Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL இராவண காதலி - Tamil Novel

Status
Not open for further replies.
இராவண காதலி

கொல்வேன் வெல்வேன் - 4

உடலில் பல காயங்களுடன் ஆங்காங்கே கசிந்து காயந்த இரத்தமும் கண்களில் கண்ணீருடன் அவ்வறையில் சுருண்டு கிடந்த நாகநாதனிற்கு சற்று முன்பு நிகழ்ந்த நிகழ்வு கண்களின் முன்பு நிழலாடியது.

"இத்தன நாள்ல என்னன்ன தெரிஞ்சுகிட்டன்னு கேட்டேன்?" என VK கேட்க

"அது.. அண்ணா.. நான்.." என்று தடுமாறியவனை அறைந்தவன்

"இந்த பயந்த மாதிரி நடிக்கிற வேலையெல்லாம், இருக்க கூடாது. ஏன்டா, யார் நடிக்கிரா, யாரு உண்மையா இருக்கான்னு கண்டுபிடிக்க தெரியாத அளவுக்கு என்னைய முட்டாளுன்னு நினைச்சுட்டியா?" என்று மீண்டும் அறைந்த வேகத்தில் இதழ்கள் கிழிந்து இரத்தம் கசைய கண்கள் கலங்கியது நாகநாதனிற்க்கு.

மாறன் மற்றும் கிளம்ப தயாராய் இருந்த கடைசி குழு மட்டும் இருவரையும் அமைதியாய் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

"நீ யாரு, எதுக்காக, ஏன் வந்துருக்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்." என்று VK கூற அதிர்ச்சியில் கண்கள் விரித்தான் நாகநாதன்.

"எப்படி, எப்படி.. கூட்டத்துல இருக்கவன் ஒருத்தன பிரண்டு பிடிப்ப, திடீர்ன்னு ஒருநாள் நானும் உங்க கூட சேர்ந்துக்குறேன்னு சொல்லி வருவ, அவன் வந்து என்கிட்ட கேட்டதும், நானும் சரி, சேர்ந்துக்க சொல்லுன்னு சொன்னதும், என்னைய என்ன முட்டா பயன்னு நினைச்சியா?" என்றவன் மீண்டும் அறைந்து "VKடா!!" என்றிட நிலைதடுமாறி நின்ற நாகநாதனின் இதழ்களில் இரத்த கசைவு அதிகமானது.

"நீயா அவன் கூட பிரண்ட் ஆகலடா, நான் ஆக வச்சேன். நீயா வந்து சேந்துக்குறேன்னு சொல்லலடா, நான் சொல்ல வச்சேன்." என கூறியவனை அதிர்ச்சியும் பயமுமாய் உடல் நடுக்கத்துடன் பார்த்தான் நாகநாதன்.

"இப்போ! நடுங்குது பாரு, இதுக்கு பேருதான் உண்மையான பயம். ஏன்டா, என்னைய பத்தி என்ன நினைச்ச?" என்றவன் "மாறா!!" என்று கத்தியபடி கைகள் நீட்ட

மாறன் ஓடிச் சென்று சிறுசிறு முள் கம்பிகள் பொருந்திய சாட்டையை எடுத்து VKவிடம் கொடுத்துவிட்டு தூரம் செல்ல நாகநாதன் சர்வமும் அடங்கி VKவையும் சாட்டையையும் பார்த்தவாறு நின்றான்.

"எங்க போச்சு அந்த கோவம்? எங்க போச்சு அந்த நரித்தனம்? எங்கடா போச்சு அந்த கொலவெறி?! எடு!! எடுடா அந்த கத்திய!" என்று கத்த நாகநாதன் நடுநடுங்கி போக வேடிக்கை பார்த்தவர்களின் நிலையும் அதுவே.

"ம்ம்... சரி, நான் இத கீழ போடுறேன். எடு, நான் வெறும் கையோடே இருக்கேன். நீ கத்திய எடு." என்று அந்த முள் சாட்டையை கீழே போட நாகநாதனின் நடுங்கிய கைகள் தன் முதுகின் பின் வைத்திருந்த கத்தியை எடுத்தது.

"ஆனால், எப்போ உன்னோட கத்தி என் கைக்கு வருதோ, அப்போ உன்னோட கத்தி உன்னை நோக்கி கீறும். கீற வைப்பேன். அதுவும் உன்னைய வச்சே." என்று தன் கை காப்பை மேலே ஏற்றினான் VK.

மீதமிருந்த குழுவும் மாறனும் ஆர்வத்தில் சற்றே அருகில் வந்திட VK அவர்களை நோக்கி பார்வை செலுத்திய கணம் அனைவரும் பின்னே சென்றனர்.

அவ்விடைவெளியில் குத்த முயன்ற நாகநாதனின் கையை பற்றியவன் அவனை நோக்கி திரும்பினான்.

"உன்னோட மூவ் சரிதான். ஆனால் பாரு, அது யார நோக்கிங்குறதுல தப்பு பண்ணிட்ட." என பிடியை இறுக்க வலியில் துடித்தவன் கத்தியை நழுவவிட அதை சரியாய் பிடித்தான் VK.

"நான் சொன்ன வார்த்தைய மீறமாட்டேன். இந்தா உன் கத்தி." என்று மீண்டும் நாகநாதனின் கைகளில் திணித்த மறு நொடியினில்

நாகநாதன் உடலில் வலி உணர தடுமாற்றத்துடன் தன் உடலினை காண அதில் பல கீறல்களால் இரத்தம் கசிந்துக் கொண்டிருக்க அதிர்ச்சியுடன் VKவை பார்க்க வேடிக்கை பார்த்த மற்றவர்களின் நிலையும் அதுவே.

"நீ நாள் கணக்க போடுற ஸ்கேட்ச்சுக்கு எனக்கு கண்ண சிமிட்டுற ஒரு நொடி போதும்டா. போட்டு போயிட்டே இருப்பேன்." என்ற நொடி நாகநாதன் மயக்கத்தில் சரிய ஏளனமாய் புன்னகைத்தவன் "மாறா!" என்றழைக்க விரைவாய் ஓடி வந்தான் மாறன்.

"இவன ரூம்ல தூக்கி போடு. அப்றமே கவனிச்சுக்கலாம்." என்றுவிட்டு "நின்னு வேடிக்க பார்க்காம உங்களுக்கு கொடுத்த வேலைய கவனிக்க போங்க." என கூற அடுத்த நொடி அனைவரும் கிளம்பினர்.

