Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

vaishnaviselva@

Well-known member
Messages
275
Reaction score
215
Points
63
so happy happyyyyyyyyyyyyyy ending semma sis :love: :love: :love: :love: :love:story romba alaga move aagai semma ending la spr mudichigga sis but seekkrama mudistigga ............ALL THE BEST AKKA..........:love:(y)(y)
 

Hanza

Member
Messages
64
Reaction score
60
Points
18
#hanzwriteup

#அன்பே_அன்பே_கொல்லாதே

Anti-hero னு சொல்லி ஏமாத்திட்டீங்க நீங்களும். 🤣🤣🤣

குறள் ஒரு handsome hunk. Anti-hero னு நம்ப வைக்க try பண்ணியிருக்கிறீங்க.. But எந்த கோணத்துலையும் அவனை என்னால அப்படி ஏத்துக்கொள்ள முடியல... He cares for everyone. Specially his song beauty. 😍😍😍
அவனோட நிலையில இருந்து பார்த்தால் அவன் செய்தது எல்லாம் நியாயமானதே.
எனக்கு அவன்மேல் துளி கோபம் கூட வரல..
அவன் யாரையும் abuse பண்ணல.. அவனோட தாய் பாசத்திற்கான ஏக்கமும் மனவேதனையின் வெளிப்பாடுமே தான் இது..

தாத்தா பாட்டியோட சுயநலத்தினால இவனோட சிறுபராயமே தொலைஞ்சு போச்சி... எவ்ளோதான் பணம் கொட்டி இருந்தாலும் பாசத்துக்கு ஏங்குகிற ஏழை தான் அவன்..
😢😢😢😢😢
வினு வினு னு பாவினி மேல காட்டுற அக்கறை காதல் எல்லாம் சூப்பர்.. ஆனாலும் அது வேற இது வேற னு அவனோட கெத்தை விட்டு கொடுக்காமலே காரியத்தை சாதிச்சது எல்லாம் வேற லெவல் 🥳🥳🥳

பொதுவாக anti-hero கதைகளில் வாரது போலில்லாமல் heroine ஓட நிமிர்வையும் குலைக்காமல் பாவினியோட character ஐ mould பண்ணிய விதம் அருமை.. கடைசி வரை அவள் அவளாகவே இருந்தாள் அவன் மீது காதல் கொண்ட போதும் கூட... 👏🏻👏🏻👍🏻👍🏻👌🏻👌🏻

தூயவன் என்ன தான் நல்ல மனுஷனா இருந்தாலும் கணவன் மனைவி என்று வரும் போது அவரு too much ஆக பண்ணினாரு.. 😒😒 அவரோட வயசுக்கு இந்த பிடிவாதம் தேவை தான் 😏😏😏 ஆனாலும் அவரு சிறந்த அப்பா 👌🏻👌🏻👌🏻

நாவேந்தி நேயவாணன் இரண்டு பேருமே great.. நாவேந்தி ரொம்ப பாவம்...
🙄🙄🙄😢😢😢
அந்த கிழவி மேலே அவ்வளவு கோவம் வருது... நல்ல வேளை செத்து போச்சி.. இல்ல அம்மியை தலையில தூக்கி நானே போட்டிருப்பேன்... 😡😡😡

எழிலியை செல்வச்சீரனுக்கு ஜோடி ஆக்குவீங்கன்னு நினைச்சேன்.. ஆனால் கவினுக்கு ஜோடியாக்கிட்டீங்க.. அதுவும் நல்லா தான் இருக்கு.. 👍🏻

ஆனால் பாவம் செல்வா தான்.. 😒😒😒
அவனுக்கும் ஜோடி போட்டிருக்கலாம் 😋😋😋

வாழ்த்துக்கள்

💐💐💐
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
#ஜோதிரிவ்யூ

அன்பே அன்பே கொல்லாதே

இனிதா மோகன் குமார்

சகாப்தம் தள போட்டிக்கதையான "அன்பே அன்பே கொல்லாதே" க்கான விமர்சனம்

இது ஆன்டி ஹீரோ கதையா என்று சந்தேகமாக போய் விட்டது.
அத்தனை தூரம் நாயகனின் குணம் நம்மை கவர்கிறது.

ஆண்களுக்கு அழகே அவர்களது கம்பீரம், கோபம், எந்நிலையிலும் தன்னிலை இறங்காத குணம், திமிர் தான். ஆனால் அப்படிப் பட்டவனையும் ஆட்டிப் படைப்பது அவனது துணையன்றி வேறு யாராக இருக்க கூடும்.

நாயகன் மீது மோதி விட்டு மன்னிப்பு கேட்காமல், அவனிடமே எதிர்த்து பேசும் நாயகி. அவள் மீது கொண்ட கோபத்தில் குரல் வளையை இருக்கும் நாயகன் என்று அவர்களது முதல் சந்திப்பு நிகழ்கிறது.

அப்பா மீதான பாசம், குடும்பத்தினரின் மீதான அக்கறை, அன்பைக் கண்டு கோபம், பொறாமை கொள்ளும் நாயகன். அவளது அப்பா மீதான கோபத்தில் பழி வாங்க துடிப்பதும், அவள் தோழியிடம் அவனைப் பற்றி தவறாக பேசுவதை கேட்டுவிட்டு பதிலடி கொடுக்க நினைப்பதும் வாசிக்க அருமையாக இருந்தன.

விபத்தில் விழுந்தவளை தூக்கி கொண்டு போகும் போதும், அவளை வீட்டுக்கு பார்க்கப் போகிற போதும் நாயகனின் மிடுக்கும், வசன உச்சரிப்பும் அருமை.

நாயகியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் நாயகன், அதற்கான முயற்சிகளில் இறங்க, அவரோ மறுத்து வேறு மாப்பிள்ளை பார்த்து மண மேடை வரைக்கும் சென்று விடுகிறது. அவளது கழுத்தில் தாலி கட்டுவது யார்? நாயகியின் அப்பாவிற்கும் அவனுக்கும் என்ன முன் விரோதம் ? எதற்கந்த கோபம்? தந்தையின் பேச்சைக் கேட்டு நடக்கும் மகள் நாயகனை மணம் புரிகிறாளா? அவனை ஏற்றுக் கொள்கிறாளா? அவனது தாயாரின் மீது அவனுக்கு என்ன வெறுப்பு ? எதற்கந்த சீற்றமான வார்த்தைகள் உச்சரிப்பு… என்று தெரிந்து கொள்ள, அத்தியாயங்களை வாசியுங்கள்.

நாயகியின் தம்பி பாசம் அருமை. அக்காவிடம் பேசுவதும் அவனிடம் பேசாமல் விலகுவதும் அழகு. அதிலும் மாப்பிள்ளை செல்வ சீரனைக் கண்டு, நாயகன் கோபப்படும் இடங்கள் எல்லாமே ரசனை.

கடைசி அத்தியாயம் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் அத்தனை வேகம். இன்னும் கொடுத்திருந்தாலும் வாசிக்க தூண்டிய கதையோட்டம். அருமையான நகர்வுகள்.

மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கவும், போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துகள்💐💐💐

தொடர்கதைக்கான லிங்👇👇👇

 

MSRD. Rathi

Member
Messages
32
Reaction score
29
Points
18
சூப்பர் 👍👍👍👍..அருமையான கதை 💐💐💐💐💐
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது இதிலுள்ள அழகான தூய தமிழ் பெயர்கள்....👏👏
 

Latest posts

New Threads

Top Bottom