- Messages
- 62
- Reaction score
- 70
- Points
- 33
சேலம் மாநகரத்தின் அழகான மாலை பொழுது அந்த மருத்துவமனை பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்து. மாலை மயங்கி கதிரவன் மறைந்து நிலவின் குளுமையும் லேசான பனிபெய்து கொண்டிருக்க வெண்மை நிறத்தில் இளஞ்சிவப்பும் ஆகாய நீளமும் மஞ்சளும் கலந்து மாடர்ன் ஆர்ட்டில் முகவடிவங்களை வரைந்து கையகல பிரிண்டட் பார்டர் வைத்த கோட்டா காட்டன் ப புடவை அந்த புடவைக்கு மேட்சாய் இளஞ்சிவப்பு நிற ப்ளவுஸ் அணிந்து, தலைக்கு குளித்து ஈரம் காயும் முன்னே இரண்டு புறமும் சிறிது முடிகற்றைகளை மட்டும் எடுத்து ஒரு சின்ன இளஞ்சிவப்பு நிற கிளிப்புக்குள் அடக்கி அதே நிறத்தில் ஒரு ஒற்றை ரோஜாவை சொறுகியிருந்தாள். காதில் ஒரு சின்ன வளையம் நெற்றியில் ஒரு சிறிய மெரூன் பொட்டு அதன் மேல் சன்னமாய் ஒரு சந்தனகீற்றோடு அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தவள் தலைமை மருத்துவரின் அறையை தன் விரல்களால் தட்டிவிட்டு லேசாய் கதவை திறந்து "குட்இவ்னிங் சீஃப்.." என்று ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அவரின் பதிலுக்கு காத்திராமல் கதவை சாற்றிவிட்டு அந்த காரிடாரில் நடந்தாள். அடுத்திருந்த டூட்டி டாக்டகள் அறையை எட்டிபார்த்து யாரும் இல்லையென்று உறுதியோடு அடுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள்.
"குட்இவ்னிங் பத்மாவதிக்கா.." என்று அங்கிருந்த அக்கவுண்ட்ஸ் செக்சன் பத்மாவதிக்கு வணக்கத்தை கூறியவாறே மேசை மீதிருந்த நோட்டில் கையெழுத்து போட்டுவிட்ட நிமிர்ந்தவளை
"என்னடி இன்னைக்கு ரொம்ப அழகா தெரியுற வேலடைன்ஸ் டே யாரும் ப்ரப்போஸ் பண்ணாங்களா.." என்று பத்மாவதி அவளை கேட்க
"இன்னைக்கு வாலடைன்ஸ் டேவா..." என்று கேட்டவாறே திரும்ப அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தவனை அப்பொழுது தான் கண்டாள். கண்கள் பளிச்சென்று மின்ன அவளை ஆர்வமாக அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.
"அது கூட தெரியாம நீயெல்லாம் என்ன வயசு புள்ள ..." என்ற பத்மாவதி "இந்த புடவை உனக்கு அழகாருக்கு டி புதுசா..." என்று கேட்க.
"ஆமாக்கா... அம்மா புதுசா நாலு காட்டன் சாரி எடுத்து குடுத்தாங்ககா..." என்று சிரித்தபடியே கூறிவிட்டு "ஓகே கா பை.."என்று விட்ட அவள் கிளம்ப
"யாரும்மா இந்த பிங்க் ரோஸ் புதுசா இருக்கு.." அவளை அதே ஆர்வத்துடன் குறுகுறுப்பாய் பார்த்தவாறு பத்மாவதியிடம் கேள்வி எழுப்பினான் அந்த புதியவன்.
"அதானே பார்த்தேன். இவ மேகலா.. புதுசெல்லாம் இல்ல நீ வரும் போது அவ டூட்டில இருப்பா.. முதல்ல நீ போய் வெளியே சேர்ல உக்காரு..." என்று அவனை வெளியே விரட்டியபடியே
"இவன் என் ஒரே சீமந்த புத்திரன் ஸ்ரீராம்..." என்று அவனை எனக்கு அறிமுகபடுத்தினார் பத்மாவதி. ஆம் அது நான்தான்.
"ஹாய்..." என்று அவன் கூற
"ஹாய்.." என்று அவனை பார்க்க அவன் பார்வை எனக்குள் ஒரு அதிர்வை உண்டாக்க உதட்டை கடித்தபடி "நேரமாச்சு கா மேரி சிஸ்டர் திட்டுவாங்க நான் போறேன்.." என்றுகூறியபடி உடை மாற்றும் அறையின் சாவியை எடுத்தபடி கிளம்ப
"மணி ஏழு தான் ஆகுது. ஏழறைக்கு தானே அவங்க ஷிப்ட் முடியுற டைம் உனக்கு என்னிக்காவது ஏழறைக்கு முன்னாடி வந்து விட்ருக்கா அந்த மேரி. எப்ப பாரு ஏழே முக்கால் எட்டுன்னு தான் உன்னை விடறது. ஆனா நீ மட்டும் சீக்கிரமா வந்து விடனும்னு சொல்றது. நீ ஏன்டி இப்படி இருக்க.." என்று கடிந்து கொண்டார் பத்மாவதி.
"விடுங்கா..." நான் போறேன் என்று அதே புன்னகையோடு
அவள் வெளியேற அவர் லெட்ஜர்களை அடுக்கி வைக்க ஆரம்பித்தார். அவள் பின்னாலேயே வெளியே வந்தவன் அந்த அறையை தாண்டி சிறிது அவள் நடந்த பின்
"மேகலா ஒரு நிமிஷம்.." என்று அவன் என்னை நிறுத்தினான்.
"இவன் ஏன் நம்மை அழைக்கிறான் என்று அடுத்த அறை வாயிற் கதவை திறந்தபடியே நின்று அவளைத் திரும்பி பார்த்தேன்.
பெரு விரலையும், ஆட்காட்டி விரலையும் குவித்து மற்ற விரல்களை மேல்நோக்கி நீட்டியபடி அவளை பார்த்து சைகை செய்தபடி
"அழகாருக்க..." என்று அழுத்தமாய் கூறி சிரித்தான்.
என் கன்னங்கள் செம்மையை பூசிக்கொள்ள தலையை குனிந்தபடி உள்ளே சென்று கதவை அடைத்தேன். ஒரு நிமிடம் சாத்திய கதவில் சாய்ந்து என்னை ஆசுவாசபடுத்திக்கொண்டு வெட்கம் பிடுங்கி திங்க அங்கிருந்த கண்ணாடியை பார்த்தேன் மாநிறத்திற்கும் சற்று கூடுதலான கறுப்பு தான். இயற்கையாய் வில்லாய் வளைந்த புருவங்களும் அகன்ற விழிகளும் எடுப்பான நாசியுமாய் அழகாய் தான் இருப்பதாய் தோன்றியது. அதுவும் இந்த புடவை இன்னும் என்னை கூடுதல் அழகாய் காட்டுகிறதோ என்று முன்னும் பின்னுமாய் திரும்பி பார்த்து புன்னகையோடு அணிந்திருந்த புடவையை மாற்றி வெண்ணிற சீருடையை அணிந்து வைத்திருந்த பூவை எடுத்து கைப்பையில் பத்திரப்படுத்தி விட்டு கூந்தலை அள்ளி கொண்டையிட்டு அதன் மேல் வெண்ணிற செவிலியர் தொப்பியை சொருகி பின்னை குத்திக்கொண்டு மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு வெளியே வந்தேன். அவன் இருக்கிறானவென பார்க்க அவன் இன்னும் அங்கே வராண்டா நாற்காலியில் தான் அமர்ந்து என் வருககைக்காய் காத்திருந்தான்.
என்னைக் கண்டவுடன் அவன் கண்கள் மேலும் பிரகாசமாகியது. அவனுக்கு நேரே தான் மாடிக்கு செல்லும் படி இருந்தது. முதல் மாடி வார்டில் தான் எனக்கு டூட்டி.
நான் தலையை குனிந்தபடி நடக்க என் கால்கள் என் உள்ளத்தை போலவே தடுமாறியது. புடவை தலைப்பை இறுகபற்றியபடி கால்களை அழுந்த தரையில் பதித்து மாடி படிகளை அடைய
"வெள்ளை ரோஜா இத்தனை அழகுன்னு இன்னைக்கு தான் தெரிஞ்சது என்றான்.
"அச்சோ யாராவது பார்த்துட்டா என்றவாறே சுற்று முற்றும் அதிர்ந்து நோக்கினேன். சட்டென அவனை நிமிர்ந்து பார்க்க சவதானமாய் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து இரு கைகளையும் இரண்டு புறமும் உள்ள நாற்காலியின் மீது நீட்டியவாறு கால்மேல் கால் போட்டு தோரணையாய் என்னைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.
நொடியில் சுதாரித்துக் கொண்டு வேகமாய் படிகளில் தாவி ஏறினேன் மேலே நேர் எதிராய் நர்ஸிங் ஸ்டேஷன் எனப்படும் செவிலியருக்கான மேசையும் நாற்காலியும் இருக்க மேரி சிஸ்டர் தயாராய் இருந்தார். அதன் பின் என் பணி என்னை இழுத்துக் கொள்ள தற்காலிகமாய் அவனை மறந்து போனேன்.
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவன் தினமும் நான் வரும் நேரங்களில் வாசலிலேயே காத்திருக்க அவனை கடந்து செல்வது எனக்கு பெரும் அவஸ்தையாய் இருந்தது.
பச்சை வண்ண புடவையில் வந்தால் "ஓய் மீனாட்சி கிளி எங்கே.." என்றான். நீல வண்ண புடவைக்கு "கடல்கன்னி எனக்காய் தரைக்கு வந்துவிட்டாளென்றான். மஞ்சள் நிற உடைக்கோ "ஆவாரம்பூவு ஆறேழு நாளா.." என்ற பாட்டை சீட்டியடித்தான். அடுத்த நாள் புடவையை நான் வெகுநேரமாய் தேட என்ன இன்னும் தேடிட்டு இருக்க என்று அம்மா என்னை கேட்க அவசரமாய் ஒரு கறுப்பு வண்ணத்தில் அங்காங்கே மஞ்சளும் ஆரஞ்சுமாய் இருந்த புடவையை அணிந்து கொண்டு கிளம்ப அன்று ஓ.. பட்டர்பிளை... பட்டர்பிளை நீ.. விரித்தாய் சிறகை என்று வாய்விட்டு பாட என் பாடுதான் திண்டாட்டமாகியது.
அந்த மருத்துவமனையில் மேரி சிஸ்டரும் இன்னும் இரண்டு பேரையும் தவிர மீதி எல்லோருமே மணமாகதவர்களே. என்னையும் வரவேற்பில் பணிபுரியும் கௌரியையும் தவிர மற்ற அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்களில் யாரையுமே அவன் ஏறெடுத்து பார்க்கவில்லை.
அந்த வாரம் இரவு பணி முடிந்து அன்று பகல்நேர பணி மாறியிருக்க என் பணியை முடித்துவிட்டு உடைமாற்றவென கீழே வந்தவள் கண்கள் தானாய் அவனை தேடியது. அவன் இல்லை. உடைகளை மாற்றிக்கொண்டு என் கைபையோடு வெளியே வர பத்மாவதியும் அவர் பணி முடிந்து கைபையோடு வெளியே வந்தார். கெளம்பியாச்சாக்கா என்றபடி அங்கிருந்த நோட்டில் கையெழுத்திட நான் உள்ளே நுழைய வெறுமனே "ம்.." என்ற ஒற்றை வார்த்தையோடு பத்மாவதி என்னை திரும்பிபார்க்காமல் செல்ல என் மனம் துணுக்குற்றது.
தலைமை மருத்துவரிடம் சொல்லிவிட்டு இருவரும் ஒன்றாய் வெளியே வர அங்கே அவன் காத்திருந்தான். நான் முகத்தை திருப்பிக்கொண்டு "வர்றேன் கா..." என்றபடி கிளம்ப அவன் முகம் வாடியபடி தாயை அழைத்துக்கொண்டு கிளம்புவதை பார்த்தபடியே ஒரு பெருமூச்சோடு என் வழியில் சென்றேன்.
மேலும் சில நாட்கள் பத்மாவதி என்னிடம் முகம் கொடுத்து பேசாமல் போக ஒரு முடிவோடு அன்று கிளம்பும் போது அவரை நிறுத்தினேன்.
"க்கா ஒரு நிமிஷம் இப்ப நான் என்ன செஞ்சேன்னு என்கிட்ட பேசாம மூஞ்சை திருப்பிட்டு போறீங்க..." என்று கேட்க
"நீங்க ரெண்டு பேரும் நினைக்கிற எதுவும் நடக்காது. நாங்க பிராமின். எங்க வீட்ல இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் ஒத்துவராது.." என்று கூற
சட்டென சிரித்து விட்டேன் "இதெல்லாம் தெரியாத மக்குன்னு என்னை நினைச்சீங்களாக்கா. உங்க பையன் என்னை சைட் அடிச்சான். நானும் பார்த்தேன். அது அவ்ளோதான். இந்த வயசுல இதெல்லாம் சகஜம் தானே. ஏன் நாம ரெண்டு பேரும் சேர்ந்தே டூட்டி டாக்டர்ஸை சைட் அடிப்போமே மறந்துட்டீங்களா.." என்று கேட்க
"அடியே.."என்றவர் சில வினாடி அமைதிக்கு பிறகு ஸ்ரீராம் உன்னை விரும்பறான்னு நினைக்கிறேன்..." என்றார்.
"அடடா பையனை பெத்த அம்மா வாய்ல இருந்து இப்படி ஒரு வார்த்தை கேட்க எவ்ளோ குடுத்து வெச்சிருக்கனும்.."
"போடி.." என்றபடி செல்லமாய் என் கன்னத்தில் ஒரு அடி வைத்தவர் "உன்னை மாதிரி ஒருத்தியை மாட்டுபொண்ணாக்கிக்க நேக்கு அதிர்ஷமில்லேடி.." என்றார். இதுதான் பத்மாவதி அவள் இங்கு வந்த நாட்களாய் அத்தனை பிரியத்தோடு பழகுபவர் ஆயிற்றே.
"ஓய் மாமி... உங்களை மாமியாராக்கிக்க எனக்கும் அதிர்ஷ்டம் வேணும்ல... என்ன செய்யறது. இதெல்லாம் நடக்காதுன்னு கூடவா தெரியாது. இதெல்லாம்"பாசிங் க்ளவுட்ஸ் மாமி.." என்றேன்.
"என்னடி இதையும் சொல்லிட்டு மாமின்னு கூப்டு வயித்துல புளியை கரைக்கிற.." என்றார் பத்மாவதி.
"ஏன் உங்க மாட்டு பொண்ணா வந்தா தான் அப்படி கூப்டனுமோ இல்லேன்னா கூப்டப்டாதோ.. அதெல்லாம் முடியாது இனி மாமின்னு தான் கூப்டுவேன்..' என அவர் இடையை இறுக்கமாய் கட்டிக்கொள்ள
என்னை இழுத்து உச்சிமோந்து முத்தமிட்டவர் "இந்த ஜாதி மயிரெல்லாம் மட்டும் இல்லாம இருந்திருந்தா.." என்று நிறுத்த
"ஓய் அய்யர் மாமி மாதிரி பேசாம என்ன மயிறு கியறுன்னு அதெல்லாம் ஒன்னுமில்ல.. உங்க வீட்டுக்கு வந்து என்ன செய்யறது எனக்கெல்லாம் வாரத்துல ஏழு நாளைக்கும் கருவாடு கறின்னு வேணும். உங்கபுள்ளைக்காக அதெல்லாம் என்னால விடமுடியாது... வாங்க போலாம்.. உங்க சீமந்த புத்திரன் வெளியே நிக்குது பாருங்க.." என்று அவளை வாசலை கண்களால் காட்ட இவர்களை நோக்கியபடி ஆவலோடு வெளியே காத்திருந்தான் ஸ்ரீராம்.
உன்ன என்று அவர் செல்லமாய் மண்டையில் கொட்ட வர அவரிடம் இருந்து விலகி ஓடியபடியே
"சரி சரி வாங்க இதுக்கு இன்னைக்கே ஒரு முடிவு கட்டலாம்.." என்றபடி இருவரும் தலைமை மருத்துவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி வெளியே வந்தோம்.
₹சரி மாமி பத்திரிகை வந்தது கொண்டு வந்து கொடுக்கிறேன். மறக்காம ஸ்ரீராமையும் கூட்டிட்டு வந்துடுங்க..." என்றவள் "வந்துடுங்க ஸ்ரீராம்.." என்று கூற அவன் திருதிருவென விழித்தான்.
"ஒ சாரி ஸ்ரீராம். வர்ற வைகாசில எனக்கு கல்யாணம் அவசியம் வந்துடுங்க.." என்று கூற அவன் அதிர்வது அப்பட்டமாய் தெரிந்தது அவனோடு சேர்ந்து பத்மாவதியும் அதிர
"சரி மாமி நான் வர்றேன்.." என்றபடி கிளம்பினேன். அதன் பிறகு நான் ஸ்ரீராமை பார்க்கவேயில்லை. பத்மாவதி மாமிக்கு என்னை பார்ப்பதே சங்கடமாய் தெரிய அடுத்த இரண்டு மாதங்களில் வேறு மருத்துவமனைக்கு வேலையை மாற்றிக்கொண்டு வந்துவிட்டேன்.
ஆனாலும் அவன் கூறிய சொற்களும் அவன் பெயரும் நெஞ்சில் பசுமையாய் நிலைத்துவிட்டது. அவனை முதன்முதலாய் பார்த்த தினம் இன்று.
இந்த வெள்ளை ரோஜாவின் நினைவு ஸ்ரீராமுக்கும் இன்று வந்திருக்குமா....?