வியூகம் - 4
விஷ்ணுவின் தோளில் சாய்ந்தபடி தன்ஷிகா மதி மயங்கி கிடக்க அவளது கன்னங்களை வருடியபடியே "ஒரு விஷயம் கேட்க மறந்துட்டேன் ஹனி " என்றான்
"என்ன டா?" என்றாள் குளரலாக
“இன்னைக்கு எதுக்குமா டிரீட் ?"
" ஓ.. அதுவா... ஐ காட் எ நியூ பென்ஸ்" என்றாள் சர்வ சாதாரணமாக ஒரு தனி மனிதனுக்கு ஒரு கார் போதுமானது ஆனால் இவர்கள் ஆளுக்கு பத்து கார் வைத்திருக்கிறார்கள். எதற்கு வாங்கினோம் என்று அவர்களுக்கும் தெரியாது. எதற்காக இப்படி கார் ஷெட்டில் அடைந்து கிடக்கிறோம் என்று பாவம் அந்த கார்களுக்கும் தெரியாது.
தனது சிந்தனை ஓட்டத்தை தடுத்து "எனிதிங் ஸ்பெஷல் " என்று கேட்டான்
"ம்...எஸ்... மை டேடி ஹேஸ் காட் எ பிக் மல்ட்டி நேஷனல் பிராஜக்ட்.. யூ..... யூ..... நோ......”. குளரலாய் உளரியவளை உற்று நோக்கினான்.
" வாவ் ....கிரேட் நியூஸ், கங்கிராட்ஸ் " வாழ்த்தியவன்
"என்ன கான்ட்ராக்ட் ஹனி ?" பேச்சை நீடித்தான்.
“ ஏதோ மெடிக்கல் மெஷினரி கான்ட்ராக்ட் ,ஐ ஆம் நாட் ஷீயர் ." முடித்தவள் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை காரணம் பேசும் நிலையில் அவள் இல்லை முழுதாக மட்டை.
அங்கே இருந்த பார் மேனேஜரை பார்த்து அவளது கார் டிரைவர் நம்பர் கொடுத்து தொடர்பு கொண்டு அவளை ஒப்படைக்குமாறு கூறியவன் பார்க்கிங்கை நோக்கி நடக்கலானான். போகிற போக்கில் அங்கிருந்த ஓரு பார்மேனை பார்த்து கண்களால் சைகை காட்டி விட்டு சென்றான்.
இரவு இரண்டு மணி ,அரையில் மிக மிக மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தான் விஷ்ணு "சகா... நான் கேட்ட ஆள் ரெடியா? "
"ஓகே... டூ வீக்ஸ் தான் நமக்கு டைம் அதுக்குள்ள நம்ம ஆளை உள்ள இறக்கியாகனும் , புரிஞ்சிதா?"
"அர்ஜுன் இன்னும் விளையாட்டு பிள்ளையாத்தான் இருக்கான்."
"இல்லை அவனுக்கு தெரியாது "
"சொல்லனும்... சரியான டைம்காக வெயிட்டிங்."
"எஸ் அடுத்த வாரம் தான் ஆக்ஷன் ,எல்லா குறிப்புகளும் அதைத்தான் சொல்லுது. “
“ ஜஸ்ட் வாட்ச் ,நாட் மோர் தேன் தட்"
“எஸ் ஹெவி லாஸ் ஆப் லைப் இருக்கும் “
“அதற்கான பிளான் தான் உன் கைல இருக்கு. ஃபீல்ட் ஆபீசர்கிட்ட எக்ஸ்பிளெயின் பண்ணிடு .
ஏதாவது டவுட் இருந்தா என்னை கான்டாக்ட் பண்ண சொல்லு என்னோடசெல்போன் சிக்னல் ரெக்கார்ட் பிளாக்கிங் டைம் தான் உனக்கு தெரியுமே ?
"நானா? நோ நோ .... வேற யாரையாவது அனுப்புங்க” |
" எனக்கு இங்க கிரவுண்ட் வொர்க்கொஞ்சம் இருக்கு, நெக்ஸ் டைம் ஐ வில்கோஃபார் ஷுயர் "
“ஓ கே சகா ,எனி அதர் இன்பர்மேஷன் ?”
“ஓ கே....”. தொடர்பை துண்டித்தான்
விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்த இடம் அவனது வீடு தான். இரண்டு கிரவுண்ட்டில் இடம் இருந்தது, அதில் ஒரு கிரவுண்ட் மட்டும் தான் வீடுஇன்னொறு கிரவுண்ட் முழுவதும் தோட்டம் .தென்னை, மா, பலா, வாழை, முருங்கை, கருவேப்பில்லை , வேம்பு, சப்போட்டா,கொய்யா, வெண்டை, மணத்தக்காளி கீரை, பூசணிக்காய், புடலங்காய் என்று ஒவ்வொரு செடியும் மரமும் சரியான இடைவேளையிட்டு அழகாய் பாத்திகட்டி வளர்க்கப்பட்டன.
வீட்டிற்குள் நுழைந்ததுமே கேட் அருகில் விஷ்ணுவின் நாய் பிளாக்கி அமர்ந்திருக்கும் அல்லது படுத்துக் கொண்டிருக்கும். உள்ளேபோர்டிகோவில் நிறைய லவ் பேர்ட்ஸ் கீச் கீச் என்று கத்திக் கொண்டிருக்கும் வீட்டிற்குள் இரண்டு கிளி கூண்டில் அடைக்கப்படாமல் மூன்று படுக்கையறை ,ஓர் சமையலறை ,கூடம் என்று சுதந்திரமாய் சுற்றிக் கொண்டிருக்கும். குறைந்தது ஐந்து பூனைவீட்டை சுற்றிவரும் . இரண்டு கோழியும் சில குஞ்சிகளும் கூட தோட்டத்தில் ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருக்கும். இதில் மிகப் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் பூனையும் நாயும் கோழிக்குஞ்சுகளுடன் விளையாடுமே தவிர உணவாக எண்ணியது போல் தெரியவில்லை .
மாடியில் அமைத்திருந்த ஆர்கானிக் தோட்டத்தில் நாட்டு தக்காளியை அறுவடை செய்து கொண்டிருந்தான் விஷ்ணு மொத்தம் இரண்டே செடி தான் ஆனால் இரண்டு கிலோ தக்காளி உற்பத்தியாகி விட்டது. இனி இரண்டு வாரத்திற்கு கவலையில்லை . அதற்குள் அடுத்த தக்காளி செடியில் காய் பழுத்து விடும்.ஓரத்தில் அவரைக் கொடியும் பாகற்கொடியும் படர்ந்திருந்தது. கத்தரிக்காய் ,மிளகாய் ,சிறுகீரை, புதினா இப்படி சிறுவேர் விடும் செடிகள் அந்த மாடியை அலங்கரித்திருந்தது. மாட்டு சானம் மற்றும் அழுகிய காய்கறிகளின் வாசத்தோடு ஈர மண்வாசனையும் சேர்ந்து வீசி ஒரு வித நெகிழ்ச்சியை உண்டு பண்ணியது. அந்த மண்ணில் மண்புழுக்கள் விளையாடுவதை பார்க்கையில்இயற்கை சார்ந்த விவசாயத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாதுடா என்று மார்தட்டிக் கொள்ள தோன்றும்.
அதிக மழைபொழிந்தால் செடிகளை காக்க ஓர் பெரும் ஷீட் ஒன்று தயார் நிலையில் இருந்தது. மாடி முழுவதும் ஆங்காங்கே இருக்கும் கம்புகளில் ஷூட்டை விரித்து விட்டால் போதும் அதில் பட்டு விழும் தண்ணீர் மாடியில் இருக்கும் ஓட்டை வழியாக மழைநீர் சேகரிப்புத் தொட்டியை சென்றடையும்.
எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் விஷ்ணுவையும் அர்ஜுனையும் ராஜகீழ்பாக்கம் ஏரியிலும் மாடம்பாக்கம் ஏரியிலும் பார்க்கலாம். மாட்டுசாணத்தை சேகரித்து எடுத்து வருவதில் ஞாயிறு முழுவதையும் செலவிடுவார்கள். முதலில் முகம் சுளித்த அர்ஜுன் இப்போது வழக்கமாக்கிக் கொண்டான். தினமும் வீட்டு வாசலில் மீதமான கஞ்சி, கூழ், பழம் என்று கலவையாய் இவன் வைக்கும் உணவிற்கு மாடுகள் சில அடிமையாகி விட்டன.வாசலில் வந்து "மா..மா..." என்று கூப்பிட்டு தங்களுக்கானதை உரிமையோடு பெற்றுக் கொள்ளும் அளவிற்கு விஷ்ணுவுடன் ஒன்றி விட்டன.இப்படி விஷ்ணுவின் வீடே ஒரு இயற்கை களஞ்சியமாக இருந்தது.
இப்படி ஒரு வீட்டில் யாருக்கு தான் வாழப் பிடிக்காது.?
இப்படித்தான் ஒரு காலத்தில் நம்.தமிழ்நாடும் இருந்தது, ஆனால் இப்போது?