Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
இந்த முறை அங்காளப் பரமேஸ்வரி தந்த ஜூஸை அருந்தியவர், "கேள்விப்பட்டோம், அந்த மினிஸ்டர் உங்கப் பேத்தியை நீங்க கல்யாணம் செஞ்சுத் தராம ஏமாத்திட்டதா நினைச்சு, தொழில்ல உங்களுக்கு உதவுறதை நிறுத்திட்டாராமே? அப்பறம் உங்க அரசும் கூட கவிழ்ந்திடுச்சாமே? பாவம் எம்.எல்.ஏ பதவி போய், தொழில் முடங்கிப் போய், இப்போ உங்க ஜமீன் மாப்பிள்ளை புண்ணியத்தால தான் உங்க வண்டி ஓடிக்கிட்டிருக்குனு கூட கேள்விப்பட்டேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. இந்தக் கஷ்டத்தோட உங்கப் பேத்தியை வேற உங்கக்கிட்ட இருந்து பிரிச்சி ஏன் கூடக்கொஞ்சம் கஷ்டப்பட வைக்கணும்னு தான், நம்ம சண்டையை இத்தோட முடிச்சிக்கலாம்னு வந்தேன். உங்கப் பேத்திக்கு மகாலட்சுமி பிறந்திருக்கா. குழந்தை பிறந்து மூணு மாசமாகப் போகுது" எனவும்,


அவரின், பகை முடித்துக் கொள்ளலாம் என்கிற பேச்சில் நன்றி பெருக்குடன், "கேள்விப்பட்டேன்மா" என்றார் சங்கரப்பாண்டியன்.


"இன்னும் மூணு நாள்ல பேர் சூட்டு விழா வச்சிருக்கோம். நீங்க உங்க குடும்பத்தோட வந்து பிள்ளைகளை ஆசீர்வதிச்சிட்டுப் போகணும். இந்தாங்க, இந்த விஷேசத்தோட நம்ம விரோதத்தை முடிச்சிக்கலாம்." என தாம்பாளத்தட்டை வழங்கவும், சங்கரப்பாண்டியன் மனமுவந்து வாங்கிக் கொண்டார்.


பின், நாச்சியம்மையை காண தயங்கியபடியே உண்மையான வருத்தத்துடன், "நான் எவ்வளவு இழந்தாலும் அது உன் இழப்புக்கு ஈடாகாதும்மா. ஆனா, நீ அதை மறக்க முன் வந்ததே எனக்கு மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. கண்டிப்பா விழாவுக்கு நாங்க வர்றோம்மா" எனக் கைகளைக்கூப்பினார்.


அவரைப் பார்த்து பதிலுக்கு கை கூப்பிவிட்டு தன் வீடு நோக்கிப் புறப்பட்டார் நாச்சியம்மை.


விழாவிற்கு முந்தைய நாள் காலை தன் வேலையனைத்தையும் முடித்துக்கொண்டு செங்குளம் வந்து சேர்ந்தான் கௌதமன்.


அவன் தன் எதிரில் வந்தாலே அவனைக் காண விரும்பாதவள் போல் வேறுபுறம் திரும்பிச் சென்றாள் அதிதி.


விழா அன்று காலையில் அம்முலுவுக்கு புத்தாடை அணிவித்துவிட்டு தானும் விழாவிற்கு கிளம்பிய அதிதி, பால்கனியில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தன் கணவனிடம், "சீக்கிரமா கிளம்புங்க.. ஃபங்ஷனுக்கு நேரமாகிடுச்சி." என்று துரிதப் படுத்தினாள்.


அவனும் தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கிச் சென்றான். அவன் குளித்து முடித்து வெளியே வர முகத்திற்கு ஒப்பனை‌ செய்து கொண்டிருந்தாள் அதிதி.


அந்நேரம் கதவை தட்டிய வேலையாள் அவளின் குடும்பத்தினர் வந்திருப்பதாகக் கூறவும், "இதோ வர்றேன்!" என்று சொல்லி அனுப்பிவிட்டு, சோபாவில் தன் கணவனுக்காக காத்திருக்கலானாள் அதிதி.


"நீ கீழப் போ! நான் அப்புறம் வர்றேன்" என்றவனிடம்,


"இல்ல, இல்ல, ரெண்டு பேரும் ஒன்னாவே போகலாம்" என மறுத்தாள்.


இருவரும் ஒரு சேரக் கிளம்பி குழந்தையுடன் கீழே வர, அனைவரின் கண்களும் அவர்களின் மேல் தான் இருந்தது. விக்ரமன் வந்திருந்தவர்களை கண்டுகொள்ளாமல் ஐயரின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.


அதிதி தன் தாத்தா பாட்டியைப் பார்த்து ஆனந்தக் கண்ணீருடன், “வாங்க!” என்றாள்.


பின், குழந்தையுடன் அவர்களின் காலிலும் விழுந்து எழுந்தாள்.


அவளுக்கு விக்ரமனின் நடவடிக்கை துப்புரவாக பிடிக்கவில்லை. சுணக்கமான முகத்துடன், ‘வீடு தேடி வந்திருக்கவங்களை வாங்கனு சொன்னா தான் என்னவாம்? வாயிலிருக்கற முத்தா கொட்டிடும்?' என மனதுக்குள் நொடித்துக் கொண்டவள், அனைவரும் குழந்தையை கொஞ்சி விட்டு கொடுக்கவும் அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.


விக்ரமனின் செல்வ வளத்தைக் கண்டு விழாவிற்கு வந்திருந்த அதிதியின் அத்தை ஆனந்தவதியும் சித்தி மானசாவும் வியப்பில் முகவாயில் கை வைத்தனர்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"அதிதிக்கு எங்கயோ மச்சம் இருக்கு." என்றும் பொறாமைப் பட்டனர்.


மானசாவின் பதினெட்டு வயது புதல்வி ஓவியா ஆனந்தவதியின் மகனிடம், "இந்த வீடு நம்ம வீட்டை விட பெருசா இருக்குல்லடா? வாடா உள்ளப் போய் சாப்பிட ஏதாவது தேறுதானு பார்ப்போம்?" என்று ஆர்வத்துடன் கூறவும்,


அவள் கூறுவதை கேட்ட மானசா தன் தலையில் அடித்துக்கொண்டே, "என்கிட்ட இருக்கற சூதுவாதுல கொஞ்சமாவது இவளுக்கு இருக்கா பாரேன்? அப்படியே அவங்க அப்பாவை உரிச்சி வச்சி பிறந்திருக்கா" எனத் தன் கணவன் ஈஸ்வருக்கும் இரண்டு வசவுகளை சேர்த்துக் கொடுத்தார்.


பின், "ஏய் ஓவி! இங்க வாடி. ஓரெடத்துல நில்லு. சின்ன பசங்களுக்குப் போட்டியா ஓடிக்கிட்டு திரியிற" என அதட்டவும் செய்தார்.


அதற்கு, "ம் போங்கம்மா. அப்புறம் எனக்கு பசிக்குமில்ல. சாப்பிடக்கூடாதா?" என ரீல்ஸில் வரும் குழந்தை போல் நடித்தவள், அன்னையைக் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.


ஐயர் மந்திரங்களை கூறி முடிக்கவும் அரிசியில் குழந்தையின் பெயரை எழுதினான் விக்ரமன்.


உடன் அதிதியும் தங்க மோதிரத்தை பிடித்துக்கொண்டு, 'ஆராதியா' என்று எழுதினாள்.


பூவை பழத்தட்டின் மேல் போடச் சொல்லி ஐயர் தர, அடுத்து நடக்கப்போகும் நிகழ்வுகளில் உழன்று கொண்டிருந்தவன் அதனைக் கவனிக்கவில்லை.


"என்ன மாமா? எங்க அக்காக் கூட கனவுலயே ரொமாண்ஸா?" என ஓவியா சத்தமாகக் கேட்கவும் இப்பூவுலகிற்கு வந்தவன் அவள் கேட்ட கேள்வியில் எரிச்சலடைந்தான்.


வந்த கூட்டம் முழுவதும் தன்னை கவனிப்பதை உணர்ந்து, "ஹான்? உங்க அக்கா கூட இல்ல. உன் கூடத்தான் ரொமாண்ஸ் பண்ணிக்கிட்டிருந்தேன். யாரு என்னை கேள்வி கேட்க முடியும்?" என சங்கரப்பாண்டியனை முறைத்துக்கொண்டே, மற்றவர் முன் தன்னை இயல்பாய் காட்டிக்கொள்ள முயன்றான்.


அவனின் அப்பதிலில் தன் அக்காவை வெறுப்பேற்றவென்றே வெட்கப்பட்டது போல் நடித்த ஓவியாவை கண்டு, அவ்விடம் முழுவதும் சிரிப்பலை பரவியது.


அன்னை தந்தை இருவரும் குழந்தையின் காதில் மூன்று முறை அவளின் பெயரை உச்சரித்ததும், ஒவ்வொருவராக வந்து குழந்தைக்கு தாங்கள் வாங்கி வந்த பரிசுப் பொருள்களை கொடுக்க ஆரம்பித்தனர்.


சங்கரப்பாண்டியன் தன் குடும்பத்தின் சார்பில் ஒரு தட்டில் குழந்தைக்கு உடையும், அதன் மேலேயே குழந்தைக்கு தங்கத்தால் செய்யப்பட்ட சங்கிலி, வளையல்கள், மோதிரம், அரைஞாண் கொடி, கொலுசு என இதர பொருட்களையும் வைத்து கொடுக்க வர, அதைக் கண்ட விக்ரமன் அலைபேசியில் பேசுவது போல் விலகிச் சென்றுவிட்டான்.


அவர் அதனை அதிதியிடம் கொடுத்துச் சென்ற முப்பது நிமிடங்களுக்கு பிறகே, மறுபடியும் அவளின் அருகில் வந்து நின்று கொண்டான்.


விழா சிறப்புற நிறைவு பெற்று வந்திருந்த உறவினர்கள் அனைவரும் கிளம்பிச் சென்றுவிட, அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வை காண விரும்பாமல் விக்ரமனும் வேகமாக மாடியேறிவிட்டான்.


சங்கரப்பாண்டியன் நாச்சியம்மையிடம், "நாங்க போயிட்டு வர்றோம்மா" என்று கூறி அதிதியிடம்,


"மாப்பிள்ளையை வரச் சொல் அதிதிம்மா. அவர்கிட்டயும் சொல்லிட்டு கிளம்புறோம்" எனக்கூற,


குழந்தையுடன் மாடிக்குச் செல்லப் போனவளைத் தடுத்து நிறுத்திய நாச்சியம்மை, அவள் கைகளில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு, "நீயும் உன் சொந்தமும் இப்படியே வெளிய நடையைக் கட்டலாம்" என தடாலடியாக கூறினார்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அவர் கூறியதை தான் சரியாகத்தான் கேட்டோமா? என கிரகிக்க முயன்றாள் அதிதி.


"உன்னை இந்த வீட்டை விட்டு வெளிய போகச் சொன்னேன். உன்னை இங்க நாங்க அழைச்சிட்டு வந்ததுக்கான காரணம் நிறைவேறிடுச்சு. இனி எங்களுக்கு நீ தேவையில்ல." என அழுத்தம் திருத்தமாகக் கூறியவரின் குரலில் பூமி சுற்றுவதை கண் முன் உணர்ந்தாள் அதிதி.


இவ்வளவு நாள் தன் உள்ளுணர்வு தனக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்த விஷயம் இது தானா? என தனக்குள்ளேயே மறுகி வார்த்தை வெளிவராமல் கண்ணீருடன் அங்கேயே தொய்ந்தமர்ந்தாள்.


அசையாமல் கல் போல் இருந்தவளிடம், "ச்சீ! என் விக்ரமனோட கால் தூசுக்கு சமமாவியா நீ? இவ்ளோ நாள் விளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டி அழகு பார்த்ததே பெரிய விஷயம். உன்னை என்ன நான் என் வீட்டு மகாராணியா கூட்டிட்டு வந்தேன்னா நினைச்ச? தப்பு! ரொம்பப் பெரிய தப்பு. உன்னை ஒரு கொத்தடிமையா புள்ள பெத்துக் கொடுக்கற மெஷினா நினைச்சு தான் கூட்டிட்டு வந்தேன்." என்று கூற, அவமானத்தில் கூனிக் குறுகினாள் அதிதி.


ஒவ்வொரு வார்த்தையையும் ஜீரணிக்க அவகாசம் தராமலேயே பேசிக் கொண்டேப் போனார் நாச்சியம்மை. அவருக்குள் இருந்த வலி அனைத்தும் வார்த்தை வழியே வெளியேறியது.


"போதும் நிறுத்துமா" என சங்கரப்பாண்டியனும், அங்காள பரமேஸ்வரியும் ஒரு சேரக் கத்தினர்.


"என்ன வார்த்தைமா பேசுற? நீயும் ஒரு பொம்பளை தானா? வயசுப்பொண்ணை போய் புள்ள பெத்துக் கொடுக்கற மெஷினா நினைச்சி தான் கூட்டிட்டு வந்தேனு சொல்லுறியே, உனக்கெல்லாம் நெஞ்சுல ஈரமே கிடையாதா? ச்சே! கடவுள் உனக்கொரு பொம்பளப் புள்ளையை கொடுக்காமப் போய்ட்டானே" என இரண்டு பெண்களுக்கு அம்மாவாய் அங்காளப் பரமேஸ்வரி தன் துக்கம் தாளாமல் குமுறினார்.


"இருபது வருசத்துக்கு முன்னாடி உங்கப் புருஷனும் இப்படித்தான், புள்ளைய பெத்துப் போட்டுட்டு வீட்ல இருக்க வேண்டிய மெஷினெல்லாம் எதுக்கு அரசியலுக்கு வருது? பணம் வேணும்னா வேற தொழில் பண்ண வேண்டியது தானேனு இதே வார்த்தையை தான் என்னைப் பார்த்து நக்கலா கேட்டாரு. அப்போ எங்கம்மா போனீங்க நீங்க? உங்களை மாதிரியே அதுக்கு கொந்தளிச்ச ஒரு நல்ல ஜீவனைத் தான் உங்க புருஷனும், புள்ளையும் சேர்ந்து இந்த உலகத்தை விட்டே அனுப்பிட்டாங்க. என்ன சொன்னீங்க? அந்தக் கடவுள் எனக்கு பொம்பளப் புள்ளைய கொடுக்கலைன்னா? என்னோட ஏழு வயசிலேயே என்னை ஒரு பெண் தேவதைக்கு அம்மாவாக்கிட்டான் அந்த ஆண்டவன். பாவத்தின் நிழலே படாத, ஒண்ணுமே அறியாத என் உயிரைத் தான் என்கிட்டயிருந்து பிரிச்சிட்டானுகளே பாவிக. இவ அப்பன் ஒரு கொலைகாரன். தாத்தன் ஒரு வறட்டு கௌரவப் பிசாசு. இவ மட்டும் என்ன பெரிய உத்தமியா? நான் இப்ப சொன்னதுல என்ன தப்பிருக்கு? இவளை கௌதமனுக்கு கட்டி வைக்கலாம்னு நான் ஒரு பிளான் போட்டுட்டு உங்க வீட்டுக்கு வந்தா, யார் மேல உங்க நிழல் கூட விழக்கூடாதுனு நினைச்சேனோ அவனையே இதுல இணைச்சு விடுற மாதிரி பேசிட்டாரு உங்கப் புருஷன். சொல்ல மறந்துட்டேன் பாருங்க. இப்போ இந்த விசயம் ஊரு பூராவும் எப்படி பரவும்னு தெரியுமா? நல்ல வாழ்க்கையை கெடுத்துக்கிட்டு பெத்த புள்ளையையும் விட்டுட்டு, நாகரீகமாகத் தான் வாழ்வேனு பண்ணைபுரத்து சங்கரப்பாண்டியனோட பேத்தி, புருஷன் கூட சண்டை போட்டுட்டு, வாழாவெட்டியா பிறந்த வீட்டுல போய் இருக்காளாம்னு பரவும். இல்லயில்ல நான் பரவ வைப்பேன். அதுக்கப்புறம் என்ன? என் விக்ரமனுக்கு பொண்ணு கொடுக்க நான் நீனு கூட்டம் போட்டிப் போட்டுக்கிட்டு வரும். தன் ஒரே பொண்ணுக்கு இப்படி ஆகிருச்சேனு அவ அப்பனும், என் செல்லப் பேத்தியோட வாழ்க்கை இப்படி நாசமாப் போயிருச்சேனு நீங்களும் காலம் பூரா அவ முகத்தைப் பார்த்தே கண்ணீர் சிந்துவீங்க. ஹேய் குட்டி! இன்னும் என்ன குத்துக் கல்லாட்டம் உட்கார்ந்திருக்க? நான் சொல்றது உன் காதுல விழல? இப்போ இந்த நிமிஷத்துலயிருந்து உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. எழுந்து வெளிய போ!" எனத் தன் வலக்கையை வாசலை நோக்கி நீட்டினார்.


அதிதி யாரேனும் தன்னை காக்க வர மாட்டார்களா? என நிமிர்ந்து சுற்றிலும் பார்க்க, ராதாவும் கீர்த்தியும் தலை குனிந்திருந்தனர். ஸ்ருதியின் முகத்தில் வெற்றிக்களிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
இவ்வளவு நாட்கள் சொர்க்கம் போல் தெரிந்த அவ்வீடானது இன்று நகரம் போல தெரிய வாரம்பிக்க, தன் காதுகளை மூடி தலைகுனிந்தபடியே முடியாதென கதறியழுதாள் அதிதி.


தன் பெயர்த்தி அழுவது பொறுக்கவில்லை சங்கரப்பாண்டியனுக்கு.


நாச்சியம்மையைப் பார்த்து நியாயம் கேட்டார்.


"நீ பேசுறது எதுவும் சரி இல்லமா. தாயையும் குழந்தையையும் பிரிக்கிறது பாவம்மா." என்றார்.


"அதைச் சொல்ல உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. நாங்க குடுத்த உயிர் பலிக்கு எங்களுக்கு இப்போ ஒரு புது உசுரு கிடைச்சிருக்கு. செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தமா நினைச்சி ஓடிப்போயிருங்க. அட! என்னடா இது? ஐயா பெரிய மனுசரே எப்பவும் மானம், மரியாதை, என் குலம் என்ன? செல்வாக்கு என்னன்னு குதிப்பீங்க? வெளியப் போங்கனு சொல்றேன். நீங்களும் நட்ட மரமா இன்னும் என் வீட்லயே நிற்கறீங்க? நீங்கல்லாம் சோத்துல உப்பு போட்டு தானே சாப்பிடுறீங்க?" என ஏளனமாகக் கேட்க,


"அதிதியை போகச் சொல்லி அவளோட வீட்டுக்காரர் சொல்லட்டும். அப்போ நாங்க அவளை அழைச்சிட்டு போறோம்" என இடைப் புகுந்தான் ஈஸ்வரன்.


அதிதி கர்ப்பமாக இருந்த பொழுது அவளை விக்ரமன் தலையில் தூக்கி வைத்து ஆடியதை முன்பே சிலர் கூறக் கேட்டிருந்தவர், விக்ரமன் அதிதியை கைவிட மாட்டான் என்ற நம்பிக்கையில் இவ்வாறு கூறினார்.


ஆனால் அவனின் மனைவி மானசாவோ, 'அந்தம்மாவே பழி வாங்குறதுக்கு நல்லா பிளான் போட்டு தான் இவளை கூட்டிட்டுப் போயிருக்கு. இப்போ வாழாவெட்டியாவும் வச்சுக்கங்கனு சொல்லுது. இதுல இவரு வேற அவனை சொல்லச் சொல்லு இவனை சொல்லச் சொல்லுனு இழுத்துக்கிட்டே போறாரு. புத்திகெட்ட மனுஷன்!' என இடைபுகுந்த தன் கணவனை மனதில் தாளித்தெடுத்தாள்.


"ஓ! என் புள்ள வந்து சொன்னா தான் நீங்க போவீங்களா? அவனையே வந்து சொல்ல வைக்கிறேன்" என மாடியறைக்குச் செல்லத் திரும்பினார் நாச்சியம்மை.


இவ்வளவு நேரமும் துவண்டு அமர்ந்திருந்தவளுக்கு எங்கிருந்து தான் சக்தி கிடைத்ததோ தெரியாது. யார் என்ன சொன்னாலும் உடலுடன் உயிராய் தன்னுடன் வாழ்ந்தவன் தன்னை கை விடமாட்டான் என்ற நம்பிக்கையில், கடலில் தத்தளிக்கும் மீனவர்க்கு கரை சேரும் நம்பிக்கையை அளிக்கும் கலங்கரை வெளிச்சமாக தன் கணவனை நம்பி, வேகமாக எழுந்து நாச்சியம்மையைத் தாண்டி மாடிப்படிகளில் ஓடினாள் அதிதி.


ஆனால், அது கலங்கரை விளக்கம் அல்ல மின்மினி பூச்சியே என்பதை அறியும் போது அவள் நிலை என்னவோ?
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
இது தானா? இது தானா? எதிர்பார்த்த அந்நாளும் இது தானா? அப்படியே அந்த லைக், கமெண்டை தட்டிவிடுங்க பார்ப்போம். ரணகளத்துலயும் எனக்கு குதூகலம் கேட்குது😂
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom