Suthi Suthi
Saha Writer
- Messages
- 3
- Reaction score
- 1
- Points
- 1
வரமான வாழ்க்கை
வாழ்க்கை-1
வாழ்க்கை-1
திருச்சி பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கினாள் நம் நாயகி மித்ரா.அழைத்து செல்ல வருகிறேன் என்றவன் வராமல் இருக்க அப்படியே அங்கிருக்கும் சேரில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.அவள் வந்து அரை மணி நேரம் கடந்த பிறகே வந்தான் அவள் மணாளன்.
பஸ் ஸ்டாண்டிற்குள் அவன் நுழையும் போதே பார்த்துவிட்டாள் மித்ரா.காக்கி யூனிபார்மில் அனைவரையும் குள்ளமாக்கி கொண்டு கிரேக்க வீரனை போல் செதுக்கி வைத்த உடலுடனும்,இரவு பணிக்கு சென்றதால் கண்கள் சிவந்து இருந்த போதும் முகத்தில் இருக்கும் சிரிப்பு வாடாமல் வந்தவனை பார்த்தவள் அவனை பார்க்காதது போல திரும்பி கொண்டாள்.
பேருந்து நிலையத்தில் இருந்த மற்ற பெண்கள் அனைவரும் அவனை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு செல்ல இவள் அவனை பார்க்காதவாறு திரும்பி கொண்டாள். இது எதையும் கவனிக்காத நம் நாயகன் சித்தார்த் நேராக மனைவியிடம் வந்தவன் சின்ன புன்னகையுடன் போகலாமா,சாரி கொஞ்சம் ஒர்க்ல மாட்டிக்கிட்டேன். வந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டதா போன்ற எந்த கேள்விக்கும் மனைவியிடத்தில் பதில் இல்லாமல் போக திரும்பி பார்த்தவன் குழம்பி போனான் தன் மனைவியின் பயபார்வை கண்டு.
மித்ராவின் பயபார்வையை பார்த்து குழம்பினாலும் இப்போது எதுவும் கேட்க வேண்டாம் வீட்டிற்கு சென்று பேசி கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தவன் அவளை கோட்ரஸ்ஸிற்கு அழைத்து சென்றான்.வீட்டிற்குள் சென்றதும் மித்ரா அவனை பார்க்காது திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல் திருதிருவென்று விழித்து கொண்டு நிற்பதை பார்த்தவன் அவளிடம் பேச ஆரம்பித்தான்.
அம்மு எனக்கு மேரேஜ்லயே விருப்பம் இல்லாம இருந்துச்சு, அம்மா பிடிவாதத்துல மேரேஜ்க்கு ஒத்துகிட்டேன்.அந்த பையன் ஓடி போயிட்டானு சொன்னப்ப எனக்கு கோபம்தான் வந்துச்சு பையன்னோட அபிப்ராயத்த கேக்காம இப்புடிபண்ணிட்டாங்களேனு.அம்மா பிடிவாதம்தான் இந்த மேரேஜ்.இப்பவும் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் இந்த மேரேஜ்ஜ ஏத்துக்க சோ நீ எதபத்தியும் கவலைபடாம ஜாலியா உன்னோட வேலைய பாரு.அப்புறம் என்ன பாத்து பயப்படாத நான் எப்பவும் உன்னோட அத்தான்தான் சரியா என்று சிறு பிள்ளையிடம் சொல்வது போல் சொன்னான்.
சித்தார்த் சொல்வதை எல்லாம் கேட்டவள் ஒரு தலையாட்டலை மட்டுமே கொடுத்தாள்.
சரி நான் போய் ரெப்ரஸ் ஆகிட்டு ரெண்டு பேருக்கும் டிபன் வாங்கிட்டுவரேன் என்றவன் எழுந்து அங்கிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.ஹாலில் இருந்த மித்ராவிற்கு கண்கள் கரித்து கொண்டு வந்தது.தங்கள் வீட்டை நினைத்து.
-சுதிக்க்ஷா-