மாறன் நாகநாதனை தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல VK ப்பிஎம்ட்டி நோக்கி சென்றான்.

இவையனைத்தையும் நினைத்து பார்த்த நாகநாதனிற்க்கு கண்களில் கண்ணீர் நிற்க்காமல் வெளிவர எழுந்தமர நினைத்தவனால் இயலாமல் போனது காயங்களின் வலியினால்.

'நான் அமைதியாவே இருந்துருக்கனும். இனி என்னால தப்பிக்க முடியாது. VKவ எதிர்த்து யாராலையும் எதுவும் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சப்றமும் நான் இங்க இருந்துருக்க கூடாது. நான் சாக போறது உறுதி.' என்று தன் நிலையெண்ணி கண்ணீர் வடித்தான்.

*******

"எஸ் சார், எனக்கு கொடுக்கபட்ட கேஸஸ் வச்சு செக் பண்ணப்போ அப்படித்தான் தோணுச்சு. நாம ஏன் அப்படி ட்ரை பண்ண கூடாதுன்னு." என ஸ்ரீபதியனிடம் கூறிக் கொண்டிருந்தான் பத்து பேர் கொண்ட குழுவில் ஒருவனான கண்ணன் என்பவன்.

"எதனால அப்படி தோணுச்சுன்னு சொல்றீங்களா?" என்று ஆர்வத்துடன் கேட்டான் ஸ்ரீபதியன்.

"சார், நீங்க கொடுத்த புத்தகத்துலையும் சரி, கொடுத்திருக்க ஃபைல்லையும் சரி. அக்யூஸ்ட் ஆண் பெண்ணுன்னு பேதம் பார்க்கல. சோ அவன்கிட்ட இரக்கம் எதிர்பார்க்க முடியாது."

"எஸ்..."

"அதே போல. செத்தவங்கல்ல யாரும் நல்லவங்களும் கிடையாது. எல்லாருமே 3rd க்ரேட் கிரிமினல்ஸ்தான். அதே போல போலீஸா இருந்தவங்களும் ஒரு வகைல கிரிமினல்ஸாதான் இருந்துருக்காங்க."

"அப்போ நாம கொலகாரன கண்டுபிடிக்காம கிரிமினல்ஸ்ஸ வாட்ச் பண்ணாலே அவன பிடிச்சற்லாம்னு சொல்ல வறீங்களா?"
என ஸ்ரீபதியன் கேட்க

"எஸ் சார். நீங்க சொன்னது போல அவன் டார்ச்சர் பண்ணி கொலை பண்ணிருக்கான்னா, கண்டிப்பா அவன் கடத்துனதும் கொலை பண்ணமாட்டான்னு தான் தோணுது. சோ, நாம பதட்டபடாம கரைக்ட்டா அனலைஸ் பண்ணோம்னா நாம ஈஸியா அவன நெருங்கிடலாம்." என்று கண்ணன் முடித்தான்.

"எஸ், அவன் கடத்துனதும் கொலை பண்ணமாட்டான்டான். பட், எத்தனை நாளுக்கு வச்சு டார்ச்சர் பண்ணுவான்னு நம்மலால சொல்ல முடியாது கண்ணன். பொறுமையா அனலைஸ் பண்றத்துக்கான நேரமும் நம்மகிட்ட கிடையாது. ஒவ்வொரு கிரிமினல்ஸ் பின்னாடியும் நம்மலால போயிட்டு இருக்க முடியாது." என்றவன் "வேற யாருக்காவது எதாவது தெரிஞ்சுதா?" என கேட்டான்.

"சார், இப்போ இருக்க நிலைமைல எங்க வேண்டும்னாலும் எப்போ வேண்டும்னாலும் அடுத்தடுத்து கொலைகள் நடக்கலாம். ஏன்னா இத்தன கொலைகள பண்ண தெரிஞ்சவனுக்கு உங்கள தெரியாம இருக்குமா சார்? சோ இப்போ அக்யூஸ்ட் நம்பல வாட்ச் பண்ணிட்டுதான் இருப்பான்." என்றான் வினோத் என்பவன்.

"ம்ம்... அவனுக்கு என்னைய நல்லாவே தெரியும் வினோத். ஏதோ ஒரு காரணத்துக்காகதான் அவன் இன்னும் என்னைய எதுவும் பண்ணாம இருக்கான்." என தன் முன் இருந்த கதை புத்தகத்தினை பார்த்தவாறு யோசனையுடன் கூறியவன் "எஸ்!!" என புத்தகத்தினை வேகமாக புரட்டினான்.

*******

VKவின் கோபம் நிறைந்த கண்களை கண்ட நாகவந்தனாவிற்க்கு 'அவனது கோபம் நிறைந்த கண்கள் சொல்லும் தீப்பிழம்பின் கொதிநிலை என்னவென்று.' என்ற தான் எழுதிய வரிகள் நினைவு வந்திட உறைந்து நின்றாள்.

VKவின் கத்தி அவளின் கழுத்தில் சிறிதாய் ஆழம் பதிய வலியை தாங்கிக் கொண்டாளே தவிர VKவிடமிருந்து பார்வையை விலக்கவிலக்கமால் இருந்தவளிற்க்கு தனது ஒவ்வொரு வரிகளும் நினைவிற்க்கு வந்தது.

'அவனின் இறுகிய உதடுகள் கூறும் இரும்பின் இறுக்கம் என்னவென்று'

'அவனின் முறுக்கிய மீசை கூறும் ஆண்மைக்கு மீசையில் எத்தனை கர்வம் உண்டென.'

'அணிந்திருக்கும் கை காப்பும் கூறும் அவன் கோபத்தின் ஏற்ற இறக்கங்கள் எவ்வளவென்று.'

'நரம்புகள் புடைத்தெழ அவன் பிடித்து தூக்கியெறிந்த வளைந்த கத்தியும் கூறும் அவனின் வேகம் என்னவென்று.' என தனது வரிகளை நினைவுக் கூர்ந்துக் கொண்டிருந்தவள் அதிகமான வலியால் நடப்பிற்க்கு மீண்டாள்.

VK தன் கை விரல்கள் ஒவ்வொன்னிறிலும் காயம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதை கண்டவள் வலியால் கத்தத் துவங்கினாள்.

"ப்ளீஸ்!!! வேண்டாம்!!! வலிக்கிது!! வேண்டாம்!!" என்று கத்தியவளை அறைந்த வேகத்தில் மயங்கினாள்.

VK அர்ஜூனனை காண ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்தவன் நாகவந்தனாவின் முகத்தில் தெளித்ததும் மெதுவாய் கண் விழிக்க தன் முன் நிற்க்கும் VKவை தெளிவில்லா பிம்பமாய் கண்டாள்.

சத்ரியனை நோக்கி கை நீட்ட அவனோ VKவிடம் புத்தகத்தினை கொடுக்க "இதுல வர வந்தனா அவளோட இராவணன பார்த்ததும் என்ன சொல்லுவாளோ அததான் நீ சொல்லனும். அதவிட்டுட்டு என்னைய பார்த்துட்டே நிக்குற? எங்க, இப்புத்தகத்தில் வரும் வந்தனா என்கின்ற நாகவந்தனாவாகிய நீ, இராவணனாகிய இந்த VKவை கண்டதும் இப்புத்தகத்தில் என்ன கூறினாயோ அதை மட்டும் கூறு பார்ப்போம்." என அவளின் புத்தகத்தை அவள் மீது நக்கலுடன் தூக்கியெறிய கண்ணீருடன் புத்தகத்தை அணைத்துக் கொண்டு ஏறிட்டாள்.

"ம்ம்... கூறுங்கள் கதாசிரியரே, ம்ம்.. படிச்சு சொல்லு!!" என்று சாந்தமாய் துவங்கி கோபமாய் முடித்திட நாகவந்தனாவின் இரத்தம் கசையும் விரல்கள் நடுக்கத்துடன் பக்கங்களை புரட்ட கண்ணீர் துளிகள் புரட்டும் பக்கங்களில் விழுந்து தெரித்தது.

குறிப்பிட்ட பக்கத்தை எடுத்தவள் படிக்கத் துவங்கினாள்.

"நீ?! நீ?! நான்!" என படித்துக் கொண்டிருந்தவளை தன் கத்தியால் நிமிந்திட செய்தவன்

"நானேதான் நீ உருவாக்குன ராவணனே..தான்!!!!!!!" என்று பற்களை கடித்துச் கொண்டு கூற நாகவந்தனாவின் கண்ணீர் VKவின் கத்தியில் விழுந்தது.

"உன் புத்தகம் எனக்கு ரொம்ப பிடிச்சது. அதே அளவு பிடிக்காமலும் போனுச்சு. எந்த அளவுக்கு உண்மைய சொல்லிருக்கியோ, அந்த அளவுக்கு உனக்கு இழப்பும் ஏற்படும். அதுவும் உன் கண் முன்னாடியே. அதுல முதல் இழப்பு." என்று இளோங்கோவை பார்க்க இளங்கோ சரியென தலையசைத்து சென்றவன் ஐவரின் மயக்கத்தையும் தெளியச் செய்து கை கட்டைத் தவிர்த்து மற்ற கட்டுகளை அவிழ்த்தான்.

"இதோ உன் முன்னாடி இருக்க ஐந்துபேர்ல ஒருத்தர்." என்றதும் பதறினாள்.

"இரு... இரு... நான் எடுத்தவொடனே கொல்லமாட்டேன். எனக்கு தேவையான பதில் கிடைக்கனும், அதுவும் உண்மையான பதில் மட்டும்தான் கிடைக்கனும்." என்றான் பொறுமையாக.

"நான்... நான்.. உண்மைய சொல்றேன். ப்ளீஸ்! அவங்கள எதுவும் செய்யாதிங்க." என கைகள் கூப்பினாள்.

"உனக்கு உன் தம்பிய ரொம்ப பிடிக்கும்ல. அவன்கிட்டருந்தே ஆரம்பிப்போம்." என்று எழுந்தவன் அர்ஜூனனிடம் தன் எதிரேயிருந்த இளங்கோவிற்க்கு கால் செய்ய கூற குழப்பமாய் பார்த்தாள் நாகவந்தனா.

"புரியலையா? உனக்கு எதிர்ல இருக்கவங்கள நீ பார்க்க முடியும். அவங்க பேசுறத நீ கேட்க முடியும். ஆனால், அவங்களால ம்ம்ம்ஹூம்..." என தன் முன் சிறு இடைவெளியில் வித்தியாசமின்னிறி வீற்றிருந்த கண்ணாடியை தட்டிக் காட்டிட அதிர்ச்சியானாள்.

"டேய், அவ தம்பிய முன்னாடி கொண்டு வா." என்றதும் இளங்கோ சஞ்சீவை சற்று முன்னே இழுத்து மண்டியிட செய்யது கழுத்தினில் கத்திளை வைத்திட

"என் பையனுக்கு ஒன்னும் தெரியாது! தய்வு செய்து அவன ஒன்னும் பண்ணீடாதீங்க ப்ளீஸ்! அவன் சின்ன பையன் அவனுக்கு ஒன்னும் தெரியாது!" என்று நாகேஷூம் சக்தியும் கதறிட

"அண்ணா ப்ளீஸ்! அவன் சின்ன பையன்! அவனுக்கு எதுவுமே தெரியாதுண்ணா! விட்டுடுங்க ப்ளீஸ்!" என சாதனாவும் கீர்த்தனாவும் கதறினர்.

ஆனால் சஞ்சீவோ "என் அக்காவ பார்க்கனும். அக்காவ பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு அங்கிள். ஒரே ஒருதடவ என் அக்காவ பார்க்கனும் அங்கிள். ப்ளீஸ்!" என்று கெஞ்ச இளோங்கோவின் மனம் சற்று கனத்தது.

இவையனைத்தையும் கண்ணாடியை பல முறை அடித்துக் கொண்டும் VKவிடம் கெஞ்சிக் கொண்டும் பார்த்திருந்தாள் நாகவந்தனா.

எதற்க்கும் அசையாதவன் "உன் தம்பி கொஞ்சம் மூளை வளர்ச்சி இல்லாதவன்தான?" என கேட்க கண்ணீரும் கோபமுமாய் ஏறிட்டவளிடம் "எனக்கு தேவையெல்லாம் உண்மை." என்று கத்தியால் புத்தகத்தினை காட்டினான்.

"என்னோட கற்பனை." என்றுதும்

"அழுத்துடா!!" என VK கத்த இளங்கோ சஞ்சீவின் கழுத்தில் வைத்திருந்த கத்தியை அழுத்த சஞ்சீவ் பயத்தில் அழத் துவங்கினான்.

