Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Nee en devadhai

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18

:)Nyd-65:)

காலிங் பெல் சத்தம் கேட்டதும் மனம் பரபரத்தது.
ஓடினாள், அங்கு தந்தை நின்று கொண்டிருந்தார்.

தன் ஆவலை மறைத்து
வாங்கப்பா .,

என்னமா என் வீட்டுல எனக்கு வரவேற்பு பலம்மா இருக்கு ?

ஒண்ணுமில்லையே சும்மா தான். (அசடு வழியுது மாஸ்க்கை போட்டு மூஞ்சிய கவர் பண்ணு )

ரொம்ப டயர்டா இருக்கீங்க ?

ஆமாம் கொஞ்சம் நிறையா அவன்கிட்ட பேசிட்டேன் போல இருக்கு. அதான்.

நீ போய் தூங்கு, அம்மா என்ன பார்த்துக்குவா .

அவர்களின் தனிமையை கெடுக்க விரும்பாமல், சரிப்பா என்று சென்று விட்டாள் .

பால்கனியில் அமர்ந்து மீண்டும் கணவனுக்காக காத்திருந்தாள் . அவன் வரவில்லை என்றால் என்கிற நினைப்பு கூட அவளுக்கு மறந்துவிட்டது. தனக்காகவே அவன் வருவான் என்று எதிர்பார்த்திருந்தாள் .

இவளை போலவே இன்னொரு அறையில் கங்கா சிவாவுக்காக காத்திருந்தாள். அன்றைக்கு அவன் கல்லூரிக்கு பணம் தந்ததில் இருந்து இருந்து அவன் இவளிடம் இருந்த உரிமையை தெளிவாக காட்ட தொடங்கி இருந்தான்.

அப்படிதான் ஒரு நாள் இவள் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, எதேச்சையாக அங்கு வந்தவன் அவள் தட்டில் இன்னும் இரண்டு சப்பாத்தியை வைத்துவிட்டு போனான்.

அடுத்தநாள் இவள் துணி உலர்த்திக் கொண்டிருந்தபோது, அவனும் வந்து உதவி செய்தான்.

சார் சார்., இதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.

ஏன் நான் செய்ய கூடாதா ?

அதான் நான் இருக்கேனே சார்.,

மறு பேச்சு அவன் பேச வில்லை .

அவன் கைகளில் இருந்து பிடுங்கி கொண்டாள் .

நீங்க ஊருக்கே கலெக்டர். இதெல்லாம் செய்யலாமா ?

ஊருக்கே ராஜானாலும் ., அம்மாவுக்கு பிள்ளை என்றபடி, அன்னையின் துணிகளை உலர்த்த ஆரம்பித்தான்.

இதை எல்லாம் அவன் சாதாரணமாகத்தான் செய்தானா? தெரியவில்லை. அவனை அவன் அன்னை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தாள் .

ஒருவேளை கங்கா அவனை விரும்பினாலும், இல்லை அவன் அவளை விரும்பினாலும் அவர்களுக்கு திருமண செய்ய மனதளவில் சிவகாமி தயாராகவில்லை . அதற்கு பல காரணங்கள். ஒரு அன்னையாக தன் மகனுக்கு பெரிய இடத்தில் சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைக்க ஆசை . வேறொன்று அவர்கள் இருவருக்குமான வயது.

அவள் மனதில் இந்த சிந்தனை ஓடியபடியே இருந்தது. அதற்கேற்றாப்போல கார் ஹாரன் சத்தம் கேட்டதும் அறையில் இருந்து கங்கா ஓடி வந்தாள் . சிவகாமியின் முறைப்பில் அவள் அறைக்குள் பதுங்கி கொண்டாள் . அதே சமயம், சத்யாவும் ஓடி ஓடி வந்தாள் . அவளை அனைவருமே அதிசயமாக பார்த்தனர். ஏனெனில் அவள் எப்போது மருத்துவ படிப்புக்கு சென்றாளோ அப்போதே அவளிடம் இருந்த சின்ன பெண் தோற்றம் மறைந்து விட்டது. ஆச்சியிடம் இருக்கும்போது மட்டுமே அவள் நிறைய செல்லம் கொஞ்சினாள், சிறு பெண்ணாக மாறி இருந்தாள். ஆனால் இப்போது, இது வேறு.,

சிவகாமியின் கண்கள் மின்னின. தன் சந்தேகத்தை கணவனிடம் பகிர்ந்து கொண்டாள் .

என்னங்க நம்ம பொண்ணுகிட்ட உங்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரியுதா ?

அவகிட்ட மட்டும் இல்ல, உன்கிட்டையும் ஏதோ வித்தியாசம் தெரியுதே?

இன்னிக்கு ஆச்சி போன் பண்ணாங்க.

ம்ம்.,

என்ன ரொம்ப திட்டினாங்க . வேண்டுமென்ற மூஞ்சியை உம்மென்று வைத்துக் கொண்டார்.

பரவாலையே நாந்தான் பயப்புடறேன். அவங்க தைரியமா வஞ்சாங்களா?

உர்ரென்று முறைத்தார்.

சரி சரி என்ன சூலத்தால குத்திப்புடாத பயந்தாற்போல நடித்தார்.

ஒருவேளை அவங்க இவளை பாக்க வர்றாங்களோ , இல்ல மாப்பிள்ள வராரோ? என்னவா இருக்கும்? புருவ முடிச்சுடன் யோசிக்க ஆரம்பித்தவளை தாடையை பிடித்து புருவ முடிச்சை நீவி விட்டார். இதுக்கு இவளோ சிரமப்பட வேண்டியதே இல்ல. அவளையே கேட்டுடுவோம்.

கணவனின் சிறு கவனிப்பில் அவருக்கு மனம் குளிர்ந்தது. அவரின் இந்த மாதிரி சிறு சிறு அக்கறையும் கவனிப்புமே அவர்களின் இத்தனை வருட காதலுக்கு அடித்தளம்.

அவங்க ஏதோ சொல்லிருக்காங்க. அவங்ககிட்ட அவ பேசினதிலேர்ந்தே ஒரு மார்கமாதான் இருக்கா.

அம்மாடி சத்யா இங்க வா,

தனதருகில் அமர்த்தி தலையை தடவியபடியே,

என்னம்மா பரபரப்பா இருக்கே ?

ஒண்ணுமில்லையே நான் சாதாரணமா தான் இருக்கேன்.

அப்புறம் எம்மா இன்னும் தூங்காம பூனை குட்டி போட்ட மாதிரி சுத்திகிட்டு இருக்க ?

அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா . சும்மாதான்.

சரி, நீ போய் தூங்கு. வாசகதவை நான் மூடிக்கறேன்.

இல்லப்பா எனக்கு தூக்கம் வரல. நான் மூடிக்கறேன். நீங்க ரொம்ப டயர்டா இருப்பீங்க .

யாராவது வர்ராங்களாமா …

இல்லப்பா இல்ல.

சரிம்மா …
சிவா தூங்கிட்டானாமே?
அப்பவே ரொம்ப டயர்டா இருக்குனு போய் தூக்கிட்டான்ப்பா.
கௌசிக்?
அவனும்தான்.
சரிம்மா.
நானும் போய் படுக்கறேன். நீயும் கதவை பூட்டிட்டு சீக்கிரம் படு.
சிமி , நீயும் ஒருதடவ செக் பண்ணிட்டு வாம்மா .
சரிங்க.
குட் நைட் மா ,
குட் நைட் பா .

தன் கணவனின் வருகைக்கைகாக காத்திருக்கும்

தேவதை மீண்டும் வருவாள்....
 
R.Nivetha

Member
Messages
47
Reaction score
35

Sis epi super ❤️ but kutty epi aah iruke 🙄 paavam Namma devathai evlo naal ipdiye wait pannuvaga😉 seekarama Sethu vechuruga sis💗 waiting for your next ud sis.come soon 😘sis
 
Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18

NYD-66

அவளை ஆற தழுவ வேண்டும் போல இருந்தாலும் மனதைக் கட்டு படுத்திக் கொண்டான். அதுவும், சில நொடிகள்தான். அதற்குள் அவளே ஏதோ நினைவு வந்தவளாக திடீரென எழுந்து தலையை கொண்டையிட்டவள் செருப்பை மாட்டிக் கொண்டே அப்பா, அம்மாவை பார்த்துட்டு வந்துடறேன் என்று கிளம்பிச் சென்றாள்.

சென்றவள் அடுத்த ஒரே நிமிடத்தில் திரும்பினாள்.

என்ன திடீர்னு?

இல்ல வயசானவங்க. அண்ணனும் பொதுவா இங்க இருக்கறது இல்ல. அதான் ஒருதடவையாவது நைட்டுல போய் பார்த்துடுவேன். நீங்க தூங்கலையா ?

இல்ல புது இடம் அதான் தூக்கம் வரல.

ஓ ! மனசுல கவலை இருந்தாலும் தூக்கம் வராது.

அதுவும் ஒரு காரணம்தான்.

நீங்க தொழிலை பத்தி எந்த கவலையும் பட வேண்டாம். ஏதாவது ஒரு வழி கிடைக்கும்.

எனக்கெல்லாம் கவலை படாதன்னு சொல்ல ஒரு ஆள் கூட இருந்ததில்லை. என்ன பத்தின்னா எனக்கு எந்த கவலையும் பட மாட்டேன். என்ன மாதிரியே இன்னும் நிறைய பேர் இருக்காங்களே. அவங்களுக்கு பொண்டாட்டி குடும்பம் இருக்கே. அதுல சரவணனும் ஒருத்தன். ஏற்கனவே அவனுக்கு பல பிரச்சனை . அதுல இது வேற .

சரவணனுக்கு என்ன ப்ராப்லம் ?

அவன் வீட்டுல சண்டையை போட்டு செல்வியை கல்யாணம் கட்டினான். செல்விக்குனு யாரும் இல்ல . அனாதை . அவளுக்கு யாரும் இல்ல, ஏழை வீட்டு பொண்ணு. சீரு செனத்தி வரல, புள்ள இல்ல, மலடின்னு அவளை சொல்லாத வார்த்தை இல்ல. அதான் அவங்க சங்காத்தமே வேண்டான்னு இவன் தனியா வந்து இருக்கான். மத்தவங்க சொன்னது பத்தாதுன்னு, இப்போ செல்வியே நீ வேற எவளையாவது கட்டிக்கோ, இல்ல வச்சுக்கோ, ஒனக்குனு வாரிசு வேணும் அது இதுன்னு அவங்களுக்குள்ள ஒரே தகராறு. இப்டியே எல்லாரும் என்ன சொல்லிட்டு இருந்தீங்கன்னா நான் விஷத்தை குடிச்சுடுவேன்னு அவன் ஒரே தகராறு. இருக்கறது பத்தாதுன்னு இப்போ இந்த பிரச்னை வேற. பொண்டாட்டிக்கிட்டேர்ந்து தப்பிக்க சாராயம் வேற குடிக்கறான்.

வாட் ?

என்னத்த சொல்ல?

எனக்கு ரொம்ப ஷாக்கா இருக்கு. நான் வேணுன்னா அவங்ககிட்ட பேசி பார்க்கவா ?

பேசினா ஏதாவது பிரயோஜனம் இருக்குமான்னு தெரியல.

சரி நீங்க எதைப்பத்தியும் யோசிக்காம தூங்குங்க. இந்த பேச்சின் நடுவே மெதுவாக அவன் தலை கோதை ஆரம்பித்திருந்தாள். அதில் அவனுக்கு கண்ணை சொருகியது. இவளும் மெதுவாக தூங்க ஆரம்பித்தாள்.

மறுநாள் காலை ............

சொன்னபடியே தியாகுவும் முத்துவும் ஒவ்வொரு கடைக்கும் சென்றனர். அதில் முத்து நிறைய விஷயம் கற்றுக் கொண்டான். அது அவனுக்கு வெளி உலகத்தை பற்றி தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக பயன் படுத்திக்க கொண்டான். அவனது திறமையை பார்த்த தியாகுவுக்கும் மகள் ஏன் இவன் பின்னாடியே சுற்றுகிறாள் என்பதும் புரிந்தது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே அவன் மீண்டும் மகளுடன் சண்டையிட போகிறான் என்பது தெரியாமலே அவனுடன் மகிழ்வாக இருந்தார். எது எப்படியோ இப்போதைக்கு அவர் மகிழ்வுடன் இருக்கட்டுமே !

அவர்கள் மட்டும் இல்லை, இன்னும் இருவரும் மகிழ்வுடன் இருந்தனர்.

ஆம்! அது கங்காவும் சிவாவும்தான்.

ஆனால் அதுவும் எத்தனை நாளைக்குத்தான் இருக்க போகிறது? காலம்தான் பதில் சொல்லும்.

வழக்கம்போல அன்று கங்கா காலையில் எழுந்து படித்துவிட்டு, வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு, கல்லூரிக்கு புறப்பட்டாள் . அவளுக்கு பரீட்ச்சை சமயம் என்பதால் சத்யாவே பெரும்பாலும் வேலைகளை முடித்து விடுகிறாள். அவளை பார்த்தால் எப்போதுமே கங்காவுக்கு ஆச்சர்யம்தான். கல்லூரி சேர்வதற்கு முன் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இப்போது அவளுக்கு வெளி உலகம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஏன் தன் கல்லூரியில் படிப்பவர்கள் கூட துடைப்பத்தை தொடக்கூடாது என்று நினைக்கிற காலத்தில் மருத்துவம் படித்து, நல்ல வேலையில் இருக்கும்போது கூட, இது என் வீடு நான் அன்னைக்கு உதவுகிறேன் என்றிருக்கும் அவள் எப்போதுமே ஆச்சர்யம்தான், அதிலும் அவளின் வேகம்! அதுவும் ஆச்சர்யம்தான். அதற்க்கு காரணம் சிறு வயது முதலே அவள் வீட்டு வேலைகளை பழகி கொண்டதுதான்.

எப்போதுமே விடியலிலே எழுந்துவிடுபவள், இன்று கணவன் வந்திருப்பதால் சட்டென்று எழுந்து ஓடி வராமல் போயிற்று. இருப்பினும் வந்தவுடனேயே மட மடவென்று அனைவருக்கும் காபி போட்டு மிச்சம் இருந்த பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு தன் கணவனுக்கு காபி தந்தாள்.

காலையில இப்படி சுட சுட பில்டர் காபி குடிக்கறதே சுகம்தான். அதுவும் இந்த மாதிரி புதுசா பூத்துருக்குற பூ காபி குடுத்தா(மனதின் வார்த்தைகள்)கண்களால் மனைவியை விழுங்கியபடியே காபியை குடித்தான். அவனின் பார்வையே அவளை ஏதோ செய்தது. அதை அவள் ரசித்தாள்.

முத்துவின் ஜீப்பிலேயே முத்துவும் தியாகுவும் கடைகளுக்கு கிளம்பினர்.

கிளம்பும்போது மாடியில் இருந்து இறங்கி வரும் கணவனை பார்த்தாள் சத்யா. நேற்றைய இரவு அவன் இறங்கி வரும்போது ஹீரோவாக தெரிந்தவளுக்கு இன்று அவன் நடப்பதில் ஏதோ வேறுபாடு தெரிந்தது. அதுவும் சாதாரணமாக பார்க்கும்போது தெரியவில்லை. நன்றாய் உன்னிப்பாக பார்க்கும்போது தெரிந்தது. இதை பற்றி அவனிடம் பேச வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள் .அவனின் காலைப் பற்றி மட்டுமே யோசித்தவள் அவனின் முன் கோபத்தைப்பற்றி யோசிக்கவில்லை. அவர்கள் சென்ற அடுத்த 1/2 மணி நேரத்தில் கங்காவும் அவசரமாக இறங்கி ஓடி வந்தாள் .

இந்தா கங்கா டிபன் சாப்பிடு.

இல்ல சத்யா தப்பா எடுத்துக்காத. ரொம்ப லேட்டாயிடுச்சு, என்று அவசரமாக ஓடியவள் , மீண்டும் ஓடி வந்து அம்மாகிட்டயும் சொல்லிடு, என்று ஓடினாள். கையில் அவளது ப்ராஜெக்ட் சாமான்களையும் எடுத்துக் கொண்டு ஓடியவளை பார்க்க இவளுக்கு பாவமாக இருந்தது. பெருமூச்சு விட்டு திரும்பினாள். சிவாவும் தயாராகி வெளியில் வந்தான்.

என்னண்ணா இன்னிக்கு எங்க இவ்ளோ சீக்கிரமா ரெடியாயிட்ட?

என்னோட பிரண்டு அருண பாத்துட்டு வந்துடலான்னு. இப்பவே கிளம்பினா, ட்ராபிக் அவாய்ட் பண்ணல்லான்னுதான்.

ஒகே! வாண்ணா டிபன் சாப்பிடு.

இதோ. நீயும் வா. அம்மா அப்பா எங்க?

அம்மா குளிக்கறாங்க . அப்பாவும் அவரும் வெளில போயிருக்காங்க.

அவருன்னா ?

அவருதான் முத்து வந்துருக்காங்க.

ஓ! எப்போ ?

நைட் வந்தாங்க. ரொம்ப லேட்டாயிடுச்சு உன்ன தொந்தரவு பண்ண வேண்டாண்ணுதான் சொல்லல.

அவங்க எங்க போயிருக்காங்க?

அனைத்து விஷயங்களையும் சொன்னாள் . அப்போது சிவகாமியும் வந்தார்.

சத்யா கௌசிக் எங்கம்மா ?

அவன் இன்னும் எழுந்தே வரலாம்மா .

போ போய் எழுப்பு. ப்ரஷ் பண்ணிட்டு வர சொல்லு.

நாங்கன்னா மட்டும் குளிச்சுட்டுதான் சாப்பிடணும். உங்க செல்ல பிள்ளைக்கு மட்டும் சலுகையா? அவனை குளிச்சுட்டுதான் வர சொல்ல போறேன்.

போடி போய் அவனை வர சொல்லு. அவனும் சிவாவோட டைம் ஸ்பென்ட் பண்ணுவான்.

ம்ம்., உன்னோட கை பிள்ளையை எடுத்து கொஞ்சனும். அதுக்கு என்ன வெரட்டரியா ? சிணுங்கியபடியே சென்றாள் .

ஏய் சீக்கிரம் வந்துதுடாத. என் குழந்தைக்கு நான் புட்டி பால் ஊட்டணும். அவளின் இந்த உரிமையே மகனின் வாழ்க்கையை பாழாக்கும்போது அவள் என்ன செய்ய போகிறாள்? சிவா அதை எப்படி எதிர்கொள்வான்?

படியில் ஏறி கொண்டிருந்தவள் நின்று முறைத்து விட்டே சென்றாள் . அவள் கௌசிக்கை எழுப்பி விட்டு, அவனது படுக்கையை சரி செய்தாள், குளிர் சாதனத்தை அனைத்து தரை சீலைகளை விளக்கினாள். மேசையை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது அவன் வந்தான்.

தேங்க்ஸ் சத்யா.

எதுக்குடா ?

இதுக்கெல்லாம்தான்.

சீ போ இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லிட்டு?

ஏ!சத்யா என்ன இன்னிக்கு உன் மூஞ்சில ஏதோ மாற்றம் தெரியுதே !

அதெல்லாம் ஒன்னும் இல்லையே ?

ம்ம் அப்படியா சரி நம்பிட்டேன்.

தேங்க்ஸ். எதுக்கு?

என்னோட பொய்ய நம்பினதுக்கு .

ஒகே தோளை குலுக்கினான்.

இருவருமே கீழே இறங்கி வரும்போது ..

அங்கே …

சிவகாமி உண்மையாகவே தன் மகனுக்கு இட்லியை ஊட்டிக் கொண்டிருந்தாள்.

அதை பார்த்த சத்யாவுக்கு கடுப்பேறியது.

அம்மா கை பிள்ளை பாவம் ஏன் சேர்ல உக்காதி வச்சுருக்க? மடியில வச்சுக்கோ, காக்கா குருவி காட்டி சோறு ஊட்டு. கௌசிக் சிரிப்பை அடக்கிக் கொண்டான். முடியாமல் வாய் விட்டே சிரித்து விட்டான்.

சீ! ப! உனக்கு பொறாமை.

சொல்லி கொண்டே கை கழுவி விட்டு வந்து, தன் தங்கைக்கு இட்லியும் சட்டினியும் போட்டு சுட சுட சாம்பாரையும் போட்டு ஊட்டி விட்டான்.

இதோ பார்ரா கை பிள்ளை, என்று சிவகாமி சத்யாவை கிண்டல் செய்தாள் . இதை எல்லாம் ரசிப்புடன் கௌசிக் பார்த்து கொண்டிருந்தான்.

அண்ணா நீ போ உனக்கு லேட்டாயிடும். நான் சாப்டுக்கறேன்.

இல்லனாலும் நான் இனிமே ஊட்ட முடியாது.

ஏன்? வாயில் வைத்தபடியே கேட்டாள் .

அதுக்கு உரிமை இருக்கறவர்தான் வர்றாரே !

முத்துவும் அப்பாவும் வருவதை பார்த்தவள் தானாகவே எழுந்து கொண்டாள் .

நீ சாப்பிடுமா . ஏன் எழுந்துக்கற? நீங்கல்லாம் முடிங்க.நானும் மாப்பிளையும் குளிச்சுட்டு வந்து சாப்பிட்டுக்கிட்டே பேசறோம்.

இருவர் முகத்திலும் ஒரு வித திருப்தி இருந்தது.

அப்பா அருண் வீட்டுக்கு போய்ட்டு வந்துடறேன். அம்மா பை , என்று அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பியவன், இன்முகமாக சிரித்துக் கொண்டே முத்துவை எதிர்கொண்டான்.

வாங்க முத்து . சாரி நைட்டு நீங்க வந்தது தெரியாது.

பரவால்லங்க .

இருவரும் மரியாதைக்காக இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு அவரவர் வேலைகளை பார்க்க சென்றனர்.

சிவா போகும் வழியில் கங்கா நடு வழியில் நிற்பதை பார்த்தான் ,

என்ன கங்கா இங்க நிக்கற ?

இல்ல , முதல்ல வண்டில ஏறு...

நாமும் அவர்களுடன் பயணப்படலாம்.

அடுத்த சில நாட்களில் ,

மீண்டும் வருவாள் தேவதை.......
 
ud super sis.story nalla interestinng aah poguthu sis......but ud varathaan romba late aaguthuu.konjam seekarama vaga sis.oru valiya rendu perum meet pannitaaga :love: next enna?
 
Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-67

என்ன காலேஜுக்கு லேட்டுன்னு அப்பவே ஓடி வந்த? இப்ப இங்க நிக்கற?

இல்ல முதல்ல ஒரு பஸ் வந்துச்சு, ரொம்ப கூட்டம்,ஏறவே முடியல அடுத்து வந்த பஸ் பிரேக்டௌன் ஆயிடுச்சு. அழாத குறையாக சொன்னாள் .
சரி ரொம்ப டென்ஷனா இருக்க. தண்ணி குடி என்று காரிலிருந்து வாட்டர் பாட்டிலை தந்தான். குடித்து முடித்தவுடன், ரொம்ப வியர்வை கொட்டுதே ? என்று டிஷ்யூவினால் அவள் முகத்தை லேசாக துடைத்தான், மறு கையால் வண்டியை ஓட்டியபடியே .
அதை வாங்கி அவள் துடைத்துக் கொண்டாள் . விடியலில் எழுந்து படித்தது,ஓடி ஓடி வந்தது, பஸ்ஸில் நின்று கொண்டே இருந்தது, காலை நேரத்து டென்ஷன் எல்லாம் சேர்ந்து, உட்கார இடமும் ஏசியும் போட்டால் , போட்டால் ?????????

யாருக்குத்தான் தூக்கம் வராது? (அதெல்லாம் சொர்கம்ப்பா)அவள் அப்படியே கண்ணயர்ந்தாள். ஏதோ கேட்க திரும்பியவனுக்கு அவளை பார்த்து பாவமாக இருந்தது. இடது கையால் தலையை தடவி விட்டு வண்டியில் தனது முழு கவனத்தையும் திருப்பினான். என்னதான் பாவம் பார்த்தாலும் அடுத்த 15வது நிமிடம் கல்லூரி வந்து விட்டது.
கல்லூரி அருகில் சென்றதுமே அவளுக்கு தானாக முழிப்பு வந்து விட்டது. ஆச்சர்யம் என்னவோ கலெக்டருக்குத்தான். அதெப்டி காலேஜுக்கிட்ட வந்த ஒடனே எழுந்த ?
அதெல்லாம் அப்படிதான் சாரே ! அதெல்லாம் உங்களுக்கு புரியாது.
ஏன் புரியாது?
கல்லூரி வளைவுக்குள் வண்டியை ஏற்றினான்.
இங்கையே நிறுத்துங்க. என்னோட பிரண்ட்ஸ் அங்க நிக்கறாங்க.
வண்டியை நிறுத்தினான். இவள் தனது இத்யாதி இத்யாதி எடுக்க முடியாமல் தினறவும் இறங்கி வந்து அவனே எடுத்து தந்தான்.
அவனை பார்த்த மற்றவர்கள் அதிசயித்து நின்றார்கள்.
ஆம் ! அவனின் தோற்றம் அப்படி. என்னை பார் என்று வசீகரிக்கும் முகம், பார்வை கூர்மையா ? அல்லது நாசி கூர்மையா? அலை அலையான கேசம் மிக அழகாக வெட்டப் பட்டிருந்தது. நெடு நெடுவென்ற தேகம். அதிக கருப்பும் இல்லாமல் வெளுப்பும் இல்லாமல் இருக்கும் மாநிறம். அவன் தோற்றம் அதற்கேற்ற கம்பீரம், தான் ஒரு ஆட்சியர் என்ற பெருமை, திமிர், ஆண் மகன் என்னைப் போலவே இருக்கவேண்டும் என்று அவன் உடல் மொழி பறை சாற்றியது. அவன் நெற்றியில் இருந்த சிறு விபூதிக்கீற்று கூட அவனின் கம்பீரத்தைச் சொன்னது. அவனின் தோற்றமே அவனுக்கு மற்றவரிடம் நன் மதிப்பைத் தந்தது.
என்ன கிளாஸ் ரூம்முக்கு கொண்டு வந்து தரவா? அவன் சாதாரணமாக கேட்டாலும்,
அவர்கள் குரலில் சிறு பயம் வெளிப் பட்டது.
இல்ல சார் அதான் நாங்க இருக்கோமே நாங்க பாத்துக்குவோம் சார்.
ஒகே! என்று காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
அவன் சென்றதுதான் தாமதம் , தோழிகள் அவளை பிடுங்க ஆரம்பித்து விட்டனர்.
ஏ யாரடி இந்த ஹாண்ட்ஸம்!
இவருதான் கலெக்டர் சார்.
ஏனோ முகம் செம்மை பூசிக் கொண்டது.
ஓ ! என்றாள் ஒருத்தி .
இவருதான் நம்ம கலெக்டர் சாரா !
நம்மல்லாம் இல்ல, பொன்னேரிக்கு கலெக்டர், என்று திருத்தினாள் .
பொன்னேரிக்கு கலெக்டர், ஒனக்கு யாரு மேடம்?
எனக்கு ஒன்னும் இல்ல. வாய்தான் பொய் சொன்னது. முகமோ வேறு ஏதோ சொன்னது.
அதனாலதான் அவரு பேர சொன்னதும் மூஞ்சில லைட் அடிக்குதா ?
ப்ச் அதெல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா ஏதாவது சொல்லாதீங்கடி ,
அவளின் வெட்கத்தை பார்த்தவர்கள்,
ஓ ஹோ! என்று சத்தமாகவே சொல்லவும், காலேஜ் மணி அடிக்கவும் சரியாக இருந்தது. நால்வரும் அவர்களின் அறைக்கு ஓடினர்.
அதற்கு பின் எதை பற்றியும் நினைக்க முடியாமல் மாற்றி மாற்றி வகுப்புகளும், பரீட்சைக்கு தேவையானதை பற்றி ஆசிரியர்கள் சொல்வதும், என்று மணிநேரம் கூட நொடிகளாக பறந்தது.
மதிய இடைவேளையில், மூவரும் சாப்பிட அமர்ந்தனர்.
கங்கா தனது டப்பாவில் இருந்த இட்லியை எடுத்தாள் ,
வாவ் என்ன சாம்பர்டி? இவ்ளோ ஸ்மெல் வருது? என்று அவளை கேட்காமலே மற்ற மூவரும் சிறிது எடுத்து சுவைத்தனர்.
ஒருத்தி, கையை நக்கி கொண்டாள் , இன்னொருத்தி சப்பு கொட்டினாள் , மற்றவளோ சான்ஸ் இல்ல . எப்படி டீ இப்டி சமைக்கற ? என்றாள் .
இது நான் செய்யல. இன்னிக்கு சத்யா தான் செய்ஞ்சா. நான் சும்மா ஹெல்ப்புதான் .
ஏய் செம்மடி !
ஆமா . நான் காலையில எழுந்து படிச்சுட்டு கிளம்பவே டைம் ஆயிடுச்சு. பாவம் அவங்கதான் வந்து அவசர அவசரமா எல்லாம் பண்ணாங்க. அப்படியும் கிளம்பும்போது நான் சாப்பிடல்லைனு அவசரமா டப்பால போட்டு குடுத்தாங்க. சத்யா மாதிரி ஒருத்தங்களை பாக்கறது ரொம்ப அதிசயம்.
சிவா சார் மாதிரியும்தான், ஒருத்தி கள்ள சிரிப்புடன் சொன்னாள் .
ம்ம் ஆமா ., ஏதோ யோசனையுடன் ஆமோதித்தாள் கங்கா.
என்னடி என்னடி யோசனை ? அவள் மனதில் இப்படிப்பட்ட சத்யாவின் வாழக்கை சீக்கிரம் சரியாக வேண்டுமே என்றிருந்தது.
யாரு இந்த காலத்துல கொண்டு வந்து வீட்டுல தங்க வச்சு படிக்க வச்சு, துணி எடுத்து குடுத்து? நான் சீக்கிரமா ஒரு வேலைக்கு போகணும். என்னோட தேவையையாவது நான் பார்த்துக்கணும்.
உனக்கும் அப்படி ஒரு ஐடியா இருக்கா ? நிலா கேட்டாள் .
ஏன் ?
எனக்கும் ஒரு ஐடியா இருக்கு ஆனா வெளில இல்ல. நானே ஒரு புடிக் ஆரம்பிக்கலான்னு..
முதல்ல கொஞ்ச நாளைக்கு அம்மாவையே பார்த்துக்க சொல்லலான்னு.
ஆமாடி அதுவும் நல்ல ஐடியா தான். உங்க அம்மாதான் நல்ல தைப்பாங்களே.
ம்ம் அதனாலதாண்டி.
நீயும் வந்தா எனக்கும் கொஞ்சம் ஹெல்பா இருக்கும்.
கங்கா நானும் வீட்டுல பேசறேன்.நீயும் யோசி.
அது சரி ஆனா சொந்தம்மான்னா இடம் பாக்கணும், அட்வான்ஸ் குடுக்கணும் அந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கேப்பா !!
அதெல்லாம் கவலை இல்ல. எங்களோட கடையே ரெண்டு காலியாதான் இருக்கு. அம்மாவோட டைலரிங் கிளாஸ் மிஷினே மூணு இருக்கு . அதனால அம்மாவே அதையும் இதையும் சேர்த்து பாத்துக்குங்க. நானும் போய் அப்பப்போ கொஞ்சம் கொஞ்சம் விஷயம் கத்துக்கணும்.
என்ன கங்கா திடீர்னு அமைதியாயிட்ட ?
இல்ல அதெல்லாம் இல்ல. என்று டப்பாவை உள்ளே வைத்தவள், பாருங்களேன் சொல்லவே மறந்துட்டேன் .

நேத்து முத்து அண்ணன் வந்திருந்தாங்க. அவங்க தோட்டத்துலேர்ந்து கொஞ்சம் காய், மாம்பழம், கொய்யா, இதெல்லாம் கொண்டு வந்தாங்க. உங்களுக்கும் கொஞ்சம் எடுத்துட்டு வந்துருக்கேன் என்று அவர்களுக்கும் கொடுத்தாள். அவரவர் உணவை உண்டு முடித்து மறுபடியும், வகுப்புக்குச் சென்றனர். நடுவில் எத்தனை மணிக்கு கல்லூரி முடியும் என்று சிவா குறுஞ்செய்தியில் கேட்டிருந்தான். அதன் படியே அவள் வகுப்பு முடிந்து வரவும் அவன் காரில் வெளியில் காத்து கொண்டிருந்தான். தனது கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் வந்ததும் அதை நிறுத்தி விட்டு
ஹாய் ,ஹௌ வாஸ் தி டே ?
ம்ம் நல்லா போச்சு.
ரொம்ப டயர்டா இருக்கியே ?
ம்ம் இன்னிக்கு மைண்டே டிரை ஆன மாதிரி இருக்கு.
அமைதியாக இருந்தவன், வழியில் இருந்த ஒரு காபி ஷாப்புக்கு அழைத்து சென்றான்.
இருவரும் அமைதியாக காபிக்கு காத்துக் கொண்டிருந்தனர். அது வருவதற்குள் கங்கா சென்று முகத்தில் நன்றாக தண்ணீரை அடித்து முகம் கழுவினாள் . தனது துப்பட்டாவிலேயே முகத்தைத் துடைத்துக் கொண்டு வந்தாள் . அதில் அவளது நெற்றி பொட்டு சிறிது நகர்ந்திருந்தது. அதை அவனே சரி செய்தான். அவனின் கரம் பட்டதும் இவளுக்குதான் சொல்ல முடியாத தவிப்பு. அவன் கையை அப்படியே கன்னத்தில் வைத்து ஒரு நொடியாவது கண் மூடி ரசிக்க வேண்டும் என்ற தனது உந்துதலை முயன்றுக் கட்டுப் படுத்தினாள் .
என்ன திடீர்னு காபி கடைக்கு?
ரொம்ப டயர்டா இருந்த, வர்ற வழில பார்த்தேன் அதான்.
உங்க பிரண்ட் பார்த்தாச்சா ?
ம்ம்., அவன் என்னோட ஸ்கூல் மேட் . நாங்க ரெண்டு பேரும் ரொம்ப கிளோஸ். நானும் ஊர் ஊரா போறேன். அவனும் அப்படிதான். என்னவோ அதிசயமா இந்த சனிக்கிழமை நாங்க ரெண்டு பேருமே ஊருல இருந்தோம். அதான் பாக்க முடிஞ்சது.
அம்மாக்கு எப்போ வருவீங்கன்னு தெரியுமா?
ம்ம் சொல்லிட்டேன்.
இப்படியே இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ஏனோ அவனின் கூர்மையான பார்வை அவளை துளைத்தெடுத்தது. அதை தவிர்க்க காபியில் கவனத்தை மாற்றினாள் . இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அவனுக்கு தோன்றியது.
எதற்கு?
***********************************

முத்துவும், தியாகுவும், குளித்து டிபன் சாப்பிட்டனர். அப்படியே விஷயத்தையும் பேசி முடித்தனர்.
சத்யா நீ போய் கிளம்பு நாம அப்பறம் பேசிக்கலாம். அவளுக்கு மணியாவதன் தவிப்பு அவள் முகத்தில் தெரிந்தது.
நான் கிளம்பவா ? கண்களால் அவள் கேட்ட கேள்விக்கு முத்து , வெளிப்படையாகவே
ஆமா டாக்டரு நீங்க பொழப்ப பாருங்க. நாம எப்ப வேணா பேசிக்கலாம்., வாய்தான் சொன்னது. மனைவியை விட மனசுதான் இல்லை.

அவள் சென்றதும், அவனும் அவசரமாக உண்டு முடித்து மாடியில் அவ(ர்க)ள் அறைக்குச் சென்றான்.
அவசரமாக தலையை சரி செய்து கொண்டிருந்தவளின் தோற்றம் அவனை மயக்கியது. அவளது வாசனை திரவியமும்தான். அவளை பார்த்து மயங்கி நின்றான்.
சட்டென்று நினைவு வந்தவள்,
ஆ! முத்து உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நீங்க இன்னிக்கு இங்க இருப்பீங்களா ?
இல்லங்க, நானும் இப்பவே கிளம்பறேன்.
ம்ம்., சரி. அப்போ நான் சொல்ல வந்ததை இப்பவே சொல்லறேன்.
எனக்கு இதை எப்படி சொல்லறதுன்னு தெரியல.
ஏதாவது பிரச்சனையா ?அவளின் முக பாவனையில் அவனுக்கு வயிற்றில் பந்து உருண்டது.
பிரச்சனைன்னு இல்ல ஆனா.,
விஷயத்தை சொல்லுங்க.
அவனின் அதிகாரத்தில் பயந்தவள் ,
உங்க நடைல கொஞ்சம் பிரச்சனை இருக்கு.
என்ன ?
இல்ல., நீங்க நடக்கறச்சே கொஞ்சம் மாறுதல் தெரியுது.
அப்படின்னா ?
கொஞ்சம் விந்தி நடக்கற மாதிரி...
ஓ! நொண்டியா ? இளக்காரமாக குரல் ஒலித்தது.
இப்போது வயிற்றில் பந்து இவளுக்கு உருண்டது. எச்சில் முழுங்கினாள்.
அவன் முன்னாடி அடி எடுத்தான். இவள் பயத்தில் பின்னாடி சென்றுக் கொண்டிருந்தாள் . தான் ஏன் பயப்படுகிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை.
என்ன நொண்டின்னு சொல்லறீயா ?
தன்னை சமாளித்துக் கொண்டவள்,
முதல்ல நான் சொல்லறதை பொறுமையா கேளுங்க .பொதுவா பாக்கும்போது தெரியல. ஆனா உன்னிப்பா பாத்தா பாத்தாதான் தெரியுது. அது மே பீ உங்களோட முதுகு தண்டு தன்னை தானே பாலன்ஸ் பண்ணிக்கறதா கூட இருக்கலாம். ஆனா அதை நாம் இப்பவே டாக்டர் கிட்ட ஒரு வாட்டி செக் பண்ணிக்கறது நல்லது. நீங்க இப்பவே என் கூட ஆஸ்பத்திரிக்கு வாங்க கொஞ்ச நேரம்தான் ஆர்த்தோ என்ன சொல்லறாங்கன்னு கேட்டுட்டு ஊருக்கு போங்களேன். குரலில் தவிப்பு இருந்தது. தான் சொல்வதை அவன் கேட்க மாட்டான் என்று தெரிந்தும் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். மனைவி என்றாலே அப்படித்தானே ?
நொண்டிகால்ன்னா உன்ன*** திருப்தி படுத்த மாட்டேன்னு நினைக்கிறியா? இல்ல உனக்கு நொண்டிக்கால் புருஷன்னா அவமானமா இருக்கா ?
வார்த்தைகள் இத்தனை கொடுமையாக இருக்குமா?
அவன் கண்ணை உற்று நோக்கியவள், அவனிடம் மறுவார்த்தை பேசவில்லை. அவனை தீர்க்கமாக பார்த்தவள் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள் .
அவள் பார்வையே அவனை குத்தி கிழித்தது. பார்வை மட்டும் அல்ல, பாவையின் கன்னத்தில் உருண்டு வந்த கண்ணீரும்தான்.
ச! என்று காலால் தரையை உதைத்தான்.
தன் தவறுக்கு அவன் மன்னிப்பு கேட்பானா ? எத்தனை முறை அவன் மன்னிப்பு கேட்கப் போகிறான்???
தெரிந்து கொள்ள .,

மீண்டும் வருவாள் தேவதை........
 
R.Nivetha

Member
Messages
47
Reaction score
35
Points
18
wow.going super and interesting.romba naal kalichu meet pannunathu ipdi sandai poda thaanava....intha muthu yen ipdi panraan :(
 
Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-68

ஆமா , காலைல ஏதோ புரியாதுன்னு சொன்னீயே ? அது என்ன? கண்ணை சுருக்கிக் கேட்டான்.

அதுவா, அதெல்லாம் உங்களுக்கு புரியாது.

எனக்கு……….புரியாது ?

ஆமா .,

அப்டி என்ன விஷயம்னுசொல்லு. புரியுதா புரியலையானு பார்ப்போம் !

அதெல்லாம் எங்களை மாதிரி தினம் தினம் பஸ்ஸுல போகறவங்களுக்குத்தான் புரியும். காலைல எழுந்து கிளம்பி ஒன்னு பிரண்டுசுங்களோட சிரிச்சு பேசிட்டு வரணும். இல்லையா, ஒரு ஜென்னலோர சீட்டு புடிச்சு, ஏறி உட்கார்ந்தா வரும் பாருங்க ஒரு தூக்கம். அப்ப்பா அந்த சுகம் சுகமேதான். அவ்ளோ சொகமா இருந்தாலும் நம்ம இடம் வரும்போது, பிரைனு(மூளை) குடுக்கும்பாருங்க ஒரு அலாரம். டபக்குனு முழிப்பும்வரும், அதுக்கப்புறம், மூளை நரம்பெல்லாம் சும்மா தாறுமாறா ஓடும் . அவள் கையை ஆட்டி சொல்லும் விதம் அவனுக்கு சிரிப்பாக இருந்தது.அதெல்லாம் ரசிக்க ஒரு வயசு வேணும் சார்.

அப்போ எனக்கு வயசாயிடுச்சா ? அவன் குரலில் ஏதோ மாற்றம்.

இவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

இல்ல அப்படியில்ல .
அவள் பதில் சொல்ல திணறினாள்.

அப்படின்னா இந்த மாதிரி ஒரு வயசானவன நீ கல்யாணம் பண்ணிக்குவியா ?

நீங்கன்னா பண்ணிக்குவேன். அவள் குரலில் பார்வையில் எந்த தயக்கமும் இல்லை .நீங்க இந்த வார்த்தையை சொல்ல மாட்டிங்களான்னு நான் இத்தனை நாளா காத்துக்கிட்டுருக்கேன் தெரியுமா ? நீங்க தான் லேட் .

சாரி சாரி கங்கா . எதுக்கு ?

எல்லாத்துக்குமேதான், லேட்டா சொன்னதுக்கு, லேட்டா புரிஞ்சுக்கிட்டதுக்கு, உன்ன விட்டுட்டு, சுவேதாவை கல்யாணம் பண்ண நினைச்சது எல்லாத்துக்குமேதான்.

பரவால்ல சார். ஆனா நீங்க சுவேதா இல்லன்னா வேற யாரை வேண்ணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். நான் யாரு?

கண்களில் குளம் கட்டிய நீரை குனிந்து விரலால் தள்ளினாள் .

புரியுது. நீ ஏன் என்ன விட்டுட்டு சுவேதாவ கல்யாணம் பண்ண நினைச்ச ? அதைத்தானே இப்படி கேட்கற?எனக்கு எப்பையுமே உன்ன ரொம்ப புடிக்கும்.ஆனா எனக்கு இருந்த பெரிய தடை நமக்கான வயசுதான். இன்னமும் எனக்கு அந்த பயம் இருக்கு. சும்மா அதெல்லாம் ஒன்னும் இல்லைனு சொல்லறது மட்டும் இல்ல. எல்லா விதங்களிலேயும் நான் உன்ன திருப்தி படுத்தனும். ஏதாவது ஒரு நாள் ஒரே ஒரு சந்தர்ப்பத்துல கூட நான் உன்ன ஏமாத்தின மாதிரியோ இல்ல நீ ஏமாந்த மாதிரியோ வாழ்க்கைல நமக்கு எண்ணம் வந்துட கூடாது. என்னிக்காவது, ச! இன்னும் கொஞ்சம் நம்மமொட வயசுக்கு ஏத்த ஆளா பார்த்திருக்கலாமோன்னு உனக்கு தோணிட கூடாது. எனக்கு பல தேவைகள் இருக்கும். அதுக்காக உன்ன விட பதிமூணு வயசு பெரிய ஆள நீ தேர்ந்தெடுக்கனுன்னு அவசியமே இல்ல. நீ நல்ல யோசிச்சு உன்னோட முடிவை சொல்லு.

அவன் குரலில் இருந்த தீவிரத்தை அவள் மாற்ற முயன்றாள். அவனுக்கு குற்ற உணர்வும் வந்து விட கூடாது என்றும் நினைத்தாள் . அவளுக்கு சொல்ல பல வார்த்தைகள் இருந்தது. ஆனால் அதை எல்லாம் திருமணத்திற்கு பின்னாளில் சொல்ல மனதினுள் பூட்டி வைத்தாள் . எல்லாவற்றையும் இப்போதே சொல்லி விட்டால், வாழ்க்கையில் ருசி இல்லாமலே போய் விட்டால்? அடுத்தடுத்த சந்தற்பங்களுக்காகவும் வார்த்தைகளை சேமித்தாள் . அவன் மனதை மாற்ற ஏதோ உளறினாள் . ஆனால் அவன் ரசிக்கும்படி உளறினாள் . இறுதியில் அவன்தான் அவளை மூச்சு முட்ட வைத்தான்.

நீங்க என்ன வேண்ணா நெனைச்சுக்கோங்க. இன்னும் கொஞ்சம் பெரிய பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி இருக்கலாமோன்னு உங்கள நான் நினைக்க வைப்பேன். என்ன அப்படி பாக்கறீங்க? தெனம் தெனம், என்ன தூக்கிக்கணும், நிறைய முத்தம் தரணும். நிறைய கொஞ்சனும். நிறைய பொம்மை வாங்கி தரணும். அப்புறம் செயினு, கம்மல் புது துணி வாங்கி தரணும். வெளில கூட்டிட்டு போகணும், இன்னும் நிறைய ஆசை இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் அப்பப்போ சொல்லறேன். கண்களை விரித்து அவள் சொல்லிய விதத்தில் அவன் வேறு ஒரு புது கங்காவை பார்த்தான். அதில் அவனுக்கு, ஏதோ புரிந்தது.
தாயும், இல்லாதவள், தந்தையின் அன்பையும் பெரிதாக அனுபவிக்காதவள் தன்னிடம் மட்டுமே அவளால் உரிமையாக கேட்க முடியும். மனதில் சிரித்துக் கொண்டான்.

எது நடக்குமோ நடக்குதோ தெரியாது , ஆனா கொஞ்சற வேலைய ராத்திரில கரெக்ட்டா செய்துடுவேன் , ஹஸ்கி வாயிசில் அவளை மயக்கினான்.

அவளுக்கு மூச்சடைத்தது .......

வீட்டில் நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல், இருவரும் தங்களின் நேரத்தையும், மனதையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். .... அவர்கள் அதே மன நிலைமையுடன் வீட்டுக்கு கிளம்புகிறார்கள். ......

அங்கே வீட்டில்,

சத்யா கோபத்துடன் தனது 2 சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள் . எப்போதுமே தன்னிடம் சொல்லி விட்டு குதூகலமாக செல்லும் மகள் இன்று, வெறும் “பை” மாட்டும் சொல்லி விட்டு செல்லுகிறாளே என்ற யோசனையில் ஆழ்ந்தாள் சிமி., தியாகுவுக்கும் அதே யோசனைதான். அதே சமயம் அவர் மருமகனையும் கவனிக்க தவறவில்லை.

மருமகன் தான் மகளை கடிந்து கொண்டான் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்தது. இருப்பினும் அவர் எதையுமே கண்டுக் கொள்ளவில்லை .

அவள் சென்ற உடனேயே அவனும் தனது துணிகளை எடுத்துக் கொண்டு அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே அவர்களிடம் சொல்லி விட்டு, உடனேயே கிளம்பி விட்டான். மனம் முழுவதும் காரணம் இல்லாமலே கோபம் கொப்பளித்தது. அப்போதும் அவனுக்கு அவன் தப்பு தெரியவில்லை. அவள் தன்னை மட்டம் தட்டுவதாகவே எண்ணி மருகினான்.

ஒரே ஒரு நாள் ராத்திரி அவ வீட்டுல தங்கினதுக்கு புத்திய காமிச்சுட்டா இல்ல? நான் என்ன சோத்துக்கு போயி நின்ன மாதிரி, என்ன பாத்து என்ன சொன்னா ? நொண்டின்னு சொல்லறா? இவ யாரு என்ன சொல்ல ? இவளல்லாம் வைக்கற எடத்துல வைக்கணும். அப்போதும் அவள்தான் தனது மனைவி என்பதும் அவளை விருப்பம் இல்லாமலே தான் தான் கட்டாய தாலி கட்டியதும் அவனுக்கு வசதியாக மறந்து விட்டது. எப்படியோ பத்திரமாக வீடு வந்து சேர்ந்தான்.

எப்போது அவன் சத்யாவை வீட்டை விட்டு வெளியில் அனுப்பினானோ அப்போதே ஆச்சி அவனிடம் பேச்சு வார்த்தையை நிறுத்தி விட்டார். என்னன்னா என்ன அவ்வளவுதான்.

கௌசிக்கும் வசந்தியும் கூட அப்படிதான். இதோ இங்கே வந்து ஒருவாரத்திற்கு மேல் ஆகி விட்டது. வெளியில் தன்னை சாதாரணமாக காட்டிக் கொண்டாலும், உள்ளே மனதில் அவன் அன்னை பற்றிய நினைவே வந்து கொண்டிருந்தது. அவனால் வெளிக் காட்டிக் கொள்ள முடியாத இன்னொரு உணர்வு, அன்னை என்னதான் தவறு செய்திருந்தாலும், தந்தை இறந்து விட்டார். அவர் தன்னை பெற்றவராக இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, அவர்தான் தன் தந்தை. வேறு யாரோ ஒருவரை அன்னை காட்டினாலும், தந்தையாக ஏற்றுக் கொள்ள போவதில்லை. அது முடியவும் முடியாதது. மகாதேவனை போல தன் மீது யாராலும் பாசம் கட்ட முடியாது. அவர் உயிருடன் இருந்தபோது அளவுக்கு அதிகமாகவே அவரை துன்பப்படுத்திவிட்டோம். அஹா பத்தி பேசினது ரொம்ப தப்பு. அவங்க பாவம் என்றே மனம் அரற்றியது. அ தையேதான் இப்போது அன்னையினடத்திலும் செய்துக் கொண்டிருக்கிறேன். நான் அம்மா கிட்ட இந்த பேசியிருக்க கூடாது. ஏன் மேலதான் தப்பு என்று மனம் அவனை குற்றம் சாட்டியது.

அவன் தன் அன்னைக்கு, போன் செய்து பார்க்கலாமா என்று யோசித்தான். அவன் யோசித்தால் தடை எது? உடனே அன்னைக்கு அழைத்தான்.

அவன் அன்னை அவனை எப்படி எதிர்கொள்வாள்??

அவனுக்கு அவன் அன்னையை எதிர்கொள்வது சிரமமாகவே இருக்கும் என்று எண்ணினான். ஆனால் திட்டிக் கொண்டிருந்தாலும், திட்டு வாங்குவதற்க்காகவேனும் ஒரு ஜீவன் இருந்தது. மகாதேவனும் இல்லாமல், மகனையும் இழந்தவளிடம் நிறையவே மாற்றங்கள் வந்தது.

அவளின் மாற்றங்கள் அவனுக்கு வாழ்க்கையில் அடுத்தடுத்த முன்னேற்றங்களை தரப் போவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

அவனும், அவன் அன்னைக்கு தொடர்ந்து முயற்சித்தான் . இரவு உணவை முழுங்கினோம் என்று பெயர் பண்ணிவிட்டு, படுக்குமுன், தனது கைபேசியை பார்த்தவள், மகனிடமிருந்து வந்த போன் கால்களை பார்த்தாள் . மனதில் மகிழ்ச்சி பொங்கினாலும், மனதில் வந்த பயத்தையும் தடுக்க முடியவில்லை .மகன் சொல்லவில்லை என்றாலும், தியாகுவும், சிமியும் அவளுக்கு போன் செய்து, சொல்லி விட்டனர். அதனால் மகன் நன்றாகவே இருப்பான் என்று மனதில் தைரியம் சொல்லிக் கொண்டாள் .

தயக்கத்துடனே, மகனுக்கு டயல் செய்தாள்.

ஹலோ !

எப்போதும், மாதாஜி என்பவன், இன்று ஏனோ அம்மா என்றவுடன், முதன் முதலில் மருத்துவமனையில் அவன் வீறிட்டு அழுதது நினைவு வந்தது.

நல்லாருக்கியாப்பா ?

ம்ம்., ஏதோ. நீங்க ?

இன்னும் உயிரோடுதான் இருக்கேன். எல்லாம் போனதுக்கு அப்புறமும். ஏளன சிரிப்புடன் பதில் வந்தது.

கண்ணீரை புருவ முடிச்சுடன் சேர்த்து துடைத்துக் கொண்டான். சாரிமா, சாரி, உங்கள..... வாயில் வார்த்தை வெளி வரவில்லை. எனக்கும் எதுவும் தெரிய வேணாம். நீங்க நீங்க மட்டும் போதும் . குலுங்கி குலுங்கி அழுதான்.

அழாதடா, நானும் உன்ன ரொம்ப நோகடிச்சுட்டேன். எந்த குழந்தைக்கும் வர கூடாத கஷ்டத்தை ஒனக்கு நான் தந்திட்டேன். இப்பவும் நீ கேட்ட கேள்விக்கு என்கிட்ட பதில் இல்ல கௌசிக். மன்னிப்பு கூட என்ன கேட்க முடியாது. எனக்கு எந்த தகுதியும் இல்ல . கண்ணீரை உறிஞ்சியவள் தெளிவாக பேசினாள் . எனக்கு உன்ன பாக்கணும் கண்ணா .

நாளைக்கே வரேன்மா.நீங்க மாத்திரை போட்டீங்களா ?

இதோ.

அம்மா எதை பத்தியும் நீங்க கவலை படாதீங்க. நான் நாளைக்கே அங்க வரேன்.

கௌசிக், நீ இங்க வர வேணாம். இங்க கொஞ்சம் முக்கியமான வேலைகல்லாம் இருக்கு.நாலஞ்சு நாள் கழிச்சு நானே அங்க வர்றேன்.

ஏம்மா ?

அங்க போனீயே ? என்ன பத்தி ஒனக்கு கொஞ்சமாவது கவலை இருந்ததா ?அண்ணனும் அண்ணியும்தான் போன் பண்ணி உன்ன பத்தி சொன்னாங்க. இல்லாட்டி நீயும் இல்லாம நான் எப்பயோ ஏதாவது மாத்திரையை போட்டுட்டு போய் சேர்ந்திருப்பேன். அவங்கள பார்த்து கொஞ்சம் பேசணும். நன்றி சொல்லணும். இல்லனா நல்லாருக்காது .அவங்களையும் நான் எத்தனையோ பழிச்சு பேசி இருக்கேன். பாவம் எதையுமே அவங்க மனசுல வச்சுக்கலை ...

அம்மா அழாதீங்கம்மா.,

மகனின் கவலையை மற்றும் விதமாக ., மாதாஜி மதராசுல அம்மாவாயிட்டேனாடா ?

மாதாஜி மாதாஜி.....போதுமா ?

போதுண்டா. சாப்பிட்டியா ?

ம்ம்.,

குட் நைட் ... தினம் போன் பண்ணுடா.......

ஒகே டார்லிங் .....
இனிமே என்ன டார்லிங் டார்லிங்ன்னு சொல்லாதடா., ஒனக்கு ஒரு டார்லிங்க தேடற வழிய பாரு.

மாதாஜி...

அவள் வருவாளா.....

அன்னையும் வருவாள் ., அவனின்.......

தேவதை வருவாள் .....................
 
Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-69

எத்தனையோ கவலைகள் மனதை அரித்தாலும் , அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை தள்ளி போடுபவள் இல்லையே? அடுத்த நாளே சரவணனுக்கு போன் செய்தாள் . ஆச்சியிடம் பேசிவிட்டு, சரவணனிடம் பேசினாள் .
என்ன சரவணன் எப்படி இருக்கீங்க ?
நல்லாருக்கேன்கா .
ம்ம்., செல்வி ?
அவளும்தான் .,
உங்களுக்குள்ள ஏதோ பிரச்சனையா ?அன்னிக்கு முத்து தோட்டத்து விஷயமா வந்த போது சொன்னாரு .
எடுத்த எடுப்பில் அவள் இப்படி உடைத்து பேசுவாள் என அவன் எதிர் பார்க்கவில்லை.
அக்கா .....
இங்க பாருங்க சரவணன் நீங்க என்ன எப்படி நினைக்கீறீங்களோ தெரியாது. ஆனா உங்கள நான் என்னோட தம்பியாதான் பாக்கறேன். எனக்கு ரிஷி, கௌசிக், நீங்க எல்லாருமே ஒண்ணுதான். அதே மாதிரிதான் செல்வியும். என்ன புரிஞ்சுதா ?
எனக்கு எல்லாமே புரியுதுங்க. அந்த சிறுக்கிதான்...தினம் தெனம் என்ன வதைக்கறா .
புரியுது சரவணன். நான் அவகிட்டயும் பேசறேன். ஆனா நீங்க இனிமே எந்த விதமான காரணத்துக்காகவும் குடிக்கவே கூடாது . அது உங்களுக்கும் நல்லதில்லை. உங்களுக்கு பொறக்கற போகிற குழந்தைக்கும் நல்லதில்லை. நாம் குழந்தைங்களுக்கு ஆரோக்கியமான ஒடம்ப குடுக்க வேணாமா ? மிகவும் சாந்தமாக குழைவாக சொன்னாள் . அது அவனுக்கு நன்றாகவே உறைத்தது .
சரிங்கக்கா.... இனிமே நான் குடிக்கல.
ஆமா , புது பழக்கம்கறதுனால விடறதும் ரொம்ப சுலபம். செல்விக்கிட்ட குடுங்க.
அவளிடமும் பேசினாள் . அவளிடம் சில அந்தரங்க விஷயங்களையும் பேசினாள் . கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக் குடுத்தாள் . ஒரு மருத்துவராகவும் சொல்லி தந்தாள், ஒரு அக்காவை போல , அன்னையாகவும், கணவனை எப்படி அனுசரிக்க வேண்டும் என்றும் சொல்லிக் குடுத்தாள்.
செல்வி அனைத்தையும் கேட்டுக் கொண்டாள் . ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை.
என்ன செல்வி ஒண்ணுமே சொல்லல ?
நீங்க சொல்லறது எல்லாமே புரியுது. ஆனா அண்ணன் ஏன் உங்கள ஏத்துக்கல ?நீங்க அண்ணனை ஏன் அனுசரித்து நடந்துக்கல ?
நீ எவ்ளோ ஷார்ப்பான கேள்வியை கேட்டிருக்க தெரியுமா ?
தெரியும்., ஆனா நானும் உங்க தங்கச்சி தானே? நீங்களும் அண்ணனும் சந்தோசமா இருக்கறத பாக்க எனக்கு மாட்டும் ஆசை இருக்காதா ?
இல்ல செல்வி, அவருக்கு என்ன புடிச்சிருக்கா , புடிக்கலையா ? புடிச்சுருக்குன்னா எதுக்கு என்கிட்ட இவ்ளோ கோவம் ? புடிக்கலன்னா எதுக்கு ஆசையா என்ன பாக்க வந்தாரு ? எதுவுமே எனக்கு தெரியல.நான் அவர்கிட்ட ஆசையாதான் இருக்கேன். அவரை மனசார ஏத்துக்கிட்டேன். ஆனா என்னால அவர் மனசுக்குஎனக்கு என்ன பண்ணணுன்னே ள்ள போக முடியல. என்னால அவரை புரிஞ்சுக்க முடியல.நான் என்ன பண்ணணுன்னு கூட என்னால யோசிக்க முடியல.அதனால இனிமே அதப்பத்தி யோசிக்க போகறதில்ல செல்வி. அவருக்கு எப்போ வேணுமோ அப்போ வரட்டும். வேண்டானா அதையும் அவரே சொல்லட்டும்.
அப்பறமா இன்னொன்னு கேட்கனும். இப்போ ரீசெண்டா டாக்டரை எப்போ பாத்தீங்க ?
கொஞ்சம் நாளாயிட்டுதே ? இன்னொரு தடவ போய் ஒருவாட்டி பார்த்துட்டு வந்துடுங்களேன். இல்ல உங்களால இங்க வர முடியுன்னா எங்க ஆஸ்பத்திரிக்கு வாங்க. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.
சரிங்கக்கா., அவங்ககிட்ட பேசிட்டு சொல்லறேன்.
இங்க பாரு செல்வி, சரவணன் உன் மேல உயிரையே வச்சிருக்கார் . அவரை போய் இன்னொரு கல்யாணம் அது இதுன்னு நோகடிக்காத. இப்போ குழந்தை பொறக்கலனா என்ன ? எத்தனையோ குழந்தைகள், அம்மா அப்பா இல்லாம இருக்காங்க. அவங்கள்ல யாரையாவது நீங்க உங்க குழந்தையா எடுத்துக்கலாம். அதுக்காக உங்களுக்கு குழந்தை பொறக்காதுன்னு நான் சொல்லல. இன்னொரு ஆப்ஷனும் இருக்குன்னு சொல்லறேன். அவரை விட்டு பிரயறத பத்தி இனிமே நீ பேசவே கூடாது புரிஞ்சுதா ? நம்ம மேல ஆசை வச்ருக்கற புருஷன் எல்லாருக்கும் அமையறதில்ல. குரல் தழுதழுத்தது.
நான் வச்சுடறேன்.
போனை அனைத்தவளுக்கு மனதில் இருந்தபாரம் இறங்கியது போல இருந்தது. இழுத்து பெரு மூச்சு விட்டாள். என்னால உங்க அன்பான மனைவி ஆகவே முடியாதா முத்து ? மனம் ஏங்கியது. ஒரு சாதாரண மனைவியாக அவன் மனம் கவர்ந்தவளாக அவள் மாற முடியுமா ?

வீட்டுக்குள் ஒன்றாக நுழைந்த சிவாவையும், கங்காவையும் பார்த்த சிமிக்கு, உள்ளுக்குள்ளே கறுவிக் கொண்டிருந்தது. சிவாவுக்கு, காபி கலந்து கொண்டு போய் மாடியில் அவன் அறையில் ஆத்தி கொடுத்தாள் .
எப்போதும், தாங்க்ஸ்மா என்று அம்மாவின் கை மனத்தை புகழ்ந்து கொண்டே குடிப்பவன், இன்றோ
எங்கிட்ட கேட்டுட்டு கலந்திருக்கலாமில்ல ? என்ற கேள்வியில் உள்ளே இருந்த ஆத்திரமெல்லாம் பொங்கி வந்தது.
ஏம்பா ?
இல்லமா , கங்கா ரொம்ப டயர்டா இருந்தாளேன்னு காபி கடைக்கு கூட்டிட்டு போனேன். அங்கையே நானும் காபி குடுச்சுட்டேன்.
ஓஹோ ! சரிப்பா . எங்கல்லாமோ போயிட்டு வந்துருக்க. டயர்டா இருப்ப . ரெஸ்ட் எடு . நாளைக்கு வேற ஊருக்கு கிளம்பனும். முதலில் சாதாரணமாக ஆரம்பித்தவள், பின்னர் சுய ரூபம் காட்டினாள்.
எங்கள பத்தி ஒனக்கு என்ன ? நாங்கல்லாம் எங்களை நாங்களே பாத்துக்கறோம். பாவம் ஒனக்கு நிறைய வேல இருக்குமே ?இது நான் போட்டது தானே ? கீழ ஊத்திடறேன். ஒனக்கு ஒரு வேளை காப்பி வேணுன்னா அவகிட்டையே கேளு.
அம்மா உங்க பேச்சே வேற மாதிரி இருக்கு. எதுவும் போடி வச்சு பேசாதீங்க.
என்னடா! என் பேச்சா வேற மாதிரி இருக்கு. நீதாண்டா வேற மாதிரி இருக்க ? நானும் உங்க அப்பாவும் எப்படி இருக்கோம்? ஒண்ணுமே தெரியாது. அந்த குழந்தை பாதி ராத்திரில வந்து எங்களை பாத்துட்டு போகுது. இத்தனைக்கும் அவளை நான் பெத்துக்கல . உன்ன தானடா பெத்தேன்? என்னோட தங்கச்சி, என்னோட தேவதை அது இதுன்னு கொஞ்சிக்கிட்டே இருப்ப. இப்போ அவ சாப்பிட்டாளா? தூங்கினாளா ? எங்கையோ போன எடத்துல வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்கறாளே ? அவ மூஞ்சில சிரிப்பை காணுமே ? ஒண்ணாவது ஒனக்கு தெரியுமா ? நேத்து ராத்திரி வீட்டுக்கு மாப்பிள்ளை வந்தது கூட ஒனக்கு தெரியாது. ஊருலேர்ந்து வருவ., கண்ணு அவள தேடும், அவ ஒண்ணுமே தெரியாத பூனை மாதிரி வந்து ஜன்னல்ல ஒளிஞ்சு நின்னு உன்ன பார்ப்பா . ஓடி போய் ஒனக்கு டிபன் பண்ணுவா , எதுவுமே எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா ? நான் உன்ன பெத்தவடா ? ஏதோ பாவம் அனாதைன்னு கொண்டு வந்து வீட்டுல வச்சு படிப்பு தந்து சோறு போட்டா , உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணறா அவ.
சத்தம் கேட்டு, கங்கா தியாகுவும் ஓடி வந்தனர். கங்கா எதுவும் பேசவில்லை. அமைதியாக நின்றாள் .
பண்ணறத பண்ணிட்டு வாய மூடிக்கிட்டு நிக்குது பாரு அமுக்கினி,,,, கண்களை விரித்து முறைத்தாள்.
ஓகே மா ., நீங்க சொல்ல வேண்டியதை சொல்லி முடிச்சாச்சா இல்ல இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கா ?
மூச்சிரைக்க நின்றவளை பார்க்க சிவாவுக்கு பயமாக இருந்தது. ஏனெனில் இதுவரை அவன் பார்த்த அன்னை இவளல்லவே ?
இருப்பினும், கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சொன்னான்.
நானும் கங்காவும் கல்யாணம் பண்ணிக்க ஆசை படறோம். அதுவும் உங்களோட முழு சம்மததோட. உங்களுக்கு ஓகேன்னா நாங்க கல்யாணம் பண்ணிக்குவோம், உங்களுக்கு வேண்டான்னா நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் . யாரையுமே, எப்பையுமே . நான் இவளை காதலிக்கல. ஆனா என்னால ஒருத்திய காதலிக்க முடியுன்னா அது இவை மட்டும் தான். மிக அழுத்தமாக சொன்ன மகனை பார்த்த தியாகுவுக்கு முதலில் அதிர்ச்சி.பின்பு ஆச்சர்யம்.
வெடுக்கென்று மூஞ்சியை திருப்பிக் கொண்டு சிமி வெளியில் போனாள் . உங்களோட சம்மதத்துக்காக நீங்க உங்க வயத்துல பெத்த பையன் காத்துக்கிட்டிருக்கேன். சிமி அத்தனை பிடிவாதக்காரி இல்லையென்றே அவனுக்குத் தோன்றியது. நாமும் அப்படியே நம்புவோம்.

மீண்டும் வருவாள் தேவதை.......
 
Top Bottom