Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

விறுவிறுப்பான அத்தியாயம் வத்சலா. அந்த குழந்தையின் தந்தை ஏக்கம், தந்தையின் பொறுப்பை உணர்த்தும் அந்த பூக்கடைக்காரர் என்று சஞ்சனாவின் முயற்சிகள் பலன் தந்திருக்குமோ ? சுரேந்தர் மூலமாகவே கௌதம் விருப்பம் நிறைவேறிடுமா ? சஞ்சனா கௌதம்க்கு எதிராக நடக்க முடியாமல் தடுமாறுவது, தாத்தாவின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை என்றைக்கும் மறையாது என்ற உணர்வை கௌதமிற்கு உணர்த்தியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். நந்தாவின் இந்த தனிமை அவனின் வெறுப்பை மாற்றியிருக்குமா ? மேலும் தெரிந்து கொள்ள ஆவல். 😍 😍
 
அந்தப் பூக்கடைக்காரர் வியாபாரத்தை விடுத்துத் தன் மகளுக்கு சாதம் ஊட்டியது அருமை அருமை மா..சரஸ்வதி சொன்னதை கரெக்டா தாத்தா சொல்லிருக்காரு கௌதம்கிட்ட..மயக்கமருந்து எடுத்து வைச்சதையும் கணிச்சிட்டான்..பாப்பா பத்தி சஞ்சனா பேசியும் கௌதம் அவனோட முடிவுல உறுதியா இருக்கான்..சஞ்சனா கனவு பலிக்கக்கூடாது..நந்தா கனவுல வந்தமாதிரி சிரிக்கக்கூடாது..
நான் ரொம்ப ரொம்ப ராசிச்சு எழுதின சீன் அந்த பூக்கடைக்காரர் சீன். அதை நீங்களும் ரசிச்சு சொன்னது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. யார் அதை சொல்றாங்கன்னு பார்த்திட்டே இருந்தேன். அடுத்து என்னனு இன்னைக்கு தெரிஞ்சிடும் மா. இன்னுக்கு நிறைவு பகுதி வந்திடும் மா. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தொடர்ந்து கருத்துகள் சொல்வதுக்கு மனம் நிறைந்த நன்றிகள் 😍😍😍😍😍😍😍
 
ஒரே பட படப்பா இருக்கு .சரஸ்வதியின் ஆசையும் தாத்தாவின் ஆசிர்வாதமும் நிறைவேறனும்.சஞ்சனா மயக்க மருந்து யூஸ் பண்ணக் கூடாது. என்ன ஆகுமோ?
கோதை மா நீங்க ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ரசிச்சு ரசிச்சு கமென்ட் சொல்வது அவ்வளவு சந்தோஷமா இருக்கு. எல்லா படபடப்பும் இன்னைக்கு தீர்ந்திடும் மா. Thanks a lot 😍😍😍😍😍
 
கெளதம் சஞ்சனா வார்த்தைகள் எதற்கும் அசைந்து கொடுத்தான் இல்லை பிள்ளை பாசம் கூட அவன் பலி வெறிக்கு முன் தோற்றுபோய் விடாதோ இனி சஞ்சனாவாள் கெளதம்யை எவ்வாறு நந்தா பலி வாங்குதலில் இருந்து நிறுத்த முடியும் இனி என்ன நேருமோ கெளதம், நந்தா 🤭🤭🤭🌹🌹🌹🌹
ஓவ்வொரு அத்தியாயத்துக்கும் ரசிச்சு ரசிச்சு கமென்ட் சொல்றீங்க. மனம் நிறைந்த நன்றிகள் மா. இனி என்ன நேரும்ன்னு இன்னைக்கு தெரிஞ்சிடும் மா. Thanks a lot 😍😍😍
 
கௌதம் அரக்கனை கொல்லறது சரிதான் அவனையும் இழக்கிறது ஏன் இப்படி கௌதம் .கடைசி வரையில் எல்லோரையும் பற்றி நன்கு உணர்வுகளால் அறிந்து இருப்பது செம.மயக்க ஊசி போடுவதனால் போடு என்ன கெத்து ❤️❤️❤️❤️❤️❤️❤️ கௌதம் . என்ன நடக்கப்போகுதோ.தாத்தா அம்மா உயிரோட வருவாங்கன்னு சொல்லியிருக்கிறார்.அதை நினைத்து சிலநிமிடம் சஞ்சலம் அடைய வாய்ப்பு வந்து நந்தா சுரேந்தர் ஏதாவது கௌதம் செய்துடுவாங்களா?. முடிவு என்னவாக இருக்கும் .
உங்களை மாதிரி யாராலையும் கௌதமை ரசிக்க முடியாது. //சஞ்சலம் அடைய வாய்ப்பு இருக்கு// உண்மை. அதன் பிறகு என்ன நடக்கும். இன்னைக்கு தெரிஞ்சிடும் மா. கதை ஆரம்பத்தில் இருந்து கூடவே பயணிச்சு வந்திருக்கீங்க மா. அதற்கு மனம் நிறைந்த நன்றிகள் 😍😍😍😍😍
 

New Threads

Top Bottom