"அய்யோ! தய்வுசெய்து என் பையன விடுங்க! எங்கள என்ன வேணும்னாலும் பண்ணுங்க!! எங்க பையன விட்டுடுங்க!" என்று பெற்றோரும்

"ஒரு சின்ன பையன இப்படி கஷ்டபடுத்துறீங்களே உங்களுக்கே நியாயமா இருக்கா?! எங்கள என்ன வேணும்னாலும் பண்ணுங்க! அவன விட்டுடுங்க!" என தோழிகளும் அழுதிட

"நான் சொன்னது உண்மை. தய்வு செய்து என்னைய நம்புங்க! என் தம்பிய விட்ருங்க ப்ளீஸ்! அவன் சின்ன பையன். நான்தானே எல்லாத்துக்கும் காரணம் எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க. பாவம் அவங்கள எதுக்கு காயப்படுத்துறீங்க?" என்று VKவிட கை கூப்பி வேண்டிக் கொண்டிருந்தவள் "மனுசனா நீங்க?! ஒரு சின்ன பையன ஈவு இரக்கம் இல்லாம காயபடுத்துறீங்க?!!" என்று கோபமாய் கத்தினாள்.

"அது உனக்கே தெரியுமே, நான் யாருன்னு?" என்றவன் மீண்டும் இளங்கோவிடம் "டேய்! அழுத்த சொன்னா என்ன, கழுத்த தடவி கொடுத்துட்டு இருக்கீயா?! அழுத்துடா!" என கோபமாய் கூற இளங்கோ சஞ்சீவின் கழுத்தை மேலும் அழுத்த இரத்தம் கசியத்ந துவங்கியது.

சஞ்சீவ் வலியில் கதறிட "ஏன் இப்படி பண்றீங்க?! நீங்க உண்மைதான் வேணும்னு சொல்றீங்க, உண்மைய சொன்னா நம்ப மாட்டேங்குறீங்க? உங்களுக்கு பிரச்சனை என்னோடதானே?! என்னைய என்ன வேணும்னாலும் பண்ணுங்க. என்னோட குடும்பத்தையும் பிரண்ட்ஸையும் விட்டுருங்க!" என்று அழுகையும் கோபமுமாய் கூறினாள்.

"உண்மைய உண்மையா சொல்லனும். இல்லன்னா ஒவ்வொருத்தரா உசுரவிட்டுட்டேதான் இருப்பாங்க." என எச்சரித்தான்.

"அய்யோ! நம்புங்க. ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க?!!" என்று நாகவந்தனா கத்த கோபமானவன்

"அறுத்துவிடுடா!!" என VK கத்திய நொடி இளங்கோவின் கத்தி சஞ்சீவின் கழுத்தில் ஆழமாய் பதிந்தது.

கண்ணீருடன் துடித்துடித்தபடி கீழே விழுந்த சஞ்சீவை கண்ட பெற்றோரும் தோழிகளும் "சஞ்சூ!!!!" என அலறிட

"சஞ்சூ!!" என்று அதிர்ச்சியுடன் மயங்கினாள் நாகவந்தனா.

"அவன் சாகுறத்துக்குள்ள இவ முன்னாடி கொண்டு வந்து போடுங்கடா. அவனோட கடைசி ஆசை நிறைவேறட்டும். டேய், அப்படியே இவள தெளிய வைங்க சீக்கிரம், அவன் உசுறு போறதுகுள்ள பண்ணுங்க." என அருகே வீற்றீருந்த நாற்காலியில் அமர்ந்தான் VK.

சஞ்சீவை நாகவந்தனாவின் முன் அமர வைக்க நாகவந்தனாவின் முகத்தில் வேகமாய் தண்ணீர் தெளிக்கப்பட்டது.

கண்ணீருடன் சஞ்சீவின் உயிர் சிறிதுசிறிதாய் பிரிந்துக் கொண்டிருக்க கண்விழித்தவள் "சஞ்சு!! சஞ்சு!! என்னால...தானே!! என்னாலதானே, அய்யோ!! சஞ்சு, சஞ்சு!!" என்று சஞ்சீவின் கைகளை பற்றிக் கொண்டு அழுதவளின் கண்ணீரை வலிகள் நிறைந்த சிறு புன்னகையுடன் மெதுவாய் துடைத்தவனின் கை கீழே விழ அதிர்ச்சியானாள்.

"ச..சஞ்..சு, சஞ்சு, சஞ்சு!!!" என தன் தம்பியின் கன்னம் தட்ட உயிரற்ற கூடாய் கீழே விழுந்தான் சஞ்சீவ்.

"சஞ்சு!!! அய்யோ, அய்யோ!! என் தம்பியே நானே கொன்னுட்டேனே!!" என கதறினாள்.

"இப்பவும் சொல்றேன், எனக்கு தேவையெல்லாம் உண்மை." என்று அங்கிருந்து நகரச் சென்ற VKவினின் முன்பு கோபமாய் எழுந்து நின்றவள் சட்டையை இறுக பற்றினாள்.

மற்றவர்கள் அதிர்ச்சியாக VKவின் பார்வையில் அனைவரும் அங்கிருந்து வெளியேறிய அடுத்த நொடி VKவின் கை நாகவந்தனாவின் கழுத்தை நெருக்கியது.

"உன்..னால என்னை..ய கொல்...ல முடி..யாது" என VKவின் கையை பற்றினாள் நாகவந்தனா.

"உன்னைய கொல்லுவேன்டி. ஆனால், இப்போ கொல்லமாட்டேன். அவன் வருவான் பாரு. அப்போ, அவன் முன்னாடி உன்னைய கொல்லுவேன்." என்று கண்கள் சிவக்க கோபத்தில் கூற

"நீ.. ப..தி..!!" என அதிர்சியானவளை தள்ளிவிட்டவன்

"அவன்தான்! அவனதான்! சொல்றேன்!!" என்று ஆவேசமாய் கத்தினான்.

*******

"எஸ்... கய்ஸ் ஒரு க்ளுவ் கிடைச்சுருக்கு! இங்க பாருங்க." என ஸ்ரீபதியன் அனைவருக்கும் தான் கண்டறிந்ததை காட்ட அனைவரும் அருகே வந்தனர்.

"ச்ச! இத்தனநாள் இந்த புக்க திரும்ப திரும்ப படிச்சும் நான் ஏன் இத மறந்தேன்னே தெரியல. ஓகே, இப்போ நாம துவங்க போறது இந்த க்ளுவ் வச்சுதான். கண்டிப்பா நாம அவன் யாருன்னு சீக்கிரமே கண்டுபிடிச்சுருவோம்." என ஸ்ரீபதியன் உற்ச்சாகமாய் கூறியவனிடம்

"சார், இது சரியா வரும்னு நம்புறீங்களா?" என சந்தேகமாய் கேட்டான் மாதவன் என்பவன்.

"கண்டிப்பா! என் நாகுவ நான் நம்புறேன்." என்றவன் தன்னை சமன்செய்துக் கொண்டு "இந்த ரைட்டர நம்புறேன்." என்றிட அனைவருக்கும் புரிந்தது ஸ்ரீபதியனின் வார்த்தைகள்.

"எல்லாரும் கவனிங்க. நாகு சொல்லி.., சாரி. ரைட்டர் சொல்லிருக்க மாதிரி, அடர்ந்த காடு போல இருக்க இடம்னு பார்த்தா நம்ம சிட்டில மொத்தமா நாலு இடங்கள்தான் இருக்கு. இதுல இரண்டு இடங்கள்ல ஆட்கள் அப்போ அப்போ நடமாடுற பகுதி. மற்ற இரண்டு இடங்கள்ல நடமாட்டாம் இருக்காது. அதுல நாம இப்போ கண்டுபிடிக்க போறது. ஆட்கள் நாடமாடுற இடங்கள்தான்." என சிட்டி வரைபடைத்தை சுட்டிக் காட்டினான் ஸ்ரீபதியன்.

"சார், நீங்க சொல்லிருக்க பக்கத்துல அந்த மாதிரி எதுவுமே சொல்லலயே சார். நீங்க எத வச்சு சொல்றீங்க?" என கேட்டான் சுந்தர் என்பவன்.

"சொல்லிருக்காங்க சுந்தர். இந்த விரிகள படிங்க." என காட்டியவன்

"சூரியனும் அவனின் இருப்பிடத்தை மறைந்து மறைந்தே காணுவான்

வருணனும் அவன் பொழியும் இரத்த மழையைக் கண்டு பயத்தால் நிலத்தில் தன் கால் பதிக்க அஞ்சி இலைகளை மட்டும் நனைத்திட்டு சென்றிடுவான்
அவையும் அவன் மீதுள்ள பயத்தினாலே

புல்லினங்காளோ சுந்திரமாய் அவனிருப்பிடத்தில் கதைகள் பல பேசும்

மனிதர்களில் ஏனையோரே அவனிருப்பிடத்திற்க்கு வந்து செல்லும் மனிதர்கள் சிலருக்கும்

யாரென தன் சுயம் காட்டிடா வாழும் மனித உரு அரக்கனே அவன்

அவனே என் இராவணனும் ஆவான்." என்று அவ்வரிகளை கண்கள் மூடி உணர்ந்து கூறினான் ஸ்ரீபதியன்.

"சார் இதுல, அவங்க..!" என வரிகளின் பொருள் புரிந்து அனைவரும் வியந்தனர்.

"எஸ், அது ஒரு காடு." என்றவன் "நம்மலோட மூவ் இந்த இரண்டு இடத்துலருந்து ஸ்டார்ட் பண்ணனும்." என்றிட அனைவரும் "எஸ் சார்!" என்றனர்.

'உங்கள கடத்துனவன் யார இருந்தாலும் அவன உங்க கண்ணு முன்னாடியே கொன்னு சீக்கிரமே, உங்கள மீட்டு கூட்டிட்டு வருவேன் நாகு.' என்று புத்தகத்தினை நம்பிக்கையுடன் பார்த்தான் ஸ்ரீபதியன்.

*******

இராவணன் வருவான்...
ஹாய் தோழமைகளே எப்படி இருக்கு யூடி? நிறை குறைகளை தயங்காமல் https://www.sahaptham.com/community/threads/இராவண-காதலி-comments.480/page-3#post-7244 கூறுங்கள்.​

- நான் உங்கள் நாகவேணி அழகர் ராஜன்.
 
இராவண காதலி

வலைகள் விரிந்தது - 5

"கய்ஸ் இப்போ நாம ஐந்து ஐந்து பேரா பிரிஞ்சு. இரண்டு காட்டு பகுதிக்குள்ள போகப் போறோம். உள்ள போனதும் எல்லாரும் தொடர்புலையே இருங்க. அக்யூஸ்ட்க்கு எந்த ஒரு சின்ன சந்தேகமும் ஏற்படாம கச்சிதமா நம்ம பிளான் முடியனும். எல்லாரும் கவனமா இருங்க. முக்கியமா பதட்டபடாம நிதானமா இருங்க." என ஸ்ரீபதியன் தன் குழுவிடம் கூறிக் கொண்டிருக்கும் போது ஃபோன் அலறிட காதில் வைத்தவன் கட் செய்துவிட்டு வேகமாய் டிவியை ஆன் செய்தான்.

'இன்று பல்வேறு இடங்களில் தொடர் கொலைகள் நடந்து வருகிறது. இதுவரையில் பதிமூன்று போலீசார்கள் உட்பட பல்வேறு ரவுடிகளும் கொலை செய்யபட்டுள்ளனர். கொலையாளிகள் எந்தவித பயமுமின்றி பொது இடங்களிலேயே கொடுரமாக கொலை செய்வதை கண்ட பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். மேலும்..' என்றிடும் போதே திலகர் அறையினுள் நுழைந்தார்.

"இப்போ என்ன செய்ய போறீங்க ஸ்ரீபதியன்? இந்த கேஸ் இப்போ எங்க வந்து நின்றுக்கு பார்த்தீங்கல்ல?!"

"சார்.."

"எனக்கு எந்த விளக்கமும் கொடுக்காதீங்க. இப்போ பத்திரிக்கைகாரவங்கலாம் மைக்க தூக்கிட்டு வந்துருவாங்க, அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்றது?!"

"சார் நான்.."

"கரைக்ட் நீங்கதான் பதில் சொல்லனும். இனி எதையும் சீக்ரட்டா பண்ண வேண்டாம். ஒரு கிரிமினல் நாய்! அவனுக்கே இவ்ளோ துணிச்சல் இருந்தா, போலீஸ் நமக்கு எவ்ளோ இருக்கனும்?!"

"சார் ப்ளீஸ்! நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க."

"நான் எத கேட்கவும் தயார இல்ல. டூ வாட் ஐ சே!."
என்றுவிட்டு வெளியேற

"ஷட்!!" என ஸ்ரீபதியன் மேஜையை குத்தினான்.

"சார்.." என்று வினோத் அழைக்க

"அவன நான் சும்மாவிட போறதில்ல. என்னைய ரொம்ப சீண்டி பார்க்குறான்!" என பற்களுக்கிடையில் கூறியவன் "கய்ஸ் முதல்ல சிட்டில நடக்குற கொலைகள கட்டுக்குள்ள கொண்டு வரனும். எல்லாரையும் அசம்பிள் ஆக சொல்லுங்க. இன்னைக்கு நைட்குள்ள சிட்டியே க்ளீனாகனும்." என்று உறுதியாய் கூறினான்.

"அப்போ ரைட்டர கண்டுபிடிக்க போட்ட பிளான் சார்?" என கண்ணன் கேட்க

"எல்லாத்தையும் சேர்த்துதான் சொன்னேன். மேக்கிட் ஃபார்ஸ்ட்." என்று துரிதபடுத்தியவனை

"சார், ப்ரஸ் மீட்டிங்?"
என மாதவன் கேட்க

"என்னோட செயலே எல்லாருக்கும் பதில் சொல்லும். நீங்க எல்லாரும் ஸ்பார்ட்டுக்கு போங்க. பிளான்ல எந்த மாற்றமும் இல்ல. நான் சிட்டிய கவனிச்சுட்டு உங்ககூட வந்து ஜாயின் பண்ணிப்பேன். பீ கேர்ஃபுல் அண்ட் பீ அலர்ட்!" என்றதும் அனைவரும் சல்யூட் செய்து கலைந்திட "உன்ன நான் சும்மாவிடமாட்டேன்டா!" என்று மேஜையை குத்தியவன் தன் துப்பாக்கியை ஓர்முறை உறுதியாய் பிடித்துவிட்டு வெளியேறினான்.

வெளியே சீர் வரிசைகளாக பல காவலர்கள் நின்றிருக்க கட்டுக்கடங்கா கோபத்துடன் பேசத் துவங்கினான் ஸ்ரீபதியன்.

"எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும் இந்த அசம்பல் எதுக்காகன்னு, எங்கருந்து வந்தது இவன்ங்களுக்கு இவ்ளோ தைரியம்? இவன்ங்களுக்கு போலீஸ்னா என்னன்னு காட்ட வேண்டாம்? சும்மாயில்ல, நம்ப டிப்பார்ட்மென்ட்ல 13 பேர கொலை பண்ணிற்க்கான்ங்க. நாம அமைதியா இருந்தா மக்களுக்கு நம்ப மேல இருக்க நம்பிக்கை காணம போயிடும். இன்னைக்கு நைட்குள்ள ஒருத்தனவிடாம காலி பண்ணி சிட்டிய க்ளீன் பண்றோம்! இனி போலீஸ தொடனும்னு எவனும் கனவுல கூட நினைக்க கூடாது. அந்த அளவுக்கு இருக்கனும் நம்ப ஆட்டம். லெட்ஸ் ஸ்டார்ட்!" என்றிட அனைவரும் பரபரப்புடன் கிளம்பினர்.

ஸ்ரீபதியன் தனது குழுவிடம் "என்ன ஆனாலும் நிதானத்த இழக்காதிங்க." என்றுவிட்டு கிளம்ப புரியாமல் பார்த்துக் கொண்டவர்கள் ஆயத்தமாகினர்.

பத்திரிக்கையாளர்களிடம் பேச சென்றுக் கொண்டிருந்த திலகருக்கு செய்தி சென்றிட புன்னகையுடன் தலையசைத்தார்.

"சார், சிட்டில நடந்துட்டு இருக்க கொலைகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க?"

"13 போலீஸார்களோட கொலைகளுக்கு காவல் துறை என்ன பதில் சொல்ல போகுது சார்?"

"எந்தவித பயமும் இல்லாம பொது இடத்திலேயே கொலைகள் நடந்ததுட்டுருக்க காரணம் காவல்துறையோட அலட்சியமும் கடுமையான தண்டனை இல்லாமையும்தான் காரணம்னு சொல்லலாமா சார்?"

"இல்ல, இதுவரைக்கும் மர்மமா நடந்துட்டு வந்துட்டு இருக்க கொலைகளுக்கு சொல்ற பதிலான, சீக்கிரமே குற்றவளிகள பிடிச்சு தண்டனை கொடுப்போம்னு சொல்ல போறீங்களா சார்?"
என்று பத்திரிகைகள் கேள்விகளைக் கேட்க

"உங்க எல்லா கேள்விக்கான பதிலும் இன்னும் ஒரு நிமிசத்துல ACP ஸ்ரீபதியன் தன்னோட செயல்கள் மூலமா உங்களுக்கு சொல்லுவாரு. தங்ன்க்யூ" என்றுவிட்டு நகரந்தார்.

*******

"பதியன தெரியுமா? எதுக்காக என்னைய அவர் முன்னாடி கொல்லனும்? அவர் என்ன பண்ணாரு? எனக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?" என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவளின் கழுத்தை நெறிக்க அதிர்ச்சியானாள்.

"என்ன சம்மந்தமா? ஏன் உனக்கு தெரியாது? உன் நடிப்ப என்கிட்ட காட்டாத, அவன் வேணும்னா நம்பலாம். ஆனால் நான், ம்ஹூம்." என கூறியவனின் முகத்தில் அத்தனை வெறுப்பு.

"நடிப்பா? நானா? என்ன பேசுற நீ? நான் எதுக்கு நடிக்கனும்?!"

"ஏய்!! சும்மா நடிக்காதடி! ஆமா, நான் எதுக்கு உன்கிட்ட சொல்லனும்? எனக்கு தேவை என்னோட கேள்விக்கான பதில். அதுக்காக மட்டும் பேசு. தேவையில்லாம பேசி ஒவ்வொரு உயிர் போறதுக்கும் காரணமாகாத."
என்றுவிட்டு தனது ஆட்களுக்கு ஃபோன் செய்து அழைத்தவன் புத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டிட தன் பயத்தை வெளிக்காட்டாது பார்த்திருந்தாள் நாகு.

"ம்ம்... பதில்... சொல்லு. இல்ல ஒவ்வொருத்தரா குறைஞ்சுட்டே வருவாங்க." என நிமிர்ந்திடாமல் கூறியவனின் அருகினில் உயிரற்ற கூடாய் கிடந்திருந்த தன் தம்பியை கண்டவள் பேரலையாய் எழுந்த அழுகையை தனக்குள் அடக்க முயற்ச்சித்துக் கொண்டிருந்தாள்.

"அண்ணா.." என ஆட்கள் வேகமாய் நுழைய நிமிர்ந்தான்.

"ம்ம்.. அர்ஜூனா நீ உள்ளப் போய் இவ அப்பன..." என்றிடும் போதே

"இப்போ எந்த உண்மை தெரியனும்?" என உணர்ச்சியற்றவளாய் கேட்டாள்.

சிறு கண்ணசைவில் அனைவரையும் வெளியேற்றியவன் நாகுவை நோக்கி அடியெடுத்து வைத்தான் VK.

"எனக்கு என்ன தெரியனும்னு உனக்கு நல்லாவே தெரியும்." என கூற அமைதியாய் வெறித்தாள்.

"என்ன பார்க்குற? ம்ஹூம்.. நீ பார்க்குற பார்வைக்கெல்லாம் அவன் வேணா மயங்கலாம். நான் மயங்கமாட்டேன்." என்றிட தன் பற்களை கடித்தாள் நாகு.

"என்னடி பல்ல கடிக்குற? என்ன முறைக்குற?!" என்றவனின் ஃபோன் அதிர பார்த்தவன் நாகுவை முறைத்துவிட்டு வெளியேற வேகமாய் உள்ளே வந்த சந்துருவோ அனைவரின் கண் மற்றும் கை கால்களை கட்டிவிட்டு சஞ்சுவின் உடலை தூக்கிச் சென்றான்.

வெளியேறியவன் "அவன் சரியான வலைலதான் விழுந்துருக்கான். ஆனால், தவறான நேரத்துல விழுந்துட்டான். என் இடத்துல எனக்கு தெரியாம நுழையனும்னு நினைச்சவன்களுக்கு நானே அவன்களுக்கு தண்டனைய கொடுக்கனும்." என்றதும் மாறன் தலையசைத்து நகர்ந்திட மற்றவர்கள் புரியாமல் பார்த்திருந்தனர்.

*******

பகலிலும் இருள் சூழ்ந்த அக்காடுகளுகுள் நுழைந்த போலீஸ் குழுவினர்களுக்கு சற்றே பயம் பரப்பியது.

"இந்த காடு பகல்லயே இவ்ளோ இருட்டா இருக்கே, அப்போ நைட்ல எப்படி இருக்கும்?" என மாதவன் கேட்க

"இருட்டாதான் இருக்கும். இங்க விடுங்க, அங்க அந்த ஐந்துபேரோட நிலமை எப்படி இருக்கும்னு தெரியல." என்றான் சுந்தர்.

"எல்லாம் ஒரே நிலமையாதான் இருக்கும்." என்றான் மாதவன்.

மற்றோரு காட்டில்...

"கண்ணன், ஸ்ரீ சார் எப்போ வரதா சொன்னாரு?" என கேட்டான் வினோத்.

"தெரில, கண்டிப்பா எல்லா பிரச்சனையயும் முடிச்சுட்டுதான் வருவாரு. அதுக்குள்ள நாம ஏதாவது ஒரு க்ளுவையாவது கண்டுபிச்சாகனும்." என்று கூறியபடி நடந்துக் கொண்டிருந்தவன் தடுமாறி கீழே விழ மற்றவர்களின் உதவியுடன் எழுந்து சுதாரிக்க காட்டில் ஏதோ அசைவுகள் தெரியவே ஐவரும் கைகளை கோர்த்துக் கொண்டு சிறு பதற்றத்துடன் சுற்றி பார்த்தனர்.

அக்காட்டில்...

"மாதவன் சார் ஏதோ.." என்பதற்க்குள் சுந்தரின் வாயை பொற்றியவன் அமைதியாகுமாறு கூற ஐவரும் அமைதியாய் பதுங்கினர்.

*******

சிட்டியின் ஒவ்வொரு இடத்திலும் துப்பாக்கி சூட்டினால் ரவுடிகள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்க VKவின் ஆட்கள் தங்களின் வேலைகளை கட்சிதமாக முடித்துக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீபதியன் கோபத்தோடு தனது வாட்ச்சை நிமிடத்திற்கு ஓர்முறை பார்த்தபடி நகர்ந்துக் கொண்டிருக்க பத்திரிக்கையாளர்களால் மடக்கபட்டான்.

"சார்... நீங்க இப்படி என்க்கௌன்டர் பண்றது மனிதநேயமற்ற செயல்னு சொல்லபட்டு வருதே அதற்கான உங்க பதில்.." என கேட்டவருக்கு முறைப்பையே பதிலாக தந்தான்.

"சார் நீங்க அமைதியா இருந்தா என்ன சார் அர்த்தம்?" என்றதும் காரிலிருந்து வேகமாய் இறங்கியவன்

"சரி நான் ஒன்னு கேட்குறேன், இப்போ ரவுடிகள் பண்ண கொலைகள் மட்டும் மனிதநேயமான செயலா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கமிஷ்னர யாரோ கேள்வி கேட்டீங்களே தண்டனைகள் கடுமையா இல்லாதது பத்தி, அததான நான் இப்போ பண்றேன். உரிய தண்டனை கொடுத்தா மனிதநேயமற்ற செயல், கொடுக்கலனா அலட்சியமான செயல்.

இல்ல, எங்களுக்கு புரியல. எங்கள என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? எங்க கடமைய நாங்க செஞ்சா குற்றம், செய்யாம இருந்தாலும் குற்றம். குற்றத்த தட்டிக் கேட்குற எங்களையே குற்றவாளிகளா காட்டுனா எங்க மேல மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? குற்றவாளிகளுக்கு எப்படி சட்டத்து மேல பயம் வரும்?!"

"அப்போ பத்திரிக்கையாளர்கள் மேல குற்றம் சொல்றீங்களா?!"

"இதோ, இப்படி எதையாவது கேள்வி கேட்டு நாங்க என்ன சொல்ல வறோங்குறதையே புரிஞ்சுக்காம உங்க ஹெட்லைனுக்கு எங்கள யூஸ் பண்ணிப்பீங்க!"

"சார்.."

"ஜஸ்ட் ஷட்டப்!!!! முதல்ல பத்திரிக்கையாளர்கள்னா யாருன்னு தெரிஞ்சுட்டு கேள்வி கேட்க வாங்க. நீங்க காட்டுறதையும் நீங்க சொல்றதையும் மட்டும்தான் மக்கள் நம்புறாங்க. உண்மை என்னன்னு நீங்க சொன்னாதான் அவங்களுக்கு தெரியும். உங்க சேனலோட சுயநலத்துக்காக மக்கள ஏமாத்தாதிங்க, பாரபட்சம் பார்க்காதிங்க. அண்ட், என்னோட கடமைய செய்யவிடுங்க. பின் தொடர்ந்து வராதிங்க."
என்றுவிட்டு காரிலேறி பறக்க அனைவரும் காரையே பார்த்திருந்தனர்.

இதனை பார்த்த திலகர் பெருமிதத்தோடு அமர்ந்திருக்க கேசவன் உள்ளே நுழைந்ததும் "என்ன ஹியூமன் ரைட்ஸ் கமிஷன்லேந்து காலா?" என கேட்க ஆமென தலையசைத்தார்.

"இவங்களுக்கு இதே வேலை. நான் பாத்துக்குறேன். நீங்க போங்க." என்று நீயூசை பார்க்கத் துவங்கினார்.

*******

'இப்போ என்ன பண்ண, என்னால என் தபம்பியோட உயிர் போகிடுச்சு. அடுத்து.. அடுத்து.. அய்யோ யோசிக்கவே பயமா இருக்கு. கடவுளே, உண்மைய சொன்னாலும் இந்த இராவணன் ஏன் நம்பமாட்டேங்குறான்? அப்படி எந்த உண்மைய எதிர்பாக்குறான்? முதல்ல பதியன எப்படி தெரியும்? என்னையும் பதியனையும் பத்தியும் என்ன நினைச்சுட்டு இருக்கான்? ஐயோ கடவுளே, கேள்விகள் அதிகமாகுதே தவிர பதில் கிடைக்கமாட்டேங்குதே!!' என தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தவளின் அருகில் மெதுவான காலடி சத்தம் கேட்கவே உற்று கவனிக்க துவங்கினாள் நாகு.

"செம்ம கில்லாடியா இருப்ப போல?" என்ற நக்கலான குரலில் குழப்பமடைந்தாள்.

"கில்லாடின்னு சொல்ல கூடாதுடா தந்திரவாதின்னு சொல்லனும்."

"தந்திரவாதியோ மந்திரவாதியோ ஆகமொத்தம் பொண்ணுக்கு ஆயுசு ஒருநாளைக்கு கெட்டி."
என சிரித்தான்.

'நாம பார்த்த இரண்டுபேர்தான் போல, அப்போ இன்னைக்கு யாரும் சாகபோறதில்ல. நமக்கு என்ன ஆனாலும் பரவால்ல, என் குடும்பத்துக்கும் பிரண்ட்ஸுக்கும் எதுவும் ஆகவிடகூடாது. அதுக்கு ஏதாவது கண்டிப்பா பண்ணியே ஆகனும்.' என முடிவெடுத்தவளாய் அருகிலிருந்தவர்களை அழைத்தாள்.

"வாய் கட்டிருந்தாலும் சும்மா இருக்குதா பார்த்தியா? அணத்திட்டே இருக்குது."

"என்னன்னு கேட்போம் கட்ட அவுத்துவிடுடா."
என்றதும் கட்டை அவிழ்க்க

"கண் கட்ட அவிழ்த்துவிடுங்க. நான் அவன பார்க்கனும்." என்றவளை புரியாமல் பார்த்தனர்.

"யார?"

"அவனதான், இரவணன். உங்க அண்ணன்."
என்றதும் இருவருக்கும் கோபம் வந்தது.

"இதோ பாரு, அண்ணன அவன் இவனெல்லாம் சொல்லிட்டு இருந்த! நாங்களே உன்னைய கொன்ருவோம். மரியாதையா பேச கத்துக்க!"

"உங்களுக்தான் அண்ணனெல்லாம் எனக்கு அவன்.. அவன்தான்."

"ஏய்!!"
என அறையச் சென்றவனை

"வேண்டாம்!" என தடுத்தது இளங்கோவின் குரல்.

"அண்ணே இவ.."

"நான் பேசிக்குறேன் நீங்க கிளம்புங்க."
என்றதும் இருவரும் கோபத்தோடு வெளியேற இளங்கோ நாகுவின் கண் கட்டை அவிழ்த்துவிட்டு புன்னகைத்தான்.

பயத்துடன் புன்னகைத்தவள் 'ஏதோ காரணம் இருக்கு போல.' என நினைத்துக் கொண்டாள்.

"நீ பயப்டாத நான் எதுவும் செய்யமாட்டேன். தண்ணீ குடிக்கிறீயா?"

'ஏதோ வலை விரிக்குறான்.'

"பயப்டாதம்மா, நான் நல்லவன்தான்."
என்றான் புன்னகை மாறாமல்.

*******

"டேய் அந்த ACPயோட வண்டி வருதுடா எல்லாம் ரெடியா இருக்குல்ல?"

"எல்லாம் ரெடிதான்."

"மிஸ் ஆச்சு, அண்ணன் நம்மல உயிரோடவிடமாட்டாரு."

"வாய மூடுடா! அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அந்த ACPய தூக்குறோம். அண்ணேங்கிட்ட கொடுக்குறோம்."
என தூரத்தில் வந்துக் கொண்டிருந்த ஸ்ரீபதியனின் காரினை பார்த்து பேசிக் கொண்டிருந்தவர்களின் பின்னால்

"யார, யாருத் தூக்குறான்னு பார்க்கலாமா?" என்ற ஸ்ரீபதியனின் குரல் கேட்கவே அதிர்ந்தனர்.

"சொல்லுங்கடா, பார்த்தற்லாமா? தூக்கிற்லாமா?" என கோபத்தோடு நெருக்கியவனிடம்

"என்ன ACP எங்கள தூக்கிட்டா அவ்ளோதானா? மொளச்சு வந்துட்டே இருப்போம்."

"எத்தன பேர தூக்குவ? உன்ன மாதிரி ஆளுங்கள அழிக்குற வர நாங்க மொளச்சுட்டேதான் இருப்போம்."

"என்ன நினைச்சுட்டு இருக்க? இது நீ விரிச்ச வலைன்னா? எங்க அண்ணே விரிச்ச வலை."

"இதுல விசியம் என்னன்னா, நீ மட்டும் மாட்டீக்கல. உன்னோட சேர்த்து நீ அனுப்புன பத்துபேரும் வலைல மாட்டீற்க்காங்க.
" என்றதும் ஸ்ரீபதியன் அதிர்ச்சியுடன் நின்றான்.

*******

இராவணன் வருவான்...

யாரும் 4 Udய மறக்கலல்ல தோழமைகளே... இனி கண்டிப்பா Ud தொடர்ந்து வந்துவிடும்... தாமதத்திற்கு மன்னிக்கவும்... மக்களே...


- உங்கள் நாகவேணி அழகர் ராஜன்.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom