந்த நாலு வருஷம் வேண்டும் என்றே கோதை அக்கா பிறந்தநாள் பார்ட்டி அப்போ எக்ஸாம் பிராக்டிகல்ஸ் அது இதுனு பொய் சொல்லி போகிறதை தவிர்த்தேன் ஏன்னா மைதிலி பெரியம்மா குடும்பத்திற்கு கோதை அக்கா என்றால் உயிர் அதனால் கண்டிப்பாக அக்காவின் பிறந்தநாளுக்கு வந்திருப்பார்கள் அதுலயும் அந்த பையனும் என் அக்காவும் பெஸ்ட் பிரண்ட்ஸ் போல அடிக்கடி அக்கா அவன் கூட ஃபோன் பேசுவாங்க நேரில் கூட மீட் பண்ணனு என்கிட்ட சொல்லுவாங்க. நல்ல வேளை நானும் அந்த குடும்பமும் அந்த சம்பவத்திற்குப் பிறகு இன்னும் பார்க்கவில்லைனு நிம்மதியாக இருந்தேன் ஆனா இன்னிக்கு மொத்த குடும்பமே வராங்கப் போல அதுல இருந்து ஒரே தலைவலியா இருக்கு டி" என்றாள் ராதை சோர்வாக.


" நீ நிம்மதியாக இரு டி பத்து வருஷம் முன்னாடி நடந்த விஷயம் உன்னை பார்த்தே பத்து வருஷம் ஆகுது உன்னை மறந்துருப்பாங்க.. சேரி எனக்கொரு டவுட் டி நீ சொல்றதை வெச்சு பார்த்தா அந்த கனடா குடும்பம் சிவமாறன் அத்தானை விட பணக்காரங்களா இருப்பாங்க அந்த திமிரு புடிச்ச பையனுக்கும் ஏறத்தாழ சிவமாறன் அத்தான் வயசு தான் இருக்கும்.. உன் அருமை கோதை அக்கா வுக்கு அவன் முறைப் பயன் தான அவனை ஏன் அவள் கரெக்ட் பண்ணல அட்லீஸ்ட் நீயாவது சிவமாறன் அத்தானை நிம்மதியா பிரச்சனையே இல்லாமல் கல்யாணம் பண்ணிருக்கலாம்ல"என்ற வனிதாவை இம்முறை ராதை முறைத்தாள்." ஒருவேளை அந்த கிருஷ் பையன் பிரகாஷ் அத்தான் மாதிரி ஸ்மார்ட் இல்லை போல சுமார் பீஸ் போல"என்று வனிதாவே ராதை முறைத்ததால் பதில் சொல்லி சமாளித்தாள். நான் அவனை அந்த பிரச்சனையோடு பார்த்தது தான் டி அதற்கு பிறகு நான் அவனை பார்த்தது இல்லை அவன் புகைப்படம் கூட பார்த்தது இல்லை" என்று கூறினாள் ராதை.
prakash reaction & krish reaction pakanum semma
 

Latest posts

New Threads

Top Bottom