Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


On Hold வென்றிடுவாயோ? வீழ்ந்திடுவாயோ? - Tamil Novel

Status
Not open for further replies.
அத்தியாயம் 2

இரவு நேரத்தில் ஆள் அரவமற்ற அந்த மண் சாலையின் வழியே அந்த கார் மட்டும் சென்று கொண்டிருந்தது. அந்த காரின் உள்ளே இருந்தவனோ, காரை ஓட்டிக் கொண்டே காரினுள்ளே ஒலித்துக் கொண்டிருந்த பாடலுக்கேற்ப தனது கைகளை ஸ்டீரிங்கில் வைத்து தாளம் தட்டிக் கொண்டிருந்தான். இப்படியாக பாடலை ரசித்துக் கொண்டே காரை ஓட்டிச் சென்றவன் அந்த பாழடைந்த அமைப்பை பெற்ற வீட்டின் முன்னே காரை நிறுத்தினான். அந்த வீட்டினைச் சுற்றி வேறு வீடுகள் ஏதுமின்றி அந்த வீடு மட்டும் தனித்தீவு போன்று காட்சியளித்தது. காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கினான் அவன், பாரி வேந்தன்.

வெள்ளை நிற வேட்டியும், சட்டையும் அணிந்து கொண்டு, கையில் காப்பு அணிந்து கொண்டு, தன் கைகளில் காப்பினை ஏற்றி விட்டபடி அவன் தன் முகத்தில் இருக்கும் மீசையை முறுக்க, அப்போது மலை குன்றுகள் போன்று ஏறி இறங்கியது அவனது புஜங்கள். மண் மனம் மாறாமல் கம்பீரத்தின் இலக்கணமாக நின்றிருந்தான் பாரி.

அவன் காரை விட்டு இறங்கியதும் வேகமாக ஓடி வந்தான் வேலையாள் ஒருவன். அவன் அருகில் வந்ததும் பாரி தான் கொண்டு வந்திருந்த காகிதப் பைகளை அவனிடம் நீட்டினான்.

வேகமாக அந்த பைகளை வாங்கிச் சென்றான் அந்த வேலையாள். காகிதப் பைகளை அந்த வேலையாள் வாங்கிச் சென்றதும் பக்கவாட்டில் இருந்து ஓடி வந்த மற்றொரு வேலையாளிடம் கார் சாவியை நீட்டிய பாரி, வேக எட்டெடுத்து வைத்து வீட்டின் உள்ளே சென்றான்.

வீட்டின் உள்ளே சென்ற பாரி அந்த அறையை நோக்கி வேகமாக சென்றான். அதுவரை அறையின் வெளியே காவல் காத்துக் கொண்டு நின்ற வேலையாள், பாரியை கண்டதும் வணங்கி தலையசைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான். வேலையாள் வெளியே சென்றதும் அறையின் கதவை பாரி திறந்தது தான் தாமதம் ஒரு உருவம் இருளில் வேகமாக தன்னை மறைத்துக் கொண்டது. அந்த உருவத்தின் அசைவை கண்டு சிரித்தபடியே உள்ளே நுழைந்த பாரி மின் விளக்கை எரியூட்டினான்.

மின் விளக்கின் வெளிச்சம் தன் மேல் பட்டதும் ஒடுங்கி அமர்ந்திருந்த பெண் தன் கண்கள் கூச, தலையை குனிந்தபடியே சுவரோட சுவராக ஒன்றினாள். அவளது பயத்தை கண்டு ரசித்தபடியே அவள் அருகினில் குத்துகாலிட்டு அமர்ந்தான்.

அவன் அருகில் வந்து அமர்ந்ததும் வெளிச்சத்தை பார்த்து கூசிய தன் கண்களை வெகு சிரமப்பட்டு திறந்து கண்சிமிட்டிய படியே அவனை பார்த்தாள். அவனைப் பார்த்தவள் கோபம் தலைகேற, அவன் சட்டையை பற்றிக் கொண்டு “ தினமும் இருளை மட்டுமே பார்க்கும் தண்டனையை எனக்கு கொடுத்தும் இன்னும் உன் பழிவெறி அடங்கலையா? இருளுக்கு பழக்கப்பட்ட என் விழிகள் இப்போது வெளிச்சத்தை பார்த்ததும் கண்கள் கூசுகிறது. இது எல்லாத்துக்கும் காரணம் நீதான். நீ மட்டும் தான் . என்னை தண்டிக்கும் உன் வெறி எப்பதான் அடங்கும்? இப்ப என்னை என்ன செய்ய இங்க நீ வந்திருக்க?" என்று அவனைப் பார்த்து கத்தினாள் அவள், வான்நிலா.

வான்நிலா அப்படி பேசியதும் சத்தமாக சிரித்தான் பாரி. சற்று நேரம் சிரித்தவன் அவளது தோற்றத்தை அணுஅணுவாக ரசித்தான். இருளிலேயே அடைந்து கிடந்து தன் நிலையை கண்டு அழுது கண்ணீர் வடித்ததாலோ என்னவோ, அவளது கண்களின் கீழ் கருவளையம் தோன்றி இருந்தது. தலை சரியாக வாராமல் கொண்டையாக போடப்பட்டு சில கற்றை முடிகள் பறந்து அவளது காதோரத்தையும் நெற்றியையும் தொட்டு உறவாடிக் கொண்டிருந்தது. மேலும், சேலை கட்டி அமர்ந்திருந்தவளின் சேலை அங்காங்கே கிழிந்து அலங்கோலமாக காட்சி அளித்தது. அவளது இந்த கோலத்தை திருப்தியுற பார்த்தவன் அவளிடம் பேச ஆரம்பித்தான்.

“ம்ம்ம்... எல்லாம் ஒகே தான். ஆனால் உன்கிட்ட இருக்கும் அகங்காரம் மட்டும் இன்னும் குறைந்த மாதிரி தெரியல்லையே. அதுக்கு எதாவது நான் பண்ணியே ஆகணும் “ என்று பாரி சொல்ல, அதை கேட்ட வான்நிலாவின் முகம் இறுகியது.

“இது அகங்காரம் அல்ல . தப்பே செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் ஒரு அவலைப் பெண்ணின் வலி, வேதனை. இது எல்லாம் உனக்கு எங்கே புரிய போகுது? “ என்று அவனுக்கு பதிலடி கொடுத்தாள்.

"ஏது? நீ தப்பே பண்ணலையா? நீ சொல்றதை நான் நம்பனுமா?" – பாரி.

" ஆமாம் நான் தப்பே பண்ணல என்பதை நீ நம்பித்தான் ஆகனும். ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்! என்றாவது ஒரு நாள் நான் குற்றமற்றவள்னு உனக்கு தெரிய வரும். அப்போது நீ இருக்கும் இடத்தில் நான் இருந்து உன் செயலுக்கான தண்டனைகளை உனக்கு கண்டிப்பாக திருப்பிக் கொடுப்பேன்" – வான்நிலா.

"பார்டா… நீ எனக்கு தண்டனை தரீயா? அது சரி... அது நடக்கும் போது பார்த்துக்கலாம். இப்ப நீ நம்ம விசயத்திற்கு வா. " என்று அவன் கேட்க வான்நிலா அவனை புரியாமல் பார்த்தாள்.

அதை கண்டவன் சிரித்துக் கொண்டே "நாம ஆரம்பிக்கலாமா நிலா பேபி?" என்று கேட்டபடி பாரி அவள் அருகினில் வர, அது வரை அவனிடம் வாயாடிவள் பயந்து ஒடுங்கினாள்.

அவளது பயத்தை பார்த்தவன் அவள் அருகில் வந்து அவளது நாடியை பற்றி தன் பக்கம் திருப்பினான். "என்னம்மா? இவ்வளவு நேரம் வீராப்பா பேசுன? இப்ப என்ன அமைதியாகிட்ட? உன் வீரம் எல்லாம் அவ்வளவுதானா?" என்று அவளிடம் எள்ளி நகையாடிய பாரி அவளை பார்த்து அமைதியாக பேசினான்.

" இப்ப புரியுதா? ஆண்பிள்ளை ஆண்பிள்ளை தான். பெண்பிள்ளை பெண்பிள்ளைதான்னு" என்று அவன் ஆழ்ந்த குரலில் கேட்க அவனது கையை தட்டிவிட்டாள் வான்நிலா.

அதை கண்டு கோபமுற்ற பாரி அவளது தாடையை இறுக பற்றி தன் பக்கம் திருப்பி "என்னடி ரொம்ப துள்ளுற? நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடி" என்றான்.

"என்னைப் பொறுத்தவரை பெண்ணை அடக்கி ஆளுறவன் மனிதனே கிடையாது மிருகம். நீ அந்த மிருகத்துக்கும் கீழ்" – வான்நிலா.

"அப்படியா …?" என்று நக்கலாக. ஆரம்பித்தவன் "நான் நீ சொல்ற மாதிரி அடக்கி ஆள நினைச்சிருந்தா நீ இந்நேரம் வேற மாதிரி இருப்பே" என்று அங்காங்கே அவளது சேலைகளில் இருந்த கிழிஞ்சல்களை அவன் பார்த்தபடியே சொல்ல, அவனின் பார்வையின் பொருளை படித்த வான்நிலா தன்னை தானே குறுக்கிக் கொண்டாள். தன்கால் இடுக்கினில் தலை வைத்து கொண்டு தன் உடம்பை மறைத்துக் கொண்டாள் வான்நிலா.

அதைப் பார்த்தவன் நக்கலாக " இப்ப புரியுதா தெய்வமே! நான் எப்படி உன்னை வச்சிருக்கேன்னு? ஒன்னு நல்லா தெரிஞ்சுக்க சதிகாரி. நான் உன்னை அடைய கூட்டிட்டு வரல. உனக்கு தண்டனை கொடுக்க தான் இங்க கூட்டிட்டு வந்திருக்கேன். அதை புரிஞ்சு நடத்துக்க " என்று அவளிடம் பேசிக் கொண்டே பாரி அவள் அருகினில் இருந்த கயிரை எடுத்தான்.

"ஒரு வேளை நான் தப்பே செய்யலனு நிருபிச்சுட்டா? நீ என்ன பண்ணுவ கருப்பா?" என்று அவள் கேட்க, அவளை சட்டென்று திரும்பி பார்த்தான் பாரி. அவளை சற்று நேரம் பார்த்தவன், அந்த கயிரை எடுத்துக் கொண்டு வந்து அவள் அருகில் அமர்ந்து அவளது கைகளில் அந்த கயிற்றை கட்டியபடியே "அது நடக்கும் போது பார்த்துக்கலாம் சதிகாரி" என்று அவன் சொல்லிவிட்டு அந்த கயிற்றை அவளது கைகளில் கட்டி முடித்தவன் அதை முறுக்க.. வலி தாங்க முடியாமல் கத்தினாள் வான்நிலா.

கயிற்றை அவளது கைகளில் தடம் விழும் அளவிற்கு இறுக்கிக் கட்டியவன், அவளை கயிற்றோடு இழுத்துக் கொண்டே டைனிங் டேபிளை நோக்கிச் சென்றான்.

டைனிங் டேபிளில் உணவு பாத்திரங்கள் மூடி வைக்கப்பட்டிருந்தது. மூடிய அந்த உணவை பாத்திரத்தை ஒரு வித பயத்தோடு பார்த்தாள் வான்நிலா. அதை கண்ட பாரியின் முகம் திருப்தியுற்றது.

அவளது கால்கள் நடையை நிறுத்த பாரி அவளது செயலை முன் கூட்டியே அறிந்தவன் போல் அவளை பிடித்து தர, தரவென இழுத்து சென்று சேரில் அமர வைத்தான்.

அவள் 'வேண்டாம்...' என்று மறுக்க, அதை அவன் கண்டு கொள்ளாமல் மூடியிருந்த அந்த மூடியை திறந்தான். அவன் மூடியை திறந்தது தான் தாமதம், அங்கிருந்த உணவை பார்த்த நொடியில் அருவருப்பில் முகத்தை சுழித்த வான்நிலா அருகில் இருந்த வாஷ்பேசினை நோக்கி வேகமாக ஓடினாள். அங்கு சென்றவள் இரவில் உண்ட அந்த இரண்டு இட்லியையும் வாந்தி எடுத்தாள்.

அவள் வாந்தி எடுப்பதை இகழ்ச்சியாக பார்த்தக் கொண்டிருந்த பாரி தான் திறந்து வைத்திருந்த தட்டில் இருந்த புழுக்களை அப்புறப்படுத்தினான்.

வான்நிலா இரவில் சாப்பிட்ட உணவை வாந்தி எடுத்துவிட்டு சோர்ந்து போய் நடந்து வர, அவளை வலுக்கட்டாயமாக அமர்த்தி அவளது தட்டில் இரு இட்லியை வைத்தான்.

இட்லியையும் அவனையும் மாறி மாறி பார்த்த வான்நிலா தன் தொண்டையை செறுமிக் கொண்டு பேச ஆரம்பித்தாள் “இதையும் எதுக்கு வைக்குற? நீயே திங்க வேண்டியது தான. இரவில் சாப்பிட்ட இரண்டு இட்லியையும் வாந்தி எடுக்க வச்சுட்ட. இப்ப இந்த இட்லியை சாப்பிட கொடுத்துட்டு கொஞ்ச நேரத்தில் அதையும் வாந்தி எடுக்க வைக்காம நீ விடப் போறதில்லை. அப்புறம் எதுக்கு நான் சாப்பிடணும்? “

"பரவாயில்லையே! என்னை பத்தி நீ நல்லா தெரிஞ்சு வச்சிருக்க. நீ கேட்டதுக்கு அடியேன் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் சதிகாரி. " என்று நக்கலாக ஆரம்பித்தவன் மேலே பேசினான்.

"நீ செத்து போய்ட்டேனா, நான் எப்படி தண்டனை கொடுக்குறது. அதான் இப்படி . உன்னை சித்ரவதை செய்றேன். நீ சாகவும் கூடாது, அதே மாதிரி வாழவும் கூடாது. அதான் எனக்கு வேணும் “ என்று பாரி பழிவெறியோடு கூற அதை கேட்ட வான்நிலா திகைத்தாள்.

அதன்பின் கண்கள் கலங்க பாரியிடம் கெஞ்சினாள் " ப்ளீஸ்! என்னை விட்று! எனக்காக என் அக்கா வீட்டில் காத்துட்டு இருப்பா. அவளுக்கு என்னைவிட்டா அன்பு செலுத்த வேற ஆள் கிடையாது. அவகிட்ட நான் போகனும்.. உன்னை பத்தி நான் யார்கிட்டையும் எதுவும் சொல்லமாட்டேன். ப்ளீஸ் என்னை என் வீட்டில் கொண்டு போய் விட்டுடு " என்று அழுகையோடு முடித்தாள் வான்நிலா.

அவன் அதற்கு சற்றும் இளகவில்லை. "இப்படி பேசியே தான் எல்லாத்தையும் மயக்குவ போல. ஆனா என்கிட்ட அது நடக்காது" என்று பாரி திமிறாக பதில் சொன்னான்.

இனி இவனிடம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று தெரிந்த நிலா தன் தட்டில் இருப்பதை அமைதியாக சாப்பிட முயல. அப்போது அவளது கைகளை சாப்பிட விடாமல் இழுத்துக் கொண்டே இருந்தான் பாரி.

அதை கண்டவள் அவனிடம் "என்ன? இன்னைக்கு அவன் கைகளில் கயிற்றை கட்டிக் கிட்டு சாப்பிடாமல் இருந்தானா? " என்று கேட்டாள்.

"ஆமாம். அதனால் அவனுக்கு கையில் எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டிருக்கு தெரியுமா? உனக்கும் அது போல காயத்தை உண்டாக்காம நான் விடப் போறதில்லை" என்று அவன் சொல்லிக் கொண்டே அவளது கைகளில் கட்டியிருந்த கயிற்றை இழுக்க அவனது ஒவ்வொரு இழுப்பிற்கும் தன் கைகள் புண்ணாவதை தன் கண்கள் கலங்க சகித்துக் கொண்டிருந்தாள் வான்நிலா.

வான்நிலா படும் வேதனையை கண்டவன் மனமோ இலகுவதற்கு பதில் அவளது வேதனையை கண்டு ரசித்தது. அவன் தன் வேதனையை பார்த்து ரசிப்பதை கண்ட வான்நிலா தன் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சாப்பிட்டதும் வேலையாளை அழைத்தான் பாரி.

“வேலா! “ என்று அவன் அழைத்ததும் வேகமாக ஓடி வந்தான் வேலையாள்.

“என்னங்கையா? கூப்பிட்டீங்களா?“ என்று அவன் கேட்க பாரி அவனிடம் “வேலா! இவ கையில் இருக்கும் இந்த கயிறு அவளது கையை கிழித்து காயம் ஆக்கணும். அதுவரை இதை நீ அவிழ்க்கக் கூடாது! “ என்று அவனுக்கு கட்டளை பிறப்பித்தவன் வான்நிலா அருகில் வந்தான்.

"அப்புறம் சதிகாரி! நான் இல்லாத நேரம் பார்த்து இங்க இருந்து தப்பிக்க பிளான் எதுவும் பண்ணிடாத. நீ அப்படி தப்பிக்க முயன்றாலும் அது என்கிட்ட வேலைக்கு ஆகாது. பார்த்து பத்திரமா இரு! நான் வரட்டுமா? " என்று சொல்லியபடியே அவளது கன்னத்தை தட்டிவிட்டு அவன் அந்த அறையை விட்டுச் செல்ல அவன் தீண்டிய தன் கன்னங்களை நன்றாக தன் கைகளினாள் பர பரவென தேய்த்தாள்.

வேலனிடம் சில கட்டளைகள் பிறப்பித்துவிட்டு சற்று தூரம் சென்ற பாரி திரும்பி வந்து வான்நிலாவின் கண்கள் முன்னாடியே தன் கைகளில் இருந்த பார்சல் சிலவற்றை பிரித்து அதிலிருந்த புத்தம் புது புடவைகள் சிலவற்றை வெளியே எடுத்தான். அதன்பின் அதை தன் இஷ்டம் போல் கிழித்தான். புடவைகளை கிழித்த பின்னர் அதை வாசலில் இருந்த படியே அவள் மேல் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றான் பாரி. அந்த புடவையை கண்டவளின் முகம் சுணங்கியது.

அவன் சென்றதும் "அம்மா!" என்று அவள் அழுகையோடு அழைக்க, இங்கு நீருபமா தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.

வெளியே வந்த பாரி வேகமாக தன் காரை நோக்கிச் சென்றான்.

கார் அந்த மண் சாலையை விட்டு தார் ரோட்டின் மேலே ஏறியது. தார் சாலையில் அரை மணிநேரம் பயணம் செய்த அந்த கார் ஒரு தோப்பின் உள்ளே சென்று ஒரு வீட்டின் முன் சென்று நின்றது. பாரி காரை நிறுத்தியது தான் தாமதம் பாரியின் அருகில் ஓடி வந்தார் வயதான பெண்மணி ஒருவர். அவரை பார்த்ததும் பாரி பதறினான்.

“என்ன அப்பத்தா வேகமாக ஓடிவரீங்க? அவனுக்கு ஒன்றுமில்லையே?" – பாரி.

"அதொன்றுமில்லை தம்பி! நீயில்லாம சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிச்சுட்டு நிக்குறான் தம்பி. அதான் நீ வந்ததும் இதைசொல்ல வேகமாக ஓடியாந்தேன்“ என்று கூறினார் அப்பத்தா என்று பாரியால் அழைக்கப்பட்ட ராக்காயி.

அவர் சொன்னதை தொடர்ந்து உள்ளே வேகமாக சென்றான் பாரி. அங்கு இருளில் அமர்ந்து கொண்டு சுவற்றில் கிறுக்கியபடி, சட்டைகள் அங்காங்கு கிழ்ந்து தன் கைகளில் கயிற்றை கட்டிக் கொண்டு தன் கைகளை புண்ணாக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான் அவன் மிதுன். பாரியின் தம்பி.

புத்தி பேதலித்து போய் அமர்ந்திருந்த தன் அருமை தம்பியின் நிலையை கண்ட பாரிக்கு கோபம் அதிகரித்தது. அந்த கோபத்தின் ஊடே “ உன் இந்த நிலைக்கு காரணமானவளை நான் சும்மா விட மாட்டேன்டா!“ என்று கோபத்தோடு கத்த, அதை கேட்ட மிதுனிற்கு புரிந்ததோ என்னவோ லேசாக சிரித்தான்.

அவன் சிரித்ததும் அவன் அருகில் வந்த பாரி அவனது கைகளில் இருந்த கயிற்றை கழட்டினான். அவன் கைகளில் இருந்த கயிற்றை கழட்டி அவனது கைகளை பார்க்க, அந்த இடம் காயமாகி இருந்தது. அப்போது ராக்காயி மருந்தோடு வேகமாக அங்கு வர பாரி அவனுக்கு மருந்திட ஆரம்பித்தான்.

அவன் மருந்திடுவதை பார்த்த மிதுன் கை தட்டி சிரித்தான் "ஐ. மருந்து! மருந்து" என்று சிரித்தவன் “அண்ணா! வலிக்குதுனா! பார்த்து!” போடு என்று சொல்லியபடி பாரியின் தோளில் சாய்ந்து கொண்டான் மிதுன். சற்று நேரத்தில் எழுந்த பாரியின் சட்டையை சட்டென்று பிடித்து திடீரென்று கிழித்தபடியே பிதற்றினான் மிதுன்.

“அண்ணா! அண்ணா என்னைவிட்டு அவ போயிட்டாளா ண்ணா? " - மிதுன்.

"இல்லைடா தம்பி" - பாரி.

"அவ திரும்பி வர மாட்டாளா ண்ணா? - மிதுன்

"வருவாடா" - பாரி.

"அவளை சும்மா விடாத ண்ணா. அவளை விடாத!" என்று கூறியபடியே பாரியை பிடித்து உலுக்கியவன் சற்று நேரத்தில் அவனது மடியில் படுத்து உறங்கிவிட்டான்.

மடியில் படுத்திருந்தவனை பார்த்து கண்ணீர் வடித்தான் பாரி. அவன் உறங்கியதும் பாரி அவனை பெட்டில் படுக்க வைத்துவிட்டு வெளியே வர அவனை பார்க்க ஆட்கள் அங்கு கூடியிருந்தனர்

பாரி அங்கு வந்ததும் அனைவரும் எழுந்து நின்று வணங்கினர். அனைவரின் வணக்கத்தை ஏற்ற பாரி “என்ன விசயம்? எதற்கு என்னை பார்க்க வந்திருக்கீங்க? “ என்று அவன் கேட்டதும் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் பேச ஆரம்பித்தார்.

"தம்பி! நம்ம ஊரு குளத்தை தூர் வாரனும் அதுக்கு நன்கொடை எதாவது கொடுத்தீங்கனா நல்லா இருக்கும்" என்று அவர் சொல்லியதும் வேகமாக ராக்காயியை அழைத்தான் பாரி.

“அப்பத்தா! தேங்காய் விளைச்சலில் வந்த காசை எடுத்துட்டு வாங்க!" என்று அவன் சொல்ல ராக்காயி உள்ளே சென்று பல நூறு ரூபாய் கட்டுகளை எடுத்துக் கொண்டு வந்து பஞ்சாயத்து தலைவரிடம் கொடுத்தார்.

அதை வாங்கியவர் பாரியிடம் "தம்பி! உங்க அப்பா போல உங்களுக்கும் நல்ல மனசுய்யா. நீங்களும் உங்க குடும்பமும் நல்லாயிருக்கனும்" என்று அவர் சொல்லிவிட்டுச் செல்ல, அதை கேட்ட பாரியின் முகம் வேதனை அடைந்தது.

பெண்னை கொடுமைபடுத்தும் அவனே? பிறரை ரட்சிக்கவும் செய்கிறான்.

மிருகத்தினூடே மனிதத்துவம்.

பகை வெல்லும்.....
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom