Wow.... super story sis... 👏👏
மாயவன உண்மையாவே நான் magic manஆ நினைச்சிட்டேன்... முதல் 3 அத்தியாயமும் வேற வேற இடத்தை காட்டவும், மாயவன் விதியை மாத்தறவன் மனிதனே இல்ல... like that... நினைச்சிட்டேன்...
But அது சதிஷா இருக்கும்னு நினைக்கல...
ரொம்ப காலம் வாழ்ந்து நிறைய அனுபவங்களை சேர்த்த பெரியவங்களுக்கே இவ்வளவு பக்குவம் இருக்கும்னு எனக்கு தோணலை... He is specialனு சொல்லறதா?! Abnormalனு சொல்லறதா?!னே எனக்கு தெரியலை... ஆனா எனக்கு பிடித்து இருந்தது அவனை...
அடுத்து சாவித்ரி... ரொம்ப சாதாரண பொண்ணு தான்... ஆனா அவ எதையும் கண்டுக்காத சந்தனாவ மாற காரணம் 2 பேரு தான் எனக்கு தோணி... மேலோட்டமா பாத்தா வினய் நரேன் மாறி தோணும்... But true reason சாவி அப்பா and வதனி தான்... சாவி வன்னி பாக்காம இருந்து இருந்தா இது எல்லாம் நடந்து இருக்காது... அவ நல்லா இருக்கா...
அடுத்து அவங்க அப்பா 4/5 பொண்ணுங்க பொறக்கும் போது பையன் பொறக்கலனு வருத்தம் சாவி பொறக்கும் போது மட்டும் வருத்தம் வந்து அவளை திட்டிட்டே இருக்காங்க... அது தான் அவ மனசுல வந்த ஓட்டாத தன்மை போல... அம்மா பிறந்ததுல இருந்து அடிக்காமயா இருந்து இருப்பாங்க... ஆனா அந்த ஒட்டாத தன்மையும் வனஜாவின் கருத்துக்களுமே அவள் வாழ்க்கை இப்படி ஆக காரணம் நினைக்கறேன்... கூடா நட்பு கேடில் முடியும் இது தான் போல...
அதுக்குனு வினய்/நரேன்லாம் நல்லவங்க சொல்ல வரல... சாவி வாழ்க்கை மாற காரணம் மட்டும் யோசிச்சேன். ஏன்னா சாவிக்கு நடிப்பில் அவ்வளவு ஆர்வம் கூட இல்லை... அது தான்...
அடுத்து சந்தனா சாவி மாறனது... அவங்க அம்மா கூட சேர்ந்தது... உண்மையா super... அதுவும் அவங்க அக்கா கணவர் அப்படி பாத்தது... natural...
மொத்ததுல... லவ்னு ஒரு காண்சப்டே வராம ரொம்ப நல்லா இருந்தது... 🥰🥰