Suthi Suthi
Saha Writer
- Messages
- 3
- Reaction score
- 1
- Points
- 1
வரமானவாழ்க்கை -சுதிக்க்ஷா-
திருச்சி பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கினாள் நம் நாயகி மித்ரா.அழைத்து செல்ல வருகிறேன் என்றவன் வராமல் இருக்க அப்படியே அங்கிருக்கும் சேரில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.அவள் வந்து அரை மணி நேரம் கடந்த பிறகே வந்தான் அவள் மணாளன்.
பஸ் ஸ்டாண்டிற்குள் அவன் நுழையும் போதே பார்த்துவிட்டாள் மித்ரா.காக்கி யூனிபார்மில் அனைவரையும் குள்ளமாக்கி கொண்டு கிரேக்க வீரனை போல் செதுக்கி வைத்த உடலுடனும்,இரவு பணிக்கு சென்றதால் கண்கள் சிவந்து இருந்த போதும் முகத்தில் இருக்கும் சிரிப்பு வாடாமல் வந்தவனை பார்த்தவள் அவனை பார்க்காதது போல திரும்பி கொண்டாள்.
பேருந்து நிலையத்தில் இருந்த மற்ற பெண்கள் அனைவரும் அவனை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு செல்ல இவள் அவனை பார்க்காதவாறு திரும்பி கொண்டாள். இது எதையும் கவனிக்காத நம் நாயகன் சித்தார்த் நேராக மனைவியிடம் வந்தவன் சின்ன புன்னகையுடன் போகலாமா,சாரி கொஞ்சம் ஒர்க்ல மாட்டிக்கிட்டேன். வந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டதா போன்ற எந்த கேள்விக்கும் மனைவியிடத்தில் பதில் இல்லாமல் போக திரும்பி பார்த்தவன் குழம்பி போனான் தன் மனைவியின் பயபார்வை கண்டு.
மித்ராவின் பயபார்வையை பார்த்து குழம்பினாலும் இப்போது எதுவும் கேட்க வேண்டாம் வீட்டிற்கு சென்று பேசி கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தவன் அவளை கோட்ரஸ்ஸிற்கு அழைத்து சென்றான்.வீட்டிற்குள் சென்றதும் மித்ரா அவனை பார்க்காது திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல் திருதிருவென்று விழித்து கொண்டு நிற்பதை பார்த்தவன் அவளிடம் பேச ஆரம்பித்தான்.
அம்மு எனக்கு மேரேஜ்லயே விருப்பம் இல்லாம இருந்துச்சு, அம்மா பிடிவாதத்துல மேரேஜ்க்கு ஒத்துகிட்டேன்.அந்த பையன் ஓடி போயிட்டானு சொன்னப்ப எனக்கு கோபம்தான் வந்துச்சு பையன்னோட அபிப்ராயத்த கேக்காம இப்புடிபண்ணிட்டாங்களேனு.அம்மா பிடிவாதம்தான் இந்த மேரேஜ்.இப்பவும் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் இந்த மேரேஜ்ஜ ஏத்துக்க சோ நீ எதபத்தியும் கவலைபடாம ஜாலியா உன்னோட வேலைய பாரு.அப்புறம் என்ன பாத்து பயப்படாத நான் எப்பவும் உன்னோட அத்தான்தான் சரியா என்று சிறு பிள்ளையிடம் சொல்வது போல் சொன்னான்.
சித்தார்த் சொல்வதை எல்லாம் கேட்டவள் ஒரு தலையாட்டலை மட்டுமே கொடுத்தாள்.
சரி நான் போய் ரெப்ரஸ் ஆகிட்டு ரெண்டு பேருக்கும் டிபன் வாங்கிட்டுவரேன் என்றவன் எழுந்து அங்கிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.ஹாலில் இருந்த மித்ராவிற்கு கண்கள் கரித்து கொண்டு வந்தது.தங்கள் வீட்டை நினைத்து.
சித்தார்த் உணவு வாங்கி வருவதாக வெளியில் சென்றவுடன் இவளும் சென்று குளித்து வேறு உடை மாற்றி கொண்டு வந்தாள்.டிபன் வாங்கி கொண்டு உள்ளே வந்த சித்தார்த் சிலையாகிதான் போனான்.
நீல நிற சேலையில் தலையில் துண்டுடன் சாமி கும்பிட்ட அடையாலமாக நெற்றியில் திருநீரும்,வகிட்டில் குங்குமமும் வைத்து எந்த வித அலங்காரமும் இல்லாமல் தேவதையாக இருந்தவளை பார்த்தவனுக்கு மூச்செடுக்கவே சிரமமாக இருந்தது. எங்கு கண்ணை சிமிட்டினாள் காணாமல் போய்விடுவாளோ என்று பயந்தவன் போல் அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.
மித்ராவை இப்போதுதான் நன்றாக கவனித்து பார்த்தான் பார்ப்பவர்களை திரும்பி பார்க்க வைக்கும் அழகு.இவள் திருமணத்திற்கு சென்று இவளையே திருமணம் செய்து கொண்டு வந்திருக்கிறான்.அந்த மாப்பிள்ளையின் உபயத்தால்.சிறு வயதில் இருந்து அவளை பார்த்து வளர்ந்தவனுக்கு மாப்பிள்ளை சென்றதே அதிர்ச்சி என்றால் அவனது அம்மா அவனை மணக்க சொன்னது அதைவிட அதிர்ச்சியாக இருந்தது.
மித்ரா மிகவும் அமைதி அதிகம் யாருடனும் பழகமாட்டாள். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவள். சித்தார்த் மாமன் மகன் என்ற போதும் அவர்கள் வீட்டுக்கு சென்றால் வரவேற்பாக வாங்க என்று சொல்வதோடு சரி அதன் பிறகு அவளது அறையில் சென்று புகுந்து கொள்வாள்.அவன் வேலைக்கு வந்த பிறகு அங்கு செல்வதும் இல்லை பேசுவதும் இல்லை.பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மெடிக்கல் சேர்ந்ததாக அவன் அம்மா சொல்லி கேட்டதுதான்.இன்று மனைவியாக அவளை பார்க்கும் போது புதிதாக தெரிந்தாள்.
மித்ரா அவன் வரும் வரை தந்தையுடன் பேசலாம் என்று தந்தைக்கு அழைத்து பேசிவிட்டு தன் திருமண நிகழ்வை யோசிக்க ஆரம்பித்தாள்.
அம்மா....என்று இதோடு நூறுமுறையாவது அழைத்திருப்பாள் தன் தாயை ,தயக்கத்தோடு அழைத்தவள் தாய் தன்னை கவனிக்கிறார் என்று தெரிந்தவுடன்.எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்மா.
ஏன் வேண்டாம்.ஏற்கனவே மாப்பிள்ளை ஓடி போனதில் உங்க அப்பா வருத்தத்தில் இருக்காரு இப்ப அவர் சந்தோஷத்தை என்னை கெடுக்க சொல்கிறாயா.அவரோட தங்கச்சி பையனே தனக்கு மாப்பிள்ளையா வந்தத நெனச்சு அவரு சந்தேஷமா இருக்காரு உனக்கு வேணும்னா நீயே சொல்லிக்கோ.
அம்மா ப்ளீஸ்மா எனக்கு போலீஸ்னா பயம்னு உனக்கு தெரியும்ல அப்புறம் எப்புடிமா.
சும்மா சொன்னதே சொல்லாதா அம்மு.அவன் வேற யாரோ இல்ல உன்னோட அத்தை மகன் மற்ற போலீஸ்காரர்கள் போல் அவனை நினைக்காதே.அவன் நேர்மைக்கு கிடைத்த பரிசுதான் இந்த இளம் வயதில் அவனுக்கு கிடைத்திருக்கும் உயர் அதிகாரி போஸ்ட்டும் வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும் டிரான்ஸ்பரும் என்ற தாயை இயலாமையுடன் பார்த்தாள் .
அம்மா என்று ஏதோ பேச வர அந்நேரம் பார்த்து அம்மு ரெடி ஆகிவிட்டாயா என்று கேட்டவாரு உள் நுழைந்தார் அவளின் தந்தை.இவரிடம் சொல் உன் காரணங்களை என்று மிதப்பாக பார்த்த தாயை பார்த்து பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது மித்ராவிற்கு.
அம்மாவை முறைத்து கொண்டே இதோ அப்பா கிளம்பிவிட்டேன் என்ற மகளை வாஞ்சையாக பார்த்தார் மித்ராவின் அப்பா அகிலன்.உனக்கு இந்த திருமணத்தில் விருப்பம்தானேமா வருத்தம் எதுவும் இல்லையே என்று கேட்ட தந்தையை பார்த்தவளுக்கு மகளின் விருப்பம் அறியாமல் அவசரப்பட்டுவிட்டோமோ என்ற கவலை அவரது முகத்தில் இருப்பது நன்றாக தெரிந்தது.
எனக்கு எந்த கவலையும் இல்ல அப்பா உங்களுக்கு ஏதும் கவலை இருந்தால் சொல்லுங்கள்.கவலைக்கான காரணத்தை கண்டுபிடித்து தர சொல்லி உங்கள் மாப்பிள்ளையிடமே கம்ப்ளைண்ட் கொடுத்துவிடுவோம். தந்தையின் கவலையை போக்க விளையாட்டாக பேசி தந்தையின் கவனத்தை திசை திருப்பினாள்.அவள் நினைத்தது போல அவரது முகம் புன்னகையில் விரிய சரியான போக்கிரி என்று அவள் தலையில் வலிக்காமல் குட்டினார்.
சரி வாமா போகலாம் அனைவரும் உனக்காகதான் காத்து கொண்டு இருக்கிறார்கள் என்றவர் கோதை அம்முவை அழைத்து வா என்று முன்னே சென்றார்.கணவர் சென்றவுடன் மகளை கோதை முறைக்க விடுமா விடுமா அப்பா ரொம்ப வருத்தப்பட்டார் அதுதான் என்ற மகளை கொலைவெறியுடன் பார்த்தார் தாய்.
ஏன்டி இவ்ளோ நேரம் நான் கழுதையா கத்துனேன் அது உன் காதுல விழுகல உன் அப்பா வந்து சொன்னவுடனே உனக்கு போலிஸ் புடிச்சிருச்சா என்ன அநியாயம்டி இது என்று பொறும ஆரம்பித்தார்.
ஸ்.........கத்தாதமா நீயே சொல்ற கழுதையா கத்துனேன்னு அப்புறம் எனக்கு எப்புடி புரியும் எனக்கு கழுத லாங்வேஜ் தெரியாது என்று அப்பாவியாக பதில் சொன்ன மகளை பார்த்தவர் எப்புடியோ போ இந்த நேரத்திலும் என்ன டேமேஜ் பண்ணுலனா உனக்கு தூக்கம் வராதே வா போலாம் உன் அப்பா மறுபடியும் வந்தற போறாரு உங்க பாச படத்த பாக்க எனக்கு பொருமை இல்லை என்று இவரும் மகளின் மனதை வேறு திசையில் மாற்ற கிண்டல் அடித்துவிட்டு நகர்ந்தார்.
மித்ரா வெளியில் சிரித்து கொண்டாலும் மனதில் பயத்துடன் மணமேடையில் அமர்ந்தாள்.ஓரகண்ணால் தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவனை பார்த்தவளுக்கு மூச்சு நின்றது போல் ஓர் உணர்வு.மாநிறத்தில் கண்களில் கூர்மையுடன் அவனும் அவளைதான் பார்த்து கொண்டு இருந்தான். அவனின் கண்கள் கூர்மையாக தன்னை துளைப்பதை உணர்ந்தவள் படபடப்பாக உணர உடனே குனிந்து கொண்டாள்.அதன் பிறகு நிமிறவே இல்லை.
ஐயர் மந்திரங்கள் ஓத இருவரும் உறவினர் என்பதால் அனைத்து சொந்தங்களும் வந்திருந்தனர்.அனைவரின் ஆசிர்வாதத்தோடு மித்ராவின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டி அவளை செல்வி என்ற பதவியில் இருந்து திருமதி ஆக்கினான் சித்தார்த் வர்மன்.
சித்தார்த் வர்மன் டி.எஸ்.பியாக இருக்கிறான் சொந்த ஊர் மதுரை.இப்போது பணி புரியும் இடம் திருச்சி.ஆறடி ஆண்மகன் போலிஸ்க்கு ஏற்ற உயரமும்,உடற்கட்டும் கொண்டவன் அவனின் உருவமே பார்ப்பவர்க்கு படம் பிடித்துகாட்டிவிடும் அவன் ஒரு போலிஸ் என்று யாருக்கும் பயப்படமால் தன் வேலையை செம்மையாக செய்பவன்.
திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தவன்,மாமன் மகளின் திருமணத்திற்கு வந்து மாப்பிள்ளை செய்த குளறுபடியால் தாயின் கெஞ்சல்,கொஞ்சல் எதற்கும் அசையாமல் கடைசியில் கண்ணீரில் கரைந்து தானே இப்போது மாப்பிள்ளையாக அமர்ந்து இருக்கிறான்.
ஒரு வழியாக அனைத்து சடங்குகளும் முடிந்து அம்முவின் அத்தை வீட்டிற்கு சென்றனர்.சென்றவுடனே சித்தார்த் எனக்கு அவசரமான வேலை இருக்கிறது.முதலிலேயே பிளான் செய்ததுதான்.என்னால் இந்த சமயத்தில் லீவ் எடுக்க முடியாது.நான் காலையே கிளம்பவேண்டும் என்றவன் ஒரு நிமிட அமைதிக்கு பிறகு மித்ரா படிப்பு முடியும் வரை இங்கு இருக்கட்டும் என்று கூறிவிட்டு அவ்வளவுதன் என்பது போல் சென்றுவிட்டான்.
சித்தார்த்தின் பேச்சை கேட்ட அவனின் தாய் மோகனா அவனைபற்றிதான் தெரியுமே விடுங்கள் நாம் அடுத்து நடக்க வேண்டியதை பார்ப்போம் என்றவர்.அம்மு உன்னுடைய துணிகள் அனைத்தையும் எடுத்து வர கோதை சென்றிருக்கிறாள்.நீ அது வரை என்னுடைய அறையில் ஓய்வு எடு.நான் மற்ற வேலைகளை பார்க்கிறேன் என்று மென்மையாக அவளது தலையை வருடி கூறியவரை பார்த்தவள் சரி அத்தை என்று கூறி சென்றுவிட்டாள்.
மாலை மங்கி இரவு நேரம் நெருங்க நெருங்க அம்முவிற்கு பயத்தில் மயக்கம் வரும் போல் இருந்தது.ஹையோ இப்ப என்னபண்றது ஓடவும் முடியாது,ஒழியவும் முடியாது என்று தனக்குள் கூறி கொண்டவளுக்கு பயத்தில் வேர்க்க துவங்கியது.
இரவு உணவை அனைவருடனும் முடித்து கொண்டவள் முகம் பயத்தில் வெளுத்து இருந்தது.ஹையோ அவன நார்மலா பாக்கவே எனக்கு பயமா இருக்கும் இப்ப தனியா போகணுமா என்று பயந்து கொண்டு இருந்ததுக்கு ஏற்ப அவளது அத்தை வந்து அவளை சித்தார்த் அறைக்கு செல்ல சொன்னார்.
புலி வருது புலி வருதுனு கடைசில வந்துருச்சு என்று நினைத்தவள்.அத்தையை தயக்கமாக பார்த்தாள்.
போடா மா பயப்படாத என் பையன் ஒண்ணும் சிங்கம் புலி இல்ல என்று புன்னகையுடன் சொன்னவர் சென்றுவிட்டார்.
புலி சிங்கத்துக்கூட கூட இருந்தரலாம் ஆன உங்க பையன் போலீஸ் அதன் எனக்கு பயம் என்று மனதில் நினைத்து கொண்டே சித்தார்த்தின் அறைக்கு அருகில் வந்து மூச்சை நன்றாக இழுத்துபிடித்து கொண்டு கதவை திறந்து கொண்டு சென்றாள்.
அறை காலியாக இருக்க அம்முவிற்கு அப்போதுதான் மூச்சு வந்தது.அப்பாடா என்று அவள் நினைப்பதற்கு முன்பே பால்கனியில் அவன் சத்தம் கேட்டது.கோபமாக யாருடனோ பேசி கொண்டு இருந்தான்.
என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க இது எவ்ளோ இம்பார்டண்ட் தெரியும்ல,அப்புறமும் ஏன் இவ்ளோ கேர்லஸா இருந்தீங்க.சரி மறுபடியும் நல்லா தேடுங்க அங்கதான் எங்கையாவது இருப்பான்.நல்லா வாட்ச்பண்ணுங்க நம்ம பிளான்பண்ணபடி அவனுக்கு போட்ட ஸ்கெட்ச் போட்டதுதான் என்று பேசி கொண்டு இருந்தவன் மேலும் சற்று நேரம் பேசி முடித்து போனை வைத்தான்.
அறைக்குள் செல்ல திரும்பியவன் கண்ணில்பட்டாள் மித்ரா.முகம் வெளுத்து கண்ணில் நீர் தளும்ப நின்றவளை பார்த்தவன் வேகமாக அவள் அருகில் சென்றான்.
அம்மு என்ன ஆச்சுடா என்று கேட்க அவனை பாக்கத்தில் பார்த்தவள் சற்று முன் அவன் பேசியது நினைவில் வர பயத்தில் மயங்கி அவன் மேலேயே சரிந்தாள்.
ஹேய் அம்மு என்ன ஆச்சு? என்று பதறியவன் அவளைதூக்கி கட்டிலில் படுக்க வைத்தான்.பக்கத்தில் டேபிளில் இருந்த வாட்டர் கேன்தண்ணீரை அவள் மீது தெளித்தான்.நீர் முகத்தில் படவும் முகத்தை சுருக்கி கொண்டு கண்ணை திறந்தவளுக்கு தன் முகத்துக்கு மிக அருகில் இருந்த சித்தார்த்தின் முகம் தெரிந்தது. சித்தார்த்தை அவ்வளவு அருகில் எதிர் பார்க்காதவள் அடித்து பிடித்து எழுந்து உட்கார்ந்தாள்.
ஹேய். ஈசி. எதுக்கு இப்புடி பாக்கற.
ஒ....ஒண்ணும் இல்ல.எ.....எனக்கு தூக்கம் வருது தூங்கவா என்றாள் கண்ணில் திண்ட நீருடன்.அவளையே ஆராய்ச்சியாக பார்த்தவன் எதுவும் சொல்லாமல் தலை அசைக்க விட்டாள் போதும் என்று படுத்து போர்வையை தலை வரை போர்த்தி கொண்டாள்.
சித்தார்த் மித்ராவையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தவன் அவனது கண்களும் தூக்கத்துக்கு கெஞ்ச சென்றுபடுத்துவிட்டான்.
அடுத்த நாள் அவன் வேலையை காரணம் காட்டி திருச்சிக்கு சென்றுவிட,அதன் பிறகுதான் மித்ராவிற்கு அந்த வீட்டில் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது.அவள் அத்தையுடன் பேசி கொண்டும் மாமனாருடன் வம்பலந்து கொண்டும் அவள் பொழுது சிறப்பாகவே சென்றது.
மித்ராவிற்கு நாட்கள் அத்தை,காலேஜ் என்று சென்றது. சனி ஞாயிறுகளில் அப்பாவை பார்க்க இவள் சென்றுவிடுவாள். அல்லது அவர்களை வரவழைத்துவிடுவாள்.இதற்கிடையே கணவனுடன் பேச பயந்தவள் ஒரு முன்னேற்றமாக அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்து இருந்தாள்.
மித்ராவின் கல்லூரி முடிந்து அடுத்து ஹவுஸ் சர்ஜன் பிராக்டிஸ்காக அனைவரும் அவளை திருச்சியில் இருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு வாங்கி கொள்ள சொன்னார்கள்.ஆனால் அவனுடன் தனியாக இருக்க பயந்தே அவள் மறுக்க, கோதை வந்து மந்திரித்ததில் அரை மனதாக ஒப்பு கொண்டு இதோ திருச்சியில் வந்து இறங்கிவிட்டாள்.இதையே யோசித்து கொண்டு இருந்தவள் சித்தார்த் வந்ததை உணர்ந்து தன்னிலைக்கு வந்து எழுந்து நின்று கொண்டாள்.
சித்தார்த் ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்தவள் அவனை எப்படி அழைப்பது என்று ஒரு நிமிடம் யோசித்து மாமா என்று அழைக்க அது அவன் காதில் விழுந்தது போல் தெரியவில்லை.மீண்டும் சத்தமாக மாமா என்று அழைக்க சுய நினைவு வந்தவன் தன் தலையை தானே தட்டி கொண்டு அவளை பார்த்து மென்மையாக சிரித்தவன் வா சாப்பிடலாம் என்று அழைத்து சென்றான்.
இருவரும் அமைதியாக சாப்பிட பேச்சிற்கு இடம் இல்லாமல் போனது.மித்ராவும் இரவு முழுதும் பயணம் செய்ததால் களைப்பாக இருக்க இவனது தடுமாற்றத்தை கண்டு கொள்ளவில்லை.
சித்தார்த்,மித்ரா இவர்களின் வாழ்க்கை திருச்சியில் ஆரம்பமானது.மித்ரா எப்போதும் போல அமைதியாகவே இருக்க, அவன்தான் ஏதாவது பேசுவான்.அவன் கேட்கும் ஒன்று இரண்டு வார்த்தைகளுக்கு பதில் அளிப்பாள் அவ்வளவே.இவனும் பேசி பேசி பார்த்து காரணம் புரியாமல் குழம்பிதான் போனான்.
அடுத்து வந்த நாட்களில் மித்ரா ஹவுஸ் சர்ஜன் பிராக்டிஸ்க்கும் சித்தார்த் பிள்ளைகளை கடத்தும் கும்பலை கண்டு பிடிக்கும் வேலையிலும் பிசியாக இருந்தனர்.
மித்ரா காலையில் எழுந்து காலை டிபன் மதியம் சாப்பாடு அனைத்தும் ரெடி செய்துவிட்டே கிளம்புவாள்.அவள் எழுந்து கிச்சனில் வேலை செய்ய இவன் எழுந்து ஜாகிங் சென்றுவிட்டு வந்து பேப்பரும் கையுமாக அமர்ந்து விடுவான்.வேற எதுக்கு பொண்டாட்டிய சைட் அடிக்கதான் கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொல்லிட்டு அந்த புள்ளைய விடாம சைட் அடிக்கறடா என்றது அவன் மனசாட்சி அதையெல்லாம்கண்டு கொள்ளாமல் தன் வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருந்தான். அதாங்க சைட் அடிக்கற வேலை.
சித்தார்த் பேப்பரை கையில் எடுக்கும் போது ஒரு வலை கரம் அவனுக்கு காபியை நீட்டும் முகத்தில் புன்னகையுடன் வாங்கி கொண்டு காபியை ரசித்து பருகுவான்.அந்த காலை வேலையில் குளித்து அவசர அவசரமாக வேலை செய்யும் மனைவியின் மேல் ஓர் பார்வை வைத்து கொண்டே இருப்பான்.
மித்ராவோ அவன் முகம் பார்த்தே பேசமாட்டாள். ஆமாம், இல்லை என்ற இரு வார்த்தை அதுவும் சுவற்றை பார்த்து பேசுவாள் அதனால் அவனுக்கும் ஈகோ வந்து அவளை கண்டு கொள்ளாமல் இருக்க முயற்ச்சித்தான், முயற்ச்சியாகவேதான் இருந்தது.ஏன் இப்படி இருக்கிறாள் என்ற எண்ணம் அவனை குடைந்து கொண்டேதான் இருக்கும்.
அம்முவின் அமைதி அவனுக்கு என்னவோ போல் இருந்தது. இருப்பது இரண்டு பேர் அதுவும் பேசாமல் இருப்பது கடுப்பாக இருந்தது.திருமணம் முடிந்த பிறகு அவனின் மாமனார் மித்துவிற்கு போலீஸ் என்றால் ரொம்ப பயம் கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னது நினைவு வர சிரித்து கொண்டே தப்பு செய்பவர்களும், திருடர்கள்தான் பயப்படனும் இவ எதுக்கு பயப்படறா என்று நினைத்தாலும் அவளின் பயத்திற்க்கு மதிப்பு கொடுத்து அமைதியாக இருந்தான்.
மாமன் மகள் என்ற உறவே அவளிடம் ஒதுங்கி இருக்காமல் ஓரளவு அவளுடன் பேச வைத்தது.புது மனைவி அவள் குளித்து புடவை அணிந்து அதை ஏற்றி சொருகி கொண்டு வேலை செய்யும் போது வெளிப்படும் அவளின் இளமை அழகு அவனை தடு மாற செய்யும்.இப்படியே விட்டாள் வேலைக்கு ஆகாது நாம்தான் அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவன் அவளிடம் வேண்டுமென்றே பேச்சு கொடுத்து கொண்டே இருப்பான்.
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏற்ப. இப்போது எல்லாம் சின்ன சிரிப்புடன் பேச ஆரம்பித்து விட்டாள்.அதுவும் அவனிடம் மட்டும்தான். மற்ற போலீஸை பார்த்தால் பயப்படும் குணம் போகவில்லை. சரி கொஞ்சம் கொஞ்சமாகதான் மாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன் அவளை வெளியே அழைத்து செல்லவென்றே அன்று விரைவாக வீட்டிற்கு வந்தான்.
மித்துமா கிளம்பு வெளியில் போய்விட்டு வரலாம். சித்து.
இப்பவா நைட் டின்னர் ரெடிபண்ணனும் மாமா. மித்து.
வெளியவே சாப்பிட்டுக்கொள்ளலாம் நீ வா. சித்து.
இல்ல மாமா அது வந்து................
நீ வந்ததில் இருந்து உன்னை எங்கும் அழைத்து செல்லவில்லை.அம்மா போன்பண்றப்ப எல்லாம் இதேதான் சொல்லி திட்டறாங்க. வா போய்விட்டு வரலாம் என்று அழைத்தான்.இவளும் ஆவலாக கிளம்பி அவனுடன் சென்றாள்.இருவரும் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றுவிட்டு,படத்திற்க்கு போய்விட்டு,அப்படியே இரவு உணவை முடித்து கொண்டு வந்தனர்.வரும் போது இரவு போலீஸ் பணியில் இருப்பவர்களை பார்த்தவள் அவனை ஒட்டி அமர்ந்தாள்.திடீர் என்று மனைவி அப்படி அமரவும் புரியாது அவளை திரும்பி பார்த்தவன் அவள் அங்கு இருக்கும் போலீஸையே கண்ணில் கலவரத்துடன் பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து அவனுக்கு கோபம்தான் வந்தது.
மக்களின் பாதுகாப்புக்கு இருப்பவர்களை பார்த்து பயப்பட என்ன இருக்கு என்று நினைத்தவன்.தன் மனைவி இப்படி பயந்தவளாக இருக்க கூடாது என்று முடிவெடுத்தான். அவளிடம் இதைபற்றி பேசவேண்டும் என்று தனக்குள் சொல்லி கொண்டான்.
வீட்டிற்கு வந்ததும் அவளிடம் பேசலாம் என்று நினைக்க அவளது சோர்ந்த முகம் அவளிடம் பேச தடைவிதிக்க இருவரும் சென்றுபடுத்துவிட்டனர்.ஒரு படுக்கை அறை கொண்ட வீடு என்பதால் இருவரும் ஒரே அறையையே பயன்படுத்தினர்.பெட்டிலும் இவள் ஒரு ஓரம் அவன் ஒரு ஓரம் படுத்து கொண்டனர்.
மித்ரா ஹாஸ்பிடல் போய்விட்டு வந்த பிறகு வீட்டில் ஏதாவது மாற்றம் செய்து அலங்கரித்து கொண்டும் புதிதாக ஏதாவது சமைத்து சித்தை எலியாக மாற்றி பரி சோதனை செய்து கொண்டு இருந்தாலும் இருவரும் தாமரை இலை தண்ணீர் போல்தான் வாழ்ந்துனர்.
மித்ராவின் ஒவ்வொரு செயலும் அவள் அறியாமலேயே சித்தார்த்தை அவளை நோக்கி இழுத்து கொண்டு இருந்தது.அவளின் சின்ன சின்ன வேலைகளை கூட ரசித்து செய்வது,அவனுக்காக புதிது புதிதாக சமைப்பது, சமைத்ததை அவன் சாப்பிடும் போது அவள் முகத்தில் இருக்கும் எதிர்பார்ப்பு,அவன் சூப்பர் என்று சொன்னவுடன் அவள் கண்களில் தோன்றும் மின்னல் என்று ஒவ்வொன்றையும் அவனை ரசிக்க வைத்தது. மித்ராவோ இது எதையும் அறியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாள்.
மித்ராவிடம் பேசவேண்டும் என்று நினைத்த சித்தார்த்தும் கேஸில் பிஸியாகிவிட அவளிடம் பேசும் சந்தர்ப்பம் அமையாமல் போனது.
குழந்தைகளை கடத்துபவர்களைபற்றி அறிய அன்று சித்தார்த் வெயிலில் அலைந்ததில் தலைவலியுடன் வீட்டிற்கு வந்தான்.
மித்ரா அப்போது அருகில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று புடவை அணிந்து.பூ வைத்து கிளம்பி தயாராக வெளியில் வந்தவள்.அங்கு கணவன் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்து பதட்டமாக அருகில் வந்தாள்.
என்ன ஆச்சு மாமா. மித்து.
சித்தார்த் அது வரை இருந்த டென்சன் நீங்க மனைவியை பார்த்த உடன் சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டான்.
மாமா.......மாமா நான் கேட்டுட்டே இருக்கேன் நீங்க என்ன யோசிக்கிறீங்க. மித்து.
ஹம்..ரொம்ப தலை வலியா இருக்குமா.டேப்லட் போட்டா சரியா போய்விடும்.நீ எங்கையோ கிளம்பிட்ட போல இருக்கு நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன் என்றான் சோர்வாக.