Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஆழம் விழுதாக ஆசைகள்

Messages
1
Reaction score
0
Points
1
ஆழம் விழுதாக ஆசைகள் - 1

காலை தென்றல் முகத்தில் மோத தூரத்தில் உதயமாகும் கதிரவனையே முறைத்து பார்த்து கொண்டிருந்தாள் சாந்தினி. சென்னையின் நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் அழகான அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றின் பால்கனியில் நின்று கீழே வாக்கிங் செல்லும் முதியவர்களையும், ஓடி விளையாடும் சிறுவர்களையும் பார்த்து கொண்டிருந்தாள் சாந்தினி.

சாந்தினி 26 வயது இளம்பெண் , ஒடிசலான தேகமும், 5 அடி உயரமும் கொண்டவள்,கண்களில் கோவத்தை ஏந்தி அந்த கோபத்தில் தனது பயங்களை மறைக்கும் முகமூடியை அனிந்திருப்பவள். MCA முடித்து ஒரு கல்லூரியின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறாள். சாந்தினியின் தந்தை பரந்தாமன் மத்திய அரசு வேளையில் இருந்து ஓய்வு பெற்றவர். தாய் விசாலாட்சி இல்லத்தரசி , சாந்தினியின் உடன்பிறப்பு கண்ணன் 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறான். வீட்டிற்கு மூத்தவள் என்பதால் கொஞ்சம் பொறுப்பான பெண் .

எதையோ யோசித்து கொண்டிருந்தவள் மணியை திரும்பி பார்க்க, மணி 7 .15 என்றதும் கண்ணில் எரிமலையை ஏந்தி " எருமைகளா இப்ப எழுந்திரிக்க போறிங்களா இல்ல மூஞ்சில சூடு தண்ணிய ஊத்தவா " என்ற குரலுக்கு சற்றே அசைந்து கொடுத்தவள் சாரா " எழுந்திரிச்சுட்டேன் சாண்டி " என்றவாறு மெதுவாக எழுந்து படுக்கை அறையை விட்டு நழுவினால் .

அதுபோல் எந்த கவலையும் இல்லாமல் தன் தூக்கம் ஒன்ரே குறியாக கட்டிலில் படுத்து கொண்டிருந்தாள் துர்வா " லே துர்வா இப்ப நீ எழுந்திரிகாரிய இல்ல உன்ன ரூம்ல விட்டு கதவ பூட்டிட்டு நானும் சாராவும் காலேஜ் கிளம்பவே?" என்ற கோபக்குரலுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லாதது போல் உறங்கும் தோழியை முறைத்து பார்த்து விட்டு ஒரு தலையணையை எடுத்து அடிக்க துவங்கினால் சாண்டி என்ற சாந்தினி.

சாந்தினியின் அடியை சட்டை செய்யாமல் " இந்தா லே காலேஜ்க்கு லேட் ஆய்டுச்சுன்னு சொல்லிட்டு ஏன் பெட்ல என்னத்த கபடி ஆடிட்டு இருக்க?போ போய் கிளம்புற வேலைய பாரு " னு அசால்டாக சொல்லிவிட்டு குளியலறை சென்றாள் துர்வா .

இவை அனைத்தையும் தங்கள் படுக்கையறை வாசலிலே நின்று பார்த்து கொண்டிருந்த சாரா சிரிக்க தொடங்க, அவள் மேல் பாய தயார் ஆனால் சந்ந்தினி " உனக்கென்ன சிரிப்பு?" என்றவளை கண்டுகொள்ளாமல் சமையல் அறை நோக்கி திரும்பிய சாரா " உனக்குத்தான் அவளை பத்தி தெரியும்ல அப்பறம் எதுக்கு அவளை போய் எழுப்புர? " என்று சாந்தினியை அமைதி படுத்தினாள் சாரா.

சாரா, துர்வா, சாந்தினி மூவரும் ஒன்றாகவே வளர்ந்து,படித்து, இன்றும் ஒரே கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை நட்பு என்ற ஒரே போர்வையில் அடைத்து விட முடியாது, ஒருவரை பற்றி மற்றவை புரிந்துகொண்டு செயல் படுபவர்கள், சுருக்கமாய் சொல்லவேண்டும் என்றால் தனி தனி பெற்றோருக்கு பிறந்த "triplets" என்று சொல்லலாம்.

சாரா 5.5 அடி உயரமும், உயரத்திற்கு ஏற்ற உடல்வாகும் இருப்பவள். தோழிகள் மூவரும் மதுரை அருகில் ஒரு கிராமத்தை சொந்த ஊராக கொண்டவர்கள். சாராவின் தந்தை தேவேந்திரன் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். தாய் வாசுகி இல்லத்தரசி, ஒரு தங்கை பிரியா 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறாள்.

துர்வா 5.5 அடி உயரமும்,சற்றே பூசினால்போல் உடல்வாகும் கொண்டவள். துர்வாவின் தந்தை சக்கரவர்த்தி சொந்தமாய் தொழில் செய்து உயரத்தில் இருப்பவர். தாய் சிவகாமி இல்லத்தரசி. உடன்பிறப்பு ஒரு அன்னான் விஸ்வேஸ்வர் , தந்தையின் ஆடை வடிவமைப்பு தொழிலை திறம்பட நடத்தி கொண்டிருப்பவன்.

இவர்களைப்போல் இவர்களின் குடும்பமும் ஒருவருக்குள் ஒருவர் பிணைந்தே இருப்பவர்கள்.

சாந்தினி,சாரா,துர்வா இவர்களின் நட்பும், இவர்களின் வாழ்க்கையில் இனி வரும் திருப்பங்களே தொடர்ந்து பார்க்க போகிறோம்.

தொடரும்....
 

New Threads

Top Bottom