Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
இந்நாவல் பற்றிய உங்கள் கருத்துகளை இங்கும் பேஸ்புக்கிலும் பகிரலாம் பன்னீர்ஜாமூன்ஸ்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 11



வேறு வழியின்றி தன் குடும்பத்தாருடன் அதிதி வெளியே சென்று கொண்டிருக்கும் போது அம்முலுவின் அழுகைச் சத்தம் கேட்டது.


குழந்தை சிணுங்கியவுடன் பொறுக்க முடியாத விக்ரமன் உடனே நாச்சியம்மையிடமிருந்து குழந்தையை வாங்கி, "அம்முலு என்னடா? ஏன்டா?" எனத் தன் தோளில் போட்டு தட்டிக் கொடுத்தான்.


ஆனால், அவனின் என்னடா ஏன்டாவில் சமாதானமடையாத அவனின் தவப்புதல்வி கூடக் கொஞ்சம் தன் அழுகையை கூட்டினாள்.


உடனே அருகில் நின்ற தன் அத்தை ராதாவிடம் குழந்தையை நீட்டினான் விக்ரமன்.


அவரும் தன்னால் முயன்றதையெல்லாம் செய்து பார்த்தார். ஆனால், அவரின் முயற்சியும் கைக்கொடுக்கவில்லை.


குழந்தையின் அருகில் வந்த நாச்சியம்மை குழந்தையை தன் கரங்களில் வாங்கிக்கொண்டு, "என்னடா? ஏன்டா அலமு? ஏன்? ஏன்?" என தன் கைகளில் வைத்து ஆட்டினார்.


ஒரு முன்னேற்றமும் இல்லை. பால் பாட்டிலை வாயில் வைத்தாலும் குடிக்காமல், நான் இதற்கெல்லாம் அடங்குவேனா? இப்போதே என் அம்மா எனக்கு வேண்டும் எனும் விதமாய் விறீட்டு அழுதாள் விக்ரமனின் திமிரை அடியோடு அழிக்க வந்த அவனின் தாய் அலமேலு மங்கை.


மூச்சுவிடாமல் கத்திய குழந்தை அனைவரையும் கலவரப்படுத்தியது. தன் குழந்தை சிணுங்கியது முதல் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் கதவின் அருகிலேயே நின்று நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அதிதி.


குழந்தையின் அழுகை அதிகமானதும் அவளின் நெஞ்சும் கனக்க ஆரம்பித்தது. கண்கள் கண்ணீரைச் சொரிய தனங்கள் பாலைச் சொரிந்தன.


அந்த வலியை தாங்க முடியாதவள் வேகமாக நாச்சியம்மையை சமீபித்து, "இப்போ நான் போகவா? இல்ல என் குழந்தையோட அழுகையை நிப்பாட்டவா?" எனக்கேட்க, தற்போது அதிர்வது நாச்சியம்மையின் முறையாயிற்று.


தற்போது என்ன செய்வதெனத் தெரியாமல் தலை குனிந்து நின்றவர் குழந்தையை அவளிடம் நீட்ட, அவரின் கையிலிருந்த தன் மகளை வாங்கிக்கொண்டு விருந்தினர் அறைக்குள் புகுந்தாள் அதிதி.


அவளின் பின்னேயே விக்ரமனும் ஓடிச்சென்று கதவை உள்தாழ்ப்பாள் போட்டான்.


வேகமாக ஓடியவள் அங்கிருந்த கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்து, குழந்தையின் முகம் முழுவதும் முத்தமிட்டாள்.


பிறகு தன் குழந்தையின் பசியை உணர்ந்து பால் கொடுக்கத் தொடங்கினாள்.


தன் தாயிடம் சேர்ந்த நிம்மதியில் பசியிலிருந்த குழந்தையும் முதலில் முரண்டு பிடித்து பின், வேகவேகமாக பாலினை உறிஞ்சியது. குழந்தையின் ஒவ்வொரு உறிஞ்சலுக்கும் அதிதியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டித் தீர்த்தது.


அழுது கொண்டிருந்தவளின் அருகில் வந்தமர்ந்தான் விக்ரமன். தன் அன்னையின் மார்பில், எங்கே அது தொலைந்து விடுமோ? என பயத்தில் தன் இரு கைகளையும் பதித்து பசியாறிக் கொண்டிருக்கும் தன் குழந்தையை கண்டு அவனின் இதழ்கள் விரிந்தன.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அவனின் விரிந்த இதழ்களை கண்டவள் தன் முந்தானையை இழுத்துவிட்டுக் கொண்டாள். அவளின் செயலில் கோபம் கொண்டவன், அவளை தன் பார்வைக் கனலால் பொசுக்கி பின், தன் குழந்தையின் மலர்ப் பாதங்களை பிடித்து முத்தமிட்டான்.


உள்ளங்காலில் பட்ட அவன் மீசை தாடியின் குறுகுறுப்பில் குழந்தை தன் கால்களை ஆட்டியது. தன் தவறுக்கான தண்டனையை தன் குழந்தை கொடுப்பதாக எண்ணி, அவனின் அம்முலு தந்த உதைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான் விக்ரமன்.


விருட்டென்று குழந்தையின் கால்களை பிடித்திழுத்தவள் அவனை முறைத்துக்கொண்டே, "நான் உங்கக்கிட்ட உண்மையா தான் இருந்தேன். இப்போ நான் என் தாத்தாக் கூடப்போய் வாழாவெட்டியா இருந்தா, அது என் தாத்தாவுக்கு அவமானம் தான். ஆனா அத்தோட உங்க பழிவாங்கற வெறி போயிடுமா? ம்! சொல்லுங்க? போயிடுமா? ஒருவேளை அப்படி போயிடும்னா ஆளாளுக்கு பழி வாங்கப்போறேனு கிளம்பிட வேண்டியது தான். அப்புறம் அந்தக் கடவுள் உட்பட ஒருத்தரும் நிம்மதியா வாழ முடியாது. கையில தாலியோடத் தான் திரியனும். ஆனா எல்லாரும் என்னை மாதிரி முட்டாளா இருக்க மாட்டாங்க. ச்சே! இன்னும் உங்களுக்கு மரியாதைக் கொடுக்கறேன் பாருங்க. அந்த மரியாதைக்கேத்த மாதிரியா நீங்க நடந்துக்கிட்டீங்க? சரி, உங்க யாருக்கும் தான் இனி நான் தேவையில்லைனு சொல்லிட்டீங்க. பரவாயில்ல. இனி நீங்களும் உங்க குடும்பமும் கூட எனக்குத் தேவையில்ல. ஆனா என் அம்முலுமாவைப் பாருங்க. யாரு என்ன சொன்னா என்னடி? நீ எனக்கு தேவைன்னு நிரூபிச்சிட்டா. இப்போ நான் உயிர் வாழ்றதுக்கான ஒரே பிடிமானம் என் பொண்ணு தான். அவளை யாருக்காகவும் எதுக்காகவும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது. ஒரு தாயில்லாத பொண்ணா என்னென்ன கஷ்டப்பட்டேனு எனக்குத் தான் தெரியும். என் பொண்ணையும் அந்த கஷ்டத்தை அனுபவிக்க நான் விடமாட்டேன். நான் இனி இங்க தான் இருப்பேன். உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கோங்க. என் அப்பாவும் தாத்தாவும் தப்பு பண்ணினாங்கன்னா நெஞ்சை நிமிர்த்தி உங்க வீரத்தை அவங்கக்கிட்ட காட்டுங்க. ஏன் மொத்தக் குடும்பமும் சேர்ந்து என் வாழ்க்கையை நாசமாக்குறீங்க?" என அதிதி வெளுத்துவாங்க, மௌனமாய் தலை குனிந்து அமர்ந்திருந்தான் விக்ரமன்.


பாவம் என்ன பேச முடியும் அவனால்?


வாய் திறக்கிறாரா பார்? என கோபம் கொண்டவள், பேசாமல் இருப்பவனை என்ன செய்வதெனத் தெரியாமல் பசியாறிய குழந்தையை தூக்கிக்கொண்டு ஒரு முடிவுடன் வெளியே சென்றாள்.


அனைவரையும் நோக்கி, "நான் இங்க இந்த வீட்டுல தான் இருப்பேன். இங்கயிருந்து நான் நிரந்தரமா வெளியப் போனா பிணமாத்தான் போவேன்." என அதிரடியாகக் கூறினாள்.


பின், நாச்சியம்மையிடம் திரும்பி, "இவ்வளவு நேரம் சீரியல் வில்லி கணக்கா சூப்பரா வசனம் பேசுனீங்க மாமியாரே. ஆனா என்ன பேசி என்ன புண்ணியம்? என் குழந்தையோட அழுகையை உங்களால நிப்பாட்ட முடியலையே. நான் இப்போ கோர்ட்டுக்கு போனா சட்டப்படி குழந்தையை தாயிடம் தான் தரணும்னு என்கிட்ட தான் கொடுப்பாங்க. ஆனா நான் அப்படி செய்ய விரும்பல. இவங்க ஒரு வருசமா நடிச்சு என்னை ஏமாத்திட்டாங்கனு வெளிய சொன்னேன்னா அது எனக்கு தான் அவமானம். இப்படி ஒரு அவமானத்தை எனக்கு கொடுத்த உங்களை நான் அவமானப்படுத்த வேணாம்? அதான் இங்கயே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அப்பறம் இப்படி குழந்தையைப் பிடுங்கி வெளிய அனுப்புறதெல்லாம் பழைய மெத்தட் மாமியாரே. புதுசா எப்படி பழி வாங்கலாம்னு நீங்களும் உங்க தங்கச்சி புள்ளையும் ரூம் போட்டு யோசிங்க. அப்படியும் யோசனை வரலைன்னா இப்படி உதவி செய்றதுக்காகவே ஆன்லைன்ல நிறைய வெப் சீரிஸ் போடுறாங்க. அதைப் போய் பாருங்க. மறுபடியும் சொல்றேன். இங்க இருந்து வெளிய போகிற ஐடியா எனக்கில்ல. இது என் வீடு. நான் என் குழந்தை கூட இங்க தான் இருப்பேன். உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோங்க. ஒருவேளை நான் இங்க இருக்கறது பிடிக்கலைனா, நீங்களும் உங்க குடும்பமும் இந்த வீட்டை விட்டு வெளியேறிடுங்க. நானும் என் அம்முலுவும் மட்டும் இங்க இருந்துக்கறோம்" என்று கூறிய அடுத்த நொடி,


"ஹேய்! யாருக்கிட்டடி குரலை உசத்தி பேசுற?" என்று சீறினான் விக்ரமன்.


"ச்சு! இங்க பாருங்க மிஸ்டர் விக்ரமன். உங்க நாச்..சூ..ம்மா எங்கக்கிட்ட பேசும் போது மேலே பால்கனில நின்னு வெளிய வேடிக்கை தானே பார்த்துக்கிட்டிருந்தீங்க? இப்போ மட்டும் என்னவாம்? மேல போங்க. இல்ல வாயை மூடிக்கிட்டு கம்முனு நில்லுங்க. பொண்டாட்டிக்கிட்ட மட்டும் தான் பெரிய வீரன் சூரன் கணக்கா துள்ளுறது. நான் தான் உங்களுக்கு இளிச்ச வாய் பாருங்க. அப்பறம் தாத்தா, இன்னைக்கு எங்க வீட்டுல நிலைமை சரியில்ல. இன்னொரு நாள் எல்லோரும் கண்டிப்பா வீட்டுக்கு வரணும். இப்போ போய்ட்டு வாங்க." என வழியனுப்பி வைத்தவள் குழந்தையுடன் மேலே அறைக்குச் சென்று விட்டாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
நாச்சியம்மையைக் கண்டு, பார் என் பேத்தியை என தன் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே கண்களில் மெச்சுதலோடு தன் குடும்பத்துடன் வெளியேறினார் சங்கரப்பாண்டியன்.


இது நாள்வரை பிள்ளைப்பூச்சியாக இருந்தவள் இன்று பாம்பாய் படமெடுத்து சீறுவதைக் கண்டு அதிர்ந்து போய் நின்றிருந்த நாச்சியம்மை, என்ன செய்வது? என்று முழித்துக்கொண்டே தன்னறைக்குள் சென்றார்.


மாலைப் போட்டிருந்த தன் கணவர், தங்கை மற்றும் கொழுந்தனின் புகைப்படத்துக்கு முன்னே அமர்ந்து, 'நீங்க தான் எனக்கு வழிகாட்டனும்' என இரு துளி கண்ணீரையும் சிந்தினார்.


ஹாலிலிருந்த கூட்டம் கலைந்து செல்லவும் விக்ரமனும் தன் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.


நடு இரவில் குடி போதையில் வீடு வந்து சேர்ந்தவன் கண்டது கண்களில் கண்ணீர் தடம் பதிந்து உறங்கும் அதிதியையும், அவள் பக்கத்தில் உறங்கும் தன் அம்முலுவையும் தான்.


தள்ளாடியபடியே வந்தவன் சிறிது நேரம் அவள் முகத்தையேப் பார்த்திருந்து பின் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.


குளியலறையில் கேட்ட சத்தத்தில் விழித்துக்கொண்ட அதிதி எழுந்தமர்ந்தாள்.


குளித்து முடித்து வெளியே வந்தவன் படுக்கையில் அமர்ந்திருந்தவளை கண்டுகொள்ளாமல் நேரே குழந்தையின் மறுபுறம் படுக்கச் சென்றான்.


அதனை தடுக்க நினைத்தவள், "நான் அம்முலுவோட கட்டில்ல படுத்துக்கிறேன்" என அறிவிப்பாக கூறவும்,


கேள்வியாக பார்த்தவனிடம், "ப்ச் நீங்க அந்த சோபாவுல படுத்துக்கங்க" என அவன் முகம் பாராமல் கூறினாள்.


தன் சினத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன், "நீ வேணும்னா உன் கற்பை காப்பாத்த சோபாவுல போய் படுத்துக்கோ. நான் எதையும் காப்பாத்துணுங்கற அவசியமில்ல" என குழந்தையின் மறுபுறம் சென்று படுத்துக் கொண்டான்.


அவனை முறைத்துக்கொண்டே அவளும் திரும்பி படுத்துக் கொண்டாள்.


மறுநாள் காலையில் அவளிடம் எதுவும் பேசாமல் அலுவலகத்திற்கு கிளம்பி கீழே சென்றுவிட்டான் விக்ரமன்.


அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, அதிதியும் குழந்தையை தொட்டிலில் கிடத்தி தூங்கவைத்து விட்டு, தொட்டிலின் மேலிருந்த கண்காணிப்பு கேமராவை ஆன் செய்து, ஐபோன் அளவில் இருந்த ஸ்கிரீனை தூக்கிக்கொண்டு குழந்தையின் நிலையை அதில் பார்த்துக்கொண்டே கீழே டைனிங் டேபிளை வந்தடைந்தாள்.


நிஹாரிகா அமர்ந்திருந்த நாற்காலியின் அருகில் அமர்ந்து ஜானகியம்மாளை தனக்கு பரிமாறுமாறு உத்தரவிட்டாள்.


"கொலைகாரன் மகளுக்கெல்லாம் என் வீட்டுல சாப்பாடு கிடையாது." என்று சீறினார் நாச்சியம்மை.


"கொலைகாரன் மகளுக்கு சாப்பாடு இல்லையா? சரி அப்போ உங்க அலமுவோட அம்மாவுக்கு சாப்பாடு இருக்கா? இன்னும் கொஞ்ச நேரத்துல அவ பசில அழுவாளே? நீங்க கொடுக்குற புட்டிபாலையும் என் பொண்ணு குடிக்க மாட்டா. அவ சும்மா அழுதாலே உங்களால சமாதானப்படுத்த முடியாது. இதுல பசில வேற அழுதா?" என கிண்டலாகக் கேட்கவும்,


விக்ரமன் ஜானகியம்மாளிடம், "அவளுக்கு பரிமாறுங்க" என்றுவிட்டு நாச்சியம்மையைப் பார்க்க, அவர் அதியையை கண்களால் எரித்துக் கொண்டிருந்தார்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
இந்தப்பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய் மாதிரி, இந்த நாவலை எழுதிக் கொண்டிருப்பவர்‌ உங்கள் ஷிவானி செல்வம். ரிவ்யூ எழுதும் போது யாராவது நித்யா கார்த்திகன் அக்கா பேரை போட்டு‌ வச்சீங்க‌... அழுதுருவேன் அழுது.